கலித்தொகை, Kalithokai

Vaidehi Herbert

Copyright © All Rights Reserved

கலித்தொகை உரை நூல்கள்:
கலித்தொகை – நச்சினார்க்கினியர் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை
கலித்தொகை – மா. இராசமாணிக்கனார் – பூம்புகார் பதிப்பகம், சென்னை
சுப. அண்ணாமலை, கோவிலூர் மடாலயம், கோவிலூர்
கலித்தொகை – புலியூர் கேசிகன்

மருதக்கலி – Maruthakkali 66-100

மருதன் இளநாகனார்

ஊடலும் ஊடல் நிமித்தமும் – Infidelity and Sulking

கலித்தொகை 66
மருதன் இளநாகனார், மருதம், தலைவி தலைவனிடம் சொன்னது
வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் வயல் கொண்ட
ஞாங்கர் மலர் சூழ்தந்து, ஊர் புகுந்த வரி வண்டு
ஓங்கு உயர் எழில் யானைக் கனை கடாம் கமழ் நாற்றம்
ஆங்கு அவை விருந்து ஆற்றப் பகல் அல்கிக் கங்குலான்,
வீங்கு இறை வடுக் கொள, வீழுநர்ப் புணர்ந்தவர் 5
தேம் கமழ் கதுப்பின் உள், அரும்பு அவிழ் நறு முல்லைப்
பாய்ந்து ஊதிப் படர் தீர்ந்து பண்டு தாம் மரீஇய
பூம் பொய்கை மறந்து உள்ளாப் புனல் அணி நல் ஊர!

அணை மென்தோள் யாம் வாட, அமர் துணை புணர்ந்து, நீ
மண மனையாய் என வந்த மல்லலின் மாண்பு அன்றோ, 10
பொதுக் கொண்ட கவ்வையின் பூ அணிப் பொலிந்த நின்
வதுவை அம் கமழ் நாற்றம் வைகறைப் பெற்றதை?

கனலும் நோய்த்தலையும் நீ கனங்குழை அவரொடு
புனல் உளாய் என வந்த பூசலின் பெரிது அன்றோ,
தார் கொண்டாள் தலைக் கோதை தடுமாறிப் பூண்ட நின் 15
ஈர் அணி சிதையாது எம் இல் வந்து நின்றதை?

தணந்ததன்தலையும் நீ தளர் இயல் அவரொடு
துணங்கையாய் என வந்த கவ்வையின் கடப்பு அன்றோ,
ஒளி பூத்த நுதலாரோடு ஓர் அணிப் பொலிந்த நின்
களி தட்ப வந்த இக் கவின் காண இயைந்ததை? 20
என ஆங்கு,
அளி பெற்றேம் எம்மை நீ அருளினை; விளியாது
வேட்டோர் திறத்து விரும்பிய நின் பாகனும்,
நீட்டித்தாய் என்று கடாஅம் கடுந்திண்தேர்
பூட்டு விடாஅ நிறுத்து.

Kalithokai 66
Maruthan Ilanākanār, Marutham, What the heroine said to the hero
O man from the lovely town, where
a striped bee forgot its beloved pond with flowers
and left for the town with blue waterlily blossoms
from a full pond near fields, plucked by flower sellers,
and moved on during the day to a very tall, handsome
elephant attracted by its fragrant musth, and when its
appetite was satisfied, it proceeded at night to leap and
buzz on the fragrant mullai flowers adorning the
honey-flowing hair with sweet fragrance of women
who were in passionate union with their husbands,
which caused scars on their rounded arms!

I, with my delicate arms am fading away, and you
have been in pleasurable pursuits with women you
desire, in their homes. Causing slander, you united with
women adorned with flowers. You have come here at
dawn with their lovely fragrances, for me to see your
splendor.

I am burning in pain with affliction, and adding to my
distress, you have been playing in the river with women
wearing heavy earrings, causing uproar. You have come
to our house with your unspoiled wet clothes, confused,
wearing the hair strand of a woman wearing your garland.

I am anguished, and you have been performing
Thunangai dances with delicate women, causing gossip.
You have come here with your splendor after your love
passion with women with bright foreheads was satisfied.

And thus I received the pity that you showered on me.
Please leave without delay to those you desire! Your
charioteer still has the horses tied to your fast, sturdy
chariot!

Notes:  The phrase ஈர் அணி சிதையாது in line 16, has been interpreted in various ways by scholars. See the interpretations in the ‘Meanings’ section.

Meanings:  வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் – sellers who sell blooming blue waterlilies from abundant waters, வயல் கொண்ட ஞாங்கர் – the place with fields, மலர் சூழ்தந்து ஊர் புகுந்த வரி வண்டு – a striped bee that surrounded the flowers and entered the town, ஓங்கு உயர் எழில் யானைக் கனை கடாம் கமழ் நாற்றம் ஆங்கு அவை விருந்து ஆற்ற – its appetite was satisfied by the intensely fragrant musth flowing heavily from a tall handsome elephant (ஓங்கு உயர் – ஒருபொருட் பன்மொழி), பகல் அல்கி – staying there during the day, கங்குலான் – at night, வீங்கு இறை வடுக் கொள – causing scars on the rounded arms (வீங்கிறை, வீங்கு இறை – வினைத்தொகை), வீழுநர்ப் புணர்ந்தவர் – loving people who united, தேம் கமழ் கதுப்பின் உள் – on their honey-flowing hair (தேம் தேன் என்றதன் திரிபு), அரும்பு அவிழ் – buds opening, நறு முல்லைப் பாய்ந்து – it jumped into the fragrant jasmine flowers, ஊதிப் படர் தீர்ந்து – ended sorrow buzzing, பண்டு தாம் மரீஇய – stayed in the past, desired and lived there in the past (மரீஇய – அளபெடை), பூம் பொய்கை மறந்து உள்ளா – forget and does not think about the flower pond, புனல் அணி நல் ஊர – O man from the town made beautiful with waters/rivers,

அணை – embracing, மென்தோள் – delicate arms/shoulders, யாம் வாட – I am fading, அமர் துணை புணர்ந்து நீ மண மனையாய் என – that you have united with women you desire in their homes and are there with them, வந்த – came, மல்லலின் மாண்பு அன்றோ – is it not the greatness of your splendor, பொதுக் கொண்ட கவ்வையின் – with slander, பூ அணிப் – decorated with flowers, பொலிந்த – splendid, நின் வதுவை – your union, அம் கமழ் நாற்றம் – beautiful fragrance, வைகறைப் பெற்றதை – got at dawn (பெற்றதை – ஐ சாரியை),

கனலும் நோய்த்தலையும் – burning with affliction and to add more to my distress, நீ – you, கனங்குழை அவரொடு – with those with heavy earrings, புனல் உளாய் என வந்த பூசலின் பெரிது அன்றோ – isn’t it more than the uproar that you were in the river, தார் கொண்டாள் தலைக் கோதை தடுமாறிப் பூண்ட – wore in confusion the head strand of a woman wearing your garland, நின் ஈர் அணி சிதையாது எம் இல் வந்து நின்றதை – you have come and stood in our house not ruining your wet clothes, you have come and stood in our house not ruining your two pieces of clothing, you have come and stood in our house with the clothing you shared together with her,

தணந்ததன்தலையும் – even after leaving, நீ – you, தளர் இயல் அவரொடு – with those of delicate nature, துணங்கையாய் என – that you were performing thunangai dances, வந்த கவ்வையின் கடப்பு – with heavy gossip/scandal that has come, அன்றோ – is it not, ஒளி பூத்த நுதலாரோடு – with women with bright foreheads, ஓர் அணிப் பொலிந்த – sharing one garment splendidly, நின் களி தட்ப – after your joy was blocked, after your joy was reduced, வந்த – came, இக் கவின் காண இயைந்ததை – to see this beautiful scene (இயைந்தது, ஐ – அசை நிலை, an expletive),

என ஆங்கு – thus (ஆங்கு – அசைநிலை, an expletive), அளி பெற்றேம் – I received your pity, எம்மை நீ அருளினை – you showered your pity on me (எம்மை – தன்மைப் பன்மை, first person plural), விளியாது வேட்டோர் திறத்து – for those you desire endlessly, விரும்பிய – desiring, நின் பாகனும் – your charioteer, நீட்டித்தாய் என்று – thinking that you will not delay, thinking you will stay just for a little time (அவாய் நிலை – சிறிது நேரமே நீ இருப்பாய் என்ற பொருளில் வருவது), கடாஅம் – riding (கடாஅம் – அளபெடை), கடும் திண் தேர் – fast sturdy chariot, பூட்டு விடாஅ – he has not untied the horses, the horses are still tied to the chariot (விடாஅ – அளபெடை), நிறுத்து – you stop ruining the love those women shower on you

கலித்தொகை 67
மருதன் இளநாகனார், மருதம், தலைவி தோழியிடம் சொன்னது
கார் முற்றி, இணர் ஊழ்த்த கமழ் தோட்ட மலர் வேய்ந்து,
சீர் முற்றிப் புலவர் வாய்ச் சிறப்பு எய்தி, இரு நிலம்
தார் முற்றியது போலத் தகை பூத்த வையை தன்
நீர் முற்றி மதில் பொரூஉம் பகை அல்லால், நேராதார்
போர் முற்று ஒன்று அறியாத புரிசை சூழ் புனல் ஊரன், 5

நலம் தகை எழில் உண்கண் நல்லார் தம் கோதையால்
அலைத்த புண் வடுக் காட்டி, அன்பு இன்றி வரின், எல்லா,
புலப்பேன் யான் என்பேன் மன்? அந்நிலையே அவன் காணின்
கலப்பேன் என்னும் இக் கையறு நெஞ்சே;

கோடு எழில் அகல் அல்குல் கொடி அன்னார் முலை மூழ்கிப் 10
பாடு அழி சாந்தினன், பண்பு இன்றி வரின் எல்லா,
ஊடுவேன் என்பேன் மன் அந்நிலையே அவன் காணின்
கூடுவேன் என்னும் இக் கொள்கை இல் நெஞ்சே;

இனிப் புணர்ந்த எழில் நல்லார் இலங்கு எயிறு உறாஅலின்
நனிச் சிவந்த வடுக் காட்டி, நாண் இன்றி வரின் எல்லா! 15
துனிப்பேன் யான் என்பேன் மன் அந்நிலையே அவன் காணின்
தனித்தே தாழும் இத் தனி இல் நெஞ்சே;
என ஆங்கு,
பிறை புரை ஏர் நுதால்! தாம் எண்ணியவை எல்லாம்
துறை போதல் ஒல்லுமோ தூ ஆகாது ஆங்கே 20
அறை போகு நெஞ்சு உடையார்க்கு?

Kalithokai 67
Maruthan Ilanākanār, Marutham, What the heroine said to her friend
He is from the town surrounded by walls,
that does not know attack by enemies,
but is only attacked by the crashing waters of the
Vaiyai river, adorned with clusters of dropped
flowers with fragrant petals at the height
of the rainy season and appearing like a splendid
garland surrounding the large land, praised for its
greatness by eminent poets!

I say I will quarrel with him when he returns
without kindness revealing the scars on his body
caused by the attacking garlands of pretty women
with kohl-decorated eyes. But when I see him, my
pathetic heart says, “I’ll unite with him”.

I say I will sulk when he returns without graces
with smudged sandal paste, after embracing
the breasts of vine-like women with long, wide,
pretty loins. But when I see him, my heart
without principles says “I’ll unite with him”.

I say that I will show my rage when he returns
without shame showing the very red scars caused
by the bright teeth of pretty women with whom he
sweetly united. But when I see him, my friend, my
heart that has no attachment, goes to him yielding.

And so, O friend with a fine forehead like the
crescent moon! Is it possible for one to attain one’s
desires, if one’s heart betrays and is not strong?

Notes:  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  கார் முற்றி – peak rainy season, இணர் ஊழ்த்த – clusters have dropped, கமழ் தோட்ட மலர் வேய்ந்து – decorated with flowers with fragrant petals, சீர் முற்றிப் புலவர் வாய்ச் சிறப்பு எய்தி – attained greatness from the splendid poets, இரு நிலம் – large land, தார் முற்றியது போலத் தகை பூத்த – it is lovely like it is surrounded by a garland, வையை தன் நீர் – waters of the Vaiyai river, முற்றி – surrounds, மதில் பொரூஉம் – hits the walls (பொரூஉம்  – அளபெடை), பகை அல்லால் – other than this enmity, நேராதார் – enemies, போர் முற்று ஒன்று அறியாத – not knowing siege, புரிசை சூழ் புனல் ஊரன் – the man from the town surrounded by walls,

நலம் தகை எழில் உண்கண் நல்லார் தம் கோதையால் அலைத்த புண் வடுக் காட்டி – showing the scars caused by the garlands of women with great beauty and kohl-lined eyes , அன்பு இன்றி வரின் எல்லா புலப்பேன் யான் என்பேன் – I say that I will quarrel with him when he comes without kindness, மன் – ஒழியிசைப் பொருளில் வந்த இடைச்சொல், அந்நிலையே அவன் காணின் – on seeing him in that situation, கலப்பேன் – I will unite with him, என்னும் இக் கையறு நெஞ்சே – this helpless/pitiful heart of mine says,

கோடு எழில் அகல் அல்குல் – long pretty wide loins, கொடி அன்னார் – women who are like vines, முலை மூழ்கி – sinking into their breasts, பாடு அழி சாந்தினன் – one with ruined smeared sandal, பண்பு இன்றி வரின் – if he comes without grace, எல்லா – hey you, ஊடுவேன் –  I will sulk, என்பேன் – I say, மன் – ஒழியிசைப் பொருளில் வந்த இடைச்சொல், அந்நிலையே அவன் காணின் – on seeing him in that situation, கூடுவேன் – I will unite with him,  என்னும் இக் கொள்கை இல் நெஞ்சே – this heart of mine without principles says,

இனிப் புணர்ந்த – who united sweetly, எழில் நல்லார் – pretty women (concubines), இலங்கு எயிறு உறாஅலின் – since they pressed their bright teeth (உறாஅலின் – அளபெடை, விகாரம்), நனிச் சிவந்த வடுக் காட்டி – showing the very red scars, நாண் இன்றி வரின் – if he comes without shame, எல்லா – hey you, துனிப்பேன் யான் என்பேன் – I say I will be angry, மன் – ஒழியிசைப் பொருளில் வந்த இடைச்சொல், அந்நிலையே அவன் காணின் தனித்தே தாழும் – however on seeing him it goes to him yielding, இத் தனி இல் நெஞ்சே – this heart of mine without attachment,

என ஆங்கு – so (ஆங்கு – அசைநிலை, an expletive), பிறை புரை ஏர் நுதால் – O one with a crescent-moon-like pretty forehead, தாம் எண்ணியவை எல்லாம் துறை போதல் ஒல்லுமோ – is it possible for one’s wishes to be attained, தூ ஆகாது – not being strong, ஆங்கே அறை போகு நெஞ்சு உடையார்க்கு – those with hearts that betray them

கலித்தொகை 68
மருதன் இளநாகனார், மருதம், தலைவி தலைவனிடம் சொன்னது
பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு
மதி மொழி இடல் மாலை வினைவர் போல், வல்லவர்
செது மொழி சீத்த செவி செறு ஆக,
முது மொழி நீராப் புலன் நா உழவர்
புது மொழி கூட்டுண்ணும், புரிசை சூழ் புனல் ஊர! 5

‘ஊரன் மன், உரன் அல்லன் நமக்கு’ என்ன உடன் வாளாது,
ஓர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிருள் நேர் ஆகிக்,
களையா நின் குறி வந்து, எம் கதவம் சேர்ந்து அசைத்த கை
வளையின் வாய்விடல் மாலை மகளிரை நோவேமோ,
‘கேள் அலன் நமக்கு, அவன் குறுகன்மின்’ என மற்று எம் 10
தோளொடு பகைபட்டு நினை வாடு நெஞ்சத்தேம்?

‘ஊடியார் நலம் தேம்ப ஒடியெறிந்து, அவர் வயின்
மால் தீர்க்கும் அவன் மார்பு’ என்று எழுந்த சொல் நோவேமோ,
முகை வாய்த்த முலை பாயக் குழைந்த நின் தார் எள்ள,
வகை வரிச் செப்பினுள் வைகிய கோதையேம்? 15

சேரியால் சென்று நீ சேர்ந்த இல் வினாயினன்,
தேரொடு திரிதரும் பாகனைப் பழிப்பேமோ,
ஒலி கொண்ட சும்மையான் மண மனை குறித்து, எம் இல்
பொலிக எனப் புகுந்த நின் புலையனைக் கண்ட யாம்?
என ஆங்கு, 20
நனவினான் வேறு ஆகும் வேளா முயக்கம்
மனை வரின் பெற்று உவந்து, மற்று எம் தோள் வாட,
இனையர் என உணர்ந்தார் என்று ஏக்கற்று, ஆங்குக்
கனவினான் எய்திய செல்வத்து அனையதே,
ஐய எமக்கு நின் மார்பு. 25

Kalithokai 68
Maruthan Ilanākanār, Marutham, What the heroine said to the hero
O man from the town surrounded by water and
walls, where people join together and enjoy the
new words of poets who use their tongues as
plows, ancient words of the wise as water
and their ears as fields, who remove undesirable
words, like the ministers who give intelligent advice
to a king who rules the land wholly without sharing
with others!

Not talking amongst themselves that you are not a
support to them, your women, a collection like a
town, who missed trysts with you, came to our door
and knocked with their hands adorned with bangles
and talked.
Should I be upset with them? My sad heart that
thinks about you, differing from my arms, does not
listen that you are a stranger to me, and that it should
not go near you.

Gossip has risen in town that you have abandoned
women and ruined their beauty, like trees that have
been cut down by cattle herders. Should I get hurt
when I hear that your chest satisfies their desire?
I am like a wilting garland in a box, teased by the
garland on your chest that is crushed by the embraces
of women with breasts like flower buds.

Should I blame your charioteer who goes around
with his chariot to the houses of your concubines in
the village looking for you? I saw your bard
wish prosperity on our house with loud sounds and
uproars, like he was wishing a wedding house.

When you come home, I rejoice, even when you
embrace me without desire. My arms fade when
you are away. I am sad that others know about us.
To me, your awesome chest is like the wealth one
attains in a dream that does not exist when one is
awake!

Notes:  புலையனை (19) – நச்சினார்க்கினியர் உரை – ‘புலைத் தொழிலையுடைய பாணனை’, ‘செறற் சொல்’.  மன் – கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

Meanings:  பொது மொழி பிறர்க்கு இன்றி –  not common for everybody, முழுது ஆளும் செல்வர்க்கு – to a king who rules fully, மதி மொழி இடல் மாலை வினைவர் போல் – like ministers/advisors who give proper intelligent advice, வல்லவர் – the wise people, செது மொழி – reduced words, சீத்த –  removed, செவி செறு ஆக – ears as fields, முது மொழி நீரா – ancient wise words as water, புலன் நா உழவர் – poets who use their tongues as plows, புது மொழி – new literature, கூட்டுண்ணும் – they enjoy together, புரிசை சூழ் புனல் ஊர – man from the town with water and surrounded by walls,

ஊரன் மன் உரன் அல்லன் நமக்கு – that the man from the town is not of support to us (மன் – ஒழியிசைப் பொருளில் வந்த இடைச்சொல்), என்ன – saying so, உடன் வாளாது – not talking together, ஓர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிருள் – a crowd of your women who are like a town, நேர் ஆகி – became like, களையா நின் குறி – due to missed the signs from you, வந்து எம் கதவம் சேர்ந்து – came to our door, அசைத்த கை வளையின் – knocking with their hands with bangles, வாய்விடல் – talking, மாலை – nature, மகளிரை நோவேமோ – should I be upset with women, கேள் அலன் நமக்கு அவன் – he is not a relative to me (அல்லன் என்பதன் விகாரம்), குறுகன்மின் என – do not go near (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி), மற்று எம் தோளொடு பகைபட்டு – but differing from my arms, நினை வாடு நெஞ்சத்தேம் – I am of sad heart thinking about you, I am of a sad heart because of you,

ஊடியார் – those who are sulking, நலம் தேம்ப – beauty to be ruined, ஒடியெறிந்து –like trees cut by cattle herders (ஒடி – ஒடிய என்பதன் விகாரம்), அவர் வயின் மால் தீர்க்கும் – ends their desire (மால் – வேட்கை), அவன் மார்பு – his chest, என்று – thus, எழுந்த சொல் நோவேமோ – should I be hurt for those words that have risen as gossip, முகை வாய்த்த முலை பாய – bud-like breasts hit, குழைந்த நின் தார் – your garland that got crushed, எள்ள – getting teased, வகை வரி – decorated, செப்பினுள் வைகிய கோதையேம்  – I am like a flower garland placed in a box,

சேரியால் சென்று நீ சேர்ந்த இல் வினாயினன் – he who has been going around and asking for you in houses you go to in the neighborhood/streets of other women (சேரியால் – ஆல் அசைநிலை), தேரொடு திரிதரும் பாகனைப் பழிப்பேமோ – should I blame your charioteer with roams around with his chariot, ஒலி கொண்ட சும்மையான் – uproarious loud sounds, மண மனை குறித்து – taking it as a wedding house, எம் இல் பொலிக எனப் புகுந்த நின் புலையனைக் கண்ட யாம்  – I who saw your bard who entered and wished our house to flourish (the word ‘pulaiyan’ has been used for bards, drummers and a man who performs funerary rituals, and the word ‘pulaithi’ has been used for  washerwomen, a woman possessed by Murukan, and a basket maker),

என ஆங்கு – thus (ஆங்கு – அசைநிலை, an expletive), நனவினான் வேறு ஆகும் – becomes different in reality, becomes different when awake, வேளா முயக்கம் – embraces without desire, மனை வரின் பெற்று உவந்து – when you come home I am happy, மற்று எம் தோள் வாட – my arms to fade, இனையர் என உணர்ந்தார் என்று ஏக்கற்று – I am sad that others know about us, ஆங்குக் கனவினான் எய்திய செல்வத்து அனையதே  – this is like the wealth attained in dreams, ஐய – surprising, awesome (ஐ என்னும் உரிச்சொல் ஐய என ஈறு திரிந்தது), எமக்கு – to me, நின் மார்பு –  your chest

கலித்தொகை 69
மருதன் இளநாகனார், மருதம், தலைவி தலைவனிடம் சொன்னது
போது அவிழ் பனிப் பொய்கைப் புதுவது தளை விட்ட
தாது சூழ் தாமரைத் தனி மலர் புறம் சேர்பு,
காதல் கொள் வதுவை நாள் கலிங்கத்துள் ஒடுங்கிய
மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல், 5
ஆய் தூவி அன்னம் தன் அணி நடைப் பெடையொடு,
மேதகத் திரிதரூஉம் மிகு புனல் நல் ஊர!

தெள் அரிச் சிலம்பு ஆர்ப்பத் தெருவின் கண் தாக்கி, நின்
உள்ளம் கொண்டு ஒழித்தாளைக் குறை கூறிக் கொள நின்றாய்
துணிந்தது பிறிது ஆகத் துணிவு இலள் இவள் எனப், 10
பணிந்தாய் போல் வந்து, ஈண்டுப் பயன் இல மொழிவாயோ?

பட்டுழி அறியாது, பாகனைத் தேரொடும்
விட்டு அவள் வரல் நோக்கி விருந்து ஏற்றுக்கொள நின்றாய்
நெஞ்சத்த பிற ஆக, நிறை இலள் இவள் என,
வஞ்சத்தான் வந்து, ஈங்கு வலி அலைத்தீவாயோ? 15

இணர் ததை தண் காவின் இயன்ற நின் குறி வந்தாள்
புணர்வினில் புகன்று ஆங்கே புனல் ஆடப் பண்ணியாய்
தருக்கிய பிற ஆகத் தன் இலள் இவள் எனச்,
செருக்கினால் வந்து, ஈங்குச் சொல் உகுத்தீவாயோ?
என ஆங்கு, 20
தருக்கேம் பெரும நின் நல்கல்; விருப்புற்றுத்
தாழ்ந்தாய் போல் வந்து தகவு இல செய்யாது,
சூழ்ந்தவை செய்து மற்று எம்மையும் உள்ளுவாய்,
வீழ்ந்தார் விருப்பு அற்றக்கால்.

Kalithokai 69
Maruthan Ilanākanār, Marutham, What the heroine said to the unfaithful hero
O man from the fine town with abundant water,
where a gander with delicate feathers swims with
pride with his female of beautiful walk, around an
isolated newly-opened pollen-filled lotus blossom in
a cold pond with flowers,
like a Vedic Brahmin who circumambulates the fire
on the day of their marriage filled with love, with his
pretty woman with deer-like looks, shy, hiding in her
clothes!

You stood on the street complaining about the woman
wearing anklets with clear jingles, who attracted
your attention and then sped away taking your heart
along. Have you come here uttering useless words and
behaving like a humble man, thinking differently that I
am not brave and that I don’t have strength?

Not knowing where she went, you sent your charioteer
with your chariot to bring her to be your guest, and you
awaited her arrival. Have you come here with lies
to reduce my strength, thinking differently that I don’t
have mental strength?

You united with a woman who came for a tryst with you
to a grove with dense clusters of flowers, and played with
her in a stream. You have come here proudly uttering words
with arrogance, thinking that I have no strength.

Lord, I am not proud due to your graces. Don’t
humble yourself to me and do what is not befitting to your
stature. Only when your passion for the women who you
desire to surround you ends, you come to me.

Notes:  நச்சினார்க்கினியர் உரை – உத்தரீயத்துள்ளே நாணால் ஒடுங்கி நோக்குகின்ற காதல் கொண்ட மான் போலும் நோக்கினையுடைய மடந்தை தனக்கு இம்மை மறுமைக்குத் துணையாகக் காதலித்தலைக் கொள்கின்ற கலியாண நாளிலே ஒத்தினையுடைய அந்தணன் அங்கியங் கடவுளை வலஞ் செய்வான் போலே.

Meanings:  போது அவிழ் – buds opening, பனிப் பொய்கை – cold pond, புதுவது – new, தளை விட்ட – opened, released ties, தாது சூழ் தாமரை – lotus flowers with pollen, தனி மலர் புறம் சேர்பு – on one side of an isolated flower, காதல் கொள் – in love, வதுவை நாள் – wedding day, கலிங்கத்துள் ஒடுங்கிய – shy and hiding under her clothes, மாதர் கொள் – beautiful, மான் நோக்கின் மடந்தை – young woman with deer looks, தன் துணை ஆக – as his partner, ஓது உடை அந்தணன் – Brahmin who chants the Vēdas, எரி வலம் செய்வான் போல் – like him walking around the flame, ஆய் தூவி அன்னம் – goose with pretty/soft/delicate feathers, தன் அணி நடைப் பெடையொடு மேதகத் திரிதரூஉம் – swims around splendidly with his female with pretty walk (திரிதரூஉம் – அளபெடை), உம் மிகு புனல் நல் ஊர – O man from such fine town with abundant water,

தெள் அரிச் சிலம்பு ஆர்ப்ப – as anklets with pebbles jingle clearly, தெருவின் கண் தாக்கி – attacked you on the street, நின் உள்ளம் கொண்டு ஒழித்தாளை – the one who took your heart and left, குறை கூறிக் கொள – uttering complaints, uttering pleas, நின்றாய் – you stood complaining/requesting,  துணிந்தது – bravery, பிறிது ஆக – different, துணிவு இலள் இவள் என – think about me that I don’t have any strength, பணிந்தாய் போல் வந்து – coming like you are humble, ஈண்டுப் பயன் இல மொழிவாயோ – you are uttering useless words here (இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்),

பட்டுழி – the place she went, அறியாது – not knowing, பாகனைத் தேரொடும் விட்டு அவள் வரல் நோக்கி விருந்து ஏற்றுக்கொள நின்றாய் – you sent your charioteer with the chariot for her and you are awaiting her visit, நெஞ்சத்த – at heart, பிற ஆக – differently, நிறை இலள் இவள் என – that I don’t have fullness/strength, வஞ்சத்தான் வந்து – you have come here with lies, you have come here with guile, ஈங்கு வலி அலைத்தீவாயோ – have you come here to reduce my strength (அலைத்தீவாயோ – வினைத் திரிசொல்)

இணர் ததை தண் காவின் – in the cool grove with dense clusters of flowers, இயன்ற நின் குறி வந்தாள் – the one who came for your tryst, புணர்வினில் புகன்று ஆங்கே புனல் ஆடப் பண்ணியாய் – you united with her and played in the stream, தருக்கிய – with pride, பிற ஆக – different, தன் இலள் இவள் என – that I am not one with strength, செருக்கினால் வந்து ஈங்குச் சொல் உகுத்தீவாயோ – have you come here to utter words with arrogance (உகுத்தீவாயோ – வினைத் திரிசொல்)

என ஆங்கு – so (ஆங்கு – அசைநிலை, an expletive), தருக்கேம் – I will not get proud (தன்மைப் பன்மை, first person plural), பெரும – O lord, நின் நல்கல் – your grace, விருப்புற்று – desiring, தாழ்ந்தாய் போல் வந்து – coming like a humble person, தகவு இல – what is not of esteem (இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்), செய்யாது – not doing, சூழ்ந்தவை செய்து –  you are hovering around other women, மற்று எம்மையும் உள்ளுவாய் – you will think about me only then (எம்மை – தன்மைப் பன்மை, first person plural), வீழ்ந்தார் – those you desire, விருப்பு அற்றக்கால் – when you do not have desires for them

கலித்தொகை 70
மருதன் இளநாகனார், மருதம், தோழி தலைவனிடம் சொன்னது, தலைவி கூறுவது போல்
மணி நிற மலர்ப் பொய்கை மகிழ்ந்து ஆடும் அன்னம் தன்
அணி மிகு சேவலை அகல் அடை மறைத்தெனக்,
கதுமெனக் காணாது கலங்கி அம் மடப் பெடை,
மதி நிழல் நீர் உள் கண்டு அது என உவந்து ஓடித்,
துன்னத் தன் எதிர் வரூஉம் துணை கண்டு மிக நாணிப், 5
பல் மலர் இடை புகூஉம் பழனம் சேர் ஊர! கேள்!

நலம் நீப்பத் துறந்து எம்மை நல்காய் நீ விடுதலின்,
பல நாளும் படாத கண் பாயல் கொண்டு இயைபவால்;
துணை மலர்க் கோதையார் வைகலும் பாராட்ட,
மண மனைத் ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே; 10

அகல நீ துறத்தலின் அழுது ஓவா உண்கண், எம்
புதல்வனை மெய் தீண்டப் பொருந்துதல் இயைபவால்;
நினக்கு ஒத்த நல்லாரை நெடு நகர்த் தந்து, நின்
தமர் பாடும் துணங்கையுள் அரவம் வந்து எடுப்புமே;

வாராய் நீ துறத்தலின் வருந்திய எமக்கு ஆங்கே, 15
நீர் இதழ் புலராக் கண் இமை கூம்ப இயைபவால்;
நேர் இழை நல்லாரை நெடு நகர்த் தந்து, நின்
தேர் பூண்ட நெடு நல் மான் தெள் மணி வந்து எடுப்புமே;
என ஆங்கு,
மெல்லியான் செவி முதல் மேல்வந்தான் காலை போல், 20
எல்லாம் துயிலோ எடுப்புக, நின் பெண்டிர்
இல்லின் எழீஇய யாழ் தழீஇ, கல்லா வாய்ப்
பாணன் புகுதராக்கால்.

Kalithokai 70
Maruthan Ilanākanār, Marutham, What the heroine’s friend said to the hero, in the voice of the heroine
O man from the town with fields where a pretty,
delicate goose, playing happily in a pond with
sapphire-colored flowers, is distressed in an instant
unable to see her nearby mate covered by a wide leaf,
then sees the reflection of the white moon in the water
and thinks happily that she found her mate and moves
in haste towards it, when the gander comes near her,
and she, embarrassed on seeing him come, hid herself
among the leaves!

Since you abandoned me causing my beauty to be lost,
my eyes that have not slept for many days could doze off,
if I am not awakened by the drums roaring from your
wedding house where women wearing double garlands
praise you daily.

Since you abandoned me for so long, my kohl-rimmed eyes
cry endlessly. I could cuddle our son and sleep, if I am not
awakened by the thunangai dance music from you and the
lovely women you have brought into our tall house.

Since you abandoned me causing me to suffer, my eyelids
with tears have not dried. I could close my eyes and sleep,
if I am not awakened by the sounds from the clear bells
of the horses hitched to your chariot that brought women
with pretty jewels to our home.

The sounds from all these, wake me up, like a weak king
jolted when he hears the war drums of a powerful
invading king,
when your bard does not enter our home playing his yāzh
that he played in the houses of your women.

Notes:  தலைவி கூறுவது போல் தோழி கூறுதல் – அகநானூறு 362 – நெஞ்சு பழுதாக வறுவியன் பெயரின் இன்றிப் பொழுதும் யான் வாழலனே, நற்றிணை 124 – புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை யானும் ஆற்றேன், நற்றிணை  175 – என் பசலை மெய்யே, நற்றிணை  178 – அவர்த் தெளிந்த என் நெஞ்சே, நற்றிணை 191 – என் நோக்கினளே அன்னை, நாளை மணிப் பூ முண்டகம் கொய்யேன் ஆயின் அணிக் கவின் உண்மையோ அரிதே, நற்றிணை 211 – யார்க்கு நொந்து உரைக்கோ யானே …… துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே?, கலித்தொகை 18 – என் தோள் எழுதிய தொய்யிலும், கலித்தொகை 70 – எம் புதல்வனை மெய் தீண்டப் பொருந்துதல் இயைபவால், குறுந்தொகை 236 – தந்தனை சென்மோ நீ உண்ட என் நலனே,  குறுந்தொகை 238 – தொண்டி அன்ன என் நலம் தந்து கொண்டனை சென்மோ, ஐங்குறுநூறு 45 – பசப்பு அணிந்தனவால் மகிழ்ந என் கண்ணே.

Meanings:  மணி நிற மலர்ப் பொய்கை – pond with sapphire-colored flowers, மகிழ்ந்து ஆடும் அன்னம் – goose which plays happily, தன் அணி மிகு சேவலை அகல் அடை மறைத்தென – since it’s nearby gander was hidden by a wide leaf, கதுமெனக் காணாது கலங்கி – feared in an instant not seeing him (கதுமென – விரைவுக்குறிப்பு), அம் மடப் பெடை – beautiful delicate female, மதி நிழல் நீர் உள் கண்டு – on seeing the reflection of the moon in the water, அது என உவந்து – happy thinking that it is him, ஓடித் துன்ன – went fast near it, தன் எதிர் வரூஉம் துணை கண்டு – on seeing its mate coming in front (வரூஉம் – அளபெடை), மிக நாணி – she became embarrassed a lot, பல் மலர் இடை புகூஉம் – enters between many flowers (புகூஉம் – அளபெடை), பழனம் சேர் ஊர – many from town with ponds, கேள் – listen,

நலம் நீப்ப – for my beauty to be lost, துறந்து எம்மை – abandoned me (எம்மை – தன்மைப் பன்மை, first person plural), நல்காய் – you did not shower graces, நீ விடுதலின் – since you left me, பல நாளும் – for many days, படாத கண் – eyes that have not slept, பாயல் கொண்டு இயைபவால் – it would be possible to sleep (இயைபவால் – ஆல் அசை நிலை, an expletive, இயைப – அகர ஈற்று தொழிற்பெயர்), துணை மலர்க் கோதையார் வைகலும் பாராட்ட – as women wearing garlands woven with pairs of flowers (or double garlands) praise you daily, மண மனைத் ததும்பும் – roaring from the wedding house, நின் மண முழ வந்து எடுப்புமே – your wedding drums come and wake me up,
அகல நீ துறத்தலின் – since you abandoned me for a long time, அழுது ஓவா – crying endlessly, உண்கண் – kohl-lined eyes, எம் புதல்வனை – our son, மெய் தீண்ட – cuddling, பொருந்துதல் இயைபவால் – it would be possible to embrace (இயைபவால் – ஆல் அசை நிலை, an expletive, இயைப – அகர ஈற்று தொழிற்பெயர்), நினக்கு ஒத்த நல்லாரை – women suitable for you, women who are like you, நெடு நகர்த் தந்து – brought to our tall house, நின் தமர் பாடும் துணங்கையுள் அரவம் வந்து எடுப்புமே – the sounds from the thunangai dance music performed by you with your women come and wake me up,

வாராய் நீ துறத்தலின் வருந்திய எமக்கு – to me who is sad since you abandoned me without coming, ஆங்கே – there, நீர் இதழ் புலரா – lids that do not dry, கண் இமை கூம்ப இயைபவால் – it would be possible to close my eyes (இயைபவால் – ஆல் அசை நிலை, an expletive, இயைப – அகர ஈற்று தொழிற்பெயர்), நேர் இழை நல்லாரை நெடு நகர்த் தந்து – brought pretty women (concubines) wearing lovely jewels to our tall house, நின் தேர் பூண்ட நெடு நல் மான் தெள் மணி வந்து எடுப்புமே – the clear bell sounds from the tall, fine horses hitched to your chariot come and wake me up,

என ஆங்கு – thus (ஆங்கு – அசைநிலை, an expletive), மெல்லியான் செவி முதல் மேல்வந்தான் காலை போல் – like the drum sounds of a strong invading king when it fell on the ears of a weak king, எல்லாம் துயிலோ எடுப்புக – all these wake me up, நின் பெண்டிர் இல்லின் எழீஇய யாழ் தழீஇ – playing the yāzh played in the houses of your women (எழீஇய – அளபெடை, தழீஇ – அளபெடை), கல்லா வாய்ப் பாணன் புகுதராக்கால் – when the uneducated bard does not enter playing

கலித்தொகை 71
மருதன் இளநாகனார், மருதம், காமக்கிழத்தி தலைவனிடம் சொன்னது
விரி கதிர் மண்டிலம் வியல் விசும்பு ஊர்தரப்,
புரிதலை தளை அவிழ்ந்த பூ அங்கண் புணர்ந்து ஆடி,
வரி வண்டு வாய் சூழும் வளம் கெழு பொய்கையுள்,
துனி சிறந்து இழிதரும் கண்ணின் நீர் அறல் வார,
இனிது அமர் காதலன் இறைஞ்சி தன் அடி சேர்பு, 5
நனி விரைந்து அளித்தலின் நகுபவள் முகம் போலப்,
பனி ஒரு திறம் வாரப் பாசடைத் தாமரைத்
தனி மலர் தளைவிடூஉம் தண் துறை நல் ஊர!

ஒரு நீ பிறர் இல்லை அவன் பெண்டிர் என உரைத்துத்
தேரொடும் தேற்றிய பாகன் வந்தீயான் கொல், 10
ஓர் இல் தான் கொணர்ந்து உய்த்தார் புலவியுள் பொறித்த புண்
பாரித்துப் புணர்ந்த நின் பரத்தைமை காணிய?

மடுத்து அவன் புகுவழி மறையேன் என்று யாழொடும்
எடுத்துச் சூள் பல உற்ற பாணன் வந்தீயான் கொல்,
அடுத்துத் தன் பொய் உண்டார்ப் புணர்ந்த நின் எருத்தின் கண் 15
எடுத்துக் கொள்வது போலும் தொடி வடு காணிய?

தணந்தனை எனக் கேட்டுத் தவறு ஓராது, எமக்கு நின்
குணங்களைப் பாராட்டும் தோழன் வந்தீயான் கொல்,
கணம் குழை நல்லவர் கதுப்பு அறல் அணைத் துஞ்சி
அணங்கு போல் கமழும் நின் அலர் மார்பு காணிய? 20
என்று நின்
தீரா முயக்கம் பெறுநர்ப் புலப்பவர்
யார் நீ வருநாள் போல் அமைகுவம் யாம் புக்கீமோ!
மாரிக்கு அவாவுற்றுப் பீள் வாடும் நெல்லிற்கு ஆங்கு,
ஆராத் துவலை அளித்தது போலும் நீ 25
ஓர் யாட்டு ஒரு கால் வரவு.

Kalithokai 71
Maruthan Ilanākanār, Marutham, What a concubine said to the hero
O man from the fine town with cool shores
where the sun with spreading rays moves in
the wide sky, a striped bee flits around,
drinking honey from open flowers in a thriving
pond, a single lotus flower blossoms between
leaves with dew drops on it, appearing like the
tears on the face of a joyous woman whose caring
lover surrenders sweetly at her feet, pleading,
offering his graces in haste!

Will he come, your charioteer who consoled me
and swore on your chariot that there is no other
woman but me, to see the scars on your body
inflicted by the women he brought to a house?

Will he come, your bard who told me that he
would not conceal from me if you went to other
women, swearing on his yāzh many times, to see
the scars on your neck caused by the bangles of
women who trusted your lies and united with you?

Will he come, your friend who sang your praises
to me, even though you had left, without
considering your faults, to see your broad chest
that carries divine fragrances from the hair of
women, like fine sand, on which you slept?

Who here will be upset with those who embraced
you without a break? Your visit here once a year is
like the inadequate scanty drizzle for paddy with
withering rice germs that long for heavy rains.
You can leave. I will be at peace each day like you
were here.

Notes:  நச்சினார்க்கினியர் உரை – காமக்கிழத்தி கூற்று, மா. இராசமாணிக்கனார் உரை – தலைவி கூற்று.  பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனது வரவு கண்டு ஊடிய தலைவி கூறியது. அறல் போல் கூந்தல்: அகநானூறு 142 – அறல் அன்ன இரும் பல் கூந்தல், அகநானூறு 162 – அறல் என அவிர்வரும் கூந்தல், அகநானூறு 213 – அறலென நெறிந்த கூந்தல், அகநானூறு 265 – அறலின் நெறித்த கூந்தல், அகநானூறு 299 – அறல் மருள் கூந்தலின், குறுந்தொகை 116 – தேம் பாய் கூந்தல் வளங்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை நுண் மணல் அறல் வார்ந்தன்ன, குறுந்தொகை 286 – அறல் போல் கூந்தல், கலித்தொகை 71 – கதுப்பு அறல், கலித்தொகை 98 – நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக, பொருநராற்றுப்படை 25 – அறல் போல் கூந்தல். தொடி வடு – கலித்தொகை 71 – தொடி வடு, கலித்தொகை 78 – தொடி உற்ற வடு, கலித்தொகை 91- தொடி உற்ற வடுவும். மதுரைக்காஞ்சி 569 – நுண் பூண் ஆகம் வடுக்கொள முயங்கி, அகநானூறு 142 – தொடிக்கண் வடுக் கொள முயங்கினள்.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  விரி கதிர் மண்டிலம் – sun with spreading rays, வியல் விசும்பு ஊர்தர – moves in the wide sky, புரிதலை – curled tops, curled tips, தளை அவிழ்ந்த – released their tightness, பூ – flowers, அங்கண் – there, புணர்ந்து ஆடி வரி வண்டு வாய் சூழும் வளம் கெழு பொய்கையுள் – in a prosperous thriving pond where a striped bee drinks and plays, துனி சிறந்து – with great sorrow, இழிதரும் கண்ணின் நீர் அறல் வார – tears flowing down from her eyes, இனிது அமர் காதலன் இறைஞ்சி – her sweet desiring lover pleads with her, தன் அடி சேர்பு – falls at her feet, நனி விரைந்து அளித்தலின் – since he showered graces coming in great haste, நகுபவள் முகம் போல – like the face of the woman who laughs, பனி ஒரு திறம் வார – covered with flowing dew, பாசடை – green leaf, தாமரைத் தனி மலர் தளைவிடூஉம் – where a single lotus flower opens loosening ties (விடூஉம் – அளபெடை), தண் துறை நல் ஊர – man from a fine town with cool shores,

ஒரு நீ பிறர் இல்லை அவன் பெண்டிர் என உரைத்து – telling me ‘you are the only one and there is no other woman for him’, தேரொடும் தேற்றிய பாகன் – charioteer who swore on the chariot (தேரொடும் – உம்மை சிறப்பு) , வந்தீயான் கொல் – will he come (வந்தீயான் – வினைத் திரிசொல்), ஓர் இல் தான் கொணர்ந்து உய்த்தார் புலவியுள் – while sulking with the women he brought to the house, பொறித்த புண் – caused scars, பாரித்து – revealing, announcing, புணர்ந்த – united, நின் பரத்தைமை காணிய  – to see your unfaithfulness,

மடுத்து – going, அவன் புகுவழி – where he goes (to other women), மறையேன் – ‘I will not hide’, என்று – in this manner, யாழொடும் எடுத்துச் சூள் பல உற்ற பாணன் வந்தீயான் கொல் – will your bard come who promised many times swearing on his yāzh (வந்தீயான் – வினைத் திரிசொல்), அடுத்து – after that, தன் பொய் உண்டார்ப் புணர்ந்த – those who believed you and united with you, நின் எருத்தின் – on your neck, கண் எடுத்துக் கொள்வது போலும் தொடி வடு காணிய – to see the scars of bangles seen well by eyes,

தணந்தனை எனக் கேட்டு – hearing that you left, தவறு ஓராது – without considering your faults, எமக்கு – to me, நின் குணங்களைப் பாராட்டும் தோழன் வந்தீயான் கொல் – will your friend who praises your character come (வந்தீயான் – வினைத் திரிசொல்), கணம் குழை – heavy earrings, நல்லவர் கதுப்பு அறல் அணைத் துஞ்சி – sleeping on the hair of pretty women (concubines) that are like dark fine sand, அணங்கு போல் கமழும் – with fragrance like deities, நின் அலர் மார்பு காணிய – to see your wide chest,

என்று நின் தீரா முயக்கம் பெறுநர்ப் புலப்பவர் யார் – who will be upset with them who you embrace endlessly, நீ வருநாள் போல் அமைகுவம் யாம் – I will be at peace like they are days you come (யாம் – தன்மைப் பன்மை, first person plural), புக்கீமோ – you can leave (மோ – முன்னிலையசை, an expletive of the second person), மாரிக்கு அவாவுற்று – desiring rain, பீள் வாடும் நெல்லிற்கு – to paddy plants with germs that are parched, ஆங்கு ஆராத் துவலை அளித்தது போலும் – like inadequate scanty rain sprinkles, நீ ஓர் யாட்டு ஒரு கால் வரவு – your arrival once a year

கலித்தொகை 72
மருதன் இளநாகனார், மருதம், காமக்கிழத்தி தலைவனிடம் சொன்னது
இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள்,
துணை புணர் அன்னத்தின் தூவி மெல் அணை அசைஇச்,
சேடு இயல் வள்ளத்துப் பெய்த பால் சில காட்டி,
ஊடும் மெல் சிறு கிளி உணர்ப்பவள் முகம் போலப்,
புது நீர புதல் ஒற்றப் புணர் திரைப் பிதிர் மல்க, 5
மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் வால் மலர் நண்ணிக்,
கடி கயத் தாமரைக் கமழ் முகை கரை மாவின்
வடி தீண்ட, வாய் விடூஉம் வயல் அணி நல் ஊர!

கண்ணி நீ கடி கொண்டார்க் கனைதொறும் யாம் அழப்,
பண்ணினால் களிப்பிக்கும் பாணன் காட்டு என்றானோ, 10
பேணான் என்று உடன்றவர் உகிர் செய்த வடுவினான்,
மேல் நாள், நின் தோள் சேர்ந்தார் நகை சேர்ந்த இதழினை?

நாடி நின் தூது ஆடித் துறைச் செல்லாள் ஊரவர்
ஆடை கொண்டு ஒலிக்கும் நின் புலைத்தி காட்டு என்றாளோ,
கூடியார் புனல் ஆடப் புணை ஆய மார்பினில் 15
ஊடியார் எறிதர, ஒளி விட்ட அரக்கினை?

வெறிது நின் புகழ்களை வேண்டார் இல் எடுத்து ஏத்தும்
அறிவு உடை அந்தணன் அவளைக் காட்டு என்றானோ,
களி பட்டார் கமழ் கோதை கயம்பட்ட உருவின் மேல்
குறி பெற்றார் குரல் கூந்தல் கோடு உளர்ந்த துகளினை? 20
என ஆங்கு,
செறிவுற்றேம், எம்மை நீ செறிய அறிவுற்று
அழிந்து உகு நெஞ்சத்தேம்; அல்லல் உழப்பக்
கழிந்தவை உள்ளாது கண்ட இடத்தே
அழிந்து நின் பேணிக் கொளலின் இழிந்ததோ, 25
இந்நோய் உழத்தல் எமக்கு.

Kalithokai 72
Maruthan Ilanākanār, Marutham, What a concubine said to the hero
O man from the fine town decorated with fields,
where freshets attack bushes and waves spray mist,
white āmpal flowers blossom looking at the moon,
and vadu mangoes from trees on the shore drop
hitting them first and then hitting the lotus buds
causing them to blossom, resembling the face of
a woman who feeds her fussy, delicate, little parrot
some milk from a lovely bowl, sitting on her soft,
blue mattress on a tall bed with pillows made with
the soft feather of goose that united with its mate!

Did he ask you to show to me, your bard who brings
you fragrant women for enjoyment, causing me to cry,
the scars on your body inflicted by the nails of angry
women who thought you did not protect them, and
the bite marks on your lips caused by those who united
with you the next day?

Did she ask you to show to me, your washerwoman
who goes as your messenger to women instead of going
to the shores to wash and brighten clothes of those in
town, the bright red dye that your women threw on your
chest which is a float to them when they sulked?

Did he ask you to show to me, the intelligent Brahmin
who sang your praises unnecessarily in my house against
my wishes, the pollen on your body dropped from the
thick hair of women wearing fragrant garlands who
united with you in bliss at the tryst you arranged, when
you put your fingers through their hair?

I used to feel complete when you were with me. Now I
am with a distressed heart knowing your nature. Even
though sorrow grips me, not worrying about what
happened, I accept you the moment I see you. Is this
not more disgraceful than me suffering from pain?

Notes:  நச்சினார்க்கினியர் உரை – காமக்கிழத்தி கூற்று, மா. இராசமாணிக்கனார் உரை – தலைவி கூற்று.  பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனது வரவு கண்டு ஊடிய தலைவி கூறியது.  ஒலிக்கும் (14) – இகழ்ச்சிக் குறிப்பு.  ஒளிக்குமென்றும் பாடம். புலைத்தி (14) – நச்சினார்க்கினியர் உரை – செறற் சொல்.  புலைத்தி – அகநானூறு 34 – பசை கொல் மெல் விரல் பெருந்தோள் புலைத்தி, அகநானூறு 387 – பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய பூந்துகில், நற்றிணை 90 – வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த புகாப் புகர் கொண்ட புன் பூங்கலிங்கமொடு, குறுந்தொகை 330 – நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்து, கலித்தொகை 72 – ஆடை கொண்டு ஒலிக்கும் நின் புலைத்தி, புறநானூறு 311 – புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை, புறநானூறு 259 முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல, கலித்தொகை 117 மாதர்ப் புலைத்தி விலை ஆகச் செய்தது ஓர் போழில் புனைந்த வரிப் புட்டில்.

Meanings:  இணை பட – put together one on top of another, நிவந்த – raised, நீல மென் சேக்கையுள் – on a bed that is soft and blue, துணை புணர் அன்னத்தின் தூவி மெல் அணை அசைஇ – placed pillows with feathers of a goose that united with its mate (அசைஇ – அளபெடை), சேடு இயல் வள்ளத்துப் பெய்த பால் சில காட்டி – showing a lovely bowl with a little milk (சேடு – அழகு), ஊடும் மெல் சிறு கிளி உணர்ப்பவள் முகம் போல – like the face of the woman who feeds her sulking delicate little parrot, புது நீர புதல் ஒற்ற – bushes are attacked by the new waters,  புணர் திரைப் பிதிர் மல்க – with the sprays of the lapping waves, மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் – white waterlilies that have blossomed looking at the moon, வால் மலர் – white flowers, நண்ணி – getting close, கடி கயத் தாமரைக் கமழ் முகை – fragrant lotus buds in the fragrant pond, கரை மாவின் வடி தீண்ட வாய் விடூஉம் – they open when touched by the dropped tiny vadu mangoes on the shore (விடூஉம் – அளபெடை), மாவடு, வயல் அணி நல் ஊர – O man from the fine town decorated with fields,

கண்ணி – considering, நீ – you, கடி கொண்டார்க் கனைதொறும் யாம் அழப் பண்ணினால் களிப்பிக்கும் பாணன் – your bard who gives joy with his music brings you fragrant women (or protected women) and whenever you embrace them I cry, காட்டு என்றானோ – did he ask for you to show, பேணான் என்று உடன்றவர் உகிர் செய்த வடுவினான் – with the scars caused by the nails of angry women who think you will not protect them (உடன்றவர் – வினையாலணையும் பெயர்), மேல் நாள் நின் தோள் சேர்ந்தார் – those who united with your shoulders the next day, நகை சேர்ந்த இதழினை – you are with lips with teeth marks,

நாடி நின் தூது ஆடித் துறைச் செல்லாள் – she goes as your messenger but she does not go to the shore (தூது ஆடி – தூதாகச் சென்று), ஊரவர் ஆடை கொண்டு ஒலிக்கும் – one who washes the clothes of those in town making them bright (ஒலிக்கும் – இகழ்ச்சிக்குறிப்பு), நின் புலைத்தி காட்டு என்றாளோ – did your washerwoman ask for you to show, கூடியார் புனல் ஆட – playing in the waters with those you united with, புணை ஆய மார்பினில் ஊடியார் எறிதர – thrown by the sulking women who threw it on your chest which became a raft, ஒளி விட்ட அரக்கினை – the red vermilion that is bright,

வெறிது நின் புகழ்களை வேண்டார் இல் எடுத்து ஏத்தும் – unnecessarily uttering greatly great praises in the house of the one who doesn’t care for it – meaning her house, அறிவு உடை அந்தணன் அவளைக் காட்டு என்றானோ – did the Brahmin with intelligence tell you ‘show it to her’ (அவளை – அவளுக்கு, வேற்றுமை மயக்கம், அறிவு உடை அந்தணன் – இகழ்ச்சிக்குறிப்பு), களி பட்டார் – those who attained bliss, கமழ் கோதை – fragrant garlands, கயம்பட்ட – மென்மையான, delicate, துவட்சி, உருவின் மேல் – on your body, குறி பெற்றார் – in the indicated place, குரல் கூந்தல் கோடு உளர்ந்த துகளினை – the pollen dust fallen from her thick hair when you dragged your fingers through their hair,

என ஆங்கு செறிவுற்றேம் – so I felt close (ஆங்கு – அசைநிலை, an expletive, செறிவுற்றேம் – தன்மைப் பன்மை, first person plural), எம்மை நீ செறிய – when you united with me (எம்மை – தன்மைப் பன்மை, first person plural), அறிவுற்று அழிந்து உகு நெஞ்சத்தேம் – I am with a distressed heart is ruined after knowing about you (நெஞ்சத்தேம் – தன்மைப் பன்மை, first person plural), அல்லல் உழப்ப – sorrow is hurting me, கழிந்தவை உள்ளாது – not thinking about the past, கண்ட இடத்தே – on seeing, அழிந்து – ruined, நின் பேணிக் கொளலின் – since I accept you, இழிந்ததோ இந்நோய் – is this disease more disgraceful, உழத்தல் எமக்கு – for me who suffers (எமக்கு – தன்மைப் பன்மை, first person plural)

கலித்தொகை 73
மருதன் இளநாகனார், மருதம், தலைவி தலைவனிடம் சொன்னது
அகன்துறை அணிபெறப் புதலொடு தாழ்ந்த
பகன்றைப் பூ உற நீண்ட பாசடைத் தாமரை
கண் பொர ஒளி விட்ட வெள்ளிய வள்ளத்தால்
தண் கமழ் நறும் தேறல் உண்பவள் முகம் போல
வண் பிணி தளைவிடூஉம் வயல் அணி நல் ஊர! 5

நோதக்காய் என நின்னை நொந்தீவார் இல்வழித்
தீது இலேன் யான் எனத் தேற்றிய வருதி மன்
ஞெகிழ் தொடி இளையவர் இடை முலைத் தாது சோர்ந்து
இதழ் வனப்பு இழந்த நின் கண்ணி வந்து உரையாக்கால்,

கனற்றி நீ செய்வது கடிந்தீவார் இல்வழி 10
மனத்தில் தீது இலன் என மயக்கிய வருதி மன்
அலமரல் உண்கண்ணார் ஆய் கோதை குழைத்த நின்
மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையாக்கால்,

என்னை நீ செய்யினும் உரைத்தீவார் இல்வழி
முன் அடிப் பணிந்து எம்மை உணர்த்திய வருதி மன் 15
நிரை தொடி நல்லவர் துணங்கையுள் தலைக்கொள்ளக்
கரை இடைக் கிழிந்த நின் காழகம் வந்து உரையாக்கால்,

என ஆங்கு,
மண்டு நீர் ஆரா மலி கடல் போலும் நின்
தண்டாப் பரத்தை தலைக்கொள்ள நாளும் 20
புலத் தகைப் பெண்டிரைத் தேற்றி மற்று யாம் எனின்
தோலாமோ நின் பொய் மருண்டு.

Kalithokai 73
Maruthan Ilanākanār, Marutham, What the heroine said to her husband
O man from the fine town decorated with fields
where pakandrai flowers that make
the wide shores beautiful hang low with bushes
and touch a lotus bud that blossoms and blinds
the eyes, growing among green leaves with a long
stem, resembling the face of a woman drinking cool
fragrant liquor from a bright silver bowl!

If your garland with wilted petals, that dropped
pollen between the breasts of young women with
loose bangles, did not come to convey it, there
would be nobody who would have hated you thinking
you are fit for hatred, and you could have come here
stating that you are not a bad person.

If the smudged sandal paste on your broad chest
caused by the lovely garlands of women with
whirling, kohl-lined eyes did not come to convey it,
there would be nobody to rebuke you for letting my
heart burn, and you could have come here saying
that you don’t have any evil in your mind.

If your garment which is torn along the border when
you performed thunangai dances with pretty women
with stacked bangles did not come to convey it, there
would have been nobody to point out your misdeeds,
and you could have come here humbly trying to
convince me.

Your passion for adultery is limitless like the large
ocean that is too vast for the river’s flood water. You
go and console the women who sulk with you daily.
As for me, won’t I be confused without fail from your
lies?

Notes:  அலமரல் – அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (தொல்காப்பியம், சொல் 310).

Meanings:  அகன் துறை – wide shore, அணிபெற – making it beautiful, புதலொடு தாழ்ந்த பகன்றைப் பூ உற – touched by pakandrai flowers hanging low with bushes, நீண்ட – long, பாசடை – green leaves, தாமரை – lotus, கண் பொர – blinding the eyes, ஒளி விட்ட வெள்ளிய வள்ளத்தால் – from a bright silver bowl, தண் கமழ் நறும் தேறல் உண்பவள் முகம் போல – like the face of one who drinks cool fragrant liquor, வண் பிணி – strong ties, தளைவிடூஉம் – loosens the ties (விடூஉம் – அளபெடை), வயல் அணி நல் ஊர – O man from a fine town decorated with fields,

நோதக்காய் என நின்னை நொந்தீவார் இல்வழி – since there is nobody here to hate you thinking you are fit for hating (நொந்தீவார் – வினைத் திரிசொல்), தீது இலேன் யான் – I am not a bad person, என – thus, தேற்றிய வருதி – you have come here promising, you have come here explaining, மன் – ஒழியிசைப் பொருளில் வந்த இடைச்சொல், a particle which implies suggestion, ஞெகிழ் தொடி இளையவர் – young women with loose bangles (ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி), இடை முலை – between the breasts, on their breasts, தாது – pollen, சோர்ந்து – dropped, இதழ் வனப்பு இழந்த நின் கண்ணி வந்து உரையாக்கால் – if your garland that lost its petal beauty did not tell,
கனற்றி நீ செய்வது கடிந்தீவார் இல்வழி – since there is nobody to rebuke you for causing my heart to burn (கடிந்தீவார் – வினைத் திரிசொல்), மனத்தில் தீது இலன் என மயக்கிய வருதி – you have come here confused saying you have no evil in your mind, மன் – ஒழியிசைப் பொருளில் வந்த இடைச்சொல், a particle which implies suggestion, அலமரல் – whirling, உண்கண்ணார் – those with kohl-rimmed eyes, ஆய் கோதை குழைத்த – crushed beautiful garlands, நின் மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையாக்கால் – if the smudged sandal paste on your wide chest does not tell,

என்னை நீ செய்யினும் உரைத்தீவார் இல்வழி – since there is nobody to point out your bad deeds (உரைத்தீவார் – வினைத் திரிசொல்), முன் அடிப் பணிந்து எம்மை உணர்த்திய வருதி – you have come here humbly trying to convince me (எம்மை – தன்மைப் பன்மை, first person plural), மன் – ஒழியிசைப் பொருளில் வந்த இடைச்சொல், a particle which implies suggestion, நிரை தொடி நல்லவர் துணங்கையுள் தலைக்கொள்ள – as you performed thunangai dances with pretty women (concubines) with rows of bangles, கரை இடை – along the border, கிழிந்த நின் காழகம் வந்து உரையாக்கால் – if your torn garment does not come and tell,

என ஆங்கு – so (ஆங்கு – அசைநிலை, an expletive), மண்டு நீர் – abundant water, huge flood, ஆரா – does not get filled, மலி கடல் போலும் – like an ocean that is too large, நின் தண்டாப் பரத்தை தலைக்கொள்ள – you are occupied with concubines without any control, you are occupied with concubines without end, நாளும் – daily, புலத் தகைப் பெண்டிரைத் தேற்றி – consoling the women who sulk, மற்று யாம் எனின் தோலாமோ நின் பொய் மருண்டு – also won’t I be confused without fail listening to your lies (தோலாமோ – ஓகாரம் எதிர்மறை)

கலித்தொகை 74
மருதன் இளநாகனார், மருதம், தலைவி தலைவனிடம் சொன்னது
பொய்கைப் பூ புதிது உண்ட வரி வண்டு கழி பூத்த
நெய்தல் தாது அமர்ந்து ஆடிப், பாசடைச் சேப்பினுள்
செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை
மை தபு கிளர் கொட்டை மாண் பதி படர்தரூஉம்,
கொய்குழை அகை காஞ்சித் துறை அணி நல் ஊர! 5

அன்பு இலன் அறன் இலன் எனப்படான் என ஏத்தி,
நின் புகழ் பல பாடும் பாணனும் ஏமுற்றான்;
நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டாங்கு அளி இன்மை
கண்டு நின் மொழி தேறும் பெண்டிரும் ஏமுற்றார்;

முன்பகல் தலைக்கூடி நன்பகல் அவள் நீத்துப் 10
பின்பகல் பிறர்த் தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய்;
என ஆங்கு,
கிண்கிணி மணித் தாரொடு ஒலித்து ஆர்ப்ப, ஒண்தொடிப்
பேர் அமர்க் கண்ணார்க்கும் படுவலை இது என,
ஊரவர் உடன் நகத் திரிதரும் 15
தேர் ஏமுற்றன்று நின்னினும் பெரிதே.

Kalithokai 74
Maruthan Ilanākanār, Marutham, What the heroine said to her husband
O man from the fine town decorated with shores
with kānji trees that put out lush sprouts for
women to pluck, where a striped bee that drank
new honey from flowers in a pond settled on the
pollen of a waterlily flower in the marsh, and then
went back and sat on the faultless, bright center of
a splendid field lotus blossom that appeared like it
was created from a chēmpu yam with green leaves!

Your bard who sings your praises saying, “He is not
known to be loveless. He is not known to be without
fairness,” is an insane man. The women who trust
your words even after seeing you graceless, like those
drinking poison even after knowing that it will kill,
are also insane.

You who unites with a woman in the morning, leaves
her for another woman at noon, and then searches for
another woman in the evening, are an insane man.

The chariot of yours that goes around, ridiculed by
those in town who say, “With its strands of bells jingling
loudly, it is a net that catches women with large calm
eyes and glittering bangles,” is more insane than you.

Notes: நச்சினார்க்கினியர் உரை – காமக்கிழத்தி கூற்று, மா. இராசமாணிக்கனார் உரை – தலைவி கூற்று.  பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனது வரவு கண்டு ஊடிய தலைவி கூறியது.

Meanings:  பொய்கைப் பூ புதிது உண்ட வரி வண்டு – striped bee that ate new honey from the  flowers in a pond, கழி பூத்த நெய்தல் தாது அமர்ந்து ஆடி – played in the pollen of waterlilies in the backwaters, பாசடைச் சேப்பினுள் செய்து இயற்றியது போல – like created from chēmpu yam with green leaves, வயல் பூத்த தாமரை – lotus bloomed in the field, மை தபு –  fault removed,  faultless, கிளர் கொட்டை – bright center, மாண் – esteemed, பதி – place,  படர்தரூஉம் – comes back (அளபெடை), கொய் குழை அகை காஞ்சித் துறை அணி நல் ஊர – man from the fine town decorated with shores with Portia trees that put out flourishing sprouts for women to pluck, பூவரச மரம், portia Tree, thespesia populnea,

அன்பு இலன் அறன் இலன் எனப்படான்  – he is not known as one without love and one without fairness (அறன் – அறம் என்பதன் போலி), என ஏத்தி – praising in such manner, நின் புகழ் பல பாடும் பாணனும் ஏமுற்றான் – the bard who sings your fame is insane, நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டாங்கு – like eating poison knowing that it will kill (செகுத்தலும் – உம்மை சிறப்பு), அளி இன்மை கண்டு – on seeing you without graces, நின் மொழி தேறும் பெண்டிரும் ஏமுற்றார் – the women who trust your words are insane,

முன்பகல் தலைக்கூடி – uniting in the morning, நன்பகல் அவள் நீத்து – leaving her at noon, பின்பகல் பிறர்த் தேரும் நெஞ்சமும் – with a heart that searches for others in the afternoon, ஏமுற்றாய் – you are insane,

என ஆங்கு – thus (ஆங்கு – அசைநிலை, an expletive), கிண்கிணி மணித் தாரொடு ஒலித்து ஆர்ப்ப – with strands of jingling bells creating sounds, ஒண்தொடி – bright bangles, பேர் அமர்க் கண்ணார்க்கும் – to women with large calm eyes, படுவலை இது என – that it is a trap that catches, ஊரவர் உடன் நக – making those in town laugh, திரிதரும் தேர் – roaming chariot (தேர் – ஆகுபெயர் பாணனுக்கு), ஏமுற்றன்று நின்னினும் பெரிதே – its insanity is larger than yours (பெரிதே – ஏகாரம் அசைநிலை, an expletive)

கலித்தொகை 75
மருதன் இளநாகனார், மருதம், தலைவி தோழியிடம் சொன்னது
நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய
நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொண்மார்
சீர் ஆர் சேயிழை ஒலிப்ப, ஓடும்
ஓரை மகளிர் ஓதை வெரீஇ எழுந்து,
ஆரல் ஆர்கை அம் சிறைத் தொழுதி 5
உயர்ந்த பொங்கர் உயர் மரம் ஏறி,
அமர்க்கண் மகளிர் அலப்பிய அந்நோய்
தமர்க்கு உரைப்பன போல், பல் குரல் பயிற்றும்
உயர்ந்த போரின் ஒலி நல் ஊரன்
புதுவோர் புணர்தல் வெய்யன் ஆயின் 10
வதுவை நாளால் வைகலும், அஃது யான்
நோவேன் தோழி! நோவாய் நீ என
என் பார்த்து உறுவோய்! கேள் இனித் தெற்றென!

“எல்லினை வருதி, எவன் குறித்தனை? எனச்
சொல்லாதிருப்பேன் ஆயின், ஒல்லென 15
விரி உளைக் கலி மான் தேரொடு வந்த
விருந்து எதிர்கோடலின் மறப்பல்” என்றும்

“வாடிய பூவொடு வாரல் எம் மனை!” என
ஊடி இருப்பேன் ஆயின், நீடாது
அச்சு ஆறு ஆக உணரிய வருபவன் 20
பொய்ச் சூள் அஞ்சிப் புலவேன் ஆகுவல்;

“பகல் ஆண்டு அல்கினை பரத்த!” என்று யான்
இகலியிருப்பேன் ஆயின், தான் தன்
முதல்வன் பெரும் பெயர் முறையுளிப் பெற்ற
புதல்வன் புல்லிப் பொய்த் துயில் துஞ்சும்; 25
ஆங்க,
விருந்து எதிர்கொள்ளவும் பொய்ச் சூள் அஞ்சவும்,
அரும் பெறல் புதல்வனை முயங்கக் காணவும்
ஆங்கு அவிந்து ஒழியும், என் புலவி தாங்காது,
அவ் அவ் இடத்தான் அவை அவை காணப் 30
பூங்கண் மகளிர் புனை நலம் சிதைக்கும்
மாய மகிழ்நன் பரத்தைமை
நோவென் தோழி, கடன் நமக்கு எனவே.

Kalithokai 75
Maruthan Ilanākanār, Marutham, What the heroine said to her friend
Let me explain clearly! Listen, oh friend who is
sad looking at me thinking ‘You are not sad about his
philandering’! I will be sad if he desires other women
and unites with them daily, the man from the fine town
with uproars from the eel-eating, beautifully winged
flocks of birds that fly in fear to the tall tree branches
and share their distress with their relatives, caused by
young girls with large warring eyes wearing gorgeous
jingling jewels, who run playing ōrai games, desiring
to pluck pretty blue and white waterlily blossoms with
rows of petals in the watery fields.

If I don’t tell him, “You have come in splendor. What do
you have in your mind?” he will arrive with uproar with
guests in his chariot hitched to fast horses with wide tufts,
and I totally forget to sulk.

If I sulk and tell him without prolonging my sulking, “Do
not come to our house with your wilted flowers,” I fear
that he will utter false promises knowing the way to handle
my fear, and I will not quarrel with him.

If I sulk and tell him, “You were with your concubines
all day long O unfaithful man!,” he will embrace our son
who bears the name of his illustrious father by tradition
and pretend to sleep.

And so my seething rage ends when I welcome our guests,
fear his false promises and see him embrace our son. I am
hurt by the affairs of this deceiving man who ruins the
beauty of women with eyes like flowers. My sulking does
not last for long as I see what occurs, because of my duty.

Meanings:  நீர் ஆர் செறுவில் – in the water-filled fields, நெய்தலொடு நீடிய நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொண்மார் – to pluck pretty white waterlilies with rows of petals and blue waterlilies, சீர் ஆர் சேயிழை – pretty perfect jewels, pretty red jewels, ஒலிப்ப – jingling, ஓடும் – they run away, ஓரை மகளிர் ஓதை வெரீஇ எழுந்து – rising up afraid of sounds from girls playing ōrai games (வெரீஇ – அளபெடை), ஆரல் ஆர்கை – eating eels, அம் சிறை – beautiful wings, தொழுதி – flock, உயர்ந்த பொங்கர் உயர் மரம் ஏறி – went up on the branches of tall trees, அமர்க்கண் மகளிர் அலப்பிய அந்நோய் – distress caused by women with warring eyes, தமர்க்கு உரைப்பன போல் – like they are telling their relatives, பல் குரல் பயிற்றும் – creates many sounds, உயர்ந்த போரின் ஒலி – sounds of just fights, நல் ஊரன் – the man from the fine town, புதுவோர் புணர்தல் வெய்யன் ஆயின் – if he desires to unite with other women, வதுவை நாளால் வைகலும் –  every day will be a wedding day, அஃது யான் நோவேன் தோழி – I will be sad about it O friend, நோவாய் நீ என என் பார்த்து உறுவோய் – you who is sad looking at me thinking, ‘You are not hurt by that’, கேள் இனி – listen now, தெற்றென – clearly,

எல்லினை வருதி – you are coming with splendor, எவன் குறித்தனை – what are you thinking, என – thus, சொல்லாதிருப்பேன் ஆயின் – if I don’t tell him, ஒல்லென விரி உளைக் கலி மான் தேரொடு வந்த விருந்து எதிர்கோடலின் – if he comes with uproar with guests in the chariot hitched with proud horses with spread tufts since I will accept, மறப்பல் என்றும் – I totally forget to sulk,

வாடிய பூவொடு வாரல் எம் மனை என ஊடி இருப்பேன் ஆயின் – if I sulk stating, ‘do not come to our house with wilted flowers’ (வாரல் – அல்லீற்று எதிர்மறை வியங்கோள் வினைமுற்று), நீடாது – not prolonging, அச்சு ஆறு ஆக – fear as the way (அச்சு – அச்சம் அச்சு என விகாரமாய் நின்றது), உணரிய வருபவன் – the man who comes to convince (உணரிய – உணர்த்துவதற்கு), பொய்ச் சூள் அஞ்சி – fearing his false promises, புலவேன் ஆகுவல் – I do not quarrel,

பகல் ஆண்டு அல்கினை பரத்த என்று யான் இகலியிருப்பேன் ஆயின் – if I sulk and tell him, ‘you were with them all day long O unfaithful man’ (பரத்த – விளி, address), தான் தன் முதல்வன் பெரும் பெயர் முறையுளிப் பெற்ற புதல்வன் புல்லி – he will embrace our son who bears his illustrious father’s name according to tradition, பொய்த் துயில் துஞ்சும் – and pretend like he sleeps,

ஆங்க – அசைநிலை, an expletive, விருந்து எதிர்கொள்ளவும் – and welcoming guests, பொய்ச் சூள் அஞ்சவும் – and fearing false promises, அரும் பெறல் புதல்வனை முயங்கக் காணவும் – and on seeing our precious son being embraced, ஆங்கு அவிந்து ஒழியும் – my rage ends, என் புலவி – my sulking, தாங்காது – unable to tolerate, அவ் அவ் இடத்தான் அவை அவை காண – as I see them happening there, பூங்கண் மகளிர் புனை நலம் சிதைக்கும் மாய மகிழ்நன் பரத்தைமை நோவென் தோழி – I am hurt by the affairs of the deceiving lord who ruins the beauty of women with flower-like eyes, கடன் நமக்கு எனவே – since it is my duty (எனவே – ஏகாரம் அசைநிலை, an expletive)

கலித்தொகை 76
மருதன் இளநாகனார், மருதம், தலைவி தோழியிடம் சொன்னது
புனை இழை நோக்கியும் புனல் ஆடப் புறம் சூழ்ந்தும்,
அணி வரி தைஇயும், நம் இல் வந்து வணங்கியும்,
நினையுபு வருந்தும் இந்நெடுந்தகை திறத்து இவ் ஊர்
இனையள் என்று எடுத்து ஓதற்கு அனையையோ நீ என
வினவுதி ஆயின், விளங்கு இழாய்! கேள் இனி! 5

செவ்விரல் சிவப்பு ஊரச் சேண் சென்றாய் என்று அவன்
பௌவ நீர்ச் சாய்க் கொழுதிப் பாவை தந்தனைத்தற்கோ,
கௌவை நோய் உற்றவர் காணாது கடுத்த சொல்
ஒவ்வா என்று உணராய், நீ ஒரு நிலையே உரைத்ததை?

