நற்றிணை – Natrinai

Vaidehi Herbert

Copyright ©  All Rights Reserved

தமிழ் உரை நூல்கள்
நற்றிணை – ஔவை துரைசாமி – தமிழ் மண் பதிப்பகம், சென்னை
நற்றிணை – வித்துவான் H. வேங்கடராமன் – உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை
நற்றிணை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை

நற்றிணை 201, பரணர், குறிஞ்சித் திணை – தலைவன் தன் தோழனிடம் சொன்னது
‘மலை உறை குறவன் காதல் மட மகள்,
பெறல் அருங்குரையள், அருங்கடிக் காப்பினள்,
சொல் எதிர் கொள்ளாள், இளையள், அனையோள்
உள்ளல் கூடாது’ என்றோய்! மற்றும்
செவ் வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லித்  5
தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங்கோட்டு,
அவ் வெள்ளருவிக் குடவரை அகத்து
கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும்,
உரும் உடன்று எறியினும் ஊறு பல தோன்றினும்
பெரு நிலம் கிளரினும், திரு நல உருவின்  10
மாயா இயற்கைப் பாவையின்,
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே.

Natrinai 201, Paranar, Kurinji Thinai – What the hero said to his friend
You tell me that I should not think about
the mountain dweller’s innocent daughter
who is kept under great protection,
and that she’s too young,
and that she’ll not respond to my words.

Even if strong winds blow and attack,
even if heavy rains pour rapidly,
even if thunder roars,
even if many hindrances arise,
even if the big earth swells up on the tall,
faultless peaks in the western mountains
with white waterfalls and jackfruit trees
with red roots, protected by the benevolent
Kolli Mountain goddess,
the young woman with undying natural
beauty like that of the Kolli goddess  will
not leave my heart!

Notes:  கழறிய தோழனுக்குத் தலைவன் உரைத்தது.  வரலாறு:  கொல்லி.  There are references to Kolli Mountain goddess in Natrinai 185, 192, 201, 346 and 362.  கதழ் – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  குரை – ஏயும் குரையும் இசைநிறை அசைநிலை ஆயிரண்டு ஆகும் இயற்கைய என்ப (தொல்காப்பியம், இடையியல் 24).

Meanings:  மலை உறை குறவன் – a mountain dweller, காதல் மட மகள் – loving innocent daughter, பெறல் அருங்குரையள் – she is difficult to get (குரை – அசைநிலை, an expletive), அருங்கடிக் காப்பினள் – she is under heavy protection, சொல் எதிர் கொள்ளாள் – she will not respond to your words, இளையள் – she is young, அனையோள் – woman of that nature, உள்ளல் கூடாது – do not think about her, என்றோய் – you said, மற்றும் – வினை மாற்று, உம்மை இசை நிறை, செவ் வேர் – red roots, பலவின் – of jackfruit trees, Artocarpus heterophyllus, பயம் கெழு – benefit yielding, கொல்லித் தெய்வம் – Kolli Mountain goddess, காக்கும் – protects, தீது தீர் – without evil, perfect, நெடுங்கோட்டு – with tall peaks, அவ் வெள் அருவி – lovely white waterfalls, குடவரை அகத்து – in the western mountain ranges, கால் பொருது இடிப்பினும் – even if fast winds attack and hit, கதழ் உறை கடுகினும் – and even if heavy rains pour rapidly, உரும் உடன்று எறியினும் – even if thunder attacks with rage, ஊறு பல தோன்றினும் – even if many difficulties arise, பெரு நிலம் கிளரினும் – even if the big land swells up, திரு நல உருவின் – her beautiful body, மாயா – undying, forever, இயற்கை – natural, பாவையின் – like a statue, like Kolli goddess, like a doll (இன் உருபு ஒப்புப் பொருளது), போதல் – to leave, ஒல்லாள் – she will not leave, என் நெஞ்சத்தானே – from my heart (நெஞ்சத்தான் – ஐந்தாவதன்கண் மூன்றாவது மயங்கிற்று, ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 202, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
புலி பொரச் சிவந்த புலால் அம் செங்கோட்டு
ஒலி பல் முத்தம் ஆர்ப்ப, வலி சிறந்து
வன் சுவல் பராரை முருக்கி கன்றொடு
மடப் பிடி தழீஇய தடக் கை வேழம்,
தேன் செய் பெருங்கிளை இரிய வேங்கைப்  5
பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும்
மா மலை விடரகம் கவைஇ காண்வர,
கண்டிசின், வாழியோ குறுமகள்! நுந்தை
அறுமீன் பயந்த அறம் செய் திங்கள்
செல் சுடர் நெடுங்கொடி போலப்,  10
பல் பூங்கோங்கம் அணிந்த காடே.

Natrinai 202, Chēramān Pālai Pādiya Perunkadunkō, Pālai Thinai – What the hero said to the heroine
Oh young woman!  May you live long!
Come and see your father’s beautiful
forest.  In its tall mountain with clefts,
a big-trunked elephant fights with a tiger,
his lovely tusks stained with blood.  He
breaks the bark of a thick vēngai tree on a
ridge, and pearls in his tusks rattle. 
He hugs his mate, plucks the golden flowers
and feeds it to their calf, causing swarms of
honeybees to flee.

The rows of flower-dense kōngam trees look
like rows of lamps lit in the month of Karthikai,
when the Pleiades constellation is in the sky,
and virtuous deeds are done.

Notes:  தலைவன் தலைவியை உடன்கொண்டு உடன்போக்கு மேற்கொண்டான்.  செல்லும் வழியில் உள்ள காட்டைக் காட்டி தலைவியிடம் அவன் கூறியது.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கன்றொடு பிடியையும் தழுவிய வேழம், வேங்கைப் பூங்கொத்தை கவளமாக ஊட்டும் என்றது, தலைவியுடன் நிகழ்த்தும் இல்லறத்தில் பெறும் மக்கட் செல்வத்துடன் அவளையும் பொருள் தேடிக் கொணர்ந்து தலைவன் காக்கும் வினை அறத்தை குறிப்பித்தது..  புலி பொர (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – புலியொடு போர் செய்ததால், ஒளவை துரைசாமி உரை – புலியைக் கொன்றதனால், யானையின் தந்தத்தில் முத்து:  அகநானூறு 282 – வால் மருப்பு ஒடிய உக்க தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு, நற்றிணை 202 – புலி பொரச் சிவந்த புலால் அம் செங்கோட்டு ஒலி பல் முத்தம், புறநானூறு 161 – முத்துப்படு முற்றிய உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு, புறநானூறு 170 –  வெண்கோடு பயந்த ஒளி திகழ் முத்தம், பதிற்றுப்பத்து 32 – முத்துடை மருப்பின், கலித்தொகை 40 – முத்து ஆர் மருப்பின், திருமுருகாற்றுப்படை 304 – பெருங்களிற்று முத்துடை வான்கோடு தழீஇ,  குறிஞ்சிப்பாட்டு 36 – முத்து ஆர் மருப்பின், மலைபடுகடாம் 518 – முத்துடை மருப்பின்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).

Meanings:  புலி பொர – attacked by a tiger, fighting with a tiger, killed a tiger, சிவந்த புலால் – red flesh, அம் செங்கோட்டு – from the beautiful red (with blood) tusks, ஒலி பல் – many flourishing, முத்தம் ஆர்ப்ப – sounds of pearls, வலி சிறந்து – with great strength, வன் – strong,  சுவல் – high ground, ridge, பராரை – thick tree trunk (பரு அரை பராரை எனப் புணர்ந்தது), முருக்கி – breaking, கன்றொடு – with a calf, மடப் பிடி – innocent female elephant, தழீஇய – hugging (அளபெடை), தடக் கை வேழம் – a big-trunked male elephant, தேன் செய் – honey making bees,  பெருங்கிளை – big swarms, இரிய – to move, வேங்கை – Indian Kino tree, Pterocarpus marsupium, பொன் புரை – gold-like flowers (புரை – உவம உருபு, a comparison word), கவளம் – food, புறந்தருபு ஊட்டும் – it protects and feeds, மா மலை – tall mountain, huge mountain, விடரகம் – mountain clefts, mountain caves, கவைஇ – surrounded by (அளபெடை), காண்வர கண்டிசின் – come and see the beauty (இசின் – முன்னிலை அசை, an expletive of the second person), வாழியோ – may you live long (ஓ – அசைநிலை, an expletive), குறுமகள் – young woman, நுந்தை – your father, அறுமீன் – pleiades, Karthikai month, பயந்த – yielded, அறம் செய் திங்கள் – the month to do virtuous deeds, செல் சுடர் நெடுங்கொடி – moving bright long rows, போல – like, பல் பூங்கோங்கம் – many flowering kōngam trees, Cochlospermum gossypium, அணிந்த காடே – the decorated forest (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 203, உலோச்சனார், நெய்தற் திணை – தோழி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்,
தடந்தாள் தாழை முள்ளுடை நெடுந்தோட்டு
அக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூங்
கோடு வார்ந்தன்ன, வெண்பூத் தாழை
எறி திரை உதைத்தலின், பொங்கித் தாது சோர்பு  5
சிறுகுடிப் பாக்கத்து மறுகு புலா மறுக்கும்
மணம் கமழ் கானல், இயைந்த நம் கேண்மை
ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது,
கதழ் பரி நெடுந்தேர் வரவு ஆண்டு அழுங்கச்
செய்த தன் தப்பல் அன்றியும்,  10
உயவுப் புணர்ந்தன்று இவ் அழுங்கல் ஊரே.

Natrinai 203, Ulōchanār, Neythal Thinai – What the heroine’s friend said, as the hero listened nearby
If separated from him even for
a day after our intimate friendship,
in the fragrant grove on the sand dunes
brought by the roaring waves,
……….where thāzhai trees with large trunks
……….and tall, thorny fronds with flourishing
……….buds bear lovely conch-like, long, white
……….flowers that drop pollen that removes
……….fish stench in our small village streets,
……….when attacked by overflowing waves,
it will be very hard for her to survive.

Without considering our pain and not knowing
it is wrong, this town gossips when he comes in his
tall chariot and fast horses.  It adds to our distress!

Notes:  தலைவன் மணம் புரியாது காலம் தாழ்த்தியதால், அவன் அருகில் இருப்பதை அறிந்த தோழி, இதைக் கூறினாள்.  வரைவு கடாயது.  உள்ளுறை (1) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – அலை மோதித் தாழையின் மகரந்தம் உதிர, அதன் மணம் பாக்கத்துத் தெருவின் புலால் நாற்றம் நீக்கும் என்றது, தலைவன் தலைவியுடன் கொண்ட காதல் தூண்டப் பொருள் பலவற்றை நம் இல்லத்திற்குக் கொணர்ந்து மணம் முடித்து, ஊரில் எழுந்த அலரை நீக்குவான் என்பதை உள்ளுறுத்திற்று.  உள்ளுறை (2) – ஒளவை துரைசாமி உரை – எக்கர்த் தாழையின் வெண்பூத் திரை உதைத்தலாற் பொங்கித் தாது சொரிந்து பாக்கத்து மறுகின்கண் உண்டாய புலால் நாற்றத்தை மாற்றுதல் போல, நீயும் கூட்டம் இடையீடு வரைந்து கொள்ளுமாற்றால் ஊரவர் எடுத்த அலர்க்கு காரணமாகிய இவளது மேனி மெலிவைப் போக்குதல் வேண்டும் எனத் தோழி கூறியது.  கதழ் – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  அழுங்கல் – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).

Meanings:  முழங்கு திரை – roaring waves, கொழீஇய – heaped (அளபெடை), மூரி எக்கர் – huge sand dunes, தடந்தாள் தாழை – thāzhai trees with large/curved trunks, thāzhai trees with curved trunks, Pandanus odoratissimus, முள்ளுடை – with thorns, நெடுந்தோட்டு அக மடல் – very tall inner fronds, பொதுளிய முகை – thriving buds, முதிர் – mature, வான் – white, bright, பூங்கோடு –  lovely conch shells, வார்ந்தன்ன – like stretched, like elongated, வெண்பூத் தாழை – thāzhai with white flowers, Pandanus odoratissimus, எறி திரை உதைத்தலின் – since the attacking waves hit against it, பொங்கி – overflowing, தாது சோர்பு – drops its pollen, சிறுகுடிப் பாக்கத்து மறுகு – streets of the small seaside village, புலா மறுக்கும் – they remove the flesh stink, மணம் கமழ் – fragrance spreading, கானல் – grove, இயைந்த நம் கேண்மை – our intimate friendship, ஒரு நாள் பிரியினும் – even if separated for a day, உய்வு – surviving, அரிது – difficult,  என்னாது – without considering, கதழ் பரி – fast horses, நெடுந்தேர் – tall chariot, வரவு ஆண்டு – coming there, அழுங்கச் செய்த – gossiped about it, தன் தப்பல் அன்றியும் – not just understanding its mistake, உயவுப் புணர்ந்தன்று – it adds distress, இவ் அழுங்கல் ஊரே – this town that gossips, this uproarious town (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 204, மள்ளனார், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது, தோழி கேட்கும்படியாக
‘தளிர் சேர் தண் தழை தைஇ நுந்தை
குளிர்வாய் வியன் புனத்து எல்பட வருகோ?
குறுஞ்சுனைக் குவளை அடைச்சி நாம் புணரிய
நறுந்தண் சாரல் ஆடுகம் வருகோ?
இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உணக்  5
கூறு இனி மடந்தை நின் கூர் எயிறு உண்கு’ என
யான் தன் மொழிதலின், மொழி எதிர் வந்து
தான் செய் குறியில் இனிய கூறி,
ஏறு பிரி மடப் பிணை கடுப்ப வேறுபட்டு
உறு கழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும்  10
கொடிச்சி செல் புறம் நோக்கி,
விடுத்த நெஞ்சம் விடல் ஒல்லாதே.

Natrinai 204, Mallanār, Kurinji Thinai – What the hero said to his heart, as the heroine’s friend listened nearby
I said to her,
“May I come after the sun rises,
to your father’s wide field,
where you chase birds with rattles,
wearing clothes made of cool leaves
and sprouts?

May I come to the fragrant slopes
where we united, wearing blue
waterlilies from the small spring,
so that we can play?

Oh young woman!  Utter sweet words
desirous to my sad heart
and I will kiss you with sharp teeth.”

When she heard these words, as a
reply to that, she took me to the place
of our tryst, spoke sweetly, and like a
naive doe that is separated from a stag,
went to her small village with tall
bamboos.

My heart that kept looking at the
direction she went is not able to let the
young woman from the mountain get away.

Notes:  தோழி தன் குறை முடிக்க வேண்டும் என்று கருதிய தலைவன் தோழி கேட்குமாறு தன் நெஞ்சிற்குச் சொல்லியது.  ஒளவை துரைசாமி உரை – ‘மெய்தொட்டுப் பயிறல்’ (தொல்காப்பியம், களவியல் 11) என்னும் நூற்பாவில் ‘சொல் அவட் சார்த்தலின் புல்லிய வகையினும்’ என்றவிடத்து ‘வகை என்றதனானே, இதனின் வேறுபட வருவனவும் கொள்க’ என்று உரைத்து காட்டுவர் நச்சினார்க்கினியர்.  பகற்குறி, இரவுக்குறி – பகற்குறி தினைப்புனம் மற்றும் பிற இடங்களில் நிகழும்.  இரவுக்குறி இல்லத்தை ஒட்டியே நிகழும்.  எல்பட (2) – ஒளவை துரைசாமி உரை – ஞாயிறு தோன்றி விளங்கும் காலைப் பொழுது, எல்பட என்றவிடத்துப் படுதல், தோன்றுதல் பின்னத்தூர், அ. நாராயணசாமி ஐயர் உரை- பொழுது போதலும், H.வேங்கடராமன் உரை – கதிரவன் மறைந்த பின்.  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  எயிறு உண்கு (6) – ஒளவை துரைசாமி உரை – நின் பற்களிடத்து ஊறும் அமுதினைப் பருகுவேன், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நின்னுடைய எயிற்றைச் சுவைத்த மகிழ்வேன்.  எயிறு உண்கு (நற்றிணை 134) – ஒளவை துரைசாமி உரை – முத்தம் கொள்ளுதலை எயிறுண்டல் என்பது மரபு, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நின் முள் எயிற்றை முத்தங்கொள்வல்.  பிற பாடல்களில் எயிறு உண்ணுதல் – நற்றிணை 17 – நின் இலங்கு எயிறு உண்கு, நற்றிணை 134 – நின் முள் எயிறு உண்கு,  அகநானூறு 325 – வெய்ய மன்ற நின் வை எயிறு உணீஇய, கலித்தொகை 112 – மெல்ல முயங்கு நின் முள் எயிறு உண்கும். 

Meanings:  தளிர் சேர் – with sprouts, தண் தழை தைஇ – wearing cool leaf garments (தைஇ – அளபெடை), நுந்தை – your father’s, குளிர்வாய் – and protecting with kulir which is a device used to chase parrots in the millet field (குளிர்வாய் – குளிர் என்னும் கிளி கடி கருவியால் பாதுகாக்கப்படுகின்ற), வியன் புனத்து – to the wide millet field, எல் பட – in the morning time, after the sun sets, after the day ends, வருகோ – can I come (வருகு – தன்மை ஒருமை வினைமுற்று, first person singular verb ending, ஓ – அசைநிலை, an expletive), குறுஞ்சுனைக் குவளை – blue waterlilies from the small spring, அடைச்சி – wearing, நாம் புணரிய – where we united, where we were together, நறுந்தண் சாரல் ஆடுகம் – let us play in the fragrant cool mountain slopes, வருகோ – can I come (வருகு – தன்மை ஒருமை வினைமுற்று, first person singular verb ending, ஓ – அசைநிலை, an expletive), இன் சொல் – sweet words, மேவு அலைப்பட்ட – desired and sad, என் நெஞ்சு உண – to my heart’s content (உண உண்ண என்பதன் விகாரம்), கூறு இனி மடந்தை – tell me now oh young woman, நின் கூர் எயிறு உண்கு – let me kiss you on your sharp teeth, என யான் தன் மொழிதலின் – when I told her so, மொழி எதிர் – as a reply to that, வந்து தான் செய் குறியில் இனிய கூறி – she took me to the place of our rendezvous and spoke sweetly, ஏறு பிரி மடப் பிணை கடுப்ப – like a naive female deer that is separated from the stag (கடுப்ப – உவம உருபு, a comparison word), வேறுபட்டு – thought differently, உறு கழை – bamboo filled (உறு – மிக்க), நிவப்பின் – being tall, சிறுகுடிப் பெயரும் – going to the small village, கொடிச்சி – the young from the mountain, செல் புறம் நோக்கி – looking at the direction she went, விடுத்த நெஞ்சம் – my heart that let her go, my heart that lost her, விடல் – letting her go, ஒல்லாதே – it is not possible (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 205, இளநாகனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது அல்லது தோழி தலைவனிடம் சொன்னது
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து,
ஆளி நன்மான், வேட்டு எழு கோள் உகிர்ப்
பூம்பொறி உழுவை தொலைச்சிய வைந்நுதி
ஏந்து வெண்கோட்டு வயக் களிறு இழுக்கும்
துன் அருங்கானம் என்னாய், நீயே  5
குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய,
ஆள் வினைக்கு அகறி ஆயின், இன்றொடு
போயின்று கொல்லோ தானே, படப்பைக்
கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர்
நீர் மலி கதழ் பெயல் தலைஇய  10
ஆய் நிறம் புரையும் இவள் மாமைக் கவினே.

Natrinai 205, Ilanākanār, Pālai Thinai – What the hero said to his heart, or what the heroine’s friend said to the hero
You have to go through the harsh forests
in the mountain slopes,
where waterfalls roar down, and a fierce
āli drags away a bull elephant with white,
lifted tusks with sharp ends, killed by a
tiger with killing claws and bright stripes.

If you leave today to earn wealth, the beauty
of the young woman with dark, beautiful color,
kuvalai-like eyes, lovely like tender sprouts
of eengai bushes with curved thorns drenched
in the monsoon’s heavy rains, will waste away!

Notes:  செலவு அழுங்கியது.  The animal āli is probably a lion.  There are references to āli in Akanānūru 78, 252, 381, Kurinjippāttu 252, Natrinai 205, Puranānūru 207 and Porunaratruppadai 139.  ஒளவை துரைசாமி உரை –  ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என்ற நூற்பாவின்கண் ‘வேற்று நாட்டு அகல்வயின் விழுமத்தானும்’ என்பதன் உரையில் விழுமமாவன பிரியக் கருதியவன் பள்ளியிடத்துக் கனவிற் கூறுவனவும், போவேமோ, தவிர்வேமா என வருந்திக் கூறுவனவும், இவள் நலம் திரியும் என்றலும், பிரியுங்கொல் என்று ஐயுற்ற தலைவியை ஐயந்தீரக் கூறலும், நெஞ்சிற்குச் சொல்லி அழுங்குதலும் பிறவுமாம்’ என்று கூறி இப்பாட்டைக் காட்டி ‘இஃது இவள் நலன் அழியும் என்று செலவு அழுங்கியது’ என்பர் நச்சினார்க்கினியர்.  ஆளி நன்மான் வேட்டு எழு கோள் உகிர்ப் பூம்பொறி உழுவை தொலைச்சிய வைந்நுதி ஏந்து வெண்கோட்டு வயக் களிறு இழுக்கும் (வரிகள் 2-4) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நல்ல ஆளி என்ற விலங்கு புலியால் அடிக்கப்பட்ட களிற்று யானையை இரையாக இழுத்துச் செல்லும், ஒளவை துரைசாமி உரை – ஆளியாகிய நல்ல விலங்கு புலியொடு பொருது அதனைக் கொன்ற களிற்றினைக் கொன்று ஈர்த்துக் கொண்டு செல்லும்.  தானே (8) – ஒளவை துரைசாமி உரை – கட்டுரைச் சுவைபட வந்தது.  மாமைக்கவின் (11) – ஒளவை துரைசாமி உரை – மாந்தளிரின் தன்மையையுடைய நிறவழகு.  கதழ் – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  வை– வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).  ஆளி (பொருநராற்றுப்படை 140) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அரிமா, அரிமாப் போன்ற வேறொரு விலங்கென எண்ணவும் இடமுள்ளது.

Meanings:  அருவி ஆர்க்கும் – waterfall roaring, பெரு – tall, வரை அடுக்கத்து – in the mountain ranges, ஆளி – āli, it is probably a lion, நன்மான் – a fine animal, வேட்டு எழு – rising up for food, rising up with desire, கோள் உகிர் – killer claws, seizing claws, பூம்பொறி – bright markings, bright stripes, bright spots, உழுவை – tiger, தொலைச்சிய – killed, வைந்நுதி – sharp tips, ஏந்து வெண்கோட்டு – with lifted white tusks, வயக் களிறு – strong elephant, இழுக்கும் – it drags and goes, துன் அருங்கானம் – harsh forest that is difficult for those who go, என்னாய் நீயே – you do not consider that, குவளை – blue waterlily blossoms, உண்கண் – eyes with கண் மை, இவள் ஈண்டு ஒழிய – for her to be wasting away here, ஆள் வினைக்கு – for manly effort, to earn wealth, அகறி ஆயின் – if you leave, இன்றொடு – from today onwards, போயின்று – it will go away, கொல்லோ – கொல், ஓ – அசைநிலைகள், expletives, தானே – தான், ஏ அசைநிலைகள், expletives, படப்பை – grove, கொடு முள் – harsh thorns, curved thorns, ஈங்கை – eengai bush, தொட்டாற்சுருங்கி, touch-me-not plant, Mimosa Pudica, நெடு – long, மா – dark, அம் தளிர் – beautiful sprouts, நீர் மலி – water filled, கதழ் – rapid, பெயல் தலைஇய – when it rains (தலைஇய – அளபெடை), ஆய் நிறம் – beautiful color, புரையும் – like, இவள் மாமைக் கவினே – her dark beauty, her beauty the color of tender mango leaves (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 206, ஐயூர் முடவனார் குறிஞ்சித் திணை – தோழி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
‘துய்த் தலைப் புனிற்றுக் குரல் பால் வார்பு இறைஞ்சித்,
தோடு அலைக் கொண்டன ஏனல் என்று,
துறுகல் மீமிசைக் குறுவன குழீஇச்
செவ்வாய்ப் பாசினம் கவரும்’ என்று அவ்வாய்த்
தட்டையும் புடைத்தனை கவணையும் தொடுக்க என  5
எந்தை வந்து உரைத்தனனாக, அன்னையும்,
‘நன்னாள் வேங்கையும் மலர்கமா இனி’ என
என் முகம் நோக்கினள் எவன் கொல் தோழி?
செல்வாள் என்று கொல்? செறிப்பல் என்று கொல்?
கல் கெழு நாடன் கேண்மை  10
அறிந்தனள் கொல்? அஃது அறிகலென் யானே.

Natrinai 206, Aiyūr Mudavanār, Kurinji Thinai – What the heroine’s friend said, as the hero listened nearby
My father said to me, “Mature clusters
of millet with fuzzy tops are filled with
milk; they droop as their leaves sway.
Green parrots with red beaks have
gathered on the boulders.  Take this rattle
and slingshot there and chase them away.”

Mother looked at my face and said, “It is
a good time for the vēngai flowers to
blossom.”

What is going on, my friend?  Does she think
that I might go, or does she think of confining
you to the house?

I wonder whether she is aware of your
friendship with the lord of the mountains.
I do not know what she knows!

Notes:  வேங்கை மலரும் காலமே தினை முற்றி அறுவடைக்கு உரியதாகும்.  வேங்கை மலர்ந்து கதிர் அறுக்கப்படுமாயின் தலைவி புனத்திற்கு வாராள்.  இற்செறிப்புக்கு உள்ளாவாள் என்பதை உணர்த்தினாள்.  வரைவு கடாயது.  The vengai flowers bloom during the millet harvest season.  புனிறு – புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே (தொல்காப்பியம் உரியியல் 79).

Meanings:  துய்த்தலை – soft/fuzzy/fluffy tops, புனிற்றுக் குரல் – newly matured clusters, பால் வார்பு இறைஞ்சி – mature (milk filled) grains bent/drooped, தோடு அலைக் கொண்டன – leaves swayed, ஏனல் – millet, என்று துறு கல் மீமிசைக் குறுவன குழீஇ – they have gathered on the big boulders to pluck (மீமிசை – ஒருபொருட் பன்மொழி, குழீஇ – அளபெடை), செவ்வாய்ப் பாசினம் – green parrot flocks with red beaks, கவரும் என்று – since they will take (the millet), அவ்வாய் தட்டையும் புடைத்தனை – go there and hit your rattle (அவ்வாய் – அவ்விடம்), கவணையும் தொடுக்க – shoot with the slingshot, என எந்தை வந்து உரைத்தனனாக – my father came and said to me in this manner, அன்னையும் நன்னாள் வேங்கையும் மலர்கமா இனி என என் முகம் நோக்கினள் – mother looked at my face and said that the good day has come for the vēngai trees to bloom, Kino Tree, Pterocarpus marsupium, (மலர்கமா – மா =  வியங்கோள் அசைநிலை, an expletive signifying command), எவன் கொல் தோழி – why is it my friend (கொல் – அசைநிலை, an expletive), செல்வாள் என்று கொல் – is she thinking that I will go, செறிப்பல் என்று கொல் – does she think of confinement, கல் கெழு நாடன் கேண்மை அறிந்தனள் கொல் – I wonder whether she knows about your friendship with the lord of the mountains, அஃது அறிகலென் யானே – I don’t know that (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 207, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, நெய்தற் திணை – தோழி செவிலித்தாயிடம் சொன்னது
கண்டல் வேலிக் கழி சூழ் படப்பை
முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக்
கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென,
நெடுந்தேர் பண்ணிவரல் ஆனாதே;
குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி  5
வந்தனர் பெயர்வர் கொல் தாமே? அல்கல்
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇக்,
கோட் சுறா எறிந்தென சுருங்கிய நரம்பின்
முடி முதிர் பரதவர் மட மொழிக் குறுமகள்,
வலையும் தூண்டிலும் பற்றி, பெருங்கால்  10
திரை எழு பௌவம் முன்னிய
கொலை வெஞ்சிறாஅர்பாற் பட்டனளே.

Natrinai 207, Unknown Poet, Neythal Thinai – What the heroine’s friend said to the foster mother
He comes in his tall chariot
with uproarious sounds
to our seashore village,
……….with kandal tree fences, near
……….groves amidst the backwaters,
……….where people live in short-eaved
……….huts woven with mundakam
……….bushes and catch fat fish,
crossing sand dunes as tall as hills.
His coming here will not end.
Or, will he leave and not return?

At nights, children and elders gather
and tie knots on the nets torn by
murderous sharks, using fiber.
The naive daughter of an old fisherman,
my friend of sweet words, will be
tormented by cruel youngsters who carry
nets and fishing rods and brave the
ocean with strong waves caused by winds.

Notes:  தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது.  அயலார் வரைவு வேண்டி வருவதை அறிந்த தோழி உரைத்தது.  தொல். களவியல் 35 – தோழி தானே செவிலி மகளே.  ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவின்கண் ‘பிறன் வரைவாயினும்’ என்றதற்கு இதனைக் காட்டி, ‘இது நொதுமலர் வரைவு மலிந்தமை தோழி சிறைப்புறமாகக் கூறியது என்றும்’ இதனுள் ‘பாற்பட்டனன் எனத் தெளிவுபற்றி இறந்தகாலத்தாற் கூறினள்’ என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர்.

Meanings:  கண்டல் வேலி – kandal trees as fences (கண்டல் – Rhizophora mucronate which is a mangrove tree or Pandanus odoratissimus according to the University of Madras Lexicon), கழி சூழ் படப்பை – grove surrounded by backwaters, முண்டகம் வேய்ந்த – huts woven with mundakam plants, நீர் முள்ளி, Hygrophila spinose, குறியிறை – short eaves, குரம்பை – huts, கொழு மீன் கொள்பவர் பாக்கம் – seashore village of those who catch fat fish, கல்லென நெடுந்தேர் பண்ணிவரல் – coming in the tall chariot with loud sounds, ஆனாதே – they do not end, குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி வந்தனர் – he came crossing sand dunes that are like hills (குன்றத்து – குன்றம், அத்து சாரியை), பெயர்வர் கொல் – will he return, தாமே – தாம், ஏ – அசைநிலைகள், expletives, அல்கல் – nights, இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ – youngsters and elders gather with their relatives (குழீஇ – அளபெடை), கோட் சுறா எறிந்தென – since the murderous sharks had ruined, சுருங்கிய – crushed, நரம்பின் – with fiber, with strings, முடி முதிர் பரதவர் – an old fisherman who ties knots, மட மொழிக் குறுமகள் – naive worded young daughter, வலையும் தூண்டிலும் பற்றி – holding their nets and fishing rods, பெருங்கால் – strong winds, திரை எழு – rising waves, பௌவம் முன்னிய – those who went to the ocean, கொலை வெஞ்சிறாஅர்பாற் பட்டனளே – she has fallen to the torments of  cruel children who kill fish (சிறாஅர் – அளபெடை, ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 208, நொச்சி நியமங்கிழார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
விறல் சால் விளங்கு இழை நெகிழ விம்மி,
அறல் போல் தெள் மணி இடை முலை நனைப்ப,
விளிவு இல கலுழும் கண்ணொடு பெரிது அழிந்து,
எவன் இனைபு வாடுதி, சுடர் நுதல் குறுமகள்?
செல்வார் அல்லர் நம் காதலர்; செலினும்  5
நோன்மார் அல்லர் நோயே; மற்று அவர்
கொன்னும் நம்புங்குரையர் தாமே;
சிறந்த அன்பினர்; சாயலும் உரியர்;
பிரிந்த நம்மினும் இரங்கி, அரும் பொருள்
முடியாது ஆயினும் வருவர்; அதன்தலை  10
இன் துணைப் பிரிந்தோர் நாடித்
தருவது போலும், இப் பெருமழைக் குரலே?

Natrinai 208, Nochi Niyamankizhār, Pālai Thinai – What the heroine’s friend said to her
My friend with a bright forehead!
Why are you in despair?  Your
eyes cry continuously and pearl-like,
clear tear drops flow down like streams
between your breasts as you sob.
Your pretty jewels are slipping.  Your
lover will not leave you.

Even if he leaves, he will be unble to
bear love affliction.  He has great desire
for you, is kind, soft-natured, and he
pities you as he goes on the wasteland
paths seeking wealth that is difficult to
attain.

He will come back to you.  The rumbles
of the clouds above sound like they are
coming toward those pining to be with
their lovers.

Notes:  பெருள்வயின் தலைவன் பிரிவான் என்பதைக் குறிப்பால் உணர்ந்து வருந்திய தலைவியைத் தோழி ஆற்றுவித்தது.  கொன் – அச்சம், பயம் இலி, காலம், பெருமை, என்று அப் பால் நான்கே கொன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 6).  குரை – ஏயும் குரையும் இசைநிறை அசைநிலை ஆயிரண்டு ஆகும் இயற்கைய என்ப (தொல்காப்பியம், இடையியல் 24).

Meanings:  விறல் சால் – winning greatly, very beautiful, விளங்கு இழை – bright jewels, நெகிழ – slipping down, விம்மி – sobbing, அறல் போல் – like a stream, தெள் மணி – clear gems, clear pearls, இடை முலை நனைப்ப – wetting between your breasts, wetting on your breasts, விளிவு இல – without end, continuously (இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்), கலுழும் கண்ணொடு – with crying eyes, பெரிது அழிந்து – ruined greatly, எவன் இனைபு வாடுதி – why are you so saddened and distressed (வாடுதி – முன்னிலை வினைமுற்று), சுடர் நுதல் குறுமகள் – oh bright fore-headed young woman, செல்வார் அல்லர் நம் காதலர் – your lover is not one who will leave, செலினும் – even if he leaves, நோன்மார் அல்லர் நோயே – he will not bear the love disease, மற்று – அசைநிலை, an expletive, அவர் – he, கொன்னும் நம்புங்குரையர் தாமே – he desires you greatly (கொன் – பெருமை உணர்த்தியது, நம்புங்குரையர் – குரை என்னும் இடைச்சொல் குறிப்பு வினைமுற்றாக ஆயிற்று, தாம், ஏ – அசைநிலைகள்), சிறந்த அன்பினர் – he is a very kind person, சாயலும் உரியர் – he is a delicate natured person, பிரிந்த – separated (on his way in the wasteland), நம்மினும் – more than you,  இரங்கி – he feels pity for you, அரும் பொருள் – difficult wealth, முடியாது ஆயினும் – even if he cannot get it, வருவர் – he will come back, அதன்தலை – on top of that, இன் துணை – sweet partners, பிரிந்தோர் – those who are separated, நாடி தருவது போலும் – like coming toward them, இப் பெருமழைக் குரலே – these big clouds noises (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 209, நொச்சி நியமங்கிழார், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத்
தளி பதம் பெற்ற கான் உழு குறவர்,
சில வித்து அகல இட்டென பல விளைந்து,
இறங்கு குரல் பிறங்கிய ஏனல் உள்ளாள்,
மழலை அம் குறுமகள் மிழலை அம் தீங்குரல்  5
கிளியும் தாம் அறிபவ்வே; எனக்கே
படுங்கால் பையுள் தீரும்; படாஅது
தவிரும் காலை ஆயின், என்
உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே.

Natrinai 209, Nochi Niyamankizhār, Kurinji Thinai – What the hero said to his heart
Mountain dwellers prepared the curved land
which the rains made perfect, and spread few
seeds well-spaced, that grew to many plants.
The grain spears matured and the plants
bent on the sides, unable to bear their weight.

My pretty, young woman who protects
that field, talks sweetly like a parrot.  Parrots
understand her prattle.

If she is near me, my pain will end!    If she is
away from me, my life and everything else goes
away with her!  

Notes:  தலைவியால் குறை மறுக்கப்பட்டுப் பின்னின்ற தலைவன் வருந்தித் தன் நெஞ்சிடம் கூறியது.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – சில விதைகள் இடப் பலவாகப் பயன் தரும் ஏனல் என்றது அவ்வேனல் காக்கும் இளையோனை விரும்பிய தலைவனும் தோழியிடம் கூறும் சில மொழிகளால் தலைவியிடம் பலவாய இன்பம் பெறுவான் என்று குறித்தது.

Meanings:  மலை – mountain, இடம்படுத்து – clearing the land, preparing the land, கோட்டிய – curved, sloped, கொல்லை – millet growing land, தளி பதம் பெற்ற கான் – the forest that received rain, உழு குறவர் – mountain dwellers who grow grains, சில வித்து அகல இட்டென – they spread few seeds well with wide spaces between the seeds, பல விளைந்து – growing into many, இறங்கு குரல் – mature grain spears that are bent (because they are heavy), பிறங்கிய – bright, splendid, ஏனல் உள்ளாள் – she is in the millet field, மழலை – child-like talk, அம் குறுமகள் – beautiful young woman, மிழலை –sweet speech, prattle, அம் தீங்குரல் – beautiful sweet voice, கிளியும் தாம் அறிபவ்வே – parrots understand what she says (வகரம் விரித்தல் விகாரம்), எனக்கே – for me, படுங்கால் – when I hear that (கால் ஈற்று வினையெச்சம்), பையுள் தீரும் – my pain will end, படாஅது தவிரும் காலை ஆயின் – if she doesn’t be near me, என் – my, உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே – my life and everything will go with her (வாங்கும்மே – செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது)

நற்றிணை 210, மிளைகிழார் நல்வேட்டனார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
அரிகால் மாறிய அம் கண் அகல்வயல்
மறு கால் உழுத ஈரச் செறுவின்,
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர!
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்  5
செல்வம் அன்று; தன் செய் வினைப் பயனே
சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் என்பதுவே.

Natrinai 210, Milai Kizhār Nalvēttanār, Marutham Thinai – What the heroine’s friend said to the hero
Oh man from a prosperous town,
where those who take baskets of seeds
to the lovely, huge wet fields where
stubble has been removed and the land
is plowed again, return with many kinds
of fish!

Uttering praises and swift chariots are
not real wealth.  They are just the benefits
of one’s own actions.

What is real wealth, the wise say,
is dreading the suffering of those who are
close and having tender hearts!

Notes:  பாரத்தையிற் பிரிந்து வந்தான் தலைவன்.  தலைவி ஊடினாள்.  அப்பொழுது தோழியின் உதவியை நாடிய தலைவனிடம் தோழி உரைத்தது.  நெடிய மொழிதலும் (5) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – உயர்த்துக் கூறப்படுவது, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – சொல்லும் செயலும் வேறுபடாமை வற்புறுத்தும் ஆண்மை மொழிகளை வழங்குவதும்.  உள்ளுறை (1) – ஒளவை துரைசாமி உரை – ஈரச் செறுவயின் உயர்ந்த வித்தொடு சென்ற வட்டி, அதனால் பெறலாகும் விளை பயனைப் பெறுமுன், இழிந்த பல்வேறு மீன்களைக் கொடுபோந்தாற்போல, உயர்ந்த தலைவியொடு கூடி இல்லின்கண் நல்லறஞ்செய்ய புக்க நீ அதன் பயனைப் பெறுமுன் பரத்தையர் பலர்பாற் பெறலாகும் இழிந்தப் பயனைப் பெறாநின்றனை என்பது.  உள்ளுறை (2) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – விதைகளுடன் கொண்டு சென்ற  கடகப் பெட்டியில் மீனொடு பெயரும் என்பது பரத்தையரைக் கொணர்ந்து தலைவனைப் புணர்த்திய பாணன் தான் விரும்பும் பொருளைப் பெற்று  மீள்வான் என்பது.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

Meanings:  அரிகால் மாறிய – stubble removed, அம் கண் அகல்வயல் – beautiful wide field, மறு கால் உழுத – re-plowed again, ஈரச் செறுவின் – in the wet fields, வித்தொடு சென்ற வட்டி – baskets taken with seeds to seed, பற் பல மீனொடு பெயரும் – return with many kinds of fish, யாணர் ஊர – oh man from the rich town (ஊர – அண்மை விளி), நெடிய மொழிதலும் – uttering praises, கடிய ஊர்தலும் – and moving quickly (in chariots, horses etc.), செல்வம் அன்று – that is not wealth, தன் செய் வினைப் பயனே – it is the rewards that are got by one’s own acts, சான்றோர் – those with wisdom, செல்வம் என்பது – what wealth is, சேர்ந்தோர் – those close, relatives, புன்கண் அஞ்சும் பண்பின் – having the quality of dreading suffering, மென்கண் செல்வம் என்பதுவே – tenderness of the heart is wealth (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 211, கோட்டியூர் நல்லந்தையார், நெய்தற் திணை – தோழி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
யார்க்கு நொந்து உரைக்கோ யானே, ஊர் கடல்
ஓதம் சென்ற உப்புடைச் செறுவில்,
கொடுங்கழி மருங்கின், இரை வேட்டு எழுந்த
கருங்கால் குருகின் கோள் உய்ந்து போகிய
முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை,  5
எறி திரை தொகுத்த எக்கர் நெடுங்கோட்டுத்
துறு கடற் தலைய தோடு பொதி தாழை
வண்டுபடு வான் போது வெரூஉம்
துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே?

Natrinai 211, Kōttiyūr Nallanthaiyār, Neythal Thinai – What the heroine’s friend said, as the hero listened nearby
To who can I talk about my pain
caused by his abandonment,
the lord of the shores
where a whiskered male shrimp
with curved back,
……….that escaped from by a
……….black-legged heron looking for
……….food in the salt pans fed by the
……….moving ocean waves, near the
……….curved backwaters,
now fears white, bee-swarming flowers
of thāzhai with fronds, leaning toward
the sea and growing densely on the tall
heaps of sand brought by moving waves? 

Notes:   தலைவியின் கூற்றைத் தோழி தன் கூற்றாகக் கொண்டு கூறியது.  களவொழுக்கத்தை மேற்கொண்ட தலைவன் மணம் செய்து கொள்ளாது நீட்டித்ததாலே தலைவி ஒருபடியாக ஆற்றாளாமென்று அறிந்த தோழி, அங்கு ஒருபுறம் வந்திருந்த தலைவன் அறிந்து விரைவில் மணம் புரிந்துகொள்ளுமாறு உள்ளுறையாலே தலைவி படும் துன்பத்தைக் கூறுகின்றாள்.  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை –  இரை தேடி வந்த குருகுபற்றுதலைத் தப்பியோடிய இறாமீன் தாழம்பூவை நோக்கிக் குருகெனக் கருதி, அஞ்சுமென்றது, ஊரார் பழித் தூற்றத் தொடங்கலும் அதற்கஞ்சிய தலைவி அன்னையை அன்னையைக் கண்டவிடத்தும் ஏதிலாட்டியர் கூற்றை மேற்கொண்டு சினந்து வருவாள் கொல்லோவென அஞ்சாநிற்கும் என்றதாம்.  மோவாய் (5) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – உயர்ந்த வாய், ஒளவை துரைசாமி உரை – நீண்ட மீசை.  தலைவி கூறுவதுபோல் தோழி கூறுதல் – நற்றிணை 124 – புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை யானும் ஆற்றேன், நற்றிணை  175 – என் பசலை மெய்யே, நற்றிணை  178 – அவர்த் தெளிந்த என் நெஞ்சே, நற்றிணை 191 – என் நோக்கினளே அன்னை, நாளை மணிப் பூ முண்டகம் கொய்யேன் ஆயின் அணிக் கவின் உண்மையோ அரிதே, நற்றிணை 211 – யார்க்கு நொந்து உரைக்கோ யானே …… துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே?, கலித்தொகை 18 – என் தோள் எழுதிய தொய்யிலும், கலித்தொகை 70 – எம் புதல்வனை மெய் தீண்டப் பொருந்துதல் இயைபவால், குறுந்தொகை 236 – தந்தனை சென்மோ நீ உண்ட என் நலனே, குறுந்தொகை 238 – தொண்டி அன்ன என் நலம் தந்து கொண்டனை சென்மோ, ஐங்குறுநூறு 45 – பசப்பு அணிந்தனவால் மகிழ்ந என் கண்ணே.

Meanings:  யார்க்கு – to who, நொந்து – with sorrow, உரைக்கோ – can I tell (உரைக்கு – தன்மை வினைமுற்று, first person verb ending + ஓ – அசைநிலை, an expletive), யானே – me (ஏ – அசைநிலை, an expletive), ஊர் கடல் ஓதம் – waves in the moving ocean, சென்ற – goes, உப்புடைச் செறுவில் – in the salt pans with salt, கொடுங்கழி மருங்கின் – near the curved backwaters, இரை வேட்டு எழுந்த – rose up desiring to hunt for food, கருங்கால் குருகின் – of  a black-legged heron/egret/stork, கோள் – being seized/caught, உய்ந்து போகிய – escaped and went, முடங்கு புற – curved back, இறவின் – shrimp’s, மோவாய் ஏற்றை – a male with whiskers, எறி திரை தொகுத்த – moving waves brought and collected, எக்கர் நெடுங்கோட்டு – with tall sand dunes, துறு – dense, crowded, கடல் தலைய – top slanting toward the ocean, தோடு பொதி தாழை – thāzhai trees filled with fronds, Pandanus odoratissimus, வண்டுபடு – bee swarming, வான் போது – white flowers, வெரூஉம் – it fears (அளபெடை), துறை கெழு கொண்கன் – the lord of the ocean with ports, துறந்தனன் எனவே – since he abandoned (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 212, குடவாயிற் கீரத்தனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
பார்வை வேட்டுவன் படுவலை வெரீஇ
நெடுங்கால் கணந்துள் அம் புலம்பு கொள் தெள் விளி
சுரஞ்செல் கோடியர் கதுமென இசைக்கும்,
நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண்,
கடுங்குரல் பம்பைக் கத நாய் வடுகர்  5
நெடும் பெருங்குன்றம் நீந்தி நம் வயின்
வந்தனர், வாழி தோழி, கையதை
செம்பொன் கழல் தொடி நோக்கி மா மகன்
கவவுக் கொள் இன் குரல் கேட்டொறும்,
அவவுக் கொள் மனத்தேம் ஆகிய நமக்கே.  10

Natrinai 212, Kudavāyil Keerathanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
He has crossed the tall mountains
of the Vadukars owning fierce dogs
and roaring drums,
passing a wasteland path where a
a lonely, long-legged kananthul bird,
fearing the net set up with a decoy by
a hunter, cries clearly in sad tones that
sound like the rapidly plucked strings of 
musicians passing through the wasteland.

May you live long, oh friend!
The new gold bangles on your arms
have become loose, and your noble son
hugs you, on seeing that.
Whenever we hear his sweet voice, we are
of desiring minds.

Notes:  பொருள்வயின் பிரிந்த தலைவன் மீண்டு வருவதை அவனுடன் வந்த இளைஞர்கள் மூலம் அறிந்த தோழி உவந்து கூறியது.  ஒளவை துரைசாமி உரை –  ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என்ற நூற்பாவின்கண், ‘பிரியும் காலை எதிர் நின்று சாற்றிய மரபு உடை எதிரும் உளப்பட பிறவும்’ என்றவிடத்துப் ‘பிறவாவன தலைவன் வரவு மலிந்து கூறுவனவும், வந்த பின்னர் முன்பு நிகழ்ந்தன கூறுவனவும் வற்புறுப்பாள் பருவம் அன்றெனப் படைத்து மொழிவனவும், தூது கண்டு கூறுவனவும், தூது விடுவனவும், சேணிடைப் பிரிந்தோன் இடை நிலத்துத் தங்காது இரவின் வந்துழிக் கூறுவனவும், நிமித்தம் காட்டிக் கூறுவனவும், உடன் சேறலை மறுத்துக் கூறுவனவும் பிறவுமாம்’ என்று உரைத்து, இப்பாட்டைக் காட்டி, ‘இது தலைவிக்கு வரவு மலிந்தது’ என்பர் நச்சினார்க்கினியர்.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கணத்துட் பறவையின் ஓசை யாழோசையுடன் சேர்ந்து இசைக்கும் என்றது தலைவி தலைவனுடன் கூடி எங்கும் இசை பரவ வாழ்வாள் என்பதனைக் குறிப்பித்து நின்றது.  வடுகர் – ஒளவை துரைசாமி உரை புறநானூறு 278 – தொண்டை நாட்டுத் திருவேங்கடத்திற்கு வடக்கில் உள்ள நாட்டவராதலால் வடுகர் எனப்பட்டனர், பொ. வே. சோமசுந்தரனார் உரை அகநானூறு 213 – தெலுங்கர்.  வரலாறு:  வடுகர்.  அவவு (10) – ஒளவை துரைசாமி உரை – அவா என்பது அவவு என வந்தது.  நமக்கு (10) – ஒளவை துரைசாமி உரை – ஏழாவதன்கண் நான்காவது வந்து மயங்கிற்று பார்வை (1) – கழகத் தமிழ் அகராதி – பார்வை விலங்கு என்பது விலங்கைப் பிடிக்க பழகிய விலங்கு.  பார்வை வேட்டுவன் படுவலை (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பார்வை ஒன்றனை வைத்து வேட்டுவன் அமைத்த வலை.  பெரும்பாணாற்றுப்படை 95 – பார்வை யாத்த பறை தாள் விளவின்.  பார்வை:  பார்வை வேட்டுவன் நற்றிணை 212-1, 312-4, கலித்தொகை 95-17, பார்வை யாத்த – பெரும்பாணாற்றுப்படை 95, பார்வை மடப் பிணை 20-4.  There are only 2 references to kananthul.  The other reference is in Kurunthokai 350, which is also in the Pālai landscape.  Commentators have not identified this bird.  The only descriptions we have are that it has long legs and pretty wings.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  பார்வை வேட்டுவன் – a hunter who used a decoy, an eyeing hunter (பார்வை – ஆகுபெயர்), படுவலை வெரீஇ – afraid of the catching net that had been set (வெரீஇ – அளபெடை), நெடுங்கால் கணந்துள் – kananthul bird with long legs, red wattled lapwing, அம் புலம்பு கொள் – in loneliness, in sorrow (அம் – சாரியை), தெள் விளி – clear calls, சுரம் செல் கோடியர் – dancers/musicians who go to the wasteland, கதுமென இசைக்கும் நரம்பொடு கொள்ளும் – singing rapidly along with their lute/harp strings (கதுமென – விரைவுக்குறிப்பு, நரம்பு ஆகுபெயர் யாழுக்கு), அத்தத்து – in the wasteland, ஆங்கண் – there, கடுங்குரல் – harsh sounds, பம்பை – drums, கத நாய் – fierce dogs, வடுகர் நெடும் பெருங்குன்றம் நீந்தி – crossed Vadukar’s tall peaks, நம்வயின் வந்தனர் – he is coming our way, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – oh friend, கையதை – on your arms (ஐ – சாரியை), செம்பொன் கழல் தொடி – new gold loose bangles, நோக்கி – on seeing, மா மகன் கவவுக் கொள் – noble/fine son hugging, இன்குரல் கேட்டொறும் – whenever we hear his sweet voice, அவவுக் கொள் மனத்தேம் ஆகிய நமக்கே – we are of desiring minds since your husband is arriving soon (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 213, கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார், குறிஞ்சித் திணை – தலைவன் தலைவியிடமும் தோழியிடமும் சொன்னது
அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணிக்,
கன்று கால்யாத்த மன்றப் பலவின்
வேர்க் கொண்டு தூங்கும் கொழுஞ்சுளைப் பெரும்பழம்
குழவிச் சேதா மாந்தி, அயலது
வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும்  5
பெருங்கல் வேலிச் சிறுகுடி யாது என
சொல்லவும் சொல்லீர்; ஆயின், கல்லெனக்
கருவி மா மழை வீழ்ந்தென, எழுந்த
செங்கேழ் ஆடிய செழுங்குரல் சிறு தினைக்
கொய் புனம் காவலும் நுமதோ,  10
கோடு ஏந்து அல்குல் நீள் தோளீரே?

Natrinai 213, Kachippēttu Perunthachanār, Kurinji Thinai – What the hero said to the heroine and her friend
Oh young women with tall,
lifted loins and long arms!

Even though you did not reply
when I asked you which is your
small village surrounded by lofty
mountains,
where waterfalls roar down, large
jackfruits with luscious segments
hang near the roots of a tree in the
common ground to which a calf
is tied, and a brown cow with a
young calf eats the fruit and drinks
water from a mountain stream
near a dense bamboo thicket,

could you at least tell me whether the
job to protect the millet field, thriving
well after heavy rains with thunder and
lightning, and bearing red colored, huge
clusters of tiny millet, is yours?

Notes:  இயற்கைப் புணர்ச்சியின்பின் தலைவன் தோழியை மதி உடம்படுப்பானாய், தலைவியும் தோழியும் இருக்கும் இடத்திற்குச் சென்று, தலைவியையும் தோழியையும் நோக்கித், தான் புதியவன் போல் உரைத்தான்.  ஒளவை துரைசாமி உரை –  ‘மெய்தொட்டுப் பயிறல்’ (தொல்காப்பியம், களவியல் 11) என்று தொடங்கும் நூற்பாவின்கண் ‘ஊரும் பேரும் கெடுதியும் பிறவும் நீரின் குறிப்பின் நிரம்பக் கூறித் தோழியைக் குறையுறும் பகுதியும்’ என்றதன் உரையில் இதனைக் காட்டி, இஃது ஊர் வினாயது என்பர் இளம்பூரணர்; இஃது ஊரும் பிறவும் வினாயது என்பர் நச்சினார்க்கினியர்.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கன்றையுடைய சிவந்த பசு, பலாப்பழத்தைத் தின்று அயலிலுள்ள மலை நீரைப் பருகும் என்றது, தலைவியை முன்பே இயற்கைப்புணர்ச்சியில் கூடி இன்புற்ற தலைவன் தினைப்புனத்தில் பகற்குறியாகக் கூடி அவர்தம் சிறுகுடி இரவுக்குறியிலும் கூடித் தலைவியை நுகர்ந்து மகிழ்வான் என்பதனை உள்ளுறுத்திற்று.  மன்றப் பலவின் (2) – ஒளவை துரைசாமி உரை – மன்றத்தில் நிற்கும் பலா மரத்தின், H. வேங்கடராமன் உரை – மன்றம் போன்ற தழைத்த பலா மரத்தின்.  மன்றப் பலவின் – புறநானூறு 128, 375.  கருவி மா மழை (8) – H. வேங்கடராமன் உரை – மின்னல் இடி முதலிய தொகுதிகளையுடைய மேகம்.  குழவி (4) – யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய.  எருமையும் மரையும் வரையார் ஆண்டே.  கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே.  ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும்.  குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை.  ஆவும் எருமையும் அது சொலப்படுமே (தொல்காப்பியம், மரபியல் 15-20).  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58).

Meanings:  அருவி ஆர்க்கும் – waterfalls roar, பெரு வரை நண்ணி – reaching the tall mountains, கன்று கால் யாத்த – a calf tied to the base of the tree, மன்றப் பலவின் – of a jackfruit tree in the common grounds,  Artocarpus heterophyllus, வேர்க் கொண்டு – on the roots, தூங்கும் கொழுஞ்சுளைப் பெரும் பழம் – hanging large fruits with luscious big pieces, குழவிச் சேது ஆ – tawny/brown cow with calf, மாந்தி – ate, அயலது – nearby, வேய் பயில் இறும்பின் – dense bamboo grove in the small mountain, with small forest dense with bamboo, ஆம் அறல் பருகும் – drinks flowing water, பெருங்கல் வேலிச் சிறுகுடி – small village with huge mountains as fences, யாது – which, என சொல்லவும் சொல்லீர் ஆயின் – even if you will not tell me when I ask you, கல்லென – with loud sounds, கருவி மா மழை வீழ்ந்தென – since the dark clouds came down with thunder and lightning, எழுந்த – grown, raised, செங்கேழ் ஆடிய – red in color, செழுங்குரல் சிறு தினைக் கொய் புனம் – field with mature clusters of tiny red millet, காவலும் – guarding work, நுமதோ  – is it yours, கோடு ஏந்து அல்குல் – lifted loins with lines, tall lifted loins, நீள் தோளீரே – oh women with long arms (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 214, கருவூர்க் கோசனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு இன்ம் என,
வினை வயின் பிரிந்த வேறுபடு கொள்கை,
‘அரும்பு அவிழ் அலரிச் சுரும்பு உண் பல் போது
அணிய வருதும் நின் மணி இருங்கதுப்பு’ என,  5
எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உணக் கூறி,
மை சூழ் வெற்பின் மலை பல இறந்து,
செய் பொருட்கு அகன்ற செயிர் தீர் காதலர்
கேளார் கொல்லோ தோழி, தோள
இலங்கு வளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி  10
நகுவது போல மின்னி
ஆர்ப்பது போலும், இக் கார்ப் பெயல் குரலே?

Natrinai 214, Karuvūr Kosanār, Pālai Thinai – What the heroine said to her friend
Fame, pleasure and charity, these
three rarely come to those who are idle.
With a principle different from laziness,
he separated from me due to his work.

“I will return and place freshly opened,
flowers, swarmed by bees for honey,
on your sapphire-colored, dark hair,”
he promised with his faultless heart,
before he left to earn wealth crossing the
many mountains covered with dark clouds.

Distress has caused the bangles on my arms
to become loose.

Will my faultless lover not hear the monsoon
rain’s rumbling sounds and lightning that
that appear to tease and laugh at me?

Notes:  பொருள்வயின் பிரிந்த தலைவன் குறித்த பருவத்தில் வராதது கண்ட தலைவி வருந்திக் கூறியது.  நீலமணிபோல் பெண்ணின் கூந்தல்:  அகநானூறு 8 – மணி ஏர் ஐம்பால், நற்றிணை 10 – மணியின் தாழ்ந்த நல் நெடுங்கூந்தல், நற்றிணை 133 – மணி ஏர் ஐம்பால், 214 – மணி இருங்கதுப்பு, 245 – மணி மருள் ஐம்பால், 337 – மணி மருள் ஐம்பால், 366 – மணி ஏர் ஐம்பால், 374 – வீழ் மா மணிய புனை நெடுங்கூந்தல், கலித்தொகை 22 – மணி ஒளி விட்டன்ன ஐவகை, கலித்தொகை 77 – மாசு அற மண்ணுற்ற மணி ஏசும் இருங்கூந்தல், பரிபாடல் 10, குறிஞ்சிப்பாட்டு 69 – பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம் பின்னிருங் கூந்தல், 112 – மணி நிறம் கொண்ட மா இருங் குஞ்சி.

Meanings:  இசையும் இன்பமும் ஈதலும் – fame and pleasure and charity, மூன்றும் – these three, அசையுநர் இருந்தோர்க்கு – to those who are idle, to those who do not make an effort, அரும் புணர்வு இன்ம் – they do not come to them (இன்ம் – இன்மை என்பது இன்ம் எனத் திரிந்தது), என – thus, வினை வயின் பிரிந்த – separated due to business, வேறுபடு கொள்கை – with a different principle, அரும்பு அவிழ் அலரி – buds that open their petals and become flowers, சுரும்பு உண் – bees swarming to drink honey, பல் போது அணிய – to adorn with many flowers, வருதும் – we will come, நின் மணி இருங்கதுப்பு என – your sapphire-like dark hair, எஞ்சா வஞ்சினம் – strong promises, நெஞ்சு உணக் கூறி – felt with his heart and said (உண உண்ண என்பதன் விகாரம்), மை சூழ் வெற்பின் – on the mountains covered with dark clouds, மலை பல இறந்து – crossed few mountains, செய் பொருட்கு அகன்ற – left to earn wealth, செயிர் தீர் காதலர் கேளார் கொல்லோ – will our faultless lover not hear (கொல் – ஐயப்பொருட்டு, ஓ – அசைநிலை, an expletive), தோழி – oh friend, தோள இலங்கு வளை நெகிழ்த்த – it has caused the bright bangles on my arms to become loose, கலங்கு அஞர் – distressing sorrow, எள்ளி நகுவது போல மின்னி ஆர்ப்பது போலும் – lightning and thunder like they are teasing and laughing, இக் கார்ப் பெயல் – this rainy season rain’s, குரலே – the sounds (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 215, மதுரைச் சுள்ளம் போதனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
குணகடல் இவர்ந்து குரூஉக் கதிர் பரப்பிப்,
பகல் கெழு செல்வன் குடமலை மறையப்,
புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலை,
இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயர,
மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர்  5
நீல் நிறப் பரப்பில் தயங்கு திரை உதைப்பக்,
கரை சேர்பு இருந்த கல்லென் பாக்கத்து
இன்று நீ இவணை ஆகி, எம்மொடு
தங்கின் எவனோ தெய்ய? செங்கால்
கொடு முடி அவ் வலை பரியப் போகிய  10
கோட் சுறாக் குறித்த முன்பொடு
வேட்டம் வாயாது எமர் வாரலரே.

Natrinai 215, Mathurai Chullam Pōthanār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
When the bright sun that rises in
the east and spreads its colorful rays
during the day, hides in the western
mountains in the lonely painful
hours,
women wearing gleaming bangles,
who live in huge houses, light bright
lamps with oil made from collected 
fish fat.

Why don’t you stay with us today in
our noisy village on the shores of the
blue ocean with bright waves?
Our brothers who target with strong
intent murderous sharks which tear
their curved, knotted nets with red
wooden floats,
will not return without succeeding
in catching them.  

Notes:  பகற்குறி வந்து மீளும் தலைவனிட ம் தோழி உரைத்தது.  இரவுக்குறி மறுத்து வரைவு கடாயதுமாம்.  மீன் நெய் – நற்றிணை 175 – மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய சிறு தீ விளக்கில், நற்றிணை 215 – மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர், பொருநராற்றுப்படை 215 – மீன் நெய்யொடு.  வலையின் செங்கோல்:  அகநானூறு 60 – செங்கோல் அவ் வலை நெடுந்திமில் தொழிலொடு,  அகநானூறு 220 – இருங்கழி முகந்த செங்கோல் அவ்வலை, நற்றிணை 215 – செங்கால் கொடு முடி அவ் வலை,  நற்றிணை 303 – பரதவர் இட்ட செங்கோல் கொடு முடி அவ் வலை.  இலங்கு வளை மகளிர் (4) – ஒளவை துரைசாமி உரை – காதலரொடு கூடி உறையும் மனைமகளிரைக் காட்டிற்று.  குரு – குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே (தொல்காப்பியம், உரியியல் 5).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  குணகடல் இவர்ந்து – rising from the eastern oceans, குரூஉ – colorful, bright (அளபெடை), கதிர் பரப்பி – spreading the rays, பகல் – daytime, கெழு – bright, செல்வன் – sun, குட மலை மறைய – it hides in the western mountains, புலம்பு வந்து இறுத்த – loneliness came and stayed to hurt, புன்கண் மாலை – painful evening, இலங்கு வளை – bright bangles, மகளிர் – women, வியல் நகர் – wide houses, அயர – perform, மீன் நிணம் – fish fat, தொகுத்த – collected and melted, ஊன் – flesh, நெய் – oil, ஒண் சுடர் – bright light, நீல் நிறப் பரப்பில் – in the blue spread ocean (நீல் – கடைக்குறை, poetical license which consists in the shortening of a word by elision of one or more letters in the end)), தயங்கு திரை – moving waves, bright waves, உதைப்ப – lap, கரை சேர்பு இருந்த – near the seashore, கல்லென் பாக்கத்து – in the loud village, இன்று – today, நீ – you, இவணை – here, ஆகி எம்மொடு – with us, தங்கின் எவனோ – why don’t you stay with us, தெய்ய – அசைநிலை, an expletive, செங்கால் – red wooden floats, கொடு – curved, முடி – knotted, அவ் வலை பரியப் போகிய – tearing that beautiful net, கோட் சுறா – murderous sharks, குறித்த முன்பொடு – targeting with strength, வேட்டம் வாயாது – without catching (hunting), எமர் வாரலரே – my brothers will not return (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 216, மதுரை மருதன் இளநாகனார், மருதத் திணை – பரத்தை சொன்னது, பாணற்கோ அல்லது விறலிக்கோ, தலைவியின் தோழியர் கேட்குமாறு
துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்,
இனிதே காணுநர்க் காண்புழி வாழ்தல்;
கண்ணுறு விழுமம் கை போல் உதவி
நம் உறு துயரம் களையார் ஆயினும்,
இன்னாது அன்றே அவர் இல் ஊரே;  5
எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும்
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்,
ஏதிலாளன் கவலை கவற்ற,
ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக்
கேட்டோர் அனையர் ஆயினும்,  10
வேட்டோர் அல்லது பிறர் இன்னாரே.

Natrinai 216, Mathurai Maruthan Ilanākanār, Marutham Thinai – What the concubine said to either the bard or the virali, as the heroine’s friends listened
Even though he does not end my sulking
and unite with me, it would be sweet if we
live close and see each other.  If he will
not be like a helping hand that removes a
speck of dust that irritates the eye, then this
town without him will be a painful place.

Even though many have heard about
Thirumāvunni who tore off one breast due
to the pain caused to her by a stranger near
a platform on a vēngai tree with flame-like
flowers, protected by god, in a field where
herons raise uproar, only those who loved
her take pity on her!

Notes:  தலைவியின் பாங்காய் அமைந்த பாணன் விறலி ஆகிய இருவருள் ஒருவரை முன்னிலைப்படுத்தி உரைத்தது.  துனி (1) – ஒளவை துரைசாமி உரை – வெறுப்பு, உணர்ப்புவயின் வாரா ஊடல் பரத்தைக்கின்மை பற்றித் துனிதீர் கூட்டம் என்றார்.  துன்னுதல், புணர்தல்:  ‘துன்னலம் பெரும பிறர்த் தோய்ந்த நின் மார்பே’ – ஐங்குறுநூறு 62.  இனிதே காணுநர்க் காண்புழி வாழ்தல் (2) – ஒளவை துரைசாமி உரை – ஒருவரையொருவர் காணுமாறமைந்த இடத்தே வாழ்வது இன்பம் தருவதாம்.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – காணும் தரத்தினரை நோக்கியிருந்தாலும் உயிரொடு வாழ்வது இனியதாகும்.  Women tearing off their breasts when frustrated, can be seen in later literature like Silappathikāram and Divyaprabandham.  விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).

Meanings:  துனி தீர் – sulking distress ending, கூட்டமொடு – with union, துன்னார் ஆயினும் – even though he does not come, இனிதே – it would be sweet, காணுநர் காண்புழி – in a place where we would be able to see each other (காண்புழி = காண்பு + உழி, உழி = ஏழாம் வேற்றுமை உருபு, locative case, a word ending signifying place), வாழ்தல் – living, கண்ணுறு விழுமம் – distress caused to the eyes, dust that falls into the eyes, கை போல் உதவி – helping like the hand, நம் உறு துயரம் களையார் ஆயினும் – even if he does not remove the sorrow I have attained (நம் – தன்மைப் பன்மை, first person plural), இன்னாது அன்றே – it is painful, அவர் இல் ஊரே – the town without him, எரி மருள் வேங்கை – kino tree with flame like flowers (has golden yellow flowers), Pterocarpus marsupium, கடவுள் காக்கும் – protected by gods, குருகு ஆர் கழனியின் – in a field where herons/egrets/storks  raise uproar, இதணத்து – on the platform, ஆங்கண் – there, ஏதிலாளன் – a stranger, கவலை கவற்ற – caused sorrow, ஒரு முலை அறுத்த – cut off one of her breasts, திருமாவுண்ணி – a woman named Thirumāvunni, கேட்டோர் அனையர் ஆயினும் – even though many have heard about her, வேட்டோர் அல்லது பிறர் இன்னாரே – only those who love her feel sad for her whereas others do not (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 217, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
இசைபட வாழ்பவர் செல்வம் போலக்
காண்தொறும் பொலியும் கதழ்வாய் வேழம்,
இருங்கேழ் வயப் புலி வெரீஇ அயலது
கருங்கால் வேங்கை ஊறுபட மறலிப்,
பெருஞ்சினம் தணியும் குன்ற நாடன்  5
நனி பெரிது இனியனாயினும், துனி படர்ந்து
ஊடல் உறுவேன் தோழி, நீடு
புலம்பு சேண் அகல நீக்கிப்,
புலவி உணர்த்தல் வண்மையானே.

Natrinai 217, Kapilar, Kurinji Thinai – What the heroine said to her friend about the hero
Even though he is a very sweet man,
the lord of the mountain,
where a bull elephant with rapid strides
that is splendid like the wealth of those
who live with fame,
sees a dark-colored, strong tiger nearby
move away in fear, gets upset, and
attacks with great rage a vēngai tree with
a dark trunk, shattering and ruining it,
I will sulk because of my sorrow. 

Even though he has great love for me,
I will still sulk, not removing my great
sorrow.

Notes:  பரத்தையிற் பிரிந்த தலைவன் தலைவியின் ஊடலைத் தீர்க்கத் தோழியை அனுப்பினான்.  தலைவி அவளுக்கு வாயில் மறுத்தாள்.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – ஆண்யானை, தன்னிடம் புலி அஞ்சி ஓடியதால், தன் சினத்தை அயலிலுள்ள வேங்கை மரத்தில் மோதித் தணித்துக் கொள்ளும் என்றது, தலைவி கொண்ட புலவிக்குத் தலைவன் அஞ்சி அகலுதலாலே அவன் கொண்ட பரத்தமையை இகழ்ந்து கூறிச் சினம் தனிவள் என்பது.  கருங்கால் வேங்கை ஊறுபட மறலி (4) – ஒளவை துரைசாமி உரை – கரிய அடியையுடைய வேங்கையைத் தன் உடம்பில் புண் உண்டாகுமாறு மோதித் தாக்கி, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை –  கரிய அடியையுடைய வேங்கை மரம் சிதையுமாறு முறித்துத் தள்ளி, H. வேங்கடராமன் உரை – கரிய அடியினையுடைய வேங்கை மரம் சிதைவுறுமாறு பகைத்து முறித்துத் தள்ளி.  இனியன் (6) – கு.வெ. பாலசுப்பிரமணியன் உரை –  இனியன் என்பதை இகழ்ச்சிக் குறிப்பாகவும் கொள்க.  கதழ் – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  இசைபட வாழ்பவர் செல்வம் போல – like the wealth of those who live with fame, காண்தொறும் – whenever it is seen, பொலியும் – it shines, கதழ்வாய் வேழம் – an elephant with rapid walk, இருங்கேழ் வயப் புலி வெரீஇ – dark colored/large and strong tiger moves away in fear (வெரீஇ – அளபெடை), அயலது – nearby, கருங்கால் வேங்கை – kino tree with sturdy/big/dark-colored trunk, Pterocarpus marsupium, ஊறுபட மறலி – shattered and ruined, பெருஞ்சினம் தணியும் – it reduces its great anger (தணியும் – தணிக்கும்), குன்ற நாடன் – lord of the mountains, நனி பெரிது இனியனாயினும் – even though he is a very very sweet person (நனி பெரிது – மிக மிக, ஒரு பொருட் பன்மொழி), துனி படர்ந்து – spreading sorrow, ஊடல் உறுவேன் – I will sulk, தோழி – my friend, நீடு புலம்பு – long sorrow, சேண் அகல நீக்கி – to go far away, புலவி உணர்த்தல் வண்மையானே – even though he tries to remove my sulking (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 218, கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே;
எல்லியும் பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே;
வாவலும் வயின்தொறும் பறக்கும், சேவலும்
வளைவாய்க் இரும் பெடை நகுதொறும் விளிக்கும்;
மாயாக் காதலொடு அதர்ப் படத் தெளித்தோர்  5
கூறிய பருவம் கழிந்தன்று; பாரிய
பராரை வேம்பின் படுசினை இருந்த
குராஅல் கூகையும் இராஅ இசைக்கும்;
ஆனா நோய் அட வருந்தி இன்னும்
தமியேன் கேட்குவென் கொல்லோ,  10
பரியரைப் பெண்ணை அன்றில் குரலே?

Natrinai 218, Kidangil Kāvithi Keerankannanār, Neythal Thinai – What the heroine said to her friend
The sun’s rays are feeble, and daylight
has faded, losing its luster like a vine
that has dropped its flowers.

Bats fly from one place to another, and
a male owl screeches responding to the
screeches of his big female with a curved
beak.

The one with unfading love consoled me
well, before he left.  The season he agreed
to be back has ended.

A tawny owl sits on a big branch of a
thick-trunked neem tree and hoots all
night.

Will I be distressed when alone and
whenever I hear an ibis cry from a
palmyra tree with a trunk with rough
scales?  How will I bear this pain?

Notes:  களவினின்று மணம் செய்துக் கொள்ள வேண்டிய தலைவன் நீட்டித்ததால் வருந்திய தலைவியைப் பொறுத்திருக்கும்படி வற்புறுத்திய தோழியிடம் மனம் தளர்ந்து உரைத்தது.  கூகை குழறினால் மகளிர் அஞ்சுதல் – அகநானூறு 158 – வெருவர மன்ற மராஅத்த கூகை குழறினும் நெஞ்சு அழிந்து அரணம் சேரும், நற்றிணை 218 – பராரை வேம்பின் படுசினை இருந்த குராஅல் கூகையும் இராஅ இசைக்கும் ஆனா நோய் அட வருந்தி, குறுந்தொகை 153 – குன்றக் கூகை குழறினும் முன்றில் பலவின் இருஞ்சினைக் கலை பாய்ந்து உகளினும் அஞ்சுமன் அளித்து என் நெஞ்சம்.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  ஞாயிறு – sun, ஞான்று – descended, கதிர் மழுங்கின்றே – the rays got feeble (ஏ – அசைநிலை, an expletive), எல்லியும் – at night, பூ வீ கொடியின் – like a vine which had dropped its flowers (கொடியின் – இன் உருபு ஒப்புப் பொருளது), புலம்பு அடைந்தன்றே – has lost its luster in loneliness without the sun (ஏ – அசைநிலை, an expletive), வாவலும் – and bats, வயின்தொறும் பறக்கும் – they fly from place to place, சேவலும் – a male bird, an owl, வளைவாய்க் இரும் பெடை நகுதொறும் விளிக்கும் – hoots in response whenever its big/dark female with a curved beak screeches, மாயாக் காதலொடு – with unfading love, அதர் பட – in a proper manner, தெளித்தோர் – the one who consoled, கூறிய பருவம் கழிந்தன்று – the season that he promised has passed by, பாரிய – spread, பராரை வேம்பின் – on a thick-trunked neem tree, Azadirachta indica (பராரை – பரு அரை பராரை எனப் புணர்ந்தது), படுசினை இருந்த – on a big branch, குராஅல் கூகையும் – a tawny owl (குராஅல் – அளபெடை), இராஅ இசைக்கும் – screeches all night, hoots all night (இராஅ – அளபெடை), ஆனா நோய் அட வருந்தி – but my love affliction has made me feel sad, இன்னும் – and still, and yet, தமியேன் – I am sad, I am alone, கேட்குவென் கொல்லோ – do I not listen (கொல் – ஐயப்பொருட்டு, ஓ – அசைநிலை, an expletive), பரியரைப் பெண்ணை – palmyra palm with rough trunk, Borassus flabellifer, அன்றில் குரலே – the cries of the ibis, red-naped – Pseudibis papillosa or glossy ibis – Plegadis falcinellus (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 219, தாயங்கண்ணனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கண்ணும், தோளும், தண் நறுங்கதுப்பும்,
பழ நலம் இழந்து பசலை பாய,
இன் உயிர் பெரும்பிறிது ஆயினும், என்னதூஉம்
புலவேன், வாழி தோழி, சிறு கால்
அலவனொடு பெயரும் புலவுத் திரை நளி கடல்  5
பெருமீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர்
கங்குல் மாட்டிய கனை கதிர் ஒண் சுடர்
முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும்,
கானல் அம் பெருந்துறைச் சேர்ப்பன்
தானே யானே புணர்ந்தமாறே.  10

Natrinai 219, Thāyankannanār, Neythal Thinai – What the heroine said to her friend
My eyes, shoulders and cool, fragrant
hair have lost their prior beauty.
Pallor has spread on my body.
Let my sweet life die if it has to!

I will not sulk with the lord of the  
ocean with vast shores with groves,
where night lamps with bright lights,
lit in boats by fishermen from a village
who catch large fish, in the vast ocean,
on whose stinking waves crabs with
small legs move, appear like the early
morning’s sun, since I united with him.  

May you live long, my friend!

Notes:  பொருள் ஈட்டுவதற்காகத் தலைவன் பிரிந்ததால் ஆற்றாளாய தலைவி உரைத்தது.

Meanings:  கண்ணும் தோளும் – eyes and shoulders, தண் நறுங்கதுப்பும் – and cool fragrant hair, பழ நலம் இழந்து – lost their original beauty, பசலை பாய – pallor has spread, இன் உயிர் – sweet life, பெரும்பிறிது ஆயினும் – even if I were to die, என்னதூஉம் புலவேன் – I will not quarrel even a little (என்னதூஉம் – அளபெடை), வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – oh friend, சிறு கால் அலவனொடு – with crabs with small legs, பெயரும் புலவுத் திரை – moving stinking waves, நளி கடல் – vast ocean, பெரு மீன் கொள்ளும் – catch huge fish, சிறுகுடிப் பரதவர் – fishermen in the small village, கங்குல் மாட்டிய – lit at night, கனை கதிர் ஒண் சுடர் – lamps with thick bright rays, முதிரா – early (morning), ஞாயிற்று – of the sun’s, எதிர் ஒளி – reflecting light, கடுக்கும் – like, கானல் அம் பெருந்துறைச் சேர்ப்பன் – the lord of the beautiful huge shores with groves, தானே – alone, யானே புணர்ந்தமாறே – since I united with him (மாறு – ஏதுப்பொருளில் (காரணப் பொருள்) வரும் இடைச்சொல், a particle suggesting reason, ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 220, குண்டுகட் பாலியாதனார், குறிஞ்சித் திணை – தலைவன் தோழியிடம் சொன்னது, அல்லது தோழி தலைவியிடம் கூறியது, அல்லது தலைவன் தனக்குள் சொன்னது
சிறு மணி தொடர்ந்து பெருங்கச்சு நிறீஇக்,
குறு முகிழ் எருக்கங்கண்ணி சூடி,
உண்ணா நல்மாப் பண்ணி, எம்முடன்
மறுகுடன் திரிதரும் சிறு குறுமாக்கள்
பெரிதும் சான்றோர் மன்ற, விசி பிணி  5
முழவுக் கண் புலரா விழவுடை ஆங்கண்,
ஊரேம் என்னும் இப் பேர் ஏமுறுநர்
தாமே ஒப்புரவு அறியின், தேமொழிக்
கயல் ஏர் உண்கண் குறுமகட்கு
அயலோர் ஆகல் என்று எம்மொடு படலே.  10

Natrinai 220, Kundukat Pāliyāthanār, Kurinji Thinai – What the hero said to the heroine’s friend, or what the heroine’s friend said to the heroine, or what the hero said to himself
If I wear a garland with tiny erukkam flowers
and ride a fine madal horse that does not eat,
one adorned with strung, small bells and covered
with fabric, young children will follow me on the
streets.  They are certainly very wise!

They are very happy that this is their town,
where festivities go on forever with tightly tied drums
with clay eyes that never dry.  If they know the ways
of the world, they would agree with me, and say that
her friend has become a stranger to the young woman
of sweet words and carp-like, kohl-rimmed eyes.

Notes:  இது பின்னின்ற தலைவன் ஆற்றானாய்க் கூறியது.   குறை நேர்ந்த தோழி தலைவியிடம் கூறியதுமாம்.  I have transated this poem as the hero stating this.  ஒளவை துரைசாமி உரை – தலைமகனுடைய இக்கூற்றின்கண், தான் மடலேறக்கருதுவதையும், தோழியைத் தனக்கு உயிர்த்துணையாகத் தலைமகள் குறித்ததற்கு மாறாக அயலார் போன்று ஒழுகுதல் அவட்கு அறமன்று எனத் தலைவிக்கும் தனக்குமுள்ள முன்னுறவை உய்த்துணர வைத்து உடம்படுவிக்கும் திறத்தையும் கண்ட புலவர் பாலியாதனார் இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார்.  ஒளவை துரைசாமி உரை – முற்றியலுகரமும் மொழி சிதைத்துக் கொளாஅ நிற்றல் இன்றே ஈற்று அடி மருங்கினும் (தொல்காப்பியம், செய்யுளியல் 8) என்பதன் உரையில் ‘முழவு முகம் புலரா’ என்று பாடங்கொண்டு அமைதி கூறுவார் பேராசிரியர்.  எருக்கங்கண்ணி சூடி (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைமகன் சூடுவது.  ஊரேம் என்னும் இப் பேர் ஏமுறுநர் (6) – ஒளவை துரைசாமி உரை – யாவிரென வினவுவோர்க்கு இவ்வூரினேம் என்று சொல்லிப் பெருமகிழ்ச்சிக் கொள்ளும் சிறுவர்கள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இவ்வூரினேம் என்று கூறும் பெரிய மயக்கமுடையவர்கள் தாம்.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ்செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  உண்ணா நல்மா – வெளிப்படை, பனை மடலினால் செய்த உணவு உண்ணாத நல்ல குதிரை.   மடல் ஏறுதல் –  சங்க இலக்கியத்தில் மொத்தம் 16 பாடல்களில் மடல் ஏறுதல் பற்றிய குறிப்புகள் உள்ளன – குறுந்தொகை 14, 17, 32, 173, 182, நற்றிணை 146, 152, 220, 342, 377, கலித்தொகை 58, 61, 138, 139, 140, 141.  கலித்தொகை 138, 139, 140, 141 பாடல்களில் மட்டுமே தலைவன் மடல் குதிரையின் மீது செல்கின்றான்.  கலித்தொகை 138, 141 ஆகிய பாடல்களில் மடல் ஏறியதால் தலைவியை அடைகின்றான்.

Meanings:  சிறு மணி – small bells, தொடர்ந்து – stringing, tying, பெருங்கச்சு நிறீஇ – placing a long piece of cloth around its body (நிறீஇ – அளபெடை), குறு முகிழ் – small buds, எருக்கங்கண்ணி – erukkam garland, erukkam strand, சூடி – wearing (me wearing, him wearing), உண்ணா நல் மா – a good horse that does not eat, a palmyra stem horse, பண்ணி – creating, making, எம்முடன் – with me (எம் – தன்மைப் பன்மை, first person plural), மறுகு உடன் – on the streets, திரிதரும் சிறு குறுமாக்கள் – roaming little children, பெரிதும் சான்றோர் – they are greatly wise, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty, விசி பிணி – tightly tied, முழவுக் கண் புலரா – the clay eyes on drums do not dry, drums do not stop beating, விழவுடை ஆங்கண் – where there are festivities, ஊரேம் என்னும் – that they belong to this town,  இப் பேர் ஏமுறுநர் – those who are greatly confused here, தாமே – தாம், ஏ – அசைநிலைகள், expletives, ஒப்புரவு அறியின் – if they understand the situation, if they understand the ways of the world, தேமொழி –  sweet words, sweet tongue,  கயல் ஏர் – carp-like, Cyprinus fimbriatus, கெண்டை (ஏர் – உவம உருபு, a comparison word), உண்கண் – eyes with collyrium, eyes with kohl, குறுமகட்கு – to the young woman, அயலோர் ஆகல் – her friend becoming a stranger, என்று – thus, எம்மொடு படலே –  within my hearing, agreeing with me (எம் – தன்மைப் பன்மை, first person plural, படலே – ஏ அசைநிலை, an expletive)

நற்றிணை 221, இடைக்காடனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
மணி கண்டன்ன மா நிறக் கருவிளை
ஒண் பூந்தோன்றியொடு தண் புதல் அணியப்,
பொன் தொடர்ந்தன்ன தகைய நன் மலர்க்
கொன்றை ஒள் இணர் கோடுதொறும் தூங்க,
வம்பு விரித்தன்ன செம் புலப் புறவில்,  5
நீர் அணிப் பெருவழி நீள் இடைப் போழச்,
செல்க பாக நின் செய் வினை நெடுந்தேர்,
விருந்து விருப்புறூஉம் பெருந்தோள் குறுமகள்
மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்க,
நடை நாட் செய்த நவிலாச் சீறடிப்  10
பூங்கண் புதல்வன் உறங்குவயின் ஒல்கி,
‘வந்தீக எந்தை’ என்னும்
அம் தீம் கிளவி கேட்கம் நாமே.

Natrinai 221, Idaikkādanār, Mullai Thinai – What the hero said to his charioteer
Ride on charioteer!  Ride your tall
chariot through the forest, cutting
into the red earth, through the wide
path decorated with rainwater,
like spreading fragrance, passing dark
blue karuvilai flowers that look like
like sapphire gems, bright kānthal
flowers on cool bushes, and beautiful,
bright golden kondrai flower clusters
that hang on every tree branch like
strands of gold coins.

Let us go to our fine house and listen
to the sweet words of my wife,
who loves being hospitable to guests,
the wide-shouldered woman wearing
lightning-bright jewels, as she goes to
our sleeping son with small feet, who
just started to walk with unsteady
steps, his eyes as beautiful as flowers,
to greet him as he wakes up.

Notes:  வினை முடித்து மீளும் தலைவன் தேர்ப்பாகனிடம் கூறியது.  வந்தீக (12) – ஒளவை துரைசாமி உரை – வருக என்னும் பொருட்டாய முற்றுவினை திரிசொல்.  கேட்கம் (13) – ஒளவை துரைசாமி உரை – அம் ஈறு பெற்ற தன்மைப் பன்மை வினைமுற்று.  ககரம் எதிர்காலம் பற்றி வந்தது என்பர் நச்சினார்க்கினியர்.

Meanings:  மணி கண்டன்ன மா நிறக் கருவிளை – dark colored karuvilai flowers that look like sapphire, Mussel shell creeper, Clitoria ternatea, ஒண் பூந்தோன்றியொடு தண் புதல் அணிய – along with bright thōndri flowers make the cool bushes beautiful, Malabar glory lily, Gloriosa superba, தொடர்ந்து அன்ன – like gold coins that are strung, தகைய – with beauty, நன் மலர்க் கொன்றை – beautiful kondrai flowers, கொன்றை (சரக்கொன்றை), கடுக்கை – Laburnum, Golden Shower tree, Cassia sophera, ஒள் இணர் – bright clusters, கோடுதொறும் தூங்க – hanging on every branch, வம்பு விரித்தன்ன – like spreading fragrance, செம் புலப் புறவில் – in the forest with red land, நீர் அணிப் பெருவழி – wide path decorated with water, நீள் இடைப் போழ – splitting the ground, செல்க பாக – ride oh charioteer, நின் செய் வினை நெடுந்தேர் – ride your tall chariot that rides, விருந்து விருப்புறூஉம் – desires to be hospitable to visitors (விருப்புறூஉம் – அளபெடை), பெருந்தோள் குறுமகள் – the young lady with wide arms, young lady with wide shoulders, மின் ஒளிர் அவிர் இழை – wearing young jewels which gleam like lightning, நல் நகர் விளங்க – making the fine house to flourish, நடை நாட் செய்த – who just began to walk, நவிலா – not learned, unsteady, சீறடி – small feet, பூங்கண் புதல்வன் – son with flower-like eyes, son with pretty eyes, உறங்குவயின் ஒல்கி – going to where he sleeps, வந்தீக எந்தை என்னும் – says ‘you are welcome my appa’, அம் தீம் கிளவி – lovely sweet words, கேட்கம் நாமே – for me to listen (கேட்கம் – தன்மைப் பன்மை, first person plural, நாம் – தன்மைப் பன்மை, first person plural, ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 222, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
கருங்கால் வேங்கைச் செவ்வீ வாங்கு சினை
வடுக் கொளப் பிணித்த விடுமுரி முரற்சிக்
கை புனை சிறு நெறி வாங்கி பையென,
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப யான் இன்று
பசுங்காழ் அல்குல் பற்றுவன் ஊக்கிச்  5
செலவுடன் விடுகோ தோழி, பலவுடன்
வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில்
துஞ்சு பிடி மருங்கின் மஞ்சுபட காணாது
பெருங்களிறு பிளிறும் சோலை அவர்
சேண் நெடுங்குன்றம், காணிய நீயே.  10

Natrinai 222, Kapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
Oh friend!  The curved branch of the
vēngai tree with a dark colored trunk
and red flowers has scars caused by
well-made ropes of swings.

If you sit on the small, hand-made swing,
can I pull, lift and push the swing high,
for you with loins covered with gem
strands, to appear like a peacock flying in
the sky? 

You’ll be able to see the distant, lovely
mountain peaks of your lover,
where tall banana trees and valai trees
grow, where a huge bull elephant trumpets,
unable to find his sleeping mate hidden
behind the nearby low clouds.

Notes:  தலைவன் வரைவு அறிந்து உரைத்தது.  வரைவு கடாயது.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – சிலம்பின்கண் துஞ்சுகின்ற பிடியை மஞ்சு பரந்து மறைத்தமையின், களிறு அறியாது பிளிறி வருந்தும் என்றது, மனையின் கண் நின்னை நினைத்திருக்கும் தலைமகள் இற்செறிப்புண்டாளாகலின் அதனை அறியாது நீ கொன்னே இவண் போந்து நின்று வறிதே வருந்துகின்றனை என உள்ளுறுத்தவாறு.

Meanings:  கருங்கால் – big/sturdy/dark-colored trunk, வேங்கை – vēngai tree, Kino Tree, Pterocarpus marsupium, செவ்வீ – red flowers, வாங்கு சினை – curved branch, வடுக் கொள – caused scars பிணித்த – tied, விடுமுரி முரற்சி – with curved rope, கை புனை – hand-made, சிறு நெறி – small swing, வாங்கி – pulling, பையென – slowly, விசும்பு – sky, ஆடு – flying, ஆய் – beautiful, மயில் கடுப்ப – like a peacock (கடுப்ப – உவம உருபு, a comparison word), யான் – I, இன்று – today, பசுங்காழ் – new gold strands, new pearl strands, gem strands, அல்குல் – loins, waist, பற்றுவன் ஊக்கி – I will hold and lift, செலவுடன் – with speed, விடுகோ – can I let go (விடுகு + ஓ, விடுகு – தன்மை ஒருமை வினைமுற்று, first person singular verb ending, ஓ – அசைநிலை, an expletive), தோழி – my friend, பலவுடன் – with many, வாழை – bananas, ஓங்கிய வழை – tall surapunnai trees, சுரபுன்னை அமை சிலம்பில் – on the mountain with the Long-leaved two-sepalled gamboge, Ochrocarpus Longiflius,  துஞ்சு – sleeping, பிடி – female, மருங்கின் – nearby , மஞ்சு பட காணாது – unable to see because of the low clouds that hid her, பெருங்களிறு பிளிறும் – a huge male elephant trumpets, சோலை – groves, அவர் – his, சேண் – distant, நெடுங்குன்றம் – tall mountain, காணிய நீயே – for you to see (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 223, உலோச்சனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
இவள் தன் காமம் பெருமையின், காலை என்னாள்; நின்
அன்பு பெரிது உடைமையின், அளித்தல் வேண்டிப்,
பகலும் வருதி, பல் பூங்கானல்;
இன்னீர் ஆகலோ இனிதால் எனின், இவள்
அலரின் அருங்கடிப் படுகுவள்; அதனால்  5
எல்லி வம்மோ, மெல்லம்புலம்ப!
சுறவினம் கலித்த நிறை இரும் பரப்பின்
துறையினும் துஞ்சாக் கண்ணர்
பெண்டிரும் உடைத்து இவ் அம்பல் ஊரே.

Natrinai 223, Ulōchanār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
Oh lord of the delicate shores!
She, with great love for you, does not
even consider that it is morning time.
Desiring to be gracious to her,
you come to the seashore grove during
the day bearing flowers.  Even though it
is sweet, because of gossip, she will be
put under strict guard.  So, come at night.

There are sharks near the shores of our
huge, dark ocean, and there are women
who don’t sleep in our town that gossips.

Notes:  பகற்குறி வந்து மீள்வானைத் தோழி இரவுக்குறி நேர்வாள் போன்று அதுவும் மறுத்து வரைவு கடாயது.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – சுறா மீன் இருக்கும் கடல் துறையில் துஞ்சாத இயல்புடைய பெண்டிர் கொண்டது ஊர் என்றது, தலைவியிருக்கும் மனையில் துஞ்சாத இயல்புடைய அன்னையும் உளள் என்பதைக் குறித்தது.  காமம் பெருமையின் (வரி 1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – காம மிகுதியாலே, ஒளவை துரைசாமி உரை – காதற் காமம் மிக்கிருத்தலை.  அகநானூறு 239-9 – காமம் பெருமை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காமத்தையும் சிறப்பையும்.  சுறா சுறவு என வந்தது. ‘குறியதன் இறுதிச் சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே’ (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 32)

Meanings:  இவள் – she, தன் காமம் பெருமையின் – in her great love, in her love and pride, காலை என்னாள் – she does not consider that this is morning, நின் அன்பு பெரிது உடைமையின் – since she loves you greatly, அளித்தல் வேண்டி பகலும் வருதி – to be gracious to her you come during the day, பல் பூங்கானல் – seashore grove with many flowers, இன்னீர் ஆகலோ  – having this trait (ஓ – அசைநிலை, an expletive), இனிது ஆல் எனின் – even if it is sweet (ஆல் – அசைச் சொல், an expletive), இவள் – she, அலரின் – because of the gossip, அருங்கடிப் படுகுவள் – she will be subject to strict guard (by her mother), அதனால் – so, எல்லி வம்மோ – you come at night (மோ – முன்னிலை அசை, an expletive used with the second person), மெல்லம்புலம்ப – oh lord of the delicate shores (அம் – சாரியை, புலம்பு = கடற்கரை), சுறவு இனம் கலித்த – filled with sharks (சுறவு – சுறா சுற என்றாகி உகரம் ஏற்றது), நிறை இரும் பரப்பின் துறையினும் – even on the shores of the full dark ocean, துஞ்சாக் கண்ணர் பெண்டிரும் உடைத்து – there are women who do not sleep, இவ் அம்பல் ஊரே – in this town that gossips (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 224, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அன்பினர், மன்னும் பெரியர்; அதன்தலை
பின்பனி அமையம் வரும் என முன்பனிக்
கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே;
‘புணர்ந்தீர் புணர்மினோ’ என இணர் மிசைச்
செங்கண் இருங்குயில் எதிர் குரல் பயிற்றும்  5
இன்ப வேனிலும் வந்தன்று; நம் வயின்
பிரியலம் என்று தெளித்தோர் தேஎத்து
இனி எவன் மொழிகோ யானே, கயன் அறக்
கண் அழிந்து உலறிய பல் மா நெடு நெறி
வில் மூசு கவலை விலங்கிய  10
வெம்முனை அருஞ்சுரம் முன்னியோர்க்கே?

