பதிற்றுப்பத்து – Translated by Vaidehi

Copyright ©  All Rights Reserved

தமிழ் உரை நூல்கள்:
பதிற்றுப்பத்து – ஔவை துரைசாமி – தமிழ் மண் பதிப்பகம், சென்னை
பதிற்றுப்பத்து – சு. அருளம்பலவாணர்
பதிற்றுப்பத்து – பழைய உரை, உ. வே. சாமிநாதையர் குறிப்புடன், உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை
பதிற்றுப்பத்து – புலியூர் கேசிகன்

“நற்றிணை நல்ல குறுந்தொகை , ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல், கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு, அகம், புறம் என்று இத்திறத்த எட்டுத் தொகை”.

முதல் பத்து –  கிடைக்கவில்லை (1 – 10)
இரண்டாம் பத்து – சேர மன்னன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் – குமட்டூர்க் கண்ணனார் பாடியது (11 – 20)
மூன்றாம் பத்து – சேர மன்னன் பல்யானைச் செல்கெழு குட்டுவன்  – பாலைக் கெளதமனார் பாடியது (21 – 30)
நான்காம் பத்து – சேர மன்னன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் – காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது (31 – 40)
ஐந்தாம் பத்து – சேர மன்னன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் – பரணர் பாடியது (41 – 50)
ஆறாம் பத்து – சேர மன்னன் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் – காக்கைபாடினியார் நச்செள்ளையார் (பெண் புலவர்) பாடியது (51 – 60)
ஏழாம் பத்து – செல்வக்கடுங்கோ வாழியாதன் –  கபிலர் (61 – 70)
எட்டாம் பத்து – சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறை – அரிசில்கிழார் பாடியது (71 – 80)
ஒன்பதாம் பத்து  – சேர மன்னன் இளஞ்சேரல் இரும்பொறை – பெருங்குன்றூர்கிழார் பாடியது (81 – 90)
பத்தாம் பத்து  – கிடைக்கவில்லை (91 –  100)

ஒளவை துரைசாமி உரை:

துறை: செந்துறைப் பாடாண்செந்துறையாவது விகார வகையான் அமரராக்கிச் செய்யும் அறுமுறை வாழ்த்தினைப் போலாது, உலகினுள் இயற்கை வகையான் இயன்ற மக்களைப் பாடுதல் (நச்சினார்க்கினியர் உரை, தொல்காப்பியம் பொருள் 82).

தூக்கு: செந்தூக்குஅஃதாவது ஆசிரியப்பா.  தூக்கு என்பது செய்யுள் அடி வரையறை கொண்டு பாக்களைத் துணிப்பது.  அஃதாவது பா வகையுள் இன்னபாவெனத் துணித்து கூறுவதெனவறிக.

வண்ணம்: ஒழுகு வண்ணம் – ஒழுகிய ஓசையால் செல்வது.

பதிற்றுப்பத்து 11, *புண் உமிழ் குருதி*, பாடியவர்: குமட்டூர்க் கண்ணனார், பாடப்பட்டவர்: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

வரை மருள் புணரி வான் பிசிர் உடைய,
வளி பாய்ந்து அட்ட துளங்கு இருங்கமஞ்சூல்
நளி இரும் பரப்பின் மாக்கடல் முன்னி,
அணங்கு உடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூருடை முழு முதல் தடிந்த பேரிசைக்,  5
கடுஞ்சின விறல் வேள் களிறு ஊர்ந்தாங்குச்
செவ்வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப,
அரு நிறம் திறந்த *புண் உமிழ் குருதி*யின்,
மணி நிற இருங்கழி நீர் நிறம் பெயர்ந்து,
மனாலக் கலவை போல அரண் கொன்று,  10
முரண் மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை;
பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங்கடம்பின்
கடி உடை முழு முதல் துமிய ஏஎய்,
வென்று எறி முழங்கு பணை செய்த வெல் போர்,
நார் அரி நறவின், ஆர மார்பின்,  15
போர் அடு தானைச் சேரலாத!
மார்பு மலி பைந்தார் ஓடையொடு விளங்கும்
வலன் உயர் மருப்பின், பழி தீர் யானைப்
பொலன் அணி எருத்த மேல்கொண்டு பொலிந்த நின்
பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகுமே,  20
கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி
பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும்,
ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்னங் குமரியொடு ஆயிடை
மன் மீக் கூறுநர் மறம் தபக் கடந்தே.  25

Pathitruppathu 11, Poet: Kumattūr Kannanār, King: Imayavarampan Nedunchēralāthan, Blood Flowing from Wounds

Waves rose high like mountains; winds broke them
creating fine white sprays and the roaring, vast ocean
was filled with abundant water.  Murukan with rage
and valor attacked and killed Sooran who hid in the
huge, dark ocean, and hacked totally his mango tree
protected by fierce demon guards.

Having annihilated his enemy, he climbed on his special
elephant and went on a victory parade.

Like him, you struck your enemies with your blood-tipped
sword, and slaughtered them to pieces on battlefields.
Blood from wounds your sword caused flowed into the
sapphire- colored, dark backwaters, the color changing to
that of saffron dye.

You crushed your enemies, ruining their fortresses.  You
are a splendidly brave man, who sent warriors who cut
down totally your enemy’s flower-filled sacred kadampam
tree, the one honored and protected by many, and made a
roaring battle drum with its wood.

Oh King Chēralāthan who wears pearl strands and drinks
palm-fiber filtered toddy!  You own murderous armies who
fight wars.  You are seated high on your royal elephant,
the fresh victory garland filling your chest hangs down
touching the gleaming face ornaments of your faultless
elephant with powerful, high tusks and neck decorated with
gold jewels.  Everyone praises your immense wealth.  We saw
the sweetness of it, my lord!

Yak sleeping on slopes filled with coral trees, dream of the
narantham grass they ate, and of wide waterfalls from which
they drank, in the well renowned Himalayas where Aryans live.
In the land between that mountain and southern Kumari,
you have ruined the strength of arrogant kings.

Notes:  பதிற்றுப்பத்து 11 வரிகள் 21-23 – சிலம்பில் துஞ்சும் கவரி பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும் ஆரியர் துவன்றிய பேரிசை இமயம், புறநானூறு 132 – நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி குவளைப் பைஞ்சுனை பருகி அயல தகரத் தண் நிழல் பிணையொடு வதியும் வட திசையதுவே வான் தோய் இமையம்.  அகநானூறு 347 – சால் பெருந் தானைச் சேரலாதன் மால் கடல் ஓட்டிக் கடம்பு அறுத்து இயற்றிய பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன.  கமம் – நிறைவு, கமம் நிறைந்தியலும் (தொல்காப்பியம். உரியியல் 57).  துவன்று – துவன்று நிறைவு ஆகும் – (தொல்காப்பியம், உரியியல் 36).  எஃகம் (7) – ஒளவை துரைசாமி உரை – வாள், அருள் அம்பலவாணர் உரை – வேல்.

Meanings:  வரை மருள் புணரி – mountain like waves (மருள் – உவம உருபு, a comparison word), வான் பிசிர் உடைய – breaking white water sprays, வளி பாய்ந்து அட்ட – winds blow and attack, துளங்கு – moving, இரும் – wide, கமஞ்சூல் – full, pregnant, நளி இரும் பரப்பின் – with big wide spaces, மாக்கடல் – big ocean, முன்னி – went, அணங்கு உடை அவுணர் – terrorizing demons, ஏமம் புணர்க்கும் – protecting, சூருடை – Sooran’s, முழு முதல் தடிந்த – cut the thick mango tree trunk, cut the mango tree down to the roots, பேரிசை – great fame, கடுஞ்சின – extreme rage, விறல் – brave, வேள் – Murukan, களிறு ஊர்ந்தாங்கு – like he went on his elephant, செவ்வாய் – red tipped, எஃகம் – spears, swords, விலங்குநர் அறுப்ப – chop the enemies, அரு – difficult, நிறம் – chest, திறந்த – open, புண் உமிழ் குருதியின் – with the blood from the wounds, மணி நிற – sapphire colored, இருங்கழி – dark backwaters, brackish waters, நீர் நிறம் பெயர்ந்து – water color changed, மனாலக் கலவை போல – (red) like saffron dye, red like vermillion dye (மனாலம் – குங்குமம், சாதிலிங்கம்), அரண் கொன்று – ruined fortresses, முரண் மிகு – with great strength, சிறப்பின் – with splendor, உயர்ந்த ஊக்கலை – you are with great effort, you put out great effort, பலர் மொசிந்து ஓம்பிய – group of them protected together, திரள் பூங்கடம்பின் – kadampam trees with clusters of flowers, Anthocephalus cadamba, Kadampa Oak, கடி உடை – protected, முழு முதல் துமிய ஏஎய் – you ordered and chopped down the thick trunk (ஏஎய் – இன்னிசை அளபெடை), வென்று எறி முழங்கு பணை செய்த – made panai drums that are played after victory, வெல்போர் – victorious war, நார் அரி நறவின் – with toddy filtered with fiber (fiber – பன்னாடை, the cloth-like fibrous piece covering the base of coconut leaf stems), ஆர மார்பின் – with a chest with pearl strands, போர் அடு தானை – murderous battle armies, சேரலாத – Oh king Chēralāthan, மார்பு மலி – chest filled, பைந்தார் – fresh garland, ஓடையொடு – with face ornaments, விளங்கும் – flourish, வலன் – victory, உயர் – high, மருப்பின் – with tusks, பழி தீர் யானை – faultless elephant, பொலன் அணி எருத்த – on the necks adorned with gold (பொலன் – பொன் என்பதன் போலி), மேல்கொண்டு – sitting on it, பொலிந்த – flourishing, நின் – your, பலர் புகழ் செல்வம் – wealth that everybody praises, இனிது கண்டிகுமே – we saw it sweetly (கண்டிகும் – தன்மைப் பன்மை வினைமுற்று, இகும் தன்மைக்கண் வந்த அசைநிலை, ஏ – அசைநிலை, an expletive), கவிர் – முருக்க மரம், Indian coral tree, Erythrina indica, ததை – filled, சிலம்பில் – on the mountain slopes, துஞ்சும் – sleeping, கவரி – yak, பரந்து இலங்கு அருவியொடு – with wide flourishing waterfalls, நரந்தம் – narantham grass, Cymbopogon flexuosus, கனவும் – in dreams, ஆரியர் துவன்றிய – ஆரியர் நிறைந்த, with Aryans, பேரிசை இமயம் – very famous Himalayas, தென்னங் குமரியொடு – with southern Kanya Kumari, ஆயிடை – in between, மன் – kings, மீக் கூறுநர் – arrogant kings, மறம் – bravery, தபக் கடந்தே – ruined (கடந்தே – ஏகாரம் அசை நிலை, an expletive)

பதிற்றுப்பத்து 12, *மறம் வீங்கு பல் புகழ்*, பாடியவர்: குமட்டூர்க் கண்ணனார், பாடப்பட்டவர்: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

வயவர் வீழ வாளரின் மயக்கி,
இடங்கவர் கடும்பின் அரசு தலை பனிப்பக்,
கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின வேந்தே!
தார் அணி எருத்தின் வாரல் வள் உகிர்
அரிமான் வழங்கும் சாரல் பிறமான்  5
தோடு கொள் இன நிரை நெஞ்சு அதிர்ந்தாங்கு,
முரசு முழங்கு நெடுநகர் அரசு துயில் ஈயாது,
மாதிரம் பனிக்கும் *மறம் வீங்கு பல் புகழ்*
கேட்டற்கு இனிது நின் செல்வம்; கேட்டொறும்
காண்டல் விருப்பொடு, கமழும் குளவி  10
வாடாப் பைம் மயிர் இளைய ஆடு நடை
அண்ணல் மழ களிறு அரி ஞிமிறு ஓப்பும்
கன்று புணர் பிடிய குன்று பல நீந்தி
வந்து அவண் இறுத்த இரும்பேர் ஒக்கல்
தொல் பசி உழந்த பழங்கண் வீழ,  15
எஃகு போழ்ந்து அறுத்த வால் நிணக் கொழுங்குறை
மை ஊன் பெய்த வெண்ணெல் வெண்சோறு
நனை அமை கள்ளின் தேறலொடு மாந்தி,
நீர்ப்படு பருந்தின் இருஞ்சிறகு அன்ன
நிலத்தின் சிதாஅர் களைந்த பின்றை  20
நூலாக் கலிங்கம் வால் அரைக் கொளீஇ,
வணர் இருங்கதுப்பின் வாங்கு அமை மென் தோள்
வசை இல் மகளிர் வயங்கு இழை அணிய,
அமர்பு மெய் ஆர்த்த சுற்றமொடு
நுகர்தற்கு இனிது நின் பெரும் கலி மகிழ்வே.  25

Pathitruppathu 12, Poet: Kumattūr Kannanār, King: Imayavarampan Nedunchēralāthan, Increased Valor and Great Fame

Oh King filled with great rage!  Your soldiers with swords
slay those who oppose you, seize the lands of their kith and
kin, cut down their sacred kadampam trees, and cause
enemy kings in all four directions, those with battle drums
and big palaces, to tremble with fear unable to sleep like
animal herds that shiver when they see a lion with mane
and long sharp claws roaming in the mountain slopes.

It was sweet to hear of your victories and fame and I came
here desiring to see you.  I came with my big family, passing
few mountains where noble, young male elephants with new
hair and swaying walks have musth flowing from their cheek
glands and elephant mothers with calves wave wild jasmine
twigs, chasing striped bees that swarm on the sweet musth.

You gave us white fatty goat meat cut with knives and served
with white rice along with toddy aged with fragrant flower
buds.  You had us remove our mud-stained, torn clothes
that looked like dark drenched wings of kites and gave us
pure silk garments to cover our bodies.

You gave fine gold ornaments to faultless female dancers with
thick, curly hair and bamboo-like, delicate, curved arms.
It is sweet to enjoy your success and see you in your court with
your truly joyous, uproarious ministers, oh Greatness!

Notes:  Viralis were female artists who danced and sang.  They traveled with the bards and were usually members of the bard’s family.  In the long song Sirupānatruppadai, the virali is the wife of the bard.  அகநானூறு 347 – சால் பெருந் தானைச் சேரலாதன் மால் கடல் ஓட்டிக் கடம்பு அறுத்து இயற்றிய பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன.  நனை அமை கள் (18) – அருள் அம்பலவாணர் உரை – அரும்பில் அமைத்த கள், ஒளவை துரைசாமி உரை – மலர் அரும்பு பெய்து பக்குவம் செய்யப்பட்ட கள்.  அமர்பு (24) – ஒளவை துரைசாமி உரை – விரும்பி, அருள் அம்பலவாணர் – அமர்ந்து.  மழ – மழவும் குழவும் இளமைப் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 15).

Meanings:  வயவர் வீழ – warriors killed, வாள் அரில் மயக்கி – fight with sharp swords, இடம் கவர் – seize lands, கடும்பின் – army comrades, அரசு தலை பனிப்ப – heads of kings tremble, கடம்பு முதல் தடிந்த – cut down their kadampam tree trunks (மராஅத்து, வெண்கடம்பு Kadampa Oak, Anthocephalus cadamba), கடுஞ்சின வேந்தே – very angry king, தார் – mane, அணி – wearing, எருத்தின் – with a neck, வாரல் வள் உகிர் – long sharp claws, அரிமான் – lion, வழங்கும் – roaming, சாரல் – mountain slopes, பிறமான் – other animals, தோடு கொள் இன நிரை – crowds of their kind of animals, நெஞ்சு அதிர்ந்தாங்கு – like how their hearts are scared, முரசு முழங்கு – beating drums, நெடுநகர் – big palace, அரசு துயில் ஈயாது – kings unable to sleep, மாதிரம் – all directions, பனிக்கும் – make them tremble, மறம் வீங்கு – increased bravery, பல் புகழ் – many fame, கேட்டற்கு இனிது – sweet to listen, நின் செல்வம் கேட்டொறும் – whenever I heard about your victory successes, காண்டல் விருப்பொடு – with a desire to see, கமழும் குளவி – fragrant wild jasmine, மரமல்லி , Millingtonia hortensis, வாடாப் பைம்மயிர் – not dropped new hair, இளைய – young, ஆடு நடை – swaying walk, அண்ணல் மழ களிறு – proud young elephants, noble young elephants, அரி ஞிமிறு ஓப்பும் – chasing striped bees that are swarming, கன்று புணர் பிடிய – with female elephants with calves, குன்று பல நீந்தி – passed a few mountains, வந்து – came, அவண் – there,  இறுத்த – stayed, இரும்பேர் ஒக்கல் – lots of relatives, தொல் பசி உழந்த – hungry for a long time, பழங்கண் வீழ – for that sorrow to go away, எஃகு – cutting knife, போழ்ந்து அறுத்த – split and cut, வால் நிணக் கொழுங்குறை – white fatty meat pieces, மை ஊன் பெய்த – pouring goat’s meat, வெண்ணெல் வெண்சோறு – white paddy white rice, நனை அமை கள்ளின் – with toddy aged with flower buds, தேறலொடு மாந்தி – drinking with clear liquor, நீர்ப்படு பருந்தின் – of the kites that got wet, இருஞ் சிறகு அன்ன – like dark feathers/wings, like big feathers/wings, நிலத்தின் சிதாஅர் – torn clothes stained with mud from the earth (சிதாஅர் – இசை நிறை அளபெடை), களைந்த பின்றை – after they were removed, நூலாக் கலிங்கம் – unwoven (silk) clothes, வால் – clean, pure, fine, white, silvery, அரைக் கொளீஇ – covered their bodies (சொல்லிசை அளபெடை), வணர் – curly, இருங்கதுப்பின் – with thick/dark hair, வாங்கு அமை மென் தோள் – curved bamboo delicate arms/ shoulders, வசை இல் மகளிர் – faultless women – viralis,  வயங்கு இழை அணிய – wearing bright jewels, wearing splendid jewels, அமர்பு –  desiring you, seated, மெய் ஆர்த்த – those who raise true uproar with joy, சுற்றமொடு – with your ministers, நுகர்தற்கு இனிது – it is sweet to enjoy, நின் பெரும் கலி மகிழ்வே – your great happiness (மகிழ்வே – ஏகாரம் அசை நிலை, an expletive)

பதிற்றுப்பத்து 13, *பூத்த நெய்தல்*, பாடியவர்: குமட்டூர்க் கண்ணனார், பாடப்பட்டவர்: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும், வண்ணம்: ஒழுகு வண்ணம்

தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும்,
ஏறு பொருத செறு உழாது வித்துநவும்,
கரும்பின் பாத்திப் *பூத்த நெய்தல்*
இருங்கண் எருமையின் நிரை தடுக்குநவும்,
கலி கெழு துணங்கை ஆடிய மருங்கின்  5
வளைதலை மூது ஆ ஆம்பல் ஆர்நவும்,
ஒலி தெங்கின் இமிழ் மருதின்,
புனல் வாயில் பூம் பொய்கைப்
பாடல் சான்ற பயங் கெழு வைப்பின்,
நாடு கவின் அழிய நாமம் தோற்றிக்,  10
கூற்று அடூஉ நின்ற யாக்கை போல,
நீ சிவந்து இறுத்த நீர் அழி பாக்கம்
விரி பூங்கரும்பின் கழனி புல் எனத்,
திரி காய் விடத்தரொடு கார் உடை போகிக்,
கவைத்தலைப் பேய்மகள் கழுது ஊர்ந்து இயங்க,  15
ஊரிய நெருஞ்சி நீறு ஆடு பறந்தலைத்
தாது எரு மறுத்த கலி அழி மன்றத்து
உள்ளம் அழிய ஊக்குநர் மிடல் தபுத்து,
உள்ளுநர் பனிக்கும் பாழாயினவே,
காடே கடவுள் மேன, புறவே  20
ஒள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன,
ஆறே அவ்வனைத்து அன்றியும் ஞாலத்துக்
கூலம் பகர்நர் குடி புறந்தராஅக்
குடி புறந்தருநர் பாரம் ஓம்பி,
அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது  25
மழை வேண்டு புலத்து மாரி நிற்ப
நோயொடு பசி இகந்து ஒரீஇப்,
பூத்தன்று பெரும, நீ காத்த நாடே.

Pathitruppathu 13, Poet: Kumattūr Kannanār, King: Imayavarampan Nedunchēralāthan, Blossomed Waterlilies

In your enemy country, cattle grazed in in the fields
where eels rolled abundantly in the rainy season,
and fighting bulls plowed the fields preparing the land
for farmers to sow.  Blue waterlilies blooming in
sugarcane patches in the fields prevented herds of
big-eyed buffaloes from leaving.

Where women performed thunangai dances with uproar,
old cows, their heads bent, ate white waterlily blossoms
that dropped from dancers’ garments.  Coconut trees
flourished along with marutham trees, loud with residing
birds.  Towns that were fit for songs flourished with
flower-filled ponds that were fed by streams.  You occupied
and ruined such a beautiful country.

Enemy countries you occupied were ruined by your rage,
their citizens were in fear and they decayed like those killed
by Kootruvan, the god of death.  You lingered and ravaged
their towns.  Sugarcane fields were destroyed and they lost
their luster, thērai trees with twisted fruits and thorny udai
trees flourished instead.  Female ghouls and ghosts with
spreading hair roam the land, their town squares empty and
quiet, filled with just dust, dung and thorn bushes.  People
have been hurt, their strengths lost, hearts destroyed and
minds ruined.

In your country that you protect, forests are desirable places
for sages, warriors enjoy their lives in the woodlands in the
company of their women wearing bright jewels, all paths are
safe for those who travel, grain merchants and their families
are protected, the chiefs who help your citizens are well taken
care of, Venus does not run toward Mars, rains fall without
fail in the lands where they are needed and when they are
needed, and you have removed disease and hunger.
Your country flourishes.

Oh Magnificence!  Your country is prosperous!

Notes:  ஒளவை துரைசாமி உரை – ‘ஆசிரிய நடைத்தே வஞ்சி’ (தொல்காப்பியம், செய்யுள் 107) என்றாள், ஆசிரியப்பாவின்கண் வஞ்சித்தூக்கு வந்ததெனவறிக.  ‘தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும், ஏறு பொருத செறு உழாது வித்துநவும், ஒலி தெங்கின் இமிழ் மருதின், புனல் வாயில் பூம் பொய்கை’ என்பனவுமாகிய நான்கும் வஞ்சி அடியும் ஏனைய அளவடியுமாதலின், இப்பாட்டு வஞ்சித்தூக்கும் செந்தூக்கும் ஆயிற்று. நீர் அழி பாக்கம் (12) – ஒளவை துரைசாமி உரை – தம் நீர்மை அழிந்த பேரூர்கள், அருள் அம்பலவாணர் உரை – வெள்ளத்தான் அழிவுபடினல்லது பகைவரால் அழியாத பாக்கங்கள்.  நாம் – பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆ முறை மூன்றும் அச்சப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 69).  தாது எரு – அகநானூறு 165 – தாது எரு மறுகின் மூதூர், குறுந்தொகை 46 – மன்றத்து எருவின் நுண் தாது, நற்றிணை – 271 பைந்தாது எருவின் வைகு, கலித்தொகை 103 – தாது எரு மன்றத்து, கலித்தொகை 108 – தாது உக்கன்ன தாது எரு மன்றத்து, புறநானூறு 33 – தாது எரு மறுகின், புறநானூறு 215 – தாது எரு மறுகின், புறநானூறு 311 – தாது எரு மறுகின், பதிற்றுப்பத்து 13-17 – தாது எரு மறுத்த கலி அழி மன்றத்து மலைபடுகடாம் 531 – தாது எருத் ததைந்த முற்றம்.

Meanings:  தொறுத்த வயல் – cattle grazing fields, ஆரல் – eels, பிறழ்நவும் – turned upside down, rolled (பிறழ்ந – வினைப்பெயர்த் திரிசொல்), ஏறு பொருத – bulls fighting, செறு – field, உழாது – without plowing, வித்துநவும் – ready to seed (வித்துந – வினைப்பெயர்த் திரிசொல்), கரும்பின் பாத்தி – sugarcane patches, பூத்த நெய்தல் – blossomed blue waterlilies, இருங்கண் எருமையின் நிரை – herds of black-eyed buffaloes, herds of buffaloes with large eyes, தடுக்குநவும் – they prevent (வினைப்பெயர்த் திரிசொல்), கலி கெழு – uproarious, துணங்கை ஆடிய – performed thunangai dance, மருங்கின் – in that place, வளை தலை – bent head, மூது ஆ – old cow, ஆம்பல் – white waterlilies, ஆர்நவும் – it ate, ஒலி தெங்கின் – with flourishing coconuts, இமிழ் மருதின் – with loud marutham trees, arjuna trees, (because of birds), புனல் – streams, வாயில் – entering sites, பூம் பொய்கை – ponds with flowers (lotus, waterlilies), பாடல் சான்ற – fit for song, பயம் – useful, கெழு வைப்பின் – flourishing towns, நாடு – country, கவின் – beauty, அழிய – destroy, நாமம் – fear (நாமம் – நாம் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது), தோற்றி – create, கூற்று அடூஉ நின்ற – that Death has killed, that the god of death has killed (அடூஉ – இன்னிசை அளபெடை), யாக்கை போல – like bodies, நீ சிவந்து – you were enraged, இறுத்த – stayed in enemy country, நீர் – traits, water, அழி – destroyed, பாக்கம் – towns, விரி பூங்கரும்பின் – of sugarcane with lovely wide flowers, கழனி – fields, புல் என – dull, திரி காய் – twisted fruits, விடத்தரொடு – with vidathērai trees (thorny tree), ashy babool, Dichrostachys cinerea, Thorny babool, Acacia planifrons, கார் உடை – black udai trees (thorny tree), போகி – grow tall, கவைத் தலை – split hair on the head, பேய்மகள் – female ghouls, கழுது – ghosts, ஊர்ந்து இயங்க – roam around, ஊரிய – spread, நெருஞ்சி – thorn bushes, Calatrop Tribulus terrestris, Cow’s Thorn,  நீறு ஆடு – filled with dust, பறந்தலை – ruined place, தாது – dust, எரு மறுத்த – dirty with animal refuse, dirty with dust, கலி அழி – lost sounds (of people), மன்றத்து – in the common place, உள்ளம் அழிய – hearts destroyed, ஊக்குநர் – those who encourage (வினைப்பெயர், verbal noun), மிடல் தபுத்து – strength ruined, உள்ளுநர் பனிக்கும் – making those who think tremble (உள்ளுநர் – வினைப்பெயர், verbal noun), பாழாயினவே – minds got ruined (பாழாயினவே – ஏகாரம் அசை நிலை, an expletive), காடே கடவுள் மேன புறவே – forests became land for those who worship gods – wandering monks (காடே,  புறவே,  ஏகாரம் அசை நிலை, an expletive), ஒள் இழை – bright jewels, மகளிரொடு – with women, மள்ளர் மேன – warriors reside, ஆறே – paths (இசை நிறை அளபெடை), அவ்வனைத்து – all those, அன்றியும் – not just those, ஞாலத்து – world’s, கூலம் பகர்நர் – the grain merchants, குடி புறந்தராஅ – protecting their community (புறந்தராஅ – இசை நிறை அளபெடை), குடி புறந்தருநர் – those who protect the citizens, பாரம் ஓம்பி – protect their families, protect their communities, அழல் சென்ற மருங்கின் – toward the direction of Mars, வெள்ளி ஓடாது – Venus does not run, மழை வேண்டு புலத்து – in the land that needs rain, in the land that desires rain, மாரி நிற்ப – rain comes, நோயொடு – with disease, பசி – hunger, இகந்து ஒரீஇ – removed (ஒரீஇ – சொல்லிசை அளபெடை), பூத்தன்று – it has prosperity, பெரும – Oh magnificence, நீ காத்த நாடே – the country protected by you (நாடே – ஏகாரம் அசை நிலை, an expletive)

பதிற்றுப்பத்து 14, *சான்றோர் மெய்ம்மறை*, பாடியவர்: குமட்டூர்க் கண்ணனார், பாடப்பட்டவர்: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்

நிலம், நீர், வளி, விசும்பு என்ற நான்கின்
அளப்பு அரியையே;
நாள், கோள், திங்கள், ஞாயிறு, கனை அழல்
ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை;
போர் தலைமிகுத்த ஈரைம்பதின்மரொடு  5
துப்புத் துறை போகிய துணிவு உடை ஆண்மை,
அக்குரன் அனைய கைவண்மையையே;
அமர் கடந்து மலைந்த தும்பைப் பகைவர்
போர் பீடு அழித்த செருப்புகல் முன்ப!
கூற்று வெகுண்டு வரினும் மாற்றும் ஆற்றலையே; 10
எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து
நோன் புரித் தடக்கைச் *சான்றோர் மெய்ம்மறை*!
வான் உறை மகளிர் நலன் இகல் கொள்ளும்,
வயங்கு இழை கரந்த வண்டுபடு கதுப்பின்
ஒடுங்கு ஈர் ஓதிக் கொடுங்குழை கணவ!  15
பல களிற்றுத் தொழுதியொடு வெல்கொடி நுடங்கும்
படை ஏர் உழவ பாடினி வேந்தே!
இலங்கு மணி மிடைந்த பொலங்கலத் திகிரிக்
கடல் அக வரைப்பின் இப் பொழில் முழுது ஆண்ட நின்
முன் திணை முதல்வர் போல, நின்று நீ  20
கெடாஅ நல்லிசை நிலைஇத்
தவாஅலியரோ, இவ்வுலகமோடு உடனே.

Pathitruppathu 14, Poet: Kumattūr Kannanār, King: Imayavarampan Nedunchēralāthan, Body Shield to the Wise

You are difficult to measure, like the elements land,
water, wind and sky.  You are bright like the day stars,
planets, moon, sun and fire combined.  You are the
leader of hundreds of brave men who have chosen fighting
as their life and will strive until the end.  You are charitable
like Akkuran.  You have waged battles with your enemies
wearing thumpai garlands, and destroyed their arrogance
by your victories.  Even if angry Kootruvan comes looking
for you, you have the ability to change that.

With large hands and a gold garland made from the crowns
of seven kings on your handsome victorious chest, you are
a body shield to the wise.

You are husband to a pretty woman donning beautiful curved
earrings.  Your wife’s beauty has made celestial women fight
as they try to figure out who among them is as beautiful as her,
who is adorned with bright jewels that hide her oiled, tied hair,
on which bees swarm.

Your army with many elephant herds carrying swaying victory
flags, wages battles in which you plow down your enemies
like a farmer who plows his field.  You are a generous king to
female musicians.

May you live with faultless fame like your noble ancestors who
ruled this world with oceans as borders and lands that are like
groves, with their wheels of justice decorated with ornaments
set with gems!  May you live without problems in this world!

Notes:  ஒடுங்கு ஈர் ஓதி (15) – அருள் அம்பலவாணர் உரை – ஒடுங்கிய நெய்ப்பினையுடைய கூந்தல், ஒளவை துரைசாமி உரை – மண்ணுதலால் நெய்ப்புற்ற கூந்தல் ஒடுங்கிய, உ. வே. சாமிநாதையர் உரை – சுருண்ட கூந்தல்.  ஒடுங்கு ஈர் ஓதி (குறுந்தொகை 70 ) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இருபுறமும் ஒடுங்கிய நெய்ப்புடைய கூந்தல், உ. வே. சாமிநாதையர் உரை – ஒடுங்கிய நெய்ப்புடைய கூந்தல், ஐவகைக் கூந்தற் பகுப்பில் ஒன்றாகிய சுருளை, இரா. இராகவையங்கார் உரை – இடத்தும் வலத்தும் ஒடுங்கிய ஈர்ந்த கூந்தல் , தமிழண்ணல் உரை – ஒடுக்கி கொண்டையாக முடித்த எண்ணெய் பூசிய நெய்ப்புடைய கூந்தல்.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).  ஒடுங்கு ஈர் ஓதி, கொடுங்குழை – அன்மொழித்தொகை.

Meanings:  நிலம் – land, நீர் – water, வளி – wind, விசும்பு – sky, என்ற நான்கின் – like these four, அளப்பு அரியையே – you are difficult to measure, நாள் – stars, கோள் – planets, திங்கள் – moon, ஞாயிறு – sun, கனை அழல் – heavy fire, ஐந்து – five, ஒருங்கு புணர்ந்த – united as one, விளக்கத்து அனையை – you are bright like that, போர் தலைமிகுத்த – best in fighting, ஈரைம்பதின்மரொடு – with hundred men, துப்புத் துறை போகிய துணிவு உடை – with bravery to fight until the end, ஆண்மை – manliness, அக்குரன் அனைய – like Akkuran, கைவண்மையையே – you are charitable, அமர் கடந்து மலைந்த தும்பைப் பகைவர் – waged battles with enemies wearing thumpai garlands, Leucas aspera, போர் பீடு அழித்த – destroyed their strength in battles, destroyed their pride in battles, செருப்புகல் முன்ப – O strong man who desires battles, கூற்று வெகுண்டு வரினும் – even if kootruvan who is the god of death comes with anger, மாற்றும் ஆற்றலையே – you have the ability to change that (ஆற்றலையே – ஐகாரம் முன்னிலை அசை, an expletive of the second person, ஏகாரம் அசைநிலை, an expletive), எழு முடி கெழீஇய – put together from seven crowns (கெழீஇய – சொல்லிசை அளபெடை), திரு – handsome, ஞெமர் அகலத்து – with a broad chest, நோன் புரித் தடக்கை – strong big hands, சான்றோர் – brave warriors, மெய்ம்மறை – body shield, வான் உறை மகளிர் – celestial women, women who live in the upper world, நலன் – beauty, இகல் கொள்ளும் – fight about it, வயங்கு இழை – bright jewels, splendid jewels, கரந்த – hidden, வண்டுபடு கதுப்பின் – in the bee swarming hair, ஒடுங்கு – tied, wavy, ஈர் ஓதி – wet hair, oiled hair, bright hair, கொடுங்குழை – curved earrings, கணவ – husband, பல களிற்று – many elephants, தொழுதியொடு – with herds, வெல்கொடி நுடங்கும் – victory flags swaying, படை – armies, ஏர் உழவ – O king who battles using your sword as your plow, , பாடினி வேந்தே – Oh king of female singers, இலங்கு மணி – splendid gems, மிடைந்த – set, பொலங்கல – with gold ornaments, திகிரி – wheels of justice, கடல் அக வரைப்பின் – with the surrounding oceans as the limits, இப் பொழில் – this grove, முழுது ஆண்ட – ruled everything, நின் – your, முன் திணை முதல்வர் போல நின்று – ruling like your Chēra ancestors, நீ – you, கெடாஅ நல்லிசை – unspoilt fame (கெடாஅ – இசை நிறை அளபெடை), நிலைஇ – established (சொல்லிசை அளபெடை), தவாஅலியரோ – may you never be ruined, may you live without any problems (இசை நிறை அளபெடை), இவ்வுலகமோடு உடனே – in this world from now (உடனே – ஏகாரம் அசை நிலை, an expletive)

பதிற்றுப்பத்து 15, *நிரைய வெள்ளம்*, பாடியவர்: குமட்டூர்க் கண்ணனார், பாடப்பட்டவர்: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

யாண்டு தலைப்பெயர வேண்டு புலத்து இறுத்து,
முனை எரி பரப்பிய துன்னரும் சீற்றமொடு
மழை தவழ்பு தலைஇய மதில் மரம் முருக்கி,
நிரை களிறு ஒழுகிய *நிரைய வெள்ளம்*
பரந்து ஆடு கழங்கு அழி மன்மருங்கு அறுப்பக்  5
கொடிவிடு குரூஉப் புகை பிசிரக் கால் பொர,
அழல் கவர் மருங்கின் உரு அறக் கெடுத்துத்,
தொல் கவின் அழிந்த கண் அகன் வைப்பின்,
வெண்பூ வேளையொடு பைஞ்சுரை கலித்துப்,
பீர் இவர்பு பரந்த நீர் அறு நிறை முதல்,  10
சிவந்த காந்தள் முதல் சிதை, மூதில்
புலவு வில் உழவின் புல்லாள் வழங்கும்
புல்லிலை வைப்பின், புலம் சிதை அரம்பின்
அறியாமையான் மறந்து துப்பு எதிர்ந்த நின்
பகைவர் நாடும் கண்டு வந்திசினே;  15
கடலவும், கல்லவும், யாற்றவும், பிறவும்
வளம் பல நிகழ்தரு நனந்தலை நன் நாட்டு,
விழவு அறுபு அறியா முழவு இமிழ் மூதூர்க்,
கொடி நிழல் பட்ட பொன் உடை நியமத்துச்,
சீர் பெறு கலி மகிழ் இயம்பு முரசின்  20
வயவர் வேந்தே! பரிசிலர் வெறுக்கை!
தார் அணிந்து எழிலிய தொடி சிதை மருப்பின்
போர் வல் யானைச் சேரலாத!
நீ வாழியர் இவ்வுலகத்தோர்க்கு என
உண்டு உரை மாறிய, மழலை நாவின்  25
மென் சொல் கலப்பையர் திருந்து தொடை வாழ்த்த,
வெய்துறவு அறியாது நந்திய வாழ்க்கைச்,
செய்த மேவல் அமர்ந்த சுற்றமோடு,
ஒன்றுமொழிந்து அடங்கிய கொள்கை, என்றும்
பதி பிழைப்பு அறியாது, துய்த்தல் எய்தி,  30
நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர்
மேயினர் உறையும், பலர்புகழ் பண்பின்,
நீ புறந்தருதலின் நோய் இகந்து ஒரீஇய
யாணர் நன் நாடுங் கண்டுமதி மருண்டனென்,
மண் உடை ஞாலத்து மன் உயிர்க்கு எஞ்சாது  35
ஈத்துக்கை தண்டாக் கை கடுந்துப்பின்,
புரைவயின் புரைவயின் பெரிய நல்கி,
ஏமம் ஆகிய சீர் கெழு விழவின்
நெடியோன் அன்ன நல் இசை
ஒடியா மைந்த, நின் பண்பு பல நயந்தே.  40

Pathitruppathu 15, Poet: Kumattūr Kannanār, King: Imayavarampan Nedunchēralāthan, Flood of Sorrow

You linger in enemy countries with your warriors for over
a year, causing destruction to their lands with intense rage,
ruining large, beautiful ancient cities.

You set fires, and smoke from tall flames rise up with color,
spreading sparks in the blowing winds.  Your fierce armies
and herds of battle elephants that advance in rows ruin tall
enemy fortress walls that are drenched by spreading clouds,
and destroy the protective forests that surround them.
Your enemies face floods of sorrow. Your warriors use strewn
molucca beans to foretell situations in enemy nations,
and ruin the strengths of enemy kings.

Enemy countries become arid wastelands where velai plants
with white flowers, bottle and sponge gourds flourish on vines
on old houses.  Without water red glory lilies are greatly ruined,
dried to their roots.  Murderous bandits carrying flesh-reeking
bows roam in the land where towns have huts made from palm
fronds.  I have seen all that destruction that was caused by the
ignorant kings with small forest forts, because they opposed
your might.

In your prosperous huge country, goods arrive from the oceans,
mountains, rivers and elsewhere, unending festivals are celebrated,
drums reverberate happily in ancient towns announcing victories
and gifts, and flags fly in markets where gold is sold.

Oh King Chēralāthan!  Oh king of warriors who beat sweet, roaring
victorious drums!  Oh owner of battle-skilled elephants wearing
garlands, their tusks with beautiful ring ornaments ruined!  You
are wealth to those who seek charity!  May you live long!

In your prosperous country, wise people and their relatives who do
good deeds, live honestly, control their senses, enjoy their lives and
have no distress.  They live here without any desire to move.  Many
praise your traits.  I have seen your country prosper devoid of
diseases, oh lord.

Bards who gorge themselves with food, unable to talk much, sing
your praises strumming their lutes that they carry in draw-string
bags.  “May you live long, for the sake of your citizens”, they sing.
I have seen that, my lord.

Since you shower unending gifts to those on earth without resting
your charitable hands and give abundantly to noble people, making
them happy, you are famous like Thirumāl with splendid festivals.
Adoring your traits, I came here, oh lord.

Notes:  மூதில் (11) – அருள் அம்பலவாணர் உரை – பாழ்த்த வீடுகளில் பீர்க்கு ஏறிப் படர்ந்தமையின் ‘பீர் இவர்பு மூதில்’ என்றார்.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).

Meanings:  யாண்டு தலைப்பெயர – moved for a year, வேண்டு – desired, புலத்து இறுத்து – stayed in the land, முனை எரி பரப்பிய – spread fire in towns near battlefields, துன்னரும் சீற்றமொடு – with fierce anger, மழை தவழ்பு தலைஇய – clouds spread and poured, clouds crawled and poured (தலைஇய – சொல்லிசை அளபெடை), மதில் – tall forts, மரம் முருக்கி – destroyed forests, நிரை களிறு ஒழுகிய – herds of elephants go in a row, நிரைய வெள்ளம் – flood of hellish sorrow, பரந்து – spread, ஆடு கழங்கு – with kalangu beans, Molucca beans, caesalpinia crista, அழி மன் மருங்கு அறுப்ப – ruining the strengths of enemy kings, கொடிவிடு குரூஉப் புகை – smoke with color rising from high flames (குரூஉ – இன்னிசை அளபெடை), பிசிரக் கால் பொர – sparks fly in the wind, அழல் கவர் மருங்கின் – fire ruined places, உரு அறக் கெடுத்து – ruined them totally, தொல் கவின் – ancient beauty, அழிந்த – ruined, கண் அகன் வைப்பின் – in the wide space, in the wide place with towns, வெண்பூ வேளையொடு – along with velai plants with white flowers, Rhomb-leaved morning mallow, Sida rhombifolia, பைஞ்சுரை கலித்து – new bottle gourd flourishes, Lagenaria siceraria, பீர் இவர்பு பரந்த – ridge gourd vines spread, Luffa acutangula, நீர் அறு நிறை முதல் – ploughing land without water, furrows without water, சிவந்த காந்தள் – red malabar glory lily, முதல் சிதை – ruined totally with stems, மூதில் – old homes, புலவு வில் உழவின் புல்லாள் (புல் + ஆள்) – mean wayside robbers who carry flesh stinking bows, வழங்கும் – live, புல் இலை வைப்பின் – place with houses made with dry palm fronds, place with houses made with dry leaves, புலம் சிதை – ruining lands, அரம்பின் – with mischief, causing distress, அறியாமையான் மறந்து துப்பு எதிர்ந்த – opposed you forgetfully in ignorance, நின் பகைவர் நாடும் கண்டு வந்திசினே – I saw your enemy country and came(வந்திசினே – சின் தன்மை அசை, an expletive of the first person, ஏகாரம் அசைநிலை, an expletive), கடலவும் கல்லவும் யாற்றவும் பிறவும் – from the oceans and mountains and rivers and everywhere else, வளம் பல நிகழ்தரு – with prosperity, நனந்தலை நன்நாட்டு – in the vast good country, விழவு அறுபு அறியா – festivals without break, முழவு இமிழ் மூதூர் – drums sounding ancient town, கொடி நிழல் பட்ட – flag shadows, பொன் உடை நியமத்து – with gold selling shopping streets, சீர் பெறு – splendidly, கலி மகிழ் இயம்பு முரசின் – with drums roar with happy sounds, வயவர் வேந்தே – Oh king with strong warriors, பரிசிலர் வெறுக்கை – Oh king who is wealth to those who seek charity (வெறுக்கை – அண்மை விளி, an address), தார் அணிந்து – wearing garland, எழிலிய – beautiful, தொடி சிதை மருப்பின் – with tusks with ornamental rings cracked, போர்வல் யானைச் சேரலாத – Oh king Chēralāthan with your battle-skilled elephants, நீ வாழியர் – may you live long, இவ்வுலகத்தோர்க்கு என – for people in this world, உண்டு உரை மாறிய மழலை நாவின் – with a tongue that ate too much and is unable to talk, மென் சொல் – delicate words, கலப்பையர் – those who carry musical instruments in bags, திருந்து தொடை வாழ்த்த – praise you with lute music, வெய்துறவு அறியாது – without knowing distress, நந்திய வாழ்க்கை – flourishing life, செய்த மேவல் அமர்ந்த – with desire, சுற்றமோடு – with relatives, ஒன்றுமொழிந்து – uttering truths, அடங்கிய கொள்கை என்றும் – they control their senses, பதி பிழைப்பு அறியாது – will not make the mistake of moving from where they live, துய்த்தல் எய்தி – they attain joy, நிரையம் ஒரீஇய – avoided hell (ஒரீஇய – சொல்லிசை அளபெடை), வேட்கைப் புரையோர் – elders who have done good deeds, மேயினர் உறையும்  – those who desire live, பலர் புகழ் பண்பின் – with traits that many praise, நீ புறந்தருதலின் – since you protect, நோய் இகந்து ஒரீஇய – disease moving away, being without any disease (ஒரீஇய – சொல்லிசை அளபெடை), யாணர் நன் நாடும் – flourishing fine country, கண்டு மதி மருண்டனென் – I saw and was awed, மண் உடை ஞாலத்து – of the earth with sand, மன்னுயிர்க்கு – to the people on earth, எஞ்சாது ஈத்துக்கை – giving without limits, தண்டாக் கை – hands that do not rest, always charitable, கடுந்துப்பின் – with great strength, புரைவயின் புரைவயின் – intelligent people, பெரிய நல்கி – giving a lot, ஏமம் ஆகிய – pleasurable, சீர் கெழு விழவின் – with splendid festivities, நெடியோன் அன்ன நல் இசை – Thirumal like good fame, ஒடியா – good fame not ruined, மைந்த – Oh brave warrior, நின் பண்பு பல – your many fine traits, நயந்தே – desiring (ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 16, *துயில் இன் பாயல்*, பாடியவர்: குமட்டூர்க் கண்ணனார், பாடப்பட்டவர்: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

கோடு உறழ்ந்து எடுத்த கொடுங்கண் இஞ்சி
நாடு கண்டன்ன கணை துஞ்சு விலங்கல்
துஞ்சுமரக் குழாஅம் துவன்றி, புனிற்று மகள்
பூணா ஐயவி தூக்கிய மதில
நல் எழில் நெடும்புதவு முருக்கிக் கொல்லுபு,  5
ஏனம் ஆகிய நுனை முரி மருப்பின்,
கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி,
மரங்கொல் மழ களிறு முழங்கும் பாசறை
நீடினை ஆகலின், காண்கு வந்திசினே;
ஆறிய கற்பின் அடங்கிய சாயல்,  10
ஊடினும் இனிய கூறும் இன்னகை
அமிர்து பொதி துவர் வாய், அமர்த்த நோக்கின்,
சுடர் நுதல் அசை நடை உள்ளலும் உரியள்,
பாயல் உய்யுமோ தோன்றல், தா இன்று
திரு மணி பொருத திகழ் விடு பசும்பொன்  15
வயங்கு கதிர் வயிரமோடு உறழ்ந்து பூண் சுடர்வர,
எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்துப்
புரையோர் உண்கண் *துயில் இன் பாயல்*
பாலும் கொளாலும் வல்லோய்! நின்
சாயல் மார்பு நனி அலைத்தன்றே?  20

Pathitruppathu 16, Poet: Kumattūr Kannanār, King: Imayavarampan Nedunchēralāthan, Sweet Sleep

The mountain-like, curved fortresses of your enemies
that appear like vast countries have blocking walls with
parapet spaces for arrow quivers and the beautiful, tall
gates are bolstered with many wooden cross beams and
upright wooden bars with the same name as the aiyavi
paste that new mothers rub on their bodies.

Your elephants with intense rage hit and crash fortress
gates, breaking the tips of their tusks, blunted like those
of boars.  In the battle camps, musth flows from the tusks
of your angry, trumpeting, young male elephants.

Since you have stayed here for long, I came to see you here.
Your virtuous, humble, delicate wife speaks sweetly with a
smile even when there is discord between the two of you.
She, with nectar-filled red mouth, calm eyes, bright
forehead and delicate walk, thinks of you and grieves when
you are away from her.

Oh greatness!  Will your respected women who wear new
gold jewels embedded with beautiful gems and brightly
sparkling diamonds, be able to sleep on your broad chest
adorned with a fabulous gold garland made from the crowns
of seven enemy kings?

You are able to leave your women with kohl-rimmed eyes to
perform your battle duties, and to embrace them when you
are with them.  Will they be able to sleep when their heart is
sad?  Please go to them and remove their anguish, oh brave
lord with a tender heart.

Notes:  விலங்கல் (2) – ஒளவை துரைசாமி உரை – புற மதிலைக் கடந்து போதருவார்க்குக் குறுக்கே மலைபோல் நிற்றலின் ‘விலங்கல்’ என்று கூறினார்.  ஐயவி (4) – பூணா ஐயவி – ஈன்ற மகளிர் பூசிக் கொள்ளும் ஐயவியாகிய சிறுவெண்கடுகு அல்லாத ஐயவி துலா மரங்கள், வெளிப்படை, upright wooden bars in forts that have the same word in Thamizh as white mustard smeared on the bodies of new mothers, ஒளவை துரைசாமி உரை – ஐயவித்துலாம் என்னும் பொறியைக் குறித்து நின்றது, அருள் அம்பலவாணர் உரை – ஐயவி என்றது கதவிற்குக் காவலாகப் புற வாயிலிலே தூக்கப்படும் துலாமரம்.  புரையோர் (4) – ஒளவை துரைசாமி உரை – உரிமை மகளிர் பலராதல்பற்றி ‘புரையோர்’ என பன்மையாற் கூறினார்..  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம்,  உரியியல் 29).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  மழ – மழவும் குழவும் இளமைப் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 15).  துவன்று – துவன்று நிறைவு ஆகும் – (தொல்காப்பியம், உரியியல் 36).

Meanings:  கோடு – mountains, உறழ்ந்து – differing, எடுத்த – raised, created, கொடுங்கண் – curved areas, இஞ்சி – fortress walls (of enemy kings), நாடு கண்டன்ன – big like a country, கணை துஞ்சு – arrows resting, விலங்கல் – blocking inner wall that is like a blocking mountain, துஞ்சுமரக் குழாஅம் துவன்றி – many wooden bars are placed tightly together across the door (குழாஅம் – இசைநிறை அளபெடை), புனிற்று மகள் – a mother who recently gave birth, பூணா ஐயவி – the aiyavi that is not worn by a new mother, upright wooden bars (துலாமரம்), also bundles of arrows (University of Madras Lexicon), தூக்கிய – lifted, hanging, மதில – in the fort walls, நல் எழில் – very pretty, நெடும்புதவு – tall gates, முருக்கிக் கொல்லுபு –  since they hit and ruin, ஏனம் ஆகிய – become like those of boars, நுனை – tips, முரி மருப்பின் – on the broken tusks, கடாஅம் வார்ந்து – musth flowing down (கடாஅம் – இசை நிறை அளபெடை), கடுஞ்சினம் பொத்தி – become very angry, மரங் கொல் – attacking trees , மழ களிறு – young male elephants, முழங்கும் பாசறை – scream in the battle camp, நீடினை ஆகலின் – since you stayed here for a long time, காண்கு வந்திசினே – I came to see (வந்திசினே – சின் தன்மை அசை, an expletive of the first person, ஏகாரம் அசைநிலை, an expletive), ஆறிய கற்பின் – justness and virtue, அடங்கிய சாயல் – controlled and delicate nature, humble and delicate nature, ஊடினும் – even if there is discord (between you two), இனிய கூறும் – speaks sweetly, இன் நகை – sweet smile, அமிர்து பொதி துவர் வாய் – nectar-filled red mouth, nectar-filled coral-like mouth, அமர்த்த நோக்கின் – with calm looks, with differing looks (அமர்த்த – பொருந்திய, மாறுபட்ட), சுடர் நுதல் – bright forehead, அசை நடை – swaying walk, உள்ளலும் உரியள் – she thinks of you and feels sad, பாயல் உய்யுமோ – will she be able to remove her pain as she tries to sleep, தோன்றல் – oh lord, தா இன்று – soft, without strength, திருமணி – beautiful gems, பொருத – set, திகழ் விடு பசும்பொன் – bright splendid new gold, வயங்கு கதிர் வயிரமோடு – with diamonds with bright sparkles, உறழ்ந்து – differing, varying, பூண் – jewels, சுடர்வர – be bright, எழு முடி கெழீஇய – put together from seven crowns (கெழீஇய – சொல்லிசை அளபெடை), திரு – beautiful, ஞெமர் அகலத்து – on the broad chest, புரையோர் – respected women, உண்கண் – eyes with kohl, துயில் இன் பாயல் – sweet sleep, பாலும் – and when removed (நின்னிடமிருந்து பகுத்தலும்), கொளாலும் – and taking when not removed (அம்மகளிர்பால் நின்று வாங்கிக் கொள்ளுதலும்), வல்லோய் – O brave man, நின் சாயன் மார்பு – your delicate chest, நனி அலைத்தன்றே – makes their heart very sad (அலைத்தன்றே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 17, *வலம்படு வியன் பணை*, பாடியவர்: குமட்டூர்க் கண்ணனார், பாடப்பட்டவர்: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணமும், சொற்சீர் வண்ணமும்

புரைவது நினைப்பின் புரைவதோ இன்றே;
பெரிய தப்புநர் ஆயினும், பகைவர்
பணிந்து திறை பகரக் கொள்ளுநை ஆதலின்,
துளங்கு பிசிர் உடைய மாக் கடல் நீக்கிக்
கடம்பு அறுத்து இயற்றிய *வலம்படு வியன் பணை5
ஆடுநர் பெயர்ந்து வந்து அரும் பலி தூஉய்க்,
கடிப்புக் கண் உறூஉம் தொடித் தோள் இயவர்,
அரணம் காணாது, மாதிரம் துழைஇய,
நனந்தலைப் பைஞ்ஞிலம் வருக இந் நிழல் என,
ஞாயிறு புகன்ற தீது தீர் சிறப்பின்,  10
அமிழ்து திகழ் கருவிய கண மழை தலைஇக்,
கடுங்கால் கொட்கும் நன்பெரும் பரப்பின்,
விசும்பு தோய் வெண்குடை நுவலும்
பசும் பூண் மார்ப! பாடினி வேந்தே!

Pathitruppathu 17, Poet: Kumattūr Kannanār, King: Imayavarampan Nedunchēralāthan, Victorious Huge Drums

Oh Great King adorned with chest ornaments!  Oh patron
to female musicians!  You accept tributes and forgive
enemies who repent their mistakes and beseech you.
If one thinks about this, there is none that is equal to you.

You sailed the oceans with swaying waves and fine sprays,
won victories over your enemy king, cut down his sacred
kadampam tree and made a huge, victorious battle drum.
Warriors who went with you gave precious offerings to the
protected drum, and drummers with bracelets on their arms
beat drums with short sticks.

The faultless wide sky dispels darkness with its rising sun,
and fast winds whirl and spread rain clouds that cause rain,
lightning and thunder.  Resounding drums point to your sky-high,
white umbrella, as they spread the message far and wide to citizens
who looked in all directions for security, to seek your protection.

Notes:  கருவிய கண மழை (11) – இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய நிறைய முகில்கள்.  அகநானூறு 347 – சால் பெருந் தானைச் சேரலாதன் மால் கடல் ஓட்டிக் கடம்பு அறுத்து இயற்றிய பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58).

Meanings:  புரைவது நினைப்பின் – when thought about equal, புரைவதோ இன்றே – there is no equal, பெரிய தப்புநர் ஆயினும் – even if they made big mistakes, பகைவர் – enemies, பணிந்து திறை பகர – if they bow to you and give you tributes, கொள்ளுநை – you accept (முற்றுவினைத் திரிசொல்), ஆதலின் – so, துளங்கு – moving (waves), பிசிர் உடைய மாக்கடல் – huge ocean with water sprays, நீக்கிக் கடம்பு அறுத்து – cut the (enemy’s) kadampam tree, இயற்றிய – created, வலம்படு – victorious, வியன் பணை – wide drums, ஆடுநர் – போராடுபவர்கள், warriors, பெயர்ந்து வந்து – come back, அரும்பலி தூஉய் – sprinkle precious offerings (தூஉய் – இன்னிசை அளபெடை), கடிப்புக் கண் உறூஉம் – beat the protected drums with short sticks (உறூஉம் – இன்னிசை அளபெடை), தொடித்தோள் இயவர் – drummers wearing bracelets on their arms, அரணம் – protection, காணாது – unable to see, மாதிரம் – all directions, துழைஇய – searched (சொல்லிசை அளபெடை), நனந்தலை – wide space, பைஞ்ஞிலம் – those living in fertile land (பைந்நிலம் என்பதன் மரூஉ), வருக இந் நிழல் என – may they come seeking your protection, ஞாயிறு – sun, புகன்ற – desiring, தீதுதீர் – faultless, சிறப்பின் – with splendor, அமிழ்து திகழ் – rain falling, கருவிய – clouds with lightning and thunder, கண மழை தலைஇ – heavy rains fell, கடுங்கால் கொட்கும் – fast wind whirls (கொட்கும் –  சுழலும்), நன்பெரும் பரப்பின் – with great big space, விசும்பு தோய் – sky high, வெண்குடை – white umbrella, நுவலும் – it utters, பசும் பூண் மார்ப – one with jewels wearing chest, பாடினி – female musician, வேந்தே – oh king (ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 18, *கூந்தல் விறலியர்*, பாடியவர்: குமட்டூர்க் கண்ணனார், பாடப்பட்டவர்: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், துறை: இயன்மொழி வாழ்த்து, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

உண்மின் கள்ளே! அடுமின் சோறே!
எறிக திற்றி, ஏற்றுமின் புழுக்கே!
வருநர்க்கு வரையாது பொலங்கலந் தெளிர்ப்ப,
இருள் வணர் ஒலிவரும் புரிய அவிழ் ஐம்பால்,
ஏந்து கோட்டு அல்குல் முகிழ் நகை மடவரல்  5
*கூந்தல் விறலியர்* வழங்குக அடுப்பே!
பெற்றது உதவுமின் தப்பு இன்று பின்னும்
மன் உயிர் அழிய யாண்டு பல துளக்கி,
மண் உடை ஞாலம் புரவு எதிர்கொண்ட
தண் இயல் எழிலி தலையாது மாறி  10
மாரி பொய்க்குவது ஆயினும்,
சேரலாதன் பொய்யலன் நசையே.

Pathitruppathu 18, Poet: Kumattūr Kannanār, King: Imayavarampan Nedunchēralāthan, Dancers with Tresses

When darkness sets, drink toddy, start cooking, boil rice,
chop meat, prepare dishes, cook for your guests on your stove
and feed them without limits.

Oh pretty dancers with jingling gold jewels!  Oh naive women
with thick, dark curly hair let down from the usual five braids,
raised loins and delicate smiles!  Give abundantly of what you
have received.

Cool rain clouds that protect this earth might fail for many years
and distress and destroy humanity, but the gracious Chēralāthan
will never fail us.  He will shower gifts you desire.  Share the bounty
you received.  There is no harm in it.

Notes:  Viralis were female artists who danced and sang.  கூந்தல் விறலியர் என்பவர்கள் ஆடல் பாடல் ஆகியவற்றில் சிறந்து, மன்னனின் வரிசைபெற்ற மகளிர்.  எதிர்கொண்ட (8) – ஒளவை துரைசாமி உரை – மேற்கொண்ட, அருள் அம்பலவாணர் உரை – ஏற்றுக்கொண்ட.

Meanings:  உண்மின் – you drink (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), கள்ளே – toddy,  அடுமின் – you cook (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), சோறே – rice, எறிக – chop, திற்றி – meat, ஏற்றுமின் – you place on the stove, you start cooking (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), புழுக்கே – boil the food (ஏகாரம் அசை நிலை, an expletive), வருநர்க்கு – for guests who come, வரையாது – without limit, பொலங்கலம் – jewels, பூண், தெளிர்ப்ப – jewels jingle, இருள் – dark, வணர் – curled, wavy, ஒலிவரும் – flourishing, thick, புரிய – twisted, braided, அவிழ் – loosened, spread wide, ஐம்பால் – five-part braids, ஏந்து கோட்டு அல்குல் – loins with lifted sides, முகிழ் நகை – delicate smile, மடவரல் – young, naïve, கூந்தல் விறலியர் – oh female artists with beautiful hair, வழங்குக அடுப்பே – cook abundantly (அடுப்பே – ஏகாரம் அசை நிலை, an expletive), பெற்றது – what you got as gifts, உதவுமின் – you help, you give away (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), தப்பு இன்று பின்னும் – there is no harm despite this, மன் உயிர் அழிய – life on earth to be destroyed, யாண்டு பல – few years, துளக்கி – cause trembling, cause distress, மண் உடை – containing sand, ஞாலம் – earth, புரவு – grant, boon, protection, எதிர்கொண்ட – undertook, accepted, தண் இயல் – benevolent disposition, showering graces, of cool nature, எழிலி – clouds, தலையாது – not raining, மாறி – changing, மாரி பொய்க்குவது ஆயினும் – even if the rains fail, சேரலாதன் – Imayavarampan Nedunchēralāthan, பொய்யலன் – he will not fail, நசையே – desire (ஏகாரம் அசை நிலை, an expletive)

பதிற்றுப்பத்து 19, *வளன் அறு பைதிரம்*, பாடியவர்: குமட்டூர்க் கண்ணனார், பாடப்பட்டவர்: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், துறை: பரிசிற்றுறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்

கொள்ளை வல்சிக் கவர் கால் கூளியர்
கல் உடை நெடு நெறி போழ்ந்து சுரன் அறுப்ப,
ஒண் பொறிக் கழல் கால் மாறா வயவர்
திண் பிணி எஃகம் புலி உறை கழிப்பச்,
செங்கள விருப்பொடு கூலம் முற்றிய  5
உருவச் செந்தினை குருதியொடு தூஉய்,
மண்ணுறு முரசம் கண் பெயர்த்து இயவர்
கடிப்பு உடை வலத்தர் தொடித்தோள் ஓச்ச,
வம்பு களைவு அறியாச் சுற்றமோடு அம்பு தொரிந்து
அவ்வினை மேவலை ஆகலின்,  10
எல்லு நனி இருந்து எல்லிப் பெற்ற
அரிது பெறு பாயல் சிறு மகிழானும்,
கனவினுள் உறையும் பெருஞ்சால்பு ஒடுங்கிய
நாணுமலி யாக்கை வாணுதல் அரிவைக்கு,
யார் கொல்? அளியை!  15
இனம் தோடு அகல ஊருடன் எழுந்து,
நிலம்கண் வாட நாஞ்சில் கடிந்து நீ
வாழ்தல் ஈயா *வளன் அறு பைதிரம்*
அன்ன ஆயின பழனம் தோறும்
அழல் மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்து  20
நெல்லின் செறுவில் நெய்தல் பூப்ப,
அரிநர் கொய்வாள் மடங்க அறைநர்
தீம்பிழி எந்திரம் பத்தல் வருந்த
இன்றோ அன்றோ தொன்றோர் காலை,
நல்ல மன் அளிய தாம் எனச் சொல்லிக்  25
காணுநர் கை புடைத்து இரங்க,
மாணா மாட்சிய மாண்டன பலவே.

Pathitruppathu 19, Poet: Kumattūr Kannanār, King: Imayavarampan Nedunchēralāthan, Lands that have Lost Prosperity

Your brave foot soldiers wearing gleaming, jingling
war anklets are ready to go to war, seize food from enemy
lands, and cut paths in their long, stone-filled wasteland.

They remove their tight-fitting swords kept in tiger-skin
scabbards and get them ready, desiring to go to battlefields
with blood.  Beautiful red millet mixed with blood is offered
to battle drums with clay eyes.  Drummers wearing shoulder
bracelets move the drums, and hit them holding the sticks
on their right hands.

Desirous of martial responsibilities, you are surrounded by
warriors with gloves as you check their arrows.

Your esteemed humble wife with her shining forehad and
forehead and shy body bears the pain of separation during
the day, finding some joy in her sleep when she sees you in
her dreams.  Who are you to her then? You are pitiful.

In the countries that you attacked where you did not give
the citizens an opportunity to thrive, people and cattle have
moved away from towns, flourishing lands have dried up,
farmers have abandoned plows, people are unable to survive,
and they have lost all their wealth.

Their ponds were filled with flame-like bright lotus flowers
mixed with white waterlily flowers.  Blue waterlilies bloomed
in rice fields.  Sickles of grain reapers were bent by constant
cutting, sugarcane crushing presses were wrecked and
juice-catching buckets were dented.

These are countries that had thrived since ancient times, not
just yesterday or today.  You crushed these flourishing countries,
ruining them.  Losing their greatness, they are pitiful and appear
helpless now.

Notes:  வாள் – வாள் ஒளி ஆகும் (தொல்காப்பியம் உரியியல் 71).  அகநானூறு 22 – உருவச் செந்தினை குருதியொடு தூஉய், அகநானூறு 272 – உருவச் செந்தினை நீரொடு தூஉய், பதிற்றுப்பத்து 19 – உருவச் செந்தினை குருதியொடு தூஉய்.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  கொள்ளை வல்சி – stealing food (from enemy lands), கவர் கால் கூளியர் – warriors with legs that desire to go to battles, கல் உடை – with stones, நெடு நெறி – long paths, போழ்ந்து – crack open, சுரன் – wasteland (சுரன் – சுரம் என்பதன் போலி), அறுப்ப – cut, ஒண் பொறி – bright dots, கழல் கால் – wearing warrior anklets on their legs, மாறா வயவர் – brave warriors who do not back off, திண் பிணி எஃகம் – tightly tied swords, புலி உறை கழிப்ப – remove from their tiger-skin covers and clean them, செங்கள விருப்பொடு – with desire to go to the bloody battlefield, கூலம் முற்றிய – mature grains, உருவச் செந்தினை குருதியொடு தூஉய் – sprinkle beautiful red millet with blood as offerings (தூஉய் – இன்னிசை அளபெடை), மண்ணுறு முரசம் – drums with clay eyes, drums that have been washed, கண் பெயர்த்து – rub it on its eyes, இயவர் – drummers, கடிப்பு உடை – with drumsticks, with short sticks, வலத்தர் – they hit with their right hands, தொடித்தோள் – shoulders with bracelets, ஓச்ச – raised, hit, வம்பு களைவு அறியாச் சுற்றமோடு – with warriors who have not removed their gloves, அம்பு தொரிந்து – analyze arrows, அவ் வினை மேவலை – you desire that battle action, ஆகலின் – hence, எல்லு – day time, நனி இருந்து – suffer a lot, எல்லி – night, பெற்ற அரிது பெறு பாயல் – the rare sleep she got, சிறு மகிழானும் – even a little happiness, கனவினுள் உறையும் – is in her dream, பெருஞ்சால்பு – great esteem, ஒடுங்கிய – humble, நாணுமலி யாக்கை – very shy body, வாள் நுதல் அரிவைக்கு – to the woman with a bright forehead (wife), யார் கொல் – who are you, அளியை – you are pitiful, இனம் தோடு அகல – animal herds move away (scattered), ஊருடன் எழுந்து – along with people from towns (ஊர் – ஆகுபெயர் ஊரில் வாழும் மக்களுக்கு), நிலம் கண் வாட – land dries, நாஞ்சில் கடிந்து – abandon their plows, நீ – you, வாழ்தல் ஈயா – you did not give them (people in enemy lands) an opportunity to survive, வளன் அறு பைதிரம் – enemy lands that have lost their wealth (வளன் – வளம் என்பதன் போலி), அன்ன ஆயின – became like that, பழனம் தோறும் – in all the ponds, அழல் மலி தாமரை – flame-like abundant lotus blossoms, ஆம்பலொடு மலர்ந்து – blossomed with white waterlilies, நெல்லின் செறுவில் நெய்தல் பூப்ப – in the paddy fields kuvalai flowers, blue waterlilies blossomed, அரிநர் – grain reapers, harvesters, கொய் வாள் – cutting sickles, மடங்க – were bent, அறைநர் – those who cut sugarcane, தீம்பிழி எந்திரம் – sugarcane presses, பத்தல் – wooden buckets (to catch juice), வருந்த – lost shape, இன்றோ அன்றோ – not just yesterday or today, தொன்றோர் காலை – but from ancient times, நல்ல மன் – they were good in the past  (மன் – கழிவுப்பொருளில் வந்த இடைச்சொல், a particle signifying past), அளிய தாம் எனச் சொல்லி – saying that they are pitiable, – thus they say, காணுநர் – those who see, கை புடைத்து – hitting their hands, இரங்க – they pity, மாணா மாட்சிய – they have become ruined, கெட்டு அழிந்த தன்மையுடையனவாயின, மாண்டன பலவே – many countries which used to flourish are ruined (பலவே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 20, *அட்டு மலர் மார்பன்*, பாடியவர்: குமட்டூர்க் கண்ணனார், பாடப்பட்டவர்: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், துறை: இயன்மொழி வாழ்த்து, தூக்குசெந்தூக்கும் வஞ்சித்தூக்கும், வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்

நுங்கோ யார் என வினவின், எம் கோ
இரு முந்நீர்த் துருத்தியுள்
முரணியோர்த் தலைச்சென்று,
கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின முன்பின்
நெடுஞ்சேரலாதன்; வாழ்க அவன் கண்ணி!  5
வாய்ப்பு அறியலனே வெயில் துகள் அனைத்தும்
மாற்றோர் தேஎத்து மாறிய வினையே,
கண்ணின் உவந்து நெஞ்சு அவிழ்பு அறியா
நண்ணார் தேஎத்தும் பொய்ப்பு அறியலனே,
கனவினும் ஒன்னார் தேய ஓங்கி நடந்து  10
படியோர்த் தேய்த்து வடி மணி இரட்டும்
கடாஅ யானைக் கண நிரை அலற,
வியல் இரும் பரப்பின் மா நிலம் கடந்து,
புலவர் ஏத்த ஓங்குபு கழ் நிறீஇ,
விரி உளை மாவும் களிறும் தேரும்  15
வயிரியர் கண்ணுளர்க்கு ஓம்பாது வீசிக்,
கடி மிளைக் குண்டு கிடங்கின்
நெடுமதில் நிலை ஞாயில்
அம்பு உடை யார் எயில் உள் அழித்து உண்ட
அடாஅ அடு புகை  *அட்டு மலர் மார்பன்*,  20
எமர்க்கும் பிறர்க்கும், யாவர் ஆயினும்,
பரிசில் மாக்கள் வல்லார் ஆயினும்,
கொடைக்கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன்,
மன் உயிர் அழிய யாண்டு பல மாறித்
தண் இயல் எழிலி தலையாது ஆயினும்,  25
வயிறு பசி கூர ஈயலன்,
வயிறும் ஆசு இலீயர் அவன் ஈன்ற தாயே.

Pathitruppathu 20, Poet: Kumattūr Kannanār, King: Imayavarampan Nedunchēralāthan, Chest Proud of Ruining

If you ask me who my king is, I can tell you that he is the brave
Nedunchēralāthan who goes with rage to islands in the wide
ocean and cuts down the sacred kadampam trees of his enemies.
Long live his victory garland!

If his enemies in other lands pretend to be good, but are involved
in evil acts with closed hearts, even if their acts as small as the tiny
particles seen only in sunlight, he will not help them.  He does not
lie even in his dreams.  He behaves with pride and his enemies fear
him.

He leads his armies into large enemy nations.  Their elephant forces
in rut run away screaming in fear, their neck bells ringing loudly.
Bards sing his flourishing fame.

Without keeping for himself, he gives wide-plumed horses,
elephants and chariots to dancers and singers.  He attacks and ruins
big fortresses that have tall walls, deep moats, strong bastions,
arrow quivers and protected forests.  He destroys the insides of the
fortresses with his army of men with arrows.  Smoke rises from the fires
he sets in enemy towns.
His broad chest is proud of the destruction that he causes to enemies.

He gives generously to me, artists and others who come requesting gifts,
with love and without any discord in his heart.  He even gives to those
who don’t have any talent.  The cool natured clouds may stop raining for
many years, but he will not stop giving.  He removes the stomach hunger
of people without refusing.

May the mother who gave birth to him flourish without blemish to her
womb!

Notes:  அகநானூறு 347 – சால் பெருந்தானைச் சேரலாதன் மால் கடல் ஓட்டிக் கடம்பு அறுத்து இயற்றிய பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன.  அடாஅ அடு புகை  (21) – ஒளவை துரைசாமி உரை – ஊர் சுடுபுகைக்கு வெளிப்படை.   அடாஅ – செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  முந்நீர் – தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது.  முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் ‘தமிழ்க்காதல்’ நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு 9 உரை, நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி 75 உரை.

Meanings:  நும் கோ யார் என வினவின் – if you ask me who my king is, எம் கோ – my king, இரு – wide, முந்நீர் – ocean, துருத்தியுள் – in the island, முரணியோர் – enemies, those who disagreed, தலைச்சென்று – went where they live, கடம்பு முதல் தடிந்த – cut their kadampam tree trunks, கடுஞ்சின – great anger, முன்பின் – brave, body strength, நெடுஞ்சேரலாதன் – Nedunchēralāthan, வாழ்க அவன் கண்ணி – long live his garland, வாய்ப்பு அறியலனே – he does not know to be useful to them (அறியலனே – ஏகாரம் அசைநிலை, an expletive), வெயில் துகள் அனைத்தும் – dust seen in the sun, மாற்றோர் – enemies, தேஎத்து – in the lands (இன்னிசை அளபெடை), மாறிய வினையே – not agreeable acts, கண்ணின் உவந்து – expressing joy with eyes but not really having good thoughts, நெஞ்சு அவிழ்பு அறியா – those who don’t open their hearts, நண்ணார் தேஎத்தும் – even in enemy nations (தேஎத்தும் – இன்னிசை அளபெடை), பொய்ப்பு அறியலனே – he does not know to utter lies, கனவினும் – even in his dream, ஒன்னார் தேய – enemies to be ruined, ஓங்கி நடந்து – behaving with pride, படியோர்த் தேய்த்து – he destroyed enemies who did not submit, வடி மணி இரட்டும் – bells ring clearly, cast bells ring, கடாஅ யானை – elephant in rut (கடாஅ – இசை நிறை அளபெடை), கண நிரை அலற – herds scream, வியல் இரும் பரப்பின் – in the wide big spread (of enemies), மா நிலம் – vast land, கடந்து – crossed, புலவர் ஏத்த – give to poets for them to praise, ஓங்கு புகழ் நிறீஇ – establish flourishing fame, விரி உளை மாவும் – wide tufted horses, களிறும் தேரும் – elephant and chariots, வயிரியர்- artists who play vayir horns, artists who play drums, கண்ணுளர்க்கு – to artists who sing and dance, ஓம்பாது வீசி – give without keeping it for himself, கடி மிளை – protected forests, குண்டு கிடங்கின் – with deep moats, நெடுமதில் – tall forts, நிலை ஞாயில் – stable bastions, stable breast plates, அம்பு உடையார் – those with arrows, எயில் உள் அழித்து – destroyed inside the forts, உண்ட – eaten by fire, அடாஅ அடு புகை – burned the town and smoke arose (அடாஅ – இசை நிறை அளபெடை), அட்டு – destroyed, மலர் மார்பன் – a man with wide chest (due to pride, arrogance), எமர்க்கும் பிறர்க்கும் – to us and to other artists, யாவர் ஆயினும் – to everybody no matter who they are, பரிசில் மாக்கள் – those who came for gifts, வல்லார் ஆயினும் – even if they don’t have talents/ability to get gifts, கொடைக்கடன் அமர்ந்த – loved to donate, கோடா நெஞ்சினன் – he is a man with no injustice in his heart, மன் உயிர் அழிய – if stable life is destroyed, யாண்டு பல மாறி – many years passing, தண் இயல் எழிலி – the benevolent clouds, the cool-natured clouds, தலையாது ஆயினும் – even if it stops raining, வயிறு பசி கூர ஈயலன் – he does not give after hunger increases, he gives before hunger increases, வயிறும் – womb, ஆசு இலீயர் – may she flourish without fault, அவன் ஈன்ற தாயே – the mother who bore him (தாயே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிகம்
மன்னிய பெரும்புகழ், மறு இல் வாய்மொழி,
இன் இசை முரசின் உதியஞ்சேரற்கு,
வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற மகன்,
அமைவரல் அருவி இமையம் வில் பொறித்து,
இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்கத்  5
தன் கோல் நிறீஇத் தகை சால் சிறப்பொடு
பேர் இசை மரபின் ஆரியர் வணக்கி,
நயன் இல் வன் சொல் யவனர்ப் பிணித்து,
நெய்தலைப் பெய்து கைபின் கொளீஇ,
அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு  10
பெரு விறல் மூதூர்த் தந்து, பிறர்க்கு உதவி
அமையார்த் தேய்த்த அணங்கு உடை நோன் தாள்.

Epilog
He was born to King Uthiyan Chēral and Venmāl clan queen Nallini.
He is a king with great fame, faultless, honest words and sweet drums.
He carved a bow symbol on the Himalayas with waterfalls, ruled
splendidly with a just scepter, the entire Thamilakam with loud oceans
as fences.  Aryan kings with esteemed greatness, great fame and tradition,
bowed to him.

He captured the unkind, harsh-mouthed Yavanas, tied their hands in the
back, poured oil on their heads, and seized their precious expensive jewels
and diamonds. after his great victories, gifted old towns and helped others,
and ruined enemy kings with whom he had discord.
He was a man of great effort who instilled fear in others.

Meanings:  மன்னிய பெரும் புகழ் – lasting great fame, மறு இல் – faultless, வாய்மொழி – honest words, இன் இசை முரசின் – with drums with sweet music, உதியஞ் சேரற்கு வெளியன் வேண்மாள் நல்லினி – Nallini and Uthiyanchēralāthan, ஈன்ற – gave birth, மகன் – son, அமைவரல் அருவி இமையம் – Himalayas with waterfalls, வில் பொறித்து – carved the bow symbol, இமிழ் கடல் வேலித் தமிழகம் – Thamilakam with the loud ocean as its fence, விளங்க – to shine, தன் கோல் – his scepter, நிறீஇ – established,  தகை சால் சிறப்பொடு – with esteemed greatness, பேர் இசை மரபின் – with great fame and tradition, ஆரியர் வணக்கி – Aryans (kings) bowed, நயன் இல் – without kindness, வன் சொல் யவனர் – Yavanars with harsh words, பிணித்து – tied up, நெய்தலைப் பெய்து – poured oil on their heads, கை பின் கொளீஇ – tied their hands in the back, அருவிலை – precious and expensive, நன்கலம் – fine jewels, வயிரமொடு – with diamonds, கொண்டு – brought, பெரு விறல் – greatly victorious, மூதூர்த் தந்து – give old towns, பிறர்க்கு உதவி – help others, அமையார்த் தேய்த்த – ruined kings who he had disagreements, அணங்கு உடை – respectful, fierce, நோன் தாள் – great effort

பதிற்றுப்பத்து 21, *அடு நெய் ஆவுதி*, பாடியவர்: பாலைக் கெளதமனார், பாடப்பட்டவர்: பல்யானைச் செல்கெழு குட்டுவன், துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

சொல், பெயர், நாட்டம், கேள்வி, நெஞ்சம் என்று
ஐந்து உடன் போற்றி அவை துணை ஆக,
எவ்வம் சூழாது விளங்கிய கொள்கைக்,
காலை அன்ன சீர் சால் வாய்மொழி,
உருகெழு மரபின் கடவுள் பேணியர்,  5
கொண்ட தீயின் சுடர் எழுதோறும்
விரும்பு மெய் பரந்த பெரும் பெயர் ஆவுதி,
வருநர் வரையார் வார வேண்டி
விருந்து கண் மாறாது உணீஇய பாசவர்
ஊனத்து அழித்த வால் நிணக் கொழுங்குறை  10
குய் இடுதோறும் ஆனாது ஆர்ப்பக்,
கடல் ஒலி கொண்டு, செழு நகர் நடுவண்
அடுமை எழுந்த *அடு நெய் ஆவுதி*,
இரண்டு உடன் கமழும் நாற்றமொடு, வானத்து
நிலைபெறு கடவுளும் விழைதகப் பேணி,  15
ஆர் வளம் பழுனிய ஐயம் தீர் சிறப்பின்,
மாரி அம் கள்ளின் போர் வல் யானைப்
போர்ப்புறு முரசம் கறங்க ஆர்ப்புச் சிறந்து,
நன்கலந் தரூஉம் மண்படு மார்ப!
முல்லைக் கண்ணிப் பல் ஆன் கோவலர்  20
புல் உடை வியன் புலம் பல் ஆ பரப்பிக்,
கல் உயர் கடத்திடைக் கதிர் மணி பெறூஉம்,
மிதி அல் செருப்பின் பூழியர் கோவே
குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை!
பல் பயன் தழீஇய பயங் கெழு நெடுங்கோட்டு,  25
நீர் அறல் மருங்கு வழிப்படாப் பாகுடிப்
பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சாச்,
சீர் உடைத் தேஎத்த முனை கெட விலங்கிய
நேர் உயர் நெடு வரை அயிரைப் பொருந!
யாண்டு பிழைப்பு அறியாது பய மழை சுரந்து  30
நோயின் மாந்தர்க்கு ஊழி ஆக!
மண்ணா வாயின் மணம் கமழ் கொண்டு,
கார் மலர் கமழும் தாழ் இருங்கூந்தல்
ஒரீஇயின போல விரவு மலர் நின்று,
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக் கண்,  35
அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்து
வேய் உறழ் பணைத்தோள், இவளோடு
ஆயிர வெள்ளம் வாழிய பலவே.

Pathitruppathu 21, Poet: Pālai Kouthamanār, King: Palyānai Selkezhu Kuttuvan, Smoke from Cooking with Ghee

Words, interpretations, astrology, Vedas and a contained
heart that learned, are what holy men honor.  These five
give them principles to live by, without hurting others, and
to be virtuous.

These esteemed sages are noble, truthful and dependable
like the morning sun.  They worship gods and perform rituals
according to their strong traditions.  The bright flames they
light for oblations that yield benefits, are like reflections of
their inner desires.  Beneficial smoke rises from their ritual
fires.

Smoke also rises from the huge palace courtyard where
goat meat with white fat chopped on wooden boards, sold by
goat sellers, is roasted in ghee with sizzling sounds, roaring
endlessly like the ocean, to feed those who come, so that they
do not have to go elsewhere to eat.

Fragrant smoke from both fires rises to the skies and the gods
in the upper world are happy.

Oh victorious king of a fertile country where beneficial rains
never fail!  Where fine toddy is poured like rainwater!  You
led your troops in battles with trained war elephants, as battle
drums covered with leather resounded and warriors clamored,
staining your chest with enemy soil.  You brought back spoils
of wars and gifted fine ornaments to those around you.

Oh king of Pūliyars!  Oh lord of Seruppu Mountain with the
same name as that which is worn on feet, where cattle herders
wearing jasmine garlands let their cattle herds graze on grass
in the vast land, and pick sparkling gems from the forests with
lofty mountains!  You are a body shield to your warriors wearing
many kinds of garlands!

Oh king of the lofty Ayirai Mountain with the same name as the
fish that does not fear the hunting storks that look from afar,
with blocking vertical peaks that yield benefits, and streams
running down its sides!  Your citizens live happily without
diseases since rains fall every year without ceasing.

May you live for thousands of years with your beautiful queen,
her flowing dark hair with natural fragrance without any added
scents, resembling that of rainy season’s jasmine, her pretty
eyes like night-blooming flowers that are removed from ponds,
wide, darting and moist, and her wide arms like bamboo that
grows on splendid stream beds where swaying glory lilies
blossom.

Notes:  கேள்வி (1) – ஒளவை துரைசாமி உரை – வேதம்; வேதம் எழுதப்படாது வழிவழியாகக் கேட்கப்படும் முறைமையுடையதாகலின், கேள்வி எனப்பட்டது.  நெஞ்சம் (1) – பழைய உரை, அருள் அம்பலவாணர் உரை – இந்திரியங்களின் வழியோடாது உள்ளடங்கிய தூய நெஞ்சம், ஒளவை துரைசாமி உரை – ஆகமம்; சொல் முதலிய நான்கையும் முற்றும் கற்றுணர்வதால் உளதாகும் பயன் இறைவன் தாளை வணங்குதவென்பதாலும், அந்நெறிக்கண் நெஞ்சினை நிறுத்திப் பெறுவதற்குரிய ஞானமும் வீடுபேறும் சிறப்புடைய அருநூலாதல் பற்றி ஆகமத்தை நெஞ்சம் என்றார்.  மிதி அல் செருப்பின் (23) – மிதித்து நடக்கப் பயன்படுத்தப்படும் செருப்பு அல்லாத செருப்பு மலையை உடைய, வெளிப்படை, owning Ceruppu Mountain which is not the ceruppu worn on the feet.  பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சாச் சீர் உடைத் தேஎத்த முனை கெட விலங்கிய நேர் உயர் நெடு வரை அயிரை (27-29) – கொக்கின் வேட்டைக்கு அஞ்சாத மீன் இல்லாது மீனின் பெயரையுடைய சிறப்பான நாட்டில் பகைவர் தோற்பதற்கு காரணமாக குறுக்கிட்டு கிடக்கும் நேரே உயர்ந்த நெடிய மலையாகிய அயிரை மலை, வெளிப்படை, lofty blocking Ayirai Mountain that has been the reason for defeating enemies which has the same word as a fish that does not fear storks that search for prey.  குவியல் கண்ணி (24) – அருள் அம்பலவாணர் உரை – குவிதலுடைய கண்ணி, ஒளவை துரைசாமி உரை – பல வகைப் போர்க் கண்ணி.

Meanings:  சொல் – books on words, பெயர் – books on interpretations/meanings, நாட்டம் – books on astrology, desire to find out, கேள்வி – Vedas, நெஞ்சம் – a controlled heart, holy books, என்று ஐந்து உடன் போற்றி – thus praise these five, அவை துணை ஆக – with the help of those, எவ்வம் – sorrow, சூழாது – not considering, விளங்கிய கொள்கை – bright principles, great principles, காலை அன்ன சீர் சால் வாய்மொழி – great noble truthful words like the dependable morning sun, உருகெழு மரபின் – with fierce traditions, கடவுள் பேணியர் – to worship god, கொண்ட தீயின் சுடர் எழுதோறும் – whenever ritualistic fires are lit and flames rise up, விரும்பு மெய் பரந்த – desire in the mind spread on the body, பெரும் பெயர் – very famous, very beneficial, ஆவுதி – ritualistic smoke, வருநர் வரையார் வார வேண்டி – for those who come to him to eat without limit, விருந்து கண் மாறாது – those who do not go away to other donors, உணீஇய – to eat (சொல்லிசை அளபெடை), பாசவர் – meat sellers, ஊனத்து அழித்த – cut on meat cutting boards, வால் நிணக் கொழுங் குறை – white colored fat, குறை – chopped meat, குய் இடுதோறும் ஆனாது ஆர்ப்ப – it is noisy when the meat is roasted (in a hot pot with oil), கடல் ஒலி கொண்டு – like ocean sounds, செழு நகர் நடுவண் – in the middle of the rich mansion, அடுமை – cooking, எழுந்த – rose, அடு நெய் – heated ghee, ஆவுதி – smoke, இரண்டு உடன் கமழும் நாற்றமொடு – with the smells from both smokes (from the palace and from the sages), வானத்து – in the sky, நிலைபெறு கடவுளும் – eternal/stable gods in the upper world, விழைதக – to desire, பேணி – protecting, ஆர் வளம் – very fertile, பழுனிய – abundant, ஐயம் தீர் சிறப்பின் – with splendor without doubt, மாரி அம் கள்ளின் – with fine toddy poured like rain, போர் வல் யானை – elephants trained in fighting battles, போர்ப்பு உறு முரசம் கறங்க – battle drums covered with leather roar, ஆர்ப்புச் சிறந்து – with loud noises, நன்கலம் தரூஉம் – give fine ornaments (தரூஉம் – இன்னிசை அளபெடை), மண்படு மார்ப – oh lord with a chest that has touched the sand, முல்லைக் கண்ணிப் பல் ஆன் கோவலர் – herdsmen with many cows wearing jasmine flower strands, புல் உடை வியன் புலம் – wide lands with grass, பல் ஆ பரப்பி – cattle herds are spread, கல் உயர் கடத்து இடை – in the forests where the mountains are lofty, கதிர் மணி பெறூஉம் – they obtain sparkling gems (பெறூஉம் – இன்னிசை அளபெடை), மிதி அல் செருப்பின் – with not the walking slippers but with  the Seruppu Mountain, பூழியர் கோவே – oh king of Pūliyars, குவியல் கண்ணி – wearing heaps of garlands, wearing various kinds of war garlands, மழவர் மெய்ம்மறை – body shield to warriors, பல் பயன் – many benefits, தழீஇய – surrounded, embraced (சொல்லிசை அளபெடை), பயம் கெழு – with benefits, நெடுங்கோட்டு – tall peaks, நீர் அறல் மருங்கு – water flowing side, வழிப்படா – not going up, பாகுடிப் பார்வல் கொக்கின் பரிவேட்பு – stork with a the ability to look from afar desiring to hunt for fish, அஞ்சா – does not fear, சீர் உடைத் தேஎத்த – in a famous country (தேஎத்த – இன்னிசை அளபெடை), முனை கெட – ruining enemies in wars, விலங்கிய – blocking, நேர் – perfect, straight, உயர் – lofty, நெடுவரை – tall peaks, அயிரைப் பொருந – oh king who owns Ayirai mountains, யாண்டு பிழைப்பறியாது பய மழை சுரந்து – since the beneficial rains fell every year without making the mistake of stopping, நோயின் மாந்தர்க்கு ஊழி ஆக – people lived without diseases for a long time, மண்ணா வாயின் – even without adornment, even without fragrant oils, மணம் கமழ் கொண்டு – with fragrance spreading, கார் மலர் கமழும் – rainy season flowers aroma, தாழ் இருங்கூந்தல் – hanging dark hair, ஒரீஇயின போல – like those that were removed (ஒரீஇயின – சொல்லிசை அளபெடை), இரவு மலர் நின்று – flowers that bloom at night, திருமுகத்து – on her beautiful face, அலமரும் பெருமதர் மழைக்கண் – moving big beautiful moist eyes, அலங்கிய காந்தள் – moving glory lilies, இலங்கு நீர் அழுவத்து – on the splendid stream shores, வேய் உறழ் பணைத்தோள் – bamboo like wide arms (உறழ் – உவம உருபு, a comparison word), இவளோடு – with her, ஆயிர வெள்ளம் வாழிய பலவே – may you live for many thousand years (பலவே – ஏகாரம் அசை நிலை, an expletive)

பதிற்றுப்பத்து 22, *கயிறு குறு முகவை*, பாடியவர்: பாலைக் கெளதமனார், பாடப்பட்டவர்: பல்யானைச் செல்கெழு குட்டுவன், துறை: வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும், வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்

சினனே, காமம், கழி கண்ணோட்டம்,
அச்சம், பொய்ச் சொல், அன்பு மிகு உடைமை,
தெறல் கடுமையொடு பிறவும், இவ் வுலகத்து
அறம் தெரி திகிரிக்கு வழியடையாகும்;
தீது சேண் இகந்து நன்று மிகப் புரிந்து,  5
கடலும் கானமும் பல பயம் உதவப்,
பிறர் பிறர் நலியாது வேற்றுப் பொருள் வெஃகாது,
மை இல் அறிவினர் செவ்விதின் நடந்து, தம்
அமர் துணைப் பிரியாது பாத்து உண்டு மாக்கள்
மூத்த யாக்கையொடு பிணி இன்று கழிய,  10
ஊழி உய்த்த உரவோர் உம்பல்!
பொன் செய் கணிச்சித் திண் பிணி உடைத்துச்
சிரறு சில ஊறிய நீர் வாய்ப் பத்தல்,
*கயிறு குறு முகவை* மூயின மொய்க்கும்
ஆகெழு கொங்கர் நாடு அகப்படுத்த,  15
வேல் கெழு தானை வெருவரு தோன்றல்!
உளைப் பொலிந்த மா,
இழைப் பொலிந்த களிறு,
வம்பு பரந்த தேர்,
அமர்க்கு எதிர்ந்த புகல் மறவரொடு,  20
துஞ்சுமரம் துவன்றிய மலர் அகன் பறந்தலை,
ஓங்கு நிலை வாயில் தூங்குபு தகைத்த
வில் விசை மாட்டிய விழுச்சீர் ஐயவிக்
கடி மிளைக் குண்டு கிடங்கின்,
நெடுமதில் நிரைப் பதணத்து,  25
அண்ணல் அம் பெருங்கோட்டு அகப்பா எறிந்த
பொன் புனை உழிஞை வெல் போர்க் குட்டுவ!
போர்த்து எறிந்த பறையால் புனல் செறுக்குநரும்,
நீர்த்தரு பூசலின் அம்பு அழிக்குநரும்,
ஒலித்தலை விழவின் மலியும் யாணர் 30
நாடு கெழு தண் பணை சீறினை ஆதலின்,
குட திசை மாய்ந்து குணமுதல் தோன்றிப்
பாய் இருள் அகற்றும் பயங் கெழு பண்பின்,
ஞாயிறு கோடா நன்பகல் அமயத்துக்
கவலை வெள் நரி கூஉம் முறை பயிற்றிக்  35
கழல் கண் கூகைக் குழறு குரல் பாணிக்
கருங்கண் பேய்மகள் வழங்கும்
பெரும் பாழ் ஆகு மன், அளிய தாமே.

Pathitruppathu 22, Poet: Pālai Kouthamanār, King: Palyānai Selkezhu Kuttuvan, Water drawn in a Wooden Bucket with a Rope

Excesses of anger, lust, joy, fear, lying, kindness, harsh
treatment of criminals and other traits are hindrances
in this world for a just king with faultless wheel of power.

Oh king who comes from a lineage of brave kings who
ruled with justice!  In your country, the ocean and forests
provide abundant gifts.  People live without hurting others
or desiring things that others own.  They live wisely and
without blemish, men not abandoning their loving wives,
people sharing their food and elders living without disease.

You conquered Kongu country where herds of cows surround
water holes dug out of dry earth with iron pickaxes, and drink
oozed water drawn with ropes and buckets.  Your brave warriors
wield fierce spears that make your enemies tremble, my lord.

You entered the enemy country with prancing horses with lovely
plumes, bull elephants with fine ornaments, chariots with hung
curtains and soldiers from all divisions who were eager to fight.

Oh victorious King Kuttuvan wearing golden ulignai garlands!
You conquered the lofty, beautiful Akappā fortress with tall peaks
surrounded by protective forests, deep moats, bows that shoot rapid
arrows, towering walls, and massive gates bolstered by cross beams
and upright, wooden beams.

In that country there were loud noises from leather-covered drums
that were beat to close the stream water supply and uproar from those
playing in the streams which suppressed the sounds of those
practicing archery.  The country flourished with new riches before
you conquered it.  Now it is ruined.

The sun that yields benefits sets in the west and rises in the east,
removing darkness.  When it does not slant at midday, white foxes
howl in the forked wasteland paths, and responding owls with whirling
eyes hoot at regular intervals, a black-eyed female ghoul dancing to
their hoots.  Their country is totally ruined. They are pitiful.

Notes:  கழி கண்ணோட்டம் (1) – அருள் அம்பலவாணர் உரை – அளவிறந்த உவகை, ஒளவை துரைசாமி உரை – கையிகந்த கண்ணோட்டம்.  பெருங்கோட்டு அகப்பா (26) –  அருள் அம்பலவாணர் உரை – பெரிய சிகரங்களோடு கூடிய அகப்பா.  ஒலித்தலை (30) – ஒளவை துரைசாமி உரை – தம்மில் ஒருங்குகூடி மகிழ்தற்கு இடம் கூறுவார், ‘ஒலித்தலை விழாவின் மலியும்’ என்றார்.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  துவன்று – துவன்று நிறைவு ஆகும் – (தொல்காப்பியம், உரியியல் 36).

Meanings:   சினனே – anger (சினன் சினம் என்பதன் போலி, ஏகாரம் அசைநிலை, an expletive), காமம் – love, lust, கழி கண்ணோட்டம் – extreme outlook, excess joy, அச்சம் – fear, பொய்ச்சொல் – dishonest words, அன்பு மிகு உடைமை – having a lot of kindness, தெறல் கடுமையொடு – treating criminals harshly, பிறவும் – others, இவ்வுலகத்து – in this world, அறம் தெரி திகிரிக்கு – to the just king’s justice wheel, வழியடை ஆகும் – are hindrances, தீது – bad traits, சேண் இகந்து – pushing them far away, நன்று மிகப் புரிந்து – performing with justice, கடலும் கானமும் – the ocean and the forests, பல பயம் உதவ – to give many benefits, பிறர் பிறர் நலியாது – without hurting others, வேற்றுப் பொருள் வெஃகாது – not loving things that others have, மை இல் – without fault, அறிவினர் செவ்விதின் நடந்து – intelligent people behaving in a perfect manner, தம் அமர் துணைப் பிரியாது – not separating from loving wife, பாத்து உண்டு – share and eat, மாக்கள் – people, மூத்த யாக்கையொடு – with older bodies, பிணி இன்று கழிய – to live without disease, for diseases to go away (கழிய –   ஒளவை துரைசாமி உரை – கழி என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த வினையெச்சம்), ஊழி உய்த்த – justly ruled, உரவோர் உம்பல் – oh heir of great kings, பொன் செய் கணிச்சி – iron made axe, திண் பிணி உடைத்து – broke the hard earth, சிரறு – scattered, சில ஊறிய – with little oozed water, நீர் வாய்ப் பத்தல் – wells with water, கயிறு – rope, குறு – small, முகவை – drawn water, மூயின மொய்க்கும் – they surround and crowd to drink water, ஆ கெழு கொங்கர் நாடு – cattle filled Kongu Nadu, அகப்படுத்த – seized them, வேல் கெழு தானை – warriors with bright spears, வெருவரு தோன்றல் – oh lord who has a fierce appearance, உளைப்பொலிந்த மா – lovely horses with plumes, இழைப் பொலிந்த களிறு – lovely male elephants with ornaments, வம்பு பரந்த தேர் – chariot with spreading curtains, அமர்க்கு எதிர்ந்த – accepting battle, புகல் மறவரொடு – with desiring warriors, துஞ்சுமரம் துவன்றிய – wooden beams that are reinforcement for fortress gates hang closely (துஞ்சுமரம் – கணையமரம்), மலர் அகன் – very wide, பறந்தலை – well spread, ஓங்கு நிலை வாயில் – tall fort entrance gates, தூங்குபு – hanging, தகைத்த – tied, வில் விசை – bows that shoot rapidly, gadgets for darting rapid arrows from bows, மாட்டிய – placed, விழுச்சீர் – greatly splendid, ஐயவி – upright wooden beams (துலாமரம்), also war gadgets according to the University of Madras Lexicon, கடி மிளை – protected forests, குண்டு கிடங்கின் – with deep moats, நெடுமதில் – tall fortress walls, நிரை – rows of, பதணத்து – with the mound areas of the fort, அண்ணல் – esteemed, அம் – beautiful, பெருங்கோட்டு அகப்பா எறிந்த – conquered the Akappā fort with tall peaks, பொன் புனை உழிஞை – gold ulignai garland, வெல்போர்க் குட்டுவ – oh victorious king Kuttuvan, போர்த்து எறிந்த பறையால் – with beating drums that are covered with leather (inviting farmers with drums), புனல் செறுக்குநரும் – those who block the stream, நீர்த்தரு பூசலின் – due to the uproar in the streams, அம்பு அழிக்குநரும் – those who suppress the sounds of those who practice with arrows, ஒலித்தலை விழவின் – in the festivals with noises, மலியும் – are abundant, யாணர் – new income, நாடு கெழு தண் பணை – country with cool marutham lands, சீறினை – you were angry with your enemies, ஆதலின் – so, குடதிசை – western direction, மாய்ந்து – hiding, ending, குணமுதல் தோன்றி – rising in the east, பாய் இருள் அகற்றும் – removing darkness that has spread, பயம் கெழு பண்பின் – benefit filled traits, ஞாயிறு கோடா நன்பகல் அமயத்து – when the sun is not slanting (is upright on the sky), கவலை – forked paths, வெள் நரி – white foxes, கூஉம்முறை பயிற்றி – howling as usual (கூஉம் – இன்னிசை அளபெடை), கழல் கண் கூகை – owls with whirling eyes, குழறு குரல் பாணி – sound with beats, கருங்கண் பேய்மகள் – black eyed female ghoul, வழங்கும் – dances, பெரும் பாழ் ஆகும் மன் – they will be greatly ruined (மன் – அசைநிலை, an expletive,), அளிய தாமே – they are pitiable (தாமே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 23, *ததைந்த காஞ்சி*, பாடியவர்: பாலைக் கெளதமனார், பாடப்பட்டவர்: பல்யானைச் செல்கெழு குட்டுவன், துறை: வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

அலந்தலை உன்னத்து அம் கவடு பொருந்திச்
சிதடி கரையப் பெருவறம் கூர்ந்து,
நிலம் பைது அற்ற புலம் கெடு காலையும்,
வாங்குபு தகைத்த  கலப்பையர் ஆங்கண்
மன்றம் போந்து, மறுகு சிறை பாடும்  5
வயிரிய மாக்கள் கடும் பசி நீங்கப்,
பொன் செய் புனை இழை ஒலிப்பப் பெரிது உவந்து,
நெஞ்சு மலி உவகையர் உண்டு மலிந்து ஆடச்
சிறு மகிழானும் பெருங்கலம் வீசும்,
போர் அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ!  10
நின் நயந்து வருவேம், கண்டனம், புல் மிக்கு,
வழங்குநர் அற்று என, மருங்கு கெடத் தூர்ந்து,
பெரும் கவின் அழிந்த ஆற்ற ஏறு புணர்ந்து
அண்ணல் மரையா அமர்ந்து இனிது உறையும்
விண் உயர் வைப்பின காடு ஆயின, நின்  15
மைந்து மலி பெரும் புகழ் அறியார் மலைந்த
போர் எதிர் வேந்தர் தார் அழிந்து ஒராலின்,
மருது இமிழ்ந்து ஓங்கிய நளி இரும்பரப்பின்
மணல் மலி பெரும் துறைத் *ததைந்த காஞ்சி*யொடு
முருக்குத் தாழ்பு எழிலிய நெருப்பு உறழ் அடைகரை  20
நந்து நாரையொடு செவ்வரி உகளும்
கழனி வாயிற் பழனப் படப்பை,
அழல் மருள் பூவின் தாமரை, வளை மகள்
குறாஅது மலர்ந்த ஆம்பல்
அறாஅ யாணர் அவர் அகன்தலை நாடே.  25

Pathitruppathu 23, Poet: Pālai Kouthamanār, King: Palyānai Selkezhu Kuttuvan, Ruined Portia Trees

In your country, when famine struck and the land was greatly
parched, screeching crickets sat on leafless, dried beautiful
branches on the top of unnam trees.  Greenery vanished and
the land was barren.

Even then, you removed the intense hunger of many artists who
came with their musical instruments to perform in public grounds
and in the streets.  You made them ecstatic with gleaming gold gifts
and fed them well, removing their intense hunger.  They danced
and sang with happiness in their hearts.  You drank very little
alcohol, and still gave them many jewels.

Before the war with you, their wide sandy reservoir shores had
marutham trees with chirping birds, cracked portia trees and coral
trees with low branches and bright yellow flowers that made the
sandy shores appear like they were aflame.

Storks as white as conch and red-striped storks lived in the groves
beside the pond near the fertile fields and flame-like lotus flowers
grew there.  White waterlilies bloomed abundantly without being
plucked by the playful young girls wearing bangles.

Before the battles with you, there was continuous prosperity in their
vast land.

Oh Kuttuvan wearing gold garlands, who wins wars!  In enemy nations,
flourishing lands have been reduced to ruined places by your foot
soldiers, forest paths have lost their fine looks with nobody to walk there,
grass has grown and the place is ruined.  Noble elk live there and sleep
sweetly, and wild cattle unite with their mates in the abandoned spaces.
The armies of the kings who fought against you, not knowing your strength,
withdrew, unable to face you.  Their towns with sky-high houses have
become forests.  I came here with a desire to see you.  Now I have seen.

Notes:  போர் எதிர் வேந்தர் தார் அழிந்து ஒராலின் (17) –  அருள் அம்பலவாணர் உரை – போர் எதிர்ந்த வேந்தர் தூசிப்படை கெட்டொழிய நீங்குதலால், ஒளவை துரைசாமி உரை – பொருதலை ஏற்று எதிர் நின்று அழிந்த பகை வேந்தர் நின் தூசிப்படைக்குக் குடைந்து ஓடுவதால்.   நந்து நாரையொடு செவ்வரி உகளும் (21) – ஒளவை துரைசாமி உரை – சங்குகளும் நாரைகளும் செவ்விய வரிகளுடைய நாரையினிடத்துப் புள்ளினங்களும் உலவும், அருள் அம்பலவாணர் உரை – சங்குபோலும் வெள்ளிய நாரைகளுடனே செவ்வரி நாரைகள் தாவும், புலியூர் கேசிகன் உரை – சங்கினம் நாரையோடு செவ்விதான கோடுகளைச் செய்தபடி உலவிக் கொண்டிருக்கும், ச. வே. சுப்பிரமணியன் உரை – சங்கு போல் வெளுத்த நாரைகள் தாவித் திரியும்.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

Meanings:  அலந்தலை – dried top (அலந்த தலை அலந்தலை என வந்தது), உன்னத்து – of unnam trees, அம் – beautiful, கவடு – branches, பொருந்தி – attached, சிதடி – crickets, கரைய – make noises, பெருவறம் – very dry, கூர்ந்து – increased, நிலம் பைது அற்ற – land without greenery, புலம் கெடு காலையும் – even when the land becomes dry and barren, வாங்குபு தகைத்த – pulled and tied together, கலப்பையர் – those carrying musical instruments in bags, ஆங்கண் – there, மன்றம் போந்து – go to the town’s common area, மறுகு சிறை – street sides, பாடும் – singing, வயிரிய மாக்கள் – artists who sing and play the vayir horn, bards and dancers, கடும் பசி நீங்க – for their intense hunger to be removed, பொன்செய் – made with gold, புனை இழை ஒலிப்ப – beautiful jewels shining, பெரிது உவந்து – very happy, நெஞ்சு மலி உவகையர் உண்டு மலிந்து ஆட – hearts filled happy people eat and dance, சிறு மகிழானும் – even if he drank very little alcohol, பெருங்கலம் வீசும் – give lots of jewels, போர் அடு தானை – with an army which wins battles, பொலந்தார்க் குட்டுவ – oh king Kuttuvan with golden garlands, நின் நயந்து வருவேம் – I came to you with the desire to see you (வருவேம் – தன்மைப் பன்மை, first person plural), கண்டனம் – I have seen (தன்மைப் பன்மை, first person plural), புல் மிக்கு – abundant grass, வழங்குநர் அற்று என – without people going around, மருங்கு கெடத் தூர்ந்து – the place became ruined and filled with dried plant roots, பெருங்கவின் அழிந்த – great beauty lost, ஆற்ற – in the paths, ஏறு புணர்ந்து – where cows and bulls united, அண்ணல் மரைஆ அமர்ந்து இனிது உறையும் – where respected wild cows settled and slept sweetly, விண் உயர் வைப்பின காடு ஆயின – towns with tall houses became forests, நின் மைந்து மலி பெரும் புகழ் அறியார் – not knowing your great strength and fame, மலைந்த போர் எதிர் வேந்தர் – your warring enemy kings, தார் அழிந்து ஒராலின் – since your foot soldiers ran through their armies, since their soldiers ran away in defeat, மருது இமிழ்ந்து ஓங்கிய – marutham trees grow tall and they have birds calling, Terminalia arjuna, நளி இரும் பரப்பின் – with dense big space, மணல் மலி பெருந்துறை – big ports with sandy shores, ததைந்த காஞ்சியொடு – with cracked Portia trees, பூவரச மரம், Thespesia populnea, முருக்குத் தாழ்பு எழிலிய நெருப்பு உறழ் –  coral trees with low branches with flowers are beautiful and they look like flame on the shores, Erythrina variegate (உறழ் – உவம உருபு, a comparison word), அடைகரை – shores filled with water, shores filled with sand, நந்து நாரையொடு செவ்வரி உகளும் – white storks that are like conch and red-striped storks play, painted storks, Mycteria leucocephala, கழனி வாயிற் பழனப் படப்பை – in the groves beside the pond near the fields, அழல் மருள் பூவின் தாமரை – flame like lotus flowers (மருள் – உவம உருபு, a comparison word), வளை மகள் – girls wearing them as bracelets, குறாஅது மலர்ந்த – bloomed without being plucked (குறாஅது – (இசை நிறை அளபெடை), ஆம்பல் – white waterlilies, அறாஅ யாணர் – unending prosperity (அறாஅ – இசை நிறை அளபெடை), அவர் அகன்தலை நாடே – their vast land (நாடே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 24, *சீர் சால் வெள்ளி*, பாடியவர்: பாலைக் கெளதமனார், பாடப்பட்டவர்: பல்யானைச் செல்கெழு குட்டுவன், துறை: இயன்மொழி வாழ்த்து, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

நெடுவயின் ஒளிறு மின்னுப் பரந்தாங்குப்
புலி உறை கழித்த புலவுவாய் எஃகம்
ஏவல் ஆடவர் வலன் உயர்த்து ஏந்தி,
ஆர் அரண் கடந்த தார் அருந்தகைப்பின்
பீடு கொள் மாலைப் பெரும் படைத் தலைவ!  5
ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல்
ஈதல், ஏற்றல், என்று ஆறு புரிந்த ஒழுகும்
அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி,
ஞாலம் நின் வழி ஒழுகப் பாடல் சான்று,
நாடு உடன் விளங்கும் நாடா நல்லிசைத்  10
திருந்திய இயல் மொழித் திருந்திழை கணவ!
குலை இழிபு அறியாச் சாபத்து வயவர்
அம்பு களைவு அறியாத் தூங்கு துளங்கு இருக்கை,
இடாஅ ஏணி இயல் அறைக் குருசில்!
நீர் நிலம் தீவளி விசும்போடு ஐந்தும்  15
அளந்து கடை அறியினும் அளப்பு அருங்குரையை நின்
வளம் வீங்கு பெருக்கம் இனிது கண்டிகுமே!
உண்மரும் தின்மரும் வரை கோள் அறியாது,
குரைத் தொடி மழுகிய உலக்கை வயின் தோறு
அடைச் சேம்பு எழுந்த ஆடுறும் மடாவின்,  20
எஃகு உறச் சிவந்த ஊனத்து யாவரும்
கண்டு மதி மருளும் வாடாச் சொன்றி,
வயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர்வர
வறிது வடக்கு இறைஞ்சிய *சீர் சால் வெள்ளி*
பயங்கெழு பொழுதோடு ஆநியம் நிற்பக்  25
கலிழும் கருவியொடு கையுற வணங்கி,
மன்னுயிர் புரைஇய வலன் ஏர்பு இரங்கும்
கொண்டல் தண் தளிக் கமஞ்சூல் மா மழை
கார் எதிர் பருவம் மறப்பினும்
பேரா யாணர்த்தால், வாழ்க நின் வளனே.  30

Pathitruppathu 24, Poet: Pālai Kouthamanār, King: Palyānai Selkezhu Kuttuvan, Greatly Famous Venus

Oh king who wears victory garlands!  Oh commander of a massive
army!  You are leader of orderly tough soldiers who removed their
flesh-stinking spears from tiger-skin scabbards, raised them with
their right hands and attacked enemies, moving like lightning that
spreads in the vast skies, and conquered strong enemy forts.

You listen to virtuous Brahmins who follow the six noble traditions
of chanting, performing rituals, chanting for others, performing rituals
for others, donating and receiving.  But the world listens to you and
yields to your commands.  Oh king who is praised in songs!  Your fame
has spread far and wide in your country.

Oh husband of a woman with great renown, virtuous words and perfect
jewels!  Your warriors have tightly strung bows and arrows ready to
dart in massive, moving battle camps with endless boundaries.

The five elements of water, land, fire, wind and sky can be measured, but
your wealth and prosperity cannot be measured.  We came and saw it,
oh lord.

The sun’s rays spread and light the sky, famed Venus in the north is tilted
slightly; other beneficial planets are there for heavy rains to pour down with
thunder and lightning, to protect life on earth.  Even if rainfall fails in the
rainy season, when clouds collect cold water, rise up with strength, form
dark rain clouds and come down as rain, there is unending wealth in your
country.

In all the kitchens, rice is pound with loud pestles with rings whose ends
are blunted, and cooked in great quantities in huge pots that look like the
rising flared leaves of yam, with pieces of meat with blood, cut with knives
on wooden boards and people eat without limits.  They are awed on seeing
that abundance.  Long live your prosperity, oh lord!

Notes:  இடாஅ ஏணி (14) – அருள் அம்பலவாணர் உரை, பழைய உரை – அளவிடப்படாத எல்லை, ஒளவை துரைசாமி உரை – எல்லையாகிய பொருட்கு வெளிப்படை.  கருவியொடு (16) – இடி மின்னல் முதலிய தொகுதிகளுடன்.  உண்மரும் தின்மரும் (18) – உண்ணவும் தின்னவும் வருவாரே வரையாது ஏற்று வழங்குதலின், குறை உண்டாகாதவாறு இடையறாது சமையல் நிகழ்ந்தவண்ணம் இருத்தலின் ‘உண்மரும் தின்மரும் வரைகோளறியாது வாடாச் சொன்றி’ என்றார்.   பயங்கெழு பொழுதோடு ஆநியம் நிற்ப (25) – அருள் அம்பலவாணர் உரை –  பயங்கெழு பொழுதோடு என்றது மழைக்குப் பயன்படும் புதன், சனி, செவ்வாய் என்னும் கோள்களை, பொழுதொடு மழை பெய்தற்குரிய நாளில் நிற்றலின் ‘ஆநியம் நிற்ப’ என்றார், ஆநியம் – நாள், ஒளவை துரைசாமி உரை – பயன் பொருந்திய ஏனை நாள் மீன்களுடனே தன்குரிய நாளிலே நிற்க, பொழுது – ஆகுபெயர்.  பதிற்றுப்பத்து 69- 14 – பயங்கெழு வெள்ளி ஆநியம் நிற்ப.  ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல், ஈதல், ஏற்றல், என்று ஆறு புரிந்த ஒழுகும் அறம் புரி அந்தணர் – அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்.  (தொல்காப்பியம், புறத்திணையியல் 16).  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  கமம் – நிறைவு, கமம் நிறைந்தியலும் (தொல்காப்பியம். உரியியல் 57).  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58).  கொண்டல் தண் தளி (25) – ஒளவை துரைசாமி உரை – கீழ்க்காற்றுக் கொணரும் தண்ணிய மழைத்துளி, அருள் அம்பலவாணர் உரை – நீரை முகந்து கொள்ளுதலை உடைய தண்ணிய துளி.

Meanings:   நெடுவயின் – in the big space, ஒளிறு மின்னுப் பரந்தாங்கு – like lightning that flashes, புலி உறை கழித்த – tiger skin cover removed, புலவுவாய் எஃகம் – meat stinking spears, ஏவல் ஆடவர் – obeying men (warriors), வலன் உயர்த்து ஏந்தி – lifted on their right hands, ஆர் அரண் கடந்த – conquered a strong fort, தார் அருந்தகைப்பின் – with an orderly tough army, பீடு – proud, கொள் மாலை – garland-wearing, பெரும்படைத் தலைவ – oh leader of a big army, ஓதல் – chanting, வேட்டல் – performing rituals, அவை பிறர்ச் செய்தல் – make others chant and do rituals, ஈதல் – donating, ஏற்றல் – to receive, என்று ஆறு புரிந்த ஒழுகும் – those who practice these six, அறம் புரி அந்தணர் – Brahmins who are virtuous, வழிமொழிந்து ஒழுகி – praising and following tradition, ஞாலம் நின் வழி ஒழுக – the world will worship and follow you, பாடல் சான்று – fit for songs, நாடு உடன் விளங்கும் – will be known all over the country, நாடா – not analyzed, நல் இசை – good fame, திருந்திய இயல் மொழி – man with virtuous language, திருந்திழை கணவ – oh husband of woman with perfect jewels (திருந்திழை – அன்மொழித்தொகை), குலை இழிபு அறியா – bowstrings not knowing looseness, bowstrings that are tight, சாபத்து வயவர் – warriors with bows, அம்பு களைவு அறியா – arrows that do not leave hands, தூங்கு துளங்கு இருக்கை – a moving place that is dense, battle camp, இடாஅ ஏணி – boundary that cannot be measured, boundary that is wealth (இசை நிறை அளபெடை), இயல் அறைக் குருசில் – oh king in the battle camp, நீர் நிலம் தீ வளி விசும்போடு ஐந்தும் – water, land, fire, wind and skies – these five, அளந்து கடை அறியினும் – even if they are measured and the end known, அளப்பு அருங்குரையை – you are difficult to measure (குரை – அசைநிலை), நின் – your, வளம் வீங்கு பெருக்கம் – your wealth and great prosperity, இனிது – sweetly, கண்டிகுமே – we saw it (கண்டிகும் – தன்மைப் பன்மை வினைமுற்று, இகும் தன்மைக்கண் வந்த அசைநிலை, ஏ – அசைநிலை, an expletive), உண்மரும் தின்மரும் – those who eat, வரை கோள் அறியாது – not knowing to have limits, குரை – noise, தொடி – metal rings on pestles rings, மழுகிய உலக்கை – pestles with ends reduced, வயின்தோறு – wherever it is, அடைச்சேம்பு –  சேம்பு அடை, yam leaves, taro leaves, Colocasia antiquorum, Colocasia esculenta, எழுந்த – raised, ஆடுறும் மடாவின் – in cooking pots (அடுதலுறும் என்பது ஆடுறும் என நின்றது), எஃகு உறச் சிவந்த ஊனத்து – at the wooden boards which have turned red since meat is cut on it using knives, யாவரும் – everyone, கண்டு மதி மருளும் – awed on seeing that, வாடாச் சொன்றி – fresh rice, வயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர்வர – bright rays spread and light the sky, வறிது வடக்கு – a little bit to the north, இறைஞ்சிய சீர் சால் வெள்ளி – greatly famed Venus is tilted to the right side a little bit, பயங்கெழு பொழுதோடு ஆநியம் நிற்ப – other beneficial planets are also there, கலிழும் கருவியொடு – with heavy rain with lightning and thunder, கையுற வணங்கி – lowering in the sky (கையுற – இடத்தில் பொருந்தி), மன்னுயிர் புரைஇய – to protect life on earth (புரைஇய – சொல்லிசை அளபெடை), வலன் ஏர்பு இரங்கும் – climbs up with strength and roars, கொண்டல் – collecting, eastern wind, தண் தளி – cold water droplets, கமஞ்சூல் மாமழை – big full clouds, கார் எதிர் பருவம் மறப்பினும் – even if the rainy season rains forget to fall, பேரா யாணர்த்து ஆல் – with unabated wealth (ஆல் அசைநிலை, an expletive), வாழ்க நின் வளனே – long live your prosperity (வளனே – வளன் வளம் என்பதன் போலி, ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 25, *கான் உணங்கு கடு நெறி*, பாடியவர்: பாலைக் கெளதமனார், பாடப்பட்டவர்: பல்யானைச் செல்கெழு குட்டுவன், துறை: வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும், வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்

மா ஆடிய புலன் நாஞ்சில் ஆடா;
கடாஅம் சென்னிய கடுங்கண் யானை
இனம் பரந்த புலம் வளம் பரப்பு அறியா;
நின் படைஞர் சேர்ந்த மன்றம் கழுதை போகி
நீ உடன்றோர் மன் எயில் தோட்டி வையா ; 5
கடுங்கால் ஒற்றலின், சுடர் சிறந்து உருத்துப்
பசும் பிசிர் ஒள் அழல் ஆடிய மருங்கின்,
ஆண்டலை வழங்கும் *கான் உணங்கு கடு நெறி*
முனை அகன் பெரும் பாழ் ஆக மன்னிய,
உரும் உறழ்பு இரங்கும் முரசின், பெருமலை  10
வரை இழி அருவியின் ஒளிறு கொடி நுடங்கக்,
கடும் பரி கதழ் சிறகு அகைப்ப, நீ
நெடுந்தேர் ஓட்டிய பிறர் அகன்தலை நாடே.

Pathitruppathu 25, Poet: Pālai Kouthamanār, King: Palyānai Selkezhu Kuttuvan, Harsh Paths in the Barren Forest

Oh Greatness!  In your enemy’s vast land, yoked to horses
as swift as birds, you are riding on your towering chariot
decorated with resplendent, swaying flags that appear
like waterfalls cascading down from the tall mountains,
as your thunder-like loud battle drums roar.

Your prancing battle horses have furrowed the fields making
them unfit for plowing.  Your furious elephants with
musth flowing from their heads have devastated large fields.
Public lands where you soldiers were stationed, have become,
wastelands fit for donkeys.

The big fortress gates of your enemies have been broken and
ruined, without anybody to protect them.  Forest fired that
have been helped by fierce winds, emit yellow sparks and
embers.  Owls hover on the skies above.  Enemy lands have
become barren, and the dangerous forest paths raided by
the wayside bandits have all been ruined in the countries
of your enemies.

Notes:  பட்டினப்பாலை 255-258 – பெரு விழாக் கழிந்த பேஎம் முதிர் மன்றத்துச் சிறு பூ நெருஞ்சியோடு அறுகை பம்பி அழல்வாய் ஓரி அஞ்சு வரக் கதிப்பவும் அழு குரல் கூகையோடு ஆண்டலை விளப்பவும்.  ஆண்டலை (8) – அருள் அம்பலவாணர் – ஆண்டலைப்புள், ஒளவை துரைசாமி உரை – காட்டுக்கோழி, பொ. வே. சோமசுந்தரனார் பட்டினப்பாலை 258 உரையில் – கோட்டான், ஆந்தை என மருவி வழங்குவதுமது.  கதழ் – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).

Meanings:  மா ஆடிய புலன் – horses that pranced around in fields, நாஞ்சில் ஆடா – unable to plow with oxen, கடாஅம் – musth (கடாஅம் – இசை நிறை அளபெடை), சென்னிய – with heads, கடுங்கண் யானை – fierce elephants, இனம் பரந்த புலம் – many wide lands, வளம் பரப்பு அறியா – without providing prosperity, நின் படைஞர் – your foot soldiers, சேர்ந்த மன்றம் – public grounds where they stayed, கழுதை போகி – spoilt (fit for donkeys), நீ உடன்றோர் மன் எயில் – big forts belonging to your enemies, தோட்டி – protection, வையா – not provided, கடுங்கால் – fierce winds, ஒற்றலின் – since they attacked, சுடர் சிறந்து உருத்து – fire with hot flames, பசும் பிசிர் ஒள் அழல் – bright flame with yellow sparks, ஆடிய – swaying, மருங்கின் – in that place, ஆண்டலை வழங்கும் – owls are there, கான் உணங்கு கடு நெறி – dry harsh forest paths, முனை – battlefield,  places where bandits fights with those who travel, அகன் – wide (lands), பெரும் பாழ் ஆக – spoilt a lot, மன்னிய – with anger, உரும் உறழ்பு இரங்கும் முரசின் – with drums roaring like thunder (உறழ் – உவம உருபு, a comparison word), பெருமலை – big mountains, வரை இழி அருவியின் – like waterfalls flowing from the tall mountains (அருவியின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), ஒளிறு கொடி நுடங்க – bright flags sway, கடும் பரி கதழ் சிறகு அகைப்ப – riding on your horses which rise up/goes fast like birds, நீ நெடுந்தேர் ஓட்டிய – you ride a tall chariot, பிறர் அகன்தலை நாடே – the vast land of your enemies (நாடே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 26, *காடுறு கடு நெறி*, பாடியவர்: பாலைக் கெளதமனார், பாடப்பட்டவர்: பல்யானைச் செல்கெழு குட்டுவன், துறை: வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும், வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்

தேஎர் பரந்த புலம் ஏஎர் பரவா;
களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடா;
மத்து உரறிய மனை இன்னியம் இமிழா;
ஆங்குப் பண்டு நற்கு அறியுநர் செழு வளம் நினைப்பின்
நோகோ யானே, நோதக வருமே!  5
பெயல் மழை புரவின்று ஆகி வெய்துற்று,
வலம் இன்று அம்ம காலையது பண்பு எனக்
கண் பனி மலிர் நிறை தாங்கிக் கை புடையூ,
மெலிவுடை நெஞ்சினர் சிறுமை கூரப்,
பீர் இவர் வேலிப் பாழ் மனை நெருஞ்சிக்  10
*காடுறு கடு நெறி* யாக மன்னிய
முருகு உடன்று கறுத்த கலி அழி மூதூர்,
உரும்பில் கூற்றத்து அன்ன, நின்
திருந்து தொழில் வயவர் சீறிய நாடே.

Pathitruppathu 26, Poet: Pālai Kouthamanār, King: Palyānai Selkezhu Kuttuvan, Harsh paths in the forest

Their fields furrowed by chariot leaves do not need plowing
with oxen. Their lands rooted by pigs, do not need tilling.

There is no sweet instrument music from homes that used
to have the sounds of churning butter with churning rods.
Those who had seen their prosperity then, will feel sad for
them.  I pity your enemies.

In the country attacked by your perfect warriors who are like
Kootruvan who cannot be hurt by others, their ancient town
is like a place that faced the wrath of Murukan.
Seasonal rains have failed, and the land is parched due to heat,
losing prosperity.  Their hearts are sad, they are very distressed,
their eyes are filled with tears and they beat their hands helplessly
and say, “We are facing times that do not bring prosperity.”
Sponge gourd vines grow on the fences of their ruined houses;
thorn bushes abound in very harsh forest paths.

Notes:  காடுறு (11) – அருள் அம்பலவாணர் – காடுபொருந்திய, ஒளவை துரைசாமி உரை – காடுபோன்ற,

Meanings:  தேஎர் பரந்த புலம் – the lands where chariots went (தேஎர் – இன்னிசை அளபெடை), ஏஎர் பரவா – they do not need plowing, plows do not have to go and do the plowing (ஏஎர் – இன்னிசை அளபெடை), களிறு ஆடிய புலம் – boars rooted and ruined land, நாஞ்சில் ஆடா – they do not need plowing, மத்து உரறிய மனை – houses with churning sounds, இன்னியம் – sweet sounds, இமிழா – are not heard, ஆங்கு – there, பண்டு நற்கு அறியுநர் செழு வளம் நினைப்பின் – if those who know well about their past prosperity think about it (நற்கு – நன்கு விகாரம்), நோகோ யானே – I feel sad (நோகோ – நோகு செய்கென்னும் தன்மை வினை, ஓகாரம் அசைநிலை, an expletive, இரக்கக் குறிப்பு, implying pity), நோதக வருமே – it will cause pain, பெயல் மழை புரவின்று ஆகி – without the help of the rains, வெய்துற்று – becoming dry, வலம் இன்று – without prosperity, அம்ம – அசைநிலை, an expletive, காலையது பண்பு என – that this is bad times, கண் பனி மலிர் நிறை தாங்கி – with tears filled in their eyes, கை புடையூ – they beat their hands, மெலிவுடை நெஞ்சினர் – those with sad hearts, சிறுமை கூர – have become deeply distressed, பீர் இவர் வேலி – ridge gourd vines are on the fences, Luffa acutangula, பாழ் மனை – ruined houses, நெருஞ்சி – thorn bush, Calatrop Tribulus terrestris, Cow’s Thorn, காடு உறு கடு நெறியாக – forests have become very harsh paths, harsh paths have become like forests, மன்னிய – stable, முருகு உடன்று கறுத்த – because of the anger of Murukan, கலி அழி மூதூர் – an ancient town that lost its prosperity, உரும்பு இல் கூற்றத்து அன்ன – like the god of death who cannot be hurt by others (கூற்றத்து – கூற்றம், அத்து சாரியை, an augment), நின் – your, திருந்து தொழில் வயவர் – warriors who do a perfect job, சீறிய நாடே – the country they attacked with rage (நாடே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 27, *தொடர்ந்த குவளை*, பாடியவர்: பாலைக் கெளதமனார், பாடப்பட்டவர்: பல்யானைச் செல்கெழு குட்டுவன், துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

சிதைந்தது மன்ற நீ சிவந்தனை நோக்கலின்
*தொடர்ந்த குவளைத்* தூ நெறி அடைச்சி
அலர்ந்த ஆம்பல் அக மடிவையர்,
சுரியல் அம் சென்னிப் பூஞ்செய் கண்ணி
அரியல் ஆர்கையர் இனிது கூடு இயவர்,  5
துறை நணி மருதம் ஏறித் தெறுமார்
எல் வளை மகளிர் தெள் விளி இசைப்பின்,
பழனக் காவில் பசு மயில் ஆலும்,
பொய்கை வாயில் புனல் பொரு புதவின்,
நெய்தல் மரபின் நிரைகள் செறுவின்  10
வல்வாய் உருளி கதுமென மண்ட,
அள்ளல் பட்டுத் துள்ளுபு துரப்ப,
நல் எருதும் முயலும் அளறு போகு விழுமத்துச்
சாகாட்டாளர் கம்பலை அல்லது,
பூசல் அறியா நன்னாட்டு  15
யாணர் அறாஅக் காமரு கவினே.

Pathitruppathu 27, Poet: Pālai Kouthamanār, King: Palyānai Selkezhu Kuttuvan, Continuously Blooming Blue Waterlilies

Wearing garments woven with white waterlily
blossoms and ever-blooming blue waterlily flowers,
bright-bangled young women met, where musicians
with wavy hair adorned with flower strands, who
drink toddy and play sweet music stay.

Climbing on the marutham trees on the pond’s edge,
they chased birds that came to eat their mature grain.
They sang with clear voices, and dainty peacocks in the
groves near the fields screeched.

Near the sluice on which water crashes, swarms of bees
buzzed around blue waterlilies as was wont of them.
A cart with strong wheels gets stuck in deep mud.
The driver jumps down and shouts as he goads the fine
bulls that try hard with pain and pull the cart out of the
sludge.   These were the loud sounds in this good country
with prosperity, where there were no war uproars.

You looked at their country with great rage, and it is
certainly shattered now.

Notes:  அலர்ந்த ஆம்பல் அக மடிவையர் (3) – ஒளவை துரைசாமி உரை – ஆம்பலின் மலர்ந்த பூக்களை அவற்றின் இடையே அகப்படத் தொடுத்த தழையினை உடுத்து, அருள் அம்பலவாணர் உரை – மலர்ந்த ஆம்பற் பூவின் அக இதழால் செய்த தழையை அணிந்தவராய், மடிவை = தழை, மடிவையர் என்பதனால் மகளிர் என்பது புலப்படும்.  அகநானூறு 226 –  அம் பகை மடிவைக் குறுந்தொடி மகளிர்.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  கம்பலை – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).  அடைச்சி (2) – ஒளவை துரைசாமி உரை – சேர்த்து, அருள் அம்பலவாணர் உரை – கூந்தலில் செருகி.  இசைப்பின் மயில் ஆலும் – பதிற்றுப்பத்து 90 – கழனி உழவர் தண்ணுமை இசைப்பின், பழன மஞ்ஞை மழை செத்து ஆலும்.  எல் – எல்லே இலக்கம் – (தொல்காப்பியம், இடையியல் 21).

Meanings:  சிதைந்தது – got ruined, மன்ற – certainly, clearly, நீ சிவந்தனை நோக்கலின் – since you looked with anger, தொடர்ந்த குவளை – blue waterlilies that bloom constantly, தூநெறி அடைச்சி – joined the flowers with, wearing the flowers, அலர்ந்த ஆம்பல் – bloomed white waterlilies, அக மடிவையர் – those who place them between and wear, those who wear strands with the inner petals, சுரியல் – curly hair, அம் – beautiful, சென்னி – head, பூஞ்செய் கண்ணி – flower strands, அரியல் – alcohol, ஆர்கையர் – those who drink, இனிது கூடு இயவர் – musicians who are together sweetly, துறை நணி – close to the port, மருதம் ஏறி – climbing on the marutham trees, Arjuna Tree, Terminalia arjuna, தெறுமார் – to chase birds, எல் வளை மகளிர் – bright bangled women, தெள் விளி இசைப்பின் – when they sing with clear sounds, பழனக் காவில் – groves near the fields, பசு மயில் ஆலும் – tender peacocks dance, tender peacocks screech, பொய்கை வாயில் – near the pond entrance, புனல் பொரு புதவின் – near the sluice on which water crashes, நெய்தல் – blue waterlilies, மரபின் – habit, நிரைகள் செறுவின் – swarms of bees attack, வல்வாய் உருளி – strong wheels of a cart, கதுமென மண்ட – getting stuck rapidly (கதுமென – விரைவுக்குறிப்பு), அள்ளல் பட்டு – getting caught in the mud, துள்ளுபு துரப்ப – jumping down and goading the oxen, goading the struggling oxen, நல் எருதும் முயலும் – the fine oxen also trying, அளறு – mud, போகு விழுமத்து – due to the sorrow while pulling, சாகாட்டாளர் – the cart driver, கம்பலை – loud sounds, அல்லது – other than that, பூசல் அறியா நன்னாட்டு – no other fight uproars in this good country, யாணர் – new income, prosperity, அறாஅ – not ending (இசை நிறை அளபெடை), காமரு கவினே – that desirable beauty (கவினே – ஏகாரம் அசை நிலை, an expletive)

பதிற்றுப்பத்து 28, *உருத்துவரு மலிர் நிறை*, பாடியவர்: பாலைக் கெளதமனார், பாடப்பட்டவர்: பல்யானைச் செல்கெழு குட்டுவன், துறை: நாடு வாழ்த்து, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

திருவுடைத்து அம்ம, பெரு விறல் பகைவர்
பைங்கண் யானைப் புணர் நிரை துமிய,
உரம் துரந்து எறிந்த கறை அடிக் கழல் கால்,
கடு மா மறவர் கதழ் தொடை மறப்ப,
இளை இனிது தந்து விளைவு முட்டுறாது,  5
புலம்பா உறையுள் நீ தொழில் ஆற்றலின்,
விடு நிலக் கரம்பை விடர் அளை நிறையக்
கோடை நீடக் குன்றம் புல்லென,
அருவி அற்ற பெருவறள் காலையும்,
நிவந்து கரை இழிதரு நனந்தலைப் பேரியாற்றுச்  10
சீர் உடை வியன் புலம் வாய் பரந்து மிகீஇயர்,
உவலை சூடி *உருத்துவரு மலிர் நிறைச்*
செந்நீர்ப் பூசல் அல்லது,
வெம்மை அரிது நின் அகன்தலை நாடே.

Pathitruppathu 28, Poet: Pālai Kouthamanār, King: Palyānai Selkezhu Kuttuvan, Flowing to the Brim with Rage

Even when summers are long, mountains have lost their luster,
and waterfalls have vanished, the wide Pēriyāru river flows with
abundance filling its shores to the brim, spreading all over the
land carrying leaves and twigs in the gushing red waters that rush,
roaring with rage.

Pits formed by the feet of grazing cattle in the vast land are filled
by the river water.  There is no friction in your flourishing, huge
country.  Your country thrives because you rule it well.

Assisting you in your work, your brave soldiers, as fast as animals
and adorned with blood-stained war anklets, destroyed the rows
of green-eyed elephants that belonged to your powerful enemy.
Your archers wielding swift arrows performed their protection
duties so well, that they were able to forget their bows.

Notes:  கதழ் – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  கடு மா மறவர் (4) – ஒளவை துரைசாமி உரை – விரைந்து செல்லும் இயல்பினவாகிய விலங்குகள் போலும் விரைந்த செலவுடைய வீரர்.  கடுமாவைக் குதிரையெனக் கொண்டு குதிரை மேல் வீரர் எனக் கூறுவாருமுண்டு.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).  புலம்பு:   புலம்பே தனிமை – (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  திருவுடைத்து – it has prosperity, அம்ம – அசைநிலை, an expletive, பெரு விறல் – very brave, பகைவர் – enemies, பைங்கண் யானை – elephant with green eyes, புணர் நிரை – in a row, துமிய – chopped, உரம் – bravery, துரந்து எறிந்த – thrown, கறை அடிக் கழல் கால் – stained anklet wearing legs, கடுமா – fierce animals (like), மறவர் – warriors, கதழ் தொடை – fast arrows, மறப்ப – forgot, இளை இனிது தந்து – do their protection job well, விளைவு – yield, முட்டுறாது – without decreasing, புலம்பா உறையுள் – not being alone, நீ தொழில் ஆற்றலின் – since you do a good job ruling your country, விடு நில – in the grazing land, கரம்பை – hard soil, விடர் அளை நிறைய – many holes, many cracks (விடர் அளை – இருபெயரொட்டு),கோடை நீட – summer is long, குன்றம் புல்லென – mountains without luster, அருவி அற்ற பெருவறள் காலையும் – even when there is no waterfall, நிவந்து கரை இழிதரு – flowing full to the shores, நனந்தலைப் பேரியாற்று – of the wide Pēriyāru river, where the Pēriyāru river flows, சீர் உடை – prosperous, வியன் புலம் – wide land, huge country, வாய் பரந்து – spread in all the places, மிகீஇயர் – to be abundant (சொல்லிசை அளபெடை), உவலை சூடி – with leaves, உருத்துவரு – coming with anger, மலிர் நிறை – full, செந்நீர்ப் பூசல் – uproar of red waters, uproar of abundant water, அல்லது – other than that, வெம்மை அரிது – difficulty is rare, நின் அகன்தலை நாடே – your vast land (நாடே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 29, *வெண்கை மகளிர்*, பாடியவர்: பாலைக் கெளதமனார், பாடப்பட்டவர்: பல்யானைச் செல்கெழு குட்டுவன், துறை: வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

அவல் எறிந்த உலக்கை வாழைச் சேர்த்தி,
வளைக் கை மகளிர் வள்ளை கொய்யும்,
முடந்தை நெல்லின் விளை வயல் பரந்த
தடந்தாள் நாரை இரிய, அயிரைக்
கொழு மீன் ஆர்கைய மரந்தொறும் குழாஅலின்  5
*வெண்கை மகளிர்* வெண்குருகு ஓப்பும்,
அழியா விழவின் இழியாத் திவவின்,
வயிரிய மாக்கள் பண் அமைத்து எழீஇ
மன்ற நண்ணி மறுகு சிறை பாடும்
அகன் கண் வைப்பின் நாடு மன் அளிய,  10
விரவு வேறு கூலமொடு குருதி வேட்ட
மயிர் புதை மாக்கண் கடிய கழற,
அமர் கோள் நேர் இகந்து ஆர் எயில் கடக்கும்
பெரும் பல் யானைக் குட்டுவன்
வரம்பில் தானை பரவா ஊங்கே.  15

Pathitruppathu 29, Poet: Pālai Kouthamanār, King: Palyānai Selkezhu Kuttuvan, Women Wearing White Conch Bangles

Offerings of various grain mixed with blood was made to your
resounding drum with black eyes and fine hair, and it roared
fiercely.  Oh brave Kuttuvan with waves of warriors!  You led
your army with many elephants and conquered enemy
fortresses.

Before your army went there, women wearing bangles leaned
their large rice-pounding pestles on banana trees and plucked
vallai flowers.  Fearing them, big-footed pelicans that eat
fat ayirai fish from fertile fields with bent rice spears flew away
to nearby trees.

Young girls wearing white conch bangles chased white storks,
and there were endless festivals in the land.  Artists created lovely
music in many tunes with their lute strings, and sang and danced
in public places and streets in big towns in those countries, all of
which were ruined by you in battle.  They are pitiful now.

Notes:  பரவா – பரவி (பரவிச் செல்வதற்கு) என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

Meanings:  அவல் எறிந்த உலக்கை – rice pounding ulakkai, pestles, வாழைச் சேர்த்தி – leaning on the banana trees, வளைக் கை மகளிர் – women wearing bangles, வள்ளை கொய்யும் – plucking vallai flowers, Creeping bindweed, Ipomaea aquatic, முடந்தை நெல்லின் – with bent rice spears, விளை வயல் – mature fields, fertile fields, பரந்த – spread, தடந்தாள் நாரை – big footed pelicans, big footed storks, இரிய – move away, அயிரை – ayirai fish, கொழுமீன் – fat fish, ஆர்கைய – those that eat, மரந்தொறும் – on the trees, குழாஅலின் – since they gathered together (இசை நிறை அளபெடை), வெண்கை மகளிர் – young girls wearing white conch bangles/young women with bare hands, வெண்குருகு – white storks/herons/egrets, ஓப்பும் – they chase, அழியா விழவின் – with festivals that do not end, இழியா – undisturbed, not slipping down from their positions, திவவின் – with strings, வயிரிய மாக்கள் – bards and dancers, பண் அமைத்து எழீஇ – creating tunes that rise up (எழீஇ – சொல்லிசை அளபெடை), மன்ற நண்ணி – reaching the public places, மறுகு – streets, சிறை – on the sides, பாடும் – singing, அகன் கண் வைப்பின்  நாடு மன் – countries with towns with wide streets, அளிய – they are pitiable, விரவு – mixed, வேறு – different, கூலமொடு – with different grains, குருதி – blood, வேட்ட – desired, மயிர் புதை – hair covered (leather), மாக்கண் – black eyes, கடிய கழற – drum is beat loudly causing fear, அமர் கோள் – capturing battlefield, நேர் இகந்து – advanced with enmity, ஆர் – difficult, எயில் – forts, கடக்கும் – attacks and wins, பெரும் பல் யானை – big tusked elephant, குட்டுவன் – oh king Kuttuvan, வரம்பு இல் – limitless, தானை பரவா ஊங்கே – before the troops went there (ஊங்கே – ஏகாரம் அசை நிலை, an expletive)

பதிற்றுப்பத்து 30, *புகன்ற ஆயம்*, பாடியவர்: பாலைக் கெளதமனார், பாடப்பட்டவர்: பல்யானைச் செல்கெழு குட்டுவன், துறை: பெருஞ்சோற்று நிலை, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

இணர் ததை ஞாழல் கரை கெழு பெருந்துறை,
மணிக் கலத்து அன்ன மா இதழ் நெய்தல்
பாசடைப் பனிக்கழி துழைஇப் புன்னை
வால் இணர்ப்படு சினைக் குருகு இறைகொள்ளும்
அல்குறு கானல் ஓங்கு மணல் அடைகரை,  5
தாழ் அடும்பு மலைந்த புணரி வளை ஞரல,
இலங்கு நீர் முத்தமொடு வார் துகிர் எடுக்கும்
தண் கடல் படப்பை மென்பாலனவும்,
காந்தள் அங் கண்ணிக் கொலை வில் வேட்டுவர்
செங்கோட்டு ஆமான் ஊனொடு, காட்ட  10
மதன் உடை வேழத்து வெண்கோடு கொண்டு
பொன் உடை நியமத்துப் பிழி நொடை கொடுக்கும்
குன்றுதலை மணந்த புன்புல வைப்பும்,
காலம் அன்றியும் கரும்பு அறுத்து ஒழியாது
அரிகால் அவித்துப் பல பூ விழவின்  15
தேம்பாய் மருதம் முதல்படக் கொன்று,
வெண்தலைச் செம் புனல் பரந்து வாய் மிகுக்கும்
பல சூழ் பதப்பர் பரிய வெள்ளத்துச்
சிறை கொள் பூசலின் *புகன்ற ஆயம்*
முழவு இமிழ் மூதூர் விழவுக் காணூஉப் பெயரும்  20
செழும் பல் வைப்பி பழனப் பாலும்,
ஏனல் உழவர் வரகு மீது இட்ட
கான் மிகு குளவிய அன்பு சேர் இருக்கை,
மென்தினை நுவணை முறை முறை பகுக்கும்
புன்புலம் தழீஇய புறவு அணி வைப்பும்,  25
பல் பூஞ்செம்மல் காடு பயம் மாறி,
அரக்கத்தன்ன நுண்மணல் கோடு கொண்டு
ஒண்ணுதல் மகளிர் கழலொடு மறுகும்
விண் உயர்ந்து ஓங்கிய கடற்றவும் பிறவும்,
பணை கெழு வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து,  30
கடலவுங் காட்டவும் அரண் வலியார் நடுங்க,
முரண் மிகு கடுங்குரல் விசும்பு அடைபு அதிரக்,
கடுஞ்சினங் கடாஅய் முழங்கு மந்திரத்து
அருந்திறல் மரபின் கடவுள் பேணியர்,
உயர்ந்தோன் ஏந்திய அரும் பெறல் பிண்டம்  35
கருங்கண் பேய்மகள் கை புடையூஉ நடுங்க
நெய்த்தோர் தூஉய நிறை மகிழ் இரும்பலி,
எறும்பும் மூசா இறும்பூது மரபின்
கருங்கண் காக்கையொடு பருந்து இருந்து ஆர
ஓடாப் பூட்கை ஒண் பொறிக் கழல்கால்  40
பெருஞ்சமம் ததைந்த செருப்புகல் மறவர்
உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு கொளை புணர்ந்து,
பெருஞ்சோறு உகுத்தற்கு எறியும்
கடுஞ்சின வேந்தே, நின் தழங்கு குரல் முரசே.

Pathitruppathu 30, Poet: Pālai Kouthamanār, King: Palyānai Selkezhu Kuttuvan, People who Gathered with Desire

In your neythal seashore groves where people go to enjoy,
herons live on laurel tree branches with clusters of white blossoms
and search for fish in brackish ponds where blue waterlilies bloom
with petals that are like sapphire jewels.  Cassia trees are adorned
with dense clusters of flowers.  On the sand-filled shores, adumpu
creepers spread low on dunes, and conch shells brought by the
waves blow.  Those who live there find fabulous pearls and long
coral pieces from the cool ocean with delicate shores.

In your pālai wastelands, hunters wearing glory lily garlands carry
murderous bows and slaughter wild cattle with perfect horns.  They
barter the meat along with white tusks of wild elephants for alcohol,
in the gold-selling shopping districts of towns hugging the
mountains.

In your fertile marutham lands with many rich towns where
sugarcane harvests are done even during unseasonal times when canes
are cut, their stubble removed, festivals of many flowers are celebrated.
Ancient towns are loud with the festive sounds of throbbing drums.
Marutham trees with honey-filled flowers are cut down by noisy workers.
Wide rivers overflow with white-foamed muddy waters, as workers try to
control floods with walls of sand surrounded by hay bales on the shores,
and throngs of people go to see that.

In your kurinji mountain lands, farmers use millet grass to thatch the
roofs of their houses where they live with love, and nearby kulavi trees
drop fragrant flowers on their roofs. They share their soft millet flour,
giving portions to everybody, and their mountain is surrounded by towns
in arid land.

In your mullai woodlands, the flowers in the forest have dried and dropped,
and yields from the land is lost.  The fine sand on sand mounds, appear like
red wax.  Bright-browed women unite with their men with war anklets,
and the forest is filled with sky-high tall trees and more.

Great kings with large drums and kings of small regions, bow to your might
and listen to you in one voice.  Those who have forts in the forests and on
ocean islands shudder when they hear your name.  Your drums roar with
rage to goad warriors, their loud sounds reaching the skies.

The god with rare abilities, residing in a drum, is worshipped with loud
chants by a wise man who gives offerings of blood and abundant liquor.
A black-eyed female ghoul trembles in fear beating her hands.  Ants do not
swarm on the offerings according to surprising tradition, but black-eyed
ravens and kites eat them.

Oh King filled with great rage!  Your warriors, desirous of battles and not
running away from battles, wear bright war anklets and crush your enemies
in big battles.  They celebrate your victories with earth-trembling,
thunder-like loud sounds and join the music festivities.  They give offerings
of big rice balls, as your drums roar loudly.

Notes:  பல சூழ் பதப்பர் (18) – அருள் அம்பலவாணர் உரை – பல வைக்கோற் புரியாலும் சூழப்பட்ட மணற்கோட்டை.   கழலொடு மறுகும் (28) – அருள் அம்பலவாணர் உரை – கழலையுடைய தலைமகனொடு உடன்போம், ஒளவை துரைசாமி உரை – காலில் செருப்பணிந்து திரியும்.  மந்திரத்து (33) – ஒளவை துரைசாமி உரை – மானதம், மந்தம், உரை என்ற மூவகையுள் உரையால் முழக்கி ஓதப்படும் வகையினைச் சார்ந்ததாகலின் ‘முழங்கு மந்திரம்’ என்றும், அம் மந்திர முழக்கம், கேட்கும் வீரர் உள்ளத்தே பகைவர்பால் மிக்க சினத்தை எழுப்பும் இயல்பிற்றென்பார் போல, ‘கடுஞ்சினங் கடாஅய் முழங்கு மந்திர’ மென்னும் கூறினார்.  மந்திரத் தென்புழி ஆனுருபு தொக்கது.  மந்திரத்தால் கடவுட்குப் பரவுக் கடனாற்றும் உயர்ந்தோன்,  அருள் அம்பலவாணர் உரை – மந்திரம், மானசம், உபாஞ்சு என்னும் முறைகளால் செப்பிக்கப்படாது வாசக முறையாகக் கொண்டு உச்சரிக்கப்படுதலின், ‘முழங்கு மந்திரத்தை’ என்றார்.  உயர்ந்தோன் (35) – அருள் அம்பலவாணர் உரை – முரசுறை கடவுளை வழிபடுவோன், ஒளவை துரைசாமி உரை- முரசுறை கடவுட்கு பலியிட்டு மந்திரம் கூறுவோன் அதனை ஓதுதற்குரிய உயர்வுடையவன் ஆதலின் அவனை ‘உயர்ந்தோன்’ என்று கூறினார்.  புடையூஉ (36) – அருள் அம்பலவாணர் உரை – கைகளைப் புடைத்து, ஒளவை துரைசாமி உரை- கைகளைப் புடைத்து, பழைய உரை – கையைக் கொட்டி.  கான் – மணம், அகநானூறு 391 – தலை வேய் கான் மலர் தேம் பாய் முல்லையொடு, பதிற்றுப்பத்து 30-23 – கான்மிகு குளவிய, திருமுருகாற்றுப்படை 198 – விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கான், மதுரைக்காஞ்சி 337 – கான் பொழில் தழீஇய அடைகரை தோறும்.

Meanings:  இணர் – bunches, ததை – dense, ஞாழல் –  புலிநகக்கொன்றை, Cassia sophera, Tigerclaw tree, கரை கெழு – splendid shores, பெருந்துறை – big ports, மணிக் கலத்து அன்ன – like sapphire jewels (கலத்து – கலம், அத்து சாரியை, an augment), மா இதழ் நெய்தல் – kuvalai flowers with big leaves, purple/blue waterlily, பாசடை – green leaves, பனிக்கழி – cold pond, துழைஇ – search (சொல்லிசை அளபெடை), புன்னை – punnai trees (நாகம் – Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum), வால் இணர்ப்படு – with bright/white clusters, சினை – tree branches, குருகு இறைகொள்ளும் – herons/storks/egrets stay, அல்குறு கானல் – grove where people could stay, ஓங்கு – tall, மணல் அடைகரை – sand filled shores, water filled shores, தாழ் அடும்பு – adumpu low-spreading creepers, Ipomoea pes-caprae, மலைந்த – wearing, புணரி – ocean shores, வளை – conch shells, ஞரல – sound, இலங்கு நீர் – splendid waters, முத்தமொடு – with pearls, வார் துகிர் – long corals, எடுக்கும் – taking, தண் கடல் – cool ocean, படப்பை – adjoining land, மென்பாலனவும் – neythal land with delicate shores, காந்தள் அம் கண்ணி – beautiful glory lily garlands, beautiful glory lily strands – malabar glory lily, கொலை வில் வேட்டுவர் – hunters with murderous bows, செங்கோட்டு ஆமான் – wild cattle with red horns, wild cattle with perfect horns, ஊனொடு – with flesh, காட்ட மதன் உடை வேழத்து – arrogant forest elephants, வெண்கோடு கொண்டு – with their white tusks, பொன் உடை நியமத்து – in the shopping areas with gold, பிழி நொடை கொடுக்கும் – gives for the price of liquor, barters for liquor, குன்றுதலை மணந்த – with mountains, புன்புல வைப்பும் – towns in the dry land, காலம் அன்றியும் – even in unseasonal times, கரும்பு அறுத்து – cut sugarcane, ஒழியாது – without stopping,  அரிகால் அவித்து – cut the stubble, பல பூ விழவின் – in the many festivals with flowers, தேம்பாய் – honey flowing, with flowers with honey (தேம் தேன் என்றதன் திரிபு), மருதம் – marutham trees – Arjuna Tree, Terminalia arjuna, முதல் படக் கொன்று – chopped the trunks of marutham trees, வெண்தலைச் செம் புனல் – white foam topped red floods, பரந்து வாய் மிகுக்கும் – spread and flow abundantly in various places (read as மிகுக்கும் வாய்), பல சூழ் பதப்பர் – heaped sand surrounded by tight hay bales as dams, (மணற்கோட்டை), பரிய – ruined, வெள்ளத்து சிறை கொள் பூசலின் – due to the uproar trying to control the floods, புகன்ற – desiring, ஆயம் – people who have come there, முழவு இமிழ் மூதூர் – drums roaring ancient town, விழவுக் காணூஉப் பெயரும் – see the festival and go away (காணூஉ – இன்னிசை அளபெடை), செழும் பல் வைப்பி – prosperous few towns, பழனப் பாலும் – marutham areas, ஏனல் உழவர் – millet field farmers, வரகு மீது இட்ட – with millet grass roofs, கான்மிகு குளவிய –  with forest maramalli flowers with great fragrance, பன்னீர் பூ, மரமல்லி, Indian cork tree, Millingtonia hortensis, அன்பு சேர் இருக்கை – houses with love, மென்தினை – soft millet, நுவணை – flour, முறை முறை பகுக்கும் – share with others, புன்புலம் – dry land, தழீஇய – embracing (சொல்லிசை அளபெடை), புறவு அணி வைப்பும் – towns near the mullai land, places near the mullai land, பல் பூஞ்செம்மல் காடு – forest with many wilted flowers, பயம் மாறி – lost being beneficial, அரக்கத்து அன்ன – like red wax, like red vermillion (அரக்கத்து – அரக்கம், அத்து சாரியை, an augment), நுண்மணல் – fine sand, கோடு கொண்டு – with peaks, ஒண்ணுதல் மகளிர் – women with bright foreheads, கழலொடு மறுகும் – walk with anklets, விண் உயர்ந்து ஓங்கிய – sky-high and very tall (உயர்ந்து ஓங்கிய – ஒருபொருட் பன்மொழி), கடற்றவும் பிறவும் – in the forests and in the other places, பணை கெழு வேந்தரும் – and the kings with large panai drums, வேளிரும் – and the small-region kings, ஒன்றுமொழிந்து – united together, agreed with words, கடலவும் – and in the oceans, காட்டவும் – and in the forests, அரண் வலியார் நடுங்க – make strong ones with forts tremble, முரண் மிகு – differing greatly (with enemies), கடுங்குரல் – harsh sounds (of a drum), விசும்பு அடைபு அதிர – reaches the sky with roaring sounds, கடுஞ்சினங் கடாஅய் – instigating warriors with rage (கடாஅய் – இசை நிறை அளபெடை), முழங்கு மந்திரத்து – with  loud chants, அருந்திறல் மரபின் கடவுள் பேணியர் – in order to worship the god within the drum with splendid abilities, உயர்ந்தோன் – a superior man, a wise man, ஏந்திய – offered, அரும் பெறல் பிண்டம் – rare to obtain offerings,  precious offerings, கருங்கண் பேய்மகள் – black-eyed female devil, கை புடையூஉ நடுங்க – beating her hands and trembling (புடையூஉ – இன்னிசை அளபெடை), நெய்த்தோர் தூஉய – blood thrown (தூஉய – இன்னிசை அளபெடை), நிறை மகிழ் – lots of liquor, இரும் பலி – big offering, எறும்பும் மூசா – ants don’t crowd, இறும்பூது மரபின் – with a surprising tradition, கருங்கண் காக்கையொடு – with black-eyed crows, பருந்து இருந்து ஆர – for kites to eat, for eagles to eat, ஓடாப் பூட்கை – principle of not running away, ஒண் பொறிக் கழல் கால் – feet with bright anklet with bells, பெரும் சமம் – big battle, ததைந்த- crushed, செருப்புகல் மறவர் – brave soldiers who love war, உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு – with thunder-like sounds that make the earth tremble (நிலன் – நிலம் என்பதன் போலி), கொளை புணர்ந்து – join in the music festivities, பெருஞ்சோறு – big rice balls, உகுத்தற்கு எறியும் – to throw for offerings, கடுஞ்சின வேந்தே – oh greatly enraged king, நின் – your, தழங்கு குரல் முரசே – loud roaring drums (முரசே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிகம்
இமையவரம்பன் தம்பி அமைவர
உம்பர் காட்டைத் தன் கோல் நிறீஇ,
அகப்பா எறிந்து பகல் தீ வேட்டு,
மதி உறழ் மரபின் முதியரைத் தழீஇக்,
கண்ணகன் வைப்பின் மண் வகுத்து ஈத்துக்,  5
கருங்களிற்று யானைப் புணர் நிரை நீட்டி,
இரு கடல் நீணரும் ஒரு பகல் ஆடி,
அயிரை பரைஇ ஆற்றல் சால் முன்போடு
ஒடுங்கா நல் இசை உயர்ந்த கேள்வி
நெடும்பார தாயனார் முந்து உறக் காடு போந்த  10
*பல்யானைச் செல்கெழு குட்டுவனைப்
பாலைக் கெளதமனார்* பாடினார் பத்துப்பாட்டு.

Epilog
He, the younger brother of Imayavarampan, brought Umpar
forest under his scepter, attacked Akappa fortress and torched
it in a single day, embraced his wise ancestors of tradition,
divided the land into many regions, multiplied the number of
black bull elephants, worshipped the goddess on Ayirai Hills
bringing water from two different oceans in one day, a man of
efficiency, untarnished fine fame and superior knowledge, guided
by Nedum Bhārathāyanār, went to the forest.

These ten songs about Palyānai Selkezhu Kuttuvan are sung by
Pālai Kouthamanār.

Meanings:  இமையவரம்பன் தம்பி – younger brother of Imayavarampan Neduncheralathan, அமைவர உம்பர் காட்டைத் தன் கோல் நிறீஇ – brought Umpar forest area under his control – this shows that they lost control of their forest for some time to another kingdom, அகப்பா எறிந்து – attacked Akappa fortress, பகல் தீ வேட்டு – burnt it in a day, மதி உறழ் மரபின் முதியரைத் தழீஇ – embraced his wise traditional elders (தழீஇ – சொல்லிசை அளபெடை), கண்ணகன் வைப்பின் – in his large country, மண் வகுத்து – split the land into parts, ஈத்து – gave, கருங் களிற்று யானை – black male elephants, புணர் நிரை நீட்டி – increased their herds, இரு கடல் நீணரும் – waters from both seas, ஒரு பகல் ஆடி – brought waters in one day, அயிரை பரைஇ – worshipped the goddess on Ayirai hills, ஆற்றல் சால் – high efficiency, முன்போடு – with strength, ஒடுங்கா நல் இசை – fine fame that was not reduced, உயர்ந்த கேள்வி – superior knowledge, நெடும் பாரதாயனார் – Nedumparathanār, முந்து உற – guiding, காடு போந்த – went to the forest (abandoning family life), பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக் கெளதமனார் பாடினார் பத்துப்பாட்டு – ten songs sung by Pālai Kouthamanār for Palyānai Selkezhu Kuttuvan

பதிற்றுப்பத்து 31, *கமழ் குரல் துழாஅய்*, பாடியவர்: காப்பியாற்றுக் காப்பியனார், பாடப்பட்டவர்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல், துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

குன்று தலைமணந்து குழூஉக் கடல் உடுத்த
மண் கெழு ஞாலத்து, மாந்தர் ஒராங்குக்
கை சுமந்து அலறும் பூசல் மாதிரத்து
நால் வேறு நனந்தலை யொருங்கெழுந்து ஒலிப்பத்,
தெள் உயர் வடி மணி எறியுநர் கல்லென  5
உண்ணாப் பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி,
வண்டு ஊது பொலி தார்த் திரு ஞெமர் அகலத்துக்
கண் பொரு திகிரிக் *கமழ் குரல் துழாஅய்*
அலங்கல் செல்வன் சேவடி பரவி,
நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதிப் பெயர  10
மணி நிற மையிருள் அகல நிலா விரிபு,
கோடு கூடு மதியம் இயல் உற்றாங்குத்
துளங்கு குடி விழுத்திணை திருத்தி முரசு கொண்டு,
ஆண் கடன் இறுத்த நின் பூண் கிளர் வியன் மார்பு,
கருவி வானம் தண்தளி தலைஇய,  15
வட தெற்கு விலங்கி விலகு தலைத்து எழிலிய,
பனி வார் விண்டு விறல் வரை அற்றே;
கடவுள் அஞ்சி வானத்து இழைத்த
தூங்கு எயில் கதவம் காவல் கொண்ட
எழூஉ நிவந்தன்ன பரேர் எறுழ் முழவுத் தோள்;  20
வெண்திரை முந்நீர் வளைஇய உலகத்து,
வண் புகழ் நிறுத்த வகை சால் செல்வத்து
வண்டன் அனையை மன் நீயே வண்டுபட
ஒலிந்த கூந்தல் அறம் சால் கற்பின்,
குழைக்கு விளக்கு ஆகிய ஒண்ணுதல் பொன்னின் 25
இழைக்கு விளக்காகிய அவ்வாங்கு உந்தி,
விசும்பு வழங்கு மகளிர் உள்ளும் சிறந்த
செம்மீன் அனையள் நின் தொல் நகர்ச் செல்வி;
நிலன் அதிர்பு இரங்கல ஆகி வலன் ஏர்பு
வியன் பணை முழங்கும் வேல் மூசு அழுவத்து  30
அடங்கிய புடையல் பொலங்கழல் நோன் தாள்,
ஒடுங்காத் தெவ்வர் ஊக்கு அறக் கடைஇப்,
புறக்கொடை எறியார் நின் மறப்படை கொள்ளுநர்
நகைவர்க்கு அரணம் ஆகிப் பகைவர்க்குச்
சூர் நிகழ்ந்தற்று நின் தானை;  35
போர் மிகு குருசில்! நீ மாண்டனை பலவே!

Pathitruppathu 31, Poet:  Kāppiyatru Kāppiyanār, King: Kalangāykanni Nārmudichēral, Fragrant Clusters of Basil

In the world with sand and mountains, that is surrounded
by oceans with waves, devotees lift their hands, pray together,
uproar rises, sounds travel to the four distances of the vast
earth, and bright, tall, loud bells are rung.  Those who have
made fasting vows, go to the cool water shores and bathe
before praying.

They pray to Thirumāl carrying a bright, shining discus that
awes eyes and donning large, fragrant garlands made with
clusters of basil swarmed by bees.  They bow down worshipping
his perfect feet and return to their towns with joy in their
hearts.

You perform your duties responsibly in battles seizing battle
drums of enemy kings.  You took care of your suffering citizens
and brought to their lives brightness like that of the huge full
moon that dazzles in the sky to remove darkness as dark as
sapphire.

Your chest with ornaments, that performed manly duties, is huge
like the bright, cold, tall mountains that lie across the land
blocking the north and the south, whose tall peaks hit rain clouds
that spray cold water with thunder and lightning.  You are like
the immensely rich, benevolent Vandan who established a good
name on this earth surrounded by ocean with white waves.
Your drum-like thick shoulders are as strong as hanging portcullis
gates with wooden cross bars, hung as protection by those afraid
of fierce gods.

Your queen with bee-swarming thick hair, gleaming brow that
brightens her earrings, shining body that causes her jewels to be
bright, and curved navel, is a woman of ancient pride and virtue,
superior to the celestial women in the skies.  She, virtuous like
the red star Arunthathi, is the wealth of your ancient city.

Your roaring, huge battle drum beats resound in the battlefields
causing those on land to tremble with fear.  Your warriors wearing
tightly-woven palm garlands and gold war anklets on their strong legs,
raise their lances with their right hands, spring, and attack powerful
enemies who refuse to surrender, quelling their ferocity in the crowded
battlefields.  Your commanders are honorable men who don’t attack the
backs of enemy warriors who run away in fear from battlefields.
They protect those who are friends, but are like fierce gods to enemies.

Oh King who has seen many triumphant battles!  You are superior in
many ways, my lord.

Notes:  குழூஉக் கடல் (1) – அருள் அம்பலவாணர் உரை – பல பொருளும் திரளுதலுடைய கடல், ஒளவை துரைசாமி உரை – அலைகள் கூடி முழங்குதலையுடைய கடல்.  கோடு கூடு மதியம் (13) – ஒளவை துரைசாமி உரை – பக்கம் நிரம்பிய முழு மதியம்.  பிறை மதியின் இருகோடும் கூடியவழி முழுமதியமாதலின் ‘கோடு கூடு மதியம்’ என்றார்.  கலித்தொகை 142 – கோடுவாய் கூடாப் பிறை. விழுத்திணை (13) – அருள் அம்பலவாணர் உரை – சீரிய குடிகள், ஒளவை துரைசாமி உரை – குடிமக்களின் நல்லொழுக்கம், கருவி வானம் (15) – இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய முகில்கள்.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).  நிலன் அதிர்பு (29) – ஒளவை துரைசாமி உரை – செயவெனெச்சம் அதிர்பு  எனத் திரிந்து நின்றது.  பழைய உரைகாரரும் ‘நிலனதிர எனத் திரிக்க’ என்பர்.  எறுழ் – எறுழ் வலி ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 92).  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58).  முந்நீர் – தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது.  முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் ‘தமிழ்க்காதல்’ நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு 9 உரை, நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி 75 உரை.

Meanings:  குன்று தலைமணந்து – having many close mountains, குழூஉக் கடல் உடுத்த – surrounded by oceans with waves that are together (குழூஉ  – இன்னிசை அளபெடை), மண் கெழு ஞாலத்து – in the sand-filled earth, மாந்தர் ஒராங்குக் கை சுமந்து அலறும் பூசல் – people lifting their hands together and are noisy, மாதிரத்து நால் வேறு – four different directions, நனந்தலை – wide land, ஒருங்கெழுந்து ஒலிப்ப – sound together, தெள் உயர் வடி மணி – bright tall beautiful bells, clear tall cast bells, எறியுநர் – those who hit/ring, கல்லென – with the sound ‘kal’, உண்ணாப் பைஞ்ஞிலம் – group of people who have vowed not to eat (பைஞ்ஞிலம்  – பைந்நிலம் என்பதன் மரூஉ), பனித்துறை – cool shores, cool ports, மண்ணி – bathe, வண்டு ஊது – bees swarm, பொலி தார் – splendid garland, திரு – beautiful, ஞெமர் அகலத்து – on the broad chest, கண் பொரு திகிரி – wheels that awe the eyes, wheels that blind the eyes, கமழ் குரல் – fragrant bunch, துழாஅய் அலங்கல் செல்வன் – Thirumal with a swaying thulasi garland, – thulasi, sacred basil, Ocimum sanctum, சேவடி பரவி – worshipping his perfect feet, நெஞ்சு மலி உவகையர் – those happy with a full heart, துஞ்சு பதிப் பெயர – return to the towns where they reside, மணி நிற மையிருள் – sapphire colored darkness, அகல – to leave, நிலா விரிபு – moon spreading light, கோடு கூடு மதியம் – full moon with where both sides of the crescent moon have joined together to form a circle, இயல் உற்றாங்கு – like that, துளங்கு குடி – suffering citizens, விழுத்திணை திருத்தி – giving good communities livelihood stability like in the past, முரசு கொண்டு – with drums, ஆண் கடன் இறுத்த – after your finished your manly responsibilities, நின் பூண் கிளர் வியன் மார்பு – your jewel wearing bright wide chest, your wide chest with many jewels, கருவி வானம் – clouds with thunder and lightning, தண் தளி தலைஇய – cold water drops fall (தலைஇய – சொல்லிசை அளபெடை), வட தெற்கு விலங்கி – blocked between the north and the south, விலகு – blocking, தலைத்து எழிலிய – rising high (peaks) beautifully, பனி வார் – cold, விண்டு விறல் வரை – tall strong mountains, அற்றே – like, கடவுள் அஞ்சி – scared of gods, வானத்து இழைத்த – in the skies, தூங்கு எயில் கதவம் – hanging fort gates (portcullis), காவல் கொண்ட – as protection, எழூஉ நிவந்து அன்ன – high like lifting the wooden cross bar (எழூஉ – இன்னிசை அளபெடை), பரேர் – thick, எறுழ் – strong, முழவுத்தோள் – drum like strong shoulders, வெண்திரை முந்நீர் – white waves ocean, வளைஇய உலகத்து – world surrounded by (வளைஇய – சொல்லிசை அளபெடை), வண் புகழ் நிறுத்த – good fame established, வகை சால் செல்வத்து – with many riches, வண்டன் அனையை மன் நீயே – you are like the benevolent Vandan, வண்டு பட – bee swarming, ஒலிந்த கூந்தல் – thick hair, அறம் சால் கற்பின் – with righteousness and virtue, குழைக்கு விளக்கு ஆகிய – as brightness to her earrings, ஒண்ணுதல் – bright forehead, பொன்னின் இழைக்கு விளக்காகிய – as luster to her gold jewels, அவ்வாங்கு உந்தி – beautiful curved navel, விசும்பு வழங்கு மகளிர் – celestial women who move around in the sky, உள்ளும் சிறந்த செம்மீன் அனையள் – she is the red star that is the best among all of them, Alcor, Arunthathi, நின் தொல் நகர்ச் செல்வி – your wife in the ancient town, your wife in your ancient palace, நிலன் அதிர்பு இரங்கல ஆகி – not roar to scare people on earth (நிலன் – நிலம் என்பதன் போலி), வலன் ஏர்பு – climb with strength/on the right, வியன் பணை முழங்கும் – wide panai drums roar, வேல் – warriors with spears, மூசு அழுவத்து – in the crowded battlefield, அடங்கிய புடையல் – tightly woven palm garlands, பொலங்கழல் – gold war anklets, நோன் தாள் – strong legs, ஒடுங்காத் தெவ்வர் – enemies who do not obey, ஊக்கு அறக் கடைஇ – attacked to ruin their enthusiasm (கடைஇ – சொல்லிசை அளபெடை), புறக்கொடை எறியார் – they do not attack those who are running away, நின் மறப்படை கொள்ளுநர் – your brave battle warriors with leadership, நகைவர்க்கு அரணம் ஆகி – protection to friends, பகைவர்க்குச்சூர் நிகழ்ந்தற்று – like fierce gods to your enemies, நின் தானை – your warriors, போர் மிகு குருசில் – oh king who has seen many battles, நீ மாண்டனை பலவே – you are superior in many ways (பலவே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 32, *கழை அமல் கழனி*, பாடியவர்: காப்பியாற்றுக் காப்பியனார், பாடப்பட்டவர்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல், துறை: செந்துறைப் பாடாண்பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

மாண்டனை பலவே போர் மிகு குருசில்! நீ
மாதிரம் விளக்கும் சால்பும் செம்மையும்,
முத்து உடை மருப்பின் மழ களிறு பிளிற,
மிக்கு எழு கடுந்தார் துய்த்தலைச் சென்று,
துப்புத் துவர் போகப் பெருங்கிளை உவப்ப,  5
ஈத்து ஆன்று ஆனா விடன் உடை வளனும்,
துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றியும்,
எல்லாம் எண்ணின், இடு கழங்கு தபுந,
கொன் ஒன்று மருண்டனென், அடு போர்க் கொற்றவ!
நெடுமிடல் சாயக் கொடு மிடல் துமியப்,  10
பெருமலை யானையொடு புலம் கெட இறுத்துத்,
தடந்தாள் நாரை படிந்து இரை கவரும்
முடந்தை நெல்லின் *கழை அமல் கழனிப்*
பிழையா விளையுள் நாடு அகப்படுத்து,
வையா மாலையர் வசையுநர்க் கறுத்த 15
பகைவர் தேஎத்து ஆயினும்,
சினவாய் ஆகுதல் இறும்பூதால் பெரிதே.

Pathitruppathu 32, Poet:  Kāppiyatru Kāppiyanār, King: Kalangāykanni Nārmudichēral, Paddy Fields with Bamboo-like Stalks

Oh King who is victorious in battles!  You are honorable
in many ways, your fame flourishing in all directions, a man
of wisdom and perfection.

Your young bull elephants with pearls in their tusks, trumpeted
and sprung to action with ferocity.  Your fierce foot soldiers went
to the farthest boundaries of enemy lands bringing back plundered
wealth.  You shared those riches with poets and artists, making them
happy, giving until they refused.  You uplifted depressed towns with
your generosity from your newly acquired wealth.  If one were to
count your noble acts, it would be impossible to do.

Your enemies who used kalangu beans that foretold them that
they would win, eventually lost to you, O you who spoils their
victories!

Oh King who wins fierce battles!  I am in awe of your virtues.
You killed Anji when you invaded his country and stayed there with
your mountain-like elephants and ruined his land.   You conquered
his fertile land where harvest never fails, and big-footed pelicans
stay and catch prey in paddy fields filled with heavy, bending, mature
rice grains growing on dense stalks as tall as bamboo.

Despite mean people with base minds who did not respect you,
and enemies you hated, you took pity and cared for citizens of those
distant lands without rage.  I am awed, your greatness!

Notes:  நெல்லின் கழை அமல் கழனி – உ. வே. சாமிநாதையர் உரை – நெற்றாளை அதன் பருமையாலே மூங்கிலோடு ஒப்புமைப் பற்றிக் கழை என்று பெயர் கொடுத்த சிறப்பால் இதற்கு கழை அமல் கழை என்று பெயராயிற்று.  துய்த்தலை (4) – அருள் அம்பலவாணர் உரை – நுகர்ச்சிக்குரிய இடம், ஒளவை துரைசாமி உரை – எல்லை முடிவு.  நெடுமிடல் (10) – ஒளவை துரைசாமி உரை – நெடுமிடல் என்பது நெடுமிடல் அஞ்சியின் இயற்பெயர்.  இவன் அதியமான் நெடுமான் அஞ்சியின் குலத்தவன்.  இந்நெடுமிடல் அஞ்சி என்பான் அரிமணவாயில் உறத்தூரின்கண் வென்றான் என பரணர் கூறுகின்றார் (அகநானூறு 266).  ஆனால் அப்பாடலில் பொ. வே. சோமசுந்தரனார் உரையில் நெடுமிடல் என்பதற்கு ‘நெடிய வலிமை’ என்றும், வேங்கடசாமி நாட்டார் உரையில் ‘மிக்க வலிமை’ என்றுமே உள்ளது.  வையா மாலையர் (15) – அருள் அம்பலவாணர் உரை – ஒரு தன்மையில் வைத்து எண்ணப்படாத இயல்பையுடையவர்கள், ஒளவை துரைசாமி உரை – ஒரு பொருளாக மதிக்கலாகாத கீழ்மைத் தன்மையுடையவர்கள்.  யானையின் தந்தத்தில் முத்து:  அகநானூறு 282 – வால் மருப்பு ஒடிய உக்க தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு, நற்றிணை 202 – புலி பொரச் சிவந்த புலால் அம் செங் கோட்டு ஒலி பல் முத்தம், புறநானூறு 161 – முத்துப்படு முற்றிய உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு, புறநானூறு 170 –  வெண்கோடு பயந்த ஒளி திகழ் முத்தம், பதிற்றுப்பத்து 32 – முத்துடை மருப்பின், கலித்தொகை 40 – முத்து ஆர் மருப்பின், திருமுருகாற்றுப்படை 304 – பெருங்களிற்று முத்துடை வான்கோடு தழீஇ,  குறிஞ்சிப்பாட்டு 36 – முத்து ஆர் மருப்பின், மலைபடுகடாம் 518 – முத்துடை மருப்பின்.  மழ – மழவும் குழவும் இளமைப் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 15).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

Meanings:  மாண்டனை பலவே – you are special in many ways, போர் மிகு குருசில் நீ – you are a victorious king in battles, மாதிரம் விளக்கும் – flourishing on all sides, சால்பும் செம்மையும் – wisdom and perfection, முத்து உடை மருப்பின் – with tusks with pearls, மழ களிறு பிளிற – young male elephants scream, மிக்கு எழு – arose fiercely, கடுந்தார் – your fierce battalions, துய்த்தலைச் சென்று – went to the boundaries of your enemies’ land, went to the enjoyable land of enemies, துப்புத் துவர் போக – peak of their strength, பெருங்கிளை உவப்ப – make big group of relatives (poets and artists) happy, ஈத்து ஆன்று ஆனா விடன் உடை வளனும் – the abundant wealth that you give until they refuse (ஆன்று – குறையாத, விடன் – மிகுதி, செல்வம்,, வளன் – வளம் என்பதன் போலி), துளங்கு குடி – depressed towns, suffering citizens, திருத்திய வலம்படு வென்றியும் – make them well with your victories, எல்லாம் எண்ணின் – if you count all this, இடு கழங்கு – placed molucca beans and thought they would win, தபுந – oh you who ruins what was foretold by the kalangu beans, கொன் ஒன்று மருண்டனென் – I was greatly bewildered by your traits, அடு போர்க் கொற்றவ – Oh king who wins in fierce battles, நெடுமிடல் சாய – Anchi with great strength ruined – Nedumidal was Anji’s title, Anji was related to Athiyaman Nedumān Anji, கொடு மிடல் துமிய – his fierce bravery cut, பெருமலை யானையொடு – with big mountain-like elephants, புலம் கெட இறுத்து – stay there and ruin their lands, தடந்தாள் நாரை – big footed pelicans, big footed storks, படிந்து இரை கவரும் – stays there and catch their food, முடந்தை நெல்லின் – with bent (mature, top heavy) paddy grain, கழை அமல் கழனி – fields dense with stalks looking like-bamboo (அமல் – செறிந்த), பிழையா விளையுள் நாடு – a country where harvest never fails (பிழையா – ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்), அகப்படுத்து – தன்னகப்படுத்தி, taking over as yours, வையா மாலையர் – people with not respectable traits, people with base traits (மாலை – தன்மை, வையா மாலை – ஒரு தன்மையில் வைத்து எண்ணப்படாத தன்மையுடையவர்கள்), வசையுநர் – those who blame, to enemies, கறுத்த பகைவர் தேஎத்து ஆயினும் – even in the lands of enemies at whom you were enraged, even in the lands of enemies you hated (தேஎத்து – இன்னிசை அளபெடை), சினவாய் ஆகுதல் – that you did not get angry, இறும்பூது ஆல் பெரிதே – I am greatly surprised (ஆல் அசைநிலை, an expletive, பெரிதே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 33, *வரம்பு இல் வெள்ளம்*, பாடியவர்: காப்பியாற்றுக் காப்பியனார், பாடப்பட்டவர்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல், துறை: வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும், வண்ணம்: ஒழுகு வண்ணம்

இறும்பூதால் பெரிதே, கொடித்தேர் அண்ணல்!
வடி மணி அணைத்த பணை மருள் நோன் தாள்,
கடி மரத்தான் களிறு அணைத்து,
நெடு நீர துறை கலங்க,
மூழ்த்து இறுத்த வியன் தானையொடு  5
புலம் கெட நெரிதரும் *வரம்பு இல் வெள்ளம்*,
வாள் மதில் ஆக வேல் மிளை உயர்த்து
வில் இசை உமிழ்ந்த வைம்முள் அம்பின்,
செவ்வாய் எஃகம் வளைஇய அகழின்,
கார் இடி உருமின் உரறும் முரசின்,  10
கால் வழங்கு ஆர் எயில் கருதின்
போர் எதிர் வேந்தர் ஒரூஉப நின்னே.

Pathitruppathu 33, Poet:  Kāppiyatru Kāppiyanār, King: Kalangāykanni Nārmudichēral, Flood without Limits

Oh king with chariot flags!  Your martial skills are amazing.
You tied your elephants, those with strong, drum-like feet
and decorated with beautiful bells, to your enemy’s protected
sacred tree.  You landed in his country with a vast army and
muddied the clear waters on his long shores.  Your massive
army ruined his country, like floods without limits.

If enemy kings think about you and your warriors, they will run
away, unable to face your army with your foot soldiers being like
forts, warriors with swords as fort walls, lance-wielding soldiers
as protective forests, archers who dart sharp-tipped fast arrows
with loud sounds and other red war implements as the moats
surrounding well-guarded forts, and loud roaring drums as rainy
season’s roaring thunder.

Notes:  வை– வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).

Meanings:  இறும்பூது ஆல் பெரிதே – you awe me greatly – your martial skills (ஆல் அசைநிலை, an expletive), கொடித்தேர் அண்ணல் – O leader with chariot with flags, வடி மணி அணைத்த – with fine bells that are attached, with cast bells that are attached, பணை மருள் – like large panai drums (மருள் – உவம உருபு, a comparison word), நோன் தாள் – strong legs, கடி மரத்தான் களிறு அணைத்து – tied your elephant to the protected (sacred) tree, நெடு நீர துறை கலங்க – long shore waters get muddied up, மூழ்த்து – crowded, இறுத்த வியன் தானையொடு – staying with a huge army of warriors, புலம் கெட – ruining the land, நெரிதரும் – flowing closely, வரம்பு இல் வெள்ளம் – flood without limits, வாள் மதில் ஆக – warriors with swords as fort walls, வேல் மிளை உயர்த்து – warriors with spears as protective forests, வில் இசை உமிழ்ந்த – sent from bows creating sounds, வைம்முள் – sharp ends, அம்பின் – of arrows, செவ்வாய் எஃகம் – red tipped spears, red-tipped swords, வளைஇய அகழின் – as surrounding moats (வளைஇய – சொல்லிசை அளபெடை), கார் இடி உருமின் – like thunder during the rainy season (இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), உரறும் முரசின் – the drums that roar, கால் வழங்கு ஆர் எயில் – foot soldiers as forts, கருதின் – if they consider, போர் எதிர் வேந்தர் – the enemy kings who come to battle, ஒரூஉப – they will run away,  நின்னே – from you (இன்னிசை அளபெடை, நின்னே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 34, *ஒண் பொறிக் கழல் கால்*, பாடியவர்: காப்பியாற்றுக் காப்பியனார், பாடப்பட்டவர்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல், துறை: தும்பை ரவம், தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும், வண்ணம்: ஒழுகு வண்ணம்

ஒரூஉப நின்னை ஒரு பெரு வேந்தே!
ஓடாப் பூட்கை *ஒண் பொறிக் கழல் கால்*
இரு நிலம் தோயும் விரி நூல் அறுவையர்,
செவ் உளைய மா ஊர்ந்து,
நெடும் கொடிய தேர் மிசையும்  5
ஓடை விளங்கும் உருகெழு புகர் நுதல்
பொன் அணி யானை முரண் சேர் எருத்தினும்,
மன் நிலத்து அமைந்த
மாறா மைந்தர் மாறு நிலை தேய,
முரைசு உடைப் பெருஞ்சமம் ததைய ஆர்ப்பு எழ  10
அரைசு படக் கடக்கும் ஆற்றல்
புரை சால் மைந்த நீ  ஓம்பல்மாறே.

Pathitruppathu 34, Poet:  Kāppiyatru Kāppiyanār, King: Kalangāykanni Nārmudichēral, Feet Wearing War Anklets with Bright Etching

Oh great King with no equal!  Your enemies are brave men
who don’t run away from battles showing their backs.
They wear bright, carved warrior anklets and thickly woven
clothes that hang down and touch the big earth.

Oh king with great wisdom and valiant warriors, who fight
without backing off, who win wars routing enemy kings in
huge battles with roaring drums, raising uproar!   Your men
ride on horses with red tufts and chariots with tall flags.
They fight wars with ferocious elephants adorned with gold
jewels on their spotted foreheads and strong necks,
because of the protection you give to them!

Meanings:  ஒரூஉப – they will run away (இன்னிசை அளபெடை), நின்னை – from you, ஒரு பெரு வேந்தே – oh great king, ஓடாப் பூட்கை – principle of not running away from battle, ஒண் பொறிக் கழல் கால் – carved bright warrior’s anklets, இரு நிலம் – wide land, தோயும் – rubbing, விரி நூல் – wide thread (clothes with wide thread), அறுவையர் – those wearing clothes (enemies), செவ் உளைய – with red tufts, மா ஊர்ந்து – riding on horses, நெடும் கொடிய தேர் மிசையும் – climbing on chariots with tall flags, ஓடை விளங்கும் – face ornament shining, உருகெழு – fierce, scary, புகர் நுதல் – dotted forehead, பொன் அணி யானை – elephants wearing gold jewels, முரண் சேர் எருத்தினும் – on their strong necks, மன் நிலத்து அமைந்த – in the stable land, மாறா மைந்தர் – warriors who do not back off, warriors who don’t change their minds, மாறு நிலை தேய – to lose their strength, முரைசு உடை – with drums beating, பெரும் சமம் – big battlefield, ததைய –getting near, to be ruined, ஆர்ப்பு – uproar, எழ – rise, அரைசு படக் கடக்கும் ஆற்றல் – ability to ruin enemy kings and win, புரை சால் மைந்த – oh very esteemed king, நீ ஓம்பல்மாறே – since you protect (ஓம்பல்மாறே – ஏகாரம் அசை நிலை, an expletive)

பதிற்றுப்பத்து 35, *மெய் ஆடு பறந்தலை*, பாடியவர்: காப்பியாற்றுக் காப்பியனார், பாடப்பட்டவர்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல், துறை: வாகைத்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

புரை சால் மைந்த! நீ ஓம்பல்மாறே,
உரை சான்றனவால் பெருமை நின் வென்றி!
இருங்களிற்று யானை இலங்கு வால் மருப்பொடு
நெடும் தேர்த் திகிரி தாய வியன் களத்து,
அளகு உடைச் சேவல் கிளை புகா ஆரத்  5
தலை துமிந்து எஞ்சிய *மெய் ஆடு பறந்தலை*,
அந்தி மாலை விசும்பு கண்டன்ன
செஞ்சுடர் கொண்ட குருதி மன்றத்துப்,
பேஎய் ஆடும் வெல்போர்
வீயா யாணர் நின்வயினானே.  10

Pathitruppathu 35, Poet:  Kāppiyatru Kāppiyanār, King: Kalangāykanni Nārmudichēral, Body Dancing in a Battlefield

Oh eminence with esteem and valor!  You protect your warriors!
Wise elders laud your virtues and sing your proud war victories.

The wheel rims of your tall chariots trample the bodies of strewn,
splendid-tusked, large bull elephants killed in the huge battlefields.

Blood flows in a bright red color, like that of the twilight skies.
Male vultures with their females and relatives have descended to
eat flesh.  A body whose head has been cut off dances in the huge
field appearing like a ghoul that dances in the town’s square.

Unspoiled wealth comes to you after your battle victories.

Notes:  உரை சான்றனவால் (2) – ஒளவை துரைசாமி உரை – சான்றோர் புகழும் புகழமைந்தன, அருள் அம்பலவாணர் உரை – புகழ்ச்சியமைந்தன.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  அளகு (5) – பறவையின் பெண் இனம், female bird.

Meanings:  புரை சால் மைந்த – oh esteemed brave king, நீ ஓம்பல்மாறே – since you protected (your warriors), உரை சான்றன ஆல் – wise elders praised you (ஆல் அசைநிலை, an expletive), பெருமை நின் வென்றி – proud about your victory, இருங்களிற்று யானை – male elephants with big tusks, இலங்குவால் மருப்பொடு – with splendid tusks, நெடும் தேர்த் திகிரி – tall chariot wheels, தாய – spread, வியன் களத்து – in the wide battlefield, அளகு உடைச் சேவல் கிளை – male vulture with it female and relatives, புகா ஆர – eat the flesh, தலை துமிந்து – head cut off, எஞ்சிய – remaining, மெய் ஆடு பறந்தலை – body dances (without head) in the wide battlefield, அந்தி மாலை – twilight time, விசும்பு கண்டன்ன – like seeing the sky, செஞ்சுடர் கொண்ட குருதி – red flame-like blood, bright blood, மன்றத்து – in the town’s common grounds, பேஎய் ஆடும் – ghoul dancing (பேஎய் – இசை நிறை அளபெடை), வெல்போர் – victorious battle, வீயா யாணர் – unspoiled prosperity, unfailing bounty, நின்வயினானே – in your place (நின்வயினானே – ஏகாரம் அசை நிலை, an expletive)

பதிற்றுப்பத்து 36, *வாள் மயங்கு கடுந்தார்*, பாடியவர்: காப்பியாற்றுக் காப்பியனார், பாடப்பட்டவர்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல், துறை: களவழி, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

வீயா யாணர் நின் வயினானே
தாவாது ஆகும் மலி பெறு வயவே;
மல்லல் உள்ளமொடு வம்பு அமர்க் கடந்து,
செரு மிகு முன்பின் மறவரொடு தலைச்சென்று,
பனை தடி புனத்தின் கை தடிபு பலவுடன்  5
யானை பட்ட *வாள் மயங்கு கடுந்தார் *,
மாவும் மாக்களும் படுபிணம் உணீஇயர்,
பொறித்த போலும் புள்ளி எருத்தின்
புன்புற எருவைப் பெடை புணர் சேவல்
குடுமி எழாலொடு கொண்டு கிழக்கு இழிய,  10
நிலம் இழி நிவப்பின் நீள் நிரை பல சுமந்து,
உரு எழு கூளியர் உண்டு மகிழ்ந்து ஆடக்
குருதிச் செம் புனல் ஒழுகச்,
செருப்பல செய்குவை; வாழ்க நின் வளனே.

Pathitruppathu 36, Poet:  Kāppiyatru Kāppiyanār, King: Kalangāykanni Nārmudichēral, Fierce Battles with Clashing Swords

Oh mighty King!  You bestow unspoiled new wealth.
With a brave heart, you advance with your soldiers and win
new battles.

In the battlefield, chopped elephant trunks are scattered
like cut pieces of palmyra palm trunks.  Your foot soldiers fight
with enemy foot soldiers as their swords meet and clash in fierce
battlefields.  Animal and human bodies lie dispersed.  Male
vultures with spotted necks and their beloved females with dull
backs, descend from the sky, along with hawks with crested heads.

Long rows of corpses are heaped tipping the land.  Fierce ghouls
carry and eat the dead and dance with joy, blood flowing like red
rivers.  You have waged many victorious wars!  May you flourish
forever, oh lord!

Notes:  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

Meanings:  வீயா யாணர் – unspoiled prosperity, unfailing bounty, நின்வயினானே – in your place (ஏகாரம் அசை நிலை, an expletive), தாவாது ஆகும் – it will be unspoiled, மலி பெறு வயவே – with great strength (வயவே – வயா என்பது வயவு ஆயிற்று, ஏகாரம் அசை நிலை, an expletive), மல்லல் உள்ளமொடு – with a victorious mind, வம்பு அமர் – new battles, கடந்து – won, செரு – battle, மிகு – abundant, முன்பின் – brave, மறவரொடு தலைச்சென்று – go with the warriors, பனை தடி புனத்தின் – like palmyra tree pieces of the forest (புனத்தின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), கை தடிபு பலவுடன் – with many chopped trunks, யானை பட்ட – elephants killed, வாள் மயங்கு – sword battle (swords mixed with each other, swords touching each other), கடுந்தார் – fierce battalions (in the battlefield), மாவும் மாக்களும் – animals and people, படுபிணம் உணீஇயர் – to eat the dead (உணீஇயர் – சொல்லிசை அளபெடை), பொறித்த போலும் – like etched, புள்ளி எருத்தின் – with spotted necks, புன்புற – with dull backs, with small backs, எருவை – vultures, பிணம் தின்னும் கழுகு, Indian black vulture, Pondicherry vulture, red-headed vulture, பெடை புணர் சேவல் – males that unite with their females, males that are with their females, குடுமி எழாலொடு கொண்டு – along with tufted hawks, கிழக்கு இழிய – come down from the sky, நிலம் இழி நிவப்பின் – the land tips from the heap, நீள் நிரை பல சுமந்து – carrying long rows of bodies, உரு எழு கூளியர் – the fierce ghouls, உண்டு மகிழ்ந்து ஆட – eat and dance, குருதிச் செம் புனல் ஒழுக – blood flowing like red river, செருப் பல – many wars, செய்குவை – you will do, you will wage, வாழ்க நின் வளனே – may you flourish Oh lord (வளனே – வளன் வளம் என்பதன் போலி, ஏகாரம் அசை நிலை, an expletive)

பதிற்றுப்பத்து 37, *வலம்படு வென்றி*, பாடியவர்: காப்பியாற்றுக் காப்பியனார், பாடப்பட்டவர்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல், துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

வாழ்க நின் வளனே, நின்னுடை வாழ்க்கை
வாய்மொழி வாயர் நின் புகழ் ஏத்தப்
பகைவர் ஆரப் பழங்கண் அருளி,
நகைவர் ஆர நன்கலம் சிதறி
ஆன்று அவிந்து அடங்கிய செயிர் தீர் செம்மால்!  5
வான் தோய் நல் இசை உலகமொடு உயிர்ப்பத்,
துளங்கு குடி திருத்திய *வலம்படு வென்றி*யும்,
மா இரும் புடையல் மாக் கழல் புனைந்து,
மன் எயில் எறிந்து மறவர்த் தரீஇத்,
தொல் நிலைச் சிறப்பின் நின் நிழல் வாழ்நர்க்குக்  10
கோடு அற வைத்த கோடாக் கொள்கையும்,
நன்று பெரிது உடையையால் நீயே,
வெந்திறல் வேந்தே, இவ்வுலகத்தோர்க்கே.

Pathitruppathu 37, Poet:  Kāppiyatru Kāppiyanār, King: Kalangāykanni Nārmudichēral, Greatly Victorious

Oh king!  Long live your prosperity!  May you live long!
Wise men who utter truthful words sing your fame and
praises.  You inflict great grief on your enemies and
bestow bountiful wealth on friends.  Oh flawless noble
one who is learned, modest and humble!
Your sky-high fame will live as long as this earth lives.
Your ancient greatness affords protection to those in
your shadow, and you uplift those who struggle.

Wearing big black palm garlands and large war anklets,
you shatter enemy fortresses and capture their warriors.
You change their minds with your principles of justice,
and care for them, like you do for all those in your protection.
You have such greatness.  You are a brave and intelligent king
to the people of this world.

Meanings:  வாழ்க நின் வளனே – love live your prosperity (வளனே – வளன் வளம் என்பதன் போலி, ஏகாரம் அசைநிலை, an expletive), நின்னுடை வாழ்க்கை – your life, வாய்மொழி வாயர் – people who speak truth, நின் புகழ் ஏத்த – praise your fame, பகைவர் ஆரப் பழங்கண் அருளி – gave great sorrow to your enemies (ஆர – நுகர), நகைவர் ஆர – to satisfy friends (ஆர – நிறையப் பெறும்படி), நன்கலம் சிதறி – gave fine jewels, ஆன்று – filled (with learning), அவிந்து அடங்கிய – modest and humble, restrained and humble,  செயிர் தீர் செம்மால் – Oh great man without fault, O flawless one, வான் தோய் – sky high, நல் இசை – good fame, உலகமொடு உயிர்ப்ப – live until this earth lives, துளங்கு குடி – citizens who are struggling, திருத்திய – helped them, வலம்படு வென்றியும் – victorious act, மா இரும் புடையல் – black big palm garland, மாக்கழல் – big war anklets, புனைந்து – wearing, மன் எயில் – enemies forts, எறிந்து – destroyed, மறவர்த் தரீஇ – captured and brought their warriors (தரீஇ – சொல்லிசை அளபெடை), தொல் நிலைச் சிறப்பின் – with ancient greatness, நின் நிழல் வாழ்நர்க்கு – for those who live in your protection, கோடு அற வைத்த – for their minds to change, கோடாக் கொள்கையும் – principles of not bending your scepter, principles of justice, நன்று பெரிது உடையையால் நீயே – since you have greatness, வெந்திறல் வேந்தே – O brave and smart king, இவ்வுலகத்தோர்க்கே – to the people in this world (ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 38, *பரிசிலர் வெறுக்கை*, பாடியவர்: காப்பியாற்றுக் காப்பியனார், பாடப்பட்டவர்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல், துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

உலகத்தோரே பலர் மன் செல்வர்;
எல்லார் உள்ளும் நின் நல் இசை மிகுமே,
வளந்தலை மயங்கிய பைதிரம் திருத்திய
களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல்!
எயில் முகம் சிதையத் தோட்டி ஏவலின்  5
தோட்டி தந்த தொடி மருப்பு யானைச்
செவ் உளைக் கலிமா ஈகை வான் கழல்
செயல் அமை கண்ணிச் சேரலர் வேந்தே!
*பரிசிலர் வெறுக்கை* பாணர் நாள் அவை!
வாணுதல் கணவ! மள்ளர் ஏறே! 10
மை அற விளங்கிய வடு வாழ் மார்பின்
வசை இல் செல்வ! வானவரம்ப!
இனியவை பெறினே தனி தனி நுகர்கேம்,
தருக என விழையாத் தா இல் நெஞ்சத்துப்,
பகுத்து ஊண் தொகுத்த ஆண்மைப் 15
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகன்மாறே.

Pathitruppathu 38, Poet:  Kāppiyatru Kāppiyanār, King: Kalangāykanni Nārmudichēral, Wealth of Suppliants

Oh king of the Chēras!  King with fiber crown and kalangāy
garlands!  In this world, there are many rich people who
have fame.  But your fame will be the only one that will stand
above the rest.  You made your country, endowed with many
kinds of wealth, a perfect one.

Oh great Chēral wearing bright gold bravery anklets and finely
made garlands!  Your warriors goaded elephants with
ornamental rings on their tusks and ruined enemy fortresses,
bringing them under your protection.  Your soldiers on proud
horses with red manes brought you victories.

You are wealth to people with no wealth, male lion to your
warriors, husband of a woman with gleaming forehead, patron
of bards, and an asset to this earth.

You live without blemish, oh King with a battle-scarred chest
celebrated by the name Vānavarampan!

You share sweet wealth that you won without desiring it all for
yourself.  Your unspoiled good heart has the chivalry to share
the benefits with others.

Notes:  வாள் – வாள் ஒளி ஆகும் (தொல்காப்பியம் உரியியல் 71).  வளந் தலைமயங்கிய (3) –  ஒளவை துரைசாமி உரை – பல்வகைப்பட்ட வளங்களும் தம்மிற் கலந்துள்ள.

Meanings:  உலகத்தோரே – among the people in this world (ஓகாரம் அசைநிலை, an expletive), பலர் மன் செல்வர் – there are many rich people (மன் – ஒழியிசைப் பொருளில் வந்த இடைச்சொல், a particle which implies suggestion), எல்லார் உள்ளும் நின் நல் இசை மிகுமே – your good fame will stand among everybody (மிகுமே – ஏகாரம் அசைநிலை, an expletive), வளந் தலைமயங்கிய – mixed with many prosperities, பைதிரம் – country, திருத்திய – made it perfect, களங்காய்க் கண்ணி – wearing a kalangāy garland, நார்முடிச் சேரல் – O Chēral with a fiber crown, எயில் முகம் சிதைய – fort fronts ruined, தோட்டி – goad, ஏவலின் – due to goading, தோட்டி தந்த – gave protection, தொடி – rings, மருப்பு யானை – tusked elephants, செவ் உளைக் கலிமா – proud horse with red mane, ஈகை வான் கழல் – bright gold anklets (ஈகை – பொன், gold), செயல் அமை – finely made, கண்ணி – garland, சேரலர் வேந்தே – oh king of Chēras, பரிசிலர் – people with no wealth, வெறுக்கை – you are their wealth, பாணர் நாள் அவை – oh patron of bards, வாள் நுதல் கணவ – husband of woman with bright forehead (வாள் நுதல் – அன்மொழித்தொகை), மள்ளர் ஏறே – leader of warriors (like male lion), மை அற விளங்கிய – bright without blemish, வடு வாழ் மார்பின் – with a scarred chest, வசை இல் செல்வ – oh faultless king, வானவரம்ப – oh Chēra king, இனியவை பெறினே – if you get good things, தனி தனி நுகர்கேம் – I will enjoy it all myself, தருக என – asking to give it to you, விழையா – not desiring, தா இல் நெஞ்சத்து – with a faultless heart, with an unspoiled heart, பகுத்து ஊண் தொகுத்த ஆண்மை – with manliness to share collected food with others, பிறர்க்கு என வாழ்தி – you live for others, நீ – you, ஆகன்மாறே – since you do so (ஆகன்மாறே – ஏகாரம் அசைநிலை, an expletive, மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள்) தரும் இடைச்சொல்)

பதிற்றுப்பத்து 39, *ஏவல் வியன் பணை*, பாடியவர்: காப்பியாற்றுக் காப்பியனார், பாடப்பட்டவர்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல், துறை: வாகை, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

பிறர்க்கு என வாழ்தி நீ ஆகன்மாறே,
எமக்கில் என்னார் நின் மறம் கூறு குழாத்தர்,
துப்புத்துறை போகிய வெப்பு உடைத் தும்பைக்,
கறுத்த தெவ்வர் கடி முனை அலற,
எடுத்து எறிந்து இரங்கும் *ஏவல் வியன் பணை5
உரும் என அதிர்பட்டு முழங்கிச் செரு மிக்கு,
அடங்கார் ஆர் அரண் வாடச் செல்லும்,
காலன் அனைய கடுஞ்சின முன்ப!
வாலிதின் நூலின் இழையா நுண் மயிர் இழைய
பொறித்த போலும் புள்ளி எருத்தின்  10
புன்புறப் புறவின் கண நிரை அலற,
அலந்தலை வேலத்து உலவை அம் சினைச்
சிலம்பி கோலிய அலங்கல் போர்வையின்,
இலங்கு மணி மிடைந்த பசும் பொன் படலத்து
அவிர் இழை தைஇ, மின் உமிழ்பு இலங்கச்  15
சீர் மிகு முத்தம் தைஇய
நார்முடிச் சேரல், நின் போர் நிழல் புகன்றே.

Pathitruppathu 39, Poet:  Kāppiyatru Kāppiyanār, King: Kalangāykanni Nārmudichēral, Huge Drums that Goad

Oh Chēra king wearing a fiber crown with bright pearls strung
on it, and gems set in new gold that sparkle like swaying spider
webs with hair-like delicate silvery strands that hang on beautiful
branches of vēlam trees with parched tops, from which pigeon
flocks with spotted necks and dull-colored backs flee in fear!

You don’t live for yourself.  And so, your warriors who praise you,
who live under your protection in battles, are also charitable to others.

Oh king with great rage and strength like Kootruvan!  When your big
battle drums roar very loudly like thunder, goading your soldiers wearing
thumpai garlands to fight, they fight with intense desire,
ruin difficult-to-penetrate enemy forts and cause rattled enemies who
are unable to face their spears with sharp tips, to scream and run away
in fear.

Notes:  அலந்தலை வேலத்து உலவை அம் சினை (12) – ஒளவை துரைசாமி உரை – சிதைந்த தலையையுடைய வேல மரத்தின் உலர்ந்த கிளைகளில், அருள் அம்பலவாணர் உரை – காய்ந்த தலையினையுடைய வேல மரத்தினது சிறு கொம்புகளையுடைய பெருங்கொம்பின்.

Meanings:  பிறர்க்கு என வாழ்தி நீ – you  live for others, ஆகன்மாறே – hence (ஆகன்மாறே – ஏகாரம் அசைநிலை, an expletive, மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள்) தரும் இடைச்சொல்), எமக்கில் என்னார் – you don’t say no to people like me, நின் மறம் கூறு குழாத்தர் – your warriors who praise your bravery, துப்புத்துறை போகிய – with aspects of bravery, வெப்பு உடைத் தும்பை – harsh victorious thumpai garland, Leucas aspera, கறுத்த தெவ்வர் – enraged enemies, hating enemies, கடி முனை – fierce battlefield, அலற – to scream, எடுத்து எறிந்து – hitting with sticks, இரங்கும் ஏவல் – roaring and goading to fight, வியன் பணை – wide drums, உரும் என அதிர்பட்டு முழங்கி – roaring very loudly like thunder (அதிர்பட்டு முழங்கி – ஒருபொருட் பன்மொழி), செரு மிக்கு – with desire for battle, அடங்கார் – enemies, ஆர் அரண் – difficult forts, வாடச் செல்லும் – ruin them, காலன் அனைய – like Kootruvan who is the god of death, கடுஞ்சின முன்ப – O enraged strong king, வாலிதின் – white, நூலின் இழையா – not woven with threads, நுண் மயிர் இழைய – with fine thin hair/strands, பொறித்த போலும் புள்ளி எருத்தின் – with dots appearing like they are etched on the necks, புன்புற – with dull colored backs, with small backs, புறவின் கண நிரை – flocks of pigeons, அலற – scream, அலந்தலை – dried tops, ruined tops (அலந்த தலை அலந்தலை என வந்தது), வேலத்து – of velam trees, panickled babool, Acacia leucophloea, உலவை – dried, twigs, அம் சினை – beautiful branches, சிலம்பி கோலிய – what the spiders made, அலங்கல் போர்வையின் – like the moving webs (போர்வையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), இலங்கு மணி – bright gems, மிடைந்த – made, பசும் பொன் – new gold, படலத்து – in the structure (of the crown), அவிர் இழை – bright jewels, தைஇ – wearing (சொல்லிசை அளபெடை), மின் உமிழ்பு இலங்க – emitting brightness, சீர் மிகு முத்தம் – very fabulous pearls, தைஇய – strung (சொல்லிசை அளபெடை), நார் முடிச் சேரல் – O Chēra king wearing a crown made with fiber, நின் போர் நிழல் புகன்றே – they enter your shadow of your battle protection with desire (புகன்றே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 40, *நாடு காண் அவிர் சுடர்*, பாடியவர்: காப்பியாற்றுக் காப்பியனார், பாடப்பட்டவர்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல், துறை: விறலியாற்றுப்படை, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

போர் நிழல் புகன்ற சுற்றமொடு ஊர் முகத்து
இறாஅலியரோ பெரும நின் தானை!
இன் இசை இமிழ் முரசு இயம்பக் கடுப்பு இகூஉப்
புண் தோள் ஆடவர் போர் முகத்து இறுப்பக்,
காய்த்த கரந்தை மாக்கொடி விளைவயல்  5
வந்து இறை கொண்டன்று தானை; அந்தில்
களைநர் யார் இனிப் பிறர் எனப் பேணி,
மன் எயில் மறவர் ஒலி அவிந்து அடங்க,
ஒன்னார் தேயப் பூ மலைந்து உரைஇ,
வெண்தோடு நிரைஇய வேந்து உடை அருஞ்சமம்  10
கொன்று புறம்பெற்று மன்பதை நிரப்பி,
வென்றி ஆடிய தொடித் தோள் மீ கை
எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்துப்
பொன் அம் கண்ணிப் பொலந்தேர் நன்னன்
சுடர் வீ வாகைக் கடி முதல் தடிந்த,  15
தார் மிகு மைந்தின் நார்முடிச் சேரல்!
புன்கால் உன்னம் சாயத் தெள் கள்
வறிது கூட்டு அரியல் இரவலர்த் தடுப்பத்,
தான் தர உண்ட நனை நறவு மகிழ்ந்து,
நீர் இமிழ் சிலம்பின் நேரியோனே;  20
செல்லாயோ தில் சில் வளை விறலி!
மலர்ந்த வேங்கையின் வயங்கிழை அணிந்து,
மெல்லியல் மகளிர் எழில் நலம் சிறப்பப்,
பாணர் பைம்பூ மலைய இளையர்
இன் களி வழாஅ மென் சொல் அமர்ந்து,  25
நெஞ்சு மலி உவகையர் வியன் களம் வாழ்த்தத்,
தோட்டி நீவாது தொடி சேர்பு நின்று,
பாகர் ஏவலின் ஒண் பொறி பிசிரக்,
காடுதலைக் கொண்ட *நாடு காண் அவிர் சுடர்*
அழல் விடுபு மாணஇய மைந்தின்  30
தொழில் புகல் யானை நல்குவன் பலவே.

Pathitruppathu 40, Poet:  Kāppiyatru Kāppiyanār, King: Kalangāykanni Nārmudichēral, Bright Flame Seen by the Country

Oh magnificence!  You are surrounded by your warriors
desiring war, in the battlefield, where a soldier with
shoulder wounds beats a drum that roars sweet sounds.
Your foot soldiers camp in fields that have big, mature
karanthai creepers.  “Who is there to protect us,” say
the warriors of your enemy king, as they desert him.
Heavily fortified enemy fortresses lay unprotected and
voices of their guards have died down.

Your enemy warriors want your soldiers to leave the
battlefields without staying there.

Oh king who wears victory thumpai garlands!
You defeated an enemy who wore white palm frond
garlands and claimed that he was the real Chēra king
and he ran away in fear showing his back.  After routing
him, you performed victory dances on the battlefield
wearing warrior bracelets on your esteemed arms.
You brought back the citizens who were hurt.

Oh magnificence who wears a gold garland made from
crowns of seven kings on your fine wide chest!
You attacked and ruined king Nannan with golden
chariot, and cut down his sacred vākai tree with
bright flame-like flowers.  You have a brave and massive
army, my lord with a fiber crown!

You serve to your guests clear, filtered toddy,
preventing them from going to others.  You share with them
your own supply of liquor aged with flowers that bring joy.
The unnam trees with parched trunks are bent, spelling bad
omens for your enemies.  You own Neri Mountain, where
loud waterfalls flow down the peaks.

Oh virali wearing sparse bangles!  Go to the king who gives
generously.  Delicate dancers who are adorned beautifully with
jewels, appear like vēngai trees with flowers.  Bards wear gold
garlands.  Drunk with joy, young apprentices utter few words
in glee, and happy people praise his huge battlefields.  He will
give you elephants with tusk rings, their rage like that of forest
fires with sparks seen by those in the country, which when goaded
by their keepers, control their great strength and perform various
tasks with desire.

Notes:  மன்பதை நிரப்பி (11) – ஒளவை துரைசாமி உரை – அவரால் போக்கப்பெற்ற நன்மக்களை நாட்டிற் குடிபுகச் செய்து நிரப்பி, அருள் அம்பலவாணர் உரை – தன் படையை அவ்வேந்தர் நாட்டுத்தன் ஆணையாலே நிரப்பி.  Viralis were female artists who danced and sang.  மலர்ந்த வேங்கையின் வயங்கிழை அணிந்து (22) – ஒளவை துரைசாமி உரை – மலரணிந்த வேங்கை மரத்தின் எம் மருங்கும் பைந்தழையும் பூவும் தோன்றும் தோற்றம், தலை, காத்து, மூக்கு, மார்பு, தோள், இடை, கை, கால் ஆகிய எம்மருங்கும் இழை அணிந்து விளங்கும் மகளிர் போலவிருத்தலின், மலர்ந்தவேங்கையின் வயங்கிழை அணிந்து மெல்லியல் மகளிர் எழினலஞ் சிறப்ப” என்றார்.  Viralis were female artists who danced and sang.  They traveled with the bards, and were usually members of the bard’s family.  In the long song Sirupānatruppadai, the virali is the wife of the bard.  அந்தில் – அந்தில் ஆங்க அசைநிலைக் கிளவி என்று ஆயிரண்டு ஆகும் இயற்கைத்து என்ப (இடையியல் 19, தொல்காப்பியம்).  செல்லாயோ (21) – செய்யாய் + ஓ, செய்யா என்னும் முன்னிலை வினைமுற்று (தொல்காப்பியம், சொல்லதிகாரம், எச்சவியல் 54), ஓ அசைநிலை.  செய்யாய் – செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல் செய் என் கிளவி ஆகிடன் உடைத்தே – தொல்காப்பியம், சொல்லதிகாரம், எச்சவியல் 54.

Meanings:  போர் நிழல் புகன்ற சுற்றமொடு – with your warriors who desire war, ஊர் முகத்து – in the battlefield, இறாஅலியரோ – may they not stay (இசைநிறை அளபெடை, ஓகாரம் அசை), பெரும – Oh lord, நின் தானை – your warriors, இன் இசை இமிழ் முரசு – sweet sounding drums, இயம்ப – roaring, கடுப்பு இகூஉ – beating with sticks (இகூஉ – இன்னிசை அளபெடை), புண் தோள் ஆடவர் – sore-shouldered men, போர் முகத்து இறுப்ப – they are in the battle front, they stay in the battle front (இறுப்ப – தங்க), காய்த்த கரந்தை – dried karanthai, mature karanthai, globe thistle, மாக்கொடி – big creeper, dark-colored creeper, விளை வயல் – mature fields, fertile fields, வந்து இறை கொண்டன்று தானை – foot soldiers came and stayed there, அந்தில் – அசைநிலை, களைநர் யார் இனி – who is there to remove our sorrow, பிறர் எனப் பேணி – wanted to protect themselves, மன் எயில் மறவர் ஒலி அவிந்து அடங்க – sounds of the warriors in the forts died, ஒன்னார் – enemy, தேய – strength ruined, பூ மலைந்து உரைஇ – went wearing thumpai garlands (உரைஇ – சொல்லிசை அளபெடை), வெண்தோடு – white leaves (palm fronds), நிரைஇய – filled (சொல்லிசை அளபெடை), வேந்து உடை – of the king, அருஞ்சமம் – harsh battle, கொன்று – ruined, புறம்பெற்று – caused that king and his warriors to run away, மன்பதை நிரப்பி – filled up their land with citizens who had been hurt, வென்றி ஆடிய தொடித்தோள் மீ கை – danced victory dances wearing bracelets on esteemed arms, எழு முடி கெழீஇய – put together from the crowns of seven kings (கெழீஇய – சொல்லிசை அளபெடை), திரு ஞெமர் அகலத்து – beautifully seated on his broad chest, பொன் அம் கண்ணி – beautiful gold garland, பொலந்தேர் நன்னன் – king Nannan with gold chariot, சுடர் வீ வாகை – wearing flame like vākai flowers, கடி முதல் தடிந்த – cut the protected tree trunk, Sirissa tree, Albizia lebbeck, தார் மிகு மைந்தின் – went with many foot soldier brigades with strength, நார் முடிச் சேரல் – Chēran with fiber made crown, புன்கால் உன்னம் சாய – unnam trees with parched/thin trunks are bent, தெள் கள் வறிது கூட்டு அரியல் – filtered liquor made with clear toddy with a little of other things added, இரவலர்த் தடுப்ப – preventing those who seek charity from going to others, தான் தர உண்ட நனை நறவு மகிழ்ந்து – ate and drank alcohol made with flowers/buds with them (நறவு – நறா நற என்றாகி உகரம் ஏற்றது), நீர் இமிழ் சிலம்பின் – of the mountain slopes with loud waterfalls, நேரியோனே – O owner of Neri mountain, செல்லாயோ –  you go, தில் – விழைவின்கண் வந்த இடைச்சொல், a particle implying desire, சில் வளை விறலி – O female dancer/musician with few bangles, மலர்ந்த வேங்கையின் – like kino trees with blossoms, Pterocarpus marsupium, வயங்கிழை அணிந்து – wearing bright ornaments, மெல்லியல் மகளிர் எழில் நலம் சிறப்ப –  delicate women’s beauty flourishing, பாணர் பைம்பூ மலைய – bards wearing golden flowers, இளையர் – young apprentices, இன் களி வழாஅ மென் சொல் அமர்ந்து – uttering delicate words in unfailing happiness (வழாஅ – இசை நிறை அளபெடை), நெஞ்சு மலி உவகையர் வியன் களம் வாழ்த்த – very happy people praise the wide battlefields, தோட்டி நீவாது – without goading, தொடி சேர்பு நின்று – with metal tusk rings, பாகர் ஏவலின் – due to the goading of elephant keepers, ஒண் பொறி பிசிர – bright sparks fly, காடுதலைக் கொண்ட – rose in the forests, நாடு காண் – country to see, அவிர் சுடர் – bright flames, அழல் விடுபு – abandoning rage fire, மாணஇய மைந்தின் – with great strength, தொழில் புகல் யானை – elephant which desire to do tasks, நல்குவன் பலவே – he will give many (பலவே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிகம்
ஆராத் திரு வில் சேரலாதற்கு,
வேளாவிக் கோமான்
பதுமன் தேவி ஈன்ற மகன், முனை
பனிப்பப் பிறந்து பல் புகழ் வளர்த்து,
ஊழின் ஆகிய உயர் பெருஞ் சிறப்பின்,  5
பூழி நாட்டைப் படை எடுத்துத் தழீஇ ,
உருள் பூங் *கடம்பின் பெரு வாயில் நன்னனை*
நிலைச் செருவின் ஆற்றலை அறுத்து அவன்
பொன்படு வாகை முழு முதல் தடிந்து,
குருதிச் செம்புனல் குஞ்சரம் ஈர்ப்பச்  10
செருப் பல செய்து செங்களம் வேட்டுத்
துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றிக்
களங்காய்க்கண்ணி நார் முடிச் சேரலைக்,
காப்பியாற்றுக் காப்பியனார் பாடினார் பத்துப்பாட்டு.

Epilog
He was born the son of King Chēralāthan who had
unlimited wealth, and his wife, daughter of Velāvi
King Pathuman.

He grew up in fame, and his enemies feared him
in battlefields.  He seized Pūli country with his
advancing army, beat Nannan in battle,
sacred kadampam tree with round flowers that
grew in his Peruvāyil town, and also cut down his
thick-trunked vākai tree with golden flowers, as
blood flowed like a red stream that could drag
elephants.  He helped his citizens to thrive.

He is King Kalangāy Nārmudichēral and poet
Kāppiyatru Kāppiyanār sings ten songs for him.

Meanings:  ஆராத் திருவிற் சேரலாதற்கு – to Chēralāthan who had unlimited wealth, வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற – daughter of Velavi king Pathuman, மகன் – son, முனை பனிப்ப – in the battlefield, get scared (enemies), பிறந்து – born, பல் புகழ் வளர்த்து – grew in much fame, ஊழின் ஆகிய – according to tradition, உயர் பெரும் சிறப்பின் – with high splendor, பூழி நாட்டைப் படை எடுத்துத் தழீஇ – went into Pūli country with his troops and seized it (தழீஇ – சொல்லிசை அளபெடை), உருள் பூங் – wheel-like round flowers, கடம்பின் பெருவாயில் நன்னனை – Nannan’s Peruvāyil town’s sacred kadampam tree, Anthocephalus cadamba, Kadampa Oak, நிலைச் செருவின் ஆற்றலை அறுத்து – beat him in battle, அவன் பொன்படு வாகை – vākai trees with golden flowers, Sirissa tree, Albizia lebbeck, முழு முதல் தடிந்து – cut the thick trunk, குருதிச் செம்புனல் – blood flowed like a red stream, குஞ்சரம் ஈர்ப்ப – could pull elephants, செருப் பல செய்து – fought a few battles, செங்களம் – red battlefield, வேட்டு – fought, துளங்கு குடி திருத்திய – made citizens who were sad to flourish, வலம்படு வென்றி – one who succeeds with strength, களங்காய்க்கண்ணி நார் முடிச் சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடினார் பத்துப்பாட்டு – Kāppiyātru Kāppiyanār sang ten songs for Kalangāy Nārmudi Chēral

பதிற்றுப்பத்து 41, *சுடர் வீ வேங்கை*, பாடியவர்: பரணர், பாடப்பட்டவர்: கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், துறை: காட்சி வாழ்த்து, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

புணர் புரி நரம்பின் தீம் தொடை பழுனிய
வணர் அமை நல் யாழ் இளையர் பொறுப்பப்,
பண் அமை முழவும் பதலையும் பிறவும்,
கண் அறுத்து இயற்றிய தூம்பொடு சுருக்கிக்,
காவில் தகைத்த துறை கூடு கலப்பையர்  5
கைவல் இளையர் கடவுள் பழிச்ச,
மறப்புலிக் குழூஉக் குரல் செத்து வயக் களிறு
வரை சேர்பு எழுந்த *சுடர் வீ வேங்கைப்*
பூவுடைப் பெருஞ்சினை வாங்கிப் பிளந்து, தன்
மா இருஞ் சென்னி அணிபெற மிலைச்சிச்,  10
சேஎர் உற்ற செல்படை மறவர்
தண்டு உடை வலத்தர் போர் எதிர்ந்தாங்கு,
வழை அமல் வியன் காடு சிலம்பப் பிளிறும்
மழை பெயல் மாறிய கழை திரங்கு அத்தம்
ஒன்று இரண்டு அல பல கழிந்து திண்தேர்  15
வசை இல் நெடுந்தகை காண்கு வந்திசினே,
தாவல் உய்யுமோ மற்றே தாவாது
வஞ்சினம் முடித்த ஒன்றுமொழி மறவர்
முரசு உடைப் பெருஞ்சமத்து அரசு படக் கடந்து,
வெவ்வர் ஓச்சம் பெருகத் தெவ்வர் 20
மிளகு எறி உலக்கையின் இருந்தலை இடித்து,
வைகு ஆர்ப்பு எழுந்த மைபடு பரப்பின்
எடுத்தேறு ஏய கடிப்பு உடை வியன் கண்
வலம்படு சீர்த்தி ஒருங்கு உடன் இயைந்து,
கால் உளைக் கடும் பிசிர் உடைய வால் உளைக் 25
கடும் பரிப் புரவி ஊர்ந்த நின்
படுந்திரைப் பனிக்கடல் உழந்த தாளே.

Pathitruppathu 41, Poet: Paranar, King: Kadal Pirakōttiya Chenguttuvan, Flame-like Kino Flowers

Young servants carried packed, tight-stringed, curve-stemmed
yāls that play sweet music.  Youngsters with musical skills carried
mulam and pathalai drums and other instruments that create
music, and thoompu made by cutting off nodes of bamboo,
packed in draw-string bags, tied on the ends of long balancing
poles that rested on their shoulders, and then prayed to the gods.

In the mountain, a strong bull elephant thought that a kino tree
branches with golden yellow flowers was a tiger with dense fur,
attacked it, broke off a branch, adorned his big dark head with it,
and trumpeted loudly. The sound echoed in the huge surapunnai
tree forest, like the sounds of your warriors brandishing spears on
their lifted right hands, and rushing towards enemies.

In battles with roaring drums, your resolute warriors who have sworn
oaths are great terror to enemies, crushing large enemy heads like
black peppercorns being crushed with pestles, and they protect
eminent, friendly kings.

Your big-eyed war drums beaten with short sticks, roar victory
messages that fill the battlefield with uproars of the roaring dark ocean.
Rains have failed and the bamboo-spread wasteland is parched.
I have travelled not one or two days, but for many days to come here
for your audience, faultless magnificence with sturdy chariots!

Will your feet that spur a swift horse with white plumes, as they touch
the cold ocean with loud waves, raising abundant, fine water sprays,
escape from pain?

Notes:  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27). தா – தாவே வலியும் வருத்தமும் ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 48).  மறப்புலிக் குழூஉக் குரல் செத்து (7) – ஒளவை துரைசாமி உரை – மறம் பொருந்திய புலியின் குழுமிய மயிர்த் தோற்றமாகக் கருதி, அருள் அம்பலவாணர் உரை – இசைக்கருவிகளின் ஒலியைத் தறுகண்மையுடைய புலிக்கூட்டத்தின் குரல் எனக் கருதி.  மிளகு எறி உலக்கையின் இருந்தலை இடித்து (21) – அருள் அம்பலவாணர் உரை – இருத்தலை உலக்கை எறி மிளகின் என மாறிக் கூட்டுக.  பழிச்சும் – பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 86).

Meanings:  புணர் புரி நரம்பின் – with tightly tied strings, தீம் தொடை – sweet music, பழுனிய – with perfection, வணர் அமை நல் யாழ் – yāl with curved stem, இளையர் பொறுப்ப – youngsters carry, பண் அமை முழவும் – rhythmic drums, பதலையும் – pathalai drum, பிறவும் – and other instruments, கண் அறுத்து இயற்றிய தூம்பொடு – with tubular thoompu musical instruments made with cutting the nodes off bamboo, சுருக்கி – packed, காவில் தகைத்த – tying them on a shoulder pole, துறை கூடு கலப்பையர் – those carrying musical instruments in bags, கைவல் இளையர் – talented youngsters, capable youngsters (கைவல் – தொழிலில் திறமை மிக்க), கடவுள் பழிச்ச – pray to god, மறப்புலி குழூஉ குரல் செத்து – thinking that it was a brave tiger with dense fur, thinking it was the roars of a group of brave tigers, (குழூஉ – இன்னிசை அளபெடை), வயக் களிறு – a strong male elephant, வரை சேர்பு எழுந்த – growing in the mountains, சுடர் வீ வேங்கை – kino trees with flame like flowers, பூவுடைப் பெருஞ்சினை – big branches with flowers, வாங்கிப் பிளந்து தன் – pulled and broke it and on its, மா இருஞ் சென்னி – dark big head, அணிபெற மிலைச்சி – put it up to look beautiful, சேஎர் உற்ற – gathered together, செல் படை மறவர் – warriors who march toward the enemy army, தண்டு உடை வலத்தர் – those with stems (javelins) in their right hands, போர் எதிர்ந்தாங்கு – warriors in battle fighting with javelins, வழை அமல் வியன் காடு – surapunnai-dense wide forest, two-sepalled gamboge trees, Ochrocarpus longifolius (அமல் – செறிந்த), சிலம்ப பிளிறும் – trumpets loudly in the mountains, மழை பெயல் மாறிய – since rains didn’t fall, கழை – bamboo, திரங்கு – parched, dried, அத்தம் – wasteland, ஒன்று இரண்டு அல பல – not one or two but many (அல – அல்ல என்பதன் இடைக்குறை), கழிந்து – passed, திண்தேர் – strong chariot, வசை இல் நெடுந்தகை – oh faultless great king, காண்கு வந்திசினே – I came to see you (வந்திசினே – சின் தன்மை அசை, an expletive of the first person, ஏகாரம் அசைநிலை, an expletive), தாவல் உய்யுமோ –  will they escape from sorrow, மற்றே தாவாது –  without fail, வஞ்சினம் முடித்த ஒன்றுமொழி மறவர் – resolute warriors who have sworn oaths and are single-minded, முரசு உடைப் பெருஞ்சமத்து – drums in the big battle, அரசு படக் கடந்து – ruining the enemy king, வெவ்வர் ஓச்சம் பெருக – friendly kings eminence increase, தெவ்வர் – enemies, மிளகு எறி உலக்கையின் (உலக்கை எறி மிளகின்) – like pepper pounded by pestles, இருந்தலை இடித்து – breaking their dark heads, வைகு ஆர்ப்பு எழுந்த – constant noise arose (வைகு = இடையறாத, தங்கிய), மைபடு பரப்பின் – like the dark expanse – the ocean (பரப்பின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), எடுத்து ஏறு – to take and attack, ஏய – goaded, கடிப்பு உடை –  with drumsticks, with short sticks, வியன் கண் – wide drum eyes, வலம்படு சீர்த்தி – victory’s great fame, ஒருங்கு உடன் இயைந்து – all combined together in unison, கால் உளை – due to the legs, கடும் பிசிர் – abundant water sprays, உடைய – with, வால் உளை கடும் பரிப் புரவி – white-plumed fast horse, ஊர்ந்த – riding, நின் – your, படுந்திரைப் பனிக்கடல் – loud cold ocean with waves, உழந்த தாளே – tired legs (தாளே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 42, *தசும்பு துளங்கு இருக்கை*, பாடியவர்: பரணர், பாடப்பட்டவர்: கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

இரும் பனம் புடையல் ஈகை வான் கழல்,
மீன் தேர் கொட்பின் பனிக் கயம் மூழ்கிச்
சிரல் பெயர்ந்தன்ன நெடு வெள் ஊசி
நெடு வசி பரந்த வடு வாழ் மார்பின்,
அம்பு சேர் உடம்பினர்ச் சேர்ந்தோர் அல்லது  5
தும்பை சூடாது மலைந்த மாட்சி,
அன்னோர் பெரும நன்னுதல் கணவ!
அண்ணல் யானை அடு போர்க் குட்டுவ!
மைந்து உடை நல் அமர்க் கடந்து வலம் தரீஇ,
இஞ்சி வீ விராய பைந்தார் பூட்டிச்  10
சாந்து புறத்து எறித்த *தசும்பு துளங்கு இருக்கைத்*
தீம் சேறு விளைந்த மணி நிற மட்டம்
ஓம்பா ஈகையின் வண் மகிழ் சுரந்து,
கோடியர் பெரும் கிளை வாழ, ஆடு இயல்
உளை அவிர் கலிமாப் பொழிந்தவை எண்ணின்  15
மன்பதை மருள அரசுபடக் கடந்து,
முந்து வினை எதிர் வரப் பெறுதல் காணியர்,
ஒளிறு நிலை உயர் மருப்பு ஏந்திய களிறு ஊர்ந்து
மான மைந்தரொடு மன்னர் ஏத்தநின்
தேரொடு சுற்றம் உலகு உடன் மூய,  20
மா இரும் தெள் கடல் மலி திரைப் பெளவத்து,
வெண்தலைக் குரூஉப்பிசிர் உடையத்
தண் பல வரூஉம் புணரியின் பலவே.

Pathitruppathu 42, Poet: Paranar, King: Kadal Pirakōttiya Chenguttuvan, Swaying Seats with Pots

Oh magnificence!  Oh husband of a woman with a fine forehead!
Oh king Kuttuvan who won murderous battles with many noble
elephants!

Your warriors wearing dark, palm-frond garlands and gold
warrior anklets are covered with wounds caused by arrows,
and big scars caused by long bright needles, used to sew up
wounds, that pierced repeatedly like cunning, sharp-beaked
kingfishers that dive again and again into cold ponds in search
of fish.  Wearing thumpai garlands, your warriors have great
esteem to fight only with those who have come to fight.

You fought good battles and achieved many victories with
your brave warriors.  Without keeping it all for yourself,
you shared with your soldiers, sweet, aged sapphire-colored
liquor kept in pots decorated with sandal paste, and garlands
tied around the necks, braided with ginger and fresh flowers,
and placed on swaying shelves, and made them happy.

You gave artists and their large families, lovely prancing horses.
You gave away more horses than the white waves of the huge,
dark, clear ocean from which arise white, fine water sprays, my lord.

People who have heard or seen you annihilate your enemies in
battles are awed.  Warriors who ride on elephants with bright,
lifted tusks and kings praise you.  Your soldiers, who have been
in victorious battles crushing enemies, swarm around your
chariot like relatives in this world.

Notes:   கொட்பின் (2) – அருள் அம்பலவாணர் உரை – சுழற்சி, ஈண்டு மீன் உள்ள இடத்தை ஆராய்தற்குச் சிரல் நீர்க்கு மேலாக நிலைத்து நின்று பறத்தலை, ஒளவை துரைசாமி உரை – மீனைப் பிடிக்கும் சூழ்ச்சியால்.  இஞ்சி வீ விராய பைந்தார் பூட்டி (10) – பழைய உரை – இஞ்சி வீ விராய பைந்தார் பூட்டி சாந்து புறத்து எறிந்தெவென்றது மது நுகர்வுழி இடையிடைக் கறித்து இன்புறுதற்பொருட்டு இஞ்சியும் மோந்து இன்புறுதற்பொருட்டுப் பூவுமாக விரவித் தொடுத்த மாலையினைப் பூட்டி அவ்வாறு பயன்கோடற்கு  சாந்தும் புறத்தெறிந்த என்றவாறு.

Meanings:  இரும் பனம் – dark palm புடையல் – palm garland (made with the tender palm leaves), ஈகை – gold, வான் கழல் – bright warrior anklets, மீன் தேர் கொட்பின் – with whirling thoughts to choose and catch fish, hovering over the water to choose and catch fish, பனிக்கயம் மூழ்கி – diving into the cold ponds, சிரல் – kingfishers, பெயர்ந்தன்ன – like coming up, நெடு வெள் ஊசி – long white needles, long clean needles, நெடு வசி பரந்த – long scars spread, வடு வாழ் மார்பின் – with scarred chests, அம்பு சேர் உடம்பினர்ச் சேர்ந்தோர் – those whose bodies have been pierced by arrows, அல்லது – other than them, தும்பை சூடாது – not wearing battle thumpai garlands, Leucas aspera, மலைந்த – battling, மாட்சி – esteem, அன்னோர் பெரும – Oh lord of such men, நன்னுதல் கணவ – O husband of woman with sharp forehead (அன்மொழித்தொகை), அண்ணல் யானை அடு போர்க் குட்டுவ – O Kuttuvan who wins murderous battles with big elephants, மைந்து உடை – with bravery, நல் அமர்க் கடந்து – fought good battles, வலம் தரீஇ – you brought victories, you achieved victories (தரீஇ – சொல்லிசை அளபெடை), இஞ்சி வீ விராய – ginger and flowers mixed, பைந்தார் பூட்டி – tying fresh garlands, சாந்து புறத்து எறித்த – sandalwood paste rubbed on the sides, தசும்பு – pots, துளங்கு இருக்கை – on moving seats, தீம் சேறு – sweet juice, விளைந்த – aged, மணி நிற மட்டம் – sapphire colored toddy, ஓம்பா ஈகையின் – with charity without consideration (for yourself), வண் மகிழ் சுரந்து – gave great happiness to his warriors and bards, கோடியர் பெரும் கிளை வாழ – for artists and their big families to live, ஆடு இயல் – prancing, உளை – plume, அவிர் கலிமா – bright horses, பொழிந்தவை – that were given, எண்ணின் – if counted, மன்பதை மருள – those who see are awed, அரசு படக் கடந்து – won over enemy kings, முந்து வினை – advancing battles, எதிர் வர – what comes across, பெறுதல் – obtain, காணியர் – to see, ஒளிறு நிலை உயர் மருப்பு – bright raised tusks, ஏந்திய களிறு – male elephants with those (tusks), ஊர்ந்து – riding on them, மான மைந்தரொடு – along with brave soldiers, மன்னர் – kings, ஏத்த – praising, நின் தேரொடு – with your chariot, சுற்றம் – relatives, உலகு உடன் மூய – surround together, மா இரும் தெள் கடல் – huge dark clear ocean, மலி திரை – full of waves, பெளவத்து – the ocean’s, வெண்தலை – white tops, குரூஉப் பிசிர் உடைய – with colored tiny water sprays (குரூஉ – இன்னிசை அளபெடை), தண் – cold, பல வரூஉம் – many that arise (வரூஉம் – இன்னிசை அளபெடை), புணரியின் பலவே – more than the waves (பலவே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 43, *ஏறா ஏணி*, பாடியவர்: பரணர், பாடப்பட்டவர்: கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், துறை: இயன்மொழி வாழ்த்து, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

கவரி முச்சிக் கார் விரி கூந்தல்,
ஊசல் மேவல் சேயிழை மகளிர்
உரல் போல் பெருங்கால், இலங்கு வாள் மருப்பின்,
பெருங்கை மத மாப் புகுதரின், அவற்றுள்
விருந்தின் வீழ் பிடி எண்ணு முறை பெறாஅக்;  5
கடவுள் நிலைய கல் ஓங்கு நெடுவரை
வட திசை எல்லை இமயமாகத்
தென்னங் குமரியொடு ஆயிடை அரசர்
முரசு உடைப் பெருஞ்சமம் ததைய ஆர்ப்பு எழச்,
சொல் பல நாட்டைத் தொல் கவின் அழித்த  10
போர் அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ!
இரும் பணை திரங்கப் பெரும் பெயல் ஒளிப்பக்
குன்று வறம் கூரச் சுடர் சினம் திகழ,
அருவி அற்ற பெருவறள் காலையும்,
அருஞ்செலல் பேராற்று இருங்கரை உடைத்துக்  15
கடி ஏர் பூட்டுநர் கடுக்கை மலைய,
வரைவு இல் அதிர் சிலை முழங்கிப் பெயல் சிறந்து,
ஆர்கலி வானம் தளி சொரிந்தாஅங்கு,
உறுவர் ஆர ஓம்பாது உண்டு
நகைவர் ஆர நன்கலம் சிதறி,  20
ஆடு சிறை அறுத்த நரம்பு சேர் இன் குரல்
பாடு விறலியர் பல் பிடி பெறுக!
துய்வீ வாகை நுண் கொடி உழிஞை,
வென்றி மேவல் உருகெழு சிறப்பின்
கொண்டி மள்ளர் கொல் களிறு பெறுக!  25
மன்றம் படர்ந்து மறுகு சிறைப் புக்குக்
கண்டி நுண் கோல் கொண்டு களம் வாழ்த்தும்
அகவலன் பெறுக மாவே என்றும்
இகல் வினை மேவலை ஆகலின், பகைவரும்
தாங்காது புகழ்ந்த தூங்கு கொளை முழவின், 30
தொலையாக் கற்ப நின் நிலை கண்டிகுமே,
நிணம் சுடு புகையொடு கனல் சினந்து தவிராது
நிரம்பு அகல்பு அறியா *ஏறா ஏணி*,
நிறைந்து நெடிது இராத் தசும்பின், வயிரியர்
உண்டெனத் தவாஅக் கள்ளின் 35
வண் கை வேந்தே, நின் கலி மகிழானே.

Pathitruppathu 43, Poet: Paranar, King: Kadal Pirakōttiya Chenguttuvan, Unclimbable Ladder

In the soaring Himalayas with tall summits where gods
reside, beautifully jeweled women donning stylish hair
knots that look like the hair of yak, and spreading hair
that look like black clouds, love to play on the tree swings
in forests where bright-tusked, large-trunked, rutting
bull elephants with legs like pounding stones wander, and
count the loving female elephants that join their mates.
Unable to count them, they abandon counting.

In the land between northern Himalayas and southern
Kumari you have crushed many kings with roaring drums
in massive battles and attained fame in many lands.
You ruined their ancient and famous lands, felled them in
combat with the help of your army, and celebrated your
with uproars.

King Kuttuvan with gold garlands!  Even when heavy rains
have vanished, the land is parched, mountains have become
arid, tall bamboo trees have dried, the hot sun burns with
intense rage and waterfalls have disappeared, your large
rivers that are difficult to cross are full, breaking the banks
on both sides as rushing water flows in abundance.

Farmers wearing laburnum flowers have tied sharp plows
to their oxen, lightning flashes, thunder roars endlessly, and
heavy rains pour down.  You feed well the poets who come to
you, not keeping for yourself.  You bestow upon artists many
fine ornaments.  Female artists, who create sweet music that
is better than that of the wing-flapping kinnaram bird, are
given female elephants.

Your warriors desirous of battles cause fear in enemies,
wear fuzzy vākai flowers and ulignai flowers from delicate
vines, bring you treasures from other lands, and receive gifts
of murderous bull elephants.  Bards holding thin sticks with
thick nodes, singing in town squares and streets about your
successes in wars, are given horses.

Since you are desirous of victories in battles, even your enemies
praise you without controlling themselves.  Owning drums that
match dance and music, you are a learned man and we have
seen who you are.

Oh king with charitable hands!  With meat-roasting cooking smoke,
and without the heat of fire reduced, in your uproarious court, you
give artists unlimited toddy from ever-filled pots that are placed
on a shelf with perfect spaces that are not tight or wide.

Notes:  கவரி முச்சிக் கார் விரி கூந்தல் (1) – அருள் அம்பலவாணர் உரை – கவரி மயிர் போலும் கொண்டை முடியாகிய கருமை விரிந்த கூந்தலினையும், ஒளவை துரைசாமி உரை – கவரிமான் மயிர் கலந்து முடித்த கொண்டையினையும் கரிய மேகம் போன்ற கூந்தலையும். Viralis were female artists who danced and sang.  Unclimbable ladder is shelf attached to a wall.  நிரம்பு அகல்பு அறியா ஏறா ஏணி நிறைந்து நெடிது இராத் தசும்பின் (33-34) – ஒளவை துரைசாமி உரை – நிரம்புதல் – முழுவதும் பொருந்துதல், அகலுதல் – இடைவெளி மிக விரிதல்.  குடம் இருக்குங்கால் முழுவதும் நிரம்பியிராமல் சிறிது இடைவெளியுளதாகக் கோக்காலி அமைந்திருக்குமாறு தோன்ற, ‘நிரம்பு அகல்பு அறியா ஏறா ஏணி’ என்றார்.  இனி, நிரம்பு அகல்பு அறியாத நிறைந்து நெடிதிராத தசும்பு என இயைத்துரைப்பார் பழைய உரைகாரர்.  நிரம்பு அகல்பு அறியாத குடம் நிறைதல் கூறுவது முரண் ஆதலினாலும் நாற்கோண முக்கோண வடிவினவாகிய கோக்காலியில் கோள வடிவிற்றாய குடம் இடைவெளி இன்றி நிரம்ப பொருத்தம் இராமை தோன்றற்கு ‘நிரம்பு அகல்பு அறியா ஏணி’ என்பது கருத்தாதலினாலும் அவர் உரை பொருந்தாமை அறிக.  கண்டி (14) – ஒளவை துரைசாமி உரை – உண்ணப்படுவது உண்டி என்றும், கொள்ளப்படுவது கொண்டி என்றும் வருதல் போலக் கண் கண்ணாகத் துண்டிக்கப்படுவது கண்டி என வந்தது.

Meanings:  கவரி – yak, yak-tail hair fan, முச்சி – hair knot, கார் – black clouds, விரி – spread, கூந்தல் – hair, ஊசல் மேவல் – desirous to swing, சேயிழை மகளிர் – women wearing perfect jewels, women wearing red jewels, உரல் போல் பெருங்கால் – big legs like pounding stones,  இலங்கு வாள் மருப்பின் – with splendid bright tusks, பெருங்கை – big trunks, மத மா – elephants in musth, புகுதரின் – if they enter, அவற்றுள் – among those, விருந்தின் – new (newly arrived), வீழ் பிடி – desirable female elephants, எண்ணு முறை பெறாஅ – unable to count their numbers (பெறாஅ – இசை நிறை அளபெடை), கடவுள் நிலைய – where gods stay, கல் ஓங்கு – rocks filled, நெடுவரை – tall mountains, வட திசை எல்லை இமயமாக – with Himalayas as the northern boundary, தென்னங் குமரியொடு – with southern Kanyakumari, ஆயிடை – in between, அரசர் – kings, முரசு உடை – with drums, பெரும் சமம் – big battles, ததைய – crush, ஆர்ப்பு எழ – loud (victory) noises arise, சொல் பல நாட்டை – fame attained many countries, தொல்கவின் – ancient beauty, அழித்த – ruined, போர் அடு – killing in battles, தானை – armies, பொலந்தார்க் குட்டுவ – O Kuttuvan with your gold garland, இரும் பணை – big bamboo, திரங்க – are withered, are dry, பெரும் பெயல் ஒளிப்ப – heavy rains failed, they hid, குன்று வறம் கூர – the mountains became very dry, சுடர் சினம் திகழ – the sun shining very bright, அருவி அற்ற – without waterfalls, பெருவறள் காலையும் – very dry season, அருஞ் செலல் – difficult to cross (செலல் – இடைக்குறை), பேராற்று – big river, இருங்கரை உடைத்து – break the big shorelines, கடி ஏர் – sharp plow, பூட்டுநர் – farmers who tie, கடுக்கை மலைய – wear laburunum flowers, சரக்கொன்றை, Laburnum, Golden Shower Tree, Cassia sophera, வரைவு இல் – without limit, அதிர் சிலை முழங்கி – loud thunder roars, பெயல் சிறந்து – good with rains, ஆர்கலி வானம் – loud clouds, தளி சொரிந்தாஅங்கு – like raindrops fall there (சொரிந்தாஅங்கு – இசை நிறை அளபெடை), உறுவர் – those who come to you (your poets), ஆர ஓம்பாது உண்டு – feed them to the full without keeping for yourself, நகைவர் ஆர – to satisfy bards and other artists, நன்கலம் சிதறி – gift them with gold jewels, ஆடு சிறை அறுத்த நரம்பு சேர் இன் குரல் – better than that of the kinnara bird, கின்னரம் – an unidentified bird known for its sweet music, is the sweet music with strings (ஆடு சிறை – ஆகுபெயர் கின்னரப் பறவைக்கு), பாடு விறலியர் – female musicians who sing, பல் பிடி பெறுக – may they get many female elephants (this is your desire), துய் – soft, delicate, fuzzy, வீ வாகை – vākai flowers, Sirissa tree, lbizia lebbeck,, நுண் கொடி உழிஞை – fine vine ulignai, Balloon vine, s. cl., Cardiospermum halicacabum, வென்றி மேவல் – desiring victory, உருகெழு சிறப்பின் – with fierceness and greatness, கொண்டி மள்ளர் – warriors who bring back loot, கொல் களிறு பெறுக – may they get murderous male elephants (this is your desire), மன்றம் – town’s common grounds, public place, படர்ந்து – to sing, மறுகு – streets, சிறை – sides, புக்கு – enter, கண்டி நுண் கோல் – thin sticks with thick nodes, கொண்டு – with it, களம் வாழ்த்தும் அகவலன் – the bards who praise the battlefield, பெறுக மாவே – may they get horses (this is your desire), என்றும் – always, இகல் வினை – battle business, மேவலை ஆகலின் – since you desire, பகைவரும் – enemies, தாங்காது புகழ்ந்த – praise him without control, தூங்கு – sway, dance, கொளை – music, முழவின் – with drums, தொலையாக் கற்ப – O you with unspoiled education, நின் நிலை கண்டிகுமே – we saw your situation (கண்டிகும் – தன்மைப் பன்மை வினைமுற்று, இகும் தன்மைக்கண் வந்த அசைநிலை, ஏ – அசைநிலை, an expletive), நிணம் சுடு புகையொடு – with flesh burning smoke, கனல் சினந்து – flame heat, தவிராது – not going down, நிரம்பு அகல்பு அறியா – not being tight or wide (spaces in the shelf), ஏறா ஏணி – wall shelf for holding pots (கோக்காலி – சட்டிபானை முதலியவை வைப்பதற்குச் சுவரையொட்டி அமைக்கப் படுஞ் சட்டம்.), நிறைந்து நெடிது – filled with lot, இரா தசும்பின் – in the pots with liquor that does not get reduced, வயிரியர் – artists who play musical instruments, உண்டென – even though they drink, தவாஅக் கள்ளின் – with toddy that does not get reduced (தவாஅ – இசை நிறை அளபெடை), with toddy which gets filled again and again, வண் கை வேந்தே – oh king with charitable hands, நின் கலி மகிழானே – in your happy court, in your uproarious court (மகிழானே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 44, *நோய் தபு நோன் தொடை*, பாடியவர்: பரணர், பாடப்பட்டவர்: கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

நிலம் புடைப்பு அன்ன ஆர்ப்பொடு விசும்பு துடையூ
வான் தோய் வெல் கொடி தேர் மிசை நுடங்கப்,
பெரிய ஆயினும் அமர் கடந்து பெற்ற
அரிய என்னாது ஓம்பாது வீசிக்,
கலம் செலச் சுரத்தல் அல்லது கனவினும்,  5
களைக என அறியாக் கசடு இல் நெஞ்சத்து,
ஆடு நடை அண்ணல் நின் பாடுமகள் காணியர்
காணிலியரோ, நின் புகழ்ந்த யாக்கை
முழு வலி துஞ்சு *நோய் தபு நோன் தொடை*,
நுண் கொடி உழிஞை வெல் போர் அறுகை  10
சேணன் ஆயினும் கேள் என மொழிந்து,
புலம் பெயர்ந்து ஒளித்த களையாப் பூசற்கு,
அரண்கள் தாவுறீஇ அணங்கு நிகழ்ந்தன்ன
மோகூர் மன்னன் முரசம் கொண்டு,
நெடுமொழி பணித்து அவன் வேம்பு முதல் தடிந்து,  15
முரசு செய முரச்சிக் களிறு பல பூட்டி,
ஒழுகை உய்த்த கொழு இல் பைந்துணி
வைத்தலை மறந்த துய்த்தலைக் கூகை
கவலை கவற்றும் குராலம் பறந்தலை
முரசுடைத் தாயத்து அரசு பல ஓட்டித்,  20
துளங்கு நீர் வியல் அகம் ஆண்டு இனிது கழிந்த
மன்னர் மறைத்த தாழி,
வன்னி மன்றத்து விளங்கிய காடே.

Pathitruppathu 44, Poet: Paranar, King: Kadal Pirakōttiya Chenguttuvan, Strong Body without Disease

In your battlefields, drums throbbed with earth-pounding,
loud sounds and tall victory flags on chariot tops reached
high and swayed, wiping the skies.
You fought in such victorious battles, brought home spoils of war,
and shared them with others without keeping it all for yourself,
even though they were precious jewels.  Oh leader with a faultless
heart and proud walk!  Even in your dreams you are charitable.

Your friend Arukai, wearing garlands made from ulignai flowers
from delicate vines, was victorious in many battles, and like a
relative to you, even though he lived far away.  He left his country
and went into hiding afraid of your enemy, king Pazhaiyan of Mōkur
due to unresolved friction.

You attacked Pazhaiyan’s fortresses with the speed of terror-causing
gods, seized his war drum, subdued him, chopped his sacred neem
tree into pieces to make drums, loaded the wood in carts to which
his bull elephants were tied, and rode them to your capital.

In your country, which has flourished in this earth surrounded by
the swaying oceans, your victorious ancestors, who vanquished
many kings owning drums and lived sweet lives, are buried in the
cremation grounds with vanni trees, where a female owl with a
fuzzy crown hoots pitifully, since her mate forgot where he hid
the fatless meat pieces he had picked.

May you live long without any disease!  May the large burial urn
never see your body!  Let your musician sing to you, my lord!
Let her see your famous, brave and healthy body.

Notes:  காணிலியர் – ஒளவை துரைசாமி உரை – வன்னி மன்றத்து விளங்கிய காட்டின்கண் தாழி காணிலியர் என கூட்டி வினைமுடிவு செய்க.

Meanings:  நிலம் புடைப்பு அன்ன – like hitting the earth, ஆர்ப்பொடு – with sounds, விசும்பு துடையூ – wiping the skies, வான் தோய் வெல் கொடி – sky high victory flags, தேர் மிசை நுடங்க – swaying on chariot top, பெரிய ஆயினும் – even if they are big, அமர் கடந்து பெற்ற – obtained from winning battles, அரிய என்னாது – not thinking that they are rare, ஓம்பாது – not keeping it for oneself, வீசி – give away, shower on others, கலம் செலச் சுரத்தல் அல்லது –  other than giving away precious jewels, கனவினும் – even in your dream, களைக என – give away, அறியாக் கசடு இல் நெஞ்சத்து – with a heart without fault, ஆடு நடை – victorious walk, அண்ணல் – O noble leader, நின் பாடுமகள் – your female musician, காணியர் – let her see, காணிலியரோ – let it not see – the burial ground (ஓகாரம் அசை நிலை, an expletive), நின் புகழ்ந்த யாக்கை – your famous body, முழுவலி துஞ்சு – great brave residing, with great bravery, நோய் தபு நோன் தொடை – strong body without disease, நுண் கொடி உழிஞை – delicate ulignai vine, balloon vine, Cardiospermum halicacabum, வெல் போர் – victory battle, அறுகை – Arukai (a chieftain), சேணன் ஆயினும் – even if he’s far away, கேள் என மொழிந்து – treated him like a relative, புலம் பெயர்ந்து – left his country, ஒளித்த – hid, களையாப் பூசற்கு – for the friction which could not be removed, அரண்கள் தாவுறீஇ – attacking his forts, weakening the strengths of the forts (சொல்லிசை அளபெடை), அணங்கு நிகழ்ந்தன்ன – like attacked by a god, மோகூர் மன்னன் – Mōkur king Pazhaiyan, முரசம் கொண்டு – seize his war drum, நெடுமொழி – his praise words, பணித்து – subdued, அவன் வேம்பு முதல் தடிந்து – chopped his neem tree trunk, முரசு செய முரச்சி – chopped them down to make drums, களிறு பல பூட்டி – tied many of his elephants, ஒழுகை உய்த்த – rode the carts, கொழு இல் பைந்துணி – fresh meat pieces without fat, வைத்தலை மறந்த – forget where it left, துய்த்தலைக் கூகை – soft headed owl, a fuzzy headed owl, கவலை கவற்றும் – cries out sadly, குராலம் – female owl, பறந்தலை – cremation grounds, முரசுடை – having drums, தாயத்து – with rights, அரசு பல ஓட்டி – vanquished a few kings, துளங்கு நீர் வியல் அகம் – moving vast waters surrounded world, ஆண்டு – rule, இனிது கழிந்த – sweetly passed, மன்னர் மறைத்த தாழி – huge burial urns (clay pots) in which kings are buried, வன்னி மன்றத்து – in the common areas with vanni trees, Prosopis spicigera, Indian mesquite, விளங்கிய காடே – bright forest (காடே – ஏகாரம் அசை நிலை, an expletive)

பதிற்றுப்பத்து 45, *ஊன் துவை அடிசில்*, பாடியவர்: பரணர், பாடப்பட்டவர்: கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

பொலம் பூந்தும்பைப் பொறி கிளர் தூணிப்
புற்று அடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின்,
நொசிவு உடை வில்லின் ஒசியா நெஞ்சின்,
களிறு எறிந்து முரிந்த கதுவாய் எஃகின்,
விழுமியோர் துவன்றிய அகன் கண் நாட்பின்,  5
எழு முடி மார்பின் எய்திய சேரல்!
குண்டு கண் அகழிய மதில் பல கடந்து,
பண்டும் பண்டும் தாம் உள் அழித்து உண்ட
நாடு கெழு தாயத்து நனந்தலை அருப்பத்துக்
கதவம் காக்கும் கணை எழு அன்ன,  10
நிலம் பெறு திணி தோள் உயர ஓச்சிப்,
பிணம் பிறங்கு அழுவத்துத் துணங்கை ஆடிச்,
சோறு வேறு என்னா *ஊன் துவை அடிசில்*
ஓடாப் பீடர் உள்வழி இறுத்து,
முள் இடுபு அறியா ஏணித் தெவ்வர்  15
சிலை விசை அடக்கிய மூரி வெண்தோல்
அனைய பண்பின் தானை மன்னர்
இனியார் உளரோ, நின் முன்னும் இல்லை
மழை கொளக் குறையாது புனல் புக நிறையாது,
விலங்கு வளி கடவும் துளங்கு இருங்கமஞ்சூல்,  20
வயங்கு மணி இமைப்பின் வேல் இடுபு,
முழங்கு திரைப் பனிக் கடல் மறுத்திசினோரே.

Pathitruppathu 45, Poet: Paranar, King: Kadal Pirakōttiya Chenguttuvan, Food Cooked with Meat

Oh king whose gold garland is made from melting down
crowns of seven kings you defeated in wars!
Your brave warriors with strong hearts wearing gold
thumpai garlands, carry bright quivers with arrows that
are like snakes hiding in termite mounds, tight curved
bows, and spears with tips that are blunted by attacking
ferocious bull elephants in huge battlefields.

You attacked again and again enemy fortresses that have
deep moats and many walls.  Your strong shoulders are
like the heavy wooden bars that reinforce fortress gates.
You entered their forts constructed to administer their
countries, and ruined everything inside.  Enemy corpses
were heaped after battles, you lifted your shoulders and
danced victory thunangai dances over and over again like
like in the past.

You dined in the company of your warriors, proud men
who did not run away from battles, feeding them
abundant meat and rice cooked together.

Your country has no thorn fences surrounding it for
protection.  Oh king with brave warriors with white
shields which stop volleys of sharp arrows, that fly from
enemy bows!

With your armies brandishing lances that glitter like bright gems,
you fought and won battles, unlike other kings who considered it
difficult, crossing the roaring, cold ocean with waves that sway in the
winds that are able to impede, an ocean that does not recede when
clouds absorb, or flood when flowing full rivers empty into it.

You are filled with virtuous traits, and there is nobody that
is as sweet as you.  There is none equal to you, even among
your ancestors.

Notes:  அருள் அம்பலவாணர் உரை – குட்டுவன் கடலிற் புக்கு ஒரு வினை செய்வது அரிது என்பதனை மறுத்து வேலை ஏற்றி நடப்பித்துக் கடலை அரணாகக் கொண்டு தீவொன்றில் வாழ்ந்த பகைவரொடு பொருதற்கு மேற்சென்றமைப் போல் பிற மன்னர் செல்லாமையின் ‘மன்னர் இனி யாருளரோ’ என்றார்.  மறுத்திசினோரே (22) – அருள் அம்பலவாணர் உரை – வினை செய்தல் அரிது என்பதை மறுத்தோர், ஒளவை துரைசாமி உரை – பகைவரை எதிர்த்து பொருதழித்த வேந்தர்.  கமம் – நிறைவு, கமம் நிறைந்தியலும் (தொல்காப்பியம். உரியியல் 57).  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).  துவன்று – துவன்று நிறைவு ஆகும் – (தொல்காப்பியம், உரியியல் 36).

Meanings:  பொலம் பூந்தும்பை – gold thumpai garland, Leucas aspera, பொறி கிளர் தூணி – bright quiver, quiver with markings, quiver with dots, புற்று அடங்கு அரவின் – like snakes in a termite mound (அரவின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), ஒடுங்கிய அம்பின் – with contained arrows, நொசிவு உடை வில்லின் – with curved bows, ஒசியா நெஞ்சின் – with an unafraid heart, களிறு எறிந்து – killing elephants, முரிந்த – broken, bent, கதுவாய் – ruined, எஃகின் – with spears, விழுமியோர் துவன்றிய – strong warriors fighting together, அகன் கண் நாட்பின் – in the wide battlefield, எழு முடி மார்பின் எய்திய சேரல் – O Chēran king who wears gold garland made from crowns of seven kings, குண்டு கண் அகழிய – with deep moats, மதில் பல கடந்து – attacked many forts, பண்டும் பண்டும் தாம் உள் அழித்து – again and again you went in and destroyed, உண்ட நாடு – seized lands, கெழு தாயத்து – with rights, நனந்தலை அருப்பத்து – in the wide spaces inside the difficult fort, கதவம் காக்கும் கணை எழு அன்ன – like the strong wooden beams that protect, நிலம் பெறு – win and seize land, திணிதோள் உயர – strong shoulders lifted, ஓச்சி – attacked, பிணம் பிறங்கு அழுவத்து – in the battlefield with heaps of corpses, துணங்கை ஆடி – perform thunangai dances, சோறு வேறு என்னா – unable to separate, ஊன் துவை அடிசில் – meat mixed rice, ஓடாப் பீடர் – proud men who did not run away (from battle), உள்வழி –  inside, இறுத்து – stayed, முள் இடுபு அறியா – does not know thorn fences, ஏணி – borders, தெவ்வர் – enemies, சிலை விசை அடக்கிய – controlled the rapid arrows sent by bows, மூரி வெண்தோல் – strong new/white shields, அனைய பண்பின் – all these traits, தானை மன்னர் – kings with armies, இனியார் உளரோ – is there anybody sweeter than you, நின் முன்னும் இல்லை – there is nobody before you, மழை கொளக் குறையாது – the waters don’t go down since the clouds drank, புனல் புக நிறையாது – does not fill up because of the flowing rivers, does not flood because of the flowing rivers, விலங்கு வளி கடவும் – blocking winds gathering (கடவும் – திரட்டும்), துளங்கு – moving, இருங்கமஞ்சூல் – big full  (ocean), வயங்கு மணி இமைப்பின் – glittering like bright gems (இமைப்பின் – இமைப்பது போன்று, இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), வேல் இடுபு – attacking with spears, முழங்கு திரை – roaring waves, பனிக்கடல் – cold ocean, மறுத்திசினோரே – those who denied (ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 46, *கரைவாய்ப் பருதி*, பாடியவர்: பரணர், பாடப்பட்டவர்: கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

இழையர், குழையர், நறுந்தண் மாலையர்,
சுடர் நிமிர் அவிர் தொடி செறித்த முன் கைத்,
திறல் விடு திரு மணி இலங்கு மார்பின்,
வண்டுபடு கூந்தல் முடி புனை மகளிர்
தொடைபடு பேரியாழ் பாலை பண்ணிப்,  5
பணியா மரபின் உழிஞை பாட,
இனிது புறந்தந்து அவர்க்கு இன் மகிழ் சுரத்தலின்,
சுரம்பல கடவும் *கரைவாய்ப் பருதி*
ஊர்பாட்டு எண் இல் பைந்தலை துமியப்,
பல் செருக் கடந்த கொல் களிற்று யானைக்  10
கோடு நரல் பெளவம் கலங்க வேல் இட்டு
உடை திரைப் பரப்பில் படுகடல் ஓட்டிய
வெல் புகழ்க் குட்டுவன் கண்டோர்
செல்குவம் என்னார், பாடுபு பெயர்ந்தே.

Pathitruppathu 46, Poet: Paranar, King: Kadal Pirakōttiya Chenguttuvan, Wheel Rims

Female musicians with beautiful jewels, elegant breasts,
dangling earrings, bright bracelets on their forearms,
donning flower garlands studded with glittering beautiful
gems, and braided fragrant hair swarmed by bees, strum
their large lutes and sing sweetly his praise in pālai tunes
of the times when he laid siege to enemy lands, and how he
was generous to them with gifts and smiles which brought
them happiness.

They sing about his arrogant, murderous elephants that
wreaked havoc in battles, and how countless enemy heads
rolled in dust, as his advancing chariots that have crossed
many wastelands, crushed them with their wheel rims.

He sails his ships, splashing in the roaring vast ocean with
blaring conch shells, to battle, and vanquishes his enemies
with his army with spears, the famous Kuttuvan.

Those who have sang to the victorious king and received gifts,
will not leave him to move away.

Notes:  கரைவாய் (8) – அருள் அம்பலவாணர் உரை – விளிம்பாகிய வாய், ஒளவை துரைசாமி உரை – கறை கரை என வந்தது.

Meanings:  இழையர் – those wearing jewels, குழையர் – those wearing ear ornaments, நறும் தண் மாலையர் – those wearing fragrant cool garlands, சுடர் நிமிர் – very bright, அவிர் தொடி செறித்த முன் கை – bright bangle wearing arms, திறல் விடு – emitting dazzling, திரு மணி – beautiful gems, இலங்கு மார்பின் – with flourishing breasts, வண்டுபடு கூந்தல் – bee swarming hair, முடி புனை – braided hair, knotted hair, மகளிர் – women, தொடைபடு – strings made of nerves, பேரியாழ் – big lute, பாலை பண்ணி – played in the pālai tune, பணியா மரபின் – with the tradition of not being submissive, உழிஞை பாட – singing about siege skills, இனிது புறந்தந்து – caring for them sweetly, அவர்க்கு இன் மகிழ் சுரத்தலின் – since  he gave them gifts causing sweet happiness, சுரம் பல – a few wastelands (battlefields), கடவும் – passing, கரை வாய் – rims that are edges of wheels, blood stained rims, பருதி – wheels (of the chariots), ஊர்பாட்டு – as they are moving, எண் இல் – countless , பைந்தலை துமிய – their fresh heads cut off, பல் செருக் கடந்த – won many battles, கொல் களிற்று யானை – killing (enemies) elephants, கோடு – சங்கு, conch shell, நரல் – loud noise, பெளவம் – splitting, flourishing, கலங்க – splash, வேல் இட்டு – hurt with spears (go to battle), உடை திரை – breaking waves, பரப்பில் – in the wide ocean, படுகடல் ஓட்டிய – sailed in the loud ocean, வெல்புகழ்க் குட்டுவன் – Kuttuvan with fame and success, கண்டோர் – those who saw him, செல்குவம் என்னார் – they will not say ‘let us go’, பாடுபு பெயர்ந்தே – to go and sing leaving this place (பெயர்ந்தே – ஏகாரம் அசை நிலை, an expletive)

பதிற்றுப்பத்து 47, * நன்னுதல் விறலியர்*, பாடியவர்: பரணர், பாடப்பட்டவர்: கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

அட்டு ஆனானே குட்டுவன்; அடுதொறும்
பெற்று ஆனாரே பரிசிலர் களிறே;
வரை மிசை இழிதரும் அருவியின் மாடத்து
வளி முனை அவிர்வரும் கொடி நுடங்கு தெருவில்,
சொரி சுரை கவரும் நெய் வழிபு உராலின்,  5
பாண்டில் விளக்குப் பரூஅச்சுடர் அழல,
*நன்னுதல் விறலியர்* ஆடும்
தொல் நகர் வரைப்பின் அவன் உரை ஆனாவே.

Pathitruppathu 47, Poet: Paranar, King: Kadal Pirakōttiya Chenguttuvan, Dancers with Fine Brows

Kuttuvan is not satisfied with killing his enemies in all the
battles he wages.  He gives bull elephants to those who come
to him.  Those who received elephants from him, sing about
him constantly, praising his battle victories.

His fame is sung endlessly in the ancient town where bright
flags on the roofs of tall houses sway in the wind and drape
down like waterfalls flowing from peaks, and on the streets,
dancers with fine foreheads perform in the glowing light
of thick-wicked, pāndil lamps with wells overflowing with
oil.

Notes:  Viralis were female artists who danced and sang.  நெய் வழிபு உராலின் (5) – அருள் அம்பலவாணர் உரை – நெய் வழிந்து பரவுவதால், ஒளவை துரைசாமி உரை – நெய் வழியுமாறு பெய்து நிரப்புவதால்.

Meanings:  அட்டு ஆனானே குட்டுவன் – Kuttuvan is not satisfied with killing enemies (ஆனானே – ஏகாரம் – அசைநிலை, an expletive), அடுதொறும் – in every battle he wages, பெற்று ஆனாரே – received from him and not stopping with that (ஆனாரே – ஏகாரம் – அசைநிலை, an expletive), received from him and not satisfied with that பரிசிலர் – those who seek gifts, களிறே – male elephants (ஏகாரம் – அசைநிலை, an expletive), வரை மிசை – mountain top, இழிதரும் – flowing down, அருவியின் – like the waterfalls (இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), மாடத்து – on the tall houses, வளி முனை – moved by breeze, அவிர்வரும் – bright, கொடி நுடங்கு தெருவில் – on the streets with swaying flags, சொரி – pouring, சுரை – oil wells, கவரும் – that accepted, that took, நெய் வழிபு உராலின் – since they fill with oil that overflows and spreads, பாண்டில் விளக்கு – lamps with many legs, round lamp, பரூஅச்சுடர் அழல – big wick glows, நன்னுதல் விறலியர் – female artists (who sing and dance) with fine foreheads, ஆடும் – dance, தொல் நகர் வரைப்பின் – within the limits of the ancient town, அவன் உரை ஆனாவே – verses praising him are endless (ஆனாவே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 48, *பேர் எழில் வாழ்க்கை*, பாடியவர்: பரணர், பாடப்பட்டவர்: கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், துறை: இயன்மொழி வாழ்த்து, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

பைம்பொன் தாமரை பாணர்ச் சூட்டி,
ஒண்ணுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டிக்,
கெடல் அரும் பல் புகழ் நிலைஇ நீர் புக்குக்,
கடலொடு உழந்த பனித் துறைப் பரதவ!
‘ஆண்டு நீர்ப் பெற்ற தாரம் ஈண்டு இவர்  5
கொள்ளாப் பாடற்கு எளிதினின் ஈயும்
கல்லா வாய்மையன் இவன்’ எனத் தத்தம்
கைவல் இளையர் நேர் கை நிரைப்ப,
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை,
முனை சுடு கனை எரி எரித்தலின், பெரிதும்  10
இகழ் கவின் அழிந்த மாலையொடு சாந்து புலர்
பல் பொறி மார்ப நின் பெயர் வாழியரோ!
நின் மலைப் பிறந்து நின் கடல் மண்டும்
மலி புனல் நிகழ்தரும் தீ நீர் விழவின்,
பொழில் வதி வேனில் *பேர் எழில் வாழ்க்கை* , 15
மேவரு சுற்றமோடு உண்டு இனிது நுகரும்,
தீம் புனல் ஆயம் ஆடும்,
காஞ்சி அம் பெருந்துறை மணலினும் பலவே.

Pathitruppathu 48, Poet: Paranar, King: Kadal Pirakōttiya Chenguttuvan, Very Beautiful Life

Oh Lord of the ocean with cold shores!  You gave new
gold lotuses to bards and gold garlands to dancers with
gleaming brows.  You entered waters and battled at sea,
seized enemy wealth and achieved great fame difficult
to ruin.

You shared easily the wealth that you seized from the sea
with talented young musicians, who sang to you not
containing the songs within themselves, knowing that you
were an honest man.

You are humble and tender to your friends, but show
unbending manliness to enemies.  You burned their land
with intense fires that singed the flower garlands hanging
on your chest smeared with sandal paste.

Born in your mountains and ending in your ocean,
the Kānchi river flows with abundance.  May your name
flourish for many years, more than the sand in the big ports
of the Kānchi river where you celebrate summer festivals
in the groves, playing in the sweet waters with your desirable
relatives, eating fine food and enjoying life!

Notes:  காஞ்சி அம் பெருந்துறை (18) – ஒளவை துரைசாமி உரை – காஞ்சி என்னும் ஆற்றின் பெருந்துறை, அருள் அம்பலவாணர் உரை – காஞ்சி மரங்களையுடைய பெரிய துறை.  சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம்,  உரியியல் 29).

Meanings:  பைம்பொன் தாமரை பாணர்ச் சூட்டி – giving new gold lotus blossoms to bards, ஒண்ணுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டி – giving gold garlands to  bright-foreheaded female artists who sang and danced, கெடல் அரும் – difficult to ruin, பல் புகழ் நிலைஇ – established fame (நிலைஇ – சொல்லிசை அளபெடை), நீர் புக்கு – entering the waters, கடலொடு உழந்த – battled at sea with enemies (கடலொடு – கடற் பகைவருடன்), பனித்துறைப் பரதவ – Oh lord of the cold seas, ஆண்டு நீர்ப் பெற்ற – seized from the enemies in the sea, தாரம் – wealth, ஈண்டு இவர் – bringing it here, கொள்ளாப் பாடற்கு – for the songs that are not kept within themselves, எளிதினின் ஈயும் – giving easily, கல்லா வாய்மையன் – he is a honest person who has not learned to keep anything for himself, இவன் – him, என – thus, தத்தம் – their, கைவல் இளையர் – skilled young musicians (கைவல் – தொழிலில் திறமை மிக்க) , நேர் கை நிரைப்ப – filled their similar hands, வணங்கிய சாயல் – humble and delicate nature, வணங்கா ஆண்மை – unbending manliness, முனை சுடு – burning in the battlefronts, கனை எரி எரித்தலின் – due to the intense fires, பெரிதும் – greatly, a lot, இகழ் கவின் அழிந்த மாலையொடு – with garland that has faded petals, சாந்து புலர் – dried sandal paste, பல் பொறி மார்ப – Oh lord with a chest with many spots, நின் பெயர் வாழியரோ – may your name live forever (ஓகாரம் அசைநிலை, an expletive), நின் மலைப் பிறந்து நின் கடல் மண்டும் – born in your mountains and ends in your ocean, மலி புனல் – full of water, நிகழ்தரும் தீ நீர் விழவின் – in the sweet water festivals that happen, பொழில் வதி வேனில் – staying in the groves and celebrating summer festival, பேர் எழில் வாழ்க்கை – very beautiful life, மேவரு சுற்றமோடு – with desirable relatives, உண்டு இனிது நுகரும் – eating and enjoying, தீம் புனல் – sweet water, ஆயம் ஆடும் – playing with relatives and friends, காஞ்சி அம் பெருந்துறை – the big port of the kānchi river, big beautiful port with kānchi trees, பூவரச மரம், portia tree, Thespesia populnea, மணலினும் பலவே – more than the sands (பலவே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 49, *செங்கை மறவர்*, பாடியவர்: பரணர், பாடப்பட்டவர்: கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், துறை: விறலியாற்றுப்படை, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

யாமும் சேறுகம், நீயிரும் வம்மின்,
துயிலுங் கோதைத் துளங்கு இயல் விறலியர்!
கொளை வல் வாழ்க்கை நும் கிளை இனிது உணீஇயர்,
களிறு பரந்து இயலக் கடுமா தாங்க,
ஒளிறு கொடி நுடங்கத் தேர் திரிந்து கொட்ப,  5
எஃகு துரந்து எழுதரும் கை கவர் கடுந்தார்
வெல்போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து,
மொய் வளம் செருக்கி மொசிந்துவரு மோகூர்
வலம்படு குழூஉ நிலை அதிர மண்டி,
நெய்த்தோர் தொட்ட *செங்கை மறவர்*  10
நிறம்படு குருதி நிலம் படர்ந்து ஓடி,
மழை நாள் புனலின் அவல் பரந்து ஒழுகப்,
படுபிணம் பிறங்கப் பாழ் பல செய்து,
படுகண் முரசம் நடுவண் சிலைப்ப,
வளன் அற நிகழ்ந்து வாழுநர் பலர் படக்,  15
கருஞ்சினை விறல் வேம்பு அறுத்த
பெருஞ்சினக் குட்டுவன் கண்டனம் வரற்கே.

Pathitruppathu 49, Poet: Paranar, King: Kadal Pirakōttiya Chenguttuvan, Warriors with Red Hands

Oh viralis donning swaying garlands!  Join us.  We are
going to see the king.  The livelihood of you and your relatives
comes through music, and you can eat well if you go with us
and receive gifts from him.

He won many battles with his elephant and horse brigades,
warriors wielding spears, fast whirling chariots, and foot soldiers
marching on both sides.  He attacked the joint armies of the
Chōzhas, Pāndiyars, and kings of small regions along with the
arrogant king Pazhaiyan of Mōkur, causing them to tremble.

King Chenguttuvan fought valiantly, his armies attacking hostile
armies, as blood flowed and dead bodies heaped in the battlefield,
his victory drums roaring in the middle.  Warriors had bloody
hands.  Blood from chest wounds flowed on the land running and
filling pits, like muddied streams after rains.

King Chenguttuvan with his battle drums with roaring eyes,
cut down with rage his enemy’s strong, sacred neem tree with black
branches.  Let us go and see the king in rage.

Notes:  Viralis were female artists who danced and sang.  They traveled with the bards, and were usually members of the bard’s family.  In the long song Sirupānatruppadai, the virali is the wife of the bard.  நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர் (10) – ஒளவை துரைசாமி உரை – பகைவர் மார்பிற் செலுத்தி அழுத்திய படையினைப் பறித்ததால் வழியும் குருதி படிந்த சிவந்த கையினையுடைய மறவர் எனப் பழையனுடைய வீரரது மாண்பு தெரித்தற்கு ‘நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர்’ என்றார்.

Meanings:  யாமும் சேறுகம் – we are going to join others,  நீயிரும் வம்மின் – you also come (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), துயிலுங் கோதை – swaying garlands, துளங்கு இயல் விறலியர் – O female artists who dance,  கொளை வல் வாழ்க்கை – rich life lived with music, நும் கிளை – your relatives, இனிது உணீஇயர் – may they eat well (உணீஇயர் – சொல்லிசை அளபெடை), களிறு பரந்து இயல – elephants ran and spread, கடு மா தாங்க – fast horses carrying soldiers, ஒளிறு கொடி நுடங்கத் தேர் – chariot with bright flags, திரிந்து கொட்ப – roaming and whirling, எஃகு துரந்து எழுதரும் – with warriors with spears rushing, கை கவர் கடுந்தார் – fierce foot soldiers on the sides, வெல்போர் வேந்தரும் – kings who won battles, வேளிரும் – small-region kings, ஒன்றுமொழிந்து – joined together, மொய் வளம் – great strength, செருக்கி – arrogant, மொசிந்துவரு – united, மோகூர் – Mokur king Pazhaiyan, வலம்படு – victorious, குழூஉநிலை – group (குழூஉ – இன்னிசை அளபெடை), அதிர மண்டி – attacking causing enemies to tremble, நெய்த்தோர் தொட்ட – blood stained due to stabbing and removing spears, செங்கை மறவர் – warriors with red hands, நிறம்படு குருதி நிலம் படர்ந்து ஓடி – blood from chests of warriors ran and flowed on the land, மழை நாள் புனலின் – like the muddy stream after the rains (புனலின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), அவல் பரந்து ஒழுக – running toward pits, படுபிணம் பிறங்க – heap dead bodies, பாழ் பல செய்து – ruined in many ways, படுகண் முரசம் – drums with roaring eyes, நடுவண் – in between, in the middle, சிலைப்ப – roared, வளன் அற – wealth ruined (வளனே – வளன் வளம் என்பதன் போலி, ஏகாரம் அசைநிலை, an expletive), நிகழ்ந்து வாழுநர் பலர் பட – many dying without living, கருஞ்சினை – black branches, விறல் வேம்பு – lovely neem, அறுத்த – cut, பெருஞ்சினக் குட்டுவன் – very angry king Kuttuvan, கண்டனம் வரற்கே – let’s go and see him (வரற்கே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 50, *வெருவரு புனல் தார்*, பாடியவர்: பரணர், பாடப்பட்டவர்: கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், துறை: வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்

மா மலை முழக்கின் மான் கணம் பனிப்பக்,
கால் மயங்கு கதழ் உறை ஆலியொடு சிதறிக்,
கரும்பு அமல் கழனிய நாடு வளம் பொழிய,
வளங்கெழு சிறப்பின் உலகம் புரைஇச்,
செங்குணக்கு ஒழுகும் கலுழி மலிர் நிறைக்  5
காவிரி அன்றியும் பூவிரி புனலொரு
மூன்றுடன் கூடிய கூடல் அனையை!
கொல் களிற்று உரவுத் திரை பிறழ, வல் வில் பிசிரப்,
புரை தோல் வரைப்பின் எஃகு மீன் அவிர்வர
விரவுப் பணை முழங்கு ஒலி, வெரீஇய வேந்தர்க்கு  10
அரணம் ஆகிய, *வெருவரு புனல் தார்*
கல் மிசையவ்வும், கடலவும் பிறவும்
அருப்பம் அமைஇய அமர் கடந்து, உருத்த
ஆள் மலி மருங்கின் நாடு அகப்படுத்து,
நல் இசை நனந்தலை இரிய, ஒன்னார்  15
உருப்பு அற நிரப்பினை; ஆதலின், சாந்து புலர்பு
வண்ணம் நீவி வகை வனப்புற்ற,
வரி ஞிமிறு இமிரும் மார்பு பிணி மகளிர்
விரிமென் கூந்தல் மெல் அணை வதிந்து,
கொல் பிணி திருகிய மார்பு கவர் முயக்கத்துப்,  20
பொழுது கொள் மரபின் மென்பிணி அவிழ,
எவன் பல கழியுமோ பெரும, பல் நாள்
பகை வெம்மையின் பாசறை மரீஇப்,
பாடு அரிது இயைந்த சிறு துயில் இயலாது,
கோடு முழங்கு இமிழ் இசை எடுப்பும்  25
பீடு கெழு செல்வம் மரீஇய கண்ணே?

Pathitruppathu 50, Poet: Paranar, King: Kadal Pirakōttiya Chenguttuvan, Fierce Flood of Foot Soldiers

Clouds rumble in the lofty mountains, trembling deer
herds run for cover, and heavy downpour mixed with winds
and hailstones fall from the skies.

For the lands with dense sugarcane fields to prosper,
and this rich world to be protected, River Kaviri flows to the
east with its heavily overflowing muddy waters.
Two flower-filled rivers join Kāviri, the confluence of the three
is like you, the rushing strong splashing waves are like your
murderous elephants, their loud roars like those of your battle
drums, their sprays like your warriors with bows, darting
schools of bright fish like your soldiers brandishing shining
spears and shields, and fierce floods are like foot soldiers
who instill terror in enemy kings.

You assaulted enemy forts and fought battles in mountains,
seas and in many other places, seized enemy lands, ruined the
fame of kings, and ended their fire-like rage.

In your palace, your women with soft, spreading hair on which
striped bees swarm, rest their heads on your chest with dried
sandal paste, removing their decorations with color, as you lie
with them on your soft bed.

With intense desire in your heart, you spend the night in the
tradition of love, embracing them close to your chest, until the
early morning hours arrive.

In battle camps in your hated enemy lands where you desire
proud wealth, consumed with anger, and with thundering drums
and roaring conch shells in the background, your eyes that are
set on obtaining wealth from enemies are unable to get
small naps.  How long before you get sweet small naps, oh lord?

Notes:  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).  மென்பிணி அவிழ (21) – அருள் அம்பலவாணர் உரை – சிறு துயில் நீங்குவதற்கு, ஒளவை துரைசாமி உரை – சிறு துயில் பெறாது ஒழிய, மென்பிணி என்றது புணர்ச்சியவதிக்கண் அப்புணர்ச்சி அவலையான் வந்த சிறு துயிலை.

Meanings:  மா மலை முழக்கின் – due to the rumbling clouds on the tall mountains, மான் கணம் பனிப்ப – deer herds fear and tremble, கால் மயங்கு – breeze mixed, கதழ் உறை – rapidly falling rain, ஆலியொடு சிதறி – scattered with hailstones, கரும்பு அமல் கழனிய நாடு – country with sugarcane filled fields (அமல் – செறிந்த) , வளம் பொழிய – to become prosperous, வளம் கெழு சிறப்பின் உலகம் – prosperity-filled splendid world, புரைஇ – protecting (சொல்லிசை அளபெடை), செங்குணக்கு ஒழுகும் – straight eastward flowing, கலுழி மலிர் நிறை – muddied and full, turbid and full, காவிரி அன்றியும் – not just the Kaviri, பூவிரி புனலொரு – rivers with flowers, Porunai and Kudavan, மூன்றுடன் கூடிய கூடல் அனையை – like where three rivers join, கொல் களிற்று – murderous elephants, உரவுத்திரை பிறழ – strong waves roll, moving waves roll, வல் வில் பிசிர – sprays are like strong bowed warriors, புரை தோல் வரைப்பின் – on the lifted shield edges, எஃகு மீன் அவிர்வர – warriors with bright fish-like lances, விரவு பணை முழங்கு ஒலி – mixed drum sounds of large panai drums, வெரீஇய வேந்தர்க்கு – to the kings who were afraid (வெரீஇய – சொல்லிசை அளபெடை), அரணம் ஆகிய – as protection, வெருவரு புனல் – scary flood waters – foot soldiers, தார் – foot soldiers, கல் மிசையவ்வும் – from mountains, கடலவும் பிறவும் – in the oceans and other places, அருப்பம் அமைஇய – with fortresses (சொல்லிசை அளபெடை), அமர் கடந்து – won in battles, உருத்த – harsh, ஆள் மலி மருங்கின் – in places filled with soldiers, நாடு அகப்படுத்து – seizing countries, நல் இசை நனந்தலை இரிய – ruining good fame in this wide world, ஒன்னார் – enemies, உருப்பு அற நிரப்பினை – you controlled their fire-like rage, ஆதலின் – so, சாந்து புலர்பு – sandalwood paste dried, வண்ணம் நீவி – removed other colorful decorations, வகை வனப்புற்ற – with many beautiful, வரி ஞிமிறு இமிரும் – striped honeybees hum, மார்பு பிணி மகளிர் – women lying on your chest, விரி மென் கூந்தல் – spread soft hair, மெல் அணை வதிந்து – lying on a soft bed, கொல் பிணி – with intense desire, திருகிய மார்பு கவர் முயக்கத்து – with embracing tightly pressing breasts, பொழுது கொள் மரபின் – in the tradition of using the nights, மென்பிணி அவிழ – light sleep to go away, எவன் பல கழியுமோ – how will it pass, பெரும – lord, பல் நாள் – many days, பகை வெம்மையின் – due to the enemy hatred, பாசறை – battle camp, மரீஇ – staying (சொல்லிசை அளபெடை), பாடு அரிது இயைந்த – rare to sleep, சிறு துயில் – nap a little, இயலாது – unable to do that, கோடு முழங்கு – conch shells roaring, இமிழ் இசை – loud sounds, எடுப்பும் – they rise up,they wake you up, பீடு கெழு செல்வம் மரீஇய கண்ணே – eyes that are set on the proud wealth (மரீஇய – சொல்லிசை அளபெடை, கண்ணே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிகம்
வடவர் உட்கும் வான் தோய் வெல் கொடிக்
குடவர் கோமான் நெடுஞ்சேரலாதற்குச்
சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்,
கடவுள் பத்தினிக் கற்கோள் வேண்டிக்
கான் நவில் கானம் கணையின் போகி,  5
ஆரிய அண்ணலை வீட்டிப் பேரிசை
இன் பல் அருவிக் கங்கை மண்ணி,
இனம் தெரி பல் ஆன் கன்றொடு கொண்டு,
மாறா வல் வில் இடும்பின் புறத்து இறுத்து,
உறு புலி அன்ன வயவர் வீழச்  10
சிறு குரல் நெய்தல் வியலூர் நூறி,
அக்கரை நண்ணிக் கொடுகூர் எறிந்து
பழையன் காக்கும் கருஞ்சினை வேம்பின்
முழாரை முழு முதல் துமியப் பண்ணி,
வால் இழை கழித்த நறும் பல் பெண்டிர் 15
பல் இருங்கூந்தல் முரற்சியால்
குஞ்சர ஒழுகை பூட்டி, வெந்திறல்
ஆராச் செருவின் சோழர் குடிக்கு உரியோர்
ஒன்பதின்மர் வீழ, வாயில் புறத்து இறுத்து,
நிலைச் செருவின் ஆற்றலை அறுத்துக்  20
கெடல் அருந் தானையொடு,
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைக் கரணம் அமைந்த,
காசறு செய்யுட் பரணர் பாடினார் பத்துப்பாட்டு.

Epilog
To King Nedunchēralāthan with victorious flags who
northerners feared, and his queen, the daughter of Chōzhan
Manakkilli, he was born as a son.

He defeated a noble Aryan king of great renown, to get
a stone to make Pathini Goddess a statue, going rapily like
an arrow going through a windy forest, washed it in the
Ganges whose waters come from many sweet waterfalls,
and seized and brought many fine breeds of cattle herds
with calves.

He camped in Idumpil with his warriors carrying mighty
bows, killed his enemies with the strength of a tiger, ruined
Viyalur with clusters of blue waterlilies, ruined Kodukur on
the other side.  He chopped Pazhaiyan’s black-branched,
protected sacred neem tree, its thick trunk like a drum,
brought home the lumber in elephant wagons, using ropes
made from the fragrant, thick, black hair of Pazhaiyan’s women
donned with fine jewels.

He fought wars with bravery and ruined the nine who laid
claim to the Chozha Empire.  He camped at Nērivāyil and
its leader in a harsh battle, with the help of his brave
warriors.

He is King Kadal Pirakōttiya Chenguttuvan and these ten
songs are sung by Kāsaru Seyyul Paranar.

Meanings:  வடவர் உட்கும் – northerners are afraid, வான் தோய் – sky high, வெல் கொடி – victorious flags, குடவர் கோமான் – king of Kudaku country, நெடுஞ்சேரலாதற்கு – to King Nedunchēralāthan, சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன் – son given birth by the daughter of Chōzhan Manakilli, கடவுள் பத்தினி – for the Pathini goddess, கற்கோள் வேண்டி to get stone for a statue, கான் நவில் கானம் – forest with groves, கணையின் போகி – went like an arrow, ஆரிய அண்ணலை வீட்டி – he won over an Aryan king, பேரிசை – great fame, இன் பல் – many sweet, அருவி – waterfalls, கங்கை – Ganges, மண்ணி – went to its source, இனம் தெரி பல்ஆன் – many cattle herds, கன்றொடு கொண்டு – brought them with calves, மாறா வல் வில் – unchanging strong bow, இடும்பின் புறத்து – went near Idumpu, இறுத்து – camped, உறு புலி அன்ன – like a strong tiger, like a tiger with enmity, வயவர் வீழ – warriors to fall, சிறு குரல் நெய்தல் – small clusters of waterlilies, வியலூர் நூறி – ruined Viyalur, அக்கரை நண்ணி – went on the other side, கொடுகூர் எறிந்து – ruined Kodukur, பழையன் காக்கும் – protected by Pazhaiyan, கருஞ் சினை வேம்பின் – neem tree with black branches, முழாரை – trunk like a drum, முழு முதல் துமியப் பண்ணி – chopped the thick trunk, வால் இழை – pure jewels, கழித்த நறும் பல் பெண்டிர் – women who removed them, பல் இருங்கூந்தல் – thick black hair, முரற்சியால் – with ropes, குஞ்சர ஒழுகை பூட்டி – tied elephants to carts, வெந்திறல் – strength and efficiency, ஆராச் செருவின் – with unabated wars, சோழர் குடிக்கு உரியோர் ஒன்பதின்மர் – nine who lay claim to the Chozha empire, வீழ – to fall, வாயில் புறத்து இறுத்து – stayed at Nērivāyil, நிலைச்செருவின் ஆற்றலை அறுத்து – killed their leader in a harsh battle, கெடல் அருந் தானையொடு – with his warriors who are difficult to ruin, கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைக் கரணம் அமைந்த காசறு செய்யுட் பரணர் பாடினார் பத்துப்பாட்டு – Kasaru Seyyul Paranar wrote ten songs for Kadal Pirkōttiya Chenguttuvan

பதிற்றுப்பத்து 51, *வடு அடு நுண் அயிர்*, பாடியவர்: காக்கை பாடினியார் நச்செள்ளையார், பாடப்பட்டவர்: சேர மன்னன் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன், துறை: வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும், வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்

துளங்கு நீர் வியல் அகம் கலங்கக் கால் பொர,
விளங்கு இரும் புணரி உருமென முழங்கும்
கடல் சேர் கானல் குட புலம் முன்னிக்,
கூவல் துழந்த தடந்தாள் நாரை
குவி இணர் ஞாழல் மாச் சினைச் சேக்கும்,  5
வண்டு இறை கொண்ட தண் கடல் பரப்பின்
அடும்பு அமல் அடைகரை அலவன் ஆடிய
*வடு அடு நுண் அயிர்* ஊதை உஞற்றும்,
தூ இரும் போந்தைப் பொழில் அணிப் பொலிதந்து,
இயலினள் ஒல்கினள் ஆடும் மட மகள்  10
வெறி உறு நுடக்கம் போலத் தோன்றிப்,
பெருமலை வயின்வயின் விலங்கும் அரு மணி
அர வழங்கும் பெரும் தெய்வத்து,
வளை ஞரலும் பனிப் பெளவத்துக்
குண குட கடலோடு ஆயிடை மணந்த  15
பந்தர் அந்தரம் வேய்ந்து,
வண் பிணி அவிழ்ந்த கண் போல் நெய்தல்
நனை உறு நறவின் நாகுடன் கமழச்,
சுடர் நுதல் மட நோக்கின்
வாள் நகை, இலங்கு எயிற்று,  20
அமிழ்து பொதி துவர் வாய் அசை நடை விறலியர்
பாடல் சான்று நீடினை உறைதலின்,
வெள் வேல் அண்ணல் மெல்லியன் போன்ம் என
உள்ளுவர் கொல்லோ, நின் உணராதோரே?
மழை தவழும் பெருங்குன்றத்துச்,  25
செயிர் உடைய அரவு எறிந்து
கடுஞ்சினத்த மிடல் தபுக்கும்
பெரும் சினப் புயல் ஏறு அனையை;
தாங்குநர் தடக்கை யானைத் தொடிக்கோடு துமிக்கும்
எஃகு உடை வலத்தர் நின் படைவழி வாழ்நர்;  30
மறங் கெழு போந்தை வெண்தோடு புனைந்து,
நிறம் பெயர் கண்ணிப் பருந்து ஊறு அளப்பத்,
தூக்கணை கிழித்த மாக் கண் தண்ணுமை
கைவல் இளையர் கையலை அழுங்க,
மாற்று அருஞ்சீற்றத்து மா இருங்கூற்றம்  35
வலை விரித்தன்ன நோக்கலை,
கடியையால் நெடுந்தகை செருவத்தானே.

Pathitruppathu 51, Poet: Kākkai Pādiniyār Nachellaiyār, King: Chēran Ādukōt Pāttu Chēralāthan, Erased Footprints on Fine Sand

Fierce winds blow and churn the cool ocean, muddying its
waters, as bright, big waves roll  with roaring thunder sounds.
On the shore, a big-footed pelican searches for fish in the
brackish water-filled pits, and moves away toward the shoreline
grove in the west, resting on a big branch of a cassia tree with
pointed clusters of flowers swarmed by honeybees.

Adumpu creepers have spread densely, hugging the ground
along the cool seashore, where crabs play in the fine sand as
blowing cold winds erase their footprints, in the pure, huge
palmyra grove where your highness is sitting in splendor.

In the pavilion you are seated with wise men and others who
live between the cold western, eastern and southern oceans,
on shores where conch shells blare, and in the huge, blocking
mountains of great gods where snakes bearing gems slither like
a woman performing veriyāttam dances.  The ceiling is decorated
with honey-filled naravam and punnai flowers, both fragrant,
along with blossomed blue waterlilies looking like pretty eyes.

You are there to listen to the pretty musician with a bright
forehead, fine teeth, bright smile, nectar-filled red mouth and
gentle swaying walk. Will people think that you, a noble king
a shining sword, are a weak man who is easy to conquer?

You are like the raging thunder that roars, killing poisonous
snakes on cloud-covered mountains.  You have brave warriors
who attack enemy elephants with massive trunks and chop
off their ornamented tusks with swords.

Great King! You are magnificent in battles!  In your battlefield,
palm garlands worn by warriors, made with tender white fronds,
are stained with blood, and kites descend on them thinking they
are flesh.  Attacking arrows tear the huge eyes of thannumai
drums beat by youngsters, and your wrath-filled looks toward
your enemies that causes them fear in that battlefield, are like
those of Kootruvan whose rage cannot be changed when he
spreads his net to seize lives.

Notes:  Viralis were female artists who danced and sang.  They traveled with the bards, and were usually members of the bard’s family.  In the long song Sirupānatruppadai, the virali is the wife of the bard.  தெய்வத்து (13), பெளவத்து (14) – ஒளவை துரைசாமி உரை – தெய்வத்து, பெளவத்து என்புழி நின்ற அத்துச்சாரியை.  கட்டுரைச் சுவை பயந்து நின்றன.  வளை ஞரலும் பனிப் பெளவத்து (14) – ஒளவை துரைசாமி உரை – சங்கு முழங்கும் குளிர்ந்த தென்கடலும், அருள் அம்பலவாணர் உரை – சங்குகள் முழங்கும் குளிர்ச்சியடைய கடலும்.  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

Meanings:  துளங்கு நீர் வியல் அகம் – moving vast ocean, கலங்க – muddied, கால் பொர – due to the attacking wind, விளங்கு இரும் புணரி – bright big waves, splendid big waves, உருமென முழங்கும் – roar loudly, கடல் சேர் கானல் – seashore groves, குட புலம் முன்னி – going toward the west, கூவல் – pits (with brackish water), துழந்த – searching (for fish), தடந்தாள் நாரை – big-footed pelican, குவி இணர் ஞாழல் – pointed clusters  of gnālal trees, புலிநகக்கொன்றை, Cassia sophera, Tigerclaw tree, மாச்சினைச் சேக்கும் – in the big branches, வண்டு இறை கொண்ட – bees swarm, தண் கடல் பரப்பின் – in the cool ocean, அடும்பு அமல் – thickly grown adumpu creepers (அமல் – செறிந்த), அடைகரை – seashore, shore with sand, அலவன் ஆடிய – crabs played, வடு அடு நுண் அயிர் – fine sand that erases scars, ஊதை உஞற்றும் – cold wind blows, தூ இரும் போந்தை – pure big palmyra palm tree, Borassus flabellifer, பொழில் – grove, அணிப் பொலிதந்து – beautiful and splendid, இயலினள் ஒல்கினள் – she walked and moved, ஆடும் மடமகள் – a naïve dancing woman, வெறி உறு நுடக்கம் போல – like veriyāttam movements, தோன்றி – appeared, பெருமலை வயின்வயின் – very near the big mountains (வயின்வயின் – அடுக்குத்தொடர், repetition of a word for emphasis), விலங்கும் – blocking, அரு மணி – rare gems, அர வழங்கும் – snakes roam, பெரும் தெய்வத்து – with the big gods, வளை ஞரலும் – conch shells blare, பனிப் பெளவத்து – in the cold ocean, in the cold southern ocean, குண குட கடலோடு – the eastern and western oceans, ஆயிடை – in between, மணந்த – joined, பந்தர் – pavilion (பந்தர் – பந்தல் என்பதன் போலி), அந்தரம் வேய்ந்து – inside ceiling decorated, வண் பிணி அவிழ்ந்த கண் போல் நெய்தல் – blossomed kuvalai flowers look like eyes, நனை உறு – honey filled (உறு – மிக்க), நறவின் – with naravu flowers, Luvunga scandens, நாகுடன் கமழ – punnai flower fragrances spread, சுடர் நுதல் – bright forehead, மடநோக்கின் – with delicate looks, வாள் நகை – bright smile, இலங்கு எயிற்று – with bright teeth, அமிழ்து பொதி துவர் வாய் – nectar filled red mouth, nectar filled coral-like mouth, அசை நடை விறலியர் – female musicians/dancers with swaying walk, பாடல் சான்று – filled with songs (பழைய உரை –  பாடல் சான்று என்பதனைச் சாலவெனத் திரிக்க), நீடினை உறைதலின் – since you stayed for long, வெள் வேல் அண்ணல் – oh leader with bright spear, மெல்லியன் போன்ம் என – that he is like a weak man (போன்ம் – போலும் என்பது இடை உகரம் கெட்டு லகரம் னகரமாய்த் திரிந்து நின்றது), உள்ளுவர் கொல்லோ – will they think (கொல்லோ – ஓகாரம் அசைநிலை, an expletive), நின் உணராதோரே – those who don’t understand you (ஏகாரம் அசைநிலை, an expletive), மழை தவழும் பெருங்குன்றத்து – in the tall mountains where clouds crawl, in the tall mountains were clouds spread, செயிர் உடைய – with faults, அரவு எறிந்து – attacking snakes, கடுஞ்சினத்த – with extreme rage, மிடல் – strength, தபுக்கும் – they kill, they ruin, பெரும் சினப் புயல் ஏறு – enraged thunder from clouds (புயல் – ஆகுபெயர் முகிலுக்கு), அனையை – you are like that, தாங்குநர் – enemies who block (தாம் மேற் செல்லுமிடத்து எதிரூன்றும் பகைவருடைய), தடக்கை யானை – big-trunked elephants, தொடி – rings on the tusks, கோடு – tusks, துமிக்கும் – chopping, எஃகு உடை வலத்தர் – warriors with swords on their right hands, victorious warriors with swords, நின் படைவழி வாழ்நர் – warriors in your army, மறம் கெழு – with bravery, போந்தை – palmyra tree, Borassus flabellifer, வெண்தோடு – white fronds, புனைந்து – made, நிறம் பெயர் – color changed, கண்ணி – flower garland, பருந்து ஊறு அளப்ப – kites think that it is flesh, தூக்கணை – thrown arrows, கிழித்த – torn, மாக்கண் தண்ணுமை – big-eyed thannumai drum, கைவல் இளையர் – skilled youngsters (கைவல் – தொழிலில் திறமை மிக்க) , கையலை அழுங்க – beating with their hands to be ruined, மாற்று அருஞ் சீற்றத்து – with anger that cannot be changed, with anger that cannot be blocked, மா இருங்கூற்றம் – dark big Kootruvan, வலை விரித்தன்ன – like spreading a net, நோக்கலை – you are with the looks (நோக்கினை உடையை), கடியையால் – with fierceness, with rage, நெடுந்தகை – oh great person, செருவத்தானே – in the battlefield (ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 52, *சிறு செங்குவளை*, பாடியவர்: காக்கை பாடினியார் நச்செள்ளையார், பாடப்பட்டவர்: சேர மன்னன் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன், துறை: குரவை நிலை, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

கொடி நுடங்கு நிலைய கொல் களிறு மிடைந்து,
வடி மணி நெடுந்தேர் வேறு புலம் பரப்பி,
அருங்கலந் தரீஇயர் நீர்மிசை நிவக்கும்
பெருங்கலி வங்கம் திசை திரிந்தாங்கு,
மை அணிந்து எழுதரு ஆயிரம் பஃறோல்  5
மெய் புதை அரணம் எண்ணாது எஃகு சுமந்து,
முன் சமத்து எழுதரும் வன்கண் ஆடவர்
தொலையாத் தும்பை தெவ்வழி விளங்க,
உயர்நிலை உலகம் எய்தினர் பலர் பட,
நல் அமர்க் கடந்த நின் செல் உறழ் தடக்கை,  10
இரப்போர்க்குக் கவிதல் அல்லதை இரைஇய
மலர்பு அறியா எனக் கேட்டிகும், இனியே,
சுடரும் பாண்டில் திருநாறு விளக்கத்து
முழா இமிழ் துணங்கைக்குத் தழூஉப்புணை ஆகச்
சிலைப்புவல் ஏற்றின் தலைக்கை தந்து நீ  15
நளிந்தனை வருதல் உடன்றனள் ஆகி,
உயவும் கோதை ஊரல் அம் தித்தி
ஈர் இதழ் மழைக்கண் பேர் இயல் அரிவை,
ஒள் இதழ் அவிழ் அகம் கடுக்கும் சீறடிப்
பல் சில கிண்கிணி சிறு பரடு அலைப்பக்  20
கொல் புனல் தளிரின் நடுங்குவனள் நின்று, நின்
எறியர் ஓக்கிய *சிறு செங்குவளை*
ஈஎன இரப்பவும் ஒல்லாள், “நீ எமக்கு
யாரையோ” எனப் பெயர்வோள் கையதை
கதுமென உருத்த நோக்கமோடு அது நீ  25
பாஅல் வல்லாய் ஆயினை பாஅல்
யாங்கு வல்லுநையோ? வாழ்க நின் கண்ணி,
அகல் இரு விசும்பில் பகல் இடம் தரீஇயர்,
தெறு கதிர் திகழ்தரும் உருகெழு ஞாயிற்று
உருபு கிளர் வண்ணம் கொண்ட  30
வான் தோய் வெண்குடை வேந்தர் தம் எயிலே.

Pathitruppathu 52, Poet: Kākkai Pādiniyār Nachellaiyār, King: Chēran Ādukōt Pāttu Chēralāthan, Small Red Waterlily

Your murderous elephants with flags sliced through
enemy forces, and your many chariots with carved, chiming
bells spread into different directions and assaulted,
appearing like huge, noisy ships that bring rare and precious
goods, changing directions on the wide oceans.

Your valiant warriors ignored protection of their own bodies,
and infiltrated into enemy ranks wielding spears and raising their
shields as dark as rainclouds, their thumpai garlands glowing in
the battlefield, and many enemies died and reached the higher
world.   You win just wars with moral courage, your thunder-like
large hands bend to give to those in need, but do not open to receive
from others, I have heard.

In the glowing light from a pāndil lamp with music and loud
drums beating in the background, with the strength of a roaring
bull you put out your hand first, embrace, and dance with
thunangai girls.  Your esteemed wife with pallor spots, swaying
garland, and moist eyes with cool lids is upset.
The gem-filled anklets, adorning her small feet that are like
blossomed bright flowers, jingle as she trembles with wrath,
like a delicate leaf on the shores of a raging river.  She raises her
hand to throw a little red waterlily flower at you.  You put out
your hands and plead with her to give the flower to you.
She refuses and says, “Who are you to me?” and moves away
from you.  You have no strength to walk up to her and pluck it
from her hand, oh lord.

How did you have the strength to seize the sky-high fortresses
of your enemies, mighty kings with white umbrellas as bright as
the blazing, hot sun in the wide, blue sky that provides daytime
spreading its bright rays?  Long live your victory garland!

Notes:  ஐங்குறுநூறு 400 – மள்ளர் அன்ன மரவம் தழீஇ மகளிர் அன்ன ஆடு கொடி நுடக்கும்.  இரா.  இராகவையங்கார் உரை – குறுந்தொகை 31ம் பாடல் – மகளிர் தம் ஆடவரைத் தழுவி ஆடும் இடமாதலால் மாண்டக் கோனை ஆண்டுந் தேடியது கூறினார்.  பெருங்கலி வங்கம் (4) – ஒளவை துரைசாமி உரை- பெரிய ஆரவாரத்தையுடைய கப்பல்கள், அருள் அம்பலவாணர் உரை – பெரிய வலிமையையுடைய மரக்கலங்கள்.  பலர் பட (9) – ஒளவை துரைசாமி உரை- பகைவர் பலர் உயிர் இழந்தனர், அருள் அம்பலவாணர் உரை – பலர் உயிர் இழந்தனர்.   அலைப்ப (24) – ஒளவை துரைசாமி உரை – ஒலிக்க, அருள் அம்பலவாணர் உரை – பரட்டை வருத்த.  யாரையோ (24) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை (அகநானூறு 46 – ம் பாடலின் உரையில் கூறியது) ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது, சாரியையுமாம்.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).  உயவும் கோதை (17) – ஒளவை துரைசாமி உரை – அசைகின்ற மாலை, உயவுதல் ஈண்டு அசைதல் மேற்று, அருள் அம்பலவாணர் உரை – வருந்தும் மாலை, ஈண்டு அசைதல் மேற்று.

Meanings:  கொடி நுடங்கு – flags waving, நிலைய – situation, கொல் களிறு – murderous elephants, மிடைந்து – moving densely, வடி மணி – beautiful bells, cast bells, ringing bells, நெடுந்தேர் – tall chariots, வேறு புலம் பரப்பி – went in different directions, அருங்கலம் – rare ornaments, தரீஇயர் – to bring from other countries (தரீஇயர் – சொல்லிசை அளபெடை), நீர் மிசை – above water, நிவக்கும் – goes on top, floats on top, பெருங்கலி – loud sounding, very sturdy, வங்கம் – ships, திரிந்தாங்கு –  like how they change directions, மை அணிந்து – wearing black, எழுதரு – rising up, மா இரு பல் தோல் – many dark shields (பஃறோல் – பல்தோல், குறியின் கீழ் லகரம் தகரம் வர ஆய்தமாகத் திரிந்து புணர்ந்தது), மெய் புதை – covering bodies, அரணம் எண்ணாது – not thinking about the shields, எஃகு சுமந்து – carrying weapons, முன் சமத்து – going to the battle front, எழுதரும் – rising up, வன்கண் ஆடவர் – brave men, தொலையாத் தும்பை – perfect thumpai flower garlands, Leucas aspera, தெவ்வழி – among enemies, விளங்க – shined, உயர்நிலை உலகம் எய்தினர் – reached the upper world, பலர் பட – many suffered, நல் அமர் – good war, கடந்த – won, நின் – your, செல் உறழ் – thunder-like (உறழ் – உவம உருபு, a comparison word), தடக்கை – big hands, இரப்போர்க்குக் கவிதல் – bends for the needy, அல்லதை – but not, இரைஇய – to ask from others (சொல்லிசை அளபெடை), மலர்பு அறியா – does not open, எனக் கேட்டிகும் – we have heard such, இனியே – hence, சுடரும் – glowing, பாண்டில் – lamps with many legs, round lamp, திரு – wealth, நாறு – appearing, விளக்கத்து – in the light, முழா இமிழ் – drum sound, துணங்கைக்குத் தழூஉ – embrace for the thunangai dance (தழூஉ – இன்னிசை அளபெடை), துணை ஆக – as her partner, சிலைப்புவல் ஏற்றின் – like a roaring bull (ஏற்றின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), தலைக் கை தந்து – hold out your hand first, நீ – you, நளிந்தனை வருதல் – you getting close (to the dancers), உடன்றனள் ஆகி – she became angry with you, உயவும் கோதை – swaying garland, ஊரல் – spread, அம் – beautiful, தித்தி – pallor spots, ஈர் இதழ் – two eyelids, மழைக்கண் – moist eyes, பேர் இயல் – great traits, அரிவை – young woman (your wife), ஒள் இதழ் – bright petaled, அவிழ் அகம் கடுக்கும் – like blossomed flowers, சீறடி – small feet, பல் சில கிண்கிணி – anklets with few gems, சிறு பரடு – small ankles, அலைப்ப – making sounds, distressing the ankles, கொல் புனல் – fierce waters, தளிரின் நடுங்குவனள் – she who trembled like a tender leaf, she who trembled like a sprout, நின்று – stood, நின் – your, எறியர் – to throw, ஓக்கிய – lifted, சிறு செங்குவளை – small red waterlily, ஈ என இரப்பவும் – even when you asked her for it, ஒல்லாள் – she refused, நீ எமக்கு யாரையோ என – who are you to me, பெயர்வோள் – she who is leaving, கையதை – what was in her hands, கதுமென – rapidly (விரைவுக்குறிப்பு), உருத்த நோக்கமோடு – with angry looks, அது நீ பாஅல் வல்லாய் ஆயினை – you had no strength to take it from her (பாஅல் – இசை நிறை அளபெடை), பாஅல் யாங்கு வல்லுநையோ – how did you have the strength to seize, how did you have the ability to seize (பாஅல் – இசை நிறை அளபெடை, வல்லுநையோ – முற்றுவினைத் திரிசொல், ஓகாரம் வினா), வாழ்க நின் கண்ணி – long live your garland, may you live long, அகல் இரு விசும்பில் – in the wide big sky, பகல் இடம் தரீஇயர் – in order to give day time (தரீஇயர் – சொல்லிசை அளபெடை), தெறு கதிர் திகழ்தரும் – spreading hot rays glowing, உழுகெழு ஞாயிற்று – of the fierce sun, of the burning sun,  உருபு – shape, form, கிளர் – shining, வண்ணம் கொண்ட – had such attributes, வான் தோய் – sky touching, sky high (forts), வெண்குடை – white umbrella, வேந்தர் – king, தம் எயிலே – their forts (எயிலே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 53, *குண்டு கண் அகழி*, பாடியவர்: காக்கை பாடினியார் நச்செள்ளையார், பாடப்பட்டவர்: சேர மன்னன் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன், துறை: செந்துறைப் பாடாண்பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

வென்று கலம் தரீஇயர் வேண்டு புலத்து இறுத்தவர்
வாடா யாணர் நாடு திறை கொடுப்ப,
“நல்கினை ஆகுமதி எம்” என்று அருளிக்
கல் பிறங்கு வைப்பின் கடறு அரை யாத்த நின்
தொல்புகழ் மூதூர்ச் செல்குவை ஆயின்,  5
செம் பொறிச் சிலம்பொடு அணித்தழை தூங்கும்
எந்திரத் தகைப்பின் அம்பு உடை வாயில்,
கோள் வல் முதலைய *குண்டு கண் அகழி*
வான் உற ஓங்கிய வளைந்து செய் புரிசை,
ஒன்னாத் தெவ்வர் முனை கெட விலங்கி,  10
நின்னின் தந்த மன் எயில் அல்லது,
முன்னும் பின்னும் நின் முன்னோர் ஓம்பிய
எயில் முகப்படுத்தல் யாவது வளையினும்,
பிறிது ஆறு சென்மதி சினங் கெழு குருசில்!
எழூஉப் புறம்தரீஇப் பொன் பிணிப் பலகைக்  15
குழூஉ நிலைப் புதவின் கதவு மெய் காணின்
தேம்பாய் கடாத்தொடு காழ் கை நீவி,
வேங்கை வென்ற பொறி கிளர் புகர் நுதல்
ஏந்து கை சுருட்டித் தோட்டி நீவி,
மேம்படு வெல்கொடி நுடங்கத்  20
தாங்கல் ஆகா ஆங்கு நின் களிறே.

Pathitruppathu 53, Poet: Kākkai Pādiniyār Nachellaiyār, King: Chēran Ādukōt Pāttu Chēralāthan, Deep Moat

You go to enemy lands to win battles and bring back wealth.
When you go and stay in those flourishing lands, people
there offer you tributes and plead with you to show pity on
them.  You do that and proceed to return home to your
ancient land with mountains surrounded by forests.

You have come to the fortress that you seized.  The entrance
to the curved, sky-high tall fortress with deep moats is filled
with killer crocodiles, its walls decorated with ornamental
anklets with fine clasps and fresh leaf decorations, and war
implements stored above it on parapet walls near the ports,
from where volleys of arrows are launched.

This fort that you seized from your enemy and gave away to
others, has always been protected by many generations of
your ancestors, since it belonged to a friendly king.  Think
about what will happen if it is attacked by your warriors.

Oh enraged king!  If the path is curved and long, go through
another path.

If your elephants with bright, spotted foreheads, lifted, curled
up trunks, and bee-swarming musth flowing down their cheeks,
that have won battles with tigers, see the fortress, they will refuse
to obey their keepers and ignore their goads.

With their flags swaying, they will batter the fort gates with
headers, reinforcing wooden bars and beams fastened
with iron nails.  You’ll not be able to control them, my lord.

Notes:  வேங்கை வென்ற பொறி கிளர் புகர் (18) – ஒளவை துரைசாமி உரை – வேங்கை மரத்தைப் புலியென மருண்டு சிதைத்ததால் உண்டாக்கிய வடுப் பொருந்திய (கலித்தொகை 49 – கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு நெடு வரை மருங்கின் துஞ்சும் யானை நனவில் தான் செய்தது மனத்தது ஆகலின் கனவில் கண்டு கதுமென வெரீஇப் புதுவது ஆக மலர்ந்த வேங்கையை அது என உணர்ந்து அதன் அணி நலம் முருக்கி), அருள் அம்பலவாணர் உரை – நிறத்தால் வேங்கை மலரை வென்ற புள்ளிகள் விளங்கித் தோன்றும் புகரினையுடைய, ‘வேங்கை வென்ற’ என்பதற்கு புலியை வென்ற என்பாரும் உளர் (கலித்தொகை 43 – வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து).  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

Meanings:  வென்று கலம் தரீஇயர் – to win battles with enemies and bring their wealth (தரீஇயர் – சொல்லிசை அளபெடை), வேண்டு புலத்து – in the desired land, இறுத்தவர் – one who goes and stays, வாடா – not reduced, யாணர் – prosperity, நாடு திறை கொடுப்ப – country give tributes, நல்கினை ஆகுமதி எம் என்று – “please show pity on us”, they requested, அருளி – you pitied them, கல் பிறங்கு வைப்பின் – in the country filled with mountains, கடறு அரை யாத்த – surrounded by forests, நின் – your, தொல்புகழ் மூதூர்ச் செல்குவை ஆயின் – if you return to your ancient famous town, செம் பொறிச் சிலம்பொடு – with anklets with fine clasps, with finely etched anklets, அணித்தழை – beautiful leaves, தூங்கும் – hanging, எந்திரத் தகைப்பின் – with war gadgets, அம்பு உடை வாயில் – gate from where arrows were launched, கோள் வல் முதலைய – with crocodiles that are capable of killing, குண்டு – deep, கண் – space, அகழி – moat, வான் உற ஓங்கிய – tall up to the sky, வளைந்து செய் புரிசை – fort constructed as a curved one, ஒன்னா – not agreeable, தெவ்வர் – enemies, முனை கெட – ruined in battle, விலங்கி – interrupted, நின்னின் தந்த மன் எயில் – you seized the fort and gave it away to others, அல்லது முன்னும் பின்னும் – or before and later, நின் முன்னோர் – your ancestors, ஓம்பிய – protected, எயில் முகப்படுத்தல் – to attack the fort (with your warriors), யாவது – how will it end, வளையினும் – even if the path curves around, பிறிது ஆறு சென்மதி – please go through another way (சென்மதி – மதி முன்னிலையசை, an expletive of the second person), சினம் கெழு குருசில் – O enraged king, எழூஉப் புறம் தரீஇ – made strong with wooden crossbars on the back (எழூஉ – இன்னிசை அளபெடை, தரீஇ – சொல்லிசை அளபெடை), பொன் பிணிப் பலகை – iron (nails) attached wooden crossbars, குழூஉ நிலைப் புதவின் கதவு – doors at the gates with headers (குழூஉ  – இன்னிசை அளபெடை, Mathuraikānji line 165 குழூஉப் புதவின்), மெய் காணின் – if seen in person, தேம்பாய் கடாத்தொடு – with musth on which bees swarm (தேம் தேன் என்றதன் திரிபு), காழ் கைநீவி – not respecting the goading rods, not controlled by the goading rods, வேங்கை வென்ற – better than vēngai flowers, attacked vēngai trees thinking they were tigers, won over tigers (Akanānūru 221 – கய வாய் வேங்கை) Pterocarpus marsupium, Kino tree, பொறி கிளர் புகர் நுதல் – spotted bright foreheads, ஏந்து கை – lifted trunks, சுருட்டி – curled up, தோட்டி நீவி – ignoring the goads, மேம்படு வெல்கொடி நுடங்க – superior victorious flags above swaying, தாங்கல் ஆகா – unable to control them, ஆங்கு – there, நின் களிறே – your male elephants (களிறே – ஏகாரம் அசை நிலை, an expletive)

பதிற்றுப்பத்து 54, *நில்லாத் தானை*, பாடியவர்: காக்கை பாடினியார் நச்செள்ளையார், பாடப்பட்டவர்: சேர மன்னன் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன், துறை: காட்சி வாழ்த்து, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

வள்ளியை என்றலின் காண்கு வந்திசினே;
உள்ளியது முடித்தி; வாழ்க நின் கண்ணி!
வீங்கு இறைத் தடைஇய அமை மருள் பணைத்தோள்,
ஏந்து எழில் மழைக்கண் வனைந்து வரல் இள முலைப்,
பூந்துகில் அல்குல், தேம்பாய் கூந்தல்,  5
மின் இழை விறலியர் நின் மறம் பாட
இரவலர் புன்கண் தீர நாள்தொறும்,
உரை சால் நன்கலம் வரைவு இல வீசி,
அனையை ஆகன்மாறே எனையதூஉம்
உயர்நிலை உலகத்துச் செல்லாது இவண் நின்று  10
இரு நிலம் மருங்கின் நெடிது மன்னியரோ!
நிலந்தப விடூஉம் ஏணிப் புலம் படர்ந்து,
படுகண் முரசம் நடு வண் சிலைப்பத்
தோமர வலத்தர் நாமம் செய்ம்மார்,
ஏவல் வியங்கொண்டு, இளையரொடு எழுதரும்  15
ஒல்லார் யானை காணின்,
*நில்லாத் தானை* இறை கிழவோயே.

Pathitruppathu 54, Poet: Kākkai Pādiniyār Nachellaiyār, King: Chēran Ādukōt Pāttu Chēralāthan, Army that does not stop

Oh benevolent King!  I came here to see you since
I heard about your generosity.  Please help me with
what I have desired in my mind.  Long live your
victory garland!

You go to the far reaches of your enemy countries
and occupy them.  In the middle of your battle camps,
battle drums with loud roaring eyes are beat,
goading your warriors to rise up with large clubs in their
right hands to attack enemy forces in the battlefields.
Without hesitating, your young warriors rush to
attack enemy elephant forces.

Musicians with gleaming jewels, thick forearms decked
with bangles, curved, thick, bamboo-like arms, moist
eyes, hair adorned with honey-filled flowers, loins
covered with fabric with flower designs, and young
breasts adorned with thoyyil paintings, sing about your
valor and courage.

You remove poverty from the lives of those who come
to you in need.  You give them famous fine ornaments
each and every day, and without any limit.

Oh lord!  May you live long in this huge country without
ever going to the upper world.

Notes:  Viralis were female artists who danced and sang.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  நாம் – பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆ முறை மூன்றும் அச்சப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 69).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

Meanings:  வள்ளியை என்றலின் காண்கு வந்திசினே – I came to see you since it is said that you are benevolent (வந்திசினே – சின் தன்மை அசை, an expletive of the first person, ஏகாரம் அசை நிலை, an expletive), உள்ளியது – what I have thought, முடித்தி – please do it, வாழ்க நின் கண்ணி – long live your victory garland, long live your praises, வீங்கு இறை – thick forearms, தடைஇய – curved (தட என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்ச வினை, சொல்லிசை அளபெடை), அமை மருள் – bamboo-like (மருள் – உவம உருபு, a comparison word), பணைத்தோள் – thick arms, ஏந்து – lifted, எழில் – beautiful, மழைக்கண் – moist eyes, வனைந்து வரல் இள முலை – young breasts with thoyyil drawings, பூந்துகில் – delicate fabric, அல்குல் – loins, தேம்பாய் கூந்தல் – sweet (bee-swarming) flowing hair, hair with flowers with honey (தேம் தேன் என்றதன் திரிபு), மின் இழை – gleaming jewels, விறலியர் – female musicians/dancers, நின் மறம் பாட – sing your bravery, இரவலர் – those who ask, புன்கண் தீர – for their poverty to be removed, நாள்தொறும் – each day, உரை சால் நன் கலம் – famous fine ornaments, வரைவு இல வீசி – giving without limits, அனையை ஆகன்மாறே – since you have those traits (ஆகன்மாறே – ஏகாரம் அசை நிலை, an expletive, மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள்) தரும் இடைச்சொல்), எனையதூஉம் – even for a short while (இன்னிசை அளபெடை), உயர்நிலை உலகத்துச் செல்லாது – not going to the upper world, இவண் நின்று – stay here, இரு நிலம் மருங்கின் – in this wide land, நெடிது மன்னியரோ – may you live for a long time, நிலந்தப விடூஉம் – enemy lands reduced (விடூஉம் – இன்னிசை அளபெடை), ஏணி – borders, புலம் படர்ந்து – go to their land (leaving your land), படுகண் முரசம் – drums with roaring eyes, நடுவண் – in the middle of the battle camp, சிலைப்ப – to roar, தோமர வலத்தர் – men carrying large clubs in their right hands, men carrying javelins in their strong hands, நாமம் செய்ம்மார் – to cause fear (நாமம் – நாம் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது), ஏவல் வியம் கொண்டு – accepting the orders that have been given, இளையரொடு எழுதரும் – rise along with young soldiers, ஒல்லார் யானை காணின் – when you see the enemy elephant force, நில்லாத் தானை – the elephant force that will not wait, the elephant force that will not stop, இறை கிழவோயே – Oh king who rules (கிழவோயே – ஏகாரம் அசை நிலை, an expletive)

பதிற்றுப்பத்து 55, *துஞ்சும் பந்தர்*, பாடியவர்: காக்கை பாடினியார் நச்செள்ளையார், பாடப்பட்டவர்: சேர மன்னன் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன், துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

ஆன்றோள் கணவ! சான்றோர் புரவல!
நின் நயந்து வந்தனென், அடு போர்க் கொற்றவ!
இன் இசைப் புணரி இரங்கும் பெளவத்து,
நன்கல வெறுக்கை *துஞ்சும் பந்தர்க்*
கமழும் தாழைக் கானல் அம் பெருந்துறைத்,  5
தண் கடல் படப்பை நல் நாட்டுப் பொருந!
செவ்வூன் தோன்றா வெண்துவை முதிரை,
வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை
குடவர் கோவே கொடித்தேர் அண்ணல்,
வாரார் ஆயினும் இரவலர் வேண்டித்,  10
தேரின் தந்து அவர்க்கு ஆர் பதம் நல்கும்,
நசை சால் வாய்மொழி இசை சால் தோன்றல்!
வேண்டுவ அளவையுள் யாண்டு பல கழியப்
பெய்து புறந்தந்து பொங்கல் ஆடி,
விண்டுச் சேர்ந்த வெண்மழை போலச்  15
சென்றாலியரோ பெரும, அல்கலும்
நனந்தலை வேந்தர் தார் அழிந்து அலற,
நீடுவரை அடுக்கத்த நாடு கைக் கொண்டு
பொருது சினம் தணிந்த செருப்புகல் ஆண்மைத்
தாங்குநர்த் தகைத்த ஒள் வாள்,  20
ஓங்கல் உள்ளத்துக் குருசில் நின் நாளே!

Pathitruppathu 55, Poet: Kākkai Pādiniyār Nachellaiyār, King: Chēran Ādukōt Pāttu Chēralāthan, Warehouses Where Wealth Resides

Oh husband of an honorable woman!  Oh patron
of wise men!  Oh victor of murderous battles!
I have come here with love for you.

You are the king of a fine country where waves lap
on cool ocean shores sweetly, lovely big ports are
filled with fragrant thāzhai trees, and huge
warehouses have fine goods that came on ships.

You are a body shield to your warriors who eat white
lentil chutney and rice cooked with white meat
without any red meat.

Oh king of Kudaku country!  Oh magnificence with
flags on your chariot!  You bestow even on those who
do not come to you for favors, bringing them in your
chariots and feeding them.  You are a royal heir who
is greatly famous and truthful to your words.

Oh lord desirous of murderous battles! Your warriors
brandishing bright swords have conquered large enemy
countries with adjoining tall mountains every day
making their kings scream, diminished their vast lands
and routed their foot soldiers, until your fierce rage was
quenched.

Oh magnificence!  May you live until you want and
not go away like the overflowing, dancing, white rain
clouds in the skies that come down as rain year after
year, providing life to people.

Notes:  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).

Meanings:  ஆன்றோள் கணவ – oh husband of an honorable woman, esteemed woman, woman of character, சான்றோர் புரவல – oh patron of wise people, நின் நயந்து வந்தனென் – I came to you with respect for you, அடு போர்க் கொற்றவ – oh victor of murderous battles, இன் இசைப் புணரி – waves with sweet music, இரங்கும் பெளவத்து – on the loud ocean (through ships), நன் கல வெறுக்கை – fine material wealth, துஞ்சும் – resides, stored, kept, பந்தர் – warehouse, place with a roof (பந்தர் – பந்தல் என்பதன் போலி), கமழும் தாழைக் கானல் – seaside grove with fragrant thāzhai trees, Pandanus odoratissimus, அம் பெருந்துறை – beautiful big port, தண் கடல் – cool ocean, படப்பை – adjoining land, நல்நாட்டுப் பொருந – oh fine country’s lord, செவ்வூன் தோன்றா – without red meat, வெண்துவை – white thuvaiyal, chutney, முதிரை – thuvaram paruppu, thuvaram lentil, வால் – white, ஊன் – meat, வல்சி – rice, மழவர் மெய்ம்மறை – body shield to warriors, குடவர் கோவே – king of Kudaku country, கொடித்தேர் அண்ணல் – leader with chariot with flags, வாரார் ஆயினும் – even if they do not come, இரவலர் வேண்டி – see them, தேரின் தந்து அவர்க்கு ஆர் பதம் நல்கும் – you come in your chariot and give them cooked food, bring them in your chariot and feed them, நசை சால் – desirable to those who listen, வாய்மொழி – truthful words, இசை சால் – greatly famous, தோன்றல் – oh great king, வேண்டுவ அளவையுள் – to the extent that you desire, யாண்டு பல கழிய – for many years to pass, பெய்து – rains fall, புறந்தந்து – protecting, பொங்கல் ஆடி – bountiful, overflowing, விண்டுச் சேர்ந்த வெண்மழை போல – like the white clouds that are in the sky, like the white clouds that are on the mountains, சென்று – going, அறாலியரோ – may it not end – your life (ஓகாரம் அசைநிலை, an expletive), பெரும – oh lord, அல்கலும் – every day, நனந்தலை – wide land, வேந்தர் – kings, தார் அழிந்து – ruining their foot soldiers, அலற – screaming, நீடு வரை – lofty mountain, அடுக்கத்த நாடு – adjoining countries, கைக் கொண்டு – taking over, seizing, பொருது – fought, attacked, சினம் – great rage, தணிந்த – reduced, செருப்புகல் ஆண்மை – manliness that is desirous of battles, தாங்குநர்த் தகைத்த – blocked the enemies, contained the enemies, ஒள் வாள் – bright swords, ஓங்கல் உள்ளத்து – with a lofty mind, குருசில் – oh king, நின் நாளே – your days (நாளே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 56, *வேந்து மெய்ம் மறந்த வாழ்ச்சி*, பாடியவர்: காக்கை பாடினியார் நச்செள்ளையார், பாடப்பட்டவர்: சேர மன்னன் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன், துறை: ஒள் வாள் அமலை, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண்,
கோடியர் முழவின் முன்னர், ஆடல்
வல்லான் அல்லன் வாழ்க அவன் கண்ணி
வலம்படு முரசம் துவைப்ப வாள் உயர்த்து,
இலங்கும் பூணன் பொலங்கொடி உழிஞையன்  5
மடம் பெருமையின் உடன்று மேல்வந்த
*வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி*
வீந்து உகு போர்க்களத்து ஆடும் கோவே.

Pathitruppathu 56, Poet: Kākkai Pādiniyār Nachellaiyār, King: Chēran Ādukōt Pāttu Chēralāthan, Victory after Enemy Kings Forgot their Bodies

The king does not dance to the beat of dancers’ drums
in his huge town, where festivals are celebrated.
Long live his victory garland!

He dances in battlefields, where victory drums roar loudly,
after slaying an invading, ignorant and arrogant enemy
king wearing bright ornaments and a gold ulignai garland,
who raised his swords to fight him, disregarding his own
body.

Notes:  வாழ்ச்சி (7) – அருள் அம்பலவாணர் உரை – வெற்றிச் செல்வத்தையுடைய, ஒளவை துரைசாமி உரை – துறக்கத்தே வாழ்வு பெறுதலால்.

Meanings:  விழவு வீற்றிருந்த – where festivals were celebrated, வியலுள் ஆங்கண் – there in his wide town, கோடியர் முழவின் முன்னர் – in front of the drums of drummers, ஆடல் – to dance, வல்லான் அல்லன் – he is not capable, வாழ்க அவன் கண்ணி – long live the king’s praise, வலம்படு முரசம் – victorious battle drums, துவைப்ப – as they roar, வாள் உயர்த்து – lifting his sword, இலங்கும் பூணன் – wearing bright jewels, பொலங்கொடி உழிஞையன் – king wearing a gold ulignai strand/garland, மடம் பெருமையின் – with great ignorance, உடன்று மேல்வந்த – came there with rage, வேந்து – enemy king, மெய்ம் மறந்த – forgetting himself, வாழ்ச்சி  – with victory, வீந்து உகு போர்க்களத்து – in battlefields where people drop dead, ஆடும் கோவே – the king who dances (கோவே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 57, *சில் வளை விறலி*, பாடியவர்: காக்கை பாடினியார் நச்செள்ளையார், பாடப்பட்டவர்: சேர மன்னன் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன், துறை: விறலியாற்றுப்படை, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

ஓடாப் பூட்கை மறவர் மிடல் தப,
இரும் பனம் புடையலொடு வான் கழல் சிவப்பக்,
குருதி பனிற்றும் புலவுக் களத்தோனே,
துணங்கை ஆடிய வலம்படு கோமான்,
மெல்லிய வகுந்தில் சீறடி ஒதுங்கிச்  5
செல்லாமோ தில் *சில் வளை விறலி*,
பாணர் கையது பணி தொடை நரம்பின்
விரல் கவர் பேரியாழ் பாலை பண்ணிக்
குரல் புணர் இன்னிசைத் தழிஞ்சி பாடி,
இளந்துணைப் புதல்வர் நல் வளம் பயந்த,  10
வளங்கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை
ஆன்ற அறிவின் தோன்றிய நல்லிசை,
ஒண்ணுதல் மகளிர் துனித்த கண்ணினும்,
இரவலர் புன்கண் அஞ்சும்
புரவு எதிர்கொள்வனைக் கண்டனம் வரற்கே?  15

Pathitruppathu 57, Poet: Kākkai Pādiniyār Nachellaiyār, King: Chēran Ādukōt Pāttu Chēralāthan, Dancers with Few Bangles

Oh viralis wearing few bangles!  Tell me!
Can we go, walking through narrow paths with
our small feet, to the king whose valiant warriors do
not run away from battles where their strengths are
ruined, the king who wears his large palm garland and
bright war anklets that have turned red in the bloody,
flesh-stinking battlefield where he performs his victory
thunangai dances?

He is not moved when his intelligent, modest,
fine-foreheaded, bright, anklet-wearing young wives
who have blessed him with the wealth of sons, sulk
and give him angry looks.

He’s moved when bards with tightly strung large lutes
come and play thalinji songs in pālai tune with desire,
accompanied by singing.  Let us go and see the king who
gives generously to those who ask, fearing their sorrow.

Notes:  Viralis were female artists who danced and sang.  They traveled with the bards, and were usually members of the bard’s family.  In the long song Sirupānatruppadai, the virali is the wife of the bard.  புறநானூறு 64 – செல்லாமோ தில் சில் வளை விறலி, பதிற்றுப்பத்து 57 – செல்லாமோ தில் சில் வளை விறலி, பதிற்றுப்பத்து 60 – செல்லாமோ தில் பாண்மகள்.  கவர் – கவர்வு விருப்பு ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 64).  குடைச்சூல் – ஒளவை துரைசாமி உரை – சிலம்பு, புடைபட்டு உட்கருவை உடைத்தாதல் பற்றி, சிலம்பு குடைச்சூல் எனப் பட்டது.

Meanings:  ஓடா – not running away, பூட்கை – strength, மறவர் – warriors, மிடல் தப – ruining strength, இரும் பனம் புடையலொடு – with a big palm garland, வான் கழல் சிவப்ப -bright warrior’s anklets become red, குருதி பனிற்றும் – spattering blood, புலவுக் களத்தோனே – he is in the flesh stinking battlefield (களத்தோனே – ஏகாரம் அசை நிலை, an expletive), துணங்கை ஆடிய – performed the victory dance, வலம்படு கோமான் – the king with strength, மெல்லிய வகுந்தில் – on the delicate path, சீறடி ஒதுங்கி செல்லாமோ – let us walk with small steps, let us walk with our small feet (மோ முன்னிலை அசை, an expletive of the second person), தில் – விழைவின்கண் வந்த இடைச்சொல், a particle implying desire, சில் வளை விறலி – oh artists who sing and dance wearing few bangles, பாணர் கையது – in the bard’s hands, பணி தொடை நரம்பின் – with tightly strung strings, விரல் கவர் பேரியாழ் – big lute played with fingers with desire, பாலை பண்ணி – in the pālai tune, குரல் புணர் இன்னிசை – accompanied by singing, தழிஞ்சி பாடி – sing thalinji songs, இளம் துணை – young wives, புதல்வர் நல் வளம் பயந்த – who gave him the wealth of sons, வளங்கெழு – splendid, குடைச்சூல் – rounded anklets, அடங்கிய கொள்கை – (his wives) with modesty as their principle, ஆன்ற அறிவின் – with high intelligence, தோன்றிய – arose, நல்லிசை – good behavior, ஒண்ணுதல் மகளிர் – bright-foreheaded women, துனித்த கண்ணினும் – with angry eyes, இரவலர் – those who come to him in need, புன்கண் அஞ்சும் – afraid of their sorrow, புரவு எதிர்கொள்வனை – the king who will accept and provide, கண்டனம் வரற்கே – let us go and see him and return (வரற்கே – ஏகாரம் அசை நிலை, an expletive)

பதிற்றுப்பத்து 58, *ஏ விளங்கு தடக்கை*, பாடியவர்: காக்கை பாடினியார் நச்செள்ளையார், பாடப்பட்டவர்: சேர மன்னன் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன், துறை: செந்துறைப்பாடாண்பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

ஆடுக விறலியர்! பாடுக பரிசிலர்!
வெண்தோட்டு அசைத்த ஒண் பூங் குவளையர்,
வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர்,
செல் உறழ் மறவர் தம் கொல் படைத் தரீஇயர்,
இன்று இனிது நுகர்ந்தனம் ஆயின், நாளை  5
மண் புனை இஞ்சி மதில் கடந்து அல்லது
உண்குவம் அல்லேம் புகா எனக் கூறிக்,
கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்,
பொய்படுபு அறியா வயங்கு செந் நாவின்,
எயில் எறி வல் வில் *ஏ விளங்கு தடக்கை*,  10
ஏந்து எழில் ஆகத்துச் சான்றோர் மெய்ம்மறை
வானவரம்பன் என்ப, கானத்துக்
கறங்கு இசைச் சிதடி பொரி அரைப் பொருந்திய
சிறியிலை வேலம் பொரிய தோன்றும்
புன்புலம் வித்தும் வன் கை வினைஞர்  15
சீர் உடைப் பல் பகடு ஒலிப்பப் பூட்டி,
நாஞ்சில் ஆடிய கொழு வழி மருங்கின்
அலங்கு கதிர்த் திரு மணி பெறூஉம்,
அகன்கண் வைப்பின் நாடு கிழவோனே.

Pathitruppathu 58, Poet: Kākkai Pādiniyār Nachellaiyār, King: Chēran Ādukōt Pāttu Chēralāthan, Splendid, Big Hands with Arrows

Oh dancers and bards!  May you dance, sing and win
gifts from our king.  His soldiers don bright, blue
waterlily garlands tied with palm fronds, their bodies
bearing honor scars from swords and they attack
like thunder.

Just because they ate sweetly, they do not stay away from
attacking the ramparts of adobe fortresses of enemies the
next day.  They won’t eat until all their work is done.
They are truthful to their palm garlands.  The king has
warriors who consider fighting to suit their flower strands.

His fine tongue does not know to lie.  He is body shield
to his soldiers, protecting his valiant men with raised chests,
who hold mighty bows and arrows in their splendid, big
hands, as they ravage enemy forts.  They say that the fame
of the king is as high as the sky, and they call him
Vānavarampan.

He is the king of this vast country, where crickets screech
in the forest, residing in the small-leaved velam trees with
rough, cracked trunks, strong farmers tie jingling bells
on their oxen and plow their fields, and nearby are found
beautiful gems that emit radiating bright rays.

Notes:  Viralis were female artists who danced and sang.  They traveled with the bards, and were usually members of the bard’s family.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

Meanings:  ஆடுக விறலியர் – oh dancers! perform dances, பாடுக – you sing (oh bards), பரிசிலர் – get gifts, வெண்தோட்டு – with white palm fronds, அசைத்த – placed, ஒண்பூங் குவளையர் – those wearing bright blue waterlily garlands, வாள் முகம் – sword edge, பொறித்த – made scars, மாண் வரி – esteemed scars, யாக்கையர் – those with bodies, செல் உறழ் – lightning-like (உறழ் – உவம உருபு, a comparison word), மறவர் – warriors, தம் கொல் படை தரீஇயர் – the troops come with their murderous weapons (தரீஇயர் – சொல்லிசை அளபெடை), இன்று இனிது – today is sweet, நுகர்ந்தனம் ஆயின் – if we eat well today, நாளை – tomorrow, மண் புனை – fort made with clay, இஞ்சி – rampart of a fort, மதில் கடந்து – destroy the fort walls, அல்லது – other than that, உண்குவம் அல்லேம் – we will not eat, புகா – food, எனக் கூறி – saying that, கண்ணி கண்ணிய வயவர் பெருமகன் – lord of warriors who consider fighting to suit their flower strands, பொய்படுபு அறியா – one who does not lie, வயங்கு செந்நாவின் – with an esteemed tongue, எயில் – fort, எறி – destroy, வல் வில் – strong arrow, ஏ விளங்கு தடக்கை – arrow carrying flourishing big hands, ஏந்து – lifted, எழில் ஆகத்து – with handsome chests, சான்றோர் – warriors,  மெய்ம்மறை – body shield, வானவரம்பன் – Chēra king, என்ப – they say, கானத்து – of the forest, கறங்கு இசை – loud sounds, சிதடி – crickets, பொரி அரை – rough tree trunks, parched tree trunks, cracked tree trunks, பொருந்திய – staying, சிறியிலை வேலம் – vēlam trees with small leaves, panicled babool, Acacia leucophloea (சிறியிலை – சிறிய இலை, தொகுத்தல் விகாரம்), பொரிய தோன்றும் – appear like dried, புன்புலம் – arid land, வித்தும் – seeding, வன் கை வினைஞர் – men with strong hands, சீர் உடை – splendid , பல் பகடு – many oxen, ஒலிப்ப – with bells, பூட்டி – tied, நாஞ்சில் ஆடிய – plowing being done, கொழு வழி – end of plowing, மருங்கின் – nearby, அலங்கு – shaking, கதிர் – grain spears, திருமணி – beautiful grains, பெறூஉம் – they receive (இன்னிசை அளபெடை), அகன்கண் வைப்பின் – with wide towns, நாடு கிழவோனே – the king of such country (கிழவோனே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 59, *மாகூர் திங்கள்*, பாடியவர்: காக்கை பாடினியார் நச்செள்ளையார், பாடப்பட்டவர்: சேர மன்னன் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன், துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

பகல் நீடு ஆகாது இரவுப் பொழுது பெருகி,
மாசி நின்ற *மாகூர் திங்கள்*
பனிச் சுரம் படரும் பாண் மகன் உவப்பப்,
புல் இருள் விடியப் புலம்பு சேண் அகலப்,
பாய் இருள் நீங்கப் பல் கதிர் பரப்பி,  5
ஞாயிறு குணமுதல் தோன்றியாஅங்கு,
இரவன் மாக்கள் சிறு குடி பெருக,
உலகம் தங்கிய மேம்படு கற்பின்
வில்லோர் மெய்ம்மறை வீற்று இருங்கொற்றத்துச்
செல்வர் செல்வ சேர்ந்தோர்க்கு அரணம்!  10
அறியாது எதிர்ந்து துப்பில் குறையுற்றுப்
பணிந்து திறை தருப நின் பகைவர், ஆயின்,
சினம் செலத் தணியுமோ? வாழ்க நின் கண்ணி!
பல் வேறு வகைய நனந்தலை ஈண்டிய
மலையவும் கடலவும் பண்ணியம் பகுக்கும்  15
ஆறு முட்டுறாஅது அறம் புரிந்து ஒழுகும்
நாடல் சான்ற துப்பின் பணைத்தோள்,
பாடு சால் நன்கலம் தரூஉம்
நாடு புறந்தருதல் நினக்குமார் கடனே.

Pathitruppathu 59, Poet: Kākkai Pādiniyār Nachellaiyār, King: Chēran Ādukōt Pāttu Chēralāthan, Māsi Month when Animals Suffer

When days are short and the nights are long during Māsi
month, animals struggle in the painfully cold weather.
You are like the bright sun that rises in the east with its
many rays and dispels distressing darkness in the world,
bringing joy to a bard who in on a harsh arid path.

You, seated on your throne, give to those who ask for alms,
making small communities flourish.  You are a body shield
to your archers, protecting those who seek your favors.
You are a man of superior knowledge.  If enemies fight with
you without knowing your strength, you will ruin their
strengths.  Your wrath subsides only when they bring you
tributes.  Long live your victory garland!

Oh king of greatly victorious kings!  You give away without
limit the wealth you received from the land, mountains and
oceans of your enemy countries, to those who come to you
in need.  You are benevolent, righteous, broad-shouldered,
strong and worthy of song.  It is your duty to protect those
countries.

Notes:  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).

Meanings:  பகல் நீடு ஆகாது – the days are not long, இரவுப் பொழுது பெருகி – the nights are extended, மாசி நின்ற – during Māsi month, மா கூர் திங்கள் – excessive (cold) to animals in this month, பனிச் சுரம் – cold difficult path, படரும் – moves, பாண் மகன் – a bard, உவப்ப – being happy, புல் இருள் விடிய – painful darkness is removed, புலம்பு சேண் அகல – for loneliness and sorrow to go far away, பாய் இருள் நீங்க – for darkness that has spread to go away, பல் கதிர் பரப்பி – spreading its many rays, ஞாயிறு குணமுதல் தோன்றியாஅங்கு – like the sun that rises in the east (தோன்றியாஅங்கு – இசைநிறை அளபெடை), இரவன் மாக்கள் – people who ask for charity, சிறுகுடி பெருக – for their small towns to flourish, உலகம் தாங்கிய – helping the world, மேம்படு கற்பின் – with superior education, with superior virtue,  வில்லோர் மெய்ம்மறை – a body shield to the archers, வீற்று இருங்கொற்றத்து – of greatly victorious kings, செல்வர் செல்வ – Oh king of kings, சேர்ந்தோர்க்கு – to those who reach you, அரணம் – protection, அறியாது எதிர்ந்து – if they (enemies) oppose you ignorantly, துப்பில் குறையுற்று – their strengths getting reduced, பணிந்து – humbly, திறை தருப – if they bring you tributes, நின் பகைவர் ஆயின் –  enemies, ஆயின் – if so, சினம் செலத் தணியுமோ – will your anger subside, வாழ்க நின் கண்ணி – long live your victory garland, long live your praises, பல் வேறு வகைய – with many kinds, நனந்தலை – wide spaces, ஈண்டிய – brought together, மலையவும் கடலவும் – from the mountain and from the ocean, பண்ணியம் பகுக்கும் ஆறு – you share materials with righteousness, முட்டுறாஅது – without limits, அறம் புரிந்து ஒழுகும் – you uphold righteousness, நாடல் சான்ற – analyzed, துப்பின் – with strength, பணைத்தோள் – wide shoulders, பாடு சால் – greatly famous, with great pride, நன்கலம் – precious things, fine jewels, தரூஉம் – giving (தரூஉம் – இன்னிசை அளபெடை), நாடு புறந்தருதல் – to protect the country, நினக்கும் ஆர் கடனே – it is your duty  (ஆர் – அசைநிலை, an expletive, கடனே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 60, *மரம்படு தீங்கனி *, பாடியவர்: காக்கை பாடினியார் நச்செள்ளையார், பாடப்பட்டவர்: சேர மன்னன் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன், துறை: விறலியாற்றுப்படை, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

கொல் வினை மேவற்றுத் தானை, தானே
இகல் வினை மேவலன், தண்டாது வீசும்
செல்லாமோ தில் பாண்மகள், காணியர்?
மிஞிறு புறம் மூசவும் தீம் சுவை திரியாது,
அரம் போழ்கல்லா *மரம்படு தீங்கனி *  5
அம் சேறு அமைந்த முண்டை விளை பழம்
ஆறு செல் மாக்கட்கு ஓய் தகை தடுக்கும்,
மறாஅ விளையுள் அறாஅ யாணர்த்
தொடை மடி களைந்த சிலை உடை மறவர்
பொங்கு பிசிர்ப் புணரி மங்குலொடு மயங்கி,  10
வரும் கடல் ஊதையின் பனிக்கும்
துவ்வா நறவின் சாய் இனத்தானே.

Pathitruppathu 60, Poet: Kākkai Pādiniyār Nachellaiyār, King: Chēran Ādukōt Pāttu Chēralāthan, Sweet Fruits that ripened on Trees

Oh virali!  Tell me!  Can we go and see
the king who desires wars, whose army loves murderous
battles, and unceasing gifts flow from him to artists?

The king is relaxing in the company of delicate women
in Naravu town,

where bees hum around honey-sweet jackfruits on trees
no saw can cut, their egg-shaped, syrup-filled segments
a boon to tired wayside travelers, fertile lands with steady
crops bring continuous wealth, archers skilled at darting
arrows are stationed with bows ready to strike, and
spraying ocean water, chillness and fog cause the town to
tremble.

Notes:  புறநானூறு 64 – செல்லாமோ தில் சில் வளை விறலி, பதிற்றுப்பத்து 57 – செல்லாமோ தில் சில் வளை விறலி, பதிற்றுப்பத்து 60 – செல்லாமோ தில் பாண்மகள்.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  துவ்வா நறவின் (12) – குடிக்க முடியாத நறவு ஆகிய ஊரில், வெளிப்படை.

Meanings:  கொல் வினை – martial function, killing work, மேவற்று – desired, தானை – warriors, battle forces, தானே இகல் வினை மேவலன் – he likes battles, தண்டாது வீசும் – gives without limits, செல்லாமோ – can we go and see (மோ முன்னிலை அசை, an expletive of the second person), தில் – விழைவின்கண் வந்த இடைச்சொல், a particle implying desire, பாண்மகள் – oh female singer, காணியர் – to see, மிஞிறு புறம் மூசவும் – bees swarm in the back, தீம் சுவை – sweet taste, திரியாது – unchanged, அரம் போழ்கல்லா – no saw can cut, மரம்படு தீங்கனி – sweet fruits that grew on trees, jackfruits (மரம்படு – மரத்தில் உண்டாகிய), அம் சேறு அமைந்த – beautiful sweet syrup (honey) filled, முண்டை – egg (முட்டை என்பது முண்டை என மெலிந்தது), விளை பழம் – ripe fruit, ஆறு செல் மாக்கட்கு – for those on the path, ஓய் தகை தடுக்கும் –  prevent their tiredness, மறாஅ விளையுள் – unchanged harvests (மறாஅ – இசை நிறை அளபெடை), அறாஅ – un-removable (இசை நிறை அளபெடை), யாணர் – new income, prosperity, தொடை மடி களைந்த – skilled with darting arrows without slacking, சிலை உடை மறவர் – warriors with bows, பொங்கு பிசிர் – spraying water droplets, புணரி – ocean, மங்குலொடு மயங்கி வரும் – comes mixed with clouds, கடல் ஊதையின் பனிக்கும் – ocean breezes make it tremble in cold, துவ்வா நறவின் – in Naravu town which is not the naravu which is enjoyed (நறவு = கள், நறவு – நறா நற என்றாகி உகரம் ஏற்றது), சாய் இனத்தானே – he’s relaxing there among delicate women (சாய் – மென்மை ஈண்டு ஆகுபெயரால், தானே – ஏகாரம் அசை நிலை, an expletive)

பதிற்றுப்பத்து, பதிகம்
குடக்கோ நெடுஞ்சேரலாதற்கு வேஎள்
ஆவிக் கோமான் தேவி ஈன்ற மகன்,
தண்டாரணியத்துக் கோள்பட்ட வருடையைத்
தொண்டியுள் தந்து கொடுப்பித்துப் பார்ப்பார்க்குக்
கபிலையொடு குடநாட்டு ஓரூர் ஈத்து,  5
வானவரம்பன் எனப் பேர் இனிது விளக்கி,
ஏனை மழவரைச் செருவின் சுருக்கி,
மன்னரை ஓட்டிக்
குழவி கொள்வாரின் குடி புறந்தந்து,
நாடல் சான்ற நயன் உடை நெஞ்சின்  10
ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை,
யாத்த செய்யுள் அடங்கிய கொள்கைக்
காக்கைபாடினியார் நச்செள்ளையார்
பாடினார் பத்துப் பாட்டு.

Epilog
He was the son born to Kudaku King Nedunchēralāthan
and his queen, daughter of Velāvi king Pathuman.

He donated goats that he had seized in Thandāraniyam
and brought to Thondi.  He gave a town in Kudaku country
to Brahmins along with ash-colored cows.

Known as Vāna Varampan, he killed enemy warriors in battle,
killed their kings, and protected his citizens like they were his
children.

He is a man with a good heart and restrained principles.
These ten verses are sung by poet Kākkai Pādiniyār Nachellaiyār
for King Ādukot Chēralathān.

Meanings:  குடக்கோ – King of Kudaku country, நெடுஞ்சேரலாதற்கு – Nedunchēralathan, வேஎள் ஆவிக் கோமான் தேவி – Vel Avi clan queen – daughter of Velāvi king Pathuman, ஈன்ற – gave birth, மகன் – son, தண்டாரணியத்து – an area in Central India where Aryans had infiltrated, கோள் பட்ட வருடையை – goats that were seized, தொண்டியுள் தந்து – brought them to Thondi, கொடுப்பித்துப் பார்ப்பார்க்கு – gave to the Brahmins, கபிலையொடு – with cows – ash color is the literal meaning, குட நாட்டு ஓரூர் ஈத்து – give them a town in Kudaku country, வானவரம்பன் எனப் பேர் இனிது விளக்கி – he was called with a sweet name ‘Vana Varampan’, Chēra king, ஏனை மழவரை – other warriors, செருவின் சுருக்கி – killed them in battle, மன்னரை ஓட்டி – chased away enemy kings, won battles against enemy kings, குழவி கொள் வாரின் குடி புறந் தந்து – protected his subjects like they were his children, நாடல் சான்ற நயன் உடை நெஞ்சின் – with a reasoning good heart, *ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை* – Chēralathan who seized goats, யாத்த செய்யுள் – created verses, அடங்கிய – contained, கொள்கை – principles, காக்கை பாடினியார் நச்செள்ளையார் பாடினார் பத்துப் பாட்டு

பதிற்றுப்பத்து 61, *புலாஅம் பாசறை*, பாடியவர்: கபிலர், பாடப்பட்டவர்: செல்வக்கடுங்கோ வாழியாதன், துறை: காட்சி வாழ்த்து, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

பலாஅம் பழுத்த பசும் புண் அரியல்
வாடை துரக்கும் நாடு கெழு பெருவிறல்,
ஓவத்து அன்ன வினை புனை நல் இல்,
பாவை அன்ன நல்லோள் கணவன்,
பொன்னின் அன்ன பூவின் சிறியிலைப்  5
புன்கால் உன்னத்துப் பகைவன் என் கோ,
புலர்ந்த சாந்தின், புலரா ஈகை,
மலர்ந்த மார்பின் மா வண் பாரி
முழவு மண் புலர, இரவலர் இனைய,
வாராச் சேண்புலம் படர்ந்தோன்; அளிக்கென  10
இரக்கு வாரேன்; எஞ்சிக் கூறேன்;
“ஈத்தது இரங்கான், ஈத்தொறும் மகிழான்,
ஈத்தொறும் மா வள்ளியன்” என நுவலும் நின்
நல் இசை தர வந்திசினே; ஒள் வாள்
உரவுக் களிற்றுப் *புலாஅம் பாசறை15
நிலவின் அன்ன வெள் வேல் பாடினி,
முழவின் போக்கிய வெண்கை
விழவின் அன்ன நின் கலி மகிழானே.

Pathitruppathu 61, Poet: Kapilar, King: Selvakkadunkō Vāzhiyāthan, Battle Camp Reeking of Flesh

My King is the great donor Pāri who gave limitless gifts,
man with sandal painted broad chest, husband to a fine
as beautiful as a doll, resided in a finely crafted palace that
looked like a painting, enemy to small-leaved unni trees
with parched trunks and gold-colored flowers, victorious
king of a great country, where oozing sweet syrup from split
jackfruits are blown off by the cold north winds.

Death has taken him to the distant place from where nobody
returns, the clay on drums have dried, and those who come
to him in need are in sorrow.

I’ve not come to you for charity.  I will not exaggerate and
sing about you.

“He does not feel sorry for what he gave”, “He does not gloat
about what he has given” and “He donates generously”,
are the words that are spoken about you.  I came here after
I heard about your good fame.

I came to your battle camp, which reeks with flesh.
Warriors carry bright swords, and strong battle elephants
abound.

Your female musician sings to the rhythm of drums,
moving her bare hands as she sings about your moon-like.
bright spears.  I came here to see you amidst this festive
court where you are happy.

Notes:  பாவை அன்ன (4) – அருள் அம்பலவாணர் உரை – கொல்லிப் பாவை போன்ற.  ஒளவை துரைசாமி உரை – பாவை போன்ற.  உன்னத்துப் பகைவன் (6) – ஒளவை துரைசாமி உரை – உன்ன மரம் போர் வீரர் நிமித்தம் காண நிற்கும் மரம்.  காண்பார்க்கு வெற்றி எய்துவதாயின் தழைத்தும் தோல்வி எய்துவதாயின் கரித்தும் காட்டும் என்ப.  அது கரித்து காட்டிய வழியும் அஞ்சாது அறமும் வலியும் துணையாகப் பொருது வெற்றி எய்தும் வேந்தன் என்றதற்கு ‘உன்னத்துப் பகைவன்’ என்றார்.  தான் எய்துவது தோல்வி என்று உன்ன மரம் காட்டவும் காணாது, பொருது வென்றி எய்தி உன்னத்தின் நிமித்தத்தைக் கெடுத்தல் பற்றிப் பகைவன் என்பாராயினர் என்க.  இரக்கு (11) – பழைய உரை – இரக்கென்றது தன்மை வினை.  எஞ்சிக் கூறேன் (11) – ஒளவை துரைசாமி உரை – குன்றவும் மிகை படவும் கூற மாட்டேன், அருள் அம்பலவாணர் உரை – உண்மையின் எல்லையைக் கடந்து பொய்யே புகழ்ந்து சொல்லேன்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).

Meanings:  பலா அம் பழுத்த – fruits that ripen on jackfruit trees, பசும் புண் அரியல் – syrup flowing from a fresh cut, வாடை துரக்கும் – cold northern winds blow it, நாடு கெழு – with a splendid country, பெருவிறல் – victorious warrior, ஓவத்து அன்ன – like a painting (ஓவம், அத்து சாரியை, an augment), வினை புனை – created well, நல் இல் – fine home, பாவை அன்ன – like a doll, like Kolli goddess, நல்லோள் கணவன் – good woman’s husband, பொன்னின் அன்ன – like gold (பொன்னின் – இன் சாரியை), பூவின் – with flowers, சிறியிலை – small leaf, புன்கால் உன்னத்து – owning unnam trees with parched/thin trunks (சிறியிலை – சிறிய இலை, தொகுத்தல் விகாரம்), பகைவன் – enemy, எங்கோ – my king, புலர்ந்த சாந்தின் – with dried sandal paste, புலரா ஈகை – unlimited charity, மலர்ந்த மார்பின் – broad chested, மா வண் பாரி – the great donor Pāri, முழவு மண் புலர – the mud on the drum’s eyes dried, இரவலர் இனைய – those in need are in distress, வாராச் சேண் புலம் படர்ந்தோன் – he went to a faraway place (death) from where he cannot come back, அளிக்கென – for you to give, இரக்கு வாரேன் – I have not come to ask, எஞ்சிக் கூறேன் – I will not utter less or more, I will not exaggerate, ஈத்தது இரங்கான் – he does not feel sorry for what he gave, ஈத்தொறும் மகிழான் – he won’t be happy just because of his donating fame, ஈத்தொறும் மா வள்ளியன் – ‘when he gives he’s a great donor’, என நுவலும் – thus are the uttered words (that I heard), நின் – your, நல் இசை – fine fame, தர – has brought me here, வந்திசினே – I have come (சின் தன்மை அசை, an expletive of the first person, ஏகாரம் அசைநிலை, an expletive), ஒள்வாள் – bright swords, உரவுக் களிற்று – with strong male elephants, புலாஅம் பாசறை – flesh-stinking battle camp (புலாஅம் – இசைநிறை அளபெடை), நிலவின் அன்ன வெள் வேல் – moon-like bright spears (நிலவின் – இன் சாரியை), பாடினி – the female musician, முழவின் போக்கிய – moved her hands according to the drum beats, வெண்கை – (moving) bare hands, hands wearing white conch shell bangles, விழவின் அன்ன – like a festival (விழவின் – இன் சாரியை), நின் கலி மகிழானே – in your happy royal court (மகிழானே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 62, *வரை போல் இஞ்சி*, பாடியவர்: கபிலர், பாடப்பட்டவர்: செல்வக்கடுங்கோ வாழியாதன், துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

இழை அணிந்து எழுதரும் பல் களிற்றுத் தொழுதியொடு,
மழை என மருளும் மா இரும் பஃறோல்,
எஃகு படை அறுத்த கொய் சுவல் புரவியொடு
மைந்து உடை ஆர் எயில் புடைபட வளைஇ,
வந்து புறத்து இறுக்கும் பசும் பிசிர் ஒள் அழல்  5
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்,
பொல்லா மயலொடு பாடு  இமிழ்பு உழிதரும்
மடங்கல் வண்ணம் கொண்ட கடுந்திறல்,
துப்புத்துறை போகிய கொற்ற வேந்தே
புனல் பொரு கிடங்கின் *வரை போல் இஞ்சி*,  10
அணங்கு உடைத் தடக் கையர் தோட்டி செப்பிப்
பணிந்து திறை தருப நின் பகைவர் ஆயின்
புல் உடை வியன் புலம் பல்ஆ பரப்பி,
வளன் உடைச் செறுவின் விளைந்தவை உதிர்ந்த
களன் அறு குப்பை காஞ்சிச் சேர்த்தி,  15
அரியல் ஆர்கை வன் கை வினைநர்,
அருவி ஆம்பல் மலைந்த சென்னியர்,
ஆடு சிறை வரி வண்டு ஓப்பும்
பாடல் சான்ற, அவர் அகன்தலை நாடே.

Pathitruppathu 62, Poet: Kapilar, King: Selvakkadunkō Vāzhiyāthan, Forts Like Mountains

Herds of bull elephants adorned with ornaments on their
foreheads and necks, sprint to the battlefield.  Your soldiers
with dark, cloud-like, huge, black shields rise up and advance,
and defeat enemies with spears.  Your army  with brave men
and horses with trimmed manes surround guarded fortresses.

Your army burns the enemy land, and bright fires along with
the sun’s heat cause confusion and uproar as the bright flames
spew yellow sparks.

You have incredible ability to crush your opponents.
brave king skilled in battles!  If your brave enemies, with
mountain-like fortresses with moats with water attacking
the sides, offer bountiful tributes with humble words,
you let them thrive.

In their large lands, cattle herds graze on grass, fields produce
grains in abundance, and skilled farmers who enjoy toddy
reap and heap grain, and store them under portia trees.
They, with their heads adorned with white waterlilies that
grow in streams, chase striped honeybees with flapping wings
that swarm on their flowers as they work.
The vast lands of your enemies have become fit for songs.

Notes:  புறநானூறு 17 – மழையென மருளும் பல் தோல்.  தோட்டி செப்பி (11) – அருள் அம்பலவாணர் உரை – நின் கடுந்திறலுக்கு ஆற்றாது காவலை விண்ணப்பித்து, ஒளவை துரைசாமி உரை – வணங்கிய மொழிகளைச் சொல்லி, தோட்டி போலத் தலைவணங்கி மொழிதலின் ‘தோட்டி செப்பி’ என்றார்.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

Meanings:  இழை அணிந்து – wearing ornaments, எழுதரும் – rise, பல் களிற்று தொழுதியொடு – with many elephant herds, மழை என மருளும் – like clouds, மா இரும் பஃறோல் – many dark big shields (பஃறோல் – பல்தோல், குறியின் கீழ் லகரம் தகரம் வர ஆய்தமாகத் திரிந்து புணர்ந்தது), எஃகு படை அறுத்த – defeated spear carrying soldiers, கொய் சுவல் புரவியொடு – with horses with trimmed tufts, மைந்து உடை – with strength, ஆர் எயில் – fort that is difficult to seize, புடைபட – closely, வளைஇ – surrounding it (சொல்லிசை அளபெடை), வந்து புறத்து இறுக்கும் – staying around the fort, பசும் பிசிர் ஒள் அழல் – bright flames with yellow sparks, ஞாயிறு பல்கிய மாயமொடு – like the sun appearing as many with confusion, சுடர் திகழ் – bright flames, பொல்லா மயலொடு – with great confusion, பாடு  இமிழ்பு உழிதரும் – wanders with loud noises and uproar, மடங்கல் வண்ணம் – like death, கொண்ட கடுந்திறல் – ability to be harsh, துப்புத் துறை போகிய கொற்ற வேந்தே – O victorious king who is skilled in battles, புனல் பொரு கிடங்கின் – with moats where water crashes against the sides, வரை போல் இஞ்சி – mountain-like fort, அணங்கு உடைத் தடக் கையர் – fierce men with big hands, தோட்டி – protection, humbly, செப்பி – saying, பணிந்து திறை தருப நின் பகைவர் ஆயின் – if your enemies offer tribute in a humble manner, புல் உடை – with grass, வியன் புலம் – wide lands, பல் ஆ பரப்பி – spread cattle herds, வளன் உடை செறுவின் – in the field’s with abundance (வளனே – வளன் வளம் என்பதன் போலி, ஏகாரம் அசைநிலை, an expletive), விளைந்தவை உதிர்ந்த – grains that grew there dropped, களன் – field, space, அறு குப்பை – field cut (grains) heaped in a space (களன் – களம் என்பதன் போலி), காஞ்சிச் சேர்த்தி – collecting under the kānchi trees, பூவரச மரம், portia tree, Thespesia populnea, அரியல் – toddy, ஆர்கை – drinking, வன் கை – strong hands, வினைநர் – farmers, அருவி ஆம்பல் – white waterlilies that are raised in streams/ponds fed by waterfalls, மலைந்த சென்னியர் – those who are wearing on their heads (waterlily strands), ஆடு சிறை – flapping wings, வரி வண்டு – bees with stripes, ஓப்பும் – they chase, பாடல் சான்ற – fit for songs, அவர் அகன்தலை நாடே – that enemy’s widespread country (நாடே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 63, *அருவி ஆம்பல்*, பாடியவர்: கபிலர், பாடப்பட்டவர்: செல்வக்கடுங்கோ வாழியாதன், துறை: செந்துறைப் பாடாண்பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே;
பணியா உள்ளமொடு அணிவரக் கெழீஇ,
நட்டோர்க்கு அல்லது கண் அஞ்சலையே;
வணங்கு சிலை பொருத நின் மணம் கமழ் அகலம்
மகளிர்க்கு அல்லது மலர்ப்பு அறியலையே;  5
நிலம் திறம் பெயரும் காலை ஆயினும்,
கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையே;
சிறியிலை உழிஞைத் தெரியல் சூடிக்,
கொண்டி மிகைபடத் தண் தமிழ் செறித்துக்,
குன்று நிலை தளர்க்கும் உருமின் சீறி,  10
ஒருமுற்று இருவர் ஓட்டிய ஒள் வாள்
செரு மிகு தானை வெல்போரோயே!
ஆடு பெற்று அழிந்த மள்ளர் மாறி
நீ கண்டனையேம் என்றனர்; நீயும்
நும் நுகம் கொண்டினும் வென்றோய்; அதனால் 15
செல்வக் கோவே! சேரலர் மருக!
கால் திரை எடுத்த முழங்கு குரல் வேலி
நனந்தலை உலகம் செய்த நன்று உண்டு எனின்,
அடையடுப்பு அறியா *அருவி ஆம்பல்*
ஆயிர வெள்ள ஊழி  20
வாழியாத! வாழிய பலவே!

Pathitruppathu 63, Poet: Kapilar, King: Selvakkadunkō Vāzhiyāthan, Rare White Waterlilies

You don’t bow to anyone other than Brahmins.
With a mind that does not submit to others, you fear none
other than friends.  On your wide chest rubbed by bows
which you share only with your wives, you wear fragrant
flower garlands.

Landscapes might change with the weather, but your honest
words will never change.

Your cool Thamizh warriors wearing small-leaved ulignai flower
garlands collected tributes from enemy lands, rushed to battles
with rage like that of roaring thunder on summits, killed two
great kings in one strike with their shining swords, and brought
victory to you in fierce battles.

Victorious brave soldiers who once worked for enemy kings who
lost to you, switched sides and implored you to hire them since
they promised that their principles were like yours.  You did that
and won more battles due to your good outlook.

Oh king born of Chēra lineage!  Oh prosperous king Vāzhiyāthan!
You are astute and brave like your noble ancestors.  The roaring
oceans whose waves are hit by winds are fences to this huge world.
If the goodness of the people here counts, you will live for eons
with vellam number of years, and āmpal number of years which
is not the flower with stacks of leaves.

Notes:  வணங்கு சிலை பொருத நின் மணம் கமழ் அகலம் (4) – ஒளவை துரைசாமி உரை – வளைந்த இந்திரவில் போலும் மாலை கிடந்தலைக்கும் சாந்து பூசி மானங் கமழும் நின் மார்பு, அருள் அம்பலவாணர் உரை – வளைந்த வில் உராய்ந்த நின் மணம் பரக்கின்ற மார்பு.  கொண்டி மிகைபடத் தண் தமிழ் செறித்து (வரி 9) – ஒளவை துரைசாமி உரை – பகைப் புலத்தே கொள்ளத்தக்க பொருள் மிக உண்டாகுமாறு தண்ணிய தமிழ் வீரர்களாகிய தன் படையை மேன்மேற் செலுத்தி, அருள் அம்பலவாணர் உரை – கொள்ளை மிகுதியாக உண்டாக மாற்றாரது தண்ணிய தமிழ்ப் படையை எல்லாம் இடையறப்படுத்தி.  அருவி (19) – ஒளவை துரைசாமி உரை – ‘அரு வீ’ என்பது ‘அரு வி’ என குறுகிற்று, பூவில்லாத என்பதுபட நின்றது, அருமை இன்மை குறித்து நின்றது.  ஆயிர வெள்ள ஊழி (20) – ஒளவை துரைசாமி உரை – பல ஆயிரங்களாகப் பெருகிய வெள்ளமென்னும் எண்ணும் ஆகிய ஊழிகள்.  வெள்ளம்: ஐங்குறுநூறு 281 – வெள்ள வரம்பின் ஊழி போகியும், பதிற்றுப்பத்து 63 – ஆயிர வெள்ள ஊழி, பதிற்றுப்பத்து 90 – ஊழி வெள்ள வரம்பின ஆக.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).

Meanings:  பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே – you do not bow to anybody other than Brahmins, பணியா உள்ளமொடு – with a mind that does not bow, அணிவரக் கெழீஇ – be beautifully suited (கெழீஇ – சொல்லிசை அளபெடை), நட்டோர்க்கு அல்லது – other than friends, கண் – outlook, அஞ்சலையே – you have no fear, வணங்கு சிலை – curved bows, curved rainbows, பொருத – attacked,  நின் மணம் கமழ் அகலம் – your fragrant chest, மகளிர்க்கு அல்லது மலர்ப்பு அறியலையே – you do not show your wide chest to other than your women, நிலம் திறம் பெயரும் காலை ஆயினும் – even if landscapes change their traits, கிளந்த சொல் – uttered words, நீ பொய்ப்பு அறியலையே – you do not lie, சிறியிலை உழிஞைத் தெரியல் சூடி – wore small-leaved ulignai garland (சிறியிலை – சிறிய இலை, தொகுத்தல் விகாரம்), கொண்டி மிகைபட – to collect high tributes, தண் தமிழ் செறித்து – sent cool Thamizh warriors (தமிழ் – தமிழ்ப் படைகளுக்கு ஆகுபெயர்), குன்று நிலை தளர்க்கும் உருமின் சீறி – angry like the roaring thunder on the summits (உருமின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), ஒரு முற்று – in one siege, இருவர் ஓட்டிய –  beat two enemy kings, ஒள் வாள் – bright sword, செரு மிகு தானை – soldiers who are victorious in battles, வெல்போரோயே – Oh king who is victorious in battles, ஆடு பெற்று – won victories (when they worked for their kings), அழிந்த மள்ளர் – warriors who are ruined (by you) soldiers, மாறி – switched, நீ கண்டனையேம் என்றனர் – we will do what you want they said, நீயும் – you, நும் நுகம் கொண்டினும் – with your strength, with your fine outlook, வென்றோய் – you won, அதனால் – so, செல்வக் கோவே – O wealthy king, சேரலர் மருக – O Chēra heir, கால் திரை எடுத்த – wind hitting the waves and creating, முழங்கு குரல் வேலி – roaring fences, நனந்தலை உலகம் – wide spaced world, செய்த நன்று உண்டு எனின் – if the good things that people did stand, அடை அடுப்பு அறியா அருவி ஆம்பல் – āmpal number of years (a very high number) and not the āmpal plant with leaves that grows in water with leaves (அடுப்பு – அடுத்தல், சார்தல், சேர்தல்), ஆயிர வெள்ள ஊழி – live for eons with vellam number of years as limit, வாழியாத வாழிய பலவே – may you live long Oh king Vāzhiyāthan (பலவே – ஏகாரம் அசை நிலை, an expletive)

பதிற்றுப்பத்து 64, *உரை சால் வேள்வி*, பாடியவர்: கபிலர், பாடப்பட்டவர்: செல்வக்கடுங்கோ வாழியாதன், துறை: காட்சி வாழ்த்து, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

வலம்படு முரசின் வாய்வாள் கொற்றத்துப்
பொலம் பூண் வேந்தர் பலர் தில் அம்ம
அறம் கரைந்து வயங்கிய நாவின், பிறங்கிய
*உரை சால் வேள்வி* முடித்த கேள்வி,
அந்தணர் அருங்கலம் ஏற்ப நீர் பட்டு,  5
இருஞ்சேறு ஆடிய மணல் மலி முற்றத்துக்
களிறு நிலை முணை இய தார் அருந்தகைப்பின்,
“புறஞ்சிறை வயிரியர்க் காணின் வல்லே
எஃகு படை அறுத்த கொய் சுவல் புரவி,
அலங்கும் பாண்டில் இழை அணிந்து ஈம்” என  10
ஆனாக் கொள்கையை ஆதலின் அவ்வயின்
மா இரு விசும்பில் பல் மீன் ஒளி கெட
ஞாயிறு தோன்றியாங்கு, மாற்றார்
உறு முரண் சிதைத்த நின் நோன் தாள் வாழ்த்திக்
காண்கு வந்திசின், கழல் தொடி அண்ணல்!  15
மைபடு மலர்க் கழி மலர்ந்த நெய்தல்
இதழ் வனப்புற்ற தோற்றமொடு, உயர்ந்த
மழையினும் பெரும் பயம் பொழிதி; அதனால்
பசி உடை ஒக்கலை ஒரீஇய
இசை மேந்தோன்றல் நின் பாசறையானே.  20

Pathitruppathu 64, Poet: Kapilar, King: Selvakkadunkō Vāzhiyāthan, Famous Rituals

There are many jewel-wearing kings who have
triumphant drums and victorious soldiers with unfailing
swords.  Listen to me further!

You give generously to Brahmins who utter sacred chants
and perform famous rituals according to the esteemed Vedas.
Your sand-filled front yard has become muddy with the water
you pour on their hands along with gifts of fine jewels.
Swaying bull elephants hate to stand in that muddy soil.

You are in a palace protected by soldiers.
You tell your servants, “If you see artists, give without delay,
horses whose plumes have been trimmed, chariots and fine
jewels,” that were got after our soldiers defeated enemy
soldiers with spears.  You are a generous and virtuous man!

You ruin the fame of enemies who oppose you, like the rising
sun that makes the glittering night stars fade away in the wide
dark sky.  I came here to praise your feet, my lord.

Oh famous king who wears warrior anklets!  You are more
benevolent than the rainclouds that are beautiful like the
elegant-petaled blue lilies that bloom in dark backwaters.  You
gave bountiful gifts and removed the hunger of my relatives.
I came to your battle camp to see you and praise your strong
feet.

Notes:  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  வலம்படு முரசின் – with victorious drums, வாய்வாள் கொற்றத்து – with victories of soldiers with unfailing swords, பொலம் பூண் வேந்தர் – gold ornaments wearing kings, பலர் – there are a few, தில் – ஒழியிசை என்னும் பொருளில் வந்த இடைச் சொல், a particle which implies suggestion, அம்ம – அசைநிலை, an expletive, listen, அறம் கரைந்து வயங்கிய நாவின் – with tongues that uttered sacred words, பிறங்கிய – lofty, உரை சால் வேள்வி முடித்த கேள்வி – performed famous rituals according to the Vedas, அந்தணர் அருங்கலம் ஏற்ப – Brahmins accepting the fine jewels that you give (along with water), நீர் பட்டு இருஞ் சேறு ஆடிய மணல் மலி முற்றத்து – in the sand-filled front yard which becomes muddy because of all that constant water, களிறு நிலை முணைஇய – elephants hate to stand there, தார் அருந்தகைப்பின் – with protection from armies, புறம் சிறை – the other side of the wall, வயிரியர்க் காணின் – if you see artists, வல்லே – rapidly, எஃகு படை அறுத்த – defeated enemy warriors with spears, கொய் சுவல் புரவி – horses with trimmed tufts, அலங்கும் பாண்டில் – moving wheels (chariots) – the word is used for round objects, இழை அணிந்து ஈம் என – give jewels to wear, ஆனாக் கொள்கையை – you are with such principles that do not leave, ஆதலின் – so, அவ்வயின் – there, மா இரு விசும்பில் – in the dark big sky, பல் மீன் ஒளி கெட – ruined the light of many stars, ஞாயிறு தோன்றியாங்கு – like the sun that rises, மாற்றார் – enemies, உறு முரண் – great differences (உறு – மிக்க), சிதைத்த – crushed, நின் நோன் தாள் வாழ்த்தி – to praise your strong feet/strong efforts, காண்கு வந்திசின் – I came here to see you (வந்திசின் – சின் – தன்மை அசைச் சொல், an expletive of the first person), கழல் தொடி அண்ணல் – O leader with warrior bracelets, மைபடு மலர்க்கழி – black brackish waters, மலர்ந்த நெய்தல் – kuvalai, bloomed purple waterlilies, இதழ் வனப்புற்ற – with beautiful petals, தோற்றமொடு – with the appearance, உயர்ந்த – high, மழையினும் பெரும் பயம் – more benefit than the rainclouds, பொழிதி – you bestow (முன்னிலை வினைமுற்று), அதனால் – so, பசி உடை ஒக்கலை ஒரீஇய – you removed the hunger of relatives (ஒரீஇய – சொல்லிசை அளபெடை), இசை மேந்தோன்றல் – Oh greatly famous king, நின் பாசறையானே – in your battle camp (பாசறையானே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 65, *நாள் மகிழ் இருக்கை*, பாடியவர்: கபிலர், பாடப்பட்டவர்: செல்வக்கடுங்கோ வாழியாதன், துறை: பரிசிற்றுறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

எறி பிணம் இடறிய செம்மறுக் குளம்பின்
பரி உடை நல் மா விரி உளை சூட்டி,
மலைத்த தெவ்வர் மறம் தபக் கடந்த
காஞ்சி சான்ற வயவர் பெரும!
வில்லோர் மெய்ம்மறை சேர்ந்தோர் செல்வ!  5
பூண் அணிந்து எழிலிய வனைந்து வரல் இள முலை
மாண் வரி அல்குல் மலர்ந்த நோக்கின்,
வேய் புரைபு எழிலிய விளங்கு இறைப் பணைத்தோள்,
காமர் கடவுளும் ஆளும் கற்பின்,
சேண் நாறு நறு நுதல் சேயிழை கணவ!  10
பாணர் புரவல பரிசிலர் வெறுக்கை
பூண் அணிந்து விளங்கிய புகழ் சால் மார்ப! நின்
*நாள் மகிழ் இருக்கை* இனிது கண்டிகுமே,
தீம் தொடை நரம்பின் பாலை வல்லோன்
பையுள் உறுப்பின் பண்ணுப் பெயர்த்தாங்குச்,  15
வேறு செய் மாரியின் அளிக்கும் நின்
சாறுபடு திருவின் நனை மகிழானே.

Pathitruppathu 65, Poet: Kapilar, King: Selvakkadunkō Vāzhiyāthan, Happy Daily Assembly

Oh leader of brave men!   Your horses with wide plumes
prance around in the battlefield hindered by corpses
as their hooves stain red.  You shock your enemies and
win battles with your brave warriors.  You know about
the uncertainties of this body, my lord!  You are a body
shield to your archers, and you give to those who come to
you.

You are the husband of a virtuous woman with decorated,
painted, young breasts, elegant lines on her loins, huge
eyes, bamboo-like, beautiful, curved, glowing arms,
a brow with fragrance that spreads afar, who wears lovely
jewels,

Oh patron of bards!  You are the wealth of suppliants!
You are the famous man with fine jewels on your chest;
you are like the bard who tunes his pālai lute playing
sad tunes one after another;
you are like the rains which shower and soften the earth,
when you give liquor abundantly, making it festive.

Oh greatness!  We have seen your happy court!

Meanings:  எறி பிணம் – corpses of people who were attacked and killed,  இடறிய – hindered, செம்மறுக் குளம்பின் – with bloody red hooves, பரிஉடை – trotting, நல் மா – good horses, விரி – wide, உளை சூட்டி – had plumes, மலைத்த தெவ்வர் – shocked enemies, மறம் – bravery, தப – ruined, கடந்த – won, காஞ்சி – uncertainty, சான்ற – filled, வயவர் பெரும – Oh leader of warriors, வில்லோர் – soldiers bearing bows, மெய்ம்மறை – protection (body shield), சேர்ந்தோர் செல்வ – Oh king who gives to those who come to you, பூண் அணிந்து – wearing jewels, எழிலிய – beautiful, வனைந்து வரல் – painted with thoyyil designs, decorated, இள முலை – young breasts, மாண் வரி – special lines, esteemed lines, அல்குல் – loins, மலர்ந்த நோக்கின் – with bright eyes, வேய் புரைபு – like bamboo, எழிலிய – with beauty, விளங்கு இறைப் பணைத்தோள் – glowing curved thick arms, glowing curved bamboo-like arms, காமர் கடவுளும் – beautiful gods, ஆளும் கற்பின் – with governing ethics, with great virtue, சேண் – distance, நாறு – fragrance spreading, நறு நுதல – fragrant forehead, lovely forehead, சேயிழை கணவ – Oh husband of woman wearing lovely jewels, Oh husband of woman wearing red jewels (அன்மொழித்தொகை), பாணர் புரவல – Oh patron of bards, பரிசிலர் – needy, வெறுக்கை – wealth, பூண் அணிந்து – wearing jewels, விளங்கிய – glowing, புகழ் சால் மார்ப – Oh king with a famous chest, நின் நாள் மகிழ் இருக்கை – happy at your court in the morning, இனிது – sweet, கண்டிகுமே – we have seen (கண்டிகும் – தன்மைப் பன்மை வினைமுற்று, இகும் தன்மைக்கண் வந்த அசைநிலை, ஏ – அசைநிலை, an expletive), தீம் தொடை நரம்பின் – with sweetly tied strings, பாலை வல்லோன் – an expert in pālai lute, பையுள் உறுப்பின் பண்ணு – creating sorrow by playing music, பெயர்த்தாங்கு – like how he plays changing constantly, சேறு செய் – creating mud, மாரியின் – like the rains (இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), அளிக்கும் – provide, நின் – you , சாறுபடு – celebrating festivities, திருவின் – abundantly, நனை – alcohol, மகிழானே – in the happy royal court (ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 66, *புதல் சூழ் பறவை*, பாடியவர்: கபிலர், பாடப்பட்டவர்: செல்வக்கடுங்கோ வாழியாதன், துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

வாங்கிரு மருப்பின் தீம்தொடை பழுனிய
இடன் உடைப் பேரியாழ் பாலை பண்ணிப்,
படர்ந்தனை செல்லும் முதுவாய் இரவல!
இடி இசை முரசமொடு ஒன்றுமொழிந்து, ஒன்னார்
வேல் உடைக் குழூஉச்சமம் ததைய நூறிக்,  5
கொன்று புறம்பெற்ற பிணம் பயில் அழுவத்துத்
தொன்று திறை தந்த களிற்றொடு, நெல்லின்
அம்பண அளவை விரிந்து உறை போகிய
ஆர் பதம் நல்கும் என்ப, கறுத்தோர்
உறு முரண் தாங்கிய தார் அருந்தகைப்பின்,  10
நாள் மழைக் குழூஉச்சிமை கடுக்கும் தோன்றல்
தோல் மிசைத்து எழுதரும் விரிந்து இலங்கு எஃகின்
தார் புரிந்தன்ன வாள் உடை விழவின்,
போர்படு மள்ளர் போந்தொடு தொடுத்த
கடவுள் வாகைத் துய் வீ ஏய்ப்பப்  15
பூத்த முல்லைப் *புதல் சூழ் பறவை*
கடத்திடைப் பிடவின் தொடைக் குலைச் சேக்கும்,
வான் பளிங்கு விரைஇய செம் பரல் முரம்பின்,
இலங்கு கதிர்த் திரு மணி பெறூஉம்
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே.  20

Pathitruppathu 66, Poet: Kapilar, King: Selvakkadunkō Vāzhiyāthan, Bees Swarming on Bushes

Oh bard with ancient wisdom!  Listen!  With your big lute
with a curved, black stem, and its sweet strings tuned to sing
in pālai melody, you are going to the king with thoughts of
receiving gifts.

The big army of the king with thunder-like, roaring war drums,
killed enemy soldiers with spears, as some of them ran for
their lives, exposing their backs.  The battlefield was filled with
corpses.

Along with the elephants that he received as tributes from his
enemies, he gifts abundant measures of rice paddy, ruining the
lips of the rice measures that flare and destroying the covers
of the measures.

He stems attacks by his enemies with his brave battalions.
His soldiers with gleaming spears lift them above shields
as dark as mountain peaks surrounded by dark clouds, and
move them like swirling garlands.  His warriors wielding
swords fight ferociously in battles, which are their festivities.
They wear garlands strung with tender palm fronds and vākai
flowers that are divine to the goddess Kotravai.  Bees that
swarm on the flowers of mullai bushes go and rest on the
flower clusters of pidavam that appear like flower garlands.

He is the leader of a country with vast lands and towns where
those who live get beautiful gems that shine like the sun’s rays,
from dry mounds with white marble and red pebbles.

Notes:  நாள் மழைக் குழூஉ (11) – ஒளவை துரைசாமி உரை – நாட்காலையின் மழைக்கூட்டம், அருள் அம்பலவாணர் உரை – பருவக்காலத்து மேகத்தின் கூட்டம்போர்படு மள்ளர் (14) – ஒளவை துரைசாமி உரை – போர்க்கண் அன்றி பிறவாற்றால் இறத்தலை விரும்பாத வீரர், அருள் அம்பலவாணர் உரை – போரின்கண் தோன்றுகின்ற வீரர், வான் பளிங்கு (18) – ஒளவை துரைசாமி உரை – உயரிய பளிங்கு, அருள் அம்பலவாணர் உரை – வெள்ளிய பளிங்கு.  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  வாங்கிரு மருப்பின் – with a curved black stem, தீம் தொடை – sweet strings, பழுனிய – with perfection, இடன் உடைப் பேரியாழ் – with the big lute on your side, lyre, பாலை பண்ணி – create pālai tune, படர்ந்தனை செல்லும் – you thinking and going (படர்ந்தனை – வினையெச்சமுற்று), முதுவாய் – with wisdom, இரவல – O one who is seeking charity, இடி இசை முரசமொடு – thundering drum sounds, ஒன்றுமொழிந்து – swore oaths, uttered resolute words, ஒன்னார் – enemies, வேல் உடை – with spears, குழூஉ – group (இன்னிசை அளபெடை), சமம் – (warriors in) battle, ததைய – crushed, நூறி – ruined, கொன்று – killed, புறம்பெற்ற – made them run showing their backs, பிணம் பயில் – corpses filled, அழுவத்து – in the battlefield, தொன்று திறை தந்த களிற்றொடு – with male elephants that enemy kings gave as tributes in the past, நெல்லின் – paddy’s, அம்பண அளவை – measuring bowl, விரிந்து உறை போகிய – lips spread and flare and covers gets ruined, ஆர் பதம் நல்கும் – will give lot of food (rice paddy), என்ப – they say, கறுத்தோர் – enemies, உறு முரண் – very different (உறு – மிக்க), தாங்கிய – blocked, தார் அருந் தகைப்பின் – with an orderly tough battalion, நாள் மழை – seasonal/morning clouds, குழூஉச்சிமை – collected on the mountain peak (இன்னிசை அளபெடை), கடுக்கும் – similar (உவம உருபு), தோன்றல் – appearance, தோல் – shields, மிசைத்து எழுதரும் – lifting above and rising, விரிந்து இலங்கு எஃகின் – with spreading flourishing spears, தார் புரிந்தன்ன – like swaying garlands, like twisting garlands, வாள் உடை விழவின் – in battle festivities with swords, போர்படு மள்ளர் – warriors fighting in battle, போந்தொடு – with tender palm fronds, Borassus flabellifer, தொடுத்த – strung, கடவுள் – goddess kotravai, வாகை – vākai flowers, உழிஞ்சில், Sirissa tree, Albizia lebbeck, துய் – delicate, soft, வீ – flowers, ஏய்ப்ப – like, பூத்த முல்லை – bloomed jasmine, புதல் சூழ் பறவை – bush swarming bees, கடத்திடைப் பிடவின் – of the pidavam trees in the forests, randia genus, தொடைக் குலை – clusters of flower-strands that are like garlands, சேக்கும் – they  go and stay there, வான் பளிங்கு – white marble, tall pieces of marble, விரைஇய – spread, mixed (சொல்லிசை அளபெடை), செம்பரல் – red pebbles, முரம்பின் – on the mound, இலங்கு கதிர் – shining rays, திரு மணி – beautiful gems, பெறூஉம் – they get (இன்னிசை அளபெடை), அகன் கண் – wide places, வைப்பின் – with towns, நாடு கிழவோனே – the leader of the country (கிழவோனே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 67, *வெண்போழ்க் கண்ணி*, பாடியவர்: கபிலர், பாடப்பட்டவர்: செல்வக்கடுங்கோ வாழியாதன், துறை: பாணாற்றுப்படை, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு,
பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்க்
கடன் அறி மரபின் கைவல் பாண!
தெண்கடல் முத்தமொடு நன்கலம் பெறுகுவை,
கொல்படை தெரிய வெல் கொடி நுடங்க,  5
வயங்குகதிர் வயிரொடு வலம்புரி ஆர்ப்பப்,
பல் களிற்று இன நிரை புலம் பெயர்ந்து இயல்வர,
அமர்க் கண் அமைந்த அவிர் நிணப் பரப்பின்
குழூஉச் சிறை எருவை குருதி ஆரத்,
தலை துமிந்து எஞ்சிய ஆண் மலி யூபமொடு  10
உருவில் பேய் மகள் கவலை கவற்ற
நாடு உடன் நடுங்கப் பல் செருக் கொன்று,
நாறு இணர்க் கொன்றை *வெண்போழ்க் கண்ணி*யர்,
வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர்,
நெறிபடு மருப்பின் இருங்கண் மூரியொடு  15
வளைதலை மாத்த தாழ் கரும் பாசவர்
எஃகு ஆடு ஊனம் கடுப்ப மெய் சிதைந்து,
சாந்து எழில் மறைத்த சான்றோர் பெரு மகன்,
மலர்ந்த காந்தள் மாறாது ஊதிய
கடும் பறைத் தும்பி சூர் நசைத் தாஅய்ப்,  20
பறை பண் அழியும் பாடு சால் நெடு வரைக்
கல் உயர் நேரிப் பொருநன்,
செல்வக் கோமான் பாடினை செலினே.

Pathitruppathu 67, Poet: Kapilar, King: Selvakkadunkō Vāzhiyāthan, White Palmyra Tender Frond Garlands

Oh talented bard who knows his musical tradition well!
If you go and sing to our king with your renowned kin, he will
give you fine ornaments made in Kodumanam, and clear-ocean
pearls from the famous Panthar town.

In his greatly renowned Nēri mountain with tall peaks, rapidly
flying bees swarm on newly opened glory lily flowers, but lose
their ability to fly since they attack the flowers desired by the
gods.

Our king of great lineage is a leader to warriors.  He plans martial
strategies with his army leaders, his victory flags sway, gleaming
vayir horns and right-whorled conch shells blare, herds of bull
elephants rush to the combat zones where bloody battles are
fought, corpses are spread after valiant wars, their heads cut
off from their manly bodies, and flocks of vultures with huge
wings drink the flowing blood.  A formless female ghoul causes
distress making those who see her tremble in fear.

People in the countries he invades tremble, as he vanquishes his
enemies.

His warriors wear strands woven with fragrant clusters of
laburnum flowers and white palmyra fronds.  Their faces bear
scars of swords, and their respected bodies have battle marks.

He is the leader of warriors who bear scars on their sandal covered
chests that look like the marks on cutting boards on which meat is
cut by lowly meat sellers who indulge in the act of selling the meat
of cattle with fine horns and black eyes and animals with bent heads.

Notes:  வளைதலை மாத்த (15) – அருள் அம்பலவாணர் உரை – வளைந்த கொம்பினையுடைய விலங்குகளின், ஒளவை துரைசாமி உரை – வளைந்த தலையையுடைய விலங்குகளின்.  தாழ் கரும் பாசவர் (16) – அருள் அம்பலவாணர் உரை – இழிந்த வலிய பாசவர்,  ஒளவை துரைசாமி உரை – தாழ்ந்த இழிந்த பாசவர்.   கடும் பறைத் தும்பி (20) – அருள் அம்பலவாணர் உரை – நீங்காது ஊதிய தும்பி, ஒளவை துரைசாமி உரை – விரைந்து பறத்தலையுடைய தும்பி.

Meanings:  கொடுமணம் – Kodumanam town, பட்ட – made, நெடுமொழி – very famous, ஒக்கலொடு – with relatives, பந்தர் – Panthar, பெயரிய – with the name, பேரிசை மூதூர் – very famous town, கடன் அறி மரபின் கைவல் பாண – O talented bard who knows what is right as per tradition (கைவல் – தொழிலில் திறமை மிக்க) , தெள் கடல் முத்தமொடு – with clear ocean pearls, நன் கலம் பெறுகுவை – you’ll get fine ornaments, கொல் படை – killing armies, தெரிய – analyzed, வெல் கொடி – victory flags, நுடங்க – sway, வயங்கு கதிர் வயிரொடு – along with bright shining vayir horns, வலம்புரி – right-twisted conch shells, ஆர்ப்ப – create sounds, பல் களிற்று இனநிரை – elephant herds with male elephants, புலம் பெயர்ந்து இயல்வர – move from their place and go around (இயல்வர – திரிய), அமர்க்கண் -in the battlefield, அமைந்த அவிர் நிணப் பரப்பின் – corpses were all over the place, குழூஉ சிறை எருவை – flocks of vultures with wings, பிணம் தின்னும் கழுகு, Indian black vulture, Pondicherry vulture, red-headed vulture (குழூஉ  – இன்னிசை அளபெடை), குருதி ஆர – drank the blood, தலை துமிந்து – head cut off, எஞ்சிய – remaining, ஆண் மலி யூபமொடு – body with great manliness, உருவில் – without form, பேய்மகள் – female ghoul, கவலை கவற்ற – causing sorrow, நாடு உடன் நடுங்க – people in the country tremble, பல் செருக் கொன்று – kill people in many wars, நாறு இணர்க் கொன்றை – fragrant bunch of laburnum flowers, வெண்போழ்க் கண்ணியர் – men wearing strands on their heads made with palmyra fronds, வாள் முகம் பொறித்த – sword cut faces, மாண்வரி யாக்கையர் – bodies with esteemed lines, bodies with honor scars, நெறிபடு மருப்பின் – with perfect horns, இருங்கண் மூரியொடு – with black-eyed buffaloes, வளைதலை – bent heads, மாத்த – of animals, தாழ் கரும் – lowly and strong, பாசவர் –  meat sellers, எஃகு ஆடு ஊனம் கடுப்ப – like cutting boards on which knives are used to cut meat, மெய் சிதைந்து – bodies scarred, சாந்து எழில் மறைத்த – hiding the beauty of smeared sandalwood, சான்றோர் பெருமகன் – the leader of warriors, மலர்ந்த காந்தள் – bloomed glory lilies, மாறாது ஊதிய – swarm continuously, கடும் பறைத் தும்பி – very loud bees, சூர் நசை – desired by gods, தாஅய் – spread (இசை நிறை அளபெடை), பறை பண் அழியும் – lose their ability to fly, பாடு சால் – very famous, with great pride, நெடு வரை – tall mountains, கல் உயர் நேரி பொருநன் – king of the lofty Neri mountains, செல்வக் கோமான் – prosperous king, பாடினை செலினே- if you go to him and sing (செலினே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 68, *ஏம வாழ்க்கை*, பாடியவர்: கபிலர், பாடப்பட்டவர்: செல்வக்கடுங்கோ வாழியாதன், துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

கால் கடிப்பு ஆகக் கடல் ஒலித்தாங்கு,
வேறு புலத்து இறுத்த கட்டூர் நாப்பண்,
கடுஞ்சிலை கடவும் தழங்கு குரல் முரசம்
அகல் இரு விசும்பின் ஆகத்து அதிர,
வெவ்வரி நிலைஇய எயில் எறிந்து அல்லது  5
உண்ணாது அடுக்கிய பொழுது பல கழிய,
நெஞ்சு புகல் ஊக்கத்தர் மெய் தயங்கு உயக்கத்து
இன்னார் உறையுள் தாம் பெறின் அல்லது,
வேந்து ஊர் யானை வெண்கோடு கொண்டு,
கள் கொடி நுடங்கும் ஆவணம் புக்கு உடன்,  10
அருங்கள் நொடைமை தீர்ந்த பின் மகிழ் சிறந்து,
நாமம் அறியா *ஏம வாழ்க்கை*
வட புலம் வாழ்நரின் பெரிது அமர்ந்து, அல்கலும்
இன்னகை மேய பல் உறை பெறுப கொல்
பாயல் இன்மையின் பாசிழை ஞெகிழ,  15
நெடு மண் இஞ்சி நீள் நகர் வரைப்பின்,
ஓவு உறழ் நெடும் சுவர் நாள் பல எழுதிச்
செவ்விரல் சிவந்த அவ்வரிக் குடைச்சூல்,
அணங்கு எழில் அரிவையர்ப் பிணிக்கும்
மணம் கமழ் மார்ப, நின் தாள் நிழலோரே?  20

Pathitruppathu 68, Poet: Kapilar, King: Selvakkadunkō Vāzhiyāthan, Joyous Life

Your women who love you are saddened by your leaving.
They are without sleep in the bowers of the huge palace
in your tall adobe fortress.
Their fine jewels slipping down with sorrow, they draw lines
to count the number of days of separation on tall walls that
are like paintings, as their red fingers get redder.
Your elegant women wearing jingling anklets with pretty lines
are tied to you forever, oh king with a fragrant chest!

In the midst of your battle camp in another country,
drumsticks are like whipping winds, and the loud roars of  the
drums whose sounds reverberate in the sky are like the roars
of the ocean.

Soldiers protected by you ruined enemy fortresses
decorated with desirable designs.  They resolved not
to eat until their goal was accomplished.  Their bodies
might have been weak, but victory desires were strong
in their hearts until they succeeded.

They brought back elephant tusks belonging to enemy
kings, entered toddy shops with flags, and sold the
tusks for toddy.  Will they live each day without fear and
in constant ecstasy, like the celestials in heaven?

Notes:  நாம் – பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆ முறை மூன்றும் அச்சப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 69).  சுவரில் கோடிட்டு நாட்கணக்கு பார்த்தல் –  குறுந்தொகை 358 – ஆய் கோடு இட்டுச் சுவர்வாய் பற்றும், அகநானூறு 61 – நாள் இழை நெடுஞ்சுவர் நோக்கி நோய் உழந்து, அகநானூறு 289 – நாள் முறை இழைத்த திண்சுவர் நோக்கி, பதிற்றுப்பத்து 68 – ஓவு உறழ் நெடும் சுவர் நாள் பல எழுதிச் செவ்விரல் சிவந்த.  குடைச்சூல் – ஒளவை துரைசாமி உரை – சிலம்பு, புடைபட்டு உட்கருவை உடைத்தாதல் பற்றி, சிலம்பு குடைச்சூல் எனப் பட்டது.  அவ்வரிக் குடைச்சூல் (18) – ஒளவை துரைசாமி உரை – அழகிய வரிகளையும் சிலம்பையும், அருள் அம்பலவாணர் உரை – அழகிய வரியினையுடைத்ததாகிய சிலம்பினையுடைய.

Meanings:  கால் – the wind, கடிப்பு ஆக – as drumsticks, கடல் ஒலித்தாங்கு – like the ocean sounds, வேறு புலத்து – in foreign lands, இறுத்த – staying, கட்டூர் – military camp, நாப்பண் – in the midst, கடுஞ்சிலை கடவும் – creating loud sounds, தழங்கு குரல் முரசம் – roaring drums, அகல் இரு விசும்பின் ஆகத்து அதிர – roaring in the wide huge sky (ஆகத்து – விசும்பினிடத்தில், விசும்பின் உடலில்), வெவ்வரி – desirable lines, kolams, நிலைஇய – established, drawn (நிலைஇய – சொல்லிசை அளபெடை), எயில் எறிந்து அல்லது – other than destroying, உண்ணாது அடுக்கிய பொழுது பல கழிய – spent many days without food, நெஞ்சு புகல் ஊக்கத்தர் – those with desire in their hearts, மெய் தயங்கு உயக்கத்து இன்னார் – physically weakened enemies, உறையுள் தாம் பெறின் அல்லது – if we don’t confiscate this place where we are, வேந்து ஊர் யானை – enemy king’s riding elephants, வெண்கோடு கொண்டு – seizing their tusks, கள் கொடி – flags in front of the toddy shop, நுடங்கும் – swaying, ஆவணம் புக்கு உடன் – entering that street, அருங்கள் – rare/precious toddy, நொடைமை தீர்ந்த பின் – after the selling has ended, மகிழ் சிறந்து – with great joy, நாமம் அறியா – not knowing fear (நாமம் – நாம் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது), ஏம வாழ்க்கை – joyous life, வட புலம் வாழ்நரின் – like those who live in the north, those who live in heaven, like the celestials (இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), பெரிது அமர்ந்து – with great desire, அல்கலும் – every day, இன் நகை மேய பல் உறை பெறுப கொல் – will those who live get that sweet joy every day, பாயல் இன்மையின் – without sleep, பாசிழை ஞெகிழ – fine jewels slipping down, நெடு மண் இஞ்சி – tall clay fort, நீள் நகர் வரைப்பின் – within the huge palace limits, ஓவு உறழ் நெடும் சுவர் – tall walls that are like paintings (உறழ் – உவம உருபு, a comparison word), நாள் பல எழுதி – drawing lines for many days to count the number of days, செவ்விரல் சிவந்த – red fingers getting redder, அவ்வரி – beautiful lines, குடைச்சூல் – rounded anklets, அணங்கு எழில் – elegant beauty, அரிவையர் – young women, பிணிக்கும் – tied, மணம் கமழ் மார்ப –  oh man with fragrant chest, நின் தாள் – your feet, நிழலோரே – soldiers in your shade, soldiers in your protection (ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 69, *மண் கெழு ஞாலம்*, பாடியவர்: கபிலர், பாடப்பட்டவர்: செல்வக்கடுங்கோ வாழியாதன், துறை: வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும், வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்

மலை உறழ் யானை வான்தோய் வெல் கொடி,
வரை மிசை அருவியின் வயின் வயின் நுடங்கக்,
கடல்போல் தானைக் கடுங்குரல் முரசம்
கால் உறு கடலின் கடிய உரற,
எறிந்து சிதைந்த வாள்,  5
இலை தெரிந்த வேல்,
பாய்ந்து ஆய்ந்த மா,
ஆய்ந்து தெரிந்த புகல் மறவரொடு,
படுபிணம் பிறங்க நூறிப் பகைவர்
கெடு குடி பயிற்றிய கொற்ற வேந்தே! 10
நின் போல், அசைவில் கொள்கையர் ஆகலின், அசையாது
ஆண்டோர் மன்ற இம் *மண் கெழு ஞாலம்*
நிலம் பயம் பொழியச் சுடர் சினம் தணியப்,
பயங்கெழு வெள்ளி ஆநியம் நிற்ப,
விசும்பு மெய் அகலப் பெயல் புரவு எதிர  15
நால் வேறு நனந்தலை ஓராங்கு நந்த,
இலங்கு கதிர்த் திகிரி முந்திசினோரே.

Pathitruppathu 69, Poet: Kapilar, King: Selvakkadunkō Vāzhiyāthan, Earth Filled with Sand

In the battlefields, your attacking, mountain-like elephants
carry sky-high victory flags that sway and drape down like
waterfalls flowing down mountain peaks.

Your ocean-like wide army advances.  Your battle drums roar
ferociously like the loud ocean waves attacked by heavy winds.
Swords have broken and spears with leaf-shaped blades have
split, attacking enemies.  Your horses have grown tired of leaping
and assailing enemy warriors. Your chosen warriors who desire
wars are fatigued.  Reeking corpses of enemies are spread on the
field.

You took care of ruined enemy towns and helped their citizens
to get back to normal lives.

Oh victorious King!  Since your noble ancestors were principled
like you, they ruled this splendid earth with their bright wheels of
justice.  The land yielded abundant wealth, the sun’s heat was
toned down, beneficial Venus and other planets were where they
should be, the sky poured down heavy rains, and everything in the
four directions of this huge country flourished well.

Notes:  பயங்கெழு வெள்ளி ஆநியம் நிற்ப (14) – அருள் அம்பலவாணர் உரை – வெள்ளி மழைக்குப் பயன்படும் மற்றைக் கோள்களுடனே தான் நிற்கும் நாளிலே நிற்க, ஒளவை துரைசாமி உரை – பயனைச் செய்யும் வெள்ளி என்னும் கோள் மழைக்குக் காரணமாகிய ஏனை நாள் கோள்களுடனே சென்று நிற்ப.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  மலை உறழ் யானை – mountain-like elephants (உறழ் – உவம உருபு, a comparison word), வான் தோய் – sky high, வெல் கொடி – victory flags, வரை மிசை – mountain top, அருவியின் – like waterfalls (இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), வயின் வயின் – in all the places, நுடங்க – moving, கடல் போல் தானை – ocean-like army, கடுங்குரல் முரசம் – harsh sounding drums, கால் உறு கடலின் – like the ocean that is attacked by heavy wind (உறு – மிக்க, கடலின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), கடிய உரற – roaring loud, எறிந்து சிதைந்த வாள் – attacked and broken swords, இலை தெரிந்த வேல் – spears with chosen tops that are like leaves, spears with leaf shaped tops that are split, பாய்ந்து ஆய்ந்த மா – jumping and attacking horses became tired, ஆய்ந்து தெரிந்த – analyzed and chosen, புகல் மறவரொடு – with desiring warriors, படுபிணம் பிறங்க – dead bodies abound, நூறி – killing, பகைவர் – enemies, கெடு குடி – ruined towns, பயிற்றிய – took care of them, கொற்ற வேந்தே – O victorious king, நின் போல் – like you, அசைவில் கொள்கையர் – those with principles, ஆகலின் – since, அசையாது – unflinching, ஆண்டோர் மன்ற இம் மண் கெழு ஞாலம் – they certainly ruled this earth filled with sand, நிலம் பயம் பொழிய – land yielded benefits, சுடர் சினம் தணிய – extreme heat went down, பயங்கெழு வெள்ளி – beneficial planet Venus, ஆநியம் நிற்ப – stand there with other planets, விசும்பு – sky, மெய் அகல – wide space, பெயல் – rain, புரவு எதிர – offering protection, நால் வேறு – four directions, நனந்தலை – vast place, ஓராங்கு – together (ஓராங்கு – ஒருசேர), நந்த – to flourish, இலங்கு கதிர் – the bright rays, திகிரி – wheels of justice, முந்திசினோரே – your ancestors (ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 70, *பறைக் குரல் அருவி*, பாடியவர்: கபிலர், பாடப்பட்டவர்: செல்வக்கடுங்கோ வாழியாதன், துறை: செந்துறைப் பாடாண்பாட்டு, தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும், வண்ணம்: ஒழுகு வண்ணம்

களிறு கடைஇய தாள்,
மா உடற்றிய வடிம்பு,
சமம் ததைந்த வேல்,
கல் அலைத்த தோள்,
வில் அலைத்த நல் வலத்து,  5
வண்டு இசை கடாவாத் தண் பனம் போந்தைக்
குவி முகிழ் ஊசி வெண்தோடு கொண்டு,
தீம் சுனை நீர் மலர் மலைந்து மதஞ் செருக்கி,
உடை நிலை நல்அமர் கடந்து மறம் கெடுத்துக்,
கடுஞ்சின வேந்தர் செம்மல் தொலைத்த  10
வலம்படு வான் கழல் வயவர் பெரும!
நகையினும் பொய்யா வாய்மைப் பகைவர்
புறஞ்சொல் கேளாப் புரை தீர் ஒண்மைப்,
பெண்மை சான்று பெருமடம் நிலைஇக்
கற்பு இறை கொண்ட கமழும் சுடர் நுதல்  15
புரையோள் கணவ! பூண் கிளர் மார்ப!
தொலையாக் கொள்கை சுற்றம் சுற்ற
வேள்வியின் கடவுள் அருத்தினை; கேள்வி
உயர்நிலை உலகத்து ஐயர் இன்புறுத்தினை;
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை  20
இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித்
தொல் கடன் இறுத்த வெல் போர் அண்ணல்!
மாடோர் உறையும் உலகமும் கேட்ப
இழும் என இழிதரும் *பறைக் குரல் அருவி*
முழு முதல் மிசைய கோடுதொறும் துவன்றும்  25
அயிரை நெடுவரை போலத்,
தொலையாது ஆக நீ வாழும் நாளே.

Pathitruppathu 70, Poet: Kapilar, King: Selvakkadunkō Vāzhiyāthan, Waterfalls that Roar like Drums

Oh king with battle victories!  You won many wars
with your fine spear brigade, skilled archers with bows,
strong-shouldered warriors who threw stones at enemies,
soldiers who rode elephants directing them with their
bare feet, and warriors who directed horses with their
spurs.

Oh king wearing bright warrior anklets!  You wear garlands
made from blue waterlilies from sweet springs, woven with
needle-thin delicate palm fronds that are not swarmed by
bees.  You are consumed with a desire for war.  You ruin your
angry enemies in victorious battles, and rout their armies,
draining their strengths.

Oh king with faultless intelligence!  Even in humor you do not
lie.  You ignore your enemies who speak ill of you.

Oh lord who wears chest ornaments!  You are husband to an
esteemed, honorable, shy and modest woman with a bright
forehead.  You are surrounded by ethical friends, advisers and
relatives.

You perform battlefield rituals, surrounded by your ethical
warriors, offering to the gods.  You made wise warriors living
in the upper world happy with the songs of your poets, bards
and musicians, that praise their battle prowess.

You discharge your martial duty victoriously, and bow to friends
with tenderness, despite your unbending manliness towards
enemies.  You have protected the proud heritage of your ancestors
by having male heirs.

May you live an unending long life with prosperity, oh lord, like
the lofty Ayirai Mountain from whose peaks with huge bases,
full, loud waterfalls flow down with the roaring, reverberating
sounds of parai drums, which can be heard by those living in the
upper world.

Notes:  கல் அலைத்த (4) – ஒளவை துரைசாமி உரை – கல் தூணொடு பொருது மற்பயிற்சி பெற்றுக் காழ்ப்புற்றிருப்பது கூறுவார், “கல் அலைத்த தோள்” என்றார், அருள் அம்பலவாணர் உரை – வலிமையுடையயால் கல்லை வருத்திய தோள்.  மா உடற்றிய வடிம்பு (2) – ஒளவை துரைசாமி உரை – குதிரை மேலிருந்து பொரும் குதிரை வீரர் தம் தாளின் அக விளிம்பினால் அவற்றிற்குத் தம் குறிப்பை உணர்த்திச் செலுத்துபவாகலின் அச்சிறப்பு நோக்கி ‘மா உடற்றிய வடிம்பு’ என்றார்.  புறநானூறு 378 – கடு மா கடை இய விடு பரி வடிம்பின் – ஒளவை துரைசாமி உரை – குதிரையைச் செலுத்த அணியும் பரிவடிம்பு என்னும் காலணியுடைய, அருள் அம்பலவாணர் உரை – குதிரையைத் துரத்திய கால் விளிம்பு.  மாடோர் (23) – ஒளவை துரைசாமி உரை – மாடு = பொன், அவ்வுலகினையுடைய தேவரை மாடோர் என்றார்.  அயிரை நெடுவரை (26) – ஒளவை துரைசாமி உரை – அயிரை மலை மேற்கு மலைத்தொடரில் உள்ள ஒரு மலை.  சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம்,  உரியியல் 29).  கேள்வி உயர்நிலை உலகத்து ஐயர் இன்புறுத்தினை (18-19) – ஒளவை துரைசாமி உரை – கேள்வி என்புழி ஏதுப்பொருட்டாய (காரணம் பொருட்டாக) இன் உருபு விகாரத்தால் தொக்கது.  அறப்போர் புரிந்து உயிர் துறப்போர் வீரர் உறையும் துறக்கம் புகுவாராகலின், அவர்களை “உயர்நிலையுலகத்து ஐயர்” என்றார்.  அவருடைய ஒழுகலாற்றையும் போர்த்திறனையும் புலவர் பாட, பாணர் இசைக்க, கூத்தர் கண்டும் கேட்டும் சிறப்பித்ததால் அவர் இன்புறுவர் என்ற கருத்தால், “கேள்வி உயர்நிலை உலகத்து ஐயர் இன்புறுத்தினை” என்றார். இக்கொள்கை பத்தாம் நூற்றாண்டிலும் இருந்து வந்தது என்பதற்கு திருதக்கத்தேவர் எழுதிய சீவக சிந்தாமணி சான்று பகர்கின்றது.  இனி, ஈண்டுக் கூறிய ஐயரை முனிவராக்கி, அவர் உரைத்த மறைகளை ஓதுவது அவர்க்கு இன்பம் செய்யுமென்று கொண்டு, இது கூறினார் என்பாருமுளர்.  துவன்று – துவன்று நிறைவு ஆகும் – (தொல்காப்பியம், உரியியல் 36).

Meanings:  களிறு கடைஇய தாள் – feet that goaded and directed elephants (கடைஇய – சொல்லிசை அளபெடை), மா உடற்றிய – goading horses, வடிம்பு – spurs, edge of feet, சமம் – battles, ததைந்த – ruined, வேல் – spears, spear brigade, கல் அலைத்த தோள் – arms that attacked rocks, shoulders that are strong like rocks, வில் – warriors with bows, அலைத்த – distressed enemies, நல் வலத்து – good victory, வண்டு இசை கடாவா – bees not singing, தண் பனம் போந்தை – cool palmyra palm trees, Borassus flabellifer, குவி – pointed, முகிழ் – new fronds, ஊசி – sharp needle, வெண்தோடு கொண்டு – with white fronds (leaves – குருத்து இலை), தீம் சுனை நீர் – sweet spring water, மலர் மலைந்து – wearing flowers, மதம் செருக்கி – arrogant with strength, proud with strength, உடை நிலை – with that situation, நல் அமர் கடந்து – winning good battles, மறம் கெடுத்து – destroying enemy strength, கடுஞ்சின வேந்தர் – very angry enemy kings, செம்மல் தொலைத்த – lost their leadership, வலம்படு – victorious, வான் கழல் – bright anklets, வயவர் பெரும – leader of warriors, நகையினும் பொய்யா வாய்மை – even as a joke you don’t lie, பகைவர் புறஞ்சொல் கேளா – you don’t listen to enemies’ derogatory words, புரை தீர் – faultless, ஒண்மை – intelligence, பெண்மை சான்று – with shyness, பெருமடம் நிலைஇ – with established humility (நிலைஇ – சொல்லிசை அளபெடை), கற்பு இறை கொண்ட – with honor, with virtue, கமழும் சுடர் நுதல் – fragrant bright forehead, புரையோள் கணவ – oh lord who is an esteemed woman’s husband, பூண் கிளர் மார்ப – oh lord wearing many jewels on your chest, தொலையாக் கொள்கை – with unspoiled principles, with fine principles, சுற்றம் சுற்ற – warriors surrounding you, வேள்வியின் – with battlefield rituals (களவேள்வி), கடவுள் அருத்தினை – you offered to the gods, கேள்வி உயர்நிலை உலகத்து ஐயர் இன்புறுத்தினை – you made wise men of the upper world happy with the music of poets and artists, you made those in the upper world happy with chanting the Vedas, வணங்கிய சாயல் – humble and delicate nature, bowing to elders, வணங்கா ஆண்மை – unbending manliness, இளம் துணைப் புதல்வரின் முதியர்ப் பேணி – protecting elders by getting male heirs to support, தொல் கடன் இறுத்த – performed old responsibilities, fulfilled old obligations, வெல் போர் அண்ணல் – noble leader who is victorious in battles, மாடோர் உறையும் உலகமும் கேட்ப – even those living in the upper worlds (the celestialials) can hear, இழும் என இழிதரும் – they flow down with loud noises, பறைக்குரல் அருவி – waterfalls sounding like parai drums, முழு முதல் – huge bases, மிசைய – with peaks, atop, கோடுதொறும் – from all the mountain peaks, துவன்றும் – are full, அயிரை நெடுவரை போல – like the tall Ayirai mountain, தொலையாது ஆக நீ வாழும் நாளே – you should live long without losing time (நாளே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிகம்
மடியா உள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த
நெடு நுண் கேள்வி அந்துவற்கு, ஒரு தந்தை
ஈன்ற மகள் பொறையன் பெருந்தேவி ஈன்ற மகன்,
நாடு பதிபடுத்து நண்ணார் ஓட்டி,
வெருவரு தானை கொடு செருப் பல கடந்து,  5
ஏத்தல் சான்ற இடன் உடை வேள்வி
ஆக்கிய பொழுதின் அறத் துறை போகி,
மாய வண்ணனை மனன் உறப் பெற்றவற்கு
ஓத்திர நெல்லின் ஒகந்தூர் ஈத்துப்
புரோசு மயக்கி  ,10
மல்லல் உள்ளமொடு மாசற விளங்கிய
செல்வக்கடுங்கோ வாழியாதனைக்,
கபிலர் பாடினார் பத்துப்பாட்டு.

Epilog
To victorious King Anthuvan Chēral, with fine knowledge
of the Vedas and devoid of laziness in his heart, and his
queen, the daughter of Poraiyan, was born Selvakadungo
Vāzhiyāthan, who created many towns, chased away enemies
with his fierce armies, won victories over those who invaded,
performed superior, renowned rituals, accepted Vannan
as his teacher, donated Ōkanthūr where rice is grown for
rituals, had more knowledge than his own priest, had a
benevolent heart, and shined without any blemish.

Kapilar sang these ten songs for the great king with no blemish.

Meanings:  மடியா உள்ளமொடு – without laziness in the heart, மாற்றோர்ப் பிணித்த – won over enemies, நெடு நுண் கேள்வி – with fine knowledge of Vedas, அந்துவற்கு – to Anthuvan Chēral, ஒரு தந்தை ஈன்ற மகள் – a daughter born to her father, பொறையன் பெருந்தேவி ஈன்ற மகன் – son born to the Chēra queen, நாடு பதிபடுத்து – created many towns, நண்ணார் ஓட்டி – chased away enemies, won battles against enemy kings, வெருவரு தானை – with his fierce armies, கொடு செருப் பல கடந்து – won many harsh battles, ஏத்தல் சான்ற இடன் உடை வேள்வி ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி – performed renowned rituals, மாய வண்ணனை மனன் உறப் பெற்றவற்கு – Vannan as his teacher, ஓத்திர நெல்லின் ஒகந்தூர் ஈத்து – he donated Ōkanthūr town where rice is grown for rituals, புரோசு மயக்கி – knew more than his priest, மல்லல் உள்ளமொடு – with a great heart, மாசற விளங்கிய செல்வக்கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடினார் பத்துப்பாட்டு – these ten songs are sung by Kapilar for faultless splendid Selvakadungo Vāzhiyāthan

பதிற்றுப்பத்து 71, *குறுந்தாள் ஞாயில்*, பாடியவர்: அரிசில்கிழார், பாடப்பட்டவர்: பெருஞ்சேரல் இரும்பொறை, துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்

அறாஅ யாணர் அகன் கண் செறுவின்
அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து,
செறு வினை மகளிர் மலிந்த வெக்கைப்,
பரூஉப்பகடு உதிர்த்த மென் செந்நெல்லின்
அம்பண அளவை உறை குவித்தாங்குக்,  5
கடுந்தேறு உறு கிளை மொசிந்தன துஞ்சும்
செழுங்கூடு கிளைத்த இளந்துணை மகாரின்,
அலந்தனர் பெரும நின் உடற்றியோரே;
ஊர் எரி கவர உருத்து எழுந்து உரைஇப்
போர் சுடு கமழ் புகை மாதிரம் மறைப்ப.  10
மதில்வாய்த் தோன்றல் ஈயாது தம் பழி ஊக்குநர்
குண்டு கண் அகழிய *குறுந்தாள் ஞாயில்*
ஆர் எயில் தோட்டி வெளவினை; ஏறொடு
கன்று உடை ஆயம் தாண இப் புகல் சிறந்து
புலவு வில் இளையர் அங்கை விடுப்ப,  15
மத்துக் கயிறு ஆடா வைகல் பொழுது நினையூஉ,
ஆன் பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்கப்
பதி பாழ் ஆக வேறு புலம் படர்ந்து,
விருந்தின் வாழ்க்கையொடு பெருந்திரு அற்றென,
அருஞ்சமத்து அரு நிலை தாங்கிய புகர் நுதல்  20
பெரும் களிற்று யானையொடு அருங்கலம் தராஅர்,
மெய்பனி கூரா அணங்கு எனப் பராவலின்,
பலி கொண்டு பெயரும் பாசம் போலத்
திறை கொண்டு பெயர்தி; வாழ்க நின் ஊழி!
உரவரும் மடவரும் அறிவு தெரிந்து எண்ணி,  25
அறிந்தனை அருளாய் ஆயின்,
யார் இவண் நெடுந்தகை வாழுமோரே?

Pathitruppathu 71, Poet: Arisil Kizhār, King: Perumchēral Irumporai, Bastion with Short Steps
Attacked by your army, your enemies ran away in
distress like youngsters who disturbed a large honeycomb
with swarms of stinging bees, that appears like a heap of rice
with measuring bowls with covers thrust into it, left there
after threshing rice paddy using fat buffaloes in the nearby pads,
that grow in the flourishing fields that yield continuous harvests,
harvested by female reapers who cut and remove the white and
blue waterlilies in the watery fields.

You attacked and seized your enemies’ well-protected forts
with bastions with short steps, deep moats, gates, set fires
in their towns, which rose up high and burned piles of paddy,
and stinking smoke spread around, as visibility was lost on all
directions.

Cattle herders who live with fear gave oxen, cows and calves to
your soldiers who carry flesh-reeking bows, and they donated
them generously to others.
Kazhuvul, the leader of cattle herders, bowed to you and gave
tributes, wanting to protect his men in whose houses buttermilk
churning sounds are heard in the mornings.

You accepted his offerings and moved on to attack other enemies,
and destroyed their towns.  Those who did not give you big bull
elephants with spotted faces and precious jewels, feared that you
were a distressing deity and worshipped you.  You accepted their
tributes like a ghoul which accepts offerings and moves on.

May you live long your Greatness!  If you do not gift the wise and
the ignorant, analyzing who they are, oh great lord, who can live in
this world?

Notes:  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  அம்பண அளவைக்கு உறை இடுதல் – பதிற்றுப்பத்து 66 – அம்பண அளவை விரிந்து உறை போகிய.  கூரா – கூர, செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  பராவலின் – பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 86).

Meanings:  அறாஅ யாணர் – uninterrupted new wealth (அறாஅ – இசை நிறை அளபெடை), அகன்கண் செறுவின் – in the wide field, அருவி ஆம்பல் – white waterlilies in the water ponds fed by waterfalls, நெய்தலொடு – with blue waterlilies, அரிந்து – cut, செறு வினை மகளிர் – women who do harvesting work, மலிந்த – abundantly (மெலிந்த என்றால் ‘நெருங்கிய’), வெக்கை – nearby flat pad (place for threshing grains), பரூஉப் பகடு – fat buffaloes, huge buffaloes (பரூஉ – இன்னிசை அளபெடை), உதிர்த்த மென் செந்நெல்லின் – threshed delicate fine paddy, threshed delicate red paddy, அம்பண அளவை – measuring bowls that are used to measure grain, உறை குவித்தாங்கு – like placed with covers, கடுந்தேறு – stinging hard and causing pain, உறு கிளை மொசிந்தன துஞ்சும் – swarms of bees residing together (உறு – மிக்க), செழுங்கூடு – big hives, hives with abundant honey, கிளைத்த – கலைத்த, breaking, disturbing the bees, இளம் துணை மகாரின் – like the youngsters (இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), அலந்தனர் – they were sad, பெரும – oh greatness, நின் உடற்றியோரே – those who are your enemies, ஊர் எரி கவர – fire burning the towns, உருத்து எழுந்து – rose up with heat, உரைஇ – spread (உரைஇ – சொல்லிசை அளபெடை), போர் – battles, சுடு – burning, கமழ் புகை – smelling smoke, மாதிரம் மறைப்ப – hides the directions, மதில்வாய்த் தோன்றல் ஈயாது – not appearing outside of their gates, தம் பழி – their blame, ஊக்குநர் – those who encourage, குண்டு கண் அகழிய – with deep moats, குறுந்தாள் – small steps, ஞாயில் – breastwork of forts, bastion, ஆர் எயில் – difficult fort, தோட்டி – protection, வெளவினை – you seized (வினையெச்சமுற்று), ஏறொடு – with oxen, கன்று உடை ஆயம் – herds with calves, தாண இப் புகல் சிறந்து – with desire for them, புலவு வில் – flesh stinking bows, இளையர் – young men (warriors), அங்கை விடுப்ப – they let them go (அங்கை – உள்ளங்கை, palm), மத்துக் கயிறு ஆடா வைகல் பொழுது – early mornings when buttermilk rods don’t churn, நினையூஉ – thinking (இன்னிசை அளபெடை), ஆன் பயம் வாழ்நர் – herders who make a livelihood with cattle, கழுவுள் தலை மடங்க – Kazhuvul bowed to you, பதி பாழ் ஆக – went and destroyed towns, வேறு புலம் படர்ந்து – go to other lands, விருந்தின் வாழ்க்கையொடு – with a life with new prosperity, பெருந்திரு – great wealth, அற்றென – thought it was bad, அருஞ்சமத்து – in tough battles, அரு நிலை தாங்கிய – stood firmly and tolerated, புகர் நுதல் – spotted forehead, பெரும் களிற்று யானையொடு – with big male elephants, அருங்கலம் தராஅர் – those who did not give precious jewels as tributes (இன்னிசை அளபெடை), மெய்பனி கூரா – body trembling greatly, அணங்கு என – like you were a god, பராவலின் – since they worshipped you, பலி கொண்டு பெயரும் – taking offerings and leaving, பாசம் போல – like a spirit, like a ghoul, திறை கொண்டு பெயர்தி – you take their tributes and leave, வாழ்க – may you live long, நின் – your, ஊழி – living days, உரவரும் – and wise people, மடவரும் – and stupid people, அறிவு தெரிந்து எண்ணி அறிந்தனை அருளாய் ஆயின் – if you do not analyze and shower your graces, யார் இவண் – who here, நெடுந்தகை – oh great lord, வாழுமோரே – who can live in this world (ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 72, *உருத்து எழு வெள்ளம்*, பாடியவர்: அரிசில்கிழார், பாடப்பட்டவர்: பெருஞ்சேரல் இரும்பொறை, துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

இகல் பெருமையின் படை கோள் அஞ்சார்,
சூழாது துணிதல் அல்லது வறிது உடன்
காவல் எதிரார் கறுத்தோர் நாடு; நின்
முன் திணை முதல்வர்க்கு ஓம்பினர் உறைந்து,
மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும்  5
நன்று அறி உள்ளத்துச் சான்றோர் அன்ன நின்
பண்பு நன்கு அறியார் மடம் பெருமையின்;
துஞ்சல் உறூஉம் பகல் புகு மாலை,
நிலம் பொறை ஒராஅ நீர் ஞெமர வந்து ஈண்டி,
உரவுத் திரை கடுகிய *உருத்து எழு வெள்ளம்10
வரையா மாதிரத்து இருள் சேர்பு பரந்து,
ஞாயிறு பட்ட அகன்றுவரு கூட்டத்து
அம் சாறு புரையும் நின் தொழில் ஒழித்துப்,
பொங்கு பிசிர் நுடக்கிய செஞ்சுடர் நிகழ்வின்
மடங்கல் தீயின் அனையை,  15
சினங் கெழு குருசில் நின் உடற்றிசினோர்க்கே.

Pathitruppathu 72, Poet: Arisil Kizhār, King: Perumchēral Irumporai, Floods Rising up with Rage

Your enemies do not understand your greatness which
is like that of wise men.  You are a protector of the ancestors
of your clan, insisting and nurturing your citizens with a just
heart.

If your enemies with great enmity want to wage wars with
you, they will do it without fear and without giving it any
thought.  They are unable to protect their own countries.

Oh king with great rage!   You are not like a sweet festival
to your enemies.  You are like the hot flame of the sun with
spreading rays that dries up the raging flood water with
rising, fierce waves that spreads all over the land with
darkness, at the end of time when all living beings on earth
die.

Notes:  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  ஒராஅ (9) – பழைய உரை – ஒராஅ என்றதனை ஒருவ எனத் திரிக்க.  ஒருவுதல் – நீங்குதல்.  ஈண்டி (9) – பழைய உரை – ஈண்டி என்பதனை ஈண்ட எனத் திரிக்க.

Meanings:  இகல் பெருமையின் – due to great differences, due to great enmity, படை கோள் அஞ்சார் – they are not afraid of being seized in battles, they are not afraid of being killed in battles, சூழாது துணிதல் – getting bold without analyzing, அல்லது – other than, வறிது – a little bit, உடன் காவல் எதிரார் – they are unable to protect, கறுத்தோர் நாடு – enemy countries, நின் – your, முன் திணை முதல்வர்க்கு – to the ancestors in your clan, ஓம்பினர் உறைந்து – being of protection, மன்பதை காப்ப – protecting the citizens, அறிவு வலியுறுத்தும் – insisting on good behavior, நன்று அறி உள்ளத்துச் சான்றோர் அன்ன – like wise men who know well, நின் பண்பு நன்கு அறியார் – they do not know well your nature, மடம் பெருமையின் – due to their great ignorance, துஞ்சல் உறூஉம் பகல் புகு மாலை – end of time when all lives die (உறூஉம் – இன்னிசை அளபெடை), நிலம் – land, பொறை – burden, ஒராஅ – to be removed (இசை நிறை அளபெடை), நீர் ஞெமர வந்து ஈண்டி – water spreads and collects, உரவுத் திரை- strong waves, moving waves, கடுகிய – rapidly, உருத்து எழு வெள்ளம் – raging rising floods, like the flood waters are flowing in rage, வரையா மாதிரத்து – with limitless spaces in all directions, இருள் சேர்பு பரந்து – darkness spreads together, ஞாயிறு பட்ட அகன்றுவரு கூட்டத்து – touched by the sun’s wide rays, அம் சாறு – a lovely festival, புரையும் – like, நின் தொழில் – your business, ஒழித்து – removing, பொங்கு பிசிர் – overflowing water spray, நுடக்கிய – ruined, dried up, செஞ்சுடர் நிகழ்வின் – like the flame-hot time, மடங்கல் தீயின் அனையை – you are like the end of all fire (தீயின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு. இரண்டாம் வேற்றுமை உருபான ஐ வரவேண்டிய இடத்தில் வந்ததால் வேற்றுமை மயக்கம்), சினம் கெழு குருசில் – Oh king filled with rage, நின் உடற்றிசினோர்க்கே – to your enemies (உடற்றிசினோர்க்கே – இசின் படர்க்கையின்கண் வந்தது, an expletive of the third person, ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 73, *நிறந்திகழ் பாசிழை*, பாடியவர்: அரிசில்கிழார், பாடப்பட்டவர்: பெருஞ்சேரல் இரும்பொறை, துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும்
பிறர்க்கு நீ வாயின் அல்லது நினக்குப்
பிறர் உவமம் ஆகா ஒரு பெரு வேந்தே!
………………………..
………………………..
மருதம் சான்ற மலர்தலை விளை வயல்
செய்யுள் நாரை ஒய்யும் மகளிர் 5
இரவும் பகலும் பாசிழை களையார்,
குறும் பல் யாணர்க் குரவை அயரும்
காவிரி மண்டிய சேய் விரி வனப்பின்
புகாஅர்ச் செல்வ! பூழியர் மெய்ம்மறை!
கழை விரிந்து எழுதரு மழை தவழ் நெடுங்கோட்டுக்  10
கொல்லிப் பொருந கொடித் தேர்ப் பொறைய! நின்
வளனும் ஆண்மையும் கை வண்மையும்
மாந்தர் அளவு இறந்தன எனப் பல் நாள்
யான் சென்று உரைப்பவும் தேறார்; பிறரும்
சான்றோர் உரைப்பத் தெளிகுவர் கொல்லென 15
ஆங்கு மதி மருளக் காண்குவல்;
யாங்கு உரைப்பேன் என வருந்துவல் யானே.

Pathitruppathu 73, Poet: Arisil Kizhār, King: Perumchēral Irumporai, New Jewels on the Chest

Both intelligent and stupid people might think that you
are their equal.  But you cannot be compared to others.
You have no equal, my king!

…………………………………
…………………………………
In your huge marutham fertile fields, young women
chase pelicans that come to eat their grains.  They do not
remove their fine jewelry at night or day, but perform
many new kuravai dances.

Lord of the land where River Kaviri flows far and wide!
Oh king of Puhār!  You are body armor to the Pūliyars.

Lord of the mountain country with flags on your chariots!
You are the king of Kolli Mountain where bamboo forests
rise high, and clouds spread on tall peaks.

You are prosperous, brave and benevolent beyond human
comprehension.  I said this to your enemies a few times
and they didn’t understand.  Wise people have stated it
to them clearly, but they are still confused.  What can I say?
I feel sorry for them.

Notes:  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

Meanings:  உரவோர் எண்ணினும் – even if intelligent people think, மடவோர் எண்ணினும் – even if stupid people think, பிறர்க்கு – to others, நீ – you, வாயின் அல்லது – other than not being compared to others, நினக்குப் பிறர் உவமம் ஆகா – others are not comparisons to you, ஒருபெரு – no equal, வேந்தே – oh king, ………… missing sections of poem, மருதம் சான்ற – with agricultural land (fields and ponds), மலர்தலை – wide lands, விளை வயல் – mature fields, fertile fields, செய்யுள் – cultivated field, நாரை ஒய்யும் மகளிர் – women who chase pelicans, இரவும் பகலும் – night and day, பாசிழை களையார் – do not remove their fine jewels, குறும் பல் – short and many, யாணர் குரவை அயரும் – perform new kuravai dances, காவிரி மண்டிய – Kaviri flowing with abundant water, சேய் – far, விரி வனப்பின் – with wide spaces, புகாஅர்ச் செல்வ – oh king of Puhār (புகாஅர்- இசை நிறை அளபெடை), பூழியர் மெய்ம்மறை – body armor to Pūliyars, கழை விரிந்து எழுதரு – where bamboo spreads and rises high, மழை தவழ் – clouds spread, நெடுங்கோட்டு –  with tall mountains, கொல்லிப் பொருந – oh king of Kolli Mountain, கொடித்தேர்ப் பொறைய – oh king of a mountain country who owns chariot flags, நின் – your, வளனும் ஆண்மையும் – prosperity and bravery, கை வண்மையும் – charitable, மாந்தர் அளவு இறந்தன என – that is beyond human comprehension, பல் நாள் யான் சென்று உரைப்பவும் – even when I said it for few days, தேறார் – they did not understand, பிறரும் சான்றோர் உரைப்ப –  when wise people say, தெளிகுவர் கொல் என – thinking whether they will understand, ஆங்கு மதி மருளக் காண்குவல் – I see them confused (காண்குவல் – தன்மை ஒருமை வினைமுற்று, first person singular verb ending), யாங்கு உரைப்பேன் – what can I say, என – thus, வருந்துவல் யானே – I feel sad (யானே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 74, *நலம் பெறு திரு மணி*, பாடியவர்: அரிசில்கிழார், பாடப்பட்டவர்: பெருஞ்சேரல் இரும்பொறை, துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது,
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச்
சாய் அறல் கடுக்கும் தாழ் இருங்கூந்தல்
வேறுபடு திருவின் நின் வழி வாழியர்,
கொடுமணம் பட்ட வினை மாண் அருங்கலம்,  5
பந்தர்ப் பயந்த பலர் புகழ் முத்தம்,
வரை அகம் நண்ணிக் குறும் பொறை நாடித்,
தெரியுநர் கொண்ட சிரறு உடைப் பைம்பொறிக்,
கவை மரம் கடுக்கும் கவலைய மருப்பின்,
புள்ளி இரலைத் தோல் ஊன் உதிர்த்துத்  10
தீது களைந்து எஞ்சிய திகழ் விடு பாண்டில்
பருதி போகிய புடை கிளை கட்டி,
எஃகு உடை இரும்பின் உள் அமைத்து, வல்லோன்
சூடு நிலை உற்றுச் சுடர்விடு தோற்றம்
விசும்பு ஆடு மரபின் பருந்து ஊறு அளப்ப,  15
*நலம் பெறு திருமணி* கூட்டு நல் தோள்,
ஒடுங்கு ஈர் ஓதி ஒண்ணுதல் கருவில்
எண் இயல் முற்றி ஈர் அறிவு புரிந்து,
சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும்
காவற்கு அமைந்த அரசு துறை போகிய  20
வீறு சால் புதல்வன் பெற்றனை இவணர்க்கு,
அருங்கடன் இறுத்த செருப்புகல் முன்ப
அன்னவை மருண்டனென் அல்லேன்; நின் வயின்
முழுது உணர்ந்து ஒழுக்கும் நரை மூதாளனை
வண்மையும், மாண்பும். வளனும், எச்சமும்,  25
தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு என
வேறுபடு நனந்தலைப் பெயரக்
கூறினை பெரும, நின் படிமையானே.

Pathitruppathu 74, Poet: Arisil Kizhār, King: Perumchēral Irumporai, Bright Beautiful Gems

You listened to Vedas, performed rituals without fail,
and the wise ascetics were in bliss.  Your queen who
resembles Thirumakal, her black flowing hair like fine,
black sand has joined you in this.

For you to have heirs to your royal throne, she did the
ceremonies, wearing splendid precious jewels made in
Kodumanam, and pearls from Panthar, which were
praised by all.

Experts searched in the mountains, sought in the hills and
finally found a perfect stag with scattered spots and forked
antlers that look like forked tree branches.  They killed the
animal, removed its skin from the flesh, and cleaned it.
They cut circles of that skin and a skilled tailor with metal
needles sewed bright gems and pearls on the edges, and the
pieces dazzled.  They tied them to the queen’s fine arms.
A kite flying in the sky was confused thinking that there was
raw flesh to eat.

Your queen with oiled, curly hair and bright forehead
carried your son for ten months.  He was born with wisdom,
perfection and other virtuous traits necessary to protect
your citizens and perform regal duties.  You have a great
son who is a gift to this world.

Oh strong king who loves wars and discharges difficult duties!
I’m not surprised on seeing all of this.
However, I’m awed that you told the wise old man who knows
everything that charity, esteem, prosperity, having an heir,
and godliness come to those who have done penances all their
lives, and sent him to the huge forest to practice his asceticism.

Notes:  புறநானூறு 166 – புல்வாய்க் கலைப் பச்சை சுவல் பூண் ஞாண் மிசைப் பொலிய.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).  ஒடுங்கு ஈர் ஓதி (16) – அருள் அம்பலவாணர் உரை – சுருளான முடி, ஒளவை துரைசாமி உரை – ஒடுங்கு ஈர் ஓதி என்றது கூந்தலின் நீட்சியும் நிறப்பொலிவையும் பொதுப்படக் கூறி அதனைச் சுருள் என்னும் பகுதியாக முடிக்கும் சிறப்பினை உணர்த்தற்கு.  ஒடுங்கு ஈர் ஓதி (குறுந்தொகை 70 ) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இருபுறமும் ஒடுங்கிய நெய்ப்புடைய கூந்தல், உ. வே. சாமிநாதையர் உரை – ஒடுங்கிய நெய்ப்புடைய கூந்தல், ஐவகைக் கூந்தற் பகுப்பில் ஒன்றாகிய சுருளை, இரா. இராகவையங்கார் உரை – இடத்தும் வலத்தும் ஒடுங்கிய ஈர்ந்த கூந்தல் , தமிழண்ணல் உரை – ஒடுக்கி கொண்டையாக முடித்த எண்ணெய் பூசிய நெய்ப்புடைய கூந்தல்.

Meanings:  கேள்வி கேட்டு – listened to the Vedas, படிவம் ஒடியாது – doing the rituals without fail, வேள்வி – rituals, வேட்டனை – you performed, உயர்ந்தோர் உவப்ப – making the wise be in bliss, making those in the upper world happy, சாய் அறல் – fine sand, கடுக்கும் – like, தாழ் இருங்கூந்தல் – low flowing black hair, வேறுபடு திருவின் – different from Thiru (Thirumakal), நின் வழி வாழியர் – for your heirs to live, கொடுமணம் பட்ட வினை – made in Kodumanam town, மாண் – esteemed, fine, அருங்கலம் – precious jewels, rare jewels, பந்தர் பயந்த – Pandhar town yielded, பலர் புகழ் முத்தம் – pearls that everyone praises, வரை அகம் நண்ணி – went to mountains, குறும் பொறை நாடி – sought small hills, தெரியுநர் கொண்ட – experts who know, சிரறு உடைப் பைம்பொறி – scattered lovely dots, கவை மரம் – forked tree branches, கடுக்கும் – like, கவலைய மருப்பின் – with forked antlers, புள்ளி இரலை – dotted deer, தோல் ஊன் உதிர்த்து – skin removing flesh, தீது களைந்து – removed all dirty material, எஞ்சிய – remaining, திகழ் விடு – bright, பாண்டில் – round, பருதி போகிய புடை – on the edges of that round piece, கிளை கட்டி – tied/added gems and pearls, எஃகு உடை இரும்பின் – with a metal needle, உள் அமைத்து வல்லோன் – an expert sews (with gems) inside, சூடு நிலை உற்று – wearing it, சுடர்விடு தோற்றம் – bright appearance, விசும்பு ஆடு மரபின் – according to its nature of flying, பருந்து – a kite, ஊறு அளப்ப – to take the flesh (thinking that it is still flesh), நலம் பெறு – fine, திருமணி கூட்டு நல்தோள் – lovely arms/shoulders with pretty gems, ஒடுங்கு  – tied, wavy, ஈர் ஓதி – oiled hair, bright hair, ஒண்ணுதல் – bright forehead, கருவில் – while an embryo/fetus, எண் இயல் – countable numbers with fingers meaning ten, முற்றி – mature, ஈர் அறிவு புரிந்து – with both intelligence, சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும் – with wisdom and perfection and other good traits, காவற்கு அமைந்த – to protect, அரசு துறை போகிய – to do royal business, வீறு சால் புதல்வன் – great son, பெற்றனை இவணர்க்கு – gave birth for this world, அருங்கடன் இறுத்த – performing the difficult duties, செருப்புகல் முன்ப – oh strong one who loves wars, அன்னவை மருண்டனென் அல்லேன் நின் வயின் – I am not surprised seeing all that in you, முழுது உணர்ந்து ஒழுக்கும் நரை மூதாளனை – the old man with grey hair who knows everything and follows rules, வண்மையும் – and charity, மாண்பும் – and esteem, வளனும் – and prosperity (வளன் – வளம் என்பதன் போலி), எச்சமும் – and offspring, தெய்வமும் – and god, யாவதும் – all these, தவம் உடையோர்க்கு என – for those who do penances, வேறுபடு – different from here (to the forest), நனந்தலை – wide land, பெயர – to leave, கூறினை – you said, பெரும – oh lord, நின் – your, படிமையானே – due to penances (ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 75, *தீம் சேற்று யாணர்*, பாடியவர்: அரிசில்கிழார், பாடப்பட்டவர்: பெருஞ்சேரல் இரும்பொறை, துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

இரும்புலி கொன்று பெருங்களிறு அடூஉம்,
அரும் பொறி வயமான் அனையை பல் வேல்,
பொலந்தார் யானை இயல் தேர்ப் பொறைய!
வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப் பணிந்து,
நின் வழிப்படாஅர் ஆயின் நெல் மிக்கு,  5
அறையுறு கரும்பின் *தீம் சேற்று யாணர்*
வருநர் வரையா வளம் வீங்கு இருக்கை,
வன்புலம் தழீஇ மென்பால் தோறும்
அரும்பறை வினைஞர் புல் இகல்படுத்துக்
கள்ளுடை நியமத்து ஒள் விலை கொடுக்கும்  10
வெள் வரகு உழுத கொள் உடைக் கரம்பைச்
செந்நெல் வல்சி அறியார், தத்தம்
பாடல் சான்ற வைப்பின்
நாடு உடன் ஆள்தல் யாவணது அவர்க்கே.

Pathitruppathu 75, Poet: Arisil Kizhār, King: Perumchēral Irumporai, Sugarcane Juice and Prosperity

Oh king Poraiyan who rides on a chariot, who owns war
elephants donned with gold and an army with warriors
carrying spears, and is strong like a mighty lion with rare
markings that killed a large tiger and then killed a large
bull elephant!

If great kings, small-region kings and others are not obedient
to you, their abundant paddy fields, sugarcane crops that grow
as paddy field fences and provide sweet juice, and their towns,
which give endless gifts to those who come, will be ruined.

Their fertile lands will become barren.  Wasteland warriors with
parai drums will fight with those on the paths, take their things
and barter them for toddy in the streets with shops in the
marutham land.

Eating meals with fine rice will be unknown, since only white
millet and horse gram can be grown in their parched land.
How can their leaders rule those countries whose towns were
once praised by poets?

Notes:  அரும் பொறி வயமான் (2) – ஒளவை துரைசாமி உரை – அரிய வரிகளையும் வலியையுமுடைய அரிமா, அருள் அம்பலவாணர் உரை – அரிய அடையாளமாகிய உளையையுடைய சிங்கம்.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

Meanings:  இரும்புலி கொன்று – killed a big tiger, killed a dark colored tiger, பெருங்களிறு அடூஉம் – killed a big bull elephant (அடூஉம் – இன்னிசை அளபெடை), அரும் பொறி வயமான் – a mighty lion with rare markings, a mighty lion with a mane that is rare, அனையை – you are like that, பல் வேல் – many spears, பொலந்தார் – gold garland, யானை – elephants, இயல் தேர் பொறைய – Oh king Poraiyan who rides in a chariot, Oh king Poraiyan with a well crafted chariot, வேந்தரும் வேளிரும் – and the great kings and small-region kings, பிறரும் – and others, கீழ்ப்பணிந்து – obedient, நின் வழிப்படாஅர் ஆயின் – if they do not go your way, நெல் மிக்கு – abundant paddy, அறை உறு கரும்பின் – of sugarcane that can be cut, of mature sugarcane, தீம் சேற்று – sweet juice, யாணர் – new income, prosperity, வருநர் – those who come there, வரையா வளம் வீங்கு இருக்கை – (provide) limitless wealth to the towns, வன்புலம் – dry land, தழீஇ – staying (சொல்லிசை அளபெடை), மென்பால் தோறும் – all the marutham fertile lands, அரும் பறை வினைஞர் புல் இகல்படுத்து – wasteland warriors with parai drums who fight in a mean manner and get things from others, கள் உடை நியமத்து – in the markets with toddy, ஒள் விலை கொடுக்கும் – give high prices while bartering, வெள் வரகு உழுத கொள் உடை –  white millet and horse gram that were seeded/planted in plowed land, கரம்பை – parched lands, செந்நெல் வல்சி அறியார் – they do not know red rice dishes, they do not know fine rice dishes, தத்தம் – their countries, பாடல் சான்ற வைப்பின் – with towns praised in songs by poets, நாடு உடன் ஆள்தல் யாவணது அவர்க்கே – how can they rule their countries well? (அவர்க்கே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 76, *மா சிதறு இருக்கை*, பாடியவர்: அரிசில்கிழார், பாடப்பட்டவர்: பெருஞ்சேரல் இரும்பொறை, துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

களிறு உடைப் பெருஞ்சமம் ததைய எஃகு உயர்த்து,
ஒளிறு வாள் மன்னர் துதை நிலை கொன்று,
முரசு கடிப்பு அடைய அருந்துறை போகிப்,
பெரும் கடல் நீந்திய மரம் வலியுறுக்கும்
பண்ணிய விலைஞர் போலப் புண் ஒரீஇப்,  5
பெரும் கைத் தொழுதியின் வன் துயர் கழிப்பி,
இரந்தோர் வாழ நல்கி இரப்போர்க்கு
ஈதல் தண்டா மா சிதறு இருக்கை*
கண்டனென் செல்கு வந்தனென் கால் கொண்டு
கருவி வானம் தண் தளி சொரிந்தெனப்,  10
பல் விதை உழவின் சில் ஏராளர்
பனித் துறைப் பகன்றைப் பாங்கு உடைத் தெரியல்,
கழுவுறு கலிங்கம் கடுப்பச் சூடி,
இலங்கு கதிர்த் திருமணி பெறூஉம்
அகன் கண் வைப்பின் நாடு கிழவோயே.  15

Pathitruppathu 76, Poet: Arisil Kizhār, King: Perumchēral Irumporai, Horses Donated from Battle camps

In the rainy season, winds blow, lightning strikes the skies
in unison with loud roaring thunder, and heavy cold rains
pour down.  Farmers owning plows, plant some seeds and
get beautiful gems with sparkling rays.  They wear strands
of pakandrai flowers from the cool shores, that are as white
as washed clothes.  You are the king of this flourishing country!

You felled enemies in big battles when they joined together
and came with elephants.  You raised your spear and brought
down your opponents with gleaming swords.  Your victory
drums resounded in the battlefields when the wars ended.

You heal the battle wounds of your herds of large-trunked
elephants with medicines, like a merchant who fixes his ships
that ply the oceans.  You are benevolent to those who seek, and
you give more when they ask.  You give them horses from your
battle camps.  I came here to see your benevolence, my lord.

Notes:  கருவி வானம் (10) – இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய முகில்கள்.  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58).

Meanings:  களிறு உடை – with bull elephants, பெரும் சமம் – big battle, ததைய – ruined, எஃகு உயர்த்து – with raised spears, ஒளிறு வாள் – shining swords, மன்னர் துதை நிலை கொன்று – killing enemy kings in battle where they fought together jointly, முரசு கடிப்பு அடைய – hit the victory drums with drumsticks, அருந்துறை போகி – finished the difficult work, பெரும் கடல் நீந்திய – go on the big ocean, மரம் – (wooden) ships, வலியுறுக்கும் பண்ணிய விலைஞர் போல – like a merchant who does the repairs and make them strong, புண் ஒரீஇ – you heal the sores with medicines (ஒரீஇ – சொல்லிசை அளபெடை), பெரும் கைத் தொழுதியின் – of herds of big trunked elephants, வன் துயர் கழிப்பி – remove the great pain, இரந்தோர் வாழ நல்கி – to those who ask for living, இரப்போர்க்கு – those who ask for more, ஈதல் – giving, தண்டா – not reduced, மா சிதறு இருக்கை – horse donating throne, கண்டனென் செல்கு வந்தனென் – I came to see and leave, கால் கொண்டு – along with the wind, கருவி வானம் – clouds with lightning and thunder, தண் தளி சொரிந்தென – since cold rains fell, பல் விதை – many seeds, உழவின் சில் ஏராளர் – farmers with a few plows, பனித் துறைப் பகன்றை – pakandrai flowers from the cold shores, பாங்கு உடைத் தெரியல் – beautiful flower garlands, கழுவுறு கலிங்கம் – washed clothes, கடுப்ப – like, சூடி – wore, இலங்கு கதிர் – flourishing rays, திரு மணி – beautiful gems, பெறூஉம் – they get (இன்னிசை அளபெடை), அகன் கண் வைப்பின் – with wide towns, நாடு கிழவோயே – leader of such country (கிழவோயே – ஏகாரம் அசை நிலை, an expletive)

பதிற்றுப்பத்து 77, *வென்று ஆடு துணங்கை*, பாடியவர்: அரிசில்கிழார், பாடப்பட்டவர்: பெருஞ்சேரல் இரும்பொறை, துறை: உழிஞை அரவம், தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

“எனைப் பெரும் படையனோ சினப்போர்ப் பொறையன்?”
என்றனிர் ஆயின், ஆறு செல் வம்பலீர்!
மன்பதை பெயர அரசு களத்து ஒழியக்
கொன்று தோள் ஓச்சிய *வென்று ஆடு துணங்கை*
மீ பிணத்து உருண்ட தேயா ஆழியின்,  5
பண் அமை தேரும், மாவும், மாக்களும்,
எண்ணற்கு அருமையின் எண்ணின்றோ இலனே;
கந்து கோள் ஈயாது காழ் பல முருக்கி
உகக்கும் பருந்தின் நிலத்து நிழல் சாடிச்,
சேண் பரல் முரம்பின் ஈர்ம் படைக் கொங்கர்  10
ஆ பரந்தன்ன செலவின், பல்
யானை காண்பல் அவன் தானையானே.

Pathitruppathu 77, Poet: Arisil Kizhār, King: Perumchēral Irumporai, Thunangai Victory Dances

Oh newcomers traveling on the path!  If you ask me
how big the armies of the battle-rage filled King Poraiyan
is, I can tell you that I tried to count his warriors, who won
wars against enemy warriors, killed their kings in battles,
lifted their arms and performed victorious thunangai dances,
and rode well-built chariots with perfect wheels that trampled
over dead bodies, horse brigades and foot soldiers, but it was
difficult to count.

His elephants break the ties to their posts, ruin many goads,
and even attack the shadow of kites that fly high above.  I have
seen many of them in wars, spread like cattle herds of Kongu
warriors who dig in distant lands covered with pebbles.

Meanings:  எனைப்பெரும் படையனோ – how big is his army, சினப்போர்ப் பொறையன் – King Poraiyan with battle rage, என்றனிர் ஆயின் – if you ask, ஆறு செல் – going on the path, வம்பலீர் – new people, மன்பதை பெயர – enemy warriors run away, அரசு களத்து ஒழிய – enemy kings die on the battlefields, கொன்று – killed, தோள் ஓச்சிய – with lifted shoulders, வென்று ஆடு துணங்கை – perform the victorious thunangai dance, மீ பிணத்து – over their dead bodies, உருண்ட – rolled, தேயா – not eroded, not reduced, ஆழியின் – with wheels, பண் அமை – well constructed, தேரும் மாவும் மாக்களும் – chariots and horses and foot soldiers, எண்ணற்கு அருமையின் எண்ணின்றோ இலனே – it was difficult to count and I could not count (இலனே – ஏகாரம் அசை நிலை, an expletive), கந்து கோள் ஈயாது – not letting them be tied to their posts, காழ் பல முருக்கி – they break a few posts, உகக்கும் பருந்தின் – of flying kites, நிலத்து – on the ground, நிழல் சாடி – attack their shadows, சேண் – distant, பரல் முரம்பின் – in the land with pebbles, in the land with stones, ஈர்ம்படைக் கொங்கர் – like the Kongu country warriors who use pick axes and dig, ஆ பரந்தன்ன – like cattle were spread, செலவின் பல் – many went, யானை காண்பல் – I see the elephants, அவன் தானையானே – in his army (தானையானே – ஏகாரம் அசை நிலை, an expletive)

பதிற்றுப்பத்து 78, *பிறழ நோக்கியவர்*, பாடியவர்: அரிசில்கிழார், பாடப்பட்டவர்: பெருஞ்சேரல் இரும்பொறை, துறை: விறலியாற்றுப்படை, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

வலம்படு முரசின் இலங்குவன விழூஉம்
அவ்வெள் அருவி உவ்வரை அதுவே,
சில் வளை விறலி செல்குவை ஆயின்,
வள் இதழ்த் தாமரை நெய்தலொடு அரிந்து
மெல்லியல் மகளிர் ஒல்குவனர் இயலிக்,  5
கிளி கடி மேவலர் புறவு தொறும் நுவலப்
பல் பயன் நிலைஇய கடறு உடை வைப்பின்,
வெல்போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும்
வில் பயில் இறும்பின் தகடூர் நூறி,
பேஎ மன்ற *பிறழ நோக்கியவர்10
ஓடு உறு கடுமுரண் துமியச் சென்று,
வெம்முனை தபுத்த காலைத் தம் நாட்டு
யாடு பரந்தன்ன மாவின்,
ஆ பரந்தன்ன யானையோன் குன்றே.

Pathitruppathu 78, Poet: Arisil Kizhār, King: Perumchēral Irumporai, Those who Looked with Anger

Oh virali wearing few bangles!  If you want to see the king,
go near the bright, white waterfalls that roar like victorious
battle drums.

In his enemy’s country, delicate women plucked lotus flowers
with large petals along with waterlily flowers in marutham
lands, swayed gently as they walked to guard their fields in
mullai lands, and chased parrots with their songs.
Prosperous Thakadūr with protective forests and towns had brave,
trained warriors who guarded its fortress with arrows, before it
was ruined.

Enemy warriors, of the king of the country with mountains,
their strength drained, ran away in fear with bewildered looks
when his soldiers with weapons attacked them on the battlefield.
In the enemy lands he ruined, his horses were spread like goats,
and his elephants were spread like cattle.

Notes:  There is another version with line 10 being பேஎ மமன்ற *பிறழ நோக்கியவர்*.  Viralis were female artists who danced and sang.  பழைய உரை (உரையாசிரியர் பெயர் கிடைக்கவில்லை) –  ‘மருதநிலத்தில் சென்று நெய்தலொடு தாமரை அரிந்து, பின் கிளிகடி தொழிலை மேவுதலையுடையராய்ப் புறவின் புனங்கடோரும் கிளிகடி பாடலை நுவலப் பல் பயன்களும் நிலைபெற்ற முல்லை நிலமென உரைக்க’.  ஒளவை துரைசாமி உரையிலும் அருள் அம்பலவாணர் உரையிலும் ‘மருதம்’ ‘முல்லை’ என்ற குறிப்புகள் உள்ளன.  அகநானூறு 118 – குரல் ஏனல் கிளி கடி பாடலும் ஒழிந்தனள், அகநானூறு 194 – கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும், குறுந்தொகை 142 – புனக் கிளி கடியும் பூங்கண் பேதை, குறுந்தொகை 198 – படுகிளி கடிகம் சேறும், குறுந்தொகை 217 – தினை கிளி கடிக எனின், குறுந்தொகை 291 – ஏனல் படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே இசையின் இசையா இன்பாணித்தே, குறுந்தொகை 360 –  ஏனல் உண் கிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே, பதிற்றுப்பத்து 78 – மெல்லியல் மகளிர் ஒல்குவனர் இயலிக் கிளி கடி மேவலர் புறவு தொறும் நுவல.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

Meanings:   வலம்படு முரசின் – like victory drums (முரசின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), இலங்குவன – they are bright, விழூஉம் – falling down, அவ்வெள் அருவி – beautiful white waterfalls, உவ்வரை – that limit, அதுவே – there, சில் வளை விறலி – dancers/singers wearing few bangles, செல்குவை ஆயின் – if you go, வள் இதழ் – large petals, beautiful petals, தாமரை – lotus blossoms, நெய்தலொடு – along with waterlilies,  அரிந்து – plucking, cutting (in the marutham lands), மெல்லியல் மகளிர் – delicate natured women, ஒல்குவனர் – they sway, இயலி – walking, கிளி கடி – chasing parrots that come to seize grains in the fields in the mullai lands, மேவலர் – those with desire, புறவு தொறும் – in all the fields, நுவல – they sang songs, they raised their voices (to chase parrots), பல் பயன் நிலைஇய – with many beneficial traits established (நிலைஇய – சொல்லிசை அளபெடை), கடறு உடை – with forests, வைப்பின் – with the towns, வெல்போர் – victorious battles, ஆடவர் – men, மறம் புரிந்து – desiring bravery, desiring war, காக்கும் – protect, வில் பயில் – warriors with arrows, இறும்பின் – with protective forests, தகடூர் – Thakadūr fort, நூறி – ruined, பேஎ – fearful (இசை நிறை அளபெடை), மன்ற – for sure, பிறழ – confused, shocked, நோக்கு – looks, இயவர் – those with weapons, ஓடு உறு – make them run, கடு முரண் – excessive strength, துமிய – chopping, ruining, சென்று – went, வெம்முனை – cruel battlefield, தபுத்த காலை – when ruined, தம் நாட்டு – in their country, யாடு பரந்தன்ன – like goats that are spread, மாவின் – with horses, ஆ பரந்தன்ன – like cows that are spread, யானையோன் – the king with elephants, குன்றே – his mountains (ஏகாரம் அசை நிலை, an expletive)

பதிற்றுப்பத்து 79, *நிறம்படு குருதி*, பாடியவர்: அரிசில்கிழார், பாடப்பட்டவர்: பெருஞ்சேரல் இரும்பொறை, துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

உயிர் போற்றலையே செருவத்தானே;
கொடை போற்றலையே இரவலர் நடுவண்;
பெரியோர்ப் பேணிச் சிறியோரை அளித்தி
நின் வயின் பிரிந்த நல் இசை கனவினும்
பிறர் நசை அறியா வயங்கு செந்நாவின்,  5
படியோர்த் தேய்த்த ஆண்மைத் தொடியோர்
தோளிடைக் குழைந்த கோதை மார்ப!
அனைய அளப்பு அருங்குரையை அதனால்
நின்னொடு வாரார் தம் நிலத்து ஒழிந்து,
கொல் களிற்று யானை எருத்தம் புல்லென,  10
வில் குலை அறுத்துக் கோலின் வாரா
வெல் போர் வேந்தர் முரசு கண் போழ்ந்து, அவர்
அரசு உவா அழைப்பக் கோடு அறுத்து இயற்றிய
அணங்கு உடை மரபின் கட்டில் மேல் இருந்து,
தும்பை சான்ற மெய் தயங்கு உயக்கத்து,  15
*நிறம்படு குருதி* புறம்படின் அல்லது,
மடை எதிர்கொள்ளா அஞ்சுவரு மரபின்
கடவுள் அயிரையின் நிலைஇக்,
கேடில ஆக பெரும் நின் புகழே.

Pathitruppathu 79, Poet: Arisil Kizhār, King: Perumchēral Irumporai, Blood from Chests

Oh great king wearing flower garlands crushed by the
embraces of your women wearing bangles!

You do not care for your life while fighting battles, you
do not brag in the midst of suppliants about the charity
you give, you honor and protect elders, and shower graces
on weak people, and even in their dreams others who fear
you do not want your good fame that has spread in all
directions.  You are truthful to your words, and
courageously you have destroyed the strength of your
enemies.  Your majesty! You are a man with such fine virtues
that cannot be measured.

You ruined the lands of your enemies who refused to yield
to your scepter, killed many enemy kings and made their regal
elephants lose their riding masters, tore the eyes of their roaring
battle drums, cut off the tusks of their royal elephants as they
screamed in pain, and made an ivory seat.

May your fame flourish without blemish, like Ayirai hills where
the fear-causing goddess Kotravai resides, who did not accept
offerings other than the blood that flowed from the chests of
warriors who wore thumpai flower garlands and fought battles.

Meanings:  உயிர் போற்றலையே – you did not care for your life (போற்றலையே – ஏகாரம் அசைநிலை, an expletive), செருவத்தானே – in battle (ஏகாரம் அசைநிலை, an expletive), கொடை போற்றலையே – you did not brag about your charity, இரவலர் நடுவண் – in the midst of those who ask, பெரியோர்ப் பேணி – protect elders, protect those who are great, சிறியோரை அளித்தி – you shower graces on weak people, shower graces on the less fortunate people, நின் வயின் பிரிந்த நல் இசை – your fame, கனவினும் – even in your dream, பிறர் நசை அறியா – you won’t brag to people you love, வயங்கு செந்நாவின் – with a truthful tongue, படியோர் – those who do not submit, those who are not agreeable, தேய்த்த – ruined, ஆண்மை – manliness, தொடியோர் – woman wearing bangles (wife), தோளிடைக் குழைந்த – crushed between their arms, கோதை மார்ப – oh king wearing flower garlands, அனைய அளப்பு அருங்குரையை – you are a person with such immeasurable qualities (குரை – அசைநிலை), அதனால் – so, நின்னொடு வாரார் தம் நிலத்து ஒழிந்து – staying and ruining the lands of the kings who don’t agree with you, கொல் களிற்று யானை – murderous bull elephants, எருத்தம் புல்லென – necks are bare, வில் குலை – bow strings, அறுத்து – cut, கோலின் வாரா – not submitting to your authority, வெல் போர் – in the victorious battle, வேந்தர் முரசு கண் போழ்ந்து – tear the drums of the enemy king’s battle drum, அவர் – his, அரசு உவா – royal elephant, அழைப்ப – as it screams, கோடு அறுத்து – cutting its tusks, இயற்றிய – created, அணங்கு உடை – arrogant, divine, fierce, terror causing, மரபின் – according to tradition, கட்டில் மேல் இருந்து – on the cot, on the royal seat, தும்பை சான்ற – in battles wearing thumpai garlands, Leucas aspera, மெய் தயங்கு உயக்கத்து – on the tired and distressed bodies, நிறம்படு குருதி – blood dripping from chests புறம்படின் – splashing on the other side, அல்லது – other than that, மடை எதிர்கொள்ளா – not accept the offering, அஞ்சுவரு மரபின் – of fear-causing tradition, கடவுள் அயிரையின் – like Ayirai hills with Kotravai (அயிரையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), நிலைஇ – established, stable (நிலைஇ – சொல்லிசை அளபெடை), கேடில ஆக – without blemish, பெரும – oh majesty, oh lord, நின் புகழே – your fame (புகழே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 80, *புண் உடை எறுழ்த்தோள்*, பாடியவர்: அரிசில்கிழார், பாடப்பட்டவர்: பெருஞ்சேரல் இரும்பொறை, துறை: வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும், வண்ணம்: ஒழுகு வண்ணம்

வான் மருப்பின் களிற்று யானை
மா மலையின் கணண் கொண்டு, அவர்
எடுத்து எறிந்த விறல் முரசம்
கார் மழையின் கடிது முழங்கச்,
சாந்து புலர்ந்த வியல் மார்பில்,  5
தொடி சுடர்வரும் வலி முன் கைப்
*புண் உடை எறுழ்த்தோள்* புடையல் அம் கழல் கால்,
பிறக்கு அடி ஒதுங்காப் பூட்கை ஒள் வாள்
ஒடிவில் தெவ்வர் எதிர் நின்று உரைஇ,
‘இடுக திறையே புரவு எதிர்ந்தோற்கு’ என,  10
அம்பு உடை வலத்தர் உயர்ந்தோர் பரவ,
அனையை ஆகன்மாறே பகைவர்
கால் கிளர்ந்தன்ன கதழ் பரிப் புரவிக்
கடும் பரி நெடுந்தேர் மீ மிசை நுடங்கு கொடி,
புல வரைத் தோன்றல் யாவது சினப்போர்  15
நில வரை நிறீஇய நல்லிசைத்
தொலையாக் கற்ப, நின் தெம்முனையானே.

Pathitruppathu 80, Poet: Arisil Kizhār, King: Perumchēral Irumporai, Strong Shoulders with Wounds

O king of great fame and faultless education!

Your enemy kings have herds of huge mountain-like,
white-tusked elephants, victory drums that roar like
monsoon clouds, and soldiers with warrior anklets and
bright bracelets on their strong forearms that brandish
bright swords, garlanded and sandal-smeared wide chests,
strong shoulders decorated with garlands, unhealed soars,
and beliefs of not backing down from wars.

You stood up against their strong forces.  You sent leaders
with arrows in their hands to your enemies requesting them
to pay you tributes and get your protection.  When they
refused, oh mighty king of faultless learning, you went
against them in battles with rage, and beat them decisively.
Your fame and name have spread far and wide.

Your enemies with horses as swift as the wind and tall chariots
with swaying flags on top, will not survive an attack by your
forces.  You fight with fierce anger and conviction.

Notes:  அடி ஒதுங்காப் பூட்கை (8) – முன் வைத்த காலைப் பின் வைக்காத மேற்கோளினையும்.  எறுழ் – எறுழ் வலி ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 92).

Meanings:  வான் மருப்பின் – with white tusks, களிற்று யானை – male elephants, மா மலையின் கணண் கொண்டு – herds were like huge mountains (மலையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), அவர் – enemies, எடுத்து எறிந்த விறல் முரசம் – victory drums being hit, கார் மழையின் கடிது முழங்க – roar loudly like the rainy season clouds (மழையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), சாந்து புலர்ந்த – dried sandalwood paste, வியல் மார்பில் – on your wide chest, தொடி – bracelets, சுடர்வரும் – with luster, வலி முன்கை – strong forearm, புண் உடை எறுழ்த்தோள் – strong shoulders with sores, புடையல் – palm garlands, அம் கழல் கால் – beautiful warrior’s anklets, பிறக்கு அடி ஒதுங்கா – not backing from enemies, பூட்கை – belief, strength, ஒள் வாள் – bright sword, ஒடிவு இல் – without weakness, strong (ஒடிவு – தளர்வு, கெடுகை), தெவ்வர் – enemies, எதிர் நின்று – stood up against them, உரைஇ – spreading (சொல்லிசை அளபெடை), இடுக திறையே – give tributes, புரவு – protection, எதிர்ந்தோற்கு – those who accept, என – thus, அம்பு உடை வலத்தர் – with arrows in their right hands, உயர்ந்தோர் – your warriors, பரவ – to praise, அனையை – (listen to) everything ஆகன்மாறே – hence (ஆகன்மாறே – ஏகாரம் அசைநிலை, an expletive, மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள்) தரும் இடைச்சொல்), பகைவர் – enemy, கால் கிளர்ந்தன்ன கதழ் பரிப் புரவி – horses as fast as the rising wind, கடும்பரி – fast moving, நெடுந்தேர் – tall chariot, மீ மிசை – on top, நுடங்கு கொடி – swaying flags, புல வரை – land limits, தோன்றல் – appearing, யாவது – how, சினப்போர் – angry war, நில வரை – limits of the land, நிறீஇய – established (சொல்லிசை அளபெடை), நல்லிசை – fine fame, தொலையாக் கற்ப – you are with faultless education, நின் – your, தெம்முனையானே – in the battlefield (ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிகம்
பொய் இல் செல்வக் கடுங்கோவுக்கு
வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன்,
கொல்லிக் கூற்றத்து நீர் கூர் மீ மிசைப்
பல் வேல் தானை அதிகமானோடு
இரு பெரு வேந்தரையும் உடன் நிலை வென்று,  5
முரசும் குடையும் கலனும் கொண்டு,
உரை சால் சிறப்பின் அடு களம் வேட்டுத்
துகள் தீர் மகளிர் இரங்கத் துப்பு அறுத்துத்
தகடூர் எறிந்து, நொச்சி தந்து எய்திய
அருந்திறல் ஒள் இசைப் பெருஞ்சேரல் இரும்பொறையை,  10
மறு இல் வாய்மொழி அரிசில்கிழார்
பாடினார் பத்துப்பாட்டு.

Epilog
To King Selva Kadungo who does not utter lies and his
wife, the daughter of king Pathuman, he was born as a son.

He won victories over the many-speared armies of Athiyamān
on top of Kolli Mountain with abundant water, and routed the
two great kings.  He seized their drums, umbrellas and
precious jewels, causing misery to their faultless women.

A greatly famous man, he was greatly courageous, ruining
Thakadūr and taking its fort.  Honest Arisil Kizhār sang these
ten songs for the brightly famous, faultless King Perumchēral
Irumporai.

Meanings:  பொய் இல் செல்வக் கடுங்கோவுக்கு – to Selva Kadungo who does not lie, வேளாவிக் கோமான் பதுமன் தேவி – daughter of Velāvi Komān Pathuman, ஈன்ற மகன் – the son she gave birth to, கொல்லிக் கூற்றத்து நீர் கூர் மீமிசை – very tall Kolli Mountain with sections and with abundant water (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), பல் வேல் தானை – army with many spears, அதிகமானோடு இரு பெரு வேந்தரையும் – two great kings along with Athiyamān, உடன் நிலை வென்று – won over them, முரசும் குடையும் கலனும் கொண்டு – seized their drums, umbrellas and jewels, உரை சால் சிறப்பின் – with great fame,  அடு களம் வேட்டு – desired and fought in a murderous battle, துகள் தீர் மகளிர் இரங்க -caused worry to faultless women, துப்பு அறுத்து – ruined his power, தகடூர் எறிந்து – ruined Thakadūr, நொச்சி தந்து – took the fort/town, எய்திய – attained, அருந்திறல் – he was very courageous, ஒள் இசைப் பெருஞ்சேரல் இரும்பொறையை மறு இல் வாய்மொழி அரிசில்கிழார் பாடினார் பத்துப்பாட்டு – ten songs that faultless, honest Arisil Kizhār sang for the bright and famous Perumchēral Irumporai

பதிற்றுப்பத்து 81, *நிழல் விடு கட்டி*, பாடியவர்: பெருங்குன்றூர்கிழார், பாடப்பட்டவர்: இளஞ்சேரல் இரும்பொறை, துறை: முல்லை, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

உலகம் புரக்கும் உருகெழு சிறப்பின்,
வண்ணக் கருவிய வளங் கெழு கமஞ்சூல்
அகல் இரு விசும்பின் அதிர் சினம் சிறந்து,
கடுஞ்சிலை கழறி விசும்பு அடையூ நிவந்து,
காலை இசைக்கும் பொழுதொடு புலம்பு கொளக்,  5
களிறு பாய்ந்து இயலக் கடு மா தாங்க,
ஒளிறு கொடி நுடங்கத் தேர் திரிந்து கொட்ப,
அரசு புறத்து இறுப்பினும் அதிர்வு இலர் திரிந்து,
வாயில் கொள்ளா மைந்தினர் வயவர்
மா இருங்கங்குலும், விழுத் தொடி சுடர்வரத்  10
தோள் பிணி மீ கையர் புகல் சிறந்து, நாளும்
முடிதல் வேட்கையர் நெடிய மொழியூஉக்,
கெடாஅ நல்லிசைத் தம் குடி நிறுமார்,
இடாஅ ஏணி வியல் அறைக் கொட்ப,
நாடு அடிப்படுத்தலின் கொள்ளை மாற்றி,  15
அழல் வினை அமைந்த *நிழல் விடு கட்டி*
கட்டளை வலிப்ப நின் தானை உதவி,
வேறு புலத்து இறுத்த வெல்போர் அண்ணல்!
முழவின் அமைந்த பெரும்பழம் மிசைந்து,
சாறு அயர்ந்தன்ன கார் அணி யாணர்த்  20
தூம்பு அகம் பழுனிய தீம் பிழி மாந்திக்,
காந்தள் அம் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்
கலி மகிழ் மேவலர் இரவலர்க்கு ஈயும்,
சுரும்பு ஆர் சோலைப் பெரும் பெயல் கொல்லிப்
பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து,  25
மின் உமிழ்ந்தன்ன சுடர் இழை ஆயத்துத்
தன் நிறங் கரந்த வண்டுபடு கதுப்பின்
ஒடுங்கு ஈர் ஓதி ஒண்ணுதல் அணி கொளக்,
கொடுங்குழைக்கு அமர்த்த நோக்கின், நயவரப்
பெருந்தகைக்கு அமர்ந்த மென் சொல் திரு முகத்து  30
மாண் இழை அரிவை காணிய, ஒரு நாள்
பூண்க மாள நின் புரவி நெடுந்தேர்!
முனைகை விட்டு முன்னிலைச் செல்லாது
தூ எதிர்ந்து பெறாஅத் தா இல் மள்ளரொடு
தொல் மருங்கு அறுத்தல் அஞ்சி, அரண் கொண்டு  35
துஞ்சா வேந்தரும் துஞ்சுக,
விருந்தும் ஆக நின் பெருந்தோட்கே!

Pathitruppathu 81, Poet: Perunkundrūr Kizhār, King: Ilanchēral Irumporai, Sparkling Bars

In the dark wide skies above, floating clouds that protect
the earth, fierce, black and filled with water, roar loud
thunder with rage, making everything tremble, along with
lightning that spreads all over the skies, announcing the
arrival of the monsoon season, and plunging lives into
sorrow.

Male elephants spread and move around,
swift horses carrying soldiers and chariots with flags are
milling around.  Your brave warriors who protect your gates
when enemy kings lay siege, are moving around without any
fear even in the pitch darkness of night, the bracelets on their
arms shining and their hands placed on their shoulders.
Desirous of battles, they fight with zest to win each day.
They keep up their promises and establish good fame for their
clan, as they move around the endless, huge battle camp.

Oh greatness!  You conquered enemy countries, and gave your
warriors who obeyed your orders, solid gold bars that were
obtained by melting seized gold.

Oh greatness, who won battles in other countries!  To those, who
drink sweet liquor aged in beautiful, dark bamboo and are happy
like the rich men, who wear glory lily garlands, eat huge drum
shaped jackfruits and celebrate festivities, Kolli Mountain yields
everything they desire.

Ladies-in-waiting are adorned with garlands woven with large
jasmine flowers that grow in the Kolli groves, along with gamboge
flowers and jewels that shine like flashes of lightning.

Your queen surrounded by her friends, is adorned with dark, oiled,
bright, wavy hair bordering her bright forehead, that hides the
black bees that swarm on it.  Her eyes differ from her curved earrings.
Her delicate words suit her noble character, the woman with a pretty
face and fabulous jewels.

Tie your horses to your chariot and speed away to see her,
abandoning this battle ahead of you, even if it is just for one day.
Let it be a treat to your broad shoulders.

If you do that, the sleepless enemy kings who are fighting you
fearing that their ancient heritage will be destroyed by you,
and their warriors whose energy has been drained, can sleep in
peace.

Notes:  கருவிய (2) – இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய முகில்கள்.  நாளும் முடிதல் வேட்கையர் (11-2) – அருள் அம்பலவாணர் உரை – நாள்தோறும் தான் எடுத்துக் கொண்ட போர் முடிதலிலே வேட்கையுடையவராய், ஒளவை துரைசாமி உரை – போரில் புண்பட்டு வீழ்தலை வேட்கையராய்.  கார் அணி யாணர்த் தூம்பு அகம் (20) – அருள் அம்பலவாணர் உரை – முகிலை அணிந்த அழகிய மூங்கிற் குழாயினிடத்தே முதிர்ந்த, ஒளவை துரைசாமி உரை – புதுமையினையுடைய கரிய அழகிய மூங்கிற் குழாயிடத்தே பெய்து முதிர்வித்த.  மூங்கிலில் விளைந்த கள்:  அகநானூறு 348 – ஆடு அமைப் பழுநிக் கடுந்திறல் பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி, அகநானூறு 368 – அம் பணை விளைந்த தேக் கள் தேறல், நற்றிணை 276 – வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு, பதிற்றுப்பத்து 81 – தூம்பு அகம் பழுனிய தீம் பிழி, திருமுருகாற்றுப்படை 195 – நீடு அமை விளைந்த தேக் கள் தேறல், மலைபடுகடாம் 171 – வேய்ப் பெயல் விளையுள் தேக்கட் தேறல், மலைபடுகடாம் 522 – திருந்து அமை விளைந்த தேக் கள் தேறல்.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  கமம் – நிறைவு, கமம் நிறைந்தியலும் (தொல்காப்பியம். உரியியல் 57).  ஒடுங்கு ஈர் ஓதி (28) – அருள் அம்பலவாணர் உரை – நெறித்த ஈரிய கூந்தல், ஒளவை துரைசாமி உரை – சுருள் தவழும் கூந்தல்.  ஒடுங்கு ஈர் ஓதி (குறுந்தொகை 70 ) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இருபுறமும் ஒடுங்கிய நெய்ப்புடைய கூந்தல், உ. வே. சாமிநாதையர் உரை – ஒடுங்கிய நெய்ப்புடைய கூந்தல், ஐவகைக் கூந்தற் பகுப்பில் ஒன்றாகிய சுருளை, இரா. இராகவையங்கார் உரை – இடத்தும் வலத்தும் ஒடுங்கிய ஈர்ந்த கூந்தல் , தமிழண்ணல் உரை – ஒடுக்கி கொண்டையாக முடித்த எண்ணெய் பூசிய நெய்ப்புடைய கூந்தல்.  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58).  தோள் பிணி மீகையர் (11) – பழைய உரை – தோள் பிணி மீகையரென்றது குளிராலே தோளைப் பிணித்த அத் தோள் மீதாக உளவாகிய கைகளையுடையார் என்றவாறு.

Meanings:  உலகம் புரக்கும் – protecting the world, உருகெழு சிறப்பின் – with fierce splendor, வண்ண – colorful, கருவிய – clouds with lightning and thunder, வளம் கெழு – full, கமஞ்சூல் – fully pregnant, அகல் – wide, இரு – dark, விசும்பின் – in the sky, அதிர் சினம் சிறந்து – with loud rage, கடுஞ்சிலை – loud noise, கழறி – roaring, விசும்பு அடையூ – entering the sky, நிவந்து – flying high, காலை இசைக்கும் பொழுதொடு – announcing the rainy season, புலம்பு கொள – to be sad, களிறு பாய்ந்து இயல – male elephants spread and move around, கடுமா தாங்க – fierce horses carrying (soldiers), ஒளிறு கொடி நுடங்க – splendid flags fly, தேர் திரிந்து கொட்ப – chariots move around whirling, அரசு புறத்து இறுப்பினும் – even when enemy kings lay siege, அதிர்வு இலர் – without fear, without trembling, திரிந்து – move, வாயில் – gate, கொள்ளா – not guarding, மைந்தினர் வயவர் – brave young warriors, மா இருங்கங்குலும் – even in the middle of night, விழுத்தொடி – fine bracelets, சுடர்வர – to shine, தோள் பிணி மீ கையர் – with their hands on their shoulders (because of the cold), புகல் சிறந்து – desirous of battle, நாளும் முடிதல் வேட்கையர் – those who want the battle to end,  those who want to win and end the battle, நெடிய மொழியூஉ – uttering many words (நல்லிசை – இன்னிசை அளபெடை), கெடாஅ நல்லிசை – unspoiled fame (கெடாஅ – இசை நிறை அளபெடை), தம் குடி – to their clan, நிறுமார் – to make it stand, இடாஅ ஏணி – limitless boundaries, எல்லைக்கு வெளிப்படை, (இடாஅ – இசை நிறை அளபெடை), வியல் அறை – wide area, room, கொட்ப – roaming around, நாடு அடிப்படுத்தலின் – since you conquered enemy country, கொள்ளை மாற்றி – changing after seizing wealth from them, அழல் வினை அமைந்த – burned in fire and melted, நிழல் விடு கட்டி – solid gold bars that emit light, கட்டளை வலிப்ப – according to your command, நின் தானை – your army, உதவி – help, வேறு புலத்து – other countries, இறுத்த வெல்போர் – stay and win battles, அண்ணல் – Oh greatness, முழவின் அமைந்த பெரும்பழம் மிசைந்து – eating the drum-like huge jackfruits, சாறு அயர்ந்தன்ன – like a festival celebrated, கார் அணி – with dark color, touched by clouds, யாணர் – beautiful, new, தூம்பு அகம் – inside bamboo, inside bamboo tubes, பழுனிய – aged, தீம் பிழி – sweet liquor, மாந்தி – drinking, காந்தள் – malabar glory lilies, அம் – beautiful, கண்ணி – garland, செழுங்குடிச் செல்வர் – heir of fine clan, கலி மகிழ் மேவலர் – those with great happiness, இரவலர்க்கு ஈயும் – giving to those who ask, சுரும்பு ஆர் சோலை – grove with swarming bees, பெரும் பெயல் – heavy rain, கொல்லி – Kolli Mountain, பெருவாய் மலரொடு – with big open jasmine flowers, இருவாட்சி மலர்கள், tuscan jasmine, பசும்பிடி – pachouli, mysore gamboge, மகிழ்ந்து – enjoyed, மின் உமிழ்ந்தன்ன – like light emitted by lightning, சுடர் இழை – bright jewels, ஆயத்து – with friends, தன் நிறம் – their color, கரந்த – hidden, வண்டுபடு கதுப்பின் – in the hair on which bees swarm, ஒடுங்கு – wavy, tied, ஈர் ஓதி – wet hair, oiled hair, bright hair, ஒண்ணுதல் – bright forehead, அணி கொள – beautifully decorated, கொடுங்குழைக்கு – with the curved earrings (கொடுங்குழைக்கு – கொடுங்குழையொடு, வேற்றுமை மயக்கம்), அமர்த்த நோக்கின் – with differing looks (அமர்த்த – மாறுபட்ட), நயவர – causing desire, பெருந்தகைக்கு அமர்ந்த – fitting her esteemed nature, மென் சொல் – delicate words, திருமுகத்து – with  a beautiful face, மாண் இழை அரிவை –  woman with splendid jewels, காணிய – to see, ஒருநாள் – one day, பூண்க – may you tie, may you yoke, மாள – முன்னிலை அசை, an expletive of the second person, நின் – your, புரவி நெடுந்தேர் – tall chariot with horse, முனைகை விட்டு – abandoning war, முன்னிலை – ahead of you, செல்லாது – not going, தூ எதிர்ந்து – fighting with your strength, பெறாஅ – not getting (இசை நிறை அளபெடை), தா இல் – without strength, மள்ளரொடு – with warriors, தொல் மருங்கு – ancient heritage, அறுத்தல் – being cut off, getting ruined, அஞ்சி – fearing, அரண் கொண்டு – go to your palace, துஞ்சா வேந்தரும் துஞ்சுக – may the sleepless kings sleep, விருந்தும் ஆக – let it be a treat, நின் பெருந்தோட்கே – to your broad shoulders, to your broad arms (பெருந்தோட்கே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 82, *வினை நவில் யானை*, பாடியவர்: பெருங்குன்றூர்கிழார், பாடப்பட்டவர்: இளஞ்சேரல் இரும்பொறை, துறை: காட்சி வாழ்த்து, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

பகை பெருமையின் தெய்வம் செப்ப,
ஆர் இறை அஞ்சா வெருவரு கட்டூர்ப்,
பல் கொடி நுடங்கும் முன்பின் செறுநர்
செல் சமம் தொலைத்த *வினை நவில் யானை*
கடாஅம் வார்ந்து, கடுஞ்சினம் பொத்தி,  5
வண்டுபடு சென்னிய பிடி புணர்ந்து இயல
மறவர் மறல மாப்படை உறுப்பத்,
தேர் கொடி நுடங்கத் தோல் புடை ஆர்ப்பக்,
காடு கை காய்த்திய நீடு நாள் இருக்கை
இன்ன வைகல் பல் நாள் ஆகப்  10
பாடிக் காண்கு வந்திசின் பெரும!
பாடுநர், கொளக்கொளக் குறையாச் செல்வத்துச், செற்றோர்
கொலக்கொலக் குறையாத் தானைச், சான்றோர்
வண்மையும் செம்மையும் சால்பும் மறனும்
புகன்று புகழ்ந்து, அசையா நல்லிசை,  15
நிலம்தரு திருவின் நெடியோய் நின்னே.

Pathitruppathu 82, Poet: Perunkundrūr Kizhār, King: Ilanchēral Irumporai, Elephants Trained in their Jobs

Your enemies who fear you pray to gods.  You are in the
battle camp with your brave warriors, who have no battle
fears, but are feared by your enemies.

Musth-flowing, rage-filled, trained battle elephants that
defeated enemies with many flags unite with their females and
roam as bees swarm on their cheeks.  Your angry warriors are
ready, horse brigades with weapons are prepared to go to battle,
and soldiers with shields are roaring in rage and ready to advance.

Your army keeps itself warm with burning wood from
surrounding forests and your stay here is for a long time.

Oh magnificence!  You are a wealthy king with unlimited
wealth even after constant showering on bards and musicians.
You have a large army that cannot be reduced in numbers by
your enemies even after continuous deaths of your soldiers in
battles.  The wise praise your charity, greatness, just scepter,
wisdom and other good traits.

Oh great Chēra king!  The land that you conquered yields wealth.
I came here to see you and sing to you.

Notes:  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).

Meanings:  பகை பெருமையின் – because of your great enmity, தெய்வம் செப்ப – uttering the names of gods, ஆர் இறை அஞ்சா – warriors staying without fear, வெருவரு – fearful, கட்டூர் – battle camp, பல் கொடி நுடங்கும் – many flags flying, முன்பின் – strong, செறுநர் – enemies, செல் சமம் தொலைத்த – went and ruined in victorious battles, வினை நவில் யானை – elephants trained in their (battle) work, கடாஅம் வார்ந்து – musth flowing down (கடாஅம் – இசை நிறை அளபெடை), கடுஞ்சினம் பொத்தி – with great rage, வண்டுபடு – bee swarming, சென்னிய – with heads, பிடி புணர்ந்து இயல – united with their female elephants and roam, மறவர் மறல – warriors in rage, மாப்படை – horse brigade, உறுப்ப – ready with all the accessories, தேர் கொடி நுடங்க – flags on the chariots sway, தோல்புடை – warriors with shields, ஆர்ப்ப – raise uproar, காடு கை காய்த்திய – burn the trees in the forests to stay warm, நீடு நாள் இருக்கை – stay for a long time, இன்ன வைகல் பல் நாள் ஆக – many days passed like this, பாடிக் காண்கு வந்திசின் – I came to sing and see you (சின் – தன்மை அசை, an expletive of the first person), பெரும – O  lord, பாடுநர் – singers, கொளக்கொளக் குறையா – unlimited wealth even when given (கொளக்கொள – அடுக்குத்தொடர், repetition of a word for emphasis), செல்வத்து – with wealth, செற்றோர் – enemies, கொலக்கொலக் குறையா – not reduced by killing and killing (கொலக்கொல – அடுக்குத்தொடர், repetition of a word for emphasis), தானை – army, சான்றோர் – wise men, வண்மையும் செம்மையும் – charity and greatness, சால்பும் – and wisdom, மறனும் – and justice, புகன்று – with desire, புகழ்ந்து – praise, அசையா நல்லிசை – stable fame, நிலம்தரு திருவின் – with wealth that the land gives, நெடியோய் – Oh great one, நின்னே – you (ஏகாரம் அசை நிலை, an expletive)

பதிற்றுப்பத்து 83, *பஃறோல் தொழுதி*, பாடியவர்: பெருங்குன்றூர்கிழார், பாடப்பட்டவர்: இளஞ்சேரல் இரும்பொறை, துறை: தும்பை அரவம், தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

கார் மழை முன்பின் கை பரிந்த எழுதரும்
வான் பறைக் குருகின் நெடு வரி பொற்பக்,
கொல் களிறு மிடைந்த *பஃறோல் தொழுதி*யொடு
நெடுந்தேர் நுடங்கு கொடி அவிர்வரப் பொலிந்து,
செலவு பெரிது இனிது நின் காணுமோர்க்கே!  5
இன்னாது அம்ம அது தானே பன் மாண்
நாடு கெட எருக்கி, நன்கலம் தரூஉம் நின்
போர் அருங் கடுஞ்சினம் எதிர்ந்து,
மாறு கொள் வேந்தர் பாசறையோர்க்கே.

Pathitruppathu 83, Poet: Perunkundrūr Kizhār, King: Ilanchēral Irumporai, Army with Shields

Your tall, bright and splendid chariots with swaying flags,
moving in front of soldiers who carry shields and ride on
murderous elephants appear like a long row of
white-winged herons flying in the sky, the line altered by
flapping, in front of dark rain clouds.
It was such a pleasurable sight to see your advancing armies,
oh lord.

Your enemy kings in battle camps are distressed, their
esteemed countries ruined by your rage and their valuable
things seized by you.

Notes:  பொற்பு – பொற்பே பொலிவு (தொல்காப்பியம், உரியியல் 39).  அம்ம – அம்ம கேட்பிக்கும்  (தொல்காப்பியம் இடையியல் 28).  நின் போர் அருங் கடுஞ்சினம் எதிர்ந்து (7-8) – அருள் அம்பலவாணர் உரை – நினது பெறுதற்கரிய மிக்க சினத்தை ஏற்றுக்கொண்டு, ஒளவை துரைசாமி உரை – நினது மிக்க சினத்திற்கு இலக்காகி நேர்பட்டு.

Meanings:  கார் மழை – rainy season clouds, முன்பின் – in front of, கை பரிந்த – out or order, (since it’s like a ‘V’ and not in a straight line) எழுதரும் – rising, வான் பறைக் குருகின் – like white winged herons/egrets/storks (குருகின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), நெடு வரி பொற்ப – like a long row, கொல் களிறு – murderous elephants, மிடைந்த – dense, many, பஃறோல் – many shields (பஃறோல் – பல்தோல், குறியின் கீழ் லகரம் தகரம் வர ஆய்தமாகத் திரிந்து புணர்ந்தது), தொழுதியொடு – with a group, நெடுந்தேர் நுடங்கு கொடி – swaying flags in tall chariots, அவிர்வரப் பொலிந்து – being bright and splendid, செலவு பெரிது – great losses, இனிது நின் காணுமோர்க்கே – pleasure to those who see you, இன்னாது – it is distressing,  அம்ம – listen to me, கேட்பித்தல் பொருட்டு, அசைநிலை, an expletive, அது – that, தானே – தான், ஏ அசைநிலைகள், expletives, பன் மாண் – many esteemed (countries), நாடு கெட எருக்கி – destroying the country, நன்கலம் – fine ornaments, valuable things, தரூஉம் – they give you (இன்னிசை அளபெடை), நின் போர் அருங்கடுஞ்சினம் எதிர்ந்து – being targets of your great battle rage that is unable to bear, accepting your great battle rage, மாறு கொள் வேந்தர் – enemy kings who differ, பாசறையோர்க்கே – those in the battle camps (ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 84, *தொழில் நவில் யானை*, பாடியவர்: பெருங்குன்றூர்கிழார், பாடப்பட்டவர்: இளஞ்சேரல் இரும்பொறை, துறை: வாகை, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

எடுத்து ஏறு ஏய கடிப்புடை அதிரும்
போர்ப்புறு முரசம் கண் அதிர்ந்தாங்குக்,
கார் மழை முழக்கினும் வெளில் பிணி நீவி,
நுதல் அணந்து எழுதரும் *தொழில் நவில் யானைப்*
பார்வல் பாசறைத் தரூஉம் பல் வேல்,  5
பூழியர் கோவே! பொலந்தேர்ப் பொறைய!
மன்பதை சவட்டும் கூற்ற முன்ப!
கொடி நுடங்கு ஆர் எயில் எண்ணு வரம்பு அறியா;
பல் மா பரந்த புலம் ஒன்று என்று எண்ணாது,
வலியை ஆதல் நற்கு அறிந்தனர் ஆயினும்,  10
வார் முகில் முழக்கின் மழகளிறு மிகீஇத், தன்
கால் முளை மூங்கில் கவர் கிளை போல,
உய்தல் யாவது நின் உடற்றியோரே,
வணங்கல் அறியார், உடன்று எழுந்து உரைஇப்,
போர்ப்புறு தண்ணுமை ஆர்ப்பு எழுந்து நுவல,  15
நோய்த் தொழில் மலைந்த வேல் ஈண்டு அழுவத்து,
முனை புகல் புகல்வின் மாறா மைந்தரொடு,
உரும் எறி வரையின் களிறு நிலம் சேரக்,
காஞ்சி சான்ற செருப்பல செய்து நின்
குவவுக்குரை இருக்கை இனிது கண்டிகுமே,  20
காலை மாரி பெய்து தொழில் ஆற்றி,
விண்டு முன்னிய புயல் நெடும் காலைக்
கல் சேர்பு மா மழை தலைஇப்
பல் குரல் புள்ளின் ஒலி எழுந்தாங்கே.

Pathitruppathu 84, Poet: Perunkundrūr Kizhār, King: Ilanchēral Irumporai, Elephants Trained in their Business

Your well-trained battle elephants lift their fine heads,
break the ropes that tie them to their posts, and run toward
the battlefield, even when they hear the roars of clouds that
sound like the roars of leather-covered drums whose eyes
are beat with short sticks to goad your warriors to advance.

Oh king of Pūliyars with warriors carrying lances!
Oh Poraiyan with gold chariot!  Oh king who has slain
many enemy kings and is like Kootruvan!  The countless
forts with flags of your enemies, and their elephant and
horse brigades are no match for your strength.

Those of your enemies, who do not yield to you and bow
before your might are audacious to fight with you.  You crush
them like a young bull elephant in rut that crushes tender
bamboo shoots under its huge feet, as it trumpets like long,
loud rain clouds.  How can they survive?

Your leather-covered war thannumai drums roar, and your
warriors with passion spring to action doing their jobs in the
fierce battlefields that can cause death.  Warriors desirous of
battles are killed, and elephants are struck down like
mountains attacked by lightning, in uncertain battles.

We came and saw sweetly the happy cheers of your warriors
sounding like chirping and singing of birds when rain comes
down after a long dry spell, from rain clouds that rise up high
and float on the mountain summits after doing their
seasonal pouring, helping farmers.

Notes:  மழ – மழவும் குழவும் இளமைப் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 15).

Meanings:  எடுத்து ஏறு ஏய – goading the warriors (to fight), கடிப்புடை – hitting with short sticks, அதிரும் – roaring, போர்ப்பு உறு முரசம் – drums covered with leather, கண் அதிர்ந்தாங்கு – like the roaring of the drum eyes, கார் மழை முழக்கினும் – even when rain clouds roar, even when the dark clouds roar, வெளில் – the posts to which elephants are tied, பிணி – tied, நீவி – break (the ties), நுதல் – forehead, அணந்து எழுதரும் – lifting and getting ready, தொழில் நவில் யானை – elephants well trained in their trade, பார்வல் – to see (the enemies), பாசறை – battle camp, தரூஉம் பல் வேல் – many speared (தரூஉம் – இன்னிசை அளபெடை), பூழியர் கோவே – oh king of Pūliyars, பொலந்தேர்ப் பொறைய – oh Poraiyan with gold chariot, மன்பதை – enemies, சவட்டும் – kills, கூற்ற முன்ப – oh one who is like the god of death, கொடி நுடங்கு – flags waving, ஆர் எயில் – difficult fort, எண்ணு வரம்பு அறியா – not seeing limits, பல் மா பரந்த புலம் – many animals spread in the enemy land, ஒன்று என்று எண்ணாது – not counting how many and knowing, வலியை ஆதல் நற்கு அறிந்தனர் ஆயினும் – even though they knew your strength well (நற்கு – நன்கு விகாரம்), வார் முகில் முழக்கின் – like the roaring of long clouds (முழக்கின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), மழ களிறு – young male elephant, மிகீஇ – very much (சொல்லிசை அளபெடை), தன் கால் முளை மூங்கில் கவர் கிளை போல – like bamboo shoots that caught under its legs, உய்தல் யாவது – how can they survive, நின் உடற்றியோரே – your enemies (உடற்றியோரே – ஏகாரம் அசை நிலை, an expletive),  வணங்கல் அறியார் – they do not know to bow to you, உடன்று எழுந்து உரைஇ – differing and spreading like a flood (உரைஇ – சொல்லிசை அளபெடை), போர்ப்பு உறு தண்ணுமை – leather-covered thannumai drums, ஆர்ப்பு எழுந்து நுவல – sounds rise to announce, நோய்த் தொழில் – painful business (war), மலைந்த வேல் ஈண்டு அழுவத்து – to the battlefield where many warriors came with spears, முனை புகல் புகல்வின் – they enter the battlefield with desire, they enter the battlefield with arrogance, மாறா மைந்தரொடு – with enemies who do not back off, with enemies who do not change their minds, உரும் எறி – thunder striking, வரையின் களிறு நிலம் சேர – mountain-like male elephants fall on the land (வரையின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), காஞ்சி – uncertainty, சான்ற செருப்பல செய்து – did splendid war acts, நின் – your, குவவு – group (warriors), குரை – sounds, இருக்கை – place, இனிது கண்டிகுமே – we saw its sweetness (கண்டிகும் – தன்மைப் பன்மை வினைமுற்று, இகும் தன்மைக்கண் வந்த அசைநிலை, ஏ – அசைநிலை, an expletive), காலை, மாரி பெய்து தொழில் ஆற்றி – rain fell and did its duty, விண்டு முன்னிய – reached the summit, புயல் நெடும் காலை – when the clouds did not shower rain for a long time (புயல் – ஆகுபெயர் முகிலுக்கு), கல் சேர்பு – joining the mountains, மா மழை – big clouds, தலைஇ – raining (சொல்லிசை அளபெடை), பல் குரல் புள்ளின் ஒலி எழுந்தாங்கே – like the chirping of many birds (எழுந்தாங்கே – ஏகாரம் அசை நிலை, an expletive)

பதிற்றுப்பத்து 85, *நாடு காண் நெடுவரை*, பாடியவர்: பெருங்குன்றூர்கிழார், பாடப்பட்டவர்: இளஞ்சேரல் இரும்பொறை, துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

நல் மரம் துவன்றிய நாடு பல தரீஇப்,
பொன் அவிர் புனை செயல் இலங்கும் பெரும்பூண்,
ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான்
இட்ட வெள்வேல் முத்தைத் தம்மென,
முன் திணை முதல்வர் போல நின்று,  5
தீம் சுனை நிலைஇய திருமா மருங்கின்
கோடு பல விரிந்த *நாடு காண் நெடுவரைச்*
சூடா நறவின் நாள் மகிழ் இருக்கை,
அரசு அவை பணிய அறம் புரிந்து வயங்கிய
மறம் புரி கொள்கை வயங்கு செந்நாவின்,  10
உவலை கூராக் கவலை இல் நெஞ்சின்,
நனவில் பாடிய நல்லிசைக்
கபிலன் பெற்ற ஊரினும் பலவே.

Pathitruppathu 85, Poet: Perunkundrūr Kizhār, King: Ilanchēral Irumporai, Tall Mountains from which the Country can be seen

You ordered your brave warriors to conquer his land with
dense forests with fine trees, and capture and bring him,
the Chozha king wearing finely made lovely large jewels, who does
not back off.  His soldiers retreated dropping their bright lances.

You are honorable like your esteemed ancestors.  Your kingdom
has lofty mountains with many peaks from which the entire
country can be seen, flourishing wealth, and springs with sweet
water.  You rule with a just scepter from your royal court in Naravu,
where you give audience.  Kings and chieftains bow to you.  You
engage in martial duties with desire.

Poet Kapilar with an honest tongue and good heart, sang in person,
the praises of your ancestor, who gifted him with many towns,
but not as many as the spears that you got from the Chozha warriors
who retreated for fear of your army.

Notes:  சூடா நறவின் (8) – அருள் அம்பலவாணர் உரை – சூடப்படாத நறவினையுடைய, சூடப்படும் நறவம் பூவும் உண்மையின் மதுவைச் ‘சூடா நறவு’ என்றார்.  தன் பால் வரும் கூத்தர் முதலிய பரிசிலர்க்கு வழங்கும் மதுவுடைமையால் நாண்மகிழ் இருக்கையைச் ‘சூடா நறவின் நாண்மகிழ் இருக்கை என்றார்’, உரையாசிரியரின் பெயர் கிடைக்காத பழைய உரை – மதுவிற்கு வெளிப்படை, ஒளவை துரைசாமி உரை – நறவு என்ற ஊரின்கண் இருக்கும், நறவு என்ற ஊருக்கு வெளிப்படை.  துவன்று – துவன்று நிறைவு ஆகும் – (தொல்காப்பியம், உரியியல் 36).

Meanings:  நல் மரம் துவன்றிய நாடு – countries with trees growing densely, பல தரீஇ – won and brought many (தரீஇ – சொல்லிசை அளபெடை), பொன் – gold, அவிர் – bright, புனை செயல் – created, made, இலங்கும் பெரும் பூண் – bright big jewels, ஒன்னாப் பூட்கை – not agreeing with us and having the principle of not backing off, சென்னியர் பெருமான் – leader of the Chōzhas, the Chōzhan king, இட்ட வெள் வேல் – thrown bright spears, முத்தைத் தம்மென – bring him in front of me, முன் திணை முதல்வர் போல நின்று – you stood like the ancestors of your clan, தீம் சுனை – sweet spring, நிலைஇய – established (சொல்லிசை அளபெடை), திருமா மருங்கின் – near the beautiful space, கோடு பல – many peaks, விரிந்த – huge, நாடு காண் நெடுவரை – tall mountain peaks that can be seen from all over the country or tall mountain peaks from where the country can be seen, சூடா நறவின் –  with naravu that is toddy and not the flowers that are worn, Naravu town and not the flowers that are worn, with toddy, நாள் மகிழ் இருக்கை – daytime happy court, அரசு அவை பணிய – making other kings come and bow, அறம் புரிந்து வயங்கிய – desiring and flourishing with virtue, மறம் புரி கொள்கை – desiring bravery as your policy, வயங்கு செந்நாவின் – with a flourishing honest tongue, உவலை – lowly, கூரா – not abundant, கவலை இல் நெஞ்சின் – with a heart without sorrow, நனவில் பாடிய – sang in person, நல்லிசை – good fame, கபிலன் பெற்ற ஊரினும் பலவே – more than the towns poet Kapilar got (பலவே – ஏகாரம் அசை நிலை, an expletive)

பதிற்றுப்பத்து 86, *வெந்திறல் தடக்கை*, பாடியவர்: பெருங்குன்றூர்கிழார், பாடப்பட்டவர்: இளஞ்சேரல் இரும்பொறை, துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

உறல் உறு குருதிச் செருக்களம் புலவக்
கொன்று அமர்க் கடந்த *வெந்திறல் தடக்கை*
வென்வேல் பொறையன் என்றலின் வெருவர,
வெப்பு உடை ஆடூஉச் செத்தனென் மன், யான்;
நல் இசை நிலைஇய நனந்தலை உலகத்து  5
இல்லோர் புன் கண் தீர நல்கும்
நாடல் சான்ற நயன் உடை நெஞ்சின்,
பாடுநர் புரவலன் ஆடு நடை அண்ணல்,
கழை நிலை பெறாஅக் குட்டத்து ஆயினும் ,
புனல் பாய் மகளிர் ஆட ஒழிந்த  10
பொன் செய் பூங்குழை மீமிசைத் தோன்றும்
சாந்துவரு வானி நீரினும்,
தீந் தண் சாயலன் மன்ற தானே.

Pathitruppathu 86, Poet: Perunkundrūr Kizhār, King: Ilanchēral Irumporai, Efficient Big Hands

I used to think that king Poraiyan with his sharp-speared
warriors, was just a victorious and brave king with skilled,
large hands, who slayed his enemies whose blood soaked
the ground and flowed in the flesh-reeking battlefields.

Now I also know that he has a kind heart and big hands
that donate to remove the sorrow of those who are poor.
Noble man with a swaying walk, he is a patron of singers.
His good reputation stands firm in this vast world.

He is cooler and more delicate than the clear water of the rapid,
unstoppable Vāni river where sandalwood floats, hard to cross
even with bamboo poles, where women jump and play, and if
they lose their pretty gold earrings, they are able to look down
through the crystal-clear waters and find them.

Notes:  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).  சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம்,  உரியியல் 29).  குறுந்தொகை 95 – நீர் ஓரன்ன சாயல், கலித்தொகை 42 – நீரினும் சாயல் உடையன், புறநானூறு 105 – நீரினும் இனிய சாயல், பதிற்றுப்பத்து 86 – நீரினும் தீந்தண் சாயலன், மலைபடுகடாம் 61 – புது நிறை வந்த புனல் அம் சாயல்.  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

Meanings:  உறல் உறு குருதி – soaked blood that is flowing heavily (உறு – மிக்க), செருக்களம் – battlefield, புலவ – causing flesh smell, கொன்று – killed, அமர்க் கடந்த – won battles, வெந்திறல் தடக்கை – bravery skilled big hands, வென்வேல் பொறையன் – Poraiyan with victorious spears, என்றலின் வெருவர – everybody says, வெப்பு உடை – with rage, ஆடூஉ – man (இன்னிசை அளபெடை), செத்தனென் – I thought, மன் – expletive, யான் – I, நல் இசை நிலைஇய – for his good fame to stand (நிலைஇய – சொல்லிசை அளபெடை), நனந்தலை உலகத்து – in the vast world, இல்லோர் புன் கண் தீர நல்கும் – he donates to remove the sorrow of those who don’t have material wealth, நாடல் சான்ற நயன் உடை நெஞ்சின் – with his charitable heart with righteousness, பாடுநர் புரவலன் – a patron of those who sing, ஆடு நடை அண்ணல் – a noble man with swaying walk, கழை – poles used to propel boats, நிலை பெறாஅ – unable to stop (பெறாஅது – இசை நிறை அளபெடை), குட்டத்து ஆயினும்- even in the depth, புனல் பாய் மகளிர் – women jumping into the water, ஆட ஒழிந்த – played and lost, பொன் செய் பூங்குழை – pretty earrings made with gold, earrings with flower designs made with gold, மீமிசைத் தோன்றும் – can see from above (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), சாந்துவரு வானி நீரினும் – more than the Vāni river waters that carry sandalwood, தீந்தண் சாயலன் – his nature is cool and delicate, மன்ற – for sure (தானே – தான், ஏ அசை நிலை, expletive)

பதிற்றுப்பத்து 87, *வெண்தலைச் செம்புனல்*, பாடியவர்: பெருங்குன்றூர்கிழார், பாடப்பட்டவர்: இளஞ்சேரல் இரும்பொறை, துறை: விறலியாற்றுப்படை, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

சென்மோ பாடினி! நன்கலம் பெறுகுவை!
சந்தம் பூழிலொடு பொங்கு நுரை சுமந்து,
தெண்கடல் முன்னிய *வெண்தலைச் செம்புனல்*
ஒய்யும் நீர்வழிக் கரும்பினும்
பல் வேல் பொறையன் வல்லனால், அளியே.  5.

Pathitruppathu 87, Poet: Perunkundrūr Kizhār, King: Ilanchēral Irumporai, White-topped River with Red Flood Waters

Oh female musician!  If you seek the audience
of the benevolent king Poraiyan who has warriors
carrying spears, you’ll get gifts of fine ornaments.

He is much more generous than the reed rafts
that are used to cross flooded, white-topped, red
rivers with abundant foam, that carry sandal and
akil woods as they rush toward the clear ocean.

Notes:  கரும்பினும் (4) – ஒளவை துரைசாமி உரை – வேழக்கரும்பைக் காட்டிலும், அருள் அம்பலவாணர் உரை – கருப்பந்தெப்பத்தினும், உ. வே. சாமிநாதையர் உரை – கரும்பென்றது கருப்பந்தெப்பத்தினை.  அகநானூறு 6 – வேழ வெண்புணை. ஒளவை துரைசாமி உரை – வேழப்புணை ஆற்று நீரைக் கடத்தற்குத் துணையாவது அல்லது கடந்த பின்னும் துணையாவதில்லை.  பொறையன் நினது இவ்வறுமைத் துன்பத்தைக் கடத்தற்குத் துணையாம் பெருவளம் நல்குவதே அன்றி, அத் துன்பமின்றி இனிது இருக்குங்காலத்தும் வழங்கி அருள்வர் என்றார்.

Meanings:  சென்மோ பாடினி – go O female musician (மோ – முன்னிலையசை, an expletive of the second person), நன்கலம் பெறுகுவை – you will receive fine jewels, சந்தம் – sandalwood, பூழிலொடு – along with akil wood, Eaglewood Tree, Aquilaria agallocha, பொங்கு நுரை சுமந்து – carrying abundant foam, தெண்கடல் – clear ocean, முன்னிய – going toward, வெண்தலை – white top, செம்புனல் – red muddied water, ஒய்யும் நீர்வழி – helping to ride on the water, கரும்பினும் – even more than the reed rafts, even more than the sugarcane rafts, பல் வேல் பொறையன் – Poraiyan with warriors carrying spears, வல்லன் ஆல் அளியே – he is capable of giving (ஆல் – அசைநிலை, an expletive, அளியே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 88, *கல் கால் கவணை*, பாடியவர்: பெருங்குன்றூர்கிழார், பாடப்பட்டவர்: இளஞ்சேரல் இரும்பொறை, துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

வையகம் மலர்ந்த தொழில் முறை ஒழியாது,
கடவுள் பெயரிய கானமொடு கல் உயர்ந்து,
தெண்கடல் வளைஇய மலர்தலை உலகத்துத்,
தம் பெயர் போகிய ஒன்னார் தேயத்,
துளங்கு இருங்குட்டம் தொலைய வேல் இட்டு,  5
அணங்கு உடைக் கடம்பின் முழு முதல் தடிந்து,
பொரு முரண் எய்திய கழுவுள் புறம்பெற்று,
நாம மன்னர் துணிய நூறிக்,
கால் வல் புரவி அண்டர் ஓட்டிச்
சுடர் வீ வாகை நன்னன் தேய்த்துக்,  10
குருதி விதிர்த்த குவவுச் சோற்றுக் குன்றோடு
உருகெழு மரபின் அயிரை பரைஇ
வேந்தரும் வேளிரும் பின் வந்து பணியக்,
கொற்றம் எய்திய பெரியோர் மருக!
வியல் உளை அரிமான் மறங் கெழு குருசில்  15
விரவுப் பணை முழங்கு நிரை தோல் வரைப்பின்,
உரவுக்களிற்று வெல் கொடி நுடங்கும் பாசறை,
ஆர் எயில் அலைத்த *கல் கால் கவணை*
நார் அரி நறவின் கொங்கர் கோவே!
உடலுநர்த் தபுத்த பொலந்தேர்க் குருசில்!  20
வளை கடல் முழவின் தொண்டியோர் பொருந!
நீ நீடு வாழிய பெரும நின் வயின்
துவைத்த தும்பை நனவுற்று வினவும்
மாற்றரும் தெய்வத்துக் கூட்ட முன்னிய
புனல் மலி பேரியாறு இழிதந்தாங்கு,  25
வருநர் வரையாச் செழும்பல் தாரம்
கொளக் கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப,
ஓவத்து அன்ன உருகெழு நெடுநகர்ப்,
பாவை அன்ன மகளிர் நாப்பண்,
புகன்ற மாண்பொறிப் பொலிந்த சாந்தமொடு  30
தண் கமழ் கோதை சூடிப் பூண் சுமந்து,
திரு வில் குலைஇத் திரு மணி புரையும்
உருகெழு கருவிய பெரு மழை சேர்ந்து,
வேங்கை விரிந்து விசும்பு உறு சேட்சிமை
அருவி அரு வரை அன்ன மார்பின்  35
சேண் நாறு நல் இசைச் சேயிழை கணவ!
மாகம் சுடர மா விசும்பு உகக்கும்
ஞாயிறு போல விளங்குதி பல் நாள்!
ஈங்குக் காண்கு வந்தனென் யானே,
உறு கால் எடுத்த ஓங்குவரல் புணரி  40
நுண் மணல் அடைகரை உடைதரும்
தண் கடல் படப்பை நாடு கிழவோயே.

Pathitruppathu 88, Poet: Perunkundrūr Kizhār, King: Ilanchēral Irumporai, Stone Throwing Catapults

In this large world, where the tall Vindhya Mountains
are named after the forest goddess Kotravai,
and the land is surrounded by clear waters, you come
from a lineage of kings who made this country prosper.

Your ancestors vanquished their enemies, destroying them
in battles in the vast deep ocean with waves.  Their warriors
with spears cut down the sacred kadampan trees of their
enemies and hacked them to pieces, beat king Kazhuvul
in a massive battle, felled many ferocious kings,
chased wild herders with strong-legged horses, cut down
Nannan’s sacred vākai tree with bright flame-like
flowers and killed him.

They mixed the blood of enemy kings with rice and spread
the big heaps of rice on Ayirai, mountain where goddess
Kotravai resides, according to fierce traditions.

The Chōzhan, Pāndiyan, and kings with small kingdoms bowed
to the might of your ancestors.

Oh lord of such victorious heritage!  Oh king with the strength
of a lion sporting a thick mane!  In your battle camp, drums
roar along with other instruments, shields are placed in rows,
elephants with swaying victorious flags are ready, and there are
catapults that rained havoc on enemy fortresses you assaulted.

Oh Kongu country Leader who drinks strained clear liquor!
Oh Magnificence who ruins his enemies and rides a golden
chariot!  Oh ruler of Thondi with seashores dense with conch
shells!  My you live long, my lord!

You give again and again generously.  Your unlimited charity
to those who come in need is like the Pēriyāru river with abundant
water, flowing down the Ayirai mountains of goddess Kotravai
who is praised by warriors wearing thumpai garlands in battles
with loud musical instruments.

May you shine like the sun for a long time, which climbs up the
dark sky spreading its light in all directions, oh husband of women
wearing new jewels whose fine fame has spread far, who is in the
midst of your doll-like women in your huge, fabulous palace that
appears like a painting.  Your broad chest decorated with
auspicious lines, sandal paste cool fragrant garlands and precious
ornaments is like the tall mountains where ṅgai flowers bloom
waterfalls flow from sky-touching peaks, arched rainbows appear with
thunder and lightning, and sapphire-hued clouds come down as rain.

Oh husband of woman with widespread fine fame and beautiful
jewels!  May you live a long life!  I came to see you, oh lord!  You
are king of a country with groves on the cool ocean shores, where
fast winds cause tall waves to break rapidly filling the shores with
fine sand.

Notes:  ஓங்கு புகழ்க் கான் அமர் செல்வி – கொற்றவை, அகநானூறு 365.  கடவுள் பெயரிய கானமொடு கல் உயர்ந்து (2) – ஒளவை துரைசாமி உரை – கொற்றவையின் பெயரால் ஆகிய விந்தாடவியோடு அப்பெயரையே உடையதாகிய விந்தை மலையினும் புகழ் மிகுந்து, அருள் அம்பலவாணர் உரை – துர்க்கையின் பெயர்பெற்ற காட்டோடு கல் உயரப்பெற்று, பழைய உரை – கடவுள் என்றது ஆண்டு உறையும் கொற்றவையினை.  கல் கால் கவணை (18) – ஒளவை துரைசாமி உரை – பகைவர்தம் அரண்களைப் பெரிய கற்குண்டுகளை எறிந்து தாக்குவதற்குக் கல் கால் கவணைகள் பல பாசறையிடத்தே அமைக்கப்பட்டிருப்பது காண்க. படைகொண்டு செல்லுமிடத்து உடன்கொண்டு போகப்படும் பொறிகளும் இருந்தன என்பதும், அவற்றுள் கல் கால் கவணை சிறப்புடைத்து ஆதல்பற்றி, அதனை எடுத்து ஓதினார் என்பதும் இதனால் அறியலாம், பழைய உரை – கற்களைக் கான்றாற்போல் (உமிழ்த்தாற்போல்) இடையறாமல் விடும் கவண் என்றவாறு.  துவைத்த தும்பை (23) – ஒளவை துரைசாமி உரை – தும்பைப் போரில் பலவகை வாச்சியங்கள் முழங்குதலின் ‘துவைத்த தும்பை என்றும் கூறினார்.  தும்பைப் போரில் விளையும் வெற்றியாகிய பயன் குறித்தலின் தும்பை ஆகுபெயர்.  நனவுற்று வினவும் (23) – ஒளவை துரைசாமி உரை – கொற்றவையை பரவுவதுப் பற்றி ‘நனவுற்று வினவும்’ என்றார்.  கொளக் கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப (27) – ஒளவை துரைசாமி உரை – கொள்ளக் கொள்ள குறைவுபடாமல் மிக்கு விளங்க, அருள் அம்பலவாணர் உரை – கொள்ளக் கொள்ள குறையாமல் இடந்தொறும் இடந்தொறும் மிகும்படி.   கருவிய பெரு மழை (33) – இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய பெரிய முகில்கள்.  நாம் – பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆ முறை மூன்றும் அச்சப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 69).  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58).  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:   வையகம் மலர்ந்த – making the world prosper, தொழில் முறை ஒழியாது – doing ruling business without failure, கடவுள் பெயரிய கானமொடு – with the forest with the name of the goddess Kotravai, கல் உயர்ந்து – more fame than the mountain, தெண்கடல் – oceans with clear water, வளைஇய – surrounded (வளைஇய – சொல்லிசை அளபெடை), மலர்தலை உலகத்து – widespread world, தம் பெயர் போகிய ஒன்னார் தேய – ruining enemies whose fame was spread, துளங்கு – swaying, இருங்குட்டம் – large ocean, deep ocean (குட்டம் – ஆகுபெயர் கடலுக்கு), தொலைய – to ruin, வேல் இட்டு – send warriors with spears, அணங்கு உடைக் கடம்பின் – of the divine sacred kadampam tree, Anthocephalus cadamba, Kadampa Oak, முழு முதல் தடிந்து – cut the thick trunk down to pieces, பொரு முரண் எய்திய கழுவுள் புறம்பெற்று – beat Kazhuvul in a big battle with enmity, நாம மன்னர் – fierce kings (நாம – நாம் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது), துணிய நூறி – cut them down to pieces, கால் வல் – leg strong horses, புரவி – horses, அண்டர் ஓட்டி – chased cow-herders, சுடர் வீ வாகை – bright flowers vākai tree, Sirissa tree, Albizia lebbeck, நன்னன் தேய்த்து – destroyed Nannan, குருதி விதிர்த்த – blood poured, blood scattered, குவவுச் சோற்று குன்றோடு – with heaps of rice, உருகெழு – fierce, scary, மரபின் – with the belief, according to tradition, அயிரை பரைஇ – prayed to Kotravai in the Ayirai hills (பரைஇ – சொல்லிசை அளபெடை), வேந்தரும் வேளிரும் பின் வந்து பணிய – kings (Chōzhan and Pāndiyan), and small-region Vēlir kings come and bow, கொற்றம் எய்திய – victory attained, பெரியோர் மருக – O heir of great ancestors, வியல் உளை – wide mane, அரிமான் – lion, மறம் கெழு குருசில் – king who is very brave, விரவு – with many (other instruments), பணை முழங்கு – large panai drums roar, நிரை – in a row, தோல் – shields, வரைப்பின் – with a place, உரவுக் களிற்று – with moving male elephants, with mighty male elephants, வெல் கொடி நுடங்கும் – victory flags swaying, பாசறை – battle camp, ஆர் எயில் – difficult forts, அலைத்த – ruined, கல் கால் – stone throwing, கவணை – catapults, rock throwing equipment, நார் அரி நறவின் – with fiber filtered alcohol (fiber – பன்னாடை, the cloth-like fibrous piece covering the base of coconut leaf stems), கொங்கர் கோவே – oh king of Kongu country, உடலுநர்த் தபுத்த – destroyed enemies, பொலந்தேர்க் குருசில் – oh king with a golden chariot, வளை கடல் – conch shell filled ocean, முழவின் – roars (of waves), தொண்டியோர் பொருந – oh king of the people of Thondi, நீ நீடு வாழிய – may you live long, பெரும – oh magnificent, நின் வயின் – your, துவைத்த தும்பை – battles where warriors wear thumpai garlands praise, battles where musical instruments are heard, Leucas aspera, நனவுற்று – in reality, வினவும் – praising, praying, மாற்றரும் – unable to change, stable, தெய்வத்துக் கூட்ட முன்னிய – where Kotravai goddess resides (Ayirai Hills), புனல் மலி பேரியாறு – the water-filled Pēriyāru, இழிதந்தாங்கு – like how it comes down, வருநர் வரையா – give without limits to those who ask, செழும்பல் தாரம் – abundant things, கொளக் கொளக் குறையாது – will not get reduced even if a lot is given, தலைத்தலைச் சிறப்ப – increased everywhere, ஓவத்து அன்ன – like a painting (ஓவம், அத்து சாரியை, an augment), உருகெழு நெடுநகர் – imposing tall palace, பாவை அன்ன மகளிர் – young women who are like dolls, நாப்பண் – amidst, புகன்ற – as told by books, as told by elders, மாண் பொறி – splendid dots, பொலிந்த சாந்தமொடு – with bright sandal paste, with lovely sandal paste, தண் கமழ் கோதை சூடி – wore cool fragrant garland, பூண் சுமந்து – bearing jewels, திரு வில் குலைஇ – bending the beautiful rainbow (குலைஇ – சொல்லிசை அளபெடை), திரு மணி புரையும் – like beautiful gems, உருகெழு – fierce, scary, கருவிய – clouds with thunder and lightning, பெரு மழை – heavy rains, சேர்ந்து – together, வேங்கை விரிந்து – vēngai flowers blossom, விசும்பு உறு சேட்சிமை – sky touching tall peaks, அருவி – waterfalls, அருவரை அன்ன மார்பின் – with a chest like the harsh/rare mountains, சேண் நாறு – spreading far, நல் இசை – good name, சேயிழை கணவ – oh husband to a woman wearing lovely jewels, O husband to a woman wearing red jewels (சேயிழை – அன்மொழித்தொகை), மாகம் சுடர – all directions to get bright, மா விசும்பு உகக்கும் – rises in the big skies, ஞாயிறு போல விளங்குதி – you shine like the sun, பல் நாள் – many days, ஈங்குக் காண்கு வந்தனென் யானே – I came here to see you, உறு கால் – heavy winds (உறு – மிக்க), எடுத்த – causing, ஓங்குவரல் புணரி – tall waves, நுண் மணல் – fine sand, அடைகரை – sand-filled shores, water filled shores, உடைதரும் – they break, தண் கடல் – cool ocean, படப்பை – adjoining land, நாடு – country, கிழவோயே – Oh lord (ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 89, *துவராக் கூந்தல்*, பாடியவர்: பெருங்குன்றூர்கிழார், பாடப்பட்டவர்: இளஞ்சேரல் இரும்பொறை, துறை: காவல் முல்லை, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

வானம் பொழுதொடு சுரப்பக் கானம்
தோடு உறு மடமான் ஏறு புணர்ந்து இயலப்,
புள்ளும் மிஞிறும் மாச்சினை ஆர்ப்பப்,
பழனும் கிழங்கும் மிசை அறவு அறியாது,
பல் ஆன் நல் நிரை புல் அருந்து உகளப்,  5
பயங் கடை அறியா வளங் கெழு சிறப்பின்
பெரும் பல் யாணர்க் கூலங் கெழும,
நன் பல் ஊழி நடுவு நின்று ஒழுகப்
பல் வேல் இரும்பொறை நின் கோல் செம்மையின்,
நாளின் நாளின் நாடு தொழுது ஏத்த,  10
உயர்நிலை உலகத்து உயர்ந்தோர் பரவ,
அரசியல் பிழையாது செரு மேந்தோன்றி,
நோய் இலை ஆகியர் நீயே நின்மாட்டு
அடங்கிய நெஞ்சம் புகர்படுபு அறியாது,
கனவினும் பிரியா உறையுளொடு தண் எனத்  15
தகரம் நீவிய *துவராக் கூந்தல்*
வதுவை மகளிர் நோக்கினர், பெயர்ந்து
வாழ் நாள் அறியும் வயங்குசுடர் நோக்கத்து
மீனொடு புரையும் கற்பின்,
வாணுதல் அரிவையொடு காண்வரப் பொலிந்தே.  20

Pathitruppathu 89, Poet: Perunkundrūr Kizhār, King: Ilanchēral Irumporai, Hair that is Not Dry

In your forest, rains fall in a timely manner, does unite
happily with their stags, birds sing, bees buzz on trees,
there are bountiful fruits and roots, and cow herds graze
and frolic.

In your country, poverty is unknown and there are plentiful
grain harvests and abundantly flourishing wealth.

Oh king Poraiyan with an army with spears and a just scepter!
You are adored and praised every day by the citizens of your
country and by celestials in the upper world.  You rule without
blemish, and you are victorious in battles.  May you live long,
without any disease!

Your wife, who has given her heart to you, is not away from you,
even in your dreams.  Her splendid forehead shines, and her wet
hair is adorned with cool thakaram paste.  Her honor is like that
of the shining star Arunthathi, who is seen by married women,
to know what is in their future.  May you live long with her!

Notes:  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  வாள் – வாள் ஒளி ஆகும் (தொல்காப்பியம் உரியியல் 71).  உயர்நிலை உலகத்து உயர்ந்தோர் பரவ (11) – அருள் அம்பலவாணர் உரை – உயர்நிலையையுடைய உலகத்தில் உள்ள தேவர்கள் புகழ, ஒளவை துரைசாமி உரை – உயர்ந்த நிலைமையினை உடைத்தாகிய தேவருலக வாழ்வுக்குரிய ஒழுக்கத்தால் உயர்ந்த சான்றோர் பரவி வாழ்த்துதல்.

Meanings:  வானம் பொழுதொடு சுரப்ப – since rain falls from the sky in a timely manner, கானம் – in the forest, தோடு உறு மடமான் – female deer that are with their herds, ஏறு புணர்ந்து இயல – unite with their males and go, புள்ளும் மிஞிறும் – birds and bees, மாச்சினை – big branches, ஆர்ப்ப – create noises, பழனும் கிழங்கும் – fruits and roots/tubers (பழன் – பழம் என்பதன் போலி), மிசை அறவு அறியாது – not reduced by eating, பல் ஆன் நல் நிரை புல் அருந்து உகள – cow herds eat grass and play (ஆர்ந்து என்பது அருந்து என வந்தது), பயம் கடை அறியா – does not know the end of the benefits, வளம் கெழு சிறப்பின் – flourishing splendidly, பெரும் பல் யாணர் – great and abundant prosperity, கூலம் கெழும – grains in abundance, grains flourishing, நன் பல் – fine few, ஊழி – time, நடுவு நின்று ஒழுக – be very fair, பல் வேல் இரும்பொறை – King Irumporai with many spears, நின் கோல் செம்மையின் – because of your just scepter, because of your just rule, நாளின் நாளின் நாடு தொழுது ஏத்த – you are adored and praised every day in your country, உயர்நிலை உலகத்து உயர்ந்தோர் பரவ – your fame has been praised by the celestials who live in the upper world, praised by the wise people who are have fine behavior like the celestials, அரசியல் பிழையாது – not making mistakes in your rule, செரு மேந்தோன்றி – victorious in battles, நோய் இலை ஆகியர் – may you live with health (இலை – இல்லை என்பதன் விகாரம்), நீயே – you, நின் மாட்டு அடங்கிய நெஞ்சம் புகர்படுபு அறியாது – she who has given her heart to you does not suffer pain, கனவினும் பிரியா – not separated even in dream, உறையுளொடு – with his wife, தண் என – cool, தகரம் நீவிய – fragrant thakaram paste rubbed, நறுமண மரவகை, Wax- flower dog-bane, Tabernae montana,  துவராக் கூந்தல் – not dry (wet) hair, வதுவை மகளிர் – married women, நோக்கினர் – those who saw, பெயர்ந்து – after that, வாழ் நாள் – life time, அறியும் – knowing, வயங்கு சுடர் – bright flame, நோக்கத்து – with the looks, மீனொடு புரையும் கற்பின் – with virtue like that of the northern star Arunthathi, வாள் நுதல் அரிவையொடு – with the bright fore-headed young woman, காண்வரப் பொலிந்தே – shine beautifully (பொலிந்தே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிற்றுப்பத்து 90, *வலி கெழு தடக்கை*, பாடியவர்: பெருங்குன்றூர்கிழார், பாடப்பட்டவர்: இளஞ்சேரல் இரும்பொறை, துறை: காட்சி வாழ்த்து, தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும், வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்

மீன் வயின் நிற்ப வானம் வாய்ப்ப,
அச்சு அற்று ஏமம் ஆகி இருள் தீர்ந்து
இன்பம் பெருகத் தோன்றித் தம் துணைத்
துறையின் எஞ்சாமை நிறையக் கற்றுக்,
கழிந்தோர் உடற்றும் கடும்தூ அஞ்சா  5
ஒளிறு வாள் வயவேந்தர்
களிறொடு கலம் தந்து,
தொன்று மொழிந்து தொழில் கேட்ப,
அகல் வையத்துப் பகல் ஆற்றி,
மாயாப் பல் புகழ் வியல் விசும்பு ஊர்தர,  10
வாள் வலியுறுத்துச் செம்மை பூஉண்டு,
அறன் வாழ்த்த நற்கு ஆண்ட
விறல் மாந்தரன் விறல் மருக!
ஈரம் உடைமையின் நீரோர் அனையை!
அளப்பு அருமையின் இரு விசும்பு அனையை!  15
கொளக் குறைபடாமையின் முந்நீர் அனையை!
பல் மீன் நாப்பண் திங்கள் போலப்
பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை!
உருகெழு மரபின் அயிரை பரவியும்,
கடல் இகுப்ப வேல் இட்டும்,  20
உடலுநர் மிடல் சாய்த்தும்,
மலயவும் நிலத்தவும் அருப்பம் வெளவிப்,
பெற்ற பெரும் பெயர் பலர் கை இரீஇய
கொற்றத் திருவின் உரவோர் உம்பல்!
கட்டிப் புழுக்கின் கொங்கர் கோவே!  25
மட்டப் புகாவின் குட்டுவர் ஏறே!
எழாஅத் துணைத்தோள் பூழியர் மெய்ம்மறை!
இரங்கு நீர்ப் பரப்பின் மரந்தையோர் பொருந!
வெண்பூ வேளையொடு சுரை தலைமயக்கிய
விரவு மொழிக் கட்டூர் வயவர் வேந்தே!  30
உரவுக்கடல் அன்ன தாங்கு அருந்தானையொடு
மாண் வினைச் சாபம் மார்பு உற வாங்கி,
ஞாண் பொர விளங்கிய *வலி கெழு தடக்கை*
வார்ந்து புனைந்தன்ன ஏந்து குவவு மொய்ம்பின்,
மீன் பூத்தன்ன விளங்கு மணிப் பாண்டில்,  35
ஆய் மயிர்க் கவரிப் பாய் மா மேல்கொண்டு,
காழ் எஃகம் பிடித்து எறிந்து,
விழுமத்தின் புகலும் பெயரா ஆண்மைக்
காஞ்சி சான்ற வயவர் பெரும
வீங்கு பெரும் சிறப்பின் ஓங்கு புகழோயே!  40
கழனி உழவர் தண்ணுமை இசைப்பின்,
பழன மஞ்ஞை மழை செத்து ஆலும்,
தண் புனல் ஆடுநர் ஆர்ப்பொடு மயங்கி,
வெம்போர் மள்ளர் தெள் கிணை கறங்கக்,
கூழ் உடை நல் இல் ஏறுமாறு சிலைப்பச், 45
செழும் பல இருந்த கொழும் பல் தண் பணைக்
காவிரிப் படப்பை நல் நாடு அன்ன,
வளங் கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை,
ஆறிய கற்பின் தேறிய நல்லிசை
வண்டு ஆர் கூந்தல் ஒண்தொடி கணவ!  50
நின் நாள் திங்கள் அனைய ஆக! திங்கள்
யாண்டு ஓர் அனையவாக! யாண்டே
ஊழி அனைய ஆக! ஊழி
வெள்ள வரம்பின ஆக! என உள்ளிக்,
காண்கு வந்திசின் யானே, செருமிக்கு  55
உரும் என முழங்கும் முரசின்
பெரு நல் யானை இறை கிழவோயே.

Pathitruppathu 90, Poet: Perunkundrūr Kizhār, King: Ilanchēral Irumporai, Very Strong Big Hands

The stars are in the right positions; skies shower rains
without fail; your well protected citizens are living without
fears; sorrow has been removed and there is abundant
happiness.  You have learned what is expected of you.

You are engaged in battles without fear with strong kings
wielding bright swords who give elephants and valuable
jewels as tributes.  They tell you about and obey you.

Your undying fame has spread to the wide skies, as you
wield your strong sword upon your enemies.  You are a
king who rules with a just scepter.  Oh king who is the heir
of King Māntharan!

You are like water since you have kindness in your heart;
you are like the vast sky since your intellect is immeasurable;
you are like the abundant ocean since you donate endless
gifts; you are like the moon amidst many stars.  When you are
with your flourishing relatives, you are the most splendid of
your clan.

You worship goddess Kotravai who resides in the fierce Ayirai
Mountains, giving offerings according to tradition.  You have
ruined the strength of enemies in the seas with your spear-
brandishing armies.  You have seized fortresses in mountains
and land, and have given generously to many, the great wealth
that you seized.  You are the heir of wealthy, strong kings!

Oh Kongu King who adds sugar cubes to meals! Oh king of
Kuttanādu with abundant liquor!  lion of Kuttuvar country!
You are a body shield to Pūliyars who did not rise up against
those leaving battles.  Leader of Maranthai city with its
vast, loud ocean!  You are a Warrior King who is in the midst
of soldiers speaking in different tongues in your battle camp
filled with velai vines with white flowers, mixed with bottle
gourd creepers.

Your armies are unstoppable like the wide oceans; You are
a fine archer who bends your bow firmly to your chest, as it
rubs and creates wounds on your strong, big arms that appear
to be decorated.  You are a man with raised, perfect shoulders.

You are unflinching and manly.  You ride your leaping horse
decorated with a lovely yak-tail fan on its head and star-like
bright bells on its saddle, wielding spears that you throw at your
enemies with desire, causing them sorrow.  You know the
uncertainties of life, Oh lord of warriors! Oh king of great fame!

Farmers in the fields beat thannumai drums and peacocks in
the groves dance, thinking that the beats are the rumbles of clouds.
The sounds of those who play in cold streams are mixed with those
of warriors who fight fierce battles, as they beat their clear kinai
drums.  Cattle in rich houses call each other intermittently.

You are the husband of a woman who is like the fertile, prosperous
Chozha country with River Kaviri and its cool fields.  Bees swarm on
the fragrant hair of the queen, adorned with anklets and bright
bangles, who is humble, calm, intelligent, and with good fame.

Oh charitable leader with big fine elephants and drums that roar like
thunder in battles!  I came here to see you.  May each day of your life
be long like a month!  May each month become long like a year!  May
each year become long like a lifetime of the earth!  May each lifetime
of the earth become as long as the vellam number of years as their
limit!

Notes:  பதிற்றுப்பத்து 90-36 – ஆய் மயிர்க் கவரிப் பாய் மா, அகநானூறு 156 – முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும் மூட்டுறு கவரி, பரிபாடல் 19 – நின யானைச் சென்னி நிறம் குங்குமத்தால் புனையா பூ நீர் ஊட்டி புனை கவரி சார்த்தா.  வெள்ளம்: ஐங்குறுநூறு 281 – வெள்ள வரம்பின் ஊழி போகியும், பதிற்றுப்பத்து 63 – ஆயிர வெள்ள ஊழி, பதிற்றுப்பத்து 90 – ஊழி வெள்ள வரம்பின ஆக.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  இசைப்பின் மயில் ஆலும் – பதிற்றுப்பத்து 27 – எல் வளை மகளிர் தெள் விளி இசைப்பின், பழனக் காவில் பசு மயில் ஆலும்.  எழாஅத் துணைத்தோள் பூழியர் (27) – ஒளவை துரைசாமி உரை – போரில் அழிந்து புறங்காட்டினார்மேல் எழாத பூழியரது அறப்போர் நலத்தை வியந்து ‘எழாஅத் துணைத்தோள் பூழியர்’ என்றார், பழைய உரை – எழாத் துணைத்தோள் என்றது, போரில் முதுகிட்டார் மேற் செல்லாத இணை மொய்ம்பு.  முந்நீர் – தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது.  முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் ‘தமிழ்க்காதல்’ நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு 9 உரை, நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி 75 உரை.  குடைச்சூல் – ஒளவை துரைசாமி உரை – சிலம்பு, புடைபட்டு உட்கருவை உடைத்தாதல் பற்றி, சிலம்பு குடைச்சூல் எனப் பட்டது.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

Meanings:  மீன் – stars, வயின் நிற்ப – they stand in their places, வானம் வாய்ப்ப – rains fall without fail, அச்சு அற்று – citizens without fear, ஏமம் ஆகி – become protection, இருள் தீர்ந்து – without darkness, without sorrow, இன்பம் பெருக தோன்றி – happiness to spread, தம் துணை துறையின் -the amount that was expected of them in their field of study, எஞ்சாமை நிறையக் கற்று – learned a lot without leaving anything, கழிந்தோர் – strong men who won many battles (கழிந்தோர் – வலிமை மிக்கவர்கள், பல போர்களில் வெற்றி அடைந்தோர்), உடற்றும் – causing distress, கடும் தூ – great strength, அஞ்சா – fearless, ஒளிறு வாள் – bright sword, வய வேந்தர் – brave kings, களிறொடு – along with elephants, கலம் தந்து – giving jewels, தொன்று மொழிந்து – talking about their ancestry, தொழில் கேட்ப – become obedient, அகல் வையத்து – in the wide world, பகல் ஆற்றி – being just (நடுவுநிலைமைச் செய்து), மாயா – undying, unspoilt, பல் புகழ் – many fame, வியல் விசும்பு – wide sky, ஊர்தர – spread, வாள் வலியுறுத்து – made the sword strength well known (to enemies), செம்மை பூஉண்டு – bearing a just scepter (இன்னிசை அளபெடை), அறன் வாழ்த்த – with justice (அறன் – அறம் என்பதன் போலி), நற்கு ஆண்ட – ruled well (நற்கு – நன்கு விகாரம்), விறல் மாந்தரன் – brave Mantharan, விறல் மருக – brave King, ஈரம் உடைமையின் – have kindness in your heart, நீரோர் அனையை – you are like water, அளப்பு அருமையின் – since it is difficult to measure you, இரு விசும்பு அனையை – you are like the dark wide skies, கொளக் குறைபடாமையின் – since you give abundantly and your wealth does not get reduced, முந்நீர் அனையை – you are like the ocean, பல்மீன் நாப்பண் – amidst many stars, திங்கள் போல – like the moon, பூத்த சுற்றமொடு – amidst renowned relatives, பொலிந்து தோன்றலை – you appear splendid, உருகெழு – fierce, மரபின் – tradition, அயிரை – Ayirai Mountains (Kotravai godddess resides there), பரவியும் – praying, கடல் – sea, இகுப்ப – to reduce, வேல் இட்டும் – throwing lances, உடலுநர் – enemies, மிடல் சாய்த்தும் – ruined their strength, மலயவும் நிலத்தவும் – in the mountains and in the land, அருப்பம் – fortresses, வெளவி – seized, பெற்ற பெரும் பெயர் – attained great fame, பலர் கை இரீஇய – placed on many hands (இரீஇய – சொல்லிசை அளபெடை), கொற்றத் திருவின் – victorious in attaining wealth, உரவோர் – intelligent, wise (ancestors), உம்பல் – heir, கட்டி – sugar cubes, புழுக்கின் – with boiled food, கொங்கர் கோவே – Oh king of Kongu country, மட்ட – alcohol, புகாவின் – with food, குட்டுவர் ஏறே – Oh king of Kuttanādu, எழாஅ துணைத்தோள் – not rising up against those who leave the battlefield not wanting to fight, பூழியர் – Pūliyar, மெய்ம்மறை – body shield, இரங்கு நீர்ப் பரப்பின் – in the shore of the ocean with loud water, மரந்தையோர் பொருந – Oh leader of Maranthai city, வெண்பூ வேளையொடு – with velai plants with white flowers, Sida rhombifolia, Rhomb-leaved morning mallow, சுரை தலைமயக்கிய – mixed with bottle gourd plants there, Lagenaria siceraria, விரவு மொழி – different languages, கட்டூர் – battle camp, வயவர் வேந்தே – Oh king with warriors, உரவுக்கடல் அன்ன – like the ocean with strong waves, like the ocean with moving waves, தாங்கு அருந்தானையொடு – with unstoppable armies, மாண்வினை – respected, சாபம் – bow, மார்பு உற வாங்கி – curved it up to the chest, ஞாண் பொர – strings rubbed, விளங்கிய – splendid, வலி கெழு தடக்கை – strong big hands, வார்ந்து – long, புனைந்தன்ன – like decorated, ஏந்து குவவு மொய்ம்பின் – with raised rounded shoulders, மீன் பூத்தன்ன – like stars that appear, விளங்கு மணி – bright bells, பாண்டில் – saddle, ஆய் மயிர் – beautiful hair, கவரி – yak-tail fan (கவரி = சாமரம்), பாய் மா – leaping horses, மேல்கொண்டு – riding on them, காழ் எஃகம் – spear with handle, பிடித்து எறிந்து – held and threw, விழுமத்தின் புகலும் – desires to inflict more pain to their sorrow, பெயரா – not moving away, ஆண்மை – manliness, காஞ்சி – uncertainty in life, சான்ற – knowing, வயவர் பெரும – Oh lord of warriors, வீங்கு பெரும் சிறப்பின் – with great splendor, ஓங்கு புகழோயே – Oh one with great fame, கழனி உழவர் – farmers in the field, தண்ணுமை இசைப்பின் – when they hit the thannumai drums, பழன மஞ்ஞை – the grove peacocks, மழை செத்து – think that rain will come, ஆலும் – they dance, தண் புனல் ஆடுநர் – those playing in cold streams, ஆர்ப்பொடு – with their loud sounds, மயங்கி – mixed, வெம்போர் – fierce battles, மள்ளர் – warriors, தெள் கிணை கறங்க – clear kinai drum sounds, கூழ் உடை நல் இல் fine house with grains/food/wealth, ஏறு மாறு சிலைப்ப – cattle make noises repeatedly, செழும் பல இருந்த – many fertile, கொழும் பல் – prosperous, தண் பணை – cool fields, காவிரிப் படப்பை – groves due to Kaviri river, நல் நாடு அன்ன – like a fine country, வளம் கெழு – splendid, குடைச்சூல் – rounded anklets, அடங்கிய கொள்கை – controlled policies, ஆறிய கற்பின் – calm intelligence, தேறிய நல்லிசை – clear fine fame, வண்டு ஆர் கூந்தல் – bee swarming hair, ஒண்தொடி கணவ – Oh husband to a woman with bright bangles (ஒண்தொடி – அன்மொழித்தொகை), நின் நாள் திங்கள் அனைய – let a month be a day, ஆக திங்கள் – let a year be a month’s time, யாண்டு ஓர் அனையவாக – may it be a year, யாண்டே – a year, ஊழி அனைய ஆக ஊழி – may a year be a long lifetime, வெள்ள வரம்பின ஆக என – may it become a long time called vellam, உள்ளி – think, காண்கு வந்திசின் யானே – I came here to see you (வந்திசின் – சின் – தன்மை அசைச் சொல், an expletive of the first person, யானே- ஏகாரம் அசைநிலை, an expletive), செரு – battles, மிக்கு – a lot, உரும் என முழங்கும் முரசின் – with drums that roar in battles like thunder, பெரு நல் யானை – big fine elephants, இறை கிழவோயே – Oh great leader (கிழவோயே – ஏகாரம் அசைநிலை, an expletive)

பதிகம்
குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழாஅன்
வேண்மாள் அந்துவன் செள்ளை ஈன்ற மகன்,
வெருவரு தானையொடு வெய்துறச் செய்து சென்று,
இரு பெரு வேந்தரும் விச்சியும் வீழ,
அருமிளைக் கல்லகத்து ஐந்து எயில் எறிந்து,  5
பொத்தி ஆண்ட பெரும் சோழனையும்
வித்தை ஆண்ட இளம் பழையன் மாறனையும்
வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று,
வாஞ்சி மூதூர்த் தந்து பிறர்க்கு உதவி,
மந்திர மரபின் தெய்வம் பேணி,  10
மெய்யூர் அமைச்சியன் மையூர் கிழானைப்
புரை அறு கேள்விப் புரோசு மயக்கி,
அருந்திறல் மரபின் பெருஞ்சதுக்கு அமர்ந்த
வெந்திறல் பூதரைத் தந்து இவண் நிறீஇ,
ஆய்ந்த மரபில் சாந்தி வேட்டு  15
மன் உயிர் காத்த மறு இல் செங்கோல்
இன் இசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறையைப்,
பெருங்குன்றூர்கிழார் பாடினார் பத்துப்பாட்டு.

Epilog
He was a son born to King Kuttuvan Irumporai
and Anthuvan Chellai, the daughter of Maiyūr Kizhān.
With his fierce armies, he won victories over the two
great kings and Vichi, whose five forts surrounded
by forests with protection in the mountains, he attacked.
Using his cunning, he beat King Kōpperumchōzhan
who had Pothi for his poet, and the educated young
Pāndiyan king Māran, and brought their wealth to Vanji
and helped others with it.  He worshipped god according
to magical traditions.  He hired honest ministers who were
placed higher than priests.  According to esteemed
heroic traditions, he placed goblins of the five elements in the
public square.  He performed rituals with analyzed tradition
and protected the people on earth, a king with a faultless
scepter, owning drums that produce sweet music.
These ten songs are sung for King Ilanchēral Irumporai by
Perunkundrūr Kizhār.

Meanings:  குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழாஅன் வேண்மாள் அந்துவஞ் செள்ளை ஈன்ற மகன் – to Kuttuvan Irumporai, Venmāl Anthuvan Chellai’s daughter gave a son, வெருவரு தானையொடு – with fierce armies, வெய்துறச் செய்து சென்று இரு பெரு வேந்தரும் விச்சியும் வீழ – went with anger and won battles over the two great kings and King Vichi, அரு மிளை – difficult forest, கல்லகத்து ஐந்து எயில் எறிந்து – attacked five forts which were in the mountains, பொத்தி ஆண்ட பெரும் சோழனையும் – Kōpperumchōzhan who had Pothi for his poet, வித்தை ஆண்ட இளம் பழையன் மாறனையும் – young Pāndiyan King Māran who had educational skills, வைத்த வஞ்சினம் வாய்ப்ப – ruined with vengeance, வென்று வாஞ்சி மூதூர்த் தந்து – won and brought wealth to ancient town Vanji (இன்றைய கரூர்), பிறர்க்கு உதவி – helped others, மந்திர மரபின் தெய்வம் பேணி – worshipped god according to magic traditions, மெய்யூர் அமைச்சியன் மையூர் கிழானை – honest minister Maiyūr Kizhān, புரை அறு கேள்விப் புரோசு மயக்கி – higher than the priest, அருந்திறல் மரபின் – according to valuable heroic traditions, பெருஞ்சதுக்கு அமர்ந்த வெந்திறல் பூதரைத் தந்து இவண் நிறீஇ – brought the goblins presiding over the five elements to the public square and placed them there, ஆய்ந்த மரபில் – with an analyzed tradition, சாந்தி வேட்டு – performed rituals, மன் உயிர் காத்த – protected lives on earth, மறு இல் செங்கோல் – faultless just scepter, இன் இசை முரசின் – owned drums that produced sweet music, இளஞ்சேரல் இரும்பொறையைப் பெருங்குன்றூர் கிழார் பாடினார் பத்துப்பாட்டு – Perunkundrūr Kizhār sang these ten songs about Ilanchēral Irumporai