ஒடுங்கி யாம் புகல் ஒல்லேம் பெயர்தர அவன் கண்டு 10
நெடுங்கய மலர் வாங்கி, நெறித்துத் தந்தனைத்தற்கோ
விடுந்தவர் விரகு இன்றி எடுத்த சொல் பொய் ஆகக்
கடிந்ததும் இலையாய், நீ கழறிய வந்ததை?

வரி தேற்றாய் நீ என வணங்கு இறை அவன் பற்றித்,
தெரி வேய்த் தோள் கரும்பு எழுதித் தொய்யில் செய்தனைத்தற்கோ 15
புரிபு நம் ஆயத்தார் பொய் ஆக எடுத்த சொல்
உரிது என உணராய், நீ உலமந்தாய் போன்றதை?
என ஆங்கு,
அரிது இனி ஆய் இழாய்! அது தேற்றல் புரிபு ஒருங்கு,
அன்று நம் வதுவையுள் நமர் செய்வது இன்று ஈங்கே, 20
தான் நயந்து இருந்தது இவ் ஊர் ஆயின் எவன் கொலோ,
நாம் செயற்பாலது இனி?

Kalithokai 76
Maruthan Ilanākanār, Marutham, What the heroine said to her friend
My friend with bright jewels! If you are asking
me whether I’m the one having a relationship
with this esteemed man
……….who looked at my beautiful jewels,
……….surrounded me when I played in
……….the river, drew thoyyil designs on
……….me, came to my house humbly,
……….and thinks about me and feels sad,
like the town gossips about me, listen now!

You repeated without understanding that it is not
true, the harsh words of sick slanderers.
Is it because he cut reed in the salt marsh and made a
doll for me telling me, “Your red fingers have become
redder since you are struggling with it for long?”

You have come to hurt me, not chiding them for their
lies, those who are shunned by town and are not smart.
Is it because he plucked flowers from the long pond
and gave them to me removing the calyx, on seeing me
move away, afraid to get in the water?

You have come here with sorrow, not understanding
that they are lies, the words uttered by our loving
friends. Is it because he held my curved forearms and
painted sugarcane thoyyil designs on my arms that are
like chosen bamboo, telling me that I did not know the
patterns?

And so, it is hard now, my friend with pretty jewels to
clear doubts! If this town desires to do now what our
family would do for our wedding, what can we do
about it now?

Notes:  நச்சினார்க்கினியர் உரை – இது ‘திணை மயக்குறுதலுங் கடிநிலையிலவே’ (தொல்காப்பியம், பொருளதிகாரம் 111) என்னுஞ் சூத்திர விதியான் மருதத்துக் குறிஞ்சி வந்தது. குறுந்தொகை 276 – பணைத்தோள் குறுமகள் பாவை தைஇயும் பஞ்சாய்ப் பள்ளம் சூழ்ந்து மற்றிவள் உருத்தெழு வன முலை ஒளி பெற எழுதிய தொய்யில்.

Meanings:  புனை இழை நோக்கியும் – looking at our beautiful jewels, புனல் ஆடப் புறம் சூழ்ந்தும் – surrounding us when we were playing in the river, அணி வரி தைஇயும் – painting thoyyil designs on us (தைஇ – அளபெடை), நம் இல் வந்து வணங்கியும் – coming to our house and being humble to us, நினையுபு வருந்தும் – thinking and feeling sad, இந்நெடுந்தகை திறத்து இவ் ஊர் இனையள் என்று எடுத்து ஓதற்கு அனையையோ- are you the one who the town says often that has a relationship with the great man, நீ என வினவுதி ஆயின் – if you are asking me that (வினவுதி – முன்னிலை வினைமுற்று), விளங்கு இழாய் – O one with bright jewels, கேள் இனி – listen now,

செவ் விரல் சிவப்பு ஊரச் சேண் சென்றாய் என்று – because my red fingers became redder working for a long time, அவன் பௌவ நீர்ச் சாய்க் கொழுதிப் பாவை தந்தனைத்தற்கோ – is it for him cutting reeds near the ocean and giving me a reed doll (தந்த – விகாரம்), கௌவை நோய் உற்றவர் – those with the disease of slandering, காணாது – not seeing, கடுத்த சொல் – harsh words, ஒவ்வா என்று உணராய் நீ ஒரு நிலையே உரைத்ததை – you also said the same thing without understanding that it is not true (உரைத்ததை – உரைத்தது, ஐகாரம் சாரியை),

ஒடுங்கி யாம் புகல் ஒல்லேம் பெயர்தர– that I was not agreeable to getting shy and moving away, அவன் கண்டு –  he saw that, நெடுங்கய மலர் வாங்கி நெறித்துத் தந்தனைத்தற்கோ – is it for plucking and removing the calyx and giving the flowers from the large pond (தந்த – விகாரம்), விடுந்தவர் – those who are shunned (விடுத்தவர் என்பது எதுகைக்காக விடுந்தவர் என நின்றது – சுப. அண்ணாமலை உரை), விரகு இன்றி – without smartness, எடுத்த சொல் பொய் ஆகக் கடிந்ததும் இலையாய் – you did not chide them that their words are lies, you did not push them away because their words are lies (கடிந்ததும் – உம்மை இழிவு சிறப்பு, இலை – இல்லை என்பதன் விகாரம்), நீ கழறிய வந்ததை – you come hurting (வந்ததை – வந்தது, ஐகாரம் சாரியை),

வரி தேற்றாய் நீ – you don’t know thoyyil designs, என வணங்கு இறை அவன் பற்றி – he held my curved forearms, தெரி வேய்த் தோள் கரும்பு எழுதித் தொய்யில் செய்தனைத்தற்கோ – is it for painting sugarcane thoyyil patterns on my chosen-bamboo-like arms (செய்த – விகாரம்), புரிபு – desiring, நம் ஆயத்தார் – our friends, பொய் ஆக எடுத்த சொல் உரிது என உணராய் – not understanding that their words are lies (உரிது உரித்து என்பதன் விகாரம்), நீ உலமந்தாய் போன்றதை – it appears that you have come with sorrow (போன்றதை – போன்றது ஐகாரம் சாரியை),

என ஆங்கு அரிது இனி – and so it is hard now (ஆங்கு – அசைநிலை, an expletive), ஆய் இழாய் – O one with pretty jewels, அது தேற்றல் – clarifying it, புரிபு – desiring, ஒருங்கு அன்று – it is not totally easy, நம் வதுவையுள் – on our wedding, நமர் செய்வது – our relatives perform, இன்று ஈங்கே தான் நயந்து இருந்தது இவ் ஊர் ஆயின் – if this town desires to do it here today, எவன் கொலோ நாம் செயற்பாலது இனி – what can we do about it now

கலித்தொகை 77
மருதன் இளநாகனார், மருதம், தலைவி தலைவனிடம் சொன்னது
இணை இரண்டு இயைந்து ஒத்த முகை நாப்பண், பிறிது யாதும்
துணை இன்றித் தளை விட்ட தாமரை தனி மலர்;
திரு முகம் இறைஞ்சினள், வீழ்பவற்கு இனைபவள்
அரி மதர் மழைக் கண் நீர் அலர் முலை மேல் தெறிப்ப போல்,
தகை மலர்ப் பழனத்த புள் ஒற்ற ஒசிந்து ஒல்கி 5
மிக நனி சேர்ந்த அம் முகை மிசை அம் மலர்
அக இதழ்த் தண் பனி உறைத்தரும் ஊர! கேள்!

தண் தளிர்த் தகை பூத்த தாது எழில் நலம் செலக்
கொண்டு நீ மாறிய கவின் பெறல் வேண்டேன் மன்
உண்டாதல் சாலா என் உயிர் சாதல் உணர்ந்து நின் 10
பெண்டு எனப் பிறர் கூறும் பழி மாறப் பெறுகற்பின்;

பொன் எனப் பசந்த கண் போது எழில் நலம் செலத்
தொல் நலம் இழந்த கண் துயில் பெறல் வேண்டேன் மன்
நின் அணங்கு உற்றவர் நீ செய்யும் கொடுமைகள்
என் உழை வந்து நொந்து உரையாமை பெறுகற்பின்; 15

மாசு அற மண்ணுற்ற மணி ஏசும் இருங்கூந்தல்
வீ சேர்ந்து வண்டு ஆர்க்கும் கவின் பெறல் வேண்டேன் மன்
நோய் சேர்ந்த திறம் பண்ணி நின் பாணன் எம் மனை
நீ சேர்ந்த இல் வினாய் வாராமை பெறுகற்பின்;
ஆங்க, 20
கடைஇய நின் மார்பு தோயலம் என்னும்,
இடையும் நிறையும் எளிதோ, நின் காணின்
கடவுபு கை தங்கா நெஞ்சு என்னும் தம்மோடு
உடன் வாழ் பகை உடையார்க்கு?

Kalithokai 77
Maruthan Ilanākanār, Marutham, What the heroine said to the hero
O man from the town where a lotus in solitude
that unfolds its petals amidst two similar buds,
leans a lot, attacked by a bird in a pond with
beautiful flowers, drips cold dew from its inner
petals on the nearby pretty buds it touches,
appearing like a sad woman who puts her head
down thinking about her beloved and dropping
tears from her pretty eyes with lines, on her large
breasts! Listen!

If they don’t slander me saying that I am his
woman, finding my life ruined and unable to hold,
I will not desire to regain my beauty, like the pretty
flower pollen dropped on sprouts, that has left me
because of you.

If those hurt by you do not come to me and talk
about their anguish and your cruel acts, I will not
desire for my eyes to sleep, eyes that have lost their
flower-like beauty and become pale.

If your bard does not come to our house playing sickly
music asking me to which house you have gone, I will
not desire to regain my beauty with dark tresses,
prettier than washed perfect sapphire, decorated with
flowers swarmed by bees.

Is it easy for me not to embrace your chest that attracted
me in the past, or sulk with you with a firm mind?
I live with this foe, my heart, that races to be with you
when it sees you, not staying with me.

Notes:  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  நீலமணிபோல் பெண்ணின் கூந்தல்:  அகநானூறு 8 – மணி ஏர் ஐம்பால், நற்றிணை 10 – மணியின் தாழ்ந்த நல் நெடுங்கூந்தல், நற்றிணை 133 – மணி ஏர் ஐம்பால், 214 – மணி இருங்கதுப்பு, 245 – மணி மருள் ஐம்பால், 337 – மணி மருள் ஐம்பால், 366 – மணி ஏர் ஐம்பால், 374 – வீழ் மா மணிய புனை நெடுங்கூந்தல், கலித்தொகை 22 – மணி ஒளி விட்டன்ன ஐவகை, கலித்தொகை 77 – மாசு அற மண்ணுற்ற மணி ஏசும் இருங்கூந்தல், பரிபாடல் 10, குறிஞ்சிப்பாட்டு 69 – பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம் பின்னிருங் கூந்தல், 112 – மணி நிறம் கொண்ட மா இருங் குஞ்சி.

Meanings:  இணை இரண்டு இயைந்து ஒத்த முகை நாப்பண் – amidst two similar looking buds, பிறிது யாதும் துணை இன்றி – without any other flower near it, தளை விட்ட தாமரை – blossomed lotus, lotus that loosened its ties, தனி மலர் – single flower, திரு முகம் – pretty face, இறைஞ்சினள் – she bent her head down, வீழ்பவற்கு – for her beloved man, இனைபவள் –  woman who is sad (வினையாலணையும் பெயர்), அரி மதர் மழைக் கண் – proud moist eyes with red lines, beautiful moist eyes with red lines, நீர் அலர் முலை மேல் தெறிப்ப போல் – like dropping tears on large breasts, தகை மலர்ப் பழனத்த – in a pond with beautiful flowers, புள் ஒற்ற – attacked by a bird, ஒசிந்து ஒல்கி மிக நனி – bent very much (மிக நனி – ஒருபொருட் பன்மொழி), சேர்ந்த – joined, அம் முகை மிசை – on the beautiful buds, அம் மலர் – beautiful flowers, அக இதழ் – inner petals, தண் பனி உறைத்தரும் – drips cold dew, ஊர – O man from the town, கேள் – you listen,

தண் தளிர் – cool sprouts, தகை பூத்த தாது – beautiful flower pollen, எழில் நலம் செலக் கொண்டு நீ மாறிய கவின் – my great beauty that you changed, பெறல் வேண்டேன் – I will not desire to get it back (வேண்டேன் – ஒருமைப் பன்மை மயக்கம்), மன் – கழிவுப்பொருளில் வந்த இடைச்சொல், உண்டாதல் சாலா என்  உயிர் சாதல் – my life  is unable to be held any more, உணர்ந்து – knowing, நின் பெண்டு என – your woman, பிறர் கூறும் பழி மாற – if the blame from others change, பெறுகற்பின் – if obtained (வினைத் திரிசொல்),

பொன் எனப் பசந்த கண் – eyes that have become pale like gold, போது எழில் நலம் செலத் – losing its flower-like beauty, தொல் நலம் இழந்த கண் – eyes that have lost their original beauty, துயில் பெறல் வேண்டேன் – I will not desire sleep (வேண்டேன் – ஒருமைப் பன்மை மயக்கம்), மன் – கழிவுப்பொருளில் வந்த இடைச்சொல், நின் அணங்கு உற்றவர் – those hurt by you, நீ செய்யும் கொடுமைகள் – the cruel things that you do, என் உழை வந்து நொந்து உரையாமை – not come and tell me hurting, பெறுகற்பின் – if obtained (வினைத் திரிசொல்),

மாசு அற மண்ணுற்ற மணி ஏசும் இருங்கூந்தல் – dark hair that makes the faultlessly cleaned sapphire to be not good, வீ சேர்ந்து வண்டு ஆர்க்கும் – bees reach the flowers and buzz on them, கவின் பெறல் வேண்டேன் – I will not desire to get back my beauty (வேண்டேன் – ஒருமைப் பன்மை மயக்கம்), மன் – கழிவுப்பொருளில் வந்த இடைச்சொல், நோய் சேர்ந்த திறம் பண்ணி –  playing sickly music, நின் பாணன் எம் மனை நீ சேர்ந்த இல் வினாய் வாராமை – if your bard does not come to our house and ask about the house you have gone to (எம் – தன்மைப் பன்மை, first person plural), பெறுகற்பின் – if obtained (வினைத் திரிசொல்),

ஆங்க கடைஇய – attracted (ஆங்க – அசை, கடைஇய – அளபெடை), நின் மார்பு – your chest, தோயலம் என்னும் – that I will not embrace (தோயலம் – தன்மைப் பன்மை, first person plural), இடையும் நிறையும் – sulking and staying strong (இடையும் – ஊடலும், நிறையும் – உம்மை சிறப்பு), எளிதோ – is it easy, நின் காணின் – if I see you, கடவுபு – it goes to you, it sends me to you, கை தங்கா நெஞ்சு என்னும் தம்மோடு உடன் வாழ் பகை உடையார்க்கு – to those whose hearts don’t stay with them and are enemies that live with them

கலித்தொகை 78
மருதன் இளநாகனார், மருதம், தலைவி தலைவனிடம் சொன்னது
பல் மலர்ப் பழனத்த பாசடைத் தாமரை
இன்மலர் இமிர்பு ஊதும் துணை புணர் இருந்தும்பி,
உண்துறை உடைந்த பூப் புனல் சாய்ப்பப் புலந்து ஊடிப்,
பண்பு உடை நல் நாட்டுப் பகை தலைவந்தென,
அது கைவிட்டு அகன்று ஒரீஇக் காக்கிற்பான் குடை நீழல் 5
பதி படர்ந்து இறைகொள்ளும் குடி போலப், பிறிதும் ஒரு
பொய்கை தேர்ந்து அலமரும் பொழுதினான், மொய் தப
இறை பகை தணிப்ப அக் குடி பதிப் பெயர்ந்தாங்கு
நிறை புனல் நீங்க வந்து அத்தும்பி அம் மலர்ப்
பறை தவிர்பு அசைவிடூஉம் பாய் புனல் நல் ஊர! 10

நீக்குங்கால் நிறம் சாய்ந்து புணருங்கால் புகழ் பூத்து,
நாம் கொண்ட குறிப்பு இவள் நலம் என்னும் தகையோ தான்,
எரி இதழ் சோர்ந்து உக ஏதிலார்ப் புணர்ந்தமை
கரி கூறும் கண்ணியை ஈங்கு எம் இல் வருவதை?

சுடர் நோக்கி மலர்ந்து ஆங்கே படின் கூம்பும் மலர் போல் என் 15
தொடர் நீப்பின் தொகும் இவள் நலம் என்னும் தகையோ தான்,
அலர் நாணிக் கரந்த நோய் கைம்மிகப் பிறர் கூந்தல்
மலர் நாறும் மார்பினை ஈங்கு எம் இல் வருவதை?

பெயின் நந்தி வறப்பின் சாம் புலத்திற்குப் பெயல் போல் யான்
செலின் நந்திச் செறின் சாம்பும் இவள் என்னும் தகையோ தான், 20
முடி உற்ற கோதை போல் யாம் வாட, ஏதிலார்
தொடி உற்ற வடுக் காட்டி ஈங்கு எம் இல் வருவதை?
ஆங்க,
ஐய அமைந்தன்று அனைத்து ஆகப் புக்கீமோ,
வெய்யாரும் வீழ்வாரும் வேறு ஆகக் கையின் 25
முகை மலர்ந்தன்ன முயக்கில் தகை இன்றே,
தண் பனி வைகல் எமக்கு.

Kalithokai 78
Maruthan Ilanākanār, Marutham, What the heroine said to the hero
O man from the town with wide flowing waters
where a dark thumpi bee that hums on sweet lotus
flowers with green leaves in a pond with many
blossoms, a male with a mate, hating and upset
that the drinking water shores of his flower pond
is broken and ruined by floods, chooses another
pond and then returns to stay without flying away
once the flood recedes,
like the citizens of a fine, virtuous land facing siege
who abandon it for another country with a righteous
king, and return to their own country when the enemy
is routed by their king!

You have come to our house with a wilted garland
with flame-like petals that bear witness to your union
with other women. Is it because you think,
‘She loses her complexion when I am away and regains
her beauty when she unites with me?’

You have come to our house with your chest bearing
the fragrances of flowers from the hair of other
women as I hide this excessive disease from others
fearing gossip. Is it because you think, ‘She loses her
beauty when I leave like the lotus that blossoms
as the sun rises and folds as it sets?’

You have come to our house revealing the scars inflicted
by the bangles of other women as I wilt like the strand
on my head. Is it because you think, ‘She rejoices
when I come and pines away when I don’t, like the land
which flourishes greatly when rain falls but becomes
parched and ruined when it does not?’

And so, sir, it is fitting that you should go to those who
you desire and those who desire you. For me who has
been alone daily in the cold dew season, there is no honor
in your embraces, which are like flower buds opened by
hand.

Meanings:  பல் மலர்ப் பழனத்த – in a pond with many flowers, பாசடைத் தாமரை – lotus with green leaves, இன் மலர் – sweet flowers, இமிர்பு ஊதும் – that hums, துணை புணர் இருந்தும்பி – dark thumpi that unites with its mate, உண்துறை உடைந்த பூப் புனல் சாய்ப்ப – the drinking water shores broken and the flower pond ruined, புலந்து ஊடி – hating and upset, பண்பு உடை நல் நாட்டுப் பகை தலைவந்தென – since enemies came to a fine country with good tradition, அது கைவிட்டு அகன்று ஒரீஇ – abandoned that place and moved away (ஒரீஇ – அளபெடை), காக்கிற்பான் குடை நீழல் பதி படர்ந்து இறைகொள்ளும் குடி போல– like those who go and live under the umbrella of a protective king’s land (காக்கிற்பான் – வினைத் திரிசொல், நீழல் – நிழல் என்பதன் நீட்டல் விகாரம்), பிறிதும் ஒரு பொய்கை தேர்ந்து – choosing another pond after that, அலமரும் பொழுதினான் – when distressed, when tossed around by confusion, மொய்  தப – strength removed, strength ruined, இறை பகை தணிப்ப – when the king puts an end to enemies, அக் குடி பதிப் பெயர்ந்தாங்கு – like those citizens who came back to live, நிறை புனல் நீங்க வந்து – returned after the floods, அத்தும்பி – that thumpi, அம் மலர் – pretty flowers, பறை தவிர்பு – avoiding flying, அசைவிடூஉம் – stays (அசைவிடூஉம் – அளபெடை), பாய் புனல் நல் ஊர – man from a fine town with wide flowing waters,

நீக்குங்கால் நிறம் சாய்ந்து புணருங்கால் புகழ் பூத்து நாம் கொண்ட குறிப்பு இவள் நலம் என்னும் தகையோ – is it because you think ‘she loses color when I leave and she becomes beautiful when I unite with her’ (நீக்குங்கால், புணருங்கால் – கால் ஈற்று வினையெச்சம்), தான் எரி இதழ் சோர்ந்து உக – flame-like petals dropping, ஏதிலார்ப் புணர்ந்தமை கரி கூறும் கண்ணியை – you wearing a flower garland that bears witness to you uniting with others, ஈங்கு எம் இல் வருவதை – you have come to our home here,

சுடர் நோக்கி மலர்ந்து – looking at the sun and blossoming, ஆங்கே படின் கூம்பும் – closes when the sun leaves, மலர் போல் – like the lotus blossom, என் தொடர் நீப்பின் – if I leave, when my contact goes away, தொகும் இவள் நலம் என்னும் தகையோ – will her beauty get ruined when I leave, தான் அலர் நாணி – I got embarrassed by gossip, கரந்த நோய் – disease that I hid, கைம்மிக – excess, பிறர் கூந்தல் மலர் நாறும் மார்பினை – you with a fragrant chest from the flowers from the hair of other women, ஈங்கு எம் இல் வருவதை – you have come to our home here,

பெயின் நந்தி  – flourishing when it rains, வறப்பின் சாம் புலத்திற்குப் பெயல் போல் – like the rain for the parched land that is ruined, யான் செலின் நந்தி – flourishing when I come, செறின் சாம்பும் இவள் என்னும் தகையோ – is it because you think ‘she will be distressed when I stay away”, தான் முடி உற்ற கோதை போல் யாம் வாட – me fading like the strand on my head (யாம் – தன்மைப் பன்மை, first person plural), ஏதிலார் தொடி உற்ற வடுக் காட்டி – showing the scars caused by the bangles of other women, ஈங்கு எம் இல் வருவதை – you have come to our home here,

ஆங்க ஐய – O sir (ஆங்க – அசைநிலை, an expletive), அமைந்தன்று – this is fitting, அனைத்து ஆகப் புக்கீமோ – it is best that you leave (மோ – முன்னிலையசை, an expletive of the second person), வெய்யாரும் வீழ்வாரும் வேறு ஆக – those you desire and those who desire you, வேறு ஆக – in a different way, கையின் முகை மலர்ந்தன்ன – like flower buds opened by hand, முயக்கில் தகை இன்றே – there is no splendor in your embraces (இன்றே – ஏகாரம் அசைநிலை, an expletive), தண் பனி வைகல் எமக்கு – for me who has stayed alone daily in this cold dew season (எமக்கு – தன்மைப் பன்மை, first person plural)

கலித்தொகை 79
மருதன் இளநாகனார், மருதம், தலைவி தலைவனிடம் சொன்னது
புள் இமிழ் அகல் வயல் ஒலி செந்நெல் இடைப் பூத்த
முள் அரைத் தாமரை முழு முதல் சாய்த்து, அதன்
வள் இதழ் உற நீடி வயங்கிய ஒரு கதிர்,
அவை புகழ் அரங்கின் மேல் ஆடுவாள் அணி நுதல்
வகை பெற செரீஇய வயந்தகம் போல் தோன்றும் 5
தகைபெறு கழனி அம் தண் துறை ஊர! கேள்!

அணியொடு வந்து ஈங்கு எம் புதல்வனைக் கொள்ளாதி,
மணி புரை செவ்வாய் நின் மார்பு அகலம் நனைப்பதால்;
தோய்ந்தாரை அறிகுவேன் யான் எனக் கமழும் நின்
சாந்தினால் குறி கொண்டாள் சாய்குவள் அல்லளோ? 10

புல்லல் எம் புதல்வனைப், புகல் அகல் நின் மார்பில்
பல் காழ் முத்து அணி ஆரம் பற்றினன் பரிவானால்;
மாண் இழை மட நல்லார் முயக்கத்தை நின் மார்பில்
பூணினால் குறி கொண்டாள் புலக்குவள் அல்லளோ?

கண்டே எம் புதல்வனைக் கொள்ளாதி, நின் சென்னி 15
வண்டு இமிர் வகை இணர் வாங்கினன் பரிவானால்;
நண்ணியார்க் காட்டுவது இது எனக் கமழும் நின்
கண்ணியால் குறி கொண்டாள் காய்குவள் அல்லளோ?
என ஆங்கு,
பூங்கண் புதல்வனைப் பொய் பல பாராட்டி 20
நீங்காய் இகவாய் நெடுங்கடை நில்லாதி;
ஆங்கே அவர் வயின் சென்றீ, அணி சிதைப்பான்
ஈங்கு எம் புதல்வனைத் தந்து.

Kalithokai 79
Maruthan Ilanākanār, Marutham, What the heroine said to the hero
O man from the lovely cool shores with prosperous
fields, where in a sprawling field birds chirp
creating sounds amidst red paddy grass, a lotus
blossom with a thorny, thick stem is bent by a heavy
paddy spike which leans and presses on its thick petals,
appearing like the ornament on the pretty forehead
of a dancing girl who performs in a famed arena!

Do not come here wearing ornaments to lift my son.
His gem-like, red mouth will drip saliva and wet your
proud, wide chest. Won’t she be distressed, the one who
marked you with fragrant sandal paste, thinking she
knows the woman who embraced you?

Do not come here and embrace my son. He will pull and
break the many-stranded pearl necklace on your proud
wide chest. Won’t she sulk, the one who will look at your
ornament and think that you embraced delicate women
wearing lovely jewels?

Do not come here and hold my son when you see him.
He will pull and break the bee-swarming flower strand on
your head. Won’t she burn with rage, the one who will
think that your garland reveals the women with whom
you united?

And so, do not stand at my tall door, not leaving, and not
ridding yourself of your infidelity, uttering
many fake praises on my son with flower-like eyes. Hand
my son, who will ruin your jewels, to me, and go away to
your women.

Meanings:  புள் இமிழ் – birds calling, அகல் வயல் – wide fields, ஒலி – sounds, flourishing, செந்நெல் இடைப் பூத்த –  blossomed among red paddy, blossomed among fine paddy, முள் அரைத் தாமரை – lotus with thorny stem, முழு முதல் சாய்த்து – thick stem bent, அதன் வள் இதழ் உற நீடி வயங்கிய ஒரு கதிர் –  a flourishing paddy spike touches and rubs on its thick petals, அவை – that, புகழ் அரங்கின் மேல் ஆடுவாள் – the dancing girl in a famed arena, அணி நுதல் – pretty forehead, வகை பெற செரீஇய வயந்தகம் போல் தோன்றும் – appears like the properly placed vayanthakam head ornament dangling on the forehead (செரீஇய – அளபெடை), தகைபெறு கழனி அம் தண் துறை ஊர – O man from the beautiful cool shores with rich agricultural land, கேள் – listen,

அணியொடு வந்து ஈங்கு எம் புதல்வனைக் கொள்ளாதி – do not hold my son with your ornaments – from the houses of other women (எம் – தன்மைப் பன்மை, first person plural), மணி புரை செவ்வாய் –  gem-like red mouth, நின் மார்பு அகலம் நனைப்பதால் – he will wet your wide chest (ஆல் அசைநிலை, an expletive), தோய்ந்தாரை அறிகுவேன் யான் என – that I  know who embraced you, கமழும் நின் சாந்தினால் – due to the fragrant sandal paste on you, குறி கொண்டாள் – the woman who interprets the signs, சாய்குவள் அல்லளோ – won’t she be sad,

புல்லல் எம் புதல்வனை – do not embrace my son (எம் – தன்மைப் பன்மை, first person plural), புகல் அகல் நின் மார்பில் – on your proud/arrogant chest, பல் காழ் முத்து அணி ஆரம் பற்றினன் – he will hold your pearl necklace with many strands, பரிவானால் – he will break it (ஆல் அசைநிலை, an expletive), மாண் இழை மட நல்லார் – delicate pretty women (concubines) with fine jewels, முயக்கத்தை – their embraces, நின் மார்பில் பூணினால் – from your chest ornaments, குறி கொண்டாள் – the woman who interprets the signs, புலக்குவள் அல்லளோ – won’t she sulk, won’t she hate,

கண்டே எம் புதல்வனைக் கொள்ளாதி – do not hold my son when you see him (எம் – தன்மைப் பன்மை, first person plural), நின் சென்னி வண்டு இமிர் வகை இணர் – your bee-swarming head strand with clusters, வாங்கினன் பரிவானால் – he will pull and break (ஆல் அசைநிலை, an expletive), நண்ணியார்க் காட்டுவது இது என – that it reveals those who you united with, கமழும் நின் கண்ணியால் – because of your fragrant strand, குறி கொண்டாள் – one who interprets the signs, காய்குவள் அல்லளோ – won’t she burn with rage,

என ஆங்கு – thus (ஆங்கு – அசைநிலை, an expletive), பூங்கண் புதல்வனைப் பொய் பல பாராட்டி – praising with lies my son with flower-like eyes, நீங்காய் – you are not leaving, இகவாய் – without removing (thoughts of other women), நெடுங்கடை நில்லாதி – do not stand near the tall door, ஆங்கே அவர் வயின் சென்றீ – you go away to them (சென்றீ – முன்னிலை ஒருமை வினைத் திரிசொல்), அணி சிதைப்பான் – he will ruin jewels, ஈங்கு எம் புதல்வனைத் தந்து – hand my son to me here (எம் – தன்மைப் பன்மை, first person plural)

கலித்தொகை 80
மருதன் இளநாகனார், மருதம், தலைவி மகனிடம் சொன்னது
நயந்தலை மாறுவார் மாறுக; மாறாக்
கயந்தலை மின்னும் கதிர் விடு முக்காழ்ப்
பயந்த எம் கண் ஆர யாம் காண நல்கித்,
திகழ் ஒளி முத்து அங்கு அரும்பு ஆகத் தைஇப்
பவழம் புனைந்த பருதி சுமப்பக், 5
கவழம் அறியா நின் கை புனை வேழம்
புரி புனை பூங்கயிற்றின் பைபய வாங்கி,
அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து, ஈங்கே
வருக, எம் பாக மகன்!

கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்பச் சாஅய்ச் சாஅய்ச் செல்லும் 10
தளர் நடை காண்டல் இனிது; மற்று இன்னாதே
உளம் என்னா நுந்தை மாட்டு எவ்வம் உழப்பார்
வளை நெகிழ்பு யாம் காணுங்கால்;

ஐய காமரு நோக்கினை அத்தத்தா என்னும் நின்
தேமொழி கேட்டல் இனிது; மற்று இன்னாதே 15
உய்வு இன்றி நுந்தை நலன் உணச் சாஅய்ச் சாஅய்மார்
எவ்வ நோய் யாம் காணுங்கால்;

ஐய திங்கள் குழவி வருக என யான் நின்னை
அம்புலி காட்டல் இனிது; மற்று இன்னாதே
நல்காது நுந்தை புறம் மாறப்பட்டவர் 20
அல்குல் வரி யாம் காணுங்கால்;

ஐய! எம் காதில் கனங்குழை வாங்கிப் பெயர்தொறும்,
போது இல் வறுங்கூந்தல் கொள்வதை நின்னை யாம்
ஏதிலார் கண் சாய, நுந்தை வியன் மார்பில்
தாது தேர் வண்டின் கிளை பாடத் தைஇய 25
கோதை பரிபு ஆடக் காண்கும்.

Kalithokai 80
Maruthan Ilanākanār, Marutham, What the heroine said to her son
O my son, the little elephant keeper! Let those
whose love for you has changed, get lost. O son
with a tender head, for whom my love is unchanged.
For me who gave birth to you, to enjoy you fully with
my eyes,
come to me my son donning lovely jingling anklets,
wearing a ray-emitting, three-strand ornament on
your tender head, pulling very slowly with a tight, pretty
rope, your hand-carved elephant that does not eat food,
carved in coral with lustrous pearls attached on its
edges, and mounted on a circular board.

It is sweet to see your slow tottering walk with your
tinkling anklets. It is painful to see the women in
distress whose bangles loosen, who have lost their
hearts to your father who does not care.

It is sweet to hear the honey-sweet words ‘athathā’
uttered by you with delicate, beautiful looks. It is
painful to see the grief of women who suffer in
distress as your father eats away their virtue.

It is sweet to call the moon, “O honorable moon child!
Come!” and show it to you. It is painful to see the
lines on the loins of women abandoned by your father.

Lord, whenever you come and take my heavy earrings
from my ears to play, I place you on my hair that is not
adorned with flowers, since I enjoy the sight of you
playing on your father’s wide chest tearing up his
garlands swarming with bees that choose pollen, which
will cause his passion for other women to wear out.

Notes:  நயந்தலை தலை மாறுவார் மாறுக (1) – நச்சினார்க்கினியர் உரை – நின்னிடத்து அன்பு ஒழிவார் ஒழிந்தே போக.