Natrinai 224, Chēramān Pālai Pādiya Perunkadunkō, Pālai Thinai – What the heroine said to her friend
Kuravam trees have put out young
leaves and new buds during early dew
season since late dew season will arrive
after that.

In this pleasurable summer season,
red-eyed, black cuckoos sitting high on
the trees sing again and again, “Those
who united!  Unite without separating”.

He stated firmly that he would not leave,
but went on the hot, harsh, forked path
with dry ponds, and many long, huge paths
where arrows of wayside bandits attack
those who travel.

He is a kind and a very wise man.
What can I say now?

Notes:  தலைவன் பொருள்வயின் பிரிந்ததைத் தோழி மூலம் அறிந்த தலைவி வருந்தி உரைத்தது.

Meanings:  அன்பினர் – he is a kind person, மன்னும் – exceedingly, greatly, பெரியர் – a wise man, அதன்தலை – also, more than that, பின்பனி அமையம் வரும் என – that late dew season time will come, முன்பனி – early dew season, கொழுந்து – new leaves, முந்துறீஇ – came first (அளபெடை), குரவு அரும்பினவே – kuravam trees have buds, Bottle Flower Tree, Webera Corymbosa (ஏ – அசைநிலை, an expletive), புணர்ந்தீர் – oh those of you who united, புணர்மினோ என – may you unite without separating (புணர்மின் + ஓ, மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), இணர் – close, மிசை – above, செங்கண் – red-eyed, இருங்குயில் – black kuyil birds, Indian koel, Cuckoo, எதிர் குரல் பயிற்றும் – they call each other back and forth, இன்ப வேனிலும் – also the pleasurable summer season, வந்தன்று – it has arrived, நம் வயின் – to me (நம் – தன்மைப் பன்மை, first person plural), பிரியலம் தெளித்தோர் – he uttered firmly ‘I will not leave’ (பிரியலம் – தன்மைப் பன்மை, first person plural), தேஎத்து – in the land, in the place (தேஎத்து – அளபெடை), இனி எவன் மொழிகோ யானே – what can I say now (மொழிகு – தன்மை ஒருமை வினைமுற்று, first person singular verb ending, + ஓ – அசைநிலை, an expletive), கயன் அற – ponds are dry (கயன் – கயம் என்பதன் போலி), கண் அழிந்து உலறிய – very dry, பல் மா நெடு நெறி – many long wide paths, வில் – arrows (belonging to robbers), மூசு – together, swarming, கவலை – forked paths, விலங்கிய – blocking, வெம்முனை – harsh place, hot place, அருஞ்சுரம் – difficult wasteland, முன்னியோர்க்கே – for the man who went (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 225, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, அல்லது பரத்தை தலைவியின் தோழியர் கேட்குமாறு சொன்னது
முருகு உறழ் முன்பொடு கடுஞ்சினம் செருக்கிப்
பொருத யானை வெண்கோடு கடுப்ப
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை,
மெல்லியல் மகளிர் ஓதி அன்ன
பூவொடு துயல்வரும் மால் வரை நாடனை  5
இரந்தோர் உளர் கொல் தோழி, திருந்திழைத்
தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பப்
பயந்து எழு பருவரல் தீர,
நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே?

Natrinai 225, Kapilar, Kurinji Thinai – What the heroine said to her friend or what the concubine said as the heroine’s friends listened
In the sky-high mountain of the lord,
thick buds of banana trees,
……….that are lifted, and pointed like
……….the white tusks of an angry, arrogant
……….battle elephant as strong as Murukan,
sway along with flowers, like the hair of
delicate women.

My fine breasts with thoyyil designs and perfect
jewels have lost their beauty.  For my sorrow with
pallor to end, is there anyone who has pleaded,
my friend, to the man with a chest with no kindness,
the man who does not help those who love?

Notes:  தலைவனின் பிரிவால் வருந்திய தலைவியை வற்புறுத்திய தோழியிடம் தலைவி கூறியது.  பரத்தை தலைவியின் பாங்காயினர் கேட்கும்படி கூறியதுமாம். சிறுபாணாற்றுப்படை 21-22 – மால் வரை ஒழுகிய வாழை வாழைப் பூ எனப் பொலிந்த ஓதி.  தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்ப (7) – ஒளவை துரைசாமி உரை – தொய்யில் எழுதுவதால் பிறக்கும் அழகை வனமுலைகள் இழக்குமாறு, தொய்யில் எழுதுவதை வரித்தல் என்பவாகலின் தொய்யில் எழுதப் பிறக்கும் வனப்பைத் தொய்யில் வரி வனப்பு என்றார், H.வேங்கடராமன் உரை – தொய்யிற் குழம்பால் எழுதப்பட்ட வன முலையின்கண் உள்ள இரேகையின் அழகு கெடும்படி.  வை– வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).

Meanings:  முருகு உறழ் முன்பொடு – with strength like that of of Murukan (உவம உருபு, a comparison word), கடுஞ்சினம் – great rage, செருக்கி – with arrogance, with pride, பொருத யானை வெண்கோடு கடுப்ப – like the white tusk of a battle elephant (கடுப்ப – உவம உருபு, a comparison word), வாழை ஈன்ற – banana tree yielded, வை – sharp, ஏந்து – lifted, கொழு முகை – thick buds, மெல்லியல் மகளிர் ஓதி அன்ன – like the hair of delicate natured women, பூவொடு துயல்வரும் – sways with flowers, மால் வரை நாடனை – the man from the sky-high mountain country இரந்தோர் உளர் கொல் தோழி – is there anyone who pleaded my friend, திருந்திழைத் தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்ப – fine breasts with thoyyil patterns and perfect jewels lost their beauty, பயந்து – becoming pale, எழு – rising, பருவரல் தீர – for sorrow to end, நயந்தோர்க்கு உதவா – not helping those who love, நார் இல் மார்பே – a chest without kindness (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 226, கணியன் பூங்குன்றனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தர்;
உரம் சாச் செய்யார் உயர்தவம்; வளம் கெடப்
பொன்னும் கொள்ளார் மன்னர் நன்னுதல்!
நாம் தம் உண்மையின் உளமே; அதனால்
தாம் செய் பொருள் அளவு அறியார், தாம் கசிந்து  5
என்றூழ் நிறுப்ப நீள் இடை ஒழிய
சென்றோர் மன்ற நம் காதலர்; என்றும்
இன்ன நிலைமைத்து என்ப;
என்னோரும் அறிப இவ் உலகத்தானே.

Natrinai 226, Kaniyan Punkūndranār, Pālai Thinai – What the heroine said to her friend
Oh friend with a fine forehead!
People don’t extract too much
medicine that could kill trees;
they don’t do penances that
ruin the strength of their bodies;
and kings don’t take away all the
wealth of people as taxes.

Even though he knew about all
this he went on the long path
where the sun is hot, my lover,
who does not know the limits of
the wealth he is set to earn, and
I am still alive.

They say that this is the situation,
and that everybody in the world
know about it.

Notes:  பொருள் ஈட்டுவதற்காகத் தலைவன் பிரிந்தபோது, தலைவனின் பிரிவால் வருந்திய தலைவியை வற்புறுத்திய தோழியிடம் தலைவி கூறியது.  புலவரின் பெயர்:  பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் உரையில் நற்றிணை 226ம் பாடலை எழுதியவர் கணி புன்குன்றனார் என உள்ளது.  ஒளவை துரைசாமி உரையில் கணியன் பூங்குன்றனார் என உள்ளது.  ஒளவை துரைசாமி உரை – சாவக் கொள்ளார், சாவச் செய்யார் என்பன சாக் கொள்ளார், சாச் செய்யார் என வந்தன.  ‘சாவ என்னும் செயவென் எச்சத்து இறுதி வகரம் கெடுதலும் உரித்தே’ (தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 209).  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ்செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

Meanings:  மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தர் – people do not take medicines too much from it that it would kill the tree, உரம் சாச் செய்யார் உயர் தவம் வளம் கெட – they do not do penances that will ruin the body’s strength, பொன்னும் கொள்ளார் மன்னர் – kings do not take people’s gold/wealth as taxes, நன்னுதல் – oh woman with a fine forehead (அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), நாம் தம் உண்மையின் – even though he knew the truth, உளமே – I am still alive (தன்மைப் பன்மை, first person plural, ஏ – அசைநிலை, an expletive), அதனால் – so , தாம் செய் பொருள் அளவு அறியார் – he does not know the limits of the wealth that he makes, தாம் – him, கசிந்து – feeling sad, என்றூழ் நிறுப்ப நீள் இடை ஒழிய சென்றோர் – yet he went to the long path where the sun is hot, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty, நம் காதலர் – my lover, என்றும் இன்ன நிலைமைத்து என்ப – they say that this is how it is always, என்னோரும் அறிப இவ் உலகத்தானே – everyone in this world knows (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 227, தேவனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
அறிந்தோர் அறன் இலர் என்றலின், சிறந்த
இன் உயிர் கழியினும் நனி இன்னாதே;
புன்னையம் கானல் புணர் குறி வாய்த்த
பின் ஈர் ஓதி என் தோழிக்கு, அன்னோ!
படுமணி யானைப் பசும்பூண் சோழர்  5
கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்,
கள்ளுடைத் தடவில் புள் ஒலித்து ஓவாத்
தேர் வழங்கு தெருவின் அன்ன,
கௌவை ஆகின்றது ஐய, நின் அருளே.

Natrinai 227, Thēvanār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
In the lovely seashore grove
with punnai trees,
my friend with braided,
oiled hair united with you.

Lord!  The affair has become a
scandal, thanks to your graces.

Gossip has risen,
like the uproars from the
flag-swaying streets of Ārkadu
town belonging to the Chōzhas
wearing new gold ornaments,
a town with its endless chariots,
elephants decorated with
bells, and liquor pots swarmed
by humming bees.

They say, “He is a man without
kindness.”  It is very painful
when sweet life is wasted away!

Notes:   வரையாது களவுப் புணர்ச்சியையே கருதி வந்து ஒழுகும் தலைவனிடம் தோழி கூறியது.  வரைவு கடாயது.  ஒளவை துரைசாமி உரை – புன்னையங்கானல் கூறினமையின் இது பகற்குறி என்க.  வரலாறு:  சோழர், ஆர்க்காடு.  தேர் வழங்கு தெரு: – அகநானூறு 16 – தேர் வழங்கு தெருவில், நற்றிணை 227 – தேர் வழங்கு தெருவின், மதுரைக்காஞ்சி 648 – தேர் வழங்கு தெருவில்.  Natrinai 190 describes Ārkadu town as belonging to Azhisi, the father of Sēnthan.  According to K.N. Sivaraja Pillai, Veerai Veliyan Thithan seized the kingdom of Azhisi, and laid the foundation of the first Chōzha dynasty (The Chronology of the Early Tamils).  அறிந்தோர் (1) – ஒளவை துரைசாமி உரை – களவும் கற்புமாகிய கைகோளின் அறப்பண்பை அறிந்தவர்.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  அறிந்தோர் – the man who knows, அறன் இலர் என்றலின் – since they say that he is a man without kindness (அறன் – அறம் என்பதன் போலி), சிறந்த இன் உயிர் கழியினும் – even if splendid sweet life is wasted, நனி இன்னாதே – it is very painful (ஏ – அசைநிலை, an expletive), புன்னை அம் கானல் – lovely seashore grove with punnai trees, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum (அம் – சாரியை), புணர் குறி வாய்த்த பின் ஈர் ஓதி என் தோழிக்கு – to my friend with braided oiled hair who has united with you, அன்னோ – aiyo, alas, படுமணி யானைப் பசும்பூண் சோழர் – Chōzhas with elephants with ringing bells and fresh gold ornaments, கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு – in Ārkadu town with flag-swaying streets, ஆங்கண் – there, கள்ளுடைத் தடவில் – in pots with alcohol (தடவு – குடம்), புள் ஒலித்து – bees hum/swarm, ஓவாத் தேர் வழங்கு தெருவின் அன்ன – like the streets with endless chariots (தெருவின் – இன் சாரியை), கௌவை ஆகின்றது – it has become scandal, it is being slandered, ஐய – sir, நின் அருளே – your graces (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 228, முடத்திருமாறனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
என் எனப்படுமோ தோழி, மின்னு வசிபு
அதிர் குரல் எழிலி முதிர் கடன் தீர,
கண் தூர்பு விரிந்த கனை இருள் நடுநாள்,
பண்பு இல் ஆர் இடை வரூஉம் நம் திறத்து
அருளான் கொல்லோ தானே, கானவன்  5
சிறுபுறம் கடுக்கும் பெருங்கை வேழம்
வெறி கொள் சாபத்து எறி கணை வெரீஇ,
அழுந்துபட விடரகத்து இயம்பும்,
எழுந்து வீழ் அருவிய மலை கிழவோனே?

Natrinai 228, Mudathirumāranār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
What will it be considered, oh friend?
Will the lord of the mountains
……….where waterfalls cascade down,
……….and an elephant with a trunk
……….like the small backs of forest
……….dwellers, trumpets in fear when
……….he is attacked by arrows
……….from fierce bows, and the sound
……….echoes in the mountain caves,
favor us and come in the middle of
the night when clouds rumble and fall
as rain to end their duty, lightning
flashes strike, and eye-blinding pitch
darkness surrounds the harsh forest path?

Notes:  வரைவு கடாயது.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை –  முதிர் கடன் தீரக்கண் தூர்பு விரிந்த என்பது, மேகம் தான் உண்ட நீரை மழையாகப் பொழிந்து தன் கடமையைச் செய்வது போலத் தலைவனும் தலைவியின் நலன் உண்டு பெற்ற இன்பத்தைக் கருதியவனாய் விரைவில் மணம் முடிக்கும் கடமையை மேற்கொள்ள வேண்டும் எனக் குறித்தது.  மின்னல் பிளத்தல்:  மின்னு வசிபு – அகநானூறு 162, 212, 322, நற்றிணை 228, 261, மலைபடுகடாம் 97, மின்னு வசி – நற்றிணை 334.

Meanings:  என் எனப்படுமோ தோழி – how will it be talked about oh friend, how will it be considered oh friend, மின்னு வசிபு – split by lightning, அதிர் குரல் – loud rumbles, எழிலி – clouds, முதிர் கடன் தீர – old obligation to end, கண் தூர்பு – covering the eyes, losing eye sight, விரிந்த – spread, கனை இருள் – pitch darkness, thick darkness, நடுநாள் – middle of the night, பண்பு இல் ஆர் இடை வரூஉம் – come through the harsh path (வரூஉம் – அளபெடை), நம் திறத்து அருளான் கொல்லோ – will he favor us and be kind (கொல் – ஐயப்பொருட்டு, ஓ – அசைநிலை, an expletive), தானே – தான், ஏ – அசைநிலைகள், expletives, கானவன் சிறுபுறம் கடுக்கும் – like the backs of mountain dwellers, பெருங்கை வேழம் – an elephant with a big trunk, வெறி கொள் சாபத்து – from the fear-causing bow, எறி கணை – shot arrows, வெரீஇ – feared (வெரீஇ – அளபெடை), அழுந்துபட – going deep, விடர் அகத்து இயம்பும் – echoes in the mountain cracks, எழுந்து – raised, வீழ் அருவிய – of the falling waterfalls (அருவிய – பெயரெச்சக் குறிப்பு), மலை கிழவோனே – lord of the mountains (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 229, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
‘சேறும், சேறும்’ என்றலின், பல புலந்து
‘சென்மின்’ என்றல் யான் அஞ்சுவலே;
‘செல்லாதீம்’ எனச் செப்பின் பல்லோர்
நிறத்து எறி புன்சொலின் திறத்து அஞ்சுவலே;
அதனால் சென்மின்; சென்று வினை முடிமின்; சென்றாங்கு  5
அவண் நீடாதல் ஓம்புமின்; யாமத்து
இழை அணி ஆகம் வடுக் கொள முயங்கி,
உழையீராகவும் பனிப்போள் தமியே
குழைவான், கண்ணிடத்து ஈண்டித் தண்ணென,
ஆடிய இள மழைப் பின்றை,  10
வாடையும் கண்டிரோ வந்து நின்றதுவே.

Natrinai 229, Unknown Poet, Pālai Thinai – What the heroine’s friend said to the hero
“I’m leaving, I’m leaving,” you said
during quarrels, many times,
and I was afraid to tell you to go.
If I told you not to go, I was afraid
that I would be attacked by many
with mean words that would hurt me,
like arrows thrust upon my chest.

Go and finish your work.
When you go, avoid staying there
for a long time.
She trembles, even when you are
with her in the middle of the night
embracing her tightly, causing scars
on her chest with fine jewels.

Young clouds move in the vast sky,
followed by the chill north winds that
cause her distress.  Have you seen it?

Notes:  குறுந்தொகை 325 – சேறும் சேறும் என்றலின் பண்டைத்தன் மாயச் செலவாச் செத்து மருங்கு அற்று மன்னிக் கழிக என்றேனே. இழை அணி ஆகம் வடுக் கொள முயங்கி (7) – ஒளவை துரைசாமி உரை – இழை அணிந்த இவளது ஆகம் வடுப்படுமாறு தழுவி, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கலன் அணிந்த மார்பிலே தழும்புகொள்ளுமாறு முயங்கி.  அகநானூறு 100 – நல் அகம் வடுக் கொள முயங்கி.

Meanings:  சேறும் சேறும் என்றலின் – since you said ‘I am going’ ‘I am going’, பல புலந்து – fighting many times, sulking many times, hating many times, சென்மின் என்றல் – to say to you ‘you go’ (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), யான் அஞ்சுவலே – I was afraid (ஏ – அசைநிலை, an expletive), செல்லாதீம் எனச் செப்பின் – if I said ‘do not go’ (செல்லாதீம் – முன்னிலைப் பன்மை வியங்கோள் வினைமுற்று), பல்லோர் நிறத்து எறி புன்சொலின் திறத்து அஞ்சுவலே – I was afraid that many will attack me with mean words like arrows attacking my chest (புன்சொலின் – தொகுத்தல் விகாரம்), அதனால் – so, சென்மின் – may you go (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), சென்று வினை முடிமின் – go and finish your work (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), சென்று அங்கு – gone there, அவண் நீடாதல் – stay there for long, ஓம்புமின் – you avoid (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), யாமத்து – at night, இழை அணி ஆகம் – chest with well-made jewels, வடுக் கொள – to get scars, முயங்கி – embracing, உழையீராகவும் – even you are near her, பனிப்போள் – the woman who trembles, தமியே – alone, குழைவான் – to become sad, கண்ணிடத்து – in the vast place, ஈண்டி – பரவி, spreading, தண்ணென ஆடிய இள மழை – cool young clouds, பின்றை வாடையும் – also the cold northern winds, கண்டிரோ – have you seen it, வந்து நின்றதுவே – it has come and stayed (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 230, ஆலங்குடி வங்கனார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
முயப் பிடிச் செவியின் அன்ன பாசடைக்
கயக் கணக் கொக்கின் அன்ன கூம்பு முகை,
கணைக் கால் ஆம்பல் அமிழ்து நாறு தண் போது,
குணக்குத் தோன்று வெள்ளியின், இருள் கெட விரியும்
கயல் கணம் கலித்த பொய்கை ஊர!  5
முனிவு இல் பரத்தையை எற் துறந்து அருளாய்;
நனி புலம்பு அலைத்த எல்லை நீங்கப்,
புதுவறம் கூர்ந்த செறுவில் தண்ணென
மலி புனல் பரத்தந்தாஅங்கு,
இனிதே தெய்ய, நின் காணுங்காலே.  10

Natrinai 230, Ālankudi Vankanār, Marutham Thinai – What the heroine’s friend said to the hero
Oh man from the town where
lakes are filled with schools of carp,
and thick-stemmed waterlily plants
with green leaves that look the ears
of crowded female elephants, bear
cool, nectar-fragrant, white flowers,
that blossom from pointed buds that
resemble flocks of pond storks,
bright and ruining darkness, looking
like Venus that rises in the east!

Be gracious to the concubine you
sought abandoning us.  She has no
hatred.

When we see you, it is sweet,
like the cool, flowing flood water that
spreads into newly parched fields,
removing distressing drought, and our
great sorrow is removed.

Notes:  தோழி வாயில் மறுத்தது.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – விடியலில் தோன்றும் வெள்ளி போல தலைவிக்குச் செய்யும் அருள் போலப் பரத்தைக்கும் அருள் செய்கின்றனன்.  ஆயினும் ஆம்பல் வெள்ளியாகாதது போல பரத்தையும் தலைவியாகாள் என்று குறிப்பித்தது.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  நற்றிணை 280 – கொக்கின் கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல்.  எல்லை (7) – சில உரை நூல்களில் ‘வேலை’ என உள்ளது. ‘எல்லை’, ‘வேலை’ ஆகிய இரண்டிற்கும் காலம், பொழுது என்னும் பொருளும் உண்டு.  முய (1) – பொ.வே. சோமசுந்தரனார் உரை – முயா என்னும் குறியதின் இறுதிச் சினை கெட்டு உகரம் பெறாது நின்றது.

Meanings:  முயப் பிடிச் செவியின் அன்ன – like the ears of crowded female elephants ((முய – நெருங்கிய, செவியின் – இன் சாரியை), பாசடை – green leaves, கயக் கண – pond flocks, கொக்கின் அன்ன – like the storks/cranes (கொக்கின் – இன் சாரியை), கூம்பு முகை – closed/pointed buds, கணைக் கால் ஆம்பல் – white waterlilies with thick stems, அமிழ்து நாறு – with nectar fragrance, தண் போது – cool flowers, குணக்குத் தோன்று வெள்ளியின் – like Venus that rises in the east (வெள்ளியின் – இன் உருபு ஒப்புப் பொருளது), இருள் கெட – ruining darkness, விரியும் – they blossom, கயல் கணம் கலித்த பொய்கை – pond filled with schools of carp fish, Cyprinus fimbriatus, கெண்டை, ஊர – oh man from such town (ஊர – அண்மை விளி), முனிவு இல் பரத்தையை – to the prostitute with no anger/hatred, எற் துறந்து – abandoning us, அருளாய் – be gracious, நனி புலம்பு அலைத்த எல்லை நீங்க – for great sorrow caused by summer to be removed, புது வறம் கூர்ந்த செறுவில் – in the newly very dry fields, தண்ணென மலி புனல் பரத்தந்தாஅங்கு – like seeing the abundant cool flowing water that has spread (பரத்தந்தாஅங்கு – அளபெடை), இனிதே – it will be sweet (ஏ – அசைநிலை, an expletive), தெய்ய – அசைநிலை, an expletive, நின் காணுங்காலே – when we see you (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 231, இளநாகனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
மை அற விளங்கிய மணி நிற விசும்பில்
கைதொழும் மரபின் எழுமீன் போல,
பெருங்கடற் பரப்பின் இரும் புறம் தோயச்,
சிறுவெண்காக்கை பலவுடன் ஆடும்
துறை புலம்பு உடைத்தே தோழி, பண்டும்  5
உள் ஊர்க் குரீஇக் கரு உடைத்தன்ன,
பெரும் போது அவிழ்ந்த கருந்தாள் புன்னைக்
கானல் அம் கொண்கன் தந்த
காதல் நம்மொடு நீங்காமாறே.

Natrinai 231, Ilanākanār, Neythal Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
In the past,
the lord of the shores played
with us in the seashore groves
where big, open blossoms
of black-trunked punnai
trees appeared like the broken
eggs of our town sparrows.

Since the love that he showered
on us in the seashore,
where small white seagulls play
together, their black backs getting
wet, appearing like the worshipped
seven-star constellation in the sky
that has the color of faultless
sapphire,
has not left us, we feel very lonely!

Notes:  கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – தலைவியின் கூற்றைத் தோழி தன் கூற்றாகக் கொண்டு உரைத்தது.  வரைவு கடாயது.  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – சிறுவெண்காக்கை தாம் ஆணும் பெண்ணும் பல ஒருசேர ஆடுதலை நோக்கினகாலை நாமும் அங்ஙனம் ஆடற்கில்லையே என வருந்தாநிற்கும் என்றதாம்.  எழுமீன் (2) – ஒளவை துரைசாமி உரை – சாலி என்னும் விண்மீன் கூட்டம், எழுகின்ற மீன் என்னாது ஏழாகிய மின் கூட்டத்தோடே காணப்படும் வடமீன், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – உத்திரதுருவத்தை சூழ்ந்து வரும் ஏழு முனிவர் எனப்படும் எழுமீன்கள்.   உள் ஊர்க் குரீஇக் கரு உடைத்தன்ன பெரும் போது அவிழ்ந்த – ஒளவை துரைசாமி உரை – புன்னையின் மலர்ந்த பூ ஊர்க்குருவியின் முட்டை உடைந்தாற்போல்வது.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  மை அற விளங்கிய – shining without blemish/fault, மணி நிற விசும்பில் – in the sapphire colored sky, கைதொழும் மரபின் எழுமீன் போல – like the seven stars that are worshipped traditionally, ஏழு முனிவர், Ursa Major (big dipper) according to the University of Madras Lexicon, Saptharishi, பெருங்கடற் பரப்பின் – in the wide ocean, இரும் புறம் தோய – dark backs becoming wet, சிறுவெண்காக்கை – small white gulls, Indian black-headed sea gulls, Larus ichthyactus, பலவுடன் – with many, ஆடும் துறை – seashore where they play, புலம்பு உடைத்தே – it is lonely/sad (ஏ – அசைநிலை, an expletive), தோழி – oh friend, பண்டும் – in the past, உள் ஊர்க் குரீஇக் கரு உடைத்தன்ன – like the broken eggs of our town sparrows/birds (குரீஇ – அளபெடை), பெரும் போது அவிழ்ந்த – opened big blossoms, கருந்தாள் புன்னை – black trunked punnai trees, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum,  கானல் – seashore grove, அம் – beautiful, கொண்கன் தந்த காதல் நம்மொடு நீங்காமாறே – since the love that the lord of the shores showered on us has not left (நீங்காமாறே – ஏ அசைநிலை, an expletive, மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள்) தரும் இடைச்சொல்)

நற்றிணை 232, முதுவெங்கண்ணனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
சிறுகண் யானைப் பெருங்கை ஈர் இனம்
குளவித் தண் கயம் குழையத் தீண்டிச்,
சோலை வாழை முணைஇ அயலது
வேரல் வேலிச் சிறுகுடி அலறச்,
செங்காற் பலவின் தீம் பழம் மிசையும்  5
மா மலை நாட! காமம் நல்கென
வேண்டுதும் வாழிய, எந்தை வேங்கை
வீ உக வரிந்த முன்றில்,
கல் கெழு பாக்கத்து அல்கினை செலினே.

Natrinai 232, Muthuvenkannanār, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
Oh lord of the lofty mountains,
where male and female elephants
with small eyes played in a cool
pond near kulavi trees, muddying
its waters,
and hating the bananas in the grove,
went to the small village surrounded
by bamboo, ate sweet jackfruits from
red-trunked trees,
causing people there to scream in fear!

We are pleading for your love!  May you
live long!

Before you leave, stay for the night in our
father’s small village with boulders, where
vēngai trees drop flowers and decorate
front yards.

Notes:  பகற்குறியில் வந்தொழுகும் தலைவனை இரவில் வா என்றது.  வேரல் வேலி (4) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மூங்கில் முள்ளால் மிடைந்த வேலியையுடைய. உ. வே. சாமிநாதையர் உரை (குறுந்தொகை 18) சிறு மூங்கிலாகிய வாழ் வேலி உடைய, மலைச் சாரலில் இயல்பாகவே வளர்ந்த மூங்கிலே பலா மரத்திற்கு வேலியாயிற்று.  இத்தகைய வேலையை வாழ்வேலி என்பர் பெரும்பாணாற்றுப்படை 126 – வாழ் முள் வேலிச் சூழ் மிளைப் படப்பை.  நல்கென (6) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நல்கு என, ஒளவை துரைசாமி உரை – நல்க என, வியங்கோள்.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – யானையின் இனம் குழையத் தீண்டி இன்புறும், வாழையை வெறுக்கும், சிறுகுடி அலற பலாப்பழம் உண்ணும் என்பது, இயற்கைப் புணர்ச்சியில் கூடியதும் பின் களவினை வெறுத்ததும் அயற்பெண்டிர் கூறும் அலர்மொழி நீங்கி அவர் வாயடங்கத் தலைவன் மணம்புரிந்து இல்லறங் காப்பீர் என்பதை உள்ளுறுத்திற்று.

Meanings:  சிறுகண் யானை – small-eyed elephants, பெருங்கை – large trunks, ஈர் இனம் – both sexes, குளவித் தண் கயம் குழையத் தீண்டி – play with each other muddying up the cool pond with wild jasmine, பன்னீர் பூ மரம், மரமல்லி,  Millingtonia hortensis, சோலை வாழை முணைஇ – hating the bananas in the grove, அயலது – nearby, வேரல் வேலிச் சிறுகுடி – small village with bamboo thorn fences, small community surrounded by bamboo, அலற – to scream, செங்கால் பலவின் தீம் பழம் மிசையும் – they eat the fruits of the red-trunked jackfruit trees, Artocarpus heterophyllus, மா மலை நாட – oh lord of the lofty mountains, காமம் நல்கு என (நல்க என) வேண்டுதும் – we are pleading for your love, வாழிய – may you live long, எந்தை – our father, வேங்கை வீ உக – kino trees dropping flowers, Pterocarpus marsupium, வரிந்த – decorating, creating patterns, முன்றில் – front yards, கல் கெழு பாக்கத்து – in the village filled with rocks/boulders, அல்கினை செலினே – stay for the night and then leave (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 233, அஞ்சில் ஆந்தையார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
கல்லாக் கடுவன் நடுங்க முள் எயிற்று
மட மா மந்தி மாணா வன் பறழ்,
கோடு உயர் அடுக்கத்து ஆடு மழை ஒளிக்கும்
பெருங்கல் நாடனை அருளினை ஆயின்,
இனி என கொள்ளலை மன்னே கொன் ஒன்று  5
கூறுவென் வாழி தோழி, முன்னுற
நாருடை நெஞ்சத்து ஈரம் பொத்தி,
ஆன்றோர் செல் நெறி வழாஅச்
சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தெரிமே.

Natrinai 233, Anjil Ānthaiyār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
You have been gracious to the lord
of the lofty mountains, where
a male monkey without much skills
trembles in fear when his naïve female
with a black face and sharp teeth and their
immature, strong child are hidden by the
dancing clouds in the mountain peaks.

May you live long, my friend!  You will not
accept what I say.  However, let me tell you
one thing.

With kindness hidden in his heart,
he is virtuous and does not deviate from
the path of the wise.  Understand that clearly!

Notes:   தலைவன் களவு நீட்டித்து வரையாது ஒழுகினதால் தலைவி வருந்தினாள்.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கடுவன் மனம் நடுங்குமாறு மந்தியும் குட்டியும் மலைப்பக்கத்தில் இயங்கும் மேகத்தில் ஒளியும் என்றது, தலைவன் வரும்போது தலைவியும் தோழியும் இங்கு ஓரிடத்தில் மறைந்து கொண்டு அவன் காணாது மயங்குவான் என்பதாம்.  இதனால் இங்ஙனம் நேரிடும் குறி இடையீட்டால் விரைந்து மணம் முடிக்கக் கருதுவன் என்பதனைக் குறித்தனள்.  அது கண்ட தோழி, தலைவன் அருகில் இருப்பதை உணர்ந்து உரைத்தது.  கல்லாக் கடுவன் (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தன்னுடைய தொழிலையன்றி பிறவற்றைக் கல்லாத கடுவன்.  கொன் – அச்சம், பயம் இலி, காலம், பெருமை, என்று அப் பால் நான்கே கொன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 6).

Meanings:  கல்லாக் கடுவன் – a male monkey that has not learned anything other than monkey skills, நடுங்க – to tremble, முள் எயிற்று – with sharp teeth, மட மா மந்தி – naive big female monkey, young black-faced female monkey, மாணா – not fully grown, not mature, வன் பறழ் – strong child, கோடு உயர் அடுக்கத்து – in the mountain ranges with peaks, ஆடு மழை ஒளிக்கும் – dancing clouds hide, பெருங்கல் நாடனை அருளினை – you have been gracious to the lord of the lofty mountains, ஆயின் – if analyzed, even so, இனி என கொள்ளலை – now you will not accept what I say, மன் – கழிவுக்குறிப்பு, ஏ – அசைநிலை, கொன் – for no use, for no reason, ஒன்று கூறுவென் – let me tell you one thing, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – oh friend, முன்னுற – ahead, being in front, நாருடை நெஞ்சத்து – in the heart with kindness, ஈரம் – love, பொத்தி – kept, ஆன்றோர் செல் நெறி வழாஅச் சான்றோன் ஆதல் – since he is a virtuous man who does not deviate from the path of the wise, நன்கு அறிந்தனை தெரிமே – understand it clearly (உம் ஈற்று முன்னிலை வினை ஈற்றுமிசை உகரம் மெய்யொடுங் கெட்டது)

நற்றிணை 234 – மூலபாடம் மறைந்து போனது – the original poem has been lost

நற்றிணை 235, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
உரவுத் திரை பொருத பிணர்படு தடவு முதல்,
அரவு வாள் வாய முள் இலைத் தாழை
பொன் நேர் தாதின் புன்னையொடு கமழும்
பல் பூங்கானல் பகற்குறி வந்து, நம்
மெய் கவின் சிதையப் பெயர்ந்தனன் ஆயினும்,  5
குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறிக்,
கண்டனம் வருகம், சென்மோ தோழி,
தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊத,
படுமணிக் கலி மாக் கடைஇ,
நெடு நீர்ச் சேர்ப்பன் வரூஉம் ஆறே.  10

Natrinai 235, Unknown Poet, Neythal Thinai – What the heroine’s friend said to her
He came bearing many flowers
during the day to the seashore grove,
……….where strong waves crash against
……….the rough, curved trunks of thāzhai
………. trees with saw-edged fronds that
……….spread their fragrances along with
……….those of punnai blossoms with
……….pollen resembling golden dust,  
for trysts with you.
He has departed now, ruining your body.

Even though he has gone, let us climb on
the sand dunes that are like hills!  Let us
go, my friend!  Let us see the path of the
lord of the shores with abundant water,
where he comes riding his proud horses,
their bells chiming, his cool chest
adorned with a garland swarmed by bees.

Notes:  தலைவன் தன்னை மணம் புரிந்து கொள்ளாததால் தலைவி வருந்தியிருக்கையில் தோழி அவளிடம் கூறியது.  புலவர் பெயர் – பிற உரை நூல்களில் புலவரின் பெயர் குறிக்கப்படவில்லை.  ஒளவை துரைசாமி உரையில் புலவரின் பெயர் வெள்ளிவீதியார் என்று உள்ளது.  நற்றிணை 182 – மென்மெல கண்டனம் வருகம் சென்மோ தோழி, குறுந்தொகை 275 – முல்லை ஊர்ந்த கல் உயர் ஏறிக் கண்டனம் வருகம் சென்மோ தோழி.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – தாழையும் புன்னையும் சேர்ந்து மணம் வீசுகின்ற சோலை என்றது, மணம் புரியக் கருதி வரும் தலைவனுடன் கூடி இல்லறம் புரிந்து சேரி விளங்குமாறு திகழ்வர் என்பதாம்.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25). 

Meanings:  உரவுத் திரை பொருத – strong waves dash, பிணர்படு – rough (சொரசொரப்பான), தடவு முதல் – curved trunks, large trunks, அரவு வாள் வாய முள் இலைத் தாழை – thāzhai fronds with saw-edge like thorns, Pandanus odoratissimus, பொன் நேர் தாதின் புன்னையொடு கமழும் – with the fragrance of punnai tree flowers with golden pollen, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, பல் பூங்கானல் – seashore grove with many flowers, பகற்குறி வந்து – came during the day for trysts, நம் மெய் கவின் சிதையப் பெயர்ந்தனன் ஆயினும் – even though he left now ruining our beautiful bodies, குன்றின் தோன்றும் – appearing like hills (குன்றின் – இன் உருபு ஒப்புப் பொருளது), குவவு மணல் ஏறி – climbing on the sand dunes, கண்டனம் வருகம் – let us see and be back (கண்டனம் – முற்றெச்சம், finite verb), சென்மோ – let us go (மோ – தன்மை அசைநிலை, an expletive of the first person), தோழி – my friend, தண் தார் அகலம் – cool garlanded chest, வண்டு இமிர்பு ஊத – as bees swarm and hum, படுமணிக் கலி மா – proud horse with ringing bells, கடைஇ – riding (அளபெடை), நெடு நீர்ச் சேர்ப்பன் – the lord of the shores with abundant water, வரூஉம் – coming, ஆறே – the path (வரூஉம் – அளபெடை, ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 236, நம்பி குட்டுவனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
நோயும் கைம்மிகப் பெரிதே; மெய்யும்
தீ உமிழ் தெறலின் வெய்தாகின்றே;
ஒய்யெனச் சிறிது ஆங்கு உயிரியர் ‘பையென
முன்றில் கொளினே, நந்துவள் பெரிது’ என,
நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு  5
உரை, இனி வாழி தோழி! புரை இல்
நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து
அண்ணல் நெடுவரை ஆடி, தண்ணென
வியல் அறை மூழ்கிய வளி என்
பயலை ஆகம் தீண்டிய சிறிதே.  10

Natrinai 236, Nampi Kuttuvanār, Kurinji Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
May you live long, my friend!
This affliction has grown.
My body is hot like the heat
in flames.

Tell my mother with a hellish
heart that I can breathe a little
if I am brought swiftly to our
front yard, and thrive greatly,
letting the cool wind
……….that surrounds the wide
……….boulders on the peaks of
……….the lord of the mountains 
……….who caused my fine, bright
……….bangles to become loose,
touch my body with pallor a little.  

Notes:  இற்செறிக்கப்பட்ட தலைவி வற்புறுத்தும் தோழியிடம் கூறியது.  ஒளவை துரைசாமி உரை – ‘வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்’ (தொல்காப்பியம், களவியல் 22) என்ற நூற்பாவின்கண் ‘வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்’ என்பதனைத் தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல் என்னும் தந்திரவுத்தியாகக் கொண்டு, அதன்கண் வேறுபட வருவன எல்லாம் கொள்க என்றுரைத்து, இப்பாட்டைக்காட்டி, ‘இது வரைவிடை ஆற்றாமை மிக்குழி அவன் வரையின் முள்கிய காற்று என் மெய்க்கட் படினும் ஆற்றலாம் என்றது’ என்பர் நச்சினார்க்கினியர்.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – சிகரத்தில் காற்று அளாவிச் சூழ்தல் போலத் தன்னுள்ளம் தலைவனுடைய தோளில் தோய்ந்து அளாவிச் சூழ்ந்து விளங்குகின்றது என்று தலைவி குறித்தனள்.  தீ உமிழ் தெறலின் வெய்தாகின்றே (2) – ஒளவை துரைசாமி உரை – என் மெய்யும் தீ உமிழ் வெம்மையினும் வெய்தாய் உள்ளது, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – என் உடம்பு தீயை உமிழ்கின்ற கொதிப்பினால் வெப்பமுடையதாகியது, ச. வே. சுப்பிரமணியன் உரை – நெருப்பில் தோன்றும் அனலைப் போன்ற வெப்பத்தை என் உடலும் உடையதாயிற்றது.  உயிரியர் (3) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – உயிர்த்திருக்க.  உய்த்து (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீ சென்று, H.வேங்கடராமன் உரை – என்னைக் கொண்டுபோய் விட்டு.  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).

Meanings:  நோயும் கைம்மிகப் பெரிதே – the disease has grown greatly (ஏ – அசைநிலை, an expletive), மெய்யும் தீ உமிழ் தெறலின் வெய்தாகின்றே – my body is hotter than the heat from a flame, my body is hot like heat from a flame (ஏ – அசைநிலை, an expletive), ஒய்யென – rapidly (விரைவுக்குறிப்பு), சிறிது – a little bit, ஆங்கு உயிரியர் – so that I can breathe, so that I can live, பையென – slowly, முன்றில் கொளினே – if she is brought to the front of the house (ஏ – அசைநிலை, an expletive, முன்றில் – இல்முன்), நந்துவள் பெரிது என – that she would thrive greatly, நிரைய நெஞ்சத்து அன்னைக்கு – to my mother with a hellish heart, உய்த்து ஆண்டு உரை இனி – go there and tell her, go there and tell her now to take me out, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – oh friend, புரை இல் – without equal (புரை – உவம உருபு, a comparison word), நுண் – small, நேர் எல் வளை – fine bright bangles, perfect bright bangles, நெகிழ்த்தோன் – the man who caused them to become loose, the man who caused them to slip down, குன்றத்து அண்ணல் – the lord of the mountains, நெடுவரை – tall mountains, ஆடி – moving around, தண்ணென – in a cool manner, வியல் அறை – wide boulders, மூழ்கிய வளி – surrounding wind, என் பயலை – my pallor spots (பயலை – பசலை என்பதன் போலி), ஆகம் – body, தீண்டிய – for it to touch (செய்யிய என்னும் வினையெச்சம்), சிறிதே – a little bit (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 237, காரிக்கண்ணனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நனி மிகப் பசந்து தோளும் சாஅய்ப்,
பனி மலி கண்ணும் பண்டு போலா,
இன் உயிர் அன்ன பிரிவு அருங்காதலர்
நீத்து நீடினர் என்னும் புலவி
உட்கொண்டு, ஊடின்றும் இலையோ மடந்தை?  5
உவக்காண்! தோன்றுவ ஓங்கி வியப்புடை
இரவலர் வரூஉம் அளவை, அண்டிரன்
புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல,
உலகம் உவப்ப ஓது அரும்
வேறு பல் உருவின், ஏர்தரும் மழையே.  10

Natrinai 237, Kārikkannanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
Oh friend!  Why have you
not shown your displeasure
by sulking, becoming very pale,
having emaciated arms and
tear-filled eyes, even though
your inseparable lover
separated for a long time?

See above!  The rising clouds
that are beyond praise, have
made those on earth happy,
spreading in various shapes,
like the elephants that Āy Andiran
has arranged for granting as gifts
to the awed suppliants who arrive.

Notes:  தலைவன் பிரிவைத் தலைவி ஆற்றாள் எனக் கருதித் தோழி தேறுதல் மொழி உரைத்தாள்.  அப்பொழுது தலைவி ஆற்றியிருக்கும் திறங்கண்டு வியந்தவளாய்த் தோழி உரைத்தது.  வரலாறு:  ஆய் அண்டிரன்.  கடையெழு வள்ளல்கள் – ஆய், பாரி, காரி, ஓரி, அதிகன், பேகன், நள்ளி.  Natrinai 167 has a reference to Āy Andiran as being a charitable king.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  நனி மிகப் பசந்து – becoming very very pale (நனி மிக – மிக மிக – ஒரு பொருட் பன்மொழி), தோளும் சாஅய் – arms becoming thin (சாஅய் – அளபெடை), பனி மலி கண்ணும் – with eyes filled with tears, பண்டு போலா – like in the past, இன் உயிர் அன்ன – like sweet life, பிரிவு அருங்காதலர் நீத்து நீடினர் என்னும் – because your inseparable lover parted and has delayed his return, புலவி உட்கொண்டு – getting upset within you, ஊடின்றும் இலையோ – are you not sulking (இலை – இல்லை என்பதன் விகாரம்), மடந்தை – oh young lady, உவக்காண் – look there, தோன்றுவ – they are appearing, ஓங்கி –  raised, high, வியப்புடை இரவலர் வரூஉம் அளவை – to the extent that awed suppliants arrive (வரூஉம் – அளபெடை), அண்டிரன் – Āy Andiran, புரவு – donorship, எதிர்ந்து – considering, தொகுத்த யானை போல – like the elephants that were collected, உலகம் உவப்ப – for those in the world to be happy (உலகம் – ஆகுபெயர் உலகில் வாழும் மக்களுக்கு), ஓது அரும் – beyond praise, வேறு பல் உருவின் – in various different shapes, ஏர்தரும் மழையே – the clouds that rise up (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 238, கந்தரத்தனார், முல்லைத் திணை – தலைவி முகிலிடம் சொன்னது
வறங்கொல வீந்த கானத்து குறும் பூங்
கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப,
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம்,
மாலை அந்தி மால் அதர் நண்ணிய
பருவம் செய்த கருவி மா மழை!  5
‘அவர் நிலை அறிமோ ஈங்கு’ என வருதல்
சான்றோர்ப் புரைவதோ அன்றே; மான்று உடன்
உர உரும் உரறும் நீரின், பரந்த
பாம்பு பை மழுங்கல் அன்றியும் மாண்ட
கனியா நெஞ்சத்தானும், 10
இனிய அல்ல, நின் இடி நவில் குரலே.

Natrinai 238, Kantharathanār, Mullai Thinai – What the heroine said to the monsoon cloud
Oh dark raincloud!  Like a gathering
of women wearing garlands with small
flowers in the parched forest, pidavam
flowers have been opened by bees that
drink their nectar at this twilight time,
when you have landed with thunder
lightning, causing me to be distressed!

You coming here with uproar to tell me
about him, is not what the wise would do.
Your loud thunder with rain will ruin the
hoods of snakes that are spread all over,
but will not soften the heart of my
esteemed man.

Your loud sounds are not sweet to me!

Notes:  பொருள் தேடிச் சென்ற தலைவன் குறித்த பருவத்தில் வராததால் வருந்திய தலைவி, முகிலிடம் சொன்னது.   புலவர் பெயர் – ஒளவை துரைசாமி உரை – அச்சுப்பிரதிகளில் இவர் பெயர் கந்தரத்தினார் என்றே காணப்படுகின்றது.  ஏடுகளில் கருவூர்க் கந்தரத்தினார் என்றே காணப்படுகின்றது.  இதனால் இவர் கந்தரத்தினாரின் வேறு என்றே கொள்ளல் வேண்டும்.   கருவி மா மழை (5) – H.வேங்கடராமன் உரை – மின்னல் இடி போன்ற கருவிகளைக் கொண்ட மேகங்கள்.  மான்று (7) – ஒளவை துரைசாமி உரை – மால் என்னும் உரிச் சொல்லடியாகப் பிறந்த வினையெச்சம்.  There is a convention that thunder ruins and kills snakes.  Akanānūru 68, 92, 119, 182, 202, 274, 323, 328, Kalithokai 45, 113, Kurunthokai 158, 190, 268, 391 and Natrinai 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, Puranānūru 17, 37, 58, 126, 211, 366 and 369 have similar descriptions of thunder ruining or killing snakes.  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58).  வண்டு மலரை மலரச் செய்தல் – அகநானூறு 183 – அலரி வண்டு வாய் திறக்கும், நற்றிணை 238 – வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம், குறுந்தொகை 265 – காந்தள் அம் கொழு முகை  காவல் செல்லாது வண்டு வாய் திறக்கும், குறுந்தொகை 370 – ஆம்பல் அணி நிறக் கொழு முகை வண்டு வாய் திறக்கும்.

Meanings:  வறம் கொல – destroyed by summer heat, dried by summer heat (கொல – கொல்ல என்பதன் இடைக்குறை), வீந்த கானத்து – in the forest that has been ruined, குறும் பூங்கோதை மகளிர் – women wearing flower garlands with small/few flowers, குழூஉ – gathering together (அளபெடை), நிரை – rows, கடுப்ப – like (உவம உருபு, a comparison word), வண்டு வாய் திறப்ப – bees open the mouths of buds, விண்ட  பிடவம் – blossomed pidavam flowers, மாலை அந்தி – evening twilight, மால் அதர் நண்ணிய – for me to attain distress, பருவம் செய்த – season caused, கருவி மா மழை – dark clouds with lightning and thunder, அவர் நிலை அறிமோ – ‘you understand his situation’ (மோ முன்னிலை அசை), ஈங்கு – here, என – thus, வருதல் – you coming, சான்றோர்ப் புரைவதோ அன்றே – it is not like what the wise will do (ஏ – அசைநிலை, an expletive), மான்று – confused (மால் என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த வினையெச்சம்), உடன் – together, உர உரும் உரறும் நீரின் – because of your loud voice with roaring sounds, பரந்த பாம்பு – snakes that are spread all over, பை மழுங்கல் அன்றியும் – not just ruining their hoods, not just blunting their hoods, மாண்ட – esteemed, கனியா நெஞ்சத்தானும் – with a heart that does not soften, இனிய அல்ல – they are not sweet, நின் இடி நவில் குரலே – the roaring sounds of your thunder (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 239, குன்றியனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
ஞான்ற ஞாயிறு குட மலை மறைய,
மான்ற மாலை மகிழ்ந்த பரதவர்
இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி,
அலவன் ஆடிய புலவு மணல் முன்றில்
காமர் சிறுகுடிச் செல் நெறி வழியின்,  5
ஆய் மணி பொதி அவிழ்ந்தாங்கு, நெய்தல்
புல் இதழ் பொதிந்த பூத் தப மிதிக்கும்
மல்லல் இருங்கழி மலி நீர்ச் சேர்ப்பற்கு
அமைந்து தொழில் கேட்டு அன்றோ இலமே; ‘முன் கை
வார் கோல் எல் வளை உடைய வாங்கி  10
முயங்கு’ எனக் கலுழ்ந்த இவ் ஊர்
எற்று ஆவது கொல், யாம் மற்றொன்று செயினே?

Natrinai 239, Kundriyanār, Neythal Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
The descending sun hides behind
the western mountains.

Fishermen who are drunk sell their
big fish they caught easily at this
confusing evening time.
This is a beautiful, small village where
crabs play in stinking sand, in the
front yards of houses.

On the perfect path, the lord of the vast,
dark, overflowing backwaters, tramples
and ruins the waterlily blossoms,
resembling sapphire, surrounded by dull
colored sepals.

We did not do what he wanted us to do.
This town cries that you should unite
with him, breaking the rows of rounded,
bright bangles on your forearms.  What
will to it happen if we do something else?

Notes:  களவில் வந்தொழுகும் தலைவன் வரையாது இருந்தான்.  அவன் அருகில் இருப்பதை அறிந்த தோழி, அவனை மணம் புரியத் தூண்டுவாளாய் உரைத்தது.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – குடித்து மயங்கிய பரதவர் தாம் பெற்ற பெரிய மீனை எளிதில் விற்று நீலமலரை மிதித்துச் செல்வர் என்றது, காமத்தால் மயக்கமுற்ற தலைவன் மணம்புரி கொடையாய் மிகுதியான பொருள் தந்து தலைவியைப் பெற்றவனாய் அயலார் எடுத்த அலர்மொழியெல்லாம் தாழ மிதித்து அடக்கித் தன் ஊருக்கு உடன்கொண்டு பெயர்வான் என்பதனை உள்ளுறுத்திற்று.  பூத் தப மிதிக்கும் (7) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கெடுமாறு மிதித்துச் செல்கின்றார் நம் தலைவர், ஒளவை துரைசாமி உரை – செல்வோர் கால்பட்டு மிதியுண்டு கெடும்.  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).

Meanings:  ஞான்ற ஞாயிறு – the descending sun, குட மலை மறைய – hides behind the western mountains, மான்ற மாலை மகிழ்ந்த பரதவர் – fishermen who drink alcohol are happy in the confused evenings, இனிது பெறு பெருமீன் எளிதினின் மாறி – sweetly bartered/sold the big fish that they catch easily, அலவன் ஆடிய புலவு மணல் முன்றில் – front yard where crabs play in the stinking sand, காமர் சிறுகுடி – beautiful small village, beautiful small community, செல் நெறி வழியின் – on the perfect path, ஆய் மணி – beautiful sapphire gems, பொதி அவிழ்ந்தாங்கு நெய்தல் – blue waterlilies when they opened their petals fully like a bundle opened, புல் இதழ் பொதிந்த பூத் தப மிதிக்கும் – he tramples on the flowers with dull colored sepals that cover the petals and ruins the flowers, people who walk there trample on the flowers with dull colored sepals that cover the petals and ruins the flowers, மல்லல் – vast, இருங்கழி மலி நீர்ச் சேர்ப்பற்கு – for the lord of the dark overflowing backwaters, அமைந்து தொழில் கேட்டு அன்றோ இலமே – we did not do what he wanted us to do (அன்றோ – ஓகாரம் அசை, இலமே – ஏகாரம் அசைநிலை, an expletive), முன் கை – forearms, வார் – long rows, கோல் – rounded, well made, எல் வளை – bright bangles, உடைய – to break, வாங்கி முயங்கு – embrace him, unite with him, எனக் கலுழ்ந்த – thus it cries, இவ் ஊர் எற்று ஆவது – what will happen to this town, கொல் – அசைநிலை, an expletive, யாம் மற்றொன்று செயினே – if we do something else (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 240, நப்பாலத்தனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
ஐதே கம்ம, இவ் உலகு படைத்தோனே,
வை ஏர் வால் எயிற்று ஒண்ணுதல் குறுமகள்
கை கவர் முயக்கம் மெய்யுறத் திருகி,
ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம்
துயில் இடைப்படூஉம் தன்மையது ஆயினும்,  5
வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில்,
கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி
ஆன் வழிப்படுநர் தோண்டிய பத்தல்
யானை இன நிரை வெளவும்
கானம் திண்ணிய மலை போன்றிசினே.  10

Natrinai 240, Nappālathanār, Pālai Thinai – What the heroine said to her friend
Oh young woman with sharp,
pretty, white teeth and a bright
forehead!

He left not desiring to embrace
me tightly, and my chest with big
breasts pines, sighs and suffers
without sleep.
He went to the forest that is like a
firm mountain where rows of elephant
herds drink water from the water pits
near a well that cow herders dug with
pick axes, in the place with scorching
pebbles, causing me pain.

May he who created this world waste
away slowly!

Notes:  பிரிவிடை மெலிந்த தலைவி தோழியிடம் கூறியது.  உள்ளம் பொருளை விரும்பியும் தலைவியை பிரிவதற்கு அஞ்சிய தலைவன் தன் நெஞ்சிடம் கூறியதுமாம்.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – ஆனிரையை உண்பிக்கும் பத்தலின் நீரை யானை வௌவும் என்றது, தலைவன் கொள்ளவேண்டிய தலைவியின் நலனையெல்லாம் பசலை உண்டொழிக்கும் என்பதாம்.  போன்றிசினே – படர்க்கைக்கண் வந்தது,  ‘இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகுநிலை உடையன என்மனார் புலவர்’ (தொல்காப்பியம் இடையியல் 27).  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  வை– வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).

Meanings:  ஐது ஏகு அம்ம – may he suffer slowly (ஐது – slowly, ஏகு – அசைநிலை, an expletive, அம்ம – வியப்பு இடைச்சொல், a particle that implies surprise), இவ் உலகு படைத்தோனே – the one who created this world (ஏ – அசைநிலை, an expletive), வை ஏர் வால் எயிற்று – with sharp pretty white teeth, ஒண்ணுதல் குறுமகள் – oh young woman with a bright forehead, கை கவர் முயக்கம் – embracing with the hands, மெய் உற – embracing the body, திருகி – turning away, ஏங்கு உயிர்ப்பட்ட – pining and sighing, வீங்கு முலை ஆகம் – swollen breasts, big breasts, துயில் இடைப்படூஉம் தன்மையது ஆயினும் – even if there is suffering without sleeping, even if it is being without sleep (இடைப்படூஉம் – அளபெடை), வெயில் வெய்துற்ற – heated in the sun, பரல் – pebbles, அவல் – pits, ஒதுக்கில் – nearby, கணிச்சியில் குழித்த – cut with a pick axe, கூவல் – well, நண்ணி – approaching, ஆன் வழிப்படுநர் – those who herd cows, those who herd cattle, தோண்டிய பத்தல் – the water pits that have been dug, யானை இன நிரை – rows of elephant herds, வெளவும் – they seize, they drink, கானம் – forest, திண்ணிய மலை போன்றிசினே – it is like a firm mountain (சின் – படர்க்கைக்கண் வந்தது, an expletive of the third person, ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 241, மதுரைப் பெருமருதனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
உள்ளார் கொல்லோ தோழி, கொடுஞ்சிறைப்
புள் அடி பொறித்த வரியுடைத் தலைய
நீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற
வளரா வாடை உளர்பு நனி தீண்டலின்
வேழ வெண்பூ விரிவன பலவுடன்  5
வேந்து வீசு கவரியின் பூம்புதல் அணிய,
மழை கழி விசும்பின் மாறி ஞாயிறு
விழித்து இமைப்பது போல் விளங்குபு மறைய,
எல்லை போகிய பொழுதின் எல் உறப்
பனிக்கால் கொண்ட பையுள் யாமத்துப்,  10
பல்லிதழ் உண்கண் கலுழ,
நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசினோரே?

Natrinai 241, Mathurai Perumaruthanār, Pālai Thinai – What the heroine said to her friend
Does he think about me, my friend,
……….the man who left to earn
……….unstable wealth, causing my
……….many-petaled, flower-like,
……….kohl-rimmed eyes to shed tears,
when dew falls at the start of sad night,
after the day ends as the sun flashes like
winking eyes in the sky after the rains,
when bushes are adorned with flowers,
where fine wet sand appears in places where
water flow has stopped and birds with curved
wings have left their footprints, and the gentle
northern winds have touched and opened
reed blossoms that appear like fans for royalty?

Notes:  பொருள்வயின் பிரிந்த தலைவனின் பிரிவை ஆற்றியிரு என்று வற்புறுத்திய தோழியிடம் தலைவி கூறியது.  நற்றிணை 241 வரிகள் 5-6 – வேழ வெண்பூ விரிவன பலவுடன் வேந்து வீசு கவரியின், அகநானூறு 335 – புதுப் பூ வார் உறு கவரியின் வண்டு உண விரிய.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  உள்ளார் கொல்லோ – does he think about me (கொல் – ஐயப்பொருட்டு, ஓ – அசைநிலை, an expletive), தோழி – oh friend, கொடுஞ்சிறை – curved wings, புள் அடி – feet of birds, பொறித்த – etched, stamped, வரியுடைத் தலைய நீர் அழி மருங்கின் – in the area on the top with lines where there is reduced water, ஈர் அயிர் – wet fine sand, தோன்ற – appears, வளரா வாடை உளர்பு நனி தீண்டலின் – because the delicate northern winds touch greatly separating the petals, வேழ வெண்பூ – white flowers of reeds, விரிவன பலவுடன் – many which open, வேந்து வீசு கவரியின் – like the fan that is used for the king, சாமரத்தைப் போன்று (கவரியின் – இன் உருபு ஒப்புப் பொருளது), பூம்புதல் அணிய – bushes are adorned with flowers, மழை கழி – after the  rains, விசும்பின் – in the sky, மாறி – changing, ஞாயிறு விழித்து இமைப்பது போல் விளங்குபு –  the sun flashing and appearing like winking, மறைய – disappearing, எல்லை போகிய பொழுதின் – when daytime ends, when the sun departs, எல் உற – as night falls, பனிக்கால் கொண்ட – when dew comes down, பையுள் யாமத்து – at the sorrowful night time, பல்லிதழ் உண்கண் கலுழ – many-petaled flower-like kohl-rimmed eyes to cry (பல்லிதழ் – பூவிற்கு ஆகுபெயர், அகரம் கெட்டு ‘குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்’ – தொல்காப்பியம், எழுத்து 160, என்றதனால் லகரம் இரட்டித்து பல்லிதழ் என முடிந்தது), நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசினோரே – the man who separated with the desire to earn wealth that does not stay, the man who separated with the desire to earn unstable wealth (இசின் – படர்க்கையின் கண் வரும், an expletive of the third person, ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 242 விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப,
புதல் இவர் தளவம் பூங்கொடி அவிழப்,
பொன் எனக் கொன்றை மலர மணி எனப்
பல் மலர் காயாங் குறுஞ்சினை கஞலக்,
கார் தொடங்கின்றே; காலை வல் விரைந்து  5
செல்க பாக நின் தேரே! உவக்காண்!
கழிப் பெயர் களரில் போகிய மட மான்
விழிக் கட் பேதையொடு இனன் இரிந்து ஓடக்,
காமர் நெஞ்சமொடு அகலா,
தேடூஉ நின்ற இரலை ஏறே.  10

Natrinai 242, Vilikatpēthai Perunkannanār, Mullai Thinai – What the hero said to the charioteer
Leafless pidavam plants
have put out buds to blossom,
delicate thalavam vines
spread on bushes have bloomed,
golden kondrai flowers
have opened, and clusters of
sapphire-like kāyā flowers
flourish on small branches.

This is the rainy season.
Ride fast oh charioteer!
Behold!  In the saline land,
a doe slips away from the crowd
with her fawn with peering eyes.
With love in his heart, her
strong stag runs in search of her.

Notes:  வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனிடம் கூறியது.

Meanings:  இலை இல – with no leaves (இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்), பிடவம் – pidavam plants, Randia malabarica, காட்டு மல்லிகை, wild jasmine, Bedaly emetic nut, Randia malabarica,  ஈர் மலர் அரும்ப – cool buds have blossomed into flowers, beautiful buds have blossomed into flowers, புதல் இவர் – spread on bushes, தளவம் – golden jasmine, பூங்கொடி – flowering vines, அவிழ – opening, பொன் என – like gold, கொன்றை மலர் – kondrai flowers, laburnum, Golden Shower Tree, Cassia fistula,  மணி என – sapphire gem like, பல் மலர் காயா – clusters of kāyā flowers, ironwood tree, Memecylon edule, குறு சினை – small branches, கஞல – dense, flourish, கார் தொடங்கின்றே காலை – when rainy season has begun (ஏ – அசைநிலை, an expletive), வல் விரைந்து – very fast, செல்க பாக – go oh charioteer, நின் தேரே – your chariot (ஏ – அசைநிலை, an expletive), உவக்காண் – look there, கழி – backwaters, பெயர் – moved away, களரில் – in the saline land, போகிய – went, மட மான் – female deer, delicate deer, விழிக்கட் பேதையொடு – with its fawn with confused eyes, with its fawn with peering eyes, இனன் – herd, group (இனம் என்பதன் போலி), இரிந்து ஓட – run away from, காமர் நெஞ்சமொடு – with a loving heart, அகலா – without running away, தேடூஉ நின்ற – was searching (தேடூஉ –  அளபெடை), இரலை – a kind of deer, ஏறே – a male deer (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 243, காமக்கணிப் பசலையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
தேம்படு சிலம்பில் தெள் அறல் தழீஇய
துறுகல் அயல தூ மணல் அடைகரை,
அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்துப்
பொதும்பு தோறு அல்கும் பூங்கண் இருங்குயில்,
‘கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு  5
அகறல் ஓம்புமின் அறிவுடையீர்!’ எனக்
கையறத் துறப்போர்க் கழறுவ போல,
மெய்யுற இருந்து மேவர நுவல,
இன்னாது ஆகிய காலை பொருள்வயிற்
பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின்,  10
அரிது மன்றம்ம, அறத்தினும் பொருளே.

Natrinai 243, Kāmakkani Pasalaiyār, Pālai Thinai – What the heroine said to her friend, when the hero left her to earn wealth
There are cuckoos with pretty eyes in
all the groves on the mountain slopes
with honey, where mango trees with
swaying branches are filled with fragrant,
tiny green fruits, growing near the shores
with pure sand, of streams with clear
water that flows hugging boulders.

They unite with their mates and sing,
their voices appearing like chiding
those who abandon their beloved ones
causing them to become helpless,  
“Oh intelligent ones!  Wealth is unstable
like a rolled dice.  Do not abandon
your loved ones for the sake of wealth.”  

If it is the nature of men to separate
to earn wealth even in this season, then
wealth must be more precious than justice!

Notes:  பிரிவிடை மெலிந்த தலைவி தோழியிடம் கூறியது.  புலவரின் பெயர் – ஒளவை துரைசாமி உரை- காமக்காணி நப்பசலையார், நப்பசலையார் என்பது இவரது இயற்பெயர்.  ஏடு எழுதியவர்கள் பிழையாக காமக்கணி என்று எழுதி விட்டனர்.  காமக்காணி என்பது பண்டைநாளில் அரசர்களால் தரப்பட்ட காணியாட்சிச் சிறப்புகளுள் ஒன்று.  கூத்தர்க்குக் கூத்தாட்டுக் காணி என்றும் தச்சர்க்குத் தச்சர்க்காணி என்றும் வழங்கினாற் போல, அரசன் விரும்புவனற்றை அவன் விரும்பியவாறே செய்த செயல் நலம் கருதி வியந்து அவன் அளிக்க வரும் காணி உரிமையாகலின் அது காமக்காணி எனக் கருதப்பட்டது.  அறத்தினும் (11) – உம் இடைச்சொல் சிறப்புப் பொருளில் வந்தது.  மன்றம்ம:   பொ. வே. சோமசுந்தரனார் உரை, அகநானூறு 367-13 – மன்ற அம்ம, மன்ற – தேற்றமாக, அம்ம கேட்பித்தற்பொருட்டு.  

Meanings:  தேம்படு சிலம்பில் – on the mountain slopes with honey, on the mountain slopes with honey combs (தேம் தேன் என்றதன் திரிபு), தெள் அறல் – clear flowing water, தழீஇய துறுகல் – embracing the boulders (தழீஇய – அளபெடை), அயல தூ மணல் அடைகரை – shores with pure sand nearby, அலங்கு சினை – swaying branches, பொதுளிய நறு வடி – abundant fragrant tiny green mangoes, மாஅத்து – with mango trees (அத்து சாரியை), பொதும்பு தோறு அல்கும் – they reside in every grove, பூங்கண் இருங்குயில் – black cuckoos with flower-like eyes, black cuckoos with beautiful eyes,  கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு – abandon unstable life that is like moving/rolling gambling dice, அகறல் – do not move away,  ஓம்புமின்  – you protect (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), அறிவுடையீர் – intelligent people, என – thus, கையறத் துறப்போர் – those who seek wealth and abandon causing their beloved ones to become helpless, கழறுவ போல – like they stated firmly, like the chide, மெய் உற இருந்து மேவர நுவல – they call with both their bodies united, இன்னாது ஆகிய காலை – when it causes pain, பொருள் வயிற் பிரியல் ஆடவர்க்கு இயல்பு – it is the nature of men to separate to earn money, எனின் – if so, அரிது – it is difficult, மன்ற – for sure, அம்ம – asai, you listen, அறத்தினும் – more precious than fairness, பொருளே – material wealth (ஏ – அசைநிலை, an expletive)  

நற்றிணை 244, கூற்றங்குமரனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
விழுந்த மாரிப் பெருந்தண் சாரல்
கூதிர்க் கூதளத்து அலரி நாறும்
மாதர் வண்டின் நயவரும் தீங்குரல்
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்
உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ,  5
துயர் மருங்கு அறியா அன்னைக்கு, ‘இந்நோய்
தணியுமாறு இது’ என உரைத்தல் ஒன்றோ,
செய்யாய் ஆதலின் கொடியை தோழி!
மணி கெழு நெடு வரை அணிபெற நிவந்த
செயலை அம் தளிர் அன்ன, என்  10
மதன் இல் மா மெய்ப் பசலையும் கண்டே.

Natrinai 244, Kootrankumaranār, Kurinji Thinai – What the heroine said to her friend
On his fragrant, lofty mountains rain
falls on the tall, cold slopes and pretty
bees that bear the fragrance of koothalam
flowers of the cold season hum, creating
desirable sweet music, listened keenly
by an asunam that thinks it is yāzh music.

You have not told him that my dark body,
like a tender leaf of a tall, pretty asoka tree
in the sapphire-colored mountains, has lost
its beauty, and has become sallow now.

You have not told my confused mother about
my great distress, or how to get rid of it.

You are very cruel, my friend!

Notes:  தலைவன் வரையாது காலம் தாழ்த்துவதால் தலைவி வருந்தினாள்.  தோழி அன்னையிடம் அறத்தொடு நிற்கக் கருதினாள்.  தோழியிடம் தலைவி உரைத்தது.  ஒளவை துரைசாமி உரை – ‘அறத்தொடு நிற்கும் காலத்தன்றி, அறத்தியல் மரபிலள் தோழி என்ப’ (தொல்காப்பியம், பொருளியல் 11) என்ற நூற்பா உரையில் இப்பாட்டைக் காட்டி, இது ‘தலைவி அறத்தொடு நிற்குமாறு என்பர் இளம்பூரணர்.  இனி நச்சினார்க்கினியர் ‘உயிரினும் சிறந்தன்று நாணே (தொல்காப்பியம், களவியல் 23) என்ற நூற்பா உரையில் இதனைக் காட்டி, ‘இஃது அறத்தொடு நிற்குமாறு’ தோழிக்குத் தலைவி கூறியது என்பர்.  உள்ளுறை – H.வேங்கடராமன் உரை – கூதள மலரில் வீழ்வதால் மணம் நாறுகின்ற வண்டு பாடும் ஓசையை, யாழிசை என்று கருதி அசுணம் ஆராயும் என்றது, தலைவன் தழுவ அதனால் ஏற்பட்ட வேறுபாட்டைக் கண்டு தாய் அணங்கு தீண்டியது போலும் என்று ஆராயா நிற்கும் என்றதாம்.  அசுணம் (4) – ஒளவை துரைசாமி உரை – அசுணம் என்னும் புள்.  விலங்கு வகை என்றலும் உண்டு.  நல்லிசையின் நலம் கண்டு இன்புறும் இயல்பு இதற்கு உண்டென்பது வழக்கு.  There are references to asunams in Natrinai 244, 304 and Akanānūru 88.

Meanings:  விழுந்த மாரி – rains that fell, பெருந்தண் – huge cold, சாரல் – mountain slopes, கூதிர் – cold season, கூதளத்து – of koothalam vines, Convolvulus ipome, a three-lobed nightshade vine, அலரி – flowers, நாறும் – are fragrant, மாதர் வண்டின் – of beautiful honey bees, நயவரும் –  causing desire, தீங்குரல் – sweet sounds, மணம் நாறு சிலம்பின் – on the fragrant mountain, அசுணம் ஓர்க்கும் – an asunam listens thinking it is the music of a yāzh, a mythological creature that loves music, உயர் மலை நாடற்கு – to the lord of the tall mountains, உரைத்தல் ஒன்றோ – you have not told (ஒன்றோ – எண்ணுப்பொருளைக் காட்டும் இடைச்சொல், a particle which has the force of addition or of enumeration), துயர் மருங்கு அறியா அன்னைக்கு – to mother who does not understand the reason for my great sorrow, இந்நோய் – this disease, this love affliction, தணியுமாறு – to go down, இது என உரைத்தல் ஒன்றோ – you have not told her (ஒன்றோ – எண்ணுப்பொருளைக் காட்டும் இடைச்சொல், a particle which has the force of addition or of enumeration), செய்யாய் – you did not do, ஆதலின் – hence, கொடியை – you are cruel, தோழி –  my friend, மணி கெழு நெடு வரை – tall mountains with sapphire, அணிபெற – with beauty, நிவந்த – tall, செயலை – Saraca indica,  Asoka tree, பிண்டி,  அம் – beautiful, தளிர் அன்ன – like tender leaves, beautiful, என் – my, மதன் இல் – without strength, மா மெய் – dark body, பசலையும் கண்டே – seeing my sallow body (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 245, அல்லங்கீரனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நகையாகின்றே தோழி, ‘தகைய
அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை
மணி மருள் ஐம்பால் வண்டு படத் தைஇத்,
துணி நீர்ப் பௌவம் துணையோடு ஆடி,
ஒழுகு நுண் நுசுப்பின் அகன்ற அல்குல்  5
தெளி தீம் கிளவி யாரையோ, என்
அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ?’ என,
பூண் மலி நெடுந்தேர்ப் புரவி தாங்கித்
தான் நம் அணங்குதல் அறியான், நம்மின்
தான் அணங்குற்றமை கூறி, கானல்  10
சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கிப்,
பெருங்கடற் சேர்ப்பன் தொழுது நின்றதுவே.

Natrinai 245, Allankeeranār, Neythal Thinai – What the heroine’s friend said to her
We wore very beautiful, bee-swarming
mundakam strands on your
sapphire-colored, five-part braids and
played with our friends in the ocean.

He came in his ornamented, tall chariot,
yoked with horses, and asked,
“Who are you with perfect, delicate waist,
wide loins and sweet clear words, who
captured my sweet life?”

He does not understand that he distressed
us.  He spoke about the distress we had
caused him.  It is funny, my friend, the way
the lord of the vast ocean’s shore bowed and
greeted us, looking at our bee-swarming,
bright foreheads!

Notes:  தலைவனின் குறை நேர்ந்த தோழி தலைவியிடம் நகையாடிக் கூறியது.  யாரையோ (8) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை (அகநானூறு 46 – ம் பாடலின் உரையில் கூறியது) ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது, சாரியையுமாம்.  யாரையோ (6) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை (அகநானூறு 46 – ம் பாடலின் உரையில் கூறியது) ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது, சாரியையுமாம்.  நீலமணிபோல் பெண்ணின் கூந்தல்:  அகநானூறு 8 – மணி ஏர் ஐம்பால், நற்றிணை 10 – மணியின் தாழ்ந்த நல் நெடுங்கூந்தல், நற்றிணை 133 – மணி ஏர் ஐம்பால், 214 – மணி இருங்கதுப்பு, 245 – மணி மருள் ஐம்பால், 337 – மணி மருள் ஐம்பால், 366 – மணி ஏர் ஐம்பால், 374 – வீழ் மா மணிய புனை நெடுங்கூந்தல், கலித்தொகை 22 – மணி ஒளி விட்டன்ன ஐவகை, கலித்தொகை 77 – மாசு அற மண்ணுற்ற மணி ஏசும் இருங்கூந்தல், பரிபாடல் 10, குறிஞ்சிப்பாட்டு 69 – பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம் பின்னிருங் கூந்தல், 112 – மணி நிறம் கொண்ட மா இருங் குஞ்சி.

Meanings:  நகையாகின்றே தோழி – it is funny my friend (ஏ – அசைநிலை, an expletive), தகைய அணி மலர் முண்டகத்து – very beautiful flowers of the mundakam plant (தகைய – பெயரெச்சக்குறிப்பு, முதனிலை தகை அழகு என்னும் பொருளது), நீர் முள்ளி, Hygrophila spinose, ஆய் பூங்கோதை – beautiful flower garland, மணி மருள் ஐம்பால் – sapphire-like five-part braid, வண்டு படத் தைஇ – we wore it as bees swarmed them (தைஇ – அளபெடை), துணி நீர் – clear water, பௌவம் துணையோடு ஆடி – played in the ocean with friends, ஒழுகு நுண் நுசுப்பின் – with a perfect and delicate waist, அகன்ற அல்குல் – wide loins, தெளி தீம் கிளவி – oh woman of clear sweet words  (அன்மொழித்தொகை), யாரையோ – who are you (ஓ – அசைநிலை, an expletive), என் அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ என – you who captured my precious sweet life , பூண் மலி – ornament-filled, நெடுந்தேர்ப் புரவி தாங்கி – came in a tall chariot with horses, தான் நம் அணங்குதல் அறியான் – he does not understand that he is distressing us (அறியான் – முற்றெச்சம், finite verb), நம்மின் – because of us, தான் அணங்குற்றமை கூறி – he spoke about his distress, கானல் – seashore grove, சுரும்பு இமிர் – bee-swarming, bee-buzzing, சுடர் நுதல் நோக்கி – looking at our bright foreheads, பெருங்கடல் சேர்ப்பன் – the lord of the vast ocean’s shore, தொழுது நின்றதுவே – the way he stood greeting us (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 246, காப்பியஞ்சேந்தனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
இடூஉ ஊங்கண் இனிய படூஉம்;
நெடுஞ்சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்;
மனை மா நொச்சி மீமிசை மாச் சினை,
வினை மாண் இருங்குயில் பயிற்றலும் பயிற்றும்;
உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்திச்,  5
செய் பொருட்கு அகன்றனர் ஆயினும் பொய்யலர்,
வருவர், வாழி தோழி! புறவின்
பொன் வீக் கொன்றையொடு பிடவுத் தளை அவிழ,
இன்னிசை வானம் இரங்கும்; அவர்
வருதும் என்ற பருவமோ இதுவே.  10

Natrinai 246, Kāppiyan Chēnthanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
There are sweet omens here!
A lizard on the tall wall clucks,
and a black cuckoo that is adept
in singing, sits on a huge branch
of a nochi tree in our house yard,
and sings again and again.

He went with a strong mind,
past several wasteland paths,
to earn wealth.  He will not fail.
He will come back!
May you live long, my friend!

In the forest, golden kondrai and
nearby pidavam flowers have opened.
There is sweet rumbling in the skies.
This is the seaon for him to return!

Notes:  பிரிவிடை மெலிந்த தலைவியிடம் தோழி கூறியது.  மனை நொச்சி – அகநானூறு 21 – மனை இள நொச்சி, அகநானூறு 23 – மனைய தாழ்வின் நொச்சி, அகநானூறு 367 – மனை வளர் நொச்சி, நற்றிணை 246 – மனை மா நொச்சி, பொருநராற்றுப்படை 185 – மனை நொச்சி.  There are references to lizard omens in Akanānūru 9, 88, 151, 289, 351, 387, Kurunthokai 16, 140, Natrinai 98, 169, 246, 333 and Kalithokai 11.  Natrinai 161 has a reference to bird omen.  Natrinai 40 and Mullaippāttu 11 have references to women waiting for good omen.

Meanings:  இடூஉ – as considered, as indicated (அளபெடை), ஊங்கண் – there, இனிய படூஉம் – announces sweet omens (படூஉம் – அளபெடை), நெடுஞ்சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும் – the lizard on the tall wall clucks making us understand the good situation for us, மனை மா நொச்சி மீமிசை – on the huge nochi tree in the house yard, Vitex leucoxylon, Chaste tree (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), மாச் சினை – huge branch, வினை மாண் – esteemed in its work (singing work), இருங்குயில் பயிற்றலும் பயிற்றும் – a black cuckoo sings repeatedly, Indian koel, உரம் புரி உள்ளமொடு – with a strong mind, சுரம் பல நீந்தி செய்பொருட்கு அகன்றனர் ஆயினும் – even though he passed many wasteland paths to earn money, பொய்யலர் – he will not fail, he’ll be truthful to his words, வருவர் – he will come back, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – oh friend, புறவின் பொன் வீக் கொன்றையொடு – with the  forest’s golden kondrai flowers, சரக்கொன்றை, கடுக்கை – Laburnum, Golden Shower Tree, Cassia fistula, பிடவுத் தளை அவிழ – nearby pidavam buds open loosening their tightness and blossom, காட்டு மல்லிகை, wild jasmine, Randia malabarica, இன்னிசை வானம் இரங்கும் – sweet music roars from the skies, அவர் வருதும் என்ற பருவமோ இதுவே – this is the season that the said he would return (ஓ – அசைநிலை, an expletive, ஏ – அசைநிலை, தேற்றம், an expletive, certainty)

நற்றிணை 247, பரணர், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
தொன்றுபடு துப்பொடு முரண் மிகச் சினைஇக்
கொன்ற யானைச் செங்கோடு கழாஅ
அழிதுளி பொழிந்த இன் குரல் எழிலி,
எஃகுறு பஞ்சிற்று ஆகி வைகறைக்
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட! நீ  5
நல்காய் ஆயினும், நயன் இல செய்யினும்,
நின் வழிப்படூஉம் என் தோழி நன்னுதல்
விருந்து இறைகூடிய பசலைக்கு
மருந்து பிறிது இன்மை நன்கு அறிந்தனை சென்மே.

Natrinai 247, Paranar, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
Oh lord of the mountains,
where clouds that appear
like soft, carded cotton,
move around the tall summits
in the early morning hours,
and come down as heavy rain
to wash the bloody tusks of
a strong, enraged elephant
with great hostility, that killed
a tiger, due to ancient enmity!

Even though you do not shower
graces and do unkind things,
my friend wants to go your way,

There is no other medicine
but you, to cure the new pallor
that has descended on her fine
forehead.  Please understand
this well before you leave!

Notes:  களவில் வந்தொழுகும் தலைவன் வினைவயிற் பிரியும் காலத்தில் தோழி அவனிடம் கூறியது.  வரைவு கடாயது.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – தான் கொண்ட நீரை மிகைபடச் சொரிந்து யானைக் கோட்டின் குருதிக்கறை நீங்க இரவிற் பெய்த மழை முகில் வைகறைப் போதில் பஞ்சிபோற் பரந்து மலை முடிவில் தவழும் என்றதால், தான் பேணி வளர்த்த நலமெல்லாம் கனவின்கண் நின்குறை நீங்கக் கூடி நல்கிய யாம், வரைவால் மாண்புறுதற்குரிய செவ்விக்கண் பசலையால் விளர்ந்து வருந்துவேம் ஆயினோம் எனத் தோழி உள்ளுறைத்தாள்..  Clouds resembling carded cotton – அகநானூறு 133 – வில் எறி பஞ்சியின், அகநானூறு 217 – பொங்கல் வெண்மழை எஃகுறு பஞ்சித் துய்ப்பட்டன்ன, நற்றிணை 247 – இன் குரல் எழிலி எஃகுறு பஞ்சிற்று ஆகி, ocean waves resembling carded cotton – நற்றிணை 299 – வில் எறி பஞ்சி போல.  Elephant washing its tusks after killing a tiger – நற்றிணை 151 – இரும்புலி அரும் புழைத் தாக்கிச் செம் மறுக் கொண்ட வெண்கோட்டு யானை கல் மிசை அருவியின் கழூஉம், நற்றிணை 247 – தொன்றுபடு துப்பொடு முரண் மிகச் சினைஇக் கொன்ற யானைச் செங்கோடு கழாஅ.

Meanings:  தொன்றுபடு – for a long time, துப்பொடு முரண் மிகச் சினைஇக் கொன்ற யானை – with strength and great hostility and rage an elephant killed a tiger (சினைஇ – அளபெடை), செங்கோடு – red tusks, கழாஅ – to be able to wash, அழிதுளி பொழிந்த – heavy rains poured, இன் குரல் எழிலி – clouds with sweet sounds, எஃகுறு பஞ்சிற்று ஆகி – became like cotton that is softened by cleaning with a carding tool (எஃகுறுதல் – பஞ்சியை வில் என்ற இரும்புக் கருவியால் தூய்மைப்படுத்துதல்), வைகறைக் கோடு உயர் நெடு வரை ஆடும் நாட – oh man from the land where in the early morning clouds move around on the tall peaks, நீ நல்காய் ஆயினும் – even though you do not shower graces, நயன் இல செய்யினும் – even though you have done unkind things (இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்), நின் வழிப்படூஉம் – she wants to go your way (வழிப்படூஉம் – அளபெடை), என் தோழி – my friend, நன்னுதல் – fine forehead, விருந்து – new, இறைகூடிய பசலைக்கு – for the pallor which came and stayed (இறைகூடிய – நிலைபெற்று இருக்கும்), மருந்து பிறிது இன்மை – there is no other medicine, நன்கு அறிந்தனை – understand well (முற்றெச்சம், finite verb), சென்மே – you leave (ஏகார ஈற்று முன்னிலை வினைச்சொல், மகர மெய்யூர்ந்து வந்தது, a verb of the second person) 

நற்றிணை 248, காசிபன் கீரனார், முல்லைத் திணை – தோழி முகிலிடம் சொன்னது
‘சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ
பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்பத்
தண் புதல் அணிபெற மலர வண் பெயல்
கார்வரு பருவம்’ என்றனர் மன், இனிப்
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர்,  5
அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும்
பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும்
இன மயில் மடக் கணம் போல,
நினை மருள்வேனோ வாழியர் மழையே.

Natrinai 248, Kāsipan Keeranār, Mullai Thinai – What the heroine’s friend said to the cloud
He promised to come after the heavy
rains,
when the cool, beautiful bushes filled
with new, honey-fragrant mullai
blossoms look like the tawny faces of
fine elephants covered with lines and
dots.

May you live long, oh cloud!  You see her
filled with great sorrow and a trembling
heart.  You have no kindness or goodness.

Like the ignorant peacock flocks that
dance on hearing the false rumbles in
the sky thinking that it is the real rain,
I will not be confused by what you do!

Notes:  பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி மழைமேல் வைத்து பருவம் மறுத்தது.  வாழியர் (9) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – இகழ்ச்சிக்குறிப்பு, ஒளவை துரைசாமி உரை – குறிப்பு மொழி.  The heroine’s friend is in denial that the rainy season has arrived.  She blames the peacocks.  There are a few poems which describe such feelings, where rainclouds, dancing peacocks and flowering trees are blamed.  Kurunthokai 21, 66, 94, 220, 289 and 391 have such descriptions.

Meanings:  சிறு வீ – small flowers, முல்லை – jasmine, தேம் கமழ் – honey fragrant, sweet fragrant, பசு வீ – fresh flowers (தேம் தேன் என்றதன் திரிபு), பொறி – dots, வரி – lines, நல் மான் – fine animal (elephant), புகர் – tawny colored, spotted, முகம் கடுப்ப – like the face (கடுப்ப – உவம உருபு, a comparison word), தண் புதல் – cool bushes, அணிபெற – to get beautiful, மலர – they blossom, வண் பெயல் – heavy rain, கார்வரு பருவம் – when rainy season arrives, என்றனர் – he said, மன் – அசைநிலை, an expletive, இனி – now, பேர் அஞர் – great sorrow, உள்ளம் நடுங்கல் – heart trembling, காணியர் – to see, அன்பு இன்மையின் – without love, பண்பு இல – no goodness (இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்), பயிற்றும் – making noises, பொய் – false, இடி அதிர் குரல் – loud sounds of thunder, வாய் – truth, செத்து – thinking, ஆலும் – they dance, இன மயில் – peacock flocks, மடக் கணம் போல – like an ignorant flock, நினை – on seeing you, மருள்வேனோ – will I be confused (I will not be confused), வாழியர் மழையே – may you live long oh cloud (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 249, உலோச்சனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை
நீலத்து அன்ன பாசிலை அகந்தொறும்;
வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண்
பொன்னின் அன்ன நறுந்தாது உதிரப்,
புலிப் பொறிக் கொண்ட பூ நாறு குரூஉச் சுவல்  5
வரி வண்டு ஊதலின் புலி செத்து வெரீஇப்,
பரியுடை வயங்கு தாள் பந்தின் தாவத்
தாங்கவும் தகை வரை நில்லா ஆங்கண்,
மல்லல் அம் சேரி கல்லெனத் தோன்றி,
அம்பல் மூதூர் அலர் எழ  10
சென்றது அன்றோ, கொண்கன் தேரே?

Natrinai 249, Ulōchanār, Neythal Thinai – What the heroine said to her friend
The iron-like, black branches of punnai
trees have sapphire-hued, fresh leaves;
their clusters of bright silvery flowers
drop fragrant pollen that appears like gold.

Striped bees with flower fragrance and
spots like those of tigers on their colored
backs buzz.  His horse with strong legs
thought the buzzing sounds were the
roars of a tiger, jumped in fear like a ball
and trotted away, unable to be stopped.

Loud gossip arose quickly in our flourishing
ancient town and in our prosperous street,
as the chariot of the lord of the seashore
went away, without stopping.  Did it not?

Notes:  வரைவதற்குப் பொருள் தேடிப் பிரிந்தான் தலைவன்.  வருந்திய தோழி உரைத்தது.  பூ நாறு குரூஉச் சுவல் (5) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அழகு விளங்கிய நல்ல நிறமுற்ற மேற்புறத்தையுடைய (வண்டுகள்), ஒளவை துரைசாமி உரை – பூவின் மணம் கமழும் நிறம் பொருந்திய மணல் மேடு. Natrinai 133 and 249 have references to iron.  There are 29 references to iron in the Sangam poems.  குரு – குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே (தொல்காப்பியம், உரியியல் 5).  மல்லல் – மல்லல் வளனே (தொல்காப்பியம், உரியியல் 7).  பாசிலை அகந்தொறும் (2) – ஒளவை துரைசாமி உரை – பசிய இலையிடந்தோறும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பசிய இலையிடமெங்கும்.  குதிரையின் பந்து அன்ன ஓட்டம்:  அகநானூறு 105 – பந்து புடைப்பு அன்ன பாணிப் பல்லடிச் சில் பரிக் குதிரை, நற்றிணை 249 – வரி வண்டு ஊதலின் புலி செத்து வெரீஇப் பரியுடை வயங்கு தாள் பந்தின் தாவ.

Meanings:  இரும்பின் அன்ன – like iron (இரும்பு அன்ன, இரும்பின் – இன் சாரியை), கருங்கோட்டுப் புன்னை – black-branched punnai trees – நாகம் – Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, நீலத்து அன்ன – like sapphire (நீலத்து – நீலம், அத்து சாரியை), பாசிலை – fresh leaves, அகம்தொறும் – all over, in all the places, வெள்ளி அன்ன – like silver, விளங்கு இணர் – bright bunches, நாப்பண் – in the middle, பொன்னின் அன்ன – like gold (பொன்னின் – இன் சாரியை), நறுந்தாது உதிர – fragrant pollen drops, புலிப் பொறிக் கொண்ட – having marks like the tiger, பூ நாறு – flower-fragrant, lovely fragrance, குரூஉச் சுவல் – colorful backs, bright backs (அளபெடை), வரி வண்டு ஊதலின் – due to the buzzing of striped bees, புலி செத்து – thinking that it was a tiger, வெரீஇ – it became scared (வெரீஇ – அளபெடை), பரியுடை வயங்கு தாள் – strong legs of the horse, பந்தின் தாவ – jumped like a ball (பந்தின் – இன் உருபு ஒப்புப் பொருளது), தாங்கவும் – even when blocked, even when the reins were kept tight, தகை வரை – went past the control, நில்லா – not stopping, ஆங்கண் – there, மல்லல் அம் சேரி – prosperous street, wealthy village (அம் – சாரியை), கல்லெனத் தோன்றி – appeared with a noise, அம்பல் மூதூர் – gossiping ancient town, அலர் எழ – slander arose, சென்றது அன்றோ – did it not go, கொண்கன் தேரே – the chariot of the lord of the shores (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 250, மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார், மருதத் திணை – தலைவன் பாணனிடம் சொன்னது
நகுகம் வாராய் பாண! பகுவாய்
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில்
தேர் நடை பயிற்றும் தேமொழிப் புதல்வன்,
பூ நாறு செவ்வாய் சிதைத்த சாந்தமொடு
காமர் நெஞ்சம் துரப்ப யாம் தன்  5
முயங்கல் விருப்பொடு குறுகினேம் ஆகப்,
பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல்
நாறு இருங்கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து,
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ,
யாரையோ என்று இகந்து நின்றதுவே.  10

Natrinai 250, Mathurai Ōlaikadaiyathār Nalvellaiyār, Marutham Thinai – What the hero said to the messenger bard
Let us laugh about this, bard!
I lifted my son whose words are
like honey, who wears jingling
anklets strung with tiny-pebbled
bells with split mouths, and is
learning to walk with his toy
chariot on the street.  The spit
from his flower- fragrant, red
mouth smeared the sandal paste
on my chest.

Goaded by love, I went near my wife
with fragrant, dark hair and faultless,
pretty brow looking like the crescent
moon.
She, feeling uncomfortable, with the
looks of a fearful deer, moved away
and asked me, “Who are you?”

Notes:  புதல்வனொடு புகுந்த தலைவன் ஆற்றானாய்ப் பாணனிடம் உரைத்தது.  ஒளவை துரைசாமி உரை – ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) எனத் தொடங்கும் நூற்பாவில், ‘அழியல் அஞ்சல் என்று ஆயிரு பொருளினும் தான் அவட் பிழைத்த பருவத்தானும்’ என்பதற்கு இப்பாட்டைக் காட்டுவர் இளம்பூரணர்.  நச்சினார்க்கினியர், இந்நூற்பாவில் வரும் ‘ஏனைவாயில் எதிரொடு தொகைஇ’ என்றதற்கு இதனைக் காட்டி, ‘இஃது ஏனை வாயிலாகிய பாணற்கு உரைத்தது’ என்பர்.  பதிற்றுப்பத்து 52 – யாரையோ எனப் பெயர்வோள்.  செவ்வாய் (4) – ஒளவை துரைசாமி உரை – சிவந்த வாயினின்று ஒழுகும் உமிழ் நீர், ஆகுபெயர்.  யாரையோ (10) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை (அகநானூறு 46 – ம் பாடலின் உரையில் கூறியது) ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது, சாரியையுமாம்.

