கலித்தொகை, Kalithokai

Vaidehi Herbert

Copyright © All Rights Reserved

கலித்தொகை உரை நூல்கள்:
கலித்தொகை – நச்சினார்க்கினியர் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை
கலித்தொகை – மா. இராசமாணிக்கனார் – பூம்புகார் பதிப்பகம், சென்னை
சுப. அண்ணாமலை, கோவிலூர் மடாலயம், கோவிலூர்
கலித்தொகை – புலியூர் கேசிகன்

குறிஞ்சிக் கலி – Kurinjikkali 37-65

கபிலர் 

தமிழ் உரை நூல்கள்:
கலித்தொகை – நச்சினார்க்கினியர் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை
கலித்தொகை – மா. இராசமாணிக்கனார் – பூம்புகார் பதிப்பகம், சென்னை
கலித்தொகை – புலியூர் கேசிகன்

புணர்தலும் புணர்தல் நிமித்தமும் – Union of Lovers

குறிஞ்சிக் கலி – Kurinji

37-65

கலித்தொகை 37

கபிலர், குறிஞ்சி, தோழி தலைவியிடம் சொன்னது

கயமலர் உண்கண்ணாய்! காணாய்! ஒருவன்
வயமான் அடித் தேர்வான் போலத் தொடை மாண்ட
கண்ணியன், வில்லன் வரும்; என்னை நோக்குபு;
முன்னத்தின் காட்டுதல் அல்லது தான் உற்ற
நோய் உரைக்கல்லான்; பெயரும் மன் பல் நாளும்; 5
பாயல் பெறேஎன் படர் கூர்ந்து அவன் வயின்,
சேயேன் மன் யானும் துயர் உழப்பேன்; ஆயிடைக்
கண் நின்று கூறுதல் ஆற்றான் அவன்; ஆயின்
பெண் அன்று உரைத்தல் நமக்கு ஆயின்; இன்னதூஉம்
காணான் கழிதலும் உண்டு என்று, ஒரு நாள் என் 10
தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து, ஓர்
நாண் இன்மை செய்தேன் நறுநுதால்! ஏனல்
இனக் கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல்,
ஊசல் ஊர்ந்து ஆட ஒரு ஞான்று வந்தானை,
“ஐய! சிறிது என்னை ஊக்கி” எனக் கூறத், 15
“தையால்! நன்று!” என்று அவன் ஊக்கக் கை நெகிழ்பு
பொய்யாக வீழ்ந்தேன் அவன் மார்பில்; வாய்யாச் செத்து,
ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்; மேல்
மெய் அறியாதேன் போல் கிடந்தேன் மன்; ஆயிடை
மெய் அறிந்து ஏற்று எழுவேன் ஆயின், மற்று ஒய்யென, 20
“ஒண் குழாய்! செல்க!” எனக் கூறி விடும் பண்பின்
அங்கண் உடையன் அவன்.

Kalithokai 37
Kapilar, Kurinji, What the heroine’s friend said to her 
Listen my friend with kohl-lined eyes
that look like waterlily blossoms in ponds!
A peerless man, carrying a bow on his shoulder
and wearing a well-made flower strand on his
head, came, pretending to track the pug marks
of wild animals. He looked at me.

His face expressed his painful love affliction
for me, but he came and left without saying
anything to me. I was unable to sleep on seeing
this suffering man with whom I did not have a
relationship, and I became deeply distressed.

He did not express his love to me, and my
feminine modesty prevented me from expressing
my feelings. Thinking that he would leave without
knowing my feelings for him, which caused my arms
to become thin, I did a shameless thing with courage.

Oh my friend with a fragrant forehead!
Near the millet field where I stood guard
driving away flocks of parrots and protecting grain,
I sat on a swing and swayed about. He came there
on that day. “Sir! Push my swing a little bit”,
I said.  “Alright lady. I’ll do that,” he said.
Pretending my hands slipped, I fell on his bosom.
He thought that I really slipped off the swing, 
grabbed me quickly, and held me close to his chest.
I lay there pretending I was not aware of my body.

If I rose up he’d have said “O woman wearing shining
earrings! Please leave!” He was a refined gentleman.

Notes:  The heroine’s friend says this to her.  The friend is aware of the love affair of the hero and heroine.  She is pretending that she is in love with a man, and comes up with this story to encourage the heroine to tell her about her love affair with the hero.

Meanings:   கயமலர் – pond flowers, blue waterlilies, உண்கண்ணாய் – O one with kohl-lined eyes, காணாய் – look at this, listen to this, ஒருவன் – a man, வயமான் அடித் தேர்வான் போல – like he was searching for wild animal pug marks, தொடை மாண்ட – well strung, கண்ணியன் – a man wearing a flower strand on his head, வில்லன் – a man with a bow, வரும் – he comes, என்னை நோக்குபு – he sees me, முன்னத்தின் காட்டுதல் அல்லது – other than showing the signs, தான் உற்ற நோய் உரைக்கல்லான் பெயரும் – he left without telling me about the (love) disease that he is afflicted with, மன் – அசைநிலை, an expletive, பல் நாளும் – for many days, பாயல் பெறேஎன் – I could not sleep (பெறேஎன் – அளபெடை), படர் கூர்ந்து – sadness grew, அவன் வயின் – toward him, சேயேன் மன் யானும் – I who did not have a relationship with him took pity (மன் – அசைநிலை, an expletive), துயர் உழப்பேன் – I became sad ஆயிடைக் கண்  – from there, கூறுதல் ஆற்றான் அவன் – he would not talk , ஆயின் – but பெண் அன்று – being a woman, உரைத்தல் நமக்கு ஆயின் – since speaking  my mind is not the manner for me, இன்னதூஉம் காணான் கழிதலும் உண்டு – that he will leave without knowing my mind (இன்னதூஉம் – அளபெடை), ஒரு நாள் – one day,  என் தோள் நெகிழ்பு உற்ற துயரால் – due to the pain my arms became thin, துணிதந்து – boldly, courageously,  ஓர் நாண் இன்மை செய்தேன் – I indulged in a shameless act, நறு நுதால் – O one with a fragrant forehead, ஏனல் – millet field, இனக்கிளி – flocks of parrots, யாம் கடிந்து ஓம்பும் – where I guarded and chased, புனத்து அயல் – near the field, ஊசல் ஊர்ந்து ஆட – swinging in the swing, ஒரு ஞான்று – one day, வந்தானை – to the man who came, ஐய சிறிது என்னை ஊக்கி – O sir!  Raise and push my swing a little bit, ஆட்டி விடுவாயாக (ஊக்கி – முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று), தையால் – O young woman, நன்று – good lady, என்று அவன் ஊக்க – and he pushed (ஆட்டி விட்டான்),  கை நெகிழ்பு – hands slipped பொய்யாக வீழ்ந்தேன் – I acted like I fell down, அவன் மார்பில் – on his chest, வாய்யா – as truth (வாயாக, ஈறு கெட்டது), செத்து – thinking, ஒய்யென ஆங்கே எடுத்தனன் – he lifted me quickly and held me (ஒய்யென – விரைவுக் குறிப்பு), கொண்டான் மேல் மெய் அறியாதேன் போல் கிடந்தேன் – I lay on him who held me like I was not aware of my body, மன் – ஒழியிசை, ஆயிடை – there, மெய் அறிந்து – knowing the true situation, ஏற்று எழுவேன் ஆயின் – if I had risen and got up, மற்று – after that (வினைமாற்றின்கண் வந்தது), ஒய்யென – quickly (விரைவுக் குறிப்பு),  ஒண் குழாய் – O woman of shining earrings, செல்க  – please  leave, எனக் கூறி விடும் பண்பின் அங்கண்  உடையன் அவன் –  he had the refinement to say so

கலித்தொகை 38
கபிலர், குறிஞ்சி, தோழி தலைவியிடம் சொன்னது
“இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக,
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல, 5
உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவு கொண்டு அதன் முதல் குத்திய மத யானை
நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய்த் தன்
கோடு புய்க்கல்லாது உழக்கும் நாட! கேள்!

ஆர் இடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்தக்கால், 10
நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள், வைகறை
கார் பெற்ற புலமே போல் கவின் பெறும்; அக் கவின்
தீராமல் காப்பது ஓர் திறன் உண்டேல், உரைத்தைக்காண்!

இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்தக்கால்,
பொருள் இல்லான் இளமை போல் புல்லென்றாள், வைகறை 15
அருள் வல்லான் ஆக்கம் போல் அணிபெறும்; அவ் அணி
தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தைக்காண்!

மறம் திருந்தார் என்னாய் நீ மலை இடை வந்தக்கால்,
அறம் சாரான் மூப்பே போல் அழிதக்காள், வைகறை
திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திருத்தகும்; அத் திருப் 20
புறங்கூற்றுத் தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல் உரைத்தைக்காண்!”
என ஆங்கு,
நின் உறு விழுமம் கூறக் கேட்டு,
வருமே தோழி நல் மலை நாடன்,
வேங்கை விரிவிடம் நோக்கி, 25
வீங்கு இறைப் பணைத்தோள் வரைந்தனன் கொளற்கே.

Kalithokai 38
Kapilar, Kurinji, What the heroine’s friend said to her

I said to him:

“Listen to me, O man from the mountains where
a forest elephant thinking a vēngai tree in bloom is
a large tiger,
thrusts his tusks into the trunk in anger, and unable to
pull them out, screams in distress, his sounds
echoing in the mountain crevices, his struggles like that
of ten-headed Rāvanan wearing beautiful bracelets who
put his wide hands underneath and tried to lift the
mountain with the Brāhmin with his curved bow
and Ganges on his locks seated with his consort Umai.

You came through difficult paths at night without fear.
My friend who was sad like land without rain before you
came, became beautiful in the morning, like land with
rainfall. That beauty needs to be protected. If there is a
way to do it, let me know!

You came in the dark night without fear. My friend who
was like a young poor man without wealth before you came,
became beautiful in the morning, like a rich man with grace.
That beauty which came through you, not understood by
those who slander, needs to be protected. If there is a way,
let me know!

You came not fearing the wasteland bandits. My friend
who was ruined like an old man who had not led a virtuous
life, became beautiful in the morning like the wealth in the
hands of a deserving one. If there is a way to protect that
beauty from those who slander, let me know!”

And so my friend, when he heard your sorrow, the
good man from the mountain now awaits the vēngai
blossoming season, to marry you with big wrists and
bamboo-like arms!

Notes:  கலித்தொகை 46 – வேங்கை அம் சினை என விறல் புலி முற்றியும், கலித்தொகை 38 – உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையை. குறுந்தொகை 343 – கருங்கால் வேங்கை வாடு பூஞ்சினையின் கிடக்கும்.  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), 

Meanings:  இமைய – from the Himalayas, வில் – bow, வாங்கிய – curved, ஈர்ஞ் சடை அந்தணன் – wet haired Brahmin, Sivan with the river Ganges on his locks, உமை அமர்ந்து – sat with Umai, உயர் மலை இருந்தனன் ஆக – he was in the tall mountains, ஐ இரு தலையின் – with ten heads (தலையின் – தலையுடைய, வேற்றுமை மயக்கம்), அரக்கர் கோமான் – king of demons, தொடிப் பொலி – with many bracelets, with beautiful bracelets, தடக் கையின் – with big hands, கீழ் புகுத்து – thrusting under, அம் மலை – that mountain, எடுக்கல் செல்லாது – unable to lift, உழப்பவன் – one who struggles, போல – like, உறு புலி – strong tiger, big tiger (உறு – மிக்க), உரு – appearance, ஏய்ப்ப – like, பூத்த வேங்கையை – about a bloomed vēngai tree, kino trees, pterocarpus marsupium, (has yellow flowers, and appears like a tiger), கறுவு கொண்டு – became angry, அதன் முதல் குத்திய மத யானை – an angry elephant which pierced the trunk, a rutting elephant which pierced the trunk, நீடு இரு – long two, விடர் அகம் – wide mountain crevices, சிலம்ப – loud sound, கூய் – trumpets, தன் கோடு – its tusks, புய்க்கல்லாது – unable to pull out, உழக்கும் – distressed, நாட – O man from such country,

கேள் – listen,  ஆர் – difficult, இடை – place, path, நீ அரவு – you at night, அஞ்சாய் வந்தக்கால் – when you came without fear (வந்தக்கால் – கால் ஈற்று வினையெச்சம்), நீர் அற்ற புலமே – land without water (புலமே – ஏகாரம் அசைநிலை, an expletive), போல் – like புல்லென்றாள் – she lost her beauty, வைகறை – morning, கார் பெற்ற புலமே போல் – like land which got rain (புலமே – ஏகாரம் அசைநிலை, an expletive), கவின் பெறும் – become beautiful, அக் கவின் – that beauty, தீராமல் காப்பது – protecting it from being lost, ஓர் திறன் உண்டேல் – if there’s a method, உரைத்தைக்காண் – tell that to me (உரைத்துக் காண், வினைத் திரிசொல்),

இருள் – dark, இடை – place, path, என்னாய் – you are not concerned, நீ இரவு அஞ்சாய் வந்தக்கால் – when you still came unafraid of the night (வந்தக்கால் – கால் ஈற்று வினையெச்சம்), பொருள் இல்லான் – a man without material things, இளமை போல் – like the youth, புல்லென்றாள் – she became dull, she lost her beauty, வைகறை – morning, அருள் வல்லான் – one filled with grace, ஆக்கம் போல் அணிபெறும் – she became beautiful like wealth, அவ் அணி – that beauty, தெருளாமல் – without  understanding (by those who blame her saying her beauty is due to some other reason and not because of him), காப்பது – protecting, ஓர் திறன் உண்டேல் – if there is a method, உரைத்தைக்காண் – tell that to me (உரைத்துக் காண், வினைத் திரிசொல்),

மறம் திருந்தார் என்னாய் – not considering those who are good in the business of killing – the wasteland warriors, நீ மலை இடை வந்தக்கால் – when you came through the mountains (வந்தக்கால் – கால் ஈற்று வினையெச்சம்), அறம் சாரான் மூப்பே போல் – like the old age of one not righteous (மூப்பே – ஏகாரம் அசை நிலை, an expletive), அழிதக்காள் – she was ruined, வைகறை – in the morning, திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் – like the wealth in the hands of a smart man, திருத்தகும் – she becomes beautiful, அத் திருப் புறங்கூற்றுத் தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல் – if there is a way to protect that beauty without slander, உரைத்தைக்காண் – tell that to me (உரைத்துக் காண், வினைத் திரிசொல்),

என ஆங்கு – so (ஆங்கு – அசைநிலை, an expletive), நின் உறு விழுமம் கூறக் கேட்டு – hearing about your great pain, hearing about the pain you have attained, வருமே – he will come (ஏகாரம் அசைநிலை, an expletive), தோழி – my friend, நல் மலை நாடன் – our mountain country man, வேங்கை விரிவிடம் நோக்கி –  looks forward to vēngai flowers blooming, kino flowers, pterocarpus marsupium, வீங்கு இறை – big wrists, பணைத்தோள் – bamboo-like arms, thick arms, வரைந்தனன் கொளற்கே – come to marry (கொளற்கே – ஏகாரம் அசைநிலை, an expletive)

கலித்தொகை 39
கபிலர், குறிஞ்சி, தலைவியும் தோழியும் சொன்னது

தோழி:

“காமர் கடும் புனல் கலந்து எம்மோடு ஆடுவாள்
தாமரைக் கண் புதைத்து அஞ்சித் தளர்ந்து அதனோடு ஒழுகலான்,
நீள் நாக நறும் தண் தார் தயங்கப் பாய்ந்து அருளினால்,
பூண் ஆகம் உற தழீஇ போத்தந்தான் அகல் அகலம்
வருமுலை புணர்ந்தன என்பதனால் என் தோழி 5
அரு மழைதரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே;

அவனும் தான் ஏனல் இதணத்து அகில் புகை உண்டு இயங்கும்
வான் ஊர் மதியம் வரை சேரின், அவ் வரைத்
தேனின் இறால் என ஏணி இழைத்திருக்கும்
கான் அகல் நாடன் மகன்; 10

சிறுகுடியீரே சிறுகுடியீரே
வள்ளி கீழ் வீழா; வரை மிசைத் தேன் தொடா;
கொல்லை குரல் வாங்கி ஈனா மலை வாழ்நர்
அல்ல புரிந்து ஒழுகலான்;

காந்தள் கடி கமழும் கண் வாங்கு இருஞ் சிலம்பின் 15
வாங்கு அமை மென்தோள் குறவர் மட மகளிர்
தாம் பிழையார் கேள்வர்த் தொழுது எழலால், தம் ஐயரும்
தாம் பிழையார் தாம் தொடுத்த கோல்
என ஆங்கு,
அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட 20
என் ஐயர்க்கு உய்த்து உரைத்தாள் யாய்,

அவரும் தெரி கணை நோக்கிச் சிலை நோக்கிக் கண் சேந்து
ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து ஆறி,
இருவர் கண் குற்றமும் இல்லையால் என்று
தெருமந்து சாய்த்தார் தலை 25

தெரி இழாய் நீயும் நின் கேளும் புணர,
வரை உறை தெய்வம் உவப்ப உவந்து
குரவை தழீஇ யாம் ஆடக் குரவையுள்
கொண்டுநிலை பாடிக்காண்”;

தலைவி:

“நல்லாய்! 30
நன்னாள் தலைவரும் எல்லை நமர் மலைத்
தம் நாண் தாம் தாங்குவார், என் நோற்றனர் கொல்?

புன வேங்கைத் தாது உறைக்கும் பொன் அறை முன்றில்,
நனவில் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ?
நனவில் புணர்ச்சி நடக்கலும், ஆங்கே 35
கனவில் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ?”

தோழி:

“விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள்
பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர் மன் கொலோ?
பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழம் கேண்மை
கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென் மன் கொலோ? 40

மை தவழ் வெற்பன் மண அணி காணாமல்
கையால் புதை பெறூஉம் கண்களும் கண்களோ?”

தலைவி:

“என்னை மன் நின் கண்ணால் காண்பென் மன் யான்”

தோழி:

“நெய்தல் இதழ் உண்கண் நின் கண் ஆக என் கண் மன!
என ஆங்கு 45
நெறி அறி செறி குறி புரிதிரிபு அறியா அறிவனை முந்துறீஇத்,
தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனம் ஆக,
வேய் புரை மென்தோள் பசலையும் அம்பலும்,
மாயப் புணர்ச்சியும் எல்லாம் உடன் நீங்கச்,
சேய் உயர் வெற்பனும் வந்தனன், 50
பூ எழில் உண்கணும் பொலிகமா இனியே.

Kalithokai 39
Kapilar, Kurinji, What the heroine and her friend said

Friend:
She played with us in the lovely rapid river
when she was pulled by the current. Unable to
resist and fearing, she covered her eyes that are
like lotus blossoms.
A kind man jumped into the water, his long, fragrant,
cool nākam flower garland swaying. He hugged her
chest with ornaments and brought her to the shore.
Since his broad chest embraced her breasts, my friend
has attained the honor of bringing precious rain if she
wills.

He is the son of the lord of the vast forest where smoke
from akil wood lit on platforms in the millet field rises up
ruining the luster of the moon that moves in the sky and
reaches the mountain, where those who see it think
that it is a honeycomb and raise ladders to get it.

O people of a small hamlet! O people of a small hamlet!
Valli yam plant will not grow roots, honeycombs will
not be seen in the mountains, grains will not grow in
clusters in the fields, since people are not virtuous in this
huge mountain where delicate mountain women, attractive,
with fragrances of kānthal flowers, bamboo-like
tender arms to the eyes of those who behold, worship their
husbands who do not fail, and the arrows shot by the men
in their families do not miss their mark.

Thus I stood up with virtue and spoke to foster mother
who told mother about your secret union. She narrated it
efficiently to our father and brothers who flew into rage,
their eyes reddened as they looked at their bright arrows
and looked at their bows. Their anger abated, they cooled
off, bowed their heads in sorrow and said that the two of
you did not commit any mistake. 

My friend with chosen jewels! To see you and your lover
unite and to make the mountain deity happy, let us, your
friends, embrace and perform kuravai dances. You sing
as we dance.

Heroine:

Look my fine friend! What penance did our family in the
mountain do, to be able to bear their embarrassment until
the wedding day, for being a hindrance to my marriage?
Will our union be in our front yard with boulders on which
vēngai flowers drop golden pollen? When it happens, will I
abandon our union that happens in dreams?

Friend:

At the wedding, will the man from the sky-brushing mountain
and you pretend very much like you don’t know each other from
before? If you pretend like you don’t know each other, will I
who knows your relationship be able to hide that very much?
Will eyes be eyes, if they are covered by hands and do not see
the marriage loveliness of the man from the mountains capped
with clouds?

Heroine:

Why? I can see it through your eyes.

Friend:

May your kohl-rimmed eyes, like petals of waterlilies,
come to be mine! The lord of the lofty mountains has come
to wed you, to end the pallor in your bamboo-like delicate
arms, the gossips and the dream unions. Wise men who
know many matters have gathered together, along with the
learned man who does not err, who knows the right
traditions and the auspicious day for your union.

May your flower-like, kohl-rimmed eyes flourish now!

Notes:  தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்று, செவிலித்தாய் நற்றாய்க்கு அறத்தொடு நின்று, நற்றாய் தந்தை தமையன்மாருக்கு அறத்தொடு நின்று அவர்கள் திருமணத்திற்கு உடன்பட்டமையால் தலைவியும் தோழியும் குரவைக் கூத்தாடினர். தொல். பொருளியல் 12 – எளித்தல், ஏத்தல், வேட்கை உரைத்தல், கூறுதல் உசாதல், ஏதீடு, தலைப்பாடு, உண்மை செப்புங் கிளவியொடு, தொகைஇ எழு வகைய என்மனார் புலவர் – இங்கு எளித்தல், ஏத்தல், வேட்கை உரைத்தல் .  Kurunthokai 273, Kalithokai 39 and Puranānūru 105 have references to bamboo ladders used in the mountains.  They were used to collect honey.

Meanings:  Friend:  காமர் கடும் புனல் கலந்து எம்மோடு ஆடுவாள் – she played with us  in the lovely flowing water, தாமரைக் கண் புதைத்து அஞ்சி – fearing she covered her lotus-like eyes, தளர்ந்து – tired, அதனோடு ஒழுகலான் – since she was pulled by the current, நீள் நாக நறும் தண் தார் தயங்கப் பாய்ந்து – jumped with his swaying long fragrant cool nākam flower garlands, surapunnai trees, long-leaved two-sepalled gamboge trees, or punnai trees, Laurel Tree, Mast wood Trees, Calophyllum inophyllum  according to the University of Madras Lexicon, Mesua ferrea according to P.L. Sami and R. Panchavarnam, அருளினால் – due to his graces, பூண் ஆகம் உற தழீஇ போத்தந்தான் – he embraced and brought her to the shore and hugging her chest with ornaments (தழீஇ – அளபெடை), அகல் அகலம் வருமுலை புணர்ந்தன என்பதனால் – since his chest and her big breasts united, என் தோழி அரு மழைதரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே – my friend has attained the honor of bringing precious rain if she requests,

அவனும் தான் – he is, ஏனல் இதணத்து – on the platforms in the millet field, அகில் புகை உண்டு இயங்கும் வான் ஊர் மதியம் – the moon that moves in the sky eats the smoke that rises up (and becomes dull), வரை சேரின் – when it reaches the mountain, அவ் வரைத் தேனின் இறால் என – thinking that it is a honeycomb of bees on the beautiful mountain, ஏணி இழைத்திருக்கும் – ladders are used, கான் அகல் நாடன் மகன் – son of the man from the vast forest,

சிறுகுடியீரே சிறுகுடியீரே – O people from a small village, O people from a small village, வள்ளி கீழ் வீழா – valli yam roots will not go down, வரை மிசைத் தேன் தொடா – honeycombs will not be attached to the mountains, கொல்லை குரல் வாங்கி ஈனா – grains will not grow in clusters in the fields, மலை வாழ்நர் அல்ல புரிந்து ஒழுகலான் – since the people living on the mountain are not virtuous, காந்தள் கடி கமழும் – fragrance of glory lilies spread, கண் வாங்கு – attracting the eyes (of those who see them), இருஞ் சிலம்பின் – on the huge/dark mountain, வாங்கு அமை மென்தோள் – curved bamboo-like tender arms, குறவர் மட மகளிர் – delicate mountain women, தாம் பிழையார் கேள்வர்த் தொழுது எழலால் – since they honor their husbands who don’t fail them, தம் ஐயரும் தாம் பிழையார் தாம் தொடுத்த கோல் – the arrows shot by their family men do not miss their target,

என ஆங்கு அறத்தொடு நின்றேனைக் கண்டு – on seeing me who stood up with virtue and uttered the truth about your secret love to foster mother who told that to mother (ஆங்கு – அசைநிலை, an expletive), திறப்பட என் ஐயர்க்கு உய்த்து உரைத்தாள் யாய் – mother uttered efficiently to our brothers, அவரும் – they, தெரி கணை நோக்கிச் சிலை நோக்கி – looked at their bright/chosen arrows and looked at their bows, கண் சேந்து ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து – their eyes grew red and they were in rage for a day, ஆறி – cooled off, இருவர் கண் குற்றமும் இல்லையால் என்று – thinking that the two did not commit any mistake, தெருமந்து சாய்த்தார் தலை – bowed their heads in sorrow,

தெரி இழாய் – O one with bright/chosen jewels, நீயும் நின் கேளும் புணர – for you and your lover to unite,  வரை உறை தெய்வம் உவப்ப – to make the deity residing in the mountain happy, உவந்து குரவை தழீஇ யாம் ஆட – for us to embrace and perform kuravai dances with joy (தழீஇ – அளபெடை, யாம் – ஆயத்தை உளப்படுத்திற்று), குரவையுள் கொண்டுநிலை பாடிக்காண் – you sing as we dance (கொண்டுநிலை – ஒருவகைப் பாடல்), பாடிக்காண் – பாடுக, முன்னிலை ஏவல், காண் – முன்னிலை அசை),

Heroine: நல்லாய் – O good friend, நன்னாள் தலைவரும் எல்லை – until the wedding day comes, நமர் – our family, மலை – in our mountain, தம் நாண் தாம் தாங்குவார் – bearing their embarrassment, என் நோற்றனர் கொல் – what penances did they do, புன வேங்கைத் தாது உறைக்கும் பொன் அறை முன்றில் – in the front yard when forest vēngai flowers drop golden pollen, kino trees, pterocarpus marsupium (முன்றில் – இல்முன்), நனவில் புணர்ச்சி நடக்கும் ஆம் அன்றோ – will our union happen in reality (ஆம் – இடைக்குறை, ஆகும் என்பது ஆம் என நின்றது), நனவில் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே கனவில் புணர்ச்சி கடிதும் ஆம் அன்றோ – will I abandon uniting in my dream if we unite in reality (ஆம் – இடைக்குறை, ஆகும் என்பது ஆம் என நின்றது),

Friend:  விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள் பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர் மன் கொலோ – at the wedding will the man from the sky-brushing mountain and you pretend very much like you don’t know each other from past (மன் – மிகுதிக்குறிப்பு, கொலோ – ஓகாரம் ஐயம்), பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழம் கேண்மை கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென் மன் கொலோ – if you pretend like you don’t know each other from the past will I be able to hide very much the fact (மன் – மிகுதிக்குறிப்பு, கொலோ – ஓகாரம் ஐயம்), மை தவழ் வெற்பன் மண அணி காணாமல் கையால் புதை பெறூஉம் கண்களும் கண்களோ – are the eyes real eyes if they are covered with the hands not seeing the beautiful wedding of the lord of the mountain with clouds (பெறூஉம் – அளபெடை),

Heroine:  என்னை மன் நின் கண்ணால் காண்பென் – why, I will see it through your eyes, மன் – அசைநிலை, an expletive, 

Friend:   யான் நெய்தல் இதழ் உண்கண் நின் கண் ஆக என் கண் மன – may your kohl-lined waterlily-like eyes greatly become mine, என – thus, ஆங்கு நெறி அறி  – understanding the right manner (ஆங்கு – அசைநிலை, an expletive), செறிகுறி – auspicious day for you to unite with him, புரிதிரிபு அறியா அறிவனை – the wise man who does not know making mistakes, முந்துறீஇ – coming ahead (அளபெடை), தகை மிகு – very great, தொகை வகை அறியும் சான்றவர் இனம் ஆக – the wise have gathered together who know many matters, வேய் புரை மென்தோள் – bamboo-like delicate arms, பசலையும் அம்பலும் – pallor and gossip/slander, மாயப் புணர்ச்சியும் எல்லாம் உடன் நீங்க – and dream union end immediately, சேய் உயர் வெற்பனும் வந்தனன் – the lord of the very lofty mountains has come (சேய் உயர் – ஒருபொருட் பன்மொழி), பூ எழில் உண்கணும் பொலிகமா இனியே – let your flower-like eyes with kohl flourish now (கணும் – கண்ணும், இடைக்குறை, பொலிக + மா, மா – ஓர் அசைச் சொல்)

கலித்தொகை 40
கபிலர், குறிஞ்சி, தலைவியும் தோழியும் சொன்னது

தலைவி:

“அகவினம் பாடுவாம் தோழி! அமர்க் கண்,
நகை மொழி, நல்லவர் நாணும் நிலை போல்,
தகை கொண்ட ஏனலுள், தாழ் குரல் உரீஇ,
முகை வளர் சாந்து உரல் முத்து ஆர் மருப்பின்
வகை சால் உலக்கை வயின் வயின் ஓச்சிப், 5
பகை இல் நோய் செய்தான் பய மலை ஏத்தி
அகவினம் பாடுவாம் நாம்.”

தோழி:

“ஆய் நுதல், அணி கூந்தல், அம் பணைத் தட மென்தோள்,
தேன் நாறு கதுப்பினாய்! யானும் ஒன்று ஏத்துகு
வேய் நரல் விடர் அகம் நீ ஒன்று பாடித்தை! 10

கொடிச்சியர் கூப்பி வரை தொழு கை போல்,
எடுத்த நறவின் குலை அலங்கு காந்தள்
தொடுத்த தேன் சோரத் தயங்கும் தன் உற்றார்
இடுக்கண் தவிர்ப்பான் மலை;

கல்லாக் கடுவன் கணம் மலி சுற்றத்து 15
மெல் விரல் மந்தி குறை கூறும் செம்மற்றே,
தொல் எழில் தோய்ந்தார் தொலையின், அவரினும்
அல்லல்படுவான் மலை.”

தலைவி:

“புரி விரி புதை துதை பூத் ததைந்த தாழ் சினைத்
தளிர் அன்ன எழில் மேனி தகை வாட, நோய் செய்தான் 20
அரு வரை அடுக்கம் நாம் அழித்து ஒன்று பாடுவாம்;

விண் தோய் வரைப் பந்து எறிந்த அயா வீடத்,
தண் தாழ் அருவி அரமகளிர் ஆடுபவே,
பெண்டிர் நலம் வௌவித் தண் சாரல் தாது உண்ணும்
வண்டின் துறப்பான் மலை.” 25

தோழி:

“ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற
கடுஞ்சூல் வயாவிற்கு அமர்ந்து. நெடுஞ் சினைத்
தீம் கண் கரும்பின் கழை வாங்கும் உற்றாரின்
நீங்கலம் என்பான் மலை,
என நாம், 30
தன் மலை பாட, நயவந்து கேட்டு அருளி,
மெய் மலி உவகையன் புகுதந்தான் புணர்ந்து ஆரா
மென் முலை ஆகம் கவின் பெறச்,
செம்மலை ஆகிய மலை கிழவோனே”.

Kalithokai 40
Kapilar, Kurinji, What the heroine and her friend said

Heroine:

Let us sing as we pound O friend! Let us pluck
heavy clusters of millet that are bent low like
shy, virtuous women with calm eyes and lovely
words, and pound them again and again in a mortar
made with the wood from sandal trees with blossoms,
using elephant tusks filled with pearls as pestles.
Let us sing about what we have in our minds about
the beneficial mountain of the man who gave me
this love disease.

Friend:

My friend with a pretty forehead, lovely hair, delicate,
curved arms that are like beautiful bamboo, and
honey-fragrant tresses! I will sing a song praising his
mountain. You can sing one praising his mountain with
noisy bamboo and caves.

The mountain of the lord who removes the misery of
his relatives, has swaying, fragrant clusters of honey-
dripping kānthal flowers, that resemble the worshipping
hands of mountain women. The beauty of the mountain
of the man who would feel sadder than the women who
love him who lost their natural beauty, is that a crude
male monkey goes to the family of its beloved female to
ask for her hand in marriage.

Heroine:

Let us sing a song denouncing the mountain with hard
to reach peaks, belonging to the man who gave me this
ailment, causing my beauty, like the tender sprouts on
the low tree branches with clusters of flowers, to fade.

Let us sing about the sky-touching mountain of the man
who feasts on the beauty of women and abandons them
like bees flitting for honey, where, on its slopes, deities
play endless games with balls, and tiring, they play in the
cool waterfalls.

Friend:

The lord of the mountain, where an uncontrollable
bull elephant breaks tall sugarcane stalks to feed his female
suffering from her first pregnancy ailments, who does not
abandon his relatives, listened sweetly to our songs and has
come with grace and joy to embrace your delicate breasts,
making you splendid and beautiful.

Notes:  யானையின் தந்தத்தில் முத்துஅகநானூறு 282 – வால் மருப்பு ஒடிய உக்க தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு, நற்றிணை 202 – புலி பொரச் சிவந்த புலால் அம் செங்கோட்டு ஒலி பல் முத்தம், புறநானூறு 161 – முத்துப்படு முற்றிய உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு, புறநானூறு 170 –  வெண்கோடு பயந்த ஒளி திகழ் முத்தம், பதிற்றுப்பத்து 32 – முத்துடை மருப்பின், கலித்தொகை 40 – முத்து ஆர் மருப்பின், திருமுருகாற்றுப்படை 304 – பெருங்களிற்று முத்துடை வான்கோடு தழீஇ,  குறிஞ்சிப்பாட்டு 36 – முத்து ஆர் மருப்பின், மலைபடுகடாம் 518 – முத்துடை மருப்பின்.  அகவினம் பாடுவாம் (1) – மா. இராசமாணிக்கனார் உரை – உலக்கைப்பாட்டு பாடுவோம், ச. வே. சுப்பிரமணியன் உரை – கூவிப்பாடுவோம், அ. விசுவநாதன் உரை – அகவிப்பாடும் பாட்டு.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).

Meanings:  அகவினம் பாடுவாம் தோழி – let us sing O friend, let us sing pounding songs O friend (பாடுவாம் – தன்மைப் பன்மை வினைமுற்று – first person plural verb ending), அமர்க் கண் நகை மொழி நல்லவர் நாணும் நிலை போல் தகை கொண்ட – of the nature of women with calm eyes and joyful words with bent heads (with modesty), ஏனலுள் தாழ் குரல் – low hanging clusters of millet in the field, உரீஇ – stripping, plucking (அளபெடை), முகை வளர் சாந்து உரல் – in a pounding mortar made with wood from sandalwood tree that puts out buds, in a pounding mortar made with wood from a sandal tree that grows in mountain clefts, முத்து ஆர் மருப்பின் வகை சால் உலக்கை வயின் வயின் ஓச்சி – pound again and again with pestles which are tusks filled with pearls, பகை இல் நோய் செய்தான் – the man who gave this love disease without enmity, பய மலை ஏத்தி அகவினம் பாடுவாம் நாம் – let us praise his beneficial mountains (பாடுவாம் – தன்மைப் பன்மை வினைமுற்று – first person plural verb ending),

ஆய் நுதல் – beautiful forehead, அணி கூந்தல் – pretty hair, அம் பணை – beautiful bamboo,  தட – curved, large, மென்தோள் – delicate arms, delicate shoulders, தேன் நாறு கதுப்பினாய் – O one with honey-fragrant hair, யானும் ஒன்று ஏத்துகு – let me sing a song praising, வேய் நரல் விடர் அகம் நீ ஒன்று பாடித்தை – you sing about his mountain with loud bamboo and caves (பாடித்தை – முன்னிலை வினைத் திரிசொல்),

கொடிச்சியர் கூப்பி வரை தொழு கை போல் எடுத்த – grown like the worshipping hands of mountain women, நறவின் குலை அலங்கு காந்தள் – swaying glory lily clusters with honey, தொடுத்த தேன் சோரத் தயங்கும் – sway as the honey in them drops, தன் உற்றார் இடுக்கண் தவிர்ப்பான் மலை – the mountain of the man who removes the misery of his relatives, கல்லாக் கடுவன் கணம் மலி சுற்றத்து மெல் விரல் மந்தி குறை கூறும் செம்மற்றே – it has the special nature where a crude male monkey goes to the female monkey’s big family to ask for her hand, தொல் எழில் தோய்ந்தார் தொலையின் அவரினும் அல்லல்படுவான் மலை – the mountain of the man who will feel more sad than those who united with their lovers who lost their beauty,

புரிவிரி – tightness loosening, petals opening, புதை – hidden, துதை – dense, close, பூத் ததைந்த – filled with clusters of flowers, தாழ் சினைத் தளிர் அன்ன – like the sprouts in the low (heavy) branches, எழில் மேனி தகை வாட – the beauty of the lovely body to fade, நோய் செய்தான் – the man who caused disease, அருவரை அடுக்கம் – difficult to scale mountain ranges, நாம் அழித்து ஒன்று பாடுவாம் – let us sing putting it down (பாடுவாம் – தன்மைப் பன்மை வினைமுற்று – first person plural verb ending),

விண் தோய் வரை – sky touching mountains, பந்து எறிந்த அயா வீட – tired from throwing balls, தண் தாழ் அருவி அரமகளிர் ஆடுபவே – deities play in the cool flowing waterfalls, பெண்டிர் நலம் வௌவி – seizing the virtue/beauty of women, தண் சாரல் தாது உண்ணும் வண்டின் – like bees that eat pollen on the cool slopes (வண்டின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), துறப்பான் மலை – the mountain of the man who abandons,

ஒடுங்கா எழில் வேழம் – uncontrollable handsome bull elephant, வீழ் பிடிக்கு – for its beloved female elephant, உற்ற கடுஞ்சூல் வயாவிற்கு – for its first pregnancy disease, அமர்ந்து நெடுஞ் சினைத் தீம் கண் கரும்பின் கழை வாங்கும் – seizes the tall sweet stalks of sugarcane with nodes, உற்றாரின் நீங்கலம் என்பான் மலை – the mountain of the man who does not abandon his relatives, என நாம் தன் மலை பாட நயவந்து கேட்டு – since he heard about his mountain with love thus, அருளி மெய் மலி உவகையன் புகுதந்தான் – he with graces and great happiness came, புணர்ந்து – uniting, embracing, ஆரா – endless, மென் முலை – delicate breasts, ஆகம் கவின் பெற – for your chest to be beautiful, செம்மலை ஆகிய – for you to be great, மலை கிழவோனே – the lord of the mountain (கிழவோனே  – ஏகாரம் அசைநிலை, an expletive)

கலித்தொகை 41
கபிலர், குறிஞ்சி, தலைவியும் தோழியும் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி

தோழி:

“பாடுகம், வா! வாழி தோழி! வயக் களிற்றுக்
கோடு உலக்கை ஆக நல் சேம்பின் இலை சுளகா,
ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து, இருவாம்
பாடுகம், வா, வாழி தோழி! நல் தோழி! பாடுற்று;

இடி உமிழ்பு இரங்கிய விரவு பெயல் நடுநாள், 5
கொடிவிடுபு இருளிய மின்னுச் செய் விளக்கத்துப்,
பிடியொடு மேயும் புன்செய் யானை
அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன்
நெடுவரை ஆசினிப் பணவை ஏறிக்,
கடுவிசை கவணையில் கல் கை விடுதலின், 10
இறுவரை வேங்கையின் ஒள் வீ சிதறி,
ஆசினி மெல் பழம் அளிந்தவை உதிராத்,
தேன் செய் இறாஅல் துளைபடப் போகி,
நறுவடி மாவின் பை துணர் உழக்கிக்,
குலை உடை வாழைக் கொழு மடல் கிழியாப், 15
பலவின் பழத்துள் தங்கும் மலை கெழு வெற்பனைப்
பாடுகம்! வா! வாழி தோழி! நல் தோழி! பாடுற்று;”

தலைவி:

“இலங்கும் அருவித்து; இலங்கும் அருவித்தே;
வானின் இலங்கும் அருவித்தே, தான் உற்ற
சூள் பேணான் பொய்த்தான் மலை.” 20

தோழி:

“பொய்த்தற்கு உரியனோ? பொய்த்தற்கு உரியனோ?
அஞ்சல் ஓம்பு என்றாரைப் பொய்த்தற்கு உரியனோ?
குன்று அகல் நல் நாடன் வாய்மையில் பொய் தோன்றின்,
திங்களுள் தீத் தோன்றியற்று.”

தலைவி:

“இளமழை ஆடும்; இளமழை ஆடும்; 25
இளமழை வைகலும் ஆடும் என் முன்கை
வளை நெகிழ வாராதோன் குன்று.”

தோழி:

“வாராது அமைவானோ? வாராது அமைவானோ?
வாராது அமைகுவான் அல்லன் மலை நாடன்;
ஈரத்துள் இன்னவை தோன்றின் நிழல் கயத்து 30
நீருள் குவளை வெந்தற்று.”

தலைவி:

“மணி போலத் தோன்றும்; மணி போலத் தோன்றும்;
மண்ணா மணி போலத் தோன்றும், என் மேனியைத்
துன்னான் துறந்தான் மலை.”

தோழி:

“துறக்குவன் அல்லன்; துறக்குவன் அல்லன்; 35
தொடர் வரை வெற்பன் துறக்குவன் அல்லன்;
தொடர்புள் இனையவை தோன்றின், விசும்பில்
சுடருள் இருள் தோன்றியற்று;
என ஆங்கு,
நன்று ஆகின்றால் தோழி, நம் வள்ளையுள் 40
ஒன்றி நாம் பாட மறை நின்று கேட்டு அருளி,
மென்தோள் கிழவனும் வந்தனன்; நுந்தையும்
மன்றல் வேங்கைக் கீழ் இருந்து
மணம் நயந்தனன், அம் மலை கிழவோற்கே.

Kalithokai 41
Kapilar, Kurinji, What the heroine and her friend said, as the hero listened nearby

Friend:

Come, my friend! Let us sing! May you live long!
Using the tusks of mighty elephants as pestles, and
chēmpu yam leaves as winnowing trays, let us pound
the seeds of swaying bamboo in a mortar well.
Let us both sing together!

May you live long, my friend! My good friend! Let us
sing about the mountain of the lord, where at midnight
when rains sprinkle, thunder roars and shining streaks
of lightning appear, a bull elephant grazes in a field
with his female, their steps heard by the guard who
climbed a tower on a breadfruit tree and shot speedily
a stone with his catapult, and the stone hit bright bunches
of vēngai flowers, attacked and dropped soft breadfruits,
pierced a hole in a honeycomb, attacked clusters of tiny,
green unripe mangoes, tore up thick leaves of a banana
trees with clusters of fruits, and rested inside a jackfruit.

Heroine:

May you live long, my friend! My good friend! Roaring
bright waterfalls flow! Bright waterfalls flow! Water flows
from the sky in the mountain of the man who has not kept
his promise.

Friend:

Would he lie? Would he lie? Would the man who said,
“Remove your fear” and “I’ll protect,” lie? If the man from
the wide, fine mountain would lie without being truthful,
then fire would appear on the moon.

Heroine:

Young clouds move around! Young clouds move around!
Young clouds move around in the mountain of the man who
has not returned, causing my bangles to slip down.

Friend:

Will he stay away without returning? Will be stay away
without returning? The man from the mountain country will
not stay away. If harshness appears in him, it would be like
the waterlilies in the cool pond being scorched.

Heroine:

It appears like sapphire! It appears like sapphire! The
mountain of the man who has deserted me staying far away
is like unwashed sapphire.

Friend:

He is not one to forsake! He is not one to forsake! The man
from the mountain chain is not one to forsake! If he causes
you pain, it would be like darkness appearing in the sun in the
sky. This is how good it is my friend. Hearing the vallai songs
we sang together while hiding from our view, the lord of the
mountains with rights to your delicate shoulders came with
graces for you, and your father has agreed to get you married
to him under the fragrant vēngai tree in the courtyard.

Notes:  அகநானூறு 292 – இரவின் மேயல் மரூஉம் யானைக் கால்வல் இயக்கம் ஒற்றி நடுநாள் வரையிடைக் கழுதின் வன் கைக் கானவன் கடுவிசைக் கவணின் எறிந்த சிறு கல் உடுஉறு கணையின் போகிச் சாரல் வேங்கை விரி இணர் சிதறித் தேன் சிதையூஉ பலவின் பழத்துள் தங்கும் மலைகெழு நாடன் மணவாக்காலே.  உதிரா – உதிர்த்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  கிழியா – கிழித்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

Meanings:  பாடுகம் வா – come, let us sing (பாடுகம் – அம் ஈறு பெற்ற தன்மைப் பன்மை வினைமுற்று), வாழி தோழி – may you live long my friend, வயக் களிற்றுக் கோடு உலக்கை ஆக – with tusks of mighty elephants as pestles, ulakkais, நல் சேம்பின் இலை சுளகா – chēmpu yam leaves as winnowing trays, Colocasia antiquorum, Colocasia esculenta, ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து – pour seeds of swaying bamboo into the mortar well, இருவாம் பாடுகம் வா – let us both sing (இருவாம் – தன்மைப் பன்மை, பாடுகம் – அம் ஈறு பெற்ற தன்மைப் பன்மை வினைமுற்று),

வாழி தோழி – may you live long O friend, நல் தோழி – my good friend, பாடுற்று இடி உமிழ்பு இரங்கிய விரவு பெயல் நடுநாள் – midnight when spread rain fell with loud thunder, கொடிவிடுபு இருளிய மின்னுச் செய் விளக்கத்து – in the light of long lightning streaks, பிடியொடு மேயும் புன்செய் யானை – elephant which grazes in the dry field along with its female, அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன் – forest dweller who heard their foot steps as they walked, நெடுவரை – tall mountain, ஆசினிப் பணவை ஏறி – climbs on the tower built on a breadfruit tree, கடு விசை கவணையில் கல் கை விடுதலின் – since he shot a stone with his hand-operated fast catapult, இறுவரை வேங்கையின் ஒள் வீ சிதறி – it attacked the bright flowers of vēngai trees on the huge mountain, kino trees, pterocarpus marsupium, ஆசினி மெல் பழம் அளிந்தவை உதிரா – dropped soft breadfruits (உதிரா – உதிர்த்து, வினையெச்சம்), தேன் செய் இறாஅல் துளைபடப் போகி – went after creating a hole in a honeycomb (இறாஅல் – அளபெடை), நறு வடி மாவின் பை துணர் உழக்கி – attacked fresh clusters of fragrant tiny unripe green mangoes, மாவடு, குலை உடை வாழைக் கொழு மடல் கிழியா – tore up the thick leaves of a banana tree with clusters of fruits (கிழியா – கிழித்து, வினையெச்சம்), பலவின் பழத்துள் தங்கும் – rested in a fruit of a jackfruit tree, மலை கெழு வெற்பனைப் பாடுகம் வா – let us sing about the lord of the mountain (பாடுகம் – அம் ஈறு பெற்ற தன்மைப் பன்மை வினைமுற்று),

வாழி தோழி – may you live long my friend, நல் தோழி – my good friend, பாடுற்று இலங்கும் அருவித்து – with roaring bright waterfalls, இலங்கும் அருவித்தே – with bright waterfalls, வானின் இலங்கும் அருவித்தே – with flowing waters from the sky, தான் உற்ற சூள் பேணான் – he does not protect his promise, he does not keep up his word, பொய்த்தான் மலை  – mountain of the man who lied,

பொய்த்தற்கு உரியனோ – would he lie, he will not lie (உரியனோ – ஓகாரம் எதிர்மறை), பொய்த்தற்கு உரியனோ – would he lie, he will not lie (உரியனோ – ஓகாரம் எதிர்மறை), அஞ்சல் ஓம்பு என்றாரைப் பொய்த்தற்கு உரியனோ – would the one who said ‘remove your fear’ and ‘I’ll protect’ lie, he will not lie (உரியனோ – ஓகாரம் எதிர்மறை), குன்று அகல் நல் நாடன் வாய்மையில் பொய் தோன்றின் திங்களுள் தீத் தோன்றியற்று – if the man from the wide fine mountain would lie without being truthful then fire would appear on the moon,

இளமழை ஆடும் – young clouds move around, fog moves round, இளமழை ஆடும் – young clouds move around, fog moves around, இளமழை வைகலும் ஆடும் – young clouds move around daily, fog moves around daily, என் முன்கை வளை நெகிழ வாராதோன் குன்று – the mountain of the one who has not returned causing the bangles on my wrists to slip,

வாராது – not returning, அமைவானோ – will he stay there, வாராது – not returning, அமைவானோ – will he stay there, வாராது அமைகுவான் அல்லன் மலை நாடன் – the man from the mountain country will not stay away without coming, ஈரத்துள் இன்னவை தோன்றின் நிழல் கயத்து நீருள் குவளை வெந்தற்று – if harsh thoughts appear in his kind heart it will be like the waterlilies in the pond being scorched (ஈரத்துள் – அருளில்),

மணி போலத் தோன்றும் – it appears like sapphire, மணி போலத் தோன்றும் – it appears like sapphire, மண்ணா மணி போலத் தோன்றும் – it appears like unwashed sapphire, என் மேனியைத் துன்னான் – the man who does not embrace my body, துறந்தான் மலை – the mountain of the man who abandoned,

துறக்குவன் அல்லன் – he is not one to forsake, துறக்குவன் அல்லன் – he is not one to forsake, தொடர் வரை வெற்பன் துறக்குவன் அல்லன் – the man from the mountain chain is not one to abandon, தொடர்புள் இனையவை தோன்றின் விசும்பில் சுடருள் இருள் தோன்றியற்று – if he stops linking with you causing pain it would be like darkness appearing in the sun in the sky,

என ஆங்கு – so (ஆங்கு – அசைநிலை, an expletive), நன்று ஆகின்றால் தோழி – it is good O friend (ஆகின்று + ஆல், ஆல் – அசைநிலை, an expletive), நம் வள்ளையுள் ஒன்றி நாம் பாட – as we sing vallai songs together, மறை நின்று கேட்டு – hearing this in hiding, அருளி – with graces, மென்தோள் கிழவனும் வந்தனன் – the lord with rights to your tender shoulders came, நுந்தையும் மன்றல் வேங்கைக் கீழ் இருந்து மணம் நயந்தனன் அம் மலை கிழவோற்கே – your father has agreed to marry you to the lord of the beautiful mountains under the fragrant vēngai tree in the courtyard, kino tree, pterocarpus marsupium (மன்றல் – நறுமணம்)

கலித்தொகை 42
கபிலர், குறிஞ்சி, தலைவியும் தோழியும் சொன்னது

தலைவி:

“மறம் கொள் இரும்புலித் தொல் முரண் தொலைத்த
முறஞ்செவி வாரணம் முன் குளகு அருந்திக்,
கறங்கு வெள் அருவி ஓலின் துஞ்சும்
பிறங்கு இருஞ் சோலை நல் மலை நாடன்
மறந்தான்; மறக்க இனி எல்லா! நமக்குச் 5
சிறந்தமை நாம் நற்கு அறிந்தனம் ஆயின் அவன் திறம்,
கொல் யானைக் கோட்டால் வெதிர் நெல் குறுவாம் நாம்
வள்ளை அகவுவம் வா இகுளை! நாம்
வள்ளை அகவுவம் வா!

தோழி:

“காணிய வா! வாழி தோழி! வரைத் தாழ்பு 10
வாள் நிறம் கொண்ட அருவித்தே, நம் அருளா
நாண் இலி நாட்டு மலை.”

தலைவி:

“ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ,
ஓர்வு உற்று ஒரு திறம் ஒல்காத நேர்கோல்
அறம் புரி நெஞ்சத்தவன்?” 15

தோழி:

“தண் நறும் கோங்கம் மலர்ந்த வரை எல்லாம்
பொன் அணி யானை போல் தோன்றுமே, நம் அருளாக்
கொன்னாளன் நாட்டு மலை.”

தலைவி:

“கூரு நோய் ஏய்ப்ப விடுவானோ, தன் மலை
நீரினும் சாயல் உடையன் நயந்தோர்க்குத் 20
தேர் ஈயும் வண் கையவன்?”

தோழி:

“வரை மிசை மேல் தொடுத்த நெய்க் கண் இறாஅல்
மழை நுழை திங்கள் போல் தோன்றும், இழை நெகிழ
எவ்வம் உறீஇயினான் குன்று.”

தலைவி:

“எஞ்சாது எல்லா! கொடுமை நுவலாதி! 25
அஞ்சுவது அஞ்சா அறன் இலி அல்லன், என்
நெஞ்சம் பிணிக்கொண்டவன்,

என்று யாம் பாட மறை நின்று கேட்டனன்,
தாழ் இருங்கூந்தல் என் தோழியைக் கை கவியாச்
சாயல் இன் மார்பன் சிறுபுறம் சார்தர 30
ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது, என்
ஆய் இழை மேனிப் பசப்பு.”

Kalithokai 42
Kapilar, Kurinji, What the heroine and her friend said

Heroine:

The lord of the fine mountains, with huge groves
where an elephant with ears like winnowing trays
avenges old enmity with a huge, mighty tiger by
killing it, eats leaves and sleeps, lulled by the roaring
sounds of white waterfalls, has put me out of his
thoughts. Let him forget me.
I understand well the graces he showered on me as
well as his greatness.
Let us pound the bamboo seeds with the tusks of killer
elephants.
Come, let us sing vallai songs! My friend! Come, let
us sing vallai songs!

Friend:

May you live long, my friend! The silvery waterfalls
flow from the mountain of the one who has no
shame.

Heroine:

Will he allow my heart to be ruined, the man who does
not shower his graces on me, who is fair and righteous
like a balance?

Friend:

The lord of the mountain with slopes covered with cool,
fragrant kōngam flower pollen, appearing like elephants
decorated with gold ornaments, does not shower
his kindness on you.

Heroine:

Would he, sweeter than the waters of his mountain, a

charitable man who gives chariots to those who come to
him, cause my affliction to increase?

Friend:

The man from the mountain where honeycombs filled
with honey appear like the moon with clouds on it, has
caused the bangles on your arms to loosen.

Heroine:

Do not utter unkind words about him without a break.
My heart is tied to the one who is not unjust, who fears
not what needs to be feared.

Hearing us sing in this manner, hiding from
our sight, he turned over his hand and asked my friend
with dark hair to move, and embraced me from behind
with his tender chest, and the pallor on my body donning
fine jewels died like darkness that dies before the sun.

Notes:  யானையின் முறம் போன்ற செவி – நற்றிணை 376 புறநானூறு 339, நற்றிணை 376, கலித்தொகை 52 – முறஞ்செவி யானை, கலித்தொகை 42 – முறஞ்செவி வாரணம்.  நெய் (22) – தேன். கலித்தொகை 42-22, வரை மிசை மேல் தொடுத்த நெய்க் கண் இறாஅல், மலைபடுகடாம் 524 – நீல் நிற ஓரி பாய்ந்தென நெடுவரை நேமியின் செல்லும் நெய்க்கண் இறாஅல், பொருநராற்றுப்படை 214 – தேனெய்யொடு..  கவியா (29) – கவித்து, செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  கவியா – நற்றிணை 57 – கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி, கலித்தொகை 42 –  தாழ் இருங்கூந்தல் என் தோழியைக் கை கவியா, அகநானூறு 9 – கை கவியாச் சென்று.  சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம்,  உரியியல் 29).  குறுந்தொகை 95 – நீர் ஓரன்ன சாயல், கலித்தொகை 42 – நீரினும் சாயல் உடையன், புறநானூறு 105 – நீரினும் இனிய சாயல், பதிற்றுப்பத்து 86 – நீரினும் தீந்தண் சாயலன்.

Meanings:  மறம் கொள் இரும்புலி – a huge tiger with might, தொல் முரண் தொலைத்த – ended the ancient enmity, killed due to ancient enmity, முறம் செவி வாரணம் – an elephant with winnowing tray like ears, முன் குளகு அருந்திக் கறங்கு வெள் அருவி ஓலின் துஞ்சும் – it sleeps to the sounds of loud white waterfalls after eating leaves, பிறங்கு – flourishing, loud, bright, இருஞ் சோலை – huge groves, dark groves, நல் மலை நாடன் – the man from the fine mountains, மறந்தான் – he has forgotten, மறக்க – let him forget, இனி – now, எல்லா நமக்குச் சிறந்தமை – the graces that he showered on us, நாம் நற்கு அறிந்தனம் – we understand well (நற்கு – நன்கு என்பதன் விகாரம்), ஆயின் – if so, அவன் திறம் – his greatness, கொல் யானைக் கோட்டால் – with the tusks of killer elephants, வெதிர் நெல் குறுவாம் – let us pound bamboo seeds (குறுவாம் – தன்மைப் பன்மை வினைமுற்று), நாம் வள்ளை அகவுவம் வா – come, let us sing vallai songs, இகுளை – friend, நாம் வள்ளை அகவுவம் – let us sing vallai songs, வா – come, காணிய வா – come and see,

வாழி தோழி – may you live long my friend, வரைத் தாழ்பு – flowing from the mountain, வாள் நிறம் கொண்ட அருவித்தே – with waterfalls with the color of sword, waterfalls of silvery color, bright waterfalls, நம் அருளா – not kind to us, நாண் இலி நாட்டு மலை – mountain of the man who is not ashamed,

ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ – will he let the heart of the one who loves him be ruined (விடுவானோ – ஓகாரம் வினா), ஓர்வு உற்று – analyzing, ஒரு திறம் – proper, ஒல்காத – not slanting to any side, நேர்கோல் – balance, scale, அறம் புரி நெஞ்சத்தவன் – he has a heart that desires fairness, he has a heart that is fair,

தண் நறும் கோங்கம் – cool fragrant kōngam flowers, a gum producing tree, Cochlospermum gossypium, மலர்ந்த வரை எல்லாம் – the mountains where thy have blossomed, பொன் அணி யானை போல் தோன்றுமே – appear like elephants wearing gold ornaments (தோன்றுமே – ஏகாரம் அசை நிலை, an expletive), நம் அருளாக் கொன்னாளன் நாட்டு மலை – the mountain of the cruel man who does now shower graces on you,

கூரு நோய் ஏய்ப்ப விடுவானோ – will he let your affliction increase (ஏய்ப்ப – பொருந்த, (விடுவானோ – ஓகாரம் வினா), தன் மலை நீரினும் சாயல் உடையன் – the one who is more sweeter than his mountain waters, நயந்தோர்க்குத் தேர் ஈயும் வண் கையவன் – one who gifts chariots to those who desire,

வரை மிசை மேல் தொடுத்த நெய்க் கண் இறாஅல் – honeycombs with honey on the mountain (நெய் – தேன், இறாஅல் – அளபெடை), மழை நுழை திங்கள் போல் தோன்றும் – appear like the moon with clouds on it, இழை நெகிழ – jewels to become loose, எவ்வம் உறீஇயினான் குன்று – the mountain of the man who caused pain (உறீஇயினான் – அடைவித்தவன், அளபெடை),

எஞ்சாது எல்லா கொடுமை நுவலாதி – my friend! do not talk unkindly constantly, அஞ்சுவது – what needs to be feared அஞ்சா – does not fear, அறன் இலி அல்லன் – he is not one without justice (அறன் – அறம் என்பதன் போலி), என் நெஞ்சம் பிணிக்கொண்டவன் – the one who has seized my heart, என்று யாம் பாட – as we sang so, மறை நின்று கேட்டனன் – he who heard it hiding, தாழ் இருங்கூந்தல் – hanging dark hair, என் தோழியை – my friend, கை கவியா  – கவித்து, turned his hands upside down, சாயல் இன் மார்பன் – the one with sweet chest, சிறுபுறம் சார்தர – embraced from the back, ஞாயிற்று முன்னர் இருள் போல – like darkness in front of the sun, மாய்ந்தது – vanished, என் ஆய் இழை – my pretty jewels, மேனிப் பசப்பு  – the pallor on my body

கலித்தொகை 43
கபிலர், குறிஞ்சி, தலைவியும் தோழியும் சொன்னது

தோழி:

“வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து
ஏந்து மருப்பின் இன வண்டு இமிர்பு ஊதும்
சாந்த மரத்தின் இயன்ற உலக்கையால்,
ஐவன வெண்ணெல் அறை உரலுள் பெய்து, இருவாம்
ஐயனை ஏத்துவாம் போல, அணிபெற்ற 5
மைபடு சென்னிப் பய மலை நாடனைத்
தையலாய்! பாடுவாம் நாம்!”

தலைவி:

“தகையவர் கைச் செறித்த தாள் போலக், காந்தள்
முகையின் மேல் தும்பி இருக்கும் பகை எனின்,
கூற்றம் வரினும் தொலையான், தன் நட்டார்க்குத் 10
தோற்றலை நாணாதோன் குன்று.”

தோழி:

“வெருள்புடன் நோக்கி வியல் அறை யூகம்,
இருள் தூங்கு இறு வரை ஊர்பு இழிபு ஆடும்
வருடைமான் குழவிய வள மலை நாடனைத்
தெருளத் தெரி இழாய் நீ ஒன்று பாடித்தை!” 15

தலைவி:

“நுண் பொறி மான் செவி போல வெதிர் முளைக்
கண் பொதி பாளை கழன்று உகும் பண்பிற்றே,
மாறு கொண்டு ஆற்றார் எனினும் பிறர் குற்றம்
கூறுதல் தேற்றாதோன் குன்று.”

தோழி:

“புணர் நிலை வளகின் குளகு அமர்ந்து உண்ட 20
புணர் மருப்பு எழில் கொண்ட வரை புரை செலவின்
வயங்கு எழில் யானைப் பய மலை நாடனை,
மணம் நாறு கதுப்பினாய்! மறுத்து ஒன்று பாடித்தை!”

தலைவி:

“கடுங்கண் உழுவை அடி போல வாழைக்
கொடுங்காய் குலை தொறூஉம் தூங்கும், இடும்பையால் 25
இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றாக்கால்,
தன் மெய் துறப்பான் மலை.”

தோழி:

“என ஆங்கு
கூடி அவர் திறம் பாட என் தோழிக்கு
வாடிய மென்தோளும் வீங்கின 30
ஆடு அமை வெற்பன் அளித்தக்கால் போன்றே.”

Kalithokai 43
Kapilar, Kurinji, What the heroine and her friend said

Friend:

My friend! Let us sing about the lord
of the beneficial mountains, where clouds
touch peaks, like we sing the praises of Murukan,
and pour white, mountain rice into the well of
a mortar and pound it with a pestle made from
wood from sandal trees swarmed by bees, and a
pestle made from the raised tusks of an elephant
with rage that killed a tiger.

Heroine:

Bees sit on kānthal buds appearing like the rings
on the fingers of esteemed women in the mountain
of the man who Kootruvan cannot vanquish, who is
not embarrassed to lose to those with friendship.

Friend:

My friend with chosen jewels! Sing a song
about the man from the prosperous mountains
where young mountain goats run up and down the
dark slope, startled by a black monkey on a huge
boulder.

Heroine:

The mountain of the one who does not despise
others even if they are not agreeable, has tight sheaths
of bamboo that become loose and fall down, that
resemble the ears of deer with fine spots.

Friend:

My friend with fragrant hair! Sing another song for
the lord of the bountiful mountains where a splendid,
handsome elephant with tusks eats valaku leaves and
walks like a lovely mountain.

Heroine:

In the mountain of the lord who takes care of those who
come in need, who would even sacrifice his own life if
he were unable to protect them, curved bananas hanging
everywhere in clusters appear like the feet of fierce tigers.

Friend:

Thus we sang there. The lord of the mountains showered
his graces on her. My friend’s wilted arms became full.

Meanings:  வேங்கை தொலைத்த – killed the tiger, வெறி பொறி வாரணத்து – of an elephant with rage and spots, ஏந்து மருப்பின் – with the raised tusks, இன வண்டு இமிர்பு ஊதும் சாந்த மரத்தின் இயன்ற உலக்கையால் – with a pestle made with sandal wood swarmed by swarms of bees, ஐவன வெண்ணெல் அறை உரலுள் பெய்து – let us pour white wild mountain rice into the mortal well, இருவாம் – both of us, ஐயனை ஏத்துவாம் போல – like us praising the lord Murukan, அணிபெற்ற – beautiful, மைபடு சென்னிப் பய மலை நாடனை – the lord of the beneficial mountains where clouds touch the peaks, தையலாய் – O young woman, பாடுவாம் நாம் – let us sing (பாடுவாம் – தன்மைப் பன்மை வினைமுற்று – first person plural verb ending),

தகையவர் கைச் செறித்த தாள் போல – like the ornaments on the fingers of esteemed women (தாள் – மோதிரம், ring), காந்தள் முகையின் மேல் தும்பி இருக்கும் – there are bees on glory lily buds, பகை எனின் கூற்றம் வரினும் – even if Kootruvan who is the god of death comes as an enemy, தொலையான் – he will not be ruined, தன்  நட்டார்க்கு – to those with friendship, தோற்றலை நாணாதோன் – he is not embarrassed to lose, குன்று – mountain,

வெருள்புடன் நோக்கி – startled looking at it, fearing looking at it, வியல் அறை – wide boulders, யூகம் – black monkey, இருள் தூங்கு – where there is darkness, இறுவரை ஊர்பு இழிபு ஆடும் – climbs up and jumps down playing in the huge mountain, வருடைமான் குழவிய – with young mountain goats, Nilgiri tahr, வள மலை நாடனை – the lord of the prosperous mountain, தெருள – clearly, தெரி இழாய் – O friend with chosen jewels, நீ ஒன்று பாடித்தை – you sing a song (பாடித்தை – முன்னிலை வினைத் திரிசொல்),

நுண் பொறி மான் செவி போல – like the ears of deer with spots, வெதிர் முளைக் கண் பொதி பாளை கழன்று உகும் பண்பிற்றே  – like the tight sheaths/spathes of bamboo that get loose and fall down (bamboo spathes/sheaths are the deer-ear shaped brown growth that protects new stalks and eventually falls off after the stalk grows thick), மாறு கொண்டு ஆற்றார் எனினும் – even if they differ from him, பிறர் குற்றம் கூறுதல் தேற்றாதோன் குன்று – the mountain of the one who does not know to find fault in others,

புணர் நிலை – together, வளகின் குளகு அமர்ந்து உண்ட – eating valaku leaves, Cordia myxa, Common sebesten, புணர் – together, மருப்பு – tusks, எழில் கொண்ட வரை புரை செலவின் – walking like the mountain with beauty, வயங்கு எழில் யானை – splendid, handsome elephant, பய மலை நாடனை – the lord of the beneficial mountain, மணம் நாறு கதுப்பினாய் – O one with fragrant hair, மறுத்து ஒன்று பாடித்தை – you sing a song again, you sing a song praising him (பாடித்தை – முன்னிலை வினைத் திரிசொல்),

கடுங்கண் உழுவை அடி போல – like the feet of fierce tigers,  வாழைக் கொடுங்காய் – curved bananas, குலை தொறூஉம் தூங்கும் – hanging everywhere in clusters (தொறூஉம் – அளபெடை), இடும்பையால் இன்மை உரைத்தார்க்கு – to those who tell him about their poverty and sorrow, அது நிறைக்கல் ஆற்றாக்கால் – if he cannot remove their poverty, if he cannot fulfill their needs by giving, தன் மெய் துறப்பான் மலை – the mountain of the one who would even sacrifice his life,

என ஆங்கு கூடி அவர் திறம் பாட – as we sang about him (ஆங்கு – அசைநிலை, an expletive), என் தோழிக்கு – for my friend, வாடிய மென் தோளும் வீங்கின – her wilted arms became full, ஆடு அமை வெற்பன் அளித்தக்கால் – when the lord of the mountain with swaying bamboo gave his graces (கால் ஈற்று வினையெச்சம்), போன்றே – like (ஏகாரம் அசைநிலை, an expletive)

கலித்தொகை 44
கபிலர், குறிஞ்சி, தோழி தலைவனிடம் சொன்னது
கதிர் விரி கனை சுடர்க் கவின் கொண்ட நனம் சாரல்
எதிர் எதிர் ஓங்கிய மால் வரை அடுக்கத்து,
அதிர் இசை அருவி தன் அம் சினை மிசை வீழ,
முதிர் இணர் ஊழ் கொண்ட முழவுத் தாள் எரி வேங்கை,
வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதரப், 5
புரி நெகிழ் தாமரை மலர் அம் கண் வீறு எய்தித்
திரு நயந்து இருந்தன்ன தேம் கமழ் விறல் வெற்ப!

தன் எவ்வம் கூரினும் நீ செய்த அருள் இன்மை
என்னையும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு,
நின்னை யான் பிறர் முன்னர்ப் பழி கூறல் தான் நாணி, 10

கூரும் நோய் சிறப்பவும் நீ செய்த அருள் இன்மை
சேரியும் மறைத்தாள் என் தோழி, அது கேட்டாங்கு
ஓரும் நீ நிலையலை எனக் கூறல் தான் நாணி,

நோய் அட வருந்தியும், நீ செய்த அருள் இன்மை
ஆயமும் மறைத்தாள் என் தோழி, அது கேட்டு 15
மாய நின் பண்பு இன்மை பிறர் கூறல் தான் நாணி,
என ஆங்கு,
இனையன தீமை நினைவனள் காத்தாங்கு,
அனை அரு பண்பினான், நின் தீமை காத்தவள்
அருந்துயர் ஆர் அஞர் தீர்க்கும் 20
மருந்து ஆகி செல்கம் பெரும, நாம் விரைந்தே.

Kalithokai 44
Kapilar, Kurinji, What the heroine’s friend said to the hero
O lord of the mountains with sweet fragrances
where peaks face each other, huge slopes attain
beauty from the many rays of the sun, waterfalls
tumble down with roars from sky-high
ranges falling on beautiful branches of vēngai
trees with drum-like trunks and flame-like mature
flowers, and lovely elephants with lines on their
foreheads shower water on lotus flowers which
bears the sight of Thirumakal seated beautifully
with greatness!

Even though her sorrow increased, my friend hid
your unkindness from me, embarrassed that I will
expose you in front of others.

Even though her affliction increased, my friend hid
your acts without grace from those in our town,
embarrassed that they will blame you as not being
stable.

Even though she was ruined by her disease and sad,
my friend hid your deceiving nature from friends,
embarrassed that they will talk about your cruelty
and blame you.

Thus she protected you from blame due to her great
virtue, hiding your unkindness from others. Lord, let
us go in haste to her so that you can be medicine for her
distress and pain!

Notes:  நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).

Meanings:  கதிர் விரி கனை சுடர்க் கவின் கொண்ட நனம் சாரல் – the huge slopes became bright and beautiful with the many spread rays of the sun, எதிர் எதிர் – on opposite sides, ஓங்கிய மால் வரை அடுக்கத்து – in the mountain range that is sky high, அதிர் இசை அருவி – waterfalls roaring with music, தன் அம் சினை மிசை வீழ – falling on its beautiful branches, முதிர் இணர் ஊழ் கொண்ட – with mature clusters, முழவுத் தாள் – drum-like trunks, எரி வேங்கை – vēngai with flames (flame-like flowers), kino tree flowers, pterocarpus marsupium, வரி நுதல் எழில் வேழம் – handsome elephants with lines/spots on their foreheads, பூ நீர் மேல் சொரிதர – pouring water on flowers, புரி நெகிழ் தாமரை மலர் – lotus flowers that open from buds loosening their tightness, அம் கண் வீறு எய்தித் திரு நயந்து இருந்தன்ன – like Thirumakal seated beautifully with greatness, தேம் கமழ் விறல் வெற்ப – O lord of the beautiful mountain with sweet fragrances (தேம் தேன் என்றதன் திரிபு),

தன் எவ்வம் கூரினும் – even if her sorrow has increased, நீ செய்த அருள் இன்மை – the unkind thing that you did, என்னையும் மறைத்தாள் என் தோழி – my friend hid it from me, அது கேட்டு – on hearing that, நின்னை யான் பிறர் முன்னர்ப் பழி கூறல் தான் நாணி – she was embarrassed that I would blame you before others,

கூரும் நோய் சிறப்பவும் – for her affliction to increase, நீ செய்த அருள் இன்மை – your unkindness, சேரியும் மறைத்தாள் என் தோழி – my friend hid it from those in our settlement/street, அது கேட்டாங்கு – on hearing that, ஓரும் – அசைநிலை, an expletive, நீ நிலையலை எனக் கூறல் தான் நாணி – she was embarrassed that they will blame you since you are not stable,

நோய் அட- ruined by her disease, வருந்தியும் – despite being sad, நீ செய்த அருள் இன்மை – your unkindness, ஆயமும் மறைத்தாள் என் தோழி – my friend hid it from friends, அது கேட்டு – on hearing that, மாய நின் பண்பு இன்மை பிறர் கூறல் தான் நாணி – she was embarrassed that others will talk about your deceiving nature,

என ஆங்கு – thus (ஆங்கு – அசைநிலை, an expletive), இனையன தீமை நினைவனள் காத்தாங்கு – like how she thought and protected you against blame, அனை அரு பண்பினான் நின் தீமை காத்தவள் – one with similar great virtue who protected your evil acts, அரும் துயர் ஆர் அஞர் தீர்க்கும் மருந்து ஆகி – become medicine to heal her great pain and distress, செல்கம் – let us go, பெரும – O lord, நாம் விரைந்தே – let us go in haste (விரைந்தே – ஏகாரம் அசைநிலை, an expletive)

கலித்தொகை 45
கபிலர், குறிஞ்சி, தோழி தலைவியிடம் சொன்னது
“விடியல் வெங்கதிர் காயும் வேய் அமல் அகல் அறைக்
கடி சுனைக் கவினிய காந்தள் அம் குலையினை,
அரு மணி அவிர் உத்தி அரவு நீர் உணல் செத்துப்,
பெரு மலை மிளிர்ப்பன்ன காற்றுடைக் கனைப் பெயல்
உருமுக் கண்ணுறுதலின் உயர் குரல் ஒலி ஓடி, 5
நறு வீய நனஞ் சாரல் சிலம்பலின் கதுமெனச்
சிறுகுடி துயில் எழூஉம் சேண் உயர் விறல் வெற்ப!

கால் பொர நுடங்கல கறங்கு இசை அருவி நின்
மால் வரை மலி சுனை மலர் ஏய்க்கும் என்பதோ,
புல் ஆராப் புணர்ச்சியால் புலம்பிய என் தோழி 10
பல்லிதழ் மலர் உண்கண் பசப்ப நீ சிதைத்ததை?

புகர் முகக் களிறொடு புலி பொருது உழக்கும் நின்
அகல் மலை அடுக்கத்த அமை ஏய்க்கும் என்பதோ,
கடை எனக் கலுழும் நோய் கைம்மிக என் தோழி
தடையின திரண்ட தோள் தகை வாடச் சிதைத்ததை? 15

சுடர் உற உற நீண்ட சுரும்பு இமிர் அடுக்கத்த
விடர் வரை எரி வேங்கை இணர் ஏய்க்கும் என்பதோ,
யாமத்தும் துயிலலள் அலமரும் என் தோழி
காமரு நல் எழில் கவின் வாடச் சிதைத்ததை?”
என ஆங்கு, 20
தன் தீமை பல கூறிக் கழறலின், என் தோழி
மறையில் தான் மருவுற மணந்த நட்பு அருகலான்,
பிறை புரை நுதல்! அவர்ப் பேணி நம்
உறை வரைந்தனர் அவர் உவக்கும் நாளே.

Kalithokai 45
Kapilar, Kurinji, What the heroine’s friend said to her
My friend! I told him,
“O lord of the lovely lofty mountains where
dense bamboo groves with huge boulders keep
away the hot rays of the sun at dawn, lovely
kānthal flowers flourish in clusters near fragrant
springs, and thinking the blossoms are snakes
with precious gems and spots drinking water from
the springs, thunder strikes with wind and heavy
downpour as if overturning the mighty mountain,
the uproar reaching the vast slopes with fragrant
flowers, waking up suddenly those sleeping in a small
village!

Did you ruin my friend, who yearns for union with
endless embraces, her kohl-lined eyes resembling
flowers with many petals becoming pale, jealous of her,
since they are like the flowers in the full springs in your
tall mountain where roaring waterfalls flow down calmly
even when attacked by the wind?

Did you ruin my friend who cries that she has reached
the end of her life, her rounded arms thinned,
jealous of her, because they resemble the bamboo in
your vast mountain where a tiger battles with an elephant
and ends up in distress?

Did you ruin my friend who lost her exquisite beauty,
who is struggling and unable to sleep even at night,
jealous of her, because her beauty is like that of the
flame-like vēngai flowers swarmed by long bees, on your
mountain range with caves, high like touching the skies?”

Once I told him firmly about his acts of unkindness,
my friend, he worried that he will not be able to see you
with ease, like he did when he united with you during
secret love. O friend with a forehead like the crescent
moon! He appreciates you caring for him and being with
him. He came for your hand and our folks have agreed
and fixed the wedding.

Notes:  There is a convention that thunder ruins and kills snakes. Akanānūru 68, 92, 119, 182, 202, 274, 323, 328, Kurunthokai 158, 190, 268, 391 and Natrinai 37, 51, 114, 129, 144, 238, 255, 264, 347, 383, Puranānūru 17, 37, 58, 126, 211, 366 and 369 have similar descriptions of thunder ruining or killing snakes.  நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).

Meanings: விடியல் – early morning, வெங்கதிர் – desirable sun’s rays, hot sun’s rays, காயும் – ruins, வேய் அமல் – dense with bamboo (அமல் – செறிந்த), அகல் அறை – huge boulders, கடி – fragrant, சுனை – protected, கவினிய காந்தள் – glory lilies that have attained beauty, அம் குலையினை – about the beautiful clusters, அரு மணி – precious gems, அவிர் உத்தி அரவு நீர் உணல் செத்து – thinking that a bright spotted snake is drinking water, பெரு மலை மிளிர்ப்பன்ன – like turning the huge mountain upside down, காற்றுடைக் கனைப் பெயல் – wind with heavy rain, உருமுக் கண்ணுறுதலின் – due to the roars of thunder, due to clouds hitting each other, உயர் குரல் ஒலி ஓடி – heavy sounds travel, நறு வீய – with fragrant flowers, நனம் சாரல் – on the wide slopes of the mountain, சிலம்பலின் – because there were sounds, கதுமெனச் சிறுகுடி துயில் எழூஉம் – people in the small villages wake up suddenly from their sleep (கதுமென – விரைவுக்குறிப்பு), சேண் உயர் விறல் வெற்ப – O lord of the very tall beautiful/victorious mountains,

கால் பொர – attacked by the wind, நுடங்கல – not swaying, கறங்கு இசை அருவி – the loud waterfalls,  நின் மால் வரை – your tall mountain, மலி சுனை மலர் ஏய்க்கும் – like the flowers in the full springs, like the flowers in the full ponds, என்பதோ – is it because (ஓகாரம் வினா), புல் ஆராப் புணர்ச்சியால் புலம்பிய என் தோழி – my friend who cries for your union with endless embraces, பல்லிதழ் மலர் – flowers with many petals (பல்லிதழ் – அகரம் கெட்டு ‘குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்’ – தொல்காப்பியம், எழுத்து 160, என்றதனால் லகரம் இரட்டித்து பல்லிதழ் என முடிந்தது), உண்கண் – kohl-lined eyes, பசப்ப – becoming pale, நீ சிதைத்ததை –  you ruined,

புகர் முகக் களிறொடு புலி பொருது உழக்கும் – tiger fights with an elephant with spots on his face and becomes sad, நின் அகல் மலை – your wide mountain, அடுக்கத்த அமை ஏய்க்கும் – like the bamboo on the ranges, என்பதோ – is it because (ஓகாரம் வினா), கடை எனக் கலுழும் – cries that it is the end, நோய் கைம்மிக – disease increased, என் தோழி – my friend, தடையின திரண்ட தோள் தகை வாட – for her curved/thick arms to become slim, for her curved/thick arms to lose their beauty, சிதைத்ததை –ruined,

சுடர் உற உற நீண்ட சுரும்பு இமிர் – long bees that are very long like they are touching the sun swarm (நச்சினார்க்கினியர் உரை – ஞாயிற்றைத் தீண்டும்படியாக மிக நீண்ட சுரும்புகள்), அடுக்கத்த – in the mountain ranges, விடர் வரை – mountain caves, எரி வேங்கை இணர் ஏய்க்கும் – like the clusters of flame-like vēngai flowers, kino flowers, pterocarpus marsupium, என்பதோ – is it because (ஓகாரம் வினா), யாமத்தும் துயிலலள் – even at night she does not sleep, அலமரும் என் தோழி – my friend who is struggling, காமரு நல் எழில் கவின் வாட –  for her great attractive beauty to be lost (காமர் + மருவும்: காமர் – கா எனக் கடைக்குறைந்து நின்றது, மருவும் – மவ்வீறு சந்தியால் கெட்டு ஈற்றுமிசை உகரம் மெய்யொடுங் கெட்டது), சிதைத்ததை – you shattered,

என ஆங்கு தன் தீமை பல கூறிக் கழறலின் – since I mentioned firmly his acts of unkindness (ஆங்கு – அசைநிலை, an expletive), என் தோழி – O my friend, மறையில் தான் மருவுற மணந்த நட்பு – his union with you when you both met during secret love, அருகலான் – since it will become difficult for him to lose it, since it will become reduced, பிறை புரை நுதல் – O friend with a forehead that looks like the crescent moon, அவர்ப் பேணி – caring for him, நம் உறை – you being with him (உறை – உறைதல் உறை என விகாரமாயிற்று), வரைந்தனர் அவர் – our folks have agreed to get you married to him, உவக்கும் நாளே –it is a happy day (நாளே – ஏகாரம் அசை நிலை, an expletive)

கலித்தொகை 46
கபிலர், குறிஞ்சி, தோழி தலைவனிடம் சொன்னது
வீ அகம் புலம்ப வேட்டம் போகிய
மாஅல் அஞ்சிறை மணி நிறத் தும்பி,
வாய் இழி கடாத்த வால் மருப்பு ஒருத்தலோடு
ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின்,
வேங்கை அம் சினை என விறல் புலி முற்றியும், 5
பூம் பொறி யானைப் புகர் முகம் குறுகியும்,
வலி மிகு வெகுளியான் வாள் உற்ற மன்னரை
நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல், மறிதரும்
அயம் இழி அருவிய அணி மலை நல் நாட!

ஏறு இரங்கு இருள் இடை இரவினில் பதம் பெறாஅன், 10
மாறினென் எனக் கூறி மனம் கொள்ளும், தான் என்ப,
கூடுதல் வேட்கையான் குறி பார்த்துக் குரல் நொச்சிப்
பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யான் ஆக,

அருஞ் செலவு ஆர் இடை அருளி வந்து அளி பெறாஅன்,
வருந்தினென் என பல வாய்விடூஉம், தான் என்ப, 15
நிலை உயர் கடவுட்குக் கடம் பூண்டு தன் மாட்டுப்
பல சூழும் மனத்தோடு பைதலேன் யான் ஆக,

கனை பெயல் நடுநாள் யான் கண் மாறக் குறி பெறாஅன்,
புனை இழாய் என் பழி நினக்கு உரைக்கும், தான் என்ப,
துளி நசை வேட்கையான் மிசை பாடும் புள்ளின் தன் 20
அளி நசை ஆர்வுற்ற அன்பினேன் யான் ஆக,
என ஆங்கு,
கலந்த நோய் கைம்மிகக் கண்படா என் வயின்
புலந்தாயும் நீ ஆயின், பொய்யானே வெல்குவை,
இலங்கு தாழ் அருவியோடு அணி கொண்ட நின் மலைச் 25
சிலம்பு போல், கூறுவ கூறும்
இலங்கு ஏர் எல் வளை இவள் உடை நோயே.

Kalithokai 46
Kapilar, Kurinji, What the heroine’s friend said to the hero
O lord of the lovely mountain with waterfalls
where, an elephant and tiger fight, and letting
its flower suffer in loneliness, a proud bee with
pretty wings and sapphire hue, flits back and forth
between the bull elephant with white tusks, lovely
lines and spots on his face and flowing musth, and
the victorious tiger with pretty stripes,
thinking the tiger is a vēngai tree branch with flowers,
like the wise who go back and forth sweetly to bring
friendship to mighty, enraged kings with swords!

My friend says,

“He said he was disappointed that he did not see
me after coming in the pitch darkness of night when
thunder struck, and that I have changed.

He said that he was sad not getting my graces when he
came sweetly on the difficult path, while I, who was
anxious to unite with him, was waiting for a sign from
him, listening to the sounds of falling nochi flowers
and suffering in pain.

I vowed to the higher gods, being of distressed and
confused mind, thinking about many things, but missed
a tryst with him at midnight when heavy rain poured,
since I changed the place.

My friend with fine jewels! He will tell you that I am
to be blamed.

Like skylarks above that sing yearning for raindrops,
I pine desiring his graces, struggling with this disease
which has gone out of control.”

Lord, you hate me who is unable to sleep.  You can win by lying. 
This love disease of my friend with pretty, bright bangles 
echoes like the sounds in your lovely mountain with waterfalls.

Notes: Vēngai flowers are bright yellow in color. Akanānūru 12, 228, Natrinai 383, Paripādal 14 and Kalithokai 46 have descriptions of vēngai flowers appearing like the markings on tigers. Puranānūru 198 – துளி நசைப் புள்ளின், Pattinappālai 3 – தற்பாடிய தளி உணவின் புள் தேம்பப் புயல் மாறி, Akanānūru 67 – வானம் வாழ்த்தி பாடவும் அருளாது உறை துறந்து எழிலி, Ainkurunūru 418 – வானம்பாடி வறம் களைந்து ஆனாது அழி துளி தலைஇய. கலித்தொகை 46 – வேங்கை அம் சினை என விறல் புலி முற்றியும், கலித்தொகை 38 – உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையை. குறுந்தொகை 343 – கருங்கால் வேங்கை வாடு பூஞ்சினையின் கிடக்கும். குறுந்தொகை 138 – கொன் ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே எம் இல் அயலது ஏழில் உம்பர் மயில் அடி இலைய மா குரல் நொச்சி அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).  எல் – எல்லே இலக்கம் – (தொல்காப்பியம், இடையியல் 21).

Meanings:  வீ அகம் புலம்ப – as its flowers suffer in loneliness (where it used to go regularly for honey, but does not do it now), வேட்டம் – desire, போகிய – left, மாஅல் –  proud, large (அளபெடை), அம் சிறை – beautiful wings, மணி நிறத் தும்பி – sapphire colored bee, வாய் இழி கடாத்த – to the musth liquid flowing on its mouth, வால் மருப்பு ஒருத்தலோடு – with a bull elephant with white tusks, ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின் – when it was attacked by a tiger with pretty markings, tiger with pretty stripes, வேங்கை அம் சினை என – thinking that it was a beautiful branch of a vēngai tree, kino tree, pterocarpus marsupium, விறல் புலி முற்றியும் – approached the victorious tiger and, பூம் பொறி யானைப் புகர் முகம் குறுகியும் – approaching the elephant with beautiful lines and spots on its face, வலி மிகு – great might, வெகுளியான் – with great rage, வாள் உற்ற மன்னரை நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல் – like the wise who approach and work sweetly to bring friendship between mighty kings, மறிதரும் – goes back and forth, அயம் – water, இழி அருவிய அணி மலை நல் நாட – O lord of the fine mountain country decorated with flowing waterfalls (அருவிய – குறிப்புப் பெயரெச்சம்),

ஏறு இரங்கு இருள் இடை இரவினில் – in the dark night when thunder struck, பதம் பெறாஅன் – he did not get benefits (பெறாஅன்  – அளபெடை), மாறினென் – I have changed, எனக் கூறி – telling such, மனம் கொள்ளும் தான் என்ப – he said he was disappointed (என்ப – இசை நிறைவிற்கு வந்தது),

கூடுதல் வேட்கையான் – with desire to be with him, குறி பார்த்து – waiting/looking for signs, குரல் நொச்சிப் பாடு – sounds of nochi clusters falling, ஓர்க்கும் செவியோடு – with listening ears, பைதலேன் யான் ஆக – I suffered in pain, அரும் செலவு ஆர் இடை – through the difficult path, அருளி வந்து – came graciously, அளி பெறாஅன் வருந்தினென் –  I am sad that I did not get your graces (பெறாஅன்  – அளபெடை), என – thus, பல வாய்விடூஉம் தான் என்ப – that he had complained in many ways (வாய்விடூஉம் – அளபெடை, என்ப – இசை நிறைவிற்கு வந்தது),

நிலை உயர் கடவுட்குக் கடம் பூண்டு – I made vows to the higher gods, தன் மாட்டுப் பல சூழும் மனத்தோடு பைதலேன் யான் ஆக – I was distressed with a confusing mind because of him, கனை பெயல் நடுநாள் – midnight with heavy rains, யான் கண் மாறக் குறி பெறாஅன் – he missed the tryst since I changed the place (பெறாஅன்  – இசை நிறை அளபெடை),

புனை இழாய் – O one with beautiful jewels, என் பழி நினக்கு உரைக்கும் தான் – he will tell you that the blame is on me, என்ப – இசை நிறைவிற்கு வந்தது,

துளி நசை வேட்கையான் – with the desire for rain drops, மிசை பாடும் புள்ளின் –  like the skylarks above that sing in the sky above, தன் அளி நசை ஆர்வுற்ற அன்பினேன் யான் ஆக –  as I wait with great desire for his graces (புள்ளின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது),

என ஆங்கு – thus (ஆங்கு – அசைநிலை, an expletive), கலந்த நோய் கைம்மிக – with this increased disease after union, கண்படா – unable to sleep, என் வயின் புலந்தாயும் – with you hating me,  நீ ஆயின் பொய்யானே வெல்குவை – you can win by lying, இலங்கு தாழ் அருவியோடு அணி கொண்ட – decorated with bright flowing waterfalls, நின் மலைச் சிலம்பு போல் – like the sounds in your mountain, கூறுவ கூறும் – will echo what is said, இலங்கு ஏர் எல் வளை – pretty bright bangles, இவள் உடை நோயே – her disease (நோயே – ஏகாரம் அசைநிலை, an expletive)

கலித்தொகை 47
கபிலர், குறிஞ்சி, தோழி தலைவியிடம் சொன்னது
ஒன்று இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும்; உலகம்
புரப்பான் போல்வது ஓர் மதுகையும் உடையன்;
வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான் போல்
நல்லார் கண் தோன்றும் அடக்கமும் உடையன்;
இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க 5
வல்லான் போல்வது ஓர் வன்மையும் உடையன்;
அன்னான் ஒருவன் தன் ஆண்தகை விட்டு என்னைச்
சொல்லும் சொல் கேட்டீ சுடர் இழாய், பல் மாணும்;

“நின் இன்றி அமையலேன் யான்” என்னும் அவன் ஆயின்,
அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிது ஆயின் 10
என் உற்ற பிறர்க்கும் ஆங்கு உள கொல்லோ, நறு நுதால்?

“அறியாய் நீ, வருந்துவல் யான்” என்னும் அவன் ஆயின்,
தமியரே துணிகிற்றல் பெண்டிர்க்கும் அரிது ஆயின்
அளியரோ எம் போல ஈங்கு இவன் வலைப்பட்டார்?

“வாழலேன் யான்” என்னும் நீ நீப்பின் அவன் ஆயின், 15
ஏழையர் எனப் பலர் கூறும் சொல் பழி ஆயின்,
சூழுங்கால் நினைப்பது ஒன்று அறிகலேன், வருந்துவல்
சூழுங்கால் நறு நுதால், நம் உளே சூழ்குவம்;
அவனை,
நாண் அடப் பெயர்த்தல் நமக்கும் ஆங்கு ஒல்லாது, 20
பேணினர் எனப்படுதல் பெண்மையும் அன்று, அவன்
வௌவினன் முயங்கும் மாத்திரம் வா எனக்
கூறுவென் போலக் காட்டி,
மற்று அவன் மேஎ வழி மேவாய் நெஞ்சே.

Kalithokai 47
Kapilar, Kurinji, What the heroine’s friend said to the heroine and to her own heart

To the heroine:

My friend with gleaming jewels! He speaks
humble words as though he is pleading. He has the
wisdom of one who protects the earth. He has the
modest nature seen in fine people, as if he learned
worshipping those wise. He appears to be generous
to those who are in need to reduce their agony.
Casting off his manliness, this is what he said. Listen
to me!

My friend with a fragrant forehead! When he tells me
that he will not live without you, it is hard to trust him.
Has this happened to others like me?

He says that you do not know his pain. When he tells
this, it is difficult for me to decide alone. Aren’t those
caught in his net, like me, pitiable?

If you leave when he says that he will not live without
you, others will blame us for being naïve. When I
analyze it, I don’t know what to make of it. I will feel sad
when I analyze it.

My friend with a fragrant forehead! Let us both think
about it. We’ll be unable to chase him ruining our
modesty. It would be considered not feminine if we
care about him. He has seized your heart.

To her heart:

My heart! Wave to him to come only to embrace her,
but take him where he desires to go.

Meanings:  ஒன்று இரப்பான் போல் – like he is pleading, எளிவந்தும் சொல்லும் – he comes humbly and tells, உலகம் புரப்பான் போல்வது ஓர் மதுகையும் உடையன் – he has the strength/intelligence like he is one who is protecting the earth, வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான் போல் – like one who worshipped the wise ones, நல்லார் கண் தோன்றும் அடக்கமும் உடையன் – he has the humble nature seen in nice people, இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க வல்லான் போல்வது ஓர் வன்மையும் உடையன் அன்னான் – he appears to have the ability to be charitable to reduce the suffering of those who have nothing, ஒருவன் தன் ஆண்தகை விட்டு – letting go of his manly nature, letting go of his status, என்னைச் சொல்லும் சொல் கேட்டீ – listen to what he said to me (கேட்டீ – முன்னிலை ஒருமை வினைமுற்று, வினைத் திரிசொல்), சுடர் இழாய் – O one with gleaming jewels,
பல் மாணும் – greatly, நின் இன்றி அமையலேன் யான் என்னும் அவன் ஆயின் அன்னான் சொல் – his words that he will not live without you, நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிது ஆயின் – if it is difficult to trust him, என் உற்ற பிறர்க்கும் ஆங்கு உள கொல்லோ – has the same happened to others like me (உற்ற – போன்ற), நறு நுதால் – O one with a fragrant forehead,
அறியாய் நீ – you do not know, வருந்துவல் யான் – I am suffering, என்னும் அவன் ஆயின் – when he says in this manner, தமியரே துணிகிற்றல் பெண்டிர்க்கும் அரிது ஆயின் – since it is difficult for women like me to decide alone, அளியரோ – are they pitiful, எம் போல ஈங்கு இவன் வலைப்பட்டார் – those who are caught in his net like me,
வாழலேன் யான் என்னும் நீ நீப்பின் – if you leave when he says that he will not live, அவன் ஆயின் – because of him, ஏழையர் எனப் பலர் கூறும் சொல் பழி ஆயின் – there will be blame from others as us being naïve, சூழுங்கால் – when analyzing (கால் ஈற்று வினையெச்சம், நினைப்பது ஒன்று அறிகலேன் – I do not know what to think of it, வருந்துவல் சூழுங்கால் – I will feel sad if I analyze it (சூழுங்கால் – கால் ஈற்று வினையெச்சம்,
நறு நுதால் – O one with a fragrant forehead, நம் உளே சூழ்குவம் – let us analyze, let us think about it, அவனை நாண் அடப் பெயர்த்தல் நமக்கும் ஆங்கு ஒல்லாது – we will be unable to chase him away ruining our modesty, பேணினர் – they cared, எனப்படுதல் – to be mentioned in this manner, to be considered in this manner, பெண்மையும் அன்று – it would not be feminine, அவன் வௌவினன் – he has seized you,
முயங்கும் மாத்திரம் வா எனக் கூறுவென் போலக் காட்டி – like you are asking him to come only to embrace, மற்று அவன் மேஎ வழி மேவாய் – then you take him where he wants (மேஎ – அளபெடை), நெஞ்சே – O my heart (ஏகாரம் அசை நிலை, an expletive)

கலித்தொகை 48
கபிலர், குறிஞ்சி, தோழி தலைவனிடம் சொன்னது
ஆம் இழி அணி மலை அலர் வேங்கைத் தகை போலத்,
தே மூசு நனை கவுள் திசை காவல் கொளற்கு ஒத்த,
வாய் நில்லா வலி முன்பின், வண்டு ஊது புகர் முகம்
படுமழை அடுக்கத்த, மா விசும்பு ஓங்கிய
கடி மரத் துருத்திய, கமழ் கடாம் திகழ்தரும் 5
பெருங்களிற்று இனத்தொடு வீங்கு எருத்து எறுழ் முன்பின்
இரும்புலி மயக்குற்ற இகல் மலை நல் நாட!

வீழ் பெயல் கங்குலின் விளி ஓர்த்த ஒடுக்கத்தால்,
வாழும் நாள் சிறந்தவள் வருந்து தோள் தவறு உண்டோ,
தாழ் செறி கடும் காப்பின் தாய் முன்னர் நின் சாரல், 10
ஊழுறு கோடல் போல் எல் வளை உகுபவால்?

இனை இருள் இது என ஏங்கி நின் வரல் நசைஇ,
நினை துயர் உழப்பவள் பாடு இல் கண் பழி உண்டோ,
இனையள் என்று எடுத்து அரற்றும் அயல் முன்னர் நின் சுனைக்
கனை பெயல் நீலம் போல் கண் பனி கலுழ்பவால்? 15

பல் நாளும் படர் அடப் பசலையால் உணப்பட்டாள்,
பொன் உரை மணி அன்ன மாமைக் கண் பழி உண்டோ,
இன் நுரைச் செதும்பு அரற்றும் செவ்வியுள் நின் சோலை,
மின் உகு தளிர் அன்ன மெலிவு வந்து உரைப்பதால்?

என ஆங்கு, 20
பின் ஈதல் வேண்டும், நீ பிரிந்தோள் நட்பு என நீவிப்
பூங்கண் படுதலும் அஞ்சுவல், தாங்கிய
அரும் துயர் அவலம் தூக்கின்,
மருங்கு அறிவாரா மலையினும் பெரிதே.

Kalithokai 48

Kapilar, Kurinji, What the heroine’s friend said to the hero

O man from the mountains with clouds,
where water tumbles down the slopes, elephants
that guard cardinal points with face spots like lovely
vēngai flowers have bees swarming around their
flowing, fragrant musth, dense forests abound,
streams are strewn with islets,
and big-necked, fierce tigers attack elephant herds!

Her bright bangles have dropped like the spent kōdal
petals on your mountain, since she is guarded by her
mother who has locked her up. Are they to be blamed,
the thinned arms of my friend who listens for your arrival
at night with sorrow when it rains heavily?

In darkness that gives sorrow, she pines for you. Thinking
about you she is in great pain. Slanderers gossip about her,
who is not to be blamed. Are they to be blamed, her eyes that
shed tears, appearing like the blue waterlily blossoms
pelted by heavy rains in your pond?

She has suffered in agony for many days, pallor has spread,
and there is gossip. She is sad and thin like the plants that
have lost their brightness in your lovely groves where noisy
streams carry sweet foam. Is her dark complexion that has
become like gems with gold to be blamed?

And so, please give in, and come back to her. I worry that
her eyes are in pain, and she is grieving and distressed.
If analyzed, her sorrow is larger than a mountain with
unknown limits!

Notes:  எல் – எல்லே இலக்கம் – (தொல்காப்பியம், இடையியல் 21).

Meanings:  ஆம் இழி – water flowing down, அணி மலை – beautiful mountains, அலர் – bloomed, வேங்கைத் தகை போல – like lovely vēngai flowers, kino flowers, pterocarpus marsupium, தே – sweet, மூசு – swarming, நனை கவுள் – wet cheeks, cheeks with musth, திசை காவல் கொளற்கு – to protect cardinal points, ஒத்த – suitable, வாய் நில்லா – unable to stand opposite, வலி முன்பின் – great strength, வண்டு ஊது புகர் முகம் – bees swarming around the spotted faces, படுமழை – with clouds, with heavy rain, அடுக்கத்த – in the mountain range, மா விசும்பு – tall skies, ஓங்கிய – lofty, கடி மர – many trees, துருத்திய – with islets in the stream, கமழ் கடாம் – fragrant musk, திகழ்தரும் – flourishing, பெருங்களிற்று இனத்தொடு – big male elephant herds, வீங்கு எருத்து – thick neck, எறுழ் முன்பின் – great strength, இரும்புலி – big tiger, மயக்குற்ற – confusing, இகல் – fighting, மலை நல் நாட – O man from the fine mountain country,

வீழ் பெயல் – falling rains, கங்குலின் – at night, விளி – noise to wake her up, ஓர்த்த ஒடுக்கத்தால் – listening and living with sorrow, வாழும் நாள் சிறந்தவள் – she is a nice person, வருந்து தோள் – her shoulders have become thin, தவறு உண்டோ – is this her fault, தாழ் செறி – latched tightly (the door), closed tightly (the door), கடும் காப்பின் தாய் முன்னர் – in front of her strict guarding mother, நின் சாரல் – your mountain slopes, ஊழுறு கோடல் போல் – like wilted kōdal petals, white Malabar glory lilies, எல் வளை உகுபவால் – her bright bangles slip down (உகுபவால் – ஆல் அசைநிலை),

இனை இருள் – in darkness that gives sorrow, இது என ஏங்கி – yearning for you, நின் வரல் – your arrival, நசைஇ – loving it (அளபெடை), நினை துயர் உழப்பவள் – she is thinking about you and is sad, பாடு இல் – without sleep, கண் – eyes, பழி உண்டோ – is it at fault, ‘இனையள்’ என்று எடுத்து அரற்றும் அயல் முன்னர் – in front of others who slander her a lot as such, நின் சுனை – your spring, கனை பெயல் – heavy rains, நீலம் போல் – like blue (lily) flowers, கண் பனி கலுழ்பவால் – eyes shed tears (கலுழ்ப – ஆல் அசை நிலை),

பல் நாளும் படர் அட – sad for many days, பசலையால் உணப்பட்டாள் – she’s afflicted pallor spots, பொன் உரை மணி அன்ன – like gems that are with gold, like gems rubbed with gold, மாமை கண் பழி உண்டோ – is her dark complexion to be blamed, இன் நுரை – sweet foam, செதும்பு அரற்றும் – small streams create noise, செவ்வியுள்  நின் சோலை – your lovely groves, மின் உகு தளிர் அன்ன – like the plant without brightness, like the plant on which brightness has been ruined, மெலிவு வந்து உரைப்பதால் – she has become thin and there is gossip (உரைப்பதால் – ஆல் அசை நிலை),

என ஆங்கு – hence (ஆங்கு – அசைநிலை, an expletive), பின் ஈதல் வேண்டும் – please give her, நீ பிரிந்தோள் நட்பு – your friendship with the young woman you separated from, என – thus, நீவி – remove, பூங்கண் படுதலும் அஞ்சுவல் – I’m afraid that her flower like eyes are sad (அஞ்சுவல் – தன்மையொருமை வினைமுற்று), தாங்கிய – carrying, அரும் துயர் – big sadness அவலம் – pain, தூக்கின் – if analyzed, மருங்கு அறிவாரா மலையினும் பெரிதே – it is bigger than a mountain with limits that are unable to know of (அறிவாரா – அறிய இயலாத, பெரிதே – ஏகாரம் அசை நிலை, an expletive)

கலித்தொகை 49
கபிலர், குறிஞ்சி, தோழி தலைவனிடம் சொன்னது
கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு
நெடு வரை மருங்கின் துஞ்சும் யானை,
நனவில் தான் செய்தது மனத்தது ஆகலின்,
கனவில் கண்டு கதுமென வெரீஇப்,
புதுவது ஆக மலர்ந்த வேங்கையை 5
அது என உணர்ந்து அதன் அணி நலம் முருக்கிப்,
பேணா முன்பின் தன் சினம் தணிந்து, அம் மரம்
காணும் பொழுதின் நோக்கல் செல்லாது
நாணி இறைஞ்சும் நல் மலை நல் நாட!

போது எழில் மலர் உண்கண் இவள் மாட்டு நீ இன்ன 10
காதலை என்பதோ இனிது, மற்று இன்னாதே,
மின் ஓரும் கண் ஆக இடி என்னாய் பெயல் என்னாய்
இன்னது ஓர் ஆர் இடை ஈங்கு நீ வருவதை,

இன்புற அளித்தனை இவள் மாட்டு நீ இன்ன
அன்பினை என்பதோ இனிது, மற்று இன்னாதே, 15
மணம் கமழ் மார்பினை மஞ்சு இவர் அடுக்கம் போழ்ந்து
அணங்கு உடை ஆர் இடை ஈங்கு நீ வருவதை,

இருள் உறழ் இருங்கூந்தல் இவள் மாட்டு நீ இன்ன
அருளினை என்பதோ இனிது, மற்று இன்னாதே,
ஒளிறு வேல் வலன் ஏந்தி ஒருவன் யான் என்னாது 20
களிறு இயங்கு ஆர் இடை ஈங்கு நீ வருவதை,

அதனால்,
இரவின் வாரல் ஐய! விரவு வீ
அகல் அறை வரிக்கும் சாரல்
பகலும் பெறுவை, இவள் தட மென்தோளே. 25

Kalithokai 49
Kapilar, Kurinji, What the heroine’s friend said to the hero
O lord of the fine, lofty mountains where an
exhausted elephant sleeps, tired after attacking
and killing a tiger with curved stripes, the event
imprinted in his mind, he sees it in his dream,
wakes up in distress and attacks a vēngai tree with
new flowers thinking it is a tiger, realizes he ruined
the tree after his unprotected rage ebbed,
is embarrassed and puts his head down unable to
see the tree!

Sweet it is, the love you have for her, the young
woman with kohl-rimmed eyes that are like pretty
flowers. But it is painful, when you come here not
caring about thunder, lightning and rain.

You offered your graces and made her happy.
But it is painful, when you with a fragrant chest come
through the fog-spreading mountains on a harsh
path where terror lingers.

Sweet it is, the kindness you offer her, the young
woman with darkness-like, black hair. But it is painful,
when you come alone carrying a bright spear on a
harsh path where elephants roam.

So, sir, do not come at night! You can enjoy her broad,
soft shoulders during the day on the slopes near the
wide boulder decorated by flowers!

Notes:  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).

Meanings:  கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு – distressed after attacking a tiger with curved stripes and winning (கொடுவரி – பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, ஆகுபெயருமாம்), நெடு வரை மருங்கின் துஞ்சும் யானை – an elephant that sleeps in the tall mountain, நனவில் தான் செய்தது மனத்தது ஆகலின் – what happened in real life imprinted on his mind, கனவில் கண்டு – on seeing it in its dream, கதுமென வெரீஇ – suddenly with fear (கதுமென – விரைவுக்குறிப்பு, வெரீஇ – அளபெடை), புதுவது ஆக மலர்ந்த வேங்கையை – a vēngai tree that had new blossoms, kino flowers, pterocarpus marsupium, அது என உணர்ந்து – knowing what it is, அதன் அணி நலம் முருக்கி – ruined its fine beauty, பேணா முன்பின் – unprotected might, தன் சினம் தணிந்து – its rage reduced, அம் மரம் காணும் பொழுதின் – when he saw the tree, நோக்கல் செல்லாது – not looking at it, நாணி – he was embarrassed, இறைஞ்சும் –  he bends his head, நல் மலை நல் நாட – O lord of the lovely mountains,

போது – bud/flower, எழில் மலர் – beautiful flower, உண்கண் இவள் மாட்டு நீ இன்ன காதலை என்பதோ இனிது – you being in love with her with kohl-rimmed eyes is sweet, மற்று இன்னாதே மின் ஓரும் கண் ஆக இடி என்னாய்– it is painful that you come when there is lightning and thunder (ஓரும் – அசை நிலை, an expletive), பெயல் என்னாய்  – you do not consider if it is raining, இன்னது – it is painful, ஓர் ஆர் இடை ஈங்கு நீ வருவதை – you coming through the difficult path (வருவதை – ஐ சாரியை,

இன்புற அளித்தனை இவள் மாட்டு – you offered her your graces for her to be happy, நீ இன்ன அன்பினை என்பதோ இனிது – your love for her is sweet, மற்று இன்னாதே – but it is painful, மணம் கமழ் மார்பினை – you with a fragrant chest, மஞ்சு இவர் அடுக்கம் – mountain sides with fog spreading, போழ்ந்து – splitting, அணங்கு உடை – with terror, ஆர் இடை – difficult path,  ஈங்கு நீ வருவதை – you coming here,

இருள் உறழ் இருங்கூந்தல் – darkness like black hair, இவள் மாட்டு – with her, நீ இன்ன அருளினை என்பதோ இனிது – that your shower graces is sweet, மற்று இன்னாதே – but it is harsh, ஒளிறு வேல் வலன் ஏந்தி ஒருவன்  – a man carrying bright spear with strength, யான் என்னாது – not considering, களிறு இயங்கு ஆர் இடை – harsh paths where bull elephants roam, ஈங்கு நீ வருவதை – you coming here (வருவதை – ஐ சாரியை,

அதனால் இரவின் வாரல் – so do not come at night (வாரல் – அல்லீற்று எதிர்மறை வியங்கோள் வினைமுற்று), ஐய – sir, விரவு வீ  அகல் அறை வரிக்கும் – flowers decorate wide boulders, சாரல் – mountain slopes, பகலும் பெறுவை – you will receive during the day, இவள் – her, தட – curved, large, மென்தோளே – delicate arms, delicate shoulders (அசை நிலை, an expletive)

கலித்தொகை 50
கபிலர், குறிஞ்சி, தோழி தலைவனிடம் சொன்னது
வாங்கு கோல் நெல்லொடு வாங்கி வருவைகல்,
மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும் பிடி,
தூங்கு இலை வாழை நளி புக்கு, ஞாங்கர்
வருடை மட மறி ஊர்வு இடைத் துஞ்சும்
இருள் தூங்கு சோலை இலங்கு நீர் வெற்ப! 5

அரவின் பொறியும் அணங்கும் புணர்ந்த
உரவு வில் மேல் அசைத்த கையை, ஓராங்கு
நிரை வளை முன்கை என் தோழியை நோக்கிப்,
படி கிளி பாயும் பசுங்குரல் ஏனல்
கடிதல் மறப்பித்தாய் ஆயின், இனி நீ 10
நெடிது உள்ளல் ஓம்புதல் வேண்டும்; இவளே
பல் கோள் பலவின் பயிர்ப்பு உறு தீம் கனி
அல்கு அறைக் கொண்டு ஊண் அமலைச் சிறுகுடி
நல்கூர்ந்தார் செல்வ மகள்;

நீயே வளியின் இகல் மிகும் தேரும் களிறும் 15
தளியின் சிறந்தனை, வந்த புலவர்க்கு
அளியொடு கைதூவலை,
அதனால்,
கடு மா கடவுறூஉம் கோல் போல் எனைத்தும்
கொடுமை இலை ஆவது அறிந்தும், அடுப்பல் 20
வழை வளர் சாரல் வருடை நல் மான்
குழவி வளர்ப்பவர் போலப் பாராட்டி,
உழையின் பிரியின் பிரியும்,
இழை அணி அல்குல் என் தோழியது கவினே.

Kalithokai 50
Kapilar, Kurinji, What the heroine’s friend said to the hero
O lord of the mountains with bright waters
and dark groves, where a dark female elephant
with sturdy legs, eats bamboo seeds from bent
bamboo along with its tender stalks bent at dawn,
enters a banana patch dense with banana trees with
swaying leaves and sleeps where naïve young
mountain goats play!

You carrying a strong, fearsome bow with spots like
that on a snake, stared endlessly at my friend with
stacked bangles on her wrist, and caused her to forget
protecting the millet with fresh clusters attacked
by parrots. You need to think about it and protect her.

She is the dear daughter of parents who were
childless for long, hailing from a small village with
abundant food and jackfruit trees with clusters of
sticky jackfruits that drop on boulders.

You donate generously to poets who come, chariots
as fast as the wind, and bull elephants, your charity
exceeding that of the rain.

So, knowing that you are not harsh like the whip that
goads fast horses, I will help you unite with her.
Please take care of her like those who nurture baby
mountain goats on the slopes with surapunnai trees.
If you part from her, the beauty of the young woman
wearing jewels on her waist will fade away.

Meanings:  வாங்கு கோல் நெல்லொடு – with the seeds of bent bamboo, வாங்கி – bent, வருவைகல் – appearing morning, மூங்கில் மிசைந்த – that ate tender bamboo, முழந்தாள் – legs (முழந்தாள் = முழங்கால் முட்டுக்கும் கணுக்காலுக்கும் இடையிலுள்ள உறுப்பு, part of the leg between the knee and the ankle), இரும் பிடி – dark female elephant, தூங்கு இலை வாழை நளி புக்கு – enters the banana path that is dense with banana trees with swaying leaves, ஞாங்கர் வருடை மட மறி ஊர்வு இடைத் துஞ்சும் – it sleeps where naïve mountain goat young ones play, இருள் தூங்கு சோலை – very dark groves, groves where darkness stays, இலங்கு நீர் வெற்ப – O lord of the mountains with bright waters,

அரவின் பொறியும் அணங்கும் புணர்ந்த – with spots like that of a snake and fearsome, உரவு வில் மேல் அசைத்த கையை – with hands that carry a strong bow (கையை – கையை உடையையாய்), ஓராங்கு – together, நிரை வளை முன்கை – wrists with rows of bangles, என் தோழியை நோக்கி – looking at my friend, படி கிளி  – attacked by diving parrots, பாயும் பசுங்குரல் – fresh clusters that have spread, ஏனல் – millet, கடிதல் மறப்பித்தாய் – you caused her to forget protecting, ஆயின் – so, இனி நீ நெடிது உள்ளல் ஓம்புதல் வேண்டும் – you need to think a lot and protect her,

இவளே – she, பல் கோள் – many clusters, பலவின் – of jackfruit trees, பயிர்ப்பு உறு – with stickiness, causing stains, தீம் கனி – sweet fruits, அல்கு அறைக் கொண்டு – dropping down on boulders, ஊண் அமலைச் சிறுகுடி – small village with abundant food, நல்கூர்ந்தார் – those who struggled – without a child, செல்வ மகள் – dear daughter,

நீயே – you, வளியின் இகல் மிகும் தேரும் – chariots that are fast like the wind, களிறும் – and bull elephants, தளியின் சிறந்தனை – you are better than the rain in generosity, வந்த புலவர்க்கு அளியொடு கைதூவலை – you give generously to poets who come,

அதனால் – so, கடு மா கடவுறூஉம் கோல் போல் – like the whip that goads fast horses (கடவுறூஉம் – அளபெடை), எனைத்தும் கொடுமை இலை ஆவது அறிந்தும் – knowing that you are not harsh like that (இலை – இல்லை என்பதன் விகாரம்), அடுப்பல் – I will help you to unite with her, வழை வளர் – surapunnai tree growing, சுரபுன்னை, Long-leaved two-sepalled gamboge flower, ochrocarpus longifolius, சாரல் – slopes, வருடை நல் மான் குழவி வளர்ப்பவர் போல – like those who raise fine baby mountain goats, பாராட்டி – praise, உழையின் பிரியின் – if you separate from her, பிரியும் – it will depart, இழை அணி அல்குல் – pretty waist with jewels, pretty loins with jewels, என் தோழியது கவினே – my friend’s beauty (கவினே – அசைநிலை, an expletive)

கலித்தொகை 51

கபிலர், குறிஞ்சி, தலைவி தோழியிடம் சொன்னது

சுடர்த் தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்
மணல் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து வரிப் பந்து கொண்டு ஓடி,
நோதக்க செய்யும் சிறு பட்டி, மேல் ஓர் நாள்
அன்னையும் யானும் இருந்தேமா, “இல்லிரே! 5
உண்ணு நீர் வேட்டேன்” என வந்தாற்கு அன்னை,
“அடர் பொன் சிரகத்தால் வாக்கிச் சுடர் இழாய்,
உண்ணு நீர் ஊட்டி வா” என்றாள் என, யானும்
தன்னை அறியாது சென்றேன், மற்று என்னை
வளை முன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு, 10
“அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண்” என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்
“உண்ணு நீர் விக்கினான்” என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ மற்று என்னைக்
கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகைக்கூட்டம் 15
செய்தான் அக் கள்வன் மகன்.

Kalithokai 51
Kapilar, Kurinji, What the heroine said to her friend
Listen my friend donning bright bangles!
That wild brat who used to kick our little sand
houses on the street with his leg, pull flower
strands from our hair, and yank striped balls
from us causing agony, came one day when
mother and I were at home.

“O, people of this house! Please give me some
water to drink,” he said. Mother said to me,
“Pour water in the gold vessel, and give it
to him to drink, my daughter with bright jewels.”
And so I went unaware that it was him.

He seized my bangled wrist and squeezed it,
causing distress. “Mother, see what he has done,”
I shouted.
My distressed mother came running with a shriek
and I said to her “He had hiccups drinking water.”
Mother stroked his back gently, and asked him to
drink slowly.

He, that thief, looked at me through the corners of
his eyes, gave me killer looks, and smiled with joy!

Notes:  நற்றிணை 378 – ஓங்கு மணல் வரி ஆர் சிறு மனை சிதைஇ. வரிப் பந்து – நற்றிணை 12 – வரி புனை பந்தொடு – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை, ஒளவை துரைசாமி உரை – வரிந்து புனையப்பட்ட பந்தொடு, திருமுருகாற்றுப்படை 68 – வரிப் புனை பந்தொடு – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தும், நச்சினார்க்கினியர் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தும், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தோடு, கலித்தொகை 51 – வரிப் பந்து – நச்சினார்க்கினியர் உரை – வரியினையுடைய பந்து, பரிபாடல் 9 – வரிப் பந்து – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வரியினையுடைய பந்து, பெரும்பாணாற்றுப்படை 333 – வரிப்பந்து – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரியப்பட்ட பந்து.  சிதையா – சிதைத்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  நகைக்கூட்டம்  செய்தான் (15) – நச்சினார்க்கினியர் உரை – மனமகிழ்ச்சியைத் தரும் கூட்டத்தை அவன் செய்தான்,  ச. வே. சுப்பிரமணியன் உரை – சிரித்தான்.  தலைவனைக் கள்வன் என்றல் – குறுந்தொகை 25 – யாரும் இல்லைத் தானே கள்வன், குறுந்தொகை 318 – கள்வனும் கடவனும் புணைவனும் தானே,  நற்றிணை 28 – கள்வர் போலக் கொடியன், நற்றிணை 40 – நள்ளென் கங்குல் கள்வன் போல, கலித்தொகை 144 – பொழில் தொறும் நாடுவேன் கள்வன் கரந்து இருக்கற்பாலன் கொல், கலித்தொகை 145 – துயர் செய்த கள்வன், கலித்தொகை 51 – கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகைக்கூட்டம் செய்தான் அக் கள்வன் மகன்.

Meanings:  சுடர்த் தொடீஇ – O bright bangled woman (அன்மொழித்தொகை, விளி, an address, அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), கேளாய் – listen to this, தெருவில் நாம் ஆடும் – when we played on the street, மணல் சிற்றில் – little sand houses, காலின் சிதையா – he kicked with his feet and broke (சிதையா – வினையெச்சம், verbal participle), அடைச்சிய கோதை – worn flower strands, பரிந்து – broke, ruined, வரிப் பந்து கொண்டு ஓடி – took away our striped ball and ran away, நோதக்க செய்யும் – causing pain, சிறு பட்டி – the irresponsible boy, the little brat, மேல் ஓர் நாள் – a day a while ago, அன்னையும் யானும் இருந்தேமா – when mother and I were together, இல்லிரே – O those in this house, உண்ணு நீர் வேட்டேன் – I am requesting drinking water, என வந்தாற்கு – to him who came in this manner, அன்னை – mother, அடர் பொன் சிரகத்தால் வாக்கி – pour for him in the gold bowl, pour for him in the iron bowl (அடர் – metal sheet, dense), சுடர் இழாய் – O one wearing bright jewels, உண்ணு நீர் ஊட்டி வா – give him water to drink, என்றாள் – she said, என யானும் – and so I, தன்னை அறியாது சென்றேன் – I went unaware that it was him, மற்று – then, என்னை வளை முன்கை பற்றி – he grabbed my bangled forearms, நலிய – becoming distressed, தெருமந்திட்டு – I became confused, அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண் – mother! see what he has done, அன்னை அலறி படர்தர – as mother screamed and came, தன்னை யான் – I said about him, உண்ணு நீர் விக்கினான் – he hiccupped while drinking, அன்னையும் தன்னைப் புறம்பு அழித்து நீவ – as mother stroked his back gently, மற்று என்னைக் கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி – he then looked at me through the corner of eyes giving killer looks, நகைக்கூட்டம் செய்தான் – he smiled with joy, he expressed his feelings of love, அக் கள்வன் மகன் – that thief

கலித்தொகை 52
கபிலர், குறிஞ்சி, தோழி தலைவனிடம் சொன்னது
முறஞ்செவி மறைப் பாய்பு முரண் செய்த புலி செற்று,
மறம் தலைக்கொண்ட நூற்றுவர் தலைவனைக்
குறங்கு அறுத்திடுவான் போல், கூர் நுதி மடுத்து, அதன்
நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை
மல்லரை மறம் சாய்த்த மால் போல் தன் கிளை நாப்பண், 5
கல் உயர் நனம் சாரல் கலந்து இயலும் நாட! கேள்

தாமரைக் கண்ணியைத் தண் நறும் சாந்தினை,
நேர் இதழ்க் கோதையாள் செய் குறி நீ வரின்,
மணம் கமழ் நாற்றத்த மலை நின்று பலி பெறூஉம்
அணங்கு என அஞ்சுவர் சிறுகுடியோரே; 10

ஈர்ந்தண் ஆடையை எல்லி மாலையை
சோர்ந்து வீழ் கதுப்பினாள் செய் குறி நீ வரின்,
ஒளி திகழ் ஞெகிழியர், கவணையர், வில்லர்,
களிறு என ஆர்ப்பவர் ஏனல் காவலரே;

ஆர மார்பினை அண்ணலை அளியை 15
ஐது அகல் அல்குலாள் செய் குறி நீ வரின்,
கறி வளர் சிலம்பில் வழங்கல் ஆனாப்
புலி என்று ஓர்க்கும் இக் கலி கேழ் ஊரே;
என ஆங்கு,
விலங்கு ஓரார் மெய் ஓர்ப்பின் இவள் வாழாள், இவள் அன்றிப் 20
புலம் புகழ் ஒருவ யானும் வாழேன்;
அதனால் பொதி அவிழ் வைகறை வந்து நீ குறை கூறி,
வதுவை அயர்தல் வேண்டுவல்; ஆங்குப்
புதுவை போலும் நின் வரவும், இவள்
வதுவை நாண் ஒடுக்கமும் காண்குவல் யானே. 25

Kalithokai 52
Kapilar, Kurinji, What the heroine’s friend said to the hero
O lord of the mountain where a handsome
bull elephant with long tusks, that gets
attacked behind his muram-like
ears by a leaping hostile tiger, thrusts his
sharp-tipped tusks into its chest and ends it rage,
……….like the righteous Veemasēnan who cut off
……….the thighs of Thuriyōthanan, the leader of
……….the one hundred,
and roams in the vast slopes of the lofty mountains
with his herd, proud like Thirumāl who vanquished
the Mallars!

If you come to the tryst indicated by my friend with
a strand with pretty petals, wearing a lotus garland
and cool, fragrant sandal paste, the folks in our small
town will fear thinking you are a mountain deity who
has arrived to extract offerings!

If you come to the tryst indicated by my friend with
flowing hair, at night, wearing wet, cool clothes, there
will be uproars from those carrying flame torches,
those carrying catapults, those carrying bows, millet
field guards and those who yell “bull elephant”!

If you come to the tryst indicated by my friend with
delicate, wide loins, wearing a sandal garland, with
noble and generous disposition, the people in this
town will think that a fierce tiger is lurking on the slopes
of the pepper-growing mountain!

If they analyze and know the real situation in this manner,
she will not live. Without her, O one with no equal who is
praised by the world, I will not live!

So, early morning when the buds open their petals, come
and request our folks to marry her. I desire this. When
you come there as a stranger and marry her, my eyes will
enjoy her shyness and restraint!

Notes:  அகநானூறு 112 – கண் கொள் நோக்கி நொதுமல் விருந்தினம் போல இவள் புது நாண் ஒடுக்கமும் காண்குவம் யாமே. நற்றிணை 393 – வாழி தோழி நம் காதலர் புதுவர் ஆகிய வரவும் நின் வதுவை நாண் ஒடுக்கமும் காணுங்காலே. யானையின் முறம் போன்ற செவி – நற்றிணை 376 புறநானூறு 339, நற்றிணை 376, கலித்தொகை 52 – முறஞ்செவி யானை, கலித்தொகை 42 – முறஞ்செவி வாரணம்.  நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).  மார்பினை அண்ணலை அளியை – முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்றுக்கள்.

Meanings:  முறம் செவி – winnowing tray-like ears, மறை – hiding, பாய்பு முரண் செய்த புலி – tiger that leapt and fought with hostility, செற்று – enraged, மறம் தலைக்கொண்ட – one who is righteous, நூற்றுவர் தலைவனைக் குறங்கு அறுத்திடுவான் போல் – like Veemasēnan who cut off the thighs of Thuriyōthanan who was the leader of one hundred, கூர் நுதி மடுத்து – thrust with sharp ends, அதன் நிறம் சாடி – gored its chest, முரண் தீர்ந்த – ended its hostility, நீள் மருப்பு எழில் யானை – lovely elephant with long tusks, மல்லரை மறம் சாய்த்த மால் போல் – like Thirumāl who was victorious over the Mallars, தன் கிளை நாப்பண் – amidst its herd, கல் உயர் – tall mountain, நனம் சாரல் – wide slopes, கலந்து இயலும் – roams together, நாட – O man from such country, கேள் – listen,

தாமரைக் கண்ணியை – you wearing a lotus garland, தண் நறும் சாந்தினை – you with cool fragrant sandal paste, நேர் இதழ்க் கோதையாள் செய் குறி நீ வரின் – you come because of the tryst arranged by the young woman wearing a garland with pretty petals, மணம் கமழ் நாற்றத்த – due to the fragrance, மலை நின்று பலி பெறூஉம் அணங்கு என – that you are a deity in the mountains who is here to extract offerings (பெறூஉம் – அளபெடை), அஞ்சுவர் சிறுகுடியோரே – our small village folks will fear,

ஈர்ந்தண் ஆடையை – you wearing wet cool clothes, எல்லி – night time, மாலையை – you are of the nature, சோர்ந்து வீழ் கதுப்பினாள் செய் குறி நீ வரின் – if you come because of the tryst arranged by the young woman with flowing hair, ஒளி திகழ் ஞெகிழியர் – those carrying bright flame torches,  கவணையர் – those with catapults, வில்லர் – those with bows, களிறு என ஆர்ப்பவர் – those who yell that it is a bull elephant, ஏனல் காவலரே – guards of millet fields,

ஆர மார்பினை – you with a chest with sandal garland, அண்ணலை – you are noble, அளியை – you are one who is generous, ஐது அகல் அல்குலாள் செய் குறி நீ வரின் – if you come because of the tryst arranged by the girl with delicate, wide loins, கறி வளர் சிலம்பில் – on the pepper-growing mountain slopes, வழங்கல் ஆனாப் புலி – a fierce tiger lurks constantly, என்று ஓர்க்கும் இக் கலி கேழ் ஊரே – is how this uproarious town will think,

என ஆங்கு – hence (ஆங்கு – அசைநிலை, an expletive), விலங்கு – as something different, ஓரார் – not considering, மெய் ஓர்ப்பின் – if they truly analyze the situation, இவள் வாழாள் – she will not live, இவள் அன்றி- without her, புலம் புகழ் ஒருவ – O one with no equal praised by the world, யானும் வாழேன் – I will also not live,

அதனால் –  so, பொதி அவிழ் வைகறை – early morning when flower buds open from their tightness, வந்து நீ – you come, குறை கூறி – tell them your request, வதுவை அயர்தல் வேண்டுவல் – I desire for you to come and marry her, ஆங்குப் புதுவை போலும் நின் வரவும் – when you come as a stranger here, இவள் வதுவை நாண் ஒடுக்கமும் காண்குவல் யானே – I will see her shyness and restraint at her wedding (யானே – ஏகாரம் பிரிநிலை)

கலித்தொகை 53
கபிலர், குறிஞ்சி, தோழி தலைவனிடம் சொன்னது
வறன் உறல் அறியாத வழை அமை நறும் சாரல்
விறல் மலை வியல் அறை வீழ் பிடி உழையதா,
மறம் மிகு வேழம் தன் மாறு கொள் மைந்தினான்,
புகர் நுதல் புண் செய்த புய் கோடு போல,
உயர் முகை நறும் காந்தள் நாள் தோறும் புதிது ஈன, 5
அயம் நந்தி அணிபெற அருவி ஆர்த்து இழிதரும்
பய மழை தலைஇய பாடு சால் விறல் வெற்ப!

மறையினின் மணந்து ஆங்கே மருவு அறத் துறந்த பின்,
இறை வளை நெகிழ்பு ஓட ஏற்பவும் ஒல்லும் மன்,
அயல் அலர் தூற்றலின் ஆய் நலன் இழந்த கண் 10
கயல் உமிழ் நீர் போலக் கண் பனி கலுழாக்கால்;

இனிய செய்து அகன்று நீ இன்னாதாத் துறத்தலின்,
பனி இவள் படர் எனப் பரவாமை ஒல்லும் மன்,
ஊர் அலர் தூற்றலின் ஒளி ஓடி நறு நுதல்
பீர் அலர் அணி கொண்டு பிறை வனப்பு இழவாக்கால்; 15

அஞ்சல் என்று அகன்று நீ அருளாது துறத்தலின்,
நெஞ்சு அழி துயர் அட நிறுப்பவும் இயையும் மன்,
நனவினால் நலம் வாட நலிதந்த நடுங்கு அஞர்
கனவினால் அழிவுற்றுக் கங்குலும் ஆற்றாக்கால்;
என ஆங்கு, 20
விளியா நோய் உழந்து ஆனா என் தோழி, நின் மலை
முளிவுற வருந்திய முளை முதிர் சிறு தினை
தளி பெறத் தகை பெற்றாங்கு நின்
அளி பெற நந்தும், இவள் ஆய் நுதல் கவினே.

Kalithokai 53
Kapilar, Kurinji, What the heroine’s friend said to the hero
O lord of the famed, beautiful mountain
where beneficial rains pour, waterfalls flow
down with roars, ponds and valleys fill up
with water, and fragrant kānthal flowers bloom
every day from tall buds appearing like the bloody
tusks of a bull elephant with great strength that
created wounds on the spotted forehead of a rival
elephant, since he was arrogant, being with his
beloved female elephant, near huge boulders in the
surapunnai forest on the fragrant mountain slope
that does not know dryness!

If her eyes that lost their fine beauty when others
slandered her did not shed tears like carp spouting
water, she could have accepted her bangles
becoming loose on her wrists, since you abandoned
her after uniting with her secretly.

If her crescent moon shaped forehead did not lose
its beauty, becoming the color of peerkai flowers,
when those in town slandered her, she could have
accepted the pain of you abandoning her after being
sweet, and she would not have sought the gods.

If her dreams did not cause her distress and
trembling pain at night, she could have stopped the
anguish in her heart caused in reality by you who
abandoned her without graces, after telling her not
to fear.

In this manner my friend is struggling with
afflictions that cannot be removed. Like millet
plants that struggle without water thrive
when rain arrives, the beauty of her forehead will 
flourish if you shower your graces on her.

Notes:  பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 86).

Meanings:  வறன் உறல் அறியாத – that does not know dryness, வழை அமை – with surapunnai trees, நறும் சாரல் – fragrant mountain slopes, விறல் மலை – beautiful mountains, வியல் அறை – huge boulder, வீழ் பிடி – beloved female elephant, உழையதா – since he was near her (உழையதாக என்பதன் ஈறு தொக்கது), மறம் மிகு வேழம் – a bull elephant with might, a brave bull elephant, தன் மாறு கொள் மைந்தினான் – an enemy with strength, புகர் நுதல் புண் செய்த – caused wounds on its spotted forehead, புய் – pulled out,  கோடு போல – line  the tusks, உயர் முகை – tall buds, நறும் காந்தள் நாள் தோறும் புதிது ஈன – fragrant new glory lily flowers blossom every day, அயம் நந்தி – ponds/depressions fill up, அணிபெற – become beautiful, அருவி ஆர்த்து இழிதரும் – waterfalls roar and come down, பய மழை – beneficial rains, தலைஇய – poured (அளபெடை), பாடு சால் – proud, great, suitable for songs, விறல் வெற்ப – O lord of the beautiful mountains,

மறையினின் மணந்து – united with her in secret, ஆங்கே – there, மருவு அற – giving up union, துறந்த பின் – after you abandoned, இறை – wrists, வளை நெகிழ்பு ஓட – bangles loosen and run, ஏற்பவும் ஒல்லும் – she could have accepted it, மன் – ஒழியிசை, அயல் அலர் தூற்றலின் – when others slander, ஆய் நலன் இழந்த – fine beauty ruined, கண் – eyes, கயல் உமிழ் நீர் போல – like the water spouted by carp fish, Cyprinus fimbriatus, கண் பனி கலுழாக்கால் – if they did not drop tears,

இனிய செய்து – being sweet, அகன்று – leaving, நீ இன்னாதாத் துறத்தலின் – since you abandoned her giving her pain, பனி இவள் படர் எனப் பரவாமை – not worshipping god accepting affliction, ஒல்லும் – will agree, மன் – ஒழியிசை, ஊர் அலர் தூற்றலின் – when those in town slander, ஒளி ஓடி – brightness leaves, நறு நுதல் – fragrant forehead, பீர் அலர் அணி கொண்டு – has become like a ridge gourd flower, Luffa acutangula, பிறை வனப்பு – crescent moon beauty, இழவாக்கால் – if it did not lose,

அஞ்சல் என்று அகன்று – leaving after telling not to fear, நீ அருளாது துறத்தலின் – since you abandoned her without showering your graces, நெஞ்சு அழி துயர் அட – distress ruining her heart, நிறுப்பவும் இயையும் – it is possible to stop, மன் – ஒழியிசை, நனவினால் நலம் வாட – her beauty ruined in reality (நனவின் + ஆல், ஆல் அசைநிலை), நலிதந்த – painful, நடுங்கு அஞர் – sorrow that causes trembling, கனவினால் – in her dreams (கனவின் + ஆல், ஆல் அசைநிலை), அழிவுற்று – being ruined, கங்குலும் – even at night, ஆற்றாக்கால் – if they do not distress,

என ஆங்கு – thus (ஆங்கு – அசைநிலை, an expletive), விளியா நோய் – not removable disease, உழந்து ஆனா – struggling in distress, என் தோழி – my friend, நின் மலை – your mountain, முளிவுற வருந்திய – saddened because of the dryness, முளை முதிர் சிறு தினை – tiny millet plants that grow (முளை முதிர் – முளைத்தல் மிக்க), தளி பெறத் தகை பெற்றாங்கு – how they become splendid after rains, நின் அளி பெற – if she gets your graces, நந்தும் இவள் ஆய் நுதல் கவினே – her pretty forehead will attain splendor (கவினே – ஏகாரம் அசைநிலை, an expletive)

கலித்தொகை 54
கபிலர், குறிஞ்சி, தலைவி தோழியிடம் சொன்னது
கொடியவும் கோட்டவும் நீர் இன்றி நிறம் பெறப்
பொடி அழல் புறந்தந்த பூவாப் பூம் பொலங்கோதைத்
தொடி செறி யாப்பு அமை அரி முன்கை அணைத் தோளாய்
அடி உறை அருளாமை ஒத்ததோ நினக்கு என்ன
நரந்தம் நாறு இருங்கூந்தல் எஞ்சாது நனி பற்றிப் 5
பொலம் புனை மகரவாய் நுங்கிய சிகழிகை
நலம்பெறச் சுற்றிய குரல் அமை ஒரு காழ்
விரல் முறை சுற்றி மோக்கலும் மோந்தனன்
நறாஅ அவிழ்ந்தன்ன என் மெல் விரல் போது கொண்டு
செறாஅச் செங்கண் புதைய வைத்துப் 10
பறாஅக் குருகின் உயிர்த்தலும் உயிர்த்தனன்
தொய்யில் இள முலை இனிய தைவந்து
தொய்யல் அம் தடக் கையின் வீழ் பிடி அளிக்கும்
மையல் யானையின் மருட்டலும் மருட்டினன்
அதனால் 15
அல்லல் களைந்தனன் தோழி நம் நகர்
அருங்கடி நீவாமை கூறின் நன்று என
நின்னொடு சூழ்வல் தோழி நயம் புரிந்து
இன்னது செய்தாள் இவள் என
மன்னா உலகத்து மன்னுவது புரைமே. 20

Kalithokai 54
Kapilar, Kurinji, What the heroine said to her friend
He said, “O one with arms as soft as a pillow!
Does it suit you to not shower your graces on
me submit to your feet, O young woman wearing a
garland strung with flowers from vines and stems that
do not blossom, that attain their color without water,
made by melting gold in flame with ashes, and pretty
bangles tied together on your delicate forearms?

He held firmly my black hair with narantham flower
fragrance,
and wound around his fingers and smelled a flower
strand with clusters on my hair decorated beautifully
with a gold ornament of a fish with a gaping mouth.

He pressed my delicate fingers, like naravam petals, on
his red eyes without rage, and sighed like a metalsmith’s
bellows.

He fondled sweetly my tender breasts with thoyyil
designs and awed me like a loving bull elephant that
strokes his beloved female with his large, beautiful trunk.

And so he removed my affliction, my friend. I want you
to tell our folks that my wedding should happen in our
well-protected house without hindrances. I want to
analyze this with you. You will be praised that you knew
and did the right thing. Your fame will stand as long as
this unstable world lasts!

Notes:  பறாஅக் குருகின் உயிர்த்தலும் உயிர்த்தனன் (11) – பறக்காத குருகாகிய கொல்லனின் உலைத்துருத்திப் போல் பெருமூச்சு விட்டான், வெளிப்படை, he sighed like a blacksmith’s bellows which is the kuruku (heron) that does not fly.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), 

Meanings:  கொடியவும் கோட்டவும் – on vines and tree branches, நீர் இன்றி – without water, நிறம் பெற – to attain color, பொடி – ash, அழல் புறந்தந்த – created with flame, பூவாப் பூம் பொலங்கோதை – non-flowering gold flower garland, கோதை – garland, தொடி – bangles, செறி யாப்பு அமை – tied together, அரி – beautiful, delicate, முன்கை – forearms, wrists, அணைத் தோளாய் – one with arms soft like a pillow, one with delicate arms, அடி உறை அருளாமை ஒத்ததோ நினக்கு – is it fitting for you not to shower graces on me to be at your feet, என்ன – saying this,

நரந்தம் நாறு இருங்கூந்தல் எஞ்சாது நனி பற்றி – holding firmly my thick/dark hair with narantham flower fragrance, bitter orange, நாரத்தை, Citrus aurantium, பொலம் புனை – made with gold, மகரவாய் – fish with mouth, நுங்கிய – swallowed, சிகழிகை – hairstyle, hair knot, நலம் பெற – making it beautiful, சுற்றிய – wrapped, குரல் அமை ஒரு காழ் – a strand with clusters of flowers, விரல் முறை சுற்றி மோக்கலும் மோந்தனன் – he smelled it wrapping it around his finger,

நறாஅ அவிழ்ந்தன்ன – like naravam petals opened, Luvunga scandens (நறாஅ – அளபெடை), என் மெல் விரல் போது கொண்டு – taking my flower-like delicate fingers, செறாஅச் செங்கண் புதைய வைத்து – pressed it on his red eyes without rage (செறாஅ – அளபெடை), பறாஅ குருகின் உயிர்த்தலும் உயிர்த்தனன் – he sighed like a blacksmith’s bellows which is the kuruku (heron) that does not fly (பறாஅ – அளபெடை, பறாஅ குருகின் – உலைத்துருத்திக்கு வெளிப்படை, இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு)

தொய்யில் – thoyyil designs, இள முலை – tender breasts, இனிய தைவந்து – caressed them sweetly, stroked them sweetly, தொய்யல் – tired, அம் தடக் கையின் – with his lovely large trunk, வீழ் பிடி – loving female elephant, அளிக்கும் – he showers his graces, மையல் யானையின் மருட்டலும் – like how the loving elephant entices (யானையின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு)), மருட்டினன் – he made me fall for him, he caused love feelings,

அதனால் – so, அல்லல் களைந்தனன் தோழி – he removed sorrow my friend, நம் நகர் – in our house, அருங்கடி நீவாமை கூறின் நன்று என – it would be good if you tell that my wedding should happen in our protected house without hindrances, நின்னொடு சூழ்வல் தோழி – I will like to analyze this with you my friend, நயம் புரிந்து இன்னது செய்தாள் இவள் என – that she did this fair deed knowing it is right, மன்னா உலகத்து மன்னுவது புரைமே – it is fitting that it will stand forever eminently in this unstable world (புரைமே – பொருந்துமே)

கலித்தொகை 55
கபிலர், குறிஞ்சி, தலைவி தோழியிடம் சொன்னது
மின் ஒளிர் அவிர் அறல் இடை போழும் பெயலே போல்
பொன் அகை தகை வகிர் வகை நெறி வயங்கிட்டுப்
போழ் இடை இட்ட கமழ் நறும் பூங்கோதை
இன்னகை இலங்கு எயிற்றுத் தேமொழித் துவர்ச் செவ்வாய்
நல் நுதால், நினக்கு ஒன்று கூறுவாம், கேள் இனி!   5

“நில்” என நிறுத்தான், நிறுத்தே வந்து
நுதலும் முகனும் தோளும் கண்ணும்
இயலும் சொல்லும் நோக்குபு நினைஇ,
“ஐ தேய்ந்தன்று பிறையும் அன்று,
மை தீர்ந்தன்று மதியும் அன்று  10
வேய் அமன்றன்று மலையும் அன்று,
பூ அமன்றன்று சுனையும் அன்று,
மெல்ல இயலும் மயிலும் அன்று,
சொல்லத் தளரும் கிளியும் அன்று”,

என ஆங்கு  15
அனையன பல பாராட்டிப், பையென
வலைவர் போலச் சோர் பதன் ஒற்றிப்,
புலையர் போலப் புன்கண் நோக்கித்,
தொழலும் தொழுதான், தொடலும் தொட்டான்,
காழ் வரை நில்லாக் கடுங்களிறு அன்னோன்,  20
தொழூஉம் தொடூஉம் அவன் தன்மை,
ஏழைத் தன்மையோ இல்லை தோழி.

Kalithokai 55
Kapilar, Kurinji, What the heroine said to her friend
My friend with splendid gold ornaments on
dark hair like streaks of bright lightning splitting
rainclouds, cut fragrant flower strands placed in
between the braids, sweet smile, bright teeth, sweet
words, red mouth and a fine forehead! Let me tell
you something! Listen!

“Stop!” he said and stopped me. He came near me,
looked at my forehead, face, arms, eyes, walk and
speech, pondered and said, “Amazing, your forehead
has grown small, yet it is not the crescent moon.
Your face is spotless, yet it is not the full moon. Your
arms are like bamboo, yet they are not on a mountain.
Your eyes are like flowers, yet they are not in a pond.
You walk delicately, yet you are not a peacock. Your
words languish, yet you are not a parrot.”

He went on praising me in many ways, and eyed me
to see whether I had weakened, like a hunter stalking
an animal, gave me distressed looks like a pulaiyar
and bowed to me and touched me, the one who was
like an angry bull elephant not controlled by a goad.

He is not an ignorant man, my friend!

Notes:  புலையர் (18) – நச்சினார்க்கினியர் உரை – புலையர்.  கலித்தொகை 68-19, புலையனை – நச்சினார்க்கினியர் உரை – ‘புலைத் தொழிலையுடைய பாணனை’, புலையன் செறற் சொல்.

Meanings:  மின் – lightning, ஒளிர் – bright, அவிர் – gleaming, அறல் இடை போழும் – splitting between lightning streaks, பெயலே போல் – like the clouds, பொன் – gold, அகை – cut into pieces, flame, தகை – splendid, வகை – jewelry, நெறி – braided hair, curly hair, வயங்கிட்டு –  making it bright, போழ் – split, இடை இட்ட – placed between, கமழ் நறும் பூங்கோதை – fragrant flower garland – commentators define it as thāzhai strand, Pandanus odoratissimus,இன் நகை – sweet smile, இலங்கு எயிற்று – with bright teeth, தேமொழி – sweet words,  துவர்ச் செவ்வாய் – red mouth, நல் நுதால் – one with bright forehead, நினக்கு ஒன்று கூறுவாம் – I’ll tell you something, கேள் – listen,

இனி நில் என நிறுத்தான் – ‘now stop’ he said and he stopped me, நிறுத்தே – நிறுத்தி, stopping, வந்து நுதலும் முகனும் தோளும் கண்ணும் இயலும் சொல்லும் நோக்குபு – he came and observed my forehead and face and arms and eyes and walk and words (முகன் – முகம் என்பதன் போலி), நினைஇ – thinking (அளபெடை), ஐ – delicate, amazing, தேய்ந்தன்று – it has become small, பிறையும் அன்று – it is not a crescent moon (the forehead), மை தீர்ந்தன்று மதியும் அன்று – it is not the moon without blemish (face), வேய் அமன்றன்று  மலையும் அன்று –  they are like bamboo but are not in the mountain (the arms), பூ அமன்றன்று – like flowers (the eyes), சுனையும் அன்று – but not in a spring/pond, மெல்ல இயலும் மயிலும் அன்று – not a slowly walking peacock, சொல்லத் தளரும் கிளியும் அன்று – not a parrot that gets tired of talking,

என ஆங்கு அனையன பல பாராட்டி – thus he praised me in many ways of traits like that (ஆங்கு – அசைநிலை, an expletive), பையென வலைவர் போல – slowly like hunters, சோர் பதன் ஒற்றி – checked to see weakness, புலையர் போல – like a pulaiyar, the word ‘pulaiyan’ has been used for bards, drummers and a man who performs funerary rituals, and the word ‘pulaithi’ has been used for  washerwomen, a woman possessed by Murukan, and a basket maker), புன்கண் நோக்கி – gave distressed looks, தொழலும் தொழுதான் – he bowed to me, தொடலும் தொட்டான் – he touched, காழ் வரை நில்லா – that is not controlled by a goad, கடும் களிறு அன்னோன் – like a enraged bull elephant, தொழூஉம் தொடூஉம் – he worshipped and touched (தொழூஉம் – அளபெடை, தொடூஉம் – அளபெடை), அவன் தன்மை ஏழைத் தன்மையோ இல்லை தோழி – he is not like that of a lacking/ignorant man my friend

கலித்தொகை 56
கபிலர், குறிஞ்சி, தலைவன் தனக்குள்ளும் தலைவியிடமும்  சொன்னது
ஊர்க்கால் நிவந்த பொதும்பருள் நீர்க்கால்,
கொழு நிழல் ஞாழல் முதிர் இணர் கொண்டு,
கழும முடித்துக் கண்கூடு கூழை
சுவல் மிசைத் தாதொடு தாழ, அகல் மதி
தீம் கதிர் விட்டது போல, முகன் அமர்ந்து, 5
ஈங்கே வருவாள் இவள் யார் கொல்? ஆங்கே ஓர்
வல்லவன் தைஇய பாவை கொல்? நல்லார்
உறுப்பு எலாம் கொண்டு இயற்றியாள் கொல்? வெறுப்பினால்
வேண்டு உருவம் கொண்டது ஓர் கூற்றம் கொல்? ஆண்டார்
கடிது இவளைக் காவார் விடுதல்; கொடி இயல் 10
பல் கலைச் சில் பூங்கலிங்கத்தள் ஈங்கு இது ஓர்
நல்கூர்ந்தார் செல்வ மகள்!

இவளை சொல்லாடிக் காண்பேன் தகைத்து
நல்லாய்! கேள்!

ஆய் தூவி அனம் என, அணி மயில் பெடை எனத், 15
தூது உண் அம் புறவு எனத் துதைந்த நின் எழில் நலம்
மாதர் கொள் மான் நோக்கின் மட நல்லாய்! நின் கண்டார்ப்
பேதுறூஉம் என்பதை அறிதியோ? அறியாயோ?

நுணங்கு அமைத் திரள் என நுண் இழை அணை என,
முழங்கு நீர்ப் புணை என, அமைந்த நின் தட மென்தோள் 20
வணங்கு இறை வால் எயிற்று அம் நல்லாய் நின் கண்டார்க்கு
அணங்கு ஆகும் என்பதை அறிதியோ? அறியாயோ?

முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை எனப்
பெயல் துளி முகிழ் எனப் பெருத்த நின் இள முலை
மயிர் வார்ந்த வரி முன்கை மட நல்லாய்! நின் கண்டார் 25
உயிர் வாங்கும் என்பதை உணர்தியோ? உணராயோ?
என ஆங்கு,
பேதுற்றாய்ப் போலப் பிறர் எவ்வம் நீ அறியாய்,
யாது ஒன்றும் வாய் வாளாது இறந்தீவாய்! கேள் இனி!
நீயும் தவறு இலை; நின்னைப் புறங்கடை 30
போதர விட்ட நுமரும் தவறு இலர்;
நிறையழி கொல் யானை நீர்க்கு விட்டாங்குப்,
பறை அறைந்து அல்லது செல்லற்க என்னா
இறையே தவறுடையான்.

Kalithokai 56
Kapilar, Kurinji, What the hero said to himself and the heroine

Who is this young woman who has come here, her face
surrounded by hair braids decorated with mature
clusters of blossoms from thick, shade-providing gnālal
trees near the pond in the grove in town, appearing like
the wide moon emitting sweet beams, her locks with
flower pollen hanging low on her shoulders?

There, she is like a statue made by a skilled artist. Was
she created from beautiful parts of many women? Is she
Kootruvan who attained a woman’s form due to hatred for
men? It is cruel that her parents do not protect and keep
her in their home. The young woman with vine-like strands
on her waist with flower-patterned garments, is the beloved
daughter of parents who were childless for long.

I will convince her with words and block her from leaving. 
O fine, esteemed woman, listen!

O young woman! You who are soft like fine goose feathers,
pretty like a female peacock and a pebble-eating pigeon,
with delicate looks of a pretty deer, do you know that those
who see your incredible beauty are confused? Or, do you
not know?

O pretty woman with white teeth! You with arms like that
of delicate rounded bamboo, soft like a pillow made with
fine thread, and like a raft in roaring waters, do you know
that those who see you are terrified? Or, do you not know?

O delicate woman with pretty forearms with perfect hair
and lines! You with young breasts, like buds of mature
kōngam flowers, young coconuts, and thick buds in rain,
do you understand that you could kill those who see you?
Or, do you not understand?

You appear to be confused and not aware of the pain of
others. You are moving away without uttering anything.

Listen now! You are not at fault. Your parents who have let
you out in public are not at fault. The king is at fault for not
announcing with parai drums that you are out!
He should have announced, like those who take a rutting,
murderous elephant to the shore who beat drums and
announce to the public to stay away.

Notes:  கோங்க முகைப்போன்ற முலை:  அகநானூறு 99 – மாண் இழை மகளிர் பூணுடை முலையின் முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு, அகநானூறு 240 – கோங்கு முகைத்தன்ன குவி முலை ஆகத்து, குறுந்தொகை 254 – முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் தலை அலர், கலித்தொகை 56 – முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை எனப் பெயல் துளி முகிழ் எனப் பெருத்த நின் இள முலை, கலித்தொகை 117 – கோங்கின் முதிரா இள முகை ஒப்ப, புறநானூறு 336 – கோங்கின் முகை வனப்பு ஏந்திய முற்றா இள முலை, திருமுருகாற்றுப்படை 34 – தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின் குவி முகிழ் இளமுலை, சிறுபாணாற்றுப்படை 25-26 – யாணர்க் கோங்கின் அவிர் முகை எள்ளிப் பூண் அகத்து ஒடுங்கிய வெம்முலை.  புறவு – புறா புற என்றாகி உகரம் ஏற்றது.  குறியதன் இறுதிச் சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 32).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).

Meanings:  ஊர்க்கால் நிவந்த – growing in town (ஊர்க்கால் – கால் ஏழாம் வேற்றுமை உருபு), பொதும்பருள் – in the grove, நீர்க்கால் – near the water, கொழு நிழல் ஞாழல் – gnālal trees with heavy shade, புலிநகக்கொன்றை, tigerclaw tree, cassia sophera, முதிர் இணர் கொண்டு – with mature clusters of flowers, கழும – mixed, முடித்து – tied, கண்கூடு – together, கூழை – hair, சுவல் மிசைத் தாதொடு – over the shoulders with pollen, தாழ – hanging low, அகல் மதி தீம் கதிர் விட்டது போல – like the wide moon emitting sweet rays, முகன் அமர்ந்து – face was there (முகன் – முகம் என்பதன் போலி), ஈங்கே வருவாள் இவள் யார் கொல் – who is she who comes here (கொல் – அசைநிலை),

ஆங்கே – there, ஓர் வல்லவன் தைஇய பாவை கொல் – is she a statue made by a skilled man/artist (தைஇய – அளபெடை), நல்லார் உறுப்பு எலாம் கொண்டு இயற்றியாள் கொல் – was she created with all the beautiful parts of women (எலாம் – எல்லாம் என்பதன் தொகுத்தல் விகாரம்), வெறுப்பினால் வேண்டு உருவம் கொண்டது ஓர் கூற்றம் கொல் – is she Kootruvan (Death) that attained a woman’s form due to hatred (for men), ஆண்டார் கடிது இவளைக் காவார் விடுதல் – it is harsh that her parents do not protect and keep her in the house, கொடி இயல் –  vine-like, பல் கலை – many strands – on her waist, சில் பூங்கலிங்கத்தள் – the young woman wearing clothes with a few flower patterns, ஈங்கு இது ஓர் நல்கூர்ந்தார் செல்வ மகள் – she is the dear daughter of parents who pined for one,

இவளை சொல்லாடிக் காண்பேன் – I will talk to her, I will play with words with her, தகைத்து – blocking, நல்லாய் – O fine woman, கேள் – listen,

ஆய் தூவி அனம் என – like goose with fine feathers, அணி மயில் பெடை என – like the pretty peafowl, தூது உண் அம் புறவு என – like the pebble eating beautiful pigeon, துதைந்த நின் எழில் – your abundant beauty, நலம் மாதர் கொள் மான் நோக்கின் – beautiful deer looks, மட நல்லாய் – O delicate woman, நின் கண்டார்ப் பேதுறூஉம் என்பதை அறிதியோ – do you know that those who see you are bewildered (பேதுறூஉம் – அளபெடை), அறியாயோ – do you not know,

நுணங்கு அமைத் திரள் என – rounded like fine bamboo, நுண் இழை அணை என – like a pillow with fine thread,  முழங்கு நீர்ப் புணை என அமைந்த – is like a raft in roaring waters, நின் – your, தட – curved, large, மென்தோள் – delicate arms,  delicate shoulders, வணங்கு இறை – curved forearms, வால் எயிற்று – with white teeth, அம் நல்லாய் – O beautiful woman, நின் கண்டார்க்கு அணங்கு ஆகும் என்பதை  அறிதியோ – do you know that you are terror to those who see you, அறியாயோ – do you not know,

முதிர் கோங்கின் முகை என – like the buds of mature kōngam flowers, Cochlospermum gossypium, முகம் செய்த – have become big, குரும்பை என – tiny coconuts, small palmyra fruits, பெயல் துளி முகிழ் எனப் பெருத்த – that are thick like buds in rain, நின் இள முலை – your young breasts, மயிர் வார்ந்த வரி முன்கை – pretty forearms with perfect hair and lines, மட நல்லாய் – O delicate woman, நின் கண்டார் உயிர் வாங்கும் என்பதை உணர்தியோ – do you understand that you could kill those who see you,  உணராயோ – or do you not understand,

என ஆங்கு – thus (ஆங்கு – அசைநிலை, an expletive), பேதுற்றாய்ப் போல – like you are confused, பிறர் எவ்வம் நீ அறியாய் – you do not know the pain of others, யாது ஒன்றும் வாய் வாளாது இறந்தீவாய் – O one who is moving away without uttering anything, கேள் இனி – listen now, நீயும் தவறு இலை – you are not at fault (இலை – இல்லை என்பதன் விகாரம்), நின்னைப் புறங்கடை போதர விட்ட நுமரும் தவறு இலர் – also your relatives who let you outside the house are also not at fault,  நிறையழி கொல் யானை – a ruining murderous elephant (நிறையழி – மதங்கொண்ட), நீர்க்கு விட்டு – letting it go to the shore/water, ஆங்கு – அசைநிலை, an expletive, பறை அறைந்து அல்லது செல்லற்க என்னா – not announcing with parai drums for people to stay away, இறையே தவறுடையான் – the king is the one who is at fault

கலித்தொகை 57
கபிலர், குறிஞ்சி, தலைவன் தலைவியிடம் சொன்னது
வேய் எனத் திரண்ட தோள் வெறி கமழ் வணர் ஐம்பால்,
மா வென்ற மட நோக்கின், மயில் இயல் தளர்பு ஒல்கி,
ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப, அவிர் ஒளி இழை இமைப்பக்,
கொடி என, மின் என, அணங்கு என, யாது ஒன்றும்
தெரிகல்லா இடையின்கண் கண் கவர்பு ஒருங்கு ஓட, 5
வளமை சால் உயர் சிறப்பின் நுந்தை தொல் வியல் நகர்
இளமையான் எறி பந்தொடு இகத்தந்தாய்! கேள் இனி!

பூம் தண் தார்ப் புலர் சாந்தின் தென்னவன் உயர் கூடல்,
தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண்கண்,
ஏந்து கோட்டு எழில் யானை ஒன்னாதார்க்கு அவன் வேலின், 10
சேந்து நீ இனையையால் ஒத்ததோ, சின்மொழி?

பொழி பெயல் வண்மையான் அசோகம் தண் காவினுள்,
கழி கவின் இள மாவின் தளிர் அன்னாய்! அதன்தலைப்
பணை அமை பாய் மான் தேர் அவன் செற்றார் நிறம் பாய்ந்த
கணையினும் நோய் செய்தல் கடப்பு அன்றோ, கனங்குழாய்? 15

வகை அமை தண் தாரான் கோடு உயர் பொருப்பின் மேல்,
தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய்!
மத வலி மிகு கடாஅத்து அவன் யானை மருப்பினும்
கதவவால் தக்கதோ, காழ் கொண்ட இளமுலை?
என ஆங்கு, 20
இனையன கூற இறைஞ்சுபு நிலம் நோக்கி,
நினையுபு நெடிது ஒன்று நினைப்பாள் போல் மற்று ஆங்கே
துணை அமை தோழியர்க்கு அமர்த்த கண்ணள்,
மனை ஆங்குப் பெயர்ந்தாள் என் அறிவு அகப்படுத்தே.

Kalithokai 57
Kapilar, Kurinji, What the hero said to the heroine

“O young woman of youthful zest who ran out
of your rich father’s ancient, wealthy mansion to
play with your ball, with shoulders like rounded
bamboo, wavy braids with fragrances, gentle
glances that are better than those of a deer,
peacock looks, swaying walk, pretty jingling
anklets, glittering jewels, slender waist not
noticeable to the eyes, who is like a delicate
vine, a lightning streak, and a deity! Listen now!

Your victorious, kohl-rimmed eyes are prettier
than the honey-filled blue waterlilies that bloom
in lofty Koodal city of the Pāndiyan king with cool
flower garlands and sandal-smeared chest.
They cause me pain like that inflicted by the
spears of the king who attacks enemies who come
on beautiful elephants with raised tusks. Does
this befit you, O young woman of few words?

Your gentle complexion is like the tender leaves of
the mango trees in the asoka grove of the king who
showers gifts like the rain clouds, and your eyes cause
me great agony, more than that given by the king to
enemies,
riding on his chariot hitched to leaping horses from
his stable, plunging arrows into their chests. Does this
befit you, O young woman of huge earrings?

The yellow spots on your skin resemble delicate vēngai
flowers that bloom in bunches on the high mountains
with peaks, owned by the Pāndiyan king wearing cool
flower garlands. Your young breasts with pearl strands
attack me, and the hurt is more than that inflicted by the
tusks of the king’s mighty, rutting elephants with musth.
Does this befit you?”

As I said all these, she bent down, looking at the earth
below, lost in her thoughts for a long time, saw her
friends who were nearby with calm eyes, and went back
into her house, taking my mind along with her.

Notes:  கழி – கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 18).

Meanings:  வேய் எனத் திரண்ட தோள் – arms that are rounded like bamboo, arms thick like bamboo, வெறி கமழ் – with strong fragrance, வணர் ஐம்பால் – wavy five braids, மா வென்ற மட நோக்கின் – glances that are better than that of a deer, மயில் இயல் – peacock looks, தளர்பு ஒல்கி – swaying delicate walk, ஆய் சிலம்பு – pretty anklets,  அரி ஆர்ப்ப – pebbles that jingle, jingle rhythmically, அவிர் – glitter, ஒளி – light, bright, இழை – jewels, இமைப்ப – to shine, கொடி என – like a vine, மின் என – like lightning, அணங்கு என – like a goddess, யாது ஒன்றும் தெரிகல்லா இடையின்கண் – on the waist that is not even noticeable, கண் கவர்பு ஒருங்கு ஓட –  eyes get attracted totally and they go there, வளமை சால் – with wealth, உயர் சிறப்பின் நுந்தை – your father who is great, தொல் வியல் நகர் – ancient large mansion, இளமையான் – with youth, எறி பந்தொடு – with a ball that is hit (நச்சினார்க்கினியர் உரை – அடிக்கின்ற பந்தொடு), with a ball that is thrown, இகத்தந்தாய் – you who moved away, கேள் இனி – listen now,

பூ – flowers, தண் – cool, தார் – garland, புலர் சாந்தின் – with dried sandal paste, தென்னவன் – Pāndiyan, உயர் கூடல் – lofty Koodal/Madurai city, தேம் பாய – honey flowing (தேம் தேன் என்றதன் திரிபு), அவிழ் நீலத்து அலர் – bloomed blue waterlilies, அமர் வென்ற – won in battle, உண்கண் – eyes with kohl, ஏந்து கோட்டு – with lifted tusks, எழில் யானை – beautiful elephant,  ஒன்னாதார்க்கு – to enemies, அவன் வேலின் – like that of his spear, சேந்து – reddened, நீ இனையையால் – you are of this nature (ஆல் அசை நிலை, an expletive), ஒத்ததோ – does this suit you, சின்மொழி – O one of few words (அன்மொழித்தொகை, விளி, an address),

பொழி பெயல் – falling rain, gift showering, வண்மையான் – with generosity, with charity, அசோகம் – Asoka trees, தண் – cool, காவினுள் – in the grove, கழி கவின் – very beautiful, இள மாவின் தளிர் அன்னாய் – O woman with complexion like tender mango leaves, அதன்தலை – and also, பணை அமை பாய் மான் – leaping horses from his stable, தேர் – chariot, அவன் – his, செற்றார் – enemies, நிறம் – chest, பாய்ந்த கணையினும் – more than with thrusted arrows, நோய் செய்தல் – causing pain, கடப்பு அன்றோ – is it not too much, கனங்குழாய் – O one with heavy earrings,

வகை அமை தண் தாரான் – the man wearing many colored garlands, கோடு – mountain, உயர் – high, பொருப்பின் மேல் – on the mountain slopes, தகை – beautiful, இணர் – bunch, இள வேங்கை மலர் அன்ன – like fresh vēngai flowers, kino flowers, pterocarpus marsupium, சுணங்கினாய் – one with yellow spots, மத வலி மிகு கடாஅத்து – strong rutting elephants with musth, very strong elephants with musth (கடாஅத்து – இசை நிறை அளபெடை, அத்து சாரியை), அவன் யானை மருப்பினும் – more than the tusks of his elephant, கதவவால் – they are enraged (கதவ + ஆல், ஆல் – ஓர் அசைச் சொல்), தக்கதோ – is this proper, காழ் கொண்ட இளமுலை – young breasts draped with pearl strands,

என ஆங்கு இனையன கூற – as I said all these (ஆங்கு – அசைநிலை, an expletive), இறைஞ்சுபு நிலம் நோக்கி – bent down and looked at the earth, நினையுபு – thought, நெடிது ஒன்று நினைப்பாள் போல் – like she thought about something for a long time, மற்று ஆங்கே – then there, துணை அமை தோழியர்க்கு அமர்த்த கண்ணள் – to her friends she was a woman with agreeable eyes, மனை ஆங்குப் பெயர்ந்தாள் – she went into her house, என் அறிவு அகப்படுத்தே – seizing my mind, taking my mind with her (அகப்படுத்தே – ஏகாரம் அசைநிலை, an expletive)

கலித்தொகை 58
கபிலர், குறிஞ்சி, தலைவன் தலைவியிடம் சொன்னது
வார் உறு வணர் ஐம்பால், வணங்கு இறை நெடு மென்தோள்,
பேர் எழில் மலர் உண்கண், பிணை எழில் மான் நோக்கின்,
கார் எதிர் தளிர் மேனிக், கவின் பெறு சுடர் நுதல்,
கூர் எயிற்று முகை வெண்பல், கொடி புரையும் நுசுப்பினாய்!
நேர் சிலம்பு அரி ஆர்ப்ப நிரை தொடிக் கை வீசினை 5
ஆர் உயிர் வௌவிக்கொண்டு அறிந்தீயாது இறப்பாய்! கேள்!

உளனா என் உயிரை உண்டு உயவு நோய் கைம்மிக
இளமையான் உணராதாய்! நின் தவறு இல்லானும்,
களைநர் இல் நோய் செய்யும் கவின் அறிந்து அணிந்து, தம்
வளமையான் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்! 10

நடை மெலிந்து அயர்வு உறீஇ நாளும் என் நலியும் நோய்
மடமையான் உணராதாய்! நின் தவறு இல்லானும்
இடை நில்லாது எய்க்கும் நின் உரு அறிந்து அணிந்து தம்
உடைமையால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்!

அல்லல் கூர்ந்து அழிவுற அணங்கு ஆகி அடரும் நோய் 15
சொல்லினும் அறியாதாய்! நின் தவறு இல்லானும்
ஒல்லையே உயிர் வெளவும் உரு அறிந்து அணிந்து தம்
செல்வத்தால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்!
என ஆங்கு,
ஒறுப்பின் யான் ஒறுப்பது நுமரை யான் மற்று இந்நோய் 20
பொறுக்கலாம் வரைத்து அன்றிப் பெரிது ஆயின் பொலங்குழாய்!
மறுத்து இவ் ஊர் மன்றத்து மடல் ஏறி,
நிறுக்குவென் போல்வல் யான் நீ படு பழியே.

Kalithokai 58
Kapilar, Kurinji, What the hero said to the heroine
O beautiful young woman with wavy combed
hair with a five-part braid, kohl-rimmed,
flower-like eyes, bent forearms, long, delicate
arms, body like the rainy season’s new sprouts,
beautiful bright forehead, bud-like, sharp white
teeth, vine-like slender waist and jingling
anklets, who walks away swaying your bangled
hands without knowing that you have seized my
life! Listen to me!

This painful disease is too much to bear
and it is eating away my life letting my life survive
Just a little bit. You are young and don’t understand
that it’s your fault, and that this disease will not heal
by itself.
Your wealthy family has allowed you to step out
adorned, knowing your beauty could cause this.
You might say it is not their fault!

I am tired and depressed as days go by due to
this painful disease. You are innocent and don’t
understand this constant pain. Your wealthy family
has allowed you to step out adorned, knowing that your
delicate body can cause this. You might say that it
is not their fault!

I try to tell you of my increasing, terrible, spreading
disease and you don’t understand me. Even though it
is not your mistake this disease is hurting my life very
much. Your wealthy family has allowed you to step out
adorned, knowing that your body can cause this. You
might say that it is not their fault!

And so, O young woman donning gold earrings!
I have been punished, and I will punish your relatives
If I am unable to bear this disease. If this pain increases,
I will lose restraint and climb a palmyra horse and ride
in the town square, and you are the one to be blamed.

