புறநானூற்றுத் திணைகள்
கரந்தை
பகைவர்களால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்டு வருதல் – Wearing karanthai flowers and retrieving cattle that was taken by enemies.
காஞ்சி
தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு காஞ்சிப்பூவைச் சூடி எதிர்த்துப் போரிடுவது காஞ்சித் திணையாகும் – Wearing Kaanji flowers and protecting one’s country.
கைக்கிளை
கைக்கிளை என்பது ஒருதலைக் காதல். இதனை அகப்பொருள் திணையாகவும் கூறுவர் – one-sided love.
தும்பை
பகை வேந்தர்கள் இருவரும் வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டுக் கடும் போர்ப் புரிவது தும்பைத் திணையாகும் – Wearing thumpai flowers and engaging in battle.
நொச்சி
பகை வேந்தரால் முற்றுகையிடப்பட்ட தம் மதிலைக் காக்க வேண்டி உள்ளிருந்தே வெளியே இருக்கும் பகைவேந்தனோடு நொச்சிப்பூச் சூடிப்போரிடுவது நொச்சித் திணையாகும் – Wearing nochi flowers and protecting the fort.
பாடாண்
பாடப்படும் ஆண்மகனது வெற்றி, புகழ், மறம், கொடை, கல்வி, அருள் முதலிய பண்புகளைப் பாடிப் புகழ்வது பாடாண் திணையாகும் – Praise.
பெருந்திணை
பெருந்திணை என்பது பொருந்தாக் காதல். இதனை அகப்பொருள் திணையாகவும் கூறுவர் – unsuitable love.
பொதுவியல்
வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளுக்குப் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறபப்படாதனவற்றையும் கூறுவது பொதுவியல் திணையாகும் – common matters.
வஞ்சி
பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி வஞ்சிப் பூவைத்தலையிலே சூடிப் போரிடப் புகுவது வஞ்சித் திணையாகும் – Wearing vanji flowers and preparing for war.
வாகை
போரில் வெற்றி பெற்ற மன்னன் வாகைப்பூச்சூடி மகிழ்வது வாகைத் திணையாகும் – Wearing vaakai flowers and celebrating victories.
வெட்சி
பகை நாட்டின்மீது போர் தொடங்குமுன் அந்நாட்டில் உள்ள ஆநிரைகளுக்குத் தீங்கு நேரக்கூடாது எனக் கருதும் மன்னன் வெட்சிப்பூச் சூடிய தன் வீரர்களை அனுப்பி அவற்றைக் கவர்ந்துவரச்செய்வது வெட்சித் திணையாகும். Having warriors wear vetchi flowers and sending them to raid cattle beloning to enemies.
——————————————————————————————————————————————————————————————————————————–
புறநானூற்றுத் துறைகள்
அரசவாகை – அரசனது இயல்பையும் அவனது வெற்றியைப் பற்றியும் கூறுதல் – Praising the traits and victories of the king.
ஆனந்தப் பையுள் – ஒருவன் இறந்ததுபற்றி அவனுடைய சுற்றத்தார் வருந்திக் கூறுதல் – Relatives talking about a hero who died.
இயன் மொழி – தலைவன் எதிரே சென்று, அவனது செயல்களையும் அவன் குலத்தோரின் செயல்களையும் ஏற்றிப் புகழ்தல் – Praising a great person, mentioning his deeds and that of his ancestors.
உடனிலை – ஒருங்கே இருக்கும் இருவரைப் புகழ்ந்து பாடுதல் – Praising two people who are together.
உண்டாட்டு – வீரர் மதுவை உண்டு களித்தலைக் கூறுதல் – Describing the situation of warriors drinking alcohol and enjoying.
உவகைக் கலுழ்ச்சி – விழுப்புண்மிகுந்த உடம்பையுடைய மறவனின் கண்டு அவனது தாய்/மனைவி மகிழ்ந்து கண்ணீர் வடித்தல் – Mothers and wives looking at the battle wounds of their beloved and crying with joy appreciating his bravery.
எருமை மறம் – படைவீரர் புறமுதுகிட்ட நிலையிலும் தன் பகைப்படையை அஞ்சாது ஒருவன் போரிட்டு நிற்றல் – Warriors who don’t back off even if others who fight with them leave.
ஏர்க்கள உருவகம் – போர்க்களச் செயல்களை ஏர்க்களச் செயல்களாக உருவகப்படுத்திக் கூறுதல் – Comparing the battlefield with fields where crops are grown.
ஏறாண் முல்லை – வீரம் மிகுந்த மறக் குடியை மேலும் மேலும் உயர்த்திக் கூறுதல் – Praising again and again the brave families.
கடை நிலை – அரண்மனை வாயிலில் நின்று பாடுதல் – Standing at the entrance of the palace and singing.
கடைநிலை விடை – தலைவன் வாயிலில் நின்று பாடிப் புலவன் விடை பெறுதல் – Poet who praised the king at his gate leaving the place.
களிற்றுடனிலை – தன்னால் கொல்லப்பட்ட யானையோடு ஒரு வீரன் தானும் வீழ்ந்து மடிதலைக் கூறுதல் – A warrior who killed an elephant also died.
குடிநிலை உரைத்தல் – பழமையும் வீரமும் மிகுந்த குடியின் வரலாற்றைக் கூறுதல்
குடை மங்கலம் – அரசன் குடையைப் புகழ்ந்து பாடுவது – Praising the king’s royal umbrella.
குதிரை மறம் – குதிரை வீரன் ஒருவனின் வீரத்தையோ அல்லது அவனுடைய குதிரையின் வீரத்தையோ கூறுதல் – Praising the bravery of warriors who fight riding their horses.
குறுங்கலி – ஒருவனால் துறக்கப்பட்ட அவன் மனைவியை அவனோடு சேர்க்கும் பொருட்டு இவள்பால் அருள் செய்தல் என வேண்டுதல் – Pleading with a man to take back his wife whom he abandoned.
கையறு நிலை – தலைவன் இறந்த பின் அவன் பெருமையைக் கூறி வருந்துதல் – Praising a dead hero.
கொற்ற வள்ளை – அரசனுடைய வெற்றியைக் கூறி அவனுடைய பகைவரின் நாடு அழிதற்கு வருந்துதல் – Mentioning the victory of the king and feeling sorry for the ruined land of his enemy.
சால்பு முல்லை – சான்றோர்களின் சான்றாண்மையைக் கூறுதல் – Praising the greatness of the wise.
செருமலைதல் – பசுக்களைக் கவர்ந்து சென்ற பகைவரை நெருங்கி அவர்கள் அஞ்சுமாறு போர் செய்தல் – Fighting with enemies who stole their cattle.
செருவிடை வீழ்தல் – அகழியையும் காவற் காட்டையும் காத்து சாவைப் பெற்ற வீரனின் சிறப்பைக் கூறுதல் – Praising a warrior who died in battle protecting his king’s fort.
செவியறிவுறூஉ – அரசன் உலகைக் காக்கும் முறையை அவனிடம் சொல்லி அவன் செவியிற் புகுத்தி அறிவித்தல் – Giving advice to a king about proteting his country.
தலைத் தோற்றம் – ஒரு வீரன் பகைவர்களின் பசுக்களைக் கவர்ந்து கொண்டுவந்தது குறித்து சுற்றத்தார் தம்முடைய மகிழ்ச்சியைக் கூறுதல் – Relatives praising a man who has seized the cattle of enemies.
தாபத நிலை – கணவன் இறந்ததால் மனைவி கைம்மை நோன்பை மேற்கொண்டிருத்தலை உரைத்தல் – Mentioning widowhood situations.
தாபத வாகை – முனிவரின் ஒழுக்க நிலையை உரைத்தல் – Mentionging the good behavior of sages.
தானை நிலை – இரு திறத்தாரும் தன் வீரத்தைப் புகழுமாறு ஒரு வீரன் போர்க்களத்தில் சிறப்பு எய்தல் – A warrior being praised by those on both sides of the battle.
தானை மறம் – இரு படைகளும் வலிமையுடையவை என்பதால் அழிவு மிகுதி ஆகும் என்பதைக் கருதிப் போரைத் தவிர்க்கலாம் என்றுக் கூறுதல் – Uttering that it’s best to avoid battle that will be harmful for both sides.
துணை வஞ்சி – பிறரை வெல்லவோ கொல்லவோ துணிந்து நிற்பவனிடம் சென்று அறிவுறுத்திச் சமரசம் செய்தல் – Talking about peace to a man who is ready to battle and kill others.