Meanings:  நகுகம் – let us laugh, வாராய் பாண – come oh bard, பகுவாய் அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப –  as the anklets with strung split-mouthed bells with tiny pebbles jingled, தெருவில் தேர் நடை பயிற்றும் தேமொழிப் புதல்வன் – our son with sweet words who learns to walk with his toy chariot on the street, பூ நாறு செவ்வாய் – flower-fragrant red mouth with saliva, சிதைத்த சாந்தமொடு – with smeared sandal paste, காமர் நெஞ்சம் துரப்ப – goaded by a loving heart, யாம் – I, தன்மைப் பன்மை, first person plural, தன் முயங்கல் விருப்பொடு – with a desire to embrace, குறுகினேம் ஆக – as I went near (தன்மைப் பன்மை, first person plural), பிறை வனப்பு உற்ற – beautiful like the crescent moon (உற்ற – போன்ற), மாசு அறு – blemish-less, திரு நுதல் – beautiful forehead, நாறு இருங்கதுப்பின் எம் காதலி – my beloved wife with fragrant dark hair, வேறு உணர்ந்து – felt different, வெரூஉம் மான் பிணையின் – like a fearing female deer (வெரூஉம் – அளபெடை, பிணையின் – இன் உருபு ஒப்புப் பொருளது), ஒரீஇ – moved away (அளபெடை), யாரையோ – who are you, என்று இகந்து நின்றதுவே – the fact that she moved away (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 251, மதுரைப் பெருமருதன் இளநாகனார், குறிஞ்சித் திணை – தோழி தினைச் செடியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
நெடுநீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண்,
பிணி முதல் அரைய பெருங்கல் வாழைக்
கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும்
நல் மலை நாடனை நயவா யாம், அவன்
அளி பேர் அன்பின் நின் குரல் ஓப்பி,  5
நின் புறங்காத்தலும் காண்போய் நீ? என்
தளிர் ஏர் மேனித் தொல் கவின் அழிய,
பலி பெறு கடவுள் பேணி கலி சிறந்து
தொடங்கு நிலைப் பறவை உடங்கு குரல் கவரும்,
தோடு இடம் கோடாய் கிளர்ந்து,  10
நீடினை விளைமோ! வாழிய தினையே.

Natrinai 251, Mathurai Perumaruthan Ilanākanār, Kurinji Thinai – What the heroine’s friend said to the millet plant, as the hero listened nearby
Oh millet plant!  Because of our love
for him and because of the graces and
great love of the man from the mountains,
……….where tall waterfalls cascade
……….down creating loud music,
……….and monkeys grab luscious, fine,
……….mature fruits from nearby,
………. well-rooted banana trees,
we protected your clusters from parrots,
chasing them away.  You have seen that.  

Mother has made abundant offerings to
the gods, and confined me to our home,
causing my sprout-like, pretty body to
lose its beauty.

Flying birds will come to attack your
grain clusters.  Stand erect for long, not
bending, and may your grains mature for
a long time.  May you flourish!

Notes:  தலைவியைத் தானாகக் கொண்டு கூறியது.  களவில் வந்தொழுகும் தலைவனிடம் தலைவியைத் தமர் இற்செறித்தர் எனக் கூறியது.  வரைவு கடாயது.  உள்ளுறை – H. வேங்கடராமன் உரை – அருவி ஒலிக்கின்ற இடத்துத் தோன்றிய வாழையின் கனியை மந்தி கவரும் என்றது, தமரெல்லாம் கூடி மகிழ்கின்ற இடத்து வரைவொடு புகுந்து தலைவன் தலைவியை உவகையுடன் துய்ப்பான் என்றதாம்.  நயவா – நயந்து என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  நெடுநீர் அருவிய கடும் பாட்டு – the loud sounds of the tall waterfalls, ஆங்கண் – there, பிணி முதல் அரைய – with well rooted trunks, பெருங்கல் – big mountain, வாழைக் கொழு முதல் ஆய் கனி – luscious mature chosen/beautiful fruits of the banana trees, மந்தி கவரும் – female monkeys get them, நல் மலை நாடனை – the lord of the fine mountains, நயவா – desiring (நயந்து), யாம் – we, அவன் அளி பேர் அன்பின் – because of his graces and great love, நின் – your, குரல் – clusters, ஓப்பி – chasing, நின் புறங்காத்தலும் – protecting you, காண்போய் நீ – you have seen, என் தளிர்  ஏர் மேனித் தொல் கவின் அழிய – for my sprout-like body to lose its past beauty (ஏர் – உவம உருபு, a comparison word), பலி பெறு கடவுள் பேணி – made offerings to god that receives offerings, கலி சிறந்து – flourishing greatly, தொடங்கு நிலைப் பறவை உடங்கு – flying birds come together, குரல் கவரும் – they seize the clusters of grains, தோடு இடம் கோடாய் – without your leaves/sheaves bending, கிளர்ந்து – standing erect, நீடினை – for a long time, விளைமோ – may your grains mature, may your grains flourish (மோ – முன்னிலை அசை, an expletive used with the second person), வாழிய – அசைநிலை, an expletive, may you live long, தினையே – oh millet (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 252, அம்மெய்யன் நாகனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கிச்,
சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம்,
திறம் புரி கொள்கையொடு இறந்து செயின் அல்லது
அரும் பொருட் கூட்டம் இருந்தோர்க்கு இல் என,
வலியா நெஞ்சம் வலிப்ப, சூழ்ந்த  5
வினை இடை விலங்கல போலும், புனை சுவர்ப்
பாவை அன்ன பழி தீர் காட்சி
ஐது ஏய்ந்து அகன்ற அல்குல், மை கூர்ந்து
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்,
முயல் வேட்டு எழுந்த முடுகு விசைக் கத நாய்  10
நல் நாப் புரையும் சீறடிப்,
பொம்மல் ஓதி, புனை இழை குணனே.

Natrinai 252, Ammeyyan Nākanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
Your beauty, like that of a painting of a
woman on a wall, with delicate, perfect, wide
loins, kohl-rimmed, moist eyes with dark lids
that are like big flowers tied together, pretty,
small feet that resemble the lovely tongue of
a rapidly rising angry dog that hunts hares,
and overflowing hair and fine jewels, did not
stop his going away.

He went to a distant country on the wasteland
path, where crickets screech, hiding in the dry
branches of omai trees.

He went with firm principles, as his heart
without strength goaded him.  Accumulating
precious wealth is not for those who do not leave.

Notes:  தலைவன் பொருள்வயின் பிரிவான் என்னும் குறிப்பறிந்து தலைவி வருந்தினாள்.  அவளிடம் தோழி உரைத்தது.  நாயின் நாக்கு அன்ன அடி:  நற்றிணை 252 – கத நாய் நல் நாப் புரையும் சீறடி, மலைபடுகடாம் 42-43 – ஞமலி நாவின் அன்ன துளங்கு இயல் மெலிந்த கல்பொரு சீறடி, பொருநராற்றுப்படை 42- வருந்து நாய் நாவின் பெருந்தகு சீறடி, சிறுபாணாற்றுப்படை 17-18 – உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ வயங்கு இழை உலறிய அடியின் அடி.  உள்ளுறை (1) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – சிள்வீடு மரத்தில் பட்ட கிளையொடு மறைந்து உள் ஒடுங்கி ஒலிக்கும் என்றது, தலைவியின் காமமும் கற்பின் மிகுதியால் வெளிப்படத் தோன்றாது உள்ளத்தே நின்று வருந்தும் என்பதனைக் குறிப்பித்தது, உள்ளுறை (2) – ஒளவை துரைசாமி உரை – ஓமையின் ஒல்குநிலை ஒடுங்கிச் சிள்வீடு கறங்கும் என்றதனால், ‘இனி நாம் நம் மனைக்கண் ஒடுங்கி நமக்குரிய அறம் புரிந்து ஒழுகுவதே கடன்.

Meanings:  உலவை ஓமை – omai trees with branches, Toothbrush Tree, Dillenia indica, ஒல்கு நிலை – dried tree branches, ஒடுங்கி – hiding, சிள்வீடு கறங்கும் – crickets screech, சேய் நாட்டு அத்தம் – wasteland path in a distant country, திறம் புரி கொள்கையொடு – with great principles, with firm principles, இறந்து – went, செயின் அல்லது – not struggling, அரும் பொருட் கூட்டம் இருந்தோர்க்கு இல் – accumulating rare wealth is not for those who do not go, என வலியா நெஞ்சம் வலிப்ப – and his heart with no strength goading, சூழ்ந்த வினை இடை – his consideration for his task, விலங்கல போலும் – did not block, புனை சுவர்ப் பாவை அன்ன – like a painting of a woman on the wall, பழி தீர் காட்சி – faultless appearance, ஐது – delicate, beautiful, ஏய்ந்து – with (ஏய்ந்து – பொருந்தி), அகன்ற அல்குல் – wide loins, மை கூர்ந்து – with lots of kohl, மலர் பிணைத்தன்ன – like flowers tied together, மா இதழ் – dark eyelids, big eyelids, மழைக் கண் – moist eyes, முயல் வேட்டு எழுந்த முடுகு விசை – swift and rising to hunt hares, கத நாய் நல் நா புரையும் சீறடி – small feet like the pretty tongue of an angry dog, பொம்மல் ஓதி – woman with abundant hair, woman with overflowing (பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, an attributive compound), புனை இழை – அன்மொழித்தொகை), குணனே – trait, character (குணன் குணம் என்றதன் போலி, ஏகாரம் அசைநிலை, an expletive)

நற்றிணை 253, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
புள்ளுப் பதி சேரினும், புணர்ந்தோர்க் காணினும்,
பள்ளி யானையின் வெய்ய உயிரினை,
கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்து
எனவ கேளாய் நினையினை நீ, நனி
உள்ளினும் பனிக்கும் ஒள் இழைக் குறுமகள்,  5
பேர் இசை உருமொடு மாரி முற்றிய,
பல் குடைக் கள்ளின் வண் மகிழ்ப் பாரி
பலவு உறு குன்றம் போலப்,
பெருங்கவின் எய்திய அருங்காப்பினளே.

Natrinai 253, Kapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
You sigh with hot breaths like a sleeping
elephant, when you see birds unite in their
nests or when lovers embrace each other.

You don’t listen to what I say, since
you are hurt greatly, filled with sorrow.
She trembles whenever she thinks about
the situation.

She is kept under strict guard by her family,
the young woman wearing bright jewels,
who is beautiful like Parampu mountain
with abundant jackfruit trees where rain falls
with roaring thunder, belonging to generous
Pāri owning many pots of aged liquor.

Notes:  தலைவி இற்செறிக்கப்பட்டாள் என்பதைக் கூறி வரைவு கடாயது.  கடையெழு வள்ளல்கள் – ஆய், பாரி, காரி, ஓரி, அதிகன், பேகன், நள்ளி.  நற்றிணை 190 – மாரி வண் மகிழ்த் திதலை எஃகின் சேந்தன் தந்தை தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி.  உள்ளினும் பனிக்கும்.  ஒளவை துரைசாமி உரை – பிறர் கொள்வற்காகாத பெருங்காவல் பாரியின் பறம்பு மலையில் இருந்து வந்தமையின், அதனையே இங்கு விதந்து, பலவுறு குன்றம் போல என உவமம் செய்தார்.  வரலாறு:  பாரி.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3). கழி –  உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 18).  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  புள்ளுப் பதி சேரினும் – when birds unite in their nests, புணர்ந்தோர்க் காணினும் – and on seeing lovers who unite, பள்ளி யானையின் – like a sleeping elephant (யானையின் – இன் உருபு ஒப்புப் பொருளது), வெய்ய உயிரினை – you sigh with hot breaths, கழிபட – abundantly (கழி – மிகுதி), வருந்திய எவ்வமொடு – with great sorrow, பெரிது அழிந்து – greatly hurt, எனவ கேளாய் – you do not listen to me (எனவ – அ விரித்தல் விகாரம், பலவறி சொல்), நினையினை நீ – you are thinking, நனி – a lot, உள்ளினும் பனிக்கும் – she trembles when she thinks about the situation, ஒள் இழை குறுமகள் – the young girl wearing bright jewels, பேர் இசை உருமொடு – with thunder with roaring sounds, மாரி – rains, முற்றிய – aged, பல் குடை – many pots, many baskets, கள்ளின் – with alcohol, வண் மகிழ்ப் பாரி – very happy Pāri, பலவு உறு – with abundant jackfruit trees, Artocarpus heterophyllus (உறு – மிக்க), குன்றம் போல – like Parampu mountain, பெருங்கவின் – great beauty, எய்திய – attained, அருங்காப்பினளே – she is under heavy protection (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 254, உலோச்சனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
வண்டல் தைஇயும், வருதிரை உதைத்தும்,
குன்று ஓங்கு வெண்மணற் கொடி அடும்பு கொய்தும்,
துனி இல் நல்மொழி இனிய கூறியும்,
சொல் எதிர் பெறாஅய் உயங்கி மெல்லச்
செலீஇய செல்லும் ஒலி இரும் பரப்ப!  5
உமணர் தந்த உப்பு நொடை நெல்லின்
அயினி மா இன்று அருந்த, நீலக்
கணம் நாறு பெருந்தொடை புரளும் மார்பின்
துணை இலை தமியை சேக்குவை அல்லை,
நேர்கண் சிறுதடி நீரின் மாற்றி 10
வானம் வேண்டா உழவின் எம்
கானல்அம் சிறுகுடிச் சேந்தனை செலினே.

Natrinai 254, Ulōchanār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
Oh lord of the loud ocean!  You spoke
sweet words without dislike, played
with us making little sand houses,
kicked arriving waves, and plucked
the flowers of adumpu vines growing
on the hill-like tall, white sand dunes.

Now, without getting a response to
your words, you say you are leaving.

If you stay, your horses can eat the
rice from paddy the salt merchants
got trading their salt.  You will not be
alone without your lover with a large,
fragrant blue waterlily flower garland
that sways on her chest.

Stay now and then you can leave our
beautiful, small village near the
seashore grove, where we have square
salt pans where salt is made,
changing water, and not desiring rains.

Notes:  தலைவன் பின்னின்று தன் குறையை உரைத்தான்.  அது நிறைவேறாததால் வருந்திய தலைவனிடம் தோழி கூறியது.  நேர்கண் (10) – ஒளவை துரைசாமி உரை – சதுரம், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நேர்மையான இடம், H.வேங்கடராமன் உரை – ஒழுங்கு.  வானம் வேண்டா உழவின் (11) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மழையை விரும்பாத வேளாண்மையுடைய.

Meanings:  வண்டல் தைஇயும் – creating little sand houses (தைஇ – அளபெடை), வருதிரை உதைத்தும் – kicking the arriving waves, குன்று ஓங்கு வெண்மணற் கொடி அடும்பு கொய்தும் – plucking the flowers of the adumpu vine growing in the hill-like tall white sand dunes, Ipomoea pes caprae, துனி இல் நல் மொழி – fine words without hatred, இனிய கூறியும் – even after uttering them sweetly, சொல் எதிர் பெறாஅய் ஆகி – you not getting a response for your words (பெறாஅய் – அளபெடை), மெல்ல – slowly, செலீஇய – to leave (அளபெடை), செல்லும் – leaving, ஒலி இரும் பரப்ப – oh lord of the loud ocean, உமணர் தந்த – given by salt merchants, உப்பு நொடை நெல்லின் – with the paddy got by selling salt, அயினி மா இன்று அருந்த – today your horses will eat cooked rice, நீலக் கணம் நாறு பெருந்தொடை புரளும் மார்பின் துணை இலை தமியை சேக்குவை அல்லை – you will not be able to be alone without the young woman with a very fragrant huge blue waterlily garland that sways/swirls on her chest, kuvalai (இலை – இல்லை என்பதன் விகாரம்), நேர்கண் சிறுதடி – small salt pans, ponds in a row, square ponds, நீரின் மாற்றி – changing the water, வானம் வேண்டா உழவின் – producing salt which does not desire rain, எம் கானல் அம் சிறுகுடி – our village on the seashore (அம் – சாரியை), சேந்தனை செலினே – if you stay here and go (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 255, ஆலம்பேரி சாத்தனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கழுது கால் கிளர ஊர் மடிந்தன்றே;
உருகெழு மரபின் குறிஞ்சி பாடி
கடியுடை வியல் நகர்க் கானவர் துஞ்சார்;
வயக் களிறு பொருத வாள்வரி உழுவை
கல் முகைச் சிலம்பில் குழுமும்; அன்னோ!  5
மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும், இன்று அவர்
வாரார் ஆயினோ நன்று மன், தில்ல,
உயர்வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னிப்
பெயல் கால் மயங்கிய பொழுது கழி பானாள்,
திருமணி அரவுத் தேர்ந்து உழல, 10
உருமுச் சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே.

Natrinai 255, Ālampēri Sāthanār, Kurinji Thinai – What the heroine said to her friend
Ghouls move like the wind,
the town has gone to sleep,
and mountain dwellers living
in protected, large houses sing
songs in kurinji tunes,
in their fear-causing tradition,
without going to sleep.

A tiger with sword-like stripes,
roars in a rocky mountain cave,
after battling a strong elephant.

Alas!  Even if my delicate arms
grow thin and I am in sorrow,
it would be very good if he does
not come today through the tall
mountain path,
where bright lightning flashes,
rain and wind are mixed
at this untimely midnight, and
roaring thunder attacks in rage
as snakes search in distress
for their beautiful, lost gems.  

Notes:   களவினை நீட்டியாது, மணங் கொள்ளத் தலைவி விரும்பினாள்.  தோழியிடம் தலைவன் வரும் வழியில் உள்ள துன்பத்தைக் கூறி அவனை விரைந்து மணம் புரியத் தூண்டுக எனக் கூறியது.  ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவில் ‘ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும்’ என்பதற்கு இதனைக் காட்டி, ‘இரவுக்குறி வரவால் தலைவி வருந்துவள் என்றது’ என்பர் நச்சினார்க்கினியர்.  வாள்வரி (4) – ஒளவை துரைசாமி உரை – ஒளியுடைய வரி, கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – வாள் போன்ற கோடுகள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வாள் போலும் கோடுகள்.  There is a convention that thunder ruins and kills snakes.  Akanānūru 68, 92, 119, 182, 202, 274, 323, 328, Kalithokai 45, 113, Kurunthokai 158, 190, 268, 391 and Natrinai 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, Puranānūru 17, 37, 58, 126, 211, 366 and 369 have similar descriptions of thunder ruining or killing snakes.  There was this belief that snakes spit gems.  Puranānūru 294, Akanānūru 72, 92, 138, 192, 372, Kurunthokai 239 and Natrinai 255, have references to snakes spitting gems.   அகநானூறு 319 – அணங்கு கால் கிளரும் மயங்கு இருள் நடுநாள்.

Meanings:  கழுது – ghouls, கால் கிளர – rising up like the wind, moving like the wind, ஊர் மடிந்தன்றே – the town has slept, உருகெழு மரபின் – of fear instilling tradition, குறிஞ்சி பாடி – singing in the kurinji tune, கடியுடை வியல் நகர்க் கானவர் துஞ்சார் – the mountain dwellers living in protected big houses do not sleep, வயக் களிறு – strong elephant, பொருத – fought, வாள் வரி உழுவை – a tiger with sword-like stripes, a tiger with bright stripes, கல் முகைச் சிலம்பில் – in the mountain caves with rocks, குழுமும் – roars, அன்னோ – what a pity, மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும் – even if my delicate arms become thin and I am sad, இன்று அவர் வாரார் ஆயினோ நன்று மன் – it would be very  good if he does not come today (மன் – மிகுதிக் குறிப்பு), தில்ல – தில் விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச்சொல், ஈறு திரிந்தது வந்தது, a particle that implies desire, உயர் வரை அடுக்கத்து – in the tall mountain slopes, ஒளிறுபு மின்னி – lightning flashes with brightness, பெயல் கால் மயங்கிய பொழுது – when rain and wind mixed, கழி பானாள் – untimely middle of the night, திரு மணி – beautiful gems, அரவு – serpents, தேர்ந்து உழல – searching in distress, உருமுச் சிவந்து எறியும் – thunder attacks with rage, ஓங்கு வரை – tall mountain, ஆறே – path (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 256, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
நீயே பாடல் சான்ற பழி தபு சீறடி,
அல்கு பெரு நலத்து அமர்த்த கண்ணை;
காடே நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த,
புலம்பு வீற்றிருந்து நலம் சிதைந்தனவே,
இந்நிலை தவிர்ந்தனம் செலவே வைந்நுதிக்  5
களவுடன் கமழ, பிடவுத் தளை அவிழக்,
கார் பெயல் செய்த காமர் காலை,
மடப் பிணை தழீஇய மா எருத்து இரலை
காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த
கண் கவர் வரி நிழல் வதியும்  10
தண்படு கானமும் தவிர்ந்தனம் செலவே.

Natrinai 256, Chēramān Pālai Pādiya Perunkadunkō, Pālai Thinai – What the hero said to the heroine
With your faultless, petite feet
and big, beautiful, calm eyes,
you are worthy of songs.

The forests have lost their beauty
to the fires that have consumed
their trees.
they are desolate and shattered and
I have avoided going there now.

I had also avoided going to the cool
forests at the beautiful time
when season’s rains had fallen,
kalā flowers with sharp tips had
spread their fragrance,
pidavam flowers had opened their
petals,
and stags with dark necks united
with their delicate mates and rested
in the dappled shade of the
low-hanging branches of vēlam trees
with dense cores. 

Notes:  தலைவன் பொருள்வயின் பிரியக் கருதுவதை அறிந்து வருந்துகின்ற தலைவியைத் தலைவன் ஆற்றியது.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).  வை– வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).

Meanings:  நீயே பாடல் சான்ற – you are fit for songs by bards, பழி தபு சீறடி – faultless small feet, perfect feet, அல்கு – stay, fitting, பெருநலத்து அமர்த்த கண்ணை – you are with big and beautiful calm eyes (கண்ணை – கண்களையுடையாய், முற்றெச்சம்), காடே நிழல் கவின் இழந்த – forests have lost their shade and beauty, அழல் கவர் மரத்த – with trees that have been surrounded by fire, with trees that have been ruined by fire (அகரம் பன்மை உருபு), புலம்பு வீற்றிருந்து – desolateness was there, நலம் சிதைந்தனவே – their beauty has shattered, virtue has shattered (ஏ – அசைநிலை, an expletive), இந்நிலை – this situation, தவிர்ந்தனம் – I have avoided, தன்மைப் பன்மை, first person plural, செலவே – leaving (ஏ – அசைநிலை, an expletive), வைந்நுதிக் களவுடன் கமழ – kalākkai flowers are fragrant with sharp tips, Corinda tree flowers, Bengal Currant, பிடவுத் தளை அவிழ – pidavam flowers blossom loosening their tightness, Randia malabarica, கார் பெயல் செய்த காமர் காலை – at the beautiful time when the season’s rain fell, மடப் பிணை தழீஇய – embracing their naïve females, uniting with their naive females (தழீஇய – அளபெடை), மா எருத்து இரலை – stags with black necks, stags with big necks, காழ் கொள் வேலத்து – of velam trees with hard cores, velam trees with seeds, வேலம், வெள்வேலம் – Panicled Babool, Acacia leucophloea, ஆழ் சினை பயந்த – low branches yielded, கண் கவர் – attractive to the eyes, வரி நிழல் – striped shade, dappled shade, வதியும் – they stay there, தண்படு கானமும் தவிர்ந்தனம் – I had avoided going to the cool forests (தவிர்ந்தனம் – தன்மைப் பன்மை, first person plural), செலவே – going (ஏ – அசைநிலை, an expletive)   

நற்றிணை 257, வண்ணக்கன் சோருமருங்குமரனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரைஇ
மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின்,
கழை அமல்பு நீடிய வான் உயர் நெடுங்கோட்டு
இலங்கு வெள்ளருவி வியன் மலைக் கவாஅன்,
அரும்பு வாய் அவிழ்ந்த கருங்கால் வேங்கைப்  5
பொன் மருள் நறு வீ கல்மிசைத் தாஅம்
நல் மலை நாட! நயந்தனை அருளாய்!
இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறிக்
கடு மா வழங்குதல் அறிந்தும்
நடுநாள் வருதி, நோகோ யானே.  10

Natrinai 257, Vannakkan Chorumarunkumaranār, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
Oh lord of the fine mountains,
where clouds rise up and come down
as heavy rain with endless noises in the
cool mountains, splendid white
waterfalls rush down from tall summits
where bamboos flourish, and the buds
of vēngai trees with dark trunks open  
to golden, fragrant blossoms that fall on
the boulders below!

You have no desire to favor us.  You come
at midnight through the flooded small
path with no people movement,
even though you are aware that wild
animals roam there.

I am hurting, thinking about this!

Notes:  தோழி தலைவனின் ஏதம் சொல்லி வரைவு கடாயது.  புலவர் பெயர் – ஒளவை துரைசாமி உரை – வண்ணக்கண் சேரிக் குமரங்குமரனார்.

Meanings:  விளிவு இல் அரவமொடு – with endless noises, தளி சிறந்து – heavy rain falls, உரைஇ – roaring, thundering (அளபெடை), மழை எழுந்து இறுத்த – clouds rise up and come down as rain, நளிர் தூங்கு சிலம்பின் – on the very cold mountains, கழை அமல்பு நீடிய – bamboo is dense and abundant, bamboo is dense and has grown tall, வான் உயர் நெடுங்கோட்டு – sky-high tall peaks, இலங்கு வெள் அருவி – splendid white waterfalls, வியன் மலை – wide mountains, கவாஅன் – nearby mountain, mountain slope (அளபெடை), அரும்பு வாய் அவிழ்ந்த – petals have opened, கருங்கால் வேங்கை – vēngai trees with sturdy/big/dark-colred trunks, Kino Tree, Pterocarpus marsupium,பொன் மருள் – gold like, நறு வீ கல் மிசைத் தாஅம் – fragrant flowers fall and spread on the rocks (தாஅம் – அளபெடை), நல் மலை நாட – oh man from such fine mountain country, நயந்தனை அருளாய் – you are not desirous of favoring us, இயங்குநர் மடிந்த – those who travel on the path have stopped, அயம் திகழ் – waters flooding, சிறு நெறி – small path, narrow path, கடு மா வழங்குதல் – fierce animals roam, அறிந்தும் – even though you are aware, நடுநாள் வருதி – you come at midnight, நோகோ – I am hurting (நோகு – செய்கென்னும் தன்மை வினை, ஓ – அசைநிலை, an expletive, இரக்கக் குறிப்பு, implying pity), யானே – me (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 258, நக்கீரர், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பல் பூங்கானல் பகற்குறி மரீஇச்
செல்வல் கொண்க! செறித்தனள் யாயே,
கதிர் கால் வெம்பக் கல் காய் ஞாயிற்றுத்
திருவுடை வியல் நகர் வருவிருந்து அயர்மார்,
பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த  5
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட,
அகல் அங்காடி அசை நிழல் குவித்த
பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை
தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும்
மருங்கூர்ப்பட்டினத்து அன்ன இவள் 10
நெருங்கு ஏர் எல் வளை ஓடுவ கண்டே.

Natrinai 258, Nakkeerar, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
Oh lord of the shores!
On seeing her stacked, pretty, bright
bangles slip, her mother has
confined her to their house, my friend
who is lovely like Marunkūrpattinam,
where,
the sun’s scorching hot rays heat the
rocks and feet of people, women wearing
gold bracelets welcome guests to their
large, wealthy houses with food, and
scatter offerings in their backyard, rice
as long as a stork’s claw, to a green-eyed
crow that eats it and flies to the wide
market street and steals fresh shrimp,
before resting on the mast of a swaying ship.

I came here to this grove with many flowers,
the place of your day tryst, to inform you.

Notes:  பகற்குறி வந்த தலைவனிடம் தலைவியை அன்னை இற்செறித்து காவலுட்படுத்தினாள் என்று கூறி வரைவு கடாயது.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – மகளிரிட்ட பலிச்சோற்றை உண்ட காக்கை, அங்காடியில் இறா மீனைக் கவர்ந்து கூம்பில் சென்று தங்கும் என்றது, பாங்கற் கூட்டத்தில் தலைவியுடன் இன்பம் துய்த்துப் பின் பாங்கியிற் கூட்டத்திலும் கூடி இன்புற்ற தலைவன் சிறிதும் மனக் கவற்சியின்றித் தன்னூர் சென்றான் என்பதை உள்ளுறுத்தி நிற்கும்.  வரலாறு:  மருங்கூர்ப்பட்டினம்.  கொக்கு உகிர் நிமிரல் – புறநானூறு 395, 398.  Natrinai 258, 281, 293, 343 and 367 have references to food offerings to crows.  கல் காய் ஞாயிற்று (3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கீழ்த்திசையில் தோன்றிக் காய்கின்ற ஞாயிற்றுனுடைய, H.வேங்கடராமன் உரை – கற்களும் வெடிப்புறும்படி ஞாயிறு தாக்குவதாலும்.  எல் பட (6) – ஒளவை துரைசாமி உரை – பொழுது மறையும் மாலையில், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பொழுது படும்பொழுதில்,  கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – பொழுது சாயும் வேளையில்.  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).  

Meanings:  பல் பூங்கானல் – seashore grove with many flowers, பகற்குறி மரீஇ – coming to the place of day tryst (மரீஇ – அளபெடை), செல்வல் – I am leaving, கொண்க – oh lord of the seashore, செறித்தனள் யாயே – mother has confined her, கதிர் – the sun’s rays, கால் வெம்ப – causing the feet to be hot, கல் காய் ஞாயிற்று – of the sun that heats stones, of the sun that rises from the eastern mountains, திருவுடை – wealthy, lovely, வியல் நகர் – huge house, வருவிருந்து அயர்மார் – to be hospitable, to welcome arriving guests and celebrate, பொற்றொடி மகளிர் – women wearing gold bracelets, புறங்கடை உகுத்த – scattered in the backyard, கொக்கு உகிர் நிமிரல் – rice that looks like stork’s claws, மாந்தி – ate, எல் பட அகல் அங்காடி – after the sun went down (at night) it went to the wide market place, அசை நிழல் குவித்த – heaped in the shade, பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை – a crow with green eyes that seized fresh shrimp (பச்சிறா- பண்புத்தொகை – a compound word in which the first member stands in adjectival relation to the second), தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும் – it goes and rests in the mast of a swaying ship, மருங்கூர்ப்பட்டினத்து அன்ன இவள் – she is like Marungoorpattinam town (மருங்கூர்ப்பட்டினம் – அத்து சாரியை), நெருங்கு ஏர் எல் வளை ஓடுவ கண்டே – on seeing her closely worn beautiful bright bangles slip down (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 259, கொற்றங்கொற்றனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
யாங்குச் செய்வாம் கொல் தோழி? பொன் வீ
வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல்,
பெருங்கல் நாடனொடு இரும் புனத்து அல்கிச்,
செவ்வாய்ப் பைங்கிளி ஓப்பி, அவ்வாய்ப்
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடிச்,  5
சாரல் ஆரம் வண்டு பட நீவி,
பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி
அரிய போலக் காண்பேன், விரி திரைக்
கடல் பெயர்ந்தனைய ஆகி
புலர் பதம் கொண்டன ஏனல் குரலே.  10

Natrinai 259, Kotrankotranār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
What can we do now my friend?
The vēngai trees in the slopes with honey
fragrances have golden yellow blossoms.
It is the season for mature millet spears
to be harvested.  You will not be able to
meet him the way you used to do,
when we went to chase parrots with green
beaks, smeared bee-swarming sandal
paste and played with him with great desire
in the waterfalls that flow down the slopes
of the tall mountains.

The millet field looks like an ocean with
wide waves that became dry.  I’m afraid you
will be kept at home!

Notes:  களவில் வந்து கூடும் தலைவன் திருமணம் புரிய வேண்டும் என்று எண்ணிய தோழி, தலைவியிடம் வருந்திக் கூறியது.  வரைவு கடாயது.  Millet harvesting time is when vēngai trees put out flowers.  This has been described in poems 125, 259, 313 and 389. நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  யாங்குச் செய்வாம் கொல் – what can we do (கொல் – ஏ – அசைநிலை, an expletive), தோழி – oh friend, பொன் வீ – golden flowers, வேங்கை – kino trees, Pterocarpus marsupium, ஓங்கிய – flourishing, தேம் கமழ் சாரல் – sweet smelling mountain slopes, honey fragrant mountain slopes (from flowers) (தேம் தேன் என்றதன் திரிபு), பெருங்கல் நாடனொடு – with the mountain country man, இரும் புனத்து – in the big field, அல்கி – stayed, செவ்வாய்ப் பைங்கிளி ஓப்பி – chasing the red-beaked green parrots, அவ்வாய் – there, beautiful, பெரு வரை  – tall peaks, அடுக்கத்து – in the mountain ranges, அருவி ஆடி – playing in the waterfalls, சாரல் – slopes, ஆரம் – sandalwood trees, வண்டு பட – causing bees to swarm, நீவி – smearing, பெரிது அமர்ந்து – spending a lot of time with him with desire, இயைந்த கேண்மை – close friendship, intimate friendship, சிறு நனி – very short time, reduced a lot, அரிய போலக் காண்பேன் – it appears to be hard, விரி – wide, திரை – waves, கடல் பெயர்ந்தனைய ஆகி – has become like the ocean water that has moved away, புலர் பதம் கொண்டன – they are mature and ready for harvest, ஏனல் – millet, குரலே – the grain clusters (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 260, பரணர், மருதத் திணை – தலைவி தலைவனிடம் சொன்னது
கழுநீர் மேய்ந்த கருந்தாள் எருமை
பழனத் தாமரைப் பனிமலர் முணைஇத்,
தண்டு சேர் மள்ளரின் இயலி, அயலது
குன்று சேர் வெண்மணல் துஞ்சும் ஊர!
வெய்யை போல முயங்குதி; முனை எழத்  5
தெவ்வர்த் தேய்த்த செவ்வேல் வயவன்
மலி புனல் வாயில் இருப்பை அன்ன என்
ஒலி பல் கூந்தல் நலம் பெறப் புனைந்த
முகை அவிழ் கோதை வாட்டிய
பகைவன் மன், யான் மறந்து அமைகலனே.  10

Natrinai 260, Paranar, Marutham Thinai – What the heroine said to the hero
Oh man from the town where a black-legged
buffalo that eats waterlily flowers, tires of
eating cool lotus blossoms in the pond, and
walks like a warrior with a stick, to the nearby
mountain-like, tall sand dunes to sleep!

You embrace me as though you desire me. 
My beauty used to be lovely like that of
flourishing Iruppai town by the river with
abundant water, which was guarded by a brave
warrior who beat his enemy and won the battle.

You are the one who caused my flower garland
with blooming buds, to wilt.

I will not forget that you are my enemy!

Notes:  ஊடல் மறுத்த தலைவி உரைத்தது.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – தாமரை மலரை வெறுத்துக் கழுநீரை மேய்ந்த எருமை மணற் குன்றில் சென்றுறங்கும் என்பது, தலைவி நலனை வெறுத்துத் காதற் பரத்தையிடம் கூடி இன்புற்ற தலைவன் அவளிடத்தும் தங்காது பரத்தையின் இல்லம் சென்று உறங்கும் தன்மையன் என்பதனை உள்ளுறுத்தி நின்றது.  அகநானூறு 316 – போர்ச்செறி மள்ளரிற் புகுதரும் ஊரன்.  இருப்பை (7) – ஒளவை துரைசாமி உரை – இருப்பையூர்.  இப்போது விராலிமலைக்கு அணிமையில் உள்ளது.  விராஅனது இம்மலை இன்று விராலிமலை என விளங்குகிறது.

Meanings:  கழுநீர் – waterlilies, blue, red or white waterlilies,  மேய்ந்த கருந்தாள் எருமை – black-legged buffalo that ate, பழனத் தாமரை – pond lotus blossoms, பனி மலர் – cool flowers, முணைஇ – hates, தண்டு சேர் – with a stick, மள்ளரின் – like a warrior (இன் உருபு ஒப்புப் பொருளது), இயலி – walking, அயலது – nearby, குன்று சேர் வெண்மணல் – white sand dunes that are tall as mountains, துஞ்சும் – it sleeps, ஊர – oh man from such town (ஊர – அண்மை விளி), வெய்யை போல – like you desire, முயங்குதி – you are embracing me, முனை எழ – enmity arose, தெவ்வர் – enemies, தேய்த்த – ruined, killed, செவ்வேல் – red spear, வயவன் – warrior, மலி – flourishing, abundant, புனல் வாயில் – near the river’s mouth, இருப்பை அன்ன – like Iruppai town, என் – my, ஒலி – flourishing, பல் கூந்தல் – thick hair, நலம் பெற – to become beautiful, புனைந்த – adorned, முகை அவிழ் – bud opens, கோதை – garland, வாட்டிய – ruined, பகைவன் – enemy, மன் – asai, யான் மறந்து அமைகலனே – I will not forget that comfortably (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 261, சேந்தன் பூதனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது அல்லது தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அருளிலர், வாழி தோழி, மின்னு வசிபு
இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு
வெஞ்சுடர் கரந்த கமஞ்சூல் வானம்,
நெடும் பல் குன்றத்துக் குறும் பல மறுகித்
தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்துக்,  5
களிறு அகப்படுத்த பெருஞ்சின மாசுணம்
வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும்
சாந்தம் போகிய தேங்கமழ் விடர் முகை,
எருவை நறும் பூ நீடிய
பெருவரைச் சிறுநெறி வருதலானே. 10

Natrinai 261, Sēnthan Poothanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, or what the heroine said to her friend,  as the hero listened nearby
May you live long, oh friend!  Our man has
no pity for us,
since he comes through small mountain
paths with fragrant, blooming reeds that
grow in rock clefts, where water-filled clouds
hide the hot sun, flash lightning, roar thunder
in the dark sky and come down as heavy rain
on mountains big and small at midnight, and
an angry huge snake that kills male elephants
coils around a hard-core sandal tree and rolls
it, and there is sweet sandal fragrance on the
mountains.

Notes:   தோழி இரவுக்குறி விலக்கி வரைவு கடாயது.  தலைவனை இகழ்ந்த தோழியிடம் தலைவி கூறியதுமாம். மின்னல் பிளத்தல்:  மின்னு வசிபு – அகநானூறு 162, 212, 322, நற்றிணை 228, 261, மலைபடுகடாம் 97, மின்னு வசி – நற்றிணை 334.  களிறு (6) – ஒளவை துரைசாமி உரை – ஆண் யானை.  ஆண் காட்டுப் பன்றியுமாம்.  விடர்முகை (8) – ஒளவை துரைசாமி உரை – மலைப்பிளவு, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மலைப்பிளவினையுடைய துறுகல்.  கமம் – கமம் நிறைந்தியலும் (தொல்காப்பியம். உரியியல் 57).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  அருள் இலர் – he has no pity, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – oh friend, மின்னு வசிபு – lightning splitting darkness, lightning splitting the sky, lightning splitting the clouds, இருள் தூங்கு விசும்பின் – in the dark skies, அதிரும் ஏறொடு – along with loud- sounding thunder, வெஞ்சுடர் – the hot sun, கரந்த – hiding, கமஞ்சூல் வானம் – clouds filled with water(கம என்னும் உரிச்சொல் நிறைவுப் பொருளில் வந்தது), நெடும் – tall, பல் – few, குன்றத்து – on the mountains, குறும் பல – a few short, மறுகி – swirling, confusing, தா இல் – faultless, பெரும் பெயல் – heavy rain, தலைஇய – falling (அளபெடை), யாமத்து – at midnight time, களிறு அகப்படுத்த பெருஞ்சின மாசுணம் – an angry huge snake that surrounded a male elephant, வெளிறு இல் – without softness, காழ் மரம் – a dense tree, a hard core tree, பிணித்து – coils around it, நனி – lot, மிளிர்க்கும் – it rolls it, சாந்தம் போகிய – from the sandalwood, Santahlum album, தேம் கமழ் – sweet fragrance spreads (தேம் தேன் என்றதன் திரிபு), விடர் முகை – boulder clefts, mountain caves, எருவை – Arundo donax, bamboo reed, நறும் பூ – fragrant flowers, நீடிய – flourishing, tall, பெரு வரை – huge mountain, சிறு நெறி – small path, narrow path, வருதலானே – since he will come through that (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 262, பெருந்தலைச் சாத்தனார், பாலைத் திணை – தலைவன் சொன்னது
தண் புனக் கருவிளைக் கண் போல் மா மலர்
ஆடு மயில் பீலியின் வாடையொடு துயல்வர,
உறை மயக்குற்ற ஊர் துஞ்சு யாமத்து,
நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய்த்,
துனி கூர் மனத்தள் முனி படர் உழக்கும்  5
பணைத்தோள் அரும்பிய சுணங்கின், கணைக் கால்
குவளை நாறும் கூந்தல் தேமொழி
இவளின் தீர்ந்தும் ஆள் வினை வலிப்பப்
பிரிவன் நெஞ்சு என்னும் ஆயின்,
அரிது மன்றம்ம இன்மையது இளிவே.  10

Natrinai 262, Perunthalai Sāthanār, Pālai Thinai – What the hero said
The karuvilai flowers in the cool groves,
looking like eyes, sway like plumes of
peacocks in the north winds at midnight,
when rain falls and the town is asleep.

She trembles in distress,
her fine beauty ruined, her mind sad with
hatred and struggling in sorrow,
the young woman with arms like bamboo
and budding pallor spots, hair with scents
of kuvalai blossoms with thick stems,
and honey sweet words.

Even though my heart urges me to go and
earn wealth, it would be difficult to leave
her.  Struggling in poverty would be hard!

Notes:  பொருளுக்காக தலைவன் பிரிவான் என்று அஞ்சிய தலைவியின் உள்ளத்தை அறிந்த தலைவன் வருந்திச் செலவு அழுங்கியது.  மன்றம்ம:   பொ. வே. சோமசுந்தரனார் உரை, அகநானூறு 367-13 – மன்ற அம்ம, மன்ற – தேற்றமாக, அம்ம கேட்பித்தற்பொருட்டு.

Meanings:  தண் புன – in the cool groves, கருவிளைக் கண் போல் மா மலர் – eye-like dark karuvilai flowers, Clitoria ternatia, சங்குப்பூ,  துயல் வர ஆடு மயில் பீலியின் வாடையொடு – move like dancing peacock feathers in the northern winds, உறை மயக்குற்ற – when rains fall mixed with wind, ஊர் துஞ்சு யாமத்து – at night when the town is sleeping, நடுங்கு பிணி – trembling pain, நலிய – causing distress, நல் எழில் சாஅய் – fine beauty ruined (சாஅய் – அளபெடை), துனி கூர் மனத்தள் – she was of sad mind, முனி – hatred, படர் உழக்கும் – suffering with sorrow, பணைத்தோள் – bamboo-like arms, thick arms, அரும்பிய சுணங்கின் – with budding pallor spots, கணைக் கால் – thick stemmed, குவளை நாறும் கூந்தல் – hair with the fragrance of blue waterlilies, தேமொழி – woman of sweet words, இவளின் தீர்ந்தும் – to abandon her, ஆள் வினை வலிப்ப பிரிவன் நெஞ்சு என்னும் – even though my heart urges me saying that I should separate to earn wealth (பிரிவன் – தன்மை ஒருமை வினைமுற்று, first person singular verb ending), ஆயின் – if so, அரிது – it is difficult, மன்ற – for sure, அம்ம – asai, you listen, இன்மையது இளிவே – in that case struggling from poverty would be very difficult (ஏ – அசைநிலை, an expletive)   

நற்றிணை 263, இளவெயினனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பிறை வனப்பு இழந்த நுதலும், யாழ நின்
இறை வரை நில்லா வளையும், மறையாது
ஊர் அலர் தூற்றும் கௌவையும், நாண் விட்டு,
உரை அவற்கு உரையாம் ஆயினும் இரை வேட்டுக்
கடுஞ்சூல் வயவொடு கானல் எய்தாது  5
கழனி ஒழிந்த கொடுவாய்ப் பேடைக்கு,
முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும்
மெல்லம்புலம்பற் கண்டு நிலைசெல்லாக்
கரப்பவும் கரப்பவும் கைம்மிக்கு,
உரைத்த தோழி, உண்கண் நீரே.  10

Natrinai 263, Ilaveyinanār, Neythal Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
We are unable to let go of our modesty
and tell him,

……….about the rising gossip which comes
……….without hiding, and the demeaning
……….slander in our town, since your
……….forehead, lovely like the crescent moon,
……….has lost its beauty, and your bangles
……….have slipped off your wrists,

the land of the lord of the delicate shores,
where a mature male stork with curved
feathers catches fish from the ocean to feed
his craving partner, pregnant with eggs,
that moved from the seashore grove to a
field.

You conceal and conceal your sorrow, but the
tears from your kohl-lined eyes are unable to
be controlled.  They tell it all, my friend!

Notes:  தோழித் தலைவனை வரைவு கடாயது.  ஒளவை துரைசாமி உரை – ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) எனத் தொடங்கும் நூற்பாவில் வரும் ‘நிறைந்த காதலின் சொல் எதிர் மழுங்கல்’ என்றதற்கு இப்பாட்டைக் காட்டி, ‘இஃது யாம் உரையாமாயினும் கண் உரைத்தன என்றலின் இரண்டும் கூறினாள்’ என்பர் நச்சினார்க்கினியர்.   உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – வயலில் தங்கியப் பேடை நாரைக்கு ஆண் நாரை கடல் மீன் கொண்டு விரையும் என்றது, தலைவன் தலைவியை மணப்பதற்குரிய கொடைப்பொருள் பலவற்றுடன் விரைவான் என்பதாம்.  செல்லா (8) – ஒளவை துரைசாமி உரை – செல்லாது என்பது செல்லா என ஈறு கெட்டது.

Meanings:  பிறை வனப்பு – crescent moon like beauty, இழந்த நுதலும் – forehead that lost it, யாழ – அசை, an expletive of second person, நின் – your, இறை வரை – at the wrist, நில்லா வளையும் – bangles that do not stay, bangles that slip down, bangles that do not stay on the wrists, மறையாது – without hiding, ஊர் அலர் தூற்றும் கௌவையும் – slander and gossip spread by the people in town (ஊர் – ஆகுபெயர் ஊரில் உள்ளோர்க்கு), நாண் விட்டு – abandoning modesty, abandoning shyness, உரை அவற்கு உரையாம் – we are unable to tell him, ஆயினும் – yet, இரை வேட்டு – searching for food, கடுஞ்சூல் – full pregnancy with eggs, வயவொடு – with desire, with cravings, கானல் எய்தாது – without staying in the seashore grove, கழனி ஒழிந்த – went to the field, stayed in the field, கொடுவாய்ப் பேடைக்கு – for its female with a curved beak, முட – curved/bent, முதிர் நாரை – mature stork, white stork – Ciconia ciconia, pelican, crane, கடல் மீன் ஒய்யும் – gives sea fish, மெல்லம்புலம்பன் கண்டு – on seeing the lord of the delicate shores, நிலைசெல்லா – uncontrollable, கரப்பவும் கரப்பவும் – despite you concealing and concealing, கைம்மிக்கு – uncontrollable, உரைத்த – they state, தோழி –  my friend,  உண்கண் நீரே – the tears from your kohl-rimmed eyes (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 264, ஆவூர்க் காவிதிகள் சாதேவனார், பாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
பாம்பு அளைச் செறிய முழங்கி, வலன் ஏர்பு
வான் தளி பொழிந்த காண்பின் காலை,
அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும்
மணி புரை எருத்தின் மஞ்ஞை போல, நின்
வீ பெய் கூந்தல் வீசு வளி உளர  5
ஏகுதி மடந்தை, எல்லின்று பொழுதே,
வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த
ஆ பூண் தெண் மணி இயம்பும்,
உதுக்காண் தோன்றும், எம் சிறு நல் ஊரே.

Natrinai 264, Āvūr Kāvithikal Sāthevanār, Pālai Thinai – What the hero said to the heroine, as the eloping couple approach his village
Walk fast oh young woman since daylight
is ending,
with your hair adorned with flowers spread
in the blowing wind, like a dancing peacock
with a sapphire-colored neck that spreads its
pretty plumes delicately,
at this sweet time when the clouds rise up with
strength, roar and come down as rain,
causing frightened snakes to hide in their holes.

Look there!  You can see our fine village in the
small forest with bamboo thickets,
where the sounds of clear bells tied on the necks
of cows by cattle herders can be heard.

Notes:   உடன்போக்கில் தலைவன் தலைவியிடம் கூறியது.  காண்பின் காலை (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காட்சியையுடைய காலைப் பொழுதிலே, கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – காண்பதற்கு இனிதாக விளங்கும் பொழுதில்.  வலன் ஏர்பு – அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1.  There is a convention that thunder ruins and kills snakes.  Akanānūru 68, 92, 119, 182, 202, 274, 323, 328, Kalithokai 45, 113, Kurunthokai 158, 190, 268, 391. Natrinai 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, and Puranānūru 17, 37, 58, 126, 211, 366, 369 have similar descriptions of thunder ruining or killing snakes.

Meanings:  பாம்பு அளைச் செறிய – for the snake to be contained, முழங்கி – roaring, வலன் ஏர்பு – climbing with strength, climbing to the right, வான் தளி பொழிந்த – the clouds come down as rain, காண்பின் (காண்பு இன்) காலை – at the sweet time when it can be seen,  அணி கிளர் கலாவம் – pretty rising feathers, pretty bright feathers, ஐது – beautifully, delicately, awing,விரித்து இயலும் – spreads and dances, மணி புரை எருத்தின் மஞ்ஞை போல – like a peacock with sapphire-colored neck (புரை – உவம உருபு, a comparison word), நின் வீ பெய் கூந்தல் – your hair with flowers, வீசு வளி உளர – spreading in the blowing wind, ஏகுதி மடந்தை – go fast oh young woman, எல்லின்று பொழுதே – daylight is ending, it is becoming dark (ஏ – அசைநிலை, an expletive), வேய் பயில் இறும்பில் – in the small forest filled with bamboo, in the hills filled with bamboo, கோவலர் – the cattle herders, யாத்த – tied, ஆ – cows, பூண் தெண் மணி – tied clear bells, இயம்பும் – they ring, உதுக்காண் – look there, தோன்றும் – it appears, எம் சிறு நல் ஊரே – our small fine village (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 265, பரணர், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல்
அள்ளல் ஆடிய புள்ளி வரிக் கலை
வீளை அம்பின் வில்லோர் பெருமகன்,
பூந்தோள் யாப்பின் மிஞிலி காக்கும்
பாரத்து அன்ன, ஆர மார்பின்  5
சிறு கோல் சென்னி ஆரேற்றன்ன,
மாரி வண் மகிழ் ஓரி கொல்லிக்
கலி மயில் கலாவத்து அன்ன, இவள்
ஒலி மென் கூந்தல் நம் வயினானே.

Natrinai 265, Paranar, Kurinji Thinai – What the hero said to his heart
The woman with luxuriant, delicate
hair is ours,

lovely like Pāram town protected
by Mignili wearing shoulder shields
on his lovely shoulders, leader of
archers with whistling arrows who
hunt grazing, mature stags with spots,
stripes and broken antlers, romping
around in thick mud,

lovely like Āretru town of the Chōzha king
with an āthi flower garland and a small
scepter,

and lovely like the plumes of clamorous
peacocks in the Kolli Mountain of king
Ōri, owning liquor and as charitable as
the rain.

Notes:  பின்னின்ற தலைவன் உரைத்தது.  நற்றிணை 190 – மாரி வண் மகிழ்த் திதலை எஃகின் சேந்தன் தந்தை தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி.  Chenni is a name for a Chōzha royal clan.  வரலாறு:  மிஞிலி, பாரம், ஓரி, கொல்லி, ஆறேற்று.  கடையெழு வள்ளல்கள் – ஆய், பாரி, காரி, ஓரி, அதிகன், பேகன், நள்ளி.  Akananuru 153 has a reference to Pāram of Nannan.  Natrinai poems 6, 52, 265 and 320 have references to Ōri.

Meanings:  இறுகு புனம் – dried land, மேய்ந்த – grazed, அறு கோட்டு – with broken antlers, முற்றல் – mature, அள்ளல் ஆடிய – playing in the mud, புள்ளி வரிக் கலை – male deer with spots and stripes, வீளை – noises of shot arrows, whistling sound, அம்பின் – with arrows, வில்லோர், those with bows, பெருமகன் – great man, leader, பூந்தோள் – shoulders with flowers, lovely shoulders, யாப்பின் – with a shoulder shield that is tied, மிஞிலி – Mignili (a small-region king), காக்கும் – protects, பாரத்து அன்ன – like the town Pāram (பாரத்து – பாரம், அத்து சாரியை), ஆர மார்பின் – with a chest with āthi/bauhinia flowers (Chōzhan), சிறு கோல் – small scepter, small staff, சென்னி – a Chōzha king, ஆரேற்றன்ன – like a town called Āretru, மாரி – rain, வண் – generous, மகிழ் – alcohol, ஓரி கொல்லி – King Ōri’s Kolli Mountain, கலி மயில் கலாவத்து அன்ன – like a proud peacock’s feathers (கலாவத்து – கலாவம், அத்து சாரியை), like a clamorous peacock’s feathers, இவள் – her, ஒலி – luxuriant, thick, மென் கூந்தல் – delicate hair, soft hair, நம் வயினானே – she is ours (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 266, கச்சிப்பேட்டு இளந்தச்சனார், முல்லைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கொல்லைக் கோவலர் குறும் புனம் சேர்ந்த
குறுங்கால் குரவின் குவி இணர் வான் பூ
ஆடுடை இடைமகன் சூடப் பூக்கும்
அகலுள் ஆங்கண் சீறூரேமே,
அதுவே சாலும் காமம் அன்றியும்  5
எம் விட்டு அகறிர் ஆயின், கொன் ஒன்று
கூறுவல் வாழியர் ஐய, வேறுபட்டு
இரீஇய காலை இரியின்
பெரிய அல்லவோ பெரியவர் நிலையே.

Natrinai 266, Kachipēttu Ilanthachanār, Mullai Thinai – What the heroine’s friend said to the hero
May you live long, oh lord!
If you leave us without love,
we will stay in that small town
with wide spaces, where a goat
herder wears white, pointed
flowers that grow in clusters
on the short-trunked kuravam
trees in the small grove in the
woodlands of cattle herders.

Let me tell you one thing even
if it is of no use.  If you move away
thinking differently, making us
stay, and even if we are crushed, it
is great to be tolerant like the wise!

Notes:  தலைவன் வினைவயிற் பிரிய எண்ணியபொழுது தோழி சொன்னது.  அல்லவோ (9) – ஒளவை துரைசாமி உரை – அல்லவோ என்புழி எதிர்மறை ஓகாரம் புணர்ந்து உடன்பாட்டுப் பொருள் பயப்பித்தது, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அலலாமன்றோ?  கொன் – அச்சம், பயம் இலி, காலம், பெருமை, என்று அப் பால் நான்கே கொன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 6).

Meanings:  கொல்லைக் கோவலர் – cattle herders in the woodland, குறும் புனம் சேர்ந்த – in the small grove, குறுங்கால் குரவின் குவி இணர் வான் பூ – clusters of pointed white flowers of the short-trunked kuravam trees, common bottle flower tree, ஆடுடை இடைமகன் – a goat herder with goats, சூட – to wear, பூக்கும் – they blossom, அகலுள் ஆங்கண் சீறூரேமே – we will be in that small town with wide spaces (ஓ – அசைநிலை, an expletive), அதுவே சாலும் காமம் – that is our desire (காமம் – விருப்பம்), அன்றியும் – other than that, எம் விட்டு அகறிர் ஆயின் – if you leave us, கொன் – பயனின்மை என்ற பொருளில் வரும் இடைச்சொல், a particle indicating uselessness, ஒன்று கூறுவல் – let me tell you one more thing, வாழியர் ஐய – may you live long oh lord, வேறுபட்டு – with different thinking, இரீஇய காலை – when you make us stay back, when you move away (இரீஇய – அளபெடை), இரியின் – if we are sad, if we are destroyed, பெரிய அல்லவோ – isn’t it great, it is great, பெரியவர் நிலையே – the situation of the wise (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 267, கபிலர், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
நொச்சி மா அரும்பு அன்ன கண்ண
எக்கர் ஞெண்டின் இருங்கிளைத் தொழுதி,
இலங்கு எயிற்று ஏஎர் இன்னகை மகளிர்
உணங்கு தினை துழவும் கை போல், ஞாழல்
மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன்  5
தன்னொடு புணர்த்த இன் அமர் கானல்,
தனியே வருதல் நனி புலம்பு உடைத்து என
வாரேன் மன் யான், வந்தனென் தெய்ய,
சிறு நா ஒண் மணித் தெள் இசை கடுப்ப,
இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலிக்குரல்  10
‘இவை மகன்’ என்னா அளவை,
வயமான் தோன்றல் வந்து நின்றனனே.

Natrinai 267, Kapilar, Neythal Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
The lord of the seashore,
……….where swarms of dune crabs,
……….their eyes like dark nochi buds,
……….etch with claws on the dropped
……….fragrant flowers of gnāzhal
……….trees that spread their scents,
……….and create patterns like those
……….created by fingers stirring millet
……….to dry, of fine-jeweled women
……….with bright teeth and sweet smiles,
united with you in this sweet seashore grove.

I have not been coming here since I have
felt very sad and lonely.

But I came here once and heard the calls
of bird flocks that eat schools of fish,
their sounds like the clear sounds of his
chariot bells with small tongues.
Before I could think whether it was him,
he came and stood before me, the great man
who owns strong horses.

Notes:  தலைவி இற்செறிக்கப்பட்ட வேளையில் தோழி கூறியது.  வரைவு கடாயது.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – ஞாழல் மரத்தின் பூவை நண்டுகள் வரிக்கும் என்றது. தலைவனிடம் சேராது பிரித்த இல்வயிற் செறிக்கப்பட்ட தலைவியை அயலார் அலர் கூறி வருந்துவர் என்பதைக் குறித்தது.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  நொச்சி மா அரும்பு அன்ன – like the dark colored nochi flowers, Vitex leucoxylon, Chaste tree, கண்ண – with eyes, எக்கர் ஞெண்டின் – sand dune crab (ஞெண்டின் – ஞெண்டு நண்டு என்பதன் போலி), இருங்கிளைத் தொழுதி – big group of relatives, இலங்கு எயிற்று – with bright teeth, ஏஎர் – beautiful (அளபெடை), இன் நகை மகளிர் – women with sweet smiles, உணங்கு தினை துழவும் கை போல் – like the hands stirring the drying millet, ஞாழல் – புலிநகக்கொன்றை, tigerclaw tree,  Cassia Sophera, மணம் கமழ் – fragrance spreads, நறு வீ – fragrant flowers, வரிக்கும் – creates lines, creates patterns, துறைவன் – lord of the seaport, தன்னொடு புணர்த்த இன் அமர் கானல் – sweet desirable seashore grove were you united with him, தனியே வருதல் – to come alone, நனி புலம்பு உடைத்து என வாரேன் – I had not come here since I feel very sad, மன் – ஒழியிசை இடைச்சொல், a particle with implied meaning, யான் வந்தனென் – I came here, தெய்ய – அசைநிலை, an expletive, சிறு நா ஒண் மணி – bright bells with small tongues, தெள் இசை கடுப்ப – like their clear sounds (கடுப்ப – உவம உருபு, a comparison word), இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலிக்குரல் – sounds of birds that come and eat schools of fish, இவை மகன் என்னா அளவை – even before I was considering whether this is the man, வயமான் தோன்றல் – the great man owning strong horses, வந்து நின்றனனே – he came and stood (ஏ – அசைநிலை, an expletive)   

நற்றிணை 268, வெறி பாடிய காமக்கண்ணியார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
சூருடை நனந்தலைச் சுனை நீர் மல்க
மால் பெயல் தலைஇய மன் நெடுங்குன்றத்துக்,
கருங்காற் குறிஞ்சி மதன் இல் வான் பூ,
ஓவுக் கண்டன்ன இல் வரை இழைத்த
நாறு கொள் பிரசம் ஊறு நாடற்குக்  5
காதல் செய்தலும் காதல் அன்மை
யாதெனிற் கொல்லோ தோழி? வினவுகம்,
பெய்ம் மணல் முற்றம் கடி கொண்டு
மெய்ம் மலி கழங்கின் வேலன் தந்தே.

Natrinai 268, Veri Pādiya Kāmakkanniyār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
Your lover from the country,
where heavy rain falls on the fierce,
lofty mountains and swells the huge
ponds, and kurinji plants with dark
stems put out delicate, bright flowers  
from which fragrant honey is made   
in honeycombs hanging in the houses
of mountain dwellers that appear like
paintings created by artists, behaves
like a stranger, even though you love him.

Mother has invited a diviner to divine
with kazhangu beans, making the sand-
spread front yard of our house bright.
Let us ask him to tell the truth.

Notes:  தலைவி இற்செறிக்கப்பட்ட பொழுது தோழி அவளிடம் கூறியது.  வரைவு கடாயது.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கரிய காம்பினையுடைய வண்மையில்லாத பூ வீட்டில் இழைத்த தேனடைக்கு மிகுந்த தேனைக் கொடுக்கும் என்றது, குறவர் மகளாகிய தலைவி தலைவனிடம் மிகுந்த அன்பைக் காட்டினள் என்பது உணர்த்தி அவ்வன்பை அவள் அவன் உணரான் என்று மேலும் பொருள் தந்து நின்றது.  கடி கொண்டு (8) – ஒளவை துரைசாமி உரை – விளக்கம் உறுவித்து, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – சிறப்புச் செய்து.  வேலன் – நச்சினார்க்கினியர் உரை திருமுருகாற்றுப்படை 222 – பிள்ளையார் வேலைத் (பிள்ளையான முருகனின் வேலை) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேலன் என்றார்.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).  கடி – கடி என் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம் முன்தேற்று ஆயீர் ஐந்தும் மெய்ப்படத் தோன்றும் பொருட்டு ஆகும்மே (தொல்காப்பியம், உரியியல் 87).

Meanings:  சூருடை – fierce, having gods, நனந்தலை – large space, சுனை நீர் மல்க – pond waters rise, spring waters rise, மால் பெயல் தலைஇய – heavy rains fall (தலைஇய – அளபெடை), மன் நெடுங்குன்றத்து – in the very tall mountains, கருங்கால் குறிஞ்சி – kurinji plants with dark colored stems, Strobilanthes Kunthiana, மதன் இல் வான் பூ – delicate bright flowers, ஓவுக் கண்டன்ன – like seeing the painting of an artist, இல் வரை இழைத்த – made in the houses, நாறு கொள் – with fragrance, பிரசம் – honey,  ஊறு – secreting, நாடற்கு – to the man from such country, காதல் செய்தலும் – even after loving, காதல் அன்மை – he is without love, யாது எனின் கொல்லோ – why is he like this (கொல் – ஐயப்பொருட்டு, ஓ – அசைநிலை), தோழி – my friend, வினவுகம் – let us ask the diviner, பெய்ம் மணல் முற்றம் – yard with poured sand, கடி கொண்டு – making it great, creating brightness, மெய்ம் மலி – telling the truth, கழங்கின் – divining with molucca seeds, Molucca, Caesalpinia crista, வேலன் தந்தே – bringing the diviner (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 269, எயினந்தை மகன் இளங்கீரனார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
குரும்பை மணிப் பூண் பெருஞ்செங்கிண்கிணிப்
பால் ஆர் துவர் வாய்ப் பைம் பூண் புதல்வன்
மாலைக் கட்டில் மார்பு ஊர்பு இழிய,
அவ்வெயிறு ஒழுகிய வெவ்வாய் மாண் நகைச்
செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெங்காதலி  5
திருமுகத்து அலமரும் கண் இனைந்து அல்கலும்,
பெரும வள்ளியின் பிணிக்கும் என்னார்,
சிறு பல் குன்றம் இறப்போர்,
அறிவார் யார் அவர் முன்னியவ்வே?

Natrinai 269, Eyinanthai Makan Ilankeeranār, Pālai Thinai – What the heroine’s friend said to the hero
Her son who drinks milk with his
red mouth, who wears big gold
anklets with gems the size of tiny
coconuts, crawls down from her
chest adorned with a flower garland.
She smiles with her lovely teeth,
the woman of faultless principles.

Oh lord!  The distressed eyes on your
beloved’s pretty face are not able to tie
you to her, like valli yam vines that are
used as ties, preventing you from
leaving.

Who knows what those who cross many
small mountains think?

Notes:  பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுக்கு வாயில் மறுத்தது.  பொருள்வயின் பிரியக் கருதும் தலைவனை செலவு அழுங்கச் செய்ததுமாம்.

Meanings:  குரும்பை – tiny coconuts, tiny palmyra fruits, மணிப் பூண் பெருஞ்செங்கிண்கிணி – big fine red anklets with gems, பால் ஆர் – milk drinking, துவர் வாய் – red mouth, coral-like red mouth, பைம் பூண் புதல்வன் – son with new jewels, மாலைக் கட்டில் மார்பு ஊர்பு இழிய – crawl down from her chest with garlands, அவ்வெயிறு ஒழுகிய – flowing from her beautiful teeth, வெவ்வாய் – desirable, மாண் நகை – esteemed smile, செயிர் தீர் கொள்கை – faultless principles, நம் உயிர் வெங்காதலி – your beloved lover who is as precious as life, திருமுகத்து – on her beautiful face, அலமரும் கண் இனைந்து – her swirling eyes are sad, அல்கலும் – every day, பெரும – oh greatness, வள்ளியின் பிணிக்கும் – tying like with valli yam vines (வள்ளியின் – இன் உருபு ஒப்புப் பொருளது), என்னார் – they do not consider, சிறு பல் குன்றம் இறப்போர் – those who will go past many small mountains, அறிவார் யார் – who knows, அவர் முன்னியவ்வே – what they are thinking (விரிக்கும் வழி விரித்தல், ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 270, பரணர், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
தடந்தாள் தாழைக் குடம்பை நோனாத்
தண்டலை கமழும் வண்டுபடு நாற்றத்து
இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி,
உருள் பொறி போல எம் முனை வருதல்
அணித்தகை அல்லது பிணித்தல் தேற்றாப்  5
பெருந்தோள் செல்வத்து இவளினும், எல்லா,
எற்பெரிது அளித்தனை நீயே பொற்புடை
விரி உளைப் பொலிந்த பரியுடை நன் மான்
வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன்
கூந்தல் முரற்சியின் கொடிதே  10
மறப்பல் மாதோ நின் விறல் தகைமையே.

Natrinai 270, Paranar, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
Hey you!  Your wife is sad.
Her dark, fragrant hair on
which bees that leave their
hives on thāzhai trees with large
trunks in the grove swarm,
has abundant dust on it as
though she rolled on the ground.

She with thick arms is without
her beauty.  Without clear ties
to you, she is like a
like a lifeless, rolling equipment.

Even though you have given me
more respect than her,
I will forget the greatness of
your valor since you are more
cruel than Nannan
with lifted spears, who made
cords with the hair of the women
of enemy kings who had adorned,
fine, fast horses with wide plumes,
after he defeated them in battles.

Notes:  பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனிடம் தோழி உரைத்தது.  தடந்தாள் (1) – ஒளவை துரைசாமி உரை தட என்பது உரிச்சொல், வளைந்த தாள் என்றுமாம்.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 25), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 26) .  குடம்பை (1) –  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – குடிசை, ஒளவை துரைசாமி உரை – கூடு.  ஒளவை துரைசாமி உரை – தாழையின்கண் அமைந்த கூடு தாங்கமாட்டாமையால், சோலையிடத்தே சுற்றித் திரியும் வண்டினம் ஊதுதலால் எழும் மணம் பொருந்திய இருள் போல் கரிய கூந்தல், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தாழைப் புதலினாலே கட்டப்பட்ட எமது சிறிய வீட்டின்கண் பொறுக்க முடியாதபடி சோலையிலுள்ள மலரை முடித்ததால் வண்டிகள் மொய்க்கின்ற இருள் ஒத்த கூந்தல்.  வரலாறு:  நன்னன்.  The 5th epilog of Pathitruppathu has a similar description of hair of enemy women being twisted as ropes.  Natrinai 270 and 391 have references to Nannan, a small-region king.  There were a few kings with the name Nannan.  பொற்பு – பொற்பே பொலிவு (தொல்காப்பியம், உரியியல் 39).

Meanings:  தடந்தாள் தாழை – fragrant thāzhaitrees with curved trunks, thāzhai trees with thick/curved trunks, Pandanus odoratissimus, குடம்பை – hive, hut, நோனா – unbearable (ஈறு குறைந்தது, reduced ending), தண்டலை கமழும் – fragrance spreading in the grove, வண்டுபடு – bees-swarming, நாற்றத்து – with the fragrance, இருள் புரை கூந்தல் – dark like hair (புரை – உவம உருபு, a comparison word), பொங்கு துகள் ஆடி – with overflowing dust as though she rolled on the ground, உருள் பொறி போல – like a rolling equipment, எம் முனை – எம் முன், in front of me (ஐ – சாரியை), வருதல் – coming, அணித்தகை அல்லது – without esteemed beauty or, பிணித்தல் – attachment, தேற்றா – not knowing, பெருந்தோள் – wide arms, செல்வத்து – with prosperity, இவளினும் – more than her, எல்லா – hey you (முன்னிலைச் சொல், an expletive used with the second person), எற்பெரிது அளித்தனை – you gave me great respect, நீயே – you, பொற்புடை – with beauty, விரி உளைப் பொலிந்த பரியுடை நன் மான் வேந்தர் – kings who had fine fast horses with beautiful/splendid wide tufts, ஓட்டிய – drove away, ஏந்து வேல் நன்னன் – Nannan with a lifted spear, கூந்தல் முரற்சியின் கொடிதே – harsher than the cords made by him (with the hair of the women from enemy families), மறப்பல் – I will forget, மாதோ – மாது, ஓ – அசைநிலைகள், expletives, நின் விறல் தகைமையே – your great qualities of courage (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 271, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது
இரும் புனிற்று எருமைப் பெருஞ்செவிக் குழவி
பைந்தாது எருவின் வைகு துயில் மடியும்
செழுந்தண் மனையோடு எம் இவண் ஒழியச்,
செல் பெருங்காளை பொய்ம் மருண்டு சேய் நாட்டுச்
சுவைக் காய் நெல்லிப் போக்கு அரும் பொங்கர்  5
வீழ் கடைத் திரள் காய் ஒருங்குடன் தின்று,
வீ சுனைச் சிறு நீர் குடியினள், கழிந்த
குவளை உண்கண் என் மகள் ஓரன்ன,
செய் போழ் வெட்டிய பொய்தல் ஆயம்
மாலை விரி நிலவில் பெயர்பு புறங்காண்டற்கு, 10
மா இருந்தாழி கவிப்ப
தா இன்று கழிக எற் கொள்ளாக் கூற்றே.

Natrinai 271, Unknown Poet, Pālai Thinai – What the heroine’s mother said after her daughter eloped
A big-eared, dark buffalo calf sleeps
on fresh pollen dust.
Such is our flourishing cool house
that my daughter with eyes like bluelilies
left, to be with a strong young man who
confused her with his lies, and took her
on the path to a distant country.

She ate gooseberries in a rare grove on the
path and drank water from a nearby shallow
spring.  I went when the moon’s rays spread,
looking for her, where she used to play with
her friends, cutting tender palm fronds.

May the god of death perish without strength,
for not putting me in a large urn!

Notes:  தலைவனுடன் உடன்போக்கு மேற்கொள்ளுதலும் ஓர் அறநெறியே என்பது உணரினும், அயலார் அலர் கூறுவதால் வருந்திய தாய் மருட்சியுடன் கூறியது.  குழவி (1) – யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய.  எருமையும் மரையும் வரையார் ஆண்டே.  கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே.  ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும்.  குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை.  ஆவும் எருமையும் அது சொலப்படுமே (தொல்காப்பியம், மரபியல் 15-20).   இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – எருமை கன்று தாதிலே துயிலும் என்றது, உடன் கொண்டு சென்ற தலைவன் இனிய தன் மார்பில் துயிலுமாறு உள்ளம் மகிழத் தலைவி இருப்பாள் என்பது உணர்த்திற்று.  தாது எரு – அகநானூறு 165 – தாது எரு மறுகின் மூதூர், குறுந்தொகை 46 – மன்றத்து எருவின் நுண் தாது, நற்றிணை – 271 பைந்தாது எருவின் வைகு, கலித்தொகை 103 – தாது எரு மன்றத்து, கலித்தொகை 108 – தாது உக்கன்ன தாது எரு மன்றத்து, புறநானூறு 33 – தாது எரு மறுகின், புறநானூறு 215 – தாது எரு மறுகின், புறநானூறு 311 – தாது எரு மறுகின், பதிற்றுப்பத்து 13-17 – தாது எரு மறுத்த கலி அழி மன்றத்து மலைபடுகடாம் 531 – தாது எருத் ததைந்த முற்றம்.  The ancient Thamizh people performed both cremations and burials in large clay urns.  There are references to clay urns in Akanānūru, Pathitruppathu and Puranānūru.  புனிறு – புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே (தொல்காப்பியம் உரியியல் 79).

Meanings:  இரும் – dark, big, புனிற்று எருமை – buffalo that just gave birth, பெருஞ்செவிக் குழவி – big-eared calf, பைந்தாது எருவின் – with fresh pollen dust, with fresh cow dung dust, with fresh dust, வைகு துயில் மடியும் – stays and sleeps, செழுந்தண் – flourishing cool, மனையோடு – with our house, எம் – our, இவண் ஒழிய – left from here, செல் பெருங்காளை – strong young man who left, பொய்ம் மருண்டு – confused by lies, சேய் நாட்டு – distant country, சுவைக் காய் நெல்லி – tasty nelli fruits, Phyllanthus emblica, போக்கு – while going, அரும் – rare, பொங்கர் – grove, வீழ் கடைத் திரள் காய் – gooseberries that are rounded on the sides that fell down, ஒருங்குடன் தின்று – ate in full, வீ சுனை – dried spring, dried pond, சிறு நீர் – little water, குடியினள் – she drank, கழிந்த – went, குவளை – blue waterlilies, உண்கண் – kohl-rimmed eyes, என் மகள் ஓரன்ன – like my daughter, செய் – red, போழ் – tender palm frond, வெட்டிய – cut, பொய்தல் ஆயம் – with friends who play with her, poythal games, மாலை விரி நிலவில் – at night when moonlight spread, பெயர்பு – went, புறங்காண்டற்கு – to search in the forest, மா – big, இருந்தாழி கவிப்ப – to be covered in a big urn, தா இன்று கழிக – may it perish without strength, எற் கொள்ளாக் கூற்றே – Kootruvan who does not take me, the god of death who does not take me (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 272, முக்கல் ஆசான் நல்வெள்ளையார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி, அல்லது தலைவி தோழியிடம் சொன்னது,
கடல் அம் காக்கைச் செவ்வாய்ச் சேவல்,
படிவ மகளிர் கொடி கொய்து அழித்த
பொம்மல் அடும்பின் வெண்மணல் ஒரு சிறைக்,
கடுஞ்சூல் வதிந்த காமர் பேடைக்கு,
இருஞ்சேற்று அயிரை தேரிய தெண் கழிப்  5
பூவுடைக் குட்டம் துழவும் துறைவன்
நல்காமையின், நசை பழுதாக,
பெருங்கையற்ற என் சிறுமை, பலர் வாய்
அம்பல் மூதூர் அலர்தந்து,
நோய் ஆகின்று; அது நோயினும் பெரிதே.  10

Natrinai 272, Mukkal Āsān Nalvellaiyār, Neythal Thinai – What the heroine said to her friend as the hero listened nearby, or What the heroine’s friend said to her
If the man from the port,
……….where a red-beaked, male cormorant
………. searches for ayirai fish in the clear,
……….deep backwater with flowers,
……….to feed his female in late pregnancy,
……….sitting on one side of the white
……….sand where women who perform
……….rituals pluck lush adumpu flowers
……….ruining their flourishing vines,
does not shower his graces, my desires
will be ruined and I will be helpless.
My affliction will become gossip to many
mouths in this old village and it will lead to
scandals.  The pain is greater than my affliction!

Notes:  தலைவன் வரையாது வந்தொழுக ஆற்றாளாகிய தலைவி உரைத்தது.  தோழி சொல்லியதுமாம்.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – நீர்க்காக்கையின் ஆண் பறவை சூலொடு தங்கிய பெண் பறவைக்கு அயிரை மீனைத் தேடும் என்றது, தன்னைத் தலைவன் மணம் புரிந்து வேற்று நாட்டிலிருந்து பொருள் ஈட்டி வந்து மனையறம் சிறக்குமாறு ஒழுகுவான் என்பதை உள்ளுறுத்திற்று.  தேரிய (5) – ஒளவை துரைசாமி உரை – செய்யிய என்னும் வினையெச்சம்,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – செய்யிய என்னும் வாய்ப்பாட்டெச்சம்.  அலர்தந்து (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒருசொல், அலர்ந்து என்றவாறு.

Meanings:  கடல் அம் காக்கை – cormorant in the ocean, beautiful cormorant in the ocean (அம் – சாரியை, கடலில் வாழும் அழகிய காக்கை என்றுமாம்), cormorant that lives in the ocean, beautiful ocean cormorants, செவ்வாய்ச் சேவல் – a male with red beak, படிவ மகளிர் – women who perform rituals, கொடி கொய்து அழித்த பொம்மல் அடும்பின் – with lush adumpu vines whose flowers have been plucked and damaged, Ipomoea pes caprae, வெண்மணல் ஒரு சிறை – on one side of the white sand, கடுஞ்சூல் வதிந்த காமர் பேடைக்கு – for his loving female in full pregnancy that lived with him, இருஞ்சேற்று அயிரை – loaches in dark muddy waters, Cobitis thermalis, தேரிய தெண் கழி – clear backwaters (தேரிய – செய்யிய என்னும் வினையெச்சம்), பூ உடைக் குட்டம் துழவும் – searches in deep water with flowers, துறைவன் – the man from such port, the lord of the shore, நல்காமையின் – since he does not shower his graces, நசை பழுதாக – desire gets ruined, பெருங்கையற்ற – very helpless, என் சிறுமை – my distress, பலர் வாய் அம்பல் அலர்தந்து – many mouths gossip greatly, மூதூர் – old village, அது நோய் ஆகின்று – it has become distressful, நோயினும் பெரிதே – it is larger than my love affliction (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 273, மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
இஃது எவன் கொல்லோ தோழி, மெய் பரந்து
எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம்
வெம்மையின் தான் வருத்துறீஇ, நம் வயின்
அறியாது அயர்ந்த அன்னைக்கு, ‘வெறி’ என
வேலன் உரைக்கும் என்ப ஆகலின்,  5
வண்ணம் மிகுந்த அண்ணல் யானை
நீர் கொள் நெடுஞ்சுனை அமைந்து, வார்ந்து உறைந்து, என்
கண் போல் நீலம் தண் கமழ் சிறக்கும்
குன்ற நாடனை உள்ளுதொறும்,
நெஞ்சு நடுக்குறூஉம், அவன் பண்புதரு படரே?  10

Natrinai 273, Mathurai Ilampālāsiriyan Sēnthan Koothanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
They say that the vēlan will
divine at the ritual arranged by
your concerned, loving mother,
who is unaware of the reason
for your distress and confusion
that has spread all over your body.
She thinks your affliction has been
caused by the wrath of Murukan.

I wonder what will happen now,
my friend!
Whenever I think of the man from
the flourishing mountains where a
noble elephant with abundant color
drinks water from a huge spring with
long-stemmed, fragrant
bluelilies that resemble my eyes,
my heart trembles in fear because
of the pain he has caused us!

Notes:  தலைவன் வரவு உணர்ந்த தோழி, வெறியாட்டம் நிகழும் என்பதை அவனுக்கு தெரியப்படுத்த தலைவியிடம் கூறுபவளாய் உரைத்தது.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – யானை நீர்கொள்ளும் சுனையிடத்து நீலம் தண்கமழ் சிறக்கும் என்றது, தலைமகன் தலைமகளை வரைந்து கோடற்கமைந்த எம் குடியியுள்ளார் மகிழ்சிறப்பர் என உள்ளுறைத்தவாறு, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – யானை தலைவனாகவும் சுனை நமது குடியாகவும் நீர் தலைவியாகவும் அவ் யானை உண்ணுதல் தலைவன் தலைவியை மணந்து நலன் நுகர்தலாகவும் நீலம் மலர்தல் இருமுதுகுரவரும் மகிழ்வதாகவுங் கொள்க.  வேலன் – நச்சினார்க்கினியர் உரை திருமுருகாற்றுப்படை 222 – பிள்ளையார் வேலைத் (பிள்ளையான முருகனின் வேலை) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேலன் என்றார்.  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).

Meanings:  இஃது எவன் – what will happen here, கொல்லோ – கொல், ஓ – அசைநிலைகள், expletives, தோழி – oh friend, மெய் பரந்து – spread all over the body, எவ்வம் கூர்ந்த – great distress, ஏமுறு துயரம் – confusing sorrow, வெம்மையின் – due to her desire for you, due to her love for you, தான் – she, வருத்துறீஇ – becoming sad (அளபெடை), நம் வயின் அறியாது அயர்ந்த அன்னைக்கு – to mother who does not understand our sorrow and arranging for rituals, வெறி என வேலன் உரைக்கும் – the velan will divine stating that this is due to Murukan’s wrath, என்ப – they say, ஆகலின் – so, வண்ணம் மிகுந்த அண்ணல் யானை – esteemed elephant with abundant color, நீர் கொள் நெடுஞ்சுனை அமைந்து – in the long spring with water, வார்ந்து – long, உறைந்து – is there, என் கண் போல் நீலம் – blue waterlilies that are like my eyes grow, தண் – cool, கமழ் – fragrant, சிறக்கும் – flourishing, குன்ற நாடனை – the man from the mountainous country, உள்ளுதொறும் – whenever I think about him, நெஞ்சு நடுக்குறூஉம் – causes the heart to tremble, causes the heart to fear (நடுக்குறூஉம் – அளபெடை), அவன் பண்புதரு படரே – the sorrow that is caused by his nature (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 274, காவன்முல்லைப் பூதனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நெடுவான் மின்னி குறுந்துளி தலைஇப்,
படுமழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து
உழைமான் பிணை தீண்டலின், இழை மகள்
பொன் செய் காசின் ஒண் பழம் தாஅம்
குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம்,  5
‘எம்மொடு வருதியோ பொம்மல் ஓதி?’ எனக்
கூறின்றும் உடையரோ மற்றே, வேறுபட்டு
இரும்புலி வழங்கும் சோலை
பெருங்கல் வைப்பின் சுரன் இறந்தோரே.

Natrinai 274, Kāvanmullai Poothanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
Your lover went through mountain paths
where big tigers prowl in groves, a female
of a stag rubs against a kumilam tree,
its bright fruits like coins made with gold,
dropping down, as lightning strikes and rain
falls from the tall clouds in small drops and
in heavy downpours on the mountain with
cracks.

My friend with splendid hair!  Do not be sad!
He has asked you to go with him on the many
small wasteland paths in the big mountains!

Notes:  தலைவன் பொருள்வயின் பிரிய, தலைவி வருந்தினாள்.  காட்டு வழியில் உடன் செல்ல உன்னை அழைத்தார் அவர் எனக்கூறித் தோழி அவளை ஆற்றுப்படுத்துகின்றாள்.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – மான் சென்று தீண்ட, உடனே குமிழ மரம் பழத்தை உதிர்க்கும் என்றது, தலைவனும் பொருளீட்டத் தொடங்கும்போதே பொருள் கைவந்து முற்றுப்பெறும்; எனவே தலைவனும் உடன் வருவான் என்று குறித்து.

Meanings:  நெடுவான் – tall clouds, tall skies, மின்னி – lightning, குறுந்துளி தலைஇ – small rain drops started to fall (தலைஇ – அளபெடை), படுமழை பொழிந்த – heavy rains fall, பகுவாய்க் குன்றத்து – on the mountain with cracks, on the clefted-mountains, உழைமான் பிணை தீண்டலின் – due to a female deer rubbing (உழைமான் – இரு பெயரொட்டு), இழை மகள் – young woman wearing jewels, பொன் செய் காசின் – like coins made with gold (காசின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), ஒண் பழம் – bright fruits, தாஅம் – they drop (அளபெடை), குமிழ் – kumilam tree, Gmelina arborea, தலைமயங்கிய – mixed together, குறும் பல் அத்தம் – many small paths, எம்மொடு வருதியோ – will you go with me, பொம்மல் ஓதி – oh one with splendid hair, oh one with overflowing hair, oh one with thick hair (அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), எனக் கூறின்றும்  உடையரோ – he has asked (ஓ – அசைநிலை, an expletive), மற்றே வேறுபட்டு – thinking differently (மற்று – அசைநிலை, an expletive, ஏ – அசைநிலை, an expletive), இரும்புலி – big tiger, வழங்கும் – prowling, roaming, சோலை – forest grove, பெருங்கல் – big mountain, வைப்பின் – in the place, சுரன் இறந்தோரே – one who passed through the wasteland (சுரன் – சுரம் என்பதன் போலி, இறந்தோரே – ஏ அசைநிலை, an expletive) 

நற்றிணை 275, அம்மூவனார், நெய்தற் திணை – தலைவி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
செந்நெல் அரிநர் கூர் வாள் புண்ணுறக்
காணார் முதலொடு போந்தென, பூவே
படையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கைத்
தன்னுறு விழுமம் அறியா, மென்மெல,
தெறு கதிர் இன் துயில் பசுவாய் திறக்கும்  5
பேதை நெய்தற் பெரு நீர்ச் சேர்ப்பற்கு,
யான் நினைந்து இரங்கேனாக நோய் இகந்து
அறனிலாளன் புகழ, எற்
பெறினும் வல்லேன் மன் தோழி, யானே.

Natrinai 275, Ammoovanār, Neythal Thinai – What the heroine said, as the hero listened nearby
I will not pine for the lord of the shores,
where reapers who harvest clusters of red
paddy spears with sharp sickles weed out
waterlilies from rice fields, cutting their
stems, without looking at them, and the
naïve flowers blossom, lying on a bed of
grains and sickles, open their petals
slowly when the sun spreads its warm rays,
not aware of the pain inflicted on them.

If the heartless man wants to attain me,
I am agreeable to that.  He will receive many
praises.

Notes:   தலைவன் அருகில் இருப்பதை அறிந்த தோழி ‘வருந்தாதே, அவன் வருவான்’ என்று கூறியபோது, தலைவி உரைத்தது.  குறுந்தொகை 309 – கைவினை மாக்கள் தம் செய் வினை முடிமார் சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட நீடின வரம்பின் வாடிய விடினும் கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும்.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – அரிநரால் அரியப்பட்ட நெய்தல் மலர் நெற்கதிருடன் கலந்து வாடியபோது தன் துயர் உணராது கதிரவனைக் காணுங்கால் மலரும் என்றது, அயலார் கூறும் பழிச் சொல்லாலே தலையெடாதபடி வாடிக் கிடந்தபோதும் தலைவி தலைவனைக் கண்ட அளவில் முகம் மலர நின்று அவனுக்கு இசைவாய் இருப்பாள் என்பதை உள்ளுறுத்திற்று.  செந்நெல் (1) – ஒளவை துரைசாமி உரை – வெண்ணெல் என வேறுண்மையின் செந்நெல் என்றார்.  அறனிலாளன் (8) – ஒளவை துரைசாமி உரை – அறன் இன்மையை ஆள்பவன்.  ஈண்டு இது சேர்ப்பனொடு இயைதலின், சுட்டு எனக் கொள்க, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தஞ்சமென்று அடைந்த தன்னைக் கைவிட்டமையின் அறனிலாளன் என்றாள்.  விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).

Meanings:  செந்நெல் – fine paddy, red paddy, அரிநர் – reapers, கூர் வாள் – sharp sword, புண்ணுற – causing hurt, causing wounds, காணார் – they do not see, முதலொடு போந்தென – since they remove along with the stems (போந்தென – செய்தென என்னும் வினையெச்சம், verbal participle), பூவே – the flowers, படையொடும் – with sickles, with curved knives, கதிரொடும் – with the grain spears, மயங்கிய – mixed together, படுக்கை – lying down on a bed of grain and sickles, தன்னுறு விழுமம் – their inner sorrow, அறியா – not knowing, மென்மெல – very slowly, தெறு கதிர் – warm rays, இன் துயில் – sweet sleep, பசுவாய் திறக்கும் – they open their fresh petal tips, they blossom, பேதை நெய்தல் – innocent waterlilies, naïve waterlilies, பெருநீர் சேர்ப்பற்கு – for the lord of the vast ocean shores, யான் நினைந்து – my thoughts, இரங்கேனாக – I will not pity, நோய் – disease, இகந்து – removed, அறனிலாளன் – the one who has no pity, the one who is unjust, புகழ – with praises, எற் பெறினும் – if he wants to attain me (பெறினும் – உம்மை எதிர்மறை), வல்லேன் மன் தோழி – I will be agreeable oh friend (மன் – அசைநிலை, an expletive), யானே – me (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 276, தொல் கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
‘கோடு துவையா, கோள்வாய் நாயொடு,
காடு தேர்ந்து நசைஇய வயமான் வேட்டு
வயவர் மகளிர்’ என்றி ஆயின்,
குறவர் மகளிரேம், குன்று கெழு கொடிச்சியேம்,
சேணோன் இழைத்த நெடுங்கால் கழுதில்  5
கான மஞ்ஞை கட்சி சேக்கும்
கல் அகத்தது எம் ஊரே; செல்லாது
சேந்தனை சென்மதி நீயே, பெருமலை
வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு
வேங்கை முன்றில் குரவையும் கண்டே.  10

Natrinai 276, Tholkapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
You ask us whether we are daughters
of hunters who blow horns and search for
wild animals in the forest with the help of
murderous dogs.

No!  We are daughters of mountain dwellers,
young women who reside in a place surrounded
by mountains.  Our small village is on a range
where forest peacocks rest on the tall
look-out towers built by millet field guards.

Please stay here and leave later, after drinking
liquor aged in curved bamboo from the soaring
mountains, and watching kuravai dances that
we perform in the front yard of our house with
vēngai trees.

Notes:  பகற்குறி வந்து பெயரும் தலைவனிடம் உலகியல் உரைத்தது.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கட்டுப் பரணைத் தம்முடையதாய்க் கருதி மயில்கள் தங்கும் என்றது, தலைவனும் தலைவியின் மாளிகையைத் தமதாகக் கருதி தங்க வேண்டும் என்று வேண்டி உரைத்ததாம்.  மூங்கிலில் விளைந்த கள்:  அகநானூறு 348 – ஆடு அமைப் பழுநிக் கடுந்திறல் பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி, அகநானூறு 368 – அம் பணை விளைந்த தேக் கள் தேறல், நற்றிணை 276 – வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு, பதிற்றுப்பத்து 81 – தூம்பு அகம் பழுனிய தீம் பிழி, திருமுருகாற்றுப்படை 195 – நீடு அமை விளைந்த தேக் கள் தேறல், மலைபடுகடாம் 171 – வேய்ப் பெயல் விளையுள் தேக்கட் தேறல், மலைபடுகடாம் 522 – திருந்து அமை விளைந்த தேக் கள் தேறல்.  கோள்வாய் நாயொடு (1) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கொல்லும் இயல்புடைய வேட்டை நாயுடன், ஒளவை துரைசாமி உரை – கொள்ளுதல் வல்ல வேட்டை நாயுடன், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கவ்விக் கொல்லும் நாயுடன், N. Kandasamy – with dogs of biting mouths.  There are many references in the literature to hunters using dogs to hunt prey in the forest.  There are also references to horns blown by the hunters.  Akanānūru 318 has a description of horns being blown to signal positions to hunting dogs and other hunters.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  துவையா – துவைத்து (ஒலித்து) என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

Meanings:  கோடு துவையா – horns sounding, கோள்வாய் நாயொடு – with murderous dogs, with dogs with the ability to seize, with dogs with seizing mouths, with dogs with killing mouths, காடு தேர்ந்து – searching in the forest, நசைஇய – desiring (அளபெடை), வயமான் வேட்டு – hunting for strong animals, வயவர் மகளிர் என்றி ஆயின் – if you say that we are daughters of hunters (என்றி – முன்னிலை முற்றுவினைத் திரிசொல்), குறவர் மகளிரேம் – we are daughters of mountain dwellers, குன்று கெழு கொடிச்சியேம் – we are young women from a mountain community, சேணோன் இழைத்த – made by the millet field guard, நெடுங்கால் கழுதில் – on the towers with tall posts, on the platforms with tall posts, கான மஞ்ஞை – forest peacocks, கட்சி சேக்கும் – they reach their resting places in the forest, கல் அகத்தது – in the mountains, எம் ஊரே – our town, செல்லாது – without leaving, சேந்தனை சென்மதி நீயே – you please stay here and then go (மதி – முன்னிலையசை, an expletive of the second person), பெருமலை – tall mountains, வாங்கு அமை – curved bamboo, பழுனிய – aged (பழுனிய என்பது பழுநிய எனவும் எழுதப்படும்), நறவு உண்டு – drinking alcohol (நறவு – நறா நற என்றாகி உகரம் ஏற்றது), வேங்கை முன்றில் குரவையும் கண்டே – seeing our kuravai dances in our front yard with vēngai trees, Kino Tree, Pterocarpus marsupium (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 277, தும்பி சேர் கீரனார், பாலைத் திணை – தலைவி தும்பியிடம் சொன்னது
கொடியை, வாழி தும்பி! இந்நோய்
படுக தில் அம்ம, யான் நினக்கு உரைத்தென,
மெய்யே கருமை அன்றியும், செவ்வன்
அறிவும் கரிதோ அறன் இலோய்? நினக்கே
மனை உறக் காக்கும் மாண் பெருங்கிடக்கை  5
நுண் முள் வேலித் தாதொடு பொதுளிய
தாறுபடு பீரம் ஊதி, வேறுபட
நாற்றம் இன்மையின், பசலை ஊதாய்;
சிறு குறும் பறவைக்கு ஓடி, விரைவுடன்
நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ, அன்பு இலர்  10
வெம்மலை அருஞ்சுரம் இறந்தோர்க்கு
என் நிலை உரையாய் சென்று அவண் வரவே?

Natrinai 277, Thumpi Sēr Keeranār, Pālai Thinai – What the heroine said to a bee
Oh cruel bee!  May you live long!
You swarm the clusters of peerkkai
flowers on the thorn fence protecting
our grand house, but stay away from
my pallor spots since they lack
fragrance.

May I die from this suffering!  You
have not gone and told my unkind
lover who is crossing the harsh
mountains and difficult wasteland
paths about my pitiful state.
Is it because you ran off to be with
your loving mate?  Your body is dark.
Is your fine intellect as dark as your
body, oh bee without righteousness? 

Notes:  வரையாது பொருள் ஈட்டுவதற்குத் தலைவன் சென்றதனால் தலைவி வருந்தி வண்டிடம் உரைத்தது.  தில் (2) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – முன்னிலையசை, ஒளவை துரைசாமி உரை – அசைநிலை, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – காலத்தின் மேலது.  Natrinai 54, 70, 102, 277 and 376 are messenger poems, where the heroine sends messages to the hero through birds and a bee.  உரைத்தென (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கூறியதனாலே, H. வேங்கடராமன் உரை – சொன்னவை யாவும்.

Meanings:  கொடியை – you are cruel, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தும்பி – oh bee, இந்நோய் – this disease, படுக – may I die, may I suffer, தில் – அசைநிலை, an expletive, அம்ம – அசைநிலை, an expletive, யான் நினக்கு உரைத்தென – since I have told you, what I have told you, மெய்யே கருமை – your body is dark, அன்றியும் – also, செவ்வன் அறிவும் கரிதோ – is your fine intellect also dark, அறன் இலோய் – oh one with no pity, oh one with no justice (அறன் – அறம் என்பதன் போலி), நினக்கே – for you, மனை உற காக்கும் – surrounding and protecting the house, மாண் பெருங்கிடக்கை – a place which is set up in a grand manner, நுண் முள் வேலி – fence with fine thorns, தாதொடு பொதுளிய – filled with pollen, தாறுபடு பீரம் – bunches of peerkkai flowers – ridge gourd, Luffa acutangula, ஊதி – swarming, வேறுபட – differing, நாற்றம் இன்மையின் – since there is no fragrance, பசலை ஊதாய் – you do not swarm around my yellow pallor spots, சிறு குறும் பறவைக்கு – to your small female bee, ஓடி விரைவுடன் – going fast, நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ – is it because of your soft heart, அன்பு இலர் – the man without kindness, வெம்மலை – harsh mountains, hot mountains, அருஞ்சுரம் – difficult wasteland, இறந்தோர்க்கு – to the man who went, என் நிலை உரையாய் சென்று – you did not go and tell him about my situation, அவண் – there, வரவே – for him to come (ஏ – அசைநிலை, an expletive)   

நற்றிணை 278, உலோச்சனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
படுகாழ் நாறிய பராஅரைப் புன்னை,
அடு மரல் மொக்குளின் அரும்பு வாய் அவிழப்,
பொன்னின் அன்ன தாதுபடு பல் மலர்
சூடுநர் தொடுத்த மிச்சில், கோடுதொறும்
நெய் கனி பசுங்காய் தூங்கும் துறைவனை  5
இனி அறிந்திசினே, கொண்கன் ஆகுதல்,
கழிச் சேறு ஆடிய கணைக் கால் அத்திரி
குளம்பினும் சேயிறா ஒடுங்கின,
கோதையும் எல்லாம் ஊதை வெண்மணலே.

Natrinai 278, Ulōchanār, Neythal Thinai – What the heroine’s friend said to her
The lord of the shores,
……….where buds on dense,
……….thick-trunked punnai trees
……….open like the nearby maral
……….buds, their flowers with golden
……….pollen are plucked and strung
……….by those who wear them, and
……….the leftover blossoms become
……….green fruits rich in oil and hang
……….on every branch,
has come for your hand in marriage.
I am aware of his arrival.  His garland
covered with sand blown by the northerly
wind, he came riding his thick-legged mule,
as it crushed red shrimp with its hooves,
running on muddy, brackish water.

Notes:  பொருள்வயின் பிரிந்த தலைவன் வராததால் வருந்திய தலைவியிடம் தோழி கூறியது.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கொய்தன போக எஞ்சிய புன்னை மலர்கள் நெய்கனிந்து காயாகத் தூங்குமென்றது, இனி ஊரார் அலரால் துன்புற்று நீங்க இனி அன்புமிக்க இல்லறத்தில் மகிழ்க என்பது உணர்த்தவாம்.  கொண்கன் (6) – கொண்கன் என்பது பொதுவாக நெய்தல் நிலத் தலைவனைக் குறிக்கும் பெயராயினும் ‘கோடற்குரியவன்’ என்னும் பொருள்பட அமைந்திருத்தல் பற்றிக் கொண்கன் ஆகுதல் என்றார் போலும்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).

Meanings:  படுகாழ் – hard-core wood, dense wood, நாறிய – sprouted, பராஅரைப் புன்னை – punnai trees with thick trunks, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum (பராஅரை – அளபெடை), அடு மரல் மொக்குளின் அரும்பு வாய் அவிழ – loosening the buds like the nearby maral buds, Bowstring hemp, பொன்னின் அன்ன தாதுபடு – with gold-like pollen (பொன்னின் – இன் சாரியை), பல் மலர் – many flowers, சூடுநர் – those who wear, தொடுத்த – strung, tied together, மிச்சில் – the leftover, கோடுதொறும் – in every branch, நெய் கனி பசுங்காய் தூங்கும் – green/unripe fresh fruits filled with oil hang, துறைவனை – the lord of the shores, இனி – now, அறிந்திசினே – I understand (இசின் – தன்மை அசைநிலை, an expletive of the first person, ஏ – அசைநிலை, an expletive), கொண்கன் ஆகுதல் – to become your husband, கழிச் சேறு ஆடிய – running on the mud in the brackish water, கணைக் கால் – thick legs, அத்திரி – a mule, குளம்பினும் சேயிறா ஒடுங்கின – red shrimp got crushed by its hooves (சேயிறா – பண்புத்தொகை – a compound word in which the first member stands in adjectival relation to the second), கோதையும் எல்லாம் ஊதை வெண்மணலே – the white sand blown by the northerly wind was on his garland and everything (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 279, கயமனார், பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது
வேம்பின் ஒண் பழம் முணைஇ, இருப்பைத்
தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ,
வைகு பனி உழந்த வாவல், சினைதொறும்,
நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப,
நாட் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு 5
பொருத யானைப் புட் தாள் ஏய்ப்ப,
பசிப் பிடி உதைத்த ஓமைச் செவ்வரை
வெயில் காய் அமையத்து இமைக்கும் அத்தத்து,
அதர் உழந்து அசையின கொல்லோ, ததர்வாய்ச்
சிலம்பு கழீஇய செல்வம்  10
பிறருழைக் கழிந்த என் ஆயிழை அடியே?

Natrinai 279, Kayamanār, Pālai Thinai – What the heroine’s mother said after her daughter eloped
In the wasteland, bats hanging on all the tree
branches, saddened by dawn’s cold dew drops
that fall on them appearing like sparks from
oil-dipped wick flames, become tired of eating
bright neem fruits and move away to iruppai
trees, desiring their fruits with thick,
honey-sweet juice.

A striped male tiger fought with a strong
elephant whose sore red legs are like ōmai
tree trunks kicked by a hungry female elephant.

The hot sun glows in the wasteland where my
beautiful daughter wearing lovely jewels will
struggle, as she walks on a harsh path.  Will her
feet tire?

It is sad that I will not see her anklet-removal
ceremony seen by others!

Notes:  மகட்போக்கிய தாய் சொன்னது.  தோழி செவிலியிடம் உடன்போக்குச் செய்தியைக் கூற, அவள் நற்றாயிடம் கூறுகின்றாள்.  அவள் வருந்தி உரைத்தது.  இறைச்சி (1) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – வேப்பம்பழத்தை வெறுத்து இருப்பைப் பழம் விரும்பி வாவல் பனியில் வைகுமென்றது, தந்தை செல்வத்தை வெறுத்துத் தன் கொழுநன் செல்வம் விரும்பிச் சென்ற என் மகள் பிறர் இல்லத்தே எங்ஙனம் இருப்பாளோ என்பதாம்.  இறைச்சி (2) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – பிடியால் தாக்கப்பெற்ற ஓமை ஞாயிற்று ஒளியில் விளங்கித் தோன்றும் என்றது, மகளால் வெறுத்து நீக்கப்பட்ட யான் பொழுது புலர்ந்த பின் பலராலும் தூற்றப்பட்டேன் என்பதாம்.  This poet describes a young girl removing her anklets before eloping, in poem 12.  Anklet-removal ceremony was celebrated right before the wedding.   Natrinai 279, Ainkurunūru 399 and Akanānūru 315, 369, and 385 have references to the anklet-removal ceremony.  Akanānūru 321 describes a young girl removing her anklets before eloping.

Meanings:  வேம்பின் ஒண் பழம் – bright fruits of neem trees, Azadirachta indica, முணைஇ – hated, இருப்பை – iruppai tree, South Indian Mahua, Indian Butter Tree, தேம் பால் செற்ற – sweet juice thickened (தேம் தேன் என்றதன் திரிபு), தீம் பழம் நசைஇ – desiring the sweet fruits (நசைஇ – அளபெடை), வைகு பனி – early morning dew, உழந்த வாவல் – bats that are saddened, சினைதொறும் – on all the branches, நெய் தோய் திரியின் – like sparks from flames on wicks dipped in oil (திரியின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு), தண் சிதர் உறைப்ப – cool dew drops fall, நாள் சுரம் உழந்த – went to the wasteland in the morning and suffering, வாள் கேழ் ஏற்றையொடு – with a brightly striped male (tiger),  பொருத – fought, யானை –  elephant, புண் தாள் – sore legs, ஏய்ப்ப – like (உவம உருபு, a comparison word), பசிப் பிடி – a hungry female elephant, உதைத்த – kicked, ஓமை – ōmai tree, Toothbrush Tree, Dillenia indica, செவ்வரை – சிவப்பு அரை, red trunk, வெயில் காய் அமையத்து – at the time of the hot sun, இமைக்கும் – shines, அத்தத்து – wasteland’s, அதர் – path, உழந்து அசையின கொல்லோ – are they tired being sad (கொல் – ஐயப்பொருட்டு, ஓ – அசைநிலை), ததர்வாய் – close, together, சிலம்பு கழீஇய செல்வம் – special anklet removal ceremony done before marriage (கழீஇய – அளபெடை), பிறர் உழைக் கழிந்த – happened with those near her, என் ஆயிழை – my daughter  wearing beautiful jewels, my daughter wearing chosen jewels (அன்மொழித்தொகை), அடியே – feet (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 280, பரணர், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
‘கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம் கொக்கின்
கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல்
தூங்கு நீர்க் குட்டத்து துடுமென வீழும்
தண் துறை ஊரன் தண்டாப் பரத்தமை
புலவாய்’ என்றி தோழி! புலவேன்,  5
பழன யாமைப் பாசடைப் புறத்து
கழனி காவலர் சுரி நந்து உடைக்கும்,
தொன்று முதிர் வேளிர் குன்றூர் அன்ன என்
நல் மனை நனி விருந்து அயரும்
கைதூவு இன்மையின் எய்தாமாறே.  10

Natrinai 280, Paranar, Marutham Thinai – What the heroine said to her friend, about her unfaithful husband
My friend!  You tell me that I should not
fight with the man with countless
concubines, who comes from the cool
shore town where a mango tree drops its
sweet fruits with loud thuds, into a deep
pond, where the buds of white waterlily
flowers look like storks with pointed
bodies.  I will not quarrel with him!

I entertain guests at my good house that
is lovely like the ancient Kundrūr town
of Vēlirs, where field guards break curled
snail shells on the green backs of field
tortoises that look like leaves.

Since I don’t have rest, I won’t let him in!

Notes:  வாயில் வேண்டிச் சென்ற தோழிக்குத் தலைவி மறுத்து மொழிந்தது.  தலைவனை ஏற்றுக்கொண்டு வழிப்பட்டளைப் புகழ்ந்து புக்க தோழிக்குத் தலைவி சொல்லியதுமாம்.  ஒளவை துரைசாமி உரை –    ‘அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) ‘வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇ’ என்பதற்கு இப்பாட்டைக் காட்டி, ‘இந்நற்றிணை தலைவனொடு புலவாமை நினக்கு இயல்போ?’ என்ற தோழிக்கு, விருந்தாற் கைதூவாமையின் அவனை எதிர்ப்படப் பெற்றிலேன் அல்லது புலவேனோ? என்றவாறு’ என்பர் நச்சினார்க்கினியர்.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – மரத்திலிருந்து வீழும்பழம் பொய்கையை விரைந்து சேரும் என்றது, பரத்தையின் நீங்கிய தலைவன் விரைந்து நின்னைச் சேர்வான் என்பது உணர்த்திற்று.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – உழவர் சிறப்பற்ற நத்தையை ஆமையின் முதுகில் வைத்து உடைத்து உண்பர் என்றது, தலைவன் சிறப்பற்ற பரத்தையை நயந்து ஒழுகுவன் என்பதாம்.  வரலாறு:  வேளிர் குன்றூர்.  கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம் (1) – ஒளவை துரைசாமி உரை – மாமரத்தினின்று காம்பற்று வீழ்ந்த இனிய பழம், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கொக்கு வந்திருந்தனவால் கிளை அசைதலின் உதிர்ந்த மாங்கனி.  எய்தாமாறே (10) – கு. வெ. பாலசுப்ரமணியன் – நான் அவனை இங்கு வர விடேன், ச. வே. சுப்பிரமணியன் உரை – நான் அங்கு அவனை வரவிட மாட்டேன், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அவனை எதிர்ப்படப் பெற்றிலேன்.  The Vēlir’s were a ruling clan.  They were small-region kings.  Evvi, Āy Andiran, Pāri and Vāttrāttru Eliniyāthan belonged to this clan.  There are references to Vēlirs in Puranānūru poems 24, 135, 201 and396.  According to K.N. Sivaraja Pillai, the Chōzha dynasty founder Veliyan Thithan was a Vēlir.  Kurunthokai 163 has a reference to Vēlirs owing Kundrūr town.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  நற்றிணை 230 – கொக்கின் அன்ன கூம்பு முகை கணைக் கால் ஆம்பல்.

Meanings:  கொக்கினுக்கு – from the mango tree, due to storks sitting on the trees, ஒழிந்த – dropped, தீம் பழம் – sweet fruits, கொக்கின் – of a stork’s, கூம்பு நிலை – closed/pointed stage, அன்ன – like, முகைய – having buds, with buds, ஆம்பல் – white water-lilies, தூங்கு நீர் – very deep water, குட்டத்து – into a pond, துடுமென வீழும் – fall with a thud, fall with a splash, தண் துறை ஊரன் – the man from the town with cool shores, தண்டா – not suitable, not reduced, பரத்தமை – infidelities, association with concubines, புலவாய் – do not sulk, என்றி – you say (என்றி – முன்னிலை ஒருமை முற்றுவினைத் திரிசொல்), தோழி – my friend, புலவேன் – I will not sulk, பழன யாமை – field tortoise, பாசடைப் புறத்து – green leaf like backs, கழனி காவலர் – field guards, சுரி நந்து – curled snails, உடைக்கும் – they break (and eat), தொன்று முதிர் – very ancient, வேளிர் – Vēlir clan, குன்றூர் – Kundrūr, அன்ன – like, என் நல் மனை – my good house, நனி விருந்து அயரும் – being very hospitable, கைதூவு இன்மையின் – since I don’t have leisure/rest, எய்தாமாறே – I will not let him in (மாறு – மூன்றாம் வேற்றுமை ஏதுப் பொருள்பட வந்த சொல்லுருபு, ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 281, கழார்க்கீரன் எயிற்றியார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது அல்லது தலைவி தோழியிடம் சொன்னது
மாசு இல் மரத்த பலி உண் காக்கை
வளி பொரு நெடுஞ்சினை தளியொடு தூங்கி,
வெல் போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும்
நல் வகை மிகு பலிக் கொடையோடு உகுக்கும்
அடங்காச் சொன்றி, அம் பல் யாணர் 5
விடக்குடைப் பெருஞ்சோறு உள்ளுவன இருப்ப,
மழை அமைந்து உற்ற மால் இருள் நடுநாள்,
தாம் நம் உழையராகவும், நாம் நம்
பனிக் கடுமையின் நனி பெரிது அழுங்கி
துஞ்சாம் ஆகலும் அறிவோர்  10
அன்பிலர் தோழி, நம் காதலோரே.

Natrinai 281, Kalārkeeran Eyitriyār, Pālai Thinai – What the heroine’s friend said to her or What the heroine said to her friend
A crow eats offerings left under
a faultless tree and rests on a
tall branch swayed by the wind,
as rain drops on it.
It thinks about the unlimited
rice and big pieces of rich meat
offerings that it will get in Kalār,
the town of the victorious Chōzhas.

At this confusing chilly midnight
time when rain pours down,
even if he were near our side,
we would be unable to sleep.
He knows about our distress.
He is an unkind man, oh friend!

Notes:  தலைவன் குறித்த பருவத்தில் வராததால் தலைவி வருந்துகின்றாள்.  அவன் வரும் வரையில் பொறுத்திரு எனக் கூறிய தோழியிடம் தலைவி உரைத்தது.  தோழி தலைவியிடம் சொல்லியதுமாம்.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – பலியுண்ட காக்கை விடக்கு உண்ண காத்திருக்குமாறு, நாமும் அவருடன் கூடி வாழ்தலுக்காகக் காத்துள்ளோம் என்பதை உணர்த்தியது.  வரலாறு:  சோழர், கழாஅர்.  Natrinai 258, 281, 293, 343 and 367 have references to food offerings to crows.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  அடங்காச் சொன்றி (5) – ஒளவை துரைசாமி உரை – பலி வகையில் அடங்காத சோறு, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – சொல்லில் அடங்காத சோறு.

Meanings:  மாசு இல் மரத்த – on a faultless tree, பலி உண் காக்கை – a crow that ate the offerings (left under the tree by people), வளி பொரு நெடுஞ்சினை – a tall branch attacked by the wind, தளியொடு – with rain drops, தூங்கி – sways, வெல் போர்ச் சோழர் கழாஅர் – in Kalār town of the victorious Chōzhas, கொள்ளும் – that it gets, நல் வகை மிகு பலிக் கொடையோடு – with many good offerings, உகுக்கும் – offerings, அடங்காச் சொன்றி – unlimited rice, அம் – – beautiful பல் யாணர் – many kinds and abundant, விடக்குடை – big pieces of meat, பெருஞ்சோறு – huge balls of rice, உள்ளுவன இருப்ப – thinking of getting, மழை அமைந்து உற்ற – due to the rain, மால் – confusing, இருள் நடுநாள் – dark midnight, தாம் நம் உழையராகவும் – even when he is near us, நாம் நம் பனிக் கடுமையின் நனி பெரிது அழுங்கி துஞ்சாம் ஆகலும் அறிவோர் – he knows that we struggle very greatly due to the harsh cold and are unable to sleep (நனி பெரிது – மிக மிக – ஒரு பொருட் பன்மொழி), அன்பிலர் தோழி நம் காதலோரே – our lover has no kindness oh friend (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 282, நல்லூர்ச் சிறு மேதாவியார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழக்,
கோடு ஏந்து அல்குல் அவ்வரி வாட,
நன்னுதல் சாய படர் மலி அரு நோய்
காதலன் தந்தமை அறியாது உணர்த்த,
அணங்குறு கழங்கின் முதுவாய் வேலன்  5
கிளவியின் தணியின், நன்று மன், சாரல்
அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை,
ஆடு மழை மங்குலின் மறைக்கும்
நாடு கெழு வெற்பனொடு அமைந்த நம் தொடர்பே.

Natrinai 282, Nallūr Siru Mēthāviyār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
Not knowing that your lover from
the mountains,
……….where forest dwellers burn
……….akil wood and dry leaves,
……….and fragrant smoke spreads
……….and hides like moving clouds,
gave you this spreading disease, the wise
wise diviner is here, ready to divine with
kazhangu beans set in front of Murukan.

It will be good, if his words can heal you
of the affliction that causes your stacked,
tight fitting, bright bangles to slip down,
the lines on your tall, lifted loins to fade,
and your fine forehead to become dull!

Notes:  இற்செறித்தமை அறிவுறுத்தி வரைவு கடாயது.  அவ்வரி வாட (2) – H.வேங்கடராமன் உரை – அழகிய வரிகள் வாட, ஒளவை துரைசாமி உரை – அழகிய வரிகள் சுருங்க.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – சுட எழுந்த புகை மழை முகில் போல வானத்திற் படர்ந்து மறைக்கும் என்றது, வேலன் உரைக்கும் கிளவி இவள் உற்ற நோய் தீரு மருந்து போல் பரவி, அது தலைமகனால் உளதாயிற்று என்பதை மறைக்கும் என்றவாறு.  வேலன் – நச்சினார்க்கினியர் உரை திருமுருகாற்றுப்படை 222 – பிள்ளையார் வேலைத் (பிள்ளையான முருகனின் வேலை) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேலன் என்றார்.  அணங்குறு – (5) – ஒளவை துரைசாமி உரை – தெய்வத் தன்மையுடைய, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – முருகவேளின் முன்பு இடப்பட்ட.

Meanings:  தோடு – stacked, அமை – fitting, செறிப்பின் – close fitting, இலங்கு வளை – bright bangles, ஞெகிழ – slipping down, loosened, கோடு ஏந்து அல்குல் – lifted loins with lines, tall and lifted loins,  அவ்வரி – beautiful lines, வாட – fade, நன்னுதல் – fine forehead, சாய – fade, படர் – spreading, மலி – lot, அரு நோய் – rare disease, காதலன் தந்தமை – lover gave, அறியாது – not knowing, உணர்த்த – to explain, அணங்குறு கழங்கின் – with the divining molucca seeds/beans, molucca seeds placed in front of Murukan, Molucca, Caesalpinia crista, முதுவாய் வேலன் – wise Murukan priest, கிளவியின் – because of his words, தணியின் – if it goes down, நன்று மன் – very good (மன் மிகுதியை உணர்த்தியது, அசைநிலை, an expletive), சாரல் – mountain slopes, அகில் சுடு கானவன் – forest people who burn akil wood, eaglewood,  உவல் – dry leaves, சுடு – burning, கமழ் புகை – fragrant smoke, ஆடு மழை – moving rain clouds, மங்குலின் மறைக்கும் – hide like clouds (மங்குலின் – இன் உருபு ஒப்புப் பொருளது), நாடு கெழு வெற்பனொடு – with the lord of the country with mountains, அமைந்த நம் தொடர்பே – our friendship that we have with him (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 283, மதுரை மருதன் இளநாகனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
ஒண்ணுதல் மகளிர் ஓங்கு கழிக் குற்ற
கண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல்
அகல் வரிச் சிறு மனை அணியும் துறைவ!
வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய
இன்னை ஆகுதல் தகுமோ, ஓங்கு திரை  5
முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி,
ஏமுற விளங்கிய சுடரினும்
வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கே?

Natrinai 283, Mathurai Maruthan Ilanākanār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
Oh lord of the shores
where bright-browed women
pluck from the vast backwaters
waterlily flowers that look like
eyes, and decorate their
small houses with wide kolams!

We desired your words
that were more truthful than
the bright sun that rises
above the tall waves, bringing
happiness to many who worship it.

Is this fitting for you to have
become such, making her beauty,
praised by those smart, to be lost?

Notes:  பகற்குறி வந்த தலைவனைத் தோழி வரைவு கடாயது.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – மகளிர் கொய்த நெய்தல், வீட்டை அணி செய்யும் என்றது, தலைவியை மணந்து இல்லத்தை அணி செய்க எனத் தலைவனுக்கு உணர்த்தியதாம்.  அகல் வரிச் சிறு மனை (3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் – அகன்ற கையால் கோலஞ்செய்த சிறிய மனை, ஒளவை துரைசாமி உரை – அகன்ற வரிகள் பொருந்த மணலால் அமைந்த சிறு வீடு. Natrinai 123, 283 and 378 have descriptions of kolams.  முந்நீர் – தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது.  முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் ‘தமிழ்க்காதல்’ நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு 9 உரை, நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி 75 உரை.

Meanings:  ஒண்ணுதல் மகளிர் – women with bright foreheads, ஓங்கு கழி – long/rising brackish waters, குற்ற – plucked, கண் நேர் ஒப்பின – appearing like eyes, கமழ் நறு நெய்தல் fragrance spreading waterlilies, அகல் – wide, வரி – lines/kolams, சிறு மனை அணியும் – adorn their small houses, துறைவ – oh lord of the seashore (அண்மை விளி), வல்லோர் ஆய்ந்த – those who are capable analyzed, தொல் கவின் தொலைய – old beauty to be lost, இன்னை ஆகுதல் தகுமோ – is this fitting, ஓங்கு திரை – rising waves, முந்நீர் மீமிசை – on the ocean (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), பலர் தொழத் தோன்றி – many worship as it appears, ஏமுற விளங்கிய சுடரினும் – more than the bright sun that brings happiness, வாய்மை சான்ற நின் சொல் – your truthful words, நயந்தோர்க்கே – to those who desired (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 284, தேய்புரிப் பழங்கயிற்றினார், பாலைத் திணை – தலைவன் சொன்னது
புறம் தாழ்பு இருண்ட கூந்தல், போதின்
நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண்,
உள்ளம் பிணிக்கொண்டோள் வயின், நெஞ்சம்
‘செல்லல் தீர்கம் செல்வாம்’ என்னும்,
‘செய்வினை முடியாது எவ்வம் செய்தல்  5
எய்யாமையோடு இளிவு தலைத்தரும்’ என,
உறுதி தூக்கத் தூங்கி, அறிவே,
‘சிறிது நனி விரையல்’ என்னும், ஆயிடை
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய
தேய் புரிப் பழங்கயிறு போல,  10
வீவது கொல் என் வருந்திய உடம்பே?

Natrinai 284, Thēypuri Palankayitrinār, Pālai Thinai – What the hero said when he went to earn wealth
My heart is tied to my beloved
with dark hair hanging on her back
and pretty, kohl-rimmed eyes with
the color of attractive petals
of blue waterlily blossoms.

It tells me that I should go to her
and end her sorrow.

My intelligence tells me that I should
finish my business, since it will bring
sorrow and shame to me if I do not
do so, and that I should not
veer from my work, even a little bit.

I am caught between my heart
and intelligence,
like a twisted old rope that is pulled
on both ends by male elephants
with bright, lifted tusks.

Will my distressed body be ruined?

Notes:  பொருள்வயின் பிரிந்த தலைவன் கூறியது.  ஒளவை துரைசாமி உரை – ‘நோயும் இன்பமும் இரு வகை நிலையில்’ (தொல்காப்பியம், பொருளியல் 2) எனத் தொடங்கும் நூற்பா உரையில், இப்பாட்டைக் காட்டி, ‘இஃது உணர்வுடையது போல இளிவரல்பற்றிக் கூறியது’ என்பர் நச்சினார்க்கினியர்.  ‘ஞாயிறு திங்கள் அறிவே நாணே’ (தொல்காப்பியம், செய்யுளியல் 192) என்ற நூற்பா உரையில் இப்பாட்டின், ‘உறுதி தூக்கத் தூங்கியறிவே, சிறுநனி விரையலென்னும்’ என்ற அடிகளைக் காட்டுவர் இளம்பூரணர்.  தூங்கி (9) – ஒளவை துரைசாமி உரை – தெளிவு பெறாது கலங்கி.  மாறு பற்றிய (9) – ஒளவை துரைசாமி உரை – இருதலையும் தனித்தனியே பற்றி இழுத்ததால், H.வேங்கடராமன் உரை – ஒன்றோடு ஒன்று மாறுபட்டு கைப்பற்றி இழுத்த.  செல்லல் – செல்லல் இன்னல் இன்னாமையே (தொல்காப்பியம், உரியியல் 6). நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  புறம் தாழ்பு – hanging in the back, இருண்ட கூந்தல் – dark hair, black hair, போதின் நிறம் பெறும் – with the color of flowers – blue waterlilies, ஈர் இதழ் – attractive petals, பொலிந்த உண்கண் – beautiful kohl-rimmed eyes, splendid kohl-rimmed eyes, bright kohl-lined eyes, உள்ளம் பிணிக்கொண்டோள் வயின் நெஞ்சம் – my heart got attached to her and went her way, செல்லல் தீர்கம் – we will go and end her sorrow, செல்வாம் என்னும் – that we will go, செய் வினை முடியாது – without finishing the work set out to do, எவ்வம் செய்தல் – to cause sorrow, எய்யாமையோடு- with ignorance,  இளிவு தலைத்தரும் – not doing the work will bring shame, என – thus, உறுதி தூக்க – considering certainty as superior, தூங்கி – confused without clarity, அறிவே – my intelligence (ஏ – அசைநிலை, an expletive), சிறிது நனி விரையல் என்னும் – told me ‘do not move away even a little bit from your work’, ஆயிடை – there, ஒளிறு – bright, ஏந்து மருப்பின் களிறு – male elephants with lifted tusks, மாறு பற்றிய – pulled with enmity, pulled on different ends, தேய் புரிப் பழங்கயிறு போல – like a twisted old rope that is ruined, வீவது கொல் – will it be ruined, என் வருந்திய உடம்பே – my distressed body (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 285, மதுரைக் கொல்லன் வெண்ணாகனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அரவு இரை தேரும் ஆர் இருள் நடுநாள்
இரவின் வருதல் அன்றியும், உரவுக் கணை
வன் கைக் கானவன் வெஞ்சிலை வணக்கி,
உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு,
மனைவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட,  5
வேட்டு வலம்படுத்த உவகையன், காட்ட
நடு கால் குரம்பைத் தன் குடிவயிற் பெயரும்
குன்ற நாடன் கேண்மை நமக்கே
நன்றால் வாழி தோழி, என்றும்
அயலோர் அம்பலின் அகலான்,  10
பகலின் வரூஉம் எறி புனத்தானே.

Natrinai 285, Mathurai Kollan Vennākanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
May you live long, oh friend!
The lord of the mountains,
……….where a forest dweller with strong
……….hands bends his harsh bow and
……….shoots an arrow into the chest
……….of a male porcupine and kills it,
……….and returns home happily with
……….his kill, to his hut built on stilts
……….in the forest village, to the uproar
……….of the dogs living in his house and
……….playing together,
comes at midnight in pitch darkness
when snakes search for food.

Not caring about the gossips, he comes
during the day to the field cleared by
burning.  Is his friendship good for us?

Notes:  இரவுக்குறியையும் பகற்குறியையும் மறுத்து வரைவு கடாயது.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கானவன் எய்து பெற்ற முள்ளம்பன்றியோடு நாய்கள் சூழத் தன் குடியிருப்பை அடைவான் என்றது, தலைவன் தலைவியை தன் ஊர்க்கு கொண்டு சென்று தமர் மகிழ மணம் புணர்வானாக என்பது உணர்த்தியது.  வலம்படுத்த (6) – ஒளவை துரைசாமி உரை – தாக்கப்பட்ட விலங்கின் வலியை அழித்தல்.

Meanings:  அரவு இரை தேரும் – snakes search for food, ஆர் இருள் – pitch darkness, நடுநாள் இரவின் வருதல் – coming in the middle of the night, அன்றியும் – other than that, உரவுக் கணை – strong bow, வன் கைக் கானவன் – forest dweller with strong hands, வெஞ்சிலை வணக்கி – bending his harsh bow, உளமிசை – on the chest, தவிர்த்த – killed, முளவுமான் ஏற்றையொடு – with a male porcupine, மனைவாய் ஞமலி – dogs residing in the house, ஒருங்கு புடை ஆட – playing together on one side, வேட்டு வலம்படுத்த உவகையன் – he is happy with his hunting victories, காட்ட நடு கால் குரம்பை – hut with planted feet in the middle of the forest, தன் குடிவயிற் பெயரும் – goes toward his settlement, குன்ற நாடன் கேண்மை – friendship of the lord of the mountains, நமக்கே நன்றால் – is it good for us (நன்று + ஆல், ஆல் – அசைநிலை, an expletive), வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – oh friend, என்றும் – always, அயலோர் அம்பலின் – despite the gossip of others, அகலான் – he does not leave, பகலின் வரூஉம் – he comes during the day (வரூஉம் – அளபெடை), எறி புனத்தானே – to the field cleared by burning (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 286, துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
‘ஊசல் ஒண் குழை உடை வாய்த்தன்ன
அத்தக் குமிழின் ஆய் இதழ் அலரி
கல் அறை வரிக்கும் புல்லென் குன்றம்
சென்றோர் மன்ற, செலீஇயர் என் உயிர்’ எனப்
புனை இழை நெகிழ விம்மி, நொந்து நொந்து  5
இனைதல் ஆன்றிசின் ஆயிழை! நினையின்,
நட்டோர் ஆக்கம் வேண்டியும் ஒட்டிய
நின் தோள் அணிபெற வரற்கும்
அன்றோ தோழி, அவர் சென்ற திறமே .  9

Natrinai 286, Thuraikkurumāvit Pālankotranār, Pālai Thinai – What the heroine’s friend said to her
Oh one with beautiful jewels!  Kumilam
flowers with pretty petals, that resemble
swing-like bright earrings, drop on
boulders creating beautiful patterns on
the parched mountains where he went.

“Let my life be lost.  He has gone,” you say,
your jewels slipping down.

Do not cry in distress.  If we think about it,
he has gone to do favors for his friends and 
to bring fine jewels for your arms since you  
are his lover who is close to him.  Is it not so?

Notes:  பிரிவிடை வருந்திய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.  ஒளவை துரைசாமி உரை– ‘மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 30) என்ற நூற்பா உரையில், ‘நட்டோர் ஆக்கம் வேண்டியும் ஒட்டிய நின்றோள் அணிபெற வரற்குமன்றோ, தோழியவர் சென்ற திறமே’ என்பதைக் காட்டி, இதனுள் ‘அணி என்றது பூணினை’ என்பர் நச்சினார்க்கினியர்.  ஒட்டிய நின் தோள் (7-8) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அடைக்கலமாகப் புகுந்த நின்னுடைய தோள்கள், ஒளவை துரைசாமி உரை – உயிரோடு கலந்த காதலியாகிய நின் தோள்கள், கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – அடைக்கலமாக அவரை அணுகிய நின் தோள்கள்.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ்செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை). 

Meanings:  ஊசல் – swing, ஒண் – bright, குழை – earrings, உடை வாய்த்தன்ன – appearing like that, அத்தக் குமிழின் ஆய் இதழ் அலரி – the flowers of the wasteland kumilam trees with beautiful petals, Gmelina arborea, கல் அறை வரிக்கும் – decorates the boulders, falls in patterns on the boulders, புல்லென் குன்றம் சென்றோர் – went to the dull mountains, went to the parched mountains, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty, செலீஇயர் – may it go (வியங்கோள் வினைமுற்று விகுதி, verb ending with a command, இகழ்ச்சிப்பொருளில் வந்தது, used to show ill will, அளபெடை), என் உயிர் – my life, என – thus, புனை இழை நெகிழ – beautiful jewels became loose, chosen jewels to become loose, விம்மி நொந்து நொந்து – sobbing in great distress, இனைதல் ஆன்றிசின் – get rid of your sorrow (சின் – முன்னிலை அசை, an expletive of the second person), ஆயிழை – oh one with beautiful/chosen jewels (அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), நினையின் – if we think about it, நட்டோர் ஆக்கம் வேண்டியும் – and to do favors for his friends, ஒட்டிய – close to him, நின் தோள் அணிபெற வரற்கும் – and for your arms to get their ornaments, அன்றோ – is it not so, தோழி – oh friend, அவர் சென்ற திறமே – the way he went (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 287, உலோச்சனார், நெய்தற் திணை – தலைவி சொன்னது
விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றிப்,
பைங்கண் யானை வேந்து புறத்து இறுத்த,
‘நல் எயிலுடையோர் உடையம்’ என்னும்
பெருந்தகை மறவன் போல, கொடுங்கழிப்
பாசடை நெய்தல் பனி நீர்ச் சேர்ப்பன்  5
நாம முதலை நடுங்கு பகை அஞ்சான்,
காமம் பெருமையின் வந்த ஞான்றை,
அருகாது ஆகி அவன்கண் நெஞ்சம்
நள்ளென் கங்குல் புள் ஒலி கேட்டொறும்,
‘தேர் மணித் தெள் இசை கொல்?’ என  10
ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே.

Natrinai 287, Ulōchanār, Neythal Thinai – What the heroine said
The lord of the cold shores comes
here without fear, goaded by great love,
braving fierce crocodiles in the curved
backwaters with waterlilies with green
leaves.

My strong heart that goes to him feels like
a great, brave warrior inside a strong fort,
who is confident that the sky-high fort
that is surrounded by an enemy king with
elephants with green eyes, is well
protected by warriors who are outside.

Whenever I hear the chirps of birds
in the pitch darkness of night, I wonder
whether they are the clear sounds of his
chariot bells, and I am unable to sleep,
even when the town has gone to sleep.

Notes:  காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைவி கூறியது.  காமம் பெருமையின் (7) – ஒளவை துரைசாமி உரை, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – காதல் மிகுதியால்.  அகநானூறு 239-9 – காமம் பெருமை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காமத்தையும் சிறப்பையும்.  Kurunthokai 324, Natrinai 292 and Kurinjippāttu have descriptions of the hero swimming through water with crocodiles.  நாம் – பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆ முறை மூன்றும் அச்சப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 69).

Meanings:  விசும்பு உறழ் புரிசை – sky-high fortification, very tall fort walls (உறழ் – ஓங்கி உயர்ந்த), வெம்ப – to feel sad, முற்றி – surrounded, lay siege, பைங்கண் யானை வேந்து – king with green-eyed elephant, புறத்து இறுத்த – staying outside, surrounding the fort, நல் எயிலுடையோர் – those with strong forts, உடையம் என்னும் பெருந்தகை மறவன் போல – like a great warrior who says that we have protection, கொடுங்கழி – curved backwaters, பாசடை – green leaves, நெய்தல் – waterlilies, பனி நீர்ச் சேர்ப்பன் – the lord of the cold seashores, நாம முதலை – crocodile that causes fear (நாம – நாம் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது), நடுங்கு பகை – trembling enmity, அஞ்சான் – he is not afraid, காமம் பெருமையின் வந்த ஞான்றை – when he came with great love, when he came with love and pride, அருகாது ஆகி – not becoming distressed, being strong, அவன்கண் நெஞ்சம் – heart will go toward him, நள்ளென் கங்குல் – in the pitch dark night, புள் ஒலி கேட்டொறும் – whenever I hear the birds chirp, தேர் மணித் தெள் இசை கொல் என – are they the clear sounds of his chariot bells, ஊர் மடி கங்குலும் – at night when the town has gone to sleep, துயில் மறந்ததுவே – my heart has forget sleep (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 288, குளம்பனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அருவி ஆர்க்கும் அணங்குடை நெடுங்கோட்டு
ஞாங்கர் இள வெயில் உணீஇய, ஓங்கு சினைப்
பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும்
குன்ற நாடன் பிரிவின் சென்று,
நன்னுதல் பரந்த பசலை கண்டு அன்னை  5
செம் முது பெண்டிரொடு நெல் முன் நிறீஇக்,
கட்டின் கேட்கும் ஆயின், வெற்பில்
ஏனல் செந்தினைப் பால் ஆர் கொழுங்குரல்
சிறு கிளி கடிகம் சென்றும், ‘இந்
நெடுவேள் அணங்கிற்று’ என்னும் கொல் அதுவே?  10

Natrinai 288, Kulampanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
Your fine forehead has become
pale on separation from the lord
of the mountains,
where waterfalls roar down
the dreadful, tall mountain peaks,
and a male peacock that rests on a
tall tree branch to enjoy the delicate
sunlight, dances with his female.

Mother, who saw this change in you,
stands in front of strewn rice paddy
along with the fine, old diviner women,
waiting to listen to the oracle.

Will it divine that Murukan with a tall
spear is the reason for this affliction,
even though we had gone to the
mountain to chase small parrots in the
millet field with thick clusters of grains
filled with milk?

Notes:   வரைவு கடாயது.  முல்லைப்பாட்டு 88-11 – நெல்லொடு நாழி கொண்ட நறு வீ முல்லை அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்ப.  கட்டு (7) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கட்டு, சேரியின் முதுபெண்டாகிக் குறி சொல்லும் மாதரை மனையகத்துக் கொணர்ந்து வைத்து, முறத்திலே பிடி நெல்லையிட்டு எதிரே தலைமகளை நிறுத்தித் தெய்வத்துக்குப் பிரம்பிட்டு வழிபாடு செய்த அந்நெல்லை நந்நான்காக எண்ணி எஞ்சியவை ஒன்றிரண்டு மூன்றளவும் முருகு அணங்கெனவும் நான்காயின் பிறிதொரு நோயனெவும் கூறப்படுவது.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஏனலாகிய தினை – இரு பெயரொட்டு.  உணீஇய (2) – H.வேங்கடராமன் உரை – காய வேண்டி, ஒளவை துரைசாமி உரை – பெறும்பொருட்டு.

Meanings:  அருவி ஆர்க்கும் – waterfalls coming down with loud sounds, அணங்குடை – fierce, with goddesses, நெடுங்கோட்டு – tall peaks, ஞாங்கர் – in that place, there, இள வெயில் உணீஇய – to dry in the delicate morning sunshine, to obtain the delicate morning sunshine (உணீஇய – அளபெடை,), ஓங்கு சினை – tall tree branch,  பீலி மஞ்ஞை – peacock with plumes, பெடையோடு ஆலும் – it dances with its female, குன்ற நாடன் – the man from such mountains, பிரிவின் சென்று – due to his leaving, நன்னுதல் பரந்த பசலை கண்டு – on seeing the pallor that developed on my fine forehead, அன்னை செம்முது பெண்டிரொடு – mother along with older women, நெல் முன் – in front of the paddy, நிறீஇ – placed, spread (அளபெடை), கட்டின் கேட்கும் ஆயின் – if they listen to the oracle, வெற்பில் – in the mountains, ஏனல் – millet field, செந்தினை – perfect millet, red millet, பால் ஆர் கொழுங்குரல் – thick mature clusters/spears, milk-filled, சிறு கிளி கடிகம் சென்றும் – even though we went to chase little parrots, இந்நெடுவேள் அணங்கிற்று என்னும் கொல் அதுவே – will it say that it is because of the wrath of Murukan (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 289, மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார், முல்லைத் திணை தலைவி தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி! காதலர்
நிலம் புடை பெயர்வது ஆயினும், கூறிய
சொல் புடை பெயர்தலோ இலரே; வானம்
நளி கடல் முகந்து செறிதக இருளி
கனை பெயல் பொழிந்து கடுங்குரல் பயிற்றிக்,  5
கார் செய்து என் உழையதுவே ஆயிடைக்,
கொல்லைக் கோவலர் எல்லி மாட்டிய
பெரு மர ஒடியல் போல,
அருள் இலேன் அம்ம, அளியேன் யானே.

Natrinai 289, Marunkūr Pattinathu Chēnthan Kumaranār, Mullai Thinai – What the heroine said to her friend
May you live long, my friend!
The land might turn upside
down, but my lover does not
swerve from his words.

The clouds absorbed water
from the full ocean, clustered
together, grew dark and came
down here as heavy rain with
loud thunder strikes.
I, without his graces,
am in distress now like a broken
tree branch that is burned at night
by the cattle herders
of the woodland.  I am pitiable!

Notes:  தலைவன் கூறிய பருவத்தில் வராததால் வருந்தியத் தலைவி கூறியது.  செறிதக (4) – ஒளவை துரைசாமி உரை – செறிவுதக எனற்பாலது செறிதக என நின்றது.  ஆயிடை (6) – ஒளவை துரைசாமி உரை – அவ்விடை ஆயிடை எனச் சுட்டு நீண்டது.  அம்ம  – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

Meanings:  அம்ம – listen to me, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – oh friend, காதலர் – my lover, நிலம் புடை பெயர்வது ஆயினும் – even if the land changes, even if the land moves away, even if the land turns upside down, கூறிய சொல் புடை பெயர்தலோ இலரே – he does not sway from the words he uttered (ஏ – அசைநிலை, an expletive) , வானம் நளி கடல் முகந்து – clouds absorbed water from the full/vast/dense oceans, செறிதக – clustering together, becoming dense, இருளி கனை பெயல் பொழிந்து – they got dark and poured heavy rain, கடுங்குரல் பயிற்றி – roaring loud thunder, கார் செய்து – they came down as rain என் உழையதுவே – it has come to distress me, ஆயிடை – now, கொல்லைக் கோவலர் – cattle herders who are in the woodland, எல்லி மாட்டிய – lit at night, burned at night, பெரு மர ஒடியல் போல – like a big tree’s broken section, அருள் இலேன் – I am without his grace, அம்ம – அசைநிலை, an expletive, அளியேன் யானே – I am pitiable, I am pitiful (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 290, மதுரை மருதன் இளநாகனார், மருதத் திணை – பரத்தை விறலியிடம் சொன்னது தலைவி கேட்கும்படியாக, அல்லது தோழி தலைவியிடம் சொன்னது பாணன் கேட்கும்படியாக
வயல் வெள் ஆம்பல் சூடுதரு புதுப் பூக்
கன்றுடைப் புனிற்று ஆ தின்ற மிச்சில்,
ஓய் நடை முது பகடு ஆரும் ஊரன்
தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல்
கொள்ளல் மாதோ, முள் எயிற்றோயே!  5
நீயே பெருநலத்தகையே அவனே
‘நெடு நீர்ப் பொய்கை நடுநாள் எய்தித்,
தண் கமழ் புது மலர் ஊதும்
வண்டு என மொழிப மகன்’ என்னாரே.  9

Natrinai 290, Mathurai Maruthan Ilanakanār, Marutham Thinai – What the concubine said to the messenger dancer, as the heroine listened nearby or what the heroine’s friend said to her in front of the messenger bard
Lisen to me, oh woman with
sharp teeth!
If you desire a relationship
with the man from the town,
……….where a cow with calf,
……….a new mother, ate
……….white waterlilies from
……….the field, brought in
……….with the sheaves, and an
……….old buffalo ate the leftover,
do not quarrel with him.

You are a woman with very fine traits.
They say he is like a bee that swarms
the cool, fragrant flowers in the vast
reservoir at midnight, and not a man!

Notes:  ஒளவை துரைசாமி உரை – ‘தாய் போல் கழறித் தழீஇக் கோடல்’ (தொல்காப்பியம், கற்பியல் 32) எனத் தொடங்கும் நூற்பா உரையில் இப்பாட்டைக் காட்டுவர் இளம்பூரணர்.  ‘புல்லுதல் மயக்கும் புலவிக்கண்ணும்’ எனத் தொடங்கும் நூற்பாவின் உரையில் இப்பாட்டைக் காட்டி, ‘இதனுள் நீ இளமைச் செவ்வியெல்லாம் நுகர்ந்து புதல்வற் பயந்த பின்னர், உழுதுவிடு பகடு எச்சிலை அயின்றாற் போலப் பிறர் அவனை நுகர்ந்தமை நினக்கு இழுக்கன்று எனவும், அவனோடு கூட்டம் நெடுங்காலம் நிகழ்த்த வேண்டும் நீ.  அவள் அவனோடு கட்டில் வரை எய்தியிருக்கின்றாளென்று ஊரார் கூறுகின்ற சொல்லை என்னைப் போல வேறுபட்டுக் கொள்ளாதே.  கொள்வது நின் இளமைக்கும் எழிலுக்கும் ஏலாதெனவும், அவனை வண்டு என்பதன்றி மகன் என்னாராதலின் இவன் கடப்பாட்டைண்மை அதுவென்னும் கூறினான்’ என்றும் ‘என் சொற் கொள்ளன் மாதோ என்பதற்கு என் வார்த்தையைக் கேட்டால் நினக்கு விருப்பமோ, விருப்பமாகில் யான் கூறுகின்றதனைக் கொள்க’ என்றும் கூறுவார் நச்சினார்க்கினியர்.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – புனிற்றா தின்ற மிச்சிலை உழுது ஓய்ந்த பகடு தின்றது போல தலைவி இளமைக் காலத்துத் தலைவனோடு இன்பம் நுகர்ந்து மகவு பெற்ற பின் உண்டொழி மிச்சில் அனைய அவனைப் பிறர் நுகர்வது தலைவிக்கு இழுக்காகாது என்பது உணர்த்தவாம். புனிறு – புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே (தொல்காப்பியம் உரியியல் 79).

Meanings:  வயல் வெள் ஆம்பல் – white waterlilies in the field, சூடுதரு – brought by bundles of sheaves, brought by bundles of grain stalks, புதுப் பூ – fresh flowers, கன்றுடை – with calf, புனிற்று ஆ – mother cow who had given birth recently, தின்ற மிச்சில் – left over after eating, ஓய் நடை முது பகடு – old buffalo with slow walk, ஆரும் – eats, ஊரன் – man from such town, தொடர்பு நீ வெஃகினை ஆயின் – if you desire a relationship with him, என் சொல் கொள்ளல் – listen to my words (கொள்ளல் – அல் ஈற்று வியங்கோள் முற்று, word ends with a command suffix), மாதோ – மாது, ஓ – அசைநிலைகள், expletives, முள் எயிற்றோயே – oh woman with sharp teeth, நீயே பெருநலத்தகையே – you are a woman with fine traits, அவனே – he (ஏ – அசைநிலை, an expletive), நெடு நீர்ப் பொய்கை – long water tank, large lake, நடுநாள் எய்தி – reach during midnight, தண் கமழ் புது மலர் – cool fragrant new flowers, ஊதும் வண்டு – buzzing bee, swarming bee, என மொழிப – so they say, மகன் என்னாரே – they do not say that he is a man (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 291, கபிலர், நெய்தற் திணை – தோழி பாணனிடம் சொன்னது
நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல்
நெய்த்தலைக் கொழு மீன் அருந்த, இனக் குருகு
குப்பை வெண்மணல் ஏறி அரைசர்
ஒண் படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும்,
தண் பெரும் பௌவ நீர்த் துறைவற்கு, நீயும்  5
கண்டாங்கு உரையாய்; கொண்மோ பாண!
மா இரு முள்ளூர் மன்னன் மா ஊர்ந்து,
எல்லித் தரீஇய இன நிரைப்
பல் ஆன் கிழவரின் அழிந்த இவள் நலனே.

Natrinai 291, Kapilar, Neythal Thinai – What the heroine’s friend said to the messenger bard
You have not told the lord
of the large, cool ocean port,
……….where flocks of herons perch
……….on the white sand dunes,
……….bright like a king’s fine army,
……….to eat plump fish with fatty heads
……….stranded in thick mud where
……….there is no flowing water,
that her beauty is ruined, like the ruined
man whose cattle herd with many cows
were seized at night by the very great
Mullūr king who rode on his horse.
Accept it, oh bard!

Notes:  வாயிலாக புக்க பாணற்கு தோழி தலைவியின் குறிப்பறிந்து நெருங்கிச் சொல்லியது.  வாயில் மறுத்தல்.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – குருகுகள் கூட்டமாக இருத்தல்போலத் தலைவனிடம் பயன் கொள்ளவேண்டிய பாணர் விறலியர் கூட்டமாக இருப்பதை உள்ளுறுத்திப் பெற்றது. குருகுகள் கூட்டமாக இருப்பினும் படையாகாவாறு நீவிரும் வாயில்கள் ஆகமாட்டீர் என்றனள்.  வரலாறு:  முள்ளூர் மன்னன்.  அருந்த (2) – ஒளவை துரைசாமி உரை – ஆர்ந்த என்பது அருந்த என வந்தது.  மா ஊர்ந்து (7) – ஒளவை துரைசாமி உரை – காரியின் குதிரை காரி எனப்படுதலால் மா ஊர்ந்து என வாளா கூறினார் போலும்.  Mullūr Mountain country belonged to King Malaiyamān Kāri.  Poem 77 has a reference to Malaiyamān. Natrinai poems 77, 100, 170, 291 and 320 have references to King Malaiyamān.  Natrinai 170, written by an unknown poet, has a reference to Mullūr where Malaiyamān repelled the Aryan invaders.  Poet Kapilar wrote about Mullūr and Malaiyamān in Kurunthokai 312.  He sang Mullūr’s praise in Puranānūru 123.  The poet Mārokkathu Nappasalaiyār sang to Malaiyamān Kāri inPuranānūru 126 and mentions Mullūr and Kapilar’s praise of the king.   She sang to his son and mentions Mullūr in Puranānūru 174.

Meanings:  நீர் பெயர்ந்து மாறிய – water moved away and changed, செறி சேற்று அள்ளல் – thick mud, நெய்த்தலை – fatty head, கொழு மீன் அருந்த – to eat the plump fish, இனக் குருகு – heron/egret/stork flocks, குப்பை வெண்மணல் ஏறி – climbed on the white sand heap, white sand dunes, அரைசர் ஒண் படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும் – they appear great like the king’s brigade of soldiers (தொகுதியின் – இன் உருபு ஒப்புப் பொருளது), தண் பெரும் பௌவ நீர்த் துறைவற்கு – to the lord of the cool huge ocean port, நீயும் கண்டாங்கு உரையாய் – you have not told him what you saw, கொண்மோ பாண – accept it oh bard (மோ – முன்னிலை அசைச் சொல், an expletive of the second person), மா இரு முள்ளூர் மன்னன் – great big Mullūr king Malaiyaman Kāri, மா ஊர்ந்து – riding on his horse, எல்லித் தரீஇய – brought at night (தரீஇய – அளபெடை), இன நிரை – cattle herd, பல் ஆன் – many cows, கிழவரின் – like that of the man who owns, like that of the man who has rights (இன் உருபு ஒப்புப் பொருளது), அழிந்த இவள் நலனே – her beauty that has been ruined (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 292, நல்வேட்டனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நெடுந்தண் ஆரத்து அலங்கு சினை வலந்த
பசுங்கேழ் இலைய நறுங்கொடித் தமாலம்
தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும்,
யாணர் வைப்பின் கானம் என்னாய்;
களிறு பொரக் கரைந்த கயவாய்க் குண்டு கரை  5
ஒளிறு வான் பளிங்கொடு செம்பொன் மின்னும்
கருங்கல் கான் யாற்று அருஞ்சுழி வழங்கும்
கராஅம் பேணாய்; இரவரின்
வாழேன் ஐய, மை கூர் பனியே.

Natrinai 292, Nalvēttanār, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
You did not consider that it is a rich
forest,
where those who collect sweet honey
pull and remove thamālam vines
with green colored leaves, wound
around tall sandalwood trees whose
branches sway.

You did not consider that the shores
of the deep pond, that have been eroded
by fighting elephants, where bright white
marble and red gold sparkle.

You did not care about the forest river
with black boulders and dangerous
eddies where crocodiles live.  

Lord!  If you come at night in this dark,
cold season, I will not live!

Notes:  இரவுக்குறி மறுத்தது.  தலைவி கூற்றைத் தோழி தன் கூற்றாகக் கூறியது.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – தேன் கொள்ளும் வேடர் தமாலக் கொடியை அறுப்பவர் என்றது, தலைவியின் நலன் நுகர வரும் நீ அவளது கவலையை நீக்குமாறு வரைந்து கொள்க என்பதை உணர்த்தியது.  இரவரின் (8) – ஒளவை துரைசாமி உரை – இரவு வரின் என்பது இரவரின் என வந்தது.  இர என்றே கொண்டு இரவு எனப் பொருள் கோடலும் முறை.  Kurunthokai 324, Natrinai 292 and Kurinjippāttu have descriptions of the hero swimming through water with crocodiles.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

Meanings:  நெடுந்தண் ஆரத்து – on the tall cool sandal trees, அலங்கு சினை – swaying branches, வலந்த – wound around, பசுங்கேழ் இலைய – with green colored leaves, நறுங்கொடித் தமாலம் – fragrant thamālam vines, தீம் தேன் கொள்பவர் – those who take the sweet honey, வாங்குபு பரியும் – they bend and break, they pull and break, யாணர் வைப்பின் கானம் – rich forest location, என்னாய் – you did not consider, களிறு பொர – male elephants fighting, கரைந்த – eroded, hole, கயவாய்க் குண்டு கரை – shores of the deep pond with big depressions (due to the elephants fighting), ஒளிறு வான் பளிங்கொடு – with bright white marble, செம்பொன் மின்னும் – red gold shines, கருங்கல் கான்யாற்று – in a forest river with black granite, அருஞ்சுழி வழங்கும் கராஅம் – roaming crocodiles that are in the dangerous whirlpools (கராஅம் – அளபெடை), பேணாய் – you do not care, இர வரின் – if you come at night (இர – இரா, இறுதியினின்ற ஆகாரம் குறுகி இர என நின்றது), வாழேன் – she will not live, ஐய – Sir, மை கூர் பனியே – darkness covered cold season (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 293, கயமனார், பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது
மணிக் குரல் நொச்சித் தெரியல் சூடி,
பலிக்கள் ஆர் கைப் பார் முது குயவன்
இடு பலி நுவலும் அகன்தலை மன்றத்து,
விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்ப்
பூங்கண் ஆயம் காண்தொறும், எம் போல்  5
பெரு விதுப்புறுக மாதோ, எம் இல்
பொம்மல் ஓதியைத் தன் மொழிக் கொளீஇக்,
கொண்டு உடன் போக வலித்த
வன்கண் காளையை ஈன்ற தாயே.

Natrinai 293, Kayamanār, Pālai Thinai – What the heroine’s mother said after her daughter eloped
In the wide vast common grounds
of our victorious ancient town with
festivities, a potter from an ancient
clan, wearing a sapphire-colored
nochi flower garland, calls out to the
crows to offer food with full hands.

Whenever I see my daughter’s friends
with flower-like eyes there,
I think of my daughter with luxuriant
hair and feel extremely sad.

May the mother who gave birth to him,
the strong young man who took her away
with his enticing words, suffer like I do!

Notes:  தாய் மனை மருண்டு சொல்லியது.  Natrinai 258, 281, 293, 343 and 367 have references to food offerings to crows.  நற்றிணை 184 – மணி ஏர் நொச்சி, நற்றிணை 293 – மணிக் குரல் நொச்சி.  பார் முது குயவன் (2) – ஒளவை துரைசாமி உரை – பாரில் மக்கள் இனத்துள் தோன்றிய முதுகுடிகளுள் குயவன் உண்கலம் சமைத்துத் தருவதால் சிறந்தமையின் பார் முது குயவன் என்றார், பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் – பரிய முதிய குயவன்.

Meanings:  மணி – sapphire-colored, குரல் – clusters, நொச்சி – nochi flowers, Vitex leucoxylon, Chaste tree, தெரியல் – garland, சூடி – wearing, பலிக்கள் – offerings, ஆர் – full, beautiful, kindness, கை – hands, பார் – land, முது குயவன் – a potter from an ancient clan of the land, an old potter of the land, இடு பலி – placed offerings, நுவலும் – he calls (the crows), அகன்தலை – wide land, மன்றத்து – in the public area, in the common grounds, விழவுத் தலைக்கொண்ட – with festivities, பழ விறல் மூதூர் – ancient victorious town, பூங்கண் – flower-like eyes, pretty eyes, ஆயம் – friends, காண்தொறும் – whenever I see, எம் போல் – like me, பெரு – great, விதுப்புறுக – may she tremble, may she suffer, மாதோ – மாது, ஓ – அசைநிலைகள், expletives, எம் இல் – our house, பொம்மல் ஓதியை – the young woman with overflowing hair, the young woman with splendid hair, the young woman with thick hair (பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, an attributive compound),  தன் மொழி – with his words, கொளீஇ – took her away (அளபெடை), கொண்டு உடன் போக – to go with him, வலித்த – strong, brave, வன்கண் காளையை – the strong young man, ஈன்ற தாயே – the mother who gave birth to him (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 294, புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழார், குறிஞ்சித் திணை தோழி தலைவியிடம் சொன்னது
தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு,
நோயும் இன்பமும் ஆகின்று மாதோ,
மாயம் அன்று தோழி, வேய் பயின்று
எருவை நீடிய பெருவரை அகந்தொறும்,
தொன்று உறை துப்பொடு முரண் மிகச் சினைஇக்  5
கொன்ற யானைக் கோடு கண்டன்ன,
செம்புடைக் கொழு முகை அவிழ்ந்த காந்தள்
சிலம்புடன் கமழும் சாரல்
இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பே.

Natrinai 294, Puthukkayathu Vannakkan Kampūr Kizhār, Kurinji Thinai – What the heroine’s friend said to her
The splendid, broad chest of the lord of the
tall, lush mountains with bamboo and reed,
……….where blossoming red, plump buds
……….of glory lilies wafting fine fragrances
……….and growing all over the lofty mountains,
……….look like the tusks of an enraged elephant
……….with great strength that just killed,
gives you affliction and pleasure,
which are like fire and wind from the sky.

This is not a lie, my friend!  It is true!

Notes:  மண மனையில் புக்க தோழி தலைவியின் கவின் கண்டு சொல்லியது.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – மலையெங்கும் காந்தள் கமழும் என்றது தலைவனின் அன்பு தலைவியின் உறவினர் எல்லார்க்கும் மகிழ்ச்சி பயக்கும் என்பதுணர்த்தி நின்றது.

Meanings:  தீயும் வளியும் – fire and wind, விசும்பு பயந்தாங்கு – like how the sky yields, நோயும் இன்பமும் ஆகின்று – affliction and pleasure is like that, மாதோ – மாது, ஓ – அசைநிலைகள், expletives, மாயம் அன்று தோழி – this is not a lie oh friend, வேய் பயின்று – bamboo groves, lots of bamboo, எருவை நீடிய – tall reeds, growing reeds, Arundo donax, Bamboo reed, பெருவரை – lofty mountains, அகம்தொறும் – all over, in all the places, தொன்று உறை – having it for a long time, ancient, துப்பொடு – with strength, முரண் மிகச் சினைஇக் கொன்ற – killed in great anger (சினைஇ – அளபெடை), யானைக் கோடு – elephant tusks, கண்டன்ன – like seeing, செம் புடைக் கொழு முகை – reddish sides thick buds, அவிழ்ந்த காந்தள் – blossomed glory lily flowers, சிலம்புடன் கமழும் சாரல் – mountain slopes were fragrance spreads, இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பே – the wide chest of the lord of the flourishing mountains (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 295, ஒளவையார், நெய்தற் திணை – தோழி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி 
முரிந்த சிலம்பின் எரிந்த வள்ளியின்
புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இருங்கூந்தல்
ஆயமும் அழுங்கின்று, யாயும் அஃது அறிந்தனள்,
அருங்கடி அயர்ந்தனள் காப்பே, எந்தை
வேறு பல் நாட்டுக் கால் தர வந்த  5
பல வினை நாவாய் தோன்றும் பெருந்துறைக்
கலிமடைக் கள்ளின் சாடி அன்ன, எம்
இள நலம் இற்கடை ஒழியச்
சேறும் வாழியோ முதிர்கம் யாமே.

Natrinai 295, Avvaiyār, Neythal Thinai – What the heroine’s friend said, as the hero listened nearby
Our friends with flowing,
black hair are distressed, like
burnt valli yam vines of the
mountain slopes with cracks,
their beauty ruined.
Mother learned about it and
put her under strict guard.

Her youth and beauty that are like
the liquor jars, that are brought by
ships that sail from many countries
to the big port, by our father,
will be ruined.

May you live long!  We will go home.
She will be become old here!

Notes:  தலைவி இற்செறிக்கப்பட்டாள் என்பதை அறிவுறுத்தி வரைவு கடாயது.  முரிந்த சிலம்பின் எரிந்த வள்ளியின் புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இருங்கூந்தல் ஆயமும் அழுங்கின்று (1-3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தலை சரிந்த மலைப்பக்கத்தில் முதலொடு கருகிய வள்ளிக்கொடி போல, மேலின் அழகெல்லாம் அழிந்து தழைந்த தாழ்ந்த கரிய கூந்தலையுடைய தோழியர் குழாமும் வருந்தி அழுங்காநின்றது.  புறன் (2) – ஒளவை துரைசாமி உரை – முதுகு.  கலிமடை (7) – ஒளவை துரைசாமி உரை – மென்மேலும் உண்ணப்படும் கள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – செருக்கு மிகுகின்ற கள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – செருக்கு மிகுகின்ற கள்.  கடி – கடி என் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம் முன்தேற்று ஆயீர் ஐந்தும் மெய்ப்படத் தோன்றும் பொருட்டு ஆகும்மே (தொல்காப்பியம், உரியியல் 87).

Meanings:  முரிந்த – cracked, broken, சிலம்பின் – on the mountain slopes, எரிந்த வள்ளியின் – like the burnt/parched valli yam vines, sweet potatoes, Convolvulus batatas (வள்ளியின் – இன் உருபு ஒப்புப் பொருளது, புறன் அழிந்து – exterior ruined, on the back with no braids (புறன் – புறம் என்பதன் போலி), ஒலிவரும் – thick, தாழ் இருங்கூந்தல் – hanging dark hair, hanging thick hair, ஆயமும் அழுங்கின்று – our friends suffer in sorrow, யாயும் அஃது அறிந்தனள் – mother knew about it (அறிந்தனள் – முற்றெச்சம், finite verb), அருங்கடி அயர்ந்தனள் காப்பே – she put her under strict guard, எந்தை – our father, வேறு பல் நாட்டு – various many countries, கால் தர வந்த – brought by the wind, பல வினை நாவாய் தோன்றும் – ships that have done many kinds of sailing work appear, பெருந்துறை – big port, கலி – to drink again and again, abundance, arrogance, மடை – for drinking, கள்ளின் சாடி அன்ன – like the liquor jars, எம் இள நலம் – our young beauty (the heroine’s beauty), இற்கடை ஒழிய – it will be ruined here, சேறும் – we will go home, வாழியோ – may you live long (ஓ – அசைநிலை, an expletive), முதிர்கம் யாமே – we will become old, she will become old (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 296, குதிரைத் தறியனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
என் ஆவது கொல் தோழி? மன்னர்
வினை வல் யானைப் புகர் முகத்து அணிந்த
பொன் செய் ஓடைப் புனை நலம் கடுப்பப்,
புழற் காய்க் கொன்றைக் கோடு அணி கொடி இணர்
ஏ கல் மீமிசை மேதக மலரும்,  5
பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும்,
வினையே நினைந்த உள்ளமொடு துனைஇச்
செல்ப என்ப காதலர்,
ஒழிதும் என்ப நாம் வருந்து படர் உழந்தே.  9.

Natrinai 296, Kuthirai Thariyanār, Pālai Thinai – What the heroine said to her friend
What will happen to us, my friend?
In the lofty mountains, kondrai trees
bearing hollow fruits are decorated
with trailing clusters of very pretty
flowers that look like the gold ornaments
adorning the spotted faces of elephants
skilled in battle, owned by kings.

Those separated, pine in this rare to 
obtain season.  They say he will go rapidly
thinking in his mind about his business.
They say we should stay behind and,
bear the pain and great distress!

Notes:  தோழியால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைவி உரைத்தது.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கார்காலத்தில் கொன்றை யானையது நெற்றிப்பட்டம் போல மலருமென்றது, தலைவற்கு இல்லறக் கிழத்தியாக உரிமை பூண்டு ஒழுகியவள், கார் நீக்கத்தில் கொன்றை மலர் உதிர்வதுபோல உயிரிழப்பேன் எனக் கூறியதை உணர்த்தியது.  துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  – ஏ பெற்று ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 8).  என்ப (8, 9) – பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் உரை – என்ப இரண்டும் அசை, ஒளவை துரைசாமி உரை – என்ப என்பது ‘எனக் கூறுவர்’.

Meanings:  என் ஆவது கொல் தோழி – what will happen my friend, மன்னர் வினை வல் யானை – elephant that is skilled in king’s (battle) business, புகர் முகத்து அணிந்த – wearing on its spotted face, பொன் செய் ஓடை – ornament made in gold, புனை நலம் கடுப்ப – like the beauty of (கடுப்ப – உவம உருபு, a comparison word), புழல் காய்க் கொன்றை – laburnum trees with hollow fruits, சரக்கொன்றை, கடுக்கை, Golden Shower Tree, Cassia fistula, கோடு அணி கொடி இணர் – branches decorated with trailing clusters, ஏ கல் மீமிசை – on the tall mountains (ஏ  – உயர்ச்சிப் பொருட்டாகிய உரிச்சொல், மீமிசை – ஒருபொருட் பன்மொழி), மேதக மலரும் – they bloom very beautifully, பிரிந்தோர் இரங்கும் – those who are separated are sad, அரும் பெறல் காலையும் – at the rare to obtain time (அரும் பெறல் – பெறல் அரும் – பெறுவதற்கு அரிய),  வினையே நினைந்த உள்ளமொடு – with a mind thinking of just work (வினையே – ஏ அசைநிலை, an expletive, தேற்றம், certainty, பிரிநிலையுமாம், exclusion), துனைஇ – rapidly (அளபெடை), செல்ப என்ப காதலர் – they say that my lover will go, my lover will go, ஒழிதும் என்ப நாம் வருந்து படர் உழந்தே – they say that we should stay behind and bear pain and great distress, causing us to be left to suffer in distress (உழந்தே – ஏ அசைநிலை, an expletive) 

நற்றிணை 297, மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பொன் செய் வள்ளத்துப் பால் கிழக்கு இருப்ப,
நின் ஒளி ஏறிய சேவடி ஒதுங்காய்;
பல் மாண் சேக்கைப் பகை கொள நினைஇ,
மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை;
‘எவன் கொல்?’ என்று நினைக்கலும் நினைத்திலை;  5
நின்னுள் தோன்றும் குறிப்பு நனி பெரிதே;
சிதர் நனை முணைஇய சிதர் கால் வாரணம்
முதிர் கறி யாப்பில் துஞ்சும் நாடன்
மெல்ல வந்து, நல் அகம் பெற்றமை
மையல் உறுகுவள் அன்னை;  10
ஐயம் இன்றிக் கடுங்கூவினளே.

Natrinai 297, Mathurai Alakkar Gnālār Makanar Mallanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
A golden bowl with milk lies around;
you do not walk with your red feet
as your brilliance dazzles;
you do not sleep on your splendid bed;
and you have become like one who is
intoxicated.

You do not think about the reason for all this.
The thought that has appeared in you is good.

The man from the country
……….where a jungle fowl with delicate
……….legs sleeps on tangled, mature
……….pepper vines, hating the flowers
……….swarmed by bees,
has come slowly and attained your chest.
Mother has seen the signs of your union with
him.  She screams harshly since she has no
doubt.

Notes:  தலைவன் வரையாது வந்து ஒழுகுகின்றான்.  தோழி அவனைக் குறிப்பால் வரைவு கடாவாலானாள்.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கோழி மலரை வெறுத்து மிளகுக்கொடியில் துயிலும் என்றது தலைவியை விடுத்துத் தலைவன் தன்னூரில் மறைந்து வாழ்கிறான் என்பதை உணர்த்திற்று.  மகிழா – மகிழ்ந்த என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  பொன் செய் வள்ளத்து – in a bowl made with gold, பால் கிழக்கு இருப்ப – milk left down (without drinking), நின் ஒளி ஏறிய – your brilliance dazzles, சேவடி ஒதுங்காய் – you do not walk with your red feet, you do not walk with your perfect feel, பல் மாண் சேக்கை – very fine bed, பகை கொள – to have enmity, நினைஇ மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை – you became like one who drank alcohol and got intoxicated (நினைஇ – அளபெடை), எவன் கொல் என்று நினைக்கலும் நினைத்திலை – you do not think about what the reason is for all this (கொல் – அசைநிலை, an expletive), நின்னுள் தோன்றும் குறிப்பு நனி பெரிதே – the thought that appeared in you is very great (நனி பெரிதே – மிக மிக – ஒரு பொருட் பன்மொழி, ஏ – அசைநிலை, an expletive), சிதர் – bees, நனை – buds, honey in the flowers, flowers, முணைஇய – hated (அளபெடை), சிதர் கால் – scratching legs, delicate legs, வாரணம் – jungle fowl, முதிர் கறி யாப்பில் துஞ்சும் – sleeps on tangled mature pepper vines, நாடன் – the man from such country, மெல்ல வந்து – come slowly, நல் அகம் பெற்றமை – attained your chest, united with you, மையல் உறுகுவள் – she will become confused since she has seen signs of your union with him, அன்னை ஐயம் இன்றிக் கடுங்கூவினளே – she screams harshly since she has no doubt (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 298, விற்றூற்று வண்ணக்கன் தத்தனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
வம்ப மாக்கள் வருதிறம் நோக்கிச்,
செங்கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர்
மடி வாய்த் தண்ணுமைத் தழங்குகுரல் கேட்ட
எருவைச் சேவல் கிளைவயிற் பெயரும்
அருஞ்சுரக் கவலை, அஞ்சுவரு நனந்தலைப்  5
பெரும் பல் குன்றம் உள்ளியும், மற்று இவள்
கரும்புடைப் பணைத்தோள் நோக்கியும், ஒரு திறம்
பற்றாய் வாழி எம் நெஞ்சே! நல் தார்ப்
பொற்தேர்ச் செழியன் கூடல் ஆங்கண்,
ஒருமை செப்பிய அருமை வான் முகை  10
இரும் போது கமழுங் கூந்தல்,
பெருமலை தழீஇயும் நோக்கு இயையுமோ மற்றே?

Natrinai 298, Vitrootru Vannakkan Thathanār, Pālai Thinai – What the hero said to his heart
May you live long, oh heart!
You are desirous of going on the
harsh, forked wasteland paths of many
lofty mountains,
where a male vulture flees with his flocks,
when thannumai drums with folded covers
roar, beaten by fierce-eyed men as they look
toward the direction of strangers whom they
shoot with fierce arrows.

But you have not decided to separate from
the young woman with sugarcane patterns
painted on her thick arms.

Will it be possible to see her,
the young woman with fragrant hair adorned
with big white flowers,
……….like I was told clearly in Koodal of Pāndiyan
……….king with fine garlands and golden chariots,
if I go on the path with tall mountains?

Notes:   தோழி தலைவனை நெருங்கி ‘நீ பொருளீட்டி வருக’ என்று கூறினாள்.  தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லி செலவு அழுங்கியது.  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – எருவை சேவல் தண்ணுமை அஞ்சித் தன் சுற்றத்திடத்துப் பெயர்ந்து செல்லாநிற்கும் என்றது, யாம் பொருள்வயின் சென்றாலும் ஈண்டு இவள் படும் ஏதத்தைக் கருதின் அஞ்சி மீண்டு எய்துவாம் போலும்.  வரலாறு:  செழியன், கூடல்.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).

Meanings:  வம்ப மாக்கள் வருதிறம் நோக்கி – looking at the direction of new people/strangers/those who travel, செங்கணை தொடுத்த – shooting firm arrows, செயிர் நோக்கு ஆடவர் – men with fierce looks, மடி வாய்த் தண்ணுமை – thannumai drums with folded covers (leather), தழங்குகுரல் கேட்ட – on hearing its loud sounds (தழங்குகுரல் – வினைத்தொகை, compound word where the verbal root forms the first component), எருவைச் சேவல் கிளைவயிற் பெயரும் – a male vulture moves away with its flock, பிணம் தின்னும் கழுகு, Pondicherry vulture, Indian black vulture, red-headed vulture, அருஞ்சுரக் கவலை – forked paths of the very difficult wasteland, அஞ்சுவரு – fierce, terrible, நனந்தலை – vast space, பெரும் பல் குன்றம் உள்ளியும் – thought about crossing many huge mountains, மற்று – also, இவள் கரும்புடைப் பணைத்தோள் நோக்கியும் – even on seeing her thick arms with sugarcane designs (thoyyil), ஒரு திறம் பற்றாய் – you have not decided one way, வாழி எம் நெஞ்சே – may you live long my heart, நல் தார் –  fine garlands, பொற்தேர்ச் செழியன் கூடல் – Madurai city of Pāndiyan with golden chariot, ஆங்கண் – there, ஒருமை செப்பிய அருமை – as I was firmly told by her friend, as I was told clearly by her friend, வான் முகை – white buds, இரும் போது கமழுங் கூந்தல் – the woman with hair with the fragrance of big flowers (கமழுங் கூந்தல் –   அன்மொழித்தொகை), பெருமலை தழீஇயும் – near the tall mountains (தழீஇயும் – அளபெடை), நோக்கு – looks, இயையுமோ மற்றே – will it be possible then (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 299, வடம வண்ணக்கன் பேரிசாத்தனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
உருகெழு யானை உடை கோடு அன்ன
ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ,
தயங்கு இருங்கோடை தூக்கலின் நுண் தாது
வயங்கிழை மகளிர் வண்டல் தாஅம்
காமர் சிறுகுடி புலம்பினும், அவர் காண்,  5
நாம் இலம் ஆகுதல் அறிதும் மன்னோ,
வில் எறி பஞ்சி போல, மல்கு திரை
வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும்
நளி கடற் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே.

Natrinai 299, Vadama Vannakkan Pērisāthanār, Neythal Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
The tight buds of fragrant, white
thāzhai have blossomed looking like
the broken tusks of fierce elephants,
and the wind sways the flowers and
spreads their pollen on the little sand
houses of young girls wearing bright
jewels, in our small, beautiful village,
which is distressing to us.

We learned that we cannot exist
without seeing him or laughing with
him, the lord of the vast ocean
where strong winds create fine sprays
on the overflowing waves that appear
like soft, carded cotton.

Notes:  வரைவு கடாயது.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை –  தாழை வான்பூவனைக் காற்று மோதுதலானே அதன் தாது மகளிர் ஆடல் அரங்கத்தே பரவும் என்றது, தலைவன் தலைவியைக் களவு மணம் செய்துகொண்ட செய்தியை அம்பல் பெண்டிர் தூற்றலின், ஊர் எங்கும் அலர் பரவிற்று என்பது.  அகநானூறு 133 – வில் எறி பஞ்சியின், அகநானூறு 217 – பொங்கல் வெண்மழை எஃகுறு பஞ்சித் துய்ப்பட்டன்ன, நற்றிணை 247 – இன் குரல் எழிலி எஃகுறு பஞ்சிற்று ஆகி, நற்றிணை 299 – வில் எறி பஞ்சி போல.  நகாஅ – செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  உருகெழு (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அச்சத்தைச் செய்கின்ற, H.வேங்கடராமன் உரை – அச்சத்தைத் தருகின்ற, ஒளவை துரைசாமி உரை – நன்னிறம் பொருந்திய.

Meanings:  உருகெழு யானை – fierce elephant, elephant with good color, உடை கோடு அன்ன – like the broken tusks, ததர் – close, dense, பிணி – ties, அவிழ்ந்த தாழை வான் பூ – opened white fragrant thāzhai flowers, Pandanus odoratissimus, தயங்கு இருங்கோடை தூக்கலின் – due to the swaying strong west winds blowing, நுண் தாது – fine pollen, வயங்கு இழை மகளிர் – young girls wearing bright/abundant jewels, வண்டல் – sand play houses, தாஅம் – spreads (அளபெடை), காமர் சிறுகுடி – beautiful small village, புலம்பினும் – even if sad, அவர் காண் – look at him (காண் – முன்னிலை அசை, an expletive of the second person), நாம் இலம் ஆகுதல் – we do not exist without him, அறிதும் – we are aware, மன்னோ – மன், ஓ அசைநிலைகள், expletives, வில் எறி பஞ்சி போல – like cotton that is carded with a metal carding tool (வில் – பஞ்சியைத் தூய்மைப்படுத்தும் இரும்புக் கருவி), மல்கு திரை – overflowing waves, வளி பொரு வயங்கு – the hitting winds, பிசிர் பொங்கும் – water sprays overflowing, நளி கடற் சேர்ப்பனொடு – with the lord of the vast ocean, நகாஅ ஊங்கே – when not laughing (நகாஅ – அளபெடை, ஊங்கே – ஏ அசைநிலை, an expletive)

நற்றிணை 300, பரணர், மருதத் திணை – காமக்கிழத்தியின் தோழியான விறலி பாணனிடம் சொன்னது அல்லது தோழி பாணனிடம் சொன்னது
சுடர்த் தொடிக் கோமகள் சினந்தென, அதன் எதிர்
மடத் தகை ஆயம் கைதொழுதாஅங்கு,
உறு கால் ஒற்ற ஒல்கி ஆம்பல்
தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன்,
சிறுவளை விலை எனப் பெருந்தேர் பண்ணி, எம்  5
முன்கடை நிறீஇச் சென்றிசினோனே!
நீயும், தேரொடு வந்து பேர்தல் செல்லாது,
நெய் வார்ந்தன்ன துய் அடங்கு நரம்பின்
இரும் பாண் ஒக்கல் தலைவன்! பெரும் புண்
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண்,  10
பிச்சை சூழ் பெருங்களிறு போல, எம்
அட்டில் ஓலை தொட்டனை நின்மே.

Natrinai 300, Paranar, Marutham Thinai – What the virali said to the messenger bard or what the heroine’s friend said to the messenger bard
Oh Bard!  You with your many relatives
and your tightly tied yāzh strings that
appear as if they were cleaned with oil
and fuzzy matter removed!  Listen!

The man from the town with cool shores,
……….where white waterlilies bow in
……….respect to lotus flowers when
……….strong winds blow, like friends
……….pressing their palms together
……….and bowing to an angry princess
……….wearing bright bangles,
decorated his chariot and left it in front of  
our house as a price for my friend wearing
small bangles, and went to see his
concubine.
You came with him on the chariot and
stayed here, standing in our kitchen,  
touching the palm frond ceiling like a
beggar elephant from the handsome,
scarred warrior Thazhumpan’s Oonūr city

Notes:  வாயில் மறுத்தது.  வரைவு கடாயதுமாம், மாற்றோர் நொதுமலாளர் வரைவின் மேலிட்டு.  மருதத்துக் களவு.  மருதத்துள் குறிஞ்சி.  ஒளவை துரைசாமி உரை – பரத்தைத் தலைவி பாணற்கு வாயில் மறுத்தது.  சென்றிசினோனே (6)  –  தலைவன் வேறு ஒரு பரத்தைபாற் சென்றான், அல்லது அயலான் ஒருவன் தலைவியைத் திருமணம் செய்யும்பொருட்டு.  பரிசாகத் தன்னுடைய தேரை விட்டுச் சென்றுள்ளான்.  ஒளவை துரைசாமி உரை –  ‘இரவுக் குறியே இல்லகத்துள்ளும்’ (தொல்காப்பியம், களவியல் 41) என்ற நூற்பா உரையில், இப்பாட்டின் ‘அட்டில் ஓலை தொட்டனை நின்மே’ என்ற அடியைக் காட்டி, இது ‘மனையோர் கிளவி கேட்கும் வழியது’ என்பர் நச்சினார்க்கினியர்.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – ஆம்பல் மலர்கள் காற்றினால் மோதப் பெற்றுத் தாமரையிடத்துத் தாழும் என்றது, தலைவன்  பாணனை வாயிலாக ஏவ அவன் வந்து பணிந்து நிற்றலை உணர்த்தும்.  கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – பாணன் கலை வல்லவனாயினும் அவன் வந்த தூது இழிவுடையது என்பது காட்ட ‘பிச்சை சூழ் பெருங்களிறு’ என்றாள்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – களிறு பிச்சைக்கு சூழ்ந்து வரும் என்றது, அற நிலையங்கட்கு அரிசி முதலிய ஏற்றற்கு யானை தெருவிலே வரும் வழக்கத்தைக் குறித்தவாறு போலும்.  வரலாறு:  தழும்பன், ஊணூர்.  Puranānūru 135 – புரி அடங்கு நரம்பின், Sirupānātruppadai 227 – அடங்கு புரி நரம்பின், Perumpānātruppadai 15 – புரிஅடங்கு நரம்பின்.  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  சுடர்த் தொடி – bright bangles, gleaming bangles, கோமகள் சினந்தென – since the princess got angry, அதன் எதிர் – in response to that, மடத் தகை ஆயம் – innocent friends, கைதொழுதாஅங்கு – like how they bowed to her with their palms pressed together (கைதொழுதாஅங்கு – அளபெடை), உறு கால் – excessive wind touching (உறு – மிக்க), ஒற்ற – being attacked, ஒல்கி ஆம்பல் – all the white waterlilies have folded, தாமரைக்கு இறைஞ்சும் – they bow to the lotus flower, தண் துறை ஊரன் – the man from a town with cool shores, சிறு வளை – woman wearing small bangles (அன்மொழித்தொகை), விலை என – the price, பெருந்தேர் பண்ணி – decorated his big chariot, rode his big chariot, எம் – our, முன்கடை – front of the house, நிறீஇ – stopped (அளபெடை), parked, சென்றிசினோனே – he went to his concubine, he left (இசின் படர்க்கையின்கண் வந்தது, an expletive of the third person, ஓ – அசைநிலை, an expletive, ஏ – அசைநிலை, an expletive), நீயும் – you too, தேரொடு வந்து – came with him in his chariot, பேர்தல் செல்லாது – did not go with him, நெய் வார்ந்தன்ன – like dripping with oil, like dripping with ghee, துய் – fuzzy, அடங்கு – controlled, tight, நரம்பின் – with yāzh with strings, இரும் பாண் ஒக்கல் – big group of relatives of the bard, தலைவன் – leader, பெரும் புண் – big scar, ஏஎர் – handsome (அளபெடை), தழும்பன் – a small king called Thazhumpan, ஊணூர் – his town Oonūr, ஆங்கண் – there, பிச்சை சூழ் – begging, பெருங்களிறு போல – like a big male elephant, எம் – our, அட்டில் – kitchen, ஓலை – palm frond (on the ceiling), தொட்டனை – you were holding, நின்மே – you stood there (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 301, பாண்டியன் மாறன் வழுதி, குறிஞ்சித் திணை – தோழி சொன்னது
நீள் மலைக் கலித்த பெருங்கோல் குறிஞ்சி
நாள் மலர் புரையும் மேனி பெருஞ்சுனை
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்,
மயில் ஓரன்ன சாயல், செந்தார்க்
கிளி ஓரன்ன கிளவி, பணைத்தோள்,  5
பாவை அன்ன வனப்பினள் இவள் எனக்
காமர் நெஞ்சமொடு பல பாராட்டி,
யாய் மறப்பு அறியா மடந்தை,
தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே.

Natrinai 301, Pāndiyan Māran Valuthi, Kurinji Thinai – What the heroine’s friend said
Her mother will be unable
to forget her daughter who she
praised often with great desire,
her body like the fresh kurinji
flowers that grow on big stalks
on tall mountains,
her big moist eyes, like flowers from
large springs that are tied together,
her nature delicate like peacocks,
her tender speech like parrots
with red neck bands, her arms like
bamboo and her beauty like
the Kolli goddess, this sweet young
woman with fragrant hair that does
not forget aromatic oils!

Notes:  தோழி தன்னுள்ளே சொல்லியது.  தலைவன் தலைவியை விரைந்து வரைந்து கொள்ள வேண்டி, ‘அவன் வேண்டுகோளுக்கு இயையாது மறுத்துக் கூறினோம்.  அவன் படும் துன்பமும் அறிந்தோம்.  அன்னையோ தலைவியைப் பலகாலும் புகழ்கின்றாள்.  நாம் தலைவியைத் தலைவனுடன் கூட்டுவிப்பதை அறியின், அன்னை எத்தன்மையள் ஆவாளோ’ என வருந்திக் கூறியது.  சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல் 29).

Meanings:  நீள் மலைக் கலித்த – flourishing in the tall mountains, பெருங்கோல் குறிஞ்சி – kurinji with long/thick stems, Strobilanthes kunthiana, நாள் மலர் புரையும் மேனி – body like fresh day’s flower, பெருஞ்சுனை – big springs, big ponds, மலர் பிணைத்தன்ன – like flowers tied together, மா இதழ் மழைக் கண் – huge/dark petal-like moist eyes, மயில் ஓரன்ன சாயல் – peacock-like delicate nature, செந்தார்க் கிளி ஓரன்ன கிளவி – words like a parrot with a red neckband, பணைத்தோள் – bamboo-like arms, பாவை அன்ன வனப்பினள் – woman with beauty like that of Kolli goddess, இவள் என – that she is, காமர் நெஞ்சமொடு – with a loving heart, with a beautiful heart, பல பாராட்டி யாய் – mother who praised her often, மறப்பு அறியா – she has not forgotten, மடந்தை தேம் மறப்பு அறியா கமழ் கூந்தலளே – the naive young woman whose hair that does not forget sweet fragrance (தேம் தேன் என்றதன் திரிபு)

நற்றிணை 302, மதுரை மருதன் இளநாகனார், பாலைத் திணை – தலைவி சொன்னது
இழை அணி மகளிரின் விழைதகப் பூத்த
நீடு சுரி இணர சுடர் வீக் கொன்றைக்
காடு கவின் பூத்த ஆயினும், நன்றும்
வருமழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல்
நரை நிறம்படுத்த நல் இணர்த் தெறுழ் வீ   5
தாஅம் தேரலர் கொல்லோ, சேய் நாட்டுக்
களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு
வெளிறு இல் காழ வேலம் நீடிய
பழங்கண் முது நெறி மறைக்கும்,
வழங்கு அருங்கானம் இறந்திசினோரே?  10

Natrinai 302, Mathurai Maruthan Ilanākanār, Pālai Thinai – What the heroine said
Even though he does not know about  
the flame-like, beautiful, bright kondrai
flowers with long spirals that have   
blossomed in a desirable manner on
trees, looking like women adorned with
jewels, making the forest beautiful,
does he not know that the clusters of therul
flowers, that grow on sapphire-colored
bushes that await heavy rain, have lost their
color without rain,   
my man who went to the forest that is harsh  
to those who travel,
where elephants kick and raise fine dust that
flies up and down and shrouds the ancient
paths, lined with tall vēlam trees with dense
cores,
that cause distress to those who go on them?  

Notes:  பொருள்வயின் பிரிந்த தலைவன் குறித்த பருவத்தில் வராததால் வருந்திய தலைவி கூறியது.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  குறுந்தொகை 27 – வண்டுபடத் ததைந்த கொடி இணர் இடையிடுபு பொன் செய் புனை இழை கட்டிய மகளிர் கதுப்பின் தோன்றும் புதுப் பூங்கொன்றை.

Meanings:  இழை அணி மகளிரின் விழைதகப் பூத்த – blossomed in a desirable manner like women wearing jewels (மகளிரின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), நீடு சுரி – long spirals, long curls, இணர சுடர் வீக் கொன்றை – with clusters of flame bright flowers, kondrai, சரக்கொன்றை, கடுக்கை – Laburnum, Golden Shower Tree, Cassia fistula, காடு கவின் பூத்த ஆயினும் – they have bloomed making the forest beautiful, நன்றும் வருமழைக்கு எதிரிய – awaiting the arrival of heavy rain, மணி நிற இரும் புதல் நரை நிறம்படுத்த – flowers became lighter hued on the sapphire-colored dark bushes, நல் இணர்த் தெறுழ் வீ – fine clusters of therul flowers, a kind of creeper, தாஅம் தேரலர் கொல்லோ – does he not understand, does he not know (தாஅம் – அளபெடை, கொல் – ஐயப்பொருட்டு, ஓ – அசைநிலை, an expletive), சேய் நாட்டு – in the distant country, களிறு உதைத்து ஆடிய – male elephants kicked and played, கவிழ்கண் இடு நீறு – dust that has spread up and down (கவிழ்கண் – மேல் கீழாக), வெளிறு இல் காழ வேலம் – hard core vēlam trees, vēlam trees with no softness in their trunks (காழ – வைரம் பாய்ந்த), Panicled babool, Acacia leucophloea, நீடிய – grown tall, பழங்கண் – sorrow, முது நெறி மறைக்கும் – hides the ancient path, வழங்கு அருங்கானம் இறந்திசினோரே – the one who went to the forest that is difficult or those who go (இசின் – படர்க்கையின் கண் வரும், an expletive of the third person, ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 303, மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரி சாத்தனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
ஒலி அவிந்து அடங்கி யாமம் நள்ளெனக்
கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே;
தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை
மன்றப் பெண்ணை வாங்கு மடல் குடம்பைத்
துணை புணர் அன்றில் உயவுக் குரல் கேட்டொறும்,  5
‘துஞ்சாக் கண்ணள், துயர் அடச் சாஅய்,
நம் வயின் வருந்தும் நன்னுதல்’ என்பது
உண்டு கொல், வாழி தோழி, தெண் கடல்
வன் கைப் பரதவர் இட்ட செங்கோல்
கொடு முடி அவ் வலை பரியப் போக்கிக்,  10
கடு முரண் எறி சுறா வழங்கும்
நெடு நீர்ச் சேர்ப்பன் தன் நெஞ்சத்தானே?

Natrinai 303, Mathurai Ārulaviyanāttu Ālamperi Sathanār, Neythal Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
May you live long, oh friend!

Will the lord of the vast waters,
……….where fishermen with strong
……….hands throw their well-woven
……….nets with red rods into the clear
……….ocean, and very hostile, attacking
……….sharks that swim around tear them,
have sympathy in this heart for me with
a fine forehead,
knowing I will be distressed and unable to
sleep at night,
when the noisy seashore village falls asleep,
and in the common grounds, an ibis that
loves to unite with its mate cries out in
plaintive notes from its frond nest on a
palmyra tree with a thick trunk,
where a god has lived since ancient times?

Notes:  தலைவன் மீது உண்டாய காதலானது கைகடந்து பெருகிப்போனது.  அதைத் தாங்க இயலாத தலைவி தோழியிடம் வருந்தி உரைத்தது.  ஒளவை துரைசாமி உரை – ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) எனத் தொடங்கும் நூற்பாவின்கண் வரும் ‘காமஞ் சிறப்பினும்’ என்பதற்கு இதனைக் காட்டுவர் நச்சினார்க்கினியர்.  உள்ளுறை (1) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – பரதவரின் வலையைக் கிழித்துக்கொண்டு சென்று சுறா இயங்கும் என்றது தலைவி தன் அன்பினால் பிணிக்கவும் தலைவன் தங்காது செல்லும் இயல்பினன் என்பதுணர்த்தவாம்.  உள்ளுறை (2) – ஒளவை துரைசாமி உரை – அவர் தெளித்த சொல்லாகிய வலைப்பட்டு அதன்கண்ணே நிற்றற்குரிய என் நெஞ்சம் அத்தனையும் கிழித்துக்கொண்டு துயருற்று வருந்துகின்றது; என் செய்வேன் என்பாள், வெளிப்பட உரைத்தலைப் பெண்மை தடுத்தலின், கடுமுரண் எறிசுறாவின் மேல் வைத்து உள்ளுறைத்தாள்.  வலையின் செங்கோல்:  அகநானூறு 60 – செங்கோல் அவ் வலை நெடுந்திமில் தொழிலொடு, அகநானூறு 220 – இருங்கழி முகந்த செங்கோல் அவ்வலை, நற்றிணை 214 – செங்கால் கொடு முடி அவ் வலை,  நற்றிணை 303 – பரதவர் இட்ட செங்கோல் கொடு முடி அவ் வலை.  கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).

Meanings:  ஒலி அவிந்து அடங்கி – sounds died down, யாமம் – midnight, நள்ளென – with sounds, கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே – the loud seaside village has gone to sleep (ஏ – அசைநிலை, an expletive), தொன்று உறை கடவுள் – a god has lived there from ancient times, சேர்ந்த – residing, பராரை – thick trunk (பரு அரை பராரை எனப் புணர்ந்தது), மன்றப் பெண்ணை – palmyra palm in the common grounds, Borassus flabellifer, வாங்கு மடல் – curved fronds, குடம்பை – nest, துணை புணர் அன்றில் – ibis unites with its mate, red-naped – Pseudibis papillosa  or glossy ibis – Plegadis falcinellus,  உயவுக் குரல் கேட்டொறும் – whenever she hears its plaintive cry, துஞ்சாக் கண்ணள் – she is unable to sleep, துயர் அடச் சாஅய் – attacked by sorrow and wilted (சாஅய் – அளபெடை), நம் வயின் வருந்தும் நன்னுதல் என்பது உண்டு கொல் – will he be sad for me with a fine forehead (கொல் – ஐயப்பொருட்டு, நன்னுதல் – பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, an attributive compound), வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – my friend, தெண் கடல் – clear ocean, வன் கைப் பரதவர் – fishermen with strong hands, இட்ட செங்கோல் – thrown red rods, கொடு முடி அவ் வலை – curved knotted beautiful nets, பரியப் போக்கி – tearing and moving away, கடு முரண் எறி சுறா வழங்கும் – very hostile attacking sharks roam, நெடு நீர்ச் சேர்ப்பன் – the lord of the vast waters, தன் நெஞ்சத்தானே – in his heart (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 304, மாறோக்கத்து நப்பசலையார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வாரல் மென் தினைப் புலவுக் குரல் மாந்திச்,
சாரல் வரைய கிளைஉடன் குழீஇ,
வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும்
நளி இருஞ்சிலம்பின் நல் மலை நாடன்
புணரின் புணருமார் எழிலே, பிரியின்  5
மணி மிடை பொன்னின் மாமை சாய என்
அணி நலம் சிதைக்குமார் பசலை, அதனால்
அசுணம் கொல்பவர் கை போல் நன்றும்
இன்பமும் துன்பமும் உடைத்தே,
தண் கமழ் நறுந்தார் விறலோன் மார்பே.  10

Natrinai 304, Mārōkkathu Nappasalaiyār, Kurinji Thinai – What the heroine said to her friend
When the lord of the lofty
mountains with slopes,
……….where parrot flocks eat
……….spears of delicate millet grain
……….on long stalks, and call each
……….other with cries sounding like
……….wind-blown vayir horns in
……….the vast mountain ranges,
unites with me, my beauty increases.

When he’s away, pallor ruins my beauty.
My skin resembling gold mixed with gems
loses its beauty and turns sallow like the
hands of those who kill asunams
His victorious chest with fragrant garlands,
brings both great joy and pain.

Notes:   தலைவன் வரையாது களவில் வந்தொழுகுகின்றான்.  அந்நிலையில் வருந்திய தலைவியை ஆற்றுப்படுத்த முயலுகின்றாள் தோழி.  அவளிடம் தலைவி கூறியது.  ஒளவை துரைசாமி உரை – ‘அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) எனத் தொடங்கும் நூற்பாவின்கண் ‘இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்தும்’ என்பதற்கு இதனைக் காட்டுவர் நச்சினார்க்கினியர்.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கிளிகள் கூட்டமாக வந்து தினையை உண்டு விளி பயிற்றும் நாடன் என்றது, தலைவன் தன் சுற்றத்தாரோடு வந்து என்னை மணந்து நலம் துய்த்து மகிழ்வானாக என்பதுணர்த்திற்று.  The asunam is an un-identified creature.  There are references to asunams in Natrinai 244, 304 and Akanānūru 88.

Meanings:  வாரல் – long, மென் தினை – delicate millet, புலவு – fragrant, குரல் – grain spears, clusters of grain, மாந்தி – eat, சாரல் வரைய – in the mountain slopes, கிளைஉடன் குழீஇ – gathering together with their relatives (குழீஇ – அளபெடை), வளி – breeze, எறி – blowing, வயிரின் – like the musical instrument vayir (இன் உருபு ஒப்புப் பொருளது), கிளி – parrots, விளி பயிற்றும் – they call each other, நளி – abundant, dense, இருஞ்சிலம்பின் – with huge mountain slopes, நல் மலை நாடன் – the man from the fine mountain country, புணரின் – when he unites with me, புணரும் ஆர் – it unites, it increases (ஆர் – அசைச் சொல், an expletive), எழிலே – beauty, (ஏ – அசைநிலை, an expletive)  பிரியின் – when he separates, மணி மிடை பொன்னின் மாமை – beauty like that of gold mixed with gems, சாய – faded away, என் – my, அணி – beauty, நலம் – beauty, சிதைக்கும் ஆர் – it shatters (ஆர் – அசைச் சொல், an expletive), gets ruined, பசலை – sallow skin, அதனால் – so, அசுணம் கொல்பவர் கை போல் – like the hand of a person who kills asunams, a mythological creature that loves music, நன்றும் இன்பமும் துன்பமும் உடைத்தே – it brings great happiness and sorrow (ஏ – அசைநிலை, an expletive), தண் – cool, கமழ் – fragrant, நறுந்தார் – fragrant garland, விறலோன் மார்பே – the victorious man’s chest (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 305, கயமனார், பாலைத் திணை – தலைவியின் தாய் தோழியிடம் சொன்னது
வரி அணி பந்தும், வாடிய வயலையும்,
மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும்,
கடியுடை வியல் நகர் காண்வரத் தோன்றத்
தமியே கண்ட தண்டலையும் தெறுவர
நோய் ஆகின்றே மகளை! நின் தோழி  5
எரி சினம் தணிந்த இலை இல் அம் சினை
வரிப் புறப் புறவின் புலம்பு கொள் தெள் விளி
உருப்பு அவிர் அமையத்து அமர்ப்பனள் நோக்கி
இலங்கு இலை வென்வேல் விடலையை,
விலங்கு மலை ஆர் இடை, நலியும் கொல் எனவே?  10

Natrinai 305, Kayamanār, Pālai Thinai – What the heroine’s mother said to the heroine’s friend after her daughter eloped
Whenever I see her decorated ball,
withered vayalai vine, and the dark
colored clusters of nochi flowers on
the trees with leaves like feet of peacock,
in our well protected mansion, and when
I am alone in the grove, I am distressed.

Daughter!  I wonder whether your friend
will cause pain to the young man with a
bright-bladed, victorious spear, on the harsh
trek through the blocking mountains, with
her warring eyes when the scorching, bright
sun burns, after hearing pigeons with lines
on their backs cry in loud, plaintive tones,
perched on beautiful tree branches without
any leaves, when the sun’s heat is reduced.

Notes:  தலைவியை உடன்போக்கில் தலைவன் கூட்டிச் சென்று விட்டான் என்பதை செவிலித்தாய் மூலம் அறிந்த நற்றாய் தோழியிடம் சொல்லியது.  நலியும் கொல் (10) – ஒளவை துரைசாமி உரை – வேண்டாத வினாக்களை எழுப்பி வருத்துதல், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – துன்புறுத்தல்.  மயிலடி அன்ன இலை – நற்றிணை 305 – மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும், நற்றிணை 115 – மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி, குறுந்தொகை 138 – மயில் அடி இலைய மா குரல் நொச்சி.  திருமுருகாற்றுப்படை 68  – வரிப் புனை பந்து – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்து,  நச்சினார்க்கினியர் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்து,  வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி  உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்து.  மதுரைக்காஞ்சி 333 – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரியப்பட்ட பந்து, நச்சினார்க்கினியர் உரை – நூலால் வரிதலையுடைய பந்து, வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை – நூலால் வரிதலையுடைய பந்து.  கலித்தொகை 51 – வரிப் பந்து – நச்சினார்க்கினியர் உரை – வரியினையுடைய பந்து.  In poems Natrinai 12, 305, 324 and Kurunthokai 396, which were all written by Kayamanār, there are references to a ball played by the heroine.

Meanings:  வரி அணி பந்தும் – ball with decorations, ball tied with thread, ball with beautiful lines, வாடிய வயலையும் – and withered vayalai vine, purslane vine, Portulaca quadrifida, மயில் அடி அன்ன – (leaves) like peacock feet, மாக் குரல் நொச்சியும் – and nochi trees with dark clusters of flowers, Vitex leucoxylon, Chaste tree, water peacock’s foot tree, கடியுடை – with protection, வியல் நகர் – huge house, காண்வரத் தோன்ற – appeared for me to see, தமியே – alone, கண்ட தண்டலையும் – the grove that I see, தெறுவர நோய் ஆகின்றே – causes me sadness and mental sickness (ஏ – அசைநிலை, an expletive), மகளை – oh daughter (ஐ – சாரியை), நின் தோழி – your friend (my daughter), எரி சினம் – intense heat of the sun, தணிந்த – reduced, இலை இல் – without leaves, அம் சினை –  beautiful tree branches, வரிப் புறப் புறவின் – of pigeons with lines on their backs, புலம்பு கொள் – pitiful, sorrowful, தெள் விளி – clear sounds, உருப்பு அவிர் அமையத்து – at the time when the bright sun’s heat becomes excessive, அமர்ப்பனள் நோக்கி – she who has warring looks, இலங்கு இலை – bright blade, வென்வேல் – victorious spear, விடலையை – the young man, விலங்கு மலை – the blocking mountains, ஆர் இடை – on the harsh paths, நலியும் கொல் – will she cause him pain (கொல் – ஐயப்பொருட்டு), எனவே – thus (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 306, உரோடோகத்துக் கந்தரத்தனார், குறிஞ்சித் திணை – தோழி சொன்னது சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி, அல்லது தலைவன் சொன்னது
தந்தை வித்திய மென் தினை பைபயச்
சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ,
‘குளிர்படு கையள் கொடிச்சி! செல்க!’ என
நல்ல இனிய கூறி மெல்லக்
கொயல் தொடங்கினரே கானவர்; கொடுங்குரல்  5
சூல் பொறை இறுத்த கோல்தலை இருவி
விழவு ஒழி வியன் களம் கடுப்பத் தெறுவரப்,
பைதல் ஒரு நிலை காண வைகல்
யாங்கு வருவது கொல்லோ, தீஞ்சொல்
செறி தோட்டு எல் வளைக் குறுமகள்  10
சிறு புனத்து அல்கிய பெரும் புற நிலையே?

Natrinai 306, Urodakathu Kantharathanār, Kurinji Thinai – What the heroine’s friend said as the hero listened nearby, or what the hero said
Mountain dwellers have started to
pluck tender millet sown by her father.
“Oh young woman with a parrot-chasing
rattle in your hand, you may leave the field,”
they said to her nicely and sweetly.

The wide field with leftover stubble
after the heavy spears of bent grain had
been removed, looked pathetic and pitiful
like grounds where festivities have ended.

How can the marauding parrots be driven
away from the small field by the
young woman with bright, stacked bangles
from tall platforms, if she does not go?

Notes:  தலைவியை இற்செறிப்பில் வைத்தலையும் தலைவன் அறியும்படி உரைத்து வரைவு கடாயது.  தலைவன் கொல்லையின் வேலிப்புறத்திலிருந்து கூறியதுமாம். ஒளவை துரைசாமி உரை – ‘தன்னும் அவனும் அவளும் சுட்டி’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 39) எனத் தொடங்கும் நூற்பாவின்கண் வரும் ‘தோழி தேஎத்தும்’ என்பதற்கு இதனைக் காட்டி, இது தோழி வெகுண்டு கூறுவதெனக் கொள்வர் நச்சினார்க்கினியர்.  இறுத்த கோல்தலை இருவி – அகநானூறு 38.  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).

Meanings:  தந்தை வித்திய மென் தினை – the delicate millet that father seeded, பைபயச் சிறு கிளி கடிதல் – protecting from the small parrots little by little, chasing the small parrots little by little (பைபய – பையப்பைய பைபய என மருவியது), பிறக்கு – அசைநிலை, an expletive யாவணதோ – how (ஓ – அசைநிலை, an expletive), குளிர் படு கையள் – young woman with a parrot-chasing kulir rattle in your hands, கொடிச்சி – oh young woman of the mountains (விளி), செல்க – you may go, என – thus,  நல்ல இனிய கூறி – they said nicely and sweetly, மெல்லக் கொயல் தொடங்கினரே – they started to harvest slowly (கொயல் – கொய்யல் என்பதன் இடைக்குறை விகாரம், ஏ – அசைநிலை, an expletive), கானவர் – the mountain dwellers, கொடுங்குரல் – bent clusters of grain spears, சூல் பொறை – heavy and full, இறுத்த – reaped, cut, கோல்தலை இருவி – stubbles that are like sticks, விழவு ஒழி வியன் களம் கடுப்ப – the wide field looks like a place where festivities have ended (கடுப்ப – உவம உருபு, a comparison word), தெறுவர பைதல் ஒரு நிலை – to see the pathetic state with sorrow, காண – to see, வைகல் – daily, யாங்கு வருவது கொல்லோ – how can she come (கொல் – ஐயப்பொருட்டு, ஓ – அசைநிலை), தீஞ்சொல் – sweet words, செறி தோட்டு – tightly stacked, எல் வளைக் குறுமகள் – the young girl with bright bangles, சிறு புனத்து – in the small field, அல்கிய – stayed, பெரும் புற நிலையே – the tall platform (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 307, அம்மூவனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கவர் பரி நெடுந்தேர் மணியும் இசைக்கும்,
பெயர்பட இயங்கிய இளையரும் ஒலிப்பர்,
கடல் ஆடு வியல் இடைப் பேர் அணிப் பொலிந்த
திதலை அல்குல் நலம் பாராட்டிய
வருமே தோழி, வார் மணல் சேர்ப்பன்,  5
இற்பட வாங்கிய முழவு முதல் புன்னை
மா அரை மறைகம் வம்மதி, பானாள்
பூ விரி கானல் புணர் குறி வந்து, நம்
மெல் இணர் நறும் பொழில் காணா
அல்லல் அரும் படர் காண்கம் நாம் சிறிதே.  10

Natrinai 307, Ammoovanār, Neythal Thinai – What the heroine’s friend said to her
Oh friend!  In the vast place
where people bathe in the
ocean, chiming bells of his
tall chariot drawn by rapidly
trotting horses sound, and
voices of the young men who
are with him, are heard.

The lord of the long shores is
arriving, to praise the beauty
of your loins with bright spots.

Come!  Let us go and hide behind
the tall, bent, dark punnai tree
with a trunk resembling a drum,
near our home, in the fragrant
grove with flowers that bloom in
delicate clusters at night, where
you meet him.

Let us watch for a little while the
pain and distress on his face, when
he is unable to find us.

Notes:  தலைவன் குறித்த இடத்திற்கு வராது காலம் தாழ்த்தினான்.  அவன் வருவதை அறிந்துத் தோழி உரைத்தது.  ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும் (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவின்கண் ‘நன்னயம் பெற்றுழி நயம்புரியிடத்தினும்’ என வருவதனுள், ‘நயம்புரியிடத்தினும்’ என்றதனால், ‘களவொழுக்கம் நிகழா நின்றுழிக் கூறும் கூற்றும் ஈண்டே கொள்க’ எனக் கூறி, இப்பாட்டைக் காட்டி இது வருகின்றான் எனக் கூறியது என்பர் இளம்பூரணர்.  நச்சினார்க்கினியரும் இதனைக் காட்டி. ‘இது தோழி தலைவிக்குப் பகற்குறிக்கண் தலைவன் வருகின்றமை காட்டி அவன் வருத்தம் காண யாம் மறைந்து நிற்பாம் வம்மோ எனக் கூறியது’ என்பர்.  கவர்வு – கவர்வு விருப்பு ஆகும் (தொல்காப்பியம் களவியல் 66).  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).

Meanings:  கவர் – desiring to run, பரி – horses, நெடுந்தேர் – tall chariot, மணியும் இசைக்கும் – the bells ring, பெயர்பட இயங்கிய இளையரும் ஒலிப்பர் – there are the sounds of the young men who are arriving with him, கடல் ஆடு – bathing in the ocean, playing in the ocean, வியல் இடை- wide place, பேர் அணிப் பொலிந்த திதலை – very pretty bright spots, அல்குல் – loins, waist, நலம் பாராட்டிய வருமே – is arriving to praise its beauty, தோழி – my friend, வார் மணல் சேர்ப்பன் – the lord of the long sandy shores, இற்பட- near the house, வாங்கிய – bent, முழவு முதல் – drum-like trunk, புன்னை மா அரை – punnai tree’s dark/big trunk, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum,  மறைகம் – let’s hide, வம்மதி – you come with me (மதி – முன்னிலையசை, an expletive of the second person), பானாள் பூ விரி கானல் – grove where flowers bloom at midnight, புணர் குறி வந்து – where we meet for our trysts, நம் – us, மெல் இணர் – delicate flower clusters, நறும் பொழில் – fragrant grove, காணா அல்லல் அரும் படர் – distress and sadness on not seeing, காண்கம் நாம் சிறிதே – let us see it for a little bit (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 308, எயினந்தை மகன் இளங்கீரனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
செல விரைவுற்ற அரவம் போற்றி
மலர் ஏர் உண்கண் பனி வர ஆயிழை,
யாம் தற் கரையவும், நாணினள் வருவோள்,
வேண்டாமையின் மென்மெல வந்து,
வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி  5
வெறி கமழ் துறு முடி தயங்க நல் வினைப்
பொறி அழி பாவையின் கலங்கி, நெடிது நினைந்து,
ஆகம் அடைதந்தோளே, அது கண்டு
ஈர் மண் செய்கை நீர்படு பசுங்கலம்
பெருமழைப் பெயற்கு ஏற்றாங்கு, எம்  10
பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே.

Natrinai 308, Eyinanthai Makan Ilankeeranār, Pālai Thinai – What the hero said to his heart
She honored my words when
I made rapid arrangements to
leave for wealth.  Tears welled
up in her kohl-lined eyes, the
young woman with beautiful jewels,
who was shy and not able to talk.

She came gently but did not block
me, she with thick hair that spreads
fragrance,
who was devastated like a female
doll whose mechanism had failed.

After thinking about it a lot,
she embraced my chest. 
On seeing that, my wealth-desiring
heart softened, like an unfired, wet clay
pot that received water from heavy rain,
and united with her in joy. 

Notes:  பொருள்வயின் பிரிய எண்ணிய தலைவன், தலைவியின் வருத்தத்தைக் கண்டு தன் நெஞ்சிடம் கூறியது.  செலவு அழுங்கியது.  ஒளவை துரைசாமி உரை – ‘உயிரினும் சிறந்தன்று நாணே’ (தொல்காப்பியம், களவியல் 23) எனத் தொடங்கும் நூற்பா உரையில் தோழியைத் தலைவி ஆற்றுவித்தற்கு இப்பாட்டினைக் காட்டுவர் நச்சினார்க்கினியர்.   குறுந்தொகை 29 – பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி அரிது அவா உற்றனை நெஞ்சே.  நல் வினைப் பொறி அழி பாவையின் (7) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நல்ல சித்திரத் தொழிலமைந்த இயங்கும் இயந்திர மற்றழிந்த பாவை, விசைக் கயிறு அறுபட்ட நல்ல வேலைப்பாடமைந்த பாவை.  Natrinai 362 has a reference of Kolli goddess statue being mechanical.  பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல – குறுந்தொகை 29.

Meanings:  செல – to leave (செல – இடைக்குறை), விரைவுற்ற – rapidly getting ready, அரவம் போற்றி – listening to the words, மலர் ஏர் உண்கண் – flower-like eyes rimmed with kohl (ஏர் – உவம உருபு, a comparison word), பனி வர – with tears dripping, ஆய் இழை – the woman with chosen/delicate/beautiful jewels (அன்மொழித்தொகை), யாம் தற் கரையவும் – when I said to her, நாணினள் – she was shy and not able to talk, வருவோள் – she who comes, வேண்டாமையின் – she did not desire for me to leave, மென்மெல வந்து – coming very slowly, வினவலும் – asking, தகைத்தலும் – and blocking, செல்லாள் ஆகி – she did not do, வெறி கமழ் – fragrance spreading, துறு முடி தயங்க – thick hair swaying, நல் வினைப் பொறி அழி பாவையின் கலங்கி – destroyed like a fine female figurine that collapsed because the equipment didn’t work, destroyed like a fine female figurine that collapsed because the joints got ruined (பாவையின் – இன் உருபு ஒப்புப் பொருளது), நெடிது நினைந்து – thought about it a lot, ஆகம் அடைதந்தோளே – she reached my chest, she embraced me (ஏ – அசைநிலை, an expletive), அது கண்டு – on seeing that, ஈர் மண் செய்கை நீர்படு பசுங்கலம் பெருமழைப் பெயற்கு ஏற்றாங்கு – like a soft wet (unfired) clay pot that accepted water from heavy rains, எம் பொருள் மலி நெஞ்சம் – my heart with a desire for great wealth, புணர்ந்து உவந்தன்றே – united with her happily (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 309, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நெகிழ்ந்த தோளும், வாடிய வரியும்,
தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி,
‘யான் செய்தன்று இவள் துயர்’ என, அன்பின்
ஆழல், வாழி தோழி, ‘வாழைக்
கொழுமடல் அகல் இலைத் தளிதலைக் கலாவும்  5
பெருமலை நாடன் கேண்மை, நமக்கே
விழுமமாக அறியுநர் இன்று’ எனக்
கூறுவை மன்னோ நீயே,
தேறுவன் மன் யான் அவருடை நட்பே.

Natrinai 309, Kapilar, Kurinji Thinai – What the heroine said to her friend
Because of your love for me,
you think that you caused me
sorrow that has made my arms
to become thin, my pallor lines to
fade, and my mango-sprout-like
pretty complexion to lose its color.

Do not cry!
May you live long, my friend!
My friendship with the man
……….from the lofty mountains
……….where raindrops rest on
……….broad leaves of banana
……….trees with thick sheaths,
has caused me problems, and
nobody understands that, you say.

I clearly understand his friendship!

Notes:  தலைவன் வரையாது களவில் வந்தொழுகுகின்றான்.  அந்நிலையில் தலைவி வருந்துவாள் என்று தோழி கவலையுற்றாள்.  அவளிடம் ‘நான் பொறுமையுடன் இருப்பேன்.  நீ வருந்தாதே’ எனத் தலைவி கூறியது.  ஒளவை துரைசாமி உரை – ‘உயிரினும் சிறந்தன்று நாணே’ (தொல்காப்பியம், களவியல் 23) எனத் தொடங்கும் நூற்பா உரையில் தோழியைத் தலைவி ஆற்றுவிப்பதற்கு இப்பாட்டினைக் காட்டுவர் நச்சினார்க்கினியர்.  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வாழை மடலிலே நீர் தங்கிக் கலந்திருக்கும் என்றது, என் உள்ளத்தில் அவர் எப்பொழுதும் கலந்திருப்பாராதலால், யான் வருந்தேன் என்பதாம்.  வாடிய வரி (1) – ஒளவை துரைசாமி உரை – திதலை வரிகள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இரேகை.  தளிர் வனப்பு (2) – ஒளவை துரைசாமி உரை – மாந்தளிர் போன்ற அழகு, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மாந்தளிர் போன்ற தன்மை.  விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).

Meanings:  நெகிழ்ந்த தோளும் – and thinned arms, வாடிய வரியும் – and faded pallor lines, தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி – looking my complexion that has lost its mango-sprout-like beauty (நிறன் – நிறம் என்பதன் போலி), யான் செய்தன்று இவள் துயர் – I caused her this sorrow (செய்தன்று – இறந்தகால முற்றுவினை, verb ending indicating past tense), என – so, அன்பின் – because of love for me, ஆழல் – do not cry, do not sink into sorrow (நீட்டல் விகாரம், அல் ஈற்று எதிர்மறை வியங்கோள்), வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – oh friend, வாழைக் கொழுமடல் – thick banana sheaths, அகல் இலை – broad leaves, தளிதலைக் கலாவும் – raindrops mix and settle on them, பெருமலை நாடன் – the man from the lofty mountains, கேண்மை – friendship, நமக்கே விழுமமாக அறியுநர் இன்று என கூறுவை – you say that it has caused me problems and nobody understands it, மன்னோ – மன், ஓ அசைநிலைகள், expletives, நீயே – you, தேறுவன் – I understand, மன் – அசைநிலை, an expletive, யான் – I, அவருடை நட்பே – his friendship (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 310, பரணர், மருதத் திணை – தோழி விறலியிடம் சொன்னது அல்லது பரத்தை விறலியிடம் சொன்னது
விளக்கின் அன்ன சுடர்விடு தாமரைக்,
களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க,
உண்துறை மகளிர் இரிய, குண்டு நீர்
வாளை பிறழும் ஊரற்கு, நாளை
மகட்கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே ! 5
தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி
உடன்பட்டு ஓராத் தாயரொடு ஒழிபு உடன்
சொல்லலை கொல்லோ நீயே, வல்லைக்
களிறு பெறு வல்சிப் பாணன் கையதை
வள் உயிர்த் தண்ணுமை போல, 10
உள் யாதும் இல்லது ஓர் போர்வை அம் சொல்லே.

Natrinai 310, Paranar, Marutham Thinai – What the heroine’s friend said to the messenger virali or what the concubine said to the messenger virali
Oh foolish woman who brings
women daily to the man from
the town where lotus blossoms
appear like lamps emitting flames,
their swaying green leaves
are like ears of male elephants
and vālai fish leap in deep
ponds where women move away
from the drinking water ports!

Did you not speak to the agreeable
mothers, who don’t think, convincing
them with ruining little lies you
uttered with your dishonest tongue,
hollow like an empty thannumai drum
with sharp tones in the hands of a bard
with food who gets powerful male
elephants as gifts?  Your words are
a mere cover with no substance!

Notes:  வாயில் மறுத்தது.  ஒளவை துரைசாமி உரை – ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) எனத் தொடங்கும் நூற்பாவின்கண், ‘பாணர் கூத்தர் விறலியர் என்று இவர் பேணிச் சொல்லிய குறைவினை எதிரும்’ என்புழிக் கூறிய உரையில் இப்பாட்டைக் காட்டி ‘இது விறலிக்கு வாயில் மறுத்தது’ என்பர் நச்சினார்க்கினியர்.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – மகளிர் அஞ்சி ஓடுமாறு தாமரை வருந்த வாளைமீன் பிறழும் என்றது, தலைவன் தலைவி வருந்தவும், காமக்கிழத்தியர் அஞ்சி ஓடுமாறு பரத்தையிடம் சென்று சேர்கின்றனன் என்று உணர்த்தவாம்.   உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – தாமரையின் பாசடை தயங்க உண்டுறை மகளிர் மருண்டு நீங்கவும், மனைக்கு விளக்காகிய தலைமகளைச் சூழ்ந்துரையும் சுற்றமும் யாமும் வருந்த தலைமகன் பரத்தையர் சேரிக்கண் புறத்தொழுக்கிற் கழிக்கின்றான்.  அவன் பொருட்டு வாயில் வேண்டி வருதலைத் தவிர்ப்பாயாக என்பதாம்.  ஒழிபு (17) – ஒளவை துரைசாமி உரை – கைவிட்டு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – எய்தி.  களிறு பெறு வல்சிப் பாணன் (9) – ஒளவை துரைசாமி உரை – களிற்றைப் பரிசிலாகப் பெற்று வாழும் பாணன்.  பாணனது வரிசை உணர்த்தி நின்றது. There is a version of this poem with the words கன்று பெறு வல்சிப் பாணன், which does not appear to be right.  In the copying and recopying process of the original poem the ‘ளி’ in களிறு could have been easily copied in error as ‘ன் ‘.  Pinnathūr Narayanaswamy Iyer who wrote the first commentary for Natrinai had the words in the poem as கன்றுபெறு வல்சிப் பாணன், and interpreted them as ‘bards who peel and eat calves.’   The word ‘peel’ is just not there, nor is it implied.  In Akanānūru 106, the phrase களிறு பெறு வல்சிப் பாணன் has been used, proving that the word கன்று is a copy error.  There are many references to kings donating elephants to bards and poets.  There are no references to bards, poets or other artists eating calves or cows.  In Kurunthokai 295, the word வல்சி means ‘livelihood with a single cow’ – ஓர் ஆன் வல்சி.   There are 4 references of wayside forest bandits killing and eating cows – அகநானூறு 97 – நிரை பகுத்து இருங்கல் முடுக்கர்த் திற்றி கெண்டும் கொலை வில் ஆடவர், அகநானூறு 129 – கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர், அகநானூறு 265 – இன் சிலை எழில் ஏறு கெண்டிப் புரைய நிணம் பொதி விழுத்தடி நெருப்பின் வைத்து எடுத்து அணங்கரு மரபின் பேஎய் போல விளர் ஊன் தின்ற வேட்கை நீங்கத் துகள் உற விளைந்த தோப்பி பருகித் குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர்,  அகநானூறு 309 – கடுங்கண் மழவர் அம்பு சேண் படுத்து வன் புலத்து உய்த்தெனத் தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் கொழுப்பு ஆ எறிந்து.  Kings gifted bards with elephants.  Puranānūru 12, 151, 233, 369, have references to this.  Bards also received as gifts, gold lotus flowers in Puranānūru 12, 29, 126, 141, 244, 319, 361, 364, gold ornaments in Puranānūru 160, abundant food in Puranānūru 33, 34, 180, 212, 320, 326, 327, 328, 332, 334, 376, 382, agricultural towns in Puranānūru 302, and liquor in Puranānūru 115, 170, 224, 239. The words பாண்கடன் in Puranānūru 201 and 203 imply that the kings and benefactors owed responsibility to bards who nurtured Thamizh.

Meanings:  விளக்கின் அன்ன – like lamps (விளக்கின் – இன் சாரியை), சுடர்விடு – emitting brightness, emitting flames, தாமரை – lotus flowers, களிற்றுச் செவி அன்ன – like the ears of a male elephant, பாசடை – green leaves, தயங்க – moving, brightly, splendidly, உண் துறை – drinking water tank, மகளிர் – women, இரிய – move away குண்டு நீர் – pond water, வாளை பிறழும் – vālai fish leap, vālai fish roll, Trichiurus haumela, ஊரற்கு – to the man from the town, நாளை – following days, மகட்கொடை – bringing women as gifts, எதிர்ந்த – accepted, undertook, மடம் கெழு பெண்டே – oh stupid woman, தொலைந்த நாவின் – with a dishonest tongue’s, with a tongue that has lost truth, உலைந்த குறுமொழி – ruining few words, ruining small lies, உடன்பட்டு ஓராத் தாயரொடு ஒழிபு உடன் – attaining the mothers who agreed to your words without understanding, abandoning the mothers who agreed to your words without understanding them, சொல்லலை கொல்லோ நீயே – did you not tell them (கொல் – ஐயப்பொருட்டு, ஓ – அசைநிலை), வல்லை – rapidly, களிறு பெறு வல்சி பாணன் – bard with food who gets male elephants as gifts, bard with livelihood who gets male elephants as gifts, கையதை – in his hands (ஐ – சாரியை), வள் உயிர் தண்ணுமை போல – like a thannumai drum with sharp tones, உள் யாதும் இல்லது – nothing inside (hollow), no substance, ஓர் போர்வை – a cover, அம் சொல்லே – பொருந்திய சொற்கள், with words, lovely words (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 311, உலோச்சனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
பெயினே, விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றி,
இருங்கதிர் நெல்லின் யாணரஃதே
வறப்பின் மா நீர் முண்டகம் தாஅய்ச் சேறு புலர்ந்து,
இருங்கழிச் செறுவின் வெள் உப்பு விளையும்
அழியா மரபின் நம் மூதூர் நன்றே,  5
கொழு மீன் சுடு புகை மறுகினுள் மயங்கிச்,
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே,
ஒன்றே தோழி நம் கானலது பழியே,
கருங்கோட்டுப் புன்னை மலர்த் தாது அருந்தி,
இருங்களிப் பிரசம் ஊத, அவர் 10
நெடுந்தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே.

Natrinai 311, Ulōchanār, Neythal Thinai – What the heroine’s friend said to her
In this town with unspoiled fine tradition,
if it rains, large spikes of grains cluster on
paddy grass that are thick like the manes
of leaping horses, and there is new wealth.

If it is dry, mundakam plants grow near
the vast backwaters, mud is parched, and
the dark brackish waters produce white salt.

Cooking smells from fatty fish waft through
the streets.  The shore with gnāzhal trees
with tiny flowers is sweet.
But there is one problem, oh friend!
It is hard to hear the sweet bell sounds of his
tall chariot when he arrives, since happily
drunk honey bees hum loud on the grove
grove punnai trees with black branches,
feasting on flower pollen.

Notes:  அலர் கூறப்பட்டு ஆற்றாளாகிய தலைவியைத் தோழி ஆற்றுவித்தது.  விடு மான்(1) – H.வேங்கடராமன் உரை – துள்ளி ஓடுகின்ற மான்.

Meanings:  பெயினே – if it rains (ஏ – அசைநிலை, an expletive), விடு மான் உளையின் – like the tufts of leaping horses, like the manes of leaping horses (உளையின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), வெறுப்ப – dense, flourishing, தோன்றி – appearing, இருங்கதிர் நெல்லின் – with large spears of rice paddy, யாணரஃதே – there is abundance, there is richness (ஏ – அசைநிலை, an expletive) , வறப்பின் – when dry, மா நீர் – black/vast waters, முண்டகம் தாஅய் – mundakam plants spread, நீர் முள்ளி, Hygrophila spinose (தாஅய் – அளபெடை), சேறு புலர்ந்து – mud becomes dry, இருங்கழிச் செறுவின் – in the dark/large muddy (waters), வெள் உப்பு விளையும் – white salt is produced, அழியா – not ruined, மரபின் – with tradition, நம் மூதூர் நன்றே – our old town is good (ஏ – அசைநிலை, an expletive), கொழு மீன் சுடு புகை – smoke from cooking fatty fish, மறுகினுள் – in the streets, மயங்கி – mixed (wafting), சிறு வீ ஞாழல் – small flowers of tigerclaw tree, புலிநகக்கொன்றை, Cassia Sophera, துறையும் ஆர் – the seashore (ஆர் – அசைச் சொல், an expletive), இனிதே – it is sweet (ஏ – அசைநிலை, an expletive), ஒன்றே தோழி – one thing oh friend, நம் கானலது பழியே – problem in our seashore grove, our seashore grove is to be blamed (ஏ – அசைநிலை, an expletive), கருங்கோட்டுப் புன்னை – black-branched punnai trees, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, மலர்த் தாது அருந்தி – eating flower pollen, இருங்களி பிரசம் – honey bees that are very happy, happily drunk dark honeybees, ஊத – humming, அவர் – his, நெடுந்தேர் இன் ஒலி – sweet sounds of the tall chariot, கேட்டலோ அரிதே – it is hard to hear (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 312, கழார்க்கீரன் எயிற்றியார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
நோகோ யானே நோம், என் நெஞ்சே,
‘பனிப் புதல் ஈங்கை அம் குழை வருடச்,
சிறை குவிந்திருந்த பைதல் வெண்குருகு,
பார்வை வேட்டுவன் காழ் களைந்து அருள,
மாரி நின்ற மையல் அற்சிரம்,  5
யாம் தன் உழையம் ஆகவும், தானே,
எதிர்த்த தித்தி முற்றா முலையள்,
கோடைத் திங்களும் பனிப்போள்,
வாடைப் பெரும் பனிக்கு என்னள் கொல்?’ எனவே.

Natrinai 312, Kalārkeeran Eyitriyār, Pālai Thinai – What the hero said to his heart
I am hurting!  My heart hurts!
How will the woman with
pallor spots and young breasts,
who suffered even in the summer
months when I was near her,
be able to handle this fiercely cold
season with northern winds,
when a hunter, eying a sad white decoy
heron with shrunk feathers, brushed by
the beautiful eengai sprouts growing
on winter season bushes,
removes its shackles with kindness,
in this rainy, confusing winter?

Notes:  பொருள்வயின் பிரிய எண்ணிய தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – வேட்டுவனால் பார்வையாகப் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் குருகு ஈங்கையின் குழை வருட வருந்தும் என்றது, வீட்டில் தங்குமாறு தலைவி வருந்தித் தோழி தேற்றவும் மாரிக்காலத்தைக் கழிப்பாள் என்று உணர்த்திற்று.  வெண்குருகு பார்வை வேட்டுவன் (4-5) – ஒளவை துரைசாமி உரை – பிற குருகுகளைப் பிடிப்பதற்கெனப் பயிற்றப்பட்ட குருகினைப் பார்வைக் குருகு எனல் வழக்கு.  பார்வை:  பார்வை வேட்டுவன் நற்றிணை 212-1, 312-4, பார்வைப் போர் – கலித்தொகை 95-17, பார்வை யாத்த – பெரும்பாணாற்றுப்படை 95, பார்வை மடப் பிணை 20-4.

Meanings:  நோகோ – I am hurting (நோகு – செய்கென்னும் தன்மை வினை, ஓ – அசைநிலை, an expletive, இரக்கக் குறிப்பு, implying pity), யானே – me (ஏ – அசைநிலை, an expletive), நோம் என் நெஞ்சே – my heart hurts, பனிப் புதல் – winter’s bush, அம் – beautiful, ஈங்கை குழை வருட – touched by eengai sprouts, Mimosa Pudica, சிறை குவிந்திருந்த – wings pointed together, பைதல் வெண்குருகு – sad white heron/egret/stork, பார்வை வேட்டுவன் – a hunter who uses one bird or animal to catch another one, காழ் களைந்து அருள – removed the shackles/ties, மாரி நின்ற மையல் அற்சிரம் – raining cold season, யாம் தன் உழையம் ஆகவும் – us remaining by her side, தானே – தான், ஏ – அசைநிலைகள், எதிர்த்த தித்தி – pallor spots have appeared, முற்றா முலையள் – she with immature breasts, கோடைத் திங்களும் பனிப்போள் – she would suffer even in summer months, வாடைப் பெரும் பனிக்கு என்னள் கொல் – how sad she will be because of the fiercely cold season and northern winds (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), எனவே – thus (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 313, தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
கருங்கால் வேங்கை நாள் உறு புதுப் பூப்
பொன் செய் கம்மியன் கை வினை கடுப்பத்,
தகை வனப்புற்ற கண்ணழி கட்டு அழித்து
ஒலி பல் கூந்தல் அணிபெறப் புனைஇக்,
காண்டற் காதல் கைம்மிக கடீஇயாற்கு  5
யாங்கு ஆகுவம் கொல் தோழி, காந்தள்
கமழ் குலை அவிழ்ந்த நயவருஞ்சாரல்
கூதள நறும் பொழில் புலம்ப, ஊர்வயின்
மீள்குவம் போலத் தோன்றும் தோடு புலர்ந்து
அருவியின் ஒலித்தல் ஆனா,  10
கொய் பதம் கொள்ளும் நாம் கூஉம் தினையே?

Natrinai 313, Thankāl Porkkollan Vennākanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
You are elegant when you wear on your
luxuriant thick hair, fresh blossoms,
put out abundantly by vēngai trees with
dark colored trunks, that look like fine jewels
made by a skilled goldsmith.

Harvest time has arrived.  The millet fields
where we chased parrots with uproars are
parched.
The sounds of the dried rustling leaves are
like that of waterfalls in the mountain slopes
filled with the scents of kānthal flowers.

We feel like leaving the fragrant grove with
koothalam vines with flowers, and removing
hindrances totally to go back to our town. 
What will happen to us now that he has parted?   

Notes:  தலைவன் அருகில் இருப்பதை அறிந்த தோழி தலைவியிடம் உரைத்தது.  வரைவு கடாவுதல்.  கூஉம் தினையே (11) – ஒளவை துரைசாமி உரை – கூவிக்காக்கும் வினையை கூஉம் என்றார்.  பெயரெச்சம் செயப்படு பொருட்பெயர் கொண்டது; எழுதும் ஓலை என்றாற் போல.  Millet harvesting time is when vēngai trees put out flowers.  This has been described in poems 125, 259, 313 and 389.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  கருங்கால் வேங்கை – vēngai trees with sturdy/big/dark colored trunks, Kino Trees, Pterocarpus marsupium, நாள் உறு புதுப் பூ – abundant new flowers that blossom daily (உறு – மிக்க), பொன் செய் கம்மியன் – a goldsmith who makes gold ornaments, கைவினை – hand art, கடுப்ப – like (உவம உருபு, a comparison word), தகை – beautiful, வனப்புற்ற – became splendid, கண்ணழி – hindrances, கட்டு அழித்து – totally ruining, ஒலி பல் கூந்தல் – very thick hair (ஒலி பல் – ஒருபொருட் பன்மொழி), அணிபெற – making it beautiful, புனைஇ – wearing (அளபெடை), காண்டல் – seeing, காதல் – love, கைம்மிக – in excess, கடீஇயாற்கு – due to the one who abandoned us (அளபெடை), யாங்கு ஆகுவம் கொல் – what will happen to us (கொல் – ஐயப்பொருட்டு), தோழி – oh friend, காந்தள் – malabar glory lily, கமழ் குலை – fragrant clusters, அவிழ்ந்த – open, நயவரும் – causing desire, desirable, சாரல் – mountain slopes, கூதள – with koothalam vines with flowers, Convolvulus ipome vine, a three-lobed nightshade vine, நறும் பொழில் – fragrant grove, புலம்ப – to become lonely, ஊர்வயின் – go toward town, மீள்குவம் போலத் தோன்றும் – appearing like we are going back, தோடு புலர்ந்து – leaves dried, அருவியின் ஒலித்தல் – like the waterfall sounds (அருவியின் – இன் உருபு ஒப்புப் பொருளது), ஆனா – not reduced, not ending, கொய் பதம் கொள்ளும் – reach harvest stage, reach plucking time, நாம் – we, கூஉம் தினையே – yell in the millet field (தினை – ஈண்டு தினைப்புனத்தைக் குறிக்கின்றது, கூஉம் – அளபெடை, ஏ – அசைநிலை, an expletive)    

நற்றிணை 314, முப்பேர் நாகனார், பாலைத் திணை – தலைவி சொன்னது
‘முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்,
வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை,
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் அலரி
நறுங்காழ் ஆரமொடு மிடைந்த மார்பில்,
குறும்பொறிக் கொண்ட கொம்மை அம் புகர்ப்பின்  5
கருங்கண் வெம்முலை ஞெமுங்கப் புல்லிக்
கழிவதாக கங்குல்’ என்று தாம்
மொழி வன்மையின் பொய்த்தனர், வாழிய,
நொடி விடுவன்ன காய்விடு கள்ளி
அலங்கல் அம் பாவை ஏறி, புலம்பு கொள்  10
புன் புறா வீழ் பெடைப் பயிரும்
என்றூழ் நீளிடைச் சென்றிசினோரே.

Natrinai 314, Muppēr Nākanār, Pālai Thinai – What the heroine said
He is a liar who spoke big words.  May he live long!
He said to me, “When old age comes, one cannot
get back youth.  There are no scholars who know
the length of life.  May our nights pass with our
embraces, my chest with a garland of moist, rainy
rainy season pichi petals and fragrant sandal paste
from trees with dense cores, pressing against your
beautiful, full breasts with black nipples and small
spots, that cause desire!”

Yet he went on the sun-scorched, long wasteland path
where a sad pigeon climbs on a kalli tree’s doll-like
swaying branch top with fruits that crack, sounding
like snapping of fingers and calls his loving mate.

Notes:  பிரிவிடை வருந்திய தலைவி கூறியது.  குறுந்தொகை 174 – கள்ளிக் காய்விடு கடு நொடி.  நொடி விடுவன்ன காய்விடு கள்ளி (9) –  ஒளவை துரைசாமி உரை – நெரித்து வளைத்து விட்டாற்போலக் காய்கள் காய்த்து விளங்கும் கள்ளி, H.வேங்கடராமன் உரை – விரல்களை நொடித்து விட்டாற்போன்று காய்கள் ஒலி எழுப்பி தெறிக்கின்ற கள்ளி.  அலங்கல் அம் பாவை (10) – ஒளவை துரைசாமி உரை – அசைதலையுடைய தலைப்பகுதி, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அசைகின்ற அழகிய பாவை போன்ற மரக்கிளை.   சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  முதிர்ந்தோர் – those who are old, இளமை அழிந்தும் – even when their youth is over, எய்தார் – they do not attain, வாழ் நாள் – life time, வகை அளவு – kind of limit, அறிஞரும் இல்லை – there are no scholars, மாரிப் பித்திகத்து – of rainy season’s jasmine, ஈர் இதழ் – moist petals, அலரி – flowers, நறுங்காழ் ஆரமொடு – with fragrant sandal paste from tree with hard core, மிடைந்த – wearing, மார்பில் – on the chest, குறும் பொறி – small spots, கொண்ட – having, கொம்மை – large, rounded,  அம் – beautiful, புகர்ப்பின் – with spots, கருங்கண் – black nipples, வெம்முலை – desire causing breasts, ஞெமுங்க – pressing, புல்லி – embracing, கழிவதாக – may it pass, கங்குல் – nights, என்று – thus, தாம் மொழி வன்மையின் – with his great words, பொய்த்தனர் – he who lied, வாழிய – may he live long, நொடி விடுவன்ன – like the sounds of cracking of fingers, காய்விடு கள்ளி – cracking cactus fruits that make sounds, prickly pear cactus or euphorbia tirukalli, milk hedge, அலங்கல் – shaking, அம் – beautiful, பாவை – doll (கள்ளியின் தலைக்கொம்பு), ஏறி – climbed on a tree, புலம்பு கொள் – lonely, sorrowful, புன் புறா – sad dove/pigeon, வீழ் பெடைப் பயிரும் – calls his loving female, என்றூழ் நீளிடை – hot long path, சென்றிசினோரே – the one who went (இசின் – படர்க்கையின் கண் வரும், an expletive of the third person, ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 315, அம்மூவனார், நெய்தற் திணை – பரத்தை தலைவனிடம் சொன்னது
ஈண்டு பெருந்தெய்வத்து யாண்டு பல கழிந்தெனப்,
பார்த்துறைப் புணரி அலைத்தலின், புடை கொண்டு
மூத்து வினை போகிய முரிவாய் அம்பி,
நல் எருது நடை வளம் வைத்தென உழவர்
புல்லுடைக் காவில் தொழில் விட்டாங்கு,  5
நறு விரை நன் புகை கொடாஅர், சிறு வீ
ஞாழலொடு கெழீஇய புன்னை அம் கொழு நிழல்
முழவு முதல் பிணிக்கும் துறைவ, நன்றும்
விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின்
தவறும் நன்கு அறியாய் ஆயின், எம் போல்  10
ஞெகிழ் தோள் கலுழ்ந்த கண்ணர்,
மலர் தீய்ந்தனையர் நின் நயந்தோரே.

Natrinai 315, Ammoovanār, Neythal Thinai – What the concubine said to the hero
Oh lord of the shores!
Fishermen fasten their old boats,
……….which have seen many years
……….with names of great gods,
……….tossed by waves in the ocean
……….with shores with rocks,
……….their edges cracked, not used
………. any longer for work,
to the drum-like trunks of punnai trees
with beautiful, rich shade, growing near
gnāzhal trees with tiny flowers.   

They do not honor them with many
fragrant smoke offerings, like farmers
who retire their old oxen that have lost
their fine walking ability, and let them
graze on grass in the meadows.

The fine friendship that you have
will fail, if you don’t understand well
that women like me who desire you
weep, are ruined like charred flowers,
and our arms have grown thin!

Notes:  தலைவனைப் பரத்தை நொந்து உரைத்தது.  நெய்தலுள் மருதம்.  ஒளவை துரைசாமி உரை – ‘புல்லுதல் மயக்கும் புலவிக்கண்ணும்’ (தொல்காப்பியம், கற்பியல் 10) எனத் தொடங்கும் நூற்பாவின் உரையில் இப்பாட்டைக் காட்டி, ‘இதனுள் மூத்து வினை போகிய அம்பி போலப் பருவஞ்சென்ற பிணிக்கப்பட்ட எம்மைப் போலாது இவள் இப்பருவத்தே இனையளாகற்பாலளோ, மலர்ந்த செவ்வியான் முறைவீயாய்க் கழியாது இடையே எரிந்து கரிவுற்ற பூவினைப் போல எனத் தலைவனுக்குக் காமக்கிழத்தி கூறியவாறு காண்க’ என்பர் நச்சினார்க்கினியர்.  பெருந்தெய்வத்து யாண்டு (1) – ஒளவை துரைசாமி உரை – ஒரு பெருங்கடவுளின் ஆணைக்கேற்ப அடுத்தடுத்து வரும் யாண்டுகள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பெரிய தெய்வமென பெயர் கொண்ட ஆண்டுகள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தெய்வம் = வருடம், தெய்வத்துயாண்டு, இருபெயரொட்டு.  பார்த்துறை (2) – ஒளவை துரைசாமி உரை – பாறைகள் பொருந்திய துறை, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கரையை அடுத்த துறை, முரிவாய் அம்பி (3) – ஒளவை துரைசாமி உரை – விளிம்பு முரிந்து கெட்ட தோணி, முரிந்த வாயை உடைய படகு.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – அம்பி மிதிர்ந்தபின் புன்னையின் கீழ்ச் சேர்ப்பர் என்றது, தலைவனை வாய்ந்த மாதர் வயது முதிர்ந்தபின் கைவிடப்பெறுவர் என்பது உணர்த்தவாம்.  Natrinai poems 315 and 354 have descriptions of fishing boats tied to punnai trees.  விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).

Meanings:  ஈண்டு பெருந்தெய்வத்து யாண்டு பல கழிந்தென (பெருந்தெய்வத்து ஈண்டு யாண்டு பல கழிந்தென)- since many continuous years with the names of great gods have passed (ஈண்டு – தொடர்ந்து வரும், அடுத்தடுத்து வரும்), பார்த் துறைப் புணரி அலைத்தலின் – since they were tossed around by the ocean with wide shores, since they were tossed around in the ocean with rocks, புடை கொண்டு – get attacked, get tossed, மூத்து வினை போகிய – old and not useful for business, முரிவாய் அம்பி – boats with cracked edges, boats with cracked mouths, நல் எருது நடை வளம் வைத்தென – since the fine bulls’ robust walking ability has gone (வைத்தென – நீங்கியபடியால்), உழவர் புல்லுடைக் காவில் தொழில் விட்டாங்கு – like how the farmers left them in the groves with grass to graze, நறு விரை நன் புகை – fine smoke from mixing fragrant things, கொடாஅர் – they do not offer, சிறு வீ ஞாழலொடு – along with gnāzhal trees with small flowers, புலிநகக்கொன்றை, tigerclaw tree,  Cassia sophera, கெழீஇய புன்னை – flourishing punnai, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum (கெழீஇய – அளபெடை), அம் கொழு நிழல் – beautiful thick shade, முழவு முதல் பிணிக்கும் – tie the to the drum-like trunks, துறைவ – oh lord of the seashore (அண்மை விளி), நன்றும் – greatly, very much, விழுமிதின் கொண்ட – having greatness, கேண்மை – friendship, நொவ்விதின் – minutely, perfectly, தவறும் நன்கு அறியாய் ஆயின் – if you don’t understand well that mistakes will happen, எம் போல் – like me, ஞெகிழ் தோள் – slim arms (ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி), கலுழ்ந்த கண்ணர் – those with weeping eyes, மலர் தீய்ந்தனையர் – those who are like charred flowers, நின் நயந்தோரே – those who desired you (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 316, இடைக்காடனார், முல்லைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
மடவது அம்ம, மணி நிற எழிலி,
மலரின் மௌவல் நலம்வரக் காட்டிக்,
‘கயல் ஏர் உண்கண் கனங்குழை, இவை நின்
எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம்’ என
கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின்  5
நன்னுதல் நீவிச் சென்றோர், தம் நசை
வாய்த்துவரல் வாரா அளவை அத்தக்
கல் மிசை அடுக்கம் புதையக் கால் வீழ்த்து,
தளிதரு தண் கார் தலைஇ
விளி இசைத்தன்றால் வியல் இடத்தானே.  10

Natrinai 316, Idaikkādanār, Mullai Thinai – What the heroine’s friend said to her
My friend with kohl-rimmed,
carp-shaped, pretty eyes and heavy
earrings!

He stroked your fine forehead
that resembles the moon in the wide
sky, showed flowering jasmine vines
and said that he would come when
they put out new buds that will look
like your teeth.

He has not come back with great desire.
But foolish, untimely sapphire-colored
clouds have fallen as cold rain drops,
shrouding the wasteland mountain paths,
along with roaring thunder in the wide sky.

Notes:  பிரிவிடை வருந்திய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.  பற்களைப் போன்ற அரும்பு:  குறுந்தொகை 126 – முல்லைத் தொகு முகை இலங்கு எயிறாக, குறுந்தொகை 162 – சிறு வெண்முகையின் முறுவல் கொண்டனை, குறுந்தொகை 186 – முல்லை மென் கொடி எயிறு என முகையும், நற்றிணை 316 – மௌவல் நலம்வரக் காட்டி கயல் ஏர் உண்கண் கனங்குழை இவை நின் எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம் என, கலித்தொகை 27 – மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்ப.  ஏய்தருவேம் (4) – ச. வே. சுப்பிரமணியன் உரை, கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – ஏய்தருவேம், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை, ஒளவை துரைசாமி உரை – எய்தருவேம் (எய்தல், ஏய்தல் – அடைதல்).  இசைத்தன்றால் (10) – ஒளவை துரைசாமி உரை – முழங்கியது, H. வேங்கடராமன் உரை – குழுமி உள்ளது.

Meanings:  மடவது – they are foolish, அம்ம – அசைநிலை, an expletive, மணி நிற எழிலி – sapphire colored clouds, மலரின் – with flowers, மௌவல் நலம்வரக் காட்டி – showed beautifully jasmine vines, Jasminum angustifolium, Wild jasmine,  கயல் ஏர் உண்கண் – carp shaped kohl-rimmed eyes, Cyprinus fimbriatus (ஏர் – உவம உருபு, a comparison word), கனங்குழை – oh woman with big/heavy earrings, (அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), இவை நின் எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம் – I will come back before these become like your teeth (ஏர் – உவம உருபு, a comparison word), என கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த – praised your forehead that appears like the moon in the wide sky (மதி – முதலிற் கூறும் சினையறி கிளவி), நின் நன்னுதல் நீவிச் சென்றோர் – stroked your pretty fine forehead, தம் நசை வாய்த்துவரல் வாரா அளவை – when he has not finished his work and come with great desire to be with you, அத்தக் கல் மிசை – over the wasteland mountains, அடுக்கம் புதையக் கால் வீழ்த்து – rains have fallen causing the mountain ranges to be hidden, தளிதரு – bringing rain drops, தண் கார் – cool clouds, cool rains, தலைஇ – pouring (தலைஇ – அளபெடை), விளி இசைத்தன்றால் – thunder is roaring (இசைத்தன்று + ஆல், ஆல்  = அசைநிலை, an expletive), வியல் இடத்தானே – in the wide space (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 317, மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நீடு இருஞ்சிலம்பின் பிடியொடு புணர்ந்த
பூம்பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்பத்,
தோடுதலை வாங்கிய நீடு குரல் பைந்தினை,
பவளச் செவ்வாய்ப் பைங்கிளி கவரும்
உயர்வரை நாட! நீ நயந்தோள் கேண்மை  5
அன்னை அறிகுவள் ஆயின், பனி கலந்து,
என் ஆகுவ கொல் தானே, எந்தை
ஓங்கு வரைச் சாரல் தீஞ்சுனை ஆடி,
ஆயமொடு குற்ற குவளை
மா இதழ் மா மலர் புரைஇய கண்ணே?  10

Natrinai 317, Mathurai Poovanda Nākan Vēttanār, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
Oh lord of the tall mountains, where parrots with
coral-red beaks attack fresh, long spikes of millet
on top of the leaves, that are curved like the lifted
trunks of spotted male elephants who unite with their
females on the slopes of the huge, dark mountains!

If our mother knows about her friendship with you,
what will happen?

The woman you desire, her large dark eyes, like petals
of kuvalai flowers plucked with friends playing in the
sweet springs of our father’s tall mountains, will shed
tears.

Notes:  வரைவு கடாயது.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கிளி கொண்டு செல்லும் திணைக்கதிர்கள் கிளிக்கு உணவாகுமேயன்றிப் புனத்திற்குப் பயன்படாதது போல தலைவியும் தலைவனுக்குப் பயன்தருவாளேயன்றி பிறந்த இல்லத்திற்குப் பயன்படாள் என்பதாம்.

Meanings:  நீடு இருஞ்சிலம்பின் – on the tall dark mountains, பிடியொடு புணர்ந்த – united with its female, பூம்பொறி ஒருத்தல் – male elephant with lovely spots, male elephant with lovely lines, ஏந்து கை கடுப்ப – like lifted trunk (கடுப்ப – உவம உருபு, a comparison word), தோடு தலை – from the top of leaves, வாங்கிய – bent, நீடு குரல் – long spikes/clusters, பைந்தினை – fresh millet, பவளச் செவ்வாய்ப் பைங்கிளி – green parrots with coral red beaks, கவரும் – they take, they eat, உயர் வரை நாட – oh lord of the lofty mountains, நீ நயந்தோள் – the young woman you desire, கேண்மை – the friendship/love affair, அன்னை அறிகுவள் ஆயின் – if mother knows about it, பனி கலந்து – tears mixed, என் ஆகுவ – what will happen, கொல் – அசைநிலை, an expletive, தானே – தான், ஏ – அசைநிலைகள், expletives, எந்தை – our father’s, ஓங்கு வரை – tall mountains, சாரல் – mountain slopes, தீம் சுனை ஆடி – played in the sweet springs, ஆயமொடு – with friends, குற்ற குவளை – plucked blue waterlilies, மா இதழ் மா மலர் – dark petaled large flowers, புரைஇய – like (அளபெடை, புரை – உவம உருபு, a comparison word), கண்ணே – eyes (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 318, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை  – தோழி தலைவனிடம் சொன்னது
நினைத்தலும் நினைதிரோ ஐய, அன்று நாம்
பணைத் தாள் ஓமைப் படுசினை பயந்த,
பொருந்தாப் புகர் நிழல் இருந்தனெமாக
நடுக்கம் செய்யாது நண்ணுவழித் தோன்றி,
ஒடித்து மிசைக் கொண்ட ஓங்கு மருப்பு யானை  5
பொறிபடு தடக்கை சுருக்கி பிறிது ஓர்
ஆறு இடையிட்ட அளவைக்கு, வேறு உணர்ந்து
என்றூழ் விடர் அகம் சிலம்பப்
புன்தலை மடப் பிடி புலம்பிய குரலே?

Natrinai 318, Chēramān Pālai Pādiya Perunkadunkō, Pālai Thinai – What the heroine’s friend said to the hero
In the past, when we were resting in the
scant shade of huge, dried branches of
an omai tree with huge trunk, without
making us tremble, a male elephant
with lifted tusks appeared there, broke
and ate tree branches, curled its huge,
spotted trunk and trumpeted
like it had seen something on the path.

A soft-headed, naive female elephant
responded with painful sounds
that echoed in the mountain crevices.

Have you thought about it, oh lord?

Notes:  பிரிவு உணர்த்தப்பட்ட தோழி சொல்லியது.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – களிறு வேறொன்றினை நினைந்து எழுப்பிய ஒலிகேட்டுப் பிடி புலம்புமென்றது, தலைவனுக்கு யாதானும் துன்பமாயின் தலைவி துன்புறுவாள் என்றுணர்த்தவாம்.  ஒளவை துரைசாமி உரை – உடன்போக்கின்கண் தோழியும் உடன்சேறல் இல்லையாயினும், தலைவிக்கும் தோழிக்கும் உள்ள ஒருமையுளப்பாடு கருதி ‘நாம்’ என்றார்.  இவ்வாறு வருவனற்றை, ‘ஒன்றித் தோன்றும் தோழி மேன’ (தொல்காப்பியம், பொருள் 39) என்பதனால் அமைப்பர் நச்சினார்க்கினியர்.  இடையிட்ட அளவைக்கு (7) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இடையீடுப்பட்டு பிளிற்றியவுடன், ச. வே. சுப்பிரமணியன் உரை – வழியில் கண்டது போலப் பிளிறியது, ஒளவை துரைசாமி உரை – மறைந்த அவ்வளவிற்கு.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

Meanings:  நினைத்தலும் நினைதிரோ ஐய – have you thought about it oh sir, அன்று – in the past, நாம் – we, பணைத் தாள் ஓமை – omai tree with huge trunk, Toothbrush Tree, Dillenia indica, படுசினை பயந்த – dried up huge branches that yielded, பொருந்தா – not suitable, புகர் நிழல் – dappled shade, இருந்தனெமாக – when we were there, நடுக்கம் செய்யாது – without making us tremble, நண்ணுவழித் தோன்றி – appearing nearby, appearing on the way, ஒடித்து மிசைக் கொண்ட – broke and ate, ஓங்கு மருப்பு யானை – an elephant with lifted tusks, பொறிபடு தடக்கை – spotted large trunk, சுருக்கி – curled, rolled, பிறிது ஓர் ஆறு இடையிட்ட அளவைக்கு – trumpeted like it had heard something different on the path, வேறு உணர்ந்து – understood it to be different, என்றூழ் – sunny, விடர் அகம் சிலம்ப – causing sounds in the mountain caves/crevices, புன்தலை – soft-headed, head with parched hair, head with scanty hair, மடப் பிடி புலம்பிய குரலே – the painful trumpeting sound of a naive female elephant (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 319, வினைத்தொழில் சோகீரனார், நெய்தற் திணை – தலைவன் சொன்னது
ஓதமும் ஒலி ஓவின்றே, ஊதையும்
தாது உளர் கானல் தவ்வென்றன்றே,
மணன் மலி மூதூர் அகல் நெடுந்தெருவில்
கூகைச் சேவல் குராலோடு ஏறி,
ஆர் இருஞ்சதுக்கத்து அஞ்சுவரக் குழறும்,  5
அணங்கு கால் கிளரும் மயங்கு இருள் நடுநாள்
பாவை அன்ன பலர் ஆய் வனப்பின்
தட மென் பணைத்தோள் மடம் மிகு குறுமகள்
சுணங்கு அணி வன முலை முயங்கல் உள்ளி,
மீன் கண் துஞ்சும் பொழுதும்,  10
யான் கண் துஞ்சேன்; யாது கொல் நிலையே?

Natrinai 319, Vinaithozhil Chokeeranār, Neythal Thinai – What the hero said
The sounds of waves have ended,
cold northerly winds spread pollen
and the seashore grove is desolate.

In the sand-filled ancient town,
a male owl along with its female goes
to the wide, long street and hoots in the
empty town square at this confusing
midnight time, when ghouls roam.

I am unable to sleep even when fish
go to sleep, thinking about embracing
the naïve woman with curved, delicate arms
like bamboo, pretty breasts with pallor spots, 
lovely like Kolli goddess, whose beauty is
analyzed by many.  What is happening to me?

Notes:  தலைவி இற்செறிக்கப்பட்டாள்.  அதனை அறிந்து ஆற்றானாகியத் தலைவன் தனக்குத் தானே கூறியது.  ஒளவை துரைசாமி உரை – ‘பண்பிற் பெயர்ப்பினும்’ (தொல்காப்பியம், களவியல் 12) எனத் தொடங்கும் நூற்பாவில், ‘பரிவுற்று மெலியினும்’ என்றதற்கு இப்பாட்டைக் காட்டி, இஃது இரவுக் குறியிற் பரிவுற்றது என்பர் நச்சினார்க்கினியர்.  நெடுநல்வாடை 85 – தவ்வென்று அசைஇ தா துளி, குறுந்தொகை 356-4 தவ்வெனக் குடிக்கிய.  ஆர் இருஞ்சதுக்கத்து (2) – ஒளவை துரைசாமி உரை – ஆத்தி மரம் நின்ற பெரிய சதுக்கத்தில், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மக்கள் இயங்காத பெரிய நாற்சந்தி கூடுமிடத்தில், கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – மக்கள் புழக்கம் இல்லாத பெரிய நாற்சந்தி கூடுமிடத்தில். பாவை (7) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கொல்லிப்பாவை, ஒளவை துரைசாமி உரை – பாவை.  நற்றிணை 255 – கழுது கால் கிளர ஊர் மடிந்தன்றே.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).

Meanings:  ஓதமும் ஒலி ஓவின்றே – ocean sounds have ended (ஓவின்று – இறந்தகாலத் தெரிநிலை வினைத்திரிசொல், ஏ – அசைநிலை, an expletive), ஊதையும் – also the cold northern winds, தாது உளர் கானல் – the seashore grove with spreading pollen, தவ்வென்றன்றே –  it does not have sounds, it has lost its luster (ஏ – அசைநிலை, an expletive), மணல் மலி மூதூர் – ancient town with abundant sand, அகல் நெடுந்தெருவில் – on the wide long street, கூகைச் சேவல் குராலோடு ஏறி – male owl with its female climbed, ஆர் இருஞ்சதுக்கத்து – in the huge wide town square that is devoid of people (ஆர் – அரிய ), in the huge town with bauhinia trees, ஆத்தி மரங்கள், common mountain ebony, bauhinia racemose,  holy mountain ebony, bauhinia tomentosa, royal flower of the Chozha kings, அஞ்சுவரக் குழறும் – it hoots causing fear, அணங்கு கால் கிளரும் – ghouls rise up and roam, ghouls rise up like the wind, மயங்கு இருள் நடுநாள் – confusing dark midnight, பாவை அன்ன – like Kolli goddess, like a doll, பலர் ஆய் வனப்பின் – with beauty analyzed by many, தட – large, curved, மென் – delicate, பணைத்தோள் – bamboo-like arms, மடம் மிகு குறுமகள் – naive young girl, சுணங்கு அணி – with pallor spots, வன முலை – pretty breasts, முயங்கல் – embracing, உள்ளி – thinking, மீன் கண் துஞ்சும் பொழுதும் – even when fish sleep, யான் கண் துஞ்சேன் – I do not sleep, யாது கொல் – what (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), நிலையே – situation (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 320, கபிலர், மருதத் திணை – பரத்தை அவளுடைய தோழியரிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக
‘விழவும் உழந்தன்று, முழவும் தூங்கின்று,
எவன் குறித்தனள் கொல்?’ என்றி ஆயின்,
தழை அணிந்து அலமரும் அல்குல், தெருவின்
இளையோள் இறந்த அனைத்தற்கு பழ விறல்
ஓரிக் கொன்ற ஒரு பெருந்தெருவில்  5
காரி புக்க நேரார் புலம் போல்
கல்லென்றன்றால், ஊரே அதற்கொண்டு,
காவல் செறிய மாட்டி, ஆய் தொடி
எழில் மா மேனி மகளிர்
விழுமாந்தனர், தம் கொழுநரைக் காத்தே.  10

Natrinai 320, Kapilar, Marutham Thinai – What the concubine said to her friends, as the hero listened nearby
The festivities have ended and drums
have stopped roaring.
The young woman walks on the street
with her leaf skirt, swaying her hip as
she goes.

If you ask me what she was thinking,
I will tell you.  The whole town laughs
at her with great uproar, sounding like
the uproar that rose when Kāri killed Ōri
of ancient victories, and then went to his
huge street.

Dark-colored, pretty women with
well-made bangles have protected their
husbands from her and attained benefits.

Notes:  பரத்தையிடமிருந்து பிரிந்து வந்த தலைவன் வேறொரு பரத்தையின் மனைக்குச் செல்கின்றான்.  அதனை அறிந்த முதல் பரத்தை இகழ்ந்து கூறியது.  Natrinai poems 77, 100, 170, 291 and 320 have references to Malaiyamān.  There are references to Kāri killing Ōri in Natrinai 320, Akanānūru 209, and Sirupānātruppadai 110-111.   Kāri killed Ōri and then gave away Ōri’s Kolli Mountain to the Chēra king (Akanānūru 209).  Poems 6, 52, 265 and 320 have references to Ōri.  விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 57).

Meanings:  விழவும் உழந்தன்று – the festivals have ended, முழவும் தூங்கின்று – the drums are sleeping, the drums have stopped, எவன் குறித்தனள் கொல் என்றி ஆயின் – if you ask ‘what was she was thinking?’ (கொல் – அசைநிலை, an expletive, என்றி – முன்னிலை ஒருமை), தழை அணிந்து – wearing a leaf skirt, அலமரும் அல்குல் – with swaying hips, with swaying waist, தெருவின் – in the street, இளையோள் – the young woman, இறந்த – went, அனைத்தற்கு – for that, பழ விறல் – ancient victory, ஓரிக் கொன்ற – killed king Ōri, ஒரு பெருந்தெருவில் – on a big street, காரி – king Kāri, புக்க – entered, நேரார் புலம் போல் – like the land of enemies, கல்லென்று அன்று ஆல் ஊரே – the town raised uproars (கல்லென்று – ஒலிக்குறிப்பு, ஆல் – அசைநிலை, an expletive), அதற்கொண்டு – since then, காவல் செறிய மாட்டி – protected well, ஆய் தொடி – beautiful bangles, chosen bangles, எழில் – beautiful, மா மேனி – dark colored body, மகளிர் – young women, விழுமாந்தனர் – they attained benefits (விழுமம் என்ற உரிச் சொல்லடியாகப் பிறந்த தெரிநிலை வினைமுற்று), தம் கொழுநரைக் காத்தே – protecting their husbands (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 321, மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
செந்நிலப் புறவின் புன் மயிர்ப் புருவை
பாடு இன் தெள் மணித் தோடு தலைப்பெயரக்,
கான முல்லைக் கயவாய் அலரி
பார்ப்பன மகளிர் சாரல் புறத்து அணியக்,
கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை,  5
புல்லென் வறுமனை நோக்கி, மெல்ல
வருந்தும் கொல்லோ திருந்திழை அரிவை?
வல்லைக் கடவுமதி தேரே, சென்றிக,
குருந்து அவிழ் குறும் பொறை பயிற்றப்
பெருங்கலி மூதூர் மரம் தோன்றும்மே.  10

Natrinai 321, Mathurai Alakkar Gnālār Makanār Mallanār, Mullai Thinai – What the hero said to the charioteer
From the forest with red soil,
herders with short-haired goats
with clear, sweet bells return home.
Forest jasmine flowers that
Brahmin women on the mountain
slopes wear have blossomed.

In the evening time when the
sun’s rays reach the mountains,
my wife wearing perfect jewels will
feel sad when she sees our dull and
desolate house.

Ride fast, oh charioteer!
The trees in our noisy, ancient town
will appear between the small
boulders where kuruntham flowers bloom.

Notes:  வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது.

Meanings:  செந்நிலப் புறவின் – from the forest with red soil, புன் மயிர்ப் புருவை – goats with short hair, goats with soft hair, goats with parched hair, பாடு இன் தெள் மணி – clear sweet sounding bells, தோடு தலைப்பெயர – herds return, herds move, கான முல்லை – forest jasmine, கயவாய் அலரி – wide opened flowers, பார்ப்பன மகளிர் – Brahmin women, சாரல் புறத்து – on the mountain slopes, அணிய – near, கல் சுடர் சேரும் – sun reaches the mountains, கதிர் மாய் மாலை – evening when the sun’s rays hide, புல்லென் வறுமனை நோக்கி – looking at the dull empty house, மெல்ல வருந்தும் கொல்லோ – she feel sad gently (கொல் – அசைநிலை, an expletive ஓ – அசைநிலை, an expletive), திருந்திழை அரிவை – the young lady with perfect jewels, வல்லைக் கடவுமதி தேரே – ride the chariot fast (மதி – முன்னிலை அசை, an expletive of the second person), சென்றிக – please go, you proceed (செல்க என்னும் வியங்கோள் வினைதிரிசொல்), குருந்து அவிழ் – kuruntham flowers open, wild orange,  citrus indica, குறும் பொறை – small hills, small boulders, பயிற்ற – getting close, பெருங்கலி – great uproar, மூதூர் – ancient town, மரம் தோன்றும்மே – the trees will appear (தோன்றும்மே – செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது)

நற்றிணை 322, மதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது அல்லது தலைவி தோழியிடம் சொன்னது
ஆங்கனம் தணிகுவது ஆயின், யாங்கும்
இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை,
வாய் கொல், வாழி தோழி, வேய் உயர்ந்து
எறிந்து செறித்தன்ன பிணங்கு அரில் விடர் முகை,
ஊன் தின் பிணவின் உயங்கு பசி களைஇயர்,  5
ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி, வாள் வரிக்
கடுங்கண் வயப் புலி ஒடுங்கும் நாடன்
தண் கமழ் வியல் மார்பு உரிதினின் பெறாது,
நன்னுதல் பசந்த படர் மலி அரு நோய்
அணங்கு என உணரக் கூறி, வேலன்  10
இன் இயம் கறங்கப் பாடிப்,
பல் மலர் சிதறிப் பரவுறு பலிக்கே.

Natrinai 322, Mathurai Pālasiriyan Chēnthan Kotranār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, or What the heroine said to her friend
May you live long, oh friend!
Pallor has spread on the fine
forehead,
unable to embrace the wide, cool
and fragrant chest of the man from
the country, where bamboos grow
tall, broken, dense and tangled,
and a cruel, mighty male tiger with
sword-like stripes, lies in wait for
those who travel on the harsh path,
to feed his flesh-hungry female.

Saying that this affliction is caused
by the wrath of Murukan,
the diviner sings with sweet instruments
and scatters many flowers as offerings.
If the affliction goes away, there would
be nothing more cruel than this.

Is this not true?

Notes:  களவில் வந்தொழுகும் தலைவன் சிறைப்புறமாக இருக்கும்போது கூறியது.  தலைவியின் கூற்று.  தோழியின் கூற்றுமாம்.  வரைவு கடாயது.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – ஆண்புலி பெண்புலியுற்ற பசிபோக்கச் சுரத்திடைச் சென்று மறைந்திருக்குமென்றது, தலைவியின் பிரிவுத் துயர் போக்க வரைந்தெய்துதற்கு வேண்டும் பொருளைத் தலைவன் ஈட்டச் சென்று வருவானாக என்பதை உள்ளுறுத்தது.  வேலன் – நச்சினார்க்கினியர் உரை திருமுருகாற்றுப்படை 222 – பிள்ளையார் வேலைத் (பிள்ளையான முருகனின் வேலை) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேலன் என்றார்.

Meanings:  ஆங்கனம் தணிகுவது ஆயின் – if it will get reduced (ஆங்கனம் – முதல் நீண்டது), யாங்கும் இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை – there is nothing else more cruel than this, வாய் கொல் – is this true (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – oh friend, வேய் உயர்ந்து – bamboos are tall, எறிந்து – cut, broken,  செறித்தன்ன – like they are tight together, பிணங்கு அரில் – intertwined, tangled, விடர் முகை – mountain caves, ஊன் தின் – meat eating, பிணவின் உயங்கு பசி களைஇயர் – to remove the hunger of its mate (களைஇயர் – அளபெடை), ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி – to attack people who go on the harsh small path, வாள் வரி – bright stripes, sword-like stripes, கடுங்கண் வயப் புலி ஒடுங்கும் – a cruel mighty tiger hides, a fierce mighty tiger stalks, நாடன் – the man from such country, தண் கமழ் – cool and fragrant, வியல் மார்பு உரிதினின் பெறாது – unable to get his wide chest rightfully, நன்னுதல் பசந்த – pallor has spread on the fine forehead, படர் மலி அரு நோய் – sorrow-filled disease that is difficult to remove, அணங்கு என உணரக் கூறி – said that it was affliction (incurring the wrath of Murukan), வேலன் இன் இயம் கறங்கப் பாடி – Velan (Murukan priest, diviner) singing with many sweet instruments, பல் மலர் சிதறி – scattering many flowers, பரவுறு பலிக்கே – for the offering with prayers (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 323, வடம வண்ணக்கன் பேரிசாத்தனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
ஓங்கித் தோன்றும் தீம் கள் பெண்ணை
நடுவணதுவே தெய்ய, மடவரல்
ஆயமும் யானும் அறியாது அவணம்
மாய நட்பின் மாண் நலம் ஒழிந்து, நின்
கிளைமை கொண்ட வளை ஆர் முன் கை  5
நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம்;
புலி வரி எக்கர்ப் புன்னை உதிர்த்த
மலி தாது ஊதும் தேனோடு ஒன்றி,
வண்டு இமிர் இன் இசை கறங்க திண் தேர்த்
தெரி மணி கேட்டலும் அரிதே,  10
வரும் ஆறு ஈது, அவண் மறவாதீமே.

Natrinai 323, Vadama Vannakkan Pērisathanār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero, while arranging for a day tryst
The small seashore village of her
father,
……….the young woman with bangles on her
……….forearms, who spoiled her fine beauty
……….because of your confusing friendship,
is in the midst the tall palmyra palms
with sweet sap.

My naive friends and I will be there,
unaware of the presence of each other.

Punnai trees, on the strips of sand dunes
that appear like the stripes of tigers, have
dropped heavy pollen, and male and female
honeybees hum sweet music.  It is difficult
to hear your clear chariot bells.

This is the path to use.  Do not forget the place!

Notes:  தோழி இரவுக்குறி நேர்ந்தது.  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – புன்னை உதிர்ந்த தாதினை வண்டுகள் இமிர்ந்து உண்ணும் என்றதனால், தலைவியின் நலத்தை அஞ்சாது உண்டு, மகிழ்ந்திருக்கலாம் என்பது.  தேனோடு (8) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் – பெண் வண்டுகளுடனே.  வண்டு (9) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் – ஆண் வண்டு.

Meanings:  ஓங்கித் தோன்றும் தீம் கள் பெண்ணை – tall palmyra trees with sweet sap, Borassus flabellifer, நடுவணதுவே – it is in the middle, தெய்ய – அசைநிலை, an expletive, மடவரல் ஆயமும் யானும் – my naive group of friends and myself, அறியாது – not aware, அவணம் – we will be there, மாய – confusing, நட்பின் – due to friendship, மாண் நலம் ஒழிந்து – spoiling her fine beauty, நின் கிளைமை கொண்ட – who has your friendship, வளை ஆர் முன் கை நல்லோள் – the fine young woman with bangles in her forearms, தந்தை சிறுகுடிப் பாக்கம் – the small seashore village of her father, புலி வரி – tiger stripes, எக்கர்ப் புன்னை – sand dune punnai trees, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, உதிர்த்த மலி தாது – dropped heavy pollen, ஊதும் – humming, தேனோடு – with female honey bees, ஒன்றி – involved, வண்டு இமிர் இன் இசை கறங்க – loud sweet music of male bees, திண் தேர் – sturdy chariot, தெரி மணி கேட்டலும் – to hear the clear bells, அரிதே – difficult, வரும் ஆறு – arriving path, ஈது – this, அவண் – that place (இது, ஈது எனச் சுட்டு நீண்டது), மறவாதீமே – do not forget (முன்னிலை வினைத் திரிசொல்) 

நற்றிணை 324, கயமனார், குறிஞ்சித் திணை அல்லது பாலைத் திணை – தலைவன் தோழனிடம் சொன்னது, அல்லது தலைவியை வழியில் கண்டோர் சொன்னது

அந்தோ! தானே அளியள் தாயே!
நொந்து அழி அவலமொடு என் ஆகுவள் கொல்,
பொன் போல் மேனித் தன் மகள் நயந்தோள்?
கோடு முற்று யானை காடுடன் நிறைதர,
நெய் பட்டன்ன நோன் காழ் எஃகின்   5
செல்வத் தந்தை இடனுடை வரைப்பின்,
ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி,
அம் சில் ஓதி இவள் உறும்
பஞ்சி மெல் அடி நடை பயிற்றும்மே.

Natrinai 324, Kayamanār, Kurinji Thinai or Pālai Thinai – What the hero said to his friend, or what those who saw the heroine on the path said
Her pitiable mother who bears this pain
and grief!  What will happen to her?
Her beloved daughter, her body like gold,
has gone to the jungle where elephants
have mature tusks.

She is playing like she is rolling her ball
in the large house of her wealthy father
with a spear that shines like it has been
rubbed with oil.  The young woman with
fine and beautiful hair walks on delicate
feet that are very much like cotton.

Notes:  ஒளவை துரைசாமி உரை – இஃது இடைச் சுரத்து கண்டோர் சொல்லியது.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தலைமகன் பாங்கற்குச் சொல்லியது, இடைச்சுரத்துக் கண்டோர் சொல்லியதூஉமாம்.  In poems Natrinai 12, 305, 324 and Kurunthokai 396, which were all written by Kayamanār, there are references to a ball played by the heroine.

Meanings:  அந்தோ – aiyo, alas, தானே அளியள் – she is pitiable, தாயே – her mother (ஏ – அசைநிலை, an expletive), நொந்து அழி அவலமொடு – grieving and deeply distressed, என் ஆகுவள் கொல் – how will she handle it (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), பொன் போல் மேனி – body like gold, தன் மகள் நயந்தோள் – the woman who desires her daughter, the woman who pines for her daughter, கோடு – tusks, முற்று – mature (big), யானை காடுடன் நிறைதர – in the elephant-filled forest, நெய் பட்டன்ன – like rubbed with oil/ghee, நோன் – strong, காழ் எஃகின் – with a spear, bearing a spear, செல்வத் தந்தை – rich father, இடனுடை வரைப்பின் – in the large house, ஆடு – playing, பந்து உருட்டுநள் போல – as if she were rolling a ball, ஓடி – running, அம் சில் ஓதி இவள் – she with beautiful fine hair, உறும் பஞ்சி மெல் அடி நடை பயிற்றும்மே – she walks on her delicate feet that are very much like cotton (உறும் – மிக்க, பயிற்றும்மே – செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது)

நற்றிணை 325, மதுரைக் காருலவியங்கூத்தனார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கவிதலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை
இரை தேர் வேட்கையின் இரவில் போகி,
நீடு செயல் சிதலைத் தோடு புனைந்து எடுத்த
அர வாழ் புற்றம் ஒழிய, ஒய்யென
முரவாய் வள் உகிர் இடப்ப வாங்கும்,  5
ஊக்கு அருங்கவலை நீந்தி, மற்று இவள்
பூப்போல் உண்கண் புது நலம் சிதைய,
வீங்கு நீர் வாரக் கண்டும்,
தகுமோ பெரும? தவிர்க நும் செலவே.

Natrinai 325, Mathurai Kārulaviyan Koothanār, Pālai Thinai – What the heroine’s friend said to the hero
Lord!  Please avoid travel!

After seeing her flower-like,
kohl-rimmed eyes fill up with
tears as she cries, her fine
beauty ruined,
is it proper that you go on
difficult, forked paths where
a thick-haired male bear with
bent head, prowls for food at
night, and with his broken,
sharp claws digs into a termite
mound where snakes live, built
over a long time, destroying it
rapidly and sucking its contents
with his mouth?

Notes:  தோழி செலவு அழுங்குவித்தது.  முரவாய் வள் உகிர் (5) – ஒளவை துரைசாமி உரை – மடிந்த வாயும் கூர்மையும் உடைய நகங்களால் தோன்றி, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஒடிந்த வாயையுடைய பெரிய நகங்களாலே பறித்து.  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கரடி இரைதேடும் வேட்கையால் புற்று அகழ்ந்து உண்ணும் என்றது, தலைவியின் காமம் தலைவனைக் கூடும் விருப்பத்தின் மிகுதியால் இவள் உயிர் உண்ணும் என்பது உணர்த்தற்காம்.  Natrinai 125, 325, 336 and Akanānūru 8, 72, 81, 88, 112, 149, 247, 257 and 307 have references to bears attacking termite mounds.  

Meanings:  கவி தலை – bent head, எண்கின் – bear’s, பரூஉ மயிர் ஏற்றை – a thick haired male (பரூஉ – அளபெடை), இரை தேர் – searching for food, வேட்கையின் – with desire, இரவில் போகி – went at night, நீடு செயல் – created over a long time, சிதலைத் தோடு – termite swarms, புனைந்து எடுத்த – created and lifted, அர வாழ் புற்றம் – termite mound where snakes live (புற்றம் – அம் சாரியை), ஒழிய – ruining, ஒய்யென – rapidly (விரைவுக்குறிப்பு), முரவாய் – curved ends, broken ends, bent ends, strong ends, வள் உகிர் – strong claws, thick claws, இடப்ப வாங்கும் – it breaks and eats the termite combs, it digs in and eats the termite mounds, ஊக்கு அருங்கவலை – harsh forked paths that are difficult even to those with enthusiasm, harsh forked paths that are difficult even to think about, நீந்தி – passing, மற்று இவள் – and her, பூப்போல் – flower-like, உண்கண் – kohl-rimmed eyes, புது நலம் சிதைய – beauty ruined, வீங்கு நீர் – overflowing tears, abundant tears, வாரக் கண்டும் – even on seeing them drip tears, தகுமோ – is it fitting, is it proper (ஓகாரம் எதிர்மறை), பெரும – oh lord, தவிர்க நும் செலவே – please avoid your travel (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 326, மதுரை மருதன் இளநாகனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கொழுஞ்சுளைப் பலவின் பயங்கெழு கவாஅன்,
செழுங்கோள் வாங்கிய மாச் சினைக் கொக்கு இனம்
மீன் குடை நாற்றம் தாங்கல் செல்லாது
துய்த்தலை மந்தி தும்மும் நாட!
நினக்கும் உரைத்தல் நாணுவல், இவட்கே 5
நுண் கொடிப் பீரத்து ஊழ் உறு பூ எனப்
பசலை ஊரும் அன்னோ; பல் நாள்
அறி அமர் வனப்பின் எம் கானம் நண்ண,
வண்டு எனும் உணராவாகி,
மலர் என மரீஇ வரூஉம் இவள் கண்ணே.  10

Natrinai 326, Mathurai Maruthan Ilanākanār, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
Oh man from the country
where mature clusters of jackfruits
with luscious segments hang on the
curved, big branches of trees in the
mountain ranges that yield great
benefits, and stork flocks resting
there tear and eat fish, and a female
monkey with fuzzy hair on her head
sneezes, unable to bear the stench!

I am embarrassed to tell you about
the pallor spreading on her eyes,
……….the color of dried flowers
……….of the delicate peerkkai vine,
on which bees that come daily to our
lovely forest swarm, thinking they
are flowers.

Notes:  களவு ஒழுக்கத்தின்கண் வந்து ஒழுகும் தலைவனிடம் வரைவு கடாயது.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – பலாமரத்தின் கிளையிலிருந்து கொக்கு மீனைத் தின்னுதலால் உண்டான நாற்றத்தால் மந்தி தும்மும் என்றது, தினைப்புனத்தே தலைவன் தலைவியோடு இன்பந் துய்த்ததையும், அதனால் அலர் பரந்ததையும், சினந்ததையும் உணர்த்திற்று.

Meanings:  கொழுஞ்சுளைப் பலவின் – with jackfruit trees with fruits with luscious segments, Artocarpus heterophyllus, பயம் கெழு கவாஅன் – benefit yielding adjoining mountains (கவாஅன் – அளபெடை), செழுங்கோள் – mature clusters, full clusters, வாங்கிய – curved, மாச் சினை – big branches, கொக்கு இனம் – stork flocks, crane flocks, மீன் – fish, குடை – digging, நாற்றம் தாங்கல் செல்லாது – unable to tolerate the stinking odor, துய்த்தலை மந்தி தும்மும் – a female monkey with fuzzy head hair coughs, நாட – oh man from such country, நினக்கும் உரைத்தல் நாணுவல் – I am embarrassed to tell you (நாணுவல் – தன்மை ஒருமை வினைமுற்று, first person singular verb ending), இவட்கே – for her,  நுண் கொடிப் பீரத்து – of ridge gourds with delicate vines, Luffa acutangula, ஊழ் உறு பூ என – like old flowers that had dried out (உறு – உற்ற, அடைந்த), பசலை ஊரும் – pallor spreads, அன்னோ – alas,  பல் நாள் – many days, அறி அமர் வனப்பின் – with known beauty, எம் கானம் – our forest, நண்ண – reaching, வண்டு – bees, எனும் உணராவாகி – not knowing, மலர் என மரீஇ வரூஉம் – they come and swarm them thinking they are flowers (மரீஇ – அளபெடை, வரூஉம் – அளபெடை), இவள் கண்ணே – her eyes (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 327, அம்மூவனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின்,
பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்ச்
சாதலும் இனிதே, காதல் அம் தோழி,
அந்நிலை அல்ல ஆயினும், ‘சான்றோர்
கடன் நிலை குன்றலும் இலர்’ என்று உடன் அமர்ந்து,  5
உலகம் கூறுவது உண்டு என, நிலைஇய
தாயம் ஆகலும் உரித்தே, போது அவிழ்
புன்னை ஓங்கிய கானல்
தண்ணந்துறைவன் சாயல் மார்பே.

Natrinai 327, Ammoovanār, Neythal Thinai – What the heroine said to her friend
Oh beloved friend!
If trusting the man who
cares for us is to be blamed,
then it is better to die
with sleepless, crying eyes.

Even if that is not natural,
those who are wise will not
swerve from responsibilities,
in the opinion of those on earth.

It would be nice to have the right
of ownership of the gentle chest
of the lord of the cool shores
where tall punnai trees flourish
in the groves with blossoming buds.

Notes:  தலைவன் வரையாது நெடுங்காலம் வந்தொழுகினான்.  அது கண்டு ஆற்றுக என்றுரைத்த தோழியிடம் தலைவி கூறியது.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – புன்னை போது அவிழ்கின்றது என்றது, தம்மை நயன்தாரைக் கைவிடும் தலைவனது கடற்கரையில் புன்னை போது அவிழ்வது எங்ஙனம் என வியந்தது என உணர்த்திற்று.  சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல் 29).  நாடல் சான்றோர் (1) – ஒளவை துரைசாமி உரை – ஆராய்ந்து மனதாற் கொள்ளப்பட்டவர், பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – விரும்பி வந்து முயங்கும் சான்றோராகிய தலைவர், H.வேங்கடராமன் உரை – தேடி வந்து களவில் முயங்கும் சான்றோனாகிய தலைவன்.  சாதலும் (3) –  ஒளவை துரைசாமி உரை – சாதல் இன்னாதாகலின் உம்மை எதிர்மறை.

Meanings:  நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின் – if trusting the one who cares is to be blamed, பாடு இல கலுழும் கண்ணொடு – with sleepless crying eyes (இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்), சாஅய்ச் சாதலும் இனிதே – it is sweeter to suffer and die (சாஅய் – அளபெடை, இனிதே –  ஏ அசைநிலை, an expletive), காதல் அம் தோழி – my loving beautiful friend, அந்நிலை அல்ல ஆயினும் – even if that situation is not natural, சான்றோர் கடன் நிலை குன்றலும் இலர் என்று – that those who are wise will not shrink from situations with responsibilities, உடன் அமர்ந்து உலகம் கூறுவது உண்டு என நிலைஇய – is the opinion that the people on earth say (உலகம் – ஆகுபெயர் உலகில் வாழும் மக்களுக்கு, நிலைஇய – அளபெடை), தாயம் ஆகலும் உரித்தே – to have the right by marriage is fitting (ஏ – அசைநிலை, an expletive), போது அவிழ் – buds opened, புன்னை ஓங்கிய – punnai trees flourishing, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, கானல் – seashore grove, தண்ணந்துறைவன் – the lord of the cool shores (தண்டுறைவன் என்பது தண்ணந்துறைவன் ஆவது, அம் – சாரியை, விரிக்கும் வழி விரித்தல்), சாயல் மார்பே – to rest on his chest, his gentle chest (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 328, தொல்கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கிழங்கு கீழ் வீழ்ந்து, தேன் மேல் தூங்கிச்,
சிற்சில வித்திப் பற்பல விளைந்து
தினை கிளி கடியும் பெருங்கல் நாடன்
பிறப்பு ஓரன்மை அறிந்தனம் அதனால்,
அது இனி வாழி தோழி, ஒரு நாள்  5
சிறு பல் கருவித்து ஆகி வலன் ஏர்பு
பெரும் பெயல் தலைக புனனே இனியே
எண் பிழி நெய்யொடு வெண்கிழி வேண்டாது,
சாந்து தலைக்கொண்ட ஓங்கு பெருஞ்சாரல்
விலங்கு மலை அடுக்கத்தானும்,  10
கலம் பெறு விறலி ஆடும் இவ் ஊரே.

Natrinai 328, Tholkapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to her
He’s from the towering mountains
where yams are in the ground,
honeycombs hang from above, few
millet seeds become many plants,
and the parrots that come to attack
millet are chased.

We understand that he comes from
a lineage that is not like ours.  May his
great heritage flourish!

In our huge mountains with sandal trees,
female dancers who don’t desire sesame
oil dipped white fabric, receive jewels for
gifts instead.  May the clouds rise up with
strength, rain heavily with thunder and
lightning and drench our field! 

Notes:  தோழி வரைவிடை ஆற்றாளாகிய தலைவியை வற்புறுத்தியது.  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – (1) – கிழங்கு கீழவீழ்ந்து தேன் மேல்தூங்கி என்றது, அவன் நம்பால் வைத்த கீழாக வேரூன்றி இறங்கி, மேலே காணும்போதெல்லாம் தேனினும் இனிமை செய்கின்றது என்பது.  (2) – சிற்சில வித்தி பற்பல விளைந்தென்றது, ஓரோ ஒருகால் இயற்கைப் புணர்ச்சியிலே நீ இன்பம் நல்க அதனைப் பெற்றான் ஆதலின், அதற்கீடாகப் பல்லாயிரம் நன்மையை நினக்கு அளிக்க நாடியிருப்பவன் என்பது.  (3) – கிளி கடியமென்றது, அவ்வன்பு கெடாதபடி பாதுகாக்குமென்பது.   (4) – எண்ணெய் கிழி வேண்டாது விறலி ஆடுமென்றது, அவன் பெருந்தகைமை நோக்கவே, அருங்கலம் முதலாயின வேண்டாது நம் சுற்றத்தார் நின்னைக் கொடுக்க உடன்படுவர் என்பது.  வலன் ஏர்பு – அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1.  This is the only poem with a reference to fabric dipped in sesame oil.  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58).  பிறப்பு ஓரன்மை (4) – ஒளவை துரைசாமி உரை – பிறப்பால் ஏனை மக்களோடு ஒப்பானாயினும் வாய்மை ஒழுக்கத்தால் ஒப்பற்றவன், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – உயர்பிறப்பினன் ஆதலின் நம்மோடு ஒத்த தன்மையதன்று.

Meanings:  கிழங்கு கீழ் வீழ்ந்து – yams/tubers go down into the ground, தேன் மேல் தூங்கி – honeycombs hang from above, சிற்சில வித்தி – planted few seeds, பற்பல விளைந்து – and obtained many, தினை – millet plants, கிளி கடியும் – parrots are chased, பெருங்கல் நாடன் – man from the big mountains, பிறப்பு – heritage, birth, ஓரன்மை  – not equal, without equal (ஓர் அன்மை – ஒப்பு அன்மை, ஒரே தன்மை அல்லாமை), அறிந்தனம் – we have understood, அதனால் – so, அது இனி வாழி தோழி – may his great heritage flourish oh friend, ஒரு நாள் – one day, சிறு பல் – a few small, கருவித்து ஆகி – clouds with thunder and  lightning, வலன் ஏர்பு –  climb with strength, பெரும் பெயல் தலைக புனனே – may heavy rains fall in our field (ஏ – அசைநிலை, an expletive), இனியே – after this (ஏ – அசைநிலை, an expletive), எண் பிழி – sesame squeezed, நெய்யொடு – with oil, வெண்கிழி – piece of white cloth, வேண்டாது – not desiring, refusing, சாந்து தலைக்கொண்ட – filled with sandal trees, ஓங்கு பெருஞ்சாரல் – towering big mountain slopes, விலங்கு மலை – crossing mountains, blocking mountains, அடுக்கத்தானும் – in the mountain ranges, கலம் பெறு – getting jewels (as gifts), விறலி ஆடும் இவ் ஊரே – this town where viralis dance, in this town where female artists dance (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 329, மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
வரையா நயவினர் நிரையம் பேணார்
கொன்று ஆற்றுத் துறந்த மாக்களின் அடு பிணன்
இடு முடை மருங்கில், தொடும் இடம் பெறாஅது,
புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு
இறகு புடைத்து இற்ற பறைப் புன் தூவி  5
செங்கணைச் செறித்த வன்கண் ஆடவர்
ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும்,
அத்தம் இறந்தனர் ஆயினும், நத் துறந்து
அல்கலர் வாழி தோழி, உதுக்காண்,
இரு விசும்பு அதிர மின்னி,  10
கருவி மா மழை கடல் முகந்தனவே.

Natrinai 329, Mathurai Marutham Kizhār Makanār Sokuthanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
May you live long, oh friend!
Look there!
Huge masses of clouds
have drawn water from the ocean,
and are roaring thunder along
with lightning in the dark skies.

He of limitless kindness will not
seek hellish traits.
He will not stay there, even though
he went on the wasteland path,
where cruel men fasten on their
red arrows the soft feathers that fall
off an old spotted vulture that had
recently laid eggs,
when it flaps its wings in anger,
unable to get a spot in the place
with stink, to eat the flesh from the
corpses of murdered people.

Notes:  பிரிவிடை மெலிந்த தலைவியைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – (1) பருந்துகள் பிணத்தின் ஊனைத் தின்ன மாட்டாமல் விலகி இருக்கும் என்றது, தலைவியின் நெற்றியில் உள்ள பசலை அவர் வரும் நாளில் தானே அகலும் என்பது.  (2) – மறவர் தம் கணையுடன் அதர் பார்த்திருப்பர் என்றது, ஊர்ப்பெண்டிர் அலர் தூற்ற அற்றம் பார்த்திருப்பர் என்பது குறித்தவாறு.  கருவி மா மழை (11) – இடி மின்னல் முதலாய தொகுதிகளையுடைய கரிய மேகங்கள்.  புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு (4) –  பொ. வே. சோமசுந்தரனார் உரை, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை, H.வேங்கடராமன் உரை – ஈன்ற அணிமையால் நெருங்காது வெறுத்துக் கடந்து போன புள்ளிகளையுடைய முதிய பருந்து.  N. Kandasamy has interpreted these words as “a spotted old vulture crowded by a flock of new-born vultures.”  Dr. V. S. Rajam interprets the words as “an old vulture with marks from the stampede of young ones”.  மலைபடுகடாம் 49 – புனிறு இல் காட்சி, பொவே. சோமசுந்தரனார் உரை – ‘புனிறு இல் காட்சி’ என்றது இளங்குழந்தைகளையுடையார் யார் ஒருவரேனும் வந்தில்லாத கூட்டம் என்றவாறு.  புனிறு – புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே (தொல்காப்பியம் உரியியல் 79).  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58).

Meanings:  வரையா – limitless, நயவினர் – he is kind, நிரையம் பேணார் – he does not respect hellish traits, he will not seek hellish traits, கொன்று – killed, ஆற்றுத் துறந்த – abandoned on the path, மாக்களின் – of people, அடு – killed, பிணன் – corpses, இடு – placed, முடை மருங்கில் – in a place where there is flesh stench, தொடும் இடம் பெறாஅது – unable to get a spot to dig and eat (பெறாஅது – அளபெடை), புனிற்று – new eggs, young chicks,  நிரை – row, கதித்த – with anger, with hatred, பொறிய – with marks, with spots, முது பாறு – an old vulture, பிணம் தின்னும் கழுகு, Indian vulture, Gyps indicus, இறகு புடைத்து – flapped its wings, இற்ற – dropped, பறை – flying, புன் தூவி – soft feathers, dull feathers, செங்கணைச் செறித்த – fastened on their fierce arrows, decorated their red arrows, வன்கண் ஆடவர் – fierce men, ஆடு கொள் நெஞ்சமோடு – with a heart waiting to win, அதர் பார்த்து – looks at the path, அல்கும் – stays there, அத்தம் இறந்தனர் ஆயினும் – even if he went through the path, நத் துறந்து – abandoning us, அல்கலர் – he will not stay away, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – oh friend, உதுக்காண் – look there (உது – இடைச்சுட்டு), இரு விசும்பு அதிர – dark sky roars, மின்னி – lightning, கருவி மா மழை – dark clouds with lightning and thunder, கடல் முகந்தனவே – they have drawn from the ocean since rainy season is approaching (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 330, ஆலங்குடி வங்கனார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
தட மருப்பு எருமைப் பிணர்ச் சுவல் இரும் போத்து
மட நடை நாரைப் பல் இனம் இரிய,
நெடு நீர்த் தண் கயம் துடுமெனப் பாய்ந்து,
நாள் தொழில் வருத்தம் வீட சேண் சினை
இருள் புனை மருதின் இன் நிழல் வதியும்  5
யாணர் ஊர! நின் மாண் இழை மகளிரை
எம் மனைத் தந்து நீ தழீஇயினும், அவர் தம்
புன் மனத்து உண்மையோ அரிதே, அவரும்
பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து
நன்றி சான்ற கற்பொடு 10
எம் பாடு ஆதல், அதனினும் அரிதே.

Natrinai 330, Ālankudi Vankanār, Marutham Thinai – What the heroine’s friend said to the hero
Oh man from the rich town
where a male buffalo with huge
horns and a rough nape
jumps into a huge, cool water pond
with a big splash after a tiring day of
labor,
……….causing many flocks of storks with
……….delicate steps to fly away in fear,
and rests in the dark, sweet shade of
a punnai tree with tall branches!

Even if you bring to our house your
women with lovely jewels and embrace
them, it is difficult to know what is in their
lowly minds.  Also, it would be even more
difficult for them to be virtuous like us and
bring forth proud girls with bangles and boys.

Notes:  தோழி தலைவனுக்கு வாயில் மறுத்தது.  எம் பாடு ஆதல் (11) – ஒளவை துரைசாமி உரை – எம்போலும் குலமகளிர் எய்தும் பெருமையை உடையராதல், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – எம் பக்கத்து அமர்தல்.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – எருமைக்கடா நாரையினம் இரியப் பொய்கையில் பாய்ந்து வருத்தம் நீங்கிய பின் தொழுவம் புகாது மருத மர நிழலிலே தங்கும் என்றது, தலைவன் காமக்கிழத்தியரைத் துய்த்து, பின்னர் அவரை அஞ்சி அகலுமாறு வெறுத்துச் சேரிப் பரத்தையிடம் முயங்கிக் கிடந்து பின்னும் பாணன் கூட்டிய புதிய பரத்தையிடம் தங்கியிருந்தான் என்பதனை உள்ளுறுத்திற்று.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  புன் மனத்து உண்மையோ அரிதே (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – புல்லிய மனதில் கரவில்லாதபடி மெய்ம்மை தோன்றுவது அரிது, H.வேங்கடராமன் உரை – இழிந்த உள்ளத்தில் உள் அன்பைக் காண்பது என்பது அரிது, ஒளவை துரைசாமி உரை – புல்லிய மனத்தின்கண் உண்மையான அன்பு உளதாதல் அரிது.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25). 

Meanings:  தட மருப்பு – huge horns, curved horns, எருமை – buffalo, பிணர்ச் சுவல் – rough nape, rough neck, இரும் போத்து – large/dark male, மட நடை நாரை – storks with delicate walk, white stork – Ciconia ciconia or pelican or crane,  பல் இனம் – many flocks, இரிய – moved away, நெடு நீர்த் தண் கயம் – huge cool water pond, துடுமெனப் பாய்ந்து – jumped with a big sound, நாள் தொழில் – day’s job, வருத்தம் வீட – tiredness to go away, சேண் – long, tall, சினை – branches, இருள் புனை மருதின் – of marutham tree with darkness, Terminalia arjuna, இன் நிழல் வதியும் – it rests in the sweet shade, யாணர் ஊர – oh man from prosperous town (ஊர – அண்மை விளி), நின் மாண் இழை மகளிரை எம் மனைத் தந்து – your women with esteemed jewels who you bring to our house, நீ தழீஇயினும் – even though you embrace them (தழீஇயினும் – அளபெடை), அவர் தம் புன் மனத்து உண்மையோ அரிதே – it is difficult to know what is in their lowly minds, it is rare that they will have truth in their lowly minds (ஏ – அசைநிலை, an expletive), அவரும் – them, பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து –  to bring forth girls with new bangles and boys, நன்றி சான்ற – with gratitude, கற்பொடு – with virtue, எம் பாடு ஆதல் – to be proud like us, அதனினும் – more than that, அரிதே – it is rare (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 331, உலோச்சனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
உவர் விளை உப்பின் உழாஅ உழவர்
ஒழுகை உமணர் வருபதம் நோக்கிக்,
கானல் இட்ட காவற் குப்பை
புலவு மீன் உணங்கல் படுபுள் ஓப்பி,
மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி,  5
‘எந்தை திமில் இது, நுந்தை திமில்’ என
வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர்
திண் திமில் எண்ணும் தண் கடற் சேர்ப்ப!
இனிதே தெய்ய, எம் முனிவு இல் நல்லூர்;
இனி வரின் தவறும் இல்லை; எனையதூஉம்  10
பிறர் பிறர் அறிதல் யாவது
தமர் தமர் அறியாச் சேரியும் உடைத்தே.

Natrinai 331, Ulōchanār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
Oh lord of the seashore where
those who produce salt await the
arrival of salt merchants who come
in their wagons, and delicate young
women who play with their friends
chase birds that come to seize their
dried fish and climb on the protected
salt piles and say,
“This is my father’s boat” and, “This is
your father’s boat,”
as they count the sturdy boats of their
relatives who went fishing in the ocean.

Our good town is without hatred.
If you come to our street, there will not
be any problem.
People don’t know each other, and even
relatives don’t know each other!

Notes:  தோழி இரவுக்குறிக்கு உடன்பட்டது.  உழாஅ உழவர் (1) – ஒளவை துரைசாமி உரை – பொருள் விளைவிக்கும் தொழிலுக்கெல்லாம் உழவு பொதுவாகலின், உப்பு விளைவிப்போரையும் உழவர் என்பர்.  ஆயினும் ஏரால் நிலத்தை உழுவோரின் வேறுபடுத்தற்கு ‘உழாஅ உழவர்’ என்றார்.  சேரி (12) – ஒளவை துரைசாமி உரை – ஊரைச் சேர இருக்கும் குடியிருப்புச் சேரி எனப்படும்.  குறுந்தொகை 231 – உ. வே. சாமிநாதையர் உரை – தெரு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தெரு.

Meanings:  உவர் – salty land, விளை – growing, உப்பின் – the salt, உழாஅ உழவர் – those who get salt without plowing, those who work in the salt pans (உழாஅ – அளபெடை), ஒழுகை – carts, உமணர் – salt merchants, வருபதம் நோக்கி – watching when they come, கானல் – seashore grove, இட்ட – placed, காவல் – protected , குப்பை – heap, புலவு மீன் உணங்கல் – dried stinking fish (உணங்கல் – வற்றல்), படுபுள் – birds that come to seize, ஓப்பி – chasing, மட நோக்கு ஆயமொடு – with friends with delicate looks, உடன் – together, ஊர்பு – move, ஏறி – climbing up, எந்தை திமில் இது – this is my father’s boat, நுந்தை திமில் – this is your father’s boat, என – thus, வளை நீர் – water surrounding the earth, the ocean, வேட்டம் – fishing, போகிய கிளைஞர் – the relatives who went, திண் திமில் – sturdy boats, எண்ணும் – counting, தண் – cool, கடற் சேர்ப்ப – oh lord of the seashore (சேர்ப்ப – அண்மை விளி), இனிதே – it is sweet (ஏ – அசைநிலை, an expletive), தெய்ய – அசைநிலை, an expletive, எம் – our, முனிவு இல் – without hatred, நல்லூர் – good town, the people in this good town (ஊர் – ஆகுபெயர் ஊர் மக்களுக்கு), இனி வரின் – if you come now, தவறும் இல்லை – it is not a problem, எனையதூஉம் – even a little bit (அளபெடை), பிறர் பிறர் அறிதல் யாவது – how will anybody know about one another, தமர் தமர் அறியா – our relatives do not know each other, சேரியும் உடைத்தே – it has streets, it has settlements (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 332, குன்றூர் கிழார் மகன் கண்ணத்தனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
இகுளைத் தோழி! இஃது என் எனப்படுமோ,
‘குவளை குறுநர் நீர் வேட்டாங்கு,
நாளும் நாள் உடன் கவவவும் தோளே
தொல் நிலை வழீஇய நின் தொடி’ எனப் பல் மாண்
உரைத்தல் ஆன்றிசின் நீயே, விடர் முகை  5
ஈன் பிணவு ஒடுக்கிய இருங்கேழ் வயப் புலி
இரை நசைஇப் பரிக்கும் மலை முதல் சிறு நெறி,
தலைநாள் அன்ன பேணலன் பல நாள்,
ஆர் இருள் வருதல் காண்பேற்கு,
யாங்கு ஆகும்மே, இலங்கு இழை செறிப்பே?  10

Natrinai 332, Kundrūr Kizhār Makan Kannathanār, Kurinji Thinai – What the heroine said to her friend
My beloved friend!   You have asked me
many times, “Like the people plucking
blue waterlily flowers pining for drinking
water, why do your arms suffer in pain,
causing your bangles to slip, even though
you embrace him every day?”

He comes in the pitch darkness of nights
through the small mountain path, where
a dark-colored male tiger hides in waiting
in the crevice of a cave, to kill and take food
to his hungry female who has just given birth.

He comes on many days like he came on
the first day of our union, not caring about his
own safety.  How can my bright jewels stay
tight after seeing him face such danger?

Notes:  பிரிவிடை மெலிந்த தலைவியைத் தோழி களவுக் காலத்து வற்புறுத்த, தலைவி கூறியது.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – பெண்புலியின் பசியைப் போக்க வேண்டி இரை தேடியவாறு ஆண்புலி பதுங்கியிருக்கும் என்றது, இத்தகைய வழியில் வந்து புலியின் இயல்பினை அறிந்தபோதும் தலைவியின் துயர் நீங்குமாறு மணம் முடிக்க கருதிலன் எனக் குறித்தது.  இகுளை (1) – ஒளவை துரைசாமி உரை – தோழி என்னும் பொருள்பட  வழங்கும் பெயர்த் திரிசொல், இகுளைத் தோழி (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இருபெயரொட்டு.  தலைநாள் அன்ன பேணலன் (8) – ச. வே. சுப்பிரமணியன் – இயற்கை இணைவுக் காலம் போன்ற அன்பினைக் கொள்ளாது வருகின்றான், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இயற்கைப் புணர்ச்சிக் காலத்து இருந்தாற்போல் விருப்ப மிகுதியுடையவனாய் வருகின்றான், ஒளவை துரைசாமி உரை – தன் உயிரையையும் பொருளெனக் கருதாமல் இரவுக் குறி வரைந்த அத் தலை நாளில் வந்தாற்போல்.  யாங்காகும்மே (10) – ஒளவை துரைசாமி உரை – ஏகாரம் எதிர்மறைப் பொருட்டு.  Natrinai 29, 148, 332, 383 and Akanānūru 112, 147 and 238 have descriptions of male tigers desiring to kill, to feed their mate that has recently given birth.  Akanānūru 3 has a description of a male vulture, Akanānūru 21 of a male wild dog and Akanānūru 85 of a male elephant desiring to feed their mates who have given birth recently.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).

Meanings:  இகுளைத் தோழி – oh my close friend (இருபெயரொட்டு), இஃது என் எனப்படுமோ – how will this be considered, குவளை குறுநர் நீர் வேட்டாங்கு – like the blue waterlily pluckers who desire water, நாளும் நாள் உடன் கவவவும் – even though you embrace him every day, தோளே – your arms, தொல் நிலை வழீஇய நின் தொடி என – your bangles slip down from their original position (வழீஇய – அளபெடை), பல் மாண் உரைத்தல் ஆன்றிசின் நீயே – you said it in many nice words (சின் – முன்னிலை அசை, an expletive of the second person), விடர் – crevices, முகை – caves, ஈன் பிணவு – female that has given birth, ஒடுக்கிய – hiding, இருங்கேழ் வயப் புலி – dark colored strong tiger, இரை நசைஇ – desiring food (நசைஇ – அளபெடை), பரிக்கும் – it is stalking, it is waiting, மலை முதல் சிறு நெறி – small path on the mountain, narrow path on the mountain, தலைநாள் அன்ன – like on the first day, பேணலன் – he does not care about his own safety, he comes with desire, பல நாள் ஆர் இருள் வருதல் – coming many days in pitch darkness, காண்பேற்கு – to me who sees that, யாங்கு ஆகும்மே இலங்கு இழை செறிப்பே – how can my bright jewels be tight (ஆகும்மே – ஆகுமே என்பதன் விரித்தல் விகாரம், செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது, செறிப்பே – அசைநிலை, an expletive)

நற்றிணை 333, கள்ளிக்குடிப் பூதம் புல்லனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
மழை தொழில் உலந்து மா விசும்பு உகந்தென,
கழை கவின் அழிந்த கல் அதர்ச் சிறு நெறிப்
பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின்,
பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும்
சுரன் இறந்து அரிய என்னார், உரன் அழிந்து  5
உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி
அரும் பொருட்கு அகன்ற காதலர் முயக்கு எதிர்ந்து
திருந்திழைப் பணைத்தோள் பெறுநர் போலும்;
நீங்குக மாதோ நின் அவலம், ஓங்கு மிசை,
உயர் புகழ் நல் இல் ஒண் சுவர்ப் பொருந்தி  10
நயவரு குரல பல்லி
நள்ளென் யாமத்து உள்ளுதொறும் படுமே.

Natrinai 333, Kallikudi Pootham Pullanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
With his heart filled with charity,
to earn precious wealth,
without thinking about the harshness,
your lover went on the wasteland path
which ruins strength,
where a tiger fights with an elephant
with a bright forehead and then drinks
water from a tiny spring near the
pebble-filled path,
clouds have risen up to the vast sky not
performing their raining duties, and
bamboos have dried and lost their beauty.

May your sorrow end!  It appears that
he will come and embrace bamboo-like arms
adorned with ornaments.

The lizard on the bright walls of our tall, fine
house of great fame, clucks, spelling good omen in
the middle of the night, whenever we think of him.

Notes:  பொருள்வயின் பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.  பூ நுதல் (4) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பொலிவுபெற்ற நெற்றி, ஒளவை துரைசாமி உரை – மெல்லிய நெற்றி.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – பள்ளத்து நீரை யானையுடன் புலி போர்செய்து உண்ணும் என்றது, அயல்நாட்டினரைப் போரில் வென்று தலைவன் பொருளீட்டி வருவான் என்பதைக் குறிப்பித்தது.  There are references to lizard omens in Akanānūru 9, 88, 151, 289, 351, 387, Kurunthokai 16, Natrinai 98, 169, 246, 333 and Kalithokai 11.  Natrinai 161 has a reference to bird omen.  Natrinai 40 and Mullaippāttu 11 have references to women waiting for good omen.

Meanings:  மழை தொழில் உலந்து மா விசும்பு உகந்தென – since the clouds left their job and rose up and reached the dark/wide skies, கழை கவின் அழிந்த – bamboos have lost their beauty, கல் அதர் – wasteland path with stones, சிறு நெறி – small path, narrow path, பரல் – pebbles, அவல் –  pits, ஊறல் – where water oozes, springs, சிறு நீர் – small springs, மருங்கின் – nearby, பூ நுதல் யானையொடு புலி பொருது – tiger fights with the elephant with a delicate/bright/beautiful forehead, உண்ணும் – drinks, சுரன் இறந்து – passed the wasteland (சுரன் – சுரம் என்பதன் போலி), அரிய என்னார் – he did not consider that it is difficult, உரன் அழிந்து – ruining strength, உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி – with a full heart desirous of being charitable to others, அரும் பொருட்கு அகன்ற காதலர் – your lover who went for precious wealth, முயக்கு எதிர்ந்து திருந்திழைப் பணைத்தோள் பெறுநர் போலும் – it appears that he will come and embrace your bamboo-like arms with perfect jewels, நீங்குக – may it end, மாதோ – மாது, ஓ – அசைநிலைகள், expletives, நின் அவலம் – your sorrow, ஓங்கு மிசை – on a tall place, உயர் புகழ் – high fame, நல் இல் – fine house, ஒண் சுவர்ப் பொருந்தி – staying on the bright walls, நயவரு குரல பல்லி –  lizard that clucks in a pleasing manner,  lizard with clucks that spell good omen, நள்ளென் யாமத்து – in the pitch darkness of night, உள்ளுதொறும் படுமே – it calls whenever we think of him (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 334, ஐயூர் முடவனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கரு விரல் மந்திச் செம் முகப் பெருங்கிளை
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி,
ஓங்கு கழை ஊசல் தூங்கி வேங்கை
வெற்பு அணி நறு வீ கல் சுனை உறைப்பக்,
கலையொடு திளைக்கும் வரையக நாடன்,  5
மாரி நின்ற ஆர் இருள் நடுநாள்
அருவி அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி,
மின்னு வசி விளக்கத்து வருமெனின்,
என்னோ தோழி நம் இன் உயிர் நிலையே?

Natrinai 334, Aiyūr Mudavanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her
If he comes in the pitch darkness of night
through the mountain slopes in the light
of sky-splitting lightning flashes, carrying
his single spear, the lord of the mountains,
……….where a female monkey with black
……….fingers, member of a big troop of
……….red-faced monkeys, plays in the
……….waterfalls and swings on tall bamboo
……….and enjoys with her male on vēngai
……….trees which drop their pretty,
……….fragrant flowers into the springs below
……….with rocks,
what will happen to our sweet lives, oh friend?

Notes:  களவுக் காலத்தில் தலைவன் இரவுக்குறி வேண்டித் தோழியை இரந்தான்.  அதற்கு இசைந்த தோழித் தலைவியிடம் கூறியது.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – மந்தி அருவியாடியும் ஊசலில் தொங்கியாடியும் நறுமலர் சுனையில் உதிருமாறு ஆண் குரங்குடன் புணரும் என்றது, தலைவியும் பகலிலே அருவியாடியும் ஊசலாடியும் மகிழ்ந்து இரவுக்குறியிலே காமவேட்கை தனியுமாறு தலைவனுடன் கூடுதல் இயலும் என்பது உணர்த்தும் உள்ளுறையாம்.  மின்னல் பிளத்தல்:  மின்னு வசிபு – அகநானூறு 162, 212, 322, நற்றிணை 228, 261, மலைபடுகடாம் 97, மின்னு வசி – நற்றிணை 334.

Meanings:  கரு விரல் மந்தி – a female monkey with black fingers, செம் முக – red faced, பெருங்கிளை – large troop, பெரு வரை அடுக்கத்து – on the slopes of the tall mountains, அருவி ஆடி – played in the waterfalls, ஓங்கு கழை ஊசல் தூங்கி – swayed on the tall bamboo, வேங்கை – kino trees,  Pterocarpus marsupium, வெற்பு – mountain, அணி நறு வீ – beautiful fragrant flowers, கல் சுனை உறைப்ப – falling into the spring with rocks, கலையொடு திளைக்கும் – enjoys with her male, வரை அக நாடன் – man from such mountains, மாரி நின்ற – rain arriving, ஆர் இருள் நடுநாள் – pitch dark midnight, அருவி அடுக்கத்து – on the mountain slopes with waterfalls, ஒரு வேல் ஏந்தி – carrying a spear, மின்னு வசி விளக்கத்து வருமெனின் – if he comes in the darkness-splitting brightness of lightning, என்னோ தோழி – what will happen my friend, நம் இன் உயிர் நிலையே – to the state of our sweet lives (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 335, வெள்ளிவீதியார், நெய்தற் திணை – தலைவி சொன்னது
திங்களும் திகழ் வான் ஏர்தரும், இமிழ் நீர்ப்
பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே,
ஒலி சிறந்து ஓதமும் பெயரும், மலி புனல்
பல் பூங்கானல் முள் இலைத் தாழை
சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ,  5
வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு,
மை இரும் பனை மிசைப் பைதல உயவும்
அன்றிலும் என்புற நரலும், அன்றி
விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ்
யாமம் உய்யாமை நின்றது,  10
காமம் பெரிதே, களைஞரோ இலரே.

Natrinai 335, Velliveethiyār, Neythal Thinai – What the heroine said
The moon rises in the bright sky,
and the swelling ocean’s waves
hit the shores relentlessly and loudly.

In the groves with many flowers, the
thāzhai trees bearing leaves with thorny
edges open their pointed buds that are
like palm-leaf ladles that pour rice, the
wind spreading their undying fragrance.

The ibis on top of a big, dark palmyra tree
cries in pain and distress without a pause
and it touches me to my bones.  A fine lute
is stroked all night without a break, making
it hard for me to survive!   The music is sad!
My desire is great, but my lover is not here!

Notes:  தலைவன் மீது காதல் வேட்கை மிகுந்ததால் துன்புற்ற தலைவி கூறியது.  ஒளவை துரைசாமி உரை – வார்தல், உறழ்தல், வடித்தல், உந்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை என்பன எட்டு வகைப்படும் இசைக் காரணம் என்பர்.  ஊட்டும் (6) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – வீசுகின்ற, ஒளவை துரைசாமி உரை – வந்து அளிக்கும்,  H.வேங்கடராமன் உரை – ஒலிக்கும்.  என்புற (8) – ஒளவை துரைசாமி உரை – என்பு (எலும்பு) உருகுமாறு, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – என் பக்கத்தில்.  கவர்வு – கவர்வு விருப்பு ஆகும் (தொல்காப்பியம் களவியல் 66).

Meanings:  திங்களும் திகழ் வான் ஏர்தரும் – the moon rises up in the bright sky, இமிழ் நீர் – roaring water, பொங்கு திரை – overflowing waves, abundant waves, புணரியும் – and the ocean, பாடு ஓவாதே – does not stop sounds (ஏ – அசைநிலை, an expletive), ஒலி சிறந்து – with loud noises, ஓதமும் – and the flooding waters, பெயரும் – they move, மலி புனல் – abundant waters, பல் பூங்கானல் – groves with many flowers, முள் இலைத் தாழை – thāzhai trees with thorny leaves, Pandanus odoratissimus, சோறு சொரி குடையின் – like rice pouring palm-leaf ladles (குடையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), கூம்பு முகை அவிழ – opening its closed buds, opened its pointed buds, வளி – wind, பரந்து – spreading, ஊட்டும் – it blows, it sounds, விளிவு இல் நாற்றமொடு – with undying fragrance, with fragrance that is not ruined, மை இரும் பனை – dark big palmyra palm trees, Borassus flabellifer, மிசை – above, பைதல – with sadness, உயவும் – in distress, அன்றிலும் – the ibis, red-naped – Pseudibis papillosa  or glossy ibis – Plegadis falcinellus, என்புற – near me or touching the bones, நரலும் அன்றி – without stopping the noise, விரல் கவர்ந்து – surrounded with fingers, stroked (the strings) with fingers, உழந்த – sadness, கவர்வின் – with desire, plucked, நல் யாழ் – fine lute, யாமம் உய்யாமை நின்றது – does not stop even at midnight making it impossible for me to survive (நின்றது – இசைக்கின்றது), காமம் பெரிதே – my love is great, my desire is great (ஏ – அசைநிலை, an expletive), களைஞரோ இலரே – the man who can remove it is not here (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 336, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பிணர்ச் சுவல் பன்றி தோல் முலைப் பிணவொடு
கணைக் கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின்,
கல் அதர் அரும் புழை அல்கி கானவன்
வில்லின் தந்த வெண்கோட்டு ஏற்றைப்,
புனை இருங்கதுப்பின் மனையோள் கெண்டிக்  5
குடி முறை பகுக்கும் நெடு மலை நாட!
உரவுச் சின வேழம் உறு புலி பார்க்கும்
இரவின் அஞ்சாய், அஞ்சுவல், அரவின்
ஈர் அளைப் புற்றம் கார் என முற்றி,
இரை தேர் எண்கு இனம் அகழும்  10
வரை சேர் சிறு நெறி வாராதீமே.

Natrinai 336, Kapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
Oh lord of the lofty mountains, where
a forest dweller’s wife with decorated,
dark hair, cuts and shares with their
community, meat of a white-tusked boar
with a rough nape that her husband
ambushed on a harsh rocky path and
killed with his bow,
when the boar stole a lot of millet grains
growing on thick-stemmed plants,
along with his female with shriveled breasts!

You are not afraid to come at night, when mighty,
enraged bull elephants eye tigers with enmity.
Please do not come on small paths where bears dig
into wet termite mounds with snakes, appearing
like the rainclouds that surround the mountains!

Notes:  இரவுக்குறி மறுத்து வரைவு கடாயது.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – தினையைக் கைம்மிகக் கவர்ந்தமை பற்றித் தன் வில்லாற் கொன்று கானவன் கொணர்ந்த பன்றியை மனையவள் குடிமுறை பகுக்கும் என்றது, நீ இவளை மணந்து கொண்டு செய்யும் மனைவாழ்வில், மிகை செய்த பகைவரை வென்று நீ கொணரும் பெரும்பொருளைச் சுற்றமும் துணையும் பெற்று இன்புறுமாறு இவள் பகுத்து அளித்துண்ணும் பண்பு மேம்படுபவள் என்பது.  Natrinai 125, 325, 336 and Akanānūru 8, 72, 81, 88, 112, 149, 247, 257 and 307 have references to bears attacking termite mounds.

Meanings:  பிணர்ச் சுவல் – rough nape, பன்றி – pig, தோல் முலைப் பிணவொடு – with its female with skinny breasts, கணைக் கால் – thick stems, ஏனல் – millet, கைம்மிகக் கவர்தலின் – since it took a lot, கல் அதர் – rocky path, அரும் புழை – harsh small path, அல்கி – stayed, கானவன் – forest dweller, வில்லின் தந்த வெண்கோட்டு ஏற்றை – white tusked male that he got with his bow, புனை இருங்கதுப்பின் – with decorated dark hair, மனையோள் – wife, கெண்டி குடி முறை பகுக்கும் – cuts and shares with the community/village (கெண்டி – வெட்டி), நெடு மலை நாட – oh lord of the lofty mountains, உரவுச் சின வேழம் – strong enraged elephants, உறு புலி பார்க்கும் – they eye tigers that come across (உறு – வருகின்ற), இரவின் அஞ்சாய் – you are not afraid to come at night, அஞ்சுவல் – I am afraid (தன்மையொருமை வினைமுற்று), அரவின் ஈர் அளை – snake’s wet hole, புற்றம் – termite mounds (புற்றம் – அம் சாரியை), கார் என முற்றி – surrounding it like rainclouds (that surround the mountains), இரை தேர் எண்கு இனம் – herds of bears searching for food, அகழும் – they dig, வரை சேர் – in the mountains, சிறு நெறி வாராதீமே – do not come on the small path, do not come on the narrow path (வாராதீமே – முன்னிலை எதிர்மறை முற்றுவினைத் திரிசொல்) fஉறு கால் 

நற்றிணை 337, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
உலகம் படைத்த காலை தலைவ,
மறந்தனர் கொல்லோ சிறந்திசினோரே,
முதிரா வேனில் எதிரிய அதிரல்
பராரைப் பாதிரிக் குறு மயிர் மா மலர்,
நறு மோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய  5
செப்பு இடந்தன்ன நாற்றம் தொக்கு உடன்,
அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம்பால்
தாழ் நறுங்கதுப்பில் பையென முள்கும்
அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது,
பிரிந்து உறை மரபின் பொருள் படைத்தோரே?  10

Natrinai 337, Chēramān Pālai Pādiya Perunkadunkō, Pālai Thinai – What the heroine’s friend said to the hero
Oh lord!  Since the creation
of the world, did great men
who acquired wealth forget
the tradition of receiving the
rare, precious benefits of sinking 
into the sapphire-colored, five-part
braids that hang low,
fragrant like a flower container
just opened, with athiral flowers
awaiting early summer and large
 pāthiri flowers with tiny, hair-like
filaments from thick-trunked trees,
placed together, with fragrant
mōrōdam flowers?

Notes:  பொருள்வயின் பிரிய எண்ணிய தலைவனிடம் கூறியது.  முதிரா வேனில் எதிரிய அதிரல் (3) – ஒளவை துரைசாமி உரை – இளவேனிற் பருவத்தில் மலரும் அதிரற்பூ, பொ. வே. சோமசுந்தரனார் உரை – முற்றாத இளவேனிற் காலத்தை எதிர்நோக்கிய காட்டு மல்லிகை மலர்.  ஐம்பால் (7) – ஒளவை துரைசாமி உரை – ஐந்து வகையாக முடித்துப் புனையப்படும் கூந்தல்.  ஐம்பாலாவான குழல், அளகம், கொண்டை, பனிச்சை, துஞ்சை என நச்சினார்க்கினியர் கூறுகின்றார்.  பையென முள்கும் (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கதுப்பில் முள்குவதாவது கதுப்பில் முகம் புதைத்து அதனை நுகர்ந்து மகிழ்தல்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  நீலமணிபோல் பெண்ணின் கூந்தல்:  அகநானூறு 8 – மணி ஏர் ஐம்பால், நற்றிணை 10 – மணியின் தாழ்ந்த நல் நெடுங்கூந்தல், நற்றிணை 133 – மணி ஏர் ஐம்பால், 214 – மணி இருங்கதுப்பு, 245 – மணி மருள் ஐம்பால், 337 – மணி மருள் ஐம்பால், 366 – மணி ஏர் ஐம்பால், 374 – வீழ் மா மணிய புனை நெடுங்கூந்தல், கலித்தொகை 22 – மணி ஒளி விட்டன்ன ஐவகை, கலித்தொகை 77 – மாசு அற மண்ணுற்ற மணி ஏசும் இருங்கூந்தல், பரிபாடல் 10, குறிஞ்சிப்பாட்டு 69 – பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம் பின்னிருங் கூந்தல், 112 – மணி நிறம் கொண்ட மா இருங் குஞ்சி.

Meanings:  உலகம் படைத்த காலை – at the time when the world was created, தலைவ – oh lord (அண்மை விளி), மறந்தனர் கொல்லோ – did they forget (கொல் – ஐயப்பொருட்டு, ஓ – அசைநிலை), சிறந்திசினோரே – the great people (இசின் – படர்க்கையின் கண் வரும், an expletive of the third person, ஏ – அசைநிலை, an expletive), முதிரா வேனில் – early summer season, எதிரிய அதிரல் – wild jasmine that blossomed, wild jasmine that awaited, பராரை – thick trunk (பரு அரை பராரை எனப் புணர்ந்தது), பாதிரிக் குறு மயிர் – trumpet flowers with short hair/filaments, மா மலர் – dark/large flowers, நறு மோரோடமொடு – with fragrant red catechu flowers, செங்கருங்காலி, உடன் எறிந்து அடைச்சிய – placed together, செப்பு இடந்தன்ன – like a box/container opened, நாற்றம் – fragrance, தொக்கு உடன் – together, அணி நிறம் கொண்ட – having beautiful color, மணி மருள் – sapphire-like, ஐம்பால் – five-part braids, தாழ் நறுங்கதுப்பில் – into low hanging fragrant hair, with low hanging hair, பையென – slowly, முள்கும் – sinking into, embracing, அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது – not getting the great benefits (அரும் பெறல் – பெறல் அரும் – பெறுவதற்கு அரிய), பிரிந்து உறை – separating and living, மரபின் – with the tradition, பொருள் படைத்தோரே – those who acquired wealth (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 338, மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரிசாத்தனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கடுங்கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றே;
அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து, அவர்
நெடுந்தேர் இன் ஒலி இரவும் தோன்றா;
இறப்ப எவ்வம் நலியும் நின் நிலை;
‘நிறுத்தல் வேண்டும்’ என்றி, நிலைப்ப  5
யாங்ஙனம் விடுமோ மற்றே, மால் கொள
வியல் இரும் பரப்பின் இரை எழுந்து அருந்துபு,
புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய
ஆடு அரைப் பெண்ணைத் தோடு மடல் ஏறிக்,
கொடுவாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய,  10
உயிர் செலக் கடைஇப் புணர் துணைப்
பயிர்தல் ஆனா, பைதல் அம் குருகே.

Natrinai 338, Mathurai Ārulaviyanattu Ālampēri Sāthanār, Neythal Thinai – What the heroine said to her friend
You tell me that I should stop
crying.  How can I do that and live,
when I am suffering beyond limits?

The harsh rays of the sun have
hid behind the mountains.
He has not appeared at night in
his tall chariot with sweet sounds,
its wheels cutting adumpu creepers.
This has caused me to suffer.

Also, in the common grounds
of the small, flesh-reeking village,
a male heron goes to eat food in the
vast, dark saline land, his female
with curved beak, who is seated in a
nest on the fronds of a tall, swaying
palmyra tree, calls her beautiful mate
to unite.   Sorrow spreads inside me!
It feels like my life is departing!

Notes:  ஆற்றுப்படுத்திய தோழியிடம் சொல்லியது.  மறைந்தன்று (1) – ஒளவை துரைசாமி உரை – குற்றுகரவீற்று அஃறிணை முற்றுவினை.  நின் நிலை நிறுத்தல் வேண்டும் என்றி (4-5) – ஒளவை துரைசாமி உரை – நினது அழுகையை நிறுத்த வேண்டும் என்று சொல்லுகின்றாய், H.வேங்கடராமன் உரை – நீ படும் துன்பத்தை அயலவர் அறியாதபடி மறைத்து ஒழுக வேண்டும் என்கின்றாய்.  நிலைப்ப யாங்ஙனம் விடுமோ (6) – ஒளவை துரைசாமி உரை – என் மனம் பொறையுற்று நிற்க யாங்ஙனம் விடும், H.வேங்கடராமன் உரை – என் உயிர் நிலைத்து நிற்ப இந்நோய் எப்படி என்னை விட்டு ஒழியுமோ.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – கடற்பரப்பில் இரை மேய்ந்துண்ட குருகு, பனையின் மடலேறிப் பேடை குடம்பை குடம்பை சேர்தற்பொருட்டுப் பயிர்தல் ஆனாதாகவும், கடமை மேற்கொண்டு சென்ற நம் காதலர் அதனை முடித்துக் கொண்டு போந்து நும்மை வரைந்து கோடலை நினையாராயினர் என்று துனியுறு கிளவியால் உள்ளுறுத்துரைத்தவாறு அறிக.

Meanings:  கடுங்கதிர் ஞாயிறு – the sun with harsh rays, மலை மறைந்தன்றே – it hid behind the mountains (ஏ – அசைநிலை, an expletive), அடும்பு கொடி துமிய – chopping adumpu creepers, Ipomoea pes caprae, ஆழி – wheels, போழ்ந்து – splitting, அவர் நெடுந்தேர் – his tall chariot, இன் ஒலி – sweet sounds, இரவும் தோன்றா – it did not appear at night, இறப்ப – going past limits, எவ்வம் நலியும் – it causes affliction, நின் நிலை நிறுத்தல் வேண்டும் என்றி – you tell me that I should hide my sorrow and stop worrying, you tell me that I should hide my suffering from others (என்றி – முன்னிலை ஒருமை), நிலைப்ப – for mind to be stable, for my life to last, யாங்ஙனம் விடுமோ – how will this affliction leave, how will this affliction allow me to live (ஓ – அசைநிலை), மற்றே – மற்று, ஏ – அசைநிலைகள், மால் கொள – causing confusion, வியல் இரும் பரப்பின் – in the wide huge spread land, இரை எழுந்து அருந்துபு – gets up to eat, புலவு நாறு சிறுகுடி – small village with flesh stink, மன்றத்து – in the common grounds, in the public grounds, ஓங்கிய – tall, ஆடு – swaying, அரைப் பெண்ணை – palmyra tree with trunk, Borassus flabellifer, தோடு மடல் ஏறி – climbing on the fronds, கொடுவாய்ப் பேடை – a female with curved beak, குடம்பைச் சேரிய – to come to the nest, உயிர் செலக் கடைஇ – my life is departing (கடைஇ – அளபெடை), புணர் துணைப் பயிர்தல் – calling its mate to unite, ஆனா பைதல் – with great sorrow, அம் குருகே – beautiful heron/egret/stork (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 339, சீத்தலைச் சாத்தனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
தோலாக் காதலர் துறந்து நம் அருளார்
அலர்வது அன்று கொல் இது என்று, நன்றும்
புலரா நெஞ்சமொடு புதுவ கூறி,
இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம்
அறிந்தனள் போலும் அன்னை, சிறந்த  5
சீர் கெழு வியல் நகர் வருவனள் முயங்கி,
‘நீர் அலைக் கலைஇய ஈர் இதழ்த் தொடையல்
ஒண்ணுதல் பெதும்பை நல் நலம் பெறீஇ,
மின் நேர் ஓதி இவளொடு நாளைப்
பல் மலர் கஞலிய வெறி கமழ் வேலித்  10
தெண் நீர் மணிச் சுனை ஆடின்,
என்னோ மகளிர் தம் பண்பு’ என்றோளே.

Natrinai 339, Seethalai Sāthanār, Kurinji Thinai – What the heroine’s friend said to the heroine, as the hero listened nearby
Your mother came to our rich, splendid,
huge house, embraced me and asked why
your garland is ruined and why you have
lost your brightness.  I told her that you  
played with me in the pond and that is the
reason.  Misunderstanding me, she said,
“What will happen to young women
who play with my daughter with a bright
forehead and lightning-like hair, in the
sapphire-hued springs surrounded by
plants with fragrant flowers?

It appears like she is aware that we are
both swimming in distress since your lover
who does not fail in battles in enemy lands,
has left us not showering his graces, and we
worry that gossip that might rise.

Notes:  வரைவு கடாயது.  புலரா (3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வாட்டமுற்ற, ஒளவை துரைசாமி உரை – அன்பு புலராத.  மின் நேர் ஓதி (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கூந்தலையுடைய மின்னலைப் போன்ற இவள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கூந்தலையுடைய மின்னலைப் போன்ற இவள்.  அகநானூறு 234 உரைகளில் – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மின்னலை ஒத்த கூந்தல், பொ. வே. சோமசுந்தரனார் உரை – மின்னல் போன்று மெலிந்த எம் காதலியின் கூந்தல்.  மின் நேர் மருங்குல் (அகநானூறு 126) என வருமிடத்து மின்னலை ஒத்த இடை என இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரையிலும், மின்னல் போன்ற இடை என பொ. வே. சோமசுந்தரனார் உரையிலும் காணப்படுகின்றது.

Meanings:  தோலாக் காதலர் – lover who does not fail, துறந்து – abandoning, நம் அருளார் – not gracious to us, அலர்வது அன்று கொல் இது – won’t gossip arise here (கொல் – ஐயம் என்ற பொருளில் வந்த இடைச்சொல், a particle which implies doubt), என்று – thus, நன்றும் – greatly, புலரா நெஞ்சமொடு – with a sad heart, புதுவ கூறி – she spoke new words, இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம் – flood of sorrow that we both swim in, அறிந்தனள் போலும் அன்னை – it appears that mother knew about it, சிறந்த சீர் கெழு வியல் நகர் – splendid fine rich huge house, வருவனள் முயங்கி – she came and embraced, நீர் அலைக் கலைஇய  ஈர் இதழ்த் தொடையல் – garlands with wet petals ruined by water (கலைஇய – அளபெடை), ஒண்ணுதல் – bright forehead, பெதும்பை – young woman, நல் நலம் பெறீஇ – obtained fine beauty (பெறீஇ – அளபெடை), மின் நேர் ஓதி – lightning-like hair, இவளொடு – with her, நாளை – following day, பல் மலர் – many flowers, கஞலிய – flourishing, dense, வெறி கமழ் வேலி – fragrance-filled fences, தெண் நீர் – clear water, மணி – sapphire colored, சுனை ஆடின் என்னோ மகளிர் தம் பண்பு என்றோளே – ‘what will happen to the nature of women who play in the springs’ she said (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 340, நக்கீரர், மருதத் திணை – தலைவி தலைவனிடம் சொன்னது
புல்லேன் மகிழ்ந, புலத்தலும் இல்லேன்,
கல்லா யானைக் கடுந்தேர்ச் செழியன்
படை மாண் பெருங்குளம் மடை நீர் விட்டெனக்,
கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை
அள்ளல் அம் கழனி உள் வாய் ஓடிப்,  5
பகடு சேறு உதைத்த புள்ளி வெண்புறத்துச்
செஞ்சால் உழவர் கோல் புடை மதரிப்,
பைங்கால் செறுவின் அணை முதல் பிறழும்
வாணன் சிறுகுடி அன்ன என்
கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே.  10

Natrinai 340, Nakkeerar, Marutham Thinai – What the heroine said to the hero
Lord, I will not embrace you nor will
I hate you.

You have caused these to become
loose,
my rounded, perfect, bright bangles,
beautiful like Sirukudi village of Vānan,
where king Chezhiyan owning fast chariots
and elephants dug a fine, huge pond,
and when the sluice gates are open,
thick-finned vālai fish escape, swim against
the water in the canals, and reach the fields
where mud is splattered on their
white skin by plowing buffaloes, and they
roll arrogantly in the muddy water when the
farmers with furrows beat them with sticks.

Notes:  பரத்தையிடம் சென்று மீண்டு வந்த தலைவனிடம் தலைவி நொந்து சொல்லியது.  வாயில் மறுத்தது.  ஒளவை துரைசாமி உரை – ‘அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என்ற நூற்பா உரையில் இப்பாட்டைக் காட்டி, ‘இஃது ஆற்றாமை வாயிலாகச் சென்றாற்குக் கூறியது’ என்பர் இளம்பூரணர்; நச்சினார்க்கினியரும் இதுவே கூறுவர்.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – குளத்தை உடைத்து சென்ற நீருடன் கால்வாய் வழியே சென்ற   வாளை வயலுக்கு ஓடி சேறு புறத்தே சிதற, உழவர்க்கும் அஞ்சாது வரம்பு அடியிலே சென்று தங்கும் என்றதால், மனையகத்தினின்று புறப்பட்ட தலைவன் பாணன் சென்ற வழியே சென்று பரத்தை ஒருத்தியிடம் புகுந்து, ஏனையோர் கூறிய பழி மொழியையும் கேட்டுக் கொண்டு அங்குத் தங்கினான் என்பதும், பரத்தையர் பலரும் விரும்பி அழைக்க அவரிடம் செல்லாது ஒருத்தி இல்லத்தே கிடந்து துயின்று வந்தனன் என்பதும் உள்ளுறுத்தி நின்றது.  வரலாறு:  செழியன், வாணன், சிறுகுடி.  கல்லா யானை (2) –  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பாகன் கூறு மொழிக் குறிப்பன்றிப் பிறவற்றைக் கற்றறியாத யானை.  படை மாண் பெருங்குளம் (3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் – செழியன் பெயராலே செய்த மாட்சிமைப்பட்ட பெரிய குளம்,  புலியூர் கேசிகன் உரை – செழியனின் படையினைப் போலப் பரப்பினாலே மாட்சி பெற்ற பெருங்குளம், செழியன் படைத்த மாண்போடு கூடிய பெருங்குளம்.  கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை  (4) – ஒளவை துரைசாமி உரை – கால்வழியாகச் சென்று நீரை எதிர்த்துப் போதரும், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – குளத்தினின்றும் புறம் போந்து கால்வாயை அடைந்து சென்று திரும்பிய.  The word Sirukudi is the name of a particular village indicated with the name of a leader in 6 poems – Akanānūru 54-14 (பண்ணன்), Akanānūru 117-18 (வாணன்), Akanānūru 204-12 (வாணன்), Akanānūru 269-22 (வாணன்), Natrinai 340-9 (வாணன்), Natrinai 367-6 (அருமன்).  Elsewhere, it means a small village or a small community.  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).

Meanings:  புல்லேன் மகிழ்ந – Lord! I will not embrace you, புலத்தலும் இல்லேன் – also I will not hate you, கல்லா யானை – elephants that are trained with limited skills, கடுந்தேர்ச் செழியன் – king Chezhiyan with fast chariots, Pāndiyan king, படை மாண் – dug up with esteem, பெருங்குளம் மடை நீர் விட்டென – since the water was let out through sluices from a big pond, கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை – scabbard fish with thick fins that swim against the water in the canals, Trichiurus haumela, அள்ளல் அம் கழனி உள் வாய் ஓடி – they swim through the mouth of the beautiful field with mud, பகடு சேறு உதைத்த – mud kicked by buffaloes, புள்ளி – spots, வெண்புறத்து – on the white backs, செஞ்சால் – fine furrows, red furrows, உழவர் கோல் – farmers’ sticks, புடை – strike, மதரி – becoming arrogant, பைங்கால் – fresh canal, green base of the fields, செறுவின் அணை முதல் பிறழும் – they roll in the muddy water at the base of the field boundary, they leap in the collected water at the base of the field boundary (அணை – வரம்பு), வாணன் சிறுகுடி அன்ன – like Sirukudi village of  Vānan, என் கோள் நேர் எல் வளை – my rounded fine bright bangles, நெகிழ்த்த நும்மே – you caused them to become loose (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 341, மதுரை மருதன் இளநாகனார், குறிஞ்சித் திணை – தலைவன் காதலர் இருவரைக் கண்ட வேளையில் சொன்னது
வங்க வரிப் பாறைச் சிறு பாடு முணையின்,
செம்பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும்
விளையாடு இன்னகை அழுங்கா பால் மடுத்து,
அலையா உலவை ஓச்சி சில கிளையாக்
குன்றக் குறவனொடு குறு நொடி பயிற்றும்,  5
துணை நன்கு உடையள் மடந்தை; யாமே
வெம்பகை அரு முனைத் தண் பெயல் பொழிந்தென,
நீர் இரங்கு அரை நாள் மயங்கி கூதிரொடு
வேறு புல வாடை அலைப்ப,
துணை இலேம், தமியேம், பாசறையேமே.  10

Natrinai 341, Mathurai Maruthan Ilanākanār, Kurinji Thinai – What the hero said when he saw a young couple
The young woman is with a mountain
dweller, drinking liquor poured from a
bowl with a spout, that is decorated with
red dots of vermillion,
after hating to play on the boulders with  
silver lines.  They play, laugh and talk,
swaying sticks.  She is in the company of
her lover.
I on the other hand, am alone in the harsh  
battlefield with rage, where loud, cold rains
fall in the confusing, chill night time, and
the northern wind blowing from another
country blows and causes me distress.

Notes:  வினைவயிற் பிரிந்து ஆற்றானாகிய தலைவன் சொல்லியது.  செம்பொறி – சிவந்த வரிகள், சிவந்த புள்ளியுமாம்.  முல்லையில் குறிஞ்சி.  பின்னத்தூர் . நாராயணசாமி ஐயர் உரை – குறவனொடு நொடி பயிற்றலும் பிறவுங் கணவனைப் பிரிந்தார்க்கு இன்மையின் ஈண்டுத் தன் காதலியைக் கூறியதல்லாமை தெளிக, பொ. வே. சோமசுந்தரனார் உரை – இச்செய்யுள் தெளிவின்றிக் கிடக்கின்றது.  இதன் உரையும் பொருந்திய உரையாகக் காணப்படவில்லை.  இதன்கண் மடந்தை என்றது பிறள் ஒருத்தியை என்று கோடல் சிறப்பாகத் தோன்றவில்லை.  ஒருவாறு மடந்தை (தலைவி) யேனும் இல்லத்தின்கண் குன்றகக் குறவனோடு நொடி பயிற்றும் துணையுடையவள், அதாவது நம் குன்றிற்கு உரிமையுடையோனாகிய நம் புதல்வனோடு நொடி பயிற்றும் துணை ஒன்றனையுடையவள் என்றவாறு என்க.  இச் செய்யுளின் உண்மையான பாடம் கிடைக்கவில்லை என்றே கொள்ளல் வேண்டும்.  அலையா – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை, H.வேங்கடராமன் உரை – சுழன்று, ஒளவை துரைசாமி உரை – துன்பம் செய்யாத.   முணைவு – முனைவு (முணைவு) முனிவு ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 88).  அலையா – அலைத்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  கிளையா – கிளைத்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  பால் (3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – சாராயத்திற்கு ஒரு பெயர்.  கள்ளை மரத்துப்பால் எனக் கூறும் வழக்குண்மையின் அறிக.

Meanings:  வங்க வரி – silvery lines, white lines, பாறை – rocks, சிறு பாடு – little difficulty, முணையின் – due to hating it, செம் பொறி – red lines, red dots, அரக்கின் – of vermilion, வட்டு – bowl, நா – spout of the bowl (which is there to help ease of pouring), வடிக்கும் – pouring, விளையாடு – playing, இன் நகை – sweet laughter, அழுங்கா – not removed, பால் மடுத்து – drinking milk, drinking liquor, அலையா – swirling, (அலையா – அலைத்து), not causing sorrow, உலவை ஓச்சி – lifts and plays with some twigs, சில கிளையா – utters few words (கிளையா – கிளைத்து, சொற்களைக் கூறி),  குன்றக் குறவனொடு – with a mountain dweller, with her son, குறு நொடி பயிற்றும் – they do small talk, they do light talk, துணை நன்கு உடையள் – she is in good company, மடந்தை – the young woman, யாமே – me (தன்மைப் பன்மை, first person plural, ஏ – அசைநிலை, an expletive), வெம்பகை – extreme enmity, அரு முனை – difficult battlefield, தண் பெயல் பொழிந்தென – since cool rains fell, நீர் இரங்கு – rain sounds, அரை நாள் – midnight, மயங்கி – confused, கூதிரொடு – with chillness, வேறு புல வாடை அலைப்ப – as the northern wind from another country blows and causes pain, துணை இலேம் – I am without my partner (தன்மைப் பன்மை, first person plural), தமியேம் – I am alone – (தன்மைப் பன்மை, first person plural) பாசறையேமே – I am in the battle camp (தன்மைப் பன்மை, first person plural, ஏ – அசைநிலை, an expletive)    

நற்றிணை 342, மோசிகீரனார், நெய்தற் திணை – தோழி சொன்னது
‘மா என மதித்து மடல் ஊர்ந்து, ஆங்கு
மதில் என மதித்து வெண்தேர் ஏறி,
என் வாய் நின் மொழி மாட்டேன் நின் வயின்
சேரி சேரா வருவோர்க்கு, என்றும்
அருளல் வேண்டும் அன்பு உடையோய்!’ என,  5
கண் இனிதாகக் கோட்டியும் தேரலள்;
யானே, எல் வளை, யாத்த கானல்
வண்டு உண் நறு வீ நுண்ணிதின் வரித்த
சென்னிச் சேவடி சேர்த்தின்,
என் எனப்படுமோ என்றலும் உண்டே.  10

Natrinai 342, Mosikeeranār, Neythal Thinai – What the heroine’s friend said
I said to my friend, “He is riding a
madal horse thinking of it as a real horse.  
He is coming past a mirage respecting it  
as a wall.  I told him to tell you what he 
wants and that I will not be able to do it.   
Shower your graces on this man who is    
coming to our street desiring you”. 
Even though I asked her tenderly with
sweet looks, slanting my head, my friend
wearing bright bangles did not understand
the situation.
I wonder what will happen if I fall at her 
red feet at the seashore grove surrounded
by fences, where swarming honey bees drop 
fragrant flowers that create delicate patterns
on the ground.  It is possible that she might 
ask me about him!

Notes:  தலைவனுக்கு குறை நேர்ந்த தோழி, ஆற்றாளாய்த் தனக்குள்ளே சொல்லியது.  என் வாய் நின் மொழி மாட்டேன் (3) – ஒளவை துரைசாமி உரை – என் வாயால் நீ கூறற்குரியவற்றை கூற வல்லேனல்லேன், ச.வே. சுப்பிரமணியன் உரை – உன் சொற்களை அவளிடம் கூறேன். நீ உன் குறையைத் தலைவியிடம் கூறுக.  சேரா – சேர என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  ‘Madal Ēruthal’ is the act of the hero climbing a palmyra frond or stem horse and having it dragged through town.  He does this when the heroine does not respond to his love.  He wears erukkam flower garlands or bone necklaces and subjects himself to street laughter.  This is his last-ditch effort to get the heroine.  மடல் ஏறுதல் –  சங்க இலக்கியத்தில் மொத்தம் 16 பாடல்களில் மடல் ஏறுதல் பற்றிய குறிப்புகள் உள்ளன – குறுந்தொகை 14, 17, 32, 173, 182, நற்றிணை 146, 152, 220, 342, 377, கலித்தொகை 58, 61, 138, 139, 140, 141.  கலித்தொகை 138, 139, 140, 141 பாடல்களில் மட்டுமே தலைவன் மடல் குதிரையின் மீது செல்கின்றான்.  கலித்தொகை 138, 141 ஆகிய பாடல்களில் மடல் ஏறியதால் தலைவியை அடைகின்றான்.  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).

Meanings:  மா என மதித்து – considering the madal horse as a real horse, மடல் ஊர்ந்து – riding the palm frond/stem horse, ஆங்கு –  there, மதில் என மதித்து – respecting the boundaries, considering the walls, வெண்தேர் – a mirage, ஏறி – rising, என் வாய் – my mouth, நின் மொழி – your words, மாட்டேன் – I will not, நின் வயின் – to you, for you, சேரி – street, settlement, community, சேரா வருவோர்க்கு – to the man who is coming here desiring union with you, என்றும் – always, அருளல் வேண்டும் – you should shower your graces, அன்பு உடையோய் – oh one with kindness, என – thus, கண் – eyes, இனிதாக – sweetly, கோட்டியும் – even after slanting my head, தேரலள் – she did not understand, யானே – me, எல் வளை – one wearing bright bangles (அன்மொழித்தொகை), யாத்த – bound by fences, surrounded by fences, கானல் – seashore grove, வண்டு – honey bees, உண் – drink, நறு வீ – fragrant flowers, நுண்ணிதின் – delicately, finely, வரித்த – created patterns, decorated, சென்னி – head, சேவடி – perfect feet, red feet, சேர்த்தின் – if I place on them, if I fall at them, என் எனப்படுமோ – how is it considered (ஓ – ஐயம், doubt), என்றலும் உண்டே – it is possible that she might ask (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 343, கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
முல்லை தாய கல் அதர்ச் சிறு நெறி
அடையாது இருந்த அம் குடிச் சீறூர்த்
தாது எரு மறுகின் ஆ புறம் தீண்டும்
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து,
உகு பலி அருந்திய தொகு விரல் காக்கை  5
புன்கண் அந்திக் கிளை வயின் செறியப்,
படையொடு வந்த பையுள் மாலை
இல்லை கொல், வாழி தோழி, நம் துறந்து
அரும் பொருட் கூட்டம் வேண்டிப்
பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டே?  10

Natrinai 343, Karuvūr Kathapillai Sāthanār, Pālai Thinai – What the heroine said to her friend
May you live long, my friend!
Mullai vines have spread on the
stony wasteland path that does
not reach the lovely small village
with cow dung dust on the streets,
aerial roots of a banyan tree where
god resides rubs the backs of nearby
cows, and crows with close toes eat
the food offerings that are left there,
and move away to be with their flocks
at the twilight hour.

Are there no such painful evenings in the
country where he went,
abandoning us to earn precious wealth?

Notes:  பிரிவிடை ஆற்றாளாயச் சொல்லியது.  இறைச்சி (1) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – ஆலமரத்தின் கீழ் இடும் பலியுணவைத் தின்ற காக்கை தம் இனத்துடன் தங்கும் என்றது, தலைவியின் நலனுண்ட பசலை நெற்றியிலே தங்கியது என்பதனைக் குறித்தது.  இறைச்சி (2) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – ஆலமரத்தின் விழுது பசுவின் முதுகை வருடும் என்றது தோழி அருகிருந்து ஆற்றுவதால் தான் உயிர் வாழ்ந்திருப்பதாய் குறிப்பித்தற்காம்.  தாது எரு மறுகின் (2) – ஒளவை துரைசாமி உரை – புழுதி நிறைந்த தெருக்களில், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மலரின் தாதுக்களே எருவாக உதிர்ந்த தெருவின்கண், ச. வே. சுப்பிரமணியன் உரை – மகரந்தத் தாதுக்கள் எருவாகக் கிடக்கும் தெருக்களில்.  தாது எரு – அகநானூறு 165 – தாது எரு மறுகின் மூதூர், குறுந்தொகை 46 – மன்றத்து எருவின் நுண் தாது, நற்றிணை – 271 பைந்தாது எருவின் வைகு, கலித்தொகை 103 – தாது எரு மன்றத்து, கலித்தொகை 108 – தாது உக்கன்ன தாது எரு மன்றத்து, புறநானூறு 33 – தாது எரு மறுகின், புறநானூறு 215 – தாது எரு மறுகின், புறநானூறு 311 – தாது எரு மறுகின், பதிற்றுப்பத்து 13-17 – தாது எரு மறுத்த கலி அழி மன்றத்து மலைபடுகடாம் 531 – தாது எருத் ததைந்த முற்றம்.  Natrinai 258, 281, 293, 343 and 367 have references to food offerings to crows.

Meanings:  முல்லை – jasmine vines, தாய – spread, கல் அதர் – stony path, சிறு நெறி – small path, narrow path, அடையாது இருந்த அம் குடிச் சீறூர் –  small town with beautiful settlements where it does not reach, தாது எரு மறுகின் – with streets with cow dung dust, with streets with pollen dust, streets with dust, ஆ புறம் தீண்டும் – cows rub their backs on them, நெடு வீழ் இட்ட – dropped long aerial roots, கடவுள் ஆலத்து – god in the banyan tree, உகு பலி அருந்திய – ate the offerings that were left, தொகு விரல் காக்கை – crows with toes that are close, புன்கண் அந்தி – painful twilight time, கிளை வயின் செறிய – reach the flocks, go to the flocks, படையொடு வந்த – came with weapons, பையுள் மாலை இல்லை கொல் – are there are no painful evenings, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – oh friend, நம் துறந்து – abandoning us, அரும் பொருட் கூட்டம் வேண்டி – desiring to collect precious wealth, பிரிந்து – separated, உறை காதலர் சென்ற நாட்டே – the country that he went to live (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 344 , மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்ட
மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல்
இரும் பிடித் தடக் கையின் தடைஇய பெரும் புனம்
காவல் கண்ணினம் ஆயின், ஆயிழை,
நம் நிலை இடை தெரிந்து உணரான், தன் மலை  5
ஆரம் நீவிய அணி கிளர் ஆகம்
சாரல் நீள் இடைச் சால வண்டு ஆர்ப்ப,
செல்வன் செல்லும் கொல் தானே, உயர்வரைப்
பெருங்கல் விடரகம் சிலம்ப இரும்புலி
களிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்துச்  10
செந்தினை உணங்கல் தொகுக்கும்,
இன் கல் யாணர்த் தம் உறைவின் ஊர்க்கே?

Natrinai 344, Mathurai Aruvai Vānikan Ilavēttanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
My friend with pretty jewels!

We are planning to guard the big field
in the beautiful mountains, with its
dark, tender millet, with sapphire-hued
sheaths, bent like trunks of dark, female
elephants.

Not understanding us, will he, the man
with a sandal-smeared, bright, handsome
chest on which bees swarm, go back to
his sweet town in the prosperous mountain,
where the roars of a tiger that killed an
elephant echo in the caves and crevices
of the soaring mountains, and mountain
dwellers heap their dried millet thinking
that the roars are those of heavy thunder
and that rainfall will arrive soon? 

Notes:  வரைவு கடாயது.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – யானையைப் புலி கொன்று முழங்கிய முழக்கத்தை இடி முழக்கமெனக் கருதிக் காய வைத்த தினையைத் தொகுப்பர் என்றது, தலைவனை வர இயலாதபடி ஊரினர் அலரெடுத்து மொழியவும், வேறுபட்ட தலைவியைக் கண்டா அன்னை கட்டு கழங்கு முதலியவற்றால் வேறுபட உணர்ந்து, தினைப்புனம் காக்கும் தலைவியை இல்வயிற் செறித்து வெறி அயர்வள் என்பதனை உள்ளுறுத்திற்று.  ஐது (1) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – மென்மை, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வியப்புடையது.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).  கடி – கடி என் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம் முன்தேற்று ஆயீர் ஐந்தும் மெய்ப்படத் தோன்றும் பொருட்டு ஆகும்மே (தொல்காப்பியம், உரியியல் 87).

Meanings:  அணி வரை மருங்கின் – in the beautiful mountains, ஐது வளர்ந்திட்ட – grown delicately, grown in an amazing manner, மணி ஏர் தோட்ட – with sapphire like (colored) sheaths (ஏர் – உவம உருபு, a comparison word), மை ஆர் ஏனல் – dark pretty millet, இரும் பிடித் தடக் கையின் – like the large trunks of black female elephants, தடைஇய – are bent, are thick (தட என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்ச வினை, அளபெடை), பெரும் புனம் காவல் கண்ணினம் – we are considering to guard the big field, ஆயின் – but, ஆயிழை – oh one with beautiful/chosen ornaments (அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), நம் நிலை இடை தெரிந்து உணரான் – he does not understand our situation, தன் மலை – his mountain, ஆரம் நீவிய – sandal paste rubbed, அணி – beautiful, கிளர் ஆகம் – bright chest, சாரல் நீள் இடை – through the long mountain paths, சால – greatly, வண்டு ஆர்ப்ப – as bees hum, செல்வன் செல்லும் கொல் – will he leave (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), தான், ஏ – அசைநிலைகள், expletives, உயர் வரைப் பெருங்கல் விடரகம் சிலம்ப – echoing in the lofty mountain caves, இரும்புலி களிறு தொலைத்து – big tiger that killed an elephant, உரறும் – roaring, கடி இடி – heavy thunder, மழை செத்து – thinking that it is the roars of clouds, thinking that rainfall is arriving, செந்தினை உணங்கல் தொகுக்கும் – mountain dwellers heap the fine/red drying millet, mountain dwellers collect the fine/red dried millet (உணங்கல் – உலர்ந்தது), இன் கல் – sweet mountain, யாணர் – prosperous , தம் உறைவின் ஊர்க்கே – to the town where he lives (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 345, நம்பி குட்டுவனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கானல் கண்டல் கழன்று உகு பைங்காய்
நீல் நிற இருங்கழி உட்பட வீழ்ந்தென,
உறு கால் தூக்க தூங்கி ஆம்பல்
சிறுவெண்காக்கை ஆவித்தன்ன
வெளிய விரியும் துறைவ! என்றும்  5
அளிய பெரிய கேண்மை நும் போல்,
சால்பு எதிர்கொண்ட செம்மையோரும்
தேறா நெஞ்சம் கையறுபு வாட,
நீடின்று விரும்பார் ஆயின்,
வாழ்தல் மற்று எவனோ? தேய்கமா தெளிவே!  10

Natrinai 345, Nampi Kuttuvanār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
Oh lord of the seashore where strong winds
blow, fresh unripe fruits of kandal trees loosen
and fall into the vast blue backwaters, and
swaying white waterlily flowers open like the
yawning mouths of small white seagulls!

If gracious people like you with deep
friendships do not desire for a long time,
and let fine people like you, who trusted, to
suffer helplessly with confusion in their hearts,
how is it possible for them to live their lives?
May your clarity fade away!  Let her suffer!

Notes:  பிரிவிடை ஆற்றாது வருந்திய தலைவியிடம் ‘விரைவில் மணம் புரிவேன்’ என்று தெரிவிக்கக் கருதினான்.  அப்பொழுது தோழி கடிந்து உரைத்தது.  ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பா உரையில், இப்பாட்டைக் காட்டி ‘இஃது ஆற்றாத தலைவியைக் கடிதின் வரைவேன் எனப்பிரு தலைவன் தெரிவிக்கப் புக்குழித் தோழி தெளிவிடை விலக்கியது’ என்பர் நச்சினார்க்கினியர்.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – உறுகால் தூக்கக் கண்டலின் கழன்று உகு காய்கள் கழிநீருள் வீழ்ந்தமையால் ஆம்பல் வெளிய விரியும் என்றது, தலைவன்  பிரிவு அலைத்தலால் தலைவி மேனி மெலிந்து வேறுபடுவது கண்டு ஏதிலாட்டியர் வாய் விரிந்து அலர் தூற்றுகின்றனர் என்பது.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – துறைவ நும் போல் என்றது பன்மை ஒருமை மயக்கம்.  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  கானல் – seashore grove, கண்டல் – kandal trees (கண்டல் – Rhizophora mucronate which is a mangrove tree or Pandanus odoratissimus according to the University of Madras Lexicon), கழன்று உகு பைங்காய் – fresh/green unripe fruits that get loose and fall down, நீல் நிற இருங்கழி உட்பட வீழ்ந்தென – since they fall into the blue colored vast/dark backwaters to go in and rest (நீல் – கடைக்குறை, poetical license which consists in the shortening of a word by elision of one or more letters in the end), உறு கால் தூக்க – as strong wind blows and moves (உறு – மிக்க), தூங்கி ஆம்பல் – white waterlilies sway, சிறுவெண்காக்கை ஆவித்தன்ன – like the yawning of small white gulls, Indian black-headed sea gulls, Larus ichthyactus, வெளிய – white, விரியும் – the flowers open, துறைவ – oh lord of the seashore (அண்மை விளி), என்றும் – forever, அளிய – gracious, பெரிய கேண்மை – great friendship, நும் போல் சால்பு – greatness like yours, எதிர்கொண்ட செம்மையோரும் – the fine people who accepted, தேறா நெஞ்சம் – heart with no clarity, heart that does not understand, கையறுபு வாட – wilt helplessly, நீடின்று – long time, விரும்பார் ஆயின் – if they do not desire that, வாழ்தல் – living, மற்று எவனோ –  how is it possible (ஓ – அசைநிலை, an expletive), தேய்கமா – let it fade away (மா- வியங்கோள் அசைச் சொல், an expletive signifying command), தெளிவே – let your clarity fade away (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 346, எயினந்தை மகன் இளங்கீரனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
குணகடல் முகந்து குடக்கு ஏர்பு இருளித்
தண் கார் தலைஇய நிலம் தணி காலை,
அரசு பகை நுவலும் அரு முனை இயவின்
அழிந்த வேலி அம் குடிச் சீறூர்
ஆள் இல் மன்றத்து, அல்கு வளி ஆட்டத்,  5
தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை,
இன்று நக்கனை மன் போலா என்றும்
நிறையுறு மதியின் இலங்கும் பொறையன்
பெருந்தண் கொல்லிச் சிறு பசுங்குளவிக்
கடி பதம் கமழும் கூந்தல்  10
மட மா அரிவை தட மென்தோளே.

Natrinai 346, Eyinanthai Makan Ilankeeranār, Pālai Thinai – What the hero said to his heart
Absorbing water from the eastern
sea and climbing to the west,
rain clouds become dark, and
come down, cooling the land.

We are here in this town’s
square, a place with great effort
and strength where strong winds
blow, abandoned due to war
between kings, with no people,
a ruined, beautiful small town
with fences. 

Today you are happy, thinking about
the curved, delicate arms of the dark
young woman with fragrant hair
adorned with fresh jasmine flowers from
Poraiyan’s huge, cool Kolli Mountain,
that shines like the full moon.

Notes:  பொருள்வயிற் பிரிந்த தலைவன் ஆற்றானாய்த் தன் நெஞ்சிடம் கூறியது.  There are references to Kolli Mountain goddess in Natrinai 185, 192, 201, 346 and 362.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம். உரியியல் 25), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம். உரியியல் 26).

Meanings:  குணகடல் முகந்து – absorbing from the eastern sea, குடக்கு ஏர்பு – climbing to the west, இருளி – becoming dark, தண் கார் தலைஇய நிலம் தணி காலை – when the cool rains fell on the land reducing heat (தலைஇய – அளபெடை), அரசு பகை – enmity of kings, நுவலும் – expressing enmity, spoken of, அரு முனை இயவின் – in the difficult battle field, அழிந்த வேலி அம் குடிச் சீறூர் – ruined beautiful small town with hedge/fences, ஆள் இல் மன்றத்து – in the common grounds without people, அல்கு வளி ஆட்ட – close winds blow, dense winds blow (அல்கு – செறிந்த, நெருங்கிய), தாள் வலி ஆகிய – with effort and strength, வன்கண் இருக்கை – difficult staying place, இன்று நக்கனை மன் போலா – it appears that you are happy today (மன் – அசைநிலை, an expletive), என்றும் – always, நிறையுறு மதியின் இலங்கும் – shining like the full moon (மதியின் – இன் உருபு ஒப்புப் பொருளது), flourishing like the perfect moon, பொறையன் பெருந்தண் கொல்லி – huge cool Kolli Mountain of Poraiyan (Chēran), சிறு பசுங்குளவிக் கடி பதம் கமழும் கூந்தல் – hair with the heavy fragrance of small fresh jasmine, Millingtonia hortensis, Wild jasmine, மட மா அரிவை – naive dark young woman (மா – கருமை, மாந்தளிர் மேனி), தட – large, curved, மென்தோளே – delicate arms, delicate shoulders (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 347, பெருங்குன்றூர் கிழார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
முழங்கு கடல் முகந்த கமஞ்சூல் மா மழை
மாதிர நனந்தலை புதையப் பாஅய்,
ஓங்கு வரை மிளிர ஆட்டி பாம்பு எறிபு,
வான் புகு தலைய குன்றம் முற்றி,
அழிதுளி தலைஇய பொழுதில் புலையன்  5
பேழ்வாய்த் தண்ணுமை இடம் தொட்டன்ன,
அருவி இழிதரும் பெரு வரை நாடன்,
‘நீர் அன நிலையன், பேர் அன்பினன்’, எனப்
பல் மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி,
வேனில் தேரையின் அளிய,  10
காண விடுமோ தோழி, என் நலனே?

Natrinai 347, Perunkundrūr Kizhār, Kurinji Thinai – What the heroine said to her friend
My beauty is pitiable oh friend!
It is like toads that bury themselves
under the ground in summer.

Will it survive until I hear words
of praises like, “He’s sweet like water”
and “He’s a very kind man,” that are
said by supplicants who receive gifts
from the lord of the lofty mountains,
where waterfalls come down with roaring
sounds of wide-mouthed thanummai
drums beat by drummers, from rain and
thunder that attack snakes and break
mountains after clouds absorb water from
the loud ocean, grow full and dark, spread,
causing the wide land to be hidden on all
directions, rise to the sky and surround
the sky-touching, soaring mountain peaks?

Notes:  தலைவன் வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாகிய தலைவியைத் தோழி பொறுத்திரு என வற்புறுத்த, தலைவி நொந்து உரைத்தது.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – மலையிடத்து பெய்யும் மழையால் அருவி தண்ணுமை போல முழங்கிப் பெருகும் என்றது, தலைவன் வந்து சென்றவுடன் பறை முழங்கியது போல ஊரெங்கும் அலர் எழுந்தது எனக் குறித்தது.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – மாமழை மாதிரம் புதையப் பாஅய் என்றது தலைவன் சான்றோர் சூழ்தர எழுவதாகவும், பாம்பு எறிபு என்றது ஏதிலார் கூறும் அலர் சிதைப்பதாகவும், குன்றம் முற்றித் தலைஇய பொழுதில் என்றது மனையகம் போந்து வரைபொருள் தந்து மணம் பேசுங்காலையும், தண்ணுமை போல முழங்கி அருவி இழிதரும் என்றது தலைவனுடைய தலைமை நலம் பலர் அறிந்து பாராட்ட விளங்குவதாகவும் உள்ளுறை கொள்ளப்படும்.  வெள்ளிப்படைக் கூற்றில் காண விடுமோ தோழி என் நலனே என்று மறுத்தாள்.  புலையன் (5) – ஒளவை துரைசாமி உரை – புலைத் தொழில் செய்பவன்.  There is a convention that thunder ruins and kills snakes.  Puranānūru 17, 37, 58, 126, 211, 366, 369, Akanānūru 68, 92, 119, 182, 202, 274, 323, 328, Kalithokai 45, 113, Kurunthokai 158, 190, 268, 391 and Natrinai 37, 51, 114, 129, 238, 255, 264, 347 and 383 have similar descriptions of thunder ruining or killing snakes.  கமம் – கமம் நிறைந்தியலும் (தொல்காப்பியம். உரியியல் 57).  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).

Meanings:  முழங்கு கடல் முகந்த – took water from the roaring ocean, கமஞ்சூல் மா மழை – full huge clouds, pregnant dark clouds (கம என்னும் உரிச்சொல் நிறைவுப் பொருளில் வந்தது), மாதிர – in all directions, நனந்தலை – wide spaces, புதைய – to be hidden, பாஅய் – they spread, ஓங்கு வரை – lofty mountains, மிளிர ஆட்டி – attacking and causing the peaks to roll down, பாம்பு எறிபு –  attacking snakes, killing snakes, வான் புகு தலைய குன்றம் – mountains with sky-touching peaks, முற்றி – surrounding, அழிதுளி தலைஇய – with heavy rain (தலைஇய – அளபெடை), பொழுதில் – at that time, புலையன் பேழ்வாய்த் தண்ணுமை இடம் தொட்டன்ன – like the sounds from wide-mouthed thannummai drums hit by drummers, அருவி இழிதரும் – waterfalls flow down, பெரு வரை நாடன் – the lord of the lofty mountains, நீர் அன நிலையன் – he has the nature of water (அன – அன்ன என்பதன் இடைக்குறை, உவம உருபு, a comparison word), பேர் அன்பினன் – he is a very kind man, எனப் பல் மாண் கூறும் பரிசிலர் – those who get gifts utter many such words, நெடுமொழி – words of praise, வேனில் தேரையின் – like the toads in summer that hide under the ground due to the heat (தேரையின் – இன் உருபு ஒப்புப் பொருளது), அளிய – அளியது, it is pitiable, காண விடுமோ – will it allow me to see, தோழி – friend, என் நலனே – my beauty, my virtue (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 348, வெள்ளிவீதியார், நெய்தற் திணை – தலைவி சொன்னது
நிலவே நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பிப்,
பால் மலி கடலின் பரந்து பட்டன்றே;
ஊரே ஒலிவரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டிக்,
கலி கெழு மறுகின் விழவு அயரும்மே;
கானே பூ மலர் கஞலிய பொழில் அகம் தோறும் 5
தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே;
யானே புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு
கனை இருங்கங்குலும் கண்படை இலெனே;
அதனால் என்னொடு பொருங் கொல் இவ்வுலகம்?
உலகமொடு பொருங் கொல், என் அவலம் உறு நெஞ்சே?  10

Natrinai 348, Velliveethiyār, Neythal Thinai – What the heroine said
The moon spreads its many rays
in the blue sky which appears like
an ocean filled with milk.

People in this town are celebrating
festivals on the streets with uproars.

Bees hum with their loving partners
in forest gardens filled with flowers.
I alone am unable to sleep in this very
dark night.  I am full of grief and in deep
sorrow.  My lovely jewels fall off my body.

Will the world fight with me?  Will my
distressed heart fight with the world!

Notes:  தலைவிக்கு தலைவன்பால் வேட்கை பெருகிற்று.  அது தாங்க இயலாது, அவள் கூறியது.  நீல் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீலம் என்பது குறைந்து நின்றது.  குறுந்தொகை 6 – நனந்தலை உலகமும் துஞ்சும் ஓர் யான் மன்ற துஞ்சாதேனே.  சும்மை, கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).  உலகம், உலகமொடு (9, 10) – உலகம் – ஆகுபெயர் உலகில் வாழும் மக்களுக்கு.

Meanings:  நிலவே – the moon (ஏ – அசைநிலை, an expletive), நீல் நிற விசும்பில் – in the blue sky (நீல் – கடைக்குறை, poetical license which consists in the shortening of a word by elision of one or more letters in the end), பல் கதிர் பரப்பி – spreads its many rays, பால் மலி கடலின் பரந்து பட்டன்றே – it is spread and appears like the ocean filled with milk (கடலின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஏ – அசைநிலை, an expletive), ஊரே – the people in town (ஊர் – ஆகுபெயர், a word which implies a different meaning that is connected to the original meaning, ஏ – அசைநிலை, an expletive), ஒலிவரும் சும்மையொடு – they raise loud noises, மலிபு – abundantly, தொகுபு – together, ஈண்டி – approaching, கலி கெழு – with sounds, மறுகின் – in the streets, விழவு அயரும்மே – the town celebrates festivals (அயரும்மே – செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது), கானே பூ மலர் – flowers in the forest, கஞலிய – flourishing, dense, பொழில் அகம் தோறும் – in all the groves, தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே – bees hum with their beloved partners (இமிரும்மே – செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது), யானே – I (பிரிநிலை, exclusion), புனை இழை – fine jewels, ஞெகிழ்த்த – loosened (ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி), புலம்பு கொள் அவலமொடு – with lonely sorrow, கனை இருங்கங்குலும் – at night when it is very dark, கண்படை இலெனே – I am not able to sleep (ஏ – அசைநிலை, an expletive), அதனால் – so, என்னொடு பொரும் கொல் இவ் உலகம் – will those in this world fight with me, உலகமொடு பொரும் கொல் – will it fight with those in the world, என் அவலம் உறு நெஞ்சே – my heart that is distressed (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 349, மிளை கிழார் நல்வேட்டனார், நெய்தற் திணை – தலைவன் தனக்குள் சொன்னது, தோழி கேட்கும்படியாக
கடுந்தேர் ஏறியும், காலில் சென்றும்
கொடுங்கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும்,
கைதை தூக்கியும், நெய்தல் குற்றும்
புணர்ந்தாம் போல, உணர்ந்த நெஞ்சமொடு
வைகலும் இனையம் ஆகவும், செய் தார்ப்  5
பசும்பூண் வேந்தர் அழிந்த பாசறை
ஒளிறு வேல் அழுவத்துக் களிறு படப் பொருத
பெரும் புண் உறுநர்க்குப் பேஎய் போலப்,
பின்னிலை முனியா நம் வயின்,
என் என நினையும் கொல், பரதவர் மகளே?  10

Natrinai 349, Milai Kizhār Nalvettanār, Neythal Thinai – What the hero said to himself, as the heroine’s friend listened nearby
I came riding fast chariots and on
foot, plucked adumpu flowers
near the curved backwaters,
removed thāzhai blossoms, and
plucked waterlilies to give to her.
With a heart that feels that I have
united with her, I do this every day.

Like a ghoul that comes wearing
well-made garlands and gold
ornaments, to protect the wounded
soldiers in battle camps of ruined
kings, in battles where elephants
are ruined, in battle fields with
bright lances, I came here without
hatred.

What does she think about me,
the fisherman’s daughter?

Notes:  தன்னைத் தலைவி எவ்வாறு எண்ணுகிறாளோ என வருந்திச் சொல்லியது.  ஒளவை துரைசாமி உரை – மெய்தொட்டு பயிறல் (தொல்காப்பியம், களவியல் 11) என்ற நூற்பா உரையில் இப்பாட்டைக்காட்டித் ‘தோழி நம்வயிற் பரதவர் மகளை என்னென நினையும் கொல் என்றது’ என்பர் நச்சினார்க்கினியர்.  பேஎய் – ஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோன் பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும் (தொல்காப்பியம். பொருள் 79).  அழுவம் (7) – ஒளவை துரைசாமி உரை – பள்ளம்; ஈண்டு கடல் மேற்று.  ஆழம் அழுவம் என வந்தது.

Meanings:  கடுந்தேர் ஏறியும் – riding on fast chariots, காலில் சென்றும் – walking, going by foot, கொடுங்கழி – curved backwaters, மருங்கின் – nearby, அடும்பு மலர் கொய்தும் – plucked adumpu flowers, Ipomoea pes caprae, கைதை – thāzhai trees, Pandanus odoratissimus, தூக்கியும் – lifting (lifting her to pluck), swaying (to pluck), நெய்தல் குற்றும் – plucked waterlilies, புணர்ந்தாம் போல உணர்ந்த நெஞ்சமொடு – with my heart that felt like I united with her, வைகலும் – daily, இனையம் ஆகவும் – us become of this nature, செய் தார் – well-made garlands, பசும்பூண் வேந்தர் – kings with new gold ornaments, அழிந்த – ruined, பாசறை – battle camp, ஒளிறு வேல் அழுவத்து – in the ocean-like battle field with bright lances/spears, களிறு பட – elephants are ruined, பொருத – battling, பெரும் புண் உறுநர்க்கு – to those who have big wounds, பேஎய் போல – like a ghoul (பேஎய் – அளபெடை), பின்னிலை – standing behind, முனியா – without hatred, நம் வயின் – toward me, என் என நினையும் கொல் பரதவர் மகளே – I wonder what the fisherman’s daughter thinks about me (கொல் – ஐயம் என்ற பொருளில் வந்த இடைச்சொல், a particle which implies doubt, ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 350, பரணர், மருதத் திணை, தலைவி தலைவனிடம் சொன்னது
வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப்
பழனப் பல் புள் இரிய கழனி
வாங்கு சினை மருதத் தூங்கு துணர் உதிரும்
தேர் வண் விராஅன் இருப்பை அன்ன என்
தொல் கவின் தொலையினும் தொலைக சார  5
விடேஎன் விடுக்குவென் ஆயின் கடைஇக்
கவவுக் கை தாங்கும் மதுகைய குவவு முலை
சாடிய சாந்தினை வாடிய கோதையை
ஆகில் கலம் கழீஇ அற்று,
வாரல் வாழிய கவைஇ நின்றோளே.  10

Natrinai 350, Paranar, Marutham Thinai – What the heroine said to her husband
My beauty that I have kept
for so long, is as splendid
as Iruppai city ruled by
King Virān who gifts chariots,
where flocks of birds in the field,
frightened by thannumai drums
of men harvesting white paddy,
flee to the bent branches of
marutham trees
making them drop their flowers.

If it must be spoiled, I don’t care.
You have a wilted garland and sandal
smeared on your chest from the firm,
round breasts of another woman.
So, you are like a discarded clay pot.

Even if I refuse, your hands embrace
me.  Please leave me alone.  May the
woman who embraces you flourish!

Notes:  பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனிடம் கூறியது.  கவவு (7) – கவவு அகத்திடுமே (தொல்காப்பியம், சொல் 357).  உள்ளுறை (1) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – உழவரின் தண்ணுமைக்கு அஞ்சிப் பறவைகள் அகன்று மருத மரத்திற் செறியப் பூக்கள் உதிருமென்றது, தலைவியிடத்து அன்பின்றி பழப்பதற்கு அஞ்சித் தலைவன் அவளை நாடி வருவதாகத் தலைவி கருதுவதை உணர்த்திற்று.  உள்ளுறை (1) – ஒளவை துரைசாமி உரை – நெல் அரிவோர் எழுப்பும் தண்ணுமை முழக்கத்துக்கு அஞ்சிப் புள்ளினம் இரிதலால் மருதின் துணர் உதிரும் என்றதனால், நின் மார்பின் நலன் நுகரும் பரத்தையின் ஆரவாரம் கேட்டு ஏனை நின் பெண்டிர் அஞ்சி நீங்கினராக, அதனால் பிறந்த அலர் ஊர் எங்கும் பரவி விட்டது.  அதனை மறைத்து என்பால் வருதல் என்னை (எதற்காக) என உள்ளுறை கொள்ளப்படும்.  Akananuru 40 and 204 have references of thannumai drums used in the fields while harvesting.  Thannumai drums were beaten during cattle raids.  They were also beat by the forest bandits while attacking.

Meanings:  வெண்ணெல் அரிநர் – those who harvest white rice paddy, தண்ணுமை வெரீஇ – getting afraid of the drum sounds (வெரீஇ – அளபெடை), பழன – in the fields, பல் புள் இரிய கழனி – many birds feeding in the fields, வாங்கு சினை மருத – curved branches of the marutham trees, arjuna tree, தூங்கு துணர் உதிரும் – hanging clusters (flowers) drop, தேர் வண் – donating chariots, விராஅன் – Virān (விராஅன் – அளபெடை), இருப்பை அன்ன – like Iruppai city, என் தொல் கவின் தொலையினும் – even if I lose my prior beauty, தொலைக – let is get lost, சார – to get near me, விடேஎன் – I will not let,  என் விடுக்குவென் ஆயின் – if I allow, கடைஇ – leaping (கடவி, தாவி, செலுத்தி, அளபெடை), கவவுக் கை தாங்கும் – you are embracing me with your hands, மதுகைய – they are firm, குவவு – raised, rounded, முலை – breasts, சாடிய சாந்தினை – you are with rubbed sandal paste (முன்னிலை ஒருமை வினைமுற்று), வாடிய கோதையை – you are with a wilted garland (முன்னிலை ஒருமை வினைமுற்று), ஆகில் – so, கலம் கழீஇ அற்று – like a discarded pot (கழீஇ – அளபெடை), வாரல் – do not come (வாரல் – அல்லீற்று எதிர்மறை வியங்கோள் வினைமுற்று), வாழிய கவைஇ நின்றோளே – may the woman who embraces you live long (கவைஇ – அளபெடை, ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 351, மதுரைக் கண்ணத்தனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியின் தாயிடம் சொன்னது
‘இளமை தீர்ந்தனள் இவள்’ என வள மனை
அருங்கடிப்படுத்தனை; ஆயினும் சிறந்து இவள்
பசந்தனள் என்பது உணராய்; பல் நாள்
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி
வருந்தல் வாழி வேண்டு அன்னை! கருந்தாள்  5
வேங்கை அம் கவட்டிடைச் சாந்தில் செய்த
களிற்றுத் துப்பு அஞ்சாப் புலி அதள் இதணத்துச்,
சிறு தினை வியன் புனம் காப்பின்,
பெறுகுவள் மன்னோ என் தோழி, தன் நலனே.

Natrinai 351, Mathurai Kannathanār, Kurinji Thinai – What the heroine’s friend said to the heroine’s mother
Mother, may you live long!
Listen to me!
Not understanding why my friend
has become pale, you have been
praying to gods.  Please do not
worry!  You put her under strict
guard in your wealthy house,
since her youth has ended.

My friend will regain her beauty
if you send her to guard our wide
millet field with tiny millet,
where she sits on the hide of a tiger
that did not fear a strong strong male
elephant, on a tall platform, built with
sandalwood on a beautiful, forked
branch of a black-trunked vēngai tree.

Notes:  தலைவி இற்செறிக்கப்பட்டாள்.  அன்னை வெறியாட்டு நிகழ்த்த எண்ணினாள்.  அகநானூறு 48 – அன்னாய் வாழி வேண்டு அன்னை நின் மகள் பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு நனி பசந்தனள் என வினவுதி.  குறிஞ்சிப்பாட்டு 1-7 – அன்னாய் வாழி வேண்டு அன்னை ஒண்ணுதல் ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய் அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும் பரவியும் தொழுதும் விரவு மலர் தூயும் வேறு பல் உருவில் கடவுள் பேணி நறையும் விரையும் ஓச்சியும் அலவுற்று எய்யா மையலை நீயும் வருந்துதி.   இளமை (1) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – ஈண்டு ஆகுபெயராகப் பெதும்பைப் பருவத்தைக் குறித்தது.  அன்னை வருந்துதல்:  குறிஞ்சிப்பாட்டு 1-8 – அன்னாய் வாழி! வேண்டு அன்னை! ஒண்ணுதல் ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய் அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும், பரவியும் தொழுதும் விரவு மலர் தூயும், வேறு பல் உருவில் கடவுள் பேணி, நறையும் விரையும் ஓச்சியும் அலவுற்று, எய்யா மையலை நீயும் வருந்துதி.  அகநானூறு 156 – கள்ளும் கண்ணியும் கையுறையாக நிலைக் கோட்டு வெள்ளை நாள் செவிக் கிடாஅய் நிலைத் துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சித் தணி மருங்கு அறியாள் யாய் அழ மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே.  அகநானூறு 48 -அன்னாய் வாழி! வேண்டு அன்னை! நின் மகள் பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு நனி பசந்தனள் என வினவுதி!

Meanings:  இளமை தீர்ந்தனள் இவள் என – that her young age has ended, வள மனை அருங்கடிப்படுத்தனை – you have confined her to the wealthy house with strict guard, ஆயினும் – yet, சிறந்து இவள் பசந்தனள் என்பது உணராய் – you do not understand why she has turned pale (உணராய் – முற்றெச்சம்), பல் நாள் எவ்வ நெஞ்சமொடு – with many days of sad heart, தெய்வம் பேணி – you are praying to god, வருந்தல் – please do not be distressed (அல்லீற்று எதிர்மறை வியங்கோள்), வாழி – may you live long, வேண்டு அன்னை – listen to me oh mother, கருந்தாள் வேங்கை – kino tree with dark trunks, Pterocarpus marsupium, அம் – beautiful, கவட்டிடை – on the fork, சாந்தில் செய்த – made with sandalwood, களிற்றுத் துப்பு அஞ்சாப் புலி – a tiger without fear of the strength of male elephants, அதள் இதணத்து – from the tall platform with a tiger hide seat, on the tall platform with a tiger hide seat, சிறு தினை வியன் புனம் காப்பின் – if she goes to guard the wide millet field with tiny millet, பெறுகுவள் – she will obtain, மன்னோ – மன், ஓ அசைநிலைகள், expletives, என் தோழி – my friend, தன் நலனே – her beauty (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 352, மதுரைப் பள்ளிமருதங்கிழார் மகனார் சொகுத்தனார், பாலைத் திணை தலைவன் தலைவியப் பற்றிச் சொன்னது
இலை மாண் பகழிச் சிலை மாண் இரீஇய
அன்பு இல் ஆடவர் அலைத்தலின், பலருடன்
வம்பலர் தொலைந்த அஞ்சுவரு கவலை,
அழல் போல் செவிய சேவல் ஆட்டி,
நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி  5
பச்சூன் கொள்ளை மாந்தி, வெய்துற்று,
தேர் திகழ் வறும்புலம் துழைஇ நீர் நயந்து
பதுக்கை நீழல் ஒதுக்கு இடம் பெறாஅ
அருஞ்சுரக் கவலை வருதலின், வருந்திய
நமக்கும் அரிய ஆயின; அமைத் தோள்  10
மாண்புடைக் குறுமகள் நீங்கி
யாங்கு வந்தனள் கொல்? அளியள் தானே.

Natrinai 352, Mathurai Pallimaruthankizhār Makanar Sokuthanār, Pālai Thinai – What the hero said about the heroine who went with him to the wasteland
She is pitiable, the young woman with
arms like bamboo, who came to the
harsh wasteland with forked paths,
which is difficult and distressing even
for me,

where men without kindness, have killed
those who travel, with their fine arrows
with leaf-shaped tip that are released from
splendid bows,

and an old fox with anger chases a male
vulture with flame-like ears and plays
with its shadow, eats great amounts of fresh
flesh, becomes thirsty and searches for
water in the parched land with mirages,
gets tired and is unable to find shade in
the place with shallow stone and leaf burials.

Notes:  பொருள்வயிற் பிரிந்த தலைவன் சுரத்தில், காதலியின் உருவத்தைக் உள்ளத்தில் நினைத்து, மெய்யாகவே அவளைக் கண்டதாக எண்ணி, ஆற்றானாய்த் தனக்குள் சொல்லியது.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – ஆறலை கள்வர் கொன்றொழித்த பிணங்களைக் கழுகு உண்ணாதவாறு விரட்டி நரி உண்டு பின் நீர் பெறாது வருந்தும் சுரம் என்றது, தலைவியைப் பசலை உண்ணாதவாறு தலைவன் நுகர்ந்து, இல்லறம் செய்ய வேண்டும் பொருள் பெறாது வருந்துதலைக் குறித்தது.  The male vulture in this poem has red flaps which the poets describe as ears.  They are wattles.  It is the Indian black vulture – Sarcogyps calvus.

Meanings:  இலை மாண் பகழி – leaf-shaped fine arrow, சிலை – bow, bow made with the wood of silai tree, மாண் – fine, இரீஇய – fitted, placed (அளபெடை), அன்பு இல் ஆடவர் – men without kindness, அலைத்தலின் – since they ruined, பலருடன் – many, வம்பலர் தொலைந்த – those who were killed on the wasteland path, அஞ்சுவரு கவலை – fierce forked paths, அழல் போல் செவிய சேவல் – male vulture with flame-like ear flaps,  Sarcogyps calvus, Indian black vulture, Pondicherry vulture – has red fleshy flaps on both sides of the face that appear like ears,  ஆட்டி – chasing, நிழலொடு கதிக்கும் – playing with its shadow, நிணம் புரி முது நரி – an old fox that desires fatty meat, பச்சூன் கொள்ளை மாந்தி – eating too much of meat (பச்சூன் = பசுமை + ஊன்), வெய்துற்று – becoming dry (mouth), தேர் – mirage, திகழ் – bright, வறும்புலம் – parched land, துழைஇ – searching, நீர் நயந்து – desiring water, பதுக்கை – shallow burial with stones or leaves, நீழல் ஒதுக்கு இடம் பெறாஅ – without getting shade to rest under (நீழல் – நிழல் என்பதன் நீட்டல் விகாரம்), அருஞ்சுரக் கவலை வருதலின் – since she came on the harsh wasteland’s forked paths, வருந்திய நமக்கும் அரிய ஆயின – they are difficult even for me, அமைத் தோள் – bamboo-like arms, மாண்புடைக் குறுமகள் – young girl with esteem, நீங்கி – leaving, யாங்கு வந்தனள் – how did she come here, கொல் – அசைநிலை, an expletive, அளியள் தானே – she is pitiable (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 353, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த
நுணங்கு நுண் பனுவல் போல கணம் கொள,
ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை,
முட முதிர் பலவின் குடம் மருள் பெரும்பழம்
கல் கெழு குறவர் காதல் மடமகள்  5
கரு விரல் மந்திக்கு வருவிருந்து அயரும்,
வான் தோய் வெற்ப சான்றோய் அல்லை, எம்
காமம் கனிவது ஆயினும், யாமத்து
இரும்புலி தொலைத்த பெருங்கை யானை
வெஞ்சின உருமின் உரறும்  10
அஞ்சுவரு சிறு நெறி வருதலானே.

Natrinai 353, Kapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
Oh lord of the sky-high mountains
where clouds crawl on the tall
peaks of the soaring mountains,
fine like cotton thread spun by
women without husbands,
and the beloved naive daughter
of a mountain dweller plays host
to a black-fingered female monkey
and feeds it jackfruits as big as pots,
growing on old stunted trees on the
lofty mountains!

You are not a wise man!  When your
love for her grows, you come at night
on dreadful, narrow paths, where a
big-trunked elephant kills a huge tiger
and trumpets like enraged thunder!

Notes:  இரவில் வந்தொழுகும் தலைவனிடம் வரைவு கடாயது.   உள்ளுறை (1) – ஒளவை துரைசாமி உரை – குறவர் மகள் மடவளாயினும் மந்திக்குப் பெரும்பழம் வருவிருந்து அயரும் என்றது, இளையளாயினும் தலைமகள் கற்பும் காமமும் நற்பாலொழுக்கமும் விருந்து புறந்தருதலுமாகிய மாண்புகள் பலவும் உடையவள் என்பது.  உள்ளுறை (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – குறவர் மடமகள் பலவின் பழத்துச் சுளையை மந்தியை விருந்தாகக் கொண்டு ஓம்பும் என்றது, நீ மணஞ்செய்து கொள்ள வரின் எஞ்சுற்றத்தார் நின்னை மணமகனாக ஏற்று மகட்கொடை நேர்வர் என்றதாம்.

Meanings:  ஆள் இல் பெண்டிர் – women who are without men, தாளின் செய்த – spun through their own effort, நுணங்கு – minute, நுண் பனுவல் போல – like fine cotton, கணம் கொள – crowding together, ஆடு மழை தவழும் – moving clouds crawling, moving clouds spreading, கோடு உயர் – tall peaks, நெடு வரை – lofty mountains, முட முதிர் பலவின் – of old stunted/bent jackfruit trees, Artocarpus heterophyllus, குடம் மருள் பெரும்பழம் – huge fruits that are like pots, கல் கெழு – in the mountains, குறவர் காதல் மடமகள் – loving naive daughter of a mountain dweller, கரு விரல் மந்திக்கு – to the black-fingered female monkey, வருவிருந்து அயரும் – welcomes as a guest and gives a feast, வான் தோய் வெற்ப – oh lord of the sky touching mountains, சான்றோய் அல்லை – you are not a wise man, எம் காமம் கனிவது ஆயினும் – even if love for us is in excess, even if love for us matures, யாமத்து – at night, இரும்புலி தொலைத்த பெருங்கை யானை – a big-trunked elephant that killed a tiger, வெஞ்சின உருமின் உரறும் – trumpets like enraged thunder (உருமின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), அஞ்சுவரு சிறு நெறி வருதலானே – coming on fearful small paths, coming on fearful narrow paths (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 354, உலோச்சனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
தான் அது பொறுத்தல் யாவது? கானல்
ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை
வீழ் கா ஓலைச் சூழ் சிறை யாத்த
கானல் நண்ணிய வார் மணல் முன்றில்,
எல்லி அன்ன இருள் நிறப் புன்னை  5
நல் அரை முழுமுதல் அவ் வயின் தொடுத்த
தூங்கல் அம்பித் தூவல் அம் சேர்ப்பின்,
கடு வெயில் கொதித்த கல் விளை உப்பு
நெடு நெறி ஒழுகை நிரை செலப் பார்ப்போர்
அளம் போகு ஆகுலம் கடுப்பக்,  10
கௌவை ஆகின்றது ஐய நின் நட்பே.

Natrinai 354, Ulōchanār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
How can we bear this?

Sir, her friendship with you
has become loud gossip,
like the uproars of the long rows of
wagons that carry salt crystals made
by the hot boiling sun in salt pans,
near the misty seashore, where boats
tied to beautiful, thick trunks of
night-like dark punnai trees sway,
and long sandy stretches of groves
in front of houses are surrounded
with fences made from tying long
fronds of tall, dark palmyra trees
that are dropped by the winds.

Notes:  தலைவி இற்செறிக்கப்பட்டாள் என்பதை உணர்த்தி வரைவு கடாயது.  மனையிடத்தே தோழியைத் தலைவன் புகழ்ந்தபோது அவள் சொல்லியதுமாம்.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – பனையின் ஆடு அரை ஒழித்த வீழோலைகொண்டு சிறை சூழப்படுதல் கூறியது, நின் புணர்வு பிரிவுகளினிடையே நீ உரைத்த சொற்களையே தனக்கு அரணாகக் கொண்டு தலைவி உயிர் வாழ்கின்றாள் என்றும், புன்னையின் முழுமுதல் நின்ற அவ்விடத்தே கட்டப்பட்ட தோணி காற்றால் அசைந்து தூவலால் நனைந்திருக்கும் என்றது நின்பால் உள்ளம் பிணிப்புண்ட இவள், வேட்கையால் அலைப்புண்டு நின்னைத் தலைக்கூடப் பெறாமையால் கண்ணீர் நனைப்ப வருந்துகின்றாள் என்று உள்ளுறை கொள்க.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – ஓலைகளை வைத்துக் கட்டிய வேலி என்பதும், புன்னை மரத்தின் அடியில் பிணித்த தோணி என்பதும் தலைவி இற்செறிக்கப்பட்டமை உணர்த்தின.  Natrinai poems 315 and 354 have descriptions of fishing boats tied to punnai trees.  கா ஓலை (3) –  ஒளவை துரைசாமி உரை – முற்றிய ஓலை, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – காவிக் கொணர்ந்த ஓலை, வெட்டி வீழ்த்திய ஓலை.  கா ஓலை (நற்றிணை 38வது பாட்டின் உரை) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – முற்றிய ஓலை, முற்றிக் காய்ந்த ஓலையுமாம், ச. வே. சுப்பிரமணியன் உரை – முற்றிய ஓலை.  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).

Meanings:  தான் – அசைநிலை, an expletive, அது பொறுத்தல் யாவது – how will we tolerate it, கானல் – the seashore grove, ஆடு அரை ஒழித்த – shaking and falling off the trunks, நீடு – tall, இரும் – dark, பெண்ணை – palmyra trees, Borassus flabellifer, வீழ் கா ஓலை – dropped dried fronds, dropped mature fronds, சூழ் – surrounded, சிறை யாத்த கானல் – grove protected by tying it around, நண்ணிய – nearby, வார் மணல் – long stretch of sand, முன்றில் – front yard of houses, எல்லி அன்ன – like night, இருள் நிற – dark colored, புன்னை – punnai trees, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, நல் அரை முழுமுதல் – in its thick fine trunk, அவ் வயின் – there, தொடுத்த தூங்கல் – tied and swaying, அம்பி – boats, தூவல் – water sprays, அம் சேர்ப்பின் – on the beautiful seashore, கடு வெயில் கொதித்த – boiling in the harsh sun, கல் விளை உப்பு – salt that has grown like pebbles, நெடு நெறி ஒழுகை – long row of carts, நிரை செல – going in a row (செல – இடைக்குறை), பார்ப்போர் – those who see, அளம் போகு ஆகுலம் கடுப்ப – like the uproar of those which go to the salt pans (அளம் – உப்பளம், ஆகுலம் – ஆரவாரம், கடுப்ப – உவம உருபு, a comparison word), கௌவை ஆகின்றது – it has become gossip, ஐய – Sir, நின் நட்பே – your friendship (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 355, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
புதல்வன் ஈன்ற பூங்கண் மடந்தை
முலை வாய் உறுக்கும் கை போல், காந்தள்
குலைவாய் தோயும் கொழு மடல் வாழை
அம் மடல் பட்ட அருவித் தீம் நீர்
செம்முக மந்தி ஆரும் நாட! 5
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்,
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்;
அம் சில் ஓதி என் தோழி தோள் துயில்
நெஞ்சின் இன்புறாய் ஆயினும், அது நீ
என் கண் ஓடி அளிமதி, 10
நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே.

Natrinai 355, Unknown Poet, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
Oh man from the country where a
red-faced, female monkey drinks
sweet flowing water from a banana
leaf that touches clusters of
kānthal flowers, like a child who
drinks milk from the breast of its
naïve mother with flower-like eyes!

Friendly people will even eat poison,
if given by their friends.
Even if you are not receiving pleasures
of sleeping on the shoulders
of my friend with beautiful soft hair,
please shower your graces on her.

She does not have anybody but you!

Notes:  தோழி தலைவியின் ஆற்றாமை கண்டு, வரைவு கடாயது.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  புதல்வன் ஈன்ற பூங்கண் மடந்தை – the young woman with flower-like eyes who gave birth to a son, முலை வாய் உறுக்கும் கை போல் – like how she holds her breast and puts it in her son’s mouth, காந்தள் குலைவாய் தோயும் – glory lily flower clusters rubbing against, கொழு மடல் வாழை – banana trees with big leaves, அம் மடல் பட்ட – touching that beautiful sheath, அருவித் தீம் நீர் – flowing sweet water, செம் முக மந்தி ஆரும் – red-faced monkey drinks, நாட – oh man from such country, முந்தை இருந்து – in front of them, நட்டோர் கொடுப்பின் – if given by friends, நஞ்சும் உண்பர் நனி நாகரிகர் – those who are very friendly will even eat poison, those who have a noble outlook will even eat poison, அம் சில் ஓதி – beautiful delicate hair, என் தோழி – my friend, தோள் துயில் நெஞ்சின் இன்புறாய் ஆயினும் – even if you are not getting the pleasure of sleeping on her shoulders in your heart, அது நீ என் கண் ஓடி அளிமதி – grant me that (மதி – முன்னிலையசை, an expletive of the second person), நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே – she does not have anybody other than you (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 356, பரணர், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது 
நிலம் தாழ் மருங்கின், தெண் கடல் மேய்ந்த
விலங்கு மென் தூவிச் செங்கால் அன்னம்,
பொன்படு நெடுங்கோட்டு இமயத்து உச்சி
வானர மகளிர்க்கு மேவல் ஆகும்
வளராப் பார்ப்பிற்கு அல்கு இரை ஒய்யும்  5
அசைவு இல் நோன் பறை போல, செல வர
வருந்தினை வாழி என் உள்ளம் ஒரு நாள்
காதலி உழையளாக,
குணக்குத் தோன்று வெள்ளியின், எமக்குமார் வருமே.

Natrinai 356, Paranar, Kurinji Thinai – What the hero said to his heart
May you live long, oh mind!
You are sad, going to her and
coming back, like a red-legged
goose with separated delicate
feathers, which preys in the clear
waters in the ocean, its strong
feathers not tiring bringing food
to its young chicks, desired as pets
by the goddesses of the soaring
Himalayas with peaks with gold.

My lover will come to me one day,
like Venus that rises in the east.

Notes:  தலைவியின் தமரால் வரைவு மறுக்கப்பட்ட தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.  வானர மகளிர்க்கு மேவல் ஆகும் வளராப் பார்ப்பிற்கு (4-5) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தேவர் உலகின்கண் வாழும் தெய்வ மகளிர்க்கு விருப்பத்தோடு விளையாடுதற்காய சிறகு முளைத்து வளராத தன் இளம் பார்ப்புகளுக்கு.  எமக்குமார் வருமே (9) – ஒளவை துரைசாமி உரை – எம்பால் வருவளாகலான் வருந்துதல் ஒழிக, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நம் காதலி நம் அருகில் வைகுமாறு நமக்குக் கிடைக்குமோ?  ஏ – வினா.  ஒளவை துரைசாமி உரை – பொன்படு நெடுங்கோட்டு இமயத்துச்சி என்றது தலைவியின் மனைச் சிறப்பும், செங்காலன்னம் என்றது காதல் ஒழுக்கம் பூண்ட தலைவனின் மனநிலையும், வளராப் பார்ப்பு என்றது தலைவியால் பேணப்படும் காதலுறவும், அன்னத்தின் நோன் பறையியக்கம் தலைவனுடைய வரவும் செலவும் குறித்து நின்றன.  இக்குறிப்புகளால் அல்கிரை உண்ட பார்ப்பு வளர்ச்சி முற்றியதும் தாய் அன்னத்தோடு பறந்து செல்லுமாறு போலத் தலைவியும் போக்குடன்பட்டு வருவாள் என்பதும் உணரக் கூறியவாறு காண்க.

Meanings:  நிலம் தாழ் மருங்கின் – where the land is low, in the ocean, தெண் கடல் மேய்ந்த – preying in the clear waters of the ocean, விலங்கு மென் தூவி – separated delicate feathers, செங்கால் அன்னம் – goose with red legs, பொன்படு நெடுங்கோட்டு இமயத்து உச்சி வானர மகளிர்க்கு – to the goddesses on the tall Himalayas with gold, மேவல் ஆகும் – they are desirable, வளரா பார்ப்பிற்கு – to the not fully grown young chicks, chicks whose wings are not fully grown, அல்கு இரை ஒய்யும் – brings food, அசைவு இல் நோன் பறை போல – like how its strong wings which are not tired, செல வர வருந்தினை – you are sad for going and coming (செல – இடைக்குறை), வாழி என் உள்ளம் – may you live long my mind, ஒரு நாள் காதலி உழையளாக குணக்குத் தோன்று வெள்ளியின் எமக்கும் ஆர் வருமே – my lover will come to me one day like Venus that rises on the east (வெள்ளியின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஆர் – அசைநிலை, வருமே – ஏ அசைநிலை, an expletive)

நற்றிணை 357, குறமகள் குறியெயினி, குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நின் குறிப்பு எவனோ தோழி? என் குறிப்பு
என்னொடு நிலையாது ஆயினும், என்றும்
நெஞ்சு வடுப்படுத்துக் கெட அறியாதே,
சேண் உறத் தோன்றும் குன்றத்துக் கவாஅன்,
பெயல் உழந்து உலறிய மணிப் பொறிக் குடுமிப்  5
பீலி மஞ்ஞை ஆலும் சோலை,
அம் கண் அறைய அகல்வாய்ப் பைஞ்சுனை
உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி,
நீர் அலைக் கலைஇய கண்ணிச்
சாரல் நாடனொடு ஆடிய நாளே.  10

Natrinai 357, Kuramakal Kuri Eyini, Kurinji Thinai – What the heroine said to her friend
What are your thoughts, my friend?
My thoughts don’t stay with me.

However, they don’t hurt me when
I think about playing with the lord
of the mountains wearing garlands
ruined by water droplets, in the
beautiful, wide springs on boulders,
plucking blue kuvalai flowers that
resemble kohl-rimmed eyes of women,
where mountains appear to be at a
distance and peacocks with plumes and
crests that are wet in the rain shake off
the water on their feathers and dance in
groves with lovely boulders.

Notes:  தலைவன் வரைவு நீடிய இடத்து வருந்தாது, அவன் வரைந்துக் கொள்வான் எனக் கருதிய தலைவி, தோழியிடம் அவள் எண்ணத்தை வினவியது.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – மழை பெய்ய மயில் நனைந்து சோலையில் உலாவி வரும் என்றது, தலைவன் முன்பொருகால் அன்பு செய்ததால் மகிழ்ந்த தலைவியின் உள்ளம் இப்போதும் சோர்வடையாமல் உள்ளதைக் குறித்தது.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – பெயல் உழந்து உலறிய குடுமியும் பீலியுமுடையதாயினும், மஞ்ஞை,பெயற்குரிய மழை முகிலை நினைந்து ஆலும் என்றது, வரையாது நீட்டித்ததால், மேனி வேறுபட்டு வருந்தக் கடவேமாயினும், அவனோடு ஆடிய நாளை நினைந்து ஆற்றியிருத்தலே தகும் என்ற கருத்தை உள்ளுறுத்து உரைத்தவாறு அறிக.

Meanings:  நின் குறிப்பு எவனோ தோழி – what are your thoughts my friend, என் குறிப்பு என்னொடு நிலையாது – my thoughts will not stay with me, ஆயினும் – yet, என்றும் – always, நெஞ்சு வடுப்படுத்து – to hurt my heart, கெட – to ruin, அறியாதே – does not know, சேண் உறத் தோன்றும் – appearing to be far, குன்றத்துக் கவாஅன் – peaks of the nearby mountain (கவாஅன் – அளபெடை), பெயல் உழந்து உலறிய – wet in the rains and dried, மணிப் பொறி – sapphire-colored spots, குடுமிப் பீலி மஞ்ஞை ஆலும் சோலை – grove where peacocks with crests and tufts dance, அம் கண் அறைய – on the beautiful boulders, அகல்வாய்ப் பைஞ்சுனை – fresh spring with wide opening, உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி – plucked blue lilies which are like kohl-decorated eyes, நீர் அலைக் கலைஇய கண்ணி – flower garlands ruined by water (கலைஇய – அளபெடை), சாரல் நாடனொடு – with the lord of the mountain slopes, ஆடிய நாளே – days we played (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 358, நக்கீரர், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது அல்லது தோழி தலைவியிடம் சொன்னது
பெருந்தோள் நெகிழ, அவ்வரி வாடச்,
சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர,
இன்னேம் ஆக, எற் கண்டு, நாணி,
நின்னொடு தெளித்தனர், ஆயினும், என்னதூஉம்
அணங்கல் ஓம்புமதி வாழிய நீ! எனக்  5
கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய்,
பரவினம் வருகம் சென்மோ தோழி!
பெருஞ்சேய் இறவின் துய்த்தலை முடங்கல்
சிறுவெண்காக்கை நாள் இரை பெறூஉம்
பசும்பூண் வழுதி மருங்கை அன்ன, என்  10
அரும் பெறல் ஆய் கவின் தொலைய
பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோரே.

Natrinai 358, Nakkeerar, Neythal Thinai – What the heroine said to her friend or What the heroine’s friend said to her
The thick arms have become thin, pretty
lines have faded, and pallor has spread
greatly on the small delicate chest.

We have become like this.  On seeing me,
embarrassed, he explained matters to you. 

Come, my friend!  Do not be distressed!  Let us
go and pray and give offerings to the god with
many devotees, to protect him from even a
little bit of danger, the man who was capable
of leaving me to live there, causing my
rare-to-obtain beauty to be ruined, lovely like
Marungai town of the Pāndiyan king wearing
fine jewels, where small white seagulls eat large,
curved, shrimp with soft heads every day. 

Notes:  பொருள்வயின் தலைவன் பிரிந்த பொழுது ஆற்றாளாக இருந்த தலைவி தோழிக்குச் சொல்லியது.  தலைவியை ஆற்றும்பொருட்டுத் தோழி கூறியதுமாம்.  தலைவி கூறவேண்டிய சொற்களை, அவள் சார்பாகத் தோழி கூறும் மரபும் உண்டு.  தெளித்தனர் (4) – ஒளவை துரைசாமி உரை – தெளிவித்துச் சென்றனர், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – சூளுற்றனர்.  சென்மோ (7) – ஒளவை துரைசாமி உரை – செல்வேமோ சென்மோ என வந்தது.  இது தொகுக்கும் வழித் தொகுத்தல்.   முடங்கல் (8) – ஒளவை துரைசாமி உரை – ஒடுங்கிக்கொண்டு இருத்தல், H.வேங்கடராமன் உரை – வற்றல்உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – இறாவின் முடங்கலை நாட்காலையில் காக்கை இரையாகப் பெறும் என்றது, பொருள் ஈட்டச் சென்ற தலைவன் அவ்வினை முடிந்தவுடன் மீண்டு வருவன் என்பதை உணர்த்திற்று.  வரலாறு:  வழுதி, மருங்கை.  அல்குல் அவ்வரி வாட – அகநானூறு 183, 307, நற்றிணை 282, குறுந்தொகை 180, ஐங்குறுநூறு 306, 316.  அல்குல் வரிகள் – Aka 117-2, 183-2, 307-2, 342-13, 387-8, Nat 282-1, 370-5, Kuru 180-6, Aink 306-2, 316-2, 481-1, Pura 344-9

Meanings:  பெருந்தோள் நெகிழ – thick arms becoming thin, அவ்வரி வாட – pretty lines fading (on the loins), சிறு மெல் ஆகம் – small delicate chest, பெரும் பசப்பு ஊர – pallor spreading greatly, இன்னேம் ஆக – we have become like this, எற் கண்டு  – on seeing me, நாணி – embarrassed, நின்னொடு – to you, தெளித்தனர் – he promised, he cleared matters with you, ஆயினும் – yet, என்னதூஉம் – even a little bit (அளபெடை), அணங்கல் – do not be distressed, ஓம்புமதி – protect (மதி – முன்னிலையசை, an expletive of the second person), வாழிய நீ – may you live long, என கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய் பரவினம் – let us sprinkle offerings and pray to the god with crowds of followers (தூஉய் – அளபெடை, பரவினம் முற்றெச்சம், finite verb), வருகம் – let us return (முற்றெச்சம், finite verb), சென்மோ – let us go (மோ – தன்மை அசைநிலை, an expletive of the first person, செல்வேமோ சென்மோ என வந்தது), தோழி – my friend, பெருஞ்சேய் இறவின் துய்த்தலை – fine shrimp with soft heads, முடங்கல் – bent, curved, shrunk, சிறுவெண்காக்கை – small white seagulls, Indian black-headed sea gulls, Larus ichthyactus, நாள் இரை பெறூஉம் – they get their daily food (பெறூஉம் – அளபெடை), பசும்பூண் வழுதி மருங்கை அன்ன – like Marungai town of king Pāndiyan wearing new jewels, என் அரும் பெறல் – my rare to obtain, my precious (அரும் பெறல் – பெறல் அரும் – பெறுவதற்கு அரிய)ஆய் கவின் – my fine beauty, தொலைய – to be lost, பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோரே – the man who separated and went to live there (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 359, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி சொன்னது
சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டுச் சேதா
அலங்கு குலைக் காந்தள் தீண்டி தாது உகக்,
கன்று தாய் மருளும் குன்ற நாடன்
உடுக்கும் தழை தந்தனனே; யாம் அஃது
உடுப்பின் யாய் அஞ்சுதுமே; கொடுப்பின்  5
கேளுடைக் கேடு அஞ்சுதுமே; ஆயிடை
வாடல கொல்லோ தாமே, அவன் மலைப்
போருடை வருடையும் பாயா,
சூருடை அடுக்கத்த கொயற்கு அருந்தழையே?

Natrinai 359, Kapilar, Kurinji Thinai – What the heroine’s friend said
The man from the mountain country,
……….where a small, short-horned, brown
……… cow grazes with her calf in the
……… mountains,
……….brushing against swaying glory lilies,
……….getting pollen dust on her body,
……….as her calf becomes confused,
gave leaf a garment for her to wear.
I am fearful that mother will be angry if she
wears them, and he’ll be hurt if I return them.

The leaves which are difficult to pluck are from
the mountains with deities, where even fighting
mountain goats are unable to leap around.

Can they be left to wilt?

Notes:  தலைவன் கொடுத்த கையுறையைத் தோழி ஏற்றுக்கொண்டு தலைவியிடம் சென்றாள்.  தழையுடை வாடாமலிருக்க வேண்டும் என்று தலைவியின் குறிப்பறிந்து ஒழுகுபவள் போலக் கூறியது.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – தாது உகப் பெற்ற கன்று மருளும் என்றது, தலைவி இத் தழையுடை கொணரக்கண்டு நாண மிக மயங்கினாள் என்பது உணர்த்தவாம்.  ஐங்குறுநூறு 211 – செயலையம் பகைத்தழை வாடும்.  ஆயிடை (6) – ஒளவை துரைசாமி உரை – அவ்விடை:  ஆயிடை எனச் சுட்டு நீண்டு இடையே யகரம் பெற்றது.  வாடல கொல்லோ (7) – ஒளவை துரைசாமி உரை – வாடாவோ என நின்று வாடிவிடும் என்ற பொருள் தந்தது, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வாடுதலையுடைய ஆகலாமோ.

Meanings:  சிலம்பின் – in the mountain, மேய்ந்த – grazing, சிறு கோட்டுச் சேது ஆ  – small-horned tawny/brown colored cow, அலங்கு குலை – moving bunches, காந்தள் – glory lily flowers, தீண்டி – touched, தாது உக – pollen dropped, கன்று – calf, தாய் – mother, மருளும் – it gets confused, குன்ற நாடன் – the man from the mountain country, உடுக்கும் தழை தந்தனனே – he gave leaf garments, யாம் அஃது உடுப்பின் – if we wear it, யாய் அஞ்சுதுமே –  we are afraid of mother (ஏ – அசைநிலை, an expletive), கொடுப்பின் – if I give it back to him, கேளுடை கேடு அஞ்சுதுமே – we are afraid that he will be hurt (ஏ – அசைநிலை, an expletive), ஆயிடை – at that time or at that place, வாடல கொல்லோ – won’t they wilt, can they be allowed to wilt (ஐயம் என்ற பொருளில் வந்த இடைச்சொல், a particle which implies doubt, ஓ – அசைநிலை, an expletive), தாமே – தாம், ஏ – அசைநிலைகள், expletives, அவன் மலை – in his mountain, போருடை – fighting, வருடையும் – even the mountain goats, பாயா – they do not jump (due to the height), சூருடை – with terror, with deities, அடுக்கத்த – in the mountain slopes, கொயற்கு அருந்தழையே – leaves that are difficult to pluck (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 360, ஓரம்போகியார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது, அல்லது தலைவி தலைவனிடம் சொன்னது
முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய
விழவு ஒழி களத்த பாவை போல,
நெருநைப் புணர்ந்தோர் புது நலம் வெளவி
இன்று தருமகளிர் மென்தோள் பெறீஇயர்,
சென்றீ பெரும! சிறக்க நின் பரத்தை  5
பல்லோர் பழித்தல் நாணி, வல்லே
காழின் குத்திக் கசிந்தவர் அலைப்பக்
கை இடை வைத்தது மெய்யிடைத் திமிரும்
முனியுடைக் கவளம் போல, நனி பெரிது
உற்ற நின் விழுமம் உவப்பென்;  10
மற்றும் கூடும் மனை மடி துயிலே.

Natrinai 360, Ōrampōkiyār, Marutham Thinai – What the heroine’s friend said to the hero, or what the heroine said to the hero
You abandoned the one you united
with yesterday, after seizing her beauty,
a doll-like woman who danced perfectly
in an arena until the festivities ended
and the clay on the drum faces dried.

Go to the woman with delicate arms
that the bard brings to you today.
May your concubine flourish!

You are like a ball of food that an
elephant calf places in its trunk and
rubs all over its body when
its keeper torments it with his goad,
when embarrassed by blames of many.

I am happy for your abundant greatness.
It might be possible for you to sleep in the
house at some other time.

Notes:  பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுக்குத் தோழி வாயில் மறுத்தது.  தலைவி ஊடிச் சொல்லியதுமாம்.  முழவு முகம் புலர்ந்து (1) – ஒளவை துரைசாமி உரை – முழவின் மார்ச்சனை புலர்ந்து, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மத்தள முகத்து வைத்த மார்ச்சனை வறந்து.  முழவு முகம் புலரா – அகநானூறு பாடல்கள் 206, 222, 397 – வேங்கடசாமி நாட்டார் உரை – முழவின் ஒலி ஓயாத, பொ. வே. சோமசுந்தரனார் உரை – முழவின் முழக்கம் ஒழியாத.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).

Meanings:  முழவு முகம் புலர்ந்து – drum surfaces dried, drum sounds ended, முறையின் ஆடிய – who danced perfectly, விழவு ஒழி – when festivities ended, களத்த பாவை போல – doll-like woman in a dancing arena, like a woman in a dancing arena, நெருநைப் புணர்ந்தோர் – the one you united with yesterday, புது நலம் – new beauty, வெளவி – seizing, இன்று தருமகளிர் மென்தோள் பெறீஇயர் – to get the delicate arms of women brought to you today by the bard (அளபெடை), சென்றீ – you go (முன்னிலை ஒருமை வினைத்திரி சொல்), பெரும – oh lord, சிறக்க நின் பரத்தை – may your concubine flourish (சிறக்க – வியங்கோள் வினைமுற்று), பல்லோர் பழித்தல் நாணி – embarrassed because of blame by many, வல்லே காழின் குத்தி – stabbing hard with his goad, கசிந்தவர் – a sad man, அலைப்ப – causing hurt, கை இடை வைத்தது – placing in its trunk, மெய்யிடைத் திமிரும் – rubs on its body, முனியுடை – elephant calf’s, கவளம் போல – like a ball of food, நனி பெரிது உற்ற நின் விழுமம் – for your abundant greatness (நனி பெரிது – மிக மிக, ஒரு பொருட் பன்மொழி), உவப்பென் – I will be happy, மற்றும் கூடும் – might be possible at some other time, மனை மடி துயிலே – to lie down and sleep in the house (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 361, மதுரைப் பேராலவாயர், முல்லைத் திணை – தோழி வாயில்களிடம் சொன்னது
சிறு வீ முல்லைப் பெரிது கமழ் அலரி
தானும் சூடினன், இளைஞரும் மலைந்தனர்,
விசும்பு கடப்பன்ன பொலம் படைக் கலி மாப்,
படுமழை பொழிந்த தண் நறும் புறவில்,
நெடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப,  5
மாலை மான்ற மணன் மலி வியல் நகர்த்
தந்தன நெடுந்தகை தேரே, என்றும்
அரும் படர் அகல நீக்கி
விருந்து அயர் விருப்பினள் திருந்திழையோளே.

Natrinai 361, Mathurai Perālavāyar, Mullai Thinai – What the heroine’s friend said to the messengers
He wore small mullai flowers
with great scents.  The youngsters
with him also wore them.

When rains fell in the cool forest in
the fragrant, confusing evening, the
noble man came and landed, bright
bells with long clappers ringing and
creating fine music, riding his chariot
drawn by gold-decked horses that are
swift like they are flying in the sky,
in the sandy yard of her large house,
removing her distress, as she with perfect
jewels desired to celebrate his arrival.  

Notes:  தலைவன் வினை முடிந்து திரும்புகிறான்.  தலைவியின் துன்பம் நீங்கப்பட்டதைத் தோழி வாயில்களிடம் கூறியது.  பொலம் படை மா:  அகநானூறு 114 – பொலம்படைக் கலி மா, அகநானூறு 124 – பொன் இயல் புனை படைக் கொய் சுவல் புரவி, நற்றிணை 78 – பொலம் படைக் கலி மா, நற்றிணை 361 – பொலம் படைக் கலி மா, புறநானூறு 116 – பொலம் படைக் கலி மா, புறநானூறு 135 – ஒளிறு படைப் புரவிய தேரும், புறநானூறு 359 – பொலம் படைய மா, மலைபடுகடாம் 574 – பொலம் படைப் பொலிந்த கொய் சுவற் புரவி.  மான்ற (6) – ஒளவை துரைசாமி உரை – மால் என்பதன் அடியாகப் பிறந்த பெயரெச்சவினை.

Meanings:  சிறு வீ முல்லை – jasmine with small flowers, பெரிது கமழ் அலரி – flowers with great fragrance, தானும் சூடினன் – he wore, இளைஞரும் மலைந்தனர் – the youngsters also wore, விசும்பு கடப்பன்ன – as swift as moving in the sky, பொலம் படை – decorated with gold saddles, கலி மா – fast horses, படுமழை பொழிந்த – heavy rains had fallen, தண் நறும் புறவில் – in the cool woodland with fine scents, நெடு நா ஒண் மணி – bright bells with long tongues/clappers, பாடு சிறந்து இசைப்ப – creating fine music, மாலை மான்ற – in the confusing evening time (மான்ற – மால் என்பதன் அடியாகப் பிறந்த பெயரெச்சவினை), மணல் மலி வியல் நகர் – large house filled with sand, தந்தன நெடுந்தகை தேரே – brought the chariot of the esteemed man (ஏ – அசைநிலை, an expletive), என்றும் – always, அரும் படர் அகல நீக்கி – thus removing her great sorrow, விருந்து அயர் விருப்பினள் – she with a desire to celebrate, திருந்திழையோளே – the young woman with perfect jewels (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 362, மதுரை மருதன் இளநாகனார், பாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
வினை அமை பாவையின் இயலி, நுந்தை
மனை வரை இறந்து வந்தனை; ஆயின்
தலைநாட்கு எதிரிய தண் பத எழிலி
அணி மிகு கானத்து அகன் புறம் பரந்த
கடுஞ்செம்மூதாய் கண்டும் கொண்டும்  5
நீ விளையாடுக சிறிதே; யானே,
மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை
மணல் இடு மருங்கின் இரும் புறம் பொருந்தி,
அமர் வரின் அஞ்சேன், பெயர்க்குவென்;
நுமர் வரின் மறைகுவென், மாஅயோளே.  10

Natrinai 362, Mathurai Maruthan Ilanākanār, Pālai Thinai – What the hero said to the heroine
Oh beautiful, dark young woman!
You have crossed the boundaries
of your father’s house to be with me,
walking like the statue of Kolli goddess
that moves, equipped with a mechanical
gadget.

The first rains have come and the
beauty-filled forest abounds with the
intensely red velvet bugs.

You play here with them for a while.
I will go to the sandy area behind
thick-trunked vēngai trees that have been
peeled by young elephants.

If robbers come, I will chase them.  If your
relatives come, I will hide!

Notes:  தலைவனும் தலைவியும் உடன்போக்கு மேற்கொண்டனர்.  சுரத்தில் தலைவன் தலைவியிடம் சொன்னது.  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மழ களிறு உறிஞ்சிய வேங்கை அங்ஙனம் உறிஞ்சுதலானே கெடாதவாறு போல, எத்தகைய பகைவர் வந்து மோதினும் அஞ்சேன் என்றதாம்.  வினை அமை பாவையின் இயலி (1) – ஒளவை துரைசாமி உரை – நல்ல தொழிற்பாடு அமையச் செய்த பாவையொன்று நடப்பதுபோல நடந்து, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இயந்திரம் அமைந்த கொல்லிப் பாவைப் போல இயங்கா நின்று.  நற்றிணை 48 – கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர் வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது அமர் இடை உறுதர நீக்கி, நீர் எமர் இடை உறுதர ஒளித்த காடே.   எதிரிய (3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பெய்யத் தொடங்கிய, ஒளவை துரைசாமி உரை – பெய்த, H.வேங்கடராமன் உரை – மேலே எழுந்து.  கடுஞ்செம்மூதாய் (3) – ஒளவை துரைசாமி உரை – மிகச் சிவந்த தாம்பூலப்பூச்சி, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – விரைந்த செலவினையுடைய ஈயலின் மூதாய்,  They surface during the rainy seaon, on sandy soils.  They are kept in boxes by young kids and fed tender grass.  They are not the silk producing worms or caterpillars.  Akanānūru poems 14, 54, 74, 134, 283, 304, 374, Kalithokai 85 and Natrinai 362 have references to these little red bugs that look like velvet pieces. There are references to Kolli Mountain goddess in Natrinai 185, 192, 201, 346 and 362.  மழ – மழவும் குழவும் இளமைப் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 15).

Meanings:  வினை அமை பாவையின் இயலி – walking like the Kolli mountain’s goddess made with a gadget that moves it, like a well-made doll that walks (பாவையின் – இன் உருபு ஒப்புப் பொருளது), நுந்தை – your father, மனை வரை – house boundary, இறந்து வந்தனை – you crossed and came, ஆயின் – hence, தலைநாட்கு – on the first days, எதிரிய – began to rain, rising up, தண் பத எழிலி – cool clouds, அணி மிகு கானத்து – in the beauty-filled forest, அகன் புறம் பரந்த – spread everywhere, கடுஞ்செம் மூதாய் – pattupoochi with intense red, pattupoochi that run rapidly, Trombidium grandissimum, இந்திர கோபம், கண்டும் கொண்டும் – see and take, நீ விளையாடுக சிறிதே – you play for a little while, யானே – I, மழ களிறு – young elephants, உரிஞ்சிய – peeled, பராரை – thick tree trunk (பரு அரை பராரை எனப் புணர்ந்தது), வேங்கை – Kino Tree, Pterocarpus marsupium, மணல் இடு மருங்கின் – in the place with sand, இரும் புறம் – on the wide side, பொருந்தி – staying, அமர் வரின் – if fight comes (with robbers), அஞ்சேன் – I will not be afraid, பெயர்க்குவென் – I will chase them away, நுமர் வரின் – if your relatives come, மறைகுவென் – I will hide, மாஅயோளே – oh dark beautiful young woman (அளபெடை, ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 363, உலோச்சனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
‘கண்டல் வேலிக் கழி சூழ் படப்பைத்
தெண் கடல் நாட்டுச் செல்வென் யான்’ என
வியங்கொண்டு ஏகினை ஆயின், எனையதூஉம்
உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன்
பொறி அறு பிணைக் கூட்டும் துறை மணல் கொண்டு  5
வம்மோ தோழி மலி நீர்ச் சேர்ப்ப,
பைந்தழை சிதைய, கோதை வாட,
நன்னர் மாலை நெருநை நின்னொடு
சில விளங்கு எல் வளை ஞெகிழ,
அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே.  10

Natrinai 363, Ulōchanār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
Oh lord of the ocean with abundant
water!  If you command your
charioteer to ride and leave for the
land with clear water,
with kandal tree fences and groves
surrounded by backwaters,
please bring some sand from your
seashore,
so that the skilled metalsmith who
does abundant work not tiring, can
attach the broken joints of my friend’s
anklets, which were ruined when she
spent the evening with you yesterday  
chasing crabs,
as her leaf garment got crushed,
flower garland faded and her few
bright bangles became loose.   

Notes:  பகற்குறி வந்து நீங்கும் தலைவனிடம் கூறியது.  யான் ஆற்றுவிக்கும் இடத்துக் கவன்றால் நீ ஆற்றுவி எனச் சொல்லியது.  கையுறை நேர்ந்த தோழி தலைவனிடம் கூற்றியதுமாம்.  ஒளவை துரைசாமி உரை – களிப்பும் உலர்ந்தவழி வெடிக்காத பண்பும் உடைய மண்ணே வார்ப்பு அச்சுகட்கு வேண்டப்படுவது.  அஃது எல்லாவிடத்துமின்றி சிற்சில நீர்த்துறைகளிலே காணப்படும்.  ஆட்டுவோள் (10) –  ஒளவை துரைசாமி உரை – ஆட்டுதலை உடையவள். செய்யுளாகலின் ‘ஆ’ ‘ஓ’ ஆயிற்று.  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  கண்டல் வேலி – kandal fence (கண்டல் – Rhizophora mucronate which is a mangrove tree or Pandanus odoratissimus according to the University of Madras Lexicon), கழி சூழ் படப்பை – groves surrounded by backwaters, தெண் கடல் நாட்டுச் செல்வென் யான் என – if you say that you will go to the country with clear ocean water, வியம் கொண்டு ஏகினை ஆயின் – if you go commanding your charioteer to ride (வியம் – ஏவல்), எனையதூஉம் உறு வினைக்கு அசாவா – not lazy even a little bit to do his work (எனையதூஉம் – அளபெடை, உறு – மிக்க), உலைவு இல் – without getting tired, கம்மியன் – a skilled worker (a metal smith), பொறி அறு – joints broken, பிணைக் கூட்டும் – to attach the pieces together, துறை மணல் கொண்டு வம்மோ – you come bringing sand from your seashore (மோ – முன்னிலையசை, an expletive of the second person), தோழி – my friend’s, மலி நீர்ச் சேர்ப்ப – oh lord of the sea with abundant water (சேர்ப்ப – அண்மை விளி), பைந்தழை சிதைய – fresh leaf clothes crushed, கோதை வாட – garland faded, நன்னர் – good (நன்னர் – நல்ல), மாலை – evening,  நெருநை- yesterday, நின்னொடு – with you, சில – few, விளங்கு – bright, splendid, எல் வளை ஞெகிழ – bright bangles got loose, bright bangles slipped down, அலவன் ஆட்டுவோள் – the young woman who played with the crabs (ஆட்டுவோள் – செய்யுள் ஆகலின் ‘ஆ’ ஓவாயிற்று), சிலம்பு ஞெமிர்ந்து எனவே – since her anklets got crushed (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 364, கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
சொல்லிய பருவம் கழிந்தன்று; எல்லையும்
மயங்கு இருள் நடுநாள் மங்குலோடு ஒன்றி,
ஆர்கலி வானம் நீர் பொதிந்து இயங்கப்,
பனியின் வாடையொடு முனிவு வந்து இறுப்ப,
இன்ன சில் நாள் கழியின், பல் நாள்  5
வாழலென் வாழி தோழி! ஊழின்
உரும் இசை அறியாச் சிறு செந்நாவின்
ஈர் மணி இன் குரல் ஊர் நனி இயம்பப்,
பல் ஆ தந்த கல்லாக் கோவலர்
கொன்றை அம் தீம் குழல் மன்று தோறு இயம்ப, 10
உயிர் செலத் துனைதரும் மாலை
செயிர் தீர் மாரியொடு ஒருங்கு தலைவரினே.

Natrinai 364, Kidangil Kāvithi Perunkotranār, Mullai Thinai – What the heroine said to her friend
The promised time has passed.
During days and confusing nights
with pitch darkness,
clouds in the sky carry water and
come down as rains with loud noises.

The dewy northern winds blow
and frustration has gripped me.
If a few days pass like this,
I will not live for long.
May you live long, my friend!

In the evening that arrives rapidly
to seize lives,
sweet sounds from fine bells with
small clappers are heard
in the common grounds in town,
uneducated cattle herders play sweet
music with kondrai pods to which
many cows respond.
Evening times become one with the
faultless rain.

Notes:  பிரிவிடை வருந்தி உரைத்தது.  கொன்றை விதைக் குழல்:  அகநானூறு 54 – கோல் கைக் கோவலர் கொன்றை அம் குழலர், நற்றிணை 364 – கல்லாக் கோவலர் கொன்றை அம் தீம் குழல் மன்று தோறு இயம்ப, கலித்தொகை 106 – கொன்றைத் தீம் குழல் முரற்சியர் வழூஉ சொல் கோவலர்.  துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  அறியா – அறிந்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3). ஊழின் உரும் இசை அறியா (7) – ஒளவை துரைசாமி உரை – முறையாகத் தோன்றும் இடியும் மின்னும் வருவதறிந்து , பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – முறையிலே இடிமுழக்கம் விசும்பிலே கேட்கப்படாத.

Meanings:  சொல்லிய பருவம் கழிந்தன்று – the time that he said he would come has passed, எல்லையும் – during the day, மயங்கு இருள் நடுநாள் – confusing dark midnight, மங்குலோடு ஒன்றி – join the clouds, ஆர்கலி வானம் – very loud sky, நீர் பொதிந்து – filled with water, இயங்க – started to shower rain, பனியின் வாடையொடு – with the chillness of the northern winds, with the northern winds with dew, முனிவு வந்து இறுப்ப – hatred has come and gripped me, anger has come and gripped me (முனிவு – சினத்தல், வெறுத்தல், இறுப்ப – தங்க), இன்ன சில் நாள் கழியின் – if a few days passed like this, பல் நாள் வாழலென் – I will not live for many days, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – my friend, ஊழின் உரும் இசை – the sound of the usual thunder, அறியா – knowing (செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்), not hearing, சிறு செந்நாவின் ஈர் மணி – bells with small beautiful tongues/clappers, இன் குரல் ஊர் நனி இயம்ப – very sweet sounds are heard near town, பல் ஆ தந்த – bringing many cows, கல்லாக் கோவலர் – uneducated cattle herders, கொன்றை அம் தீம் குழல் – sweet lute music with their flutes made from kondrai/laburnum seeds, Golden Shower Tree, Cassia fistula, மன்று தோறு இயம்ப – sounds in the common areas, உயிர் செலத் துனைதரும் மாலை – this rapidly arriving evening which seizes lives, செயிர் தீர் – faultless, மாரியொடு ஒருங்கு தலைவரினே – if it comes as one with the rain, if it unites and comes with the rain (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 365, கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரகோவனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அருங்கடி அன்னை காவல் நீவி,
பெருங்கடை இறந்து மன்றம் போகிப்,
பகலே பலரும் காண, வாய்விட்டு
அகல்வயற் படப்பை அவன் ஊர் வினவிச்,
சென்மோ, வாழி தோழி, பல் நாள்  5
கருவி வானம் பெய்யாது ஆயினும்,
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
வான் தோய் மா மலைக் கிழவனை,
‘சான்றோய் அல்லை’ என்றனம் வரற்கே.

Natrinai 365, Killimankalankizhār Makanār Chērakōvanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
May you live long, my friend!
Let’s escape mother’s rigorous
guard, cross the huge gate,
reach the public grounds, and
inquire about his town
with wide fields and groves.
Let’s go and open our mouths
and talk during the day when
many can see us.

Let us tell the lord of the sky-high,
lofty mountains,
……….where,
……….even if the clouds do not rain
……….with thunder and lightning,
……….waterfalls come down with
……….roars in the mountain slopes,
that he is not a wise man.

Notes:  கருவி வானம் (6) – H.வேங்கடராமன் உரை – இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய மேகங்கள்.  குறுந்தொகை 102 – சான்றோர் அல்லர் யாம் மரீஇயோரே.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – வானம் பெய்யாதாயினும் அருவி அயம் திகழும் என்றது, தலைமகன் வரைபொருளோடு வாராது சான்றோரை விடுப்பினும் நம் தமர் மகட்கொடை நேர்வர் எனத் தோழி உள்ளுறுத்து உரைத்தாள் எனக் கொள்க.  கடி – கடி என் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம் முன்தேற்று ஆயீர் ஐந்தும் மெய்ப்படத் தோன்றும் பொருட்டு ஆகும்மே (தொல்காப்பியம், உரியியல் 87).

Meanings:  அருங்கடி – harsh protection, அன்னை காவல் – mother’s guard, நீவி – going past, பெருங்கடை இறந்து – passing the large gates, மன்றம் போகி – going to the common grounds, பகலே பலரும் காண – during the day when many will see, வாய்விட்டு – opening our mouths, அகல்வயல் – wide fields, படப்பை – grove, அவன் ஊர் வினவி சென்மோ – let us go and ask about his town (மோ – தன்மை அசைநிலை, an expletive of the first person), வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – oh friend, பல் நாள் கருவி வானம் பெய்யாது ஆயினும் – even if the clouds do not rain for many days with thunder and lightning, அருவி ஆர்க்கும் – waterfalls flow loudly, அயம் திகழ் – with abundant water, சிலம்பின் – on the mountain slopes, வான் தோய் மா மலை கிழவனை – the lord of the sky-high tall mountains, சான்றோய் அல்லை – you are not a wise man, என்றனம் – we will say so, வரற்கே – to come (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 366 , மதுரை ஈழத்துப் பூதன் தேவனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ்
வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும்
திருந்திழை அல்குல், பெருந்தோள் குறுமகள்
மணி ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇக்,
கூதிர் முல்லைக் குறுங்கால் அலரி  5
மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த
இரும் பல் மெல் அணை ஒழிய, கரும்பின்
வேல் போல் வெண்முகை விரியத் தீண்டி,
முதுக்குறைக் குரீஇ முயன்று செய் குடம்பை
மூங்கில் அம் கழைத் தூங்க ஒற்றும்  10
வட புல வாடைக்குப் பிரிவோர்
மடவர் வாழி இவ் உலகத்தானே.

Natrinai 366, Mathurai Eezhathu Poothan Thevanār, Pālai Thinai – What the hero said to his heart
They are pitiable!  May they live long in
this world, those separated from their
beloved partner in this cold season,
when the chilly northern wind blows,
opening the spear-like, white buds of
sugarcanes and attacking nests hanging
on bamboo, built with struggles, by wise
weaver birds,
abandoning sleep on the perfectly washed,
thick, soft, sapphire-hued hair with lovely
five-part braids adorned with short-stemmed
mullai flowers swarmed by male honey bees
along with their females,
of their lover with thick arms, who wears on
her waist strands of mixed gems and a delicate,
loose garment between which perfect jewels,
worn on her mound resembling raised hoods
of cobras, glitter, as she moves.

Notes:  பொருள்வயின் பிரிய எண்ணிய நெஞ்சிடம் கூறியது.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – கரும்பின் வெண்முகையிடத்து பிரிவின்றி இருக்கும் இதழை வாடை தீண்டிப் பிரிவிக்கும் என்றது, பிரிவின்றி இயலும் எமது வாழ்க்கையில் பொருள் வேட்கை தோன்றி என்னைப் பிரியச் செய்கிறது என்றும், முதுகுரீஇ முயன்று செய் குடம்பையை மூங்கிற் கழை அசைத்து அலைப்பது போல யாம் அரிதின் முயன்று பெற்ற காதலின்ப நுகர்ச்சியைப் பொருட் பிரிவு தோன்றி வருத்துகிறது என்றும் உள்ளுறை கொள்க.  இறைச்சி (1) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – மணமற்ற கரும்பின் முகையை வாடை தீண்டும் என்றது, தலைவன் நிலையில்லாத பொருளை விரும்பி முயல்கின்றான் என்பதாம்.  இறைச்சி (2) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – தூக்கணாங்குருவிக் கூட்டை வாடை மூங்கிலால் மோதச் செய்யுமென்றது, பொருள் விருப்பத்தால்வருந்துமாறு நெஞ்சம் தலைவனை அலைக்காநின்றது என்பது உணர்த்தவாம்.  இமைக்கும் திருந்திழை அல்குல் (2-3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அரவு சீறி எழுந்தாற்போன்ற அல்குல்.  நுண்ணிய வெளிய துகிலை உடுத்தவழி அத்துகில் அசையுந்தோறும் உள்ளிருந்து கண் இமைத்தல் போலுதலானே இமைக்கும் அல்குல் என்றானுமாம்.  கலித்தொகை 125 – தட அரவு அல்குல், நற்றிணை 366 – அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ் வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும் திருந்திழை அல்குல், குறிஞ்சிப்பாட்டு 102 – பை விரி அல்குல்.  நீலமணிபோல் பெண்ணின் கூந்தல்:  அகநானூறு 8 – மணி ஏர் ஐம்பால், நற்றிணை 10 – மணியின் தாழ்ந்த நல் நெடுங்கூந்தல், நற்றிணை 133 – மணி ஏர் ஐம்பால், 214 – மணி இருங்கதுப்பு, 245 – மணி மருள் ஐம்பால், 337 – மணி மருள் ஐம்பால், 366 – மணி ஏர் ஐம்பால், 374 – வீழ் மா மணிய புனை நெடுங்கூந்தல், கலித்தொகை 22 – மணி ஒளி விட்டன்ன ஐவகை, கலித்தொகை 77 – மாசு அற மண்ணுற்ற மணி ஏசும் இருங்கூந்தல், பரிபாடல் 10, குறிஞ்சிப்பாட்டு 69 – பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம் பின்னிருங் கூந்தல், 112 – மணி நிறம் கொண்ட மா இருங் குஞ்சி.

Meanings:  அரவுக் கிளர்ந்தன்ன – like a snake lifting his hood, விரவுறு – mixed, பல் காழ் – many gems, வீடுறு – loosely worn, நுண் துகில் – delicate fabric, ஊடு வந்து – coming between, இமைக்கும் – they glitter, திருந்திழை – perfect jewels, அல்குல் – mound, பெருந்தோள் – thick arms, குறுமகள் – young woman, மணி – sapphire, ஏர் ஐம்பால் – beautiful five-part hairstyle, மாசு அறக் கழீஇ – washed without blemish (கழீஇ – அளபெடை), கூதிர் முல்லை – cold season’s mullai flowers, குறுங்கால் அலரி – short-stemmed flowers, மாதர் வண்டொடு – along with female honeybees, சுரும்பு பட – male honeybees swarming, முடித்த – braided, இரும் பல் – very thick (lots of hair), மெல் அணை – soft bed, ஒழிய – abandoning, கரும்பின் – sugar cane’s, வேல் போல் வெண்முகை – spear-like white buds, விரிய – blossoming, தீண்டி – touching, hitting against, முதுக்குறைக் குரீஇ – a very wise bird (குரீஇ – அளபெடை), முயன்று – with effort, worked very hard, செய் – built, குடம்பை – nest, மூங்கில் – bamboo, அம் – beautiful, கழைத் தூங்க – hanging on the bamboo, ஒற்றும் – attacking, வட புல வாடைக்குப் பிரிவோர் – those who separate in this season with cold northern winds that blow from the north (வாடை – ஆகுபெயராய் வாடை வீசும் காலத்துக்காயிற்று), மடவர் – they are ignorant, வாழி – அசைநிலை, an expletive, may they live long, இவ் உலகத்தானே – in this world (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 367, நக்கீரர், முல்லைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கொடுங்கண் காக்கைக் கூர்வாய்ப் பேடை
நடுங்கு சிறைப் பிள்ளை தழீஇ, கிளை பயிர்ந்து,
கருங்கண் கருனைச் செந்நெல் வெண்சோறு
சூருடைப் பலியொடு கவரிய குறுங்கால்
கூழுடை நல் மனைக் குழுவின இருக்கும்  5
மூதில் அருமன் பேர் இசைச் சிறுகுடி
மெல்லியல் அரிவை! நின் பல் இருங்கதுப்பின்
குவளையொடு தொடுத்த நறு வீ முல்லைத்
தளை அவிழ் அலரித் தண் நறுங்கோதை
இளையரும் சூடி வந்தனர்; நமரும் 10
விரி உளை நன் மாக் கடைஇ,
பரியாது வருவர் இப் பனிபடு நாளே.

Natrinai 367, Nakkeerar, Mullai Thinai – What the heroine’s friend said to her
A female crow with curved eyes
and sharp beak embraces her
trembling feathered child, and
calls her flocks to eat food offerings
of fine white rice and karunai yam
with black spots, that have been
left for gods, in the famed Sirukudi
village belonging to Aruman of
ancient lineage, with fine houses
on short posts, with abundant food.

Oh delicate young woman!
He’ll come without delay in this
cold, dewy season, riding his chariot
yoked to wide-tufted fine horses.

His attendants have arrived wearing
cool fragrant garlands woven with
fine, scented jasmine and bluelilies,
like those on your dark, thick hair.

Notes:  வரவு மலிந்தது.  தலைவனின் குறித்த பருவத்தில் வருகின்றான் என்பதை அறிவுறுத்தியது.  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – காக்கையின் பெடை தன் பார்ப்பைத் தழுவிக் கொண்டு சோற்றுப்பலியைக் கவர வேண்டி, கிளையை அழைத்து மனையின்கண்ணே சூழ்ந்திருக்கும் என்றது, நீயும் நின் மகவினைத் தழுவினையாகிக் கேள்வன் கொணருகின்ற நிதியத்தை ஆர்த்துமாறு சுற்றத்தாரை அழைத்து சூழ நிறுத்தி மனையறம் நிகழ்த்துவாயாக என்றதாம்.  Karunai yam is mentioned in Natrinai 367, Puranānūru 395, 398 and Porunaratruppadai 115.   Natrinai 258, 281, 293, 343 and 367 have references to food offerings that crows eat.   The word Sirukudi is the name of a particular village indicated with the name of a leader in 6 poems – Akanānūru 54-14 (பண்ணன்), Akanānūru 117-18 (வாணன்), Akanānūru 204-12 (வாணன்), Akanānūru 269-22 (வாணன்), Natrinai 340-9 (வாணன்), Natrinai 367-6 (அருமன்).  Elsewhere, it means a small village or a small community.  கருங்கண் கருனைச் செந்நெல் (3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கரிய கண்ணையுடைய கருனைக் கிழங்கின் பொறிக்கறியோடு.

Meanings:  கொடுங்கண் காக்கை – crow with curved eyes, கூர்வாய்ப் பேடை – female with sharp beak, நடுங்கு சிறைப் பிள்ளை தழீஇ – embraced the trembling feathered/winged child (தழீஇ – அளபெடை), கிளை பயிர்ந்து – calls the flock, கருங்கண் கருனை – yam with black spots, elephant foot yam, செந்நெல் – fine paddy, red paddy, வெண்சோறு – white rice, சூருடைப் பலியொடு – given as offering to god, கவரிய – to seize, to eat, குறுங்கால் – short legs, short posts, கூழுடை நல் மனை – fine houses with food, fine houses with wealth, குழுவின இருக்கும் – they are together, மூதில் – ancient houses, அருமன் பேர் இசைச் சிறுகுடி – Sirukudi village of Aruman with great fame, மெல்லியல் அரிவை – delicate natured young woman, நின் – your, பல் இருங்கதுப்பின் – like those on your thick dark hair, குவளையொடு தொடுத்த – strung with blue waterlilies, நறு வீ முல்லை – fragrant mullai flowers, தளை அவிழ் அலரி – flowers that are opening loosening their tightness, தண் நறுங்கோதை – cool fragrant garlands, இளையரும் – also the servants, also the attendants, சூடி வந்தனர் – they came wearing, நமரும் – our man, விரி உளை நன் மாக் கடைஇ – ride the wide-tufted fine horses (கடைஇ – அளபெடை), பரியாது வருவர் – he will come without delay, he will come without sorrow, இப் பனிபடு நாளே – on this cold winter day (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 368, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவனிடம் சொன்னது
பெரும்புனம் கவரும் சிறு கிளி ஓப்பி,
கருங்கால் வேங்கை ஊசல் தூங்கிக்,
கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து, நும்மொடு
ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ?
நெறிபடு கூழைக் கார் முதிர்பு இருந்த  5
வெறி கமழ் கொண்ட நாற்றமும், சிறிய
பசலை பாய்தரு நுதலும் நோக்கி,
வறிது உகு நெஞ்சினள், பிறிது ஒன்று சுட்டி
வெய்ய உயிர்த்தனள் யாயே,
ஐய! அஞ்சினம், அளியம் யாமே.  10

Natrinai 368, Kapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
Is there anything sweeter than chasing
small parrots in our large millet field,
playing on swings tied to vēngai trees
with dark colored trunks,
wearing leaf skirts covering our tall,
lifted loins, and playing with you in the
waterfalls?

Smelling the strong fragrance in her
curly, black hair, and looking at the
pallor on her small forehead,
our mother sighed hot breaths with an
empty, broken heart.

Lord!  We are afraid!  We are pitiable!

Notes:  தலைவியை தாய் இற்செறிப்பாள் என்பதனை உணர்ந்து வரைவு கடாயது.  யாய் (9) – ஒளவை துரைசாமி உரை – ஈண்டு இற்செறிப்பின் மேற்று யாய், நற்றாய்.  வறிது – வறிது சிறிது ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 40).

Meanings:  பெரும்புனம் – big millet field, கவரும் – they eat, they take, சிறு கிளி – small parrots, ஓப்பி – chase, கருங்கால் வேங்கை – kino trees with big/sturdy/dark-colored trunks, Pterocarpus marsupium, ஊசல் – swing (ஊஞ்சல்), தூங்கி – to sway, to swing, கோடு ஏந்து அல்குல் – lifted loins with lines, tall lifted loins, தழை அணிந்து – wearing leaf skirts, நும்மொடு – with you, ஆடினம் வருதலின் – more than playing with you, இனியதும் உண்டோ – is there anything sweeter?, நெறிபடு – curly, wavy, perfect, கூழைக் கார் முதிர்பு இருந்த – in her very black hair, வெறி கமழ் கொண்ட – with strong fragrance, நாற்றமும் – and fragrance, சிறிய – small (forehead), பசலை பாய்தரு நுதலும் நோக்கி – seeing spreading pallor on her forehead, வறிது உகு நெஞ்சினள் – with an empty broken heart, பிறிது ஒன்று சுட்டி – considering about something, வெய்ய உயிர்த்தனள் யாயே – her mother sighed hot breaths, her mother sighed deeply ஐய அஞ்சினம் – sir we are scared, அளியம் யாமே – we are pitiable (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 369, மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
சுடர் சினம் தணிந்து குன்றம் சேர
நிறை பறைக் குருகினம் விசும்பு உகந்து ஒழுக,
எல்லை பைபயக் கழிப்பி, முல்லை
அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை
இன்றும் வருவது ஆயின், நன்றும்   5
அறியேன், வாழி தோழி! அறியேன்,
ஞெமை ஓங்கு உயர்வரை இமையத்து உச்சி,
வாஅன் இழிதரும் வயங்கு வெள்ளருவிக்
கங்கை அம் பேர் யாற்றுக் கரை இறந்து இழிதரும்
சிறை அடு கடும் புனல் அன்ன, என்  10
நிறை அடு காமம் நீந்துமாறே.

Natrinai 369, Mathurai Olai Kadayathār Nalvellaiyār, Neythal Thinai – What the heroine said to her friend
May you live long, oh friend!
The sun’s heat subsides and
it reaches the mountains,
flocks of herons with full wings
fly high in the sky as daytime
ends little by little,
and mullai blossoms open their
petals in this greatly sad evening.

I do not know if it will distress me
today, this love of mine, in which I
swim, which is like the fierce flood
of the Ganges river that goes over its
shores and breaks dams as it flows
down as white waterfalls from the
summits of the tall Himalayas with
soaring gnemai trees.

Notes:  வரைந்து கொள்ளாது தலைவன் பொருள்வயின் பிரிந்த வேளையில் தோழியிடம் கூறியது.  வரலாறு:  கங்கை.

Meanings:  சுடர் சினம் தணிந்து குன்றம் சேர – the sun’s heat decreases and it reaches the mountains, நிறை பறைக் குருகினம் – herons/storks/cranes with full wings, விசும்பு உகந்து ஒழுக – fly high in the sky, எல்லை பைபயக் கழிப்பி – day time ends slowly and slowly (பைபய – பையப்பைய பைபய என மருவியது), முல்லை அரும்பு வாய் அவிழும் – when jasmine buds open their petals, பெரும் புன் மாலை – greatly sad evening, இன்றும் வருவது ஆயின் – if it will come again today, நன்றும் – greatly,  அறியேன் – I will not know, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – oh friend, அறியேன் – I do not know, ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து – from the tall Himalayas with tall gnemai trees, Anogeissus latifolia, உச்சி வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவி – white waterfalls that flow from the summits due to the rain from the sky, கங்கை அம் பேர் யாற்றுக் கரை இறந்து இழிதரும் – of the beautiful big Ganges river that flows past the shores, சிறை அடு – breaking the dam, கடும் புனல் அன்ன – like the fierce flood, என் நிறை அடு காமம் நீந்துமாறே  – to swim in love which ruins my fullness (நீந்துமாறே – நீந்தும் ஆறு, ஏ அசைநிலை, an expletive)

நற்றிணை 370, உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார், மருதத் திணை – தலைவன் பாணனிடம் சொன்னது
வாராய் பாண, நகுகம்! நேரிழை
கடும்புடைக் கடுஞ்சூல் நம் குடிக்கு உதவி,
நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள் காழ்
விளங்கு நகர் விளங்கக் கிடந்தோள் குறுகி,
‘புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து, அவ்வரித்  5
திதலை அல்குல் முது பெண்டு ஆகி,
துஞ்சுதியோ மெல் அம் சில் ஓதி?’ எனப்,
பல் மாண் அகட்டில் குவளை ஒற்றி,
உள்ளினென் உறையும் எற் கண்டு, மெல்ல
முகை நாள் முறுவல் தோற்றி,  10
தகை மலர் உண்கண் கை புதைத்ததுவே.

Natrinai 370, Uraiyūr Kathuvāy Sāthanār, Marutham Thinai – What the hero said to the messenger bard
Come here oh bard!  Let us laugh!
The woman with perfect jewels,
lying in our bright, flourishing house,
her body shining with ghee and white
mustard paste, had just given birth to
our son, a gift to our family, surrounded
by relatives.

I approached her and asked, “Oh woman
with delicate, lovely hair, beautiful lines
and pallor spots on your loins!
You have become a mature woman with
the birth of our son.  Are you sleeping?”
and rubbed a kuvalai blossom on her
very beautiful stomach.

She looked at me who stood there thinking
about her beauty, smiled, her smile resembling
fresh jasmine buds, and covered with her hands
her flower-like, esteemed, fine eyes decorated
with kohl.

Notes:  பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனைத் தலைவி ஊடி நின்றாள்.  தலைவன் இதைப் பாணனிடம் கூறியது.   கலித்தொகை 118 – முகை முகம் திறந்தன்ன முறுவலும்.

Meanings:  வாராய் பாண – come here oh bard, நகுகம் – let us laugh, நேரிழை – the woman wearing perfect jewels (அன்மொழித்தொகை), கடும்புடை – surrounded by relatives, கடுஞ்சூல் – first pregnancy, late pregnancy, நம் குடிக்கு – for our family, உதவி – helped, நெய்யோடு இமைக்கும் ஐயவி – white mustard mixed with ghee, white mustard mixed with oil, திரள் காழ் – thick seeds, round seeds, விளங்கு நகர் விளங்க – the flourishing house shining, கிடந்தோள் – she was lying down, குறுகி – went near, புதல்வன் ஈன்றென – since she gave birth to a young son, பெயர் பெயர்த்து – got the title as a mother,  அவ்வரி – beautiful lines, திதலை அல்குல் – loins with pallor spots, முது பெண்டு ஆகி – has become a mature woman, துஞ்சுதியோ – are you sleeping, மெல் அம் சில் ஓதி – oh woman with delicate beautiful fine hair (அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), என பல் மாண் – with many esteem, அகட்டில் குவளை ஒற்றி – touched her stomach with blue waterlilies, உள்ளினென் உறையும் எற் கண்டு – looked at me who was thinking and staying there, மெல்ல முகை நாள் முறுவல் – smile like a new jasmine bud, தோற்றி – created, தகை – beautiful, with esteem, மலர் உண்கண் – flower-like eyes decorated with kohl, கை புதைத்ததுவே – hid with her hands (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 371, ஒளவையார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
காயாங்குன்றத்துக் கொன்றை போல
மா மலை விடர் அகம் விளங்க மின்னி,
மாயோள் இருந்த தேஎம் நோக்கி,
வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய்ப்,
பெயல் தொடங்கினவே பெய்யா வானம்;  5
நிழல் திகழ் சுடர்த் தொடி ஞெகிழ ஏங்கி
அழல் தொடங்கினளே ஆயிழை, அதன் எதிர்
குழல் தொடங்கினரே கோவலர்,
தழங்கு குரல் உருமின் கங்குலானே.

Natrinai 371, Avvaiyār, Mullai Thinai – What the hero said to his charioteer
Lightning strikes causing crevices in
the huge mountains to appear bright,
like mountains with kaya and kondrai
flower blossoms.

I turn toward to where my
dark-colored, beautiful woman lives.
Rain has started to pour hiding
everything in sight in the wide, dark
sky that had not rained in the past.

Her bright shining bangles slips down,
and the young woman wearing beautiful
jewels starts to cry.  The cattle herders
there play flutes that sound like thunder
that roars at night time.

Go faster, my charioteer!

Notes:  வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனிடம் கூறியது.

Meanings:  காயாங்குன்றத்து – on the mountains with kāyā trees, Memecylon edule, கொன்றை போல – like kondrai flowers, laburnum with golden yellow flowers, Golden shower tree, Cassia fistula, மா மலை – tall mountains, விடர் அகம் – inside the crevices, விளங்க மின்னி – causing bright lightning strikes, மாயோள் – the dark colored woman, மாந்தளிர் மேனியோள், இருந்த தேஎம் – the direction that she was (தேஎம் – அளபெடை), நோக்கி – looked, வியல் – wide, large, இரு – dark, விசும்பு அகம் புதையப் பாஅய் – spread hiding the wide sky, பெயல் தொடங்கினவே – rain has started to pour (ஏ – அசைநிலை, an expletive), பெய்யா வானம் – sky that did not rain until now, நிழல் திகழ் சுடர்த் தொடி – bright shiny bangles, ஞெகிழ – slipping down, getting loose, ஏங்கி – pining, அழல் தொடங்கினளே – she started to cry (ஏ – அசைநிலை, an expletive), ஆயிழை – the woman with chosen jewels, the woman with beautiful jewels (சுட்டுப் பெயர், demonstrative pronoun, அன்மொழித்தொகை), அதன் எதிர் – front of her, குழல் தொடங்கினரே – they started to play their flutes (ஏ – அசைநிலை, an expletive), கோவலர் – the cattle herders, தழங்கு குரல் – roaring sounds, உருமின் – like thunder (இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), கங்குலானே – at night (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 372, உலோச்சனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அழிதக்கன்றே தோழி, கழி சேர்பு
கானல் பெண்ணைத் தேனுடை அழி பழம்,
வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபு,
அள்ளல் இருஞ்சேற்று ஆழப் பட்டெனக்,
கிளைக் குருகு இரியும் துறைவன் வளைக் கோட்டு  5
அன்ன வெண்மணற்று அகவயின், வேட்ட
அண்ணல் உள்ளமொடு அமர்ந்து, இனிது நோக்கி
அன்னை தந்த அலங்கல் வான்கோடு
உலைந்து ஆங்கு நோதல் அஞ்சி, ‘அடைந்ததற்கு
இனையல் என்னும்’ என்ப, மனை இருந்து,  10
இருங்கழி துழவும் பனித்தலைப் பரதவர்
திண் திமில் விளக்கம் எண்ணும்
கண்டல் வேலிக் கழி நல்லூரே.

Natrinai 372, Ulōchanār, Neythal Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
Don’t feel sad, oh friend!
Your noble mind desires to unite
with the lord of the shores with
white sand that appears like the
curved conch shells,
where, an over-ripe, honey-sweet
palmyra fruit from a tree in the
groves near the brackish waters,
snaps from its stem and falls deep
into the black mud, causing the
big-petaled blue waterlily blossoms
to become sad, and bevy of herons
fly away in fear.

The people in this fine town with kandal
tree fences, who stay at home counting 
lights lit by fishermen trembling in the cold,
who go to fish on the vast backwaters in
in cold weather, think that you are sad,
and tell you “Do not worry” when the
stick your mother gave to you, looking
at you sweetly, to chase birds, broke.

Notes:  தாய் இற்செறிப்பாள் என அஞ்சிய தலைவியிடம் தோழி கூறியது.  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பனம்பழம் நெய்தல் வருந்தச் சேற்றில் விழக்கண்டு குருகினம் இரியுமென்றது, தலைமகன் களவொழுக்கெங் கெட நின்னை மணப்பின் அலர்வாய்ப் பெண்டிர் இரிந்தொழிவர் என்பதாம்.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – மகளிர் தம் மனையிலிருந்து திமில் விளக்குகளை எண்ணுவர் என்றது, தலைவியும் தோழியும் இல்லிருந்து தலைவன் தந்த துன்பங்கள் எண்ணுவாராயினர் என்பது உணர்த்தவாம்.  மூக்கு – பொ. வே. சோமசுந்தரனார் உரை, ஐங்குறுநூறு 213 – மூக்கு = காம்பு.  வளைக் கோட்டு (5) – ஒளவை துரைசாமி உரை – சங்குகள் நிறைந்த, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வளையாகிய சங்கு போன்ற.   மணற்று (6) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மணலையுடையது என்னும் முற்றெச்சம்.  வான்கோடு (8) – ஒளவை துரைசாமி உரை – தலையுடைய மெல்லிய கோல், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – குழையுடைய பெரிய கோடு.  நற்றிணை 6 – அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி, நற்றிணை 24 – விளவின் ஆட்டு ஒழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு, நற்றிணை 372 – பெண்ணைத் தேனுடை அழி பழம் வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபு அள்ளல் இருஞ்சேற்று ஆழப் பட்டென, ஐங்குறுநூறு 213 – நறு வடி மாஅத்து மூக்கு இறுபு உதிர்த்த.

Meanings:  அழிதக்கன்றே – it is not fitting for you to feel sad, do not feel sad (ஏ – அசைநிலை, an expletive), தோழி – oh friend, கழி சேர்பு கானல் பெண்ணை – palmyra tree in the groves near the backwaters, Borassus flabellifer, தேன் உடை அழி பழம் – an over-ripe honey-sweet fruit, வள் இதழ் நெய்தல் வருந்த – blue waterlilies with huge/thick petals to be sad, மூக்கு இறுபு அள்ளல் இருஞ்சேற்று ஆழப்பட்டென – since it fell deep into the black mud when the stem snapped, கிளைக் குருகு இரியும் – flocks of herons/egrets/storks fly away, துறைவன் – man from this port/shore, வளைக் கோட்டு அன்ன வெண்மணற்று – with white sand that is like the curved conch, with white sand with conch shells on the banks (மணற்று – மணலையுடையது என்னும் முற்றெச்சம்), அகவயின் – in the place, வேட்ட அண்ணல் உள்ளமொடு – with esteemed mind that desires, அமர்ந்து இனிது நோக்கி – sitting and looking sweetly, அன்னை தந்த அலங்கல் வான் கோடு – the big swaying stick that mother gave, உலைந்து – bending, breaking, ஆங்கு – அசைநிலை, expletive, நோதல் – suffering in pain, அஞ்சி – fearing, அடைந்ததற்கு இனையல் என்னும் – “do not feel sorry for what happened” they say, என்ப – அசைநிலை, an expletive, they say, மனை இருந்து – staying at home, இருங்கழி துழவும் – search in the vast/dark backwaters, பனித்தலை பரதவர் – the fishermen who are trembling in the cold, திண் திமில் விளக்கம் எண்ணும் – they count the lights that fishermen have on their sturdy boats, கண்டல் வேலிக் கழி நல் ஊரே – the people in this fine town with backwaters with kandal tree fences (கண்டல் – Rhizophora mucronate which is a mangrove tree or Pandanus odoratissimus according to the University of Madras Lexicon, ஊரே – ஏ அசைநிலை, an expletive) 

நற்றிணை 373, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
முன்றில் பலவின் படுசுளை மரீஇப்,
புன்தலை மந்தி தூர்ப்பத் தந்தை
மைபடு மால் வரை பாடினள் கொடிச்சி,
ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு
சூருடைச் சிலம்பின் அருவி ஆடிக்,  5
கார் அரும்பு அவிழ்ந்த கணிவாய் வேங்கைப்
பா அமை இதணம் ஏறிப், பாசினம்
வணர் குரற் சிறு தினை கடியப்,
புணர்வது கொல்லோ நாளையும் நமக்கே?

Natrinai 373, Kapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
Will he join us tomorrow,
the lord of the mountains,
……….where a monkey with a small
……….head tears jackfruit segments
……….from a fruit on a tree in the
……….front yard and throws the seeds
……….down and a mountain woman
……….pounds milky white aivanam rice
……….and sings the praises of the
……….mountains surrounded by dark
……….clouds in her father’s land,
to play in the waterfalls on the fierce
mountain and to climb on the wide
platform on the vēngai tree with dark
buds that open to predict harvest,
and to chase parrot flocks that come to
eat the heavy, bent clusters of tiny millet?

Notes:  அன்னை இற்செறிக்க எண்ணுகின்றாள் எனக் குறிப்பால் கூறியது.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – மூன்றிலிடத்து நின்ற பலவின் முது சுளையைப் பொருந்தி மந்தி உண்ணக் கொடிச்சி மால்வரை பாடி ஐவன நெல்லைக் குறுவள் என்றது, யாம் தலைமகனோடு இருந்து இன்புறுவேமாகத் தமர் தினை விளைவு பேசி அதனைக் கொய்தற்குச் சூழ்வாராயினர் என்பது.  சூர் (5) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அச்சம்.  ஒளவை துரைசாமி உரை – சிறு தெய்வம்.  அச்சம் செய்யும் இயல்பினால் அது சூர் எனப்பட்டது.  The vēngai tree is considered to be an astrologer since it produces flowers right before millet harvest.  When the mountain dwellers see vēngai buds open, they start harvesting the millet.

Meanings:  முன்றில் – front yard (இல் முன்), பலவின் – of the jackfruit tree, Artocarpus heterophyllus, படுசுளை மரீஇ – tears the jackfruit segments that are there (மரீஇ – அளபெடை), புன்தலை – small head, delicate head, head with parched hair, மந்தி – female monkey, தூர்ப்ப – கீழே உதிர்ப்ப, it threw down, தந்தை – father, மைபடு – with clouds, மால் வரை – tall mountains, dark mountains, பாடினள் – she sang, கொடிச்சி – mountain woman, ஐவன – Oryza mutica, mountain rice, வெண்ணெல் – white rice paddy, குறூஉம் – she pounds (அளபெடை), நாடனொடு – with the man from such country, சூருடைச் சிலம்பின் அருவி ஆடி  – played in the waterfalls on the fierce mountain slopes, played in the waterfalls on the mountain slopes with deities, கார் அரும்பு – dark buds, அவிழ்ந்த – opened, கணிவாய் – one who calculates time,  one who is like an astrologer, one who predicts harvest, வேங்கை – vēngai tree, kino tree, Pterocarpus marsupium, பா – wide, அமை – erected, இதணம் – platform, ஏறி – climbed, பாசினம் – green parrot flocks, வணர் – bent,  குரல் – spears, clusters, சிறு – small, tiny, தினை – millet, கடிய – to chase, புணர்வது கொல்லோ – will he join (கொல் – ஐயப்பொருட்டு, ஓ – அசைநிலை), நாளையும் நமக்கே – tomorrow with us (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 374, வன்பரணர், முல்லைத் திணை – தலைவன் வழியில் கண்டோரிடம் சொன்னது
முரம்புதலை மணந்த நிரம்பா இயவின்
ஓங்கித் தோன்றும் உமண் பொலி சிறுகுடிக்
களரிப் புளியின் காய் பசி பெயர்ப்ப
உச்சிக் கொண்ட ஓங்கு குடை வம்பலீர்!
முற்றையும் உடையமோ மற்றே, பிற்றை  5
வீழ் மா மணிய புனை நெடுங்கூந்தல்
நீர் வார் புள்ளி ஆகம் நனைப்ப,
விருந்து அயர் விருப்பினள் வருந்தும்
திருந்திழை அரிவைத் தேமொழி நிலையே.

Natrinai 374, Vanparanar, Mullai Thinai – What the hero said to those on the path
Oh strangers with tall umbrellas
raised above your head,
who eat unripe tamarind fruits
growing in the parched land,
to get rid of your hunger in the
small path filled with pebbles,
where there is a small village with
many salt merchants, that appears tall!

My young wife with perfect jewels,
long, lovely, sapphire-colored hair,
and sweet words was sad, because I left,
her tears wetting her chest with spots.
Now she will desire to cook festive foods
for me like in the past.

Notes:  வினை முற்றி மீளும் தலைவன் வழியில் கண்டோரிடம் கூறியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – பின்பு பிற்றை என்பது போல முன்பு முற்றை எனத் திரிந்தது போலும்.  உடையமோ (5) – ஒளவை துரைசாமி உரை – உடையம், ஓகாரம் அசைநிலை, முன்பும் பெற்றுடையம், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – முன்பும் இவ்வாறு இருக்க முழுதும் பெற்றுடையோமோ?  இல்லை கண்டீர்.  இப்பொழுது தான் பெறலாகியதே!  இஃது என்ன வியப்பு.  முற்றை (5) – ஒளவை துரைசாமி உரை – முற்றை என்பது முன்றை என்பதன் விகாரம், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பின்பு பிற்றை என்பது போல முன்பு முற்றையெனத் திரிந்தது போலும்.  அருகிய வழக்கு.  நீலமணிபோல் பெண்ணின் கூந்தல்:  அகநானூறு 8 – மணி ஏர் ஐம்பால், நற்றிணை 10 – மணியின் தாழ்ந்த நல் நெடுங்கூந்தல், நற்றிணை 133 – மணி ஏர் ஐம்பால், 214 – மணி இருங்கதுப்பு, 245 – மணி மருள் ஐம்பால், 337 – மணி மருள் ஐம்பால், 366 – மணி ஏர் ஐம்பால், 374 – வீழ் மா மணிய புனை நெடுங்கூந்தல், கலித்தொகை 22 – மணி ஒளி விட்டன்ன ஐவகை, கலித்தொகை 77 – மாசு அற மண்ணுற்ற மணி ஏசும் இருங்கூந்தல், பரிபாடல் 10, குறிஞ்சிப்பாட்டு 69 – பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம் பின்னிருங் கூந்தல், 112 – மணி நிறம் கொண்ட மா இருங் குஞ்சி.

Meanings:  முரம்புதலை மணந்த – place filled with pebbles, high grounds with pebbles, நிரம்பா இயவின் – in the small path, in the path that is unable to go on, ஓங்கித் தோன்றும் – appearing tall, உமண் பொலி சிறுகுடி – small village with many salt merchants (பொலி – நிறைந்த) , களரி – salty land, புளியின் காய் – unripe fruits of tamarind trees, பசி பெயர்ப்ப – for hunger to be gone, உச்சிக் கொண்ட – held above the head, ஓங்கு குடை வம்பலீர் – oh strangers with tall umbrellas, முற்றையும் உடையமோ –  I have received in the past (உடையம் – தன்மைப் பன்மை, first person plural, ஓ – அசைநிலை, an expletive), மற்றே – மற்று, ஏ – அசைநிலைகள், expletives, பிற்றை – after that (பிற்றை பின்றை என்பதன் விகாரம்), வீழ் மா மணிய – having the attributes of desirable dark sapphires, appearing like desirable sapphire gems, புனை நெடுங்கூந்தல் – beautiful long hair, நீர் வார் – dripping tears, புள்ளி ஆகம் நனைப்ப – wetting her chest with spots, விருந்து அயர் விருப்பினள் – she with the desire to be hospitable to me who is coming as a new person, she is with the desire to cook festive foods for me who has come as a new person, வருந்தும் – is sad, திருந்திழை அரிவை – the young woman with perfect jewels, தேமொழி – sweet words, honey like words, நிலையே – situation (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 375, பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி, நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நீடு சினைப் புன்னை நறும் தாது உதிரக்,
கோடு புனை குருகின் தோடு தலைப்பெயரும்
பல் பூங்கானல் மல்கு நீர்ச் சேர்ப்ப!
அன்பு இலை, ஆதலின், தன் புலன் நயந்த
என்னும் நாணும் நன்னுதல் உவப்ப,  5
வருவை ஆயினோ நன்றே, பெருங்கடல்
இரவுத்தலை மண்டிலம் பெயர்ந்தென, உரவுத் திரை
எறிவன போல வரூஉம்
உயர் மணல் படப்பை எம் உறைவின் ஊரே.

Natrinai 375, Pothumpil Kizhār Makanār Venkanni, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
Oh lord of the shores with abundant water,
where groves are filled with many flowers,
and herons that adorn the tall punnai tree
branches fly away with their flocks causing
fragrant flower pollen to drop!

You have no love for her!  She is shy even
with me who cares for her.  So, make the
young woman with a fine brow happy.

Come to our town with seaside groves and
sand dunes, where strong ocean waves crash
on the shore as though they are attacking,
caused by the full moon that rises at night!

Notes:  தலைவன் வரையாது நெடுங்காலம் வந்தொழுக, தலைவியின் நிலையை உணர்த்தி வரைவு கடாயது.  மண்டிலம் (7) – ஒளவை துரைசாமி உரை – வட்டம், ஈண்டு முழுத் திங்கள் மேற்று.  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – புன்னைக் கிளைகளில் வைகிய குருகினம் அதன் மகரந்தம் உதிருமாறு கொம்பை அலைத்தெழுந்து செல்லுஞ்சேர்ப்பன் என்றதனால், களவொழுக்கம் மேற்கொண்டு தலைவிபால் வைகிய நீ அவள் அழுது கண்ணீர் வடிக்குமாறு கையகன்று போயினை.  இனி அங்கனமின்றி பிரியாது உறைவாயாக என்பதாம்.  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – திங்களைக் கண்டு கடல் பொங்கி அலை எழுந்து ஆரவாரிக்கும் என்றது, நீ வரைவொடு வருதல் கண்டு எமர் எதிர்கொண்டு மகிழ்ந்து ஆரவாரிப்பர் என்றதாம்.

Meanings:  நீடு சினைப் புன்னை – punnai trees with tall branches, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, நறும் தாது உதிர – causing fragrant pollen to drop, கோடு புனை குருகின் தோடு – the flocks of herons/egrets, storks adorning the branches, தலைப்பெயரும் – they move away, பல் பூங்கானல் – seashore grove with many flowers, மல்கு நீர்ச் சேர்ப்ப – oh lord of the shores with abundant water, அன்பு இலை – you have no love, you have no kindness (இலை – இல்லை என்பதன் விகாரம்), ஆதலின் – so, தன் – self, புலன் – intelligence, நயந்த – desired, என்னும் – even to me, நாணும் – she is shy, நன்னுதல் – the young woman with a fine forehead (நன்னுதல் – பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, an attributive compound), உவப்ப – to make her happy, வருவை ஆயினோ – if you come (ஓ – அசைநிலை, an expletive), நன்றே – it would be nice,  (ஏ – அசைநிலை, an expletive), பெருங்கடல் – the vast ocean, இரவுத்தலை – at night, மண்டிலம் பெயர்ந்தென – because the full moon rose up, உரவுத் திரை எறிவன போல வரூஉம் – strong waves come like they are attacking (வரூஉம் – அளபெடை), உயர் மணல் – sand dunes, படப்பை – groves, எம் உறைவின் ஊரே – the town where we live (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 376, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி கிளிகளிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
முறஞ்செவி யானைத் தடக் கையின் தடைஇ
இறைஞ்சிய குரல பைந்தாட் செந்தினை,
வரையோன் வண்மை போல பல உடன்
கிளையோடு உண்ணும் வளைவாய்ப் பாசினம்,
குல்லை குளவி கூதளம் குவளை  5
இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன்,
சுற்று அமை வில்லன், செயலைத் தோன்றும்
நல் தார் மார்பன், காண்குறின், சிறிய
நன்கு அவற்கு அறிய உரைமின், பிற்றை
அணங்கும் அணங்கும் போலும், அணங்கி  10
வறும்புனம் காவல் விடாமை
அறிந்தனிர் அல்லிரோ, அறன் இல் யாயே?

