குறுந்தொகை – Kurunthokai  1 – 200

Translated by Vaidehi Herbert 

Copyright ©  All Rights Reserved

தமிழ் உரை நூல்கள்:
குறுந்தொகை – உ. வே. சாமிநாத அய்யர் – உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை
குறுந்தொகை – பொ. வே. சோமசுந்தரனார்- சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை

Please treat …… as spaces

The compiler of Kurunthokai was Pūrikko, of whom we know nothing.  Tradition says that Pērāsiriyar and Nachinārkkiniyar wrote commentaries.  Neither is available now.  T.S. Arangasami Ayyangar published Kurunthokai in 1915 for the first time.  U.V. Swaminatha Iyer published the book in 1937 with a detailed commentary.  Ten phrases that occur in Kurunthokai occur in Thirukkural and Silappathikāram.

குறுந்தொகை 1, திப்புத்தோளார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது, அவனுடைய கையுறையை மறுத்து
செங்களம்படக் கொன்று அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பின் செங்கோட்டி யானைக்
கழல் தொடிச் சேஎய் குன்றம்,
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே.

Kurunthokai 1, Thippu Tholār, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero, refusing the glory lilies he brought
The mountain of Murukan,
the red god wearing whirling
bracelets,
who vanquished demons in the
red battlefield, his thick arrows
and elephant’s tusks turning red,
has clusters of blood-red glory
lily blossoms.

Notes:  The heroine’s friend refused the gift that the hero brought to give to the heroine.  கையுறையை மறுத்தது.  சேஎய் – செய்யோன் என்பதின் சிதைவு (நச்சினார்க்கினியர் உரை – திருமுருகாற்றுப்படை).  கையுறை – உ. வே. சாமிநாதையர் உரை – கையின்கண் சேர்ப்பது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இச் செய்யுளை பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் ‘தோழி தலைவியை இடத்துய்த்து நீங்கியது’ என்னும் துறைப்படுத்தோதுவர்.  அஃதாவது, தலைமகனது வரவு உணர்ந்த தோழி தலைமகளைப் பொழிலின்கண் ஒரு குறியிடத்தே கொண்டு சென்று, “சேஎய்குன்றம் குருதிப் பூவின் குலைக் காந்தட்டு ஆண்டுத் தெய்வம் உறைதலின் நின்னால் வரப்படாது; யான் சென்று கொய்து வருவேன்; நீ அதுகாறும் இப்பொழிலிடத்தே நிற்கக்கடவாய்” என நிறுத்தி நீங்குதல் என்பதாம்.  தமிழண்ணல் உரை – எங்களிடம் இருப்பதால் வேண்டாம் என மறுக்கும் சொல் பாடலில் இல்லை.  சொல் எஞ்சி குறைந்து நிற்பதால் இதைச் ‘சொல்லெச்சம்’ என்பர்.  திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – அம்பின், பூவின் என்பவற்றிலுள்ள ‘இன்’ சாரியைகள்.   Murukan is the ruling deity of the mountains.  Red is the color for Murukan and the poet shows all the red elements associated with Murukan.  The friend implies that the heroine does not want kānthal flowers from the hero.

Meanings:  செங்களம்பட – causing the battlefield to be red due to blood, கொன்று – killed, அவுணர் – demons, தேய்த்த – destroyed, killed, செங்கோல் அம்பின் – with thick red arrows, செங்கோட்டு யானை – elephant with red tusks with blood, முருகனின் ஊர்தியான பிணிமுகம் என்ற யானை, கழல் தொடி – whirling bracelets, loose bracelets, சேஎய் குன்றம் – the red god’s mountain, Murukan’s mountain (சேஎய் – இன்னிசை அளபெடை), குருதிப் பூவின் – with blood-colored red flowers, குலைக் காந்தட்டு – it has clusters of Malabar glory lilies, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 2, இறையனார், குறிஞ்சித் திணை – தலைவன் தும்பியிடம் சொன்னது
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ!
பயி்லியது கெழீஇய நட்பின், மயில் இயல்
செறி எயிற்று அரிவை கூந்தலின்,
நறியவும் உளவோ நீ அறியும் பூவே?  5

Kurunthokai 2, Iraiyanār, Kurinji Thinai – What the hero said to a bee
O beautiful, winged bee
whose life is choosing honey!
Tell me what you found and not
what pleases me!

Is there a flower with more
fragrance than the hair of my
beloved woman with perfect teeth,
peacock nature and enduring love?

Notes:  The hero said this after uniting with the heroine for the first time.  இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் தலைவன் கூறியது.  நச்சினார்க்கினியர் தொல்காப்பியத்துக் களவியல் 10ஆம் சூத்திரத்துக்கு இச் செய்யுளை எடுத்துக்காட்டி, “இதனுள் தும்பி என்றது முன்னிலையாக்கல், கண்டது மொழிமோ என்றது சொல்வழிப்படுத்தல், கூந்தலின் நறியவும் உளவோ என்றது நன்னயமுரைத்தல், காமம் செப்பாது என்றது எந்நிலத்து வண்டாகலின் எனக்காகக் கூறாது மெய் கூறெனத் தன் இடம் அதுவாகக் கூறலின் இடமணித்தென்றது.  பயிலியது கெழீஇய நட்பென்றது தம் நிலையுரைத்தல்”.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தும்பி விடை தாராதாகவும் விடை கூறுவது போன்று வினவியது, பாடல் சான்ற புலனெறி வழக்கம்.  இதனை ‘சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇ செய்யா மரபின் தொழிற்படுத்து அடக்கியும்’ (தொல்காப்பியம்  பொருளியல் 2) என வரும் தொல்காப்பிய விதியாலும் உணர்க.  திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – கூந்தலின் என்றதன் ஐந்தனுருபு எல்லைப்பொருளேயன்றி உவமைப் பொருளுமாம்.  அஞ்சிறை (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகிய சிறகு, இரா. இராகவையங்கார் உரை – அகச்சிறை, உ. வே. சாமிநாதையர் உரை – உள்ளிடத்து சிறை, அழகிய சிறையுமாம்.

Meanings:  கொங்கு – honey, pollen, தேர் – choose, வாழ்க்கை – life, அம் சிறை – pretty wings, inner wings, தும்பி – bee, காமம் – what you desire, what I desire, for me to be happy (காமம் – விருப்பம்), செப்பாது – not uttering, கண்டது மொழிமோ – tell me what you saw (மோ – முன்னிலை அசை, an expletive of the second person), பயி்லியது – due to habit (தொழிற்பெயர்), கெழீஇய – with closeness, abundantly, greatly (செய்யுளிசை அளபெடை), நட்பின் – with love, with friendship (இன் சாரியை), மயில் இயல் – peacock-like nature, செறி எயிற்று – with close teeth, with perfect teeth, அரிவை கூந்தலின் – like the young woman’s hair (கூந்தலின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது), நறியவும் – with fragrance, உளவோ – is it there, நீ அறியும் பூ – among the flowers you know (பூ – பூக்களுள், ஏழனுருபு இறுதிக்கண் தொக்கது), ஏ – அசை

குறுந்தொகை 3, தேவகுலத்தார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று,
நீரினும் ஆரளவின்றே, சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

Kurunthokai 3, Thēvakulathār, Kurinji Thinai – What the heroine said to her friend about her love for the hero, as he listened nearby
Larger than the earth,
higher than the sky,
and harder to fathom than
the ocean,
is my love for the man from
the mountain slopes, where bees
make rich honey from the flowers
of kurinji plants with dark stems.

Notes:  The heroine said this, realizing that the hero was on the other side of the fence, in response to her friend who blamed the hero for not coming and marrying her.  தோழி இயற்பழித்தவழி வரையாது ஒழுகும் தலைவன் கேட்கும்படி, தலைவி கூறியது.  ஐங்குறுநூறு 184 – கடலினும் பெரிது எமக்கு அவருடை நட்பே.  நீரினும் ஆரளவின்றே (2) – உ. வே. சாமிநாதையர் உரை – கடலைக் காட்டிலும் அளத்தற்கரிய ஆழம் உடையது.  கருங்கோல் குறிஞ்சி: அகநானூறு 308 – கருங்கோல் குறிஞ்சி நும் உறைவின் ஊர்க்கே, குறுந்தொகை 3 – கருங்கோல் குறிஞ்சிப் பூக் கொண்டு, புறநானூறு 374 – கருங்கோல் குறிஞ்சி அடுக்கம்.  இரா. இராகவையங்கார் உரை – நிலமும் வானும் நீரும் பருவத்தில் இயைந்து பயன்படுதல் போல நட்பும் வரைதற்குரிய நன்னாள் இயைந்து பயன்படுதல் குறித்தது எனினும் அமையும்.  நாடனொடு நட்பே (4) – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – நாடனொடு நட்பு என்பதற்கு நாடன் நட்பு என்று உரை கூறி ‘ஒடு’ இசை நிறை எனலுமாம்.

Meanings:  நிலத்தினும் பெரிது – larger than the earth, ஏ – அசைநிலை, an expletive, வானினும் உயர்ந்தன்று – taller than the sky, நீரினும் ஆர் அளவின்று – deeper to measure than the ocean, ஏ – அசைநிலை, an expletive, சாரல் – mountain slopes, கருங்கோல் குறிஞ்சி – kurinji plants with strong stems, kurinji plants with dark coloredstems, kurinji flowers with dark colored stems, Strobilanthes Kunthiana (கருமை – கரிய, வன்மையுமாம்), பூக் கொண்டு – using the flowers, பெருந்தேன் – rich honey, rich honey combs, இழைக்கும் – they make, நாடனொடு – with the man from the country, நட்பே – friendship, love (நட்பே என்பது பெருமை வியப்பு)

குறுந்தொகை 4, காமஞ்சேர் குளத்தார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நோம் என் நெஞ்சே! நோம் என் நெஞ்சே!
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி,
அமைதற்கு அமைந்த நம் காதலர்,
அமைவு இலர் ஆகுதல், நோம் என் நெஞ்சே.

Kurunthokai 4, Kāmanchēr Kulathār, Neythal Thinai – What the heroine said to her friend
My heart aches!  My heart aches!
My perfect lover who consoled me,
when I cried hot tears that almost
scalded my eye lids, has changed.
My heart aches!

Notes:  The heroine said this to her friend who worried about her separation sorrow.  பிரிவிடை ஆற்றாளென வருந்திய தோழிக்குத் தலைவி சொன்னது.  தமிழண்ணல் உரை – நோம் என் நெஞ்சே என மூன்று முறை அடுக்கும் பாடல் அமைப்பே துன்பத்தின் மிகுதியை புலப்படுத்தி விடுகின்றது.  அமைதற்கு அமைந்த (3) – உ. வே. சாமிநாதையர் உரை – அளவளாவதற்கு அமைந்த,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆற்றியிருத்தற்குக் காரணமான தண்ணளி பொருந்திய, திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – மனம் பொருந்திய.

Meanings:  நோம் என் நெஞ்சு – my heart aches, my heart hurts, ஏ – அசைநிலை, an expletive, நோம் என் நெஞ்சு – my heart aches, ஏ – அசைநிலை, an expletive, இமை தீய்ப்பன்ன – like burning the eyelids, கண்ணீர் – tears, தாங்கி – blocked, wiped, அமைதற்கு அமைந்த – the man who was gracious to me, the man who comforted me, the man who was perfect for me, நம் காதலர் – my lover, அமைவு இலர் ஆகுதல் – him changing and not being one with me now, நோம் என் நெஞ்சு – my heart aches, my heart hurts, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 5, நரிவெரூஉத் தலையார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அது கொல் தோழி காம நோயே,
வதி குருகு உறங்கும் இன்னிழல் புன்னை
உடை திரைத் திவலை அரும்பும் தீ நீர்
மெல்லம்புலம்பன் பிரிந்தெனப்
பல்லிதழ் உண்கண் பாடு ஒல்லாவே?  5

Kurunthokai 5, Nariverūuth Thalaiyār, Neythal Thinai – What the heroine said to her friend
Is this how love sickness is, oh friend?
Since the lord of the shores,
……….where residing herons sleep in the
……….sweet shade of punnai trees,
……….that put out buds when breaking
……….waves spray their sweet mist,
has left me,
my kohl-lined eyes that resemble flowers
with many petals refuse to sleep.

Notes:  The heroine said this to her friend who worried about her separation sorrow.   பிரிவிடை ஆற்றாளென வருந்திய தோழிக்குத் தலைவி சொன்னது.  இரா. இராகவையங்கார் உரை – கடலன்ன செல்வத்தால் பொலிவு பெறும் மனைக் கண்ணே வரையாது இனிது உறங்குகின்றான் என்பது.  பிரிந்தென (4) – உ. வே. சாமிநாதையர் உரை – தலைவன் பிரிவினால், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – பிரிந்தான் என்று, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தம்மகத்தே பிரியாது இருப்பவும் அஃது அறியாது பிரிந்துபோயினனாகக் கருதி.

Meanings:  அது கொல் – is that how it is (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), தோழி – my friend, காமநோய் – this love affliction, ஏ – அசைநிலை, an expletive, வதி குருகு – residing herons/egrets/storks,  உறங்கும் – sleeping, இன் நிழல் – sweet shade, புன்னை – laurel, நாகம், Indian Laurel tree, Mast wood Tree, Calophyllum inophyllum, உடை திரை – breaking waves, திவலை – water spray, அரும்பும் – they put out buds, தீ நீர் – sweet water, மெல்லம்புலம்பன் – lord of the delicate seashore (அம் – சாரியை, புலம்பு = கடற்கரை, நெய்தல் நிலம்), பிரிந்தென – since he has left, பல்லிதழ் – flowers with many petals – according to U.V. Swaminatha Iyer’s commentary this is a lotus flower (பூவிற்கு ஆகுபெயர், அகரம் கெட்டு ‘குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்’ – தொல்காப்பியம், எழுத்து 160, என்றதனால் லகரம் இரட்டித்து பல்லிதழ் என முடிந்தது), உண்கண் – eyes with kohl, கண்மை இட்ட கண்கள், பாடு ஒல்லா – they do not agree to close, they do not sleep, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 6, பதுமனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நள்ளென்றன்றே, சொல் அவிந்து
இனிது அடங்கினரே மாக்கள் முனிவின்று,
நனந்தலை உலகமும் துஞ்சும்,
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே.

Kurunthokai 6, Pathumār, Neythal Thinai – What the heroine said to her friend
In the still darkness of night,
words have died down,
everybody has sunk
into sweet sleep with no malice,
and the whole wide world sleeps.

I certainly am the only one
who is unable to sleep!

Notes:  The heroine said this to her friend when the hero had gone to earn wealth for their marriage.  திருமணப் பரிசப் பொருளை ஈட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்த இடத்து ஆற்றாளாகிய தலைவி, நள்ளிரவில் யாவரும் துயிலவும் ‘யான் துயின்றிலேன்’ என்று தோழியிடம் கூறியது.   மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  நள்ளென்றன்றே (1) – உ. வே. சாமிநாதையர் உரை – செறிந்த இருளை உடையதாக இரா நின்றது, நள்ளென்னும் ஓசையை உடையதாயிற்று எனலுமாம்.  மாக்கள் (2) – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – மாக்கள் என்று இழிவுதோன்றக் கூறினாள், உ. வே. சாமிநாதையர் உரை – ஐயறிவுடையோர் என்பது தாய் முதலியோரை, மாவும் மாக்களும் ஐ அறிவினவே (தொல்காப்பியம், பொருளதிகாரம், மரபியல் 32).  முனிவின்று (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இன்றி என்னும் வினையெச்சத்து இறுதி இகரம் செய்யுள் ஆகலின் இன்று என்று உகரமாகத் திரிந்தது, இன்றி என்னும் வினையெஞ்சு இறுதி நின்ற இகரம் உகரம் ஆதல் தொன்று இயல் மருங்கின் செய்யுளுள் உரித்தே (தொல்காப்பியம், உயிர்மயங்கியல் 35).  ஓர் யான் மன்ற துஞ்சாதேனே (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – எனக்கு உசாத்துணையாய் ஆற்றுவிக்கும் கடமையுடைய நீயும் இனிதே தூங்கினை என இடித்துக் கூறினபடியாம்.  நற்றிணை 348 – யானே புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு கனை இருங்கங்குலும் கண்படை இலெனே.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).

Meanings:   நள்ளென்றன்று – with dense darkness, with the sound ‘nal’ (நள் – நளியென்னும் உரிச்சொல் ஈறு திரிபு), ஏ – அசைநிலை, an expletive, யாமம் – night, சொல் அவிந்து – words have died down, இனிது அடங்கினர் – they have slept sweetly, ஏ அசைநிலை, an expletive, மாக்கள் – humans, people, mother and others in the family, முனிவு இன்றி – without stress, without malice, நனந்தலை – vast place, wide place, உலகமும் துஞ்சும் – the whole world sleeps, ஓர் யான் – I alone, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty, துஞ்சாதேன் – I am not sleeping, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 7, பெரும்பதுமனார், பாலைத் திணை – தலைவியையும் தலைவனையும் சுரத்தில் கண்டவர்கள் சொன்னது
வில்லோன் காலன கழலே, தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே, நல்லோர்
யார் கொல் அளியர் தாமே, ஆரியர்
கயிறாடு பறையின் கால் பொரக் கலங்கி
வாகை வெண் நெற்று ஒலிக்கும்  5
வேய் பயில் அழுவம் முன்னியோரே?

Kurunthokai 7, Perumpathumanār, Pālai Thinai – What the passers-by said, when they saw the hero and heroine in the wasteland
The man bearing a bow has war
anklets on his feet; the young woman
wearing bangles has anklets on her
delicate feet.

Who are these pitiful, nice people going
on this desert path filled with bamboo,
where the wind whips and the light colored
vākai seedpods rattle like the drums of
Aryan acrobats dancing on tightropes?

Notes:  Those who saw the couple in the wasteland, said this in pity.  பாலை நிலத்தில் கண்டோர் இரங்கிக் கூறியது.  தலைவியையும் தலைவனையும் தேடி வந்த செவிலி, அங்கு எதிர்ப்பட்டாரிடம், “இவர்களை நீங்கள் கண்டீரா?” என வினவியதற்கு, அவர்கள் கூறியது இது என பொ. வே. சோமசுந்தரனார் மற்றும் இரா. இராகவையங்கார் உரைகள் குறிப்பிடுகின்றன.  உ. வே. சாமிநாதையர் உரை – தலைவனால் தலைவி வரைந்து கொள்ளப்படாமையைப் புலப்படுத்துவார், ‘மெல்லடி மேலவும் சிலம்பே’ என்றார்.  மணம் புரிவதற்கு முன், மணமகளது காலில் பெற்றோர்களால் அணியப்பட்ட சிலம்பை நீக்குவதற்கு ஒரு சடங்கு செய்யப்படும்.  அது ‘சிலம்பு கழி நோன்பு’ எனப்படும்.  இரா. இராகவையங்கார் உரை – அழுவத்தில் காலில் கழலும் சிலம்பும் ஒலிக்கப் புகும் இந்நல்லோரைக் கண்டு கலங்கி அறிவில்லாத வாகை வெண்ணெற்று ஒலித்தல், சாடுவாற் கொள்ள வைத்தது கண்டோர் இரக்கம் புலப்பட என்பது.   வாகை நெற்று ஒலித்தல்:  குறுந்தொகை 7 – ஆரியர் கயிறாடு பறையின் கால் பொரக் கலங்கி வாகை வெண் நெற்று ஒலிக்கும், குறுந்தொகை 369 – அத்த வாகை அமலை வால் நெற்று அரி ஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்பக் கோடை தூக்கும் கானம், அகநானூறு 45 – உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் ஆடு களப் பறையின் அரிப்பன ஒலிப்ப, அகநானூறு 151 – உழுஞ்சில் தாறு சினை விளைந்த நெற்றம் ஆடுமகள் அரிக் கோல் பறையின் ஐயென ஒலிக்கும்.  அழுவம் (7) – உ. வே. சாமிநாதையர் உரை – பாலைப் பரப்பு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பாலை நிலம், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – காட்டு நிலத்தின் பரப்பு.  முன்னியோரே (7) – உ. வே. சாமிநாதையர் உரை – கடந்து செல்ல நினைந்து வருபவர்களில்,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – செல்லக் கருதிச் செல்லா நிற்போர் (செல்லா நிற்போர் – செல்லுபவர்கள்), தமிழண்ணல் உரை – பிறர் அறியாமல் இவ்வழியைத் தேடி நடப்பவர்கள், முன்னுதல் – திட்டமிட்டு செல்லுதல்.  வரலாறு:  ஆரியர்.  ஆரியர் – அகநானூறு 276-9, 336-22, 396-16, 398-18, நற்றிணை,170-6, குறுந்தொகை 7-3, பதிற்றுப்பத்து 11-23.  Poems Ainkurunūru 399 and Natrinai 279 describe the pain of the mothers who are unable to witness the anklet-removal ceremonies of their daughters who have eloped.

Meanings:  வில்லோன் – the man with a bow, காலன கழல் – warrior anklets on his feet, ஏ – அசைநிலை, an expletive, தொடியோள் – the young woman with bangles, மெல்லடி – delicate feet, மேலவும் – are on them, சிலம்பு – anklets, ஏ – அசைநிலை, an expletive, நல்லோர் – good people, யார் கொல் – who are these people (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), அளியர் – they are pitiable, தாம் – அசைநிலை, an expletive, ஏ – அசைநிலை, an expletive, ஆரியர் – Aryans, கயிறாடு – walking on a rope, பறையின் – like the drum that is hit (இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு), கால் பொர – due to the winds blowing, கலங்கி – tremble, வாகை – உழிஞ்சில், Sirissa Tree, Albizia lebbeck, வெண் நெற்று ஒலிக்கும் – light colored seed pods, white seed pods rattle, வேய் பயில் – bamboo filled, அழுவம் – forest, முன்னியோர் – those who are going, those who have are going after planning, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 8, ஆலங்குடி வங்கனார், மருதத் திணை – பரத்தை சொன்னது, தலைவியின் தோழியர் கேட்கும்படி
கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்,
எம் இல் பெருமொழி கூறித், தம் இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல,  5
மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே.

Kurunthokai 8, Ālankudi Vankanār, Marutham Thinai – What the concubine said, as the heroine’s friends listened nearby
The man from the town,
where pond vālai fish seize
sweet fruits that ripen and
drop from a mango tree
from the nearby field, talks big
at my place.

But when he’s at his home, he’s
like the mirror image of a puppet
that lifts its hands and legs when
a puppeteer lifts them, reflecting
the wishes of his son’s mother.

Notes:  The hero’s mistress said this for the heroine’s friends to listen, on hearing that the heroine had talked disrespectfully about her.  தலைவி தன்னை இகழ்ந்து கூறினாள் என அறிந்த பரத்தை அத்தலைவியின் தோழியர் கேட்கும்படி இதனைக் கூறியது.  குறுந்தொகை 164 – கணைக் கோட்டு வாளை கமஞ்சூல் மட நாகு துணர்த் தேக் கொக்கின் தீம்பழம் கதூஉம்.  ஐங்குறுநூறு 61 – மாஅத்து விளைந்து உகு தீம்பழம் நெடு நீர்ப் பொய்கைத் துடுமென விழூஉம். இரா. இராகவையங்கார் உரை – விளைந்து உகு தீம் பழம் பழன வாளை கதூஉம் ஊரன் என்றது, தலைவியர்க்குரிய தலைவரைக் கிடைத்தபோது துய்ப்பது பரத்தையர் இயல்பென்று குறித்தாளாம்.  தம் இல் (3) – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – தம் இல் என்பதில் ‘தம்’ சாரியை, உ. வே. சாமிநாதையர் உரை – தம்முடைய வீட்டில், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தம்முடைய வீட்டில்.  உள்ளுறை – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – கழனிக் கரையிலிருந்து தானே உதிர்ந்த பழத்தை வயலிடத்து வாளை கௌவினாற் போல இவ்வூரில் உள்ள எல்லா இன்பங்களையும் தாமே கிடைப்ப முயற்சியின்றி எய்துகின்றான் என்று உள்ளத்தான் உவமங் கொள்ளவைத்தவாறு காண்க.

Meanings:   கழனி – field, மாஅத்து – of a mango tree (அத்து சாரியை), விளைந்து உகு – ripening and dropping, தீம் பழம் – sweet fruits, பழன – pond’s, of a pond, வாளை – valāi fish, scabbard fish, Trichiurus haumela, கதூஉம் – catches and bites, grabs and bites (இன்னிசை அளபெடை), ஊரன் – the man from such town, எம் இல் பெருமொழி கூறி – talking great words at our place, தம் இல் – in his house, கையும் காலும் தூக்கத் தூக்கும் – lifts the hands and legs when lifted, ஆடிப் பாவை போல – like a mirror reflection puppet, மேவன செய்யும் – he honors her wishes, he is obedient to her, தன் புதல்வன் தாய்க்கு – to his son’s mother, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 9, கயமனார், நெய்தற் திணை – பரத்தையிற் பிரிந்து மீண்ட தலைவனிடம் தோழி சொன்னது
யாயாகியளே மாஅயோளே,
மடை மாண் செப்பில் தமிய வைகிய
பெய்யாப் பூவின் மெய் சாயினளே,
பாசடை நிவந்த கணைக் கால் நெய்தல்
இன மீன் இருங்கழி ஓதம் மல்குதொறும் 5
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணந்துறைவன் கொடுமை,
நம் முன் நாணிக் கரப்பாடும்மே.

Kurunthokai 9, Kayamanār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero who returned from his concubine’s house
Her dark-skinned body
is wasting away like unworn
flowers that wilt when kept
in a fine, clasped box,
because of the cruelty of her
husband, the lord of the cool,
beautiful seashore,
where flooded, dark backwaters
are filled with shoals of fish, and
thick-stemmed, waterlily
blossoms floating above green
leaves look like the eyes of women
who bathe in the ponds.

She is ashamed to admit his faults
to others; she hides them well.
Such is her tolerant motherly nature!

Notes:  The heroine’s friend allowed the hero to return to his marital home, when he came back from his concubine’s house.  This is Marutham in Neythal.  நெய்தலுள் மருதம்.   தலைவனுக்குத் தோழி வாயில் நேர்ந்தது.  தலைவனது கொடுமையைத் தலைவி மறந்து அவனை ஏற்றுக்கொள்வாள் என்பது கருத்து.  இரா. இராகவையங்கார் உரை – தண்ணந்துறைவன் கண்கள் அல்லாத நெய்தல்களை இவையும் கண்கள் என்று வேறு சொல்ல ஒக்கும் துறையையுடையவன் ஆதலால், தன் கண்ணாகிய தலைவியல்லாத பரத்தையைக் கண்டார் இவற்கு இவளும் கண்ணாவாள் எனப் பேணி ஒழுகுபவன் என்று அவன் தலைவியை பேணாது ஒழுகுதலைக் குறித்தாள்.  யாய் ஆகியவள் (1) – இரா. இராகவையங்கார் உரை – குற்றம் பொருத்துரையாடும் சிறப்பால் யாய் ஆயினள் என்றாள், உ. வே. சாமிநாதையர் உரை – தலைவியை யாயென்றது, புலத்தற்கு காரணமான பரத்தமை தலைவன் பால் உளதாகவும் அதை மனங்கொள்ளாத கற்பின் சிறப்பை நோக்கி, ச. வே. சுப்பிரமணியன் உரை – தாய்போல் மதிக்கத் தக்கவள், தமிழண்ணல் உரை – பொறுமையில் தாய் போல ஆகினாள், கற்புக்கடம் பூண்ட நம் தலைவி தாய்போல் மதிக்கத்தக்க பெருமையுடையவளே, திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – தாயென தக்காள் ஆயினள்.

Meanings:  யாய் ஆகியவள் – the woman who has tolerant traits like a mother, the woman who is virtuous like a mother, ஏ – அசைநிலை, an expletive, மாயோள் – the dark woman, the woman who is the color of tender mango leaves (மாந்தளிர் மேனி), ஏ – அசைநிலை, an expletive, மடை – clasp, மாண் – fine, செப்பில் – in a box, தமிய – by themselves, வைகிய – placed, பெய்யாப் பூவின் – like flowers that are not worn (பூவின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), மெய் சாயினள் – her body has wilted, ஏ – அசைநிலை, an expletive, பாசடை – green leaves, நிவந்த – rising above, கணைக் கால் – thick- stemmed, நெய்தல் –  blue waterlilies, white waterlilies, இனமீன் – shoals of fish, இருங்கழி – dark/huge backwaters, dark/huge brackish water, ஓதம் – floods, waves, flowing water, மல்குதொறும் – whenever the water levels increase, கயம் மூழ்கு மகளிர் – women who bathe in the ponds, கண்ணின் மானும் – they appear like eyes (கண்ணின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் உவம உருபோடு வந்தது, மான என்பது வினை உவமைத்தின்கண் வந்தது), தண்ணந்துறைவன் – the lord of the cool beautiful seashore (தண்டுறைவன் என்பது தண்ணந்துறைவன் ஆவது, அம் – சாரியை, விரிக்கும் வழி விரித்தல்), கொடுமை – cruelty, நம் முன் நாணி – ashamed in front of us, கரப்பு ஆடும் – she hides it (கரப்பாடும்மே – செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது)

குறுந்தொகை 10, ஓரம்போகியார், மருதத் திணை – பரத்தையிற் பிரிந்து மீண்ட தலைவனிடம் தோழி சொன்னது
யாய் ஆகியளே விழவு முதலாட்டி,
பயறு போல் இணர பைந்தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ் பூமென் சினைக்
காஞ்சி ஊரன் கொடுமை
கரந்தனள், ஆகலின் நாணிய வருமே.  5

Kurunthokai 10, Ōrampōkiyār, Marutham Thinai – What the heroine’s friend said to the hero
She, the one who brought him
joy and prosperity,
conceals her husband’s cruelty,
the man from a country
where farmers bend delicate
branches of portia trees to spray
themselves with yellow pollen
clustered like lentils. And so,
he will return to her, with shame.

Notes:  The heroine’s friend allowed the hero to return to his marital home, when he came back from his concubine’s house.  தலைவனுக்குத் தோழி வாயில் நேர்ந்தது.  முதலாட்டி (1) – உ. வே. சாமிநாதையர் உரை – தலைவன் செல்வம் பெற்று மகிழ்ந்து குலாவுவதற்குக் காரணமாக உள்ளாள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலையின் விழவிற்கு முதன்மையை ஆளும் தன்மையுடையவள் ஆயினள், விழவு – ஈண்டு இன்பம் என்னும் பொருட்டாய் நின்றது.  இரா. இராகவையங்கார் உரை – உழவர் தம் மேனியிலும் தம் உழு பகட்டினும் தாது படிந்து தாம் உழு நிலத்துக் காஞ்சி மரங்களை வளைத்த செயல் தோன்ற வந்தாற்போலத் தலைவனும் அவன் தன் பாணனும் பரத்தையரை வளைத்துச் சேரியினிகழ்த்தியன மனையிற் தலைவி காண வந்து நின்றது கருதிற்று. உழவன் தலைவனாகவும் உழு பகடு பாணனாகவும் உழு நிலம் சேரியாகவும் காஞ்சி மரங்கள் பரத்தையராகவும் கொள்க.  இறைச்சி – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – பூங்கொத்து உண்டாதனாலே உழவர் வளைத்த காஞ்சி மரத்தையுடைய ஊரன் என்றதனானே, தம்மிடத்து வேட்கை கொண்டமை உணர்ந்ததனானே பரத்தையரால் வளைக்கப்படும் இயல்பினன் என்பதாம்.

Meanings:  யாய் ஆகியள் – she ( the heroine, who is like a mother), ஏ – அசைநிலை, an expletive, விழவு முதலாட்டி – she who has brought the hero happiness and wealth, பயறு போல் – like green gram lentil, phaseolous aureus (old name), Vigna radiate, பாசிப் பருப்பு, பயத்தம் பருப்பு Green gram dhal, phaseolous aureus,  இணர – in the clusters, பைந்தாது – fresh pollen, படீஇயர் – for the pollen to fall on them (படீஇயர் – சொல்லிசை அளபெடை), உழவர் – farmers, வாங்கிய – pulled, bent, கமழ்பூ – fragrant flowers, மென் சினை – delicate branches, காஞ்சி ஊரன் – man from town with kānchi trees (காஞ்சி – மருதக் கருப்பொருள்), பூவரச மரம், portia tree, Thespesia populnea, கொடுமை – cruelty, கரந்தனள் – she hides, ஆகலின் – so, நாணிய – with shame, வரும் – he will come, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 11, மாமூலனார், பாலைத் திணை – தலைவி தன் நெஞ்சிடம் சொன்னது, தோழி கேட்கும்படியாக
கோடு ஈர் இலங்கு வளை ஞெகிழ நாடொறும்
பாடில கலிழும் கண்ணொடு புலம்பி
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம் ஆங்கே,
எழு இனி வாழி என் நெஞ்சே, முனாது
குல்லைக் கண்ணி வடுகர் முனையது  5
பல்வேல் கட்டி நன்னாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்,
வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே.

Kurunthokai 11, Māmoolanār, Pālai Thinai – What the heroine said to her heart, as her friend listened nearby
May you live long, my heart!
My bright bangles carved from
conch shells slip down my
wasting hands; I am crying
alone every day in sorrow; My
teary eyes have lost their sleep.

Wake up!
Let us escape this loneliness!
Let us go to the country where
the Vadukars wear basil garlands,
beyond the fine land
of the many-speared Katti,
where my lover lives.

I have considered going there even
though they speak a different language.

Notes:  The heroine said this to herself during separation, for her friend to hear.  தலைவன் பிரிந்த காலத்தில் தன் நெஞ்சிற்குச் சொல்லுவாளாய், தோழி கேட்பச் சொல்லியது.  இரா. இராகவையங்கார் உரை – ‘ஈங்கு இவண் உறைதலும் உய்குவம்’ என்பது வளை நெகிழ்தலும் கண் கவிழ்தலுங் கண்டு அன்னை இடித்துரைக்கவும் ஊரலர் தூற்றவும் நெஞ்சே நீயும் யானும் இங்கு இப்படி வருந்தி வதிவதும் தப்புவேம் என்றதாம்.  ‘வடுகர் முனையது மொழிபெயர் தேஎத்தராயினும் என்றது’ தலைவியது ஆண்மையும் உணர்வும் குறித்து நின்றதெனின் நன்கு பொருந்தும்.  முனையது (5) – உ. வே. சாமிநாதையர் உரை – முன்னே உள்ளதாகிய, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பகைப்புலத்ததாகிய, தமிழண்ணல் உரை – எல்லை, இரா. இராகவையங்கார் உரை – பகைப்புலத்ததாய்.  வடுகர் – ஒளவை துரைசாமி உரை புறநானூறு 278 – தொண்டை நாட்டுத் திருவேங்கடத்திற்கு வடக்கில் உள்ள நாட்டவராதலால் வடுகர் எனப்பட்டனர், பொ. வே. சோமசுந்தரனார் உரை அகநானூறு 213 – தெலுங்கர்.  வரலாறு:  வடுகர், கட்டி.  The Vadukars were people who lived north of Venkatam hills.  Katti was a small region Chēra king who ruled the Thamizh country that was close to the Vadukar country.  Kullai could be white basil (thulasi, ocimum album), wild basil (puna thulasi, Ocimum adscendens) or cannabis sativa.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  கோடு – conch shells, ஈர் – cutting (and made), இலங்கு வளை – bright bangles, ஞெகிழ – becoming loose, slipping down, நாள்தொறும் – every day, பாடு இல – without sleep (இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்), கலிழும் கண்ணொடு – with crying eyes, புலம்பி – being alone, being sad,  ஈங்கு இவண் உறைதலும் – to live like this here (உம் – அசைநிலை, சாரியையுமாம்), உய்குவம் – let us escape, ஆங்கே – there, எழு இனி – wake up, வாழி என் நெஞ்சே – may you live long my heart, முனாது – in front of us, குல்லைக் கண்ணி – basil garlands, cannabis garlands, வடுகர் – Telugu speaking people living north of Venkatam hills, முனையது – in the place with enmity, in that place, பல்வேல் கட்டி – Katti with many spears, நல் நாட்டு – fine country, உம்பர் – beyond, மொழிபெயர் – different language, தேஎத்தர் – people of that nation (தேஎத்தர் – இன்னிசை அளபெடை), ஆயினும் – even so, வழிபடல் – to go on that path, சூழ்ந்திசின் – I have considered (சின் – தன்மை அசைச்சொல், an expletive of the first person), அவருடை நாட்டு – to the country in the country where he resides now, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 12, ஓதலாந்தையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
எறும்பி அளையின் குறும்பல் சுனைய
உலைக்கல் அன்ன பாறை ஏறிக்
கொடு வில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத்து என்ப அவர் சென்ற ஆறே,
அது மற்று அவலம் கொள்ளாது,  5
நொதுமல் கழறும் இவ்வழுங்கல் ஊரே.

Kurunthokai 12, Ōthalānthaiyār, Pālai Thinai – What the heroine said to her friend
They say that the path he took
has forks,
and many small springs, that
appear like the tunnels of ants,
on boulders that are as hot as
the anvils of blacksmiths,
on which the wasteland warriors
carrying curved bows climb and
sharpen their arrow tips.

This uproarious town which does
not understand his hardships,
taunts me with harsh, strange words.

Notes:  The heroine said this to her friend who worried about her sorrow, when the hero was away.  தலைவன் பிரிந்த காலத்தில் ஆற்றாளென கவன்ற தோழிக்குத் தலைவி உரைத்தது.  அகநானூறு  377 – சிறு புல் உணவு நெறி பட மறுகி நுண் பல் எறும்பி கொண்டளைச் செறித்த வித்தா வல்சி வீங்கு சிலை மறவர்.  இரா. இராகவையங்கார் உரை – அவர் சென்ற ஆற்றில் உணவளிப்பது எறும்பியளை, நீர் தருவது அறுநீர்ச்சுனை, உறைவிடம் உலைக்கலன்ன பாறை, வாழ்வோர் பகழி மாய்க்கும் கொடுவில் எயினர் என அவர் சென்ற ஆற்றின் இடையூறெல்லாம் தெரியக் கூறினாள்.  ஊர் (6) – உ. வே. சாமிநாதையர் உரை – ஊர் என்றது தோழியை.  தோழியை ஊரென்றல் மரபு.  குறும்பல் சுனைய (1) – உ. வே. சாமிநாதையர் உரை – குறுமையையுடைய பலவாகிய சுனையை உடைய,  தமிழண்ணல் உரை – சிறுசிறு சுனைகள் பலவற்றையுடைய, இரா. இராகவையங்கார் உரை – குறும்பு அல் சுனைய, குறும்பு – சிற்றரண், அல் சுனைய – சுனை அல்லாத சுனை உடைய, வருஞ்சுனை என்பது கருத்து, நீருள்ள சுனைய பாறையை வெம்மை பற்றி உலைக்கல்லோடு உவமிப்பது சிறந்ததன்று.  கடுங்கண் மறவர் கல்கெழு குறும்பின் (அகநானூறு 87) என்பது காண்க.  அழுங்கல் – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).

Meanings:  எறும்பி அளையின் – like ant tunnels (இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு), குறும் பல் சுனைய – with many smal springs, with many little ponds, உலைக்கல் அன்ன – like anvils, like hot furnace stones on which metals are shaped, பாறை ஏறி – climbing on the rocks, climbing on the boulders, கொடு வில் எயினர் – Eyinar tribe men with curved bows, forest hunters with harsh bows, பகழி மாய்க்கும் – they rub and sharpen their arrows, கவலைத்து – with forks, என்ப – they say, அவர் சென்ற ஆறே – the path on which he went, அது மற்று அவலம் கொள்ளாது – not worrying about his hardships (மற்று – அசைநிலை, an expletive), நொதுமல் கழறும் – it taunts with harsh strange words, இ அழுங்கல் ஊர் – this loud town, this uproarious town, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 13, கபிலர், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
மாசு அறக் கழீஇய யானை போலப்
பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல்
பைதல் ஒரு தலைச் சேக்கும் நாடன்
நோய் தந்தனனே தோழி,
பசலை ஆர்ந்த நம் குவளை அம் கண்ணே.  5

Kurunthokai 13, Kapilar, Kurinji Thinai – What the heroine said to her friend
He gave me this disease,
my friend,
the man who was with
me on a verdant spot near a
dark rough boulder,
washed by heavy rains and
looking like a spotlessly
scrubbed elephant.

My pretty eyes, like blue
waterlilies, have turned yellow.

Notes:  The heroine who was sad, said this, when the hero was away.  பிரிவாற்றாமையால் வருந்திய தலைவி தன் ஆற்றாமைக்குக் காரணத்தைப் புலப்படுத்தியது.  உ. வே. சாமிநாதையர் உரை – துறுகல் தன் இயல்பினை மறைக்கும் மாசு நீங்கப் பெற்ற நாடன் இவ்வியல்புக்கு மாறாக என் கண்களின் இயல்பை மறைக்கும் பசலையை வளரச் செய்தனன் என்பது.  இறைச்சி – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – ஏதந்தராத துறுகல் ஏதந்தரும் யானை எனக் காண்பார் வருந்தத் தாங்கும் நாடன் என்றதனானே, இனிமை தருங் கூட்டமும் பிரிந்திடுவானோ என்ற கவற்சியால் இனிமை பயவாதிருக்கும்படி ஒழுகினான் என்பதாம்.  பாறையும் யானையும்:  அகநானூறு 57 –  இற்றிப் புன்தலை நெடுவீழ் இரும்பிணர்த் துறுகல் தீண்டி வளி பொரப் பெருங்கை யானை நிவப்பின் தூங்கும், அகநானூறு 178 – பிடி மடிந்தன்ன கல், அகநானூறு 269 –  பிடி மடிந்தன்ன குறுந்தொகை 13 – மாசு அறக் கழீஇய யானை போலப் பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல், குறுந்தொகை 36 – துறுகல் அயலது மாணை மாக்கொடி துஞ்சு களிறு இவரும், குறுந்தொகை 111 – கூழை இரும் பிடிக் கை கரந்தன்ன கேழ் இருந்துறுகல், குறுந்தொகை 279 – மழை கழூஉ மறந்த மா இரும் துறுகல் துகள் சூழ் யானையிற் பொலியத் தோன்றும், கலித்தொகை 108 – பிடி துஞ்சு அன்ன அறை, ஐங்குறுநூறு 239 – புகர் முக வேழம் இரும்பிணர்த் துறுகல் பிடி செத்துத் தழூஉம்.  ஆர்ந்த (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பசலை நிறம் கொண்டன, உ. வே. சாமிநாதையர் உரை – பசலை நிறம் நிரம்பப் பெற்றன, தமிழண்ணல் உரை – முழுவதும் பசலை நிறம் ஆகிப்போயின.

Meanings:  மாசு அற – without blemish, perfect, கழீஇய – washed (செய்யுளிசை அளபெடை), யானை போல – like an elephant, பெரும் பெயல் – heavy rain, உழந்த –  cleaned, இரும்பிணர் – dark/large and rough, துறுகல் – boulder, பைதல் – wet, green, cool, ஒரு தலை – a place, சேக்கும் – was with me, stayed with me, நாடன் – the man from such country, நோய் தந்தனன் – gave this disease, ஏ – அசைநிலை, an expletive, பசலை ஆர்ந்த – they have become yellow, they have become yellow totally, நம் – my, குவளை – blue waterlily, Blue nelumbo, Nymphaea odorata,  அம் கண் – beautiful eyes, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 14, தொல்கபிலர், குறிஞ்சித் திணை  – தலைவன் சொன்னது, தோழி கேட்கும்படி
அமிழ்து பொதி செந்நா அஞ்ச வந்த
வார்ந்து இலங்கு வை எயிற்றுச் சின்மொழி அரிவையைப்
பெறுக தில் அம்ம யானே, பெற்றாங்கு,
அறிக தில் அம்ம இவ்வூரே, மறுகில்
நல்லோள் கணவன் இவன் எனப்  5
பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே.

Kurunthokai 14, Tholkapilar, Kurinji Thinai – What the hero said, when the heroine’s friend listened nearby
May I attain her by climbing on
a madal horse,
the young woman with a reddish,
sweet, nectar-filled tongue that
fears her straight, bright teeth!
Once I attain her, many on the
streets of this town will say,
“He’s a good woman’s husband,”
and we will feel a little shy then.

Notes:  The hero whose request was denied by the heroine’s friend, indicated that he will climb on a palmyra stem horse (madal horse) and parade around town.  தோழியால் குறை மறுக்கப்பட்ட தலைவன் அத்தோழி கேட்ப ‘நான் மடலேறி தெருவில் செல்வேன்’ எனப்பொருள்பட உரைத்தது.   நாணுகம் (6) – உ. வே. சாமிநாதையர் உரை – யாம் என்பது தலைவியையும் உடன்படுத்தி.  வை– வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).  வார்– வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (தொல்காப்பியம், உரியியல் 21).  மடல் ஏறுதல் – சங்க இலக்கியத்தில் மொத்தம் 16 பாடல்களில் மடல் ஏறுதல் பற்றிய குறிப்புகள் உள்ளன – குறுந்தொகை 14, 17, 32, 173, 182, நற்றிணை 146, 152, 220, 342, 377, கலித்தொகை 58, 61, 138, 139, 140, 141.  கலித்தொகை 138, 139, 140, 141 பாடல்களில் மட்டுமே தலைவன் மடல் குதிரையின் மீது செல்கின்றான்.  கலித்தொகை 138, 141 ஆகிய பாடல்களில் மடல் ஏறியதால் தலைவியை அடைந்ததாக அறிவிக்கின்றான்.

Meanings:  அமிழ்து பொதி – nectar filled, செந்நா- red tongue, அஞ்ச வந்த – to fear, வார்ந்து இலங்கு – straight and bright, வை எயிற்று – with sharp teeth, சின்மொழி – few words, அரிவையை – the young woman, பெறுக – may I attain, தில் – விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச்சொல், a particle signifying desire, அம்ம – அசைநிலை, an expletive, பெற்றாங்கு – after attaining her, அறிக – let the people know, தில் – காலம் பற்றி வந்த இடைச்சொல், a particle signifying time, அம்ம – அசைச்சொல், an expletive, இவ்வூரே- this town, the people in this town (ஊர் – ஊர் மக்களுக்கு ஆகுபெயர்), மறுகில் – in the streets, நல்லோள் கணவன் – good woman’s husband, இவன் என்று – that it is him, பல்லோர் கூற – when many talk, யாஅம் – both of us (இசைநிறை அளபெடை), நாணுகம் – we will be shy, சிறிது – a little bit, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 15, ஔவையார், பாலைத் திணை – செவிலித்தாய் தலைவியின் தாயிடம் சொன்னது
பறைபடப் பணிலம் ஆர்ப்ப, இறை கொள்பு
தொன் மூது ஆலத்துப் பொதியில் தோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயாகின்றே தோழி, ஆய் கழல்
சேயிலை வெள் வேல் விடலையொடு  5
தொகு வளை முன்கை மடந்தை நட்பே.

Kurunthokai 15, Avvaiyār, Pālai Thinai – What the foster mother said to the heroine’s mother
Wedding drums thunder and conch
shells blare at their marriage.

The love of our daughter wearing
rows of bangles on her forearms,
for the young man donning warrior anklets
and carrying a white spear with red tip,
has come true O friend,
like the solemn oaths of the Kosars from the
four villages,
who gather under an ancient banyan.

Notes:  The foster mother told the heroine’s mother about the wedding of the heroine.  செவிலித்தாய் நற்றாய்க்கு அறத்தொடு நின்றது.  அகநானூறு 251 – புனை தேர்க் கோசர் தொல்மூது ஆலத்து அரும் பணைப் பொதியில் இன்னிசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க.  The mother is sad since her daughter has eloped.  The foster mother consoles her, telling her that the heroine did the right thing by marrying her lover.  The Kosars are a warrior tribe.  Akanānūru 15, 90, 113, 196, 205, 216, 251, 262, Puranānūru 169, 283, 396, Mathuraikānchi 338 and Kurunthokai 73, have references to Kosars.  பறைபட (1) – உ. வே. சாமிநாதையர் உரை – முரசு முழங்க, பறையும் சங்கும் மங்கல நாளில் முழங்குவன, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மணப் பறைகள் ஆரவாரிப்பவும்.

Meanings:   பறைபட – as parai drums roared, as parai drums were beat, பணிலம் ஆர்ப்ப – conch shells created loud sounds, இறை கொள்பு – staying, தொன் மூது – old and ancient, ஆலத்து – banyan tree’s, Ficus bengalensis, பொதியில் – underneath the tree in the common grounds, பொது இல், பொது இடத்தில், தோன்றிய – appeared, நாலூர் – four villages, கோசர் – Kosar tribe, நன் மொழி – infallible words, போல – like, வாயாகின்று – this is the truth, ஏ – அசைநிலை, an expletive, தோழி – O friend, ஆய் கழல் – beautiful warrior anklets, சேய் இலை – red tip, வெள்வேல் – white spear, விடலையொடு – with the young man, தொகு வளை – bangles that are together, rows of bangles, முன் கை – forearms, மடந்தை நட்பு – the young woman’s friendship, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 16, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோபாலைத் திணைதோழி தலைவியிடம் சொன்னது
உள்ளார் கொல்லோ தோழி, கள்வர் தம்
பொன் புனை பகழி செப்பங்கொண்மார்
உகிர் நுதி புரட்டும் ஓசை போலச்
செங்கால் பல்லி தன் துணை பயிரும்
அம் கால் கள்ளியங்காடு இறந்தோரே?  5

Kurunthokai 16, Chēramān Pālai Pādiya Perunkadunkō, Pālai Thinai – What her friend said to the heroine
Will he think about you, my friend,
the one who has gone to the wasteland
filled with pretty-stemmed kalli,
where the clucks of a red-legged
male lizard calling his mate are like
the sounds of highway robbers
scratching and cleaning their iron
arrows with fingernails?

He will think about you and come back
soon.

Notes:  The heroine’s friend said this to the heroine who was sad when the hero went on a quest to earn wealth.  தலைவன் பொருள்வயின் பிரிந்த காலத்தில் கவலையுற்ற தலைவியை நோக்கி தோழி கூறியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – பல்லி துணை பயிரும் ஒலி கேட்புழி அவர் தம் துணையாகிய உன்னை நினையாதிரார்.  நினைப்பார் ஆகலின் விரைந்து வருவார் என ஆற்றியவாறு.  பொன் (2) – உ. வே. சாமிநாதையர் உரை – இரும்பு.  இறைச்சி – தமிழண்ணல் உரை – சிற்றுயிர்களாகிய கார்ப்பொருளின் காதலைக்கூறி, மானிட உரிப்பொருளுக்குத் துணையுமாக வரும் இதுவே ‘இறைச்சி’ எனப்படும். There are references to lizard omens in Akanānūru 9, 88, 151, 289, 351, 387, Kurunthokai 16, 140, Natrinai 98, 169, 246, 333 and Kalithokai 11.

Meanings:  உள்ளார் கொல் – does he think (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), ஓ – அசைநிலை, an expletive, தோழி – friend, கள்வர் – thieves, தம் – their, பொன் – iron, புனை – made, பகழி – arrows, செப்பம் கொண்மார் – to clean, to make them perfect, உகிர் நுதி – nail ends, புரட்டும் – they flick, they scratch, ஓசை போல – like that sound, செங்கால் பல்லி – red-legged lizard, தன் துணை – his partner, பயிரும் – calls, அம் கால் – beautiful stems, கள்ளியங்காடு – forest filled with common prickly pear cactus or euphorbia tirukalli, milk hedge, இறந்தோர் – one who went, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 17, பேரெயில் முறுவலார், குறிஞ்சித் திணை – தலைவன் தோழியிடம் சொன்னது
மாவென மடலும் ஊர்ப, பூவெனக்
குவி முகிழ் எருக்கங்கண்ணியும் சூடுப,
மறுகின் ஆர்க்கவும் படுப,
பிறிதும் ஆகுப, காமம் காழ்க் கொளினே.

Kurunthokai 17, Pēreyil Muruvalār, Kurinji Thinai – What the hero said to the heroine’s friend
If love ripens, men will wear
erukkam flower strands with
pointed buds as symbols of
their actions, ride on palmyra
stem horses, suffer gossip and
ridicule on the streets, and
even court death.

Notes:  The hero whose request was denied by the heroine’s friend, indicated that he will climb on a palmyra stem horse (madal horse) and parade around town.  தோழியால் குறை மறுக்கப்பட்ட தலைவன், அத்தோழியிடம், தான் மடலேற எண்ணியிருத்தலை உரைத்தது.  உலகின்மேல் வைத்து தன் குறையைக் கூறினான். பூவென (1) – உ. வே. சாமிநாதையர் உரை – அடையாள மாலையைப் போல், பொ. வே. சோமசுந்தரனார் உரை – சூடும் மரபில்லாதாயினும் சூடும் மரபுடைய பூவாகக் கொண்டு.   சூடுப (2) – உ. வே. சாமிநாதையர் உரை – கண்ணி தலையில் புனைவதாதலின் சூடுப என்றான்.  The hero, when spurned by the heroine, climbs on a palmyra stem/frond horse (madal eruthal – means climbing on a palm stem/frond) and has it drawn through town.  He wears erukkam flower strands or bone garlands.  He suffers ridicule from the people on the streets.  This is a last-ditch effort by the hero, to get the attention of his beloved.  மடல் ஏறுதல் – சங்க இலக்கியத்தில் மொத்தம் 16 பாடல்களில் மடல் ஏறுதல் பற்றிய குறிப்புகள் உள்ளன – குறுந்தொகை 14, 17, 32, 173, 182, நற்றிணை 146, 152, 220, 342, 377, கலித்தொகை 58, 61, 138, 139, 140, 141.  கலித்தொகை 138, 139, 140, 141 பாடல்களில் மட்டுமே தலைவன் மடல் குதிரையின் மீது செல்கின்றான்.  கலித்தொகை 138, 141 ஆகிய பாடல்களில் மடல் ஏறியதால் தலைவியை அடைந்ததாக அறிவிக்கின்றான்.  காழ்க் கொள்ளுதல் – உ. வே. சாமிநாதையர் உரை – முதிர்வுற்றல், காமமாகிய கனி பரலை உடையதானால் என்று கொண்டு, பரல் என்பதற்கு பரல் போன்ற தடையென்று உருவக ஆற்றால் பொருள் செய்து காமம் நிறைவேறாமல் தடைப்படுமாயின் என்று உரைகோடலும் ஒன்று, பொ. வே. சோமசுந்தரனார் உரை – நனி முதிர்ந்தல்,  தமிழண்ணல் உரை – வைரம் பாய்ந்து முற்றுதல், இரா. இராகவையங்கார் உரை- முற்றிய பரலாகிய விதையைத் தம் முட்கொள்ளின் என்றவாறு.

Meanings:  மாவென – as if the palm fronds were horses, மடலும் – palm fronds/stems (உம்மை இழிவு சிறப்பு), ஊர்ப – they will ride, பூவென – as signature flowers for madal ēruthal even though these flowers are not worn regularly, குவி முகிழ் – pointed buds, எருக்கங்கண்ணியும் – erukkam flower strand, Calotropis gigantea, சூடுப – they will wear, மறுகின் ஆர்க்கவும் படுப –   they will suffer ridicule from the people on the streets, பிறிதும் ஆகுப – they will even court death, காமம் காழ் கொளின் – if love ripens, if love goes to seed, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 18, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசினோரே? சாரல்
சிறு கோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர் தவச் சிறிது காமமோ பெரிதே.  5

Kurunthokai 18, Kapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
O man of the mountain slopes, where
fruits on jackfruit trees grow in clusters
on roots, surrounded by bamboo!
Do the right thing!  Think of marriage!

Who knows her state of mind?

Like the large jackfruits that hang on the
short boughs of trees, her love for you is large,
but her life is very short!

Notes:  The heroine’s friend requested the hero to come and marry the heroine.  தோழி வரைவு கடாயது.  கலித்தொகை 137-2 – பெரிதே காமம் என் உயிர் தவச் சிறிதே.  நற்றிணை 232 – வேரல் வேலிச் சிறுகுடி.  வேரல் வேலி (1) – உ. வே. சாமிநாதையர் உரை – சிறு மூங்கிலாகிய வாழ் வேலி உடைய, மலைச் சாரலில் இயல்பாகவே வளர்ந்த மூங்கிலே பலா மரத்திற்கு வேலியாயிற்று.  இத்தகைய வேலையை வாழ்வேலி என்பர் (பெரும்பாணாற்றுப்படை 126 – வாழ் முள் வேலிச் சூழ் மிளைப் படப்பை, தமிழண்ணல் உரை – சிறு மூங்கில்களையே உயிர் வேலியாக உடைய.  யார் அஃது அறிந்திசினோரே (3) –  உ. வே. சாமிநாதையர் உரை – அந்நிலையை அறிந்தவர் யார்?  ஒருவருமில்லை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – நின்னை அல்லால் பிறர் யாரே அதனை அறிந்து கொள்வார் உளர்.  சிறு கோடு (4) – இரா. இராகவையங்கார் உரை – சிறு கோடு என்பதனால் தலைவியினது இளமையும் மென்மையும் தெரிய வைத்தாள்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – சிறு கொம்பில் பலாக்கனி பின்னும் பருத்து முதிருமாயின் அக்கொம்பினை முறித்துக்கொண்டு வீழ்ந்து சிதறுமாறு போலத் தலைவியின் காமம் பின்னும் முதிருங்கால் அவள் உயிருக்கு இடையூறு செய்து தானும் கெடும் என்பது உவமையாற் போந்தமை உணர்க.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  தவ – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  வேரல் – bamboo, வேலி – fences, வேர்க்கோள் – with  clusters on the roots, பலவின் – of jackfruit trees, Artocarpus heterophyllus, சாரல் நாட – O man from the mountain slopes, செவ்வியை ஆகுமதி – do the right thing, do the perfect thing, come and marry her at the right time (மதி – முன்னிலை அசை, an expletive of the second person), யார் அஃது அறிந்திசினோர் – who knows what she thinks (சின் – படர்க்கையின் கண் வந்தது, an expletive of the third person), who other than you knows what she thinks, ஏ – அசைநிலை, an expletive, சாரல் – mountain slopes, சிறு கோட்டு – on the small branches, பெரும்பழம் – large jackfruits, தூங்கியாங்கு – like how they hang, இவள் உயிர் தவச் சிறிது – her life is very short, காமம் – love, ஓ – அசைநிலை, an expletive, பெரிது – it  is large, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 19, பரணர், மருதத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
எவ்வி இழந்த வறுமை யாழ்ப் பாணர்
பூ இல் வறுந்தலை போலப் புல்லென்று
இனைமதி வாழிய நெஞ்சே, மனை மரத்து
எல் உறு மௌவல் நாறும்
பல் இருங்கூந்தல் யாரளோ நமக்கே?  5

Kurunthokai 19, Paranar, Marutham Thinai – What the unfaithful hero said to his heart
Who is she to us now,
O heart, the woman with thick
hair with the fragrance of bright
jasmine from the vine spread
on the tree in her yard?

May you suffer like the poor lute
bards who have lost their patron
Evvi, their heads now without
gold ornaments!

Notes:  The hero said this when the heroine sulked.  தலைவி ஊடிய பொழுது தலைவன் கூறியது.  எவ்வி – மிழலை நாட்டின் மன்னன் – தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் கொல்லப்பட்டான் – புறநானூறு 24, வாய்வாள் எவ்வி வீழ்ந்த செருவில் பாணர் கைதொழு மரபின் முன் பரித்து இடூஉப் பழிச்சிய வள் உயிர் வணர் மருப்பு அன்ன – அகநானூறு 115.   இரா. இராகவையங்கார் உரை – மனைமரத்து இரவிலுற்ற முல்லை மலர்கள் ஒருவருஞ் சூடாமலே மணம் நாறுதல் போல இவள் கூந்தலும் நாம் அணையாமலே நாறும் என்பது குறிப்பு.  வறுமை யாழ்ப் பாணர் (1) – இரா. இராகவையங்கார் உரை – ஈண்டு யாழ்க்கல்வி வறுமையே கொள்க.  இக்கருத்திற்கு இயையவே ” எவ்வி வீழ்ந்த செருவில் பாணர் கைதொழு மரபின் முன் பரித்து இடூஉப் பழிச்சிய வள் உயிர் வணர் மருப்பு” என்று கேட்கப்படுவது காண்க.. இனை (3) – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – இன்னை என்பதன் இடைக்குறை, வருந்தினை என்பது பொருள், உ. வே. சாமிநாதையர் உரை – வருந்துவாயாக, பொ. வே. சோமசுந்தரனார் உரை – வருந்துக.  வாழிய (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீ வாழ்வாயாக, உ. வே. சாமிநாதையர் உரை – அசைநிலை.  வரலாறு:  எவ்வி.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  எல் – எல்லே இலக்கம் – (தொல்காப்பியம், இடையியல் 21).  பாணர் – பாண் மரபினர், பாண் என்பது பண் அடியாகப் பிறந்த பெயர், இசை பாடுபவர்.

Meanings:  எவ்வி இழந்த – those who lost Evvi, வறுமை யாழ்ப் பாணர் – lute bards in poverty, lute bards who do not play music any longer, பூ இல் – without gold flowers, வறுந்தலை – heads without adornments, போல – like, புல்லென்று – dull, இனைமதி – may you become sad (மதி – முன்னிலை அசை, an expletive of the second person), வாழிய – அசைநிலை, an expletive, may you live long, நெஞ்சே – my heart, மனை மரத்து – on the vine on the tree in the house yard, எல் உறு – with brightness (எல் – ஒளி, உறு – உடைய), மௌவல் நாறும் – fragrant wild jasmine, Jasminum angustifolium, பல் இருங்கூந்தல் – the woman with thick black hair (இருங்கூந்தல் – அன்மொழித்தொகை), யாரளோ – who is she, நமக்கு – to us, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 20, கோப்பெருஞ்சோழன், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து,
பொருள்வயின் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக,
மடவம் ஆக மடந்தை நாமே.

Kurunthokai 20, King Kōperunchōzhan, Pālai Thinai – What the heroine said to her friend
My tender friend!
If abandoning one’s partner
to earn wealth, and
forgetting love and grace
is intelligence,
let him be the intelligent one.

May we be the stupid ones!

Notes:  The heroine said this to her friend, on hearing from her that the hero was about to leave on a quest to earn wealth.  தலைவனின் பிரிவை உணர்த்திய தோழியிடம் தலைவி உரைத்தது.

Meanings:  அருளும் – grace, அன்பும் – kindness, நீக்கி – remove, துணை துறந்து – leaving the spouse/partner, பொருள்வயின் – to earn wealth, பிரிவோர் – those who separate, உரவோர் ஆயின் – if they are intelligent/smart, உரவோர் உரவோர் ஆக – let the intelligent one be intelligent, மடவம் ஆக – let us be the stupid ones, மடந்தை – naive/tender woman, நாம் – we, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 21, ஓதலாந்தையார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வண்டுபடத் ததைந்த கொடி இணர் இடையிடுபு
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்
கதுப்பின் தோன்றும் புதுப் பூங்கொன்றைக்
கானம் கார் எனக் கூறினும்,
யானோ தேறேன், அவர் பொய் வழங்கலரே.  5

Kurunthokai 21, Ōthalānthaiyār, Mullai Thinai – What the heroine said to her friend
In the forest, the kondrai trees
……….with their dense, trailing
……….flower clusters that have
……….bloomed for bees to swarm,
……….looking like the tresses of
……….young woman decorated with
……….beautiful golden ornaments,
are trying to tell me that the rainy
season is here.

I do not believe it.  My lover does
not lie to me.

Notes:  The heroine said this to her friend who thought that she would be sad, on seeing the arrival of the monsoon season when the hero had agreed to return.  தலைவன் குறித்துச் சென்ற கார்ப் பருவத்தைக் கண்டு தலைவி வருந்துவாள் என்று எண்ணிய தோழியிடம் தலைவி கூறியது.   உ. வே. சாமிநாதையர் உரை – கொன்றை மகளிரைப் போலத் தோற்றினும் மகளிரல்ல என்று தெளிவது போல, இது கார்ப்பருவம் என்று தோற்றினும் அன்றென்று தெளிந்தேன் என்றபடி.  வண்டுபடத் ததைந்த (1) – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – வண்டு மொய்க்கும்படி நெருங்கிய, வண்டுகள் விழுததாற் சிதறின என்றலுமாம்.

Meanings:  வண்டுபட – bees falling, bees swarming, ததைந்த – blossomed densely, கொடி இணர் – long strands of flower bunches, இடை இடுபு – placed between  the leaves, பொன் செய் – made of gold, புனை இழை – beautiful jewels, கட்டிய – tied in their hair, மகளிர் – women, கதுப்பின் – like their hair (இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), தோன்றும் – appearing, புதுப் பூங்கொன்றை – fresh laburnum flowers, சரக் கொன்றை, Indian laburnum, golden shower tree, Cassia Fistula, கானம் – forest, கார் என – rainy season, கூறினும் – even if it’s said, யான்- I, ஓ – பிரிநிலை, exclusion, தேறேன் – I do not believe it, அவர் பொய் வழங்கலர் – he does not lie, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 22, சேரமானெந்தை, பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நீர் வார் கண்ணை நீ இவண் ஒழிய,
யாரோ பிரிகிற்பவரே, சாரல்
சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து
வேனில் அம் சினை கமழும்
தேம் ஊர் ஒண்ணுதல்? நின்னொடுஞ்செலவே.  5

Kurunthokai 22, Chēramānenthai, Pālai Thinai What the heroine’s friend said to her
O friend with a bee-swarming, bright
forehead as fragrant as the beautiful
summer branches with right-whorled
flowers, of the kadampam trees
that decorate the mountain slopes!
Your eyes are dripping tears thinking
you have to stay back.

Who can leave you behind and go?
He will take you along with him.

Notes:  The heroine’s friend comforted the heroine who found out that the hero was going to leave soon to earn wealth.  தலைவன் பிரிந்து செல்வான் என்பதைக் குறிப்பால் அறிந்து வருந்திய தலைவியை தோழி ஆற்றுவித்தாள்.  பிரிகிற்பவரே (2) – உ. வே. சாமிநாதையர் உரை – நின்னைப் பிரிந்து செல்லும் ஆற்றலையுடையவர், பிரியச் சம்மதிப்போர் எனலுமாம்.  தேம் ஊர் ஒண்ணுதல் (5) – உ. வே. சாமிநாதையர் உரை – நன்மணம் பரவிய விளக்கத்தையுடையாய், பொ. வே. சோமசுந்தரனார் உரை – வண்டுகள் ஊர்தரும் ஒளியுடைய நுதலினையுடையாய்.  ஊரும் என்ற வினையால் வண்டு எனலே நன்று. வலஞ்சுரி மராஅம் – அகநானூறு 83 – வலஞ்சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீ, ஐங்குறுநூறு 348 – வலஞ்சுரி மராஅம் வேய்ந்து நம் மணங்கமழ் தண் பொழில், ஐங்குறுநூறு 383 – நெடுங்கால் மராஅத்துக் குறுஞ்சினை பற்றி வலஞ்சுரி வால் இணர் கொய்தற்கு நின்ற, குறுந்தொகை 22 – சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து வேனில் அம் சினை கமழும்.

Meanings:  நீர் வார் கண்ணை – you are with tear-dripping eyes (கண்ணை – கண்களையுடையாய், முற்றெச்சம்), நீ – you, இவண் – here, ஒழிய –  staying here, யாரோ பிரிகிற்பவர் – who can leave you, ஏ – அசைநிலை, an expletive, சாரல் – mountain slopes, சிலம்பு – mountain, அணி கொண்ட – made beautiful, adorned, வலம் சுரி மராஅத்து – with kadampam flowers bearing petals that swirl to the right, கடம்பம், Common cadamba, Neolamarckia cadamba (மராம் – ஆகுபெயர் பூவிற்கு), வேனில் – in summer (உ. வே. சாமிநாதையர் உரை – இளவேனில்), அம் சினை கமழும் – with the fragrance of beautiful tree branches, தேம் ஊர் ஒள் நுதல் – O woman with sweet-fragrance spread bright forehead, O woman with bee-swarming fragrant forehead (தேம் தேன் என்றதன் திரிபு, ஒண்ணுதல் – அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), நின்னொடும் செலவு – he will leave with you, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 23, ஔவையார், குறிஞ்சித் திணை – தோழி அகவன் மகளிடம் சொன்னது
அகவன் மகளே! அகவன் மகளே!
மனவுக்கோப்பு அன்ன நன்னெடுங்கூந்தல்
அகவன் மகளே! பாடுக பாட்டே,
இன்னும் பாடுக பாட்டே, அவர்
நன்னெடுங்குன்றம் பாடிய பாட்டே.  5

Kurunthokai 23, Avvaiyār, Kurinji Thinai – What the heroine’s friend said to the diviner
O diviner woman!   O diviner woman
with pretty, long, white hair
looking like strands of conch shells!

Sing the song.  Sing it again, the song
you sang about his fine tall mountains.

Notes:  The heroine’s friend indicated to the diviner that the heroine is in love with the hero.  தோழி அறத்தொடு நின்றது.  உ. வே. சாமிநாதையர் உரை – ‘அவர் நன் நெடும் குன்றம் பாடிய பாட்டு’ எனக் கூறின், ‘அவர் யார்?’ என்னும் ஆராய்ச்சி தாயரிடையே பிறந்து உண்மை அறிதற்கு ஏதுவாமாகலின் இஃது அறத்தொடு நிற்றலாயிற்று.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – முருகவேள் உறைவதொரு மலையைப் பாடினாளாக அம்மலையே தலைவன் மலையுமாகலின், அப்பாடல் கேட்டுத் தலைவி மகிழ்வெய்தல் கண்ட தோழி, மீண்டும் அம்மலையையே பாடுக என்றாள்.   அகவன் மகளே (1) – உ. வே. சாமிநாதையர் உரை – தெய்வங்களை அழைத்துப் பாடுதலைச் செய்யும் கட்டவிச்சியே,  இரா. இராகவையங்கார் உரை – தெய்வங்களையும் குலத்தோரையும் அழைத்தலுடைய பெண்டே, திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – வெறியாடும் மகளே என்றும் வேலனை அழைக்கும் மகளே என்றும் உரைக்கலாம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழைக்கும் மகள், கட்டுவிச்சி குறி சொல்வழித் தெய்வங்களையும் குறி சொல்லப்படுவோர் குலத்தையும் அழைத்துப் பாடுதல் பற்றி அவளுக்கு அகவன் மகள் என்று பெயராயிற்று.   The heroine is wasting away pining for her lover.   Her mother, not knowing about the love affair, has invited a female diviner (கட்டுவிச்சி) to find out the reason for her daughter’s failing health.  The diviner throws paddy and based on the constellation she tells the reason for the heroine’s illness.  Here, the friend tells the diviner and the family in a subtle way that the heroine’s illness is because of her lover.  கட்டு – உ. வே. சாமிநாதையர் உரை – முறத்தில் நெல்லை வைத்துத் தெய்வங்களைப் பாடி எண்ணிப் பார்த்துக் கட்டுவிச்சிக் காணும் குறி.

Meanings:  அகவன் மகளே அகவன் மகளே – O diviner woman who invites god, O diviner woman who invites the velan, oh diviner woman who performs veriyāttam dance, மனவு – tiny conch shells, கோப்பு – strung, tied together, அன்ன – like, நல் நெடுங்கூந்தல் – nice long hair, அகவன் மகளே – O diviner woman, பாடுக பாட்டு – sing the song, ஏகாரம் பிரிநிலை, implying exclusion, இன்னும் பாடுக – sing again, பாட்டு – sing the song, ஏகாரம் பிரிநிலை, implying exclusion, அவர் – his, நன் நெடும் – fine tall, குன்றம் – mountains, பாடிய பாட்டு – the song that you sang, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 24, பரணர், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கருங்கால் வேம்பின் ஒண் பூ யாணர்
என்னை இன்றியும் கழிவது கொல்லோ?
ஆற்று அயல் எழுந்த வெண்கோட்டு அதவத்து
எழு குளிறு மிதித்த ஒரு பழம் போலக்
குழையக் கொடியோர் நாவே,  5
காதலர் அகலக் கல்லென்றவ்வே.

Kurunthokai 24, Paranar, Mullai Thinai – What the heroine said to her friend, when her lover was away
Will the bright new blossoms
of neem trees with dark colored
trunks, wilt and drop before he
comes?

Now that my lover has gone, the
tongues of cruel people hurt me.

I’m like a single ripe fruit, fallen
from a river side fig tree with
white branches, being crushed
by seven crabs.

Notes:  The heroine said this on seeing the arrival of the season.  பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைவி உரைத்தது.  அகநானூறு 380 – நாவல் உண் துறை உதிர்த்த கனி கவின் சிதைய வாங்கிக் கொண்டு தன் தாழை வேர் அளை வீழ் துணைக்கு இடூஉம் அலவன்.  குறுந்தொகை 24 – வேம்பின் ஒண் பூ யாணர் என் ஐ இன்றியும் கழிவது கொல்லோ, ஐங்குறுநூறு 350 – வேம்பின் ஒண் பூ உறைப்பத் தேம்படு கிளவி அவர்த் தெளிக்கும் பொழுதே.  வேம்பின் ஒண் பூ (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஈண்டு வேனிற் பருவத் தொடக்கத்தே புதிதாக மலர் வருதலைக் குறித்து நின்றது, தமிழண்ணல் உரை – இளவேனிலில் வேப்பமரம் தழைத்துப் பூத்துக் குலுங்குவதால் யாணர் எனப்படுகின்றது, இரா. இராகவையங்கார் உரை – பாண்டியரும் அவர் படையும் சூடிய சிறப்பால் ஒண் பூ என்றாள்.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).   என்னை, என் – அன்னை என்னை என்றலும் உளவே தொல் நெறி முறைமை சொல்லினும் எழுத்தினும் தோன்றா மரபின என்மனார் புலவர் (தொல்காப்பியம், பொருளியல் 50).  கொடியோர் (5) – உ. வே. சாமிநாதையர் உரை – கொடிய மகளிருடைய நாக்கள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – புறங் கூறுவோரின் நா, தமிழண்ணல் உரை – கொடிய ஊர்ப்பெண்டிரின் நாக்கள், இரா. இராகவையங்கார் உரை – கொடுமை உரைப்போர் நாக்கள்.

Meanings:  கருங்கால் வேம்பின் – of the dark-trunked neem trees, of the neem trees with thick trunks, of the neem trees with sturdy trunks, Azadirachta indica, ஒண் பூ யாணர் – abundant bright flowers, bright new flowers, என் ஐ இன்றியும் – without my man, கழிவது கொல் – will they pass (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt, இரக்கக் குறிப்புமாம்), ஓ – அசைநிலை, an expletive, ஆற்று அயல் – near the river, எழுந்த – risen, growing, வெண்கோட்டு – with white branches, அதவம் – fig tree, அத்தி மரம், Ficus glomerata, அத்து – சாரியை, எழு குளிறு – seven crabs, மிதித்த – stepped on, crushed with their feet, ஒரு பழம் போல – like a fruit, குழைய – for me to be distressed, கொடியோர் நா – the tongues of cruel people, ஏ – அசைநிலை, an expletive, காதலர் அகல – since my lover has gone, கல்லென்றவ்வே – they are noisy, they attack me, (விரிக்கும் வழி விரித்தல், ஏ – அசைநிலை, an expletive)

குறுந்தொகை 25, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
யாரும் இல்லைத் தானே கள்வன்,
தான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ?
தினைத் தாள் அன்ன சிறு பசுங்கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே.  5

Kurunthokai 25, Kapilar, Kurinji Thinai – What the heroine said to her friend
Nobody was there, just him,
the thief.  If he does not keep
his promise, what can I do?

A heron with thin green legs, like
millet stalks, was looking for eels in
the running water when he took me.

Notes:  The heroine said this with sorrow, since the hero has been delaying marriage.  தலைவன் நீண்ட காலம் தன்னை மணஞ்செய்யாமல் இருத்தல்பற்றி தலைவி வருந்தித் தோழியிடம் கூறியது.  அகநானூறு 246 – கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக.  களவன் – சாட்சியாக இருந்தவன்.  பசுங்கால குருகும் உண்டு – உ. வே. சாமிநாதையர் உரை – பசிய கால்களையுடைய நாரையும் இருந்தது, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பசிய கால்களை உடையனவாகிய நாரைகளும் ஆண்டுளவாயின.  குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே (5) – இரா. இராகவையங்கார் உரை – குருகு பாராதாயினும் அக்களத்தில் அவன் சூளுரைத்தது கேட்டதேயாம் என்று ‘குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே’ என்றாள்.  உ. வே. சாமிநாதையர் உரை – அவன் மணந்த நிகழ்ச்சியை எண்ணி பெருமிதம் கொள்ளும் தலைவி தாம் என்று பன்மையாற் கூறி கள்வனாதலைக் கூறுகையில் உண்டான செறல்பற்றி தான் என்று ஒருமையாற் கூறியதாகக் கொள்க. தலைவனைக் கள்வன் என்றல் – குறுந்தொகை 25 – யாரும் இல்லைத் தானே கள்வன், குறுந்தொகை 318 – கள்வனும் கடவனும் புணைவனும் தானே,  நற்றிணை 28 – கள்வர் போலக் கொடியன், நற்றிணை 40 – நள்ளென் கங்குல் கள்வன் போல, கலித்தொகை 144 – பொழில் தொறும் நாடுவேன் கள்வன் கரந்து இருக்கற்பாலன் கொல், கலித்தொகை 145 – துயர் செய்த கள்வன், கலித்தொகை 51 – கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகைக்கூட்டம் செய்தான் அக் கள்வன் மகன்.

Meanings:  யாரும் இல்லை – nobody was there (யாரும் – உம்மை முற்றுப்பொருள்), தானே கள்வன் – he who was the thief was the one there, he was the only one who was there (ஏ – பிரிநிலை, exclusion), அது பொய்ப்பின் – if he does not keep up his promise, யான் எவன் செய்கு – what can I do, (செய்கு தன்மை ஒருமை வினைமுற்று, first person singular verb ending), ஓ – அசைநிலை, an expletive, தினைத் தாள் அன்ன- like millet stalks, Italian millet, Setaria italicum, சிறு பசுங்கால – with thin legs, with tender legs, with green legs, ஒழுகு நீர் – running water, stream, ஆரல் பார்க்கும் – looking for eels, விலாங்கு மீன், Brown or green sand eel, Rhynchobdella aculeate, குருகும் உண்டு – heron/egret/stork was there, herons/egrets/storks were there, (உம்மை இழிவு சிறப்பு), தான் மணந்த – when he took me, when he united with me, ஞான்று – on that day, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 26, கொல்லன் அழிசியார், குறிஞ்சித் திணை – தோழி செவிலித்தாயிடம் சொன்னது, கட்டுவிச்சியை அவள் வினவிய வேளையில்
அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கை
மேக்கு எழு பெருஞ்சினை இருந்த தோகை
பூக்கொய் மகளிரின் தோன்று நாடன்,
தகாஅன் போலத் தான் தீது மொழியினும்,
தன் கண் கண்டது பொய்க்குவது அன்றே,  5
தேன் கொக்கு அருந்தும் முள் எயிற்றுத் துவர் வாய்
வரையாடு வன் பறழ்த் தந்தைக்
கடுவனும் அறியும், அக்கொடியோனையே.

Kurunthokai 26, Kollan Azhisiyār, Kurinji Thinai – What her friend said to the foster mother, when a diviner is brought home
Her lover is from the country
where peacocks sit high on the
large branches of vēngai trees
with sturdy trunks,
whose buds have blossomed,
appearing like the women who
pluck its flowers.

The diviner speaks like he is not fit
for her and her illness is because of
god.  The thorn-fanged, red-mouthed
male monkey that leaps around in the
mountains and eats sweet mangoes
with his strong, young child, knows
that cruel man only too well.  He who
had seen him with his eyes will not lie.

Notes:  The heroine’s friend let the diviner know about the love between the hero and heroine.  தோழி அறத்தொடு நின்றது.  தலைவியின் வேறுபாட்டுக்குக் காரணம் பிறிதோர் தெய்வமென்று கட்டுவிச்சியால் அறிந்த தாயர் முதலியோருக்குத் தோழி, “இவள் ஒரு தலைவனோடு நட்புப் பூண்டாள்.  அவனை ஓர் ஆண் குரங்கும் அறியும்” என்று உண்மையைக் கூறியது.  உள்ளுறை – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – மலர்ந்த வேங்கையின் மேலோங்கிய சினையிலிருந்த தோகை, பூக்கொய் மகளிரைப்போன்று தோன்றினாற்போல, தலைவன் தன் நெஞ்சத்திடத்துப் பிறிது நினைத்திருக்கும் வெளித்தோற்றத்து வேண்டியன செய்வான்போற் காணப்பட்டான் என்பதாம்.  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மகளிர் இல்லாத மயில் மகளிர் போன்று தோன்றுமென்றது, நோய்க்காரணமாகாத தெய்வம் கட்டுவிச்சிக்கு நோய்க்காரணமாகத் தோன்றியது என்பது.  கருங்கால் வேங்கை (1) – உ. வே. சாமிநாதையர் உரை – கரிய அடியையுடைய வேங்கை மரம், வலிய தாளையுடைய வேங்கை மரம்.  பறழ் – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1).  ஐங்குறுநூறு 297  – விரிந்த வேங்கைப் பெருஞ்சினைத் தோகை, பூக்கொய் மகளிரின் தோன்றும் நாட!

Meanings:  அரும்பு அற மலர்ந்த – blossomed totally, bloomed past the bud stage, கருங்கால் வேங்கை – kino trees with dark colored trunks, kino trees with strong trunks, kino trees with big trunks, Indian Kino Tree, Pterocarpus marsupium, மேக்கு – above, எழு – rising, பெருஞ்சினை – large branches, இருந்த தோகை – peacocks which were there (தோகை ஆகுபெயர் மயிலுக்கு), பூக்கொய் மகளிரின் – like the women who pluck flowers (மகளிரின் – ஐந்தாம் வேற்றுமை உருபு, இன் உருபு ஒப்புப் பொருளது), தோன்று – they appear, நாடன் – the man from such country, தகாஅன் போல – like he’s not a fit for her, தான் –  the fortune, teller (கட்டுவிச்சி), தீது மொழியினும் – even if she has said that it is because of god’s wrath, even if she has said ill words, தன் கண் கண்டது – what his eyes had seen, பொய்க்குவது அன்று – he will not lie, ஏ – அசைநிலை, an expletive, தேன் கொக்கு (கொக்குக்காலி) – sweet mango fruits (கொக்கு மாமரம் – ஈண்டு அதன் பழத்தை உணர்த்திற்று), அருந்தும் – it eats, முள் எயிற்று – with sharp teeth, துவர் வாய் – red mouth, coral-like red mouth, வரை ஆடு – playing in the mountain, வன் பறழ் – strong child, தந்தை – father, கடுவனும் – also the male monkey (உம்மை இழிவு சிறப்பு), அறியும் – he knows, அக்கொடியோனை – that cruel man, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 27, வெள்ளிவீதியார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது,
நல் ஆன் தீம்பால் நிலத்து உக்காஅங்கு,
எனக்கும் ஆகாது, என் ஐக்கும் உதவாது,
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே.  5

Kurunthokai 27, Velliveethiyār, Pālai Thinai – What the heroine said to her friend
My dark beauty and the spots
on my loins will do me no good,
nor will they benefit my lover,
since pallor has ruined them.

It is like a fine cow’s sweet milk
being wasted on the ground
without feeding its calf or being
milked into a pail.

Notes:  The heroine said this to her friend who worried about her.  பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குத் தலைவி உரைத்தது.  “நான் ஆற்றியிருப்பவும் என் மாமையழகு வீணாகும்படி அதனைப் பசலை உண்டது” எனக் கூறியது.   பொ. வே. சோமசுந்தரனார் உரை – இச்செய்யுள் வெள்ளிவீதியார் என்னும் நல்லிசைப் புலமையாட்டியார் தம் கணவனைப் பிரிந்த காலத்தே கூறியது என்றும் தம் பெயரையாதல் கணவன் பெயரையாதல் கூறின் புறமென்று அஞ்சி வாளா கூறப்பட்டு அகமாயிற்று என்றும் கூறுப.  இரா. இராகவையங்கார் உரை – இது வெள்ளிவீதியார் என்னும் நல்லிசைப் புலமை மெல்லியர் தம் தலைவன் பிரிவிடை ஆற்றாது சொல்லியது என்பது (தொல்காப்பியம், அகத்திணையியல் 54) நச்சினார்க்கினியரின் உரையால் அறியப்படுகின்றது.  இப்பாடலைக் கூறிய பின்னர்ப் பிரிவு பொறாது தம் காதலர் உள்ள ஊருக்குச் செல்லத் தலைப்பட்டனர் என்பது ஒளவையாரின் பாட்டால் (அகநானூறு 147 வரிகள் 8-10 “நெறிபடு கவலை நிரம்பா நீளிடை வெள்ளிவீதியைப் போல நன்றும் செலவு அயர்ந்திசினால் யானே”) அறியப்படுகின்றது.  எனக்கும் என் ஐக்கும் (3) – உ. வே. சாமிநாதையர் உரை – உவமையிரண்டனுள் முன்னது எதிரது.  பின்னது இறந்தது தழீஇயது.  திதலை அல்குல் (5) – தமிழண்ணல் உரை – தேமல் படர்ந்த அடிவயிற்றின் அடிப்பகுதி.  என்னை, என் – அன்னை என்னை என்றலும் உளவே தொல் நெறி முறைமை சொல்லினும் எழுத்தினும் தோன்றா மரபின என்மனார் புலவர் (தொல்காப்பியம், பொருளியல் 50).

Meanings:  கன்றும் உண்ணாது – the calf does not drink, கலத்தினும் படாது – it does not fall into the bowl, நல் ஆன் – fine cow, தீம்பால் – sweet milk, நிலத்து உக்காஅங்கு – like it falls on the ground (உக்காஅங்கு – இசைநிறை அளபெடை), எனக்கும் ஆகாது – it does not benefit me, என் ஐக்கும் உதவாது – it does not benefit my lover, பசலை – pallor, உணீஇயர் வேண்டும் – it desires to ruin, it desires to consume (உணீஇயர் – செய்யியர் என்னும் வாய்பாட்டு வினையெச்சம், சொல்லிசை அளபெடை), திதலை அல்குல் – faded spots on my loins, என் மாமைக் கவின் – my dark beauty, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 28, ஔவையார், பாலைத் திணை, தலைவி தோழியிடம் சொன்னது
முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்?
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு,
ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல்,
அலமரல் அசை வளி அலைப்ப, என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே?  5

Kurunthokai 28, Avvaiyār, Pālai Thinai – What the heroine said to her friend
Will I hit them?  Will I attack them?
Will I scream ‘Ah’ and ‘Ol’ citing
some reason?
The swirling wind blows and causes
me distress, while those in this town
are sleeping, unaware of my love
affliction.

I do not know what to do!

Notes:  The heroine said this to her friend who worried about her since the hero who had left to earn wealth had not returned.  தலைவன் பரிசப் பொருளுக்காகப் பிரிந்த காலத்தில் அவன் விரைந்து வராமையால் கவலையுற்ற தன் தோழியிடம் தலைவி கூறியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரையில் பாடலின் முதல் சொல் ‘மூட்டுவேன்’ என்று உள்ளது.  உ.வே. சாமிநாத ஐயரின் உரையில் ‘முட்டுவேன்’ என்று உள்ளது.  உ. வே. சாமிநாதையர் உரை – முட்டுதல் உடம்பால் தீண்டுதல் என்றும் தாக்குதல் கோல் முதலிய கருவிகளால் தீண்டுதல் என்றும் கொள்க.  முட்டுதல் எதிர்த்தலுமாம்.  சுவர் முதலியவற்றில் முட்டிக் கொள்வேனா தாக்கிக் கொள்வேனா என்று பொருள் கூறலும் ஆம்.  ஓரேன் (2) – உ. வே. சாமிநாதையர் உரை – இன்னது செய்வது என்பதை அறியேன், பொ. வே. சோமசுந்தரனார் உரை – யான் யாது செய்வதென்று தெரிகில்லேன், தமிழண்ணல் உரை – தனி ஒருத்தியாகிய யான்.  ஊர்  (5) – உ. வே. சாமிநாதையர் உரை – ஊரினர், தமிழண்ணல் உரை – ஊரினர், இரா. இராகவையங்கார் உரை – ஊர் என்பது செவிலி, தாய் முதலியோர்.  கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt.  அசை வளி (4) – உ. வே. சாமிநாதையர் உரை – அசைந்து வருகின்ற தென்றற் காற்று, பொ. வே. சோமசுந்தரனார் உரை – வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதல் கூதிர் காலமாகலின் வளி ஈதல் வாடை.  அலமரல் – தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (தொல்காப்பியம், சொல் 310).

Meanings:  முட்டுவேன் கொல் – will I hit, தாக்குவேன் கொல் – will I attack , ஓரேன் – I do not know what to do, யானும் – if I, ஓர் பெற்றி மேலிட்டு – on some pretext, using a course of action, ஆஅ ஒல்லென – ‘Ah’ and ‘Ol’, கூவுவேன் கொல் – will I shout, அலமரல் – swirling, அசை – moving, வளி – wind, breeze, அலைப்ப – causing distress, என் – my, உயவு நோய் அறியாது – not understanding my painful disease, துஞ்சும் ஊர்க்கு – to the sleeping town, to those in the town, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 29, ஔவையார், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
நல் உரை இகந்து புல் உரை தாஅய்ப்
பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல,
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி
அரிது அவா உற்றனை நெஞ்சே, நன்றும்
பெரிதால் அம்ம நின் பூசல், உயர் கோட்டு  5
மகவுடை மந்தி போல
அகன் உறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.

Kurunthokai 29, Avvaiyār, Kurinji Thinai – What the hero said to his heart
O my heart!  Good words rejected,
worthless ones spread, you are
unable to swim in this flood of desire,
which is like rain water gushing into
an unfired clay pot, unable to be
contained.

You want what is hard to attain.

It would be very great if she listens to
your struggles and embraces your love,
like a female monkey on a tall branch
who embraces her baby.

Notes:  The hero said this to his heart after he was refused a night tryst by the heroine’s friend who urged marriage.  தலைவன் இரவுக்குறியை விரும்ப, தோழி மறுத்து, வரைந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பித்தாள்.  வரைந்து கொள்ள நினையாது பின்னும் கூடுவதற்கு அவாவுற்ற தன் நெஞ்சிடம் அவன் கூறியது.  நல் உரை (1) – உ. வே. சாமிநாதையர் உரை – தன் விருப்பத்திற்கு இணங்கி இரவுக்குறி நேரும் உரை.  புல் உரை (1) – உ. வே. சாமிநாதையர் உரை – இரவுக்குறி மறுத்து வரைவு கடாயது.  மகவுடை மந்தி போல அகன் உறத் தழீஇ (6-7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குட்டியை உடைய மந்தி அதனை அகனுறத் தழுவிக் கொள்ளுமாறு போல, உ. வே. சாமிநாதையர் உரை – குட்டியை உடைய பெண் குரங்கு தன் குட்டியால் தழுவப் பெற்று அமைவது போல, இரா. இராகவையங்கார் உரை – தன்னைத் தழுவிய மகவைத் தான் தழுவி அணைத்து ஏறும் மந்தி போல.  நற்றிணை 308 – ஈர் மண் செய்கை நீர் படு பசுங்கலம் பெரு மழைப் பெயற்கு ஏற்றாங்கு எம் பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே.  இரா. இராகவையங்கார் உரை –  விரைவில் வரைந்து கொண்டு கூடுவதே நல்லுரைக்குரிய செயல் என்றும் வரைந்து கொள்ள நினையாது பின்னுங் களவிற் கூடுதல் புல்லுரைக்குரியது என்றும் கருதியவாறாம்.  பசுங்கலம்:  ஈர் மண் செய்கை நீர்படு பசுங்கலம் பெரு மழைப் பெயற்கு ஏற்றாங்கு – நற்றிணை 308.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – நல்லுரை – தன் விருப்பத்திற்கு இணங்கி இரவுக்குறியில் வர உடன்படுதல், புல்லுரை – இரவுக்குறி மறுத்தல்.  நீர்க்கு (2) – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – ‘நீர்க்கு’ என்ற நான்காவது, ‘நீரை’ என இரண்டாவதன் பொருட் கண் வந்தது.  வேற்றுமை மயக்கம்.  என்னை? யாதன் உருபின் கூறிற்று ஆயினும் பொருள் செல் மருங்கின் வேற்றுமை சாரும் (தொல்காப்பியம், வேற்றுமை மயங்கியல் 23).

Meanings:  நல் உரை இகந்து – removing good words, புல் உரை தாஅய் – spreading bad words (தாஅய் – இசைநிறை அளபெடை), பெயல் நீர்க்கு – the pouring rain water, ஏற்ற – accepted, took, பசுங்கலம் போல – like an unfired clay pot, உள்ளம் தாங்கா – unable for the mind to contain, வெள்ளம் நீந்தி – swimming in the flood (of desire), அரிது அவா உற்றனை – you desired what is hard to get, நெஞ்சே – O my heart, நன்றும் பெரிது ஆல் – very great (ஆல் = அசைச் சொல், an expletive), அம்ம – அசைநிலை, an expletive, நின் பூசல் – your struggles, உயர் கோட்டு – tall branches, மகவுடை மந்தி போல – like a female monkey with a baby, அகன் உற – accepting in mind, தழீஇ – embracing (சொல்லிசை அளபெடை), கேட்குநர் – one who will listen, பெறின் – if obtained, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 30, கச்சிப்பேட்டு நன்னாகையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கேட்டிசின் வாழி தோழி, அல்கல்
பொய்வலாளன் மெய்யுறல் மரீஇய
வாய்த்தகைப் பொய்க் கனா மருட்ட ஏற்று எழுந்து
அமளி தைவந்தனனே, குவளை
வண்டுபடு மலரின் சாஅய்த்  5
தமியேன் மன்ற, அளியேன் யானே.

Kurunthokai 30, Kachipēttu Nannākaiyār, Pālai Thinai – What the heroine said to her friend
May you live long, my friend!
Listen!  Last night I thought
my lover, who is a liar,
was hugging me tightly in a
false dream that seemed so real.

I woke up from my confusing
sleep, realizing the situation.
I still found myself caressing
my mattress.

I have become lean and lonely,
suffering like a blue waterlily
blossom attacked by bees.

I am pathetic for sure!

Notes:  The heroine said this to her friend who questioned her about the reason for her sorrow, when the hero was away. தலைவன் வரை பொருளின் பொருட்டுப் பிரிந்த காலத்தில் தலைவியது ஆற்றாமைக்கான காரணத்தைத் தோழி வினவ, தலைவி கூறியது.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).

Meanings:  கேட்டிசின் – listen (சின் – முன்னிலை அசை, an expletive of the second person), வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – O friend, அல்கல் – at night, பொய்வலாளன் – the man who is capable of telling lies, the liar, மெய்யுறல் மரீஇய – hugging my body (மரீஇய – பொருந்திய, அணைந்த, செய்யுளிசை அளபெடை), வாய்த்தகை – seemed like truth, பொய்க் கனா – false dream (கனா – கனவு, வு என்ற விகுதி கெட்டு அதற்கு முந்தைய குறில் எழுத்து நீண்டு நெடிலாக மாறியது), மருட்ட – confused, ஏற்று எழுந்து – woke up realizing (ஏற்று -உணர்ந்து), அமளி – mattress, தைவந்தனன் – I still caressed, ஏ – அசைநிலை, an expletive, குவளை – blue waterlily, Blue Nelumbo, Nymphae odorata, வண்டுபடு மலரின் – like a flower attacked by bees (இன் உருபு ஒப்புப் பொருளது), சாஅய் – growing lean (இசை நிறை அளபெடை), தமியேன் – lonely me, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty, அளியேன் யான் – I am pitiful, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 31, ஆதிமந்தியார், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
மள்ளர் குழீஇய விழவினானும்,
மகளிர் தழீஇய துணங்கையானும்,
யாண்டும் காணேன் மாண்டக்கோனை,
யானும் ஓர் ஆடுகள மகளே, என் கைக்
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த  5
பீடு கெழு குரிசலும் ஓர் ஆடுகள மகனே.

Kurunthokai 31, Āthimanthiyār, Marutham Thinai – What the heroine said to her friend
I cannot find my esteemed man
among warriors at their festival,
nor with the women who hug and
perform thunangai dance.

I am a dancer whose love for him
has made my bright conch shell
bangles slip off my wasting hands.

My proud lover is a dancer too.

Notes:  The heroine informed her friend about her love for the hero, since strangers are seeking her hand for marriage.  நொதுமலர் வரைவுழித் தலைமகள் தோழிக்கு அறத்தொடு நின்றது.  விழவினானும், துணங்கையானும் (1, 2) – உ. வே. சாமிநாதையர் உரை – மூன்றன் உருபுகள் ஏழன் பொருண்மைக்கண் வந்தன.  அகநானூறு 336 – முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின்.  இரா. இராகவையங்கார் உரை – மகளிர் தம் ஆடவரைத் தழுவி ஆடும் இடமாதலால் மாண்டக் கோனை ஆண்டுந் தேடியது கூறினார். “மள்ளர் அன்ன மரவம் தழீஇ, மகளிர் அன்ன ஆடு கொடி நுடக்கும்” (ஐங்குறுநூறு 400) என உவமித்தலான் இவ்வுண்மையுணர்க.  இவர் காதலர் கெடுத்து அறிவு பிரிதாகிப் பேதுற்றுப் பன்னாட்டினும் பல்லூரினுந் தேடினாராதலின் யாண்டுங் காணேன் என்றார்.  “ஆட்டனத்தியை காணீரோ என நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் கடல் கொண்டன்று எனப் புனல் ஒளித்தன்று எனக் கலுழ்ந்த கண்ணள் காதலற் கெடுத்த ஆதிமந்தி போல” (அகநானூறு 236) என்பதால் அறிக.  ஆதிமந்தி: அகநானூறு 45 – காதலர் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து ஆதிமந்தி போலப் பேதுற்று அலந்தனென் உழல்வென் கொல்லோ, அகநானூறு 76 – கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன் வகை அமைப் பொலிந்த வனப்பு அமை தெரியல் சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ என ஆதிமந்தி பேதுற்று இனைய, அகநானூறு 135 – ஆதிமந்தியின் அறிவு பிறிதாகிப் பேதுற்றிசினே காதலம் தோழி, அகநானூறு 222 – ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇத் தாழ் இருங்கதுப்பின் காவிரி வவ்வலின் மரதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த ஆதிமந்தி, அகநானூறு 236 – கடல் கொண்டன்று எனப் புனல் ஒளித்தன்று எனக் கலுழ்ந்த கண்ணள் காதலற் கெடுத்த ஆதிமந்தி போல, 396 – மந்தி பனி வார் கண்ணள் பல புலந்து உறைய.  சோழ மன்னன் கரிகாலனின் மகள்:  இரா. இராகவையங்கார் உரை – இது பாடிய ஆதிமந்தியார் மன்னன் கரிகாலன் மகளாதல் சிலப்பதிகாரத்தான் அறியப்பட்டது (சிலப் 21:11).  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இப்பாடல் கரிகால் மன்னன் மகளாகிய ஆதிமந்தியார் என்னும் நல்லிசை புலமையாட்டியார் தங் கணவனைக் காணாது தேடியபொழுது கூறியது என்ப.  யானும் ஓர் ஆடுகள மகளே (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இங்ஙனம் ஆண்டுஞ் சென்று தேடுதலானே யானும் கூத்தாடும் களத்திற்குரிய மகளே ஆயினேன்.  Thunangai dances were performed by men and women during festivals.  They were also performed by warriors and kings in battlefields after victories. The heroine lets her family know about her love affair through this poem, when they try to arrange a marriage with a different man.

Meanings:   மள்ளர் – warriors, குழீஇய – gathered (செய்யுளிசை அளபெடை), விழவினானும் – in the festival, மகளிர் – women, தழீஇய – hugging (செய்யுளிசை அளபெடை), துணங்கையானும் – nor in the thunangai dances, யாண்டும் – those places, காணேன் – I cannot find, மாண் தக்கோனை – my esteemed noble man, யானும் ஓர் ஆடுகள மகளே – I am also a dancer, I am a dancer now that I am looking for him in the dancing arena, என் கை – my hands, கோடு – conch shells, ஈர் இலங்கு வளை – bright bangles made from cutting, நெகிழ்த்த – made them loose, made them slip, பீடுகெழு – with pride, குரிசலும் – the lord, ஓர் ஆடுகள மகனே – he is a dancer

குறுந்தொகை 32, அள்ளூர் நன்முல்லையார், குறிஞ்சித் திணை – தலைவன் தோழியிடம் சொன்னது
காலையும், பகலும், கை அறு மாலையும்,
ஊர் துஞ்சு யாமமும், விடியலும் என்றிப்
பொழுது இடை தெரியின் பொய்யே காமம்,
மா என மடலொடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே, 5
வாழ்தலும் பழியே பிரிவு தலைவரினே.

Kurunthokai 32, Allūr Nanmullaiyār, Kurinji Thinai – What the hero said to the heroine’s friend
Those who are aware of mornings,
daytimes, helpless evenings, nights when
the town sleeps and dawn hours, do not
have true love.

If I climb on a palmyra stem horse and
ride on the streets, people will see clearly
and there will be accuse and blame.

Living is painful; separation is also painful.

Notes:  The hero said this after his pleas had been rejected by the heroine’s friend.  தோழியால் குறை மறுக்கப்பட்ட தலைவன் அத்தோழியிடம் உரைத்தது.  இப் பொழுது இடை  (3) – தமிழண்ணல் உரை – இப்பொழுதுகள் இடையே தெரியின், உ. வே. சாமிநாதையர் உரை – இச் சிறுபொழுதுகள் இடையே தோற்றுமாயின், இடை வேறுபாடுமாம், இரா. இராகவையங்கார் உரை – இப்பொழுதுகளின் செவ்வி, பொழுதும் இடமும் என்பதும் பொருந்தும்.  பொய்யே காமம் (3) – உ. வே. சாமிநாதையர் உரை – காமம் உண்மைக் காமம் அன்று,  தமிழண்ணல் உரை – காமம் என்பது பொய்யே, இரா. இராகவையங்கார் உரை – காமம் பொய்யே, திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – பொய்யாகுமோ காமம், பொய்யே என்பதில் ஏகாரம் வினா.  The hero is contemplating riding on a palmyra stem/frond horse (madal horse).  The hero, when he is spurned by the heroine, climbs on a palmyra stem horse and has it drawn through town.  He wears erukkam flower garlands or bone garlands.  People on the streets, laugh when a man does this, and he suffers ridicule from the town people.  This is a drastic move by the hero, to get the attention of his beloved.  He usually does this, when all else fails.  மடல் ஏறுதல் – சங்க இலக்கியத்தில் மொத்தம் 16பாடல்களில் மடல் ஏறுதல் பற்றிய குறிப்புகள் உள்ளன – குறுந்தொகை 14, 17, 32, 173, 182, நற்றிணை 146, 152, 220, 342, 377, கலித்தொகை 58, 61, 138, 139, 140, 141.  கலித்தொகை 138, 139, 140, 141 பாடல்களில் மட்டுமே தலைவன் மடல் குதிரையின் மீது செல்கின்றான்.  கலித்தொகை 138, 141 ஆகிய பாடல்களில் மடல் ஏறியதால் தலைவியை அடைந்ததாக அறிவிக்கின்றான்.

Meanings:  காலையும் பகலும் – in the mornings and during the days, கை அறு மாலையும் – and in the helpless separated evenings, ஊர் துஞ்சு யாமமும் – and when the town is sleeping, விடியலும் – and at dawn, என்ற இப் பொழுது இடை தெரியின் –  if these times are known, if the times in between are known, if the places are known along with the times (இடை – முதனிலைத் தொழிற்பெயர்), பொய்யே காமம் – then love is a lie, (பொய்யே – ஏகாரம் தேற்றப்பொருளில் வந்தது, implies certainty), மா என – considering it as a horse, மடலொடு – with the palmyra stem/frond horse, மறுகில் தோன்றி – appearing on the streets, தெற்றென – clearly, தூற்றலும் – and to talk ill, பழி – accusation, ஏ – அசைநிலை, an expletive, வாழ்தலும் பழி – living is itself a pain, ஏ – அசைநிலை, an expletive, பிரிவு தலைவரின் – if I am separated (from her), ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 33, படுமரத்து மோசிகீரனார், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, வாயிலாக புக்க பாணன் கேட்ப
அன்னாய் இவன் ஓர் இள மாணாக்கன்,
தன் ஊர் மன்றத்து என்னன் கொல்லோ?
இரந்து ஊண் நிரம்பா மேனியொடு,
விருந்தின் ஊரும் பெருஞ்செம்மலனே.

Kurunthokai 33, Padumarathu Mōsikeeranār, Marutham Thinai – What the heroine said to her friend, as the young messenger bard listened
O friend!  This bard is a
young student.
I wonder how he performs
in his town’s public events!

With a body not filled out
by the food he accepts from
others, this very noble man
goes to new places.

Notes:  The heroine said this to her friend as the messenger bard listened.  She was in agreement for the hero to return home.  வாயிலாக புக்க பாணன் கேட்பத் தோழியிடம் தலைவி வாயில் நேர்வாள் கூறியது (வாயில் – தூது, வாயில் நேர்வாள் – தூதிற்கு உடன்படுவாளாகி).  இவன்  இங்கும் விருந்தைப் பெறுவான் என்று குறிப்பால் உணர்த்துகின்றாள்.  புலவரின் பெயர் படுமாத்து மோசிகீரனார் என்றும் சில உரை நூல்களில் உள்ளது.  இரா. இராகவையங்கார் உரை – படுமாத்தூர் என்பது சேது நாட்டுச் சிவகங்கையைச் சார்ந்துள்ள ஊர்.  அன்னாய் (1) – உ. வே. சாமிநாதையர் உரை – தோழியைத் தலைவி அன்னாய் என்றல் மரபு.  அன்னை என்னை என்றலும் உளவே தொல் நெறி முறைமை சொல்லினும் எழுத்தினும் தோன்றா மரபின என்மனார் புலவர் (தொல்காப்பியம், பொருளியல் 52).  அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).  தன் ஊர் மன்றத்து என்னன் கொல்லோ (2) – உ. வே. சாமிநாதையர் உரை – தன் ஊரில் தான் தங்கும் மன்றத்தில் இன்னும் சிறந்த வன்மையுடையவன் போலும்! என்னும் கருத்தால் என்னன் கொல்லோ என்றாள்,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இவன் தன் ஊர் மன்றத்தே எத்தகைய சிறப்புடையனோ?  இரா. இராகவையங்கார் உரை – தான் பிறந்தவூரிலுள்ள அவைக்கண் ஏறிய காலத்து எத்தகையன் ஆவனோ?  பெருஞ்செம்மலனே (4) – உ. வே. சாமிநாதையர் உரை – பெரிய தலைமையுடையவன்,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெரிய தலைமையுடையவனாக விளங்குகின்றான், இரா. இராகவையங்கார் உரை – முதுகாலத்து இவன் தலைமையுடையவன் ஆவன்.  விருந்தின் ஊரும் (4) – உ. வே. சாமிநாதையர் உரை விருந்தின்பொருட்டு செல்லும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – புதிதாகிய இவ்வூரிடத்தும், இரா. இராகவையங்கார் உரை – விருந்தோடு யானை, பரி, தேர் இவற்றில் ஊர்ந்து செல்லும்.

Meanings:  அன்னாய் – O friend, இவன் ஓர் இள மாணாக்கன் – he is a young student, தன் ஊர் மன்றத்து – in his town public place, என்னன் கொல் – I wonder how he is, I wonder how he will be (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), ஓ – அசைநிலை, an expletive, இரந்து – requesting, pleading, ஊண் நிரம்பா மேனியொடு – with a body that is not filled out with food, with a body that is not fully mature, விருந்தின் ஊரும் – he will go to feasts, he will go to festivals, in this town that is new to him (விருந்தின் – இன் சாரியை), பெரும் செம்மலன் – he is a man with great esteem, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 34, கொல்லிக் கண்ணனார், மருதத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
ஒறுப்ப ஓவலர் மறுப்பத் தேறலர்,
தமியர் உறங்கும் கௌவையின்றாய்,
இனியது கேட்டு இன்புறுக இவ்வூரே,
முனாஅது யானையங்குருகின் கானலம் பெருந்தோடு
அட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம்  5
குட்டுவன் மரந்தை அன்ன, எம்
குழை விளங்கு ஆய் நுதல் கிழவனும் அவனே.

Kurunthokai 34, Kolli Kannanār, Marutham Thinai – What her friend said to the heroine
O friend with a pretty brow and lovely hair,
who is splendid like Kuttuvan’s Maranthai
city,
where big flocks of large herons flee from
seashore groves, fearing the jubilant cries
of victorious warriors!

Your family chastised you and denied his
request to marry you, not understanding
your relationship with him.

Let those in this town now sleep without
worrying, on hearing the sweet news of your
lover coming to marry you.

Notes:  The heroine’s friend informed the heroine about the arrival of the hero who has come with a marriage proposal.  தலைவனே மகட் பேசி வரைந்து கொள்ள வந்துள்ளான் என்று தோழி தலைவிக்கு அறிவுரைத்தது.   இப்பாடலில் உள்ள பல சொற்களுக்கு அறிஞர்களின் உரைகளில் மிகுந்த வேறுபாடு உள்ளன.  ஓவலர் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவியைவிட்டு நீங்காத செவிலி, நற்றாய் முதலியோர்.  மறுப்ப (1) – உ. வே. சாமிநாதையர் உரை – தோழியர் பல காரணங்கள் கூறி இங்ஙனம் வருந்துதல் தகாதென்று மறுத்துக் கூறவும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – களவில் கூடியது தேறாத தந்தை முதலியோர் தலைவர்க்கு மணம் மறுக்கவும்.  முன்னர் மறுத்துப் பின்னர்த் தலைவனுடைய தகுதி கண்டு உடன்பட்டனர் என்க.  தமியர், இவ்வூரார் (2, 4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தமியர் என்றும் இவ்வூரார் என்றும் படர்க்கைப் பலர்பாலிற் கூறினாளேனும், ஈண்டு அது தலைவியைச் சுற்றியே பேசப்பட்டது என்க.   மரந்தை (6) – மாந்தை என்று சில உரைகளில் காணப்படுகின்றது.   குழை விளங்கு ஆய் நுதல் ஆய் நுதல் (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கூந்தல் புரண்டு விளங்காநின்ற பலரும் ஆராய்ந்து நன்றென்றற்குக் காரணமான நெற்றியுடையாள், உ. வே. சாமிநாதையர் உரை – பனிச்சை விளங்குகின்ற அழகிய நெற்றி, தமிழண்ணல் உரை – கூந்தல் அடர்ந்து விளங்கும் அழகிய நெற்றி, இரா. இராகவையங்கார் உரை – குழலை அடுத்து விளங்கும் நுணுகிய நுதலையுடையவள்.  வரலாறு:  குட்டுவன், மரந்தை.  Maranthai was a city in the Chēra country.  There are references to Maranthai city in Kurunthokai 166, Natrinai 35, 395 and Akanānūru 127 and 376.

Meanings:  ஒறுப்ப – those in the family chastise – mother, foster mother, ஓவலர் மறுப்ப – those who have not removed her sorrow deny, those who stay close to her deny, தேறலர் – those who do not understand – father and brothers, friends, தமியர் – one who is alone, those who are alone, உறங்கும் – sleeping, கௌவை இன்றாய் – without sorrow, இனியது கேட்டு – listening to the sweet news (that he’ll marry you), இன்புறுக – may it be happy, இவ்வூர் – this town, those in this town, ஏ – அசைநிலை, an expletive, முனாஅது – the land in front (இசைநிறை அளபெடை), யானையங்குருகின் – of large herons, of large storks, கானல் – seashore grove, அம் – சாரியை, பெருந்தோடு – huge flocks, அட்ட மள்ளர் – warriors who killed their enemies, ஆர்ப்பிசை – loud victory celebration noises, வெரூஉம் – they fear (இன்னிசை அளபெடை), குட்டுவன் – king Kuttuvan, Chēra king, மரந்தை – Maranthai city, அன்ன – like, எம் – our, குழை – a kind of hair style, lovely hair, விளங்கு – splendid, ஆய் நுதல் – a woman with a beautiful forehead (அன்மொழித்தொகை), கிழவனும் அவனே – அத் தலைவனே ஆவான், he alone is the one who has the right

குறுந்தொகை 35, கழார்க்கீரன் எயிற்றியார், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நாண் இல மன்ற எம் கண்ணே, நாள் நேர்பு
சினைப்பசும் பாம்பின் சூன் முதிர்ப்பு அன்ன
கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ
நுண் உறை அழி துளி தலைஇய
தண்வரல் வாடையும், பிரிந்திசினோர்க்கு அழலே.  5

Kurunthokai 35, Kazhārkeeran Eyitriyār, Marutham Thinai – What the heroine said to her friend
My eyes certainly have no shame.
They agreed with him when he left.

Now they cry for him in this cold
season when the north wind blows
with delicate sprinkles of rain and
opens the petals of the pointed buds
of thick sugarcanes that resemble
fully pregnant green snakes.

Notes:  The heroine told her friend the reason for her sorrow.  தலைவனின் பிரிவால் மெலிவுற்று தோழி அழுதளாக, “நீ அழுதது ஏன்” என வினவிய தோழியிடம், தன் ஆற்றாமைக்குக் காரணம் கூறியது.  நாள் நேர்பு (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நாள் நேர்தலாவது, போர் முதலியன குறித்துப் பிரியும் தலைவன் யான் இன்ன காலத்தே மீண்டும் வருவன்.  அது காலும் ஆற்றியிரு என்று தேற்றுங்கால் அதற்கு உடன்பட்டிருத்தல்.  அழி துளி (4) – உ. வே. சாமிநாதையர் உரை – அழிந்த துளி, பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழிந்து விழும் துளி, இரா. இராகவையங்கார் உரை – பெருந்துளி.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).

Meanings:   நாண் இல – they have no shyness, they have no shame (இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்), மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty, எம் கண் – for my eyes, ஏ – அசைநிலை, an expletive, நாள் நேர்பு – they agreed on the day he left, சினை பசும் பாம்பின் – of the green snakes, சூன் முதிர்ப்பு அன்ன – like late pregnancy, கனைத்த கரும்பின் – of thick sugarcanes, கூம்பு – pointed, பொதி – tightness, அவிழ – loosening, blossoming, நுண் உறை – delicately falling rain, அழி துளி – large raindrops, destroyed raindrops, தலைஇய – with (செய்யுளிசை அளபெடை), தண்வரல் வாடையும் – the cold northern winds have come, பிரிந்திசினோர்க்கு – for the man who left (இசின் – படர்க்கையின்கண் வந்ததோர் இடைச்சொல், an expletive of the third person), அழல் – crying, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 36, பரணர், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
துறுகல் அயலது மாணை மாக்கொடி
துஞ்சு களிறு இவரும் குன்ற நாடன்,
நெஞ்சு களன் ஆக நீயலென் யானென
நற்றோள் மணந்த ஞான்றை மற்று அவன்
தாவா வஞ்சினம் உரைத்தது,  5
நோயோ தோழி நின்வயினானே.

Kurunthokai 36, Paranar, Kurinji Thinai – What the heroine said to her friend
He gave faultless promises
to me when he embraced my
fine shoulders,
my lover from the mountains
where large mānai vines
growing near boulders,
spread on sleeping elephants.

He said, “You are in my heart.
I will not leave you.”

Are you worried my friend?
You don’t need to worry!

Notes:  The heroine said this to her friend who worried about her separation sorrow when the hero went to earn wealth for their marriage.  தலைவன் வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாள் என்று கவன்ற தோழியிடம் தலைவி கூறியது.  தமிழண்ணல் உரை – மாணைக்கொடி யானை உறக்கம் கலைந்து எழுந்ததும் சிதைவுபடும்.  தலைவனின் சூளுரையை நம்பியதால் தலைவியின் நிலைமை மாணைக்கொடியின் நிலைமையைப் போன்றது, உ. வே. சாமிநாதையர் உரை – துஞ்சுகின்ற அளவும் துறுகல் என்று தோன்றும் யானையின் மேல் படர்ந்து, துயில் நீங்கி அது சென்ற இடத்துப் பற்றுக்கோடின்றி இருத்தலைப் போல தலைவன் தோள் மணந்து உடன் இருந்த அளவும் கெடாதாக இருந்த வஞ்சினத்தை மெய்யாகக் கருதி மகிழ்ந்த யான் அவன் பிரிய வருந்துவேனாயின்.  நெஞ்சு களன் ஆக (3) – உ. வே. சாமிநாதையர் உரை – நின் நெஞ்சு இடமாக இருந்து, இரா. இராகவையங்கார் உரை – தன் நெஞ்சு சான்றாக, தன் நெஞ்சே அறியும் அவைக்களனாக.  நோயோ (6) – உ. வே. சாமிநாதையர் உரை – ஓகாரம் எதிர்மறைப் பொருளது, நினக்கு நோயாதற்குக் காரணமில்லை என்றபடி.  பாறையும் யானையும்:  அகநானூறு 57 –  இற்றிப் புன்தலை நெடுவீழ் இரும்பிணர்த் துறுகல் தீண்டி வளி பொரப் பெருங்கை யானை நிவப்பின் தூங்கும், அகநானூறு 178 – பிடி மடிந்தன்ன கல், அகநானூறு 269 –  பிடி மடிந்தன்ன குறுந்தொகை 13 – மாசு அறக் கழீஇய யானை போலப் பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல், குறுந்தொகை 36 – துறுகல் அயலது மாணை மாக்கொடி துஞ்சு களிறு இவரும், குறுந்தொகை 111 – கூழை இரும் பிடிக் கை கரந்தன்ன கேழ் இருந்துறுகல், குறுந்தொகை 279 – மழை கழூஉ மறந்த மா இரும் துறுகல் துகள் சூழ் யானையிற் பொலியத் தோன்றும், கலித்தொகை 108 – பிடி துஞ்சு அன்ன அறை, ஐங்குறுநூறு 239 – புகர் முக வேழம் இரும்பிணர்த் துறுகல் பிடி செத்துத் தழூஉம்.

Meanings:  துறுகல் அயலது – near the big boulders, near the big rocks, மாணை மாக்கொடி – large mānai vines, a creeper that grows in mountain areas, துஞ்சு களிறு இவரும் – spreads on the sleeping elephant, குன்ற நாடன் – the man from mountains, நெஞ்சு களன் ஆக – space in the heart (களன் – களம் என்பதன் போலி), நீயலென் – I will not leave you, யான் – me, என – thus, நல் தோள் மணந்த ஞான்றை – the day he hugged my good shoulders/arms (ஞான்றை – ஐ சாரியை), மற்று – அசைநிலை, an expletive,  அவன் – he, தாவா வஞ்சினம் உரைத்தது – the truthful promise uttered (தாவா – கெடாத) , நோயோ – are you afraid, தோழி – my friend, நின்வயினான் – on your side, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 37, சேர மன்னன் பாலைபாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நசை பெரிது உடையர், நல்கலும் நல்குவர்,
பிடி பசி களைஇய பெருங்கை வேழம்
மென் சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழி, அவர் சென்ற ஆறே.

Kurunthokai 37, Chēra king Pālai Padiya Perunkadunkō, Pālai Thinai – What the heroine’s friend said to her
My friend!
His love for you is great;
he will be good to you.

In the path he took,
a big-trunked male elephant
strips the barks of delicate
branches of yā trees
to feed his hungry mate.

Notes:  The heroine’s friend said this to the heroine who was sad since the hero was away.  தலைவனது பிரிவால் வருந்தும் தலைவியிடம் தோழி கூறியது.  குறுந்தொகை 37 – பிடி பசி களைஇய பெருங்கை வேழம் மென் சினை யாஅம் பொளிக்கும், குறுந்தொகை 232 – உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய யாஅ வரி நிழல், குறுந்தொகை 255 – யாஅத்துப் பொரி அரை முழு முதல் உருவக் குத்தி மறங்கெழு தடக் கையின் வாங்கி உயங்கு நடைச் சிறுகண் பெருநிரை உறு பசி தீர்க்கும் தட மருப்பு யானை, அகநானூறு 335 – யானை தன் கொல் மருப்பு ஒடியக் குத்திச் சினஞ்சிறந்து இன்னா வேனில் இன் துணை ஆர முளி சினை யாஅத்து, மலைபடுகடாம் 429 – உம்பல் அகைத்த ஒண் முறி யாவும்.  இறைச்சி:  தமிழண்ணல் உரை – ஆண் யானை பிடியின் பசியை நீக்கும் காட்சி தலைவனது விருப்பத்தைத் தூண்டி, அவனை விரைவில் திரும்ப வைக்கும் எனும் இது இறைச்சி எனப்படும்.

Meanings:  நசை பெரிது உடையர் – he has great love for you, நல்கலும் நல்குவர் – he will shower his graces on you, பிடி – female elephant, பசி களைஇய – to remove hunger (களைஇய – செய்யுளிசை அளபெடை), பெருங்கை வேழம் – a male elephant with big trunk, மென் சினை – delicate branches, யாஅம் – of yā trees, ஆச்சா மரம், Hardwickia binate (இசைநிறை அளபெடை), பொளிக்கும் – strips the barks, அன்பின – it has love, தோழி – O friend, அவர் சென்ற ஆறு – the way he went, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 38, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கான மஞ்ஞை அறை ஈன் முட்டை
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை, என்றும்
நன்று மன் வாழி தோழி, உண்கண்
நீரொடு ஒராங்குத் தணப்ப  5
உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே.

Kurunthokai 38, Kapilar, Kurinji Thinai What the heroine said to her friend
May you live long, I friend!
Love for the man from the
mountains,
……….where a young monkey
……….plays in the sun rolling
……….peacock eggs laid on rocks,
would be very good for someone
strong, who does not think about
separation, even as constant tears
pour from her kohl-lined eyes.

Notes:  The heroine said this to her friend, when the hero delayed marrying her.  வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தனது ஆற்றாமை தோன்றத் தோழியிடம் கூறியது.  தமிழண்ணல் உரை – மயில் போட்டுவிட்டுப் போன முட்டையை விளையாடும் குரங்குக் குட்டி உருட்டுகின்றது, தலைவன் பிரிவால் வருந்தும் தலைவியை ஊரார் பேசும் அலர் மேலும் துன்புறுத்துவதை இது குறிக்கின்றது,  இரா. இராகவையங்கார் உரை – குருளை விளையாட்டில் முட்டையுள் குஞ்சுக்கு இடர் செய்வது போலத் தன் வினோதத்து நீளுதலான் வரையாது நம்மை இடர் செய்பவன் என்பதாம்.  உள்ளுறை – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – மனையகத்து வைக்கப்படாமையின் மறைவிடத்திராத மயிலின் முட்டையை ஈனும் பொழுது உளதாம் துயரத்தை அறியாத முசுக்குருளை ஈன்ற மயிலின் வருத்தத்தையும் எடுத்த முட்டையின் மென்மையையும் எண்ணாது உருட்டுகிறாற்போல காதலர் கருத்தில் வைக்கப்படாத எனது காமத்தை நீ உற்று உணராமையான் என் வருத்தத்தையையும் காமத்தையும் மென்மையையும் கருதாது நீ இவ்வாறு உரைக்கின்றனை என்பதாம்.  நன்று மன் (4) – உ. வே. சாமிநாதையர் உரை – மிக நல்லது, நன்று பெரிதுமாம், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – நன்று பெரியது, மன் கழிவின்கண் வந்தது.  மன் – கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).  வல்லுவோர்க்கே (6) – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – உகரம் சாரியை, ஈற்று மிசை ஆ ஓ ஆயிற்று.  குருளை – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (மரபியல் 1, தொல்காப்பியம்).

Meanings:  கான மஞ்ஞை – forest peacock, அறை ஈன் முட்டை – eggs that were laid on rocks, வெயில் ஆடு – playing in the sun (வெயில் – வெய்யில் என்பதன் விகாரம்), முசுவின் குருளை – child of a black monkey, langur monkey, Semnopithecus priamus, உருட்டும் – rolls them, குன்ற நாடன் – the man from the mountains, கேண்மை – friendship, என்றும் – always, நன்று மன் – it would be very good, that would be great, மிகவும் நல்லது (மன் மிகுதியை உணர்த்தியது, மன் ஒழியிசைப் பொருளில் வந்ததாகக் கொண்டால் ‘யான் அதைப் பெற்றிலேன்’ என வரும்), வாழி – may you live long, முன்னிலை அசை, an expletive of the second person, தோழி – O friend, உண்கண் – eyes lined with kohl, கண் மை, நீரொடு – with tears, ஒராங்கு – in the same manner (ஒருவிதமாக, ஒருபடியாக), தணப்ப – when separated, உள்ளாது – without thinking, ஆற்றல் – the ability to bear it, வல்லுவோர்க்கே – only for those who are strong, ஏகாரம் – பிரிநிலை, exclusion

குறுந்தொகை 39, ஔவையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வெந்திறல் கடு வளி பொங்கர் போந்தென
நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலையுடை அருஞ்சுரம் என்ப, நம்
முலை இடை முனிநர் சென்ற ஆறே.

Kurunthokai 39, Avvaiyār, Pālai Thinai – What the heroine said to her friend, when the hero left
They say that the path he took,
the man who hated lying on my
breasts,
is through the wasteland with
mountains,
where hot, fierce winds blow
against vākai tree branches,
rattling their dried seed pods.

Notes:  The heroine said this to her friend in response to her request for the heroine to bear her sorrow when the hero was away.  பிரிவிடை ஆற்றல் வேண்டும் என்ற தோழியிடம் தனது ஆற்றாமை மிகுதி தோன்றத் தலைவி கூறியது.   பொ. வே. சோமசுந்தரனார் உரை – மலையுடை அருஞ்சுரம் என்பதால் இது குறிஞ்சி திரிந்த பாலை நிலம் என்க.  முலை இடை முனிநர் (4) – தமிழண்ணல் உரை – இது ஒரு மரபுத் தொடர்.  இன்பத்தை வேண்டாது வெறுத்து, தன்னை நினையாது பிரிந்தமையை அவ்வாறு கூறுகின்றாள்.

Meanings:  வெந்திறல் – hot and powerful, கடு வளி – fierce winds, பொங்கர் – tree branches, போந்தென – since it blows, நெற்று விளை உழிஞ்சில் – vākai trees with mature dried seed pods, வாகை, Sirissa Tree, Mimosa Flexuosa, வற்றல் ஆர்க்கும் – dry pods rattle, make noises, மலையுடை – containing hills, அருஞ்சுரம் – difficult wasteland, என்ப – they say, நம் முலையிடை – on my breasts, முனிநர் – the man who hated, சென்ற ஆறு – the path that he took, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 40, செம்புலப் பெயனீரார், குறிஞ்சித் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
யாயும் ஞாயும் யார் ஆகியரோ,
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்,
யானும் நீயும் எவ்வழி அறிதும்,
செம்புலப் பெயல் நீர் போல,
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.  5

Kurunthokai 40, Sempulapēyaneerār, Kurinji Thinai – What the hero said to the heroine, about their love
My mother and your mother,
what are they to each other?
My father and your father,
how are they related?
You and I,
how did we know each other?

Like rainwater that falls and
merges with the red earth, our
loving hearts have become one.

Notes:  The hero said this to the heroine, on seeing her worry that he would leave after their union.  இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர், பிரிவரெனக் கருதி அஞ்சிய தலைவியின் வேறுபாடு கண்டு தலைவன் கூறியது.  இரா. இராகவையங்கார் – உரைபெயல் மேலே வானத்தும் செம்புலம் கீழே தரையினும் வேறு வேறு இடங்களில் வேறு வேறாகவுளவேனும் இவை தாமாக இயைந்து ஒரே செந்நீர் ஆயினாற்போல வேறு வேறிடத்து ஒருவர்க்கொருவர் உறவில்லாது வேறுபட்டிருந்தும் தம் நெஞ்சங்கள் தாமாகக் கலந்து அன்பால் ஒன்றாயின என்பதாம்.  உ. வே. சாமிநாதையர் உரை – யாய், ஞாய், தாய் என்னும் மூன்றும் முறையே என் தாய், நின் தாய், அவர் தாயென மூவிடத்தோடும் ஒட்டி வருவன.  இம்மூன்றிடத்தும் ஒட்டப்பட்ட பெயர்கள் ஆறாம் வேற்றுமை முறையைக் குறித்து மேற் சொல்லியவாற்றான் தந்தை, நுந்தை, எந்தை எனவும், யாய், ஞாய், தாய் எனவும், தம்முன், நும்முன், எம்முன் எனவும், தம்பி, நும்பி, எம்பி எனவும் முதல்வனையும் ஈன்றாளையும் முன்பிறந்தானையும் பின்பிறந்தானையும் உணர்த்தும் பன்மைச் சொற்கள் (தொல்காப்பியம், எச்சவியல் 14) என்று தெய்வச்சிலையார் எழுதிய அரிய உரைப்பகுதியால் இது புலப்படும்.  அறிதும் (3) – உ. வே. சாமிநாதையர் உரை – எதிர்காலம் இறந்தகாலப் பொருளில் வந்தது,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – எவ்வாறு அறிந்துள்ளோம்.

Meanings:  யாயும் – my mother, ஞாயும் – and your mother, யார் ஆகியர் – who are they to each other, ஓ – அசை, எந்தையும் – my father, நுந்தையும் – and your father, எம்முறை – in what way, கேளிர் – relatives, யானும் நீயும் – myself and you, எவ்வழி – in what manner, அறிதும் – how did we know each other, செம்புலப் பெயல் நீர் போல – like rain falling on red earth, அன்புடை நெஞ்சம் – loving hearts, தாம் கலந்தன – they have merged, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 41, அணிலாடு முன்றிலார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
காதலர் உழையர் ஆகப் பெரிது உவந்து
சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற,
அத்த நண்ணிய அம் குடிச் சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்
புலம்பில் போலப் புல்லென்று  5
அலப்பென் தோழி, அவர் அகன்ற ஞான்றே.

Kurunthokai 41, Anilādu Mundrilār, Pālai Thinai – What the heroine said to her friend
When my lover is by my side,
I’m very happy like a festive town.

When he leaves,
I grieve like a lonely, lusterless,
abandoned house in the wasteland,
where squirrels play in the front yard.

Notes:  The heroine said to this to her friend who worried about her on seeing her distressed body.  தலைவன் பிரிந்தகாலத்தில் தன்னுடைய பொலிவு இழந்த மேனியைக் கண்டு கவலையுற்ற தோழியிடம், “தலைவன் என்னுடன் இருப்பின் நான் மகிழ்வுற்று விளங்குவேன்.  பிரிவின் பொலிவு இழந்தவள் ஆவேன்” என்று தலைவி கூறியது.  நற்றிணை – 153 – வாழ்வோர் போகிய பேர் ஊர்ப் பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே, கலித்தொகை 23 – நல்குநர் புரிந்து நலன் உணப்பட்டோர் அல்குநர் போகிய ஊர் ஓரன்னர்.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  காதலர் – lover, உழையராக – by my side, பெரிது உவந்து – I become very happy, சாறு கொள் ஊரின் – like a town with festivities (ஐந்தாம் வேற்றுமை உருபு, இன் உருபு ஒப்புப் பொருளது), புகல்வேன் – I will be very happy, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty, அத்த நண்ணிய –  near the wasteland, in the wasteland, அம் – beautiful, குடிச் சீறூர் – small town with people, மக்கள் போகிய – after people have abandoned, அணில் ஆடு – squirrels playing, முன்றில் – front yard (முன்றில் – இல்முன்), புலம்பு இல் போல – like a lonely house, புல்லென்று – without luster, அலப்பென் – I will feel sad, I will grieve, தோழி – O friend, அவர் அகன்ற ஞான்று – when he goes away, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 42, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
காமம் ஒழிவது ஆயினும் யாமத்துக்
கருவி மா மழை வீழ்ந்தென அருவி
விடரகத்து இயம்பும் நாட! எம்
தொடர்பும் தேயுமோ நின்வயினானே?

Kurunthokai 42, Kapilar, Kurinji Thinai – What her friend said to the hero
O lord of the mountain country,
where night’s heavy downpours
roar down the crevices
of mountain slopes, as waterfalls!

Even you do not unite with her,
will her love for you be ruined?
No!  It will not!

Notes:  The heroine’s friend refused the hero a night tryst.  She let him know that his friendship with the heroine will not go away despite them not being together.  இரவில் வந்து தலைவியுடன் பழக வேண்டும் என்று விரும்பிய தலைவனை, ‘நெருங்கிப் பழகாவிட்டாலும் நும் நட்பு அழியாது’ என்று குறிப்பால் தோழி மறுத்தது.  காமம் (1) – உ. வே. சாமிநாதையர் உரை – இங்கே மெய்யுறு புணர்ச்சி,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஈண்டு மெய்யுறு புணர்ச்சியை.  கருவி மா மழை (2) – மின்னல் இடி தொகுதிகளையுடைய பெரிய மழை, இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய கரிய முகில்கள்.  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58).   உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – யாவரும் உறங்கும் இடையிரவிலே மழை பெய்ததாயினும் அதனாற் பெருகிய அருவி, மழை உண்டென்று அறியாதாரையும் அறியக் காட்டி வழிநாள் முழைஞ்சுகளிலே முழங்கினாற் போன்று, நீ இரவின்கண் யாருமறியாது இவளைக் கூடி பிரிவாய் ஆகினும் அதனால் உண்டாக்கிய வேறுபாடு வழிநாள் பலரும் அறியத் தூற்றும் என்னும் உள்ளுறை கருதி ‘யாமத்துக் கருவி மாமழை வீழ்ந்தென அருவி விடரகத்து இயம்பும் நாட’ என்றாள்.  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58).

Meanings:  காமம் – love, ஒழிவது ஆயினும் – even if it got ruined, even if it were not fulfilled, யாமத்து – at midnight, கருவி மாமழை வீழ்ந்தென – since dark clouds with thunder and lightning came down as rain, அருவி – waterfalls, விடர் அகத்து இயம்பும் – roar in the mountain clefts, நாட – O man from such country, எம் – our (her), தொடர்பும் தேயுமோ – will her love for you be ruined (தேயுமோ – ஓகாரம் எதிர்மறை), நின்வயினான் – with you, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 43, ஔவையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே,
ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே,
ஆயிடை இரு பேர் ஆண்மை செய்த பூசல்,
நல் அராக் கதுவியாங்கு, என்
அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே.  5

Kurunthokai 43, Avvaiyār, Pālai Thinai – What the heroine said to her friend
I was careless thinking he’d
never leave,
and he was careless thinking
I would not consent.

Both our strong wills created
friction, and my sad heart
suffers as though it has been
bit by a cobra.

Notes:  The heroine said this to her friend when the hero was away.  தலைவன் பிரிந்த காலத்தில் வருந்திய தலைவி, தோழியிடம் உரைத்தது.

Meanings:  செல்வார் அல்லர் என்று – that he would never leave, யான் இகழ்ந்தனன் – I made a mistake, I was not careful, ஏ – அசைநிலை, an expletive, ஒல்வாள் அல்லள் என்று – that she would not agree, அவர் இகழ்ந்தனர் – he made a mistake, he was not careful, ஏ – அசைநிலை, an expletive, ஆயிடை – between, இரு பேர் ஆண்மை – two people’s strong will (ஆண்மை – ஆளுந்தன்மை), செய்த பூசல் – created friction, நல் அரா – நல்ல பாம்பு, cobra, கதுவியாங்கு – like it has been bit, என் அல்லல் நெஞ்சம் – my sad heart, அலமலக்குறும் – it suffers, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 44, வெள்ளிவீதியார், பாலைத் திணை – செவிலித்தாய் தனக்குள் சொன்னது
காலே பரி தப்பினவே, கண்ணே
நோக்கி நோக்கி வாள் இழந்தனவே,
அகல் இரு விசும்பின் மீனினும்
பலரே மன்ற, இவ் உலகத்துப் பிறரே.

Kurunthokai 44, Velliveethiyār, Pālai Thinai – What the foster mother said
My weary feet have become tired.
My eyes, looking and looking,
have lost their luster.

Surely, they are more in numbers
than the stars in the wide dark sky,
people in this world who are not them.

Notes:  The foster mother who went looking for the eloped couple in the wasteland, said this.  தலைவி தலைவனுடன் உடன்போக்கில் சென்ற பின்னர், அவர்களை பாலை நிலத்தில் தேடிச் சென்ற செவிலித்தாய் அவர்களைக் காணாமல் வருந்திக் கூறியது.  இரா. இராகவையங்கார் உரை – அகன்ற பெருவிசும்பின் மீனினும் பலர் இவ்வுலகத்துப் பிறர் ஆடவர் உள்ளனர் என்றது அம்மீன் நடுவண் விளங்கும் உவா மதியனையாரைக் காணேன் என்று குறித்ததாம்.  இதை ‘வெள்ளிவீதியைப் போல நன்றும் செலவு அயர்ந்திசினால் யானே’ (அகநானூறு 147) என்றபடி இவர் செலவயர்ந்துழிக் கூறிய பாட்டாகும்.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  மீன் – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – மின்னுவது என்னுங் காரணம்பற்றி.  வாள் – வாள் ஒளி ஆகும் (தொல்காப்பியம் உரியியல் 71).  செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல். களவியல் 34).

Meanings:  கால் – my feet, ஏ – அசைநிலை, an expletive, பரி தப்பின – they became tired after walking and walking, ஏ – அசைநிலை, an expletive, கண் – my eyes, ஏ – அசைநிலை, an expletive, நோக்கி நோக்கி வாள் இழந்தன – they have lost brightness looking and looking, ஏ – அசைநிலை, an expletive, அகல் இரு – wide and dark, விசும்பின் மீனினும் – more than the stars in the sky, பலரே – more people, ஏகாரம் தேற்றப் பொருளில் வந்தது, implies certainty, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty, இவ் உலகத்து பிறர் – other people in the world, people other than the hero and heroine, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 45, ஆலங்குடி வங்கனார், மருதத் திணை – தோழி தலைவனின் தூதுவர்களிடம் சொன்னது
காலை எழுந்து கடுந்தேர் பண்ணி
வால் இழை மகளிர்த் தழீஇய சென்ற
மல்லல் ஊரன் எல்லினன் பெரிதென,
மறுவரும் சிறுவன் தாயே,
தெறுவது அம்ம, இத் திணைப் பிறத்தல்லே.  5

Kurunthokai 45, Ālankudi Vankanār, Marutham Thinai – What the heroine’s friend said to the hero’s messengers
Her husband, from the flourishing
town, gets up early, decorates his
fast chariot, and goes to embrace
women wearing pure jewels.

She thinks he is very bright and
accepts it, the little boy’s mother.
despite her distress.
This tolerance, which comes from
her noble heritage, has caused her
pain.

Notes:  The heroine’s friend accepted the hero’s entry into the marital house.  She indicated that the heroine had accepted him.  தோழி வாயில் நேர்ந்தது.  தலைவன் விடுத்த தூதுவர் தலைவியின் உடன்பாட்டை வேண்டியபொழுது, தலைவி உடன்பட்டாள் என அறிந்த தோழி, இவ்வாறுக் கூறி, குறிப்பினால், தலைவியின் உடன்பாட்டைத் தெரிவித்தது.  மறுவரும் (4) – உ. வே. சாமிநாதையர் உரை – அவனை ஏற்றுக் கொள்வாளாயினும் மனம் சுழலுவாள், பொ. வே. சோமசுந்தரனார் உரை –  மனம் சுழலுவாள் ஆயினும் அவனை ஏற்றுக் கொள்வாளாயினள்.  தெறுவது அம்ம (5) – உ. வே. சாமிநாதையர் உரை – ‘தெறுவது அம்ம’ என்று தோழி கூறியமையால் அவனை ஏற்றுக் கோடல் தகாதென்பது அவள் கருத்தாதல் விளங்கும்.  பரிபாடல் 20 – சேக்கை இனியார் பால் செல்வான் மனையாளால் காக்கை கடிந்து ஒழுகல் கூடுமோ? கூடா; தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார் இகழினும்  கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார், கலித்தொகை 11 – மாய மகிழ்நன் பரத்தைமை நோவென் தோழி, கடன் நமக்கு எனவே.  மல்லல் – மல்லல் வளனே (தொல்காப்பியம், உரியியல் 7).

Meanings:  காலை எழுந்து – gets up in the morning, கடுந்தேர் பண்ணி – decorates his rapidly riding chariot and goes, வால் இழை – pure jewels, abundant jewels, மகளிர் – women, தழீஇய – to embrace (செய்யுளிசை அளபெடை), சென்ற – he goes, மல்லல் ஊரன் – the man from the fertile town, எல்லினன் – he’s bright, பெரிதென – that he is mature, மறுவரும் – she is distressed, சிறுவன் தாயே – the little boy’s mother, தெறுவது – it is sorrowful, it is distressing, அம்ம – அசைநிலை, an expletive, இத் திணைப் பிறத்தல் – having born in a good family (பிறத்தல்லே – லகர ஒற்று செய்யுளோசை நோக்கி விரிக்கும்வழி விரிந்தது), because of her good heritage, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 46, மாமலாடனார், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன
கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ
முன்றில் உணங்கல் மாந்தி, மன்றத்து
எருவின் நுண் தாது குடைவன ஆடி,
இல் இறைப் பள்ளித் தம் பிள்ளையொடு வதியும் 5
புன்கண் மாலையும் புலம்பும்
இன்று கொல் தோழி, அவர் சென்ற நாட்டே?

Kurunthokai 46, Māmalādanār, Marutham Thinai – What the heroine said to her friend
In the land where he has gone,
are there not sad evenings and
painful loneliness,
when house-dwelling sparrows,
with pointed wings that look like
wilted white waterlily flowers,
that eat dried food in the front
yards of houses and peck and
play in cow dung dust in the
town’s public square, stay with
their young chicks under the eaves?

Notes:  The heroine said this since her friend worried about her distress when the hero was away.  She expressed her confidence in the hero’s timely return.  தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி ஆற்றமாட்டாள் என்று வருத்திய தோழியிடம் ‘என்னுடைய பிரிவினால் தலைவர் துன்புறுவார்’.  ஆதலின் விரைந்து வருவார் எனத் தலைவி கூறியது.  தாது எரு – அகநானூறு 165 – தாது எரு மறுகின் மூதூர், குறுந்தொகை 46 – மன்றத்து எருவின் நுண் தாது, நற்றிணை – 271 பைந்தாது எருவின் வைகு, கலித்தொகை 103 – தாது எரு மன்றத்து, கலித்தொகை 108 – தாது உக்கன்ன தாது எரு மன்றத்து, புறநானூறு 33 – தாது எரு மறுகின், புறநானூறு 215 – தாது எரு மறுகின், புறநானூறு 311 – தாது எரு மறுகின், பதிற்றுப்பத்து 13-17 – தாது எரு மறுத்த கலி அழி மன்றத்து மலைபடுகடாம் 531 – தாது எருத் ததைந்த முற்றம்.  இறைச்சி – தமிழண்ணல் உரை – ஊர்க்குருவி பற்றிய காட்சி இறைச்சி எனப்படும்.  கருப்பொருளின் ‘வாழ்வை’ உரிப்பொருள் போலச் சுட்டும் இது.  வருந்திய காலத்தில் வற்புறுத்தப் பயன்படுகிறது.  எருவின் நுண் தாது (4) – உ. வே. சாமிநாதையர் உரை – நுண்ணிய உலர்ந்த சாணத்தின் பொடி, தமிழண்ணல் உரை – நுண்ணிய சாணப்பொடி, இரா. இராகவையங்கார் உரை – நுண்ணிய பூழி (புழுதி).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன – like the wilted white waterlily flowers, கூம்பிய சிறகர் – with pointed wings (சிறகர் – சிறகு என்பதன் போலி), மனை உறை குரீஇ – house-dwelling sparrow, passer domesticus – the word has been used for birds in general in other poems (குரீஇ – இயற்கை அளபெடை), முன்றில் – front yard (முன்றில் – இல்முன்), உணங்கல் – dried food (உணங்கல் – உலர்ந்தது), மாந்தி – eat, மன்றத்து – in the town’s common place, எருவின் நுண் தாது – the fine cow dung dust, fine dust, குடைவன ஆடி – peck and play in it, இல் இறை – house eaves, பள்ளி – the space underneath, தம் பிள்ளையொடு வதியும் – they live with their young ones, புன்கண் மாலையும் – in the painful evenings, புலம்பும் – lonely, இன்று கொல் – are there not (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), தோழி – O friend, அவர் சென்ற நாட்டு – in the land where he went, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 47, நெடுவெண்ணிலவினார், குறிஞ்சித் திணை – தோழி நிலாவிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
கருங்கால் வேங்கை வீ உகு துறுகல்
இரும்புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை,
எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்லை, நெடு வெண்ணிலவே.

Kurunthokai 47, Neduvennilavinār, Kurinji Thinai – What her friend said to the moon, as the hero listened nearby
O bright moon that gives light
for long!  You are of no help
to secret love when he comes
at night through the forest paths
to meet her,
when vēngai trees with sturdy
trunks drop their yellow flowers
on boulders below, making
them appear like big tiger cubs.

Notes:  The heroine’s friend said this to the moon as a way of requesting the hero to come and marry the heroine.  She refused his request for a night tryst.  தலைவன் இரவில் வந்து பழகும் காலத்தில் அவனை விரைந்து மணம் செய்யும்படி தூண்ட எண்ணிய தோழி, நிலாவிற்கு உரைப்பாளாய் ‘நீ இவ்வாறு இரவில் வருவது களவிற்கு நல்லதில்லை’ எனக் கூறி இரவுக்குறி மறுத்தது.  முன்னிலைப் புறமொழியாக கூறியது. நிலாவிற்கு உரைப்பாளாய்த் தோழி உரைத்தது (முன்னிலைப் புறமொழி – கூறப்படும் செய்தியைக் கேட்டு அறிதற்குரியவர் முன்னே இருப்பவும் அவரை விளித்துக் கூறாமல் வேறு ஒருவரையேனும் பிறிதொரு பொருளையேனும் விளித்துக் கூறுவது – தொல்காப்பியம், கற்பியல் 26, நச்சினார்க்கினியர் உரை).   வேங்கை மலரும் புலியும் – அகநானூறு 12 – வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம் புலி செத்து வெரீஇய புகர் முக வேழம், அகநானூறு 141 – புலிக்கேழ் உற்ற பூ இடைப் பெருஞ்சினை நரந்த நறும்பூ நாள் மலர் உதிரக் கலை பாய்ந்து உகளும் கல் சேர் வேங்கை, அகநானூறு 227 – புலிக் கேழ் வேங்கை, அகநானூறு 228 – வேங்கை ஒள் வீப் புலிப் பொறி கடுப்பத் தோன்றலின், நற்றிணை 389 – வேங்கையும் புலி ஈன்றன, குறுந்தொகை 47 – வேங்கை வீ உகு துறுகல் இரும்புலிக் குருளையின் தோன்றும், ஐங்குறுநூறு 396 – புலிப் பொறி வேங்கைப் பொன் இணர்.   கருங்கால் வேங்கை (1) – உ. வே. சாமிநாதையர் உரை – கரிய அடியையுடைய வேங்கை மரம், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – கரிய காலையுடைய வேங்கை மரம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – வலிய தாளையுடைய வேங்கை, இங்கு கருமை வன்மைக் குறித்து நின்றது.   இரும்புலிக் குருளையின் (2) –  உ. வே. சா. உரை – பெரிய புலிக்குட்டியைப் போன்று, இரா. இராகவையங்கார் உரை – பெரிய புலியின் குட்டியினைப் போன்று.  இறைச்சி – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – வேங்கை மலர் வீழ்ந்த கற்கள் புலியின் குருளைப் போல அச்சந்தரும் என்றதனானே, வரைவு உடன்படுவாராகிய எமது தமர் வரைவுடன் படார் போல உனக்கு அச்சம் செய்கின்றனர் என்பதாம்.  குருளை – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (மரபியல் 1, தொல்காப்பியம்).

Meanings:  கருங்கால் – dark colored trunks, strong trunks, big trunks, வேங்கை – Indian Kino Tree, Pterocarpus marsupium, வீ – flowers, உகு – dropped, துறுகல் – boulders, rocks, இரும்புலி – big tigers, dark tigers, குருளையின் தோன்றும் – they appear like tiger cubs (குருளையின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), காட்டிடை – in the forest, எல்லி – night, வருநர் – the man who comes (the hero), களவிற்கு – for secret love, நல்லை அல்லை – you are not good, நெடு வெண்ணிலவே – O silver/white moon that burns bright for a long time

குறுந்தொகை 48, பூங்கணுத்திரையார், பாலைத் திணை – தோழி தனக்குள் சொன்னது
‘தாதின் செய்த தண் பனிப் பாவை
காலை வருந்தும், கையாறு ஓம்பு’ என
ஓரை ஆயம் கூறக் கேட்டும்,
இன்ன பண்பினினை பெரிது உழக்கும்
நன்னுதல் பசலை நீங்கவன்ன,  5
நசையாகு பண்பின் ஒரு சொல்
இசையாது கொல்லோ காதலர் தமக்கே?

Kurunthokai 48, Poonganuthiraiyār, Pālai Thinai – What the heroine’s friend said to herself
Even after hearing her friends
playing ōrai games with her
tell her, “ The cool doll made
with pollen will fade the next
morning.  Protect it from
getting ruined”, she is greatly
distressed.
Is it not possible for her lover to
utter the one word that she desires,
which will remove the pallor of this
young woman with a fine forehead?

Notes:  The heroine’s friend said this on seeing pallor signs on the body of the heroine who was sad due to separation from the hero.  தலைவன் பகற்பொழுதில் வந்து தலைவியுடன் பழகும் காலத்தில் அவனைக் காணாது நெடுநேரம் கழிவதால் துயருற்ற தலைவியின் மேனியில் பசலை முதலிய வேறுபாடுகள் உண்டாமை கண்டு வருந்தித் தோழி கூறியது.  ஒப்புமை:  குறுந்தொகை 48 – தாதின் செய்த தண் பனிப் பாவை, அகநானூறு 392 – தாது செய் பாவை அன்ன.  – காதலர் தமக்கு – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – தம் சாரியை.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – காலை வருந்தும் கையாறு என்றது, காலை வெயிலிலே கிடந்து முறுகும் என்றவாறு.  அது காலை வெயிலில் கிடந்து முறுகுதலைப் பிள்ளையுறும் துன்பமாகக் கருதிக் கையாறு என்றாள்.  கையாறு ஓம்பலாவது அப்பாவையை எடுத்து அது அழுமாறு போலக் கொண்டு அவ்வழுகை தணியப் பாராட்டுதல்.

Meanings:  தாதின் செய்த – made with flower pollen, தண் பனிப் பாவை – very cool doll, காலை வருந்தும் – it will fade in the morning (in the sun), கையாறு ஓம்பு என – get rid of the helplessness, ஓரை ஆயம் – friends who play ōrai games, கூறக் கேட்டும் – despite hearing what they said (கேட்டும் – உம்மை உயர்வு சிறப்பு), இன்ன பண்பின் – with such traits, இனை பெரிது உழக்கும் – she attains great sorrow, நன்னுதல் – the woman with a fine forehead (நன்னுதல் – அன்மொழித்தொகை), பசலை – paleness, pallor, நீங்க – to be removed, அன்ன – like that, நசை ஆகு பண்பின் – with the desired  trait, ஒரு சொல் – one word, a word with no equal, இசையாது கொல் – is it not possible (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), ஓ – அசைநிலை, an expletive, காதலர் தமக்கு – for her lover, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 49, அம்மூவனார், நெய்தற் திணை – தலைவி தலைவனிடம் சொன்னது
அணில் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து
மணிக் கேழ் அன்ன மா நீர்ச் சேர்ப்ப!
இம்மை மாறி மறுமை ஆயினும்,
நீ ஆகியர் என் கணவனை,
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே.  5

Kurunthokai 49, Ammoovanār, Neythal Thinai – What the heroine said to her husband
O lord of the shores,
where the dark ocean
is sapphire colored,
and pollen-filled
mundakam bushes
have thorns
like teeth of squirrels!

May you be my husband
and me be your wife, in our
next life, as we are in this one.

May I be the one
most agreeable to your heart.

Notes: நெய்தலுள் மருதம்.  The heroine said this to the hero on his return from his concubine’s house.  தலைவன் பரத்தையிற் பிரிந்து மீண்டுவந்த காலத்தில் முன்பு இருந்த ஆற்றாமை நீங்கி, அவனோடு கூடி மகிழ்ந்த தலைவி கூறியது.  அணில் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து மணிக் கேழ் அன்ன மா நீர்ச் சேர்ப்ப (1-2) – உ. வே. சாமிநாதையர் உரை – அணிலின் பல்லை ஒத்த முள்ளையுடைய தாது முதிர்ந்த முள்ளிச் செடியையும் நீலமணியினது நிறத்தை ஒத்த கரிய நீரையையுமுடைய கடற்கரையை உடைய தலைவ, இரா. இராகவையங்கார் உரை – அணிலின் பல்லை ஒத்த முள்ளையுடைய முண்டக மலர்களில் மணிநிறமுள்ள காரன்னங்கள் (கறுப்பு அன்னங்கள்) மாட்சிமைப்படுகின்ற நீர்க்கடற் சேர்ப்ப.

Meanings:  அணில் பல் அன்ன – thorns that are like the teeth of squirrels, கொங்கு முதிர் – pollen filled, honey filled, முண்டகத்து – with mundakam plants, of mundakam plants, நீர் முள்ளி, Hygrophila spinosa, மணி – sapphire, கேழ் – color, அன்ன – like, மா நீர் – dark ocean, சேர்ப்ப – O lord of the shore (அண்மை விளி), இம்மை மாறி – if this life ends, மறுமை ஆயினும் – even if it is the next birth, நீ ஆகியர் என் கணவனை – may you be my husband (கணவனை – ஐ சாரியை), யான் ஆகியர் – may I be the one, நின் நெஞ்சு – your heart, நேர்பவள் – I will be agreeable, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 50, குன்றியனார், மருதத் திணை – தலைவி தலைவனின் தூதுவரிடம் சொன்னது
ஐயவி அன்ன சிறு வீ ஞாழல்
செவ் வீ மருதின் செம்மலொடு தாஅய்த்
துறை அணிந்தன்று அவர் ஊரே, இறை இறந்து
இலங்கு வளை ஞெகிழச் சாஅய்ப்
புலம்பு அணிந்தன்று அவர் மணந்த தோளே.  5

Kurunthokai 50, Kundriyanār, Marutham Thinai – What the heroine said to the hero’s messenger
His town’s shore is adorned
with tiny gnāzhal flowers
resembling white mustard,
and red, wilted blossoms of
marutham trees.

My arms embraced by him
have become lonely and thin,
causing my bright bangles to
slip past my wrists.

Notes:  The sulking heroine said this to the messenger sent by the hero.  தலைவன், ஊடியிருந்த தலைவியின் ஊடலை நீக்கத் தூது விட்டபொழுது, அத்தூதுவரிடம், ‘தலைவன் தகாத முறையில் ஒழுகினான்’ எனத் தலைவி கூறியது.  உ. வே. சாமிநாதையர் உரை – தானும் அவனும் ஒன்றுபட்டு வாழும் கற்புக்காலத்தில் அவனூரே தனது ஊராகவும், ‘அவர் ஊரே’ என்று பிரித்துச் சொன்னது அவன்பால் உள்ள புலவி பற்றி.  ‘துறை அணிந்தன்று அவர் ஊரே’ என்றது அவன் பரத்தையரோடு அத்துறைக்கண் விளையாடினான் என்பதை அறிந்தமையைக் குறிப்பிட்டது.  இறைச்சி – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – அவர் ஊரிடத்துத் துறையை ஞாழல் மருதின் பூவொடு தாஅய் அழகு செய்தது; அவர் மணந்த தோள் மெலிந்து துயரைத் தங்கியது; இஃது ஒரு வியப்பு இருந்தவாறு என்னை! என்பதாம்.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  ஐயவி அன்ன – like tiny white mustard,  Brassica alba, சிறு வீ ஞாழல் – small flowers of cassia trees, புலிநகக்கொன்றை, tigerclaw tree, cassia sophera, செவ் வீ – red/beautiful flowers, மருதின் செம்மலொடு – with wilted flowers of marutham trees, Arjuna Tree, Terminalia arjuna, தாஅய் – have spread (இசைநிறை அளபெடை), துறை அணிந்தன்று – adorned the shores, அவர் ஊரே – (in) his town (ஊரே – ஏகாரம் அசைநிலை), இறை இறந்து – went past the wrist joints, இலங்கு வளை – bright bangles, shining bangles, ஞெகிழ – slipping down, loosening, சாஅய் – have become thin (இசை நிறை அளபெடை), புலம்பு – loneliness, அணிந்தன்று – has attained, has become, அவர் மணந்த தோள் – my arms that he embraced, my shoulders that he embraced, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 51, குன்றியனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கூன் முண் முண்டகக் கூர்ம் பனி மா மலர்
நூல் அறு முத்தின் காலொடு பாறித்
துறைதொறும் பரக்கும் தூ மணல் சேர்ப்பனை
யானும் காதலென், யாயும் நனி வெய்யள்,
எந்தையும் கொடீஇயர் வேண்டும்,  5
அம்பல் ஊரும் அவனொடு மொழிமே.

Kurunthokai 51, Kundriyanār, Neythal Thinai – What the heroine’s friend said to the heroine
I like him, and your mother likes him a lot,
the lord of the pure sandy shores,
where mundakam plants with curved
thorns bear cool, dark flowers that scatter
in the wind like broken strands of pearls,
spreading all over the shore.

Your father desires to give you in marriage to
him.  This town that gossips will link you with him.

Notes:  The heroine’s friend let the worried heroine know that wedding arrangements were being done.  வரைவு மலி.  வரைவு நீட்டித்தவிடத்து ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி திருமண முயற்சிகளின் மிகுதி கூறியது.  அம்பல் (6) – உ. வே. சாமிநாதையர் உரை – சிலர் அறிந்து கூறும் பழிமொழி, இரா. இராகவையங்கார் உரை – சிறு சொல்.  உ. வே. சாமிநாதையர் உரை – முட்செடியாகிய முள்ளினிடத்திலுள்ள மலர் கைவருந்திப் பறித்துக் கொள்ளும்படி  அமையாமல் காற்றினால் கவரப்பட்டு எளிதில் கொள்ளும்படி மணலில் பரந்து கிடப்பது போல, அரிதின் முயன்று உடன்பாடு பெற்று நிறைவுறுத்தும் வரைவு தலைவனுடைய முயற்சியால் மலிந்து எல்லாருடைய உடம்பாட்டையும் பெற்றது என்பது குறிப்பு.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – முள்ளுடைய செடியின் மலர்ந்த மலரைக் காற்றுச் சிதறச் செய்து மணல் துறையை அழகுபடுத்தும் என்றது, காவல் மிக்க பெருங்குடிப் பிறந்த தலைவியை தெய்வம் தலைவனோடே கூட்டி அணி செய்யா நிற்கும் என்பது.  இறைச்சி – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – முள் மிக்க தாழையின் குளிர்ந்த மலர், காற்றாற் சிதறுண்டு துறைதோறும் பரிக்கும் கடற்கரையினன் என்றதனானே இடையூற்றை மிகுதியாக உடைய களவகத்து இன்பமும் ஊராரால் தூற்றப்பட்டு மன்றத்திடத்துப் பரவுமாறு செய்திட்டான் என்பதாம்.  நூல் அறுந்த முத்து வடம் – அகநானூறு 225 – துளை முத்தின் செந்நிலத்து உதிர, அகநானூறு 289 – நெகிழ் நூல் முத்தின், குறுந்தொகை 51 – நூல் அறு முத்தின், குறுந்தொகை 104 – நூல் அறு முத்தின், கலித்தொகை 82 – கண்ணீர் சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன.  மொழியும் (6) – மொழிம் என்னும் முற்றின் ஈற்று மிசை உகரம் மெய்யொடுங் கெட்டது.  யானும், யாயும், எந்தையும், ஊரும் – உம்மைகள் எச்சப்பொருளன.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  கூன் முள் – curved thorns, முண்டக – of mundakam plants, நீர் முள்ளி, Hygrophila spinosa,  கரி முள்ளி, nightshade plant, கூர்ம் பனி மா மலர் – very cool dark colored flower, நூல் அறு முத்தின் – like the pearls in strands where the thread breaks (முத்தின் – இன் உருபு ஒப்புப் பொருளது), காலொடு பாறி – scattering in the wind (காலொடு – காலினால், காற்றால், ‘ஒடு’ ‘ஆல்’ உருபின் பொருளில் வந்தது), துறைதொறும் – on all the shores, பரக்கும் – they spread, தூ மணல் சேர்ப்பனை – the lord of the shore with pure sand, யானும் காதலென் – I also like him, யாயும் – your mother also, நனி வெய்யள் – she likes him a lot, எந்தையும் கொடீஇயர் வேண்டும் – our dad too desires to give you in marriage to him (கொடீஇயர் – சொல்லிசை அளபெடை), அம்பல் ஊரும் – this town that gossips, அவனொடு மொழிமே – it will talk linking you with him (மொழிமே – ஏ அசைநிலை, an expletive)

குறுந்தொகை 52, பனம்பாரனார், குறிஞ்சித் திணை  – தோழி தலைவியிடம் சொன்னது
ஆர் களிறு மிதித்த நீர் திகழ் சிலம்பிற்
சூர் நசைந்தனையையாய் நடுங்கல் கண்டே,
நரந்த நாறும் குவை இருங்கூந்தல்
நிரந்து இலங்கு வெண்பல் மடந்தை,
பரிந்தனென் அல்லனோ, இறை இறை யானே?  5

Kurunthokai 52, Panampāranār, Kurinji Thinai – What the heroine’s friend said to the heroine
The fierce deity of the bright mountains,
where strong male elephants step on the
ground and create puddles of water,
desired you, but you still trembled.

On seeing that, did I not soften little by
little and become sad, my tender friend
with perfect white teeth and thick, black
hair with the fragrance of orange flowers?

Notes:  The heroine’s friend told the heroine who is aware of the wedding arrangements, that the wedding is being arranged because of her announcement to the family about the love matter.  வரைவு மலிவு கேட்ட தலைவிக்குத் தோழி ‘முன்னாளில் நான் அறத்தொடு நின்றமையால் இது விளைந்தது’ எனக் கூறியது.  சூர் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தீண்டி வருத்தும் தெய்வம், சூரர மகளிருமாம், உ. வே. சாமிநாதையர் உரை – சிலம்பிற் சூர் முகுகனுமாம், தமிழண்ணல் உரை – தெய்வ மகளிர்.  நடுங்கல் (2) – உ. வே. சாமிநாதையர் உரை – நீ நம் கற்புக்கு ஏதம் வருமோ என்று அஞ்சி நடுங்கினாள், காப்பு மிகுதியினாலும் தாயர் வெறியாட்டு எடுக்க விரும்பியதனாலும் தலைவி நடுங்கினாள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தன் பொருட்டாகச் செவிலி எடுக்கும் வெறி பாடலால் கற்புக்கு ஏதங் விளையுங் கொல்!  இந்நோய் நம்மால் வந்ததன்று என்று தெய்வத்தால் வந்தது போலும் எனத் தலைவன் கருதின், நம் நிலை என்னாகும் எனக் கருதி மெய் நடுங்கல்.

Meanings:   ஆர் – filled, பொருந்திய – with (in the mountains), களிறு – male elephants, மிதித்த – stepped, நீர் – water (puddles), திகழ் சிலம்பில் – on the splendid mountains, on the bright mountains, சூர் நசைந்தனையையாய் – as one who is desired by the deity who causes terror, as one who is desired by the deities who cause terror, நடுங்கல் கண்டு – seeing you tremble, ஏ – அசைநிலை, an expletive, நரந்த நாறும் – narantham fragrance, bitter orange flowers, நாரத்தை, Citrus aurantium (நாரத்தம்பூ – நச்சினார்க்கினியர் உரை, குறிஞ்சிப்பாட்டு 94), குவை இருங்கூந்தல் – thick black hair, நிரந்து – in a row, orderly (வரிசையாக), இலங்கு – shining, bright, வெண்பல் – white teeth, மடந்தை – delicate woman, பரிந்தனென் அல்லனோ – was I not saddened, did I not soften with pity, இறை இறை – little by little, யான் – I, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 53, கோப்பெருஞ்சோழன், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
எம் அணங்கினவே மகிழ்ந, முன்றில்
நனை முதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறி அயர் களந்தொறும்
செந்நெல் வான் பொரி சிதறியன்ன,
எக்கர் நண்ணிய எம் ஊர் வியன் துறை,  5
நேர் இறை முன்கை பற்றிச்
சூரர மகளிரோடு உற்ற சூளே.

Kurunthokai 53, King Kōperunchōzhan, Marutham Thinai – What the heroine’s friend said to the hero
Lord!  They have caused us distress,
the promises you made using the
names of goddesses,
holding my friend’s perfect wrists,
on our town’s wide shore filled with
sand dunes with scattered punku
flowers that appear like strewn,
white, puffed rice in the ceremonial
grounds created by diviners in the
front yards of houses.

Notes: மருதத்துள் குறிஞ்சி.  The heroine’s friend said this to the hero who delayed marrying the heroine.  வரைவு நீட்டித்தவழித் தோழி உரைத்தது.  Velan is the diviner/priest who performs veriyāttam rituals to appease Murukan.  Unaware that her daughter is afflicted with love, the mother brings the velan when her daughter grows thin and becomes depressed.  Fresh sand is spread in the front yard of the house and offerings are given to Murukan.   The heroine’s friend utters these words, indicating that the heroine will be ruined by the separation.  நெற்பொரியைப் போல் புன்கு – அகநானூறு 116 – பொரி எனப் புன்கு அவிழ் அகன் துறை, பொரிப் பூம் புன்கின் அழல் தகை ஒண் முறி, நற்றிணை 9 – பொரிப் பூம் புன்கின் அழல் தகை ஒண் முறி, குறுந்தொகை 53 – நனை முதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல் வேலன் புனைந்த வெறி அயர் களந்தொறும் செந்நெல் வான் பொரி சிதறியன்ன, குறுந்தொகை 341 – பொரிப் பூம் புன்கொடு, ஐங்குறுநூறு 347 – பொரிப்பூம் புன்கின், ஐங்குறுநூறு 368 – எரிப்பூ இலவத்து ஊழ் கழி பன் மலர் பொரிப்பூம் புன்கின் புகர் நிழல் வரிக்கும்.   இறைச்சி – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – புன்கின் பூ செந்நெற்பொரியைச் சிதறினாற் போலத் தோன்றும் என்றதனானே நீ உற்ற பொய்ச்சூளுறவுகளும் மெய்ச்சூளுறவுகளேபோல எம்மை மயங்கச் செய்தன என்பதாம்.  எம் அணங்கினவே (1) – உ. வே. சாமிநாதையர் உரை – சூள் பலமுறை செய்யப்பட்டனவாதலின் அணங்கின என்று பன்மையாற் கூறினாள்.  வேலன் – நச்சினார்க்கினியர் உரை திருமுருகாற்றுப்படை 222 – பிள்ளையார்வேலைத் (பிள்ளையான முருகனின் வேல்) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேலன் என்றார்.  இரா. இராகவையங்கார் உரை – இதனைத் தலைவி கூறியதாகக் கொள்வர் நச்சினார்க்கினியர் (தொல்காப்பியம், களவியல் 10).  அங்ஙனமாயின் சூள் உரைத்த நின்னையும் நீ கைப்பற்றிய என்னையும் அச் சூள் அணங்குதல் தகும்.  என் வாய்க் கேட்ட என் தோழியும் அணங்குதல் மருட்கைத்தாம் என்பது தெரிய எம் அணங்கின என்றாளாகக் கொள்க.

Meanings:  எம் அணங்கின – they have distressed us, ஏ – அசைநிலை, an expletive, மகிழ்ந – O lord, முன்றில் – house front yard (முன்றில் – இல்முன்), நனை முதிர் – buds matured, புன்கின் – of punku trees, புங்கம், புன்கம், புன்கு, Indian Beech trees, Pongamia Glabra or Pongamia pinnata, பூ – flowers, தாழ் – stayed, spread, வெண்மணல் – white sand, வேலன் புனைந்த – created by a velan (Murukan priest), வெறி அயர் களந்தொறும் –  in all the veriyāttam ritual fields, செந்நெல் – red paddy, fine paddy, வான் பொரி – white puffed rice, சிதறியன்ன – like it is scattered, எக்கர் நண்ணிய – sandy mounds filled, எம் ஊர் வியன் துறை – our town wide/long/huge seashore, நேர் இறை – delicate joints, straight joints, perfect joints, முன் கை – forearms, wrists, பற்றி – holding, சூரர மகளிரோடு – pointing to the goddesses, using the names of the goddesses, உற்ற சூள் – the promises that you made, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 54, மீனெறி தூண்டிலார், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
யானே யீண்டையேனே, என் நலனே
ஏனல் காவலர் கவண் ஓலி வெரீஇக்
கான யானை கைவிடு பசுங்கழை
மீன் எறி தூண்டிலின் நிவக்கும்
கானக நாடனொடு, ஆண்டு ஒழிந்தன்றே.  5

Kurunthokai 54, Meeneri Thoondilār, Kurinji Thinai – What the heroine said to her friend
I am here alone.  My virtue has
gone with the man from the
forest country, where an elephant,
afraid of sounds from the slingshots
of millet field guards, releases a
green stalk of bamboo that it held,
that springs back like a fishing rod
that has caught a fish.

Notes:  The heroine who is frustrated that the hero has not come to marry her, said this to her friend.  வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைவி தோழியிடம் உரைத்தது.  குறுந்தொகை 54 – கான யானை கைவிடு பசுங்கழை மீன் எறி தூண்டிலின் நிவக்கும், குறுந்தொகை 74 – விட்ட குதிரை விசைப்பினன்ன விசும்பு தோய் பசுங்கழை, புறநானூறு 302 – வெடி வேய் கொள்வது போல ஓடித் தாவுபு உகளும் மாவே, ஐங்குறுநூறு 278 – கழைக்கோல் குரங்கின் வன் பறழ் பாய்ந்தன இலஞ்சி மீன் எறி தூண்டிலின் நிவக்கும்.  உ. வே. சாமிநாதையர் உரை – யானை வளைக்குங் காலத்தில் வளைந்து அது கைவிடத் தூண்டிலைப் போல மூங்கில் நிமிரும் நாடன் என்றது தன் நெஞ்சத்து அன்புளதாகிய காலத்து நம்பால் மருவிப் பணிந்து ஒழுகி அன்பற்ற காலத்துப் பணிவின்றித் தலைமை செய்து நம் நலங்கொண்ட தன் கொடுமை போன்ற ஒழுகுகின்றான் என்பதாம்.  உள்ளுறை – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – ஏனலைக் காப்பவரது கவணின் ஒலியை அஞ்சி யானை நுகர்தற்கு வளைத்த கழையைக் கைவிட்டுச் செல்லுமாறு போல, ஊரார் தூற்றும் அலரை அஞ்சித் தன் எண்ணத்தின்படி தாழ்த்தி நுகர்ந்த என்னைக் கைவிட்டுச் சென்றான் என்பதாம்.

Meanings:   யான் – me, ஏ – பிரிநிலை, exclusion, யீண்டையேன் – I am here, ஏ – அசைநிலை, an expletive, என் நலன் – my virtue/beauty, ஏ – பிரிநிலை, exclusion, ஏனல் – செந்தினை, red/black millet, Panicum indicum or Setaria italica, காவலர் – guards, கவண் ஓலி வெரீஇ – afraid of the sounds of slingshots (வெரீஇ – சொல்லிசை அளபெடை), கான யானை – forest elephant, கை விடு – released from holding it with its trunk, பசுங்கழை – green bamboo, Bambusa arundinacea, மீன் எறி தூண்டிலின் – like the fishing rod that has caught a fish (தூண்டிலின் – இன் உருபு ஒப்புப் பொருளது), நிவக்கும் – lifts up, கானக நாடனொடு – with the man from the forest country, ஆண்டு – there, ஒழிந்தன்று – it has gone there, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 55, நெய்தல் கார்க்கியர், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
மாக் கழி மணிப் பூக் கூம்பத் தூத்திரைப்
பொங்கு பிதிர்த் துவலையொடு மங்குல் தைஇக்
கையற வந்த தைவரல் ஊதையொடு
இன்னா உறையுட்டு ஆகும்,
சின்னாட்டு அம்ம, இச் சிறு நல்லூரே.  5

Kurunthokai 55, Neythal Kārkkiyār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
She will not last for more than a few
days in this fine, small town where
she lives, since the cold northern
winds that blow, bearing clouds,
and pure waves that spray overflowing,
fine mist causing sapphire-hued flowers
in the dark backwaters to close,
cause anguish to those separated from
their lovers.

Notes:  The heroine’s friend urged the hero to come and marry her friend soon.  ‘நீ வரைவொடு வராவிடின் இவள் இறந்துவிடுவாள்’ எனத் தோழி கூறியது.   மணிப்பூ (1) – உ. வே. சாமிநாதையர் உரை – மணிப்பூ என்றமையால் நீலமணி போன்ற முள்ளி நெய்தல் முதலியவற்றைக் கொள்க.  மங்குல் தைஇ (2) – உ. வே. சாமிநாதையர் உரை – மேகத்தைப் பொருந்தி,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – முகில்களையும் அணிந்துகொண்டு, இரா. இராகவையங்கார் உரை – மேகத்தையும் வீசி.  ‘சேம்பின் இலை பெருங்களிற்றுச் செவியின் மானத் தைஇ’ (குறுந்தொகை 76) என்புழிச் சேம்பின் இலை யானைச் செவிபோல அசைய வீசி எனப் பொருள் ஆதலால் உணர்க.   உ. வே. சாமிநாதையர் உரை – ‘இன்னா உறையுட்டு ஆகும் சின்னாட்டு அம்ம இச் சிறு நல்லூரே’ என்று ஊரின் மேல் வைத்துச் சொன்னாலும், தோழி நினைந்தது, ‘தலைவி இன்னும் சின்னாளே இவ்வூரில் உயிர் வாழ்வாள்.  அச் சின்னாளும் இன்னாமை தரும் இயல்புடையன’ என்பதாகக் கொள்க; இதனால் தலைவனுக்கு விரைந்து வரைந்துகொள்வதன் இன்றியமையாமையைக் குறிப்பித்தாள்.

Meanings:  மாக் கழி – dark backwaters, dark brackish water ponds, large backwaters, மணிப் பூக் கூம்ப – causing sapphire-colored flowers to close, குவளை அல்லது நீர்முள்ளி, blue waterlilies or Hygrophila spinosa, தூத் திரை – pure waves, பொங்கு – overflowing, abundant, பிதிர்த் துவலையொடு – with water droplets that are water sprays (பிதிர்த் துவலை – பிதிராகிய துளி, இருபெயரொட்டு), மங்குல் தைஇ – with clouds, touching the clouds (தைஇ – சொல்லிசை அளபெடை), கையற வந்த – came to hurt those who are helpless (those who are separated), தைவரல் ஊதையொடு – with the touching cold northern winds, இன்னா – sorrow, உறையுட்டு ஆகும் – it is a residing place, சில்நாட்டு – சில நாட்களையுடையது, has a few days, அம்ம – அசைநிலை, an expletive, இச்சிறு நல்லூர் – this small fine town, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 56, சிறைக்குடி ஆந்தையார், பாலைத் திணை – தலைவன் சொன்னது
வேட்டச் செந்நாய் கிளைத்து ஊண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகல் சில் நீர்
வளை உடைக் கையள் எம்மொடு உணீஇயர்
வருகதில் அம்ம தானே
அளியளோ அளியல், என் நெஞ்சு அமர்ந்தோளே.  5

Kurunthokai 56, Siraikkudi Ānthaiyār, Pālai thinai – What the hero said
The young woman with bangles
on her arms, who is in my heart,
would be very pitiable,
if she had to drink along with me,
the dirty, stagnant water covered
with wild jasmine leaves, from the
small pits dug by hunting wild dogs.

Notes:  The hero said this while he was in the wasteland all by himself.  தானே போகின்ற வேளையில், பாலை நிலத்தில் உள்ள தீமைகளைக் கண்டு, தலைவன் கூறியது.  இரா. இராகவையங்கார் உரை – இது களவில் தலைவன் தலைவியை உடன்கொண்டு போகத் துணிந்தது என இளம்பூரணரும் (தொல்காப்பியம், அகத்திணையியல் 44), கற்பில் தலைவன் தோழி கேட்பக் கூறியது என நச்சினார்க்கினியரும் (தொல்காப்பியம், கற்பியல் 5) கொள்வர்.  அங்ஙனமாயின் சுரத்தின் பொல்லாங்கு தெரியத் தலைவன் போதற்கு முன்னே கூறியதாகக் கொள்ளப்படும்.  வருகதில் (4) – தமிழண்ணல் உரை – வருகதில் என்பதில் ‘தில்’ விருப்பத்தை உணர்த்தும் இடைச்சொல், பொ. வே. சோமசுந்தரனார் உரை – வருகதில் என்பதில் ‘தில்’ விழைவுப் பொருளும் ஒழியிசைப் பொருளும் ஒரு சேரக் குறித்து நின்றது, வருகதில் என்பதற்கு வருவாளாக, உ. வே. சாமிநாதையர் உரை – வருக; வந்தால், இரா. இராகவையங்கார் உரை – வந்தால் இதன் பொல்லாங்கு அவளும் காண்பள் என்றவாறு.   குளவி (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காட்டு மல்லிகை, ஈண்டு அதன் சருகிற்கு ஆகுபெயர்.  அம்ம (4) – தமிழண்ணல் உரை – இரக்கக் குறிப்பு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கேள் என்னும் பொருட்டு, உ. வே. சாமிநாதையர் உரை – அசைநிலை.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

Meanings:  வேட்டச் செந்நாய் – hunting wild dog, Cuon alpinus dukhunensis, கிளைத்து ஊண் – dug and drank, மிச்சில் – leftover, குளவி – wild jasmine, மரமல்லி, பன்னீர் பூ, Indian cork tree flowers, Millingtonia hortensis, மொய்த்த – covered, அழுகல் சில் நீர் – stinking little stagnant water, dirty little water, வளை உடைக் கையள் – the young woman with bangles, எம்மொடு உணீஇயர் – to drink with me (உணீஇயர் – சொல்லிசை அளபெடை), வருக – let her come, if she had come, தில் – விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச்சொல், a particle which implies desire or ஒழியிசை என்னும் பொருளில் வந்த இடைச்சொல், a particle which implies suggestion, அம்ம – அசைநிலை, an expletive, listen to me, தான் – அசைநிலை, an expletive, ஏ – அசைநிலை, an expletive, அளியளோ அளியல் – she would be very pitiable, என் நெஞ்சு அமர்ந்தோள் – the young woman who is seated in my heart, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 57, சிறைக்குடி ஆந்தையார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீர் உறை மகன்றில் புணர்ச்சி போலப்,
பிரிவு அரிதாகிய தண்டாக் காமமொடு
உடன் உயிர் போகுக தில்ல, கடன் அறிந்து
இருவேம் ஆகிய உலகத்து,  5
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே.

Kurunthokai 57, Siraikkudi Ānthaiyār, Neythal Thinai – What the heroine said to her friend
In this world where we have
been very loving, like being
one life with two bodies,
to escape from being alone,
may our lives go away, with
unstoppable love,
like that of the water-living
makindril birds in union,
that feel like years have passed
even if a flower comes between
them.

Notes:  The heroine who was well guarded by her family and unable to see the hero, said this to her friend.  காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைவி, தோழியிடம் கூறியது.  மகன்றில் புணர்ச்சி:  குறுந்தொகை 57 – நீர் உறை மகன்றில் புணர்ச்சி போல, பரிபாடல் 8-44 – அலர் ஞெமல் மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி, ஐங்குறுநூறு 381 – குறுங்கால் மகன்றில் அன்ன உடன் புணர் கொள்கை, அகநானூறு 220 – நோலா இரும்புள் போல நெஞ்சு அமர்ந்து காதல் மாறாக் காமர் புணர்ச்சியின்.  உடன் உயிர் போகுக (4) – உ. வே. சாமிநாதையர் உரை – என் உயிர் போவன ஆகுக, பொ. வே. சோமசுந்தரனார் உரை – எம் உயிர் போவனவாகுக, தமிழண்ணல் உரை – எங்கள் உயிர் போவதாக.   இருவேம் ஆகிய (5) – உ. வே. சாமிநாதையர் உரை – பிறவிதோறும் தலைவனும் தலைவியாகிய இருவேமாகப் பயின்று வந்த, பொ. வே. சோமசுந்தரனார் உரை – செய்யக்கடவ கடமைகளை அறிந்து ஓர் உயிர்க்கு ஈருடம்பினேமாய்ப் பயின்று வரும்.  புன்மை (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சிறுமை, உ. வே. சாமிநாதையர் உரை – துன்பம்,  தமிழண்ணல் உரை – இழிவு.

Meanings:  பூ இடைப்படினும் – even if a flower comes in between (படினும் – உம்மை இழிவு சிறப்பும்மை), யாண்டு கழிந்தன்ன – it feels like a year has passed, நீர் உறை – water living, மகன்றில் புணர்ச்சி போல – like the union of makandril birds, பிரிவு அரிதாகிய – rare that there is separation, தண்டாக் காமமொடு – with love that cannot be removed, with unstoppable love, உடன் உயிர் போகுக – may our lives go away, தில்ல – விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச்சொல், ஈறு திரிந்தது வந்தது, a particle that implies desire, கடன் அறிந்து – to know what is right, இருவேம் ஆகிய உலகத்து – as two people in this world, ஒருவேம் ஆகிய – have become one, புன்மை – sorrow, lowly situation, நாம் உயற்கு – for us to escape, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 58, வெள்ளிவீதியார், குறிஞ்சித் திணை – தலைவன் தோழனிடம் சொன்னது
இடிக்கும் கேளிர், நுங்குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று மற்றில்ல,
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்  5
பரந்தன்று இந்நோய், நோன்று கொளற்கு அரிதே.

Kurunthokai 58, Velliveethiyār, Kurinji Thinai – What the hero said to his friend
My friend who goads me to stop
seeing her!  Yes, I know it would
be very good if I could do that.
But my love disease has spread like
butter that melts on a boulder scorched
by the hot sun, while a man with no hands,
who is unable to speak, tries to save it with
his eyes.  It will be difficult to tolerate it.

Notes:  The hero said this to his friend who chided him.  தன்னை இடித்துக் கூறிய நண்பனிடம் தலைவன் கூறியது.  கேளிர் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கேளிர், நும் என்னும் பன்மைச் சொற்கள் செறல்பற்றி நண்பன் ஒருவனுக்கே வந்தன.  மற்றில்ல (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பிற இலவாகும், உ. வே. சாமிநாதையர் உரை – மன் தில்ல, தில் விழைவின்கண் வந்தது, தமிழண்ணல் உரை – மன் தில்ல, மன் – மிக, தில் விருப்பத்தை உணர்த்தும் இடைச்சொல், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நற்றிணை 392 – மன் தில்ல என்னும் இடைச்சொற்கள் மற்றில எனப் புணர்ந்தன.  மன் – கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

Meanings:  இடிக்கும் கேளிர் – O friend who goads me, நுங்குறை ஆக – what you complain about, நிறுக்கல் – stopping, ஆற்றின் – if I do that, ஓ – அசைநிலை, an expletive, நன்று – good, மற்றில்ல – nothing else or மன் – அசைநிலை, an expletive, மிகுதிக் குறிப்பு, signifying abundance, தில்ல – தில் விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச்சொல், ஈறு திரிந்தது வந்தது, a particle which implies desire, ஞாயிறு காயும் – the sun-scorched, வெவ்வறை மருங்கில் – on a hot boulder, கை இல் – without hands, ஊமன் – a man who is unable talk, a dumb man, கண்ணின் காக்கும் – saving with his eyes, வெண்ணெய் உணங்கல் போல – like the melting butter (உணங்கல் – உருகியது), பரந்தன்று இந்நோய் – this disease has spread, நோன்று கொளற்கு அரிது – it is difficult to tolerate it, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 59, மோசிகீரனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்
அரலைக் குன்றத்து அகல்வாய்க் குண்டு சுனைக்
குவளையொடு பொதிந்த குளவி நாறு நின்
நறுநுதல் மறப்பரோ மற்றே? முயலவும்,
சுரம் பல விலங்கிய அரும் பொருள்  5
நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே.

Kurunthokai 59, Mōsi Keeranār, Pālai Thinai – What the heroine’s friend said to her
He will not extend his stay even
if he does not achieve the precious
wealth that he set out to earn
crossing many wastelands,
since he will not be able to forget
your fragrant forehead with scents
of wild jasmine tied together with
blue waterlilies from the deep,
wide springs of Aralai Mountains,
where the king donates to drummers
who hit pathalai drums with rhythmic beats.

Notes:  The heroine’s friend said this to the heroine who was sad since the hero had left to earn wealth.  பொருள்வயின் தலைவன் பிரிந்த காலத்தில், ஆற்றாமல் வருந்திய தலைவியிடம் தோழி கூறியது.  இரா. இராகவையங்கார் உரை – அரலைக் குன்றம் – சேலம்.  ஓசூர்ப்புறத்து ‘அரலி குண்டா’ என்பது ஒன்றுண்டு.  ஆண்டே நள்ளி என்னும் பெருவள்ளளுடைய தோட்டி மலையாகிய அங்குசகிரியும் உண்டு.  இவற்றால் இக்கோமான் நள்ளி என்பது பொருந்தும்.  வரலாறு:  அரலைக் குன்றம்.

Meanings:  பதலைப் பாணி – rhythmic beat of pathalai drums, பரிசிலர் கோமான் – donor (king) who gives gifts to bards and drummers, அரலைக் குன்றத்து – on Athalai mountain, அகல்வாய் – wide-mouthed, குண்டு சுனை – deep springs, குவளையொடு – with blue waterlilies, Blue nelumbo, Nymphaea odorata, பொதிந்த குளவி – tied together wild jasmine, Jasminum angustifolium, நாறு – fragrant, நின் – your, நறு நுதல் மறப்பரோ – will he forget your fragrant forehead, மற்று – அசைநிலை, an expletive, ஏ – அசைநிலை, an expletive, முயலவும் – making efforts, சுரம் – wasteland, பல விலங்கிய – few difficulties, அரும் பொருள் – precious wealth, நிரம்பா ஆகலின் – even if he does not achieve his goal, நீடல் – extending his stay, ஓ – அசைநிலை, an expletive, இன்று – will not happen, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 60, பரணர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
குறுந்தாள் கூதளி ஆடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட இருக்கை முடவன்
உள் கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கியாங்குக் காதலர்
நல்கார் நயவார் ஆயினும்,  5
பல் கால் காண்டலும் உள்ளத்துக்கு இனிதே.

Kurunthokai 60, Paranar, Kurinji Thinai – What the heroine said to her friend
Even if my lover does not shower
his graces or love me, it is sweet to
see him many times.
My happiness is like that of a
short-legged cripple who sits under
a huge honeycomb, eyes it, cups his
hands, points to it, and then licks
his empty palms with joy,
in the tall mountain with swaying
koothali vines.

Notes:  The heroine who was unable to handle separation from her lover said this to her friend.  தலைவனின் பிரிவை ஆற்றாத தலைவி வருந்தித் தோழியிடம் கூறியது.  அகநானூறு 255 – கூதள மூது இலைக் கொடி.  குறுந்தாள் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குறுந்தாளை முடவனுக்கேற்றுக.  குறுந்தாளுடைமையின் நிற்றலாற்றாது இருத்தலொன்றே உடைய முடவன்.  குறுகிய தாளையுடைய கூதளஞ்செடி என்பாருமுளர், இரா. இராகவையங்கார் உரை – தாளின் குறுமையால் எழுந்து நிற்க இயலாமல் இருத்தலையுடைய முடவன், உ. வே. சாமிநாதையர் உரை – குறிய அடியையுடைய கூதளஞ்செடி.

Meanings:  குறுந்தாள் – short legs, short stems, கூதளி – கூதாளம் – koothali vine, Convolvulus,  a three-lobed nightshade vine, ஆடிய – swaying, நெடுவரை – tall mountains, பெருந்தேன் – a big honeycomb, a comb full of honey, கண்ட – saw, இருக்கை முடவன் – a cripple who is seated, உள் கைச் சிறு குடை கோலி – made a small bowl with both hands, குழித்து, கீழிருந்து – staying under, சுட்டுபு – pointing fingers at it, நக்கியாங்கு – like licking, காதலர் – my lover, நல்கார் – he does not shower his graces, நயவார் ஆயினும் – even if he does not shower his love, பல்கால் காண்டலும் – just to see him a few times, உள்ளத்துக்கு இனிது – it is pleasing to my heart/mind, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 61, தும்பிசேர் கீரனார், மருதத் திணை – தூதாக வந்த பாணனிடமும் பிறரிடமும் தோழி சொன்னது
தச்சன் செய்த சிறு மா வையம்
ஊர்ந்து இன்புறாஅர் ஆயினும் கையின்
ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல,
உற்று இன்புறேஎம் ஆயினும், நற்றேர்ப்
பொய்கை ஊரன் கேண்மை  5
செய்து இன்புற்றனெம், செறிந்தன வளையே.

Kurunthokai 61, Thumpisēr Keeranār, Marutham Thinai – What the heroine’s friend said to the bard and others who came as messengers
Like happy youngsters who pull with their
hands tiny horse wagons made by carpenters,
without getting any joy riding on them,

she’s happy even though she has not had
any pleasure from him.
She’s happy for her friendship with the man
with a fine chariot from the town with ponds;
her bangles have stayed tight on her hands.

Notes:  The heroine’s friend refused to admit the messengers of the hero.  தலைவனின் தூதுவர்களாக வந்தவர்களுக்குத் தோழி வாயில் மறுத்தது.   உ. வே. சாமிநாதையர் உரை – நற்றேர்ப் பொய்கை ஊரன் என்றது, தலைவன் தன் தேரில் ஏறிப் பரத்தையருடன் பொய்கை நீராடுவான் என்று அறிந்ததைக் குறித்தது.  இரா. இராகவையங்கார் உரை – பொய்கை ஊரன் என்றது எல்லோரும் தோயும் நீர்நிலை போல வரையாது தோயப்படுவான் எனக் குறித்ததாம்.  இன்புறேஎம் (4) – உ. வே. சாமிநாதையர் உரை – தோழி தனக்கும் தலைவிக்கும் உள்ள ஒற்றுமைப் பற்றி தன்மைபன்மையாற் கூறினாள்.  நற்றேர் (4) – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – பிறகுறிப்பு, இழிந்தாரை ஏற்ற உதவுவதால்.

Meanings:  தச்சன் செய்த சிறு மா வையம் – the small horse carts that carpenters made, ஊர்ந்து இன்புறாஅர் ஆயினும் – even if they  do not get pleasure riding on it (இன்புறாஅர் – இசைநிறை அளபெடை), கையின் ஈர்த்து – pulling it with their hands, இன்புறூஉம் இளையோர் போல – like children who are happy (இன்புறூஉம் – இன்னிசை அளபெடை), உற்று இன்புறேஎம் ஆயினும் – even though we don’t have pleasures from him, even though she does not have pleasures from him (இன்புறேஎம் – இன்னிசை அளபெடை), நல் தேர் – fine chariot, பொய்கை ஊரன் – the man from the town with ponds, கேண்மை – friendship, செய்து இன்புற்றனெம் – we are happy, she is happy, செறிந்தன – they are tight, வளை – her bangles, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 62, சிறைக்குடி ஆந்தையார், குறிஞ்சித் திணை  – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
கோடல் எதிர் முகைப் பசு வீ முல்லை
நாறு இதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ
ஐது தொடை மாண்ட கோதை போல,
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது, முயங்கற்கும் இனிதே.  5

Kurunthokai 62, Siraikkudi Ānthaiyār, Kurinji Thinai – What the hero said to his heart
The pretty young woman’s body
has the fragrance of a beautiful
garland strung with white glory
lily blossoms, fresh jasmine flowers
bloomed from buds, and waterlilies
with fragrant petals mixed in between,
and is tender than sprouts.

It is sweet to embrace her.

Notes:  The hero said this on going back to the place where he had united first with the heroine.  இடந்தலைப்பாடு.  இயற்கைப்புணர்ச்சிக்குப் பின் மீண்டும் தலைவியை முன்னாள் கண்ட இடத்தில் சென்று கூட நினைக்கும் தலைவன் தன் நெஞ்சிடம் கூறியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – கோடல் – இது காந்தள் மலர்.  இது தலைவியின் கைகளை நினைந்து கூறியது.  எதிர் முகைப் பசு வீ முல்லை – இது புதிதாக முளைத்தெழும் தலைவியின் எயிற்றொழுங்கினை எண்ணி இயம்பியது. நாறு இதழ்க் குவளை, இமையையுடைய கண்களைக் கருதி என்க.  இவ்வுறுப்புகள் அழகுற அமைந்திருக்கும் அழகு கருதி ‘ஐது தொடை மாண்ட கோதை’ என்றான்.  எதிர் (1) – உ. வே. சாமிநாதையர் உரை – தோற்றிய, தோன்றிய,,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – அரும்பிய, திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – ஒளி.

Meanings:  கோடல் – kōdal flowers – white glory lilies, எதிர் – appearing,  budding, bright, முகை – buds, பசு – fresh, வீ – flowers, முல்லை – white jasmine,  Jasminum sambac, நாறு இதழ் – fragrant petals, குவளையொடு – with blue waterlilies, Blue nelumbo,  Nymphaea odorata,  இடையிடுபு – placed in between, விரைஇ – mixed (சொல்லிசை அளபெடை), ஐது – beautiful, delicate, தொடை – tied, மாண்ட – splendid, கோதை – garland, போல – like, நறிய – fragrant, நல்லோள் – the pretty young woman, மேனி – body, முறியினும் வாய்வது – it is better than the tender sprouts, leaves, முயங்கற்கும் இனிது – it is sweet to embrace, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 63, உகாய்க்குடிகிழார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்லெனச்
செய்வினை கைம்மிக எண்ணுதி; அவ்வினைக்கு
அம் மா அரிவையும் வருமோ?
எம்மை உய்த்தியோ? உரைத்திசின் நெஞ்சே.

Kurunthokai 63, Ukāykkudi Kizhār, Pālai Thinai – What the hero said to his heart
You think that those without
any wealth cannot give to
others or enjoy pleasures.

You are thinking firmly
about leaving to gather wealth.

But will the dark, beautiful
woman come with us, or
are you sending me by myself?

Tell me, my heart!

Notes:  The hero said this to his heart and avoided going to earn wealth.  பொருள் தேட வேண்டுமென்று துணிந்த நெஞ்சிடம் ‘பிரிவது அரிது’ என்று உணர்த்தித் தலைவன் செலவு தவிர்த்தது.  அம் மா அரிவை (3) – இரா. இராகவையங்கார் உரை – அம் மா அரிவை என்றான் அவளுடன் வாராதொழியின் அவள் மாமை சிதையும் என்பது கருதி.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).

Meanings:  ஈதலும் – and giving, துய்த்தலும் – and enjoying, இல்லோர்க்கு – for those without wealth, இல்லென – thinking that it is not there, செய்வினை – to make wealth, கைம்மிக எண்ணுதி – you think a lot about that (கை – அசைநிலை, an expletive), அவ்வினைக்கு – to assist you in that task, அம் மா அரிவையும் – the beautiful dark young woman, வருமோ – will she come, எம்மை உய்த்தியோ – or, are you just sending me (எம்மை – தன்மை பன்மை, first person plural), உரைத்திசின் நெஞ்சே – please tell me O heart (சின் – முன்னிலை அசை, an expletive of the second person)

குறுந்தொகை 64, கருவூர்க் கதப்பிள்ளை, முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்தெனப்
புன்தலை மன்றம் நோக்கி மாலை
மடக் கண் குழவி அணவந்தன,
நோயேம் ஆகுதல் அறிந்தும்,
சேயர் தோழி, சேய் நாட்டோரே.  5

Kurunthokai 64, Karuvūr Kathapillai, Mullai Thinai – What the heroine said to her friend, when the hero was away
He is in a distant land for long,
even though he is aware that I
am in pain like distressed young
calves with innocent looks,
who lift their heads and look
at the gloomy stables at evening
times, awaiting their mothers
who went on long paths.

Notes:  The heroine said this to her friend who comforted her stating that the hero will arrive on time.  பிரிவிடை ஆற்றாமை கண்டு வருவர் எனச் சொல்லிய தோழிக்குத் தலைவி உரைத்தது.  உ. வே. சாமிநாதையர் உரை – பிரிந்து சென்ற பசுக்கள் மாலைக்காலத்தில் மீண்டு வருதலை அவற்றின் கன்றுகள் எதிர்நோக்கி நிற்றலைப் போல, பிரிந்து சென்ற தலைவனது வரவை உரிய பருவத்தில் எதிர்நோக்கி இருப்பேன் என்று உவமையை விரித்துக் கொள்க.  புன்தலை (2) – உ. வே. சாமிநாதையர் உரை –  பொலிவு அழிந்த இடம், பசுக்கள் இன்மையின் பொழிவழிந்ததாயிற்று, மன்றம் (2) – உ. வே. சாமிநாதையர் உரை – பசுக்கள் தங்கியிருக்கும் இடம்.  மடக் கண் குழவி (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மடப்பம் பொருந்திய ஆன் கன்றுகள், மடப்பம் பொருந்திய கண்ணையுடைய கன்றுகள், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – அறியாமையைப் புலனாக்கும் கண்ணையுடைய கன்றுகள்.  சேயர் (5) – உ. வே. சாமிநாதையர் உரை – இன்னும் நெடுந்தூரத்திலே உள்ளார், பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஈண்டுக் காலச் சேய்மை.  காலத்தானும் சேயராய் வாராராயினர்.   குழவி – யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய.  எருமையும் மரையும் வரையார் ஆண்டே.  கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே.  ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும்.  குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை.  ஆவும் எருமையும் அது சொலப்படுமே (தொல்காப்பியம், மரபியல் 15-20).

Meanings:  பல் ஆ – many cows, நெடு நெறிக்கு – on the long path, அகன்று வந்தென – since they left from here and went, புன்தலை மன்றம் – lusterless cow stables (gloomy without their mothers), நோக்கி – they look, மாலை – evening, மடக் கண் குழவி – calves with delicate looks, calves with innocent looks, அணவந்தன – they lifted their heads, நோயேம் ஆகுதல் அறிந்தும் – even though he is aware of my love distress (நோயேம் – தன்மைப் பன்மை, first person plural), சேயர் – he is far away, he has gone away for a long time, தோழி – O friend, சேய் நாட்டோர் – the man who is in a far-away land, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 65, கோவூர்கிழார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வன்பரல் தெள் அறல் பருகிய இரலை தன்
இன்புறு துணையொடு மறுவந்து உகளத்
தான் வந்தன்றே, தளிதரு தண் கார்,
வாராது உறையுநர் வரல் நசைஇ,
வருந்தி நொந்து உறைய இருந்திரோ எனவே.  5

Kurunthokai 65, Kōvūr Kizhār, Mullai Thinai – What the heroine said to her friend
The rainy season has arrived
with cool showers
for stags to drink clear water
from streams with rough pebbles
and prance around happily with
their loving mates,
and to ask me whether I am alive
with my pain and distress,
because of my desire for my lover
who has gone for long to return.

Notes:  The heroine who was worried on seeing the rainy season arrive, said this to her friend.  பருவங்கண்டு வருந்திய தலைவி தோழிக்கு உரைத்தது.  இரா. இராகவையங்கார் உரை – தெள்ளறல் பருகிய இரலை உகள என்றது மழை பெய்வதற்கு முன் வருவோம் என்றவர் பெய்து பருகி உகளா நிற்கவும் வந்திலர் என்பது குறித்து வந்தது.  இறைச்சி – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – ஆண்மான் தெள்ளிய நீரைப் பருகித் துணையோடு கூடி இருந்தும் வருந்தித் தாவச் செய்யும் கார்காலம் என்றதனானே, பிரிவால் உணவை உட்கொள்ளுதலன்றித் தனித்து உறைவாரை என்ன இன்னல் தான் எய்தச் செய்யாதோ? என்பதாம்.  வருந்தி நொந்து உறைய இருந்திரோ என (5) – உ. வே. சாமிநாதையர் உரை – மிக வருந்தித் தங்கும் பொருட்டு உயிர் வைத்துக் கொண்டிருந்தீரோ என கேட்பதற்கு, வருந்தித் துயருடன் தங்குமாறு (தனித்து) இருந்தீரோ  என்பதாக.

Meanings:  வன் பரல் – hard pebbles, தெள் அறல் – clear running water, பருகிய – குடித்த, drank, இரலை – stag, தன் இன்புறு துணையொடு – with his pleasurable mate, மறுவந்து உகள – romps around with joy, தான் – அசைநிலை, an expletive, வந்தன்று – it has come, ஏ – அசைநிலை, an expletive, தளிதரு – giving raindrops, தண் கார் – the cool rainy season, வாராது – not coming back, உறையுநர் – he who is staying, வரல் நசைஇ – desiring for him to come back (நசைஇ – சொல்லிசை அளபெடை), வருந்தி நொந்து – very sad, உறைய இருந்திரோ என – to ask is that why I survived (இருந்திரோ – ஓ வினா), ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 66, கோவர்த்தனார், முல்லைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
மடவ மன்ற, தடவு நிலைக் கொன்றை,
கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய
பருவம் வாரா அளவை நெரிதரக்
கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த,
வம்ப மாரியைக் கார் என மதித்தே.  5

Kurunthokai 66, Kōvarthanār, Mullai Thinai – What the heroine’s friend said to her
Since unseasonal rains have fallen,
these ignorant, fat-trunked kondrai
trees have put out dense, trailing clusters
of flowers on their branches, thinking
that the monsoon season has arrived,
even though your lover who went on the
rock-filled wasteland path, who said
that he would be back before the start of
the rainy season, has not come back.

Notes:  The heroine was worried on seeing the season, and her friend said to her that this is not the rainy season.  பருவம் கண்டு ஆற்றாளாய தலைவியைத் தோழி, ‘பருவம் அன்று’ என்று வற்புறுத்தியது.  குறுந்தொகை 94 – பெரும் தண் மாரிப் பேதைப் பித்திகத்து அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே, குறுந்தொகை 251 – மடவ வாழி மஞ்ஞை மா இனம் கால மாரி பெய்தென அதன் எதிர் ஆலலும் ஆலின பிடவும் பூத்தன.  நற்றிணை 99 – பிடவமும் கொன்றையும் கோடலும் மடவ ஆகலின் மலர்ந்தன பலவே.  இரா. இராகவையங்கார் உரை – உடலாற் பருமையுள்ள நிலையுடைய கொன்றை மரங்கள் உள்ளத்தால் பேதைமை உடையன.  தலைவனை மடையன் என்னாது தோழி கொன்றை, முல்லை, மஞ்ஞை முதலியவற்றை மடவ என்று குறித்து மொழி கிளவியாற் படைத்துக் கூறி ஆற்றுவித்தல் கவிமரபேயாம்.   மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம். உரியியல் 25).  அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 26).  வம்ப – வம்பு நிலை இன்மை (தொல்காப்பியம், உரியியல் 29).  தடவு நிலை (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நிற்றலால் அடிமரத்தை ஆகுபெயரால் ‘நிலை’ என்றார், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – பெரிய நிலையினையுடைய கொன்றைகள், வளைந்த நிலையாம்.

Meanings:  மடவ – they are ignorant, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty, தடவு நிலை – having large trunks, having bent trunks, கொன்றை – சரக் கொன்றை, Indian laburnum, golden shower tree, Cassia Fistula, கல் பிறங்கு – rock filled, அத்தம் – wasteland, சென்றோர் – the man who went, கூறிய பருவம் வாரா அளவை – when he did not come when he said he would come back, நெரிதர – to be dense, கொம்பு சேர் – being on the branches, கொடி இணர் ஊழ்த்த – trailing clusters of flowers growing on long stems, வம்ப மாரியை – the unseasonal rains, the unstable rains (வம்பு – நிலையின்மை), கார் என மதித்து – thinking that this is the rainy season, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 67, அள்ளூர் நன்முல்லையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது  
உள்ளார் கொல்லோ தோழி, கிள்ளை
வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண் பழம்
புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்ப்
பொலங்கல ஒரு காசு ஏய்க்கும்,
நிலங்கரி கள்ளியங் காடு இறந்தோரே?  5

Kurunthokai 67, Allūr Nanmullaiyār, Pālai Thinai – What the heroine said to her friend
Will he think about me, my lover,
who has gone to the scorched land
with kalli plants,
where a bright neem fruit held in a
parrot’s curved beak appears like
a gold coin through which a
goldsmith puts a new thread,
using his fine, sharp fingernail tips,
to make a gold-coin necklace?

Notes:  The heroine who was unable to bear her separation sorrow, said this to her friend.  தலைவனது பிரிவை ஆற்றாது வருந்திய தலைவி தோழியிடம் கூறியது.  குறுந்தொகை 24 – வேம்பின் ஒண் பூ யாணர் என் ஐ இன்றியும் கழிவது கொல்லோ, ஐங்குறுநூறு 350 – வேம்பின் ஒண் பூ உறைப்பத் தேம்படு கிளவி அவர்த் தெளிக்கும் பொழுதே.  இரா. இராகவையங்கார் உரை – வேப்பம்பழம் காசேய்க்கும் இந்நிலையிலும் காடு இறந்தோர் உள்ளார் கொல் என்றாள்.  வேம்பின் ஒண்பூ உதிர்தற்கு முன்னர் வருவம் என்றவர் பழநிலையினும் நினையார் என்பது கருத்து.  புது நாண் நுழைப்பான் (3) – உ. வே. சாமிநாதையர் உரை – புதிய பொற்கம்பியை ஊடு செலுத்தும் பொற்கொல்லன், இரா. இராகவையங்கார் உரை – புதிய நூலை நுழைக்கும் பொருட்டு.  நுழைப்பான் (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நுழைக்கும் பொருட்டு.  பான் விகுதி பெற்ற வினையெச்சம், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – ஆன் உருபு ஒடு உருபின் பொருளில் வந்தது.  இறைச்சி – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – கிள்ளை உணவின் பொருட்டு வாயில் கொண்ட வேப்பம்பழம் பொலங்கலக்காசுப் போல தோன்றும் காடு என்றதனானே, ஈட்டலைக் குறித்துக் கைக்கொண்ட இன்னாத பிரியும் அவர்க்கு இனிமை தருவதாயிற்று; அன்பின்மையும் என்பதாம்.

Meanings:  உள்ளார் கொல் – does he think about me (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), ஓ – அசைநிலை, an expletive, தோழி – O friend, கிள்ளை – parrot, Palaeornis, வளைவாய்க் கொண்ட – holding on its curved beak (, வளைவாய் – வினைத்தொகை), வேப்ப ஒண் பழம் – a bright fruit of a neem tree, Azadirachta indica, புது நாண் நுழைப்பான் – a goldsmith who puts a new thread through (உ. வே. சா), putting a new thread through, a woman who puts it through (சோமசுந்தரனார்), நுதி மாண் – fine tipped, perfect tips, வள் உகிர் – sharp nails, பொலம் கல – for a gold jewel (kāsu mālai), ஒரு காசு – one coin, ஏய்க்கும் – it resembles, நிலங்கரி – burned/dried earth, கள்ளியங் காடு – wasteland with euphorbia tirucalli, milk hedge, milk bush, common prickly pear cactus (அம் – சாரியை), இறந்தோரே – the man who went

குறுந்தொகை 68, அள்ளூர் நன்முல்லையார், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின்
ஊழ்ப்படு முது காய் உழை இனம் கவரும்
அரும்பனி அச்சிரம் தீர்க்கும்
மருந்து பிறிதில்லை, அவர் மணந்த மார்பே.

Kurunthokai 68, Allūr Nanmullaiyār, Kurinji Thinai – What the heroine said to her friend
To heal the pain of this cold, early
dew season,
when herds of deer attack mature
pods of uzhunthu plants, whose
red stems look like the legs of quails,
there is no other medicine but his
chest that embraced me.

Notes:  The heroine expressed her frustration since her lover had not arrived in the early winter season.  தலைவன் முன்பனி பருவத்தும் வராமையால் பெரிதும் வருந்திய தலைவி தனது ஆற்றாமையைத் தோழியிடம் கூறியது.  அள்ளூர் பாண்டிய நாட்டின் ஊர் – பிண்ட நெல்லின் அள்ளூர் (அகநானூறு 46).  இரா. இராகவையங்கார் உரை – மார்பை பனி என்றதால் பனி நோயாயிற்று.  புலத்தின்கண் வித்திய உழுந்து பூத்தற்கு முன்னர் வருவமென்று தெளித்துப் போனவர் அது முதுகாய் விட்டு உழையினங் கவரும் போதும் வந்திலர் என்பது கருதிக் கூறினாள்.  இறைச்சி – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – மானினம் உழுந்தின் காயைக் கவரும் அச்சிரம் என்றதனானே, விலங்கும் தனக்கு வேண்டிய நுகர்ச்சியை இனத்தோடு பெற்று மகிழாநிற்கும் இக்காலத்து, யானே தனித்து எவ்வகை நுகர்ச்சியும் இன்றித் துன்பமுறலானேன்; என் செய்வேன்! என்பதாம்.

Meanings:   பூழ்க்கால் அன்ன – like legs of quails, காடை (பூழ் – குறும்பூழ் என்பதன் குறை), செங்கால் உழுந்தின் – of red stemmed black-gram plants, Phaseolus mungoglaer (old name), Vigna mungo, ஊழ்ப்படு முது காய் – overripe pods, உழை இனம் கவரும் – deer herds seize, deer herds eat, அரும்பனி – harsh cold, அச்சிரம் தீர்க்கும் – to end the sorrow caused by the early dew season (அச்சிரம் – ஆகுபெயர்), மருந்து பிறிதில்லை – there is no other medicine, there is no other cure, அவர் மணந்த மார்பு – his chest that embraced me, ஏ – பிரிநிலை, exclusion, தேற்றமுமாம், it is also clarity

குறுந்தொகை 69, கடுந்தோட் கரவீரனார், குறிஞ்சித் திணை  – தோழி தலைவனிடம் சொன்னது
கருங்கண் தாக் கலை பெரும்பிறிது உற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி,
ஓங்கு வரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட! நடுநாள்  5
வாரல், வாழியோ! வருந்துதும் யாமே.

Kurunthokai 69, Kadunthōtkaraveeranār, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
O man from the mountain slopes
where a leaping, black-eyed male
monkey died, and unable to bear
the pain of widowhood, his loving
mate gave their strong, naive child
to their troop and jumped from a
tall mountain peak and killed herself!

May you live long!

Please do not come at night.
We will be greatly distressed if you do!

Notes:  The heroine’s friend refused night tryst.  தோழி இரவுக்குறி மறுத்தது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தாக்கலை என்றதன்கண் தாவுதற் தொழில் பெரும்பிரிதிற்குக் குறிப்பேதுவாய் நின்றது.  கொம்பிழக்காது தாவும் தொழில் வல்ல குரங்கும் தப்பி வீழ்ந்து பெரும்பிறிதுற்றது என்றவாறு.  எனவே, இருள் செறிந்த நெறியின் ஏதம் எடுத்துக்காட்டினாள் ஆயிற்று.  இறைச்சி – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – பெண் குரங்கு கைம்மையைக் கைக்கொள்ளாது அடுக்கத்துப் பாயும் சாரனாடன் என்றததானே,நின் மலையகத்து அஃறிணையாகிய விலங்கும் பேரறிவு உடையதாய் நீ மட்டிலும் களவைக் காதலித்து நல்லறமாகிய இல்லறத்தைக் கைக்கொண்டிலை; ஆகலின் நின் தகுதிக்கு இது தகாது என்பதாம்.  பறழ் – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1).

Meanings:  கருங்கண் – black eyes, தாக் கலை – leaping male monkey, strong male monkey, பெரும்பிறிது – death, big separation, உற்றென – since it attained, கைம்மை உய்யா – unable to shed the pain of widowhood, காமர் மந்தி – loving female monkey, கல்லா வன் பறழ் – untrained strong child, a child that has not learned to leap on trees and choose its own food etc. கிளைமுதல் சேர்த்தி – giving the child to relatives, ஓங்கு வரை அடுக்கத்து – in the tall peak of the mountain ranges, பாய்ந்து உயிர் செகுக்கும் – jumped and killed herself, சாரல் – mountain slopes, நாட – O man from such country, நடுநாள் – midnight, வாரல் – do not come (வாரல் – அல்லீற்று எதிர்மறை வியங்கோள் வினைமுற்று), வாழி – may you live long, ஓ – அசைநிலை, an expletive, வருந்துதும் யாம் – we will feel sad, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 70, ஓரம்போகியார், குறிஞ்சித் திணை  – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
ஒடுங்கு ஈர் ஓதி ஒண்ணுதல் குறுமகள்
நறும் தண் நீரள் அணங்கினளே,
இனையள் என்று அவள் புனை அளவு அறியேன்,
சில மெல்லியவே கிளவி,
அணை மெல்லியள், யான் முயங்கும் காலே.  5

Kurunthokai 70, Ōrampōkiyar, Kurinji Thnai What the hero said to his heart
I am unable to describe with
words the traits of the fragrant,
cool young woman with tied,
oiled hair and bright forehead,
who causes sorrow when separated.
She is of few, delicate words and as
soft as a quilt when I embrace her.

Notes:  The hero said this to his heart after uniting with the heroine.   புணர்ந்து நீங்கும் தலைவன் தன் நெஞ்சிடம் கூறியது.  தமிழண்ணல் உரை – தலைவன் தான் ஐம்புல இன்பமும் ஒருங்கே பெற்றதை இதில் குறிப்பாக வெளிப்படுத்துகிறான்.  ஓதியும் ஒண்ணுதலும் கண்ணுக்கு இன்பம்; நறுந்தண் நீரள் முகர்தற்கு இன்பம்;  மெல்லிய கிளவி செவிக்கு இன்பம்; அணை மெல்லியளாதல் தொடுவதற்கு இன்பம்; முயங்குதல் குறிப்பால் சுவைக்கும் இன்பம்.  ஒடுங்கு ஈர் ஓதி (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இருபுறமும் ஒடுங்கிய நெய்ப்புடைய கூந்தல், உ. வே. சாமிநாதையர் உரை – ஒடுங்கிய நெய்ப்புடைய கூந்தல், ஐவகைக் கூந்தற் பகுப்பில் ஒன்றாகிய சுருளை, இரா. இராகவையங்கார் உரை – இடத்தும் வலத்தும் ஒடுங்கிய ஈர்ந்த கூந்தல், தமிழண்ணல் உரை – ஒடுக்கி கொண்டையாக முடித்த எண்ணெய் பூசிய நெய்ப்புடைய கூந்தல்.

Meanings:  ஒடுங்கு – controlled, curly, tied, ஈர் ஓதி – oiled hair, bright hair, ஒண்ணுதல் குறுமகள் – the young woman with a bright forehead, நறும் – fragrant, தண் – cool, நீரள் – young woman with attributes, அணங்கினள் – she gives me sorrow, ஏ – அசைநிலை, an expletive, இனையள் என்று – that she is such, அவள் புனை அளவு அறியேன் – I don’t know the limits to describe her beauty, சில மெல்லிய – few delicate, ஏ – அசைநிலை, an expletive, கிளவி – words, அணை மெல்லியள் – she is soft like a cotton filled pillow/mattress (பஞ்சணை), யான் முயங்கும் கால் – when I embrace her, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 71, கருவூர் ஓதஞானியார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
மருந்தெனின் மருந்தே, வைப்பெனின் வைப்பே,
அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இள முலைப்
பெருந்தோள் நுணுகிய நுசுப்பின்
கல் கெழு கானவர் நல்குறு மகளே.

Kurunthokai 71, Karuvūr Ōthagnāniyār, Pālai Thinai – What the hero said to his heart
The daughter, borne by a man
from the forest with mountains,
her arms wide, waist thin,
young breasts large and pretty
with budding yellow spots,
is cure to me if I want to be healed,
and riches to me if I want wealth.

Notes:  The hero said this to his heart and avoided leaving to earn wealth.  பொருள் ஈட்டுதற்பொருட்டுத் தலைவியைப் பிரிய எண்ணிய நெஞ்சிடம் தலைவன் கூறிச் செலவு அழுங்கியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – வனப்பும் பெருமையும் ஒருங்கே உடைய என்பான் அம் பகட்டு இள முலை என்றான்.  பின்றைக்கு வேண்டுமென வைக்கப்படுத்தலின் வைப்பு என்பது செல்வத்திற்கு ஏதுப் பெயராகிற்று.  இரா. இராகவையங்கார் உரை – மருந்தும் வைப்பும் இன்பமும் என்னும் இம்மூன்றும் சுணங்கையும் முலையையும் தோளையும் நுசுப்பையுங் கொண்டு எனக்குரிய மகளாக இயைந்திருக்க ஈண்டிருந்து துய்த்தல்விட்டுப் புறம் போவது எற்றுக்கென்று செலவு அழுங்கினான்.

Meanings:  மருந்தெனின் – if I need to heal, மருந்து – she is medicine, cure, ஏ – அசைநிலை, an expletive, தேற்றம், certainty, வைப்பெனின் – if I need wealth, வைப்பு – she is wealth, ஏ – அசைநிலை, an expletive, தேற்றம், certainty, அரும்பிய சுணங்கின் – with budding pallor spots, with budding yellow spots, அம் – beautiful, பகட்டு – proud, large and pretty, இள முலை – young breasts, பெருந்தோள் – wide shoulders, thick arms, நுணுகிய நுசுப்பின் – with a thin waist, கல் கெழு கானவர் – man from the forest with rocks, man from the forest with mountains, நல்குறு மகள் – பெற்ற மகள், the daughter he bore, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 72, மள்ளனார், குறிஞ்சித் திணை – தலைவன் தோழனிடம்  சொன்னது
பூ ஒத்து, அலமரும் தகைய ஏ ஒத்து,
எல்லாரும் அறிய நோய் செய்தனவே,
தேமொழித் திரண்ட மென்தோள் மா மலைப்
பரீஇ வித்திய ஏனல்
குரீஇ ஓப்புவாள் பெரு மழைக் கண்ணே.  5

Kurunthokai 72, Mallanār, Kurinji Thinai – What the hero said to his friend
Her large, moist, dancing eyes
that resemble flowers, piercing
like arrows, wounded me deeply,
plain for all to see,
the young woman of sweet words and
thick, delicate arms, who chases birds
that come to eat the seeded millet
in the field dotted with cotton plants
in the soaring mountains.

Notes:  The hero who was pining for the heroine thinking about their union, said this to his friend.  இயற்கைப் புணர்ச்சி எய்திப் பிரிந்த பின்னர் தலைவியை எய்தப்பெறாமையால் வருந்திய தலைவனிடம் வேறுபாடு கண்டு வினவிய தோழனுக்கு உரைத்தது.  உ. வே. சாமிநாதையர் உரை – கண்கள் பூவைப்போலக் காண்டற்கு இனிமை தந்து தாம் வெகுண்டன போலச் சுழலுமாயினும் என்பால் அம்பு போற் கொடியவனாகி அவ்வம்பாலுண்டாகி யாவரும் அறியும் புண் போன்ற காம நோயைத் தந்தனவென்று பொருளை விரித்துக் கொள்க.

Meanings:  பூ ஒத்து – being like flowers, blue waterlilies, அலமரும் தகைய – being of whirling nature, ஏ ஒத்து – being like arrows, எல்லாரும் அறிய – for everyone to know, நோய் செய்தன – they have caused me this love disease, they have caused me this love affliction, ஏ – அசைநிலை, an expletive, தேமொழி – sweet words, திரண்ட – thick, rounded, மென்தோள் – delicate arms, மா மலை – lofty mountains, பரீஇ – பருத்தி, cotton (சொல்லிசை அளபெடை), வித்திய – seeded, ஏனல் – செந்தினை, red millet, Panicum indicum or Setaria italica, குரீஇ ஓப்புவாள் – the young woman who chases birds (குரீஇ – இயற்கை அளபெடை), பெருமழைக் கண் – big moist eyes, big cool eyes, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 73, பரணர், குறிஞ்சித் திணை  – தோழி தலைவியிடம் சொன்னது
மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ
அழியல் வாழி தோழி, நன்னன்
நறு மா கொன்று நாட்டில் போகிய
ஒன்றுமொழிக் கோசர் போல,
வன்கண் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே.  5

Kurunthokai 73, Paranar, Kurinji Thinai – What the heroine’s friend said to her
May you live long, my friend!
You desire the chest of your lover.
Do not feel distressed.

We need to devise a cruel plan
for a little while,
like the Kosars who vowed
and entered Nannan’s country,
and chopped his fragrant mango tree.

Notes:  The heroine’s friend who refused the hero day tryst first and then night tryst later as a way of urging marriage, explained the matter to the heroine.  தலைவன் பகலில் வருவதை மறுத்துரைத்து இரவில் வரச் செய்து, பின்னர் அதனையும் மறுத்து, வரைந்து கொள்ளும் பொருட்டு அங்ஙனம் செய்வதன் இன்றியமையாமையைத் தலைவிக்குக் கூறியது.  வரலாறு:  நன்னன், கோசர்.  Nannan was the king of a small region.

Meanings:  மகிழ்நன் மார்பே – the chest of your lover (ஏ – பிரிநிலை, exclusion), வெய்யை நீ – you desire, (ஆல் – அசைநிலை, an expletive), அழியல் – do not feel sorry for that, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – friend, நன்னன் நறு மா கொன்று – chopped off King Nannan’s (a king in a region near Kongu Nadu) fragrant tutelary mango tree, Mangifera indica, நாட்டில் போகிய – entered his country, ஒன்றுமொழிக் கோசர் போல – like the Kosars who vowed, like the Kosars of big words, வன்கண் – cruel, சூழ்ச்சியும் – scheming, analyzing, வேண்டுமால் – வேண்டும் ஆல், need (ஆல் அசைநிலை, an expletive), சிறிது – a little bit, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 74, விட்டகுதிரையார், குறிஞ்சித் திணை  – தோழி தலைவியிடம் சொன்னது
விட்ட குதிரை விசைப்பினன்ன
விசும்பு தோய் பசுங்கழைக் குன்ற நாடன்,
யாம் தன் படர்ந்தமை அறியான், தானும்
வேனில் ஆன் ஏறு போலச்
சாயினன் என்ப நம் மாண் நலம் நயந்தே.  5

Kurunthokai 74, Vittakuthiraiyār, Kurinji Thinai – What the heroine’s friend said to her
The lord of the mountains,
……….where a bent, green bamboo
……….springs to the sky like a horse
……….that has been unleashed,
does not know that we are wasting
away, thinking about him.

They say that he has grown thin,
pining for your great beauty, like a
bull that is tethered in hot summer.

Notes:  The heroine’s friend appealed to the heroine to accept the hero who sought her help to attain the heroine.  தோழியின்பால் தலைவன் குறை இரந்தானாக அதற்கு உடன்பட்ட தோழி ‘தலைவனை ஏற்றுக்கொள்க’ என்பதுப் பட தலைவிக்குக் கூறியது.  நற்றிணை 78 – புள்ளு நிமிர்ந்தன்ன பொலம் படைக் கலி மா, குறுந்தொகை 54 – கான யானை கைவிடு பசுங்கழை மீன் எறி தூண்டிலின் நிவக்கும், குறுந்தொகை 74 – விட்ட குதிரை விசைப்பினன்ன விசும்பு தோய் பசுங்கழை, புறநானூறு 302 – வெடி வேய் கொள்வது போல ஓடித் தாவுபு உகளும் மாவே, ஐங்குறுநூறு 278 – கழைக்கோல் குரங்கின் வன் பறழ் பாய்ந்தன இலஞ்சி மீன் எறி தூண்டிலின் நிவக்கும்.  என்ப (5) – தமிழண்ணல் உரை – கூறுவர், பொ. வே. சோமசுந்தரனார் உரை, உ. வே. சாமிநாதையர் உரை – அசைநிலை.

Meanings:  விட்ட குதிரை – released horse, விசைப்பின் அன்ன – like it springs up (விசைப்பின் – இன் சாரியை), விசும்பு தோய் – sky touching, பசுங்கழை – green bamboo, Bambusa arundinacea, குன்ற நாடன் – the lord of the mountains, யாம் தன் படர்ந்தமை அறியான் – he does not understand our sorrow thinking about him, தானும் – also he, வேனில் – summer, ஆன் ஏறு போல – like a cow’s bull, சாயினன் – he has become thin, என்ப – they say, அசைநிலை, an expletive, நம் மாண் நலம் நயந்து – longing for your great beauty, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 75, படுமரத்து மோசிகீரனார், மருதத் திணை – தலைவி தலைவனின் தூதுவனாக வந்த பாணனிடம் சொன்னது
நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ?
ஒன்று தெளிய நசையினம் மொழிமோ!
வெண்கோட்டு யானை சோணை படியும்
பொன் மலி பாடலி பெறீஇயர்,
யார் வாய்க் கேட்டனை காதலர் வரவே.  5

Kurunthokai 75, Padumarathu Mōsikeeranār, Marutham Thinai – What the heroine said to the messenger bard
Did you see him?
Or, did you hear from
someone who saw him?
I desire to know the truth.
Tell me exactly what you know.

May you receive gold-filled Pādali
City where elephants with white
tusks bathe in the Sōnai River!

From whose mouth
did you hear of my lover’s coming?

Notes:  The heroine said this to her husband’s messenger bard who informed her of the hero’s arrival.   தலைவன் வரவு உணர்த்திய பாணற்கு தலைவி உரைத்தது.  அகநானூறு 265 – பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர் சீர் மிகு பாடலி.  யானை சோணை படியும் (3) – உ. வே. சாமிநாதையர் உரை – சோணை ஆற்றில் துளைந்து விளையாடும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – சோணை ஆற்றில் நீராடும்.  பாடலி (4) – அகநானூறு 265 – சீர் மிகு பாடலிக் குழீஇக் கங்கை நீர் முதல் கரந்த நிதியம் கொல்லோ?

Meanings:  நீ கண்டனையோ – did you see, கண்டார்க் கேட்டனையோ – did you hear from someone who saw, ஒன்று தெளிய – to know clearly the truth, நசையினம் – I desire (தன்மைப் பன்மை, first person plural), மொழிமோ – tell me (மோ – முன்னிலை அசை, an expletive of the second person), வெண்கோட்டு யானை – white-tusked elephants, சோணை படியும் – bathing in Sōnai river, playing in the Sōnai river, பொன் மலி – lots of gold, பாடலி – Pataliputra city, பெறீஇயர் – may you receive (இயர் வியங்கோள் வினைமுற்று விகுதி, verb ending with a command, வாழ்த்துப்பொருளில் வந்தது, used to praise, சொல்லிசை அளபெடை), யார் வாய் கேட்டனை – from whose mouth did you hear, காதலர் வரவு – my lover’s arrival, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 76, கிள்ளிமங்கலம் கிழார், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
காந்தள் வேலி ஓங்கு மலை நல் நாட்டுச்
செல்ப என்பவோ, கல் வரை மார்பர்
சிலம்பிற் சேம்பின் அலங்கல் வள் இலை
பெருங்களிற்றுச் செவியின் மானத் தைஇத்
தண் வரல் வாடை தூக்கும்  5
கடும் பனி அச்சிரம் நடுங்கு அஞர் உறவே.

Kurunthokai 76, Killimangalam Kizhār, Kurinji Thinai – What the heroine said to her friend
They say that my lover, with
a chest like a mountain filled
with boulders,
will leave for his fine country
with glory lily hedges and soaring
mountains, in the early dew season,

causing me to tremble in distress,
as the cold northerly winds arrive
to caress the thick, swaying taro
leaves growing on mountain slopes,
looking like ears of big elephants.

Notes:  The heroine said this to her friend who went to inform her about the hero going away for some time, indicating that she was aware of him leaving.  பிரிவு உணர்த்தச் சென்ற தோழிக்கு, அவர் பிரிவு முன்னர் உணர்ந்த தலைவி, புலந்து கூறியது.  இரா. இராகவையங்கார் உரை – ‘கல்வரை மார்பர் செல்ப என்பவோ’ என்புழிக் கல்வரை மார்பர் கல் நெஞ்சினர் என்றவாறு.

Meanings:  காந்தள் வேலி – glory lily fences, glory lily hedges, Gloriosa superba, ஓங்கு மலை – lofty mountains, நல் நாட்டு – to the fine country, செல்ப – he will leave, என்ப – they say, ஓ – இரக்கக் குறிப்பு, அசைநிலையாம், கல் வரை மார்பர் – the man with a chest like a stone filled mountain, சிலம்பில் – on the mountain slopes,  சேம்பின் – taro plant’s, yam plant’s, colocasia esculenta, அலங்கல் – moving, வள் இலை – thick leaves, பெருங்களிற்றுச் செவியின் மான – like the ears of big male elephants (செவியின் – இன் சாரியை, மான – உவம உருபு, a comparison word), தைஇ – caressing (சொல்லிசை அளபெடை), தண் – cool, வரல் – arriving, வாடை – northerly winds, தூக்கும் – it moves, it blows, கடும் பனி – harsh cold, அச்சிரம் – early dew season, நடுங்கு – trembling, அஞர் – sorrow, உறவு – to attain, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 77, மதுரை மருதன் இளநாகனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி, யாவதும்
தவறு எனின் தவறோவிலவே, வெஞ்சுரத்து
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை
நெடு நல் யானைக்கு இடு நிழலாகும்
அரிய கானம் சென்றோர்க்கு  5
எளியவாகிய, தட மென்தோளே.

Kurunthokai 77, Mathurai Maruthan Ilanākanār, Pālai Thinai, That the heroine said to her friend
Listen to me, O friend!
If my curved, delicate arms
are blamed for becoming thin,
……….since he left on the harsh
……….wasteland forest path where
……….piles of stones and leaves under
……….which dead travelers are buried
……….offer shade to big, fine elephants,
it is not their fault.

Notes:  The heroine who could not bear separation said this to her friend.  பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைவி, தோழியிடம் சொல்லியது.  அகநானூறு 267 – சுரம் பல இறந்தோர் தாம் பழி உடையர் அல்லர் நாளும் நயந்தோர்ப் பிணித்தல் தேற்றா வயங்கு வினை வாள் ஏர் எல் வளை நெகிழ்த்த தோளே தோழி தவறு உடையவ்வே.  அம்ம (1) – உ. வே. சாமிநாதையர் உரை – இடைச்சொல், ஒன்று சொல்வேன், பொ. வே. சோமசுந்தரனார் உரை – கேட்பித்தற்கண் வந்தது, ‘அம்ம கேட்பிக்கும்’ (தொல்காப்பியம், இடையியல் 28).  தவறோவிலவே (2) – உ. வே. சாமிநாதையர் உரை – தவறு இல்லை (ஓகாரம் அசைநிலை), இரா. இராகவையங்கார் உரை – தவறு ஒவில (தவறு நீங்கில), தவறோ இல என்பதும் ஆம்.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம். உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம். உரியியல் 26). பதுக்கை – உ. வே. சாமிநாதையர் உரை – பதுங்கியிருத்தலுக்கு உரியதாகலின் இப்பெயர் பெற்றது போலும்.  அகநானூறு 289 –   உயர் பதுக்கு.

Meanings:  அம்ம – listen to me, இடைச்சொல், a particle, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – O friend, யாவதும் – even a little bit, தவறு எனின் – if blamed as their fault, தவறு – fault, ஓ – அசைநிலை, an expletive, இல – it is not (இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்), ஏ – அசைநிலை, an expletive, வெஞ்சுரத்து – on the harsh wasteland path, உலந்த வம்பலர் – died wayfarers, உவல் இடு – leaves covering, leaves placed, பதுக்கை – a pile of stones and leaves that cover dead bodies, graves covered by piles of rocks and leaves, நெடு நல் யானைக்கு – to the tall fine elephant, இடு நிழலாகும் – they have become shade, அரிய கானம் – harsh forest, சென்றோர்க்கு – for the man who went, எளியவாகிய – they became thin, தட – curved, thick, மென்தோள் – delicate arms, delicate shoulders, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 78, நக்கீரர், குறிஞ்சித் திணை – தலைவனின் தோழன் அவனிடம் சொன்னது
பெருவரை மிசையது நெடு வெள் அருவி
முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பிச்
சிலம்பின் இழிதரும் இலங்கு மலை வெற்ப!
நோதக்கன்றே, காமம் யாவதும்
நன்றென உணரார் மாட்டும்  5
சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே.

Kurunthokai 78, Nakkeerar, Kurinji Thinai – What the hero’s friend said to him
O lord of the glorious mountains
where tall white waterfalls
flow down slopes from lofty peaks,
roaring like drums of wise dancers!

It is painful to see that love is very
ignorant.  It goes and stays with those
who don’t understand it even a little.

Notes:  The hero’s friend said this to him.    தோழன் தலைவனிடம் சொன்னது.   . வே. சுப்பிரமணியன் உரை – காமம் தன்னைச் சிறிதும் நல்லது என எண்ணாதவரிடத்தும் தானே சென்று தங்கும் மிகப்பெரிய பேதைமை அறியாமை உடையது.  அது மிகவும் நொந்து வெறுக்கத்தக்கது.  தமிழண்ணல் உரை – காமம் தன்னைச் சிறிதும் ‘நல்லது’ என எண்ணாதவரிடத்தும் தானே சென்று, அவரிடம் தங்கும்படியான மிகப் பேதைமையை உடையது.  காமத்தை அறிவில்லாதது எனப் பாங்கன் திட்டுகின்றான்.  காமத்தின் இயல்பை இது விளக்குகின்றது.

Meanings:  பெருவரை – lofty mountains, மிசையது நெடு வெள் அருவி – tall white waterfalls that are above, முதுவாய்க் கோடியர் – wise artists, wise musicians/dancers, முழவின் ததும்பி – roaring like drums (முழவின் – இன் உருபு ஒப்புப் பொருளது), சிலம்பின் இழிதரும் – they come down the mountain slopes, இலங்கு மலை வெற்ப – O lord of the splendid mountains, நோதக்கன்று – it is painful, ஏ – அசைநிலை, an expletive, காமம் – love, யாவதும் – even a little bit, நன்றென உணரார் மாட்டும் – with those who don’t know that it is good, சென்று – it goes, ஏ – அசைநிலை, an expletive, நிற்கும் – it stays, பெரும் பேதைமைத்து – it is very ignorant, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 79, குடவாயில் கீரனக்கனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கான யானை தோல் நயந்து உண்ட
பொரி தாள் ஓமை வளி பொரு நெடுஞ்சினை
அலங்கல் உலவை ஏறி ஒய்யெனப்
புலம்புதரு குரல புறவுப் பெடை பயிரும்
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்ச்  5
சேந்தனர் கொல்லோ, தாமே யாம் தமக்கு
ஒல்லேம் என்ற தப்பற்குச்
சொல்லாது அகறல் வல்லுவோரே?

Kurunthokai 79, Kudavāyil Keeranakkanār, Pālai Thinai – What the heroine said to her friend
Does he stay in a beautiful
village in the wasteland,
where male pigeons call their
females with loud, plaintive coos,
seated on tall dried branches
of ōmai trees with rough trunks,
whose boughs sway in blowing wind,
and whose barks are stripped by wild
forest elephants that desire and eat
them,
my lover who was capable of leaving
without telling me, because I made
the mistake of not consenting?

Notes:  The heroine who thought about her lover who had gone to earn wealth, said this to her friend.  பொருள்வயின் பிரிந்த தலைவனை நினைந்த தலைவி தோழிக்குச் சொல்லியது.  இறைச்சி – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – புலம்புதரு குரல்வாய்ப் புறவுப் பேடை பயிரும் அத்தம் என்றதனானே, ‘இயற்கையில் நந்திறத்து பேரன்புடையார், அதனைக் கேட்டுப் பொருள் கடைக்கூட்டாது மீண்டிடுவாரோ? என்பதாம்.  புறவு – புறா புற என்றாகி உகரம் ஏற்றது. குறியதன் இறுதிச் சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 32).  பெடை – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  கான யானை – forest elephant, தோல் – bark, நயந்து உண்ட – desired and ate, பொரி தாள் ஓமை – ōmai trees with rough cracked trunks, Sandpaper tree,  Dillenia indica, வளி பொரு – wind blowing, நெடுஞ்சினை – tall branches, அலங்கல் – moving, உலவை ஏறி – climbing on the dry tree, ஒய்யென – rapidly (விரைவுக்குறிப்பு), புலம்புதரு குரல – with painful crying sounds, with lonely crying sounds, புறவுப் பெடை பயிரும் – male pigeons/doves calling their females (புறவு – புறா புற என்றாகி உகரம் ஏற்றது), அத்தம் – wasteland, நண்ணிய – existing, is there, அம் குடிச் சீறூர் – village with beautiful settlements, சேந்தனர் கொல் – does he stay there (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), ஓ – அசைநிலை, an expletive, தாம் – அசைநிலை, an expletive, ஏ – அசைநிலை, an expletive, யாம் தமக்கு ஒல்லேம் என்ற – that I would not agree to his leaving (யாம், ஒல்லேம் – தன்மைப் பன்மைச் சொற்கள், first person plural words), தப்பற்கு – for the mistake, சொல்லாது அகறல் வல்லுவோர் – the man who was capable of not telling before leaving, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 80, ஔவையார், மருதத் திணை – பரத்தை சொன்னது, தலைவியின் தோழியர் கேட்கும்படி
கூந்தல் ஆம்பல் முழு நெறி அடைச்சிப்
பெரும் புனல் வந்த இருந்துறை விரும்பி
யாம் அஃது அயர்கம் சேறும், தான் அஃது
அஞ்சுவது உடையள் ஆயின், வெம்போர்
நுகம்படக் கடக்கும் பல் வேல் எழினி  5
முனை ஆன் பெரு நிரை போலக்
கிளையொடும் காக்க, தன் கொழுநன் மார்பே.

Kurunthokai 80, Avvaiyār, Marutham Thinai – What the concubine said, as the heroine’s friend listened nearby
I will adorn my hair
with whole white waterlilies
and go with desire to the huge
bathing ports
where fresh floods have arrived,
and play with him.

If she fears that,
let her guard her lover’s chest
with her kith and kin,
like Ezhini of many spears, victorious
amidst enemies in just battles, who
protected his cows in the battlefield.

Notes:  The hero’s mistress said this for the heroine’s friends to listen, on hearing that the heroine had talked disrespectfully about her.  தலைவி தன்னைப் புறங்கூறினாள் எனக் கேட்ட பரத்தை, அது பொறாது, தலைவியின் தோழியர் கேட்பத் தலைவியைப் பழித்தது.  மலரின் புறவிதழ் நீக்குதல் – புறநானூறு 116 – முழு நெறி, கலித்தொகை 143 – நெய்தல் நெறிக்க, குறுந்தொகை 80 – முழு நெறி, நற்றிணை 138 – பூவுடன் நெறிதரு.  எழினி என்பது அதியமான் நெடுமான் அஞ்சி – அகநானூறு 105 – பல் வேல் எழினி கெடல் அருந்துப்பின் விடு தொழில் முடிமார் கனை எரி நடந்த கல் காய் கானத்து வினை வல் அம்பின் விழுத்தொடை மறவர் தேம் பிழி நறுங்கள் மகிழின் முனை கடந்து வீங்கு மென் சுரைய ஏற்று இனம் தரூஉம், அகநானூறு 372 நெடுநெறிக் குதிரைக் கூர் வேல் அஞ்சி கடுமுனை அலைத்த கொடு வில் ஆடவர் ஆ கொள் பூசலின்.  நுகம்பட (5) – உ. வே. சாமிநாதையர் உரை – நடுநிலைமையுண்டாகும்படி, நுகம் – நுகத்தின் தன்மை, நடுவு நிலைமை, இங்கே ஆகுபெயர், நச்சினார்க்கினியர் உரை மலைபடுகடாம் 87 – வலியுண்டாக.  வரலாறு:  எழினி.  முழு நெறி (1) – உ. வே. சாமிநாதையர் உரை – புறவிதழ் ஒடித்த முழுப்பூ இதழ் ஓடியாத பூ எனினுமாம்.

Meanings:  கூந்தல் – hair, ஆம்பல் – white waterlilies, முழு நெறி – full flowers after removing the calyx/sepals, full flowers after removing the outer petals, full flowers with perfect petals, அடைச்சி – wearing, adorning, பெரும் புனல் வந்த – where floods came, இருந்துறை விரும்பி – desired the big port, யாம் அஃது அயர்கம் – I will play there (யாம் – தன்மைப் பன்மை, first person plural, அயர்கம் – முற்றெச்சம்), சேறும் – I will go, தன்மைப் பன்மை, first person plural, தான் – she, அஃது – that, அஞ்சுவது உடையள் ஆயின் – if she is afraid of that, வெம்போர் – harsh battles, desired battles, நுகம்பட – in a just manner, கடக்கும் – wins, பல் வேல் எழினி – Ezhini with many spears, முனை – battlefield, ஆன் – cows, பெரு நிரை போல – like big herds, கிளையொடும் காக்க – let her protect along with her relatives (கிளையொடும் – உம்மை இழிவு சிறப்பு), தன் கொழுநன் மார்பு – her husband’s chest, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 81, வடம வண்ணக்கண் பேரிசாத்தனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
இவளே நின் சொல் கொண்ட என் சொல் தேறிப்
பசு நனை ஞாழல் பல் சினை ஒரு சிறைப்
புது நலன் இழந்த புலம்புமார் உடையள்,
உதுக்காண் தெய்ய, உள்ளல் வேண்டும்,
நிலவும் இருளும் போலப் புலவுத் திரைக்  5
கடலும் கானலும் தோன்றும்
மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல்லூரே.

Kurunthokai 81, Vadama Vannakkan Pērisāthanār, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
I trusted your words, and she trusted
my words.  Now she has lost her virtue
next to the cassia trees with many
branches, dense with new buds.  She is
lonely and sad.

Look there!  Our fine little village is right
where the ocean with fish-stinking waves
and shoreline groves appear like the
moon and its darkness, where palmyra
palmyra fronds hang low.

Please think about her.

Notes:  The heroine’s friend said this to the hero who had obtained her help to attain the heroine, but then had not come to see her after that.  தோழியின்பாற் குறை இரந்து அவள் உதவியால் தலைவியைப் பெற்று அவளுடன் கூடிப்பிரிந்த தலைவனிடம் தோழி கூறியது.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  இவள் – she, ஏ – அசைநிலை, an expletive, நின் சொல் கொண்ட – trusting your words, என் சொல் தேறி – trusting my words, பசு நனை ஞாழல் – cassia trees with fresh buds, புலிநகக்கொன்றை, tigerclaw tree, Cassia sophera, பல் சினை – many branches, ஒரு சிறை – on one side, புது நலன் இழந்த – lost her saved virtue, புலம்புமார் உடையள் – she is a lonely young woman (மார் – அசைநிலை இடைச்சொல்), உதுக்காண் – look there (உது – இடைச்சுட்டு), தெய்ய – அசைநிலை, an expletive, உள்ளல் வேண்டும் – think about her, நிலவும் இருளும் போல – like the moon and the darkness around it, புலவுத் திரைக் கடலும் கானலும் – the ocean with stinking waves and the seashore groves, தோன்றும் – appearing, மடல் தாழ் பெண்ணை – female palmyra tree with low fronds, Borassus flabellifer , எம் சிறு நல்லூர் – our small fine town, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 82, கடுவன் மள்ளனார், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
வார் உறு வணர் கதுப்பு உளரிப் புறம் சேர்பு
அழாஅல் என்று நம் அழுத கண் துடைப்பார்
யார் ஆகுவர் கொல் தோழி, சாரல்
பெரும் புனக் குறவன் சிறு தினை மறு கால்
கொழுங்கொடி அவரை பூக்கும்  5
அரும்பனி அச்சிரம் வாராதோரே?

Kurunthokai 82, Kaduvan Mallanār, Kurinji Thinai – What the heroine said to her friend
He used to stand behind me,
stroke my long wavy hair,
wipe my crying eyes
and say, “Do not cry.”

My friend, what will become
of him,
the man who has not returned
in this harsh, early dew season
when farmers on the slopes
have done their second harvest
of tiny millet in their big fields,
and thick avarai vines planted
there have put out blossoms?

Notes:  The heroine said this to her friend who consoled her when she worried that the hero had not come back despite the change in the season.  பருவங்கண்டு வருத்திய தலைவி, ‘அவர் வருவார்’ என வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது.  உ. வே. சாமிநாதையர் உரை – தினைக்கதிரை அரித்த பின் அதன் அடியில் மீட்டும் கிளைத்துக் கதிர் உண்டாகும்.  அதனை மறுகால் என்பர்.  அம்மறுகாலில் விதைத்த அவரை வளர்ந்தது.  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).

Meanings:  வார் உறு – with length (வார் – நீளம், உறு – உடைய), வணர் கதுப்பு – wavy hair, உளரி – run fingers through, புறம் சேர்பு – standing behind, touching my back, அழாஅல் என்று – ‘do not cry’, he said (அழாஅல் – இசைநிறை அளபெடை), நம் அழுத கண் துடைப்பார் – he used to wipe my crying eyes, யார் ஆகுவர் – of what nature will he become, கொல் – அசைநிலை, an expletive, தோழி –  my friend, சாரல் – mountain slopes, பெரும் புனக் குறவன் – mountain dweller with big fields, சிறு தினை – tiny millet, Italian millet, Setaria italicum, மறு கால் – second yield from new branches, second harvest, கொழுங்கொடி – thick creepers, அவரை பூக்கும் – avarai flowers bloom, Field Bean, Dolichos lablab, அரும்பனி அச்சிரம் – early dew season, வாராதோர் – the one who has not come, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 83, வெண்பூதனார், குறிஞ்சித் திணை – தோழி செவிலித்தாயை வாழ்த்தி தலைவிக்கு உணர்த்தியது
அரும் பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப்
பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை,
தம் இல் தமது உண்டன்ன சினைதொறும்
தீம்பழம் தூங்கும் பலவின்
ஓங்கு மலை நாடனை, வரும் என்றோளே.  5

Kurunthokai 83, Vennpoothanār, Kurinji Thinai – What the heroine’s friend said, when she praised the foster mother
May she get rare nectar as her
food!
May she attain the famed world,
our mother who said,
“He’ll come to marry her,”
about the man from the lofty
mountain country,
where sweet jackfruits hang on
every bough,
as sweet as the joy of sharing
and eating with others what one
has earned from one’s home!

Notes:  The heroine’s friend said this to the foster mother, praising her, on hearing from her that the hero was coming to marry the heroine.  தலைவன் தலைவியை வரைந்துகொள்ள வருகின்ற நற்செய்தியைச் செவிலி தோழிக்குக் கூறினாளாக. அச்செய்தியைத் தோழி தலைவிக்குக் கூறி செவிலியை வாழ்த்தியது.  தோழிதானே செவிலி மகளே (களவியல் 123).  குறுந்தொகை 201 – அமிழ்தம் உண்க அயல் இல் ஆட்டி……மலை கெழு நாடனை வரும் என்றாளே.  தம் இல் தமது உண்டன்ன (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தம் இல் இருந்து தமது உண்டன்ன இன்பமுடைய நாடன் என்க, உ. வே. சாமிநாதையர் உரை – தமது முயற்சியால் ஈட்டிய பொருளில் தம் கூற்றை உண்டாற்போன்ற இன்சுவையைத் தருவனவாகி கொம்புதோறும் தொங்குகின்ற பலாமரங்களை உடைய, தமிழண்ணல் உரை – தமது சொந்த வீட்டிலிருந்து தாம் முயன்று தேடிய செல்வத்தைக் கொண்டு உண்பதால் ஏற்படும் இன்பத்தைப்போல் இன்சுவை தருமாறு பலாமரத்தினது கிளைகள்தோறும் இனிய பலாப் பழங்கள் தொங்குகின்றன.  இவ்வின்பத்தைத் தீம்பழத்திற்கு ஏற்றுவாரும் உளர், இரா. இராகவையங்கார் உரை – தம் மனைக்கண்ணே தமக்குரியதென்று நூல் வகுத்ததை உண்டாற்போன்ற இன்பமுடைய நாடன்.  வரும் என்றோளே (5) – உ. வே. சாமிநாதையர் உரை – வரைதற்குரிய பொருளோடு வருவான் என்று கூறியவளாகிய.

Meanings:  அரும் பெறல் அமிழ்தம் – rare to obtain ambrosia, precious nectar (அரும் பெறல் – பெறல் அரும் – பெறுவதற்கு அரிய), ஆர்பதம் ஆக – may it be her food, பெரும் பெயர் உலகம் – the very famous world, the upper world, பெறீஇயர் – may she get (இயர் – வியங்கோள் வினைமுற்று விகுதி, வாழ்த்துப் பொருளில் வந்தது, verb ending with a command, used to praise, சொல்லிசை அளபெடை), ஓ – அசைநிலை, an expletive, அன்னை – mother, தம் இல் தமது உண்டன்ன – like how sweetly like sharing and eating what one has earned from one’s own house, சினைதொறும் – in every branch, தீம்பழம் தூங்கும் – sweet fruits are hanging, பலவின் – with jackfruit trees, ஓங்கு மலை நாடனை – the man from lofty mountain country, வரும் என்றோள் – she said that he will come, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 84, மோசிகீரனார், பாலைத் திணை – செவிலித்தாய் சொன்னது, தலைவி உடன்போக்கில் சென்றபின்
பெயர்த்தனென் முயங்க யான் வியர்த்தனென் என்றனள்,
இனி அறிந்தேன் அது துனி ஆகுதலே,
கழல் தொடி ஆய் மழை தவழ் பொதியில்
வேங்கையும் காந்தளும் நாறி
ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே.  5

Kurunthokai 84, Mōsikeeranār, Pālai Thinai – What the foster mother said, after the heroine eloped
When I embraced her,
she said I smelled of sweat.

Now I know why she hated it.
She who is cooler than white
waterlilies, has on her the
fragrances of vēngai and glory
lily blossoms that grow on
Pothiyil Mountain covered with
clouds, belonging to Āy wearing
whirling bracelets.

Notes:  The heroine’s foster mother said this after her daughter eloped.  மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது.  வேங்கை, காந்தள் ஆகிய மலர்களின் நறுமணம், தலைவி தலைவனுடன் களவு ஒழுக்கத்தில் இருந்தாள் என்பதைக் குறிக்கின்றது.  ஆய் – கடையெழு வள்ளல்களில் ஒருவன்.  ஆய், காரி, பாரி, ஓரி, நள்ளி, அதிகன், பேகன் ஆகியோர் கடையெழு வள்ளல்கள்.  வரலாறு:  ஆய், பொதியில்.  செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல். களவியல் 34).

Meanings:  பெயர்த்தனென் முயங்க யான் – when I embraced her moving her toward me, வியர்த்தனென் – that I smell of sweat, என்றனள் – she said, இனி அறிந்தேன் – now I understand, அது துனி ஆகுதல் – why she hated it, ஏ – அசைநிலை, an expletive, கழல் தொடி ஆய் – king Āy wearing whirling bracelets, மழை – clouds, தவழ் – spreading, பொதியில் – Pothiyil Mountain, வேங்கையும் – Indian kino tree flowers, Pterocarpus marsupium, காந்தளும் – glory lily, நாறி – is fragrant, ஆம்பல் மலரினும் – more than the white waterlily blossoms, தான் – அசைநிலை, an expletive, தண்ணியள் – she is cooler, ஏ – இரக்கக்குறிப்பு

குறுந்தொகை 85, வடம வண்ணக்கன் தாமோதரனார், மருதத் திணை – தோழி தலைவனின் தூதுவனாக வந்த பாணனிடம் சொன்னது
யாரினும் இனியன், பேரன்பினனே,
உள்ளூர்க் குரீஇத் துள்ளு நடைச் சேவல்
சூன் முதிர் பேடைக்கு ஈன் இல் இழைஇயர்
தேம் பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்
நாறா வெண்பூக் கொழுதும்  5
யாண ஊரன், பாணன் வாயே.

Kurunthokai 85, Vadama Vannakkan Thamotharanār, Marutham Thinai – What the heroine’s friend said to the messenger bard
The man from the prosperous town,
……….where a male sparrow with hopping
……….gait cares for his mate, heavy
……….with eggs, plucking leaves from
……….sweet sugarcanes with white flowers
……….with no fragrance, and building her
……….a nest to lay her eggs,
appears, in the words of the bard, to be
sweeter than others and has great love for her.

Notes:  The heroine’s friend refused to listen to the messenger bard sent by the unfaithful hero.  வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தோழி வாயில் மறுத்தது.  பாணன் கூற்றால் வெகுண்டு படர்க்கையில் அவன் கேட்பக் கூறியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஊர்க் குருவி சேவல் சூன்முதிர் பெடைக்குக் கூடு இயற்றும் அன்புடையனவாகும் இயல்பும் தலைவன்பால் இல்லை.  அவன் தன் தலைவியை நீத்துப் பரத்தமையுடையவன் ஆயினான் என்பது.  இரா. இராகவையங்கார் உரை – இவ்வூர்க் குரீஇ மனையுறை குருவியாதலால் தலைவன் பல்கால் இவற்றின் நட்பினைக் கண்டு உள்ளுதல் கூடும் என்று குறித்தாள்.  உள்ளூர் – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை- முன்பின்னாகத் தொக்க.  ஆறன்றொகை.  பேடை – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).

Meanings:  யாரினும் இனியன் – he is sweeter than others, பேரன்பினன் – he is very kind, ஏ – அசைநிலை, an expletive, உள்ளூர்க் குரீஇ – sparrow in town (குரீஇ – இயற்கை அளபெடை), துள்ளு நடைச் சேவல் – a male with a hopping gait, சூன் முதிர் – fully pregnant, பேடைக்கு – for the female, ஈன் இல் – a nest to lay eggs, இழைஇயர் – to build (சொல்லிசை அளபெடை), தேம் பொதிக் கொண்ட – sweetness filled, with honeycombs (தேம் தேன் என்றதன் திரிபு), தீங்கழைக் கரும்பின் – of sweet sugar cane, நாறா வெண்பூ – white flowers with no fragrance, கொழுதும் – it plucks, யாண ஊரன் – the man from the prosperous town, பாணன் – bard, வாய் – his words, ஆகுபெயர், words, ஏ – பிரிநிலை, exclusion

குறுந்தொகை 86, வெண்கொற்றனார், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
சிறை பனி உடைந்த சேயரி மழைக் கண்
பொறை அரு நோயொடு புலம்பு அலைக் கலங்கிப்
பிறரும் கேட்குநர் உளர் கொல், உறை சிறந்து
ஊதை தூற்றம் கூதிர் யாமத்து,
ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும்,  5
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே?

Kurunthokai 86, Vennkotranār, Kurinji Thinai – What the heroine said to her friend
I am worried and alone, with love’s
painful disease so difficult to bear,
and my moist eyes with red lines
drop welled-up tears.

Are there others like me, who hear
the soft jingling of curved bells with
clappers, tied on cows that shake
their heads again and again to chase
buzzing flies, in this blustery cold
season’s night with heavy rains and
harsh northerly winds?

Notes:  The heroine said this to her friend who worried about her distress when her lover was away.  தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி ஆற்றாள் என வருந்திய தோழியிடம் தலைவி சொன்னது.  உளம்புதல் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அசைதல்.  ஈண்டு ஒலித்தல் என்னும் பொருட்டு.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  சிறை பனி – blocked tears, உடைந்த – broken, dropped (tears), சேயரி – red lines, மழைக் கண் – crying eyes, moist eyes,  பொறை அரு – difficult to bear, நோயொடு – with love disease, புலம்பு அலைக் கலங்கி – distressed due to the sorrow caused by loneliness, பிறரும் கேட்குநர் உளர் கொல் – are there others who will hear (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), உறை சிறந்து – heavy rains, ஊதை தூற்றம் – northerly winds with spray, கூதிர் யாமத்து – in the cold season’s night, ஆன் – cow, நுளம்பு – flies, Musca domestica, உலம்புதொறு – whenever they (the bees) buzz around them, உளம்பும் – the cows shake their heads and sounds are created from the bells, நா நவில் – ringing from the clappers, கொடு மணி – curved bells, harsh bells, நல்கூர் குரல் – soft sounds, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 87, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி கடவுளை வாழ்த்தியது
மன்ற மராஅத்த பேஎ முதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம் என்ப, யாவதும்
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்,
பசைஇப் பசந்தன்று நுதலே,
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தட மென்தோளே.  5

Kurunthokai 87, Kapilar, Kurinji Thinai – What the heroine said to god
They say the kadampam tree
in the public grounds has a fierce,
ancient god who punishes those
who are wicked.

My man from the mountains is not
an evil person to be punished by that
god.  My desire for him has made my
forehead turn sallow.  My weakness
for him has made my curved, delicate
arms to grow thin.   He is not the
reason for these changes.

Notes:  The heroine praised god, fearing that god would punish her lover who promised and then went away.  தலைவன் கடவுள்காட்டிச் சூளுற்றுப் பின் பிரிந்து நீட்டித்தானாக, தலைவனை அக்கடவுள் ஒறுக்குமோ என்று அஞ்சிய தலைவி, கடவுளை வாழ்த்தியது (சூளுற்று – உறுதிமொழி உரைத்து).  உ. வே. சாமிநாதையர் உரை – தலைவன் தலைவியோடு அளவளாவியிருந்த பொழுது கடம்ப மரத்தில் உறையும் கடவுள் மேல் ஆணையிட்டு ‘நின்னைப் பிரியேன்; பிரிவின் ஆற்றேன்” என்று தெளித்தான்.  பின்னர் அவன் பிரிந்து நீட்டித்தானாக அப்பிரிவினால் தலைவி வேறுபாடு உற்றாள்.  தன்னுடைய வேறுபாடுகளுக்குக் காரணம் தலைவன் பிரிந்துறையும் கொடுமையே ஆதலின் அவனால் சூளுறப்பட்ட கடவுள் அவனை ஒதுக்குமென்று அவன் கவன்றான்.  ஆதலின் தலைவன் கொடுமையுடையவன் அல்லன் என்று கூறி அவன் துன்புறாமற் செய்ய வேண்டும் என்று தெய்வத்தை பரவினாள்.  மராஅத்த பேஎ முதிர் கடவுள் (1) – உ. வே. சாமிநாதையர் உரை – பிறர்க்கு அச்சம் செய்தல் முதிர்ந்த தெய்வம்,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – கடம்பில் உறைகின்ற பிறர்க்கு அச்சம் செய்தலில் முதிர்ந்த முருகக்கடவுள், இரா. இராகவையங்கார் உரை- அச்சம் செய்வதில் பழமைப்பட்ட தெய்வம், தமிழண்ணல் உரை – செங்கடம்பு மரத்தில் உறையும் அச்சம் மிக்க தெய்வம்.  பசைஇப் பசந்தன்று (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அவர் என்னை விழைதல் வேண்டி பசந்து காட்டுவதாயிற்று, உ. வே. சாமிநாதையர் உரை – அவரை விரும்பியதால் பசலைபெற்றது.  ஞெகிழ ஞெகிழ்ந்தன்று (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அவர் உள்ளம் என்பால் ஞெகிழ்தலை வேண்டி ஞெகிழ்ந்து காட்டுவதாயிற்று, உ. வே. சாமிநாதையர் உரை – என் மனம் அவர் திறத்து மெலிந்தமையால் மெலிவுற்றது.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம். உரியியல் 24).  அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம். உரியியல் 26).  பேம் – பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆ முறை மூன்றும் அச்சப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 69).

Meanings:  மன்ற – in the common place, மராஅத்த – in a kadampam tree, கடம்பம், Common cadamba, Neolamarckia cadamba (அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது), பேஎ முதிர் – fierce and ancient (பேஎ – இன்னிசை அளபெடை), கடவுள் – god, Murukan, கொடியோர் – those who are evil, தெறூஉம் – will terrorize them (இன்னிசை அளபெடை), என்ப – they say, யாவதும் கொடியர் அல்லர் – he is not harsh at all, எம் குன்று கெழு நாடர் – my man from the mountain country, பசைஇ – desired (சொல்லிசை அளபெடை), பசந்தன்று நுதல் – my forehead has become yellow, my forehead has paled, ஏ – அசைநிலை, an expletive, ஞெகிழ – since my mind weakened for him, since my mind softened for him, ஞெகிழ்ந்தன்று – they became slim (ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி), தட – curved, wide, மென்தோள் – delicate arms, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 88, மதுரைக் கதக்கண்ணனார், குறிஞ்சித் திணை  – தோழி தலைவியிடம் சொன்னது
ஒலி வெள்ளருவி ஓங்கு மலை நாடன்
சிறுகண் பெருங்களிறு வயப்புலி தாக்கித்
தொல் முரண் சோரும் துன் அருஞ்சாரல்
நடுநாள் வருதலும் வரூஉம்,
வடு நாணலமே தோழி நாமே.  5

Kurunthokai 88, Mathurai Kathakkannanār, Kurinji Thinai – What the heroine’s friend said to the heroine
He’ll come in the middle of the night,
crossing difficult slopes,
your lover from the country with lofty
mountains,
where white waterfalls roar down,
and a small-eyed big bull elephant
fights with a strong tiger,
and loses his ancient strength and fails.
We are not ashamed about blame.

Notes:  The heroine’s friend said to her that the hero desires night trysts and that he would  come at night to meet her.  ‘தலைவன் இரவுக்குறியை விரும்புகின்றான்.  இனி இரவில் வருவான்’ என்று தோழி தலைவியிடம் கூறியது.   உ. வே. சாமிநாதையர் உரை – அருவியானது ஓங்கிய மலையிலிருந்து கீழ் இழிந்து நிலப்பரப்பில் உள்ளார்க்குப் பயன்படுவதுபோலத் தலைவன் நெடுந்தூரம் கடந்து வந்து நமக்கு பயன்படுவான்.

Meanings:   ஒலி வெள்ளருவி – loud white waterfalls, ஓங்கு மலை நாடன் – man from the tall mountain country, சிறுகண் – small-eyed, பெருங்களிறு – big bull elephant, வயப் புலி – mighty tiger, தாக்கி – attacking, தொல் – ancient, முரண் – strength, சோரும் – fades away, துன் அருஞ்சாரல் – difficult mountain slopes which are hard to scale by people, நடுநாள் வருதலும் – coming in the middle of the night, வரூஉம் – when he comes (இன்னிசை அளபெடை), வடு நாணலம் – we are not ashamed of blame, ஏ – அசைநிலை, an expletive, தோழி – O friend, நாம் – we, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 89, பரணர், மருதத் திணை – தோழி தனக்குத் தானே சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பாவடி உரல பகுவாய் வள்ளை
ஏதில் மாக்கள் நுவறலும் நுவல்ப
அழிவது எவன் கொல் இப்பேதை ஊர்க்கே,
பெரும்பூண் பொறையன் பேஎமுதிர் கொல்லிக்
கருங்கண் தெய்வம் குட வரை எழுதிய  5
நல் இயல் பாவை அன்ன, இம்
மெல்லியல் குறுமகள் பாடினள் குறினே?

Kurunthokai 89, Paranar, Marutham Thinai – What the heroine’s friend said, as the hero listened nearby
My friend with delicate features,
is like the fine goddess, painted by
a fierce, ancient, black-eyed god
on the west side of Kolli Mountain
of Poraiyan with large jewels.

She sang about about her lover in
vallai songs, when she pounded
grain on a stone mortar with a huge
base and a deep well.

Strangers talk ill of her now.
This is a town with ignorant people.
What’s the use of worrying about it?

Notes:  The heroine’s friend indicated to the hero that slander has risen in town and that he needs to come soon and marry the heroine.  ஊரினர் அலர் தூற்றுகின்றனர்.  விரைவில் வரைதல் வேண்டும் என தலைவனுக்கு உணர்த்தியது.  வரலாறு:  பொறையன், கொல்லி.  ஏதில் மாக்கள் (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அயலோராகிய அறிவிலிகள், அயற்றன்மை உடையார், உ. வே. சாமிநாதையர் உரை – மாக்கள் என்றாள் தலைவியின் நிலையை அறிந்து இரங்கும் தன்மை இன்மையின்.  பெரும்பூண் – உ- . வே. சாமிநாதையர் உரை பேரணிகலன், இது மார்பில் அணியப்படுவது, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெரிய அணிகலனையுடைய.  பேம் – பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆ முறை மூன்றும் அச்சப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 69).

Meanings:  பாவடி – big base, உரல – of the ural, pounding stone’s (அ சாரியை), பகுவாய் – big depression, வள்ளை – vallai songs, ஏதில் மாக்கள் – strangers, நுவறலும் நுவல்ப – they will talk ill, அழிவது எவன் – what is the use of worrying about it, கொல் – அசைநிலை, an expletive, இப்பேதை ஊர்க்கு – because of this town with ignorant people, ஏ – அசைநிலை, an expletive, பெரும்பூண் – big jewels, big necklace, பொறையன் – Chēran, பேஎ முதிர் – fierce and ancient (பேஎ – இன்னிசை அளபெடை), கொல்லி – Kolli Mountain, கருங்கண் தெய்வம் – black eyed god, குட வரை எழுதிய – etched/painted on the west side of the mountain, நல் இயல் பாவை – woman with good traits, அன்ன – like, இம் – this, மெல்லியல் குறுமகள் – women with delicate traits, பாடினள் குறின் – if she sings as she pounds, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 90, மதுரை எழுத்தாளன் சேந்தன்பூதனார், குறிஞ்சித் திணை  – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
எற்றோ வாழி தோழி, முற்றுபு
கறி வளர் அடுக்கத்து இரவின் முழங்கி
மங்குல் மா மழை வீழ்ந்தெனப் பொங்கு மயிர்க்
கலை தொட இழுக்கிய பூ நாறு பலவுக்கனி
வரை இழி அருவி உண் துறைத் தரூஉம்  5
குன்ற நாடன் கேண்மை,
மென்தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றே?

Kurunthokai 90, Mathurai Ezhuthālan Sēnthampoothanār, Kurinji Thinai What the heroine’s friend said to her, as the hero listened nearby
May you live long, O friend!
Is it not strange that your friendship
with the lord of the pepper-growing
mountain,
……….where full clouds roar and come
……….down as heavy rain at night, and
……….a thick-coated male monkey
……….plucks a fragrant jackfruit that
……….slips down into the waterfall
……….and reaches the drinking water
……….shores,
has made your delicate arms thin
but has given you beautiful dignity?

Notes:  The heroine’s friend said this to the heroine since the hero had delayed marrying the heroine.  வரைவு நீட்டித்தவழி தோழி கூறியது.  உ. வே. சாமிநாதையர் உரை – மலை உச்சியிலே கலையால் விரும்பப்பட்ட பழத்தை அதன் கைபடாதபடி அருவியானது பலரும் அறியத் தான் பயன்படும் துறையைச் சேர்ந்து அப்பழம் பயன்பட வைத்ததுப் போல, பிறரால் வரைந்து கோடற்கு உரிய நிலையில் உள்ள தலைவியை அவர் பெறாமற் செய்து தான் மணந்து தான் பிறர்க்குதவி செய்து வாழும் தனது இல்லத்தின்கண் அவளையும் விருந்தோம்பல் முதலிய அறம்புரியச் செய்வதற்குரிய என்பது.  உள்ளுறை – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – பெரிய மழைபொழிதலை அஞ்சிய கலை தொடக் கிளையின் நீங்கிய பலவின் பழத்தை அருவி கொண்டு சென்று ஊருண் துறையில் பயன்படத் தந்தாற்போல், அலரை அஞ்சிய யான் கொண்டுத் தரக் கிளையின் நீங்கிய உன்னைத் தான் கொண்டு சென்று தன் மனையிடத்து வைத்து இல்லறப் பயனுறச் செய்வான் என்பதாம்.

Meanings:  எற்றோ – of what nature is this (ஓகாரம் அசைநிலை), வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – my friend, முற்றுபு – maturing (the full clouds, சூல் முதிர்ந்து), கறி வளர் – black pepper growing, மிளகு, Piper nigrum, அடுக்கத்து – in the mountain ranges, இரவில் முழங்கி – roaring at night, மங்குல் – clouds, மா மழை – heavy rain, வீழ்ந்தென- since it fell, பொங்கு மயிர் – thick haired, with overflowing hair, கலை – male monkey, தொட – as it touched,  இழுக்கிய – slipped, பூ நாறு பலவுக் கனி – flower-fragrant jackfruit, வரை – mountain, இழி அருவி உண் துறைத் தரூஉம் – the waterfall that comes down brings to the drinking water shores (தரூஉம் – இன்னிசை அளபெடை), குன்ற நாடன் – the man from the mountains, கேண்மை – friendship, மென்தோள் – delicate arms,  சாய்த்தும் – despite making them waste away, சால்பு ஈன்றன்று – it has given you dignity, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 91, ஔவையார், மருதத் திணை – தலைவி தன் நெஞ்சிடம் சொன்னது, அல்லது தோழி தலைவியிடம் சொன்னது
அரில் பவர்ப் பிரம்பின் வரிப் புற விளைகனி
குண்டு நீர் இலஞ்சிக் கெண்டை கதூஉம்
தண்துறை ஊரன் பெண்டினை ஆயின்,
பல ஆகுக நின் நெஞ்சில் படரே,
ஓவாது ஈயும் மாரி வண்கைக்  5
கடும் பகட்டு யானை நெடுந்தேர் அஞ்சி
கொன் முனை இரவு ஊர் போலச்,
சிலவாகுக நீ துஞ்சு நாளே.

Kurunthokai 91, Avvaiyār, Marutham Thinai – What the heroine said to her heart or what the heroine’s friend said to her
If you are an agreeable wife to the
man from a town with a cool port,
where kendai fish in deep ponds
gobble striped, ripe fruits of the
pirampu creepers with tangled
stems,
may sorrow spread in your heart!

May your sleeping days be few,
like those in the towns that are near
the fierce battlefields of Anji,
when he fought with his proud bull
elephants and tall chariots, he whose
generous hands are as giving as the
constantly showering rains!

Notes:  The heroine who was sulking since her husband had left her for his concubines, said this to her heart since she still had feelings for him.  Or, what the heroine’s friend said to her.  பரத்தையரிடம் சென்று மீண்டுவந்த தலைவன் வாயில் வேண்டி புக்கவழி, அவன்பால் ஊடலையுடையவளாயினும் தன் நெஞ்சம் அவன் பால் செல்லுவதை அறிந்த தலைவி கூறியது.  தலைவன் பரத்தையரிற் பிரிந்தமையால் ஊடிய தலைவி அவனைக் கண்டதும் நெஞ்சு நெகிழ்ந்ததால் தோழி இடித்துரைத்ததுமாம்.  குறுந்தொகை 364 – அரில் பவர்ப் பிரம்பின்.  அஞ்சி – அதியமான் நெடுமான் அஞ்சி, கடையெழு வள்ளல்களில் ஒருவன்.  ஆய், காரி, பாரி, ஓரி, நள்ளி, அதிகன், பேகன் ஆகியோர் கடையெழு வள்ளல்கள்.  உ. வே. சாமிநாதையர் உரை – பிரம்பின் காய்த்துப் பழுத்து முதிர்ந்த கனியை எளிதிற் கெண்டை பெரும் ஊரன் என்றது, தன்னுடைய சிறப்பால் அன்பும் செல்வமும் முதிர்ந்த தலைவனை பரத்தையர் எளிதிற் கவர்ந்து கொள்வர் என்பது.  கொன் – அச்சம் பயம் இலி காலம் பெருமை என்று அப் பால் நான்கே கொன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 6).  கடையெழு வள்ளல்கள் – ஆய், பாரி, காரி, ஓரி, அதிகன், பேகன், நள்ளி.  பெண்டினையாயின் (3) – பொ.வே. சோமசுந்தரனார் உரை – பெண்டாகிய நீ இத்தன்மையுடையை ஆனால்.  பவர்ப் பிரம்பு – இரு பெயரொட்டு, கொடியாகிய பிரம்பு.

Meanings:  அரில் – tangled, mixed up, பவர் – creeper, பிரம்பின் – of rattan, Calamus rotang, வரிப் புற – lines on sides, விளை கனி – ripe fruits (வினைத்தொகை), குண்டு நீர் – deep water, இலஞ்சி – pond, கெண்டை – carp, belonging to the Cyprinidae family, cyprinus fimbriatus, கதூஉம் – bite and eat (இன்னிசை அளபெடை), தண்துறை ஊரன் – the man from the cool port, பெண்டு இனை ஆயின் – if you as a woman are of this nature to accept him despite his infidelities, பல வாகுக நின் நெஞ்சில் படர் – may there be much sorrow in your heart, ஏ – அசைநிலை, an expletive, ஓவாது ஈயும் – giving constantly, மாரி – rains, வண்கை – charitable hands, கடும் – fierce, பகட்டு யானை – proud male elephant, நெடுந்தேர் – tall chariot, அஞ்சி – Athiyamān Anchi, கொன் முனை – fierce battlefield (கொன் – இடைச்சொல், போர்முனையை சிறப்பித்தது), இரவு – night, ஊர் போல – like a town, சிலவாகுக – may they be few, நீ துஞ்சு நாள் – your sleeping days, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 92, தாமோதரனார், நெய்தற் திணை – தலைவி தனக்குள் சொன்னது
ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து
அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை,
இறை உறை ஓங்கிய நெறி அயல் மராஅத்த
பிள்ளை உள் வாய்ச் செரீஇய,
இரை கொண்டமையின் விரையுமால் செலவே.  5

Kurunthokai 92, Thāmotharanār, Neythal Thinai – What the heroine said to herself
After the sun goes down
from the wide sky,
birds with curved wings
fly swiftly to their nests
on the tall kadampam
trees near the path,
since they carry food to
thrust into the mouths
of their young chicks.

They are pitiful.

Notes:  The heroine who was sad that her lover was delaying marriage said this in sorrow.  வரைவு நீட்டித்ததால் பெரிதும் வருந்தியிருந்த தலைவி பொழுது கண்டு சொன்னது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – அன்பின் வழியே இப்பறவைகள் இயங்குதலால் அவை இரக்கத்தக்கன என்னுமுகத்தால் அன்பின்றித் தன்னை மறந்துறையும் வன்கண்மையுடைய தலைவர் இவ்வன்புதானும் அறிகிலரே என்று கருதி இறங்கியவாறாம்.  தமிழண்ணல் உரை – இறைச்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டான பாட்டு இது.

Meanings:  ஞாயிறு பட்ட – sun hidden, அகல்வாய் வானத்து – in the wide sky, அளிய – they are pitiable, தாம் – அசைநிலை, an expletive, ஏ – அசைநிலை, an expletive, கொடும் – curved, சிறை – wings, பறவை – birds, இறை – tall, உறை – living, ஓங்கிய – tall, நெறி – path, அயல் – nearby, மராஅத்த –  in kadampam trees, கடம்பம், Common cadamba, Neolamarckia cadamba (அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது), பிள்ளை – young chicks, உள் வாய் – inside their mouths, செரீஇய – to thrust (செய்யுளிசை அளபெடை), இரை கொண்டமையின் – since they carry food, விரையுமால் – they are going very fast (விரையுமால் – ஆல் அசைநிலை, an expletive), செலவு – going, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 93, அள்ளூர் நன்முல்லையார், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நன் நலம் தொலைய, நல மிகச் சாஅய்,
இன் உயிர் கழியினும் உரையல், அவர் நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி,
புலவியஃது எவனோ, அன்பு இலங்கடையே?

Kurunthokai 93, Allūr Nanmullaiyār, Marutham Thinai – What the heroine said to her friend
Don’t talk to me about him,
even if my fine beauty is
lost, my virtue is destroyed
and my sweet life is ruined!

Was he not, mother and father
to us, my friend?

Why would there be quarrel
when there is no love between us?

Notes:  The heroine refused to listen to her friend who came as a messenger of the hero.  தூதாக வந்த தோழிக்கு வாயில் மறுத்தது.  அகநானூறு 46 – யாரையோ நிற் புலக்கேம்.  நலம் – உ. வே. சாமிநாதையர் உரை – முன்னது பெண்மை நலம், பின்னது அழகு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – முன்னது அழகு பின்னது நாணம்.  உ. வே. சாமிநாதையர் உரை – அன்னை என்றால் பிரித்தற்கரிய தொடர்பைப் பற்றி, அத்தன் என்றாள் அவன் ஆணைக்கடங்கி ஒழுகுதல் பற்றி.

Meanings:  நன் நலம் தொலைய – fine virtue ruined, fine beauty destroyed, நலமிகச் சாஅய் – beauty ruined greatly, virtue ruined greatly (சாஅய் – இசை நிறை அளபெடை), இன் உயிர் கழியினும் – even if sweet life is lost, உரையல் – do not talk, அவர்- he, நமக்கு அன்னையும் அத்தனும் அல்லரோ – was he not father and mother to us, தோழி – O friend, புலவியஃது எவன் – how will friction arise (அஃது – பகுதிப்பொருள் விகுதி, extension to basic form), ஓ – அசைநிலை, an expletive, அன்பு இலங்கடை – without love between us, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 94, கந்தக்கண்ணனார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பெரும் தண் மாரிப் பேதைப் பித்திகத்து
அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே,
யானே மருள்வேன் தோழி, பானாள்
இன்னும் தமியர் கேட்பின் பெயர்த்தும்
என் ஆகுவர் கொல் பிரிந்திசினோரே,  5
அருவி மா மலைத் தத்தக்
கருவி மா மழைச் சிலைதரும் குரலே?

Kurunthokai 94, Kanthakkannanār, Mullai Thinai – What the heroine said to her friend
These naive, cold rainy season’s
jasmine flowers have turned
red before the season has begun.
I am not confused by them.

He who left me is out there all
alone.  What will he do in the
middle of the night,
when he hears the sounds of
rumbling rainclouds that send
waters gushing down the tall
mountains?

Notes:  The heroine said this to her friend on seeing her friend worry about her inability to bear separation from the hero.  கார்ப்பருவம் வந்த பின்னும் தலைவன் வராமையால் தலைவி ஆற்றாமல் வருந்துவாள் என்று தோழி வருந்தினாள். அது கண்ட தலைவி ‘நான் ஆற்றுவேன்’ என்றது.  குறுந்தொகை – 66 – மடவ மன்ற தடவு நிலைக் கொன்றை கல் பிறங்கு அத்தம்  சென்றோர் கூறிய பருவம் வாரா அளவை நெரிதரக் கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த வம்ப மாரியைக் கார் என மதித்தே, குறுந்தொகை 251 – மடவ வாழி மஞ்ஞை மா இனம் கால மாரி பெய்தென அதன் எதிர் ஆலலும் ஆலின பிடவும் பூத்தன.  நற்றிணை 99 –  பிடவமும் கொன்றையும் கோடலும் மடவ ஆகலின், மலர்ந்தன பலவே.  பித்திகம் (1) – உ. வே. சாமிநாதையர் உரை – பிச்சி.  யானே மருள்வேன் (3) – உ.வே. சாமிநாதையர் உரை – நானா மயங்குவேன்?, பொ.வே. சோமசுந்தரனார் உரை – யான் மயங்காநின்றேன்.  கருவி மா மழை (7) –  இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய கரிய முகில்கள்.  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58).  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).

Meanings:  பெரும் – large, much, தண் – cool, மாரிப் பேதைப் பித்திகத்து – of rainy season’s naïve jasmine, பிச்சிப்பூ, Jasminum grandiflorum,  அரும்பு – buds, ஏ – அசைநிலை, an expletive, முன்னும் மிகச் சிவந்தனவே – they got red before time, யானே மருள்வேன் – will I get confused, தோழி – my friend, பானாள் – midnight (பானாள் – பால் + நாள், பாதி நாள், நடு இரவு), இன்னும் தமியர் – the one who is still away from me, கேட்பின் – if he hears, பெயர்த்தும் – even though he moved away, என் ஆகுவர் – what will he do, கொல் – அசைநிலை, an expletive, பிரிந்திசினோர் – the one who is separated from me (இசின் – படர்க்கையின் கண் வந்தது, an expletive of the third person), ஏ – அசைநிலை, an expletive, அருவி மா மலை – tall mountains with waterfalls, தத்த – flowing down, கருவி மா மழை – dark clouds with thunder and lightning, heavy rain with thunder and lightning, சிலைதரும் குரல் – roaring sounds, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 95, கபிலர், குறிஞ்சித் திணை  – தலைவன் தோழனிடம் சொன்னது
மால் வரை இழிதரும் தூ வெள் அருவி
கல் முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல்
சிறுகுடிக் குறவன் பெருந்தோள் குறுமகள்,
நீர் ஓரன்ன சாயல்,
தீ ஓரன்ன என் உரன் அவித்தன்றே.  5

Kurunthokai 95, Kapilar, Kurinji Thinai – What the hero said to his friend
Her beauty as delicate as water
has ruined my fire-like strength,
the young woman with thick arms,
daughter of a mountain dweller
from a small village near the
flowering slopes,
where water cascading from the
tall mountain roars in the caves.

Notes:  The hero said this to his friend who asked him the reason for his sorrow.  தனது வேறுபாடு கண்டு வினவிய தோழனிடம் தலைவன் கூறியது.  இரா. இராகவையங்கார் உரை – சிறுகுடிக் குறவன் குறமகள் என்றது தான் பெருங்குடி பெருமகனாதலைக் குறித்து.  பெருந்தோள் கூறியது தன் பெருந்தோள் தழுவற்கு ஒப்புமை கருதி.  உ. வே. சாமிநாதையர் உரை – பெருந்தோள் குறமகள் என்றது குறிப்பால் என் உரன் அவிதற்கு அத்தோளும் காரணமாயது என்பதை உணர்த்தியது.   சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம்,  உரியியல் 29).  குறுந்தொகை 95 – நீர் ஓரன்ன சாயல், கலித்தொகை 42 – நீரினும் சாயல் உடையன், கலித்தொகை 94 – நீர் உள் நிழல் போல் நுடங்கிய மென் சாயல், புறநானூறு 105 – நீரினும் இனிய சாயல், பதிற்றுப்பத்து 86 – நீரினும் தீந்தண் சாயலன், மலைபடுகடாம் 61 – புது நிறை வந்த புனல் அம் சாயல்.

Meanings:  மால் வரை – sky-high mountain, tall mountains, இழிதரும் – flowing down, தூ வெள் அருவி – pure white waterfalls, கல் முகை – mountain caves, mountain crevices, ததும்பும் – they roar, they sound, பன்மலர் – many flowers, சாரல் – mountain slopes, mountain sides, சிறுகுடிக் குறவன் – mountain dweller from a small settlement, mountain dweller from a small community, பெருந்தோள் – young woman with thick arms, குறுமகள் – young girl, நீர் ஓரன்ன சாயல் – delicate like water, தீ ஓரன்ன – like fire (ஓரன்ன – ஓர் தன்மையுடைய), என் உரன் அவித்தன்று – it has ruined my energy, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 96, அள்ளூர் நன்முல்லையார், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
“அருவி வேங்கைப் பெரு மலை நாடற்கு
யான் எவன் செய்கோ” என்றி, யான் அது
நகையென உணரேன் ஆயின்,
என் ஆகுவை கொல் நன்னுதல் நீயே?

Kurunthokai 96, Allūr Nanmullaiyār, Kurinji Thinai – What the heroine said to her friend
My friend with a fine forehead!
You said, “What could I do for the
man from the country with tall
mountains where vēngai trees grow
near waterfalls?” blaming him.

I took your teasing as a joke.
What will happen to you, if I did not
realize that it just was a joke?

Notes:  The heroine said this in anger to her friend who blamed the hero for continuing courtship and delaying marriage.  தலைவன் வரையாது வந்து ஒழுகிய காலத்தில் அவனைத் தோழி இயற்பழித்தாளாக, அது கேட்ட தலைவி தோழியைச் சினந்து கூறியது.  இயற்பழித்தல் – இயல்பை பழித்துக் கூறல்.   உ. வே. சாமிநாதையர் உரை – அருவி வேங்கைப் பெருமலை நாடன் என்றது, அருவியானது தன்னைச் சார்ந்த வேங்கையைக் குறைவின்றிப் பாதுகாத்தலைப் போலத் தலைவனும் தன்னைச் சார்ந்த என்னைப் பாதுகாப்பான் என்பது.

Meanings:  அருவி வேங்கை – Indian kino tree near the waterfalls/streams, Pterocarpus marsupium, பெரு மலை நாடற்கு – for the man from the tall mountains, யான் எவன் செய்கு – what could I do (செய்கு தன்மை ஒருமை வினைமுற்று, first person singular verb ending), ஓ – அசைநிலை, an expletive, என்றி – you said (என்றி – முன்னிலை ஒருமை), யான் அது நகையென உணரேன் ஆயின் – if I did not take it as a joke, என் ஆகுவை – What will happen to you, கொல் – அசைநிலை, an expletive, நன்னுதல் – oh young woman with a bright forehead (அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), நீ – you, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 97, வெண்பூதியார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
யானே ஈண்டையேனே, என் நலனே
ஆனா நோயொடு கானலஃதே
துறைவன் தம் ஊரானே,
மறை அலர் ஆகி மன்றத்தஃதே.

Kurunthokai 97, Vennpoothiyār, Neythal Thinai – What the heroine said to her friend
I am here.
I left my virtue in the
seashore grove, and my
deep pain does not end.

He is back in his town, and
our secret love has become
gossip in the public places.

Notes:  The heroine said this to her friend when the hero delayed their marriage.  வரைவு நீட்டித்தவழி தலைவி தோழிக்குச் சொல்லியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை –  ‘துறைவன் தம் ஊரான்’ என்றும் ‘மறை அலராகி மன்றத்தஃது’ என்றும் புலந்து கூறினாள்.  கானலஃது, மன்றத்தஃது – ஆய்தம் விரிக்கும்வழி விரித்தல்.

Meanings:  யான் – me, ஏ – அசைநிலை, an expletive, ஈண்டையேன் – I am here, ஏ – அசைநிலை, an expletive, என் நலன் – my virtue/beauty, ஏ – அசைநிலை, an expletive, ஆனா நோயொடு – with unsettling pain, கானலஃது – in the seashore grove, ஏ – அசைநிலை, an expletive, துறைவன் தம் ஊரான் – he is in his town, ஏ – அசைநிலை, an expletive, மறை – secret love (களவு மணம்), அலர் ஆகி – it has become gossip, it is being blamed, மன்றத்தஃது – it has spread to the common areas of the village, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 98, கோக்குளமுற்றனார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
‘இன்னள் ஆயினள் நன்னுதல்’ என்று அவர்த்
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே
நன்று மன், வாழி தோழி, நம் படப்பை
நீர் வார் பைம்புதல் கலித்த
மாரிப் பீரத்து அலர் சில கொண்டே.  5

Kurunthokai 98, Kōkulamutranār, Mullai Thinai – What the heroine said to her friend
May you live long, my friend!
It would be very good,
if someone could go to him
with a few yellow rainy season
flowers of peerkkai vines that grow
lush on the water-dripping bushes
in our garden, and tell him,
“Your lover with a fine brow has
become pale like this.”

Notes:  The distressed heroine said this to her friend on seeing the arrival of the rainy season.  பருவங்கண்டு வருந்திய தலைவி தோழிக்கு உரைத்தது.  உ. வே. சாமிநாதையர் உரை – செப்புவார் உளரேல் அவர்கள் வாழ்வாராக என்பதும் பொருந்தும்.  நற்றிணை 197 – நுதலே பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே, கலித்தொகை 53 – நுதல் பீர் அலர் அணி கொண்டு.  மன் (3) – உ. வே. சாமிநாதையர் உரை – மிகுதியை உணர்த்தியது, பெற்றிலேன் எனலுமாம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒழியிசைப் பொருட்டாய் அது கைகூடப் பெற்றிலேம் என்பது.  மன் – கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

Meanings:  இன்னள் ஆயினள் – this is what happened to her, நன்னுதல் – the young woman with a fine forehead (நன்னுதல் – அன்மொழித்தொகை), என்று – thus, அவர்த் துன்னச் சென்று – go to him, go near him, செப்புநர்ப் பெறின் – if we can get someone who will tell, ஏ – அசைநிலை, an expletive, நன்று – good, மன் – very much (மன் மிகுதியை உணர்த்தியது), I have not attained, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – my friend, நம் படப்பை – our garden, நீர் வார் – water dripping, பைம்புதல் – green bushes, கலித்த – flourishing, மாரிப் பீரத்து அலர் – rainy season’s flowers of ridge gourd vines, Luffa acutangula, சில கொண்டு – taking some, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 99, ஔவையார், முல்லைத் திணை – தலைவன் தோழியிடம் சொன்னது
உள்ளினென் அல்லனோ யானே? உள்ளி
நினைத்தனென் அல்லனோ பெரிதே நினைத்து?
மருண்டனென் அல்லனோ உலகத்துப் பண்பே?
நீடிய மரத்த கோடு தோய் மலிர் நிறை
இறைத்து உணச் சென்று அற்றாங்கு,  5
அனைப் பெருங்காமம் ஈண்டு கடைக்கொளவே.

Kurunthokai 99, Avvaiyār, Mullai Thinai – What the hero said to the heroine’s friend
I thought about her, did I not?
Thinking about her, I imagined
a lot, did I not?
Did I not get confused by the
nature of this world?

My intense love has been like
a raging flood that has swollen
up to the branches of tall trees.

I have returned so that my
affliction can go away like flood
water that subsides, to a level
where one can scoop and drink,
and disappears.

Notes:  The hero said this to the heroine’s friend who asked him whether he thought about the heroine when he went to earn wealth.  பொருள் முற்றிப் புகுந்த தலைவன் ‘நீர் பிரிந்தவிடத்து எம்மை நினைத்தீரோ’ என்று கேட்ட தோழிக்குச் சொல்லியது.

Meanings:  உள்ளினென் அல்லனோ – did I not think about her, யான் – me, ஏ – அசைநிலை, an expletive, உள்ளி – when I thought, நினைத்தனென் அல்லனோ – did I not think about her, பெரிது – greatly,  a lot, ஏ – அசைநிலை, an expletive, நினைத்து – thinking, மருண்டனென் அல்லனோ – did I not get confused, உலகத்து – of the world, பண்பு – nature, ஏ – அசைநிலை, an expletive, நீடிய மரத்த கோடு – branches of tall trees (மரத்த – அகரம் பன்மை உருபு), தோய் மலிர் நிறை – touching the big flood, இறைத்து உண – to scoop with the hands to drink (உண உண்ண என்பதன் விகாரம்), சென்று அற்றாங்கு – like how it subsides and becomes nothing, அனை – like that (உவம உருபு, a comparison word), பெருங்காமம் – great love, ஈண்டு – here, கடைக்கொள – for it to end, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 100, கபிலர், குறிஞ்சித் திணை  – தலைவன் தோழனிடம் சொன்னது அல்லது தன் நெஞ்சிடம் சொன்னது
அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பரு இலைக் குளவியொடு பசுமரல் கட்கும்
காந்தள் வேலிச் சிறுகுடி பசிப்பின்,
கடுங்கண் வேழத்துக் கோடு நொடுத்து உண்ணும்,
வல்வில் ஓரி கொல்லிக் குட வரைப்  5
பாவையின் மடவந்தனளே,
மணத்தற்கு அரிய பணைப் பெருந்தோளே.

Kurunthokai 100, Kapilar, Kurinji Thinai What the hero said to his friend or to his heart
The young woman with arms
like bamboo is hard to embrace,
and naive like the Kolli goddess
who resides on the westside
of strong-bowed Ori’s mountain,
where, mountain dwellers who live
in small communities with glory lily
hedges sell tusks of fierce
elephants to feed their families,
grow wild-rice in the waterfall-fed,
vast land, and weed out green hemp
plants along with thick-leaved,
wild jasmine vines.

Notes:  The hero who united with the heroine in the grove, said this to his friend.  Or, he said this to his heart.  தலைவியைப் பொழிலில் கண்டு மணந்த தலைவன் தன் தோழனிடம் கூறியது.  அல்லகுறிப்பட்டு மீளும் தலைவன் தன் நெஞ்சிடம் சொல்லியதுமாம்.  பாவையின் மடவந்தனளே (6) – உ. வே. சாமிநாதையர் உரை – பாவையைப் போல மடப்பம் வரப் பெற்றாள், பாவையைப் போல அறியாமையை உடையளாயினள், பொ. வே. சோமசுந்தரனார் உரை –  பாவை தன்னைக் கண்டார்க்கு மடமைவரச் செய்யுமாபோல மடமை வரச் செய்பவள் ஆவள், இரா. இராகவையங்கார் உரை – பாவையைப் போல கண்டார்க்கு அறியாமை வருதல் செய்தாள், தமிழண்ணல் உரை – இளமை தவழும் அழகு பொருந்தியவள்.  வரலாறு:  ஓரி, கொல்லி.  நொடுத்து (4) – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – கொடை என்பதனடியாக ‘கொடுத்து’ என வருதல் போல, நொடை என்பதனடியாக நொடுத்து என வந்தது.

Meanings:  அருவிப் பரப்பின் – in the wide land where the waterfalls  come down, ஐவனம் –  mountain rice, Oryza mutica, வித்தி – seeded, பரு இலை – thick leaves, குளவியொடு – mountain jasmine, Jasminum augustifolium, பசு மரல் – green/tender bowstring hemp plants, Sansevieria trifasciata, கட்கும் – they remove, காந்தள் வேலி – glory lily plants as fences, Gloriosa superba, சிறுகுடி –  small villages, small communities, பசிப்பின் – if hungry, கடுங்கண் – fierce, வேழத்து – of elephants, கோடு – tusks, நொடுத்து உண்ணும் – sell and feed (the family), வல்வில் ஓரி – Ori with his strong arrow, கொல்லிக் குட வரை – Kolli Mountain on the west side, பாவையின் – like the Kolli goddess  (இன் உருபு ஒப்புப் பொருளது), மடவந்தனள் – she is delicate,  she is naïve, she causes those who see her to be ignorant, she is young and beautiful, ஏ – அசைநிலை, an expletive, மணத்தற்கு அரிய – they are hard to embrace, பணைப் பெருந்தோள் – the bamboo-like thick arms of the young woman, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 101, பரூஉ மோவாய்ப் பதுமனார், குறிஞ்சித் திணை, தலைவன் தலைவியின் தோழியர் கேட்ப சொன்னது அல்லது தன் நெஞ்சிடம் சொன்னது
விரி திரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்
அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும்
இரண்டும் தூக்கின் சீர் சாலாவே,
பூப் போல் உண்கண் பொன் போல் மேனி
மாண் வரி அல்குல் குறுமகள்  5
தோள் மாறுபடூஉம் வைகலொடு எமக்கே.

Kurunthokai 101, Paroovu Mōvāy Pathumanār, Kurinji Thinai – What the hero said as the heroine’s friends listened, or what he said to his heart
Even if this world surrounded
by vast oceans with huge waves
and the celestial world with
greatness that is rare to obtain
are both weighed together,
they would not compare to the
joy that I find in a day’s shoulder
embraces with the young woman
with flower-like, kohl-lined eyes
and loins with fine lines.

Notes:  The hero who united with the heroine praised her, knowing that her friends were nearby.  Or, the hero said this to his heart which urged him to go and earn wealth, praising the heroine.  தலைவியோடு இன்பம் நுகர்ந்த தலைவன் அவளுடைய தோழியர் கேட்கும்படி தலைவியைப் புகழ்ந்து கூறியது, அல்லது பொருள் ஈட்டத் தூண்டும் தன் நெஞ்சிடம் தலைவியின் பெருமையைக் கூறியது.  தோள் மாறுபடூஉம் (6) – உ. வே. சாமிநாதையர் உரை – ஒருவர் இடத்தோள் மற்றவர் வலத்தோளிலும் ஒருவர் வலத்தோள் மற்றவர் இடத்தோளிலும் பொருந்தத் தழுவுதல், பொ. வே. சோமசுந்தரனார் உரை – மாறுபட்டுத் தழுவும்.

Meanings:  விரி திரைப் பெருங்கடல் – huge ocean with wide/huge waves, வளைஇய உலகமும் – even if the world that is surrounded (வளைஇய – செய்யுளிசை அளபெடை), அரிது பெறு சிறப்பின் – rare to obtain greatness, புத்தேள் நாடும் – and the celestial world, and heaven (உ. வே. சாமிநாதையர் உரை – நாடு – ஆகுபெயர்), இரண்டும் தூக்கின் – if you weighed them both, if you analyzed them both (தூக்கினும் என்ற உம்மை விகாரத்தால் (வேறுபாட்டால்) தொக்கது, சீர் – wealth, சாலா – they will not be equal, ஏ – அசைநிலை, an expletive, நிலைபூப் போல் – flower-like, உண்கண் பொன் போல் மேனி – flower-like kohl-rimmed eyes and gold like body, மாண் வரி அல்குல் – loins with fine lines, குறுமகள் தோள் மாறுபடூஉம் வைகலொடு – hugging the shoulders of the young woman and the young woman hugging my shoulders for a day (மாறுபடூஉம் – இன்னிசை அளபெடை), எமக்கு – to me (தன்மைப் பன்மை, first person plural), ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 102, ஔவையார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
உள்ளின் உள்ளம் வேமே, உள்ளாது
இருப்பின் எம் அளவைத்து அன்றே வருத்தி
வான் தோய்வற்றே காமம்,
சான்றோர் அல்லர் யாம் மரீஇயோரே.

Kurunthokai 102, Avvaiyār, Neythal Thinai – What the heroine said to her friend
If I think about him, my heart
will burn.  Not to think about
him, is beyond the extent of my
ability.

My love pain grows greatly like
it is reaching the sky.
He’s not wise, the man I embraced!

Notes:  The heroine said this to her friend who was sad that she would be unable to handle separation from her lover.  தலைவன் பிரிந்து நெடுங்காலம் நீட்டித்தானாக, அவனது பிரிவைத் தலைவி ஆற்றாள் எனக் கவன்ற தோழியிடம் தலைவி உரைத்தது.  நற்றிணை 365 – வான் தோய் மா மலைக் கிழவனை சான்றோய் அல்லை என்றனம் வரற்கே.  மரீஇயோர் – ச. வே. சுப்பிரமணியன் உரை – என்னைக் கூடி மகிழ்ந்த தலைவர்,  உ. வே. சாமிநாதையர் உரை – எம்மால் மருவப்பட்ட தலைவர்.

Meanings:  உள்ளின் – if I think, உள்ளம் வேம் – my heart will burn, ஏ – அசைநிலை, an expletive, உள்ளாது இருப்பின் – if I do not think, எம் அளவைத்து அன்று – it is beyond the extent of my ability, ஏ – அசைநிலை, an expletive, வருத்தி – causing sorrow, வான் தோய்வற்றே – it is like touching the sky, it is like reaching the sky, ஏ – அசைநிலை, an expletive, காமம் – love, சான்றோர் அல்லர் – he is not a wise man, யாம் மரீஇயோர் – the man I embraced, the man I united with (யாம் – தன்மைப் பன்மை, first person plural), ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 103, வாயிலான் தேவனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கடும் புனல் தொகுத்த நடுங்கு அஞர் அள்ளல்
கவிர் இதழ் அன்ன தூவிச் செவ்வாய்
இரை தேர் நாரைக்கு எவ்வமாகத்
தூஉந் துவலைத் துயர் கூர் வாடையும்,
வாரார் போல்வர் நம் காதலர்,  5
வாழேன் போல்வல் தோழி, யானே.

Kurunthokai 103, Vāyilān Thevanār, Neythal Thinai – What the heroine said to her friend
It seems that my lover will not
be back in this cold season that causes
pain to those who are separated,
when the north winds spray cold droplets,
and a red-beaked stork shivers in pain
and searches for prey on the cold, trembling
mud piled up by fierce floods, its feathers
like the flower petals of murukkam trees.

It appears that I might not live, O friend!

Notes:  The heroine who was sad on seeing the changed season said this to her friend.  பருவங்கண்டு வருந்திய தலைவி தோழியிடம் சொன்னது.  வாடையும் (4) –  உ. வே. சாமிநாதையர் உரை – உம்மை இழிவு சிறப்பு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – சிறப்பு உம்மை.  வாழேன் போல்வல் (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உயிர் வாழ்ந்திரேன் போல இருந்தேன், உயிர் வாழ மாட்டேன் என்றே எண்ணுகின்றேன், உ. வே. சாமிநாதையர் உரை – வாழேன் என்பது வாழ்வேன் அல்லேன், போல்வல் என்பது உரையசை.  ஒப்பில் போலியும் அப்பொருட்டாகும் (தொல்காப்பியம், இடையியல் 29).  இறைச்சி – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – சிறகாகிய போர்வையையுடைய நாரைக்கு ஏதந்தரும் வாடை என்றதனானே அணைக்குந் துணையாயினாரைப் பெறாத மகளிர்க்கு அது என்ன இன்னல் தான் செய்யாதாம்? என்பதாம்.

Meanings:  கடும் புனல் தொகுத்த – fierce floods collected, நடுங்கு அஞர் அள்ளல் – trembling cold mud, கவிர் இதழ் அன்ன தூவி – feathers like the petals of the coral tree, முருக்க மரம், Erythrina indica, செவ்வாய் – red beak, இரை தேர் நாரைக்கு – to the stork that searches for food, Mycteria leucocephala, painted storks have red beaks and red coloring on their white wings, எவ்வமாக – causing sorrow, தூஉம் துவலை – thrown water sprays (தூஉம் – இன்னிசை அளபெடை), துயர் கூர் வாடையும் – the northerly winds that bring sorrow (வாடையும் – உம்மை இழிவு சிறப்பு), வாரார் – he will not come, போல்வர் – ஒப்பில் போலி, உரையசை, it appears, நம் காதலர் – my lover, வாழேன் – I will not live, போல்வல் – ஒப்பில் போலி, உரையசை, it appears, தோழி – O friend, யான் – me, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 104, காவன்முல்லைப் பூதனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி! காதலர்
நூல் அறு முத்தின் தண் சிதர் உறைப்பத்
தாளித் தண்பவர் நாள் ஆ மேயும்
பனிபடு நாளே பிரிந்தனர்,
பிரியும் நாளும் பல ஆகுபவே.  5

Kurunthokai 104, Kāvanmullai Poothanār, Pālai Thinai – What the heroine said to her friend
May you live long, my friend!
Listen! He left me in the cold
season when chilly droplets of rain
fell scattering like pearls from a
strand when the thread is broken,
and cattle grazed on the cool
thāli creepers at dawn.
It has been many days since he left.

Notes:  The heroine who was sad since the hero was away, said this to her friend.  Or, the heroine said this to her friend who consoled her during separation.  பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைவி தோழிக்குக் கூறியது.  சிறிய உள்ளி பெரிய மறக்க வேண்டாவோ என்ற தோழிக்குத் தலைவி கூறியதுமாம்.  நூல் அறுந்த முத்து வடம் – அகநானூறு 225 – துளை முத்தின் செந்நிலத்து உதிர, அகநானூறு 289 – நெகிழ் நூல் முத்தின், குறுந்தொகை 51 – நூல் அறு முத்தின், குறுந்தொகை 104 – நூல் அறு முத்தின், கலித்தொகை 82 – கண்ணீர் சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன.   உ. வே. சாமிநாதையர் உரை – நெடுநல்வாடை என்ற பெயர்க்காரணம் கூறவந்த நச்சினார்க்கினியர் ‘தலைவனைப் பிரிந்திருந்தது வருந்துந்  தலைவிக்கு ஒரு பொழுது ஓர் ஊழிபோல் நெடிதாகிய வாடையாய்’ என்பதைக் கருதுக.  வாழி (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உரையசை, நீ வாழ்வாயாக, நீ வாழ்வாயாக என வாழ்த்து முகத்தானே யான் வாழ்கல்லேன் எனக் குறித்தாள் எனினுமாம்.  இறைச்சி – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – தாளியின் கொடியை ஆ மேயும் பனிக்காலம் என்றதனானே, விலங்கும் வேண்டும் நுகர்ச்சியை எளிதிற்பெற, யான் மட்டும் வேண்டும் நுகர்ச்சியைப் பெற்றிலேன் என்பதாம்.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

Meanings:  அம்ம – இடைச்சொல், listen to me, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – my friend, காதலர் – my lover, நூல் அறு முத்தின் – like pearls from a strand when the thread breaks (முத்தின் – இன் உருபு ஒப்புப் பொருளது), தண் சிதர் உறைப்ப – cold rain water drops, தாளி – thāli vine, Hedge bind-weed, Ipomaea sepiaria, கொடி வகை, தண் பவர் – cool vines, நாள் ஆ மேயும் – cows graze in the morning, பனிபடு – dew falling, நாள் – season, ஏ – பிரிநிலை, exclusion, பிரிந்தனர் – he left, பிரியும் நாளும் – the days of separation, பல – many, ஆகுபவே – are there (கு – சாரியை, ஏ – அசைநிலை, an expletive)

குறுந்தொகை 105, நக்கீரர், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
புனவன் துடவைப் பொன் போல் சிறு தினைக்
கடி உண் கடவுட்கு இட்ட செழுங்குரல்
அறியாது உண்ட மஞ்ஞை, ஆடுமகள்
வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்
சூர் மலை நாடன் கேண்மை,  5
நீர் மலி கண்ணொடு நினைப்பாகின்றே.

Kurunthokai 105, Nakkeerar, Kurinji Thinai – What the heroine said to her friend
I get teary eyed when I think
of my love for the man
from the mountain with gods,
where a naive peacock panics on
eating the mature clusters of the
gold-like, tiny millet left as new
offering to gods in a mountain
dweller’s field, and trembles like
a lovely female diviner performing
a frenzied veriyāttam dance.

Notes:  The heroine said this to her friend when the hero delayed marriage.  வரைவு நீட்டித்தவிடத்துத் தலைவி தோழியிடம் சொல்லியது.  குறுந்தொகை 133 – புனவன் துடவைப் பொன் போல் சிறு தினை.  கடி (2) –  உ. வே. சாமிநாதையர் உரை – கடி என்னும் உரிச்சொல் புதுமையென்னும் பொருளில் வந்தது.  ஆடுமகள் (3) – உ. வே. சாமிநாதையர் உரை, தமிழண்ணல் உரை – வெறியாடுபவள், கணிக்காரிகை, தேவராட்டி (a woman who is divinely inspired and with oracular powers), பொ. வே. சோமசுந்தரனார் உரை – அரங்கின்கண் கூத்தாடுகின்ற விறலி, இரா. இராகவையங்கார் உரை – தெய்வமேறி ஆடுபவள்.  வெய்துற்று (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – துன்புற்று, உ. வே. சாமிநாதையர் உரை – வெம்மையுற்று.  உள்ளுறை – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – புனவன் சிறுதினைக் குரலை அறியாது உண்ட மஞ்ஞை வெய்துற்று நடுங்கினாற்போல, தமர் காவலில் உள்ள என்னை அவர்கள் அறியாதவாறு, தகாத களவினால் திளைத்த தலைமகன் தமரை வரையக் கேட்டிலனாய் அஞ்சி நடுங்குகின்றான் என்பதாம்.  கடி – கடி என் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம் முன்தேற்று ஆயீர் ஐந்தும் மெய்ப்படத் தோன்றும் பொருட்டு ஆகும்மே (தொல்காப்பியம், உரியியல் 87).

Meanings:  புனவன் துடவை – in the mountain farmer’s field, பொன் போல் சிறு தினை – gold-like tiny millet, Italian millet, Setaria italicum, கடி உண் கடவுட்கு இட்ட – new offering  left for god, செழுங்குரல் – mature clusters, full clusters, thick clusters, அறியாது உண்ட மஞ்ஞை – a peacock that ate without knowing, ஆடுமகள் வெறியுறு வனப்பின் – with the frenzy of a beautiful female diviner who dances during veriyāttam, with a frenzy of a dancing girl who dances beautifully, வெய்துற்று நடுங்கும் – trembles with fear, சூர் மலை நாடன் கேண்மை – the friendship with the man from the mountains with gods, the man from the fear-causing mountains, நீர் மலி கண்ணொடு – with eyes filled with tears, நினைப்பு ஆகின்று – when I think about it, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 106, கபிலர், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர்
வரை இழி அருவியின் தோன்றும் நாடன்,
தீது இல் நெஞ்சத்துக் கிளவி நம் வயின்
வந்தன்று, வாழி தோழி, நாமும்
‘நெய் பெய் தீயின் எதிர்கொண்டு  5
தான் மணந்தனையம்’ என, விடுகம் தூதே.

Kurunthokai 106, Kapilar, Kurinji Thinai – What the heroine said to her friend
May you live long, my friend!
My husband from the land
where white fig trees with
thin aerial roots spread
white roots on boulders,
appearing like waterfalls
that flow down mountains,
has sent me a message
from his heart,
with words without blemish.

Let us accept it like fire that
accepts ghee, and send him the
message that I am just like the
day he united with me.

Notes: குறிஞ்சியுள் மருதம்.  Marutham in Kurinji.  The heroine said this to her friend on seeing a message from her husband who had separated due to his relationship with his concubine.  பரத்தையிற் பிரிந்த தலைவனின் தூது கண்டு தலைவி தோழியிடம் கூறியது.  இரா. இராகவையங்கார் உரை – பேராசிரியர் இதனைக் கற்பாகக் கொள்ளல் காண்க (தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் 23), இளம்பூரணர் இதனைக் களவாகக் கொள்ளல் காண்க (தொல்காப்பியம் களவியல் 2).  புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர் (1) – இரா. இராகவையங்கார் உரை – ‘புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர்’ என்றதனால் இற்றிமரம் கல்லினின்று வெளியே வளர்ந்து கோடுகள் புறப்பட நீடினும் தனக்கு இடனாகிய கல்லினை விடாது வீழினால் பற்றிக் கோடற்கு இவர்தல் போலத் தலைவன் இல்லினின்று வெளியே சென்று ஒழுகினும் தனக்கு இடனாகிய மனையை விடாது தூது மொழியினால் பற்றிக் கொள்கின்றான் எனக் குறித்தாளாம்.  நாமும் (4) – உ. வே. சாமிநாதையர் உரை – உம்மை இறந்தது தழீஇயது.  தலைவன் மணந்த காலத்தில் நிறைந்த அன்போடு இருந்தவாறே இப்பொழுதும் குறைவின்றி இருப்பேம் என்றமையின் அவனை ஏற்றுக்கோடற் குறிப்புப் பெற்றது.  இற்றி மர விழுது:  குறுந்தொகை 106 – புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர் வரை இழி அருவியின் தோன்றும்,   நற்றிணை 162 – வேனில் இற்றித் தோயா நெடு வீழ் வழிநார் ஊசலின் கோடை தூக்குதொறும் துஞ்சு பிடி வருடும் அத்தம் அகநானூறு 345 – ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ் கல் கண் சீக்கும் அத்தம்.

Meanings:  புல் வீழ் – thin aerial roots hanging, dull colored aerial roots, இற்றி – இச்சி, white fig tree, Ficus talboti, கல் – rocks, இவர் – spreading, வெள் வேர் – white roots, வரை – mountain, இழி – flowing down, அருவியின் – like the waterfalls (இன் உருபு ஒப்புப் பொருளது), தோன்றும் – appearing, நாடன் – the man from the country, தீது இல் நெஞ்சத்து – from a heart without blemish, கிளவி – words, நம் வயின் – to us, வந்தன்று – they have come, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – O friend, நாமும் – and let us (உம்மை இறந்தது தழீஇயது), நெய் பெய் தீயின் – like fire on which oil/ghee has been poured (தீயின் – இன் உருபு ஒப்புப் பொருளது), எதிர்கொண்டு – accepting it, தான் மணந்தனையம் – the same like when he married me, the same like when he united with me, என – thus, விடுகம் – let us send, தூது – a message, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 107, மதுரைக் கண்ணனார், மருதத் திணை – தலைவி சேவலிடம் சொன்னது
குவி இணர்த் தோன்றி ஒண் பூ அன்ன
தொகு செந்நெற்றிக் கணங்கொள் சேவல்!
நள் இருள் யாமத்தில் எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு அல்கு இரை ஆகிக்,
கடு நவைப் படீஇயரோ நீயே, நெடு நீர்  5
யாணர் ஊரன் தன்னொடு வதிந்த
ஏம இன் துயில் எடுப்பியோயே.

Kurunthokai 107, Mathurai Kannanār, Marutham Thinai – What the heroine said to a rooster
O rooster with a flock
adorned with huge, red combs
that look like pointed clusters
of glory lily blossoms!

You woke me from my joyful sweet
sleep with the man from the
prosperous town with deep ponds.

May you suffer greatly and become
food eaten little by little by a wildcat
cub that searches for house rats in
the pitch darkness of night.

Notes:  The heroine said this to a rooster, since it disturbed her when she was with her husband who had returned with wealth.  பொருள் முற்றி வந்த தலைவனுடன் இருந்த தலைவி தனது காம மிகுதியைக் கூறியது.  Akanānūru 145-14 கடு நவைப் படீஇயர்.  நெடு நீர் (5) – உ. வே. சாமிநாதையர் உரை – ஆழமாகிய நீர், தமிழண்ணல் உரை – ஆழமான நீர் நிலை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – செய்ய வேண்டியதொன்றனை அங்ஙனம் செய்யாது கால நீட்டிருத்தற் பண்பு, இரா. இராகவையங்கார் உரை – நெடுங்கால தாமதம்.  ஏம இன் துயில் (7) – உ. வே. சாமிநாதையர் உரை – இன்பத்தைத் தரும் இனிய துயில், பொ. வே. சோமசுந்தரனார் உரை – மிக இனிய துயில், இரா. இராகவையங்கார் உரை – இன்பத்திற்குக் காரணமான இனிய துயில்.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

Meanings:  குவி இணர் – pointed clusters (வினைத்தொகை), தோன்றி – kānthal flowers, malabar glory lily, Gloriosa superba, ஒண் பூ – bright flowers, அன்ன – like, தொகு – totally, lumped, செந்நெற்றி –  கொண்டை, red comb on the top (நெற்றி – ஆகுபெயர் சேவலின் கொண்டைக்கு), கணங்கொள் சேவல் – rooster in a flock, நள் இருள் யாமத்தில் – during the pitch dark night time, எலி பார்க்கும் – looking for rats, பிள்ளை வெருகிற்கு – to a young wildcat, அல்கு – little by little, இரை ஆகி – become food, கடு நவை – lots of sorrow, படீஇயர் – படுவாயாக, may you suffer (சொல்லிசை அளபெடை, வியங்கோள் வினைமுற்று விகுதி, verb ending with a command, இகழ்ச்சிப்பொருளில் வந்தது, used to show ill will), ஓ – அசைநிலை, an expletive, நீ – you, ஏ – அசைநிலை, an expletive, நெடு நீர் – deep ponds, delaying nature, யாணர் – new income, flourishing, ஊரன் – the man from such town, தன்னொடு வதிந்த – staying with him, ஏம – joyous, இன் துயில் – sweet sleep, எடுப்பியோய் – you woke me up, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 108, வாயிலான் தேவனார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடிக்
கறவை கன்று வயின் படரப் புறவில்
பாசிலை முல்லை ஆசில் வான் பூச்
செவ்வான் செவ்வி கொண்டன்று,
உய்யேன் போல்வல் தோழி, யானே.  5

Kurunthokai 108, Vāyilān Thevanār, Mullai Thinai – What the heroine said to her friend
In the little village near
the mountains where clouds
play on summits,
cows walk toward their calves
in the woodlands;
tender-leaved mullai vines have
spread their pure white flowers
that are pretty like the red sky.

It appears that I will not live if he
does not come!

Notes:  The heroine who was sad on seeing the change in the season, said this to her friend.  பருவங்கண்டு வருந்திய தலைவி, தோழியிடம் கூறியது.  உய்யேன் போல்வல் (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உயிர் வாழ்ந்திரேன் போலும், தமிழண்ணல் உரை – உயிர் வாழேன் போலத் தோன்றுகின்றது, உ. வே. சாமிநாதையர் உரை – உய்யேன் என்பது உயிர் வாழேன், போல்வல் அசைநிலை.  இறைச்சிகள் – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – (1) கன்றை மறவாது மாலைக் காலத்து கறவை அக்கன்றிடத்துப் படரும் புறவு என்றதனானே நம்மை மறவாது குறித்த காலத்து நம்மிடம் வரவேண்டியவர் வந்திலர்; அவர் அன்பிருந்தவாறு என்னை?  என்பதாம்.  (2) மலருங் காலத்தைப் பெற்று முல்லை செவ்வி கொண்டது என்றதனானே, அழகு மிகுதற்கேற்ற குறித்த காலத்தில் செவ்வி அழிவோமாயினோம்; எவ்வாறு உய்குவோம்! என்பதாம்.

Meanings:  மழை விளையாடும் – clouds moving around, clouds playing, குன்று சேர் சிறுகுடி – small village near the mountains, small community near the mountains, கறவை – cows, கன்று – calf, வயிற் படர – go toward, புறவில் – in the mullai field, in the woodlands, பாசிலை முல்லை – jasmine vines with tender leaves, jasmine with green leaves, Jasminum sambac, ஆசு இல் – without fault, வான் பூ – white flowers, செவ்வான் – red sky, செவ்வி கொண்டன்று – it has become beautiful, உய்யேன் – I will not live, போல்வல் – உரையசை, it appears, தோழி – friend, யான் – I, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 109, நம்பி குட்டுவனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
முடக்கால் இறவின் முடங்கு புறப் பெருங்கிளை
புணரி இகு திரை தரூஉந்துறைவன்,
புணரிய இருந்த ஞான்றும்
இன்னது மன்னோ, நன்னுதல் கவினே.

Kurunthokai 109, Nampi Kuttuvanār, Neythal Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
It is pitiable that even when
when he united with you,
the lord of the seashore,
……….where abundant shrimp
……….with curved backs and legs
……….are brought to the shore by
……….the ocean’s flowing waves,
your fine forehead
has not regained its former beauty.

Notes:  The heroine’s friend said this to her, knowing that the hero was nearby.  She is urged him to come and marry the heroine.  தலைவிக்கு கூறுவாளாய், தலைவனுக்கு வரைய வேண்டியதன் இன்றியமையாமையைப் புலப்படுத்தியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தாழும் திரையே இறாமீனை உந்திக் கொணர்தலின் ‘இகு திரை தருஉம்’ என்றாள் வளமுடைய துறைவன் என்றவாறு.  கடலலைகள் தரும் இறாலைத் தன் முயற்சியின்றிப் பெற்றமைகின்ற தலைவன் என்றது, ஊழால் தரப்பட்ட களவின்பமே நுகர்ந்து வரைதல் முயற்சியின்றி அமைபவன் என்றவாறு.   இறைச்சி – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – தன்னை அடைந்த இறா மீனின் கிளையைக் கடல் கொடிய அலைகளால் கரைக்கண் யாரும் அறியத் தந்தாற்போல, அவனைப் பற்றுக்கோடாகக் கொண்ட நம்மையும், நமது கிளையொடு கூட்டித் தனது கொடிய களவொழுக்கத்தால் எல்லாரும் அறிந்து தூற்றுமாறு அவன் வைத்திட்டான் என்பதாம்.  மன் – கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).  புணரிய (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம் – புணரும்பொருட்டே வருதலன்றி, வரைந்துகொண்டு அறஞ்செய்யும் கருத்திலன் என்று இகழ்ந்தவாறு.  இன்னது (4) – உ. வே. சாமிநாதையர் உரை – இத்தகையதாயிற்று, ச. வே. சுப்பிரமணியன் உரை – இத்தகைய இன்மையது.

Meanings:  முடக்கால் இறவின் – of shrimp with curved legs, முடங்கு புற – with curved backs, பெருங்கிளை – huge group of relatives, many of them, புணரி இகு திரை – ocean waves that flow down, தரூஉம் – they bring (இன்னிசை அளபெடை), துறைவன் – the lord of the seashore, புணரிய இருந்த ஞான்றும் – even when you united with him, இன்னது – it is like this, it is ruined like this, மன் – it is pitiable, ஓ – அசைநிலை, an expletive, நன்னுதல் – young woman with a fine forehead (அன்மொழித்தொகை), கவின் – beauty, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 110, கிள்ளிமங்கலம் கிழார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது அல்லது தோழி தலைவியிடம் சொன்னது
வாரார் ஆயினும், வரினும், அவர் நமக்கு
யார் ஆகியரோ தோழி, நீர
நீலப் பைம்போது உளரிப் புதல
பீலி ஒண் பொறிக் கருவிளை ஆட்டி
நுண் முள் ஈங்கைச் செவ் அரும்பு ஊழ்த்த  5
வண்ணத் துய்ம் மலர் உதிரத் தண்ணென்று
இன்னாது எறிதரும் வாடையொடு
‘என்னாயினள் கொல்’, என்னாதோரே?

Kurunthokai 110, Killimangalam Kizhār, Mullai Thinai – What the heroine said to her friend or what the friend said to the heroine
The painful northern wind
that makes blue waterlily
buds in the water to bloom,
bush karuvilai flowers that
are like eyes of peacock
feathers to shake, and red
buds of fine-thorned eengai
that blossom into fuzzy
flowers to drop, is here!

He has not bothered to see
what has happened to us.
Whether he comes or not,
who is he to us now, my friend?

Notes:  The heroine who was sad on seeing the season, said this to her friend.  Or, what the heroine’s friend said to her indicating the cruelty of the hero.  பருவங்கண்டு வருந்திய தலைவி, தோழியிடம் கூறியது.  தலைவனைக் கொடுமைகூறித் தலைவியைத் தோழி வற்புறுத்தியதுமாம்.  இறைச்சி – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – நீரிலுள்ள மலர்களை அலைத்துப் புதலிடத்துக் கருவிளையும் ஈங்கைத் துய்ம்மலரும் உதிரும்படி வீசும் வாடை என்றதனானே அவர் தக்க நிலையில்லாத தனித்த மகளிரை துயருறுத்தல் கூற வேண்டுமோ! என்பதாம்.  துய்ம் மலர் – யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின் வல்லெழுத்து இயையின் அவ்வெழுத்து மிகுமே (தொல்காப்பியம், புள்ளி மயங்கியல் 62), மெல்லெழுத்துறழும் மொழியு மாருளவே.(தொல்காப்பியம், புள்ளி மயங்கியல் 65).

Meanings:  வாரார் ஆயினும் – even if he does not come, வரினும் – or even if he comes, அவர் – he, நமக்கு – to us, யார் ஆகியர் – who is he to us, ஓ – அசைநிலை, an expletive, தோழி – O friend, நீர – in the water, நீலப் பைம்போது – fresh buds of blue waterlilies, உளரி – causing them to blossom, புதல – on the bushes, பீலி – peacock feathers, ஒண் பொறி – bright spots, bright eyes, கருவிளை – karuvilai, Clitora ternatea, Butterfly pea, ஆட்டி – to shake, நுண் முள் – fine thorns, ஈங்கை – eengai’s, Mimosa Pudica, செவ் அரும்பு – red buds, ஊழ்த்த – blossomed, வண்ண – colorful, துய்ம் மலர் – fuzzy flowers, soft flowers (துய் – பஞ்சின் நுனி போன்றதொரு பொருள்), உதிர – to drop, தண்ணென்று – in a cool manner, இன்னாது எறிதரும் வாடையொடு – due to the painful northerly winds that blow (வாடையொடு – ஒடு உருபு ஆன் உருபின் பொருட்டாய் நின்றது, வாடையான்) , என் ஆயினள் கொல் என்னாதோர் – the man who does not consider what happened to her (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 111, தீன்மதி நாகனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
மென்தோள் நெகிழ்த்த செல்லல் வேலன்
வென்றி நெடுவேள் என்னும், அன்னையும்
அதுவென உணரும் ஆயின், ஆயிடைக்
கூழை இரும் பிடிக் கை கரந்தன்ன
கேழ் இருந்துறுகல் கெழு மலை நாடன்  5
வல்லே வருக தோழி, நம்
இல்லோர் பெரு நகை காணிய சிறிதே.

Kurunthokai 111, Theenmathi Nākanār, Kurinji Thinai – What the heroine’s friend said to the heroine, as the hero listened nearby
May he come now, your lover
from the mountains,
………. where big, dark boulders are
………. like the short, black female
………. elephants without trunks,
to our home now and watch our
family for a little while.  It will be
a great joke!

Mother believes the vēlan who says
that your sorrow that caused your
delicate arms to become thin, is due
to victorious Murukan.

Notes:  The heroine’s friend told her that her mother was considering bringing a Murukan priest to conduct a veriyāttam ritual because of her distress.  வரைவு நீட்டித்தவழி தலைவி வேறுபாடு கண்டு வெறியெடுப்பக் கருதிய தாயது நிலைமையைத் தோழி கூறியது.  புலவரின் பெயர் தீன்மிதி நாகனார் என்று சில நூல்களில் உள்ளது.  பாறையும் யானையும்:  அகநானூறு 57 –  இற்றிப் புன்தலை நெடுவீழ் இரும்பிணர்த் துறுகல் தீண்டி வளி பொரப் பெருங்கை யானை நிவப்பின் தூங்கும், அகநானூறு 178 – பிடி மடிந்தன்ன கல், அகநானூறு 269 –  பிடி மடிந்தன்ன குறுந்தொகை 13 – மாசு அறக் கழீஇய யானை போலப் பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல், குறுந்தொகை 36 – துறுகல் அயலது மாணை மாக்கொடி துஞ்சு களிறு இவரும், குறுந்தொகை 111 – கூழை இரும் பிடிக் கை கரந்தன்ன கேழ் இருந்துறுகல், குறுந்தொகை 279 – மழை கழூஉ மறந்த மா இரும் துறுகல் துகள் சூழ் யானையிற் பொலியத் தோன்றும், கலித்தொகை 108 – பிடி துஞ்சு அன்ன அறை, ஐங்குறுநூறு 239 – புகர் முக வேழம் இரும்பிணர்த் துறுகல் பிடி செத்துத் தழூஉம்.   நற்றிணை 34 – வேலன் வேண்ட வெறி மனை வந்தோய்…….முருகே.  நெடுவேள் (2) – உ. வே. சாமிநாதையர் உரை – ஆகுபெயர், அவன் செயலுக்கு ஆயினமையின்.  வல்லே வருக என்றது தாய் விரைவில் வெறியெடுக்க கருதுவாள் என்பதையும் குறிப்பித்தது.  இறைச்சி – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – பிடியின் கை மறைந்தாற்போல செழுமலை காணப்படும் நாடன் என்றதனானே, வரைவு நீட வந்த நமது வாட்டத்தை இல்லோர் மற்றொன்றானாயது என்று மாறுபடக் கருதுமாறு செய்திட்டான் என்பதாம்.  வேலன் – நச்சினார்க்கினியர் உரை திருமுருகாற்றுப்படை 222 – பிள்ளையார் வேலைத் (பிள்ளையான முருகனின் வேலை) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேலன் என்றார்.  செல்லல் – செல்லல் இன்னல் இன்னாமையே (தொல்காப்பியம், உரியியல் 6).

Meanings:  மென்தோள் நெகிழ்த்த செல்லல் – sorrow that caused the arms to become thin, வேலன் – the Murukan priest, வென்றி – victorious, நெடுவேள் என்னும் – he says that it is Murukan, அன்னையும் – mother also (உம்மை உயர்வு சிறப்பு), அதுவென உணரும் ஆயின் – if she thinks that it is so, ஆ இடை – at that time, கூழை – short, இரும்பிடி – black female elephants, கை கரந்தன்ன – as though the trunks are hidden (trunkless bodies of elephants), கேழ் இரும் – dark color and huge, துறுகல் கெழு மலை நாடன் – the man from the country with mountains with boulders, வல்லே வருக – may he come here fast, தோழி – friend, நம் இல்லோர் – those in our home, our family members, பெரு நகை – greatly laughable, big joke, காணிய – to watch, to see, சிறிது – for a little while, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 112, ஆலத்தூர் கிழார், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
கௌவை அஞ்சின் காமம் எய்க்கும்,
எள் அற விடினே உள்ளது நாணே,
பெருங்களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
நார் உடை ஒசியல் அற்றே,
கண்டிசின் தோழி, அவர் உண்ட என் நலனே.  5

Kurunthokai 112, Ālathūr Kizhār, Kurinji Thinai – What the heroine said to her friend
Look at this my friend!  Love
will hurt if one is afraid of gossip.
If one is afraid of reproach,
shame will be the only thing left.

My virtue that he enjoyed is like
a fibrous tree branch, bent and
broken by a huge male elephant,
as it hangs without touching the
ground.

Notes:  The heroine said this to her friend when the hero delayed marriage.  வரைவு நீட்டித்தவழித் தலைவி தோழிக்குச் சொல்லியது.  இரா. இராகவையங்கார் உரை – நாருடை ஒசியல் என்றதனால் தேய்ந்த உயிரில் தொங்குகின்ற பெண்மையைக் குறித்தாள்.  பெருங்களிறு வாங்க முரிந்த ஒசியலை உவமை கூறியதால், என் மெல்லிய நாணால் அவர் வலியைத் தடுத்து என் பெண்மையைத் தாங்ககில்லேன் என்றவாறு.  அகநானூறு 120 – பெருநாண் அணிந்த நறு மென் சாயல் மாண் நலம் சிதைய.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).  உ. வே. சாமிநாதையர் உரை – களிறு வளைத்துத் தழைகளை உண்டதனால் ஒடிந்த மரக்கிளையானது தன்னுடைய இயல்பான நிலையை ஒழிந்து மீட்டும் அந்நிலையைப் பெறாத வண்ணம் இருப்பினும், முற்ற ஒடிந்து கீழே விழுந்து வாடி உலராமல் நாரின் தொடர்பினால் மீண்டும் தழைக்கும் நிலை இருத்தலைப் போல, தலைவனால் உண்ணப்பட்ட நலன் பண்டைய நிலைமையைப் பெறாத நிலை இருப்பினும், முற்றும் அழிந்தொழியாமல் தலைவர் வரைவார் என்னும் கருத்தினால் பின் சிறக்கத்தக்க நிலையில் அமைந்துள்ளதென்று உவமையை விரித்துக் கொள்க.

Meanings:  கௌவை அஞ்சின் – if one is afraid of slander, if one is afraid of gossip, காமம் எய்க்கும் – love will hurt, எள் – condemnation, அற விடினே – if let go totally, உள்ளது நாணே – shame will be the only thing left, பெருங்களிறு – a huge male elephant, வாங்க – bent, pulled, முரிந்து – bent, cracked, நிலம் படாஅ – not touching the ground (படாஅ – இசை நிறை அளபெடை), நார் உடை ஒசியல் – broken fibrous branch, அற்று – like, ஏ – அசைநிலை, an expletive, கண்டிசின் – see this (இசின் – முன்னிலை அசை, an expletive of the second person), தோழி – O friend, அவர் உண்ட – he enjoyed, என் – my, நலன் – virtue/beauty, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 113, மாத்திரத்தனார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
ஊர்க்கும் அணித்தே பொய்கை, பொய்கைக்குச்
சேய்த்தும் அன்றே சிறு கான்யாறே,
இரை தேர் வெண்குருகு அல்லது யாவதும்
துன்னல் போகின்றால் பொழிலே, யாம் எம்
கூழைக்கு எருமண் கொணர்கம் சேறும்,  5
ஆண்டும் வருகுவள், பெரும் பேதையே.

Kurunthokai 113, Māthirathanār, Marutham Thinai – What the heroine’s friend said to the hero
The pond is near the town,
and the small forest river
is not far from the pond.

Other than white herons
that seek prey, nobody
goes to the nearby grove.
We go there to get mud
for our hair, and the naive
young woman will come.

Notes: மருதத்துள் குறிஞ்சி.  The heroine’s friend met the hero as he was leaving after meeting the heroine during their day tryst, and indicated that the lovers need to meet at a different place for their day trysts. பகற்குறியில் தலைவியோடு அளவளாவி நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு பகற்குறியிடம் வேறு  என குறிப்பால் கூறியது.  எருமண் (5) – உ. வே. சாமிநாதையர் உரை – களிமண், பொ. வே. சோமசுந்தரனார் உரை – உறைந்து உலர்ந்த மண், தமிழண்ணல் உரை – வண்டல் அனைய கருமண்.  இரா. இராகவையங்கார் உரை நூலில் வரி 5 ‘கூழைக்கு எருமணம் குறுகஞ் சேறும்’ என்றுள்ளது (எருமணம் – செங்கழுநீர்).

Meanings:  ஊர்க்கும் – to the town, அணித்து, ஏ – அசைநிலை, an expletive, பொய்கை – the pond, பொய்கைக்குச் சேய்த்தும் – far from the pond, அன்று – it is not, ஏ – அசைநிலை, an expletive, சிறு கான் யாறு – the small forest river, ஏ – அசைநிலை, இரை தேர் வெண்குருகு – white heron/egret/stork that seeks food, அல்லது யாவதும் – other than that there is nobody, துன்னல் – getting near, going there, போகின்றால் – it is removed, it does not happen (ஆல் அசைநிலை, an expletive), பொழில் – grove, ஏ – அசைநிலை, யாம் – we, எம் கூழைக்கு – for our hair, எருமண் கொணர்கம் சேறும் – we go to bring mud, ஆண்டும் வருகுவள் பெரும் பேதை – the very innocent young woman will come there, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 114, பொன்னாகனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நெய்தல் பரப்பிற் பாவை கிடப்பி
நின்குறி வந்தனென் இயல் தேர்க் கொண்க!
செல்கம் செல வியங்கொண்மோ, அல்கலும்
ஆரல் அருந்த வயிற்ற
நாரை மிதிக்கும் என் மகள் நுதலே.  5

Kurunthokai 114, Ponnākanār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
O lord with a chariot!  I left my
doll on a bed of waterlilies and
came here to tell you about it.

We are going there!  Make sure
that she returns on time!  At night,
the storks with stomachs full of
eels will tread on her forehead.

Notes:  The heroine’s friend indicated to the hero that she had left the heroine at a particular place for him to meet her.  இடத்து உய்த்து நீங்கும் தோழி தலைவனிடம் கூறியது.  நெய்தல் பரப்பில் பாவை கிடப்பி (1) – உ. வே. சாமிநாதையர் உரை – நெய்தல் நிலத்தின்கண் எனது பாவையை வளர்த்தி விட்டு, நெய்தற் பூவின் பரப்பு எனினுமாம், பாவை என்றது தலைவியை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெய்தல் பரப்பின்கண் எனது பாவையைத் துயிலப் போகட்டு, நெய்தற் பூவினைப் பரப்பிய படுக்கையுமாம்,  இரா. இராகவையங்கார் உரை – நெய்தன் மணற் பரப்பின் வண்டற் பாவையைக் கிடக்கச் செய்து.  செல்கம் (3) – செல்கம் எனப் பன்மையால் கூறினமையின் தோழியுடன் தலைவி வந்துள்ளாள் என்பதையும் அவளைக் