குறிஞ்சிப்பாட்டு – Kurinjippāttu 

Translation by Vaidehi Herbert

Copyright © All Rights Reserved

பாடியவர் – கபிலர்
திணை – குறிஞ்சி
துறை – அறத்தொடு நிற்றல்
பாவகை – அகவல்பா (ஆசிரியப்பா)
மொத்த அடிகள் – 261

தமிழ் உரை நூல்கள்
பத்துப்பாட்டு (2 பகுதிகள்) – பொ. வே. சோமசுந்தரனார் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
நச்சினார்க்கினியர் உரை – உ. வே. உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை.

குறிஞ்சிப்பாட்டு என்ற பெயர் குறிஞ்சித் திணையைப் பற்றிய பாடல்.  குறிஞ்சி என்பது புணர்தலை உரிப்பொருளாகக் கொண்ட திணை.  நச்சினார்க்கினியர் கூற்று, “இதற்குக் குறிஞ்சி என்று பெயர் கூறினார். இயற்கைப் புணர்ச்சியும் பின்னர் நிகழும் புணர்ச்சிகளுக்கு நிமித்தங்களும் கூறுதலின், அன்றியும் முதலானும் கருவாலும் குறிஞ்சிக்குரியாகவே கூறுதலானும் அப்பெயர் கூறினார்”.

இந்தப் பாடல் தோழி செவிலியிடம் கூறும் கூற்றாக அமைந்துள்ளது.

அகத்திணையில் களவு ஒழுக்கம், கற்பு ஒழுக்கம் என்ற இரண்டு பிரிவுகள் உண்டு.  இவ்விரண்டையும் இணைத்து நிற்பது அறத்தொடு நிற்றலாகும். தலைவியின் களவு ஒழுக்கத்தை வெளிப்படுத்துதல் அறத்தொடு நிற்றல் ஆகும். தலைவி, தோழி, செவிலி, நற்றாய் ஆகியவர்கள் அறத்தொடு நிற்பதுண்டு. அறத்தொடு நிற்றலின் விளைவு, தலைவியை அவள் விரும்பிய தலைவனுடன் கற்பு வாழ்க்கையில் இணைப்பதாகும். தலைவியைத் தலைவனுக்குத் திருமணம் செய்வித்தல் ஆகும்.

This poem has 261 lines in Āsiriyappā/Akaval meter and was written by Kapilar for the Aryan king Pirahathan (Brahadathan) to inform him of the Thamizh love and marriage traditions, according to the colophon.  It describes the mountain country and its fauna and flora.  A chief of a mountain falls in love with a young woman and the love is reciprocated by her.  The young woman’s friend assists the lovers to meet.  The family finds changes in their daughter.  They worry and bring diviners to find out the reason for her illness. However, the wise friend helps the young woman by talking to the foster mother so that a marriage can be arranged.

தோழி செவிலியை அணுகி வேண்டுதல்

அன்னாய் வாழி! வேண்டு அன்னை! ஒண்ணுதல்
ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி
விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய்
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்,
பரவியும், தொழுதும், விரவு மலர் தூயும்,   5
வேறு பல் உருவில் கடவுள் பேணி,
நறையும் விரையும் ஓச்சியும் அலவுற்று,
எய்யா மையலை நீயும் வருந்துதி! (1-8)

The heroine’s friend talks to the foster mother

Mother, may you live long!
I plead for you to listen to me!

You are sad, unaware and confused,
because of the illness that has
caused her jewels to slip down,
my friend with a shining forehead
and thick, soft hair.

You tried to find the reason for her
harsh illness from the diviners in town.
You prayed to god in different forms,
with offerings of flowers, fragrant smoke
and aromatic substances, to rid her
illness that is difficult to cure.

Notes:  வேறு பல் உருவில் கடவுள் பேணி (6) – நச்சினார்க்கினியர் உரை – வேறுபட்ட வடிவங்களையுடைய பல தெய்வங்களை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பலவாகிய ஒன்றனை ஒன்றொவ்வாது வேறுபட்ட வடிவங்களில் எல்லாம் உள்ளுறையும் இறைவன்.  அன்னை வருந்துதல்:  அகநானூறு 156 – கள்ளும் கண்ணியும் கையுறையாக நிலைக் கோட்டு வெள்ளை நாள் செவிக் கிடாஅய் நிலைத் துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சித் தணி மருங்கு அறியாள் யாய் அழ மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே.  அகநானூறு 48 -அன்னாய் வாழி வேண்டு அன்னை நின் மகள் பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு நனி பசந்தனள் என வினவுதி, நற்றிணை 351 – இளமை தீர்ந்தனள் இவள் என வள மனை அருங்கடிப்படுத்தனை ஆயினும் சிறந்து இவள் பசந்தனள் என்பது உணராய் பல் நாள் எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி வருந்தல் வாழி வேண்டு அன்னை.  அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).  அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).  அலமரல் – அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (தொல்காப்பியம், உரியியல் 14).  எய்யாமை – எய்யாமையே அறியாமையே (தொல்காப்பியம், உரியியல் 46).

Meanings:  அன்னாய் வாழி – May you live long, mother, வேண்டு அன்னை – I request you to listen, ஒண்ணுதல் – bright forehead, ஒலி மென் கூந்தல் – thick soft hair, என் தோழி மேனி – my friend’s body, விறல் இழை – perfect jewels (விறல் – வெற்றி), நெகிழ்த்த – caused loosening, caused slipping down, வீவு அரும் கடு நோய் – harsh illness that is difficult to ruin, harsh disease that is difficult to cure, அகலுள் – inside (in town), ஆங்கண்- there, அறியுநர் – those who foresee, diviners, soothsayers, வினாயும் – asking the reason, பரவியும் – and praising, தொழுதும் – and praying, விரவு மலர் தூயும் – and throwing all kinds of flowers, வேறு பல் உருவில் – in different forms, கடவுள் பேணி – worshipped god, worshipped various gods, நறையும் – and using fragrant smoke, விரையும் – and using aromatic things, ஓச்சியும் – and performing, அலவுற்று – get confused, எய்யா – in ignorance, not understanding, மையலை – you are confused (முன்னிலை ஒருமை வினைமுற்று), you are bewildered, நீயும் வருந்துதி – you are sad (வருந்துதி – முன்னிலை ஒருமை வினைமுற்று)

தோழியின் சொல் வன்மை

நற்கவின் தொலையவும், நறும் தோள் நெகிழவும்,
புள் பிறர் அறியவும், புலம்பு வந்து அலைப்பவும்,   10
உள்கரந்து உறையும் உய்யா அரும் படர்
செப்பல் வன்மையின் செறித்தியான் கடவலின், (9-12)

Words of the Eloquent Friend

My friend’s fine beauty is ruined.
Her fragrant arms have thinned.
Others witness her bangles slipping down.
Unable to deal with this harsh affliction
that is difficult to bear, she hides it from
everybody and suffers alone.

At my pressure and urging, she said,

Notes:  உய்யா அரும் படர் (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உயிர் கொண்டு பிழைத்தற்கரிய நோய், C. ஜெகந்நாதாசாரியர் உரை – பிரிவு ஆற்றாளாகிய தலைமகள் தான் உறுகின்ற துன்பத்தினை எப்பொழுதும் நினைத்தலாலாகிய நினைவு.

Meanings:  நற்கவின் தொலையவும் – her fine beauty spoilt, நறும் தோள் நெகிழவும் – her fragrant arms thinned, புள் – bangles (her bangles have slipped down), பிறர் அறியவும் – others knowing about this, புலம்பு வந்து அலைப்பவும் – worrying alone in sorrow, உள் கரந்து உறையும் – hidden inside her mind, உய்யா அரும் படர் – difficult disease that is unable to bear, செப்பல் – to tell, வன்மையின் – with ability, செறித்தியான் கடவலின் – since I pressed and urged her, since I pressured and goaded her (செறித்தியான் – குற்றியலிகரம், செறித்து யான்)

 தலைவியின் துன்பம்

முத்தினும், மணியினும், பொன்னினும், அத்துணை
நேர்வருங் குரைய கலங்கெடின் புணரும்
சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்   15
மாசறக் கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல்,
ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை
எளிய என்னார் தொல் மருங்கு அறிஞர்;
மாதரும் மடனும் ஓராங்குத் தணப்ப,
நெடுந்தேர் எந்தை அருங்கடி நீவி,   20
இருவேம் ஆய்ந்த மன்றல் இதுவென
நாம் அறிவுறாலின் பழியும் உண்டோ?
ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற
ஏனை உலகத்தும் இயைவதால், நமக்கென
மான் அமர் நோக்கம் கலங்கிக் கையற்று   25
ஆனாச் சிறுமையள் இவளும் தேம்பும். (13-26)

The heroine’s Sorrow

“If jewels that are well crafted with
perfect proportions of pearls, gems
and gold are ruined, they can be fixed.

If qualities like wisdom, pride and
character diminish, the wise will not
say that it is easy to remove blemishes
and restore them to their original state
with flourishing fame, even by those
who are great.

Ruining both – the desire of my
parents to choose a husband for me,
and my naivete, the two of us united
in secret love, escaping the strict guard
of my father owning a huge chariot.
Will there be blame if we inform?

Even if my parents don’t agree to me
marrying him in this birth, I desire
to be with him in the next one.”

My friend who is afflicted with love
is confused and distressed,
her bewildered looks like that of a deer.

Notes:  ஆய்ந்த மன்றல் (21) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – யானும் தலைவனுமே தேர்ந்துகொண்ட களவு மணம்.

Meanings:  முத்தினும் மணியினும் பொன்னினும் – with pearls and gems and gold, அத்துணை நேர்வரும் – all those joined together and well crafted, குரைய – அசைச்சொல், an expletive, கலங்கெடின் – if the jewels get ruined, புணரும் – they can be put together, they can be fixed, சால்பும் – and wisdom, வியப்பும் – and pride, இயல்பும் – and discipline, குன்றின் – if they diminish, மாசறக் கழீஇ – washed without blemish (கழீஇ – அளபெடை), வயங்கு புகழ் – flourishing fame, நிறுத்தல் – making it exist, ஆசு அறு காட்சி – faultless intelligence, ஐயர்க்கும் – even for the wise, even for elders, அந்நிலை எளிய என்னார் – they will not say that is easy to attain that, தொல் மருங்கு – ancient texts, அறிஞர் – scholars, those who are learned, மாதரும் – and parents, மடனும் – and my naïve nature, and my delicate nature (மடன் – மடம் என்பதன் போலி), ஓராங்கு – together (ஓராங்கு – ஒருசேர), தணப்ப – to be ruined, நெடுந்தேர் எந்தை – my father with a big chariot, அருங்கடி – tight protection, நீவி – going past, இருவேம் ஆய்ந்த – both chose, both united because our pride and strength and fear and shyness were all reduced, மன்றல் – களவு மணம், secret love union, இது என – that it is, நாம் அறிவுறாலின் – if we inform, பழியும் உண்டோ – will there be blame, ஆற்றின் – even after advising, வாரார் ஆயினும் – even if they do not agree and come, ஆற்ற – to wait, to tolerate, to bear, ஏனை உலகத்தும் – in the next birth, இயைவது ஆல் நமக்கென – that she could be with him (ஆல் – அசை நிலை), மான் அமர் நோக்கம் – deer-like delicate looks, looks desired by deer, கலங்கிக் கையற்று – worried and helpless, ஆனா – endless, without getting reduced, சிறுமையள் – she who is afflicted with love disease, இவளும் – my friend, தேம்பும் –  she is distressed

தன்னிலை கூறும் தோழி

இகல் மீக் கடவும் இரு பெரு வேந்தர்
வினை இடை நின்ற சான்றோர் போல,
இரு பேர் அச்சமோடு யானும் ஆற்றலேன். (27-29)

Friend who explains her position

Unable to bear my pain and
despite fearing you and my friend,
I am working with both of you,
like wise men who work with two
great kings fighting with each other.

Notes:  அறத்தொடு நிற்கும் காலத்தன்றி அறத்தியல் மரபிலள் தோழி என்ப (தொல்காப்பியம், பொருளதிகாரம் 12).

Meanings:   இகல் மீக் கடவும் – attacking with enmity, இரு பெரு வேந்தர் – two great kings, வினையிடை நின்ற – standing between them trying to bring them together, சான்றோர் போல – like the elders, இரு பேர் அச்சமோடு யானும் ஆற்றலேன் – I am unable to bear my sorrow fearing the both of you (அச்சமோடியானும் – குற்றியலிகரம், அச்சமோடு யானும்)

மாதர் சினம் தணிய தலைவியின் மனம் கூறும் தோழி

கொடுப்பின் நன்கு உடைமையும், குடி நிரல் உடைமையும்,   30
வண்ணமும் துணையும் பொரீஇ எண்ணாது,
எமியேம் துணிந்த ஏமம் சால் அருவினை
நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணரச்
செப்பல் ஆன்றிசின் சினவாதீமோ! (30-34)

She Reveals her Friend’s Mind

When parents give their daughter
in marriage, they make sure that
everything is perfect, and that his
family is of good nature and equal
to them in status.

Without thinking about all that,
we conducted a rare secret love
union boldly and with protection.
I want you to understand it well.
I will tell you how it happened.
So please do not get angry!

Notes:  பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு உருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திரு என முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே (தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 25).  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:   கொடுப்பின் – when giving (one’s daughter in marriage), நன்கு உடைமையும் – and that everything will be perfect, குடி நிரல் உடைமையும் – and that there is equal family status, வண்ணமும் – their character, துணையும் – and his family, பொரீஇ – comparing (அளபெடை), எண்ணாது – without thinking, எமியேம் – alone, we, துணிந்த – boldly, with courage, ஏமம் சால் – with great protection, அரு வினை – a rare act (களவு மணம், secret union), நிகழ்ந்த வண்ணம் – like it happened, நீ நனி உணர – for you to understand it well, செப்பல் ஆன்றிசின் – I am going to tell you (ஆன்றிசின் – தன்மை அசைச் சொல், an expletive of the first person), சினவாதீமோ – please do not get angry (ஈ, ஓ – முன்னிலையசைகள், expletives of the second person)

தலைவனோடு ஏற்பட்ட தொடர்பின் தொடக்கம்

நெல் கொள் நெடு வெதிர்க்கு அணந்த யானை   35
முத்து ஆர் மருப்பின் இறங்கு கை கடுப்பத்,
துய்த்தலை வாங்கிய புனிறு தீர் பெருங்குரல்
நல் கோள் சிறு தினைப் படுபுள் ஓப்பி,
எல்பட வருதியர் என நீ விடுத்தலின், (35-39)

How the Love got Started

You sent us to chase away
marauding parrots that come to
eat the bent, mature, tiny millet
on big spears with fuzzy tops,
resembling elephant trunks
resting on pearl-filled tusks
after raising them high to the
tall bamboos to collect seeds.
You bade us to come back
when the sun went down.

Notes:  யானையின் தந்தத்தில் முத்து:  அகநானூறு 282 – வால் மருப்பு ஒடிய உக்க தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு, நற்றிணை 202 – புலி பொரச் சிவந்த புலால் அம் செங் கோட்டு ஒலி பல் முத்தம், புறநானூறு 161 – முத்துப்படு முற்றிய உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு, புறநானூறு 170 –  வெண்கோடு பயந்த ஒளி திகழ் முத்தம், பதிற்றுப்பத்து 32 – முத்துடை மருப்பின், கலித்தொகை 40 – முத்து ஆர் மருப்பின், திருமுருகாற்றுப்படை 304 – பெருங்களிற்று முத்துடை வான்கோடு தழீஇ,  குறிஞ்சிப்பாட்டு 36 – முத்து ஆர் மருப்பின், மலைபடுகடாம் 518 – முத்துடை மருப்பின்.  புள் (38) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஈண்டுக் கிளி என்க.  புனிறு – புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே (தொல்காப்பியம், உரியியல் 79).

Meanings:   நெல் கொள் – containing seeds, நெடு வெதிர்க்கு –for the tall bamboo, அணந்த யானை – elephants that look up, முத்து ஆர் மருப்பின் – with pearl filled tusks, இறங்கு கை – trunks brought down, bent trunks,  கடுப்ப – like (உவம உருபு), துய்த்தலை – fuzzy tops, வாங்கிய – curved, புனிறு தீர் – immaturity ended, fully mature, பெருங்குரல் – big clusters, large spears, நல் – fine, கோள் – having, சிறு தினை – tiny millet, படுபுள் – parrots that come to seize the millet, ஓப்பி – chasing, எல்பட – when the sun/light goes down, வருதியர் – you come back, என – thus, நீ – you, விடுத்தலின் – since you sent us

பறவை ஓட்டும் பாவையர்

கலி கெழு மர மிசைச் சேணோன் இழைத்த   40
புலி அஞ்சு இதணம் ஏறி அவண,
சாரல் சூரல் தகை பெற வலந்த
தழலும் தட்டையும் குளிரும் பிறவும்
கிளி கடி மரபின ஊழ் ஊழ் வாங்கி,
உரவுக் கதிர் தெறூஉம் உருப்பு அவிர் அமயத்து, (40-45)

Women who Chased Birds

We climbed on a platform,
built well by a millet field guard,
on an upoarious tree frequented
by birds for fruits, for fear of
tigers.

We chased birds with thalal
well made from rattan, thattai,
kulir, and other implements
that we held in our hands,
using them appropriately in the
traditional manner, when the sun’s
intense, bright rays were very hot.

Notes:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – புலி அஞ்சு இதணம் (41) – புலியை அஞ்சி உறைதற்குரிய இதணம் என்றும், புலி அஞ்சுவதற்குக் காரணமான இதணம் என்றும், இரு வேற்றுமைப் பொருளிலும் கொள்ளலாம், கலி கெழு (40) –  பயன்படு பழுமரம் என்றவாறு.  உணவினை நாடிவரும் பல்வேறு பறவைகளின் ஆரவாரமும் பழுமரத்திற்கல்லது இல்லையாகலின் என்க, தட்டை (43) – மூங்கிலை குறுக்கே நறுக்கிப் பலவாகப் பிளந்து ஓசையுண்டாகும்படி ஒன்றிலே தட்டும் கருவி, தழல் (43) –  கையால் சுழற்றினால் ஓசை ஏற்படுத்தும் கருவி, குளிர் (43) –  மூங்கிலை வீணை போல் கட்டி ஓசை எழுப்பும் கருவி.  குறுந்தொகை 223 – தழலும் தட்டையும்.

Meanings:   கலி கெழு – uproarious, with uproar (since there are birds on the trees), மர மிசை – on a tree top, சேணோன் – a millet field guard, இழைத்த – constructed, made, புலி அஞ்சு – fearing tigers, இதணம் – tall tower, tall platform, ஏறி – climbed, அவண – there, சாரல் – mountain slopes, சூரல் – rattan, cane, Calamus rotang, தகை பெற – made beautifully, வலந்த – woven, tied together, தழலும் – and thazhal, an implement to chase parrots, slingshot (Kazhaka Akarathi), a handheld noise-making whirling device (U. Ve. Swaminatha Iyer, Po. Ve. Somasundanar commentaries), தட்டையும் – and a bamboo rattle (to chase parrots), குளிரும் – and a veenai shaped bamboo implement that was strummed to chase parrots, பிறவும் – and other implements, கிளி கடி மரபின – those with the tradition of chasing parrots (மரபின – பலவின்பாற் பெயர்), ஊழ் ஊழ் – used them according to proper tradition, வாங்கி – holding them in our hands, உரவுக் கதிர் – strong rays of the sun, தெறூஉம் – they burn (அளபெடை), உருப்பு – heat, அவிர் அமயத்து – at the bright time

மழை பொழிந்த நண்பகல் நேரம்

விசும்பு ஆடு பறவை வீழ் பதிப் படர,
நிறை இரும் பெளவம் குறைபட முகந்துகொண்டு,
அகல் இரு வானத்து வீசு வளி கலாவலின்,
முரசு அதிர்ந்தன்ன இன் குரல் ஏற்றொடு
நிரை செலல் நிவப்பின் கொண்மூ மயங்கி,   50
இன்னிசை முரசின் சுடர்ப் பூண் சேஎய்
ஒன்னார்க்கு ஏந்திய இலங்கு இலை எஃகின்
மின் மயங்கு கருவிய கல் மிசைப் பொழிந்தென, (46-53)

Rain Fell During the Day

When birds that fly in the sky
returned to their desired nests,
clouds absorbed waters reducing
the vast ocean, and rose up in a
row to the wide, dark sky.

Blowing winds mixed with clouds
produced sweet thunder sounds
resembling those of roaring drums.
Lightning flashes were like the shining
blade of the spear that Murukan with
bright jewels and sweet drums held in
his hand when he attacked his enemies.

Rain poured on the mountains,
accompanied by thunder and lightning.

Notes:  கருவிய (53) – இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய முகில்கள்.  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 50).

Meanings :   விசும்பு ஆடு பறவை – birds flying in the sky, வீழ் பதிப் படர – return to their desired nests, causing them to return to their desired nests, நிறை இரும் பெளவம் – water-filled vast ocean, water-filled dark ocean, குறைபட – to get reduced, முகந்துகொண்டு – absorbing, taking (water), அகல் இரு வானத்து – in the wide huge sky, in the wide dark sky, வீசு வளி – blowing wind, கலாவலின் – since it mixes, முரசு அதிர்ந்தன்ன – like roaring drums, இன் குரல் – sweet voice, ஏற்றொடு – with thunder, நிரை செலல் – going in a row (செலல் – இடைக்குறை), நிவப்பின் – being above, கொண்மூ – clouds, மயங்கி – mixed, இன்னிசை முரசின் – with sweet drums, சுடர்ப்பூண் – bright jewels, சேஎய் – Murukan (அளபெடை), ஒன்னார்க்கு – to his enemies, ஏந்திய – held, இலங்கு இலை – bright blade, எஃகின் –  like a spear (இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), மின் மயங்கு – mixed with lightning, கருவிய – clouds with thunder and lightning, கல் மிசைப் பொழிந்தென – since they fell as rain on the mountains

அருவியில் ஆடிய அரிவையர்

அண்ணல் நெடுங்கோட்டு இழிதரு தெள் நீர்
அவிர் துகில் புரையும் அவ்வெள் அருவி   55
தவிர்வு இல் வேட்கையேம் தண்டாது ஆடிப்
பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவுழி,
நளிபடு சிலம்பில் பாயம் பாடிப்
பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம்
பின்னிருங் கூந்தல் பிழிவனம் துவரி,   60
உள்ளகம் சிவந்த கண்ணேம். (54-61)

Playing in the Waterfalls

Lovely waterfalls with clear water
flowed down from the noble lord’s
lofty mountain,
appearing like bright, draped cloth.

We played in it happily and
without any restraint.
We jumped into a wide spring
that looked like poured marble,
singing to our hearts desire.
After that, we dried our braided
black hair, that draped down our
small backs, resembling sapphire
that is set in gold, and squeezed
out water.  Our eyes became red.

Notes:  பாயம் (58) – குறிஞ்சிப்பாட்டு 342 – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மனவிருப்பம், பாசம் என்னும் வடமொழி பாயம் என்று நின்றது.  நளி – நளி என் கிளவி செறிவும் ஆகும் – (தொல்காப்பியம், உரியியல் 27).  நீலமணிபோல் பெண்ணின் கூந்தல் – அகநானூறு 8 – மணி ஏர் ஐம்பால், நற்றிணை 10 – மணியின் தாழ்ந்த நல் நெடுங்கூந்தல், நற்றிணை 133 – மணி ஏர் ஐம்பால், 214 – மணி இருங்கதுப்பு, 245 – மணி மருள் ஐம்பால், 337 – மணி மருள் ஐம்பால், 366 – மணி ஏர் ஐம்பால், 374 – வீழ் மா மணிய புனை நெடுங்கூந்தல், கலித்தொகை 22 – மணி ஒளி விட்டன்ன ஐவகை, கலித்தொகை 77 – மாசு அற மண்ணுற்ற மணி ஏசும் இருங்கூந்தல், பரிபாடல் 10, குறிஞ்சிப்பாட்டு 69 – பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம் பின்னிருங் கூந்தல்.

Meanings:   அண்ணல் நெடுங்கோட்டு – from the hero’s lofty mountains, இழிதரு – flowing down, தெள் நீர் – clear water, அவிர் துகில் – bright cloth, புரையும் – they are like (புரை – உவம உருபு, a comparison word), அவ்வெள் அருவி – lovely white waterfalls, தவிர்வு இல் – without removing, வேட்கையேம் – we were with desire, தண்டாது – without any reduction, ஆடி – play (in the waterfalls), பளிங்கு சொரிவு அன்ன – like marble was poured down, பாய் சுனை – wide spring, wide pond, குடைவுழி – while playing, while bathing (குடைவுழி =  குடைவு + உழி, உழி = ஏழாம் வேற்றுமை உருபு), நளிபடு சிலம்பில் – on the dense mountains, பாயம் பாடி – sang like the mind desired, பொன் எறி மணியின் – like gems (sapphire) set in gold (மணியின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), சிறுபுறம் தாழ்ந்த – draping on the small backs, எம் பின் இருங்கூந்தல் – our braided black hair, பிழிவனம் – we squeezed out (the water), (தன்மைப் பன்மை), துவரி – dried, உள் அகம் சிவந்த கண்ணேம் – we were with red eyes (உள் அகம் – இருபெயரொட்டு பண்புத்தொகை)

பாறையில் மலர் குவித்த பாவையர்

———– ———— ———– வள் இதழ்
ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்,  65
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,
பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா,   70
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,
குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,   75
கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்,
தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,
தாழை, தளவம், முள் தாள் தாமரை   80
ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை,
காஞ்சி, மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம்,   85
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
தும்பை, துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி,   90
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங்குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள்நாறி,
மாஇருங் குருந்தும், வேங்கையும் பிறவும்,   95
அரக்கு விரித்தன்ன பரு ஏர் அம் புழகுடன்
மால் அங்கு உடைய மலிவனம் மறுகி,
வான்கண் கழீஇய அகல் அறைக் குவைஇப், (61-98)

Collecting flowers and placing them on boulders

Attracted to the flowers that were
there, with desire,
we collected the flowers of red
kānthal with thick leaves, white āmpal,
delicate anicham, kuvalai from cool
ponds, kurinji, vetchi, chenkoduvēri,
sweet mango, manichikai, unthoozh with
fragrant clusters of flowers, koovilam,
flame-like erulam, sulli, kooviram,
vadavanam, vākai, kudasam with white
flowers, eruvai, seruvilai, and
karuvilai with gem-colored flowers,
payini, vāni, kuravam with many clusters
of flowers, pasumpidi, vakulam, kāyā with
many clusters of flowers, āvirai with open
blossoms, vēral, sooral, small poolai,
small and fragrant kanni, kurukilai,
marutham, kōngam with open blossoms,
pōngam, thilakam, honey-fragrant pāthiri,
cherunthi, athiral, large cool chenbakam,
karanthai, kulavi, flourishing
fragrant mango, thillai, pālai, mullai
that has spread on rocks, kullai, pidavam,
siru mārōdam, banana, valli, neythal flowers
with long stems, coconut, thalavam, lotus
with thorns on its stems, gnāzhal, wild
jasmine, cool fragrant kokudi, sedal,
chemmal
, small chengurali, kōdal, kaithai,
mature naruvalai, kānji, sapphire-colored
clusters of neythal flowers, pānkar, marām,
thanakkam with clusters, eengai, ilavam,
kondrai, adampu, perfect
āthi, avarai with long vines, pakandrai,
palāsam, pindi
with clusters of blossoms,
vanji, large pithikam, sinthuvāram, thumpai,
thulāi, flame-like thōndri, nanthi, naravam,
fragrant punnākam, pāram, peeram, fresh
kurukkathi, āram, kāzhvai, fragrant punnai,
narantham, nākam, nallirul nāri, kuruntham,
vēngai and vermilion-hued thick, beautiful, red,
wild puzhaku  that were washed by the
rains, and piled them on a wide, clean boulder.

Meanings:  அரக்கு விரித்தன்ன – like red vermilion was spread, பரு – thick, ஏர் – beautiful, அம் – beautiful, புழகுடன் – with pulaku flowers, மால் அங்கு உடைய – attracted to them, we were awed by them, மலிவனம் – we with desire (தன்மைப் பன்மை), மறுகி – roamed and collected, வான்கண் கழீஇய – washed by the rain (வான் – ஆகுபெயர் மழைக்கு, கழீஇய – சொல்லிசை அளபெடை), அகல் அறை – wide boulders, குவைஇ – heaped them (அளபெடை)

1. வள் இதழ் ஒண் செங்காந்தள் செங்காந்தள் – bright red malabar Glory Lily flowers with big petals, Gloriosa Superba, 2. ஆம்பல் – White Water lily, Nymphaea lotus, அல்லி 3. அனிச்சம் – possibly Anaallis arvensis Linn, A delicate flower, 4.  தண் கயக் குவளை – Nymphaea stellate/Nymphaea odorata flowers that grow in cool ponds, Blue Nelumbo, 5. குறிஞ்சி – Square branched conehead, Strobilanthes kunthiana, blue-purple flower, 6. வெட்சி – Scarlet Ixora, Ixora Coccinea, 7. செங்கொடுவேரி – Rosy-flowered leadwort, Plumbago rosea, 8. தேமா – மாமரம், Mango tree, Mangifera indica, 9. மணிச்சிகை – Ipomoea sepiaria, Koenig ex Roxb, 10. உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் – பெருமூங்கில், Large bamboo flowers that blossom in clusters and have their innate fragrance, Bambusa arundinaca, 11. கூவிளம் – வில்வம் மரம், Bael, Aegle marmelos, 12. எரி புரை எறுழம் – flame-like Calycopteris floribunda, a hill country big tree with red flowers, 13. சுள்ளி – Barleria prionitis,  14. கூவிரம் – Crateva religiosa, 15. வடவனம் – Ocimum sanctum/Ocimum gratissimum/Ocimum tenuiflorum, holy basil, 16. வாகை – மரம், Albyzzia Lebbeck, 17. வான் பூங் குடசம் – white Holarrhena antidysentrica flowers,  18. எருவை – நாணல், Typha angustata, reed, 19. செருவிளை – White-flowered mussel-shell creeper, Clitoria ternatea-albiflora, 20. மணிப்பூங் கருவிளை – கொடி, Mussell-shell creeper flowers that appear like sapphire, Clitoria ternatea – blue, 21. பயினி – Vateria indica, hill country tree, 22. வானி – Euonymus dichotomous, hill country tree with pink flowers, 23. பல்லிணர்க் குரவம் – Webera corymbosa flowers that are in many clusters, 24. பசும்பிடி – பச்சிலை, மரம், Mysore gamboge, Garcinia xanthochymus, 25. வகுளம் – மகிழ் மரம், Pointed-leaved ape-flower, Mimusops elengi, 26. பல்லிணர்க் காயா – காசாமரம், Ironwood tree flowers that grow in clusters, Memecylon edule, 27.  விரி மலர் ஆவிரை – Tanner’s senna flowers, செடி, Cassia auriculata, 28. வேரல் – சிறுமூங்கில்- Swollen node-ringed semi-solid medium bamboo, Arundinaria wightiana Nees, 29. சூரல் – Calamus rotang according to R. Panchavarnam’s list, and சூரை செடி, Oblique-leaved jujube or small-fruited jujube, Zizyphus oenoplia according to the lists of P.L. Sami and Palaniappan Vairam Parthasarathy, 30. குரீஇப்பூளை, சிறுப் பூளை – களை, A common weed, Aerua lanata, 31. குறுநறுங்கண்ணி – குன்றி, குன்னி முத்து, Crab’s eye, Abrus precatorius; குன்றி – same description as 9, might be similar variety, 32. குருகிலை – Butea frondosa/ficus virens, 33. மருதம் – மருதமரம், நீர்மருது, Black winged myrobalan, கருமருது, Terminalia elliptica/Terminalia arjuna, 34. விரிபூங் கோங்கம் – இலவு மரம், False tragacanth flowers, Cochlospermum gossypium, 35. போங்கம் – மரம், Osmosia travancorica, 36. திலகம் – Adenanthera pavonina, 37. தேங்கமழ் பாதிரி – மரம், honey-fragrant flowers of the yellow flower trumpet tree, Stereospermum chelonoides, 38. செருந்தி – மரம், Panicled golden-blossomed pear tree, Ochna squarrosa, 39. அதிரல் – Derris Scandens மல்லிகைவகை, Wild jasmine, 40. பெருந்தண் சண்பகம் – மரம், huge cool champak flowers, Michelia champaca, 41. கரந்தை – Spaeranthus indicus, 42. குளவி – பன்னீர் பூ, மரமல்லிகை, Millingtonia hortensis, 43. கடிகமழ் கலிமா – மாமரம், Mango flowers with lovely fragrance, Mangifera indica, 44. தில்லை – மரம், Excoecaria agallocha, Blinding tree, 45. பாலை – Wrightia tinctoria/Mimusops kauki  – there are many varieties of பாலை, 46. கல் இவர் முல்லை – Jasminum sambac that spreads on rocks, 47. கஞ்சங்குல்லை – Cannabis sativa, 48. பிடவம் – Bedaly emetic-nut, Randia malabarica, 49. சிறுமோரோடம், செங்கருங்காலி, Acacia sundra/Acacia catechu, 50. வாழை – plantain, Musa paradisiaca, 51. வள்ளி – கிழங்கு கொடி, Dioscorea alata/Convolvulus batatas, 52. நீள் நறு நெய்தல் – Nymphaea Stellata flowers with fragrance and long petals/long stems, Blue waterlily, 53. தாழை – Coconut tree, Cocos nucifera, 54. தளவம் – மஞ்சள் முல்லை, Jasminum elongatum/Jasminum polyanthum – there are many kinds, 55. முள் தாள் தாமரை – Lotus flowers with stems with thorns, Nelumbium speciosum, 56. ஞாழல் – According to the University of Madras Lexicon it is புலிநகக்கொன்றை, Cassia sophera, Tigerclaw tree.  It has been interpreted also as Heritiera Littoralis/ Caesalpinia etc. by others, 57. மௌவல் – Jasminum officinale,  58. நறுந்தண் கொகுடி – fragrant cool Jasminun pubescens, முல்லைக்கொடி வகை, 59. சேடல் – Nyctanthes arbor-tristis, Night-flowering jasmine, பவளமல்லிகை,  60. செம்மல் – சாதிப்பூ, Jasminum grandiflorum, முல்லைப்பூ வகை, 61. சிறுசெங்குரலி – Trapa bispinosa Roxb, 62. கோடல் – வெண்காந்தள், White species of Malabar glory-lily, Gloriosa superba, 63. கைதை – தாழ், தாழம்பூ, Fragrant screw-pine, Pandanus odoratissimus, 64. கொங்கு முதிர் நறு வழை – சுரபுன்னை, Long-leaved two-sepalled gamboge flowers with fragrant pollen, Ochrocarpus longifolius, 65. காஞ்சி – பூவரச மரம், River Portia, Trewia nudiflora, or portia tree, Thespesia populnea, 66. மணிக் குலை நெய்தல், கருங்குவளை, sapphire-colored blue Nelumbo flowers that are in clusters, Nymphaea Stellata/Nymphaea rubra, 67. பாங்கர் – Tooth-brush tree, Salvadora persica; ஓமை, Sandpaper-tree, Dillenia indica, உவாமரம், 68. மராஅம் – வெண்கடம்பு, Seaside Indian oak, Barringtonia racemosa, 69. பல்பூந் தணக்கம் – நுணா என்னுங் கொடி, thanakkam flowers that are in clusters, Small ach root, Morinda umbellate according to the University of Madras Lexicon, 70. ஈங்கை – ஈங்கு செடி, Mimosa Pudica, 71. இலவம் – மரம், Red-flowered silk-cotton tree, Bombax malabaricum, 72. தூங்கு இணர்க் கொன்றை – சரக்கொன்றை, Indian laburnum flowers that hang in clusters, Cassia fistula, 73. அடும்பு  – கொடி, Ipomaea pes caprae, 74. அமர் ஆத்தி – மரம், perfect Common mountain ebony flowers, Bauhinia racemosa/Bauhinia tomentosa, 75. நெடுங்கொடி அவரை – Field-bean flowers that blossom on long vines, Dolichos lablab, 76. பகன்றை – சிவதை கொடி, Indian jalap, Operculina turpethum, 77. பலாசம் – புரசமரம், Palas-tree, Butea frondosa, 78. பல்பூம் பிண்டி – Asōka tree flowers that are complex flowers with many flowers that are together as a cluster, Saraca indica, 79. வஞ்சி – Salis tetrosperma, இலுப்பை மரம், Bassia malabarica, 80. பித்திகம் – பித்திகை, Jasminum augustifolium, 81. சிந்துவாரம் – கருநொச்சி, Three-leaved Chaste tree, Vitex negundo/Vitex trifolia, 82. தும்பை – செடி, White dead nettle, Leucas, Bitter toombay, Leucas aspera, 83. துழாய், tulasī, Sacred basil, Ocimum sanctum, 84. சுடர்ப்பூந் தோன்றி – Gloriosa superba flowers that are bright like flame, Red Malabar glory lily, செங்காந்தள், 85. நந்தி – நந்தியாவட்டம், East Indian rosebay, Tabernaemontana coronaria, 86. நறவம் – நறுமணக்கொடி, Luvunga scandens, 87. நறும் புன்னாகம் – சிறு மரம், fragrant flowers of Callophylum elatum, 88. பாரம் – பருத்தி செடி, Indian cotton-plant, Gossypium herbaceum, 89. பீரம் – பீர்க்கு, ridge-gourd, Luffa acutangula, 90. குருக்கத்தி – மாதவிக்கொடி, Hiptage madablota, 91. ஆரம் – சந்தனம், Sandalwood tree, Santalum album, 92. காழ்வை – அகில், Eagle-wood, Aquilaria agallocha, 93. புன்னை – மரம், Mast-wood, Calophyllum inophyllum, 94. நரந்தம் – நாரத்தை, Bitter orange or Cymbopogon flexuosus – grass, 95. நாகப்பூ – Iron wood of Ceylon, Mesua ferrea, 96. நள்ளிருணாறி – இருவாட்சி, big jasmine variety that is fragrant at night, Jasminum sambac, 97. மாஇருங் குருந்தம் – புனவெலுமிச்சை, wild lime flowers that are big and dark, Atlantia monophylla, or wild orange, citrus indica, 98. வேங்கை – East Indian kino tree, Pterocarpus marsupium, 99. அரக்கு விரித்தன்ன பரு ஏர் அம் புழகு – Calotropis gigantea flowers that appear like red wax is spread

தழை ஆடை உடுத்து மர நிழலில் தங்கிய மங்கையர்

புள் ஆர் இயத்த விலங்கு மலைச் சிலம்பின்
வள் உயிர் தெள் விளி இடை இடைப் பயிற்றிக்   100
கிள்ளை ஓப்பியும், கிளை இதழ் பறியாப்
பை விரி அல்குல் கொய் தழை தைஇப்
பல் வேறு உருவின் வனப்பு அமை கோதை எம்
மெல் இரு முச்சிக் கவின் பெறக் கட்டி,
எரி அவிர் உருவின் அம் குழைச் செயலைத்   105
தாதுபடு தண்ணிழல் இருந்தனம் ஆக, (99-106)

Decorated Themselves with Flowers

There were cries of birds sounding
like musical instruments, in the blocking
mountain slopes.  We chased parrots,
shouting clear sounds at regular intervals.
We plucked petals from flowers and wove
skirts that covered our mounds raised
like the hoods of snakes.

We made pretty garlands from the
many-colored flowers, and wore them on
our dark hair knots, making them
beautiful.
We rested in the cool shade with pollen
from an asoka tree with beautiful, tender
sprouts that resembled flames.

Notes:  ஒப்புமை – கலித்தொகை 125 – தட அரவு அல்குல், நற்றிணை 366 – அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ் வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும் திருந்து இழை அல்குல்.  பை (102) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பாம்பின் படம்.  இஃது அல்குலுக்கு உவமை.  பறியா – பறித்து என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

Meanings:   புள் ஆர் இயத்த – with birds that sounded like musical instruments, விலங்கு மலை – mountains that lie blocking, சிலம்பின் – on the slopes, வள் உயிர் – with sharp sounds, தெள் விளி – clear sounds, இடை இடைப் பயிற்றி – shouting at regular intervals, கிள்ளை ஓப்பியும் – and chasing parrots, கிளை இதழ் பறியா – plucked petals from the outer part of the flowers (பறியா – உடன்பாட்டெச்சம்), பைவிரி – like how a snake spread its hood, அல்குல் – area under waist, mound, கொய் தழை – the foliage/leaves that we plucked, தைஇ – tied and wore (அளபெடை), பல் வேறு உருவின் – many different shapes, வனப்பு அமை கோதை – beautiful garlands, எம் மெல் – our delicate, இரு முச்சி – dark hair knot (kondai), கவின் பெற கட்டி – tied beautifully, எரி அவிர் உருவின் – bright like flame, அம் குழை – beautiful sprouts, shoots, செயலை – asoka tree, Saraca indica, தாதுபடு – pollen dropping, தண்ணிழல் – cool shade, இருந்தனம் ஆக – we were there

தலைவனின் எழில்

எண்ணெய் நீவிய சுரி வளர் நறும் காழ்த்
தண் நறும் தகரம் கமழ மண்ணி,
ஈரம் புலர விரல் உளர்ப்பு அவிழாக்,
காழ் அகில் அம் புகை கொளீஇ, யாழிசை   110
அணி மிகு வரி மிஞிறு ஆர்ப்பத் தேங்கலந்து,
மணி நிறம் கொண்ட மா இருங் குஞ்சியின்
மலையவும் நிலத்தவும் சினையவும் சுனையவும்
வண்ண வண்ணத்த மலர் ஆய்பு விரைஇய,
தண் நறும் தொடையல் வெண்போழ்க் கண்ணி   115
நலம் பெறு சென்னி நாம் உற மிலைச்சி, (107-116)

The Handsome Hero

The hero was handsome with
oiled, curly hair, on which cool,
fragrant thakaram paste had been
rubbed.

He had run his fingers through
the wet hair, drying out dampness,
as he removed the knots.
Aromatic smoke from hard akil
wood had wafted through his hair.

The scents were strong enough
to attract bees, whose humming
created music with notes like
that from a lute.
In his sapphire-colored, thick,
dark hair, he wore a fragrant
flower strand made from different
colored flowers, chosen from the
mountains, land, tree branches and
springs.  He wore a  white thāzhai
strand on his lovely head.

He appeared like Murukan, causing
fear in those who saw him.

Notes:  பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆ முறை மூன்றும் அச்சப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 69).  அவிழா – அவிழ்த்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  மிஞிறு (111) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஞிமிறு என்றே இப்பெயர்ச்சொல் இலக்கியங்களில் பயில வழங்குவதாம்.  மிஞிறு என்றல் எழுத்துநிலை மாறுதல் என்ப.  நீலமணிபோல் பெண்ணின் கூந்தல்:  அகநானூறு 8 – மணி ஏர் ஐம்பால், நற்றிணை 10 – மணியின் தாழ்ந்த நல் நெடுங்கூந்தல், நற்றிணை 133 – மணி ஏர் ஐம்பால், 214 – மணி இருங்கதுப்பு, 245 – மணி மருள் ஐம்பால், 337 – மணி மருள் ஐம்பால், 366 – மணி ஏர் ஐம்பால், 374 – வீழ் மா மணிய புனை நெடுங்கூந்தல், கலித்தொகை 22 – மணி ஒளி விட்டன்ன ஐவகை, கலித்தொகை 77 – மாசு அற மண்ணுற்ற மணி ஏசும் இருங்கூந்தல், பரிபாடல் 10, குறிஞ்சிப்பாட்டு 69 – பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம் பின்னிருங் கூந்தல், 112 – மணி நிறம் கொண்ட மா இருங் குஞ்சி.

Meanings:   எண்ணெய் நீவிய – with oil rubbed, சுரி வளர் – grown with curls, நறும் காழ் – black wood, தண் நறும் தகரம் – cool fragrant thakaram paste, நறுமண மரவகை, Wax- flower dog-bane, Tabernae montana, கமழ – fragrant, மண்ணி – rubbed, ஈரம் புலர – drying the dampness, விரல் உளர்ப்பு – putting his fingers through his hair, அவிழா – அவிழ்த்து, removing knots, காழ் அகில் – dark akil, hardwood akil, அம் புகை – beautiful smoke, கொளீஇ – burned it (அளபெடை), யாழ் இசை – lute music, அணி மிகு வரி – song with beautiful lines, மிஞிறு – honey bees, ஆர்ப்ப – sang, தேம் கலந்து – with sweet fragrance (தேம் தேன் என்றதன் திரிபு), மணி நிறம் கொண்ட – with the color of sapphire, மா இருங் குஞ்சியின் – with big dark head hair, மலையவும் – from the mountains, நிலத்தவும் – from the land, சினையவும் – from branches, சுனையவும் – from springs, வண்ண வண்ணத்த மலர் – many different colors, ஆய்பு – chosen, analyzed, விரைஇய – mixed and tied together (அளபெடை), தண் நறும் தொடையல் – cool fragrant garland, வெள் போழ் கண்ணி – white thāzhai (fragrant screwpine) frond strand, நலம் பெற – made it beautiful, சென்னி – head, நாம் உற – causing fear thinking he was Murukan, causing awe thinking he was Murukan, மிலைச்சி – wearing

பைங்கால் பித்திகத்து ஆய் இதழ் அலரி
அம் தொடை ஒரு காழ் வளைஇச் செந்தீ
ஒண் பூம்பிண்டி ஒரு காது செரீஇ,
அம் தளிர்க் குவவு மொய்ம்பு அலைப்பச் சாந்து அருந்தி   120
மைந்து இறை கொண்ட மலர்ந்து ஏந்து அகலத்து
தொன்றுபடு நறும் தார் பூணொடு பொலிய,
செம் பொறிக்கு ஏற்ற வீங்கு இறைத் தடக் கையின்
வண்ண வரிவில் ஏந்தி அம்பு தெரிந்து,
நுண் வினைக் கச்சைத் தயக்கு அறக் கட்டி,   125
இயல் அணிப் பொலிந்த ஈகை வான் கழல்
துயல்வருந்தோறும் திருந்தடிக் கலாவ,  (117-127)

His hair was also adorned with
a strand made with jasmine
flowers with tender stems and
beautiful petals.
On one ear he had flame-like,
tender shoots of asoka tree that
rubbed on his thick shoulders.

His wide, lifted chest had sandal
paste and a fragrant garland worn
according to tradition, along with
ornaments.

Fitting the perfect lines of his
palms, he carried a tightly tied,
colored bow on his big forearm, and
checked his arrows.  He wore tightly
a finely made cotton girdle.  His
beautiful, gold warrior anklets
moved when he walked.

Notes:  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

Meanings:   பைங்கால் பித்திகத்து – of jasmine flowers with green stems, ஆய் இதழ் – beautiful petals, அலரி – flowers, அம் தொடை – beautifully strung, ஒரு காழ் – one strand, வளைஇ – placed it around (அளபெடை), செந்தீ – like red flame, ஒண் – bright, பூம்பிண்டி – flowers of asoka trees, Saraca indica, ஒருகாது செரீஇ – placed it behind one ear (செரீஇ – அளபெடை), அம் தளிர் – beautiful shoots, குவவு – thick, மொய்ம்பு – shoulders, அலைப்ப – to move, சாந்து அருந்தி – rubbed sandal paste, மைந்து இறை கொண்ட – strength residing, மலர்ந்து ஏந்து அகலத்து – on the wide lifted chest, தொன்றுபடு – ancient, according to tradition, நறும் தார் – fragrant garland, பூணொடு பொலிய – splendid with jewels, beautiful with jewels, செம் பொறிக்கு ஏற்ற – fitting the red lines of the palm, fitting the perfect lines of the palm, வீங்கு – tight, big, இறை – forearm, தடக் கையின் – with big hands, வண்ண வரி வில் ஏந்தி – holding a colorful tightly tied bow, அம்பு தெரிந்து – checked the arrows, நுண் வினை – finely made, கச்சை – cloth tied around the body, தயக்கு அற – without movement, tightly,  கட்டி – tied, இயல் அணிப் பொலிந்த – naturally beautiful, ஈகை – gold, வான் கழல் – superior gold war anklets, துயல்வருந்தொறும் – whenever they moved, திருந்தடி- beautiful feet, perfect feet, கலாவ – moved up and down

வந்தன நாய்கள்

முனை பாழ்படுக்கும் துன்னருந் துப்பின்,
பகை புறங் கண்ட பல்வேல் இளைஞரின்,
உரவுச்சினம் செருக்கித் துன்னுதொறும் வெகுளும்   130
முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி,
திளையாக் கண்ண வளைகுபு நெரிதர,
நடுங்குவனம் எழுந்து நல்லடி தளர்ந்தியாம்
இடும்பை கூர் மனத்தேம், மருண்டு புலம் படர, (128-134)

The Dogs Came

Like spear-wielding, young
warriors with unapproachable
strength who ruin hostile lands
and make enemies flee in fear,
dogs in rage, with bright teeth
looking like bamboo shoots,
sharp claws, and unblinking eyes,
came close to us and we trembled.

We rose up, but our steps faltered.
We were confused, fearful and thought
about running away to another place.

Meanings:   முனை பாழ்படுக்கும் – ruining enemy lands, துன் அரும் துப்பின் – with unapproachable strength, பகைப் புறம் கண்ட – on seeing the backs of enemy forces, பல் வேல் இளைஞரின் – like young warriors with spears (இளைஞரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), உரவுச்சினம் – with great anger, செருக்கி – became arrogant, துன்னுதொறும் – whenever they got closer, வெகுளும் – getting angry, முளை – bamboo shoots (white), வாள் – bright, sharp,  எயிற்ற – with  teeth, வள் உகிர் – sharp claws, large claws, ஞமலி – dogs, திளையாக் கண்ண – with eyes that did not blink, வளைகுபு – surrounded us, நெரிதர – they got close, நடுங்குவனம் – we trembled (தன்மைப் பன்மை), எழுந்து – rose up, நல்லடி தளர்ந்தியாம் இடும்பை கூர் மனத்தேம் – our steps faltered and we were with worried minds (தளர்ந்தியாம் – குற்றியலிகரம், தளர்ந்து யாம்), மருண்டு – getting confused, புலம் படர – running away from there

நாய்களை அடக்கிக் கெடுதி வினவிய தலைவன்

மாறு பொருது ஓட்டிய புகல்வின் வேறு புலத்து   135
ஆ காண் விடையின் அணிபெற வந்து எம்
அலமரல் ஆயிடை வெரூஉதல் அஞ்சி,
மெல்லிய இனிய மேவரக் கிளந்து எம்
ஐம்பால் ஆய் கவின் ஏத்தி, “ஒண்தொடி
அசைமென் சாயல் அவ்வாங்கு உந்தி,   140
மட மதர் மழைக் கண் இளையீர்! இறந்த
கெடுதியும் உடையேன்” என்றனன்.  (135-142)

The Hero Controlled the Dogs

He came to us like a bull that
fought and chased away its
enemies, and eyed cows in a
new land.  He understood our
fear, worried about it,
and spoke to us gingerly to
alleviate our worries.

He praised our five-part braids,
tender nature, bright bangles and
beauty adored by many, and said,
“O young women of tender nature,
beautiful curved navel and delicate,
proud, moist eyes, the animal I was
hunting escaped from me”.

Notes:  அலமரல் – அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (தொல்காப்பியம், உரியியல் 14).  சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம்,  உரியியல் 29).

Meanings:   மாறு பொருது ஓட்டிய – chased away enemies by fighting with them, புகல்வின் – with arrogance, வேறு புலத்து – in a new land, ஆ காண் – on seeing the cows, விடையின் – like a bull (இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), அணிபெற வந்து – came beautifully, எம் அலமரல் – our distress, ஆயிடை – at that time, வெரூஉதல் – since we were afraid (அளபெடை), அஞ்சி – fearing, மெல்லிய இனிய – delicately and sweetly, மேவரக் கிளந்து – uttered suitable words (for our fear to be eliminated), எம் ஐம்பால் – our five part braids, ஆய் கவின் – delicate beauty, beauty that has been analyzed by others, ஏத்தி – praised, ஒண்தொடி – bright bangles, அசைமென் சாயல் – moving tender and delicate nature, அவ்வாங்கு உந்தி – beautiful curved navel, மடமதர் மழைக்கண் – delicate proud moist eyes, இளையீர் – O young women, இறந்த – ran away (from me), கெடுதியும் உடையேன் – the animal I was hunting escaped from me

நங்கையின் சொல்லை எதிர்பார்த்து நின்றான் நாயகன்

——– ———- ———– அதன் எதிர்
சொல்லேம் ஆதலின், அல்லாந்து கலங்கிக்,
“கெடுதியும் விடீஇர் ஆயின், எம்மொடு
சொல்லலும் பழியோ மெல்லியலீர்” என,   145
நைவளம் பழுநிய பாலை வல்லோன்
கை கவர் நரம்பின் இம்மென இமிரும்
மாதர் வண்டொடு சுரும்பு நயந்து இறுத்த
தாது அவிழ் அலரித் தா சினை பிளந்து,
தாறு அடு களிற்றின் வீறு பெற ஓச்சிக்,   150
கல்லென் சுற்றக் கடுங்குரல் அவித்து, எம்
சொல்லற் பாணி நின்றனன் ஆக, (142-152)

He Waited for an Answer

We did not respond to his
words.
He became sad and confused.
“Young ladies!  Even if you
don’t tell me whether you saw
the animal that escaped from me,
is it so wrong to talk to me?”

He broke off a tree branch
……….whose pollen-filled flowers
……….were swarmed by female bees
……….that attract male bees which
……….hum, creating sweet music like
……….that from the plucked strings
……….of a skilled musician’s pālai
……….lute playing naivalam melody,
raised it with strength like a bull
elephant that defied its keeper’s goad.
He controlled his loudly barking dogs.
Their barking sounds died down and
he waited for our reply.

Notes:  ஒப்புமை – குறிஞ்சிப்பாட்டு 146 – நைவளம் பழுநிய பாலை வல்லோன், சிறுபாணாற்றுப்படை 36 – நைவளம் பழுநிய நயந்தெரி பாலை.  மாதர் – மாதர் காதல் (தொல்காப்பியம், உரியியல் 32).  மாதர் (148) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காதல்.  இக்குறிப்பால் மாதர் வண்டென்றதற்குப் பெடை பெடை வண்டு எனப் பொருள் கூறப்பட்டது.

Meanings:   அதன் எதிர் சொல்லேம் – we did not talk in response to that, ஆதலின் – so, அல்லாந்து கலங்கி – he became sad and confused, கெடுதியும் விடீஇர் ஆயின் – even if you don’t show me where it escaped (the animal that he was hunting), எம்மோடு – with me, சொல்லலும் – to talk, பழியோ – is it so wrong, மெல்லியலீர் – O delicate young woman, என – thus, நைவளம் பழுநிய பாலை வல்லோன் – like a musician who plays the nattapādai melody perfectly with his pālai lute, கை கவர் நரம்பின் – with lute strings  played by his hands, இம்மென இமிரும் – sounding sweetly (இம்மென – ஒலிக்குறிப்பு), மாதர் வண்டொடு – with loving bees, with their female bees, சுரும்பு நயந்து இறுத்த – male bees come and stay with love, தாது – pollen, அவிழ் – open, bloom, அலரி – flowers, தா சினை – strong tree branches, பிளந்து – breaking, தாறு அடு களிற்றின் – like a male elephant that is not controlled by the goad (களிற்றின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), வீறு பெற ஓச்சி – raising victoriously, கல்லென் சுற்றம் – loud sounding pack (of dogs), கடுங்குரல் அவித்து – he controlled the loud barks, எம் சொல்லற் பாணி – for the time for us to reply,  நின்றனன் ஆக – he waited

புனம் வந்த சின யானை, நடுங்கிய நங்கையர்

இருவி வேய்ந்த குறுங்கால் குரம்பைப்
பிணை ஏர் நோக்கின் மனையோள் மடுப்பத்
தேம்பிழி தேறல் மாந்தி மகிழ் சிறந்து   155
சேமம் மடிந்த பொழுதின் வாய்மடுத்து,
இரும் புனம் நிழத்தலின் சிறுமை நோனாது,
அரவு உறழ் அம் சிலை கொளீஇ, நோய்மிக்கு,
உரவுச்சின முன்பால் உடல் சினம் செருக்கிக்
கணை விடு புடையூக் கானம் கல்லென,   160
மடி விடு வீளையர் வெடிபடுத்து எதிரக்
கார்ப் பெயல் உருமிற் பிளிறிச் சீர்த் தக
இரும்பிணர்த் தடக்கை இரு நிலம் சேர்த்திச்
சினம் திகழ் கடாஅம் செருக்கி, மரம் கொல்பு
மையல் வேழம் மடங்கலின் எதிர்தர,   165
உய்வு இடம் அறியேம் ஆகி, ஒய்யெனத்
திருந்து கோல் எல் வளை தெழிப்ப, நாணு மறந்து,
விதுப்புறு மனத்தேம் விரைந்து அவற் பொருந்திச்
சூர் உறு மஞ்ஞையின் நடுங்க, (153-169)

Angry Elephant that came to the Forest,
and made the Young Women tremble

In a short-legged hut
woven with millet stubble,
a wife with the looks of a
beautiful doe, gave her husband
clear liquor to drink.
Drunk happily, he forgot to tend
his millet field.  A bull elephant
entered and ate the millet,
leaving only a small area untouched.

The farmer, whose rage was visible
on his body, lifted his snake-like,
beautiful bow and shot arrows, and
along with his workers created sounds
with rattles and other gadgets, and
whistled loudly in the field.

The elephant screamed like rainy
season’s thunder, and hit its black,
rough trunk with rage on the big
field with arrogance and rage.
Being in rut, it ruined nearby trees
and ran in confusion towards us.

Not knowing where to run and
forgetting our modesty, we ran
towards the young man and hugged
him, as our bright bangles jingled.
We trembled with fear like
peacocks possessed by gods.

Notes:   குடித்த பின் காவலை மறந்து: தேம்பிழி தேறல் மாந்தி மகிழ் சிறந்து சேமம் மடிந்த பொழுதின் 155-156, அகநானூறு 348 – பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டுக் கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கிக் குறவர் முறித் தழை மகளிர் மடுப்ப மாந்தி அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்துழி.  வீளையர் 161 – C. ஜெகந்நாதாசாரியர் உரை – மனையோள் என்னும் ஒருமை சுட்டிய பெயர், மேல் வீளையர் என வருதலால் பன்மை சுட்டியவாறுமாம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – இளைஞர் சீழ்க்கையராய்.   தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

Meanings:   இருவி – grass stubble, grass hay, வேய்ந்த – woven, made, குறுங்கால் – short legged, குரம்பை – huts, பிணை – female deer, ஏர் நோக்கின் – with beautiful looks, மனையோள் – wife, மடுப்ப – gave to drink, தேம்பிழி – made from honey (தேம் தேன் என்றதன் திரிபு), தேறல் – liquor, மாந்தி – drank, மகிழ்சிறந்து – very happy, சேமம் – guarding, protecting, மடிந்த பொழுதில் – when it stopped, when he forgot to guard, வாய் மடுத்து – eating with the mouth, இரும்புனம் நிழத்தலின் – since the huge field (millet field) was ruined, சிறுமை நோனாது – upset that only a small section was untouched (by an elephant), அரவு உறழ் – like a snake (உறழ் – உவம உருபு), அம் சிலை – beautiful bow, கொளீஇ – strung (அளபெடை), நோய் மிக்கு – very upset, உரவுச்சின – great anger, முன்பால் – with might, உடல் சினம் செருக்கி – with arrogance and rage appearing on the body, கணை விடு – released the arrows (கணைவிடு என்றவிடத்து ‘விடுபு’ என்ற செய்பு என் எச்சம் ‘விடு’ என விகாரப்பட்டு நின்றது), புடையூ – hitting rattles and other gadgets and creating sounds (செய்யூ என்னெச்சம்), கானம் – forest, கல் என – with a loud noise, மடி விடு – folded lips, வீளையர் – one who whistled, வெடிபடுத்து எதிர – made loud noises and chased away, கார்ப் பெயல் உருமின் – made noises like the rainy season’s thunder, பிளிறி – screamed, சீர் தக – to match pride, இரும் பிணர்த் தடக்கை – black or black rough trunk, இரு நிலம் சேர்த்தி – placed it on the land, hit it against the big land, சினம் திகழ் கடாஅம் – with great anger and in rut (கடாஅம் – அளபெடை), செருக்கி – with arrogance, with hostility, மரம் கொல்பு – ruined the trees, மையல் வேழம் – confused male elephant, மடங்கலின் – like death (இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), எதிர்தர – came from the other side, உய்விடம் அறியேம் ஆகி – not knowing a safe place to go to, ஒய்யென – rapidly (விரைவுக்குறிப்பு), திருந்து கோல் – perfectly round, எல் வளை – bright bangles, தெழிப்ப – sounding, நாணு மறந்து – forgetting shyness, விதுப்பு உறு மனத்தேம் – with our trembling minds, விரைந்து – rapidly, அவற் பொருந்தி – went and hugged him, சூர் உறு மஞ்ஞையின் – like peacocks that are possessed by gods (மஞ்ஞையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), நடுங்க – trembling

அம்பு எய்தி அன்பு செய்தான் தலைவன்

——— ———— வார் கோல்
உடு உறும் பகழி வாங்கிக் கடு விசை   170
அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின்,
புண் உமிழ் குருதி முகம் பாய்ந்து இழிதரப்
புள்ளி வரி நுதல் சிதைய நில்லாது,
அயர்ந்து புறங்கொடுத்த பின்னர் நெடுவேள்
அணங்கு உறு மகளிர் ஆடு களம் கடுப்பத் (169-175)

The Hero saved us with his Arrows

He placed his arrow with long shaft
on the nocking point of the bowstring,
pulled the string back and shot it swiftly,
piercing the beautiful face of the
noble elephant, and blood flowed down
the wound on its face with dots and lines.

Its forehead shattered.  Forgetting itself
it ran away, showing its back.  The place
appeared like a veriyāttam ground set
up to appease Murukan who hurt women.

Notes:  புள்ளி வரி (173) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – புகர்களும் வரிகளும், C. ஜெகந்நாதாசாரியர் உரை – புள்ளி வரி, ஒரு பொருட்பன்மொழி.  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).

Meanings:   வார் கோல் – long shaft, உடு – where arrows are pressed against the bowstring before releasing, nocking point, உறும் – placed, பகழி – arrows, வாங்கி – pulled it back, கடு விசை – shot it swiftly, அண்ணல் யானை – esteemed/prestigious elephant, அணி முகத்து அழுத்தலின் – since the arrow entered its beautiful face, புண் உமிழ் குருதி – blood from the wound, முகம் பாய்ந்து – spread on its face, இழிதர – flowing down, புள்ளி வரி – dots and stripes, நுதல் சிதைய – forehead got ruined, நில்லாது – without standing there, அயர்ந்து – forgetting (itself), புறங்கொடுத்த பின்னர் – after it showed the back and ran, நெடுவேள் – Murukan, அணங்கு உறு மகளிர் – women who are hurt by Murukan’s anger, ஆடு களம் கடுப்ப – like a veriyāttam ground (கடுப்ப – உவம உருபு)

திணி நிலைக் கடம்பின் திரள் அரை வளைஇய,
துணையறை மாலையின் கை பிணி விடேஎம்;
நுரையுடைக் கலுழி பாய்தலின், உரவுத் திரை
அடுங்கரை வாழையின் நடுங்கப், பெருந்தகை
“அஞ்சில் ஓதி! அசையல் யாவதும்   180
அஞ்சல் ஓம்பு! நின் அணி நலம் நுகர்கு!” என,
மாசு அறு சுடர் நுதல் நீவி நீடு நினைந்து,
என் முகம் நோக்கி நக்கனன்;   (176-183)

Like garlands that are tied
around a thick kadampam tree
trunk, we clasped our hands together
without releasing them.  We trembled
like banana trees on the shores of a
flooded, raging, foaming river
hit by powerful waves.

The noble man looked at my friend
and said, “O young woman with
beautiful, soft hair!
Rid your fear!  I will enjoy your
beauty and virtue,” and rubbed
her perfect, shining forehead,
thought for a long time,
looked at my face, and smiled.

Notes:   துணை அறை மாலை – நச்சினார்க்கினியர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மகளிர் ஒழுங்குக்கு ஒப்புச் சாற்றுதலையுடைய மாலையைப் போன்று, ‘கடம்பினை முருகனாகக் கருதி மாலை சூடுதல் மரபு’ (பொ. வே. சோமசுந்தரனார் உரை).

Meanings:   திணி நிலைக் கடம்பின் – of strong kadampam tree’s, Anthocephalus cadamba, Kadampa Oak, திரள் அரை – thick trunk, வளைஇய – surrounded (அளபெடை), துணை அறை மாலையின் – like tied garlands that announce the virtue of women (மாலையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது  ), கை பிணி விடேஎம் – we did not let go of our clasped hands, நுரையுடை – having foam, கலுழி – the muddied water, the flood water, பாய்தலின் – since it leapt and flowed, உரவுத்திரை – powerful waves, அடுங்கரை – attacking the shores, வாழையின் நடுங்க – like the banana trees that shake (வாழையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது  ), பெருந்தகை – the noble man, the leader, அஞ்சில் ஓதி – O woman with beautiful fine hair (அன்மொழித்தொகை), அசையல் – do not be confused, யாவதும் – totally, அஞ்சல் ஓம்பு – remove your fear, நின் அணி நலம் – your beauty and virtue, நுகர்கு என – I will enjoy them, மாசு அறு – blemish-less, சுடர் நுதல் – shining forehead, நீவி – rubbed, நீடு நினைந்து – thought for a long while, என் முகம் நோக்கி – looked at my face, நக்கனன் – he smiled

தலைவி தலைவனோடு கூடல்

——— ————— அந்நிலை,
நாணும் உட்கும் நண்ணுவழி அடைதர,
ஒய்யெனப் பிரியவும் விடாஅன் கவைஇ,   185
ஆகம் அடைய முயங்கலின், (183-186)

The Hero and the Heroine United

Because of shyness and fear
my friend tried to slip
away from his embrace.
But without letting her go
he hugged her tightly,
holding her to his chest.

Meanings:   அந்நிலை – in that state, நாணும் உட்கும் – shyness and fear, நண்ணுவழி – when he came close, அடைதர – they appeared, ஒய்யென – rapidly, பிரியவும் விடாஅன் – he did not let her escape from his embrace (விடாஅன் – அளபெடை), கவைஇ – he hugged (அளபெடை), ஆகம் அடைய முயங்கலின் – since he hugged her tightly to his chest

தலைவன் நாட்டின் சிறப்பு

———- ———அவ்வழி
பழுமிளகு உக்க பாறை நெடுஞ்சுனை
முழு முதற் கொக்கின் தீங்கனி உதிர்ந்தெனப்,
புள் எறி பிரசமொடு ஈண்டிப் பலவின்
நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல்   190
நீர் செத்து அயின்ற தோகை வியல் ஊர்ச்
சாறு கொள் ஆங்கண் விழவுக் களம் நந்தி,
அரிக்கூட்டு இன்னியம் கறங்க ஆடுமகள்
கயிறு ஊர் பாணியின் தளரும் சாரல்
வரையர மகளிரில் சாஅய் விழைதக,   195
விண் பொரும் சென்னிக் கிளைஇய காந்தள்
தண் கமழ் அலரி தாஅய் நன் பல
வம்பு விரி களத்தின் கவின் பெறப் பொலிந்த
குன்று கெழு நாடன் (186-199)

The Splendor of the Hero’s Country

In the lord’s country, ripe
pepper had fallen on a boulder
which had a large pond into which
sweet mangoes had dropped from
a tree with a large trunk, honey was
scattered by bees, and the juice from
cracked, oozing jackfruits had also
fallen in, creating aged liquor.

Thinking it was water, a peacock
drank it, and tottered like a tired
female dancer who had danced on a
tight rope to sweet music played with
rhythm, in the wide town’s celebration
grounds during the festive days.

Since mountain goddesses dance on
the high summits that are delightful
to the eyes, glory lilies with cool fragrant
flowers, that grow on the sky-high peaks,
have spread to the lower levels, making
his mountain appear beautiful like a
festival ground covered with fine fabric.

Notes:  நச்சினார்க்கினியர் உரை (187-191) – மிளகு உக்க பாறை அந்நிலத்து மாக்கள் உறைகின்ற ஊராகவும், நெடுஞ்சுனை தலைவன் குடியாகவும், மாம்பழத்தாலும் பலாப்பழத்தாலும் விளைந்த தேறல் தந்தையாலும் தாயாலும் உளனாகிய தலைவனாகவும், பிரசம் இவரைக்கூட்டின பால்வரை தெய்வமாகவும், அதனை உண்ட மயில் உயர்ந்த தலைவனைத் தன் குலத்திற்கு ஓத்தானாகக் கருதி நுகர்ந்த தலைவியாகவும், அத் தேறலில் பிறந்த களிப்பு களவொழுக்கத்திற் பிறந்த பேரின்பமாகவும், மயில் ஆடவாற்றாத் தன்மை வருந்திக் குறைந்த தன்மையாகவும் உள்ளுறை உவமம் கொள்க.  நச்சினார்க்கினியர் உரை (196-199)– உயர் நிலத்தே நின்று மணக்கின்ற காந்தள் வரையர மகளிராற் கீழ் நிலத்தே பரந்து அவ்விடத்தைக் கச்சு விரித்தாற்போல் அழகு பெறுத்தும் என்றதனால் நம்மில் உயர்ச்சியுடைய தலைவன் நமது நல்வினையால் தனது பெருமைதானும் ஒழிந்து இவ்விடத்தே வந்து கூடி நமக்கும் உயர்ச்சியுளதாக்கி நம்மை அழகு பெறுத்துகின்றான் என்று உள்ளுறை உவமம் எய்திற்று.  அகநானூறு 2 – கோழ் இலை வாழைக் கோள் முதிர் பெருங்குலை ஊழுறு தீங்கனி உண்ணுநர்த் தடுத்த சாரல் பலவின் சுளையொடு ஊழ்படு பாறை நெடுஞ்சுனை விளைந்த தேறல் அறியாது உண்ட கடுவன் அயலது கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்.  There are references to mountain goddesses in Ainkurunūru 191, Natrinai 34, 182, 185, 192, 356, Kurunthokai 100, 218 and Akanānūru 62, 162, 198, 288, and 342.