தொகை நிலை – போர்க்களத்தில் அனைவரும் ஒருங்கே மாய்ந்ததைக் கூறுதல் – Mentioning the death of many in battle.
தொடாக் காஞ்சி – பேய்கள் அஞ்சி நீங்குமாறு புண்பட்டு வீழ்ந்த வீரனுடைய மனைவி அவனைக் காத்தல் – Wife of a fallen warrior protecting his body from ghouls.
நல்லிசை வஞ்சி – பகைவரது இடங்கள் கெடுமாறு வென்ற வீரனின் வெற்றியைக் கூறுதல் – Praising the victories of a brave warrior.
நீண்மொழி – ஒரு வீரன் போர்க்களத்தில் கூறிய சூளுரையைக் கூறுவது – Mentioning the promise a warrior made on the battlefield.
நூழிலாட்டு – ஒரு வீரன் பகைவர் படை அழியுமாறு தன் மார்பில் பட்ட வேலைப் பறித்து எறிதல் – A warrior pulling out a spear that was thrust on his chest by an enemy warrior.
நெடுமொழி – போரில் வெற்றி பெற்ற வீரன், தன் அரசனிடம் தன்னுடைய பெருமையைக் கூறுதல் – A victorious warrior tells the king about his battle prowess.
பரிசில் கடாநிலை – பரிசில் வழங்கக் காலம் தாழ்த்தும் தலைவனுக்குப் பரிசில் வேண்டுவோன் தனது நிலையைக் கூறி பரிசிலை வலியுறுத்தல் – A man who is requesting gifts from the king who is delaying giving gifts, mentioning his situation to the king.
பரிசில் துறை – பரிசிலர் புரவலனிடம் சென்று தாம் பெறக் கருதியது இதுவெனக் கூறுதல் – Those who request gifts from donors tell them what they want as gifts.
பரிசில் விடை – பரிசில் பெற வந்தவன் ஒருவன் அதனைப் பெற்றானாயினும் பெறானாயினும், பரிசில் அளிப்பவனிடம் விடை பெறுதல் – A man who came for gifts bidding farewell.
பழிச்சுதல் – புகழ்தல் – Praising.
பாடாண் பாட்டு – ஒருவனுடைய ஆற்றல், ஒளி, ஈகை, அருள் ஆகியவற்றை ஆராய்ந்துக் கூறுதல் – Prasing a man’s ability, honor, donorship and compassion.
பாண்பாட்டு – போரில் இறந்த வீரர்க்குப் பாணன் சாவுப் பண் பாடித் தன் கடன் கழித்தல் – Bards singing the praises of warriors who died in battle.
பாணாற்றுப்படை – பரிசு பெற்ற பாணன் மற்றொரு பாணனைப் புரவலரிடம் ஆற்றுப்படுத்துவது – A bard who got a gift from a king, guides another bard to do the same.
பார்ப்பன வாகை – கேட்கத் தக்கவை கேட்டுத் தலைமை பெற்ற பார்ப்பானின் வெற்றியைப் புகழ்ந்து பாடுதல் – Praising the victory of a brahmin
பிள்ளைப் பெயர்ச்சி – நிமித்தம் நன்றாக இருந்தாலும் அஞ்சாது சென்று போர் புரிந்த வீரனுக்கு மன்னன் கொடைப் புரிதல் – A king giving gifts to a brave warrior.
புலவர் ஆற்றுப்படை – புலவன் ஒருவன் மற்றொரு புலவனிடம் தலைவனுடைய இயல்பையும் ஊரையும் பற்றிக் கூறி அப்புலவனைத் தலைவனிடம் ஆற்றுப்படுத்துவது – One poet encouraging another poet to go to a benefactor king, mentioning his greatness.
பூக்கோள் காஞ்சி – போருக்குச் செல்லும் வீரன் அந்தப் போருக்குரிய அடையாளப் பூவை பெறுவதையும் சூடுவதையும் கூறுதல் – Mentioning about the flowers that warriors wear before going to battle.
பூவை நிலை – மனிதரை வானுலகில் இருப்பவர்களோடு உவமித்துக் கூறுதல் – Comparing people on earth with those on the upper world.