Meanings:  நயந்தலை மாறுவார் மாறுக – let those whose love for you has changed get lost, மாறா – unchanged, கயந்தலை – tender head, மின்னும் கதிர் விடு – emitting bright rays, முக்காழ் – three strand ornament, பயந்த – gave birth, எம் கண் ஆர – my eyes to enjoy, யாம் காண –  to see you, நல்கி – offered, திகழ் ஒளி முத்து அங்கு அரும்பு ஆகத் தைஇ – created with bright pearls on the edges that are filigreed and the pearls looking like buds (தைஇ – அளபெடை), பவழம் புனைந்த – carved with coral, பருதி சுமப்ப – a circular board carrying it, கவழம் அறியா நின் கை புனை வேழம் – your hand-made elephant that does not know eating balls of food (உன்னுடைய உண்ணுதலை அறியாத கையால் செய்யப்பட்ட விளையாட்டு யானை, வெளிப்படை), புரி புனை பூங்கயிற்றின் பைபய வாங்கி – pulling very slowly with a tight pretty/soft rope (பைபய – பையப்பைய பைபய என மருவியது), அரி புனை புட்டிலின் ஆங்கண்– with your anklets with pebbles, ஈர்த்து – pulling, ஈங்கே வருக – come here, எம் பாக மகன் – my son who is a elephant keeper,

கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்ப –bright bells jingling and jingling, சாஅய்ச் சாஅய்ச் செல்லும் தளர் நடை காண்டல் இனிது – it is sweet to see your leaning and leaning tottering walk (சாஅய் – அளபெடை), மற்று இன்னாதே – but what is painful (மற்று – வினைமாற்றின்கண் வந்தது), உளம் என்னா நுந்தை மாட்டு – due to losing their hearts to your father who does not care (உளம் – உள்ளம் என்பதன் இடைக்குறை), எவ்வம் உழப்பார் – those who are sad, வளை நெகிழ்பு யாம் காணுங்கால் – when I see their bangles loosening (காணுங்கால் – கால் ஈற்று வினையெச்சம்),

ஐய காமரு நோக்கினை – you are with delicate beautiful looks (காமர் – கடைக்குறைந்து நின்றது, மருவும் – ஈற்றுமிசை உகரம் மெய்யொடுங்கெட்டு மவ்வீறு சந்தியால் கெட்டது), அத்தத்தா என்னும் நின் தேமொழி கேட்டல் இனிது – it is sweet to hear your honey sweet words that utter ‘athathā’ (அத்தத்தா – அத்தா அத்தா, கடைக்குறைந்து நின்றது), மற்று இன்னாதே – but what is painful is (மற்று – வினைமாற்றின்கண் வந்தது), உய்வு இன்றி நுந்தை நலன் உண – as your father eats away their beauty/virtue giving them this disease from which they have no salvation (உண உண்ண என்பதன் விகாரம்), சாஅய்ச் சாஅய்மார் எவ்வ நோய் யாம் காணுங்கால் – when seeing the grief of those who suffer with pain disease (சாஅய், சாஅய்மார் – அளபெடை, காணுங்கால் – கால் ஈற்று வினையெச்சம்),

ஐய திங்கள் குழவி வருக என யான் நின்னை அம்புலி காட்டல் இனிது – it is sweet for me to show you the moon and say ‘my honorable moon child, come’, மற்று இன்னாதே – but what what is painful is (மற்று – வினைமாற்றின்கண் வந்தது), நல்காது – without showering graces, நுந்தை புறம் மாறப்பட்டவர் அல்குல் வரி யாம் காணுங்கால் – when I see the lines on the loins of those who are abandoned by your father (காணுங்கால் – கால் ஈற்று வினையெச்சம்),

ஐய – O lord, O son, எம் காதில் கனங்குழை வாங்கிப் பெயர்தொறும் – whenever you come and take the heavy earrings on my ears and go, போது இல் வறுங்கூந்தல் கொள்வதை நின்னை யாம் – I place you on my unadorned hair without flowers (கொள்வதை, கொள்வது – ஐ சாரியை), ஏதிலார் கண் சாய – his feelings for other women to wear out, நுந்தை வியன் மார்பில் – on your father’s wide chest, தாது தேர் வண்டின் கிளை பாடத் தைஇய கோதை பரிபு ஆடக் காண்கும் – when I see you play tearing the pollen-choosing bee-swarming strung garland (தைஇய – அளபெடை)

கலித்தொகை 81
மருதன் இளநாகனார், மருதம், தலைவியும் தலைவனும் சொன்னது

தலைவி (மகனிடம்):

மை அற விளங்கிய மணி மருள் அவ்வாய் தன்
மெய் பெறா மழலையின் விளங்கு பூண் நனைத்தரப்,
பொலம் பிறையுள் தாழ்ந்த புனை வினை உருள் கலன்,
நலம்பெறு கமழ் சென்னி, நகையொடு துயல்வர,
உரு எஞ்சாது இடை காட்டும் உடை கழல் அம் துகில் 5
அரி பொலி கிண்கிணி ஆர்ப்பு ஓவா அடி தட்பப்,
பாலோடு அலர்ந்த முலை மறந்து, முற்றத்துக்
கால் வல் தேர் கையின் இயக்கி நடை பயிற்றா,
ஆல் அமர் செல்வன் அணி சால் பெருவிறல்
போல வரும் என் உயிர்! 10

பெரும! விருந்தொடு கைதூவா எம்மையும் உள்ளாய்,
பெருந்தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்றத்,
திருந்துபு நீ கற்ற சொற்கள் யாம் கேட்ப,
மருந்து ஓவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்றற்றாப்
பெருந்தகாய் கூறு சில; 15

தலைவி (தோழியிடம்):

எல் இழாய்! சேய் நின்று நாம் கொணர்ந்த பாணன் சிதைந்து, ஆங்கே
வாய் ஓடி ஏனாதிப்பாடியம் என்றற்றா,
நோய் நாம் தணிக்கும் மருந்து எனப் பாராட்ட,
ஓவாது அடுத்து அடுத்து அத்தத்தா என்பான் மாண
வேய் மென்தோள் வேய்த் திறம் சேர்த்தலும், மற்று இவன் 20
வாய் உள்ளின் போகான் அரோ;

உள்ளி உழையே ஒருங்கு படை விடக்
கள்ளர் படர்தந்தது போலத் தாம் எம்மை
எள்ளுமார் வந்தாரே ஈங்கு;

தலைவன்:

ஏதப்பாடு எண்ணிப் புரிசை வியல் உள்ளோர் 25
கள்வரைக் காணாது கண்டேம் என்பார் போலச்,
சேய் நின்று செய்யாத சொல்லிச் சினவல்; நின்
ஆணை கடக்கிற்பார் யார்?

தலைவி:

அதிர்வு இல் படிறு எருக்கி வந்து என் மகன் மேல்,
முதிர் பூண் முலை பொருத ஏதிலாள் முச்சி, 30
உதிர் துகள் உக்க நின் ஆடை ஒலிப்ப
எதிர் வளி நின்றாய்; நீ செல்;

தலைவன்:

இனி எல்லா யாம் தீது இலேம் என்று தெளிப்பவும், கைந்நீவி
யாது ஒன்றும் எம் கண் மறுத்தரவு இல் ஆயின்,
மேதக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம், 35
தாவா விருப்பொடு கன்று யாத்த உழிச் செல்லும்
ஆ போல் படர்தக நாம்.

Kalithokai 81
Maruthan Ilanākanār, Marutham, What the heroine and the hero said

To her son:

O my life, beautiful like Murukan, the very
victorious son of Sivan seated under a banyan tree!
You are oblivious of my breasts swollen with milk,
you with a pretty mouth, faultless and bright like a
gem, that prattles blurred words, dripping saliva on
the bright jewels on your chest. From your fragrant
head a crescent shaped, pretty, round pendant
hangs. Your fine clothing has loosened, revealing your
waist, and blocking your steps. Your lovely anklets
with pebbles jingling without a break, you hold on
your chariot and learn to walk in our yard.

Lord, you do not think about me who is tied down
entertaining guests endlessly. O great one, utter a few
words that your foster mothers taught well with zeal
on the big street, for me to enjoy as though I am
drinking divine nectar, and as a medicine to my
unceasing heart.

To her friend:

One with lustrous jewels! Like how the bard we brought,
who, standing at a distance and in confusion, uttered by
a slip of his tongue that he has been to Ēnāthipādi, I sang
the praises of my son thinking he is the cure-all for my
ailment, who thinks of his father and utters endlessly
‘father, father’.  Even when I hold him on my pretty,
bamboo-like arms, why does his father’s name not vanish
from his mouth?

(On seeing her husband arrive)

Here he comes stealthily like bandits who aim their
weapons at enemies. He has come here to taunt me.

Hero:

Don’t stand at a distance and tell what I did not do, like
the guards near the wall, fearing blame, would say that
they saw thieves when they did not see any. Do not be
angry with me. Who here will go against your orders?

Heroine:

You have come unperturbed with treachery to cause me
distress, as though you desire to see my son. You stand
in front of the blowing wind showing off the pollen in
your clothing, dropped from the head of that woman
who embraced you with her mature breasts with jewels.
Go away!

Hero:

If you don’t respond gently even after I explain that I did
not do any harm, I will take possession of my son who
bears the esteemed name of my father, like a cow that
reaches out with love to its calf that is tethered.

Notes:  பயிற்றா – பயின்று என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  எல் – எல்லே இலக்கம் – (தொல்காப்பியம், இடையியல் 21).

Meanings:  மை அற விளங்கிய – faultless and bright, மணி மருள் அவ்வாய் – pretty mouth, தன் மெய் பெறா மழலையின் – with prattle that is not clear, விளங்கு பூண் நனைத்தர – wetting the bright jewels (on the chest), பொலம் பிறையுள் – from a gold crescent moon, தாழ்ந்த – hanging low, புனை வினை உருள் கலன் – beautifully made round jewel, நலம் பெறு கமழ் சென்னி நகையொடு – with the pretty jewel on your fragrant head, துயல்வர – swaying, உரு – structure, shape, எஞ்சாது – fully, இடை காட்டும் – revealing the waist, உடை – clothing, கழல் – loose, அம் துகில் – pretty clothing, அரி பொலி கிண்கிணி ஆர்ப்பு – jingling of anklets with many pebbles, jingling of beautiful anklets with pebbles, ஓவா – unceasing, அடி தட்ப – steps blocking, பாலோடு அலர்ந்த முலை மறந்து – forgetting the swollen breasts with milk, முற்றத்துக்கால் வல் தேர் கையின் இயக்கி – holding with your hand a sturdy chariot in the yard, நடை பயிற்றா – walking to learn, ஆல் அமர் செல்வன் அணி சால் பெருவிறல் போல வரும் என் உயிர் – my life that comes like the very beautiful and very victorious son of Sivan who sits under a banyan tree (பெருவிறல் – அன்மொழித்தொகை, பெரும் வெற்றியுடைய முருகன்),

பெரும – O lord, விருந்தொடு கைதூவா எம்மையும் உள்ளாய் – you do not think about me who is endlessly busy with guests (எம்மை – தன்மைப் பன்மை, first person plural), பெருந்தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்றத் திருந்துபு நீ கற்ற சொற்கள் யாம் கேட்ப – for me to hear the words you learned perfectly from your foster mothers while playing on the huge street (யாம் – தன்மைப் பன்மை, first person plural), மருந்து ஓவா நெஞ்சிற்கு – as medicine to my unceasing heart, அமிழ்தம் அயின்றற்றா – like I am eating divine nectar, பெருந்தகாய் – O great one, கூறு சில – utter a few words,

எல் இழாய் – O one with bright jewels, சேய் நின்று நாம் கொணர்ந்த பாணன் – the bard we brought from afar,  or the bard we brought who stood at a distant, சிதைந்து – confused, ஆங்கே வாய் ஓடி – not guarding his mouth, ஏனாதிப்பாடியம் என்றற்றா – like how he said he has been to ‘Ēnāthipādi’, நோய் நாம் தணிக்கும் மருந்து என – as medicine to heal our disease, பாராட்ட – praise,  ஓவாது அடுத்து அடுத்து – endlessly next to each other, அத்தத்தா என்பான் – he says ‘athathā’, மாண வேய் மென்தோள் வேய்த் திறம் சேர்த்தலும் – even when I held him on my esteemed/pretty, delicate bamboo-like arms, மற்று இவன் வாய் உள்ளின் போகான் – he (husband) does not leave from my son’s mouth, அரோ – (அரோ = அசைச் சொல்),

உள்ளி – thinking, planning, உழையே ஒருங்கு படை விட – choosing a place and totally destroying enemies with their weapons (உழையே – ஏகாரம் அசை நிலை, an expletive), கள்ளர் படர்தந்தது போல – he has come like robbers, தாம் எம்மை எள்ளுமார் வந்தாரே ஈங்கு – has he come here to taunt me (எம்மை – தன்மைப் பன்மை, first person plural),

ஏதப்பாடு எண்ணி – thinking about the fault, புரிசை வியல் உள்ளோர் – those who are on the wide space near the wall, கள்வரைக் காணாது கண்டேம் என்பார் போல – like those who say they saw thieves when they did not, சேய் நின்று – standing afar, செய்யாத சொல்லி – uttering what I did not do, சினவல் – don’t be angry, நின் ஆணை கடக்கிற்பார் யார் – who will go against your order,

அதிர்வு இல் – unperturbed, படிறு – deceit, treachery, எருக்கி – causing distress, வந்து – you have come, என் மகன் மேல்  – because of my son, முதிர் பூண் முலை பொருத – mature breasts with jewels touching, ஏதிலாள் முச்சி – head of the other woman, உதிர் துகள் உக்க – dropped pollen falling, நின் ஆடை ஒலிப்ப – decorating your clothes, எதிர் வளி நின்றாய் – you come and stand here in the breeze blowing across, நீ செல் – you go away,

இனி எல்லா யாம் தீது இலேம் என்று தெளிப்பவும் – even after if I tell you clearly that I did not do any harm (இலேம் – தன்மைப் பன்மை, first person plural), கைந்நீவி – not controlled, not stopping, யாது ஒன்றும் எம் கண் மறுத்தரவு இல் ஆயின் – if you do not respond in any manner to what I say, மேதக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம் – I will take my son who bears my esteemed father’s name, தாவா விருப்பொடு –with unspoiled love, கன்று யாத்த உழிச் செல்லும் ஆ போல்– like a cow that reaches out to its tied calf, படர்தக நாம் – I will leave

கலித்தொகை 82
மருதன் இளநாகனார், மருதம், தலைவியும் தோழியும் சொன்னது

தலைவி:

ஞாலம் வறம் தீரப் பெய்யக் குணக்கு ஏர்பு,
காலத்தில் தோன்றிய கொண்மூ போல், எம் முலை
பாலொடு வீங்கத் தவ நெடிது ஆயினை;
புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு
புக்கவழி எல்லாம் கூறு. 5

தோழி:

கூறுவேன் மேயாயே போல வினவி, வழிமுறைக்
காயாமை வேண்டுவல் யான்.

தலைவி:

காயேம்.

தோழி:

மடக் குறு மாக்களோடு ஓரை அயரும்
அடக்கம் இல் போழ்தின் கண், தந்தை காமுற்ற 10
தொடக்கத்துத் தாய் உழை புக்காற்கு அவளும்
மருப்புப் பூண் கையுறை ஆக அணிந்து,
“பெருமான் நகை முகம் காட்டு” என்பாள் கண்ணீர்
சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன; மற்றும்
வழிமுறைத் தாய் உழைப் புக்காற்கு அவளும் 15
மயங்கு நோய் தாங்கி, மகன் எதிர் வந்து,
முயங்கினள் முத்தினள் நோக்கி, நினைந்தே,
“நினக்கு யாம் யாரேம் ஆகுதும்” என்று
வனப்பு உறக் கொள்வன நாடி அணிந்தனள்,
ஆங்கே “அரி மதர் உண்கண் பசப்ப நோய் செய்யும் 20
பெருமான் பரத்தைமை ஒவ்வாதி” என்றாள்;
அவட்கு இனிது ஆகி விடுத்தனன் போகித்
தலைக்கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர்
புலத் தகை புத்தேள் இல் புக்கான் ………………………

தலைவி:

………………………………………………………….அலைக்கு ஒரு
கோல் தா; நினக்கு அவள் யார் ஆகும் எல்லா? 25
வருந்தி யாம் நோய் கூர, நுந்தையை என்றும்
பருந்து எறிந்தற்று ஆகக் கொள்ளும் கொண்டாங்கே,
தொடியும் உகிரும் படை ஆக நுந்தை
கடி உடை மார்பின் சிறுகண்ணும் உட்காள்,
வடுவும் குறித்தாங்கே செய்யும் விடு இனி; 30
அன்ன பிறவும் பெருமான் அவள் வயின்
துன்னுதல் ஓம்பித் திறவது இல் முன்னி, நீ
ஐயம் இல்லாதவர் இல் ஒழிய எம் போலக்
கையாறு உடையவர் இல் அல்லால் செல்லல்;
அமைந்தது இனி நின் தொழில். 35

Kalithokai 82
Maruthan Ilanākanār, Marutham, What the heroine and her friend said

Heroine:

You have delayed a lot and my breasts
are swollen with milk like the rain-bearing
clouds appearing from the east for the earth
to end its drought. Tell me the places you went
with my son after circumambulating the temple
of the celestials.

Friend:

I will tell you. If you are asking me desiring
the truth, please don’t be angry with me.

Heroine:

I will not be angry.

Friend:

Your son entered the house of the ‘mother’ his father
fell for in the beginning while young and playing ōrai
games with his friends, when he was out of control.
She adorned him with ivory hand ornaments and said,
“Lord, show me your smiling face,” as her tears streamed
down like pearls from a broken strand.  He then went to
the house of another ‘mother’.  She, containing her pining
disease, kissed him.  She looked at him, thought and said,
“Who am I to you?”  She then dressed him up beautifully,
her kohl-lined eyes paled, she said, “Do not become like
your unfaithful father who causes women with pretty,
moist, kohl-rimmed eyes with red lines to suffer.”  After
being sweet to her, he left.  Then he went to the house
of his father’s new woman who hates us and fights with us.

Heroine:

Bring a stick to hit him. Who is she to you? Like an
eagle that claws, she causes scars on your father’s
protected chest, without any fear, using her bangles and
nails as weapons. Do not go to her. Lord, think about
where you go. Do not go to houses other than those who
have no doubts and those who are helpless like me. You
are not going to leave this house any longer!

Notes:  The other women in the hero’s life are indicated by the word தாய் – ‘mother’.  நூல் அறுந்த முத்து வடம்– அகநானூறு 225 – துளை முத்தின் செந்நிலத்து உதிர, அகநானூறு 289 – நெகிழ் நூல் முத்தின், குறுந்தொகை 51 – நூல் அறு முத்தின், குறுந்தொகை 104 – நூல் அறு முத்தின், கலித்தொகை 82 – கண்ணீர் சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன.  கூர – கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 18).

Meanings:  ஞாலம் வறம் தீரப் பெய்ய – to rain for the earth’s dryness to end, குணக்கு ஏர்பு காலத்தில் – when it rises from the east, தோன்றிய கொண்மூ போல் – like the clouds that appeared, எம் முலை பாலொடு வீங்க – when my breasts are swollen with milk, தவ நெடிது ஆயினை – you delayed a lot, புத்தேளிர் கோட்டம் வலம் செய்து – went around the temple of the celestials, இவனொடு புக்கவழி எல்லாம் கூறு – tell me the places you went with him
கூறுவேன் – I will tell, மேயாயே போல வினவி – you are asking me like you desire to know what happened after (மேயாயே – ஏகாரம் அசை), வழிமுறை – after, காயாமை வேண்டுவல் யான் – my request is that you don’t get angry with me,

காயேம் – I won’t seethe,

மடக் குறு மாக்களோடு ஓரை அயரும் அடக்கம் இல் போழ்தின் கண் – when he played ōrai games with his innocent little friends and was without control, தந்தை காமுற்ற தொடக்கத்துத் தாய் உழை புக்காற்கு – to him who entered the place of the mother that his father fell in love with in the beginning, அவளும் மருப்புப் பூண் கையுறை ஆக அணிந்து பெருமான் நகை முகம் காட்டு என்பாள் – she adorned him with an ivory ornament and said ‘lord,  show me your smiling face’, கண்ணீர் சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன –tears falling from the eyes are like the dropped pearls of a loose strand, tears falling from the eyes are like the dropped pearls of a broken strand, மற்றும் வழிமுறைத் தாய் உழைப் புக்காற்கு – to him who went after that to another place to the next mother, அவளும் மயங்கு நோய் தாங்கி மகன் எதிர் வந்து முயங்கினள் – she tolerated her pining disease to herself and embraced your son, முத்தினள் – she kissed him, நோக்கி நினைந்தே – looked at him thinking, நினக்கு யாம் யாரேம் ஆகுதும் என்று – who am I to you, வனப்பு உறக் கொள்வன நாடி அணிந்தனள் – she dressed him up beautifully,  ஆங்கே – there, அரி மதர் – kohl-rimmed proud eyes with red lines, உண்கண் பசப்ப – her kohl-lined eyes paled, நோய் செய்யும் பெருமான் பரத்தைமை ஒவ்வாதி என்றாள் – do not be like your unfaithful father, அவட்கு இனிது ஆகி – being sweet to her, விடுத்தனன் – he uttered, போகி – he went, தலைக்கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர் புலத் தகை புத்தேள் இல் புக்கான் – he went to another house to a new woman who is upset with us (இது, ஈது எனச் சுட்டு நீண்டது, புத்தேள் – புதியவள்),

அலைக்கு ஒரு கோல் தா நினக்கு – bring a stick to beat him, அவள் யார் ஆகும் – who is she to you, எல்லா வருந்தி யாம் நோய் கூர – causing me to be in great distress, நுந்தையை – your father, என்றும் – always, பருந்து எறிந்தற்று ஆகக் கொள்ளும் கொண்டாங்கே – like an eagle that attacks with its claws and grabs (கொண்டாங்கே – ஏகாரம் அசை நிலை, an expletive), தொடியும் உகிரும் படை ஆக – with her bangles and nails as weapons, நுந்தை கடி உடை மார்பின் – on your father’s protected chest, சிறுகண்ணும் உட்காள் வடுவும் குறித்தாங்கே செய்யும் – she causes scars in the small spaces without any fear, she causes scars as she intends without even a little bit of fear (குறித்தாங்கே – ஏகாரம் அசை நிலை, an expletive), விடு இனி – let it go, அன்ன பிறவும் பெருமான் – and then O lord, அவள் வயின் துன்னுதல் – going to her, ஓம்பித் திறவது இல் முன்னி – think about going to the proper houses, think about avoiding certain houses, நீ – you, ஐயம் இல்லாதவர் இல் ஒழிய – other than the houses of those who have no doubts (about your father), எம் போலக் கையாறு உடையவர் இல் அல்லால் – other than the houses of helpless women like me (எம் – தன்மைப் பன்மை, first person plural), செல்லல் அமைந்தது இனி நின் தொழில் – now this business of going out has ended for you, leaving the house has now ended for you

கலித்தொகை 83
மருதன் இளநாகனார், மருதம், தலைவியும் தோழியும் சொன்னது

தலைவி:

பெரு திரு நிலைஇய வீங்கு சோற்று அகல் மனைப்,
பொருந்து நோன் கதவு ஒற்றிப் புலம்பி யாம் உலமர,
இளையவர் தழூஉ ஆடும் எக்கர்வாய் வியன் தெருவின்
விளையாட்டிக் கொண்டு வரற்கு எனச் சென்றாய்,
உளைவு இலை ஊட்டலென் தீம் பால் பெருகும் அளவு எல்லாம் 5
நீட்டித்த காரணம் என்?

தோழி:

கேட்டீ!
பெரு மடல் பெண்ணைப் பிணர்த் தோட்டுப் பைங்குரும்பைக்
குடவாய்க் கொடிப் பின்னல் வாங்கித், தளரும்
பெரு மணித் திண் தேர்க் குறுமக்கள் நாப்பண், 10
அகல் நகர் மீள்தருவான் ஆகப் புரி ஞெகிழ்பு
நீல நிரைப் போது உறு காற்கு உலைவன போல்,
சாலகத்து ஒல்கிய கண்ணர் உயர் சீர்த்தி
ஆல் அமர் செல்வன் அணி சால் மகன் விழாக்
கால்கோள் என்று ஊக்கிக், கதுமென நோக்கித், 15
திருந்து அடி நூபுரம் ஆர்ப்ப இயலி, விருப்பினால்,
கண்ணும் நுதலும் கவுளும் கவவியார்க்கு
ஒண்மை எதிரிய அம் கையும், தண் எனச்
செய்வன சிறப்பின் சிறப்புச் செய்து, இவ் இரா
எம்மொடு சேர்ந்து சென்றீவாயால் செம்மால்! 20
நலம் புதிது உண்டு உள்ளா நாண் இலி, செய்த
புலம்பு எலாம் தீர்க்குவேம் மன் என்று இரங்குபு,
வேற்று ஆனாத் தாயர் எதிர்கொள்ள, மாற்றாத
கள்வனால் தங்கியது அல்லால் கதியாதி,
ஒள் இழாய், யான் தீது இலேன்! 25

தலைவி (மகனிடம்):

எள்ளலான், அம் மென் பணை தோள் நுமர் வேய்ந்த கண்ணியோடு
எம் இல் வருதியோ?

தலைவி (தலைவனிடம்):

எல்லா! நீ தன் மெய்க் கண்
அம் தீம் சொல் நல்லார் அணிந்த கலம் காட்டி,
முந்தை இருந்து மகன் செய்த நோய்த்தலை
வெந்த புண் வேல் எறிந்தற்றால், வடுவொடு 30
தந்தையும் வந்து நிலை.

Kalithokai 83
Maruthan Ilanākanār, Marutham, What the heroine and her friend said

Heroine:

Holding on the well-fitted double door of our
huge house with wealth and abundant food, I have
been suffering in anguish, while you, without feeling
sorry, took him to the wide sandy street to play with
children who hug and play. My sweet milk has
secreted abundantly. What is the reason for taking a
long time?

Friend:

Listen! In the midst of little children fatigued
pulling the green, pot-like fruits of palmyra trees with
huge fronds and rough sheaths, tied to ropes, as your son
was returning in our sturdy chariot with bells, women
peered through the latticed windows of their homes with
effort, their eyes moving like blue waterlilies swaying in
heavy wind, thinking it was the festival for Murukan, the
greatly famed son of Sivan seated under a banyan tree,
and on seeing your son, came with their jingling
anklets, touched with joy his eyes, forehead and cheeks,
honoring him with their pretty hands, and said, “Great
one! Stay with us here tonight so that the distress
caused us by your shameless father will end.” Since the
‘mothers’ requested endlessly, we stayed there because
of this little thief who did not differ. Do not be angry.
My friend donning gleaming jewels! I did not commit
any mistake.

Heroine to son:

Are you entering my house wearing the garlands that
those women with beautiful, delicate, bamboo-like arms
placed on you, disrespecting me?

Heroine to husband who walks in:

Hey you! You arriving with scars, on top of our son
coming with jewels on his body given by women with
lovely, sweet words, is like thrusting a spear into a burn
sore.

Notes:  The other women in the hero’s life are indicated by the word தாயர் – ‘mothers’.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  பெரு திரு நிலைஇய – with great wealth (நிலைஇய – அளபெடை), வீங்கு சோற்று அகல் மனை – large house with abundant rice, பொருந்து நோன் கதவு ஒற்றி – holding on to a strong double door that is fitting, holding on to strong tightly fitted door, புலம்பி யாம் உலமர – as I suffer alone, as I suffer in distressed, இளையவர் தழூஉ ஆடும் – embracing and playing youngsters (தழூஉ – அளபெடை), எக்கர்வாய் வியன் தெருவின் – in the wide street with sand, விளையாட்டிக் கொண்டு வரற்கு எனச் சென்றாய் – you took him to play and return, உளைவு இலை – without feeling sad (இலை – இல்லை என்பதன் விகாரம்), ஊட்டலென் – me not feeding, தீம் பால் – sweet milk பெருகும் அளவு எல்லாம் – that has secreted abundantly, நீட்டித்த காரணம் என் – what is the reason for taking a long time,

கேட்டீ – you listen (கேட்டீ – முன்னிலை ஒருமை வினைமுற்று, வினைத் திரிசொல்), பெரு மடல் பெண்ணை – palmyra tree with large fronds, பிணர்த் தோட்டு – rough sheath, பைங்குரும்பை – green fruits, unripe fruits, குடவாய் – like pots, கொடிப் பின்னல் – tied with long ropes, வாங்கித் தளரும் – tired pulling, பெரு மணி – large bells, திண் தேர் – sturdy chariot, குறுமக்கள் – young children, நாப்பண் – among, அகல் நகர் – wide house, மீள்தருவான் ஆக – when he was returning, புரி ஞெகிழ்பு – tightness loosening (ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி),  நீல நிரைப் போது – blue waterlily flowers in rows, உறு காற்கு உலைவன போல் – like swaying in the heavy wind (உறு – மிக்க), சாலகத்து ஒல்கிய கண்ணர் – those who looked through the lattice windows leaning on them, உயர் சீர்த்தி ஆல் அமர் செல்வன் அணி சால் மகன் விழாக் கால்கோள் என்று ஊக்கி – looked with effort to see thinking that there was a festival beginning for the greatly famous Murukan the son of great Sivan seated under a banyan tree (கால்கோள் – தொடக்கம்), கதுமென நோக்கி – looked rapidly (கதுமென – விரைவுக்குறிப்பு), திருந்து அடி நூபுரம் ஆர்ப்ப – as the anklets on his perfect feet jingled, இயலி – came, விருப்பினால் – with desire, கண்ணும் நுதலும் கவுளும் கவவியார்க்கு – those who hugged his eyes and forehead and cheeks, ஒண்மை – intelligence, எதிரிய – accepted, அம் கையும் – beautiful hands, தண் என – in a cool  manner, செய்வன சிறப்பின் சிறப்புச் செய்து –  honored him specially, இவ் இரா எம்மொடு சேர்ந்து சென்றீவாயால் – please stay with us for the night and leave (இரா – இரவு, வு என்ற விகுதி கெட்டு அதற்கு முந்தைய குறில் எழுத்து நீண்டு நெடிலாக மாறியது, சென்றீவாயால் – சென்றீவாய் வினைத் திரிசொல், ஆல் அசைநிலை, an expletive), செம்மால் – O great one (விளி, an address), நலம் புதிது உண்டு – who ruined the beauty for those new, உள்ளா – not thinking, நாண் இலி – the man without shame, செய்த புலம்பு எலாம் – all the sorrow caused (எலாம் – எல்லாம் என்பதன் தொகுத்தல் விகாரம்),  தீர்க்குவேம் – we will end, மன் – அசைநிலை, an expletive, என்று – in this manner, இரங்குபு – they pleaded, வேற்று ஆனாத் தாயர் எதிர்கொள்ள – as the other mothers requested endlessly, மாற்றாத கள்வனால் தங்கியது அல்லால் – we stayed only because of this thief who did not differ from their desire, கதியாதி – do not be angry, ஒள் இழாய் – O one with gleaming jewels, யான் தீது இலேன் – I did not commit any mistake,

எள்ளலான் – due to disrespecting, அம் மென் பணை தோள் – beautiful delicate bamboo-like arms, நுமர் வேய்ந்த கண்ணியோடு எம் இல் வருதியோ – are you entering my house with the garlands that your women wore on you,

எல்லா – Hey, நீ – you, தன் மெய்க் கண் அம் தீம் சொல் நல்லார் அணிந்த கலம் காட்டி – showing the jewels worn on is body by women with lovely sweet words, முந்தை இருந்து மகன் செய்த நோய்த்தலை – on top of  the pain that the son caused before, வெந்த புண் வேல் எறிந்தற்றால் – it is like a spear thrust into a sore, வடுவொடு தந்தையும் வந்து நிலை – the father coming with scars

கலித்தொகை 84
மருதன் இளநாகனார், மருதம், தலைவியும் தோழியும் சொன்னது

தலைவி:

உறு வளி தூக்கும் உயர் சினை மாவின்
நறு வடி ஆர் இற்றவை போல் அழியக்,
கரந்து யான் அரக்கவும் கை நில்லா வீங்கிச்
சுரந்த என் மெல் முலைப் பால் பழுது ஆக, நீ
நல் வாயில் போத்தந்த பொழுதினான், “எல்லா! 5
கடவுள் கடிநகர் தோறும் இவனை
வலம் கொளீஇ வா” எனச் சென்றாய் விலங்கினை;
ஈரம் இலாத இவன் தந்தை பெண்டிருள்
யார் இல் தவிர்ந்தனை கூறு?

தோழி:

நீருள் அடை மறை ஆய் இதழ்ப் போது போல் கொண்ட 10
குடை நிழல் தோன்றும் நின் செம்மலைக் காணூஉ,
“இவன் மன்ற யான் நோவ உள்ளம் கொண்டு, உள்ளா
மகன் அல்லான் பெற்ற மகன்” என்று அகல் நகர்
வாயில் வரை இறந்து போத்தந்து, தாயர்
தெருவில் தவிர்ப்பத் தவிர்ந்தனன்; மற்று அவர் 15
தம் தம் கலங்களுள் கையுறை என்று இவற்கு
ஒத்தவை ஆராய்ந்து அணிந்தார்;

தலைவி:

………………………………………………………..பிறன் பெண்டிர்
ஈத்தவை கொள்வானாம் இஃது ஒத்தன் சீத்தை
செறு தக்கான் மன்ற பெரிது.
சிறு பட்டி ஏதிலார் கை எம்மை எள்ளுபு நீ தொட்ட, 20
மோதிரம் யாவோ யாம் காண்கு,
அவற்றுள் நறா இதழ் கண்டன்ன செவ் விரற்கு ஏற்பச்
சுறா ஏறு எழுதிய மோதிரம் தொட்டாள்
குறி அறிந்தேன்; காமன் கொடி எழுதி என்றும்
செறியாப் பரத்தை இவன் தந்தை மார்பில் 25
பொறி ஒற்றிக் கொண்டு ஆள்வல் என்பது தன்னை
அறீஇய செய்த வினை

அன்னையோ? இஃது ஒன்று
முந்தைய கண்டும், எழுகல்லாத என் முன்னர்,
வெந்த புண் வேல் எறிந்தற்றா, இஃது ஒன்று 30
தந்தை இறைத் தொடி மற்று இவன் தன் கைக் கண்
தந்தார் யார் எல்லாஅ இது?

இஃது ஒன்று என் ஒத்துக் காண்க பிறரும் இவற்கு என்னும்
தன் நலம் பாடுவி தந்தாளா, நின்னை
இது தொடுக என்றவர் யார்? 35

அஞ்சாதி நீயும் தவறு இலை நின் கை இது தந்த
பூ எழில் உண்கண் அவளும் தவறு இலள்;
வேனில் புனல் அன்ன நுந்தையை நோவார் யார்?
மேல் நின்றும் எள்ளி இது இவன் கைத் தந்தாள்;
தான் யாரோ என்று வினவிய நோய்ப்பாலேன் 40
யானே தவறு உடையேன்!

Kalithokai 84
Maruthan Ilanākanār, Marutham, What the heroine and her friend said

Heroine:

When you left our fine house, I asked you
to return after taking him to the temples to
circumambulate all of them and you took him.
You delayed, and milk from my swollen breasts
flowed like the milk from vadu mangoes that
break off stems of tall tree branches swaying in
heavy wind, and did not stop when I tried
to block with my hands, covering and rubbing
my tender breasts.

In whose house did you stay, among his father’s
women? Tell me!

Friend:

Like a flower with pretty petals hidden under leaves,
your son appeared under his umbrella. On seeing
him, the ‘mothers’ stepped out of their huge houses
and came to the street and blocked him.
He stayed there. They said, “He is the son born to the
inconsiderate man who has given us distress.” They
then brought their jewels and adorned him aptly
with them.

Heroine:

Yes! He is a blameworthy one! It is fit to be angry with
him since he has brought jewels given by other women.

Little rascal! What are the rings that you are wearing,
given to you by those who put me down? Show them
to me. Among them, on your red fingers like naravam
petals, there is a ring with a shark design. I know the
intent of the loose prostitute who gave it to you.
She has sent it to tell me that she will rule your father
who is caught up with his philandering, imprinting on
his chest the sign of Kāman.

Are you of that nature?  I am unable to lift my head on
seeing what happened before, and this is like a spear
thrust into a burn wound.  Who is the one who gave your
father’s bracelet to you?

Did she give it to you, the one who sings praises about her
beauty saying, “Are his women beautiful like me? Let
others compare!” Who is the one who asked you to take it?

Do not fear, my son! You are not at fault. The woman with
flower-like, kohl-rimmed eyes is not at fault. Who can be
angry with your father who is like a stream in summer?
I am the one at fault for teasing and asking you who gave it
to you.

Notes:  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  உறு வளி தூக்கும் உயர் சினை – tall branches swayed by heavy wind (உறு – மிக்க), மாவின் நறு வடி – fragrant little green vadu mangoes, மாவடு, ஆர் இற்றவை – stems broken, போல் அழியக் – flowing like,  கரந்து – hiding it, யான் அரக்கவும் – when I rub, கை நில்லா – unable to stop with hands, வீங்கி – swollen, சுரந்த – secreted, என் மெல் முலைப் பால் – milk from my delicate breasts, பழுது ஆக – wasted, நீ – you, நல் வாயில் போத்தந்த பொழுதினான் – when you went from our fine house, எல்லா – hey you, கடவுள் கடிநகர் தோறும் – to all the special temples, இவனை வலம் கொளீஇ வா எனச் சென்றாய் – you took him since I asked you to take him and go around the temple (கொளீஇ – அளபெடை), விலங்கினை –  you failed in your responsibility, ஈரம் இலாத – without kindness, இவன் தந்தை பெண்டிருள் – among his father’s women,  யார் இல் தவிர்ந்தனை – in whose house did you stay, கூறு – tell me,

நீருள் அடை மறை ஆய் இதழ்ப் போது போல் – like the pretty flower that is hidden among leaves in the water, கொண்ட குடை நிழல் தோன்றும் – appearing with his umbrella, நின் செம்மலைக் காணூஉ – on seeing your son (காணூஉ – அளபெடை), இவன் மன்ற யான் நோவ உள்ளம் கொண்டு உள்ளா மகன் அல்லான் பெற்ற மகன் என்று – they said he is certainly the son born to the inconsiderate man who does not think who caused us pain, அகல் நகர் வாயில் வரை இறந்து போத்தந்து – they came from their huge houses, தாயர் – the mothers, தெருவில் தவிர்ப்பத் தவிர்ந்தனன் – they blocked and he stayed, மற்று அவர் தம் தம் கலங்களுள் கையுறை என்று இவற்கு ஒத்தவை ஆராய்ந்து அணிந்தார் – then they chose from their own jewels and wore on him jewels that were suitable for him,

பிறன் பெண்டிர் ஈத்தவை கொள்வானாம் – he took what the other women gave, இஃது ஒத்தன் சீத்தை – he is the blameworthy one, செறு தக்கான் மன்ற பெரிது – it is certainly fitting to be greatly angry with him,

சிறு பட்டி – little imp, ஏதிலார் கை – hands of others, எம்மை எள்ளுபு – putting me down (எம்மை – தன்மைப் பன்மை, first person plural), நீ தொட்ட மோதிரம் யாவோ – what are the rings you are wearing, யாம் காண்கு – let me see (யாம் – தன்மைப் பன்மை, first person plural), அவற்றுள் – among them, நறா இதழ் கண்டன்ன – looking like naravam petals, Luvunga scandens, செவ் விரற்கு ஏற்ப – suiting the red finger, சுறா ஏறு எழுதிய மோதிரம் தொட்டாள் குறி அறிந்தேன் – I understood the message from the one who placed on your finger a male shark pattern inscribed ring (மோதிரம் தொட்டாள் – மோதிரத்தை இட்டவள்), காமன் கொடி எழுதி – the symbol on the flag of Kāman, என்றும் – always, செறியாப் பரத்தை – a loose prostitute, இவன் தந்தை மார்பில் பொறி ஒற்றிக் கொண்டு – left a sign on his father’s chest, ஆள்வல் என்பது தன்னை அறீஇய செய்த வினை – this is her work to let me know that she will rule (ஆள்வல் – நான் ஆள்வேன், அறீஇய – அளபெடை),

அன்னையோ – are you of that nature, இஃது ஒன்று – this is one, முந்தைய கண்டும் – on seeing what happened before, எழுகல்லாத – not able to raise the head, என் முன்னர் – in front of me, வெந்த புண் வேல் எறிந்தற்றா – it is like thrusting a spear into a burn wound, இஃது ஒன்று தந்தை இறைத் தொடி மற்று இவன் தன் கைக் கண் தந்தார் யார் எல்லாஅ இது – who is the one who gave this forearm bracelet that belongs to his father (எல்லாஅ – அளபெடை)

இஃது ஒன்று – this is one, என் ஒத்துக் காண்க பிறரும் – may others compare with me, இவற்கு என்னும் – for him, தன் நலம் பாடுவி தந்தாளா – did the one who sings her own praises give, நின்னை இது தொடுக என்றவர் யார் – who is the one who asked you to take it,

அஞ்சாதி – do not fear, நீயும் தவறு இலை – you are not at fault (இலை – இல்லை என்பதன் விகாரம்), நின் கை இது தந்த – one who gave it to you, பூ எழில் உண்கண் அவளும் தவறு இலள் – she is not at fault, the one with flower-like, pretty kohl-lined eyes, வேனில் புனல் அன்ன நுந்தையை நோவார் யார் – who can be upset with your father who is like a river in summer, மேல் நின்றும் – above that, எள்ளி – teasing, இது இவன் கைத் தந்தாள் தான் யாரோ என்று வினவிய நோய்ப்பாலேன் யானே தவறு உடையேன் – I am the diseased one at fault for asking you who gave this to you

கலித்தொகை 85
மருதன் இளநாகனார், மருதம், தலைவி மகனிடம் சொன்னது
காலவை, சுடு பொன் வளைஇய ஈர் அமை சுற்றொடு
பொடி அழல் புறந்தந்த செய்வுறு கிண்கிணி,
உடுத்தவை கைவினைப் பொலிந்த காசு அமை பொலங்காழ், மேல்
மை இல் செந்துகிர்க் கோவை அவற்றின் மேல்
தைஇய பூந்துகில், ஐது கழல் ஒரு திரை; 5
கையதை, அலவன் கண் பெற அடங்கச் சுற்றிய
பல உறு கண்ணுள் சில கோல் அவிர் தொடி;

பூண்டவை, எறியா வாளும் எற்றா மழுவும்
செறியக் கட்டி, ஈர் இடைத் தாழ்ந்த,
பெய் புல மூதாய்ப் புகர் நிறத் துகிரின் 10
மை அற விளங்கிய ஆன் ஏற்று அவிர் பூண்;

சூடின, இருங்கடல் முத்தமும் பல் மணி பிறவும், ஆங்கு
ஒருங்கு உடன் கோத்த உருள் அமை மூக் காழ், மேல்
சுரும்பு ஆர் கண்ணிக்குச் சூழ் நூல் ஆக,
அரும்பு அவிழ் நீலத்து ஆய் இதழ் நாணச் 15
சுரும்பு ஆற்றுப்படுத்த மணி மருள் மாலை;

ஆங்க அவ்வும் பிறவும் அணிக்கு அணி ஆக, நின்
செல்வுறு திண் தேர் கொடுஞ் சினை கைப் பற்றிப்
பைபயத் தூங்கும் நின் மெல் விரல் சீறடி
நோதலும் உண்டு ஈங்கு என் கை வந்தீ, 20
செம்மால் நின் பால் உண்ணிய;

பொய் போர்த்துப் பாண் தலையிட்ட பல வல் புலையனைத்
தூண்டிலா விட்டுத் துடக்கித் தான் வேண்டியார்
நெஞ்சம் பிணித்தல் தொழிலாத் திரிதரும்
நுந்தை பால் உண்டி சில 25

நுந்தை வாய் மாயச் சூள் தேறி மயங்கு நோய் கைமிகப்,
பூ எழில் உண்கண் பனி பரப்பக் கண்படா
ஞாயர் பால் உண்டி சில;

அன்னையோ யாம் எம் மகனைப் பாராட்ட, கதுமெனத்
தாம் வந்தார் தம் பால் அவரொடு; தம்மை 30
வருக என்றார் யார் கொல்லோ ஈங்கு?

என் பால் அல் பாராட்டு உவந்தோய்! குடி உண்டீத்தை; என்
பாராட்டைப் பாலோ சில;

செரு குறித்தாரை உவகைக் கூத்தாட்டும்
வரிசைப் பெரு பாட்டொடு எல்லாம் பருகீத்தை, 35
தண்டுவென் ஞாயர் மாட்டைப் பால்.

Kalithokai 85
Maruthan Ilanākanār, Marutham, What the heroine said to her young son
Double-stranded, curved anklets created with gold
powder in flame adorn your feet. A gold strand with
hand-made bright coins set with perfect, red coral
hangs around your waist. A delicate, pretty
garment with folds hangs loose on your body.
Curved, bright gold bangles with crab-eye patterns
and filigree work are on your arms.

You are wearing on your neck bright necklaces with
perfect, splendid sword and axe pendants and in
between hangs a chain with an ox pendant, the color
of little velvet pattuppoochi bugs that are on land that
gets rain, that are of coral hue.

You are adorned with a three-strand, rounded necklace
strung well with bright pearls from the large ocean,
and various gems, a flower strand on your head that is
swarmed by bees, and a lovely sapphire strand that
causes embarrassment to blue waterlily blossoms,
that is not frequented by bees.

You are adorned with all these and others, appearing
beautiful. Your tiny feet with delicate toes may ache
as you walk slowly holding the curved handle of your
walker. O noble one! Come to my arms and drink
your milk.

Using the bard covered with lies, as a fishing rod, your
father goes about catching women he desires to unite,
seizing their hearts. Come and drink his share of the
milk.

Trusting the deceiving lies of your father, ‘mothers’ who
are confused and afflicted beyond control, unable to sleep,
shed tears with their pretty, flower-like, kohl-lined eyes.
Come and drink their share of the milk.

(The husband and his friends arrive)

As I praised my son, suddenly he came with his retinue!
Wow!  Who invited him here?

My son who is happy hearing my praises! Drink a little.
It will be sweet like my praises.

You bring happiness to those who come to fight. I
will have peace of mind if you drink the share of your
mothers.

Notes:  The other women in the hero’s life are indicated by the word ஞாயர் – ‘mothers’.  அகநானூறு 219 – என் பாடு உண்டனை ஆயின் ஒரு கால் நுந்தை பாடும் உண்.  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  காலவை – on the legs, சுடு பொன் – heated gold, வளைஇய – curved (அளபெடை), ஈர் அமை சுற்றொடு – double strand going around, பொடி – powdered, அழல் புறந்தந்த செய்வுறு – made in flame, கிண்கிணி – anklets, உடுத்தவை – what you are wearing on your waist, கைவினை – hand made, பொலிந்த – bright, காசு அமை – with coins, பொலங்காழ் – gold strand,  மேல் – above, மை இல் செந்துகிர் – perfect red coral, கோவை – strand, அவற்றின் மேல் – above it, தைஇய – wearing (அளபெடை), பூந்துகில் – beautiful garment, ஐது – delicate, கழல் – loose, ஒரு திரை – wrinkled, with folds, கையதை  – on the hands (ஐ – சாரியை), அலவன் கண் பெற – with crab-eyes like patterns, அடங்கச் சுற்றிய  – tightly surrounded, பல உறு கண்ணுள் – very many filigree patterns (உறு – மிக்க), சில – few, கோல் – rounded, அவிர் தொடி – bright bangles,

பூண்டவை – what is worn, எறியா வாளும் – sword that does not cut, எற்றா மழுவும் – axe that does not cut, செறியக் கட்டி – tied tightly, ஈர் இடைத் தாழ்ந்த – beautifully hanging between, பெய் புல மூதாய் – red velvet bugs that are in the ground during rainy season, pattuppoochi, trombidium grandissimum, புகர் நிறத் துகிரின் – of tawny colored coral, of orange brown color or yellow brown color, மை அற விளங்கிய – faultless and splendid, ஆன் ஏற்று – of a cow’s ox, அவிர் பூண் – bright jewels,

சூடின – those that are worn, இருங்கடல் முத்தமும் – and pearls from the huge ocean, பல் மணி பிறவும் – and many other gems, ஆங்கு ஒருங்கு உடன் கோத்த – strung well together there, உருள் அமை – rounded, மூக் காழ் – three strands, மேல் – above, சுரும்பு ஆர் கண்ணிக்கு – for the flower strand swarmed by bees, சூழ் நூல் ஆக – as surrounding thread, அரும்பு அவிழ் நீலத்து ஆய் இதழ் நாண – causing the blue waterlily blossoms to be embarrassed, சுரும்பு ஆற்றுப்படுத்த மணி மருள் மாலை – a lovely sapphire strand garland that does not attract bees,

ஆங்க – அசைநிலை, an expletive, அவ்வும் பிறவும் – that and others, அணிக்கு அணி ஆக – adding beauty to beauty, நின் செல்வுறு திண் தேர் கொடும் சினை கைப் பற்றி – you going holding with your hand the curved handle of your rolling sturdy chariot (நடை வண்டி, walker), பைபயத் தூங்கும் – as you move very slowly (பைபய – பையப்பைய பைபய என மருவியது), நின் மெல் விரல் சீறடி நோதலும் உண்டு – the delicate toes on your small feet will hurt, ஈங்கு என் கை வந்தீ – come to my arms (வினைத் திரிசொல்), செம்மால் – O noble one, நின் பால் உண்ணிய – to drink your milk,

பொய் போர்த்துப் பாண் – bard covered with lies, தலையிட்ட பல வல் – with many great talents, புலையனைத் தூண்டிலா விட்டு – using the bard as a fishing rod – the word ‘pulaiyan’ has been used for bards, drummers and a man who performs funerary rituals, and the word ‘pulaithi’ has been used for washerwomen, a woman possessed by Murukan, and a basket maker, துடக்கி – entangling, catching, தான் வேண்டியார் – those he desires to unite with, நெஞ்சம் பிணித்தல் தொழிலா – with the business of tying up the hearts, திரிதரும் – wanders, நுந்தை பால் உண்டி சில – drink a little the milk left for your father,

நுந்தை வாய் மாயச் சூள் தேறி – trusting the deceiving lies of your father, trusting the cunning promises of your father, மயங்கு நோய் கைமிக – confusion disease is out of control, பூ எழில் உண்கண் பனி பரப்ப – tears spreading in their flower-like, pretty eyes with kohl, கண்படா ஞாயர் பால் உண்டி சில – drink a little the milk kept for your mothers who have lost sleep,

அன்னையோ – Wow! (expressing surprise), in this manner, யாம் எம் மகனைப் பாராட்ட – as I praised my son, கதுமெனத் தாம் வந்தார் – he came suddenly (கதுமென – விரைவுக்குறிப்பு), தம் பால் அவரொடு தம்மை வருக என்றார் யார் கொல்லோ ஈங்கு – who invited him to be here with his retinue (கொல்லோ – ஓகாரம் அசை நிலை),

என் பால் அல் பாராட்டு உவந்தோய் – you who is happy with my praises (பால் – பகுதி, அல் சாரியை), குடி உண்டீத்தை – you drink (உண்டீத்தை – உண் என்னும் முன்னிலை ஏவல் திரிசொல்), என் பாராட்டைப் பாலோ – it will be like my praises, சில – little bit,

செரு குறித்தாரை – those whose intentions are to fight, உவகைக் கூத்தாட்டும் வரிசைப் பெரு பாட்டொடு – with praises making them dance in joy, எல்லாம் பருகீத்தை – drink all of it (பருகீத்தை – பருகு என்னும் முன்னிலை ஏவல் திரிசொல்), தண்டுவென் – I will have peace of mind, ஞாயர் மாட்டைப் பால் – milk that is the share of your mothers

கலித்தொகை 86
மருதன் இளநாகனார், மருதம், தலைவி மகனிடம் சொன்னதும், தலைவன் சொன்னதும்

தலைவி:

மைபடு சென்னி மழ களிற்று ஓடை போல்,
கை புனை முக்காழ் கயந்தலைத் தாழப்,
பொலஞ்செய் மழுவொடு வாள் அணி கொண்ட
நலம் கிளர் ஒள் பூண் நனைத்தரும் அவ்வாய்
கலந்து கண் நோக்கு ஆரக் காண்பு இன் துகிர் மேல் 5
பொலம் புனை செம்பாகம் போர் கொண்டு இமைப்பக்,
கடி அரணம் பாயா நின் கை புனை வேழம்,
தொடியோர் மணலின் உழக்கி அடி ஆர்ந்த
தேரை வாய்க் கிண்கிணி ஆர்ப்ப, இயலும் என்
போர் யானை! வந்தீக ஈங்கு! 10

செம்மால்! வனப்பு எலாம் நுந்தையை ஒப்பினும், நுந்தை
நிலைப் பாலுள் ஒத்த குறி என் வாய்க் கேட்டு ஒத்தி;

கன்றிய தெவ்வர்க் கடந்து களம் கொள்ளும்
வென்றி மாட்டு ஒத்தி பெரும! மற்று ஒவ்வாதி,
ஒன்றினேம் யாம் என்று உணர்ந்தாரை நுந்தை போல், 15
மென்தோள் நெகிழ விடல்;

பால் கொளல் இன்றிப் பகல் போல் முறைக்கு ஒல்கா
கோல் செம்மை ஒத்தி பெரும! மற்று ஒவ்வாதி,
கால் பொரு பூவின் கவின் வாட நுந்தை போல்
சால்பு ஆய்ந்தார் சாய விடல்; 20

வீதல் அறியா விழுப் பொருள் நச்சியார்க்கு
ஈதல் மாட்டு ஒத்தி பெரும! மற்று ஒவ்வாதி,
மாதர் மெல் நோக்கின் மகளிரை நுந்தை போல்
நோய் கூர நோக்காய் விடல்;
ஆங்க, 25
திறன் அல்ல யாம் கழற, யாரை நகும், இம்
மகன் அல்லான் பெற்ற மகன்?

மறை நின்று தாம் மன்ற வந்தீத்தனர்.

தலைவன்:

ஆய் இழாய்! தாவாத எனக்குத் தவறு உண்டோ? காவாது ஈங்கு
ஈத்தை இவனை யாம் கோடற்குச்……………………………… 30
தலைவி:
…………………………………………………………………………………. சீத்தை யாம்
கன்றி அதனைக் கடியவும், கை நீவிக்,
குன்ற இறுவரைக் கோண்மா இவர்ந்தாங்குத்,
தந்தை வியன் மார்பில் பாய்ந்தான், அறன் இல்லா
அன்பு இலி பெற்ற மகன்.

Kalithokai 86
Maruthan Ilanākanār, Marutham, What the heroine said to her son, and the hero’s response

Heroine:

O my battle elephant! Come here with jingles
from the anklets on your feet, their bells shaped
like mouths of toads, you who ruins the sand
houses of girls with bangles moving about with
your gold elephant in fighting posture, a toy one
that does not attack forts, glittering, mounted on
a coral base!
Let my eyes feast on your beauty donning a pretty,
exquisite three-strand necklace with a gold axe and
sword that resembles the ornament on the tender
head of a young male elephant, on which saliva
drips from your pretty mouth.

O illustrious one! Even though you are handsome
like your father, take from him only the attributes
heard through my words.

O lord! Be brave like your father who is victorious in
battles with enraged enemies, but do not be like him,
who lets the delicate arms of those who are one with
him to waste away.

O lord! Be righteous like your father who rules with
a just scepter like the sun that does not slant, but do
not be like him who ruins the beauty of those who
adore his nobility after analyzing him, like the wind
that ruins the beauty of flowers.

O lord! Be like your father who gives fine wealth to
those who desire them, but do not be like him who
gives affliction to pretty women with delicate looks.

O son of a dishonorable man! Who are you laughing at,
as I urge you to stay away from matters unbecoming?

(Looking at her husband who came there)

He came here to the open from hiding!

Hero:

One with lovely jewels! Did I who did not hurt you, make
mistakes? Hand him over to me without keeping him all
to yourself.

Heroine:

He is an unworthy son. I chide him in anger about all this,
but he pushes my hand away and jumps on his father’s
wide chest like a lion that leaps on a mountain base.
He is a son born to an unkind man!

Notes:  குறுந்தொகை 148 – செல்வச் சிறாஅர் சீறடி பொலிந்த தவளை வாய பொலஞ்செய் கிண்கிணி.  மழ – மழவும் குழவும் இளமைப் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 15).  கூர – கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 18).

Meanings:  மைபடு சென்னி – dark head, மழ களிற்று – of a young male elephant, ஓடை போல் – like its face ornament, கை புனை – hand made, முக்காழ் – three strands, கயந்தலை – tender head, தாழ – hanging, பொலஞ்செய் மழுவொடு – with a gold axe, வாள் அணி கொண்ட  – with a sword, நலம் கிளர் – very beautiful, ஒள் பூண் – bright jewels, நனைத்தரும் – makes them wet, அவ்வாய் – pretty  mouth, கலந்து – mixed, கண் நோக்கு ஆரக் காண்பு – see it with my eyes until they sate, இன் துகிர் – lovely coral, மேல் – above, பொலம் புனை – made with gold, செம்பாகம் – equal half, போர் கொண்டு – fighting posture, இமைப்ப – glittering, கடி அரணம் பாயா நின் கை புனை வேழம் – your elephant that was hand made and not a real elephant that attacks protected forts (காவல்மிக்க கோட்டைகளைத் தாக்காத கையினால் செய்யப்பட்ட உன்னுடைய விளையாட்டு யானை, வெளிப்படை), தொடியோர் மணலின் உழக்கி – ruined the sand houses of girls wearing bangles, அடி – feet, ஆர்ந்த – tied, தேரை வாய்க் கிண்கிணி ஆர்ப்ப – as your anklets with toad-mouth shaped bells jingle, இயலும் – walking, என் போர் யானை வந்தீக ஈங்கு – O my war elephant! come here (வந்தீக – முற்றுவினைத் திரிசொல்),

செம்மால் – O noble one, வனப்பு எலாம் நுந்தையை ஒப்பினும் – even though you are handsome like your father (எலாம் – எல்லாம் என்பதன் தொகுத்தல் விகாரம்), நுந்தை நிலைப் பாலுள் ஒத்த குறி – similar attributes like that of your father, என் வாய்க் கேட்டு – hearing from my mouth, ஒத்தி – you be like that,

கன்றிய – enraged, தெவ்வர்க் கடந்து களம் கொள்ளும் வென்றி மாட்டு ஒத்தி – be like him in valor that brings victory attacking enemies in battles, பெரும – lord, மற்று ஒவ்வாதி – but do not be like him, ஒன்றினேம் யாம் என்று உணர்ந்தாரை – those who feel that they are one in mind with him, நுந்தை போல் மென்தோள் நெகிழ விடல் – do not be like your father letting their delicate arms waste away,

பால் கொளல் இன்றிப் பகல் போல் – like the sun that does not slant, முறைக்கு ஒல்கா கோல் செம்மை ஒத்தி – be like him in righteousness with an unslanting scepter, பெரும – O lord, மற்று ஒவ்வாதி – do not be like him, கால் பொரு பூவின் கவின் வாட – beauty of flowers attacked by wind that is ruined, நுந்தை போல் – like your father, சால்பு ஆய்ந்தார் – those who analyzed his nobility, சாய விடல் – don’t let them be ruined,

வீதல் அறியா – not ruined, விழுப் பொருள் நச்சியார்க்கு ஈதல் மாட்டு ஒத்தி – you be like him in giving fine gifts to those who desire them, பெரும – O lord, மற்று ஒவ்வாதி – but do not be like him, மாதர் மெல் நோக்கின் மகளிரை – the pretty women (concubines) with delicate looks, நுந்தை போல் நோய் கூர நோக்காய் விடல் – do not let them suffer greatly in disease like your father does by ignoring them,

ஆங்க – அசைநிலை, an expletive, திறன் அல்ல யாம் கழற – as I chide him not to do the unkind acts, யாரை நகும் – who is he laughing at, இம் மகன் – this son, அல்லான் பெற்ற மகன் – the son of the dishonorable man,

மறை நின்று தாம் மன்ற வந்தீத்தனர் – he came to the open from hiding (வந்தீத்தனர் – முற்றுவினைத் திரிசொல்), ஆய் இழாய் – O one with pretty jewels, தாவாத எனக்குத் தவறு உண்டோ – did I who has been truthful make mistakes, did I who did not hurt you make mistakes, did I who did not go to others make mistakes, காவாது – without keeping, without protecting, ஈங்கு – here, ஈத்தை இவனை யாம் கோடற்கு – give him to me for me to take him,

சீத்தை – unworthy one, யாம் கன்றி அதனைக் கடியவும் – even though I tell him in anger, கை நீவி –  pushing away my hand, குன்ற – mountain, இறுவரை – mountain base (குன்ற, வரை – ஒருபொருட் பன்மொழி, உறுகின்ற அடிவரை – சேர்ந்த மலை, தொடும் மலை), கோண்மா இவர்ந்தாங்கு – like a lion leaped, தந்தை வியன் மார்பில் பாய்ந்தான் – jumped onto the wide chest of his father, அறன் இல்லா – with no justice (அறன் – அறம் என்பதன் போலி), அன்பு இலி பெற்ற மகன் – son born to the man without kindness

கலித்தொகை 87
மருதன் இளநாகனார், மருதம், தலைவியும் தலைவனும் தோழியும் சொன்னது

தலைவி:

ஒரூஉ நீ, எம் கூந்தல் கொள்ளல்; யாம் நின்னை
வெரூஉதும் காணும் கடை.

தலைவன்:

தெரி இழாய்! செய் தவறு இல்வழி யாங்குச் சினவுவாய்,
மெய் பிரிந்து அன்னவர் மாட்டு?

தலைவி:

ஏடா! நினக்குத் தவறு உண்டோ? நீ வீடு பெற்றாய்; 5
இமைப்பின் இதழ் மறைபு ஆங்கே கெடுதி;
நிலைப் பால் அறியினும் நின் நொந்து நின்னைப்
புலப்பார் உடையர் தவறு.

தலைவன்:

அணைத் தோளாய்! தீயாரைப் போலத் திறன் இன்று உடற்றுதி;
காயும் தவறு இலேன் யான். 10

தோழி:

மான் நோக்கி! நீ அழ நீத்தவன் ஆனாது
நாண் இலன் ஆயின், நலிதந்து அவன் வயின்
ஊடுதல் என்னோ இனி?

தலைவி:

இனி யாதும் மீக்கூற்றம் யாம் இலம் என்னும்
தகையது காண்டைப்பாய் நெஞ்சே, பனி ஆனாப் 15
பாடு இல் கண் பாயல் கொள!

Kalithokai 87
Maruthan Ilanākanār, Marutham, What the heroine, hero and the heroine’s friend said

Heroine:

Go away. Do not hold my hair. I fear seeing you.

Hero:

O one with chosen jewels!  Why are you enraged with
me when I have not committed any mistake or left you
for others?

Heroine:

Hey you!  Do you consider anything you do a mistake?
You vanish from my sight in a blinking moment. You
have abandoned me. The mistake is on those who
sulk and get angry, even though they know your nature.

Hero:

O one with soft arms!  You are hurting me like I am a
wicked person who has no niceties.  I did not commit any
mistake.

Heroine’s Friend:

O one with looks of a deer! The man who has left you crying
has no shame. What is the use of sulking with him and
distressing him?

Heroine:

My heart!  Look at the noble words that my friend uttered
for my crying, sleepless eyes to go to sleep.  She said, “You
will never have to praise yourself and put others down.”

Notes:  நீ வீடு பெற்றாய் (5) – நச்சினார்க்கினியர் உரை – நீ கை விடுதலைப் பெற்றாய், மா. இராசமாணிக்கனார் – நீ ஊராரால் கைவிடப்பட்டவன், புலியூர் கேசிகன் – நீ வீட்டுக்கு வந்து விட்டாய்.

Meanings:  ஒரூஉ – move away (இயற்கை அளபெடை), நீ எம் கூந்தல் கொள்ளல் – do not hold my hair, யாம் நின்னை வெரூஉதும் காணும் கடை – I fear when I see you (வெரூஉதும் – அளபெடை),

தெரி இழாய் – O one with chosen jewels, செய் தவறு இல்வழி யாங்குச் சினவுவாய் – when I have not made a mistake why are you angry with me, மெய் பிரிந்து அன்னவர் மாட்டு – since I have not truly separated due to others of that nature (அத்தன்மையராகிய பரத்தையர்),

ஏடா – hey you, நினக்குத் தவறு உண்டோ – do you consider anything as a mistake, நீ வீடு பெற்றாய் – you abandoned me, இமைப்பின் இதழ் மறைபு ஆங்கே கெடுதி – you vanish in a eyelid-closing instant, நிலைப் பால் அறியினும்  – even though they know your nature, நின் நொந்து நின்னைப் புலப்பார் உடையர் தவறு – the mistake is on those who sulk getting upset with you,

அணைத் தோளாய் – O one with pillow-like soft arms, தீயாரைப் போலத் திறன் இன்று உடற்றுதி – you are hurting me like I am a wicked person without niceness, காயும் தவறு இலேன் யான் – I did not commit any mistake for you to be angry,

மான் நோக்கி – O one with deer-like looks, நீ அழ – making you cry, நீத்தவன் – the man who abandoned you, ஆனாது – endless, நாண் இலன் – he has no shame, ஆயின் – so, நலிதந்து – distressing, அவன் வயின் ஊடுதல் என்னோ இனி – what is the use of sulking with him,

இனி – now, யாதும் மீக்கூற்றம் யாம் இலம் என்னும் – that I will never have to praise myself (and put down others) (யாம் – தன்மைப் பன்மை, first person plural, இலம் – தன்மைப் பன்மை, first person plural), தகையது காண்டைப்பாய் – see this esteem of my friend (காண்டை – முன்னிலை வினைமுற்று, காண் என்னும் முன்னிலைவினை காண்டை எனத் திரிந்தது), நெஞ்சே – O my heart, பனி ஆனா – pouring tears endlessly, பாடு இல் கண் பாயல் கொள – for my sleepless eyes to sleep

கலித்தொகை 88
மருதன் இளநாகனார், மருதம், தலைவியும் தலைவனும் சொன்னது

தலைவி:

ஒரூஉ! கொடி இயல் நல்லார் குரல் நாற்றத்து உற்ற
முடி உதிர் பூந்தாது மொய்ம்பின ஆகத்,
தொடிய எமக்கு நீ யாரை? பெரியார்க்கு
அடியரோ ஆற்றாதவர்?
தலைவன்:

கடியர் தமக்கு யார் சொல்லத் தக்கார் மாற்று? 5

தலைவி:

வினை கெட்டு வாய் அல்லா வெண்மை உரையாது கூறு நின்
மாயம் மருள்வார் அகத்து.

தலைவன்:

ஆய் இழாய் நின் கண் பெறின் அல்லால், இன் உயிர் வாழ்கல்லா
என் கண் எவனோ தவறு?

தலைவி:

இஃது ஒத்தன்! புள்ளிக் களவன் புனல் சேர்பு ஒதுக்கம் போல், 10
வள் உகிர் போழ்ந்தனவும் வாள் எயிறு உற்றனவும்,
ஒள் இதழ் சோர்ந்த நின் கண்ணியும் நல்லார்
சிரறுபு சீறச் சிவந்த நின் மார்பும்,
தவறு ஆதல் சாலாவோ? கூறு!

தலைவன்:

அது தக்கது வேற்றுமை என்கண்ணோ ஓராதி; தீது இன்மை 15
தேற்றக் கண்டீயாய் தெளிக்கு.

தலைவி:

இனி தேற்றேம் யாம்
தேர் மயங்கி வந்த தெரி கோதை அம் நல்லார்
தார் மயங்கி வந்த தவறு அஞ்சிப் போர் மயங்கி,
நீ உறும் பொய்ச் சூள் அணங்கு ஆகின், மற்று இனி 20
யார் மேல் விளியுமோ? கூறு!

Kalithokai 88
Maruthan Ilanākanār, Marutham, What the heroine and the hero said

Heroine:

Go away! Who are you to touch me, coming
here with pollen on your shoulders, dropped from
the flowers adorning the thick, fragrant hair of
vine-like concubines? Are those who are suffering
inferior to those who are powerful?

Hero:

Who can reply to a harsh one?

Heroine:

Do not waste your effort uttering stupid words
that are not true. Tell it to those who are awed by
your lies.

Hero:

One with lovely jewels! What wrong did I do when
I am one who will not be able to live without your
graces?

Heroine:

O him! Tell me then if they are not true, the
scratches caused by concubines with their sharp
nails appearing like the claw marks of spotted crabs
that scuttle toward water, the bite marks caused
by white teeth, your garland with bright petals that
have wilted, and your red chest which has been hit
in rage?

Hero:

Do not think that I am at fault. I’ll explain clearly to
show that I did not commit any mistake.

Heroine:

You don’t need to clarify anything. Who will it ruin,
the terror caused by your false promises that you
made fearing you made a mistake and I will sulk, after
returning with the garlands of pretty women who fell
for you on seeing your chariot? Tell me!

Notes:  சேர்பு ஒதுக்கம் (10) – நச்சினார்க்கினியர் உரை – சேர்பு என்னும் எச்சத்திற்கு வினை வருவித்து முடிக்க.  ஒதுக்க என்னும் தொழிற்பெயர் ஆகுபெயர்.  யாரை – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை (அகநானூறு 46 – ம் பாடலின் உரையில் கூறியது) ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது, சாரியையுமாம்.

Meanings:  ஒரூஉ – go away (இயற்கை அளபெடை), கொடி இயல் நல்லார் – vine-like pretty women (concubines), குரல் நாற்றத்து உற்ற முடி உதிர் பூந்தாது – flower pollen that dropped from fragrant thick hair, மொய்ம்பின ஆக – on the shoulders, தொடிய – to touch, எமக்கு நீ யாரை – who are you to me (ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது, சாரியையுமாம்), பெரியார்க்கு – to those who are superior, to those who are powerful, அடியரோ – are they inferior, ஆற்றாதவர் – those who are suffering,

கடியர் தமக்கு யார் சொல்லத் தக்கார் மாற்று – who is suitable to reply to a harsh person,

வினை கெட்டு – avoiding your work, wasting your time (கெட்டு – தவிர்த்து, நச்சினாக்கினியர் உரையில்), வாய் அல்லா – not truths, வெண்மை உரையாது – without uttering stupid words, கூறு நின் மாயம் மருள்வார் அகத்து – tell it to those who are confused by your lies,

ஆய் இழாய் – O one with pretty jewels, நின் கண் பெறின் அல்லால் இன் உயிர் வாழ்கல்லா என் கண் எவனோ தவறு – what is the wrong that I committed when I will not live if I do not get your graces,

இஃது ஒத்தன் – O he, புள்ளிக் களவன் புனல் சேர்பு ஒதுக்கம் போல் – like the marks made by spotted crabs that walk to the water, வள் உகிர் போழ்ந்தனவும் – sharp nails have split the skin, sharp nails have dug into the skin and torn it, வாள் எயிறு உற்றனவும்  – caused by white teeth, ஒள் இதழ் சோர்ந்த நின் கண்ணியும் – your garland with wilted bright petals, நல்லார் சிரறுபு சீற – pretty women (concubines) hit in anger, சிவந்த நின் மார்பும் – your red chest, தவறு ஆதல் – if they are mistakes, சாலாவோ கூறு –  tell me if they are not right,

அது தக்கது வேற்றுமை என்கண்ணோ ஓராதி – do not consider that I am at fault (என்கண்ணோ – என்கண், என்னிடம், ஓகாரம் அசை), தீது இன்மை தேற்றக் கண்டீயாய் தெளிக்கு – I will explain with clarity that I didn’t commit any mistake if you don’t see it (தெளிக்கு – தன்மை ஒருமை வினைமுற்று),

இனி தேற்றேம் யாம் – now I do not need any clarification (யாம் – தன்மைப் பன்மை), தேர் மயங்கி வந்த – came attracted by your chariot, தெரி கோதை அம் நல்லார் – beautiful women with chosen garlands, தார் மயங்கி வந்த – confusion with the garlands, தவறு அஞ்சி – fearing the mistake, போர் மயங்கி – fearing sulking, நீ உறும் பொய்ச் சூள் – the false promises that you utter (உறும் – செய்யும்), அணங்கு ஆகின் – if they are terror, மற்று இனி யார் மேல் விளியுமோ – then who will it ruin, கூறு – tell me

கலித்தொகை 89
மருதன் இளநாகனார், மருதம், தலைவியும் தலைவனும் சொன்னது

தலைவி:

யார் இவன் எம் கூந்தல் கொள்வான்? இதுவும் ஓர்
ஊராண்மைக்கு ஒத்த படிறு உடைத்து எம் மனை
வாரல் நீ வந்தாங்கே மாறு.

தலைவன்:

என் இவை ஓர் உயிர்ப் புள்ளின் இரு தலையுள் ஒன்று
போர் எதிர்ந்தற்றாப் புலவல்? நீ கூறின் என் 5
ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது?

தலைவி:

ஏஎ! தெளிந்தேம் யாம்; காயாதி; எல்லாம் வல் எல்லா
பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு,
வருந்தல் நின் வஞ்சம் உரைத்து.

தலைவன்:

மருந்து இன்று மன்னவன் சீறின், தவறு உண்டோ நீ நயந்த 10
இன்னகை? தீதோ இலேன்.

தலைவி:

மாண மறந்து உள்ளா நாண் இலிக்கு இப் போர்
புறம் சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே! உறழ்ந்து இவனைப்
பொய்ப்ப விடேஎம் என நெருங்கின், தப்பினேன்
என்று அடி சேர்தலும் உண்டு. 15

Kalithokai 89
Maruthan Ilanākanār, Marutham, What the heroine and the hero said

Heroine:

Who is this holding my hair? This is lordship
with tyranny. Do not come to my house. Go away
the way you came.

Hero:

Why this? You quarrelling with me is like the two
heads of a single bird fighting with each other. What
is the way for my life to stay without leaving?

Heroine:

Hey! I understand clearly. Don’t be angry with me!
Like the ghoul who uttered praises to the very able
Kotravai, goddess of the large forests, do not utter
treacherous words and hurt yourself.

Hero:

Would one be at fault if the king is enraged, for which
there is no solution? O one with sweet smiles! I am
not guilty of any evil doings for which you desire to blame
me.

Heroine to her heart:

O my heart! If I disagree, and pressure him not letting
him utter lies, he will fall at my feet stating that he made
a mistake. Consider what will happen to this man who has
forgotten esteem, who has no shame, if he loses this battle
with me.

Notes:  தலைவன் பரத்தையர் சேரியிலிருந்து வர, தலைவி அவனுடன் ஊடி, இறுதியில் அவனை ஏற்றுக்கொண்டது.

Meanings:  யார் இவன் எம் கூந்தல் கொள்வான் – who is he holding my hair (கொள்வான் – வான் ஈற்று வினையெச்சம்), இதுவும் ஓர் ஊராண்மைக்கு ஒத்த – this is like lordship, படிறு உடைத்து – with treachery, deceitful, எம் மனை வாரல் – do not come to my house (வாரல் – அல்லீற்று எதிர்மறை வியங்கோள் வினைமுற்று), நீ வந்தாங்கே மாறு – go away like you came,

என் இவை – why this, ஓர் உயிர்ப் புள்ளின் இரு தலையுள் ஒன்று போர் எதிர்ந்தற்றாப் புலவல் – you fight with me like the two heads of a bird fighting with each other, நீ கூறின் – if you say this, என் ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது – what is the way for my life to stay,

ஏஎ தெளிந்தேம் – Hey! I understand (ஏஎ – இகழ்ச்சிக் குறிப்பு), யாம் காயாதி – do not be angry with me (யாம் – தன்மைப் பன்மை, first person plural), எல்லாம் வல் எல்லா பெரும் காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு – like a ghoul uttering praises to the all-powerful forest goddess Kotravai, வருந்தல் நின் வஞ்சம் உரைத்து – do not hurt yourself with your treacherous words,

மருந்து இன்று மன்னவன் சீறின் – there is no cure if the king is enrage, தவறு உண்டோ – is there any mistake, நீ நயந்த – you desired, இன் நகை – oh one with sweet smiles (அன்மொழித்தொகை), தீதோ இலேன் – I have no evil (தீதோ – ஓகாரம் அசை நிலை, an expletive),

மாண – greatly, மறந்து – forgetting, உள்ளா நாண் இலிக்கு – to the man who has no shame who does not think, இப் போர் புறம் சாய்ந்து – losing in this battle, காண்டைப்பாய் – consider it, look at it (காண்டை – காண் என்னும் முன்னிலைவினை காண்டை எனத் திரிந்தது), நெஞ்சே – O my heart, உறழ்ந்து – differing, இவனைப் பொய்ப்ப விடேஎம் என நெருங்கின் – if we pressure him not letting him lie, தப்பினேன் என்று – stating ‘I made a mistake’ (தப்பினேன் – நான் தவறு செய்தேன்), அடி சேர்தலும் உண்டு – he will fall at my feet

கலித்தொகை 90
மருதன் இளநாகனார், மருதம், தலைவியும் தலைவனும் சொன்னது

தலைவி:

கண்டேன் நின் மாயம் களவு ஆதல்; பொய்ந்நகா
மண்டாத சொல்லித் தொடாஅல்; தொடீஇய நின்
பெண்டிர் உளர் மன்னோ ஈங்கு?

தலைவன்:

ஒண்தொடி! நீ கண்டது எவனோ தவறு?

தலைவி:

கண்டது நோயும் வடுவும் கரந்து மகிழ் செருக்கிப், 5
பாடு பெயல் நின்ற பானாள் இரவில்,
தொடி பொலி தோளும் முலையும் கதுப்பும்,
வடிவு ஆர் குழையும் இழையும் பொறையா
ஒடிவது போலும் நுசுப்போடு, அடி தளரா,
ஆராக் கவவின் ஒருத்தி வந்து, அல்கல் தன் 10
சீர் ஆர் ஞெகிழம் சிலம்பச், சிவந்து நின்
போர் ஆர் கதவம் மிதித்தது அமையுமோ?
ஆய் இழை ஆர்க்கும் ஒலி கேளா அவ் எதிர்
தாழாது எழுந்து நீ சென்றது அமையுமோ?
மாறாள் சினைஇ அவள் ஆங்கே நின் மார்பில் 15
நாறு இணர்ப் பைந்தார் பரிந்தது அமையுமோ?
தேறு நீ தீயேன் அலேன் என்று மற்று அவள்
சீறடி தோயா இறுத்தது அமையுமோ?
கூறு இனிக் காயேமா யாம்?

தலைவன்:

தேறின் பிறவும் தவறு இலேன் யான்; 20
அல்கல் கனவு கொல் நீ கண்டது?

தலைவி:

கனை பெயல் தண் துளி வீசும் பொழுதில் குறி வந்தாள்
கண்ட கனவு எனக் காணாது மாறு உற்றுப்,
பண்டைய அல்ல நின் பொய்ச் சூள் நினக்கு; எல்லா!
நின்றாய் நின் புக்கில் பல. 25

தலைவன்:

மென்தோளாய்! நல்கு நின் நல் எழில்; உண்கு.

தலைவி:

ஏடா! குறை உற்று நீ எம் உரையல்! நின் தீமை
பொறை ஆற்றேம் என்றல் பெறுதுமோ, யாழ
நிறை ஆற்றா நெஞ்சு உடையேம்?

Kalithokai 90
Maruthan Ilanākanār, Marutham, What the heroine and the hero said

Heroine:

I have seen your deceits become lies. Smiling
falsely, you touch me uttering improper words.
Are your women here for you to touch?

Hero:

One wearing gleaming bangles! What wrong did
you find in me?

Heroine:

This is what I saw. A woman who had been
embraced endlessly by you came, hiding her
love affliction and the scandal that rose in town,
when constant rain poured heavily at midnight,
her arms donning beautiful bracelets, with breasts,
hair, pretty earrings, jewels, waist that appeared
like it would break under weight, and delicate walk,
as her beautiful anklets jingled,
with rage, and kicked the double door of our house.
You rose up and ran without delay on hearing her
jingling jewels. Is that not wrong enough?

She in rage tore up the fragrant garland with clusters of
flowers, lying on your chest. Is that not wrong enough?

You fell at her small feet and pleaded with her that you
are not guilty of wrong doings. Is that not wrong enough?

Tell me! Should I not be angry with you now?

Hero:

It is clear that I cannot be blamed for wrongdoing. You
must have dreamt about all this in a dream at night.

Heroine:

Even after I saw the woman who came for a tryst with
you when heavy rains poured with cold droplets, you are
denying it, saying it was a dream. Your false promises will
not work like in the past. Why are you still standing here?
There are many houses where you can go.

Hero:

One with delicate arms! Give me your graces and fine
beauty.  I will enjoy you.

Heroine:

Hey you! Don’t come complaining to me. I will not
be one to bear, without a resolute heart, the blame of
accepting your wicked deeds.

Notes: நச்சினார்க்கினியர் உரை – காமக்கிழத்தி கூற்று, மா.  இராசமாணிக்கனார் உரை – தலைவி கூற்று.  தலைவன் பரத்தையர் சேரியிலிருந்து வர, தலைவி அவனுடன் ஊடி, இறுதியில் அவனை ஏற்றுக்கொண்டது.  கேளா – கேட்டு என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  தளரா – தளர்ந்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  தோயா – தோய்த்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  நகா – நகைத்து என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

Meanings:  கண்டேன் நின் மாயம் களவு ஆதல் – I have seen your deceitful lies, பொய்ந்நகா – smiling in a fake manner, மண்டாத சொல்லி – uttering words that are not desirable, தொடாஅல் – don’t touch me (இசை நிறை அளபெடை), தொடீஇய – to touch (அளபெடை), நின் பெண்டிர் உளர் மன்னோ ஈங்கு – are your women here (மன்னோ – மன், ஓ அசை நிலைகள், expletives),

ஒண்தொடி நீ கண்டது எவனோ தவறு – one with bright bangles, what wrong did you fine in me (ஒண்தொடி – அன்மொழித்தொகை),

கண்டது – what I saw, நோயும் வடுவும் – affliction and scandal, கரந்து – hiding, மகிழ் –செருக்கி – with happiness and arrogance, பாடு பெயல் நின்ற பானாள் இரவில் – midnight with constant heavy rains, தொடி பொலி தோளும் – arms with beautiful bracelets, arms with bright bracelets, முலையும் – breasts, கதுப்பும் – hair, வடிவு ஆர் குழையும் – beautiful earrings, இழையும் – jewels, பொறையா ஒடிவது போலும் நுசுப்போடு – with a waist that appeared like it would break under weight, அடி தளரா – delicate walk, slow walk, ஆராக் கவவின் – with endless embraces/unions, ஒருத்தி – a woman, வந்து அல்கல் – arrived at night, தன் – her, சீர் – splendid, ஆர் ஞெகிழம் சிலம்ப – pretty anklets jingling, சிவந்து – with rage, நின் போர் ஆர் கதவம் மிதித்தது அமையுமோ – is it not enough that she kicked your pretty double door, is it not enough that she kicked your tightly fitting door, ஆய் இழை ஆர்க்கும் ஒலி கேளா அவ் எதிர் தாழாது எழுந்து நீ சென்றது அமையுமோ – is it not enough that you rose up and went without delay on hearing the sounds of her pretty jewels, மாறாள் – she did not stop, சினைஇ அவள் ஆங்கே நின் மார்பில் நாறு இணர்ப் பைந்தார் பரிந்தது அமையுமோ – is not enough that she in anger tore up your fragrant fresh flower garland with clusters that you had on your chest (சினைஇ – அளபெடை), தேறு நீ தீயேன் அலேன் என்று மற்று அவள் சீறடி தோயா இறுத்தது அமையுமோ – is it not enough that you fell on her small feet and hung there asking her to trust you and saying that you did not do any harm, கூறு – tell me, இனிக் காயேமா யாம் – should I not be angry with you now,
தேறின் – if looked clearly, if analyzed, பிறவும் தவறு இலேன் யான் – that I did not commit anything wrong, அல்கல் கனவு கொல் நீ கண்டது – it appears that you had a dream at night,

கனை பெயல் தண் துளி வீசும் பொழுதில் – when heavy rains pour cold drops, குறி வந்தாள் – one who came due to a sign from you, கண்ட கனவு எனக் காணாது – not considering it a dream, மாறு உற்று – denying it, பண்டைய அல்ல – not like in the past, நின் பொய்ச் சூள் – your fake promises, நினக்கு எல்லா நின்றாய் – why are you still standing here, நின் புக்கில் பல – here are many houses to which you go,

மென்தோளாய் – O one with delicate arms, நல்கு நின் நல் எழில் – feed me with your graces and fine beauty, உண்கு – I will enjoy you,

ஏடா – Hey you, குறை உற்று – with complaints, நீ எம் உரையல் – do not tell me, நின் தீமை பொறை ஆற்றேம் என்றல் பெறுதுமோ – will I bear the blame of accepting your evil deeds (rhetorical question), I will not bear the blame of accepting your evil deeds, யாழ – அசை நிலை, an expletive, நிறை ஆற்றா நெஞ்சு உடையேம் – me with a heart that is not resolute

கலித்தொகை 91
மருதன் இளநாகனார், மருதம், தலைவியும் தலைவனும் சொன்னது

தலைவி:

அரி நீர் அவிழ் நீலம், அல்லி, அனிச்சம்,
புரி நெகிழ் முல்லை நறவோடு அமைந்த
தெரி மலர்க் கண்ணியும் தாரும் நயந்தார்
பொரு முரண் சீறச் சிதைந்து, நெருநையின்
இன்று நன்று என்னை அணி. 5

தலைவன்:

அணை மென்தோளாய்! செய்யாத சொல்லிச் சினவுவது ஈங்கு எவன்,
ஐயத்தால்? என்னை கதியாதி! தீது இன்மை
தெய்வத்தான் கண்டீ தெளிக்கு.

தலைவி:

மற்று அது அறிவல் யான் நின் சூள்; அனைத்து ஆக நல்லார்
செறி தொடி உற்ற வடுவும், குறி பொய்த்தார் 10
கூர் உகிர் சாடிய மார்பும், குழைந்த நின்
தாரும், ததர் பட்ட சாந்தமும் சேரி
அரி மதர் உண்கண்ணார் ஆராக் கவவின்,
பரிசு அழிந்து யாழ நின் மேனி கண்டு, யானும்
செரு ஒழிந்தேன், சென்றீ இனி! 15

தலைவன்:

தெரி இழாய்! தேற்றாய் சிவந்தனை காண்பாய் நீ; தீது இன்மை
ஆற்றின் நிறுப்பல் பணிந்து.

தலைவி:

அன்னதேல் ஆற்றல் காண்;
வேறுபட்டாங்கே கலுழ்தி அகப்படின்
மாறுபட்டாங்கே மயங்குதி யாது ஒன்றும் 20
கூறி உணர்த்தலும் வேண்டாது மற்று நீ
மாணா செயினும், மறுத்து ஆங்கே நின் வயின்
காணின் நெகிழும் என் நெஞ்சு ஆயின், என் உற்றாய்
பேணாய் நீ பெட்பச் செயல்?

Kalithokai 91

Maruthan Ilanākanār, Marutham, What the heroine and hero said

Heroine:

The garland that you are wearing, woven
with blue waterlilies that blossomed in lovely
water, white waterlilies, anicham, and
blooming mullai flowers, looks more attractive
today than it appeared yesterday, crushed with
anger and hostility by those who love you.

Hero:

One with soft arms! Why are you charging me
with what I did not do? Don’t doubt me and get
enraged! You should understand clearly that as God
as a witness, I didn’t do anything wrong.

Heroine:

I know all about your false promises. My sulking has
ended upon seeing marks on your ruined body, the
scars caused by the thick bangles of your concubines,
the scratches on your chest attacked by the sharp
finger nails of those with whom you missed trysts,
your crushed flower garland, and dense sandal paste
smeared by endless embraces of women with pretty,
moist, kohl-rimmed eyes with red lines. Go away now!

Hero:

One with chosen jewels! You are angry without
understanding what I say. I will establish humbly that
I did not do anything wicked.

Heroine:

Look at his ability to prove that he is not guilty! You cry
if I am angry with you. If caught, you get confused and
your mind goes astray. You don’t need to explain to
make me understand. My heart softens when it sees you,
setting aside matters you do without honor. Why are you
being humble to please me, not understanding?

Notes:  நச்சினார்க்கினியர் உரை – காமக்கிழத்தி கூற்று, மா. இராசமாணிக்கனார் உரை – தலைவி கூற்று. தலைவன் பரத்தையர் சேரியிலிருந்து வர, தலைவி அவனுடன் ஊடி, இறுதியில் அவனை ஏற்றுக்கொண்டது. தொடி வடு – கலித்தொகை 71 – தொடி வடு, கலித்தொகை 78 – தொடி உற்ற வடு, கலித்தொகை 91- தொடி உற்ற வடுவும். மதுரைக்காஞ்சி 569 – நுண் பூண் ஆகம் வடுக்கொள முயங்கி, அகநானூறு 142 – தொடிக்கண் வடுக் கொள முயங்கினள்.

Meanings:  அரி நீர் அவிழ் நீலம் – blue waterlilies that opened their petals in the lovely water, அல்லி – white waterlilies, அனிச்சம் – anicham flowers, புரி நெகிழ் முல்லை – along with tightness loosening (blossoming) jasmine flowers, நறவோடு – along with naravam flowers, அமைந்த தெரி மலர்க் கண்ணியும் – strands woven with chosen/bright flowers, தாரும் – and garlands, நயந்தார் – those who love, பொரு முரண் – fighting with hostility, சீறச் சிதைந்து – ruined in anger, நெருநையின் இன்று நன்று என்னை அணி – they look more attractive today than how they appeared yesterday on him (என்னை – தலைவனை ‘என் ஐ’ என்றாள்)

அணை மென்தோளாய் – one with pillow-like soft arms, செய்யாத சொல்லிச் சினவுவது ஈங்கு எவன் – why are you getting angry and telling what has not happened, ஐயத்தால் என்னை கதியாதி – do not be angry with me doubting me, தீது இன்மை தெய்வத்தான் கண்டீ – you will see with god as a witness that I didn’t commit anything bad (கண்டீ – முன்னிலை ஒருமை வினைமுற்று, வினைத் திரிசொல்), தெளிக்கு – I will state clearly (தன்மை ஒருமை வினைமுற்று),

மற்று அது அறிவல் யான் – I know that it is otherwise, நின் சூள் அனைத்து ஆக –all your promises, நல்லார் செறி தொடி உற்ற வடுவும்  – the scars caused by the closely stacked bangles of pretty women (concubines), குறி பொய்த்தார் – those women who are angry since you missed trysts, கூர் உகிர் சாடிய மார்பும் – chest scratched by sharp nails, குழைந்த நின் தாரும் – your crushed garland, ததர் பட்ட சாந்தமும் – densely smeared sandal paste, சேரி அரி மதர் உண்கண்ணார் – those with proud/beautiful kohl-rimmed moist eyes with red lines from the neighborhood/settlement, ஆராக் கவவின் – with endless embraces, பரிசு அழிந்து – your nature ruined, யாழ – அசை நிலை, an expletive, நின் மேனி கண்டு – on seeing your body, யானும் – me, செரு ஒழிந்தேன் – I have ended my sulking, சென்றீ இனி – you go away now (சென்றீ – முன்னிலை ஒருமை வினைத் திரிசொல்),

தெரி இழாய் – O one with chosen jewels, தேற்றாய் சிவந்தனை – you are angry without understanding (what I say), காண்பாய் நீ – you will see, தீது இன்மை ஆற்றின் நிறுப்பல் பணிந்து – humbly I will establish in the right manner that I did not do anything evil,

அன்னதேல் – if that is so (அன்னதேல் = அன்னது + ஏல், ஏல் – விகுதி) ஆற்றல் காண் –  look at his ability, வேறுபட்டாங்கே கலுழ்தி – you cry if I hate you, அகப்படின் – if caught, மாறுபட்டு ஆங்கு மயங்குதி – you are confused and go astray, யாது ஒன்றும் கூறி உணர்த்தலும் வேண்டாது – it is not necessary to explain to make me understand, மற்று நீ மாணா செயினும் மறுத்து  – pushing aside the things that you do without honor, ஆங்கே – there, நின் வயின் காணின் நெகிழும் என் நெஞ்சு – my heart softens when I see you, ஆயின் – so, என் உற்றாய் பேணாய் நீ பெட்பச் செயல் – why are you doing humble things to please me not understanding

கலித்தொகை 92
மருதன் இளநாகனார், மருதம், தலைவனும் தலைவியும் சொன்னது

தலைவன்:

புன வளர் பூங்கொடி அன்னாய்! கழியக்
கனவு எனப்பட்டது ஓர் காரிகை நீர்த்தே;
முயங்கிய நல்லார் முலை இடை மூழ்கி,
மயங்கி மற்று ஆண்டு ஆண்டுச் சேறலும் செல்லாது,
உயங்கி இருந்தார்க்கு உயர்ந்த பொருளும்; 5
அரிதின் அறம் செய்யா ஆன்றோர் உலகும்,
உரிதின் ஒருதலை எய்தலும், வீழ்வார்ப்
பிரிதலும் ஆங்கே புணர்தலும் தம்மில்
தருதல் தகையாதால் மற்று;

நனவினால் போலும், நறு நுதால்! அல்கல் 10
கனவினால் சென்றேன்; கலி கெழு கூடல்
வரை உறழ் நீள் மதில்வாய் சூழ்ந்த வையைக்
கரை அணி காவின் அகத்து.

தலைவி:

உரை இனி, தண்டாத் தீஞ் சாயல் நெடுந்தகாய் அவ்வழிக்
கண்டது எவன் மற்று நீ? 15

தலைவன்:

கண்டது உடன் அமர் ஆயமொடு அவ் விசும்பு ஆயும்
மட நடை மா இனம், அந்தி அமையத்து,
இடன் விட்டு இயங்கா இமையத்து ஒரு பால்,
இறைகொண்டு இருந்தன்ன நல்லாரைக் கண்டேன்
துறை கொண்டு உயர் மணல் மேல் ஒன்றி நிறைவதை. 20

தலைவி:

ஓர்த்தது இசைக்கும் பறை போல், நின் நெஞ்சத்து
வேட்டதே கண்டாய் கனா.

தலைவன்:

கேட்டை விரையல் நீ மற்று வெகுள்வாய் உரை ஆண்டு
இது ஆகும், இன்னகை நல்லாய் பொது ஆகத்
தாம் கொடி அன்ன தகையார் எழுந்ததோர் 25
பூங்கொடி வாங்கி, இணர் கொய்ய ஆங்கே
சினை அலர் வேம்பின் பொருப்பன் பொருத
முனை அரண் போல உடைந்தன்று அக் காவில்
துனை வரி வண்டின் இனம்.

மற்று ஆங்கே நேர் இணர் மூசிய வண்டு எல்லாம் அவ்வழிக் 30
காரிகை நல்லார் நலம் கவர்ந்து உண்ப போல் ஓராங்கு மூச,
அவருள்
ஒருத்தி செயல் அமை கோதை நகை;
ஒருத்தி இயல் ஆர் செருவில் தொடியொடு தட்ப;
ஒருத்தி தெரி முத்தம் சேர்ந்த திலகம்; 35
ஒருத்தி அரி மாண் அவிர் குழை ஆய் காது வாங்க;
ஒருத்தி வரி ஆர் அகல் அல்குல் காழகம்;
ஒருத்தி அரி ஆர் நெகிழத்து அணி சுறாத் தட்ப;
ஒருத்தி புலவியால் புல்லாது இருந்தாள் அலவுற்று
வண்டு இனம் ஆர்ப்ப, இடை விட்டுக் காதலன் 40
தண் தார் அகலம் புகும்;

ஒருத்தி அடி தாழ் கலிங்கம் தழீஇ; ஒரு கை
முடி தாழ் இருங்கூந்தல் பற்றிப் பூ வேய்ந்த
கடி கயம் பாயும் அலந்து;

ஒருத்தி கணம் கொண்டு அவை மூசக் கை ஆற்றாள் பூண்ட 45
மணம் கமழ் கோதை பரிபு கொண்டு ஓச்சி,
வணங்கு காழ் வங்கம் புகும்;

ஒருத்தி இறந்த களியான் இதழ் மறைந்த கண்ணள்,
பறந்தவை மூசக் கடிவாள் கடியும்,
இடம் தேற்றாள் சோர்ந்தனள் கை. 50

ஆங்க கடி காவில் கால் ஒற்ற ஒல்கி ஒசியாக்
கொடி கொடி தம்மில் பிணங்கியவை போல்,
தெரி இழை ஆர்ப்ப மயங்கி இரிவுற்றார், வண்டிற்கு
வண்டலவர் கண்டேன் யான்.
தலைவி:

நின்னை நின் பெண்டிர் புலந்தனவும், நீ அவர் 55
முன் அடி ஒல்கி உணர்த்தினவும், பல் மாண்
கனவின் தலையிட்டு உரையல்; சினைஇ யான்
செய்வது இல் என்பதோ கூறு.

தலைவன்:

பொய் கூறேன் அன்ன வகையால், யான் கண்ட கனவு தான்
நல் வாயாக் காண்டை நறு நுதால்! பல் மாணும் 60
கூடிப் புணர்ந்தீர் பிரியன்மின் நீடிப்
பிரிந்தீர் புணர் தம்மின் என்பன போல,
அரும்பு அவிழ் பூஞ்சினை தோறும் இருங்குயில்
ஆனாது அகவும் பொழுதினான் மேவர
நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும் 65
தேன் இமிர் காவில் புணர்ந்து இருந்து ஆடுமார்,
ஆனா விருப்போடு அணி அயர்ப, காமற்கு
வேனில் விருந்து எதிர்கொண்டு.

Kalithokai 92
Maruthan Ilanākanār, Marutham, What the hero and the heroine said

Hero:

O one like a flowering vine growing in a grove! In
fleeting dreams which are beautiful in their nature,
those who sink between the breasts of pretty women
who they unite with endlessly are joyful, those who
are idle without leaving to earn wealth become very
wealthy, and those who do not perform righteous acts
reach the world of the wise. Dreams do not stop
separating from loved ones and uniting with them
on returning.

One with a fragrant forehead! I went in my dream, that
seemed so real, into a pretty grove on the shores of the
Vaiyai riverbanks which surround uproarious Koodal
city with walls as tall as mountains.

Heroine:

Tell me about it, O noble one who has been gracious
to me. What did you see there?

Hero:

I saw pretty women sitting together on one side of a tall
sand dune on the shores of the river, resembling a flock
of geese of delicate walk that fly in the pretty sky, resting
on one side of the Mount Himalayas at twilight time.

Heroine:

Like the drums that reflect the music of the one who
beats it, you saw in your dream what you desired.

Hero:

Don’t rush now. You can be upset later.

Heroine:

Tell me now!

Hero:

O one with sweet smiles! Vine-like women pluck flowers from
a flowering vine in a grove, and when they pull a branch
with clusters, it snaps and swarms of bees break away rapidly
like a fort broken, attacked by the Pāndiyan king wearing a
neem garland.

And then all the bees that left the pretty flower clusters attacked
together the beautiful women as if to devour their beauty.
One woman’s well-made hair jewel got caught in the moving
bangles of another woman amidst the battling bees.
One woman’s bright forehead ornament got caught in another
woman’s gleaming, pretty earrings.

One woman’s garment on her wide, pretty loins with stripes got
entangled with another woman’s loose jingling anklets with pretty
shark designs.
One woman sulked and did not embrace her lover wearing a cool
garland, only to abandon her sulking and embrace him in panic
as swarms of bees buzzed around her.

One woman in fear held her garment flowing to her feet with
one hand and held her thick, low hanging hair with another
hand and jumped into a fragrant pond filled with flowers.

One woman unable to chase the bees with her hands, tore her
fragrant garland and chased them with it as she ran for cover to
a curved boat with poles.

One woman drunk and unable to keep her eyelids open, tried to
chase away the bees swarming around, but lost direction and
her hands were fatigued.

In this manner, I saw women lose to bees and run with their
chosen jewels jingling, confused and appearing like vines in a
grove that got tangled with each other without breaking in the
wind.

Heroine:

Do not make it sound like it is a lofty dream, your women
fighting with you and you kneeling at their feet to pacify them.
Do you mean to say that there is no use of me being angry with
you?

Hero:

I am not lying.  I saw all that in my dream.  O one with a fragrant
forehead!  You will see it happen.  When dark-hued cuckoos sing
in all the flowering branches where buds blossom, appealing for
those united in esteem not to part, and for those who separated
for long to unite, young men and women of Koodal city go with
with great pleasure to unite and play in the bee-swarming groves,
decorated well, as summer arrives to welcome Kāman.

Notes:  நான்மாடக்கூடல் (65) – நச்சினார்க்கினியர் உரை – நான்கு மாடம் கூடலின் ‘நான் மாடக் கூடல்’ என்றாயிற்று. அவை திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர்.  துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).

Meanings:  புன வளர் பூங்கொடி அன்னாய் – O one like a flowering vine growing in the grove, கழியக் கனவு எனப்பட்டது ஓர் காரிகை நீர்த்தே – fleeting dreams are of a beautiful nature, முயங்கிய நல்லார் முலை இடை மூழ்கி – sinking between/on the breasts of pretty women (concubines) they embraced/they united with,  மயங்கி – awed, மற்று – அசைநிலை, an expletive, ஆண்டு ஆண்டுச் சேறலும் – go to them again and again, செல்லாது – not leaving, உயங்கி இருந்தார்க்கு – those who are sad, உயர்ந்த பொருளும் – great wealth, அரிதின் அறம் செய்யா – without doing rare/precious righteous acts, ஆன்றோர் உலகும் –  and the world of the wise, உரிதின் ஒருதலை எய்தலும் – and attaining all of them together, வீழ்வார்ப் பிரிதலும் – and separating from loved ones, ஆங்கே புணர்தலும் தம்மில் – and uniting with them on their return, தருதல் தகையாதால் – have the nature of giving these, மற்று – அசைநிலை, an expletive,

நனவினால் போலும் – like in reality (நனவின் + ஆல், ஆல் அசைநிலை), நறு நுதால் – O one with a fragrant forehead, அல்கல் கனவினால் சென்றேன் – I went there in my dream at night (கனவின் + ஆல், ஆல் அசைநிலை), கலி கெழு கூடல் – uproarious  Koodal/Madurai, வரை உறழ் – differing from the limits, நீள் மதில்வாய் சூழ்ந்த – surrounded by mountain like tall walls, வையைக் கரை அணி காவின் அகத்து – inside a pretty grove on Vaiyai shores,

உரை இனி – tell me about it, தண்டாத் தீஞ் சாயல் நெடுந்தகாய் – O noble one who gave me unabated pleasure, அவ்வழிக் கண்டது எவன் மற்று நீ – what did you see there (மற்று – அசை நிலை, an expletive),

கண்டது – what I saw, உடன் அமர் ஆயமொடு – with friends sitting together, அவ் விசும்பு – pretty sky, ஆயும் – tired, மட நடை மா இனம் – bird flock (geese) of delicate walk, அந்தி அமையத்து – at twilight time, இடன் விட்டு – leaving their place, இயங்கா இமையத்து – Himalayas that does not move, ஒரு பால் இறைகொண்டு இருந்தன்ன – were on one side, நல்லாரைக் கண்டேன் – I saw pretty women, துறை கொண்டு – on the shores, உயர் மணல் மேல் – on the sand dunes, ஒன்றி நிறைவதை – together with friends,

ஓர்த்தது இசைக்கும் பறை போல் – like the music of parai drums that are played according to the drummer’s desires, நின் நெஞ்சத்து வேட்டதே கண்டாய் கனா – you saw what you heart desired in your dream (கனா – கனவு, வு என்ற விகுதி கெட்டு அதற்கு முந்தைய குறில் எழுத்து நீண்டு நெடிலாக மாறியது),

கேட்டை – அசைநிலை, an expletive, விரையல் – do not rush, நீ மற்று வெகுள்வாய் – you can be upset after that, உரை – tell me, ஆண்டு இது ஆகும் – this is what happened there, இன் நகை நல்லாய் – O young woman with sweet smiles (விளி, an address, அன்மொழித்தொகை), பொது ஆக – generally, தாம் கொடி அன்ன தகையார் – those who are like vines, எழுந்ததோர் பூங்கொடி வாங்கி – pulled a flowering vine that had climbed up, இணர் கொய்ய – plucked clusters, ஆங்கே – there, சினை அலர் – flowers on branches, வேம்பின் பொருப்பன் பொருத முனை அரண் போல உடைந்தன்று – broke up like an enemy’s fort attacked by the Pāndiyan king wearing a neem flower garland, அக் காவில் துனை வரி வண்டின் இனம் – swarms of rapid striped bees in that grove,

மற்று ஆங்கே நேர் இணர் மூசிய வண்டு எல்லாம் – after that all the swarming bees from the pretty clusters there, அவ்வழிக் காரிகை நல்லார் நலம் கவர்ந்து உண்ப போல் – like they devoured the beauty of the pretty women there, ஓராங்கு மூச – swarming together, அவருள் – among them, ஒருத்தி செயல் அமை கோதை நகை – the well made jewel on one woman’s hair, ஒருத்தி இயல் ஆர் செருவில் தொடியொடு தட்ப – got caught in another woman’s moving bangles amidst the battle of the bees, ஒருத்தி தெரி முத்தம் சேர்ந்த திலகம் ஒருத்தி அரி மாண் அவிர் குழை ஆய் காது வாங்க – one woman’s bright/chosen pearl jewelry on her forehead got caught in another woman’s gleaming pretty earring on her beautiful ears, ஒருத்தி வரி ஆர் அகல் அல்குல் காழகம் ஒருத்தி அரி ஆர் நெகிழத்து அணி சுறாத் தட்ப – one woman’s garment on her wide pretty loins with lines got caught in another women’s loose jingling anklets with pretty shark designs, ஒருத்தி புலவியால் புல்லாது இருந்தாள் – one woman sulked and did not embrace, அலவுற்று – panicking, வண்டு இனம் ஆர்ப்ப – as swarms of bees buzzed, இடை விட்டுக் காதலன் தண் தார் அகலம் புகும் – she let her sulking go now and then and embraced her lover with a cool garland,

ஒருத்தி – one woman, அடி தாழ் கலிங்கம் தழீஇ – holding her garment flowing down to her feet (தழீஇ – அளபெடை), ஒரு கை முடி தாழ் இருங்கூந்தல் பற்றி – with one hand holding her low hanging dark/thick hair, பூ வேய்ந்த கடி கயம் பாயும் – jumped into a fragrant/protected pond filled with flowers, அலந்து – in fear,

ஒருத்தி – one woman, கணம் கொண்டு அவை மூசக் கை ஆற்றாள் – unable to chase away the attacking swarms of bees with her hands, பூண்ட மணம் கமழ் கோதை பரிபு கொண்டு – tore the fragrant garland she was wearing, ஓச்சி – chased, வணங்கு காழ் வங்கம் புகும் – entered a curved boat with poles (an upturned boat supported with poles, a boat with cross poles),

ஒருத்தி இறந்த களியான் – one woman who drank liquor and lost her thinking (நச்சினார்க்கினியர் உரை – ஒருத்தி அறிவு போதற்குக் காரணமான கள்ளின் களிப்பால்), இதழ் மறைந்த கண்ணள் – her eyelids closed, பறந்தவை மூச – bees swarming, கடிவாள் – she chased, கடியும் இடம் தேற்றாள் – but was unable to find the position to chase, சோர்ந்தனள் கை – her hands got tired,

ஆங்க – அசைநிலை, an expletive, கடி காவில் – in the protected grove, கால் ஒற்ற ஒல்கி – hit by the wind and bent, ஒசியா – unbroken, கொடி கொடி தம்மில் பிணங்கியவை போல் – like creepers that got entangled with each other,  தெரி இழை – chosen jewels, bright jewels, ஆர்ப்ப – creating noises, மயங்கி – confused, இரிவுற்றார் – those who were ruined, those who lost to the bees, வண்டிற்கு வண்டலவர் கண்டேன் யான் – I saw them losing to the bees and running away,

நின்னை நின் பெண்டிர் புலந்தனவும் – your women fighting with you, நீ அவர் முன் அடி ஒல்கி உணர்த்தினவும் – you falling at their feet to pacify them, பல் மாண் கனவின் தலையிட்டு உரையல் – do not tell me like it is a lofty dream, சினைஇ யான் செய்வது இல் என்பதோ கூறு – are you telling me that my anger cannot do anything (சினைஇ – அளபெடை),

பொய் கூறேன் – I am not telling lies, அன்ன வகையால் – in that manner, யான் கண்ட கனவு தான் – I saw all that only in my dream, நல் வாயாக் காண்டை – see that it will happen (காண்டை – முன்னிலை வினைமுற்று, காண் என்னும் முன்னிலைவினை காண்டை எனத் திரிந்தது), நறு நுதால் – one with a fragrant forehead, பல் மாணும் கூடிப் புணர்ந்தீர் – those who united in great esteem, பிரியன்மின் – do not separate, நீடிப் பிரிந்தீர் – those who have separated for a long time, புணர் தம்மின் – unite with your partners, என்பன போல – like they say, அரும்பு அவிழ் – buds opening, பூஞ்சினை தோறும் – on all the flowering branches, இருங்குயில் ஆனாது அகவும் பொழுதினான் – when dark cuckoos sing endlessly, மேவர நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும் – young women and men gather together suitably in Koodal/Madurai with 4 huge mansions/pavilions, தேன் இமிர் காவில் – in the groves where bees buzz, புணர்ந்து இருந்து ஆடுமார் ஆனா விருப்போடு அணி அயர்ப – they go in groups decorating themselves with the  desire to unite and play endlessly, காமற்கு வேனில் விருந்து எதிர்கொண்டு  – when summer arrives to welcome Kāman

கலித்தொகை 93
மருதன் இளநாகனார், மருதம், தலைவியும் தலைவனும் சொன்னது

தலைவி:

வண்டு ஊது சாந்தம் வடுக் கொள நீவிய,
தண்டாத் தீஞ் சாயல் பரத்தை வியல் மார்ப!
பண்டு இன்னை அல்லை மன்; ஈங்கு எல்லி வந்தீயக்
கண்டது எவன் மற்று உரை.

தலைவன்:

நன்றும் தடைஇய மென்தோளாய்! கேட்டீவாய் ஆயின் 5
உடன் உறை வாழ்க்கைக்கு உதவி உறையும்
கடவுளர்கண் தங்கினேன்.

தலைவி:

சோலை மலர் வேய்ந்த மான் பிணை அன்னார் பலர், நீ
கடவுண்மை கொண்டு ஒழுகுவார்
அவருள் எக் கடவுள்? மற்று அக் கடவுளைச் செப்பீமன். 10

தலைவன்:

முத்து ஏர் முறுவலாய்! நாம் மணம் புக்கக்கால்,
‘இப் போழ்து போழ்து’ என்று அது வாய்ப்பக் கூறிய
அக் கடவுள் மற்று அக் கடவுள் அது ஒக்கும்.

தலைவி:

நாவுள் அழுந்து தலை சாய்த்து நீ கூறும்
மாயமோ கைப்படுக்கப்பட்டாய் நீ கண்டாரை 15
வாய் ஆக யாம் கூற வேட்டீவாய்! கேள் இனி!

பெறல் நசை வேட்கையின் நின் குறி வாய்ப்பப்
பறி முறை நேர்ந்த நகார் ஆகக் கண்டார்க்கு
இறு முறை செய்யும் உருவொடு, நும் இல்,
செறி முறை வந்த கடவுளைக் கண்டாயோ? 20

நறும் தண் தகரமும் நானமும் நாறும்
நெறிந்த குரல் கூந்தல் நாள் அணிக்கு ஒப்ப,
நோக்கின் பிணி கொள்ளும் கண்ணொடு, மேல் நாள் நீ
பூப் பலி விட்ட கடவுளைக் கண்டாயோ?

ஈர் அணிக்கு ஏற்ற ஒடியாப் படிவத்துச் 25
சூர் கொன்ற செவ்வேலான் பாடிப் பல நாளும்,
ஆராக் கனை காமம் குன்றத்து, நின்னொடு
மாரி இறுத்த கடவுளைக் கண்டாயோ?

கண்ட கடவுளர் தம் உள்ளும் நின்னை
வெறி கொள் வியல் மார்பு வேறு ஆகச் செய்து 30
குறி கொளச் செய்தார் யார்? செப்பு! மற்று யாரும்
சிறு வரைத் தங்கின் வெகுள்வர், செறு தக்காய்!
தேறினேன், சென்றீ நீ! செல்லா விடுவாயேல்,
நல் தார் அகலத்துக்கு ஓர் சார மேவிய
நெட்டு இருங்கூந்தல் கடவுளர் எல்லார்க்கும் 35
முட்டுப்பாடு ஆகலும் உண்டு.

Kalithokai 93
Maruthan Ilanākanār, Marutham, What the heroine and the hero said

Heroine:

One with a handsome, wide chest scarred by
rubbing hard bee-swarming sandal paste, given to
infidelities! You were not like this in the past. You
have come here at night. Tell me what you saw!

Hero:

One with wide delicate arms! If you ask me, I
went to where gods live, to get their help for our life
together.

Heroine:

There are many who are gods to you, with deer looks,
wearing flowers from groves. Among them, which god
did you see? Tell me.

Hero:

One with a pearl-like smile! It is the god who commended
the perfect time for us to wed.

Heroine:

That is fitting!  O the lies you utter, tongue pressed in and
head bent!  You are caught red-handed!   You who desires
to hear from my mouth about the gods you saw!  Let me tell
you.

Did you see the god who came with great passion to the place
of your tryst, her teeth grown perfectly straight replacing
her milk teeth, her form causing those who see her to die, who
came to your house with rights?

Did you see the god who you gave flower offerings yesterday,
the one with captivating eyes, her fragrant thick hair decorated
with cool thakaram paste and musk, her looks matching her
ornaments?

Did you see the god who stayed with you for many days with
endless passion in the rainy season at Thirupparankundram of
Murukan who killed Sooran with two forms of austerities?

Among the many gods you saw, which one caused scars on
your fragrant wide chest?  They might be enraged if you stay
somewhere else for a little while. O one who merits my hatred!
I understand clearly.  Go away.  If you do not go, the gods
with long, thick hair who desired your chest adorned with
a fine flower garland will face hurdles.

Notes:  முத்தைப் போன்ற பற்கள்: அகநானூறு 27 – முத்தின் அன்ன நகைப் பொலிந்து இலங்கும் எயிறு, ஐங்குறுநூறு 185 – இலங்கு முத்து உறைக்கும் எயிறு, ஐங்குறுநூறு 380 – முத்து ஏர் வெண்பல், கலித்தொகை 64 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 93 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 97 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 97 – முத்து ஏய்க்கும் வெண்பல், கலித்தொகை 131 – முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய், பரிபாடல் 8 – எழில் முத்து ஏய்க்கும் வெண்பல், பரிபாடல் திரட்டு 2 – முத்த முறுவல், பொருநராற்றுப்படை 27 – துவர்வாய்ப் பல உறு முத்தின் பழி தீர் வெண்பல், சிறுபாணாற்றுப்படை 57 – நகாஅர் அன்ன நளி நீர் முத்தம், நெடுநல்வாடை 37 – முத்து உறழ் முறுவல்.

Meanings:  வண்டு ஊது சாந்தம் – sandal paste buzzed by bees, வடுக் கொள – causing scars, நீவிய – rubbed, தண்டா – not reduced, தீஞ் சாயல் – sweet nature, பரத்தை – man with infidelities, a philandering man, வியல் மார்ப – O one with a wide chest, பண்டு இன்னை அல்லை – you were not like this in the past, மன் – அசை நிலை, an expletive, ஈங்கு எல்லி வந்தீய – you have come here at night, கண்டது எவன் – what did you see, மற்று உரை – tell me that (மற்று – வினைமாற்றின்கண் வந்தது),

நன்றும் – greatly, தடைஇய மென் தோளாய் – O one with wide delicate arms (தடைஇய – தட என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்ச வினை, அளபெடை), கேட்டீவாய் ஆயின் – if you ask, உடன் உறை வாழ்க்கைக்கு – for our married life, உதவி உறையும் கடவுளர்கண் தங்கினேன் – I stayed with the gods who will help,

சோலை மலர் வேய்ந்த மான் பிணை அன்னார் – those wearing flowers from the grove with deer (doe) looks, பலர் – many, நீ கடவுண்மை கொண்டு – there are many who are of god nature to you, ஒழுகுவார் – those who perform, அவருள் எக் கடவுள் – which one among those gods, மற்று அக் கடவுளைச் செப்பீமன் – you tell me who that god is (மற்று – வினைமாற்றின்கண் வந்தது, செப்பீ – முன்னிலை ஒருமை வினைத் திரிசொல், மன் – அசை நிலை, an expletive),

முத்து ஏர் முறுவலாய் – O one with a pearl-like smile, one with a pearly beautiful smile, நாம் மணம் புக்கக்கால் – when we married (புக்கக்கால் – கால் ஈற்று வினையெச்சம்), இப் போழ்து போழ்து என்று அது வாய்ப்பக் கூறிய அக் கடவுள் – the god who said fittingly that this time is a perfect time, மற்று அக் கடவுள் – it is that god (மற்று – வினைமாற்றின்கண் வந்தது),

அது ஒக்கும் – that is credible/suitable, நாவுள் அழுந்து – tongue pressed in, தலை சாய்த்து – bending the head, நீ கூறும் மாயமோ – the lies you utter, கைப்படுக்கப்பட்டாய்  – you are caught red-handed, நீ கண்டாரை வாய் ஆக யாம் கூற வேட்டீவாய் – you who desires to hear from me about the gods you saw, கேள் இனி – listen now,

பெறல் நசை வேட்கையின் – with great passion, நின் குறி வாய்ப்ப – to happen according to the tryst you arrange, பறி முறை – fallen and grown, நேர்ந்த நகார் ஆக – one with straight teeth, கண்டார்க்கு இறு முறை செய்யும் உருவொடு – with a form that could kill those who see her, நும் இல் செறி முறை வந்த கடவுளைக் கண்டாயோ – did you see the god who came to your house with full rights,

நறும் தண் தகரமும் நானமும் – fragrant cool thakaram wood paste (நறுமண மரவகை, Wax- flower dog-bane, Tabernae montana) and fragrant musk from civet cats (புனுகுப் பூனை வழித்தல்), நாறும் நெறிந்த குரல் கூந்தல் – curly thick hair with fragrance, tight thick hair with fragrance, நாள் அணிக்கு ஒப்ப நோக்கின் – with looks like that of her ornaments, பிணி கொள்ளும் கண்ணொடு – with eyes that tie those who see them (கண்ணொடு – கண்ணால்), மேல் நாள் நீ பூப் பலி விட்ட கடவுளைக் கண்டாயோ – did you see that god to whom you gave flower offerings the previous day,

ஈர் அணிக்கு ஏற்ற ஒடியாப் படிவத்து – with unfaltering austerities that are suitable for two kinds, சூர் கொன்ற செவ்வேலான் பாடி – singing the praises of Murukan who killed Sooran, பல நாளும் – for many days, ஆராக் கனை காமம் – with endless intense passion, குன்றத்து – in Thirupparankundram, நின்னொடு மாரி இறுத்த கடவுளைக் கண்டாயோ – did you see that god who stayed with you in the rainy season,

கண்ட கடவுளர் தம் உள்ளும் – among the gods you saw, நின்னை வெறி கொள் வியல் மார்பு வேறு ஆகச் செய்து குறி கொளச் செய்தார் யார் – who caused signs on your fragrant wide chest, செப்பு – tell me, மற்று யாரும் சிறு வரைத் தங்கின் வெகுள்வர் – also they will be angry if you stay somewhere else for a little while, செறு தக்காய் – you are one who is fit for me to be angry with, தேறினேன் – I understand clearly now, சென்றீ – you go away (சென்றீ – முன்னிலை ஒருமை வினைத் திரிசொல்), நீ செல்லா விடுவாயேல் – if you do not go, நல் தார் அகலத்துக்கு – for the chest with a fine garland, ஓர் சார – together, மேவிய – desired, நெட்டு இருங்கூந்தல் கடவுளர் எல்லார்க்கும் – for all the gods with long dark hair, முட்டுப்பாடு ஆகலும் உண்டு – there will be hindrances

கலித்தொகை 94
மருதன் இளநாகனார், மருதம், குறளனும் கூனியும் சொன்னது

குறளன்:

என் நோற்றனை கொல்லோ?
நீர் உள் நிழல் போல் நுடங்கிய மென் சாயல்
ஈங்கு உருச் சுருங்கி
இயலுவாய்! நின்னோடு உசாவுவேன், நின்றீத்தை!
கூனி:

அன்னையோ! காண் தகை இல்லாக் குறள் நாழிப் போழ்தினான் 5
ஆண்டலைக்கு ஈன்ற பறழ் மகனே! நீ எம்மை
வேண்டுவல் என்று விலக்கினை; நின் போல்வார்
தீண்டப் பெறுபவோ மற்று?

குறளன்:

மாண்ட எறித்த படை போல் முடங்கி மடங்கி
நெறித்துவிட்டன்ன நிறை ஏரால் என்னைப் 10
பொறுக்கல்லா நோய் செய்தாய்; பொறீஇ நிறுக்கல்லேன்;
நீ நல்கின் உண்டு என் உயிர்.

கூனி:

குறிப்புக் காண் வல்லுப்பலகை எடுத்து நிறுத்தன்ன
கல்லாக் குறள! கடும் பகல் வந்து எம்மை
இல்லத்து வா என மெய் கொளீஇ, எல்லா நின் 15
பெண்டிர் உளர் மன்னோ? கூறு!

குறளன்:

நல்லாய் கேள்! உக்கத்து மேலும் நடு உயர்ந்து வாள் வாய
கொக்கு உரித்தன்ன கொடு மடாய் நின்னை யான்
புக்கு அகலம் புல்லின், நெஞ்சு ஊன்றும்; புறம் புல்லின்
அக்குளுத்துப் புல்லலும் ஆற்றேன்; அருளீமோ, 20
பக்கத்துப் புல்லச் சிறிது.

கூனி:

போ சீத்தை! மக்கள் முரியே! நீ மாறு இனித், தொக்க
மரக் கோட்டம் சேர்ந்து எழுந்த பூங்கொடி போல,
நிரப்பம் இல் யாக்கை தழீஇயினர், எம்மைப்
புரப்பேம் என்பாரும் பலரால், பரத்தை என் 25
பக்கத்துப் புல்லீயாய் என்னுமால், தொக்க
உழுந்தினும் துவ்வாக் குறுவட்டா! நின்னின்
இழிந்ததோ கூனின் பிறப்பு?…………………………

குறளன்:
……………………………………………………….கழிந்து ஆங்கே
யாம் வீழ்தும் என்று தன் பின் செலவும், உற்றீயாக்
கூனி குழையும் குழைவு காண்! 30

கூனி:

யாமை எடுத்து நிறுத்தற்றால் தோள் இரண்டும் வீசி,
யாம் வேண்டேம் என்று விலக்கவும் எம் வீழும்
காமர் நடக்கும் நடை காண், கவர் கணைச்
சாமனார் தம் முன் செலவு காண்.

குறளன்:

ஓஒ காண் நம்முள் நகுதல் தொடீஇயர் நம்முள் நாம் 35
உசாவுவம் கோன் அடி தொட்டேன்.

கூனி:

ஆங்கு ஆக! சாயல் இன் மார்ப! அடங்கினேன், ஏஎ!
பேயும் பேயும் துள்ளல் உறும் எனக்
கோயில் உள் கண்டார் நகாமை வேண்டுவல்;
தண்டாத் தகடு உருவ வேறு ஆகக் காவின் கீழ்ப் 40
போதர் அகடு ஆரப் புல்லி முயங்குவேம்,
துகள் தபு காட்சி அவையத்தார் ஓலை
முகடு காப்பு யாத்து விட்டாங்கு.

Kalithokai 94
Maruthan Ilanākanār, Marutham, What a dwarf and a hunchback said

Dwarf:

What good deeds did you do, for me to desire
you who totters with a crooked body that sways
gently like a reflection in the water? Stand here!

Hunchback:

Aiyo! You unsightly dwarf, born at an
inauspicious moment to an owl! You stop
me to express your desire! Should those of your kind
even get to touch me?

Dwarf:

Like a blade deftly attached to a plow is your curved,
crooked body, appearing twisted, with great beauty,
that has given me this affliction that I am unable to
bear. I cannot stop it. I can live only by your grace.

Hunchback:

Look at his intent! You crude dwarf who looks like a
vertically placed gambling board! You hold me and
ask me to come to your house at this scorching noon
time. Hey you! Do you have other women? Tell me!

Dwarf:

Listen pretty woman with a waist that is high as your
head, who looks like a skinned stork with a sword-like
beak! Listen to me curved woman! If I enter you
from the front embracing you, your hump will poke my
chest. If I enter from the back, it will tickle me. I
cannot embrace you either way. Come close and let us
embrace sideways.

Hunchback:

Go away you lowly one! Dwarf among men! Give up
your attitude now! Like a flowering vine that climbs on
a thick tree branch, many men have embraced my
imperfect body and offered to provide for me. You
lecherous one asking me to embrace you sideways! Is it
lower than yours, you stunted little ball, my hunched
body that is sweeter than thick ulunthu paniyāram?

Dwarf:

My heart! Even when we went after her, she did not give
in. Look at the hunchback who has softened now?

Hunchback:

You look like a tortoise stood up, waving both your hands.
Even when I rebuke, you desire me. Look at him walk like
Kāman! See the walk like that of Kāman with forked
arrows, elder brother of Sāman!

Dwarf:

Okay. Look, let us not laugh at each other. Let us together
ponder where to touch. I swear by our king’s feet!

Hunchback:

O one with a sweet chest! I submit now. I don’t want
those in the palace to look at us and laugh saying,
“Look at them! Like a ghoul leaping on a ghoul!”
O one with a lovely golden image! Let us go to the grove
below, and make endless love until we sate, embracing
tightly like the seal stamped on the tied letters of faultless,
esteemed courtiers.

Notes:  ஆண்டலை (6) – நச்சினார்க்கினியர் – ஆண்டலைப்புள், பொ. வே. சோமசுந்தரனார் பட்டினப்பாலை 258 உரையில் – கோட்டான், ஆந்தை என மருவி வழங்குவதுமது.

Meanings:  என் நோற்றனை கொல்லோ – what good deeds did you do (கொல்லோ – ஓகாரம் அசை நிலை, an expletive), நீர் உள் நிழல் போல் – like the shade/reflection in the water, நுடங்கிய – moving, மென் சாயல் – delicate nature, ஈங்கு – here, உருச் சுருங்கி – body shrunk, crooked, இயலுவாய் நின்னோடு – with you who is walking (இயலுவாய் – நடக்கின்றவளே, வினைத் திரிசொல்), உசாவுவேன் – for me to ask, நின்றீத்தை – wait here, stand here (நில் என்னும் முன்னிலை ஏவல் திரிசொல்),

அன்னையோ – aiyo (இகழ்ச்சிக் குறிப்பு), காண் தகை இல்லா – not good to look at, குறள் – small, a dwarf, நாழிப் போழ்தினான் – born in an inauspicious time, ஆண்டலைக்கு ஈன்ற பறழ் மகனே – one born to a man-faced owl, நீ எம்மை வேண்டுவல் என்று விலக்கினை – you stopped me desiring me (எம்மை – தன்மைப் பன்மை, first person plural), நின் போல்வார் தீண்டப் பெறுபவோ மற்று – should the ones like you touch me,

மாண்ட எறித்த படை போல் – like a blade attached deftly to a plow, முடங்கி – curved, மடங்கி – bent, folded, crooked, நெறித்துவிட்டன்ன – like twisted, like bent, நிறை ஏரால் – due to great beauty, என்னைப் பொறுக்கல்லா நோய் செய்தாய் – you gave me affliction that is unable to bear, பொறீஇ – tolerating (அளபெடை), நிறுக்கல்லேன் – I cannot stop it, நீ நல்கின் உண்டு என் உயிர் – my life will stay only if you are gracious to me,

குறிப்புக் காண் – look at this intent, வல்லுப்பலகை எடுத்து நிறுத்தன்ன – like a gambling board placed vertically, கல்லாக் குறள – O crude midget, கடும் பகல் வந்து – comes at this scorching noon hour, எம்மை இல்லத்து வா என – asks me to come to his house (எம்மை – தன்மைப் பன்மை, first person plural), மெய் கொளீஇ – holding me (கொளீஇ – அளபெடை), எல்லா – hey you, நின் பெண்டிர் உளர் மன்னோ – are there women in your home, கூறு – tell me,

நல்லாய் கேள் – listen to me O pretty/good woman, உக்கத்து மேலும் –  above your waist, நடு உயர்ந்து – the center is high, வாள் வாய கொக்கு உரித்தன்ன – like a stork with a sword-like beak that is skinned, கொடு – curved, மடாய் – O one with a fold, நின்னை யான் புக்கு அகலம் புல்லின் – if I enter you in the front embracing your chest, நெஞ்சு ஊன்றும் –  it will poke my chest, புறம் புல்லின் அக்குளுத்து – if I enter from the back it will tickle me, புல்லலும் ஆற்றேன் – I am unable to embrace you, அருளீமோ- shower your graces, பக்கத்துப் புல்லச் சிறிது – let me embrace you sideways,

போ – go away, சீத்தை – you lowly one, மக்கள் முரியே – you dwarf of a man, you who is half a man, நீ மாறு இனி – change your attitude now, தொக்க மரக் கோட்டம் சேர்ந்து எழுந்த பூங்கொடி போல – like a flowering vine that reaches and climbs on thick branches of a mature tree, நிரப்பம் இல் யாக்கை தழீஇயினர் – those who embraced my imperfect body, எம்மைப் புரப்பேம் என்பாரும் – and those who said they will provide for me (எம்மை – தன்மைப் பன்மை, first person plural), பலரால் – by many, பரத்தை – you lecherous one, என் பக்கத்து – on my side, புல்லீயாய் என்னுமால் – ‘embrace me’ he says (என்னுமால், ஆல் அசை நிலை, an expletive), தொக்க – thick, உழுந்தினும் – than ulunthu paniyāram, துவ்வா – not grown, stunted, குறு வட்டா – you who are like a little ball, நின்னின் இழிந்ததோ – is it lower than you, கூனின் பிறப்பு  – me being a hunchback,

கழிந்து ஆங்கே யாம் வீழ்தும் – even when we fell for her, என்று தன் பின் செலவும் – and went after her, உற்றீயா – who did not yield (பெயரெச்சமறைத் திரிசொல்), கூனி குழையும் குழைவு காண் – look at the way the hunchback softens,

யாமை எடுத்து நிறுத்தற்றால் – like a tortoise stood up,தோள் இரண்டும் வீசி – waving both arms, யாம் வேண்டேம் என்று விலக்கவும் – even when I refused, எம் வீழும் – desiring me, காமர் நடக்கும் நடை காண் – look at him walking like Kāman, கவர் கணை – forked arrows, சாமனார் தம் முன் செலவு காண் – see the elder brother of Sāman,

ஓஒ – இகழ்ச்சிக்குறிப்பு, காண் – okay look,  நம்முள் நகுதல் – we should not laugh at us, தொடீஇயர் நம்முள் நாம் உசாவுவம் – let us ponder between us about where we touch (தொடீஇயர் – அளபெடை), கோன் அடி தொட்டேன் – I swear by our king’s feet,

ஆங்கு – அசை நிலை, an expletive, ஆக – so, சாயல் இன் மார்ப – O one with a sweet chest, அடங்கினேன் – I will submit, ஏஎ – hey, பேயும் பேயும் துள்ளல் உறும் எனக் கோயில் உள் கண்டார் நகாமை வேண்டுவல் – I don’t want the people in the palace to laugh at us that we are like a ghoul leaping on another ghoul (உறும் – ஒக்கும்), தண்டாத் தகடு உருவ – O one with a golden image that is not reduced, வேறு ஆகக் காவின் கீழ் – in the grove that is below, போதர் அகடு – go inside (போதர் – போதருக, விகாரம்), ஆரப் புல்லி முயங்குவேம் – let us embrace and unite until we sate, துகள் தபு காட்சி அவையத்தார் – faultless esteemed ministers, wise courtiers, ஓலை முகடு காப்பு யாத்து விட்டாங்கு – like tying and placing seals on top of tied letters (etched on palm frond)

கலித்தொகை 95
மருதன் இளநாகனார், மருதம், தலைவியும் தலைவனும் சொன்னது

தலைவி:

நில் ஆங்கு! நில் ஆங்கு! இவர்தரல்! எல்லா! நீ
நாறு இருங்கூந்தலார் இல் செல்வாய், இவ்வழி
ஆறு மயங்கினை போறி! நீ வந்தாங்கே
மாறு இனி, நின் ஆங்கே, நின் சே அடி சிவப்ப.

தலைவன்:

செறிந்து ஒளிர் வெண்பல்லாய்! யாம் வேறு இயைந்த 5
குறும்பூழ் போர் கண்டேம்; அனைத்தல்லது யாதும்
அறிந்ததோ இல்லை நீ வேறு ஓர்ப்பது.

தலைவி:

குறும்பூழ்ப் போர் கண்டமை கேட்டேன்; நீ என்றும்
புதுவன ஈகை வளம் பாடிக் காலின்
பிரியாக் கவி கை புலையன் தன் யாழின், 10
இகுத்த செவி சாய்த்து, இனி இனிப் பட்டன
ஈகைப் போர் கண்டாயும் போறி; மெய் எண்ணின்,
தபுத்த புலர்வு இல புண்;

ஊரவர் கவ்வை உளைந்தீயாய் அல்கல் நின்
தாரின்வாய்க் கொண்டு முயங்கிப் பிடி மாண்டு, 15
போர் வாய்ப்பக் காணினும் போகாது கொண்டு, ஆடும்
பார்வைப் போர் கண்டாயும் போறி நின் தோள் மேலாம்
ஈரமாய் விட்டன புண்;

கொடிற்றுப் புண் செய்யாது, மெய்ம் முழுதும் கையின்
துடைத்து நீ வேண்டினும் வெல்லாது கொண்டு, ஆடும் 20
ஒட்டிய போர் கண்டாயும் போறி; முகம் தானே
கொட்டிக் கொடுக்கும் குறிப்பு.

தலைவன்:

ஆயின் ஆய் இழாய்! அன்னவை யான் ஆங்கு அறியாமை
போற்றிய நின் மெய் தொடுகு.

தலைவி:

அன்னையோ! மெய்யை பொய் என்று மயங்கிய கை ஒன்று 25
அறிகல்லாய் போறி காண் நீ!

தலைவன்:

நல்லாய்! பொய் எல்லாம் ஏற்றி தவறு தலைப்பெய்து,
கையொடு கண்டாய் பிழைத்தேன்; அருள் இனி.

தலைவி:

அருளுகம் யாம், யாரேம் எல்லா! தெருள
அளித்து நீ பண்ணிய பூழ் எல்லாம், இன்னும் 30
விளித்து நின் பாணனோடு ஆடி அளித்தி,
விடலை நீ நீத்தலின், நோய் பெரிது ஏய்க்கும்,
நடலைப்பட்டு எல்லாம் நின் பூழ்.

Kalithokai 95
Maruthan Ilanākanār, Marutham, What the heroine and hero said

Heroine:

Stand right there! Stand right there!
Do not come here near me! Hey you! You must
have come here confused on your way to the
houses of those with fragrant, dark tresses. Go
back the way you came, your fine feet reddening!

Hero:

One with perfect bright white teeth! I saw newly
arrived quails fight on my way. I did not know
anything else. You are thinking about something else.

Heroine:

I have heard about the quail fights that you have seen.
It appears that you saw the fights between your women
who were trapped by the yāzh music of your bard
with bent hands, who praises constantly your new
generosity, who does not leave your feet. However, one
can count the raw wounds inflicted on your body.

Not caring about the gossip in town, it appears that you
saw the fight between the ones who cuddled up to your
garlanded chest, holding on to it tightly, even as you
witnessed the battle of quails that are used as decoys.
There are raw wounds on your arms.

You might have seen the fight of women who caressed
your body with their hands, leaving your cheeks
unbruised, who kept fighting even though you wished
they had won. Your face reveals what happened.

Hero:

And so, one with pretty jewels! I would touch you and
swear that I am not aware of any of those!

Heroine:

Aiyo!

Hero:

It seems that you confuse truths with lies, not knowing
what has happened. Please see that.

O virtuous woman! You caught me on seeing my lies and
wrongdoings. I made a mistake! Please shower your graces
on me.

Heroine:

Hey you! Who am I to shower graces! The quails that
have enjoyed your generosity will suffer greatly and feel
deceived, if you leave them. Young man! Ask your bard
to bring them so that you can play with them! Shower
your graces on them!

Notes:  பார்வை (decoy):  பார்வை வேட்டுவன் நற்றிணை 212-1, 312-4, பார்வைப் போர் – கலித்தொகை 95-17, பார்வை யாத்த – பெரும்பாணாற்றுப்படை 95, பார்வை மடப் பிணை 20-4. போறி – அ. தட்சிணாமூர்த்தி உரை – ஐங்குறுநூறு 58 (இவள் அணங்கு உற்றனை போறி) முன்னிலை வினைமுற்று, பொ. வே. சோமசுந்தரனார் உரை – அகநானூறு 163 (எனக்கே வந்தனை போறி) – இது ஒப்புமை உணர்த்தாமையின் ஒப்பில் போலி.

Meanings:  நில் ஆங்கு – stand there, நில் ஆங்கு – stand there, இவர்தரல் – do not come here, எல்லா – hey you, நீ நாறு இருங்கூந்தலார் இல் செல்வாய் – you are on the way to your women with fragrant dark/thick hair, இவ்வழி ஆறு மயங்கினை போறி – it appears that you were confused and came here (போறி – முன்னிலை வினைமுற்று), நீ வந்தாங்கே மாறு இனி – go back the way you came, நின் ஆங்கே நின் சே அடி சிவப்ப – as your fine feet become red,

செறிந்து – set together, contained, ஒளிர் வெண்பல்லாய் – O one with  bright white teeth, யாம் வேறு இயைந்த குறும்பூழ் போர் கண்டேம் – I saw newly arrived quails fight with each other (குறும்பூழ் – காடை, இயைந்த – பொருந்தின, கண்டேம் – தன்மைப் பன்மை, first person plural), அனைத்தல்லது யாதும் அறிந்ததோ இல்லை – I did not know anything else (ஓகாரம் ஐயம்), நீ வேறு ஓர்ப்பது – you are thinking that it is something else,

குறும்பூழ்ப் போர் கண்டமை கேட்டேன் – I heard about the quail fight that you saw, நீ என்றும் புதுவன ஈகை வளம் பாடி – you are always singing new songs about your generosity, காலின் பிரியா – not leaving your feet, கவி கை புலையன் தன் யாழின் இகுத்த செவி சாய்த்து –  lowering the ears and listening to the yāzh music of your bard with bent hands – the word ‘pulaiyan’ has been used for bards, drummers and a man who performs funerary rituals, and the word ‘pulaithi’ has been used for  washerwomen, a woman possessed by Murukan, and a basket maker, இனி இனிப் பட்டன ஈகைப் போர் கண்டாயும் போறி  –  it appears that you saw the fight between those newly caught quails (ஈகை- குறும்பூழ், காடை, quail), மெய் எண்ணின் – if counted truly, தபுத்த – ruined, புலர்வு இல புண் – sores that are not dry (இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்),

ஊரவர் கவ்வை உளைந்தீயாய் – you don’t feel sad and change listening to the gossip in town, அல்கல் – staying, நின் தாரின்வாய்க் கொண்டு – holding on to your garland, முயங்கி – embracing, பிடி – holding, மாண்டு – with esteem, போர் வாய்ப்பக் காணினும் – even after seeing the fight, போகாது – not leaving, கொண்டு – holding on, ஆடும் பார்வைப் போர் கண்டாயும் போறி – it appears that you saw the fight of your other women who you use as decoys, it appears that you saw the fight of quails that are used as decoys (போறி – முன்னிலை வினைமுற்று), நின் தோள் மேல் ஆம் ஈரமாய் விட்டன புண் – there are wet sores on your arms (ஆம் – இடைக்குறை, ஆகும் என்பது ஆம் என நின்றது),

கொடிற்றுப் புண் செய்யாது – not causing sores on your cheeks, மெய்ம் முழுதும் – all over your body, கையின் துடைத்து – rubbed with their hands, caressed with their hands, நீ வேண்டினும் வெல்லாது – not winning even though you wished, கொண்டு ஆடும் ஒட்டிய போர் கண்டாயும் போறி – it appears that you saw their close fights which went on (போறி – முன்னிலை வினைமுற்று), முகம் தானே கொட்டிக் கொடுக்கும் குறிப்பு  – your face indicates what happened, your face gives away what happened,

ஆயின்  – so, ஆய் இழாய் – O one with beautiful jewels, அன்னவை – those things, யான் ஆங்கு அறியாமை போற்றிய நின் மெய் தொடுகு – I touch your body and swear that I am not aware,

அன்னையோ – Aiyo (expression of disrespect), மெய்யை பொய் என்று மயங்கிய கை ஒன்று அறிகல்லாய் போறி – it appears that you confused truths as lies and don’t understand it, காண் நீ – see it,

நல்லாய் – O virtuous woman, O pretty woman, பொய் எல்லாம் ஏற்றி தவறு தலைப்பெய்து கையொடு கண்டாய் – you caught me hearing all my lies and wrongdoings, you placed my lies on my head and caught me, பிழைத்தேன் – I made a mistake, அருள் இனி – please shower your graces,

அருளுகம் யாம் யாரேம் – who am I to shower graces (தன்மைப் பன்மை, first person plural), எல்லா – hey you, தெருள அளித்து நீ பண்ணிய பூழ் எல்லாம் – the quails that you enjoyed and were clearly generous with, இன்னும் விளித்து நின் பாணனோடு ஆடி அளித்தி – go and play with them asking your bard to bring them and shower your graces on them, விடலை – O young man, நீ நீத்தலின் நோய் பெரிது ஏய்க்கும் – they will suffer greatly if you leave, நடலைப்பட்டு எல்லாம் நின் பூழ் – your quails who will feel deceived (நடலைப்பட்டு – வஞ்சனைப்பட்டு)

கலித்தொகை 96
மருதன் இளநாகனார், மருதம், தலைவியும் தலைவனும் சொன்னது

தலைவி:

ஏந்து எழில் மார்ப! எதிர் அல்ல நின் வாய் சொல்;
பாய்ந்து ஆய்ந்த தானைப் பரிந்து ஆனா மைந்தினை;
சாந்து அழி வேரை; சுவல் தாழ்ந்த கண்ணியை;
யாங்குச் சென்று ஈங்கு வந்தீத்தந்தாய்? கேள் இனி!

தலைவன்:

ஏந்தி எதிர் இதழ் நீலம் பிணைந்தன்ன கண்ணாய்! 5
குதிரை வழங்கி வருவல்.

தலைவி:

அறிந்தேன் குதிரை தான்;
பால் பிரியா ஐங்கூந்தல் பல் மயிர்க் கொய் சுவல்,
மேல் விரித்து யாத்த சிகழிகைச் செவ் உளை,
நீல மணிக் கடிகை வல்லிகை யாப்பின் கீழ் 10
ஞால் இயல் மெல் காதின் புல்லிகைச் சாமரை,
மத்திகைக் கண்ணுறை ஆகக் கவின் பெற்ற
உத்தி ஒரு காழ் நூல் உத்தரியத் திண் பிடி,
நேர் மணி நேர் முக்காழ்ப் பல் பல கண்டிகைத்,
தார் மணி பூண்ட தமனிய மேகலை 15
நூபுரப் புட்டில், அடியொடு அமைத்து யாத்த
வார் பொலங்கிண்கிணி ஆர்ப்ப இயற்றி, நீ
காதலித்து ஊர்ந்த நின் காமக் குதிரையை,
ஆய் சுதை மாடத்து அணி நிலா முற்றத்துள்
ஆதி கொளீஇய அசையினை ஆகுவை, 20
வாதுவன், வாழிய நீ!

சேகா! கதிர் விரி வைகலில் கை வாரூஉக் கொண்ட
மதுரைப் பெரு முற்றம் போல, நின் மெய்க் கண்
குதிரையோ வீறியது,

கூர் உகிர் மாண்ட குளம்பினது; நன்றே 25
கோரமே, வாழி குதிரை!

வெதிர் உழக்கு நாழியால் சேதிகைக் குத்திக்
குதிரை உடல் அணி போல, நின் மெய்க் கண்
குதிரையோ கவ்வியது;

சீத்தை பயம் இன்றி ஈங்குக் கடித்தது; நன்றே 30
வியமமே வாழி குதிரை!

மிக நன்று இனி அறிந்தேன்; இன்று நீ ஊர்ந்த குதிரை
பெரு மணம் பண்ணி அறத்தினில் கொண்ட
பருமக் குதிரையோ அன்று; பெரும! நின்
ஏதில் பெரும் பாணன் தூது ஆட ஆங்கே ஓர் 35
வாதத்தான் வந்த வளிக் குதிரை; ஆதி
உரு அழிக்கும் அக் குதிரை ஊரல் நீ ஊரின் பரத்தை
பரியாக, வாதுவனாய், என்றும் மற்று அச்சார்த்
திரி குதிரை ஏறிய செல்.

Kalithokai 96
Maruthan Ilanākanār, Marutham, What the heroine and hero said

Heroine:

O one with a lifted, handsome chest! You are of
great strength! Your words do not match what I see
in your clothes that are crumpled and torn, the sandal
paste on your strong chest smudged by sweat, and
the faded garland on your shoulders. Where did you
go before you came here? Tell me!

Hero:

Listen now! One with eyes like blue waterlilies strung
together! I’m returning riding a horse.

Heroine:

I understand that horse! It has tresses not separated
in five modes, thick trimmed mane, thick hair knot
spread and tied over the nape, red tuft, sapphire gem
necklace, a tied halter, tassels hanging on delicate ears,
ornamental whisk, whip, eye covers, the ornament uthi,
clothing on top woven with thick threads, strong handle,
many triple strands of similar gems, neck ornament, gold
waist belt with an anklet-like strand, and feet with long
anklets that jingle as you rode on it with straight trotting
in the courtyard of a plastered mansion under the rays
of a pretty moon. May you live long, you horse rider!

O attendant! The bruises on your person looking like
the marks of brooms used to sweep the large streets of
Madurai at dawn when the sun’s rays spread, are they
caused by your horse?

It must be terrible, the nails on its hoof. May that horse
live long!

The bite marks on your body that appear like the color
decorations done on horses using bamboo measuring
cups, were they caused by that horse?

Unworthy one! The horse that bit without fear is worthy
of praise. May that horse live long!

Very good! Now I know! Lord, the horse you rode today
is not one that came through a righteous wedding wearing
a ottiyānam. It is a horse that came trusting your words,
brought by your unsuitable bard who you command. Do not
ride that horse that will cause your body to lose its beauty.
If you want to ride on that horse, please leave now!

Notes:  வியமமே (31) – நச்சினார்க்கினியர் உரை – வியவென்னும் உரிச்சொல் முதனிலையாகப் பிறந்து வியம் எனப் பெயர்பட நின்றது.  அம் அசை.  உரிச்சொல் முதனிலையாக எல்லா நிலைகளும் பிறக்குமாறுணர்க.  இனி விஷம் என்னும் வடமொழி என்பாரும் உளர்.

Meanings:  ஏந்து எழில் மார்ப – O one with a large/lifted/eminent handsome chest, எதிர் அல்ல நின் வாய் சொல் – your words do not match, பாய்ந்து ஆய்ந்த தானைப் பரிந்து – crumpled clothes with folds are torn, ஆனா மைந்தினை – you are of endless strength, சாந்து அழி வேரை – you are one with sandal paste ruined by your sweat, சுவல் – shoulders, nape, தாழ்ந்த – faded, கண்ணியை – you are one with a flower garland, யாங்குச் சென்று ஈங்கு வந்தீத்தந்தாய்– where did you go and come here (வந்தீத்தந்தாய் – வினைத் திரிசொல்),

கேள் இனி – listen now, ஏந்தி – lifted, held, எதிர் இதழ் நீலம் பிணைந்தன்ன கண்ணாய் – one with eyes like two blue waterlilies strung together, குதிரை வழங்கி வருவல் – I’m coming from riding a horse,

அறிந்தேன் குதிரை – I understand that horse, தான் பால் பிரியா – sections not separated, ஐங்கூந்தல் – five modes of hairstyle, பல் மயிர்க் கொய் – thick hair trimmed, சுவல் மேல் – over the nape, விரித்து யாத்த – spread and tied, சிகழிகை – hair knot, hair style, செவ் உளை – red mane, நீல மணிக் கடிகை – sapphire gem necklace, வல்லிகை யாப்பின் – with tied halter, கீழ் ஞால் – hanging down, இயல் மெல் காதின் புல்லிகை – tassels for the  earrings worn on delicate ears (புல்லிகை – Tassels for horse’s ears, கன்னசாமரை), சாமரை – ornamental whisk, மத்திகை – horse whip, கண்ணுறை – eye covers, ஆக – with, கவின் பெற்ற உத்தி – a particular kind of beautiful jewel worn by women, ஒரு காழ் நூல் உத்தரிய – with clothing on top woven with thick threads, திண் பிடி – strong handle, நேர் மணி – pretty gems, gems that are alike, நேர் முக்காழ் – pretty/delicate/perfect three-strands, three strands that are alike, பல் பல – many many, கண்டிகைத் தார் – horse’s neck strand, மணி பூண்ட தமனிய மேகலை நூபுரப் புட்டில் – with anklet-like strand on the gold waist ornament, அடியொடு அமைத்து யாத்த – tied to the feet (நச்சினார்க்கினியர் உரை – ‘அடியொடு அமைத்து யாத்த ‘ என்பதனை ‘நூபுரப் புட்டில்’ வார் பொலங்கிண்கிணி இரண்டிற்கும் கொள்க), வார் – long, பொலங்கிண்கிணி ஆர்ப்ப – as gold anklets jingle,  இயற்றி – riding, நீ காதலித்து – who you fell in love, ஊர்ந்த நின் காமக் குதிரையை – your love horse that you are riding on, ஆய் சுதை மாடத்து – of the pretty mansion that is plastered, அணி நிலா முற்றத்துள்  – in the courtyard with beautiful moon’s light, ஆதி கொளீஇய அசையினை ஆகுவை – you had it trot straight (கொளீஇய – அளபெடை), வாதுவன் – O horse rider, வாழிய நீ – may you live long,

சேகா – O attendant, கதிர் விரி வைகலில் – at dawn when rays spread, கை வாரூஉக் கொண்ட – garbage when swept by hand brooms (வாரூஉ – அளபெடை), மதுரைப் பெரு முற்றம் போல – like in the large courtyards/open spaces of Madurai, நின் மெய்க் கண் – on your body, குதிரையோ வீறியது – did the horse scratch you,

கூர் உகிர் மாண்ட குளம்பினது – with its hoof with sharp toe nails, நன்றே கோரமே – that is horrible, வாழி குதிரை – may the horse live long,

வெதிர் உழக்கு நாழியால் சேதிகைக் குத்தி – the color patterns made by bamboo measures (சேதிகை – குதிரையு உடலில் குத்தும் வண்ணத்தொழில்), குதிரை உடல் அணி போல – like the body decorations on horses, நின் மெய்க் கண் – causing on your body, குதிரையோ கவ்வியது – did the horse bite you,

சீத்தை – O unworthy one, பயம் இன்றி ஈங்குக் கடித்தது – biting without fear, நன்றே வியமமே – it is awesome, it is very poisonous (நன்று – பெரிதும், விய – வியப்பு, அம் – அசைநிலை, ஏ – அசைநிலை), வாழி குதிரை – may the horse live long,

மிக நன்று – very good, இனி அறிந்தேன் – now I know, இன்று நீ ஊர்ந்த குதிரை – the horse that you rode on today, பெரு மணம் பண்ணி அறத்தினில் கொண்ட பருமக் குதிரையோ அன்று – it is not a horse that came with a righteous wedding wearing a ottiyānam, பெரும  – my lord, நின் ஏதில் பெரும் பாணன் தூது ஆட – as your unsuitable bard who you command as a messenger goes (தூது ஆட – தூதாகச் செல்ல), ஆங்கே ஓர் வாதத்தான் வந்த வளிக் குதிரை – it is a horse there that came like wind believing your words, ஆதி உரு அழிக்கும் அக் குதிரை ஊரல் – do not ride on that horse that ruins your beautiful body, நீ ஊரின் – if you ride, பரத்தை பரியாக – your concubine as a horse, வாதுவனாய் – as a horse rider, என்றும் மற்று அச்சார்த் திரி குதிரை ஏறிய செல் – in that case climb on that horse and leave and roam around

கலித்தொகை 97
மருதன் இளநாகனார், மருதம், தலைவியும் தலைவனும் சொன்னது

தலைவி:

அன்னை கடுஞ் சொல் அறியாதாய் போல, நீ
என்னைப் புலப்பது ஒறுக்குவென் மன் யான்,
சிறுகாலை இற்கடை வந்து, குறி செய்த
அவ்வழி என்றும் யான் காணேன் திரிதர,
எவ்வழிப்பட்டாய் சமன் ஆக இவ் எள்ளல். 5
தலைவன்:
முத்து ஏர் முறுவலாய்! நம் வலைப் பட்டது ஓர்
புத்தி யானை வந்தது; காண்பான் யான் தங்கினேன்.

தலைவி:

ஒக்கும்;
அவ்வியானை வனப்பு உடைத்து ஆகலும் கேட்டேன்;
அவ்வியானை தான் சுண்ண நீறு ஆடி, நறு நறா நீர் உண்டு, 10
ஒண்ணுதல் யாத்த திலக அவிர் ஓடைத்,
தொய்யில் பொறித்த வன முலை வான் கோட்டுத்,
தொய்யகம் தோட்டிக் குழை தாழ் வடி மணி,
உத்தி பொறித்த புனை பூண் பருமத்து
முத்து ஏய்க்கும் வெண்பல் நகை திறந்து, 15
நல் நகர் வாயில் கதவ வெளில் சார்ந்து,
தன் நலம் காட்டித் தகையினால் கால் தட்டி வீழ்க்கும்,
தொடர் தொடர் ஆக வலந்து படர் செய்யும்
மென்தோள் தடக் கையின் வாங்கித் தன் கண்டார்
நலம் கவளம் கொள்ளும் நகை முக வேழத்தை 20
இன்று கண்டாய் போல் எவன் எம்மைப் பொய்ப்பது நீ?

எல்லா! கெழீஇத் தொடி செறித்த தோள் இணை தத்திக்
தழீஇ கொண்டு ஊர்ந்தாயும் நீ;

குழீஇ அவாவினால் தேம்புவார் இல் கடை ஆறா
உவா அணி ஊர்ந்தாயும் நீ; 25

மிகாஅது சீர்ப்பட உண்ட சிறு களி ஏர் உண்கண்
நீர்க்கு விட்டு ஊர்ந்தாயும் நீ;

சார்ச் சார் நெறி தாழ் இருங்கூந்தல் நின் பெண்டிர் எல்லாம்
சிறு பாகர் ஆக சிரற்றாது, மெல்ல,
விடாஅது நீ எம் இல் வந்தாய் அவ் யானை 30
கடாஅம் படும் இடத்து ஓம்பு.

Kalithokai 97
Maruthan Ilanākanār, Marutham, What the heroine and the hero said

Heroine:

Your woman came to our door at dawn and
said, “He has not showed up at the place of tryst
he indicated. I have roamed around and not found
him.” You pretend like you don’t know her harsh
words and disrespect me. I chastise myself for that.

Hero:

One of a pretty, pearly smile! I stayed to see a new
elephant that had been caught in our net.

Heroine:

I heard that the elephant is beautiful. It has fragrant
sunnam powder smeared all over, drinks fragrant
liquor, has a gleaming ornament on its forehead like a
pottu, has beautiful breasts with thoyyil paintings for
white tusks, thoyyakam head ornament as its goad,
hanging earrings for jingling bells, a cushion that is
placed on the neck, and smiles with white teeth like
pearls. Tied to a post at the door of a house, it blocks
with its feet and brings down with splendor those who
are taken by its beauty. With its delicate shoulders
and hand, it seizes men for balls of food, like the
elephant that you saw today. Why are you lying to me?

Hey you! Did you leap and ride that elephant embracing
its hands with perfect bangles?

You paraded endlessly riding that elephant in front
of the doors of those who united with you with
passion, who are distressed since you abandoned them.

You rode, causing those you enjoyed well and gave
some happiness to cry, their kohl-lined, pretty eyes
shedding tears.

You have come to our house so that your concubines
with curly, dark hair will not be enraged that you have
a new woman. You need to protect your elephant that
might rut. You might not be able to handle it as a new
keeper.

Notes:  முத்தைப் போன்ற பற்கள்: அகநானூறு 27 – முத்தின் அன்ன நகைப் பொலிந்து இலங்கும் எயிறு, ஐங்குறுநூறு 185 – இலங்கு முத்து உறைக்கும் எயிறு, ஐங்குறுநூறு 380 – முத்து ஏர் வெண்பல், கலித்தொகை 64 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 93 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 97 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 97 – முத்து ஏய்க்கும் வெண்பல், கலித்தொகை 131 – முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய், பரிபாடல் 8 – எழில் முத்து ஏய்க்கும் வெண்பல், பரிபாடல் திரட்டு 2 – முத்த முறுவல், பொருநராற்றுப்படை 27 – துவர்வாய்ப் பல உறு முத்தின் பழி தீர் வெண்பல், சிறுபாணாற்றுப்படை 57 – நகாஅர் அன்ன நளி நீர் முத்தம், நெடுநல்வாடை 37 – முத்து உறழ் முறுவல்.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

Meanings:  அன்னை – in that manner, கடுஞ் சொல் அறியாதாய் போல நீ – like you don’t know the harsh words, என்னைப் புலப்பது – you disrespecting me, you quarreling with me, ஒறுக்குவென் மன் யான் – I chastise myself, சிறுகாலை – early morning, dawn, இற்கடை வந்து – came to our house gate, குறி செய்த அவ்வழி என்றும் யான் காணேன் – I cannot see him at the place he indicated for our tryst, திரிதர – to roam around, எவ்வழிப்பட்டாய் – where did you go, சமன் ஆக – in a fair manner, இவ் எள்ளல் – this is disrespecting me,

முத்து ஏர் முறுவலாய் – O one with a pearly beautiful smile, நம் வலைப் பட்டது – caught in our net, ஓர் புத்தி யானை வந்தது காண்பான் யான் தங்கினேன் – I stayed to see that new elephant that came,

ஒக்கும் – that is fitting, அவ்வியானை வனப்பு உடைத்து ஆகலும் கேட்டேன் – I heard that the elephant is beautiful, அவ்வியானை தான் சுண்ண நீறு ஆடி – that elephant has fragrant powder smeared on it, நறு நறா நீர் உண்டு – drinks fragrant liquor, ஒண்ணுதல் யாத்த திலக அவிர் ஓடை – bright ornament tied on its gleaming forehead like a pottu, தொய்யில் பொறித்த வன முலை – beautiful breasts with thoyyil drawings, வான் கோட்டு – as white tusks, தொய்யகம் –  head ornament, தோட்டி – goad, குழை – earrings, தாழ் வடி மணி – hanging beautiful bells, like hanging cast bells, like hanging ringing bells, உத்தி பொறித்த புனை பூண் பருமத்து – with a neck cushion with spots, with a neck cushion with a pattern of Thirumakal, with a gold belt on the waist – ottiyānam, முத்து ஏய்க்கும் வெண்பல் – white teeth like pearls, நகை – smile, திறந்து – opened, நல் நகர் – fine house, வாயில் – at the entrance, கதவ வெளில் சார்ந்து – tied to the post that is at the door, தன் நலம் காட்டி – showing its beauty, தகையினால் கால் தட்டி வீழ்க்கும் – blocks with its feet and brings them down with splendor, தொடர் தொடர் ஆக – continuously, again and again, வலந்து – surrounding, படர் செய்யும் – causes sorrow, மென்தோள் – delicate arms, தடக் கையின் வாங்கி – takes in its large hands, தன் கண்டார் நலம் – the beauty of those who saw, கவளம் கொள்ளும் – eats as food, நகை முக வேழத்தை இன்று கண்டாய் போல் – like you saw the elephant with a bright face today, எவன் எம்மைப் பொய்ப்பது நீ – why are you lying to me (எம்மை – தன்மைப் பன்மை, first person plural),

எல்லா – hey you, கெழீஇத் தொடி செறித்த தோள் இணை தத்திக் தழீஇ கொண்டு – leaping and embracing her arms with fitting bangles (கெழீஇ – அளபெடை, தழீஇ – அளபெடை), ஊர்ந்தாயும் நீ –  you rode,

குழீஇ அவாவினால் – those who united with you with passion (குழீஇ – அளபெடை), தேம்புவார் –  those who are distressed, இல் கடை – house doors, ஆறா – endless, உவா அணி ஊர்ந்தாயும் நீ – you paraded on that elephant as you rode,

மிகாஅது – not for long (இசை நிறை அளபெடை), சீர்ப்பட உண்ட – enjoyed well, சிறு களி – little happiness, ஏர் உண்கண் நீர்க்கு விட்டு – causing their pretty kohl-lined eyes to cry, ஊர்ந்தாயும் நீ – you rode,

சார்ச் சார் – in various places, நெறி தாழ் இருங்கூந்தல் – curly low hanging dark hair, perfect low hanging hair, நின் பெண்டிர் எல்லாம் – all your women, சிறு பாகர் ஆக – as a new elephant keeper, as a little elephant keeper, சிரற்றாது – not being enraged, மெல்ல – slowly, விடாஅது – not allowing (அளபெடை), நீ எம் இல் வந்தாய் – you have come to our home, அவ் யானை கடாஅம் படும் – that elephant will rut in rage (கடாஅம் – அளபெடை), இடத்து ஓம்பு  – take care at that time

கலித்தொகை 98
மருதன் இளநாகனார், மருதம், தலைவியும் தலைவனும் சொன்னது

தலைவி:

யாரை நீ எம் இல் புகுதர்வாய்? ஓரும்
புதுவ மலர் தேரும் வண்டே போல், யாழ
வதுவை விழவு அணி வைகலும் காட்டினையாய்,
மாட்டு மாட்டு ஓடி, மகளிர் தரத் தரப்,
பூட்டு மான் திண் தேர் புடைத்த மறுகு எல்லாம் 5
பாட்டு ஆதல் சான்ற நின் மாயப் பரத்தைமை,
காட்டிய வந்தமை கைப்படுத்தேன், பண்டு எலாம்
கேட்டும் அறிவேன் மன் யான்.

தலைவன்:

தெரி கோதை அம் நல்லாய்! தேறீயல் வேண்டும்;
பொரு கரை வாய் சூழ்ந்த பூ மலி வையை 10
வருபுனல் ஆடத் தவிர்ந்தேன்; பெரிது என்னைச்
செய்யா மொழிவது எவன்?

தலைவி:

ஓஒ! புனல் ஆடினாய் எனவும் கேட்டேன்; புனல் ஆங்கே
நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக,
மாண் எழில் உண்கண் பிறழும் கயல் ஆகக், 15
கார் மலர் வேய்ந்த கமழ் பூம்பரப்பு ஆக ,
நாணுச் சிறை அழித்து நன்பகல் வந்த அவ்
யாணர் புதுப் புனல் ஆடினாய், முன் மாலைப்
பாணன் புணை ஆகப் புக்கு,

ஆனாது அளித்து அமர் காதலோடு அப் புனல் ஆடி, 20
வெளிப்படு கவ்வையை யான் அறிதல் அஞ்சிக்,
குளித்து ஒழுகினாய் எனவும் கேட்டேன்; குளித்து ஆங்கே
போர்த்த சினத்தான் புருவத் திரை இடா,
ஆர்க்கும் ஞெகிழத்தான் நன் நீர் நடை தட்பச்
சீர்த் தக வந்த புதுப் புனல் நின்னைக் கொண்டு, 25
ஈர்த்து உய்ப்பக் கண்டார் உளர்;

ஈர்த்தது உரை சால் சிறப்பின் நின் நீர் உள்ளம் வாங்கப்,
புரை தீர் புதுப் புனல் வெள்ளத்தின் இன்னும்
கரை கண்டதூஉம் இலை

தலைவன்:

நிரை தொடீஇ! பொய்யா வாள் தானைப் புனை கழல் கால் தென்னவன், 30
வையைப் புதுப் புனல் ஆடத் தவிர்ந்ததைத்
தெய்வத்தின் தேற்றித் தெளிப்பேன்; பெரிது என்னைச்
செய்யா மொழிவது எவன்?

தலைவி:

மெய்யதை மல்கு மலர் வேய்ந்த மாயப் புதுப் புனல்
பல் காலும் ஆடிய செல்வுழி, ஒல்கிக் 35
களைஞரும் இல்வழிக் கால் ஆழ்ந்து தேரோடு
இள மணலுள் படல் ஓம்பு, முளை நேர்
முறுவலார்க்கு ஓர் நகை செய்து.

Kalithokai 98
Maruthan Ilanākanār, Marutham, What the heroine and hero said

Heroine:

Who are you to come into my house? Like a
bee that flits from flower to flower to choose
new ones, you are showing off wearing wedding
garments every day. On the uproarious streets
where your sturdy chariot hitched to horses goes
to fetch women, your deceiving, lecherous behavior
is well known. I have caught you red-handed. I
now know what I heard in the past.

Hero:

Virtuous, pretty woman wearing a chosen garland!
You need to understand clearly. I stayed to play
in the flower-filled flood waters of Vaiyai which
flows attacking the banks. Why are you uttering
what I have not done?

Heroine:

O! I heard that you played there! The river you
played had long, wavy hair resembling long stretches
of fine, black sand, exquisite, pretty, kohl-lined eyes as
leaping carp, and rainy season flowers as groves with
fragrant blossoms. Ruining the banks of modesty
you played there early evening in the abundant flood
waters that came at high noon, entering into it with
your bard as your raft.

You frolicked in the flood water with endless love. I
am aware of the gossip that rose. I also heard that you
feared and hid it. As you hid the truth, the lovely river
sent in rage its waves as eyebrows, and roaring sounds
as jingling anklets, and there are those who saw
you swept away by the flood waters, ruining your fine
esteem.

You have still not seen the shores of that splendid,
faultless new flood that took away your lofty mind.

Hero:

One with stacked bangles! I swear by God that I stayed
to play in the Vaiyai of the Pāndiyan king adorned with
lovely warrior anklets, who owns an army with unfailing
swords. Why are you telling me much what I did not
do?

Heroine:

It is true. When you go to play often in the confusing
new floods where there is nobody to save, protect
yourself against sinking into the new sand as
your chariot wheels press down, making those with
sprout-like teeth to laugh!

Notes:  அறல் போல் கூந்தல்:  அகநானூறு 142 – அறல் அன்ன இரும் பல் கூந்தல், அகநானூறு 162 – அறல் என அவிர்வரும் கூந்தல், அகநானூறு 213 – அறலென நெறிந்த கூந்தல், அகநானூறு 265 – அறலின் நெறித்த கூந்தல், அகநானூறு 299 – அறல் மருள் கூந்தலின், குறுந்தொகை 116 – தேம் பாய் கூந்தல் வளங்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை நுண் மணல் அறல் வார்ந்தன்ன, குறுந்தொகை 286 – அறல் போல் கூந்தல், கலித்தொகை 71 – கதுப்பு அறல், கலித்தொகை 98 – நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக, பொருநராற்றுப்படை 25 – அறல் போல் கூந்தல்.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  இடா – இட்டு, செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  யாரை – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை (அகநானூறு 46 – ம் பாடலின் உரையில் கூறியது) ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது, சாரியையுமாம்.

Meanings:  யாரை நீ எம் இல் புகுதர்வாய் – who are you to come into my house (யாரை – ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது, சாரியையுமாம், புகுதர்வாய் – விகாரம்), ஓரும் – அசைநிலை, an expletive, புதுவ மலர் தேரும் வண்டே போல் – like a bee that searches for new flowers, யாழ – அசைநிலை, an expletive, வதுவை விழவு அணி வைகலும் காட்டினையாய் – you showed off with wedding decoration daily, மாட்டு மாட்டு ஓடி – run around all over the place, மகளிர் தரத் தர – to bring women again and again, பூட்டு மான் – hitched to horses, திண் தேர் – sturdy chariot, புடைத்த மறுகு எல்லாம் – on all the uproarious streets, பாட்டு ஆதல் சான்ற நின் மாயப் பரத்தைமை – your deceiving lecherous behavior that is famously talked about, காட்டிய வந்தமை – coming to show, கைப்படுத்தேன் – I understand, I have caught you red-handed, பண்டு எலாம் கேட்டும் அறிவேன் – I now know what I have heard in the past (எலாம் – எல்லாம் என்பதன் தொகுத்தல் விகாரம்), மன் – அசைநிலை, an expletive, யான் – me,

தெரி கோதை அம் நல்லாய் – O pretty virtuous woman wearing a chosen garland, தேறீயல் வேண்டும் – you need to know clearly (தேறீயல் – தொழிற்பெயர்த் திரிசொல்), பொரு கரை வாய் சூழ்ந்த பூ மலி வையை வருபுனல் ஆடத் தவிர்ந்தேன் –  I stayed to bathe/play in the Vaiyai floods with abundant flowers which flows hitting the shores, பெரிது என்னைச் செய்யா மொழிவது எவன் – why are you telling what I have not done,

ஓஒ – இகழ்ச்சிக்குறிப்பு, புனல் ஆடினாய் எனவும் கேட்டேன் – O I heard that you played in the waters,  புனல் ஆங்கே – in that river, நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக – long wavy hair like long stretches of fine black sand, மாண் எழில் உண்கண் பிறழும் கயல் ஆக – lovely pretty kohl-rimmed eyes as leaping carp fish, Cyprinus fimbriatus, கார் மலர் வேய்ந்த கமழ் பூம்பரப்பு ஆக – the spreading fragrance of worn rainy season flowers as a flower grove, நாணுச் சிறை அழித்து – ruining the banks of modesty, நன்பகல் வந்த அவ் யாணர் புதுப் புனல் ஆடினாய் – you played in the overflowing/abundant new floods that came at high noon, முன் மாலை – early evening time, பாணன் புணை ஆகப் புக்கு – with your bard as your raft,

ஆனாது அளித்து அமர் காதலோடு அப் புனல் ஆடி – you played in that flood water with endless great love, வெளிப்படு கவ்வையை யான் அறிதல் – I am aware of the gossip/scandal that has risen, அஞ்சிக் குளித்து ஒழுகினாய் எனவும் கேட்டேன் – I also heard that you feared it and hid it, குளித்து ஆங்கே – when hiding, when bathing, போர்த்த –  covered, சினத்தான் – with rage, புருவத் திரை – waves as eyebrows, இடா – இட்டு, placing (செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது), ஆர்க்கும் ஞெகிழத்தான் – roaring sounds of anklets that jingle without a break, நன் நீர் நடை தட்ப – your fine behavior blocked, your fine behavior ruined, சீர்த் தக வந்த – that came splendidly, புதுப் புனல் நின்னைக் கொண்டு ஈர்த்து உய்ப்பக் கண்டார் உளர் – there are those who saw you being seized and pulled away and pushed by the new flood waters,

ஈர்த்தது – pulled,  உரை சால் சிறப்பின் – famed greatly, நின் நீர் உள்ளம் வாங்க – took your fine mind, புரை தீர் – faultless, புதுப் புனல் வெள்ளத்தின் இன்னும் கரை கண்டதூஉம் இலை – you have not yet seen the shores of that new flood (கண்டதூஉம் – அளபெடை, இலை – இல்லை என்பதன் விகாரம்),

நிரை தொடீஇ – O one with rows of bangles (நிரை தொடீஇ – அன்மொழித்தொகை, விளி, an address, தொடீஇ – அளபெடை), பொய்யா வாள் தானை – army with unfailing swords, புனை கழல் கால் – feet with beautiful warrior anklets, தென்னவன் வையை – Vaiyai of Pāndiyan king, புதுப் புனல் ஆடத் தவிர்ந்ததை – stayed to play in the fresh waters, தெய்வத்தின் தேற்றித் தெளிப்பேன் – I swear clearly on god, பெரிது என்னைச் செய்யா மொழிவது எவன் – why are you saying greatly what I did not do,

மெய்யதை – it is true (ஐ சாரியை), மல்கு மலர் வேய்ந்த – wearing abundant flowers, மாயப் புதுப் புனல் – confusing new flood waters, பல் காலும் ஆடிய செல்வுழி ஒல்கிக் களைஞரும் இல்வழி – where there is nobody to save when going many times to play (செல்வுழி, உழி ஏழாம் வேற்றுமை உருபு, உழி = பொழுது), கால் ஆழ்ந்து தேரோடு – with the chariot wheels pressing down, இள மணலுள் படல் ஓம்பு – protect yourself from sinking into the soft sands, முளை நேர் முறுவலார்க்கு ஓர் நகை செய்து  – causing those with sprout-like teeth to laugh

கலித்தொகை 99
மருதன் இளநாகனார், மருதம், மன்னனிடம் அவன் மனைவியின் தோழி சொன்னது
நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் அவை எடுத்து,
அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும்
திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது,
குழவியைப் பார்த்து உறூஉம் தாய் போல், உலகத்து
மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும் 5
பிழையாது வருதல் நின் செம்மையின் தர, வாய்ந்த
இழை அணி கொடித் திண் தேர் இன மணி யானையாய்!

அறன் நிழல் எனக் கொண்டாய் ஆய் குடை; அக் குடை
புற நிழல் கீழ்ப்பட்டாளோ இவள்? இவள் காண்டிகா,
பிறை நுதல் பசப்பு ஊரப் பெரு விதுப்பு உற்றாளை! 10

பொய்யாமை நுவலும் நின் செங்கோல் அச் செங்கோலின்
செய் தொழில் கீழ்ப்பட்டாளோ இவள்? இவள் காண்டிகா,
காம நோய் கடைக்கூட்ட வாழும் நாள் முனிந்தாளை!

ஏமம் என்று இரங்கும் நின் எறி முரசம் அம் முரசின்
ஏமத்து இகந்தாளோ இவள? இவள் காண்டிகா, 15
வேய் நலம் இழந்த தோள் கவின் வாட இழப்பாளை!
ஆங்கு,
நெடிது சேண் இகந்தவை காணினும், தான் உற்ற
வடுக் காட்டக் கண் காணாதற்று ஆக, என் தோழி
தொடி கொட்ப நீத்த கொடுமையைக் 20
கடிது என உணராமை கடிந்ததோ நினக்கே?

Kalithokai 99
Maruthan Ilanākanār, Marutham, What the queen’s friend said to the king

O king with a sturdy chariot with flags
and many jingling bells, decorations and
elephants, who is righteous like the unfailing
rains that fall on earth nurturing its citizens
like a mother who feeds and cares for her child,
and like the two Brahmins who do not stray
from righteousness providing joy to both
groups,
the celestials who do not drink liquor and the
Asurars who drink it!

You are righteous in offering shade under
your beautiful umbrella. Is she one who is
outside of that umbrella shade? Look at her,
who trembles in fear. Pallor has spread on
her crescent-moon forehead.

Your scepter proclaims truthfulness. Is she one
who does not deserve the protection of your
scepter? Look at the one attacked by affliction
who hates living.

Your drum roars offering protection to all. Is she
one who does not get the protection of your drums?
Look at her who is sad, who has lost the beauty of
her bamboo-like arms.

Even when they see what is far away, eyes are
not able to see their own scars, despite being shown
by others. Like that, it is hard for you to know your
harshness, abandoning my friend and letting her
bangles become loose, even when others tell you
about it?  Is this why you have been chastised by
wise people?

Meanings:  நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் – those who removed drinking liquor (the celestials) and those who did not remove drinking liquor (the Asurars), அவை எடுத்து அற வினை – who show what is righteous to both, இன்புறூஉம் – causing happiness, அந்தணர் இருவரும் – two Brahmins – Viyālan and Velli, திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது – not failing from fairness according to the holy books to those different from each other, குழவியைப் பார்த்து உறூஉம் தாய் போல் – like a mother who feeds and enjoys her child (உறூஉம் – உறூஉம் – மகிழ்ச்சி அடையும், அளபெடை), உலகத்து மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும் பிழையாது வருதல் நின் செம்மையின் தர வாய்ந்த – giving because of your righteous nature that is like the unfailing rain that falls and protects everyone on earth (நல் ஊழி – நல்ல முறை), இழை அணி – decorated with ornaments, கொடித் திண் தேர் – sturdy chariots with flags, இன மணி – with clusters of bells, many bells, யானையாய் – O one with elephants,

அறன் நிழல் எனக் கொண்டாய் – you are righteous in offering shade (அறன் – அறம் என்பதன் போலி), ஆய் குடை – beautiful umbrella, அக் குடை புற நிழல் கீழ்ப்பட்டாளோ இவள் – is she one outside of that umbrella shade, இவள் காண்டிகா – look at her (காண்டிகா – காண்டி’ என்னும் முன்னிலை வினையொடு ‘கா’ என்னும் அசைநிலை இடைச்சொல் நின்றது, an expletive of the second person), பிறை நுதல் பசப்பு ஊரப் பெரு விதுப்பு உற்றாளை – the woman who is very fearful as pallor spreads on her crescent-moon like forehead,

பொய்யாமை நுவலும் நின் செங்கோல் – your scepter proclaims truthfulness, அச் செங்கோலின் செய் தொழில் கீழ்ப்பட்டாளோ இவள் – is she one who does not deserve your just scepter, இவள் காண்டிகா – look at her (காண்டிகா – காண்டி’ என்னும் முன்னிலை வினையொடு ‘கா’ என்னும் அசைநிலை இடைச்சொல் நின்றது, an expletive of the second person), காம நோய் கடைக்கூட்ட வாழும் நாள் முனிந்தாளை – the woman who ended up with love affliction who hates to live (கடைக்கூட்ட – இறுதி நாளைக் கொண்டுவர),

ஏமம் என்று இரங்கும் நின் எறி முரசம் – your drum roars that it will protect, அம் முரசின் ஏமத்து இகந்தாளோ இவள் – is she one who does not get the protection of your drums (இகந்தாளோ – ஓகாரம் எதிர்மறை), இவள் காண்டிகா – look at her (காண்டிகா – காண்டி’ என்னும் முன்னிலை வினையொடு ‘கா’ என்னும் அசைநிலை இடைச்சொல் நின்றது, an expletive of the second person), வேய் நலம் இழந்த தோள் கவின் வாட இழப்பாளை – the woman who is sad who lost her the beauty of her bamboo-like arms,

ஆங்கு – அசைநிலை, an expletive, நெடிது சேண் இகந்தவை காணினும் – even if they are able to see what is far away, தான் உற்ற வடுக் காட்டக் கண் காணாது அற்று – it is like eyes that cannot see the scars on themselves even when shown by others, ஆக என் தோழி தொடி கொட்ப – as my friend’s bangles whirled (loose), நீத்த கொடுமையை – the cruelty of abandoning her, கடிது என உணராமை – not realizing that it is harsh, கடிந்ததோ நினக்கே – is it what has been chastised by the wise

கலித்தொகை 100
மருதன் இளநாகனார், மருதம், மன்னனிடம் அவன் மனைவியின் தோழி சொன்னது
ஈண்டு நீர் மிசைத் தோன்றி இருள் சீக்கும் சுடரே போல்,
வேண்டாதார் நெஞ்சு உட்க வெரு வந்த கொடுமையும்,
நீண்டு தோன்று உயர் குடை நிழல் என சேர்ந்தார்க்குக்
காண்தகு மதி என்னக் கதிர் விடு தண்மையும்,
மாண்ட நின் ஒழுக்கத்தான் மறு இன்றி, வியன் ஞாலத்து 5
யாண்டோரும் தொழுது ஏத்தும் இரங்கு இசை முரசினாய்!

ஐயம் தீர்ந்து யார் கண்ணும் அருந்தவ முதல்வன் போல்
பொய் கூறாய் என நின்னைப் புகழ்வது கெடாதோ தான்
நல்கி நீ தெளித்த சொல் நசை என தேறியாள்
பல்லிதழ் மலர் உண்கண் பனி மல்கக் காணுங்கால்? 10

சுரந்த வான் பொழிந்தற்றாச் சூழ நின்று யாவர்க்கும்
இரந்தது நசை வாட்டாய் என்பது கெடாதோ தான்,
கலங்கு அஞர் உற்று நின் கமழ் மார்பு நசைஇயாள்
இலங்கு கோல் அவிர் தொடி இறை ஊரக் காணுங்கால்?

உறை வரை நிறுத்த கோல் உயிர் திறம் பெயர்ப்பான் போல் 15
முறை செய்தி என நின்னை மொழிவது கெடாதோ தான்,
அழிபடர் வருத்த நின் அளி வேண்டிக் கலங்கியாள்
பழி தபு வாள் முகம் பசப்பு ஊரக் காணுங்கால்?

ஆங்கு,
தொல் நலம் இழந்தோள், நீ துணை எனப் புணர்ந்தவள்; 20
இன் உறல் வியன் மார்ப இனையையால் கொடிது என,
நின்னை யான் கழறுதல் வேண்டுமோ,
என்னோர்கள் இடும்பையும் களைந்தீவாய் நினக்கே?

Kalithokai 100

Maruthan Ilanākanār, Marutham, What the queen’s friend said to the king

O king with roaring drums, worshipped and
praised by those in this wide world with a pure
heart for your high morals!  You are like the
sun appearing on the ocean that sweeps away
darkness in this world. You are cruel to
enemies, causing terror in their hearts. You
are like the moon emitting cool beams to those
who reach the shade of your tall umbrella.

Won’t your reputation, like that of the primal
god of rare penances, that you do not lie to others,
be ruined, on seeing tears filled in her kohl-lined
eyes, that resemble flowers with many petals, who
trusted your words of assurance without doubt?

Won’t your reputation, that you give generously
like the sky to those who come in need, be ruined
on seeing her exquisite, rounded, bright bangles roll
down her wrists, the one in deep distress who desires
your fragrant chest?

Won’t your reputation of having an established scepter,
doing everything in a proper manner like the god of
death, be ruined and talked about, on seeing pallor spread
on her faultless, bright face, the one who struggles in
distress pining for your graces?

O lord with a wide chest of sweet embraces! My
friend who united with you as your partner, has lost
her original beauty. To you who removes the sorrow
of those who come, should I say it is cruel for you to
let her suffer?

Notes:  ஈண்டு (1) – நச்சினார்க்கினியர் உரை – இவ்வுலகம்.

Meanings:  ஈண்டு நீர் மிசைத் தோன்றி இருள் சீக்கும் சுடரே போல் – you are like the sun that appears on the ocean and sweeps away darkness in this world, வேண்டாதார் நெஞ்சு உட்க வெரு வந்த கொடுமையும் – cruelty to enemies causing fear in their hearts, நீண்டு தோன்று உயர் குடை நிழல் என சேர்ந்தார்க்குக் காண்தகு மதி என்ன – like the splendid moon to those who reach the shade of your umbrella that appears tall (என்ன – உவமப்பொருள் தரும் சொல்), கதிர் விடு தண்மையும் – rays emitting coolness, மாண்ட நின் ஒழுக்கத்தான் – due to your high morals, மறு இன்றி – without fault, வியன் ஞாலத்து – in the wide world, யாண்டோரும் –  everybody, தொழுது ஏத்தும் – worshipped and praised, இரங்கு இசை முரசினாய் –  O one with roaring drums,

ஐயம் தீர்ந்து – ending doubts, யார் கண்ணும் – to others, அரும் தவ முதல்வன் போல் – like the word of Sivan of rare/precious penances, பொய் கூறாய் என – that you do not lie, நின்னைப் புகழ்வது – praising you, கெடாதோ – won’t it be ruined, தான் நல்கி நீ தெளித்த சொல் நசை என தேறியாள் – one who trusted the words that you showered with grace, பல்லிதழ் மலர் – flowers with many petals (பல்லிதழ் – அகரம் கெட்டு ‘குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்’ – தொல்காப்பியம், எழுத்து 160, என்றதனால் லகரம் இரட்டித்து பல்லிதழ் என முடிந்தது), உண்கண் பனி மல்கக் காணுங்கால் – when seeing her kohl-rimmed eyes with tears (காணுங்கால் – கால் ஈற்று வினையெச்சம்),

சுரந்த வான் பொழிந்தற்றாச் சூழ நின்று யாவர்க்கும் இரந்தது நசை வாட்டாய் என்பது – that you give like the generosity of the skies you give to all those around who request without refusing, கெடாதோ – won’t it be ruined (ஓகாரம் எதிர்மறை), தான் கலங்கு அஞர் உற்று – her attaining confusing distress, நின் கமழ் மார்பு நசைஇயாள் – one who desires your fragrant chest (நசைஇயாள் – அளபெடை), இலங்கு கோல் – splendid and rounded, அவிர் தொடி இறை ஊரக் காணுங்கால் – when seeing the bright bangles roll down on her wrists (காணுங்கால் – கால் ஈற்று வினையெச்சம்),

உறை வரை – living days, நிறுத்த கோல் – established scepter, உயிர் திறம் பெயர்ப்பான் போல் – like Kootruvan who is the god of death who removes lives, முறை செய்தி என – you do in a proper manner, நின்னை மொழிவது – talking about you, கெடாதோ – won’t it be ruined, தான் அழிபடர் வருத்த – with ruining distress, நின் அளி வேண்டிக் கலங்கியாள் – one who suffers pleading for your graces, பழி தபு – faultless, வாள் முகம் பசப்பு ஊரக் காணுங்கால் – when seeing pallor spread on her bright face (காணுங்கால் – கால் ஈற்று வினையெச்சம்),

ஆங்கு – அசை நிலை, an expletive, தொல் நலம் இழந்தோள் – she lost her natural beauty (இழந்தோள் – இழந்தாள், ஆ ஓவாய் நின்றது), நீ துணை எனப் புணர்ந்தவள் – your partner who united with you, இன் உறல் – sweet embraces, வியன் மார்ப – O one with a wide chest, இனையையால் – you are of this nature (ஆல் அசை நிலை, an expletive), கொடிது என நின்னை யான் கழறுதல் வேண்டுமோ – should I chide and tell you that it is cruel since she is struggling in pain, என்னோர்கள் இடும்பையும் களைந்தீவாய் – O one who removes the sorrow of everybody, நினக்கே – to you (ஏகாரம் அசை நிலை, an expletive)