Meanings:   அவ்வழி – that way/beautiful path, பழு மிளகு உக்க பாறை – rocks on which ripe pepper have fallen (பழுமிளகு – வினைத்தொகை), நெடுஞ்சுனை – big spring, long spring, முழு முதல் – big base, big trunk, கொக்கின் – mango tree’s, தீம் கனி உதிர்ந்தென – since sweet fruits had dropped, புள் எறி – bees scattered, பிரசமொடு – with honey, ஈண்டி – together, பலவின் – of jackfruit trees, நெகிழ்ந்து உகு – cracked and oozing, swollen and oozing, நறும் பழம் – sweet fruits, விளைந்த தேறல் – aged liquor, நீர் செத்து – thought it was water, அயின்ற – drank, தோகை – peacock, வியல் ஊர் – wide town, சாறு கொள் – when festivities happen, ஆங்கண் – there, விழவு களம் – celebration grounds, நந்தி – filled, அரி – sharp tones, rhythm, கூட்டு – together, இன் இயம் கறங்க – sweet music being played, ஆடுமகள் – dancing girl, கயிறு ஊர் – moving on the ropes (tight ropes), பாணியின் – with rhythm, தளரும் – moves delicately (peacocks), சாரல் – mountain slopes, வரையர மகளிரில் – because of the dances of the mountain goddesses, சாஅய் – ruined (அளபெடை), விழைதக – desirable to those who see, விண் பொரும் – touching the skies, சென்னி – summits, mountain tops, கிளைஇய காந்தள் – branching glory lily plants (கிளைஇய – அளபெடை), தண் கமழ் அலரி – cool fragrant flowers, தாஅய் – have spread (அளபெடை), நன் – fine, பல – many, வம்பு விரி – cloth spread, களத்தின் – like a festival ground (இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), கவின் பெற பொலிந்த – beautiful and splendid, குன்று கெழு நாடன் – man from the mountain-filled country

இல்லறம் நாடினான் இனியவன்

—————- —–எம் விழைதரு பெருவிறல்
உள்ளத் தன்மை உள்ளினன் கொண்டு,   200
சாறு அயர்ந்தன்ன மிடாஅச் சொன்றி
வருநர்க்கு வரையா வள நகர் பொற்ப,
மலரத் திறந்த வாயில் பலர் உணப்
பைந்நிணம் ஒழுகிய நெய்ம் மலி அடிசில்
வசையில் வான் திணைப் புரையோர் கடும்பொடு,   205
விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னோடு உண்டலும் புரைவது என்று ஆங்கு,
அறம் புணை ஆகத் தேற்றிப், (199-208)

The Sweet Man Desired Marriage

The victorious man told us about how they
as a couple would feed everybody who came
to their big, splendid house with an open door.
Food would be cooked in big pots as done on
festive days and meals would be served,
cooked with rice, abundant amounts of ghee
and fresh fat.

He said to my friend, “O noble one!
After those of great heritage and relatives
have eaten their full, we will eat together the
left-over food.  Eating with you will be special.
We will live with justice, and be a raft to each
other in marriage”.

Notes:  பொற்பு – பொற்பே பொலிவு (தொல்காப்பியம், உரியியல் 39).

Meanings:   எம் விழைதரு – desiring us, பெருவிறல் – the man who is greatly victorious (பெருவிறல் – அன்மொழித்தொகை), உள்ளத் தன்மை – about the mind (of the heroine), உள்ளினன் கொண்டு – he thought about it, சாறு அயர்ந்து அன்ன – like how festivals were celebrated, மிடாஅ – in a big pot (அளபெடை), சொன்றி – rice, வருநர்க்கு – for those who come, வரையா – without limit, வள நகர் – rich house, பொற்ப – to be splendid, மலரத் திறந்த – wide open, வாயில் – entrance, பலர் உண – for many to eat (உண உண்ண என்பதன் விகாரம், இடைக்குறை விகாரம்), பை நிணம் – fresh fat, ஒழுகிய – flowing, நெய்ம் மலி அடிசில் – ghee filled rice, வசை இல் – without fault, வான் திணை – superior clans, noble heritage, புரையோர் – superior people, கடும்பொடு – with relatives, விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் – left over after they are fed festive meals, பெருந்தகை – noble one, நின்னோடு உண்டலும் – eating with you, புரைவது – it will be great, என்று ஆங்கு – thus he said there, அறம் – justice, charity, புணையாகத் தேற்றி – he explained that they will be a raft to each other

ஆணை தந்து ஆற்றுவித்தான் தலைவன்

————– பிறங்கு மலை
மீமிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழுது,
ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி, 210
அம் தீம் தெள் நீர் குடித்தலின் நெஞ்சமர்ந்து,
அரு விடர் அமைந்த களிறுதரு புணர்ச்சி
வான் உரி உறையுள் வயங்கியோர் அவாவும்
பூ மலி சோலை அப்பகல் கழிப்பி, (208-214)

Promises He made to Comfort Us

He praised and worshipped
the god of the huge mountains
with his palms pressed together,
made promises,
and drank fine, clear sweet water,
in order to unite with my friend.

After being united by an elephant in the
harsh forest, they spent the day in a grove
with flowers, desired by the celestials
who live in the skies.

Meanings:  பிறங்கு மலை – huge mountains, bright mountains, மீமிசை – above (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), கடவுள் – God, Murukan, வாழ்த்தி – praised, கைதொழுது – worshipped with palms pressed together, ஏம் உறு – to attain happiness (ஏம் – ஏமம் என்பதன் கடைக்குறை), வஞ்சினம் – promises, வாய்மையின் – truthfully, தேற்றி – he explained, அம் – beautiful, தீம் –sweet, தெள் நீர் – clear water, குடித்தலின் – since he drank, நெஞ்சு அமர்ந்து – hearts united, அரு விடர் அமைந்த – in the difficult forest, களிறுதரு புணர்ச்சி – union brought by a male elephant, வான் உரி உறையுள் – residing in the skies which is their place (உரி – உரிய), வயங்கியோர் – the celestial beings, thēvars, அவாவும் – they desire, பூ மலி சோலை – flower-filled grove, அப்பகல் – that day time, கழிப்பி – we spent

வந்தது மாலைக் காலம்!

எல்லை செல்ல ஏழ் ஊர்பு இறைஞ்சிப்   215
பல் கதிர் மண்டிலம் கல் சேர்பு மறைய,
மான் கணம் மர முதல் தெவிட்ட, ஆன் கணம்
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர,
ஏங்கு வயிர் இசைய கொடுவாய் அன்றில்
ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவப்,   220
பாம்பு மணி உமிழப், பல் வயின் கோவலர்
ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற,
ஆம்பல் ஆய் இதழ் கூம்புவிட, வள மனைப்
பூந்தொடி மகளிர் சுடர் தலைக் கொளுவி,
அந்தி அந்தணர் அயரக், கானவர்   225
விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த,
வானம் மாமலைவாய் சூழ்பு கறுப்பக் கானம்
கல்லென்று இரட்ட புள்ளினம் ஒலிப்பச்,
சினைஇய வேந்தன் செல் சமம் கடுப்பத்
துனைஇய மாலை துன்னுதல் காணூஉ. (215-230)

Evening time arrived

As evening ended, the sun that
rides a chariot with seven horses
disappeared behind the mountains.
Herds of deer gathered under trees.
Cows raised their voices, calling
their calves as they entered their
stables filling up the spaces.

A black ibis with curved beak called
out for its mate from a frond in the tall,
black palmyra tree, and the calls
resembled the toots of a vayir horn.
Snakes spit gems and cattle herders
played clear sounding āmpal tunes
continuously with their sweet flutes.

Āmpal flowers opened their lovely
petals, women in rich homes wearing
bangles with flower patterns lit lamps
with wicks, Brahmins performed their
twilight rituals, forest dwellers lit fire
torches in their sky-high platforms,
dark-colored clouds surrounded the
mountains, rhythmic sounds arose,
and flocks of birds were chirping in the
forest.

Evening came fast, like an enraged
king going to a victorious battlefield.

Notes:  Puranānūru 294, Akanānūru 72, 92, 138, 192, 372, Kurunthokai 239 and Natrinai 255, have references to snakes spitting gems.  ஆ மன்றத்தில் புகுதல்: அகநானூறு 14 – கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும், அகநானூறு 63 –  கன்று காணாது புன்கண்ண செவி சாய்த்து மன்று நிறை பைதல் கூரப் பல உடன் கறவை, அகநானூறு 64 – மன்று நிறை புகுதரும் ஆ, அகநானூறு 253 – கன்றுடைப் பெரு நிரை மன்று நிறை தரூஉம், கலித்தொகை 119 – கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர, புறநானூறு 387 – மன்று நிறையும் நிரை, குறிஞ்சிப்பாட்டு 217 –  ஆன் கணம் கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர.  துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).

Meanings:   எல்லை செல்ல – making daytime end, ஏழ் ஊர்பு – riding a chariot with seven horses (ஏழ் – ஆகுபெயர், ஏழு குதிரைகளைக் காட்டிற்று), பல் கதிர் மண்டிலம் –sun with many rays, இறைஞ்சி – riding, கல் சேர்பு – reaching the mountains, மறைய – it hid, மான் கணம் – deer herd, மர முதல் – near the tree trunks, தெவிட்ட – gather, chew their cud (Po. Ve. Somasundaranar gives both meanings for தெவிட்டல் – திரளுதல் and அசையிடுதல்), ஆன் கணம் – herd of cows, கன்று பயிர் குரல – with voices calling their calves, மன்று – stables, நிறை புகுதர – entered filling them, ஏங்கு வயிர் இசைய – like the sounds of a vayir horn, கொடுவாய் – curved beaks, அன்றில் – black ibis, ஓங்கு இரும் பெண்ணை – tall black palmyra tree, அக மடல் – from inside the fronds, அகவ – calls (its mate), பாம்பு மணி உமிழ – snakes drop gems, பல்வயின் – many places, கோவலர் – cattle herders, ஆம்பல் தீங்குழல் – āmpal tune with their sweet flutes, தெள் விளி பயிற்ற – playing clear music continuously, ஆம்பல் ஆய் இதழ் கூம்பு விட – beautiful white waterlily petals have opened from closed/pointed buds, வள மனை – wealthy homes, பூந்தொடி மகளிர் – women wearing bangles which have flower patterns, சுடர்தலைக் கொளுவி – light the lamps with wicks, அந்தி அந்தணர் அயர – Brahmins perform their rituals in the twilight hours, கானவர் – forest dwellers, விண் தோய் பணவை மிசை – from their sky-high platforms, ஞெகிழி பொத்த – light fire torches, use kindling sticks and start flames, வானம் – cloud, மாமலைவாய் – in the big mountains, சூழ்பு – surrounding, கறுப்ப – becoming black in color, கானம் கல்லென்று இரட்ட –  rhythmic sounds are heard in the forest, புள்ளினம் ஒலிப்ப – flocks of birds call, சினைஇய வேந்தன் – an angry king (சினைஇய – அளபெடை), செல் சமம் – going to a victorious battle, கடுப்ப – like (உவம உருபு), துனைஇய மாலை – evening that is arriving fast (துனைஇய – அளபெடை), துன்னுதல் – getting close, காணூஉ – on seeing that (அளபெடை, செய்யூ என்னும் வாய்பாட்டு வினையெச்சம்)

மன்றலில் மணப்பேன் என்று கூறிப் பிரிதல்

“நேர் இறை முன் கை பற்றி நுமர் தர,
நாடு அறி நன் மணம் அயர்கம் சில் நாள்!
கலங்கல் ஓம்புமின், இலங்கு இழையீர்!” என,
ஈர நல் மொழி தீரக் கூறித்,
துணை புணர் ஏற்றின் எம்மொடு வந்து,   235
துஞ்சா முழவின் மூதூர் வாயில்
உண் துறை நிறுத்துப் பெயர்ந்தனன். (231-237)

Promise of wedding before leaving

On seeing that, he consoled her
and said, “Woman with splendid
jewels!  Your family,
holding your delicate forearms,
will give you to me in marriage.

I will conduct a fine wedding
that the whole country will know
about in a few days.  Do not
worry!  Get rid of your sorrow.”

He accompanied us like a bull
that had united with its mate.

He left us near the water tank
entrance of our ancient town
where drums never rest,
and then he went his way.

Notes:  அகநானூறு 349 – வளை செறிந்த முன் கை வரைந்து தாம் பிணித்த.

Meanings:  நேர் இறை – delicate wrists, perfect wrists, முன்கை பற்றி – holding the forearms, நுமர் தர – your relatives give you (in marriage to me), நாடறி – have the whole country know about it, நன்மணம் – fine marriage, அயர்கம் – I will conduct, சில் நாள் – in a few days, கலங்கல் – worrying, ஓம்புமின் – avoid it (ஓம்புமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), இலங்கு இழையீர் – O women with splendid jewels, என – thus, நன் மொழி – fine words, consoling words, தீரக் கூறி – words to remove her sorrow, துணை புணர் ஏற்றின் – like a bull that united with its mate (ஏற்றின் – ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது), எம்மொடு வந்து – he came with us, துஞ்சா முழவின் மூதூர் – ancient town with non-stopping drum sounds, வாயில் – gate, உண் துறை – water tank port, நிறுத்துப் பெயர்ந்தனன் – he dropped us and left

தொடர்ந்தது தோன்றலின் உறவு!

—————- ————– அதற்கொண்டு,
அன்றை அன்ன விருப்பொடு என்றும்
இரவரல் மாலையனே வருதோறும்
காவலர் கடுகினும், கத நாய் குரைப்பினும்,  240
நீ துயில் எழினும், நிலவு வெளிப்படினும்,
வேய் புரை மென் தோள் இன்துயில்
பெறாஅன் பெயரினும், முனியல் உறாஅன்,
இளமையின் இகந்தன்றும் இலனே, வளமையில்
தன் நிலை தீர்ந்தன்றும் இலனே; (237-245)

The Relationship Continues

Since that day,
he has been in love with her
with the same intensity that
was there on the first day.

He comes every night to see her.
He does not nurture hatred, even
if the guards are alert, or angry dogs
bark, or you wake up from sleep, or
there is bright moonlight, or if there
are misunderstood cues to meet him,
and he is unable to get sweet sleep
with my friend with bamboo-like,
delicate arms.  He is not past his
youth, nor is he arrogant because
of his wealth.  He is not removed
from the fine traits of his clan.

Notes:  இர (239) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இரா, இறுதியினின்ற ஆகாரம் குறுகி ‘இர’ என நின்றது.  குறி எனப்படுவது இரவினும் பகலினும் அறியக் கிளந்த ஆற்றது என்ப (தொல்காப்பியம், களவியல் 38).   அகநானூறு 122 – இரும்பிழி மாரி அழுங்கல் மூதூர் விழவு இன்றாயினும் துஞ்சாது ஆகும், மல்லல் ஆவணம் மறுகுடன் மடியின் வல் உரைக் கடும் சொல் அன்னை துஞ்சாள், பிணி கோள் அருஞ்சிறை அன்னை துஞ்சின் துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர், இலங்கு வேல் இளையர் துஞ்சின் வை எயிற்று வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழும், அரவவாய் ஞமலி மகிழாது மடியின் பகலுரு உறழ நிலவுக் கான்று விசும்பின் அகல்வாய் மண்டிலம் நின்று விரியும்மே, திங்கள் கல் சேர்வு கனை இருள் மடியின் இல் எலி வல்சி வல்வாய்க் கூகை கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும், வளைக் கண் சேவல் வாளாது மடியின் மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும்.  மாலை (239) – தன்மை.  மாலை இயல்பே.(தொல்காப்பியம், உரியியல் 17).  மாலையனே – ஏகாரம் ஈற்றசை.

Meanings:   அதற்கொண்டு – since that day of their union, அன்றை அன்ன – like the first day (with the same love), விருப்பொடு – with desire, என்றும் – forever, இரவரல் மாலையனே – it has been his nature to come at night (இர – இரா, இறுதியினின்ற ஆகாரம் குறுகி இர என நின்றது), வருதோறும் – whenever he comes, காவலர் கடுகினும் – even if the guards react fast, கத நாய் குரைப்பினும் – and if angry dogs bark, நீ துயில் எழினும் – even if you wake up from your sleep, நிலவு வெளிப்படினும் – even if there is a lot of moon light, வேய் புரை மென் தோள் – bamboo like delicate arms (புரை – உவம உருபு, a comparison word), இன்துயில் – sweet sleep, என்றும் – always, பெறாஅன் – he does not get (பெறாஅன்  – அளபெடை), பெயரினும் – even if he comes and leaves and is unable to see her due to misunderstood cue, முனியல் உறாஅன் – he does not hate (உறாஅன் – அளபெடை), இளமையின் இகந்தன்றும் இலனே – he is not past his youth (இலனே – ஏகாரம் அசை நிலை, an expletive), வளமையில் – due to his wealth, தன் நிலை – his status, his clan, தீர்ந்தன்றும் இலன் – he is not removed

தலைவியின் துயரம்

———- ———- கொன் ஊர்
மாய வரவின் இயல்பு நினைஇத் தேற்றி,
நீர் எறி மலரின் சாஅய் இதழ் சோரா,
ஈரிய கலுழுமிவள் பெரு மதர் மழைக் கண்
ஆகத்து அரிப் பனி உறைப்ப, நாளும்
வலைப்படு மஞ்ஞையின் நலம் செலச் சாஅய்   250
நினைத்தொறும் கலுழுமால் இவளே. ———- (245-251)

The Heroine’s Sorrow

My friend worries about the
uncertain trysts in this fearful
town, and desires marriage
with him.

Thinking about him,
she wilts like a flower pelted
by rapidly falling rain drops.

The teardrops that flow from
her big, beautiful eyes
fall on her chest.
Each day, she struggles in pain
like a peacock that has been
caught in a net.
She cries, ruining her beauty.

Notes:   சோரா – சோர்ந்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

Meanings:   கொன் ஊர் – fierce town (to the heroine because of gossip and slander, கொன் – அச்சம், இடைச்சொல்), மாய வரவின் இயல்பு நினைஇ தேற்றி – thinking about the uncertain trysts at night when he comes and wanting to get married (நினைஇ – அளபெடை), நீர் எறி மலரின் – like a flower on which rain water falls (மலரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), சாஅய் – wilted, ruined (அளபெடை), இதழ் சோரா – her eyelids tiring, ஈரிய – they are wet, கலுழும் இவள் – she cries, பெரு மதர் – big beautiful, luscious beautiful, மழைக்கண் – moist eyes, ஆகத்து – on her chest, on her breasts, அரிப்பனி உறைப்ப – tear drops fall down, நாளும் – each day, வலைப்படு மஞ்ஞையின் – like a peacock caught in a net (மஞ்ஞையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), நலம் செல – ruining her beauty (செல – இடைக்குறை), சாஅய் – she has become thin, she has become sad (அளபெடை), நினைத்தொறும் – whenever she thinks about him, கலுழுமால் இவளே – she cries (கலுழுமால் – ஆல் அசை நிலை)

அவன் வரும் வழி இடர்கள் வாட்டியது இவளை!

———— —————— —————– கங்குல்
அளைச்செறி உழுவையும், ஆளியும், உளியமும்,
புழல் கோட்டு ஆமான் புகல்வியும், களிறும்,
வலியின் தப்பும் வன்கண் வெஞ்சினத்து
உருமும் சூரும், இரை தேர் அரவமும்,    255
ஒடுங்கு இருங் குட்டத்து அருஞ்சுழி வழங்கும்
கொடுந் தாள் முதலையும், இடங்கரும், கராமும்,
நூழிலும் இழுக்கும் ஊழ் அடி முட்டமும்,
பழுவும், பாந்தளும் உளப்படப் பிறவும்,
வழுவின் வழாஅ விழுமம் அவர்   260
குழுமலை விடர் அகம் உடையவால் எனவே. (251-261)

She is Disturbed by the Hindrances He Faces on the Path

At night, animals that live in caves
like tigers, āli and bears, wild bulls
that have hollow horns, male
elephants that kill ferociously,
powerful enraged thunderbolts,
deities, snakes that search for food,
narrow, dark ponds with three kinds
of crocodiles with crooked legs that
lie in wait in harsh eddies, bandits
who kill and cover bodies under heaps
of stones and leaves, slippery places,
places with seemingly regular paths
that end, demons, large mountain
snakes and others cause pain.

If caught by any of these, he will not
be able to escape, as he comes through
many mountains with clefts.

Notes:  Kurunthokai 324, Natrinai 292 and Kurinjippāttu have descriptions of the hero swimming through water with crocodiles.  There are references to Āli in Akanānūru 78, 252, 381, Kurinjippāttu 252, Natrinai 205, Puranānūru 207, Perumpānātruppadai 258 and Porunarātruppadai 139.  நற்றிணை 205 – ஆளி நன்மான் வேட்டு எழு கோள் உகிர்ப் பூம்பொறி உழுவை தொலைச்சிய வைந் நுதி ஏந்து வெண்கோட்டு வயக் களிறு இழுக்கும்.  ஊழ் அடி முட்டமும் (258) – நச்சினார்க்கினியர் உரை – முறைப்படியாயப் பின்பு வழி முட்டாயிருக்கும் இடங்களும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – நடை பாதைபோல் தோன்றிச் செல்லத் தேய்ந்து பின்னர் நெறியே காணப்படாது மாறிவிடும் நெறி.  ஆளி (பொருநராற்றுப்படை 139) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அரிமா, அரிமாப் போன்ற வேறொரு விலங்கென எண்ணவும் இடமுள்ளது.

Meanings:   கங்குல் – at night, அளை – caves, செறி – hiding, உழுவையும் – tigers and, ஆளியும் – and lions, and lion-like animals, உளியமும் – and bears, புழல் கோட்டு – with hollow horns, ஆமான் – and jungle cattle/bisons, புகல்வியும் – male, களிறும் – and bull elephants, வலியின் – with strength, தப்பும் – ruined, killed, வன்கண் வெஞ்சினத்து – with strength and great rage, உருமும் – thunder, சூரும்– and distressing deities, இரை தேர் அரவமும் – and snakes that searches for food, ஒடுங்கு – narrow, இருங் குட்டத்து – in dark ponds, அருஞ்சுழி வழங்கும் –  lives in the harsh eddies, கொடுந் தாள் – curved legs, முதலையும் இடங்கரும் கராமும் – and 3 different kinds of crocodiles, நூழிலும் – and places where robbers kill and heap the bodies, இழுக்கும் – slippery places, ஊழ் அடி முட்டமும் – places with seemingly regular paths that eventually end unable to proceed further, பழுவும் – and devils, பாந்தளும் – and pythons, and large mountain snakes, உளப்படப் பிறவும் – these and others, வழுவின் வழாஅ விழுமம் – these dangers will cause pain which is unable to escape (வழாஅ – அளபெடை), அவர் – he, குழு மலை – many mountains, group of mountains, விடர் அகம் – mountain cracks, caves, உடையவால் எனவே – since they have these (உடையவால் – ஆல் அசைநிலை, எனவே – ஏகாரம் அசைநிலை, an expletive)