பெருங்காஞ்சி – நிலையில்லாமையைப் பற்றிக் கூறுதல் – Mentions about the uncertainty in life.
பெருஞ்சோற்று நிலை – போருக்குச் செல்லும் மன்னன் அவனுடன் போருக்குச் செல்லும் வீரர்களுக்கு விருந்தளித்தல் – King providing a meal to warriors who will be going with him to battle.
பேய்க்காஞ்சி – போர்க்களத்தில் புண்பட்டு வீழ்ந்தவர்களைப் பேய் அச்சுறுத்துவதைக் கூறுதல் – Mentioning how ghouls terrorize warriors who have been wounded in battle.
பொருண்மொழிக் காஞ்சி – உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல் – Mentioning about factors that will be useful for life.
மகட்பாற் காஞ்சி – மகளை வேண்டும் தலைவனுடன் மாறுபட்டு நிற்றல் – Being in disagreement with a king who requests his daughter in marriage.
மகள் மறுத்தல் – ஒரு தலைவன் திருமணம் செய்யத் தம் மகளை வேண்ட, அதைப் பெண்ணின் தந்தை மறுத்துச் சொல்லுதல் – A man refusing to give his daughter in marriage to the king who requests marriage.
மழபுல வஞ்சி – பகைவர் நாட்டைக் கொள்ளையிடுதல் எரித்தல் ஆகிய செயல்களைச் செய்து அழித்தலைப்பற்றிக் கூறுதல் – Mentioning about plundering and burning the enemy country.
மறக்கள வழி – மன்னனை உழவுத் தொழில் புரியும் வேளாளனுடன் ஒப்பிட்டுக் கூறுதல் – Comparing the king to a farmer.
மறக்கள வேள்வி – பேய்கள் உண்ணுமாறு போர்க்களத்தில் வேள்வி செய்தல் – Doing rituals in the battle field for ghouls to eat.
மனையறம் துறவறம் – இல்லறம் துறவறம் ஆகியவற்றின் வேறுபாடுகளைக் கூறுதல் – Talking about the difference between married life and monastic life.
முதல் வஞ்சி – பழம்புகழ் வாய்ந்த முன்னோர் சிறப்புக் கூறுதல் – Praising one’s ancestors of great fami.
முதுபாலை – காட்டில் தன் கணவனை இழந்த மடந்தையின் தனிமையைச் சொல்லுதல் – A woman who lost her husband in the forest talks about her loneliness.
முதுமொழிக் காஞ்சி – அறிவுடையோர், அறம், பொருள், இன்பம் என்னும் முப் பொருளினது உறுதி தரும் தன்மையைக் கூறுதல் – Those with wisdom talk about the certainty of righteousness, materialism and joy.
மூதின் முல்லை – வீரர்க்கு அல்லாமல் அம்மறக்குடியில் பிறந்த மகளிர்க்கும் சினம் உண்டாதலை மிகுத்துச் சொல்லுதல் – Stating the anger of the women born in warrior families.
வஞ்சினக் காஞ்சி – பகைவரை இழித்துக் கூறி இன்னது செய்வேன், செய்யேன் ஆயின் இன்ன தன்மையன் ஆவேன் என்று கூறுதல் – Putting down enemies stating what he will do to them.
வல்லாண் முல்லை – ஒரு வீரனின் வீட்டையும் ஊரையும் இயல்பினையும் கூறி அவனுடைய ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல் – Praising the home and town of a warrior and praising his bravery.
வாழ்த்தியல்: தலைவனை வாழ்த்துதல் – Praising a man.
வாழ்த்து – தலைவனின் வெற்றி கொடை ஆகியவற்றைப் பாராட்டுதல் – Praising the victory and charity of a man.
வாள் மங்கலம் – தலைவனுடைய வாளைப் புகழ்தல் – Praising the sword of the king.
விறலியாற்றுப்படை – ஆடலும் பாடலும் புரியும் பெண்ணான விறலியைப் அரசனிடம் சென்று பாடி ஆடிப் பரிசில் பெற வழிகாட்டுதல் – Guiding a female artist who sings and dances to reach the king and get gifts from him.
வேத்தியல் – வீரர்கள் மன்னனின் பெருமையைக் கூறுதல் – Warriors mentioning the greatness of the king.