Natrinai 376, Kapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to the parrots, as the hero listened nearby
Oh parrots!  You who are here with
your flocks of relatives with curved
beaks to eat our red millet on big, bent
spears, as big as the trunks of elephants
with ears as large as winnowing trays,
that are generous to you like a donor
who gives without limits!

Don’t you know her unfair mother will not
allow her to guard the millet field any more,
and fearing, might arrange for a veriyāttam
ritual to appease tormenting Murukan?

If you see her lover who is under an asoka
tree, wearing a strand tied with kullai, kulavi,
koothalam, kuvalai and illam flowers on his
head, adorned with a fine garland on his chest,
and bearing a tightly strung bow, let him know
about the situation here.  

Notes:  களவில் வந்தொழுகும் தலைவன் சிறைப்புறமாக இருப்பதை அறிந்த தோழி, தலைவி இற்செறிக்கப்பட்டாள் என்பதை அவனுக்கு அறிவுறுத்தி, விரைவில் மணம் செய்யுமாறு வேண்டுகின்றாள்.  Natrinai 54, 70, 102, 277 and 376 are messenger poems, where the heroine sends messages to the hero through birds and a bee.  Poem 83 is an address to an owl by the heroine’s friend.  யானையின் முறம் போன்ற செவி – நற்றிணை 376 புறநானூறு 339, நற்றிணை 376, கலித்தொகை 52 – முறஞ்செவி யானை, கலித்தொகை 42 – முறஞ்செவி வாரணம்.   அறன் இல் யாய் – குறுந்தொகை 244, 262, நற்றிணை 63, 145, 376.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25). 

Meanings:  முறம் செவி யானை – elephants with wide ears like a முறம்/winnowing tray, தடக் கையின் – like the big/curved trunks (இன் உருபு ஒப்புப் பொருளது), தடைஇ – are bent, are thick (தட என்னும் உரிச்சொல் அடியாகப் பிறந்த வினையெச்சம், அளபெடை), இறைஞ்சிய குரல – with curved spikes, with curved spears (குரல – குறிப்புப் பெயரெச்சம்), பைந்தாள் – fresh stalks, செந்தினை – red millet, வரையோன் – a man who gives without limits, வண்மை போல – like that charity, பல உடன் – with many, கிளையோடு உண்ணும் – eating with the flock, வளைவாய்ப் பாசினம் – parrot flocks with curved beaks, குல்லை – marijuana or basil, குளவி – malai malli, panneer poo, Millingtonia hortensis, கூதளம் – koothalam, Convolvulus ipome, a three-lobed nightshade vine, குவளை – blue waterlilies, இல்லமொடு – illam tree, சில்லம், தேற்றா மரம், Strychnos potatorum Linn, மிடைந்த – created, woven, ஈர்ந்தண் கண்ணியன் – the man wearing a cool flower strand on his head, சுற்று அமை வில்லன் – the man with a perfectly tied bow, செயலை – asoka tree, Saraca indica, தோன்றும் – appearing, நல் தார் மார்பன் – the man wearing a fine garland on his chest, காண்குறின் – if you see him, சிறிய – little bit, நன்கு அவற்கு அறிய உரைமின் – tell him clearly for him to understand (முன்னிலைப் பன்மை ஏவல் வினைமுற்று விகுதி, a verbal command plural suffix), பிற்றை – after that (பிற்றை பின்றை என்பதன் விகாரம்), அணங்கும் அணங்கும் போலும் – like Murukan who will torment her – when mother arranges for veriyāttam, அணங்கி – her mother causing distress to her, வறும்புனம் காவல் விடாமை – not letting her go to the dried field to protect it, அறிந்தனிர் அல்லிரோ – don’t you know that, அறன் இல் யாயே – mother without fairness (அறன் – அறம் என்பதன் போலி, யாயே – ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 377, மடல் பாடிய மாதங்கீரனார், குறிஞ்சித் திணை – தலைவன் தோழி கேட்பத் தன்னுள்ளே கூறியது
மடல் மா ஊர்ந்து மாலை சூடிக்,
கண் அகன் வைப்பின் நாடும் ஊரும்
ஒண்ணுதல் அரிவை நலம் பாராட்டி,
பண்ணல் மேவலமாகி அரிது உற்று,
அது பிணி ஆக, விளியலம் கொல்லோ,  5
அகல் இரு விசும்பின் அரவுக் குறைபடுத்த
பசுங்கதிர் மதியத்து அகல் நிலாப் போல,
அளகம் சேர்ந்த சிறுநுதல்,
கழறுபு மெலிக்கும் நோய் ஆகின்றே?

Natrinai 377, Madal Pādiya Māthankeeranār, Kurinji Thinai – What the hero said, as the heroine’s friend listened
It would be difficult for me
to wear a garland, climb on
a madal horse,
and go around to large
countries and towns, to sing
the praises of the young
woman with a bright forehead.
That would bring a lot of pain.
Won’t I rather die? 

I am wasting away thinking of
this young woman with a small
forehead surrounded with hair,
that resembles the wide moon
with cool rays, in the huge, dark
sky, that is reduced by a snake.

The thought of her chiding me,
has brought me distress.

Notes:  தலைவியைச் சந்திக்கத் தலைவன் தோழியை அணுகுகின்றான்.  அவன் வரைந்து கொள்ள வேண்டும் என்பதால் அவள் மறுத்துக் கூறவே, தலைவன் கூறியது.  விளியலம் (5) – ஒளவை துரைசாமி உரை – விளியலம் என்ற எதிர்மறை முற்று ஓகார எதிர்மறை புணர்ந்து விளிகுவம் என்ற உடன்பாட்டுப் பொருள் தந்தது.  அரவு நுங்கு மதி: குறுந்தொகை 395 – அரவு நுங்கு மதியினுக்கு, அகநானூறு 114 – அரவு நுங்கு மதியின், அகநானூறு 313 – அரவு நுங்கு மதியின், நற்றிணை 377 – அரவுக் குறைபடுத்த பசுங்கதிர் மதியத்து, புறநானூறு 260 – பாம்பின் வை எயிற்று உய்ந்த மதியின், கலித்தொகை 15 – பாம்பு சேர் மதி போல, கலித்தொகை 104 – பால் மதி சேர்ந்த அரவினை, பரிபாடல் 10-76 – அரவு செறி உவவு மதியென, பரிபாடல் 11 – பாம்பு ஒல்லை மதியம் மறையவரு நாளில், சிறுபாணாற்றுப்படை 185 – மதி சேர் அரவின்.  மடல் ஏறுதல் –  சங்க இலக்கியத்தில் மொத்தம் 16 பாடல்களில் மடல் ஏறுதல் பற்றிய குறிப்புகள் உள்ளன – குறுந்தொகை 14, 17, 32, 173, 182, நற்றிணை 146, 152, 220, 342, 377, கலித்தொகை 58, 61, 138, 139, 140, 141.  கலித்தொகை 138, 139, 140, 141 பாடல்களில் மட்டுமே தலைவன் மடல் குதிரையின் மீது செல்கின்றான்.  கலித்தொகை 138, 141 ஆகிய பாடல்களில் மடல் ஏறியதால் தலைவியை அடைகின்றான்.

Meanings:  மடல் மா ஊர்ந்து – riding on the palmyra stem horse (madal horse), Borassus flabellifer, மாலை சூடி – wearing a garland, கண் அகன் வைப்பின் – in the wide spaces, நாடும் – and country, ஊரும் – and towns, ஒண்ணுதல் அரிவை – young woman with a bright forehead, நலம் – beauty, பாராட்டி – appreciating, பண்ணல் – to do it, மேவலம் ஆகி – me going, me with desire (ஒளவை துரைசாமி உரை – விரும்பினோமாகி, H. வேங்கடராமன் உரை – செல்வேமாகி, மேவலம் – தன்மைப் பன்மை, first person plural), அரிது உற்று – it is difficult, அது பிணி ஆக – since that is painful, விளியலம் கொல்லோ – won’t I die rather than climb on the madal horse (விளியலம் – தன்மைப் பன்மை, first person plural, கொல் – ஐயப்பொருட்டு, ஓ – அசைநிலை), அகல் இரு விசும்பின் – in the wide dark sky, அரவு – snake, குறைபடுத்த – reduced (by swallowing), பசுங்கதிர் – cool rays, மதியத்து –  the moon’s, அகல் நிலாப் போல – like the wide moon, அளகம் சேர்ந்த – with hair, சிறுநுதல் – small forehead, கழறுபு – chiding, questioning, மெலிக்கும் நோய் ஆகின்றே – it has become this distressing disease, it has caused my arms to become thin (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 378, வடம வண்ணக்கன் பேரி சாத்தனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
யாமமும் நெடிய கழியும் காமமும்
கண்படல் ஈயாது பெருகும், தெண் கடல்
முழங்கு திரை முழவின் பாணியின் பைபயப்
பழம் புண் உறுநரின் பரவையின் ஆலும்,
ஆங்கு அவை நலியவும் நீங்கியாங்கும்  5
இரவு இறந்து எல்லை தோன்றலது, அலர்வாய்
அயல் இல் பெண்டிர் பசலை பாட
ஈங்கு ஆகின்றால் தோழி, ஓங்கு மணல்
வரி ஆர் சிறு மனை சிதைஇ வந்து
பரிவுதரத் தொட்ட பணி மொழி நம்பிப்,  10
பாடு இமிழ் பனி நீர்ச் சேர்ப்பனொடு
நாடாது இயைந்த நண்பினது அளவே.

Natrinai 378, Vadama Vannakkan Perisāthanār, Neythal Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
The long nights pass slowly.
Your feelings of love increase
and your eyes are unable to sleep.

The roars of the clear ocean waves,  
that are like the beats of drums,
have gone down, and the sounds of
the ocean come little by little, like
the moans of those with old wounds.

Even when the night has passed,
daytime has not appeared and
there is no end to your distress.
Women in nearby houses gossip
on seeing the pallor on your body.

It has come to this, my friend!
This is because of the close friendship
we made without proper judgment,
with the lord of the cold-water shores,
who came and broke our little sand
house with kolams, and spoke enticingly.

Notes:  தலைவன் பிரிவால் வருந்திய தலைவியைத் தோழி ஆற்றுவித்தும் ஆற்றாளாயினள்.  அவளிடம் தோழி கூறியது.  கலித்தொகை 51- தெருவில் நாம் ஆடும் மணல் சிற்றில் காலின் சிதையா அடைச்சிய கோதை பரிந்து வரிப் பந்து கொண்டு ஓடி நோதக்க செய்யும் சிறு பட்டி.  புறநானூறு 209 – தெண் கடல் படு திரை இன் சீர்ப் பாணி தூங்கும்.  வரி ஆர் சிறு மனை (9) –  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கோலமிட்ட சிறிய மணல் சிற்றில், ஒளவை துரைசாமி உரை – கோலமிட்ட சிறு மணல் வீடு.  Natrinai 123, 283 and 378 have descriptions of kolams.

Meanings:  யாமமும் நெடிய கழியும் – the long nights pass slowly, காமமும் கண்படல் ஈயாது பெருகும் – and feelings of love increases and the eyes cannot close to sleep, தெண் கடல் முழங்கு திரை – the clear ocean’s loud waves, முழவின் பாணியின் – like the beats of drums (பாணியின் – இன் உருபு ஒப்புப் பொருளது), பைபய – very slowly (பையப்பைய பைபய என மருவியது), பழம் புண் உறுநரின் – like those with old wounds (உறுநரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), பரவையின் ஆலும் – the waves make sounds in the ocean, ஆங்கு – there, அவை நலியவும் – these cause distress, நீங்கியாங்கும் – even after leaving, இரவு இறந்து – night passing, எல்லை தோன்றலது – daytime has not appeared, அலர்வாய் – mouths that gossip, அயல் இல் பெண்டிர் – women who live in nearby houses, பசலை பாட – they gossip about the pallor on your body, ஈங்கு ஆகின்றால் தோழி – the situation has become such oh friend (ஆல் – அசைநிலை), ஓங்கு மணல் – tall sand mounds, வரி ஆர் சிறு மனை – small house with kolams/lines/designs, சிதைஇ – broke (அளபெடை), வந்து – came, பரிவுதரத் தொட்ட – with kindness touched, பணி மொழி நம்பி – believing his enticing/humble words, பாடு இமிழ் – loud sounding, பனி நீர்ச் சேர்ப்பனொடு – with the lord of the cold water shores, நாடாது – not analyzing, இயைந்த – being close, நண்பினது அளவே – the extent of the friendship (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 379, குடவாயிற் கீரத்தனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது அல்லது தலைவி தோழியிடம் சொன்னது
புன்தலை மந்தி கல்லா வன்பறழ்
குன்று உழை நண்ணிய முன்றில் போகாது,
எரி அகைந்தன்ன வீ ததை இணர
வேங்கை அம் படுசினைப் பொருந்தி, கைய
தேம்பெய் தீம்பால் வெளவலின், கொடிச்சி   5
எழுது எழில் சிதைய அழுத கண்ணே,
தேர் வண் சோழர் குடந்தைவாயில்
மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த
பெயல் உறு நீலம் போன்றன; விரலே
பாஅய் அவ் வயிறு அலைத்தலின், ஆனாது  10
ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில்
ஓங்கு இருஞ்சிலம்பில் பூத்த
காந்தள் அம் கொழு முகை போன்றன சிவந்தே.

Natrinai 379, Kudavāyil Keerathanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, or What the heroine said to her friend
An untrained, strong child
of a soft-headed female monkey
which does not leave the front
yard of a house in the mountain,
staying on the huge branches of
a vēngai tree with flame-like,
dense clusters of flowers, snatched
from the hands of a young woman,
a cup of milk mixed with sweet
honey. 

She cried, and her pretty eyes
resembling a painting were ruined.
Her crying eyes are like the kuvalai
flowers that blossom in the rain-fed
moat at Kudanthaivāyil fort of
Chōzhan who donates chariots.

She beat her stomach with her spread
fingers and they became red like the
thick buds of the kānthal flowers that
blossom on the slopes of the lofty
Pothiyil Mountain where moving clouds
crawl on tall peaks.

Notes:  தோழி தலைவியின் மடமை கூறியது.  இல்லத்தில் காப்பு கைம்மிக்க காலத்தில் தலைவி தோழிக்குச் சொல்லியதுமாம்.  தேம்பெய் தீம்பால் (5) – ஒளவை துரைசாமி உரை – தேன் பெய் தீம்பால் தேம்பெய் தீம்பால் என வந்தது.  தேனென் கிளவி முன் வல்லெழுத்து இயையின்……மெல்லெழுத்து மிகினும் மானமில்லை – தொல்காப்பியம், எழுத்து 132.  எழுது எழில் (6) – ஒளவை துரைசாமி உரை – கையெழுதப் பிறந்த அழகு, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஓவியர் எழுதற்குரிய அழகு.   வயிற்றில் அடித்தல் – நற்றிணை 179 – அவ் வயிறு அலைத்த என் செய் வினைக் குறுமகள், நற்றிணை 379 – அவ் வயிறு அலைத்தலின், நற்றிணை 398 – அவ் வயிறு அலைப்ப உடன் இயைந்து ஓரை மகளிரும், அகநானூறு 106 -பாணன் எறியும் தண்ணுமை கண்ணின் அலைஇயர் தன் வயிறே.  வரலாறு:  சோழர், குடந்தைவாயில்.  தேம்பெய் – தேனென் கிளவி வல்லெழுத்து இயையின் மேல் நிலை ஒத்தலும் வல்லெழுத்து மிகுதலும் ஆ முறை இரண்டும் உரிமையும் உடைத்தே வல்லெழுத்து மிகு வழி இறுதி இல்லை.  மெல்லெழுத்து மிகினும் மானம் இல்லை (தொல்காப்பியம், புள்ளிமயங்கியல் 46).

Meanings:  புன்தலை மந்தி – female monkey with scanty head hair, soft-headed female monkey, கல்லா வன் பறழ் – untrained young child, குன்று உழை நண்ணிய முன்றில் போகாது – not leaving the front yard of the house in a place near the mountains, எரி அகைந்தன்ன – flame like, வீ – flower, ததை இணர – with dense clusters, வேங்கை அம் – of a vēngai tree, Pterocarpus marsupium, படுசினை – beautiful large branches, பொருந்தி – stays, கைய தேம் பெய் தீம் பால் வெளவலின் – since it plucked from her hand the bowl with honey added milk (கைய – குறிப்புப் பெயரெச்சம், தேம் தேன் என்றதன் திரிபு), கொடிச்சி எழுது எழில் சிதைய – the young woman’s painting-like beauty got ruined, அழுத கண்ணே – her crying eyes (ஏ – அசைநிலை, an expletive), தேர் வண் சோழர் – Chōzha king who donates chariots, குடந்தைவாயில் – Kudanthaivāyil town, மாரி அம் கிடங்கின் – in a moat with rain water, ஈரிய – they are wet, மலர்ந்த – blossomed, பெயல் உறு நீலம் போன்றன – like blue waterlilies that accept rain, விரலே – fingers (ஏ – அசைநிலை, an expletive), பாஅய் – spread, அவ் வயிறு அலைத்தலின் ஆனாது – since she beat them on her stomach, ஆடு மழை – moving clouds, தவழும் – crawl, spread, கோடு உயர் பொதியில் – Pothiyil Mountain with tall peaks, ஓங்கு இருஞ்சிலம்பில் – on the lofty huge mountain slopes, பூத்த – blossomed, காந்தள் அம் கொழு முகை போன்றன சிவந்தே – red like its fat buds of glory lily flowers (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 380, கூடலூர்ப் பல்கண்ணனார், மருதத் திணை – தோழி தலைவனின் தூதுவனாக வந்த பாணனிடம் சொன்னது
நெய்யும் குய்யும் ஆடி மையொடு
மாசு பட்டன்றே கலிங்கமும்; தோளும்
திதலை மென் முலைத் தீம் பால் பிலிற்ற
புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே;
வால் இழை மகளிர் சேரித் தோன்றும்  5
தேரோற்கு ஒத்தனெம் அல்லேம்; அதனால்
பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ்
எழாஅல் வல்லை ஆயினும் தொழாஅல்;
கொண்டு செல் பாண நின் தண்துறை ஊரனைப்,
பாடு மனைப் பாடல் கூடாது நீடு நிலைப்  10
புரவியும் பூண் நிலை முனிகுவ
விரகு இல மொழியல், யாம் வேட்டது இல்வழியே.

Natrinai 380, Koodalūr Palkannanār, Marutham Thinai – What the heroine’s friend said to the messenger bard, who was sent by the hero
Ghee, smoke and the kohl decorating
her son have stained her clothes and
shoulders.  Her delicate breasts with
pale spots that feed sweet milk to her
son embracing him, have the odor of
recent childbirth.

To the man who unites with women
wearing fine jewels, who live in the
settlement, she is not suitable.

So, do not play music with your small
lute with gold-like strings, even if it
is good.  Do not greet me.  Take your
lord of the cool shores and go away.
Your horses hate being tied for such
a long time.  Do not utter useless words
that I do not desire to hear!

Notes:  பாணற்குத் தோழி வாயில் மறுத்தது.  புனிறு – புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே, தொல்காப்பியம் உரியியல் 79.

Meanings:  நெய்யும் குய்யும் ஆடி – oil/ghee and smoke have smeared (குய் – தாளிப்பு), மையொடு – with the kohl from the young son, மாசு பட்டன்றே – they have been stained (ஏ – அசைநிலை, an expletive), கலிங்கமும் – and clothes, தோளும் திதலை – and the arms have pallor, the shoulders have pallor, மென் முலைத் தீம் பால் பிலிற்ற புல்லிப் புதல்வன் – embracing and feeding the son sweet milk from delicate breasts, புனிறு – given birth recently, நாறும்மே – there is stink (செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது), வால் இழை மகளிர் சேரித் தோன்றும் தேரோற்கு – to the man with the chariot who appears in the settlement/village with women with pure jewels, ஒத்தனெம் அல்லேம் – we are not suitable, she is not suitable (ஒத்தனெம் – தன்மைப் பன்மை வினைமுற்று, first person plural verb ending, அல்லேம் – தன்மைப் பன்மை, first person plural), அதனால் – so, பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ் எழாஅல் – playing your sweet-sounding small lute with gold-like metal strings (புரை – உவம உருபு, a comparison word, எழாஅல் – அளபெடை), வல்லை ஆயினும் – even if you have the ability, தொழாஅல் கொண்டு செல் பாண – go away bard taking him along without greeting/praising, நின் தண்துறை ஊரனை – your lord of the cool ports, பாடு மனைப் பாடல் கூடாது – not singing in my proud house, நீடு நிலைப் புரவியும் பூண் நிலை முனிகுவ – the horses hate being tied for a long time, விரகு இல மொழியல் – do not utter useless words (இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்), யாம் வேட்டது இல்வழியே – when I do not desire (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 381, ஒளவையார், முல்லைத் திணை – தலைவி சொன்னது
அருந்துயர் உழத்தலின் உண்மை சான்ம் எனப்
பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன்;
கரை பொருது இழிதரும் கான் யாற்று இகு கரை
வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல,
நடுங்கல் ஆனா நெஞ்சமொடு, இடும்பை  5
யாங்கனம் தாங்குவென் மற்றே? ஓங்கு செலல்
கடும் பகட்டு யானை நெடுமான் அஞ்சி,
ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்கத்,
தேர் வீசு இருக்கை போல,
மாரி இரீஇ மான்றன்றால் மழையே.  10

Natrinai 381, Avvaiyār, Mullai Thinai – What the heroine said
Confusing me, rain has arrived,
like the charity of the kind king Anji
with fast horses and fierce, proud
elephants, who donates chariots
for his fame to flourish far and wide.

I am suffering with extreme distress.
If I die, the truth of my love will become
evident.  If I do not, do I not love him?

I am like the beautiful, tender leaves
of an uprooted kadampam tree on the
shores of a raging forest stream that
breaks its banks as it flows.

How will I tolerate this pain?

Notes:  பிரிவிடை ஆற்றாளாகிய தலைவி பருவ வரவின்கண் கூறியது.  வரலாறு:  அஞ்சி.  சான்ம் (1) – ஒளவை துரைசாமி உரை – சாலும் என்பது ஈற்றசை உகரம் கெட்டுச் சான்ம் என நின்றது.  ஈற்று மகரமெய் மகரக்குறுக்கம்.  மான்றன்றால் (10) – ஒளவை துரைசாமி உரை – மயக்குகின்றது ஆகலான், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஒரு தன்மையாய் பெய்யாநின்றது.  மான்றன்று – அகநானூறு 300 – வேங்கடசாமி நாட்டார் உரை – மயங்கிவிட்டது, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மயங்கியது, அகநானூறு 340 – வேங்கடசாமி நாட்டார் உரை – மயங்கியது, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மயங்கியது.  Athiyamān Nedumān Anji is the king referred to in this poem.  This is the only poem in Natrinai that has a reference to Athiyamān.  கடையெழு வள்ளல்கள் – ஆய், பாரி, காரி, ஓரி, அதிகன், பேகன், நள்ளி.

Meanings:  அருந்துயர் உழத்தலின் – due to suffering in great sorrow, உண்மை சான்ம் என – truth is evident as witness, பெரும்பிறிது இன்மையின் – if there is no death, இலேனும் அல்லேன் – I am not without, கரை பொருது இழிதரும் – crashing against the shores and flowing, கான் யாற்று இகு கரை – eroding shores of a forest stream, வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல – like the beautiful tender sprouts of an uprooted kadampam tree, Anthocephalus cadamba, Kadampa Oak, நடுங்கல் ஆனா நெஞ்சமொடு – with a heart with constant trembling, இடும்பை யாங்கனம் தாங்குவென் – how will I tolerate this pain, மற்றே – மற்று, ஏ – அசைநிலைகள், ஓங்கு செலல் – running fast (செலல் – இடைக்குறை), கடும் – fierce, பகட்டு யானை – proud elephants, நெடுமான் அஞ்சி – Neduman Anji, Anji of swift horses, ஈர நெஞ்சமோடு – with a kind heart, இசை சேண் விளங்க – fame to flourish in far places, தேர் வீசு இருக்கை போல – like his court where he donates chariots, மாரி இரீஇ மான்றன்றால் – the rains have arrived with confusion (இரீஇ – அளபெடை, மான்றன்று – மால் என்பதன் அடியாகப் பிறந்த இறந்தகால முற்றுவினைத் திரிசொல், ஆல் – அசைநிலை, an expletive), மழையே – the clouds (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 382, நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கானல் மாலைக் கழி நீர் மல்க,
நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்த
ஆனாது அலைக்கும் கடல் மீன் அருந்திப்,
புள்ளினம் குடம்பை உடன் சேர்பு உள்ளார்
துறந்தோர் தேஎத்து இருந்து, நனி வருந்தி,  5
ஆர் உயிர் அழிவது ஆயினும் நேரிழை,
கரத்தல் வேண்டுமால் மற்றே பரப்பு நீர்த்
தண்ணந்துறைவன் நாண,
நண்ணார் தூற்றும் பழி தான் உண்டே.

Natrinai 382, Nikandan Kalaikōttu Thandanār, Neythal Thinai – What the heroine said to her friend
In the seashore grove,
backwaters are flooded in the
evening time; blue waterlily
blossoms close their rows of
petals; birds reach their nests
after eating fish from the ocean
with endless rolling waves.

Oh friend with perfect jewels!
Even if my beautiful life is lost,
I should hide my pain rising from
seeing the places I was with him
before he separated, so that the
lord of the vast cool shores who left
me without consideration does not
get embarrassed, being blamed and
slandered by our enemies.

Notes:  களவில் வந்தொழுகும் தலைவன் வராததால் வருந்திய தலைவியை ஆற்றுப்படுத்துகின்றாள் தோழி.  அவளிடம் தலைவி கூறியது.  தேஎத்து (5) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தங்கியிருந்த இடத்து, ஒளவை துரைசாமி உரை – தேஎத்து என ஏழாவதன் பொருள்பட வருவதாயினும் ஈண்டு நான்காவதற்குரிய பொருட்டுப் பொருள்பட வந்தது.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  கானல் – seashore grove, மாலை – evening time, கழி நீர் மல்க – water in the backwaters rise, நீல் நிற நெய்தல் – blue colored waterlilies (நீல் – கடைக்குறை, poetical license which consists in the shortening of a word by elision of one or more letters in the end), நிரை இதழ் பொருந்த – rows of petals close, ஆனாது அலைக்கும் – the waves roll endlessly, கடல் மீன் அருந்தி புள்ளினம் – the birds that eat fish from the ocean, குடம்பை உடன் சேர்பு – they reach their nests, உள்ளார் துறந்தோர் – he who separated without thinking (துறந்தோர் – ஒருமை பன்மை மயக்கம்), தேஎத்து இருந்து – staying in the place (தேஎத்து – அளபெடை), நனி வருந்தி ஆர் உயிர் அழிவது ஆயினும் – even if  I am very sad and lose my beautiful life, நேரிழை – oh woman with perfect jewels (விளி, அன்மொழித்தொகை), கரத்தல் வேண்டுமால் – I need to hide it (வேண்டுமால் – ஆல் அசைநிலை, an expletive), மற்றே – மற்று, ஏ – அசைநிலைகள், expletives, பரப்பு நீர்த் தண்ணந்துறைவன் – for the lord of the expansive cool shores (தண்டுறைவன் என்பது தண்ணந்துறைவன் ஆவது, அம் – சாரியை, விரிக்கும் வழி விரித்தல்), நாண – to feel shy, to be embarrassed, நண்ணார் தூற்றும் பழி தான் உண்டே – there is slander and blame from those who are enemies (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 383, கோளியூர்கிழார் மகனார் செழியனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கல் அயல் கலித்த கருங்கால் வேங்கை
அலங்கல் அம் தொடலை அன்ன குருளை
வயப் புனிற்று இரும் பிணப் பசித்தென, வயப் புலி
புகர் முகம் சிதையத் தாக்கி, களிறு அட்டு,
உரும் இசை உரறும் உட்குவரு நடுநாள்  5
அருளினை போலினும், அருளாய் அன்றே,
கனை இருள் புதைத்த அஞ்சுவரும் இயவில்
பாம்பு உடன்று இரிக்கும் உருமோடு
ஓங்கு வரை நாட, நீ வருதலானே.

Natrinai 383, Kōliyur Kizhār Makanār Chezhiyanār, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
Oh lord of the lofty mountains!
Even though it appears as if you are
gracious to my friend, you are not
doing her any favor by coming in the
pitch darkness of midnight on fearful
paths when thunder that is enraged
with snakes roars loudly,
and a strong male tiger, with a hungry
female that has given birth to cubs
looking like swaying strands of
flowers of the vēngai trees with dark
colored trunks that flourish in the  
mountains,
attacks and kills a bull elephant with
spots on his face to feed his mate, and
roars loudly like thunder.

Notes:   களவில் வந்தொழுகும் தலைவனை வழியில் உள்ள ஏதம் கருதித் தோழி உரைத்தது.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – ஆண்புலி தன் பிணவுக்காகக் களிறு அடும் என்றது, தலைவியை வரைந்து கொள்ளக் கடிதின் முயன்று பொருள் ஈட்டி வெற்றியோடு வருக எனத் தலைவற்கு உணர்த்தவாம்.  (அன்று) 6 – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அசைநிலை, ஒளவை துரைசாமி உரை – அன்றே என்றவிடத்து அன்றென்னும் எதிர்மறைக் குறிப்பும் எதிர்மறை ஏகாரமும் புணர்ந்து ஆம் என உடன்பாட்டுப் பொருள் தந்தன.  There is a convention that thunder ruins and kills snakes.  Puranānūru 17, 37, 58, 126, 211, 366, 369, Akanānūru 68, 92, 119, 182, 202, 274, 323, 328, Kalithokai 45, 113, Kurunthokai 158, 190, 268, 391 and Natrinai 37, 51, 114, 129, 238, 255, 264, 347 and 383 have similar descriptions of thunder ruining or killing snakes.  Natrinai 29, 148, 332, 383 and Akanānūru 112, 147 and 238 have descriptions of male tigers desiring to kill, to feed their mate that has recently given birth.  Akanānūru 3 has a description of a male vulture, Akanānūru 21 of a male wild dog and Akanānūru 85 of a male elephant desiring to feed their mates who have given birth recently.  Vēngai flowers are bright yellow in color.  Akanānūru 12, 228, Natrinai 383 and Paripādal 14 have descriptions of vēngai flowers appearing like the markings on tigers.  Kalithokai 46 has a description of a bee swarming a tiger, mistaking it for a vēngai tree with flowers.  புனிறு – புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே (தொல்காப்பியம் உரியியல் 79).  குருளை – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (மரபியல் 1, தொல்காப்பியம்).

Meanings:  கல் அயல் – near the mountains, கலித்த – flourishing, கருங்கால் வேங்கை – vēngai trees with big/sturdy/dark-colored trunks, அலங்கல் அம் தொடலை – swaying beautiful strands, அன்ன குருளை – like cubs, வயப் புனிற்று இரும் பிணப் பசித்தென – since the female that gave birth was hungry, வயப் புலி – strong tiger, புகர் முகம் சிதையத் தாக்கி – attacks breaking the spotted face, களிறு – male elephant, அட்டு – killing, உரும் இசை – thunder sound, உரறும் – tiger roars, உட்குவரு – causing fear, நடுநாள் அருளினை போலினும் அருளாய் அன்றே – you are not helping by coming at midnight even though you appear to be gracious to her (அருளாய் – அருள் உடையை, அன்றே – இல்லை), கனை இருள் புதைத்த – pitch darkness covered, அஞ்சுவரும் இயவில் – in the fierce path, பாம்பு உடன்று இரிக்கும் உருமோடு – with thunder that is enraged with snakes, ஓங்கு வரை நாட – oh lord of the lofty mountains, நீ வருதலானே – as you come (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 384, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
வண்புறப் புறவின் செங்கால் சேவல்
களரி ஓங்கிய கவை முட் கள்ளி
முளரி அம் குடம்பை ஈன்று இளைப்பட்ட
உயவு நடைப் பேடை உணீஇய, மன்னர்
முனை கவர் முது பாழ் உகு நெல் பெறூஉம்  5
அரண் இல் சேய் நாட்டு அதர் இடை மலர்ந்த
நன்னாள் வேங்கைப் பொன் மருள் புதுப் பூப்
பரந்தன நடக்க, யாம் கண்டனம் மாதோ,
காண் இனி, வாழி என் நெஞ்சே, நாண் விட்டு
அருந்துயர் உழந்த காலை  10
மருந்து எனப்படூஉம் மடவோளையே.

Natrinai 384, Chēramān Pālai Pādiya Perunkadunkō, Pālai Thinai – What the hero said to his heart
May you live long, oh heart!
In the saline wasteland path with
kalli trees with thorns, a place
abandoned after an enemy king
raided the land,
a red-legged male pigeon collects
paddy grains that have dropped  
from unattended plants, to feed
his female sitting in a lovely nest
built with twigs on a tall, forked
tree branch since she is tired
protecting their new brood of
hatchlings.

When I see her walk on the spread,
new vēngai blossoms that appear
like gold, the young woman becomes
medicine to my great sorrow. 

Notes:  உடன்போக்கின் பொழுது தலைவன் கூறியது.  ஈன்று இளைப்பட்ட (3) – பிள்ளைகளை ஈன்று அவற்றைக் காவல் செய்யுமாறு பொருந்திய, H.வேங்கடராமன் உரை – பிள்ளைகளைப் பெற்று அவற்றைக் காத்தலால் சோர்வுற்றுத் தளர்ந்த.  ஈன்று இளைப்பட்ட – அகநானூறு 3, 21, 238, நற்றிணை 384.  நன்னாள் வேங்கை (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நல்ல நாட்காலையில் மலர்ந்த வேங்கை, ஒளவை துரைசாமி உரை – திருமணக் காலம் நோக்கி மலர்ந்த வேங்கை.

Meanings:  வண்புறப் புறவின் – of a pigeon with a thick back side, செங்கால் சேவல் – a male with red legs, களரி – saline wasteland, ஓங்கிய – tall, கவை – split, forked, முட் கள்ளி – prickly pear cactus or Euphorbia Tirucalli, முளரி – twigs, அம் குடம்பை – beautiful nest, ஈன்று இளைப்பட்ட – has new chicks and is protecting them, உயவு நடைப் பேடை – a female with tired walk, உணீஇய – to eat ( அளபெடை), மன்னர் முனை கவர் – kings seized in battles, முது பாழ் – ancient ruined, உகு நெல் பெறூஉம் – gets dropped rice paddy (பெறூஉம் – அளபெடை), அரண் இல் – without protections, சேய் நாட்டு – far away country, அதர் இடை- in the wasteland path, மலர்ந்த நன்னாள் வேங்கை – blossomed fine day-fresh flowers of vēngai trees, vēngai trees that have blossomed announcing wedding, Kino Tree, Pterocarpus marsupium, பொன் மருள் புதுப் பூ – gold-like new flowers, பரந்தன – spread, நடக்க – when she walked, யாம் கண்டனம் – I saw (தன்மைப் பன்மை, first person plural), மாதோ – மாது, ஓ – அசைநிலைகள், expletives, காண் இனி – see now, வாழி என் நெஞ்சே – may you live long my heart, நாண் விட்டு – letting shyness go, அருந்துயர் உழந்த காலை – when there is great suffering, மருந்து எனப்படூஉம் – she is considered to be medicine (எனப்படூஉம் – அளபெடை), மடவோளையே – the young woman, the naïve woman (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 385, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, நெய்தற் திணை – பாடல் முழுவதும் கிடைக்கவில்லை
எல்லை சென்ற பின் மலரும் கூம்பின,
புலவு நீர் அடைகரை யாமைப் பார்ப்போடு
அலவனும் அளைவயிற் செறிந்தன கொடுங்கழி
இரை நசை வருத்தம் வீட மரமிசைப்
புள்ளும் பிள்ளையொடு வதிந்தன, அதனால்  5
பொழுதன்று ஆதலின் தமியை வருதி,
எழுது எழில் மழைக்கண் – – – – – – – –
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – -.

Natrinai 385, Unknown Poet, Neythal Thinai –  parts of the song and colophon are missing
Flowers have closed
after the light has left,
tortoises with young
and crabs settle in their holes,
birds with chicks rest on trees
after hardships of searching for
food in the curved backwaters,
and you come alone at this
untimely hour.
Her moist eyes are like a painting.

Notes:  தோழியின் கூற்று என்பது போலத் தெரிகின்றது.

Meanings:  எல்லை சென்ற பின் – after daytime ended, after light left, மலரும் கூம்பின – and flowers have closed, புலவு நீர் அடைகரை – in the shores of the stinking water, யாமைப் பார்ப்போடு – tortoise with its little ones, அலவனும் – and the crabs, அளை வயிற் செறிந்தன – settled in their holes, கொடுங்கழி – curved backwaters, இரை நசை – desire for food, வருத்தம் வீட – for sorrow to go away, மர மிசைப் புள்ளும் பிள்ளையொடு வதிந்தன – birds lived on the trees with their young, அதனால் – so, பொழுதன்று ஆதலின் தமியை வருதி – you come alone at an untimely hour, எழுது எழில் மழைக்கண் – her moist eyes that are like a painting, her cool eyes are like a painting – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –

நற்றிணை 386, தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
சிறுகண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல்,
துறுகண் கண்ணிக் கானவர் உழுத
குலவுக் குரல் ஏனல் மாந்தி ஞாங்கர்,
விடர் அளைப் பள்ளி வேங்கை அஞ்சாது,
கழை வளர் சாரல் துஞ்சும் நாடன்  5
அணங்குடை அரும் சூள் தருகுவென் என நீ
நும்மோர் அன்னோர் துன்னார் இவை எனத்
தெரிந்து அது வியந்தனென் தோழி, பணிந்து நம்
கல் கெழு சிறுகுடிப் பொலிய
வதுவை என்று அவர் வந்த ஞான்றே.  10

Natrinai 386, Thangāl Āthireyan Chenkannanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her
My friend!
The man from the mountain
………. where a huge, angry, small-eyed
……….male pig comes to eat bent
……….clusters of millet in a field plowed
……….by forest men wearing tight flower
……….strands, and sleeps in dense bamboo
……….thickets on the mountain slopes,
……….without fear of tigers that live in the
……….the mountain caves,
said that he would give a precious promise
before god,
and you said to him that people of his
stature do not do that.

I was surprised on the day that he came
humbly to our rock-filled small village to
celebrate a wedding with you.

Notes:  பரத்தையிற் பிரிந்து தலைவியிடம் வருகின்றான் தலைவன், அவள் ஊடுகின்றாள்.  தோழியிடம் அவன் இரந்து நிற்க, அவளும் உடன்பட்டாள்.  தோழி தலைவன் முன்றிலில் வந்து நிற்கின்றான் என்பதைத் தலைவியிடம் உள்ளுறையால் கூறுகின்றாள்.  புலவர் பெயர் – ஒளவை துரைசாமி உரை – தண்கால் ஆத்திரையன் செங்கண்ணனார்.  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பன்றி குறவருடைய ஏனற் கதிரைத் தின்று வேங்கைக்கு அஞ்சாது சாரலிலே துஞ்சும் என்றது, தலைமகன் பரத்தையரின்பம் துய்த்து உலகம் இகழும் இகழ்ச்சிக்கு அஞ்சாது நின் முன்றிலில் காத்து வைகினான் என்பதாம்.  பணிந்து (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பணிந்து என்னுஞ்சொல் உரையில் (பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரையில்) வாளா விடப்பட்டது.  அதனை நம் ஏவற்குப் பணிந்து வதுவை அவர் வந்த ஞான்றென இயைத்துக் கொள்க.  ஒளவை துரைசாமி உரை – வியந்து பணிந்தேன் என மாற்றுக (தோழி பணிந்ததாகக் கொள்கின்றார்).

Meanings:  சிறுகண் பன்றி – small eyed pig, பெருஞ்சின ஒருத்தல் – a male with great rage, a boar with great rage, துறுகண் – dense, கண்ணி – flower garlands, flower strands, கானவர் உழுத – forest dwellers plowed, குலவு – bent, குரல் ஏனல் – clusters of millet, spears of millet, மாந்தி – ate, ஞாங்கர் – that place, there, விடர் அளைப் பள்ளி வேங்கை அஞ்சாது – not afraid of the tigers that sleep in the mountain caves (விடர் அளை – இருபெயரொட்டு), கழை வளர் சாரல் துஞ்சும் – sleeps in the bamboo growing mountain ranges, நாடன் – man from such country, அணங்குடை – with divine wrath, god fearing, அரும் சூள் தருகுவென் என – he said, ‘I will give a precious/rare promise’, நீ நும்மோர் அன்னோர் துன்னார் இவை என – you said to him that people like him do not say that, தெரிந்து – knowing, அது வியந்தனென் – I was surprised for that, தோழி – my friend, பணிந்து – humbly, நம் கல் கெழு சிறுகுடிப் பொலிய – our mountainous village to be splendid, our mountainous small village to celebrate, வதுவை என்று அவர் வந்த ஞான்றே – when he came for marriage (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 387, பொதும்பில் கிழார் மகனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நெறி இருங்கதுப்பும், நீண்ட தோளும்,
அம்ம நாளும் தொல் நலம் சிதைய,
ஒல்லாச் செந்தொடை ஒரீஇய கண்ணிக்
கல்லா மழவர் வில்லிடை விலங்கிய
துன் அருங்கவலை அருஞ்சுரம் இறந்தோர்  5
வருவர், வாழி தோழி, செரு இறந்து
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த
வேல் கெழு தானைச் செழியன் பாசறை
உறை கழி வாளின் மின்னி, உதுக்காண்,
நெடும் பெருங்குன்றம் முற்றி  10
கடும் பெயல் பொழியும், கலி கெழு வானே.

Natrinai 387, Pothumpil Kizhār Makanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
The former beauty of your curly,
black hair and long arms are being
lost every day,
since your lover went through harsh,
forked wasteland paths
where garlanded, crude warriors
shoot fine arrows from their bows,
blocking the paths.

He will come back!
May you live long, oh friend!
Look there!  Heavy rains are falling
from loud skies which surround
the tall, huge mountain peaks,
along with lightning strikes that look
like flashing swords removed from
scabbards by warriors, in the battle
camp of Pāndiyan King Nedunchezhiyan
who went to battle in Ālankānam,
causing fear to enemies.

Notes:  பிரிவிடை வருந்தியத் தலைவியை பருவம் காட்டித் தோழி வற்புறுத்தியது.  பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சேரனையும் சோழனையும் (சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சோழன் கிள்ளிவளவன்), ஐந்து வேளிர் குறுநில மன்னர்களையும் (திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன்) சோழ நாட்டில் உள்ள தலையாலங்கானத்தில் தோற்கடித்தான்.  வரலாறு:  செழியன், ஆலங்கானம்.  There are references to Thalaiyālangam battle in Puranānūru 19, 23, 25, 76, Natrinai 387, Mathuraikkānji 55, 127, and Akanānūru 36, 175 and 209.  கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).  ஆலங்கானம் – சோழ நாட்டின் ஊர், பாண்டியன் நெடுஞ்செழியன் சேர, சோழ மன்னர்களையும் வேளிர் மன்னர்களான திதியன், எழினி, எருமையூரன், பொருநன், இருங்கோ வேண்மான் ஆகியவர்களையும் இங்குப் போரில் தோல்வியுறச் செய்தான்.  அம்ம  – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

Meanings:  நெறி – curly, orderly, இருங்கதுப்பும் – black hair, நீண்ட தோளும் long arms, அம்ம – அசைநிலை, an expletive, listen to me, நாளும் – daily, தொல் நலம் சிதைய – losing their former beauty, ஒல்லா – not agreeable, செந்தொடை – fine arrows, sharp arrows, arrows that don’t miss their mark, ஒரீஇய – removed (அளபெடை), கண்ணி – flower garlands, flower strands, கல்லா மழவர் – uneducated wasteland warriors, வில்லிடை – between bows, விலங்கிய – blocking, துன் அருங்கவலை – fierce forked paths that are difficult for those who go, அருஞ்சுரம் – difficult wasteland, இறந்தோர் – the man who went, வருவர் – will come, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – oh friend, செரு இறந்து ஆலங்கானத்து – went to the battle in Ālankānam, அஞ்சுவர – causing fear, இறுத்த – stayed, வேல் கெழு தானைச் செழியன் – Pāndiyan king with his spear carrying warriors, பாசறை – in the battle camp, உறை கழி – removed from scabbards, வாளின் மின்னி – like flashing swords (இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), உதுக்காண் – look there (உது – இடைச்சுட்டு), நெடும் பெருங்குன்றம் முற்றி – tall huge mountains surrounded, கடும் பெயல் பொழியும் – it is raining heavily, கலி கெழு வானே – the loud skies (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 388, மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அம்ம வாழி தோழி, நன்னுதற்கு
யாங்கு ஆகின்று கொல் பசப்பே, நோன் புரிக்
கயிறு கடை யாத்த கடு நடை எறி உளித்
திண் திமில் பரதவர் ஒண் சுடர்க் கொளீஇ,
நடுநாள் வேட்டம் போகி, வைகறைக்  5
கடல் மீன் தந்து கானல் குவைஇ,
ஓங்கு இரும் புன்னை வரி நிழல் இருந்து
தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்திப்,
பெரிய மகிழும் துறைவன் எம்
சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே?  10

Natrinai 388, Mathurai Marutham Kizhār Makanār Perunkannanār, Neythal Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
May you live long, oh friend!
Why does my fine forehead become
sallow when he has not left my tiny
heart, the lord of the seashore,
where fishermen rest under the striped
shade of tall, dark punnai trees on the
seashore grove, with their relatives,
happily drinking honey-fragrant liquor,
leaving in heaps the fish that they had
caught and brought to the shore at dawn,
after leaving at night with bright lamps
on their sturdy boats with throwing
barbs tied to strong, twisted ropes?

Notes:  தலைவன் மணம் புரியாது களவு நீட்டித்து ஒழுகுவதால் தலைவி வருந்துவாள் எனக் கவலை கொண்ட தோழியிடம் கூறியது.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – பரதவர் படகொடு மீன் பிடித்துக் கழிச்சோலையில் குவித்துப் புன்னையின் நிழலிலே சுற்றத்துடன் கள்ளுண்டு மகிழும் துறை என்றது, தலைவன் தேரில் வேற்று நாட்டிற்குச் சென்று பொருள் ஈட்டிக் கொணர்ந்து முன்றிலே குவித்து தலைவி மனையில் சுற்றத்தாரொடு மகிழ்ந்து தலைவியை மணந்து தலைவியின் நலன் நுகர்வான் என்பதனை உள்ளுறுத்திற்று.  அம்ம  – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

Meanings:  அம்ம – listen to me, இடைச்சொல், a particle, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – oh friend, நன்னுதற்கு – to the fine forehead, யாங்கு ஆகின்று கொல் பசப்பே – how does it become sallow (கொல் – அசைநிலை, an expletive), நோன் புரிக் கயிறு – strong twisted ropes, tightly twisted ropes, கடை – ends, யாத்த – tied, கடு நடை – rapidly, எறி உளி – throwing spears with sharp tips, throwing sharp metal barbs, திண் திமில் பரதவர் – fishermen in sturdy boats, ஒண் சுடர்க் கொளீஇ – lighting bright lamps (கொளீஇ – அளபெடை), நடுநாள் வேட்டம் போகி – going to fish at midnight, வைகறைக் கடல் மீன் தந்து – bringing fish at dawn, கானல் குவைஇ – heaping on the seashore grove (குவைஇ – அளபெடை), ஓங்கு இரும் புன்னை வரி நிழல் – dappled shade of the tall dark punnai trees, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum,  இருந்து – staying, தேம் கமழ் தேறல் – honey-fragrant liquor, sweet smelling liquor (தேம் தேன் என்றதன் திரிபு), கிளையொடு மாந்தி – drinking with their relatives, பெரிய மகிழும் – they enjoy greatly, துறைவன் – the man from such shore, the lord of the shore, எம் சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே – he does not know leaving from my small heart (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 389, காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
வேங்கையும் புலி ஈன்றன, அருவியும்
தேம்படு நெடு வரை மணியின் மானும்,
அன்னையும் அமர்ந்து நோக்கினளே, என் ஐயும்
களிற்று முகம் திறந்த கல்லா விழுத் தொடை
ஏவல் இளையரொடு மா வழிப்பட்டெனச்,  5
‘சிறு கிளி முரணிய பெருங்குரல் ஏனல்
காவல் நீ’ என்றோளே, சேவலொடு
சிலம்பின் போகிய சிதர் கால் வாரணம்
முதைச் சுவல் கிளைத்த பூழி, மிகப் பல
நன் பொன் இமைக்கும் நாடனொடு,  10
அன்புறு காமம் அமைக நம் தொடர்பே.

Natrinai 389, Kaveripoompattinanathu Chenkannanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
Vēngai trees have put out tiger-colored flowers,
and waterfalls in the honey-producing mountains
appear like sapphire.

My father has gone in search of wild animals,
taking with him untrained young workers who kill
male elephants with fine arrows.

Mother looked at me calmly and said, “You go and
protect the big clusters of millet in our field from the
tiny parrots that come to attack them.”

Let it be kind, our loving relationship with the man
from the mountain country, where fine gold shines
often in the dust in old fields, dug up by jungle hens
with scaly legs, that go with their roosters!

Notes:   பகற்குறி வந்தொழுகும் தலைவன் கேட்பச் சொல்லியது.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கோழி கிளறிய புழுதியிடம் நன்பொன் இமைக்கும் என்றது, செல்வக் குறைவில்லாத போதும் தலைவியின் சுற்றத்தார்க்கு மணங் கொடை நேரவில்லை என்று இரங்கியதாம்.  வேங்கை மலரும் புலியும் – அகநானூறு 12 – வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம் புலி செத்து வெரீஇய புகர் முக வேழம், அகநானூறு 141 – புலிக்கேழ் உற்ற பூ இடைப் பெருஞ்சினை நரந்த நறும்பூ நாள் மலர் உதிரக் கலை பாய்ந்து உகளும் கல் சேர் வேங்கை, அகநானூறு 227 – புலிக் கேழ் வேங்கை, அகநானூறு 228 – வேங்கை ஒள் வீப் புலிப் பொறி கடுப்பத் தோன்றலின், நற்றிணை 389 – வேங்கையும் புலி ஈன்றன, குறுந்தொகை 47 – வேங்கை வீ உகு துறுகல் இரும்புலிக் குருளையின் தோன்றும், ஐங்குறுநூறு 396 – புலிப் பொறி வேங்கைப் பொன் இணர்.  புலி (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மலர்க்கு உவமை ஆகுபெயர்.   வேங்கை மலர்ந்தவுடன் தினை கொய்தலும் தலைவியை இல்வயிற் செறித்தலும் வழக்காதலானே தொடர்பற்று விட்டது என்று இரங்கினாள் தலைவனைப் பிரிப்பதற்குக் காரணமாயிருத்தலின், அதன் கொடுமை தோன்றப் புலியென்ற பெயரால் கூறினாள்.  சிறு கிளி முரணிய பெருங்குரல் ஏனல் (6) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கிளிகள் கொய்து அழிக்கின்ற பெரிய கதிர்கள், சிறு பசுங்கிளிகள் நமக்கு மாறாகப் படிந்துண்ணும் பெரிய கதிர்கள்.  Millet harvesting time is when vēngai trees put out flowers.  This has been described in poems 125, 259, 313 and 389.  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).

Meanings:  வேங்கையும் புலி ஈன்றன – vēngai trees have yielded flowers the color of tiger spots (the yellow colored flowers fall on boulders and the boulders then appear like tigers), அருவியும் – the waterfalls, cascading streams, தேம்படு – with honey, with honeycombs (தேம் தேன் என்றதன் திரிபு), நெடு வரை – tall mountains, மணியின் மானும் – are bright like sapphire gems (மணியின் – இன் உருபு ஒப்புப் பொருளது), அன்னையும் அமர்ந்து நோக்கினளே – mother looked at me with calm looks (அசைநிலை, an expletive), என் ஐயும் – my father, களிற்று முகம் திறந்த – split open the male elephant’s face, கல்லா – uneducated, untrained, விழுத் தொடை – fine arrows, arrows that don’t miss their mark, ஏவல் இளையரொடு – with young workers who listen to commands, with young workers who shoot, மா வழிப்பட்டென – since he has gone in search of animals, சிறு கிளி முரணிய பெருங்குரல் ஏனல் காவல் நீ என்றோளே – ‘you go to protect the big clusters of millet that are attacked by the tiny parrots’  she said (அசைநிலை, an expletive), சேவலொடு சிலம்பின் போகிய – go with their males in the mountain slopes, சிதர் கால் வாரணம் – jungle fowl with scales on their legs, முதைச் சுவல் – old field on high ground, கிளைத்த – dug up, scratched and brought up, பூழி – dust, மிகப் பல நன் பொன் இமைக்கும் – lots of fine gold shines, நாடனொடு – with the man from such country, அன்புறு காமம் அமைக – let it be very kind love, நம் தொடர்பே – our relationship (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 390, ஒளவையார், மருதத் திணை – பரத்தை தன்னுடைய தோழியிடம் சொன்னது, அல்லது தலைவி தோழியிடம் சொன்னது
வாளை வாளின் பிறழ, நாளும்
பொய்கை நீர்நாய் வைகு துயில் ஏற்கும்
கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த
வயல் வெள் ஆம்பல் உருவ நெறித் தழை
ஐது அகல் அல்குல் அணிபெறத் தைஇ,  5
விழவின் செலீஇயர் வேண்டும் மன்னோ,
யாணர் ஊரன் காணுநன் ஆயின்,
வரையாமையோ அரிதே வரையின்
வரை போல் யானை, வாய்மொழி முடியன்
வரை வேய் புரையும் நல் தோள்  10
அளிய தோழி, தொலையுந பலவே.

Natrinai 390, Avvaiyār, Marutham Thinai – What the concubine said to her friend, or what the heroine said to her friend
I want to go to the festival,
covering my beautiful, wide
loins, with a garment made with
tender leaves of beautiful āmpal
blossoms,
growing in the fields surrounding
Venni, belonging to the charitable
King Killi, where otters sleep in ponds
without killing vālai fish that turn
back and forth like swords.

If the man from the rich town sees her,
it would be rare if he does not marry her.
If he marries, the fine arms, of many
women, that look like bamboo from the
mountain of Mudiyan, a man of honest
words, who owns mountain-like elephants,
will lose.  They are pitiable, oh friend!

Notes:   உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – பொய்கையில் வாளை பிறழ அதனைக் கொள்ளாத நீர்நாய் உறங்கும் என்றது, தலைவன் விழாக்களத்தே ஒருத்தியைக் கொள்ளவும் அவளைக் கடிந்து போக்காது பரத்தை தன் மனையகத்து இருந்தனள் என்பதாம்.  உள்ளுறை தலைவி கூற்றிற்கும் பொருந்தும்.  முடியன் (9) – ஒளவை துரைசாமி உரை – தென் ஆர்க்காடு மாவட்டத்துத் திருக்கோவலூர் வட்டத்தின் தென் பகுதியில் வாழ்ந்த ஒரு வள்ளல், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – முடியின் என்றது மலையமான் திருமுடிக்காரியை.  வரலாறு:  கிள்ளி, வெண்ணி.  Chōzha king Karikālan beat Chēramān Perunchēralāthan and 11 Vēlirs at the Venni battlefield in the Chōzha country.  There are references to this battlefield in Akanānūru 55, 246, Puranānūru 66 and Porunarātruppadai 147.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

Meanings:  வாளை வாளின் பிறழ – scabbard fish turn back and forth like swords, scabbard fish leap like swords, Trichiurus haumela (வாளின் – இன் உருபு ஒப்புப் பொருளது), நாளும் பொய்கை நீர்நாய் வைகு துயில் ஏற்கும் – the otter in the pond sleeps every day, கைவண் கிள்ளி – charitable Killi (Chōzha king), வெண்ணி சூழ்ந்த வயல் வெள் ஆம்பல் – white waterlilies growing in the ponds surrounding Venni, உருவ நெறித் தழை – beautiful sprouts/tender leaves, ஐது அகல் அல்குல் – beautiful/delicate wide loins, அணிபெற – making it beautiful, தைஇ – wearing (அளபெடை), விழவின் செலீஇயர் வேண்டும் – I want to go to that festival (செலீஇயர் – அளபெடை), மன்னோ – மன், ஓ அசைநிலைகள், expletives, யாணர் ஊரன் காணுநன் ஆயின் – if the man from the rich town sees, வரையாமையோ அரிதே – it would be rare if he does not marry her (ஏ – அசைநிலை, an expletive), வரையின் – if he marries her, வரை போல் – mountain like, யானை – elephants, வாய்மொழி – honest words, முடியன் வரை – Mudiyan’s mountain, வேய் புரையும் நல் தோள் – fine arms that are like bamboo, அளிய தோழி – they are pitiable my friend, தொலையுந பலவே – the losses are many (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 391, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
ஆழல் மடந்தை, அழுங்குவர் செலவே,
புலிப் பொறி அன்ன புள்ளி அம் பொதும்பின்
பனிப் பவர் மேய்ந்த மா இரு மருப்பின்
மலர்தலைக் காரான் அகற்றிய தண்ணடை
ஒண் தொடி மகளிர் இழை அணிக் கூட்டும்,  5
பொன்படு கொண்கான நன்னன் நல் நாட்டு
ஏழில் குன்றம் பெறினும், பொருள் வயின்
யாரோ பிரிகிற்பவரே, குவளை
நீர் வார் நிகர் மலர் அன்ன, நின்
பேர் அமர் மழைக் கண் தெண் பனி கொளவே.  10

Natrinai 391, Chēramān Pālai Pādiya Perunkadunkō, Pālai Thinai – What the heroine’s friend said to her
Do not cry, oh young woman!

He will not go, making your calm,
moist eyes like bright blue waterlilies
that drip water, to drop clear tears,
the man who had planned to part to
earn wealth, even if he gets the gold
producing Ēzhil Mountain of Konkānam
ruler Nannan,
where bright-bangled women collect
cool leaves, shirked off the bodies of
buffaloes with wide heads and dark,
huge horns, picked up while they graze
on the creepers with dew in groves,
where shade is in patches like the
markings on tigers, to wear as ornaments.    

Notes:  பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாகிய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.  தலைவன் மணம் புரியும் கருத்தினன் என்பதை உணர்த்தினாள்.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – எருமை நின்றொழித்த மலைப்பச்சை மகளிர் இழையணியாகக் கூட்டும் என்றது, தலைவன் ஈட்டும் பொருள் தலைவி இல்லறம் நிகழ்த்தி எஞ்சிடஉலகத்தார்க்கு பயன்பட்டு நிற்கும் என்பதனை உள்ளுறுத்தி நின்றது.  புலிப் பொறி அன்ன புள்ளி அம் பொதும்பின் (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – புலியினது புள்ளி போன்ற புள்ளிகள் அமைந்த நிழலுடைய மரங்கள் செறிதலினிடையே, ஒளவை துரைசாமி உரை – புலியின் பொறி போன்ற புள்ளி பொருந்திய புதர்களின்கண் படர்ந்திருக்கும்.  வரலாறு:  கொண்கானம், நன்னன், ஏழில் குன்றம்.  ஏழில் குன்றம் (7) – ஒளவை துரைசாமி உரை – இதனை இந்நாளில் எலிமலை என வழங்குகின்றனர். There are references to Ēzhil Mountain in Akanānūru 152-13, 345-7, 349-9, Natrinai 391-7 and Kurunthokai 138-2.

Meanings:  ஆழல் மடந்தை – do not cry oh young woman, do not sink into sorrow oh young woman (ஆழல் – நீட்டல் விகாரம், அல் ஈற்று எதிர்மறை வியங்கோள்), அழுங்குவர் செலவே – he will avoid going (செலவே – ஏ அசைநிலை, an expletive), புலிப் பொறி அன்ன – like the markings on tigers, like the stripes on tigers, புள்ளி அம் பொதும்பின் – in groves with spots of shade, on the bushes with spots, பனிப் பவர் மேய்ந்த – grazed on creepers with dew, grazed on winter’s creepers, மா இரு மருப்பின் – with dark large horns, மலர்தலைக் காரான் – wide-headed buffaloes, அகற்றிய – removed, தண்ணடை – fresh leaves, green leaves, ஒண் தொடி மகளிர் – young women with bright bangles, இழை அணிக் கூட்டும் – they collect to make ornaments, பொன்படு கொண்கான – Konkānam chief from gold producing country, Konkānam chief from a country with gold, நன்னன் நல் நாட்டு ஏழில் குன்றம் பெறினும் – even if he were to get king Nannan’s Ēzhil Mountain, பொருள் வயின் யாரோ பிரிகிற்பவரே – who can leave you and separate to earn wealth (யாரோ – ஓ அசைநிலை, an expletive, பிரிகிற்பவரே – ஏ அசைநிலை, an expletive), குவளை நீர் வார் நிகர் மலர் அன்ன – eyes like the bright blue waterlilies that drip water (நிகர் – ஒளி), நின் பேர் அமர் மழைக் கண் – your large calm moist eyes, தெண் பனி கொளவே – causing clear tear drops to drip (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 392, மதுரை மருதன் இளநாகனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கடுஞ்சுறா எறிந்த கொடுந்தாள் தந்தை
புள் இமிழ் பெருங்கடல் கொள்ளான் சென்றென,
மனை அழுது ஒழிந்த புன்தலைச் சிறாஅர்
துனையதின் முயன்ற தீங்கண் நுங்கின்
பணை கொள் வெம்முலை பாடு பெற்று உவக்கும்,  5
பெண்ணை வேலி உழைகண் சீறூர்
நன் மனை அறியின், நன்று மன் தில்ல,
செம்மல் நெஞ்சமொடு தாம் வந்து பெயர்ந்த
கானலொடு அழியுநர் போலாம், பானாள்
முனி படர் களையினும் களைப,  10
நனி பேர் அன்பினர் காதலோரே.

Natrinai 392, Mathurai Maruthan Ilanākanār, Neythal Thinai – What the heroine’s friend said to her
It would be nice if your lover knows
our fine house in the small village
with palmyra fences.  He can embrace
your desire-yielding, large breasts
that resemble the sweet palmyra fruits
that young boys with parched heads
seize rapidly after they stop weeping
which they start when their father
leaves them in the house, refusing to
take them along to hunt sharks with
great effort in the large ocean with
noisy birds.

He has very great love for you.  He might
be suffering in the seaside grove where he   
used to come and meet you with a noble
heart.  He will remove your great distress
at midnight.     

Notes:  தலைவன் இரவுக்குறி வேண்டினான்.  அதற்கு உடன்பட்ட தோழி தலைவியிடம் கூறியது.  தலைவன் மணம் புரியக் காலம் தாழ்த்தினான் என வருந்திய தலைவியிடம் கூறியதுமாம்.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – தந்தையுடன் செல்ல முயன்றும் செல்லாது, சிறார் பனை நுங்கைப் பெற்று மகிழ்வர் என்றது, தலைவனை மணந்து அவனுடன் கூடி அவன் மாளிகையில் இல்லறம் நிகழ்த்த விரும்பும் தலைவி, அதற்கு இயலாமையின் தன் மனையகத்தே அவனுடன் கூடும் இன்பத்தை பெறுவள் என்பதனைக் குறித்தது.  துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  கடுஞ்சுறா – harsh sharks, rapid sharks, எறிந்த – caught, கொடுந்தாள் – difficult effort, தந்தை – father, புள் இமிழ் பெருங்கடல் கொள்ளான் சென்றென – since he went to the huge ocean with noisy birds without taking them with him, மனை – house, அழுது ஒழிந்த – cried and then stopped, புன்தலைச் சிறாஅர் – children with dried/scanty/dirty hair on their heads (சிறாஅர் – அளபெடை), துனையதின் முயன்ற – got through quick effort, தீங்கண் நுங்கின்– like the palm fruits with sweet nungu (நுங்கின் – இன் உருபு ஒப்புப் பொருளது) பணை கொள் – large, வெம்முலை பாடு பெற்று உவக்கும் – he will be happy with the privilege of your desire-yielding breasts, பெண்ணை வேலி – palmyra fence, Borassus flabellifer, உழைகண் – in that place, சீறூர் – small village, நன் மனை – fine house, அறியின் – if he knows, நன்று – it would be good, மன் – அசைநிலை, an expletive, தில்ல – தில் விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச்சொல், ஈறு திரிந்தது வந்தது, a particle that implies desire, செம்மல் நெஞ்சமொடு – with a noble heart, with a great heart, தாம் வந்து பெயர்ந்த கானலொடு – in the seashore grove where he came and went, அழியுநர் போலாம் – he might be crushed it appears (போலாம் – உரையசை), பானாள் – midnight, முனி படர் – great sorrow, களையினும் களைப – he can get rid of it, நனி பேர் அன்பினர் காதலோரே – your lover who has very great love for you (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 393, கோவூர் கிழார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நெடுங்கழை நிவந்த நிழல்படு சிலம்பின்
கடுஞ்சூல் வயப்பிடி கன்று ஈன்று உயங்கப்,
பால் ஆர் பசும் புனிறு தீரிய களி சிறந்து,
வாலா வேழம் வணர் குரல் கவர்தலின்,
கானவன் எறிந்த கடுஞ்செலல் ஞெகிழி  5
வேய் பயில் அடுக்கம் சுடர மின்னி,
நிலை கிளர் மின்னின் தோன்றும் நாடன்
இரவின் வரூஉம் இடும்பை நாம் உய,
வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப,
நமர் கொடை நேர்ந்தனர் ஆயின் அவருடன்  10
நேர்வர் கொல், வாழி தோழி, நம் காதலர்
புதுவர் ஆகிய வரவும் நின்
வதுவை நாண் ஒடுக்கமும் காணுங்காலே?

Natrinai 393, Kōvūr Kizhār, Kurinji Thinai – What the heroine’s friend said to her
May you live long, oh friend!
The man from the country,
……….where a dark male elephant,
……….happy that his female had given
……….birth to a calf in the shade
……….of a tall bamboo on the slopes,
……….stole bent clusters of millet to feed
……….his sad partner with abundant milk
……….in her breasts,
……….and a forest dweller threw a lit torch
……….rapidly, its flame lighting up the
……….mountains dense with bamboos,
……….and appearing like lightning streaks,
is aware of the distress his nightly visits
have caused us.

He has come to marry you.  If our family
is agreeable to the wedding, will they be
agreeable to him?  He will be coming as a new
man.  We will see your shyness and restraint!

Notes:  வரைவு மலிந்தது.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – பிடியானையின் பசியைப் போக்கவேண்டி களிறு தினைக்கதிரை அழித்தலை நோக்கிய கானவன் எறிந்த எரி கொள்ளி எங்கும் சுடர் வீசித் தோன்றும் என்றது, தலைவி படும் காம நோயை ஆற்றும்பொருட்டு தோழி தலைவனைப் பழித்துரைக்க, அதனால் ஆற்றாத தலைவன் தலைவியை பெறுமாறு தலைவியின் சுற்றத்தார்க்கு அளிக்கக் கொணர்ந்த நிதியமும் கலனும் எங்கும் விளங்கித் தோன்றும் என்பதாம்.   அகநானூறு 112 – கண் கொள் நோக்கி நொதுமல் விருந்தினம் போல இவள் புது நாண் ஒடுக்கமும் காண்குவம் யாமே.  கலித்தொகை 52 –  புதுவை போலும் நின் வரவும் இவள் வதுவை நாண் ஒடுக்கமும் காண்குவல் யானே.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘நிலை கிளர் மீனின் தோன்றும்’ என்றும் பாடமாம்.  இதுவே சிறந்த பாடமாம். தன் நிலையிலே ஒளி வீசும் விண்மீன் போலத் தோன்றும் என்றவாறு.  புனிறு – புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே, தொல்காப்பியம் உரியியல் 79.

Meanings:  நெடுங்கழை நிவந்த – tall bamboo growing, நிழல்படு சிலம்பின் – on the mountain slopes with shade, கடுஞ்சூல் வயப் பிடி – a female elephant with first pregnancy, கன்று ஈன்று – gave birth to a calf, உயங்க – saddened, பால் ஆர் – full with milk, பசும் புனிறு – gave birth recently, தீரிய – to end, களி சிறந்து – very happy, வாலா வேழம் – an elephant that is not white, a black elephant, வணர் குரல் கவர்தலின் – since it stole the bent clusters of millet, கானவன் -a forest dweller, எறிந்த கடுஞ்செலல் ஞெகிழி – a torch that he threw rapidly (செலல் – இடைக்குறை), வேய் பயில் அடுக்கம் சுடர – causing the bamboo filled ranges to shine, மின்னி – shining, நிலை கிளர் மின்னின் தோன்றும் – appears like lightning streaks that keep moving (மின்னின் – இன் உருபு ஒப்புப் பொருளது), நாடன் – the man from such country, இரவின் வரூஉம் இடும்பை நாம் உய – for us to escape the distress of his coming at night (வரூஉம் – அளபெடை, (உய – உய்ய என்பதன் இடைக்குறை), வரைய வந்த வாய்மைக்கு – as he has come to marry with honesty, ஏற்ப – accordingly, நமர் கொடை நேர்ந்தனர் ஆயின் – if our relatives are willing to give, அவருடன் நேர்வர் கொல் – will they be agreeable with him (கொல் – ஐயம் என்ற பொருளில் வந்த இடைச்சொல், a particle which implies doubt, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – oh friend, நம் காதலர் – your lover, புதுவர் ஆகிய வரவும் – he will be coming as a new man, நின் வதுவை – your marriage, நாண் ஒடுக்கமும் காணுங்காலே – when your shyness and restraint can be seen (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 394, ஒளவையார், முல்லைத் திணை – தோழி சொன்னது, அல்லது வழியில் தலைவனை கண்டோர் சொன்னது
மரம் தலைமணந்த நனந்தலைக் கானத்து
அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை,
பொன் செய் கொல்லனின் இனிய தெளிர்ப்பப்,
பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடுந்தேர்,
வன் பரல் முரம்பின் நேமி அதிரச்,  5
சென்றிசின், வாழியோ, பனிக் கடு நாளே,
இடைச் சுரத்து எழிலி உரைத்தென, மார்பின்
குறும் பொறிக் கொண்ட சாந்தமொடு
நறுந்தண்ணியன் கொல்? நோகோ யானே.

Natrinai 394, Avvaiyār, Mullai Thinai – What the heroine’s friend said, or what someone on the path who saw the hero said
In the wide forest dense with trees,
an owl hoots sweetly from a parched
gnemai tree, with sounds like those
rising from a goldsmith’s workshop.

He went through this path on a cold
winter day, in his chariot decorated
with ornaments, its bells ringing,
as its wheels went over pebbles on
the hilly side.   May he live long!

He has returned on the wasteland path
where clouds rumble, decorated with
tiny spots of sandal paste on his chest.
He is cool and fragrant!   Will I worry?

Notes:  வினை முற்றி மீளும் தலைவனிடம் கண்டார் ஒருவர் கூறியது.  தோழி உவந்து கூறியதுமாம்.  உரைத்தென (9) – ஒளவை துரைசாமி உரை – வரவு தெரிவித்தன, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – உலவின. நோகோ யானே (9) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இதற்கு நோவேனா? நோவேன் அல்லேன், ஒளவை துரைசாமி உரை – ஒருதலையாகத் தெளிய மாட்டாமையின் யான் மனம் நோவாநின்றேன்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை) , அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).

Meanings:  மரம் தலைமணந்த நனந்தலைக் கானத்து – in the wide forest dense with trees, அலந்தலை ஞெமையத்து இருந்த – on the parched gnemai tree top, Anogeissus latifolia (அலந்த தலை அலந்தலை என வந்தது), குடிஞை – big owl, பொன் செய் கொல்லனின் இனிய தெளிர்ப்ப – with sweet sounds like those rising from a goldsmith’s workshop, பெய்ம் மணி ஆர்க்கும் – tied bells ringing, இழை கிளர் நெடுந்தேர் – tall chariot with bright ornaments, வன் பரல் முரம்பின் – in the gravel filled hilly area, நேமி அதிர – wheels making noises, சென்றிசின் – he went (படர்க்கை வினைமுற்றுத் திரிசொல், word with third person verbal suffix), வாழியோ – may he live long (ஓ – அசைநிலை, an expletive), பனிக் கடு நாளே – very cold winter day (ஏ – அசைநிலை, an expletive), இடைச் சுரத்து – on the wasteland path, எழிலி உரைத்தென – when clouds rumbled, when clouds roamed, மார்பின் குறும் பொறிக் கொண்ட சாந்தமொடு – with sandal paste spots on the chest, நறுந்தண்ணியன் கொல் – he is cool and fragrant, நோகோ – I am hurting (நோகு – செய்கென்னும் தன்மை வினை, ஓ – அசைநிலை, an expletive), யானே – me (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 395, அம்மூவனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
யாரை எலுவ? யாரே நீ எமக்கு,
யாரையும் அல்லை, நொதுமலாளனை,
அனைத்தால் கொண்க எம் இடையே நினைப்பின்,
கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் குட்டுவன்
வேந்து அடு களத்து முரசு அதிர்ந்தன்ன,  5
ஓங்கல் புணரி பாய்ந்து ஆடு மகளிர்
அணிந்திடு பல் பூ மரீஇ, ஆர்ந்த
ஆ புலம் புகுதரு பேர் இசை மாலைக்
கடல் கெழு மரந்தை அன்ன, எம்
வேட்டனை அல்லையால், நலம் தந்து சென்மே.  10

Natrinai 395, Ammoovanār, Neythal thinai – What the heroine’s friend said to the hero
Oh friend!  Who are you?  Who are you
to us?  You are not anybody to us!
You are a mere stranger!  That’s all!

Oh Lord of the shores!  Since you do not
desire her whose beauty is like Maranthai
town, where the ocean is loud in the
evening when a cow moves away to its
land after it eats the many used flowers
worn by women who dive and play in the
tall waves that roar like battle drums of
Chēra King Kuttuvan with tall chariots
and fiercely arrogant elephants.

Return her virtue and leave!

Notes:  வரைவு கடாயது.   உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – மகளிர் சூடி வீசிய மலரைப் பசு தின்னும் என்றது, தலைவன் களவில் கூடிப் பின்னர்க் கைவிட்ட தலைவியை அயலவர் வந்து மணம் புரிய விரும்பி நின்றனர் என்று உணர்த்தி நிற்கும்.  யாரை – ஒளவை துரைசாமி உரை – முன்னிலை குறிப்பு வினை, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை (அகநானூறு 46 – ம் பாடலின் உரையில் கூறியது) ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது, சாரியையுமாம்.  வரலாறு:  குட்டுவன், மரந்தை.

Meanings:  யாரை எலுவ – who are you oh friend (யாரை – ஒளவை துரைசாமி உரை – முன்னிலைக் குறிப்புவினை), யாரே நீ எமக்கு – who are you to us (ஏகாரம் அசை), யாரையும் அல்லை – you are nobody, நொதுமலாளனை – you are a stranger (ஐ – சாரியை), அனைத்து ஆல் – it is of that nature (ஆல் – அசைநிலை), கொண்க – oh lord of the shores, எம் இடையே – among us, நினைப்பின் – if you think about it, கடும் பகட்டு யானை – fierce arrogant elephants, நெடுந்தேர்க் குட்டுவன் – King Kuttuvan with his tall chariots, Chēra king, வேந்து அடு களத்து முரசு அதிர்ந்தன்ன – like the drums of the kings in the battle field, ஓங்கல் புணரி – high waves, பாய்ந்து ஆடு மகளிர் – women who dive and play, அணிந்தி இடு பல் பூ – many flowers that they wore and threw away, மரீஇ ஆர்ந்த – ate together (மரீஇ – அளபெடை), ஆ – cow, புலம் புகுதரு – entering its land, பேர் இசை மாலைக் கடல் கெழு – with loud sounding evening ocean, மரந்தை அன்ன – like Maranthai town, எம் வேட்டனை அல்லையால் – you do not desire her (ஆல் – அசைநிலை, an expletive), நலம் தந்து – returning her virtue/beauty, சென்மே – you leave (முன்னிலை ஏவல் வினைமுற்று, a second person command verb ending)

நற்றிணை 396, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பெய்து போகு எழிலி வைகு மலை சேரத்
தேன் தூங்கு உயர்வரை அருவி ஆர்ப்ப,
வேங்கை தந்த வெற்பு அணி நன்னாள்,
பொன்னின் அன்ன பூஞ்சினை துழைஇக்,
கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை  5
பாசறை மீமிசைக் கணம் கொள்பு, ஞாயிற்று
உறு கதிர் இள வெயில் உண்ணும் நாடன்!
நின் மார்பு அணங்கிய செல்லல் அரு நோய்
யார்க்கு நொந்து உரைக்கோ யானே, பல் நாள்
காமர் நனி சொல் சொல்லி,  10
ஏமம் என்று அருளாய் நீ மயங்கினையே?

Natrinai 396, Unknown Poet – Kurinji Thinai, What the heroine’s friend said to the hero
Oh man from the country,
where, after raining, clouds reach the tall
mountains where honeycombs hang and
waterfalls roar, vēngai trees have put out
golden flowers during wedding days,
a peacock makes itself beautiful playing on
the flowering branches with fragrant pollen,
and basks in the abundant rays of the early
morning warm sun with its flock, on a boulder!

The affliction that your chest has caused,
who can I tell about this painful disease?
You spoke enticing words for many days, but
you do not show your grace.  You are confused!

Notes:  வரைவு கடாயது.  வரைவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாயச் சொல்லியதுமாம்.  இரவுக்குறி மறுத்ததுமாம்.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை- மயில் வேங்கை மலரின் தாதினை அளாவி, தன் இனத்துடன் ஞாயிற்றின் இளவெயிலைத் துய்க்கும் என்றது, தலைவனும் தலைவியை மணந்து இன்பம் நுகர்ந்து தன் சுற்றத்துடன் வாழ வேண்டும் என்பதனை உள்ளுறுத்தி நின்று வரைவு கடாயதாம்.  செல்லல் – செல்லல் இன்னல் இன்னாமையே (தொல்காப்பியம், உரியியல் 6).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  பெய்து போகு எழிலி – clouds went after raining, வைகு மலை சேர – reached the mountains where they stayed before, தேன் தூங்கு – honeycombs hanging, உயர் வரை – tall mountains, அருவி ஆர்ப்ப – waterfalls roar, வேங்கை தந்த – what the vēngai trees gave, Pterocarpus marsupium, வெற்பு அணி – mountain decorated, நன்னாள் – special day, wedding day, பொன்னின் அன்ன – like gold (பொன்னின் – இன் சாரியை), பூஞ்சினை துழைஇ கமழ் தாது ஆடிய – played in the fragrant pollen on the flowering branches stirring them, கவின் பெறு தோகை – beautiful peacock, பாசறை மீமிசைக் கணம் கொள்பு – crowding on a boulder with its flock (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), ஞாயிற்று உறு கதிர் இள வெயில் உண்ணும் – basks in the early morning sun’s abundant rays (உறு – மிக்க), நாடன் – oh man from such country, நின் மார்பு அணங்கிய செல்லல் – the distress disease that your chest has caused, அரு நோய் யார்க்கு நொந்து உரைக்கோ – who can I tell about the difficult pain (உரைக்கு – தன்மை வினைமுற்று, first person verb ending, ஓ – அசைநிலை, an expletive), யானே – me (ஏ – அசைநிலை, an expletive), பல் நாள் காமர் நனி சொல் சொல்லி – for many days you said many loving words, ஏமம் என்று அருளாய் – you do not show grace, நீ மயங்கினையே – you are confused (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 397, அம்மூவனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
தோளும் அழியும், நாளும் சென்றென,
நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்றுக்
கண்ணும் காட்சி தௌவின, என் நீத்து
அறிவும் மயங்கி பிறிது ஆகின்றே,
நோயும் பெருகும், மாலையும் வந்தன்று,  5
யாங்கு ஆகுவென் கொல் யானே? ஈங்கோ
சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின்
பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின்
மறக்குவேன் கொல் என் காதலன் எனவே.

Natrinai 397, Ammoovanār, Pālai Thinai – What the heroine said to her friend
My arms are ruined; promised days
have gone by; my eyes have lost their
luster and ability to see, looking at the
long wasteland path, and confusion
reigns.  My intelligence has been lost.

My love affliction has increased.
Evening time has arrived to cause me
distress.  What will happen to me here?

I am not afraid of death.  What I fear is
if I die, will I forget my lover in my next
birth if it is different.

Notes:  குறித்த பருவத்தில் தலைவன் வரவில்லை என்று வருந்திய தலைவியைத் தோழி ஆற்றியிருக்குமாறு கூறுகின்றாள்.  அவளிடம் தலைவி சொல்லியது.  ஒளவை துரைசாமி உரை – ‘இம்மை மாறி மறுமை ஆயினும் நீயாகியர் எம் கணவனை, யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே’ (குறுந்தொகை 49) இவ்வாசிரியரே கூறுதல் காண்க.  ஆதலால் அவர் பிரிவை ஆற்றியிருப்பேன்.  நீ கவலற்க என்பது குறிப்பெச்சம்.  தோழி கேட்டு ஆற்றாமை தீர்வாளாவது பயன் என்க.  செத்தால் எய்தக் கடவ பிறப்புத் தலைமகற்கும் எனக்கும் உள்ள இத்தொடர்பே நிலைபெற அமையாது வேறுபடுமாயின், என் காதலனை மறத்தல் கூடுமென அஞ்சுகின்றேன் என்பாள் ‘ அஞ்சுவல் சாவின் பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின் மறக்குவேன் கொல் என் காதலன் எனவே’ என்றும் கூறினாள்.

Meanings:  தோளும் அழியும் – arms are ruined, நாளும் சென்றென – since days have gone by, நீள் இடை அத்தம் நோக்கி – looking at the long wasteland path, வாள் அற்றுக் கண்ணும் – eyes that have lost luster, காட்சி – seeing, தௌவின – they are ruined, என் நீத்து அறிவும் மயங்கி பிறிது ஆகின்றே – my intelligence has left me and is confused and different, நோயும் பெருகும் – love affliction has also increased, மாலையும் வந்தன்று – and the disease-increasing evening time has arrived, யாங்கு ஆகுவென் கொல் யானே – what will happen to me, ஈங்கோ – here, சாதல் அஞ்சேன் – I am not afraid of death, அஞ்சுவல் – I am afraid (தன்மையொருமை வினைமுற்று), சாவின் – if I die, பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின் – if my birth is different, மறக்குவேன் கொல் என் காதலன் – will I forget my lover (கொல் – ஐயம் என்ற பொருளில் வந்த இடைச்சொல், a particle which implies doubt), எனவே – thus (ஏ – அசைநிலை, an expletive)   

நற்றிணை 398, உலோச்சனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
உருகெழு தெய்வமும் கரந்து உறையின்றே,
விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே,
நீர் அலைக் கலைஇய கூழை வடியாச்
சாஅய் அவ் வயிறு அலைப்ப உடன் இயைந்து
ஓரை மகளிரும் ஊர் எய்தினரே,  5
பல் மலர் நறும் பொழில் பழிச்சி “யாம் முன்
சென்மோ சேயிழை?” என்றனம், அதன் எதிர்
சொல்லாள் மெல்லியல் சிலவே, நல்லகத்து
யாணர் இள முலை நனைய
மாண் எழில் மலர்க் கண் தெண் பனி கொளவே.  10

Natrinai 398, Ulōchanār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
God who causes fear does not
remain hiding;
the sun with spreading rays
sinks in the west;
young women playing ōrai games
join together and return to the
village beating their bellies,
their hair drenched by splashing
water that they squeezed out
making their hair dry.

In the grove with flowers,
I praised her and asked her,
“You with fine jewels! Can we
go ahead and leave?”
Without responding to me, the
delicate young woman cried,
clear tears from her pretty,
flower-like eyes wetting her
budding, young breasts on her
beautiful chest.

Notes:  பகற்குறி வந்து மீளும் தலைவனிடம் தோழி கூறியது.  வயிற்றில் அடித்தல் – நற்றிணை 179 – அவ் வயிறு அலைத்த என் செய் வினைக் குறுமகள், நற்றிணை 379 – அவ் வயிறு அலைத்தலின், நற்றிணை 398 – அவ் வயிறு அலைப்ப உடன் இயைந்து ஓரை மகளிரும், அகநானூறு 106 -பாணன் எறியும் தண்ணுமை கண்ணின் அலைஇயர் தன் வயிறே.  Ōrai games are played by girls in Natrinai 68, 143, 155 and 398.  The heroine’s friend is suggesting that the hero come and marry her friend.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  வடியா – வடித்து என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  பழிச்சும் – பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 86).

Meanings:  உருகெழு தெய்வமும் – the god who causes fear, கரந்து உறையின்றே – does not remain hidden, விரி கதிர் ஞாயிறும் – the sun with spreading rays, குடக்கு வாங்கும்மே – bends to the west (வாங்கும்மே – செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது), நீர் அலைக் கலைஇய – with water splashing on their hair and messing it up (கலைஇய – அளபெடை), கூழை வடியா – வடித்து, they squeezed and drained the water from their hair, சாஅய் – disheveled, dried (சாஅய் – அளபெடை), அவ் வயிறு அலைப்ப – hit on their stomachs, உடன் இயைந்து – joining together, ஓரை மகளிரும் – the young women playing ōrai games, ஊர் எய்தினரே – they went back to town, பல் மலர் நறும் பொழில் – groves with many fragrant flowers, பழிச்சி – praised, யாம் முன் சென்மோ – let us go ahead (மோ – தன்மை அசைநிலை, an expletive of the first person), சேயிழை – oh young woman with fine jewels, oh young woman with red jewels (அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), என்றனம்  – we said, அதன் எதிர் சொல்லாள் – she did not respond to that, மெல்லியல் – the delicate young woman (அன்மொழித்தொகை), சிலவே – a little, நல் அகத்து – on the beautiful chest, யாணர் – budding, new, இள முலை நனைய – her young breasts getting wet, மாண் எழில் மலர்க் கண் – esteemed beautiful flower-like eyes, தெண் பனி கொளவே – to have clear tears (ஏ – அசைநிலை, an expletive)

நற்றிணை 399, தொல்கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது, அல்லது தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்துக்
குருதி ஒப்பின் கமழ் பூங்காந்தள்
வரி அணி சிறகின் வண்டு உண மலரும்
வாழை அம் சிலம்பில் கேழல் கெண்டிய
நிலவரை நிவந்த பல உறு திரு மணி  5
ஒளி திகழ் விளக்கத்து ஈன்ற மடப் பிடி,
களிறு புறங்காப்ப கன்றொடு வதியும்
மா மலை நாடன் நயந்தனன் வரூஉம்
பெருமை உடையள் என்பது
தருமோ தோழி, நின் திரு நுதல் கவினே?  10

Natrinai 399, Tholkapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to her, or what the heroine said to her friend, as the hero listened nearby
Oh friend!  Will the great beauty on
your forehead express pride when
the lord of the lofty mountains,
……….where waterfalls roar
……….in the soaring mountains,
……….blossoming red glory lilies
……….are opened by bees with stripes on
……….their wings when they come to eat,
……….bananas grow on beautiful slopes,
……….a male elephant protects his female
……….that has given birth to a calf in the
……….bright light from many abundant
……….beautiful gems dug up by pigs,
comes here with desire?

Notes:  தலைவன் வரையாது களவில் வந்தொழுகுகின்றான் என வருந்திய தலைவியிடம் தோழி கூறியது.  தலைவி தோழியிடம் கூறியதுமாம்.  இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – வண்டு வந்து உண்ணுமாறு காந்தள் மலரும் என்றது, தலைவன் தலைவியின் நலன் நுகர வருங்காலத்துத் தலைவியும் வெறுத்திடாது மகிழ்ந்திருத்தல் வேண்டிக் குறிப்பித்ததாம்.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – மணியின் விளக்கத்தில் கன்று ஈன்ற பிடி களிறு புறம் காப்ப அதனோடு வதியும் என்றது, தலைவற்கு மகட்கொடை நேர்தற்குத் தமர் நேர்ந்த உள்ளத்தராக இருப்பினும், தலைவியின் வேறுபாடு பயந்த அலர்க்கு அஞ்சி தன்னையர் புறங்காப்ப தாய் தலைவியைப் பிரியாது உடனுறைவது என்பது.  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  அருவி ஆர்க்கும் – waterfalls roar, பெருவரை – lofty mountain, அடுக்கத்து – in the mountain range, குருதி ஒப்பின் – like blood, கமழ் பூங்காந்தள் – fragrant glory lily flowers, வரி அணி சிறகின் வண்டு உண மலரும் – they blossom when bees with striped wings come to eat their pollen/honey (உண உண்ண என்பதன் விகாரம்), வாழை அம் சிலம்பில் – on the beautiful mountains with bananas, கேழல் கெண்டிய – pigs dug up, நில வரை நிவந்த – raised from the land, பல உறு திரு மணி – many abundant beautiful gems (உறு – மிக்க), ஒளி திகழ் விளக்கத்து – in that bright light, ஈன்ற மடப் பிடி – a naive female elephant that gave birth, களிறு புறங்காப்ப – the male elephant protecting, கன்றொடு வதியும் – stays with her calf, மா மலை நாடன் – the man from such huge/dark mountains, நயந்தனன் வரூஉம் பெருமை உடையள் என்பது – will there be pride when he comes with love for his beloved (வரூஉம் – அளபெடை), தருமோ தோழி – will it express oh friend, நின் திரு நுதல் கவினே – your splendid beautiful forehead (ஏ – அசைநிலை, an expletive) 

நற்றிணை 400, ஆலங்குடி வங்கனார், மருதத் திணை – பரத்தை தலைவனிடம் சொன்னது
வாழை மென் தோடு வார்புறுபு ஊக்கும்
நெல் விளை கழனி நேர் கண் செறுவின்,
அரிவனர் இட்ட சூட்டு அயல் பெரிய
இருஞ்சுவல் வாளை பிறழும் ஊர!
நினின்று அமைகுவென் ஆயின், இவண் நின்று,  5
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ?
மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து,
அறங்கெட அறியாதாங்கு, சிறந்த
கேண்மையொடு அளைஇ நீயே
கெடு அறியாய் என் நெஞ்சத்தானே.  10

Natrinai 400, Ālankudi Vankanār, Marutham Thinai – What the concubine said to the hero
Oh man from the town
where vālai fish with thick
back fins roll where reapers
place paddy sheaves from
lovely fields
in which rice plants grow tall
and touch and sway the delicate,
long leaves of banana trees.

If I have to live without you,
staying here in pain, is there any
way to survive?

We have had a great friendship.
You do not know leaving from
my heart, as justice does not
know leaving the assembly of the
the brave Chōzha king at Uranthai!

Notes:  பரத்தை தலைவனைப் புகழ்ந்தது.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – வாழையின் பூவை அசைக்கும் நெற்கதிரை மள்ளர்கள் அரிந்திட்ட அரிச்சூட்டருகே வாளை பிறழும் என்றது, தலைவியின் நெஞ்சை வருத்தும் காதற்பரத்தையின் செயல்கள் வாயில்கள் அடக்கவும் அவள் நெஞ்சிடத்துத் தலைவன் நீங்காதே இருக்கின்றான் என்பதாம்.  வரலாறு:  சோழர், உறந்தை.  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).

Meanings:  வாழை மென் தோடு – delicate sheaths/leaves of the banana trees, வார்பு உறுபு – long and tall, ஊக்கும் – they touch and sway, நெல் விளை கழனி – field where paddy grows, நேர் கண் – sweet to the eyes, செறுவின் – in the fields, அரிவனர் – the reapers, இட்ட – placed, சூட்டு அயல் – near the bundles of grain sheaves, பெரிய – big, இருஞ்சுவல் – dark nape, dark neck, வாளை பிறழும் ஊர – oh man from town where vālai fish leap, oh man from town where valai fish roll, Trichiurus haumela (ஊர – அண்மை விளி), நினின்று அமைகுவென் ஆயின் – if I have to live without you, இவண் நின்று – staying here,  இன்னா நோக்கமொடு – with a painful outlook, எவன் பிழைப்பு உண்டோ – how can I survive, is there any way to survive, மறம் கெழு சோழர் உறந்தை – Uranthai town of the brave Chōzha king, அவையத்து – in the assembly, அறம் கெட – for justice to be ruined, அறியாதாங்கு – like not knowing, சிறந்த கேண்மையொடு – with great friendship, அளைஇ – get involved, அளாவி, கலந்து (அளபெடை), நீயே கெடு அறியாய் – you do not know leaving and staying away, என் நெஞ்சத்தானே – from my heart (ஏ – அசைநிலை, an expletive)