Meanings:  வார் உறு – combed hair, flowing hair (உறு – பொருந்திய), வணர் – curly, ஐம்பால் – five-braided hairstyle, வணங்கு இறை – bent forearms, நெடு மென்தோள் – long delicate shoulders, பேர் எழில் – great beauty, மலர் – flower (like), உண்கண் – eyes with kohl, பிணை – female, எழில் – beautiful, மான் நோக்கின் – with looks like that of a deer, கார் எதிர் – like the rainy season, தளிர் – delicate sprouts, மேனி – body, கவின் பெறு சுடர் நுதல் – beauty filled bright forehead, கூர் எயிற்று – with sharp teeth, முகை வெண்பல் – bud-like white teeth, கொடி புரையும் நுசுப்பினாய் – O one with a waist like a delicate vine, நேர் சிலம்பு – fitting anklets, அரி ஆர்ப்ப – pebbles jingling, நிரை தொடி – rows of bangles, கை வீசினை – moved your hands, ஆர் உயிர் – precious life, வௌவிக்கொண்டு – seizing my life, அறிந்தீயாது – not knowing and caring, இறப்பாய் – you move away, கேள் – listen,

உளனா – letting it live a little, இருக்கும்படி, என் உயிரை உண்டு – eating away my life, உயவு நோய் – sorrowful disease, கைம்மிக – too much, இளமையான் – because of youth, உணராதாய் – you don’t understand, நின் தவறு இல்லானும் – even though it’s not your mistake, களைநர் இல் நோய் – diseases that cannot be cured without those who can remove them, செய்யும் – will cause, கவின் அறிந்து அணிந்து – knowing your beauty and yet adorning  you, தம் வளமையான் – because of their wealth, போத்தந்த – allowed you to go out, நுமர் – your family, தவறு இல் – not at fault, என்பாய் – you might say,

நடை மெலிந்து – walking slowly, அயர்வு உறீஇ – have become tired (உறீஇ – அளபெடை), நாளும் – daily, என் நலியும் நோய் – my distressing disease, மடமையான் – due to innocence, உணராதாய் – not understanding, நின் தவறு இல்லானும் – even though it’s not your mistake, இடை நில்லாது – without gap, எய்க்கும் – hurts, நின் உரு – your delicate body, அறிந்து அணிந்து – knowing well and yet adorning you, தம் உடைமையால் – due to their wealth, போத்தந்த – allowed you to go out, நுமர் – your relatives, தவறு இல் – not their fault, என்பாய் – you might say,

அல்லல் – pain, கூர்ந்து – increasing, அழிவுற – destructive, அணங்கு ஆகி அடரும் நோய் – terrible spreading disease, சொல்லினும் – even when I tell, அறியாதாய் – you do not understand, நின் தவறு இல்லானும் – even though it’s not your mistake, ஒல்லையே – rapidly, உயிர் – life, வெளவும் – seizing, உரு அறிந்து அணிந்து – knowing that your body and yet adorning you (will hurt others), தம் செல்வத்தால் – due to their wealth, போத்தந்த – allowed you to go out, நுமர் – your family, தவறு இல் – not their fault, என்பாய் – you might say,

என ஆங்கு ஒறுப்பின் – since I am punished (ஆங்கு – அசைநிலை, an expletive), யான் ஒறுப்பது நுமரை – I will punish your relatives, யான் – I, மற்று இந்நோய் – with this disease, பொறுக்கலாம் வரைத்து அன்றி – if it goes past the limits of being able to bear, பெரிது ஆயின் – and it increases, பொலங்குழாய்  – O one with gold earrings, மறுத்து – I will oppose, இவ் ஊர் – (in) this town, மன்றத்து மடல் ஏறி – climbing on a palmyra horse in this town’s square, நிறுக்குவென் போல்வல் யான் – I will establish (blame on you) it appears, நீ படு பழியே – the blame you are going to face (பழியே – ஏகாரம் அசைநிலை, an expletive)

கலித்தொகை 59

கபிலர், குறிஞ்சி, தலைவன் தலைவியிடம் சொன்னது

தளை நெகிழ் பிணி நிவந்த பாசு அடைத் தாமரை
முளை நிமிர்ந்தவை போலும் முத்துக் கோல் அவிர் தொடி,
அடுக்கம் நாறு அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின்
துடுப்பு எனப் புரையும் நின் திரண்ட நேர் அரி முன்கைச்,
சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும் 5
விளையாட அரிப் பெய்த அழகு அமை புனை வினை
ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப அம் சில இயலும் நின்
பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு, என் பால
என்னை விட்டு இகத்தர இறந்தீவாய்! கேள் இனி!

மருளி யான் மருள் உற “இவன் உற்றது எவன் என்னும் 10
அருள் இலை இவட்கு” என அயலார் நின் பழிக்குங்கால்,
வை எயிற்றவர் நாப்பண் வகை அணிப் பொலிந்து, நீ
தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ?

உருள் இழாய்! “ஒளி வாட இவன் உள் நோய் யாது என்னும்
அருள் இலை இவட்கு” என அயலார் நின் பழிக்குங்கால், 15
பொய்தல மகளையாய்ப் பிறர் மனைப் பாடி, நீ
எய்திய பலர்க்கு ஈத்த பயம் பயக்கிற்பதோ?

ஆய்தொடி “ஐது உயிர்த்து இவன் உள் நோய் யாது என்னும்
நோய் இலை இவட்கு” என நொதுமலர் பழிக்குங்கால்,
சிறு முத்தனைப் பேணிச் சிறு சோறு மடுத்து, நீ 20
நறு நுதலவரொடு நக்கது நன்கு இயைவதோ?
என ஆங்கு,
அனையவை உளையவும் யான் நினக்கு உரைத்ததை
இனைய நீ செய்தது உதவாய் ஆயின் சேயிழாய்!
செய்ததன் பயம் பற்று விடாது, 25
நயம் பற்று விடின் இல்லை நசைஇயோர் திறத்தே.

Kalithokai 59
Kapilar, Kurinji, What the hero said to the heroine
O woman with pearl-studded, rounded, bright, bangles
that resemble decked lotus petals in bloom, pretty,
rounded forearms with the beauty of the petals of
the fragrant, delicate kānthal flowers of the mountain
slopes!

Did you come to play with your bright, wide clay pots
and dolls? I saw you with your beautiful hair flowing
down your shoulders when you walked by, your lovely
anklets jingling. I lost my senses as you ignored me
with your silence and moved away. Listen to me!

I am confused and infatuated with you. “What
happened to him? Has she no grace?” others will
accuse you wearing many jewels beautifully,
who plays with friends with sharp teeth.
Will your Thai month ritual bath help you now?

O one wearing a round head ornament! I have lost
luster. Others will ask, “What happened to him?
Has she no grace?” and blame you. Will you benefit
from the playful rituals you performed and the songs
you sang in the houses of strangers, giving away gifts?

O one with beautiful jewels! Watching me sigh gently,
“What inner disease does he have? No, he does not have
a disease,” is what they will say and slander you,
while you are tending your little male doll and cooking
play rice with your friends with fragrant foreheads for a
play wedding. Is this good to do?

I have expressed my anguish and my thoughts. O young
woman wearing lovely jewels! If you do not help me after
you have hurt me, the results of your actions will not go
away. If you do not have graces for those who love you,
that will not be of any benefit to you.

Notes:  சிறு முத்தனைப் பேணிச் சிறு சோறு மடுத்து (20) – நச்சினார்க்கினியர் உரை – சிறிய குழமகனைப் பேணி வளர்த்து அவனுக்கு வேறு ஒருத்தியுடைய பெண்மகளைக் கோடற்குச் சிறுசோற்றைச் சமைத்து ஆயத்திற்கு இட்டு.  வை– வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).

Meanings:  தளை நெகிழ் பிணி – loosening their tightness, நிவந்த – high, பாசு அடை – green leaves, தாமரை – lotus, முளை – buds, நிமிர்ந்தவை – lifted, போலும் – like, முத்து – pearl, கோல் – rounded, அவிர் தொடி – bright bangles, அடுக்கம் – mountain slopes, நாறு அலர் காந்தள் – fragrant bloomed glory lilies, நுண் – delicate, ஏர் – beautiful, தண் – cool, ஏர் – beautiful, உருவின் – in the shape, துடுப்பு என – like petals of glory lily blossoms, புரையும் – resembling, நின் திரண்ட – your rounded, நேர் அரி – straight beautiful, முன்கை – forearms, சுடர் – bright, விரி – wide, வினை வாய்ந்த – created, made, தூதையும் – small clay pots, பாவையும் – doll, விளையாட – to play, அரிப் பெய்த – beauty filled, அழகு அமை – beautiful, புனை வினை – well made, ஆய் சிலம்பு – pretty anklets, எழுந்து – walk, ஆர்ப்ப – jingle, அம் – beautiful, சில – few, இயலும் – moving, நின் – your, பின்னு விட்டு – braided hair, இருளிய – black, ஐம்பால் – five part braid, கண்டு – on seeing, என் பால – my traits, my abilities, என்னை விட்டு இகத்தர – to leave me, இறந்தீவாய் – O one who is leaving, கேள் இனி – listen now,

மருளி யான் மருள் உற – I’m confused and infatuated, இவன் உற்றது எவன் என்னும் – what happened to him, அருள் இலை இவட்கு – she has no grace (இலை – இல்லை என்பதன் விகாரம்), என – thus, அயலார் – others, நின் பழிக்குங்கால் – when they blame you (பழிக்குங்கால் – கால் ஈற்று வினையெச்சம்), வை எயிற்றவர் – those with sharp teeth, நாப்பண் – in the middle, வகை அணிப் பொலிந்து – wearing many jewels and being beautiful, நீ – you, தையில் – Thai month, நீர் ஆடிய – bathed in holy stream, தவம் தலைப்படுவாயோ – will the penance help you,

உருள் இழாய் – one with a round head jewel (தலைப்பாளை என்னும் தலை அணிகலன்), ஒளி வாட – lost luster, இவன் உள் நோய் யாது என்னும் – what is his disease, அருள் இலை இவட்கு’ – she has no grace (இலை – இல்லை என்பதன் விகாரம்), என – thus,  அயலார் – others, நின் பழிக்குங்கால் – when they blame you (பழிக்குங்கால் – கால் ஈற்று வினையெச்சம்), பொய்தல மகளையாய் – as a playing young woman (பொய்தல – பொய்தல், அகரம் செய்யுள் விகாரம்), பிறர் மனைப் பாடி – singing in other homes, நீ – you, எய்திய – attained, பலர்க்கு ஈத்த – give to many, பயம் பயக்கிற்பதோ – does that benefit you,

ஆய்தொடி – O beautiful bangled one (அன்மொழித்தொகை), ஐது உயிர்த்து – sighing delicately, இவன் உள் நோய் யாது என்னும் – what is his inner disease,  ‘நோய் இலை இவட்கு’ – he is not diseased (இலை – இல்லை என்பதன் விகாரம்), என நொதுமலர் பழிக்குங்கால் – when strangers blame you like this (பழிக்குங்கால் – கால் ஈற்று வினையெச்சம்), சிறு முத்தனைப் பேணி – tending the small boy doll, சிறு சோறு மடுத்து – feeding play rice for a play wedding, நீ – you, நறு நுதலவரொடு – with lady friends with fragrant foreheads, நக்கது நன்கு இயைவதோ – is it good to laugh with them,

என ஆங்கு – thus (ஆங்கு – அசைநிலை, an expletive), அனையவை – everything, உளையவும் – saddened, யான் நினக்கு உரைத்ததை – what I said to you (உரைத்ததை – உரைத்தது, ஐகாரம் சாரியை), இனைய நீ செய்தது உதவாய் ஆயின் – if you do not help me after hurting me so, சேயிழாய் – O one with pretty jewels, O one with red jewels, செய்ததன் பயம் – the result of your actions, பற்று விடாது – they will hold you, நயம் – kind, gracious, பற்று விடின் இல்லை – it will not be there if abandoned,  நசைஇயோர் திறத்தே – from those who desire, from those who love (நசைஇயோர் – அளபெடை)

கலித்தொகை 60
கபிலர், குறிஞ்சி, தலைவியும் தோழியும் சொன்னது

தோழி:
சுணங்கு அணி வன முலைச், சுடர் கொண்ட நறு நுதல்,
மணம் கமழ் நறும் கோதை மாரி வீழ் இருங்கூந்தல்,
நுணங்கு எழில், ஒள் தித்தி, நுழை நொசி மட மருங்குல்,
வணங்கு இறை வரி முன்கை, வரி ஆர்ந்த அல்குலாய்!

“கண் ஆர்ந்த நலத்தாரைக் கதுமெனக் கண்டவர்க்கு 5
உள் நின்ற நோய் மிக உயிர் எஞ்சு துயர் செய்தல்
பெண் அன்று புனை இழாய்!” எனக் கூறி தொழூஉம்; தொழுதே
கண்ணும் நீர் ஆக நடுங்கினன் இன் நகாய்!
என் செய்தான் கொல்லோ, இஃது ஒத்தன் தன் கண்
பொரு களிறு அன்ன தகை சாம்பி உள் உள் 10
உருகுவான் போலும் உடைந்து?

தலைவி:

தெருவின் கண் காரணம் இன்றிக் கலங்குவார்க் கண்டு நீ
வாரணவாசிப் பதம் பெயர்த்தல், ஏதில
நீ நின் மேல் கொள்வது எவன்?

தோழி:

“அலர் முலை ஆய் இழை நல்லாய்! கதுமெனப் 15
பேர் அமர் உண்கண் நின் தோழி உறீஇய
ஆர் அஞர் எவ்வம் உயிர் வாங்கும்
மற்று இந்நோய் தீரும் மருந்து அருளாய், ஒண் தொடீ!

நின் முகம் காணும் மருந்தினேன்” என்னுமால்
நின் முகம் தான் பெறின் அல்லது கொன்னே 20
மருந்து பிறிது யாதும் இல்லேல் திருந்து இழாய்!
என் செய்வாம் கொல் இனி நாம்?

தலைவி:

பொன் செய்வாம்;
ஆறு விலங்கித் தெருவின் கண் நின்று ஒருவன்
கூறும் சொல் வாய் எனக் கொண்டு அதன் பண்பு உணராம் 25
தேறல் எளிது என்பாம் நாம்.

தோழி:

ஒருவன் சாமாறு எளிது என்பாம் மற்று.

தலைவி:

சிறிது ஆங்கே மாணா ஊர் அம்பல் அலரின் அலர்க என
நாணும் நிறையும் நயப்பு இல் பிறப்பு இலி.

தோழி:

பூண் ஆகம் நோக்கி இமையான் நயந்து, நம் 30
கேண்மை விருப்புற்றவனை, எதிர் நின்று
நாண் அடப் பெயர்த்த நயவரவு இன்றே.

Kalithokai 60
Kapilar, Kurinji, What the heroine and her friend said

Friend:

My friend with pretty breasts with pallor,
shining fragrant forehead, bright, draping dark
hair desired by clouds, fragrance-filled flower
garland, delicate bright pallor spots, tiny waist,
pretty, curved forearms and loins with lines!

A young man said to me, “One with beautiful jewels!
It is not feminine of women who cause love affliction
in the hearts of men who see their ravishing beauty,
causing them to suffer in pain and lose their lives.”
After that he worshipped me, his eyes teared up as
he trembled.

My friend with a sweet smile! Do you know what he
did? This man, noble like a battle elephant, broke
down like he was fading and melting within.

Heroine:

You who are looking at those crying on the street
without any reason and pitying them is like those in
Varanasi pitying those suffering! Why are you taking
his anguish upon yourself?

Friend:

He said, “One with flower-like breasts and chosen
jewels! Your friend’s large, warring, kohl-lined eyes
have given me great distress. The pain will kill me.”

My friend with bright bangles! There is no medicine
that will heal him, but your face. Show him some pity.

My friend with perfect jewels! What should we do
now?”

Heroine:

Let us do a good deed. We are listening to the rants
of a man on the street. Trusting that it is true and not
understanding the nature of it, we are thinking that it
is easy to understand.

Friend:

We should we say that it would be easy for him to die.

Heroine:

He does not care about the gossip that will rise in our
town without esteem. He does not have modesty,
fullness and love. He is not of a good lineage.

Friend:

Desiring friendship with us, he keeps looking at your
chest with jewels without blinking. It is not nice to
walk away from him since shyness hinders you.

Notes:  நொசி – நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை (தொல்காப்பியம் உரியியல் 78).

Meanings:  சுணங்கு அணி வன முலை – pretty breasts with pallor, சுடர் கொண்ட நறு நுதல் – forehead with brightness,  மணம் கமழ் நறும் கோதை – flower garland with fragrance, மாரி வீழ் இருங்கூந்தல் – raincloud-desiring/draping dark/thick hair, நுணங்கு எழில் ஒள் தித்தி – bright pallor spots that are delicate and pretty, நுழை – tiny, minute, நொசி – slim, மட மருங்குல் – with delicate waist, வணங்கு இறை வரி முன்கை – pretty forearms that are curved and have lines, வரி ஆர்ந்த அல்குலாய் – with loins with lines, கண் ஆர்ந்த நலத்தாரைக் கதுமெனக் கண்டவர்க்கு – to those who suddenly see the beauty of women sate their eyes (கதுமென – விரைவுக்குறிப்பு), உள் நின்ற நோய் மிக – huge affliction in his heart, உயிர் எஞ்சு – removing life, துயர் செய்தல் பெண் அன்று  – it is not feminine to cause sorrow, புனை இழாய் – O one wearing beautiful jewels, எனக் கூறி தொழூஉம் – he said so and he worshipped (தொழூஉம் – அளபெடை), தொழுதே கண்ணும் நீர் ஆக நடுங்கினன் – worshipped and he trembled as tears filled his eyes, இன் நகாய் – O one with a with a sweet smile, என் செய்தான் கொல்லோ – do you know what he did, இஃது ஒத்தன் – thus this man, தன் கண் பொரு களிறு அன்ன தகை – had esteem like that of a battle elephant, சாம்பி உள் உள் உருகுவான் போலும் உடைந்து – he broke down like he was fading and melting inside,

தெருவின் கண் காரணம் இன்றிக் கலங்குவார்க் கண்டு – looking at those who are confused/crying/sad on the street without reason,  நீ வாரணவாசிப் பதம் – like the nature of those in Varanasi, பெயர்த்தல் – changing, ஏதில – stranger, நீ நின் மேல் கொள்வது எவன் – why are you taking it upon yourself,

அலர் முலை –  one with a flower like breasts, ஆய் இழை – one with beautiful jewels, one with chosen jewels, நல்லாய் – O fine woman, கதுமென – rapidly (விரைவுக்குறிப்பு), பேர் அமர் உண்கண் நின் தோழி உறீஇய ஆர் அஞர் – great distress caused by the large warring/calm kohl-lined eyes of your friend (உறீஇய – அடைவித்த, உறீஇய – அளபெடை), எவ்வம் உயிர் வாங்கும் – sorrow will seize my life, மற்று இந்நோய் தீரும் மருந்து – the medicine to end this disease, அருளாய் – please give it to me, please have pity, ஒண் தொடீ – O one with bright bangles,  நின் முகம் காணும் மருந்தினேன் என்னுமால் – he says that seeing your face is the medicine (என்னுமால் – ஆல் அசை நிலை, an expletive), நின் முகம் தான் பெறின் அல்லது கொன்னே மருந்து பிறிது யாதும் இல்லேல் – if there is no other medicine other than seeing your bright face (இல்லேல் – இல்லையேல், இல்லாவிடின்), திருந்து இழாய் – O one with perfect jewels, என் செய்வாம் கொல் இனி – what can we do now,

நாம் பொன் செய்வாம் – let us do a good deed, ஆறு விலங்கி – different from the regular manner, தெருவின் கண் நின்று ஒருவன் கூறும் சொல் – words uttered by a man standing on the street, வாய் எனக் கொண்டு – trusting that it is true, அதன் பண்பு உணராம் – we not understanding its nature, தேறல் எளிது என்பாம் – we are stating that it is easy to understand,

நாம் ஒருவன் சாமாறு எளிது என்பாம் – we should say that it is easy for him to die,

மற்று சிறிது ஆங்கே மாணா ஊர் அம்பல் அலரின் அலர்க என – also there will be gossip in this town without esteem and he does not care, நாணும் நிறையும் – without shame and fullness, நயப்பு இல் – without love, பிறப்பு இலி – he is not of good birth,

பூண் ஆகம் நோக்கி – looking at your chest with jewels, இமையான் – he does not blink, நயந்து நம் கேண்மை விருப்புற்றவனை – the man who desires our friendship, எதிர் நின்று – standing across, நாண் அட – with shyness blocking, பெயர்த்த நயவரவு இன்றே – it is not nice of you to move away without being gracious, it is not nice of you to differ without being gracious (இன்றே – ஏகாரம் அசை நிலை, an expletive)

கலித்தொகை 61
கபிலர், குறிஞ்சி, தலைவியும் தோழியும் தலைவனும் சொன்னது

தோழி (தலைவியிடம்):

“எல்லா! இஃது ஒத்தன் என் பெறான்? கேட்டைக் காண்!
செல்வம் கடைகொளச் சாஅய்ச் சான்றவர்
அல்லல் களை தக்க கேளிர் உழைச் சென்று,
சொல்லுதல் உற்று உரைகல்லாதவர் போலப்,
பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும்; மற்று யான் நோக்கின், 5
மெல்ல இறைஞ்சும் தலை.”

தோழி (தலைவனிடம்):

“எல்லா! நீ முன்னத்தான் ஒன்று குறித்தாய் போல் காட்டினை;
நின்னின் விடாஅ நிழல் போல் திரிதருவாய்;
என் நீ பெறாதது? ஈது என்?”

தலைவன் (தோழியிடம்):

“சொல்லின், மறாதீவாள் மன்னோ இவள்? 10
செறாஅது ஈதல் இரந்தார்க்கு ஒன்று ஆற்றாது வாழ்தலின்,
சாதலும் கூடுமாம் மற்று.”

தோழி (தலைவனிடம்):

“இவள் தந்தை காதலின் யார்க்கும் கொடுக்கும் விழுப் பொருள்;
யாது நீ வேண்டியது?”

தலைவன் (தோழியிடம்):

“பேதாய்! பொருள் வேண்டும் புன்கண்மை ஈண்டு இல்லை; யாழ 15
மருளி மட நோக்கின் நின் தோழி என்னை
அருளீயல் வேண்டுவல் யான்.”

தோழி (தலைவியிடம், தலைவன் சென்ற பின்):

“அன்னையோ! மண்டு அமர் அட்ட களிறு அன்னான் தன்னை ஒரு
பெண்டிர் அருளக் கிடந்தது எவன் கொலோ?

ஒண் தொடீ! நாண் இலன் மன்ற இவன் 20
ஆயின் ஏஎ!

பல்லார் நக்கு எள்ளப்படு மடல்மா ஏறி,
மல்லல் ஊர் ஆங்கண் படுமே, நறு நுதல்
நல்காள் கண்மாறிவிடின் எனச் செல்வானாம்; நாம்
எள்ளி நகினும் வரூஉம்; இடை இடைக் 25
கள்வர் போல் நோக்கினும் நோக்கும், குறித்தது
கொள்ளாது போகாக் குணன் உடையன், எந்தை தன்
உள்ளம் குறைபடா ஆறு.

Kalithokai 61
Kapilar, Kurinji, What the heroine, her friend and the hero said

Friend (to heroine):

My friend! Listen to the pathetic plight of
this man who has attained distress!
He is like a wise man who has lost wealth,
who approaches relatives who can remove his
sorrow, but returns many times not asking,
behaving like an illiterate man.
He looks at me, and when I look at him, he
bends his head slowly.

Friend (to hero):

Hey you! You follow me continuously like you
are my shadow! What did you not get from me
that you are expecting?

Hero (to friend):

Will your friend give without anger what I desire?
If she fails in giving what I ask, it is better to die
than live.

Friend (to hero):

Her father gives away with love great wealth to
everybody. What is it that you desire?

Hero (to friend):

O naïve woman! I am not in poverty seeking
material things. I am pleading for the graces
of your innocent friend who is bewildered.

Friend (to heroine after the hero leaves):

Are you of that nature?  He is like an elephant that kills
in ferocious battle.  Why does he want a woman to
shower her graces on him?

My friend with bright bangles! This man has no
shame!
He said, “If the young woman with a fragrant forehead
does not pity me, I will climb on a palmyra stem horse
and go around this prosperous town, as many laugh,
and announce.”
He will come even if we laugh at him and disrespect him.

Even though he looks again and again at you like a
thief while talking to me, he is of the nature to achieve
what he desires. He wants to satisfy our father without
any limits.

Notes:  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  மல்லல் – மல்லல் வளனே (தொல்காப்பியம், உரியியல் 7).

Meanings:  எல்லா – my friend, இஃது ஒத்தன் என் பெறான் கேட்டைக் காண் – look at the pathetic plight of this man, what distress has he not attained, செல்வம் கடைகொளச் சாஅய்ச் சான்றவர் – the wise people whose wealth has ended, the wise people who have lost their wealth and become poor (சாஅய் – இசை நிறை அளபெடை), அல்லல் களை தக்க கேளிர் உழைச் சென்று – go to relatives who can remove their distress, சொல்லுதல் உற்று உரை கல்லாதவர் போல – not being able to talk like uneducated men, பல் ஊழ் பெயர்ந்து – goes many times and returns, என்னை நோக்கும் – looked at me, மற்று யான் நோக்கின் மெல்ல இறைஞ்சும் தலை – when I look at him he bends his head he bends down slowly,

எல்லா – hey you, நீ முன்னத்தான் ஒன்று குறித்தாய் போல் காட்டினை – you are indicating through signs that you want to tell something, நின்னின் விடாஅ நிழல் போல் திரிதருவாய் – you follow me continuously like you are my shadow (விடாஅ – அளபெடை), என் நீ பெறாதது – what did you not get from me, ஈது – this (இது, ஈது எனச் சுட்டு நீண்டது),

என் சொல்லின் மறாதீவாள் மன்னோ – will she give without fail what I ask (மறாதீவாள் – வினைத்திரிசொல், மன்னோ – ஓகாரம் வினா), இவள் செறாஅது ஈதல் – she should give without anger (செறாஅது – அளபெடை), இரந்தார்க்கு ஒன்று ஆற்றாது  வாழ்தலின் சாதலும் கூடும் ஆம் – it is better to die than live if she does not give to the one who asks (ஆம் – இடைக்குறை, ஆகும் என்பது ஆம் என நின்றது), மற்று – also,

இவள் தந்தை காதலின் யார்க்கும் கொடுக்கும் விழுப் பொருள் – her father gives away with love great wealth to everybody, யாது நீ வேண்டியது – what is it that you desire,

பேதாய் – O naïve woman, பொருள் வேண்டும் புன்கண்மை ஈண்டு இல்லை – I don’t have poverty to seek material things, யாழ – அசை நிலை, an expletive, மருளி மட நோக்கின் நின் தோழி என்னை அருளீயல் வேண்டுவல் யான் – I am pleading for your friend with confused and naïve looks to grant her graces to me,

அன்னையோ – are you of that nature, மண்டு அமர் அட்ட களிறு அன்னான் – he is like an elephant that kills in fierce battles, தன்னை  ஒரு பெண்டிர் அருளக் கிடந்தது எவன் கொலோ-  why does he want a woman to shower her graces,

ஒண் தொடீ – O one with bright bangles (அன்மொழித்தொகை), நாண் இலன் மன்ற இவன் – he has no shame for sure, ஆயின் ஏஎ – if so hey (இகழ்ச்சிப்பொருள் உணர்த்தும் இடைச்சொல்),

பல்லார் நக்கு எள்ளப்படு மடல் மா ஏறி மல்லல் ஊர் ஆங்கண் படுமே – he will climb on a palmyra stem horse and it will be the laughter of many in this prosperous town and he will announce (படுமே – ஏகாரம் அசைநிலை, an expletive),  நறு நுதல் நல்காள் – if the young woman with a fragrant forehead does not shower her graces on him (நறு நுதல் – அன்மொழித்தொகை), கண்மாறிவிடின் என – since there is no showering of graces, since there is no caring, செல்வான் ஆம் – he says that he will leave go (ஆம் – இடைக்குறை, ஆகும் என்பது ஆம் என நின்றது), நாம் எள்ளி நகினும் வரூஉம் – even if we laugh about it he will still come (வரூஉம் –  அளபெடை),

இடை இடைக் கள்வர் போல் நோக்கினும் – even though he looks at you like a thief (while talking to me), நோக்குங் குறித்தது கொள்ளாது போகாக் குணன் உடையன் – he is of the nature to attain what he desires (குணன் குணம் என்றதன் போலி, ஏகாரம் அசை நிலை, an expletive), எந்தை தன் உள்ளம் குறைபடா ஆறு – he wants to satisfy our father without reservations

கலித்தொகை 62
கபிலர், குறிஞ்சி, தலைவியும் தலைவனும் சொன்னது

தலைவி:

“ஏஎ! இஃது ஒத்தன் நாண் இலன்; தன்னொடு
மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும்.”
தலைவன்:
“மேவினும் மேவாக்கடையும் அஃது எல்லாம்
நீ அறிதி, யான் அஃது அறிகல்லேன்; பூ அமன்ற
மெல் இணர் செல்லாக் கொடி அன்னாய்! நின்னை யான் 5
புல் இனிது ஆகலின் புல்லினென்”…………………

தலைவி:

…………………………………………………………”எல்லா!
தமக்கு இனிது என்று வலிதின் பிறர்க்கு இன்னா
செய்வது நன்று ஆமோ மற்று?”

தலைவன்:

“சுடர்த் தொடீ! போற்றாய் களை நின் முதுக்குறைமை; போற்றக் கேள்!
வேட்டார்க்கு இனிது ஆயின், அல்லது நீர்க்கு இனிது என்று 10
உண்பவோ நீர் உண்பவர்?

செய்வது அறிகல்லேன்; யாது செய்வேன் கொலோ,
ஐ வாய் அரவின் இடைப்பட்டு நைவாரா?
மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை
வௌவிக் கொளலும் அறன் எனக் கண்டன்று.” 15

தலைவி:

“அறனும் அது கண்டற்று ஆயின், திறன் இன்றிக்
கூறும் சொல் கேளான் நலிதரும், பண்டு நாம்
வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால், அவனொடு
மாறு உண்டோ நெஞ்சே நமக்கு.”

Kalithokai 62
Kapilar, Kurinji, What the heroine and hero said

Heroine:

Hey you! Have you no shame? You are
trying to unite with those not interested in
uniting with you, holding their hands.

Hero:

You know all that. I don’t know anything about
those who desire and those who do not.
Young woman, you know all that.
O one who is like a flourishing vine with delicate
flower clusters! Desiring your sweet embrace,
I embraced you.

Heroine:

Hey you! You can’t cause distress to others just
because it’s sweet for you!

Hero:

O bright bangled woman! Forget analyzing with your
intellect. Listen to me carefully. Water is sweet to
the thirsty. Do they drink it because they think
that it is sweet to itself?
I do not know what to do. Like those who are caught
by a five-headed snake, I am gripped with sorrow.
Old wisdom says that it’s okay to steal and take young
women with perfect, moon-like faces even if they do
not like it.

Heroine:

He is not being smart listening to my words. He is
wasting away. If this is seen as wisdom, maybe we were
not strangers in our past. Maybe, I was united with him
in the past. Is there a block to that thought, my heart?

Notes:  மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும் (2) – நச்சினார்க்கினியர் உரை – தன்னோடு புணர்ச்சிக் குறிப்பின்றி நிற்பாரையுந்தான் புணர்ச்சிக் குறிப்புடையவனாய்க் கையிலே வலிதிற் பிடித்துக் கொள்ளும்.

Meanings:  ஏஎ! – ஏய், hey (இகழ்ச்சிப்பொருள் உணர்த்தும் இடைச்சொல்), இஃது ஒத்தன் – this guy, நாண் இலன் – has no shame, தன்னொடு – with him, மேவேம் என்பாரையும் – those refusing to unite with him, those who do not desire him, மேவினன் கைப்பற்றும் – he grips their hands to unite, he grips their hands with desire,

மேவினும் – if they desire, மேவாக்கடையும் – even if they don’t desire, அஃது எல்லாம் நீ அறிதி – you know all that, யான் அஃது அறிகல்லேன் – I don’t know about it, பூ – flowers, அமன்ற – close, dense, மெல் இணர் – delicate clusters of flowers, செல்லாக் கொடி அன்னாய் – O you who is like the delicate vine that does not fade, நின்னை – you, யான் – me, புல் இனிது ஆகலின் – desirable for sweet embrace, புல்லினென் – I embraced you,

எல்லா! – hey, தமக்கு இனிது என்று – just because it’s sweet for you, வலிதின் பிறர்க்கு இன்னா – causing great pain to others, செய்வது நன்று ஆமோ மற்று? – is it good to do this? (ஆமோ – இடைக்குறை, ஆகுமோ என்பது ஆமோ என நின்றது, மற்று – அசை நிலை, an expletive),

சுடர்த் தொடீ – O bright-bangled woman (அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), போற்றாய் களை – forget thinking about it, நின் முதுக்குறைமை – great intelligence, போற்றக் கேள் – listen well, வேட்டார்க்கு இனிது ஆயின் – that it is sweet for those who are thirsty, அல்லது – or, நீர்க்கு இனிது என்று – that it is sweet to the water,  உண்பவோ – will they drink, நீர் உண்பவர் – those who drink, செய்வது அறிகல்லேன் – I do not know what to do,  யாது செய்வேன் கொலோ – what will I do, ஐ வாய் அரவின் – five headed snake’s, இடைப்பட்டு – getting caught, நைவாரா – being sad, மை இல் மதியின் – like the moon without blemish (இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), விளங்கும் முகத்தாரை – those with bright faced, வௌவிக் கொளலும் – stealing and taking, அறன் – justice (அறன் – அறம் என்பதன் போலி),  எனக் கண்டன்று – it appears,

அறனும் அது கண்டற்று ஆயின் – If it is seen as justice, if it is seen as wisdom, திறன் இன்றி – without the ability, கூறும் சொல் கேளான் – he doesn’t listen to my words, நலிதரும் – distressing, பண்டு நாம் – in the past we, வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால் – that we are not strangers but we are united, அவனொடு மாறு உண்டோ – is there any discord with him, நெஞ்சே – my heart, நமக்கு – for us

கலித்தொகை 63
கபிலர், குறிஞ்சி, தலைவியும் தோழியும் சொன்னது

தோழி:

“நோக்குங்கால் நோக்கித் தொழூஉம், பிறர் காண்பார்
தூக்கு இலி; தூற்றும் பழி என கை கவித்துப்
போக்குங்கால் போக்கு நினைந்திருக்கும்; மற்று நாம்
காக்கும் இடம் அன்று இனி,
எல்லா! எவன் செய்வாம்? 5

பூங்குழாய்! செல்லல் அவன் உழைக் கூஉய்க் கூஉய்
விரும்பி யான் விட்டேனும் போல்வல்; என் தோள் மேல்
கரும்பு எழுது தொய்யிற்குச் செல்வல்; ஈங்கு ஆக
இருந்தாயோ என்று ஆங்கு இற.

அவன் நின் திருந்து அடி மேல் வீழ்ந்து இரக்கும், நோய் தீர்க்கும் 10
மருந்து நீ ஆகுதலான்.”

தலைவி:

“இன்னும் கடம் பூண்டு ஒரு கால் நீ வந்தை; உடம்பட்டாள்
என்னாமை என் மெய் தொடு.”

தோழி:

“இஃதோ அடங்கக் கேள்!

நின்னொடு சூழுங்கால் நீயும் நிலம் கிளையா, 15
என்னொடு நிற்றல் எளிது அன்றோ? மற்று அவன்
தன்னொடு நின்று விடு.”

Kalithokai 63
Kapilar, Kurinji, What the heroine and her friend said

Friend:

When we look at him, he looks at us and bows humbly.
When we bend our hands and wave him away,
worried that others will see and there will be
unreasonable blame, without analyzing, he
considers leaving. This is not a situation under control.
What can we do now, my friend wearing earrings with
flower designs. He is sad!

I’ll pretend to not know he is there, and call you when I
go to get paint for you to paint thoyyil on my shoulders.
You come there with the response, “Are you here?”
He will then fall at your fine feet and plead. You are
the medicine for his affliction.”

Heroine:

Come here my friend! It appears that you have made him
a promise that I am agreeable to unite with him. If it is not
true, touch my body and swear.

Friend:

Listen to the gist of what I have to say now! When I analyze
this with you, you are scratching the ground with your toes.
Is it not easy to agree with me? Also, you need to be with him.

Notes:  கிளையா – கிளைத்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  செல்லல் – செல்லல் இன்னல் இன்னாமையே (தொல்காப்பியம், உரியியல் 6).

Meanings:  நோக்குங்கால் நோக்கித் தொழூஉம் – when we see him he looks at us and bows humbly (நோக்குங்கால் – கால் ஈற்று வினையெச்சம், தொழூஉம் – அளபெடை), பிறர் காண்பார் – others will see, தூக்கு இலி – he is a man who does not analyze, தூற்றும் பழி என – thinking that there will be unreasonable blame, கை கவித்துப் போக்குங்கால் – when we bend our hands and ask him to leave (போக்குங்கால் – கால் ஈற்று வினையெச்சம்), போக்கு நினைந்திருக்கும் – he thinks about leaving, மற்று நாம் காக்கும் இடம் அன்று – this is not a situation we can control, this not a time when we can protect, இனி எல்லா எவன் செய்வாம் – what can we do now,

பூங்குழாய் – O woman with flower-design earrings, O woman with beautiful earrings, செல்லல் அவன் – he is sad, உழை – nearby, கூஉய்க் கூஉய் விரும்பி யான் விட்டேனும் போல்வல் – as though I am calling you again and again desiring (கூஉய் – அளபெடை), என் தோள் மேல் கரும்பு எழுது தொய்யிற்குச் செல்வல் – I will go to pretending to get paint to draw thoyyil sugarcane patterns so that you can paint on my shoulders/arms, ஈங்கு ஆக இருந்தாயோ என்று ஆங்கு இற – you come there asking ‘are you here’, அவன் நின் திருந்து அடி மேல் வீழ்ந்து இரக்கும் – he will fall at your perfect feet and plead, நோய் தீர்க்கும் மருந்து நீ ஆகுதலான் – since you are the medicine for his disease,

இன்னும் கடம் பூண்டு – with a sense of obligation, ஒரு கால் – once again, நீ வந்தை – come here (வா என்றது வந்தை எனத் திரிந்தது), உடம்பட்டாள் – ‘she has agreed for union’, என்னாமை என் மெய் தொடு – if this is not true swear touching me,

இஃதோ அடங்கக் கேள் – listen to the gist of what I say now, listen to the essence of what I say now, நின்னொடு சூழுங்கால் – when I analyze this with you (சூழுங்கால் – கால் ஈற்று வினையெச்சம்), நீயும் – you, நிலம் கிளையா – you are scratching the ground, என்னொடு நிற்றல் –  agreeing with me, எளிது அன்றோ – is it not easy, மற்று அவன் தன்னொடு நின்று விடு – also you need to be with him (மற்று – வினைமாற்றின்கண் வந்தது)

கலித்தொகை 64
கபிலர், குறிஞ்சி, தலைவியும் தலைவனும் சொன்னது

தலைவன்:

“அணி முகம் மதி ஏய்ப்ப அம் மதியை நனி ஏய்க்கும்,
மணி முகம் மா மழை நின் பின் ஒப்ப, பின்னின் கண்
விரி நுண் நூல் சுற்றிய ஈர் இதழ் அலரி
அரவுக் கண் அணி உறழ் ஆரல் மீன் தகை ஒப்ப,
அரும் படர் கண்டாரைச் செய்து ஆங்கு இயலும் 5
விரிந்து ஒலி கூந்தலாய்! கண்டை; எமக்குப்
பெரும் பொன் படுகுவை பண்டு.”

தலைவி:

“ஏஎ! எல்லா! மொழிவது கண்டை; இஃது ஒத்தன்; தொய்யில்
எழுதி இறுத்த பெரு பொன் படுகம்;
உழுவது உடையமோ யாம்?” 10

தலைவன்:

“உழுதாய்
சுரும்பு இமிர் பூங்கோதை அம் நல்லாய்! யான் நின்
திருந்திழை மென்தோள் இழைத்த மற்று இஃதோ,
கரும்பு எல்லாம் நின் உழவு அன்றோ? ஒருங்கே
துகள் அறு வாள் முகம் ஒப்ப மலர்ந்த 15
குவளையும் நின் உழவு அன்றோ? இகலி
முகை மாறு கொள்ளும் எயிற்றாய்! இவை அல்ல
என் உழுவாய் நீ மற்று இனி.”

தலைவி:

“எல்லா! நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு
முற்று எழில் நீல மலர் என உற்ற, 20
இரும்பு ஈர் வடி அன்ன உண்கட்கும் எல்லாம்,
பெரும் பொன் உண்டு என்பாய் இனி.”

தலைவன்:

“நல்லாய்! இகுளை! கேள்!
ஈங்கே தலைப்படுவன் உண்டான் தலைப்பெயின்,
வேந்து கொண்டன்ன பல. 25

ஆங்கு ஆக அத்திறம் அல்லாக்கால், வேங்கை வீ
முற்று எழில் கொண்ட சுணங்கு அணி பூண் ஆகம்
பொய்த்து ஒரு கால் எம்மை முயங்கினை சென்றீமோ;
முத்து ஏர் முறுவலாய்! நீ படும் பொன் எல்லாம்
உத்தி எறிந்துவிடற்கு.” 30

Kalithokai 64
Kapilar, Kurinji, What the heroine and hero said

Hero:

O one with flowing thick hair! With a pretty face
like the moon, hair with sapphire jewels that
surrounds the face like clouds around the moon,
honey-filled flower strand on black braids woven
with fine thread resembling the patterns on a snake
and like the beautiful Karthikai star,
you cause distress to those who see you! Look here!
You shined brilliantly in the past because of me!

Heroine:

Hey you! Listen to what this man says!  I shined
greatly with embraces and because you painted thoyyil
designs on me.  Will I agree for my breasts to press
against your chest?  No.  I will not!

Hero:

Yes, you embraced me! O pretty woman with a flower
garland swarmed by bees! Aren’t the sugarcane designs
that I painted on your arms due to you embracing me?
Isn’t the brilliance on your spotless face with eyes like
blue waterlilies due to you embracing me?
O one with teeth that compete with mullai buds!
How else can you attain brilliance but through embracing
me?

Heroine:

You say that you painted splendid sugarcane patterns
on my fine arms. Now you are going to tell me that the
beauty of my eyes, resembling blue waterlilies, like pretty,
tender vadu mangoes split with a knife, are due to 
embracing you.

Hero:

O fine young woman! Listen! I will enjoy you like the king
who enjoys the full benefits of those who join him to enjoy
his wealth and lead him to success.

Heroine:

Let it happen like that when you shower your graces on me,
without forgetting!

Hero:

If you pretend and embrace me once with your breasts
decorated with jewels and pallor spots as pretty as vēngai
flowers and leave, O one with a pearly smile, your pallor 
spots will disappear and you will shine with beauty!

Notes:  முத்தைப் போன்ற பற்கள்: அகநானூறு 27 – முத்தின் அன்ன நகைப் பொலிந்து இலங்கும் எயிறு, ஐங்குறுநூறு 185 – இலங்கு முத்து உறைக்கும் எயிறு, ஐங்குறுநூறு 380 – முத்து ஏர் வெண்பல், கலித்தொகை 64 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 93 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 97 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 97 – முத்து ஏய்க்கும் வெண்பல், கலித்தொகை 131 – முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய், பரிபாடல் 8 – எழில் முத்து ஏய்க்கும் வெண்பல், பரிபாடல் திரட்டு 2 – முத்த முறுவல், பொருநராற்றுப்படை 27 – துவர் வாய்ப் பல உறு முத்தின் பழி தீர் வெண்பல், சிறுபாணாற்றுப்படை 57 – நகாஅர் அன்ன நளி நீர் முத்தம், நெடுநல்வாடை 37 – முத்து உறழ் முறுவல்.  மாவடுவைப் பிளந்தாற்போன்ற கண்கள்:  அகநானூறு 29 – எஃகு உற்று இரு வேறு ஆகிய தெரிதகு வனப்பின் மாவின் நறுவடி போலக் காண்தொறும் மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண், நற்றிணை 133 – கண்ணே வாள் ஈர் வடியின் வடிவு, கலித்தொகை 64 – உற்ற இரும்பு ஈர் வடி அன்ன உண்கட்கும், கலித்தொகை 108 – இள மாங்காய் போழ்ந்தன்ன கண்ணினால், பரிபாடல் 7 – இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண். நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  அணி முகம் – pretty face, மதி ஏய்ப்ப – is like the moon, அம் மதியை – that beautiful moon, நனி – very much, ஏய்க்கும் – is like, மணி முகம் – sapphire ornaments, மா மழை – dark clouds, நின் பின் ஒப்ப – like your braids, பின்னின் கண் – on your braids, விரி – open, நுண் நூல் சுற்றிய ஈர் இதழ் அலரி – flowers with wet (with honey)  petals strung on fine thread, அரவுக்கண் அணி உறழ் – like the decorations on a snake (patterns on the snake), ஆரல் மீன் தகை ஒப்ப – like the esteemed Karthikai star, அரும் படர் – great sorrow, கண்டாரைச் செய்து – cause to those who see, ஆங்கு – there, இயலும்  – walking, going, விரிந்து ஒலி கூந்தலாய் – O one with spread thick hair, கண்டை – you look (கண்டை – முன்னிலை வினைமுற்று), எமக்குப் பெரும் பொன் படுகுவை பண்டு – you achieved great beauty because of union with me in the past,

ஏஎ – hey you (இகழ்ச்சிப்பொருள் உணர்த்தும் இடைச்சொல்), எல்லா – hey you, மொழிவது கண்டை – look at what he says (கண்டை – முன்னிலை வினைமுற்று), இஃது ஒத்தன் – this  man, தொய்யில் எழுதி – painted thoyyil designs, இறுத்த – stayed, பெரு பொன் படுகம் – I was very beautiful because of the embraces, I was in bliss because of the great beauty that I achieved (தன்மைப் பன்மை, first person plural), உழுவது உடையமோ யாம் – Will I agree for my breasts to press against your chest? (நச்சினாக்கினியர் உரை – எம் முலையால் நின் மார்பிடத்து இடைவிடாது உழுத நல்வினையை உடையேமோ?  அஃதின்றே!)

உழுதாய் – you embraced (me), சுரும்பு இமிர் பூங்கோதை அம் நல்லாய் – O pretty woman with flower garlands swarmed by bees, யான் – me,  நின் திருந்திழை – your perfect jeweled, மென்தோள் இழைத்த – drew on delicate shoulders, மற்று இஃதோ கரும்பு எல்லாம் நின் உழவு அன்றோ – are the sugarcane patterns not because of your embraces (மற்று – வினைமாற்றின்கண் வந்தது), ஒருங்கே துகள் அறு வாள் முகம் ஒப்ப – like the spotless bright face, மலர்ந்த குவளையும் – eyes like blossomed blue waterlilies (குவளை – ஆகுபெயர் கண்களுக்கு), நின் உழவு அன்றோ – because of your embraces, இகலி முகை மாறு கொள்ளும் எயிற்றாய் – O one with teeth that compete with jasmine buds, இவை அல்ல என் உழுவாய் நீ மற்று இனி – how else can you obtain but by embracing me (மற்று – வினைமாற்றின்கண் வந்தது),

எல்லா – hey, நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு – you can say that you painted splendid sugarcanes on my fine arms (கரும்புக்கு – நச்சினார்க்கினியர் உரை – கரும்பிற்குத் தோற்றப்பொலிவு உண்டு என), முற்று எழில் நீல மலர் என – like the very pretty blue waterlilies, உற்ற – attained sorrow, இரும்பு ஈர் வடி அன்ன உண்கட்கும் – to my eyes that are like split with a knife, little pretty green vadu mangoes, மாவடு, எல்லாம் பெரும் பொன் உண்டு என்பாய் இனி – you say that all that is due to the brilliance (attained by embracing you),

நல்லாய் இகுளை  – O fine young woman, கேள் –  listen, ஈங்கே – here, தலைப்படுவன் – I will enjoy the benefits, உண்டான் தலைப்பெயின் – the full benefits that resulted because of that person, வேந்து கொண்டன்ன பல – like the king who enjoys the many benefits,

ஆங்கு ஆக அத்திறம் – let it happen like that, அல்லாக்கால் – when not showering graces,

வேங்கை வீ முற்று – mature kino flowers, pterocarpus marsupium, எழில் கொண்ட – beautiful, சுணங்கு – pallor spots, அணி – pretty, பூண் ஆகம் – chest with jewels, பொய்த்து – in a fake manner, pretending, ஒரு கால் எம்மை முயங்கினை –  you embrace me once  (எம்மை – தன்மைப் பன்மை, first person plural), சென்றீமோ – you go, you leave (மோ – முன்னிலையசை, an expletive of the second person), முத்து ஏர் முறுவலாய் – O one with a pretty pearly smile, நீ படும் பொன் எல்லாம் – all the beauty that you achieve, உத்தி எறிந்துவிடற்கு – to destroy the pallor spots

கலித்தொகை 65
கபிலர், குறிஞ்சி, தலைவி தோழியிடம் சொன்னது
திருந்து இழாய்! கேளாய்! நம் ஊர்க்கு எல்லாம் சாலும்
பெரு நகை! அல்கல் நிகழ்ந்தது; ஒரு நிலையே
மன்பதை எல்லாம் மடிந்த இருங்கங்குல்,
அம் துகில் போர்வை அணிபெற தைஇ, நம்
இன் சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆகத், 5
தீரத் தறைந்த தலையும், தன் கம்பலும்,
காரக்குறைந்து கறைப்பட்டு வந்து, நம்
சேரியின் போகா முட முதிர் பார்ப்பானைத்,
“தோழி! நீ போற்றுதி!” என்றி, அவன் ஆங்கே
பாராக் குறழாப் பணியாப், “பொழுது அன்றி 10
யார் இவண் நின்றீர்?” எனக் கூறிப் பையென
வை காண் முது பகட்டின் பக்கத்தின் போகாது,
“தையால்! தம்பலம் தின்றியோ?” என்று தன்
பக்கு அழித்துக் கொண்டீ எனத் தரலும், யாது ஒன்றும்
வாய்வாளேன் நிற்பக் கடிது அகன்று, “கைமாறிக் 15
கைப்படுக்கப்பட்டாய் சிறுமி நீ! மற்று யான்
ஏனை பிசாசு! அருள்! என்னை நலிதரின்,
இவ் ஊர்ப் பலி நீ பெறாஅமல் கொள்வேன்”
எனப் பலவும் தாங்காது வாய் பாடி நிற்ப,
முது பார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து, யான் எஞ்சாது 20
ஒரு கை மணல் கொண்டு மேல் தூவக் கண்டே,
கடிது அரற்றிப் பூசல் தொடங்கினன், ஆங்கே
ஒடுங்கா வயத்தின் கொடுங்கேழ்க் கடுங்கண்
இரும்புலி கொண்மார் நிறுத்த வலையுள் ஓர்
ஏதில் குறுநரி பட்டற்றால்! காதலன் 25
காட்சி அழுங்க, நம் ஊர்க்கு எலாஅம்
ஆகுலம் ஆகி விளைந்ததை, என்றும் தன்
வாழ்க்கை அது ஆகக் கொண்ட முது பார்ப்பான்
வீழ்க்கைப் பெருங்கருங்கூத்து.

Kalithokai 65

Kapilar, Kurinji, What the heroine said to her friend

My friend wearing perfect jewels! Listen!
This will get our town to laugh. It happened last
night. When our townsfolk were asleep, draped in my
beautiful clothing, I awaited my man with a handsome
chest.

The bald-headed leper, the blemished one in our town,
that lame old Brahmin who does not go leave our
neighborhood, the one you warned me about, showed up,
spotted me, bowed to me and asked, “Why are you here
at this unsightly hour?” Slowly, he stuck to my side
like an old bull that had sighted hay.
“Lady, will you eat my betel leaves and betel nuts?”
he asked me as he opened his pouch, and said again,
“Take these,” as he tried to hand then to me.

I was speechless. He spoke without consideration, and said
“Girl, you have fallen into my hands! if you are one evil
spirit, I am the other evil spirit. Be gracious to me.
If you trouble me, I’ll take away the offerings you have
received from this town.” He prattled on and on, and I
realized that the old fellow feared me, thinking I was an
evil spirit.

I picked up a fistful of sand and threw it at him and he
caused an uproar rapidly. It was like a useless little
fox getting trapped in a net set out to catch a fierce-eyed,
mighty tiger with curved stripes.

This old Brahmin has deprived me of my tryst with my lover.
He has brought suffering to this town. He has made lusting
after women his way of life, and created a big, funny street
drama last night.

Notes:  பாரா – பார்த்து என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  குறழா – குறழ்ந்து (குனிந்து) என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  பணியா – பணிந்து என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது. பட்டற்றால் (25) – பட்டது போன்றது, விழுந்ததைப் போன்றது , ஆல் அசைநிலை.  பெருங்கருங்கூத்து (29) –  நச்சினார்க்கினியர் உரை – பெரிய தண்ணிய கூத்து, ச. வே. சுப்பிரமணியன் உரை – பெரிய வேடிக்கைக் கூத்து, மா.  இராசமாணிக்கனார் உரை – பெரிய நயத்தக்க இக்கூத்து.  வீழ்க்கை (29) – நச்சினார்க்கினியர் உரை – வாழ்க்கை வாழ்க்கை போல் நின்றது.

Meanings:  திருந்து இழாய் – O one wearing perfect jewels, கேளாய் – listen,  ஊர்க்கு எல்லாம் – to the entire town, சாலும் பெரு நகை – befitting great laughter, அல்கல் நிகழ்ந்தது – it happened last night,  ஒரு நிலையே – when, மன்பதை – town people, எல்லாம் மடிந்த – everyone in deep sleep, இருங்கங்குல் – dark midnight,  அம் – beautiful, துகில் போர்வை – wrapped clothing, அணிபெற தைஇ – beautifully worn (தைஇ – அளபெடை), இன் சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆக – I stood waiting for the sweet chested man,  தீரத் தறைந்த தலையும் – totally flat without hair, totally bald head, தன் கம்பலும் – his clothes, காரக்குறைந்து – legs and hands reduced by leprosy (காரக்குறைந்து – கார் + அக்கு குறைந்து, அக்கு சாரியை), கறைப்பட்டு – blemished, வந்து – came, நம் சேரியின் போகா – does not go away from our neighborhood, does not go away from our community, முட முதிர் பார்ப்பானை – toward the lame old Brahmin (பார்ப்பானை – பார்ப்பானிடத்து, வேற்றுமை மயக்கம்), தோழி – O my friend, நீ போற்றுதி என்றி  – you asked me to protect myself from him (போற்றுதி – பாதுகாப்பாக இரு, விழிப்பாக இரு, என்றி – முன்னிலை ஒருமை), அவன் – he, ஆங்கே – there,  பாராக் குறழாப் பணியா – he spotted me and then bent and bowed, பொழுது அன்றி யார் இவண் நின்றீர்?’ எனக் கூறி – ‘why are you  here at this untimely hour’, he asked, பையென – slowly, வை காண்  – see hay, முது பகட்டின் – like an old buffalo, like an old ox, பக்கத்தின் போகாது – without leaving my side, ‘தையால்! தம்பலம் தின்றியோ?’ என்று – ‘O young woman! Will you eat these betel leaves and nuts?’, தன் பக்கு அழித்து – he opened his pouch, ‘கொண்டீ’ எனத் தரலும் – ‘take’ he said and gave to me (கொண்டீ – முன்னிலை ஒருமை வினைமுற்று, வினைத் திரிசொல்), யாது ஒன்றும் வாய்வாளேன் நிற்ப – I stood without saying a word, கடிது அகன்று கைமாறி – moved fast without restraint, கைப்படுக்கப்பட்டாய் சிறுமி நீ – O girl!  you have fallen into my hands, மற்று யான் ஏனை பிசாசு – and I’m the other evil spirit, அருள் – shower your graces, என்னை நலிதரின் – if you distress me, இவ் ஊர்ப் பலி நீ பெறாஅமல் கொள்வேன் – I’ll take away the offerings given  to you by this town (பெறாஅமல் – இசை நிறை அளபெடை), எனப் பலவும் தாங்காது வாய் பாடி நிற்ப – as he babbled many words without any consideration, முது பார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து யான் – I realized that the old Brahmin was scared of me, எஞ்சாது – did not stop, ஒரு கை மணல் கொண்டு – I took a handful of sand, மேல் தூவக் கண்டே – seeing me throw on him,  கடிது அரற்றிப் பூசல் தொடங்கினன் – he caused an uproar and started to yell rapidly, ஒடுங்கா வயத்தின் – with uncontrollable strength, கொடும் கேழ் – curved lines, கடுங்கண் இரும்புலி – a tiger with fierce eyes, கொண்மார் – to capture,  நிறுத்த வலையுள் ஓர் ஏதில் குறுநரி பட்டற்றால் – like an useless small fox captured in the net that was placed (குறுநரி – பண்புத்தொகை, பட்டற்றால் – பட்டற்று, ஆல் அசைநிலை), காதலன் காட்சி அழுங்க – seeing my lover was ruined, seeing my lover was not possible any more, நம் ஊர்க்கு எலாஅம் ஆகுலம் ஆகி விளைந்ததை – causing pain to our  town people (எலாஅம் – அளபெடை), என்றும் – always, தன் வாழ்க்கை அது ஆகக் கொண்ட முது பார்ப்பான் – this is the way of life for the old Brahmin,  வீழ்க்கை – desiring, பெருங்கருங்கூத்து – a big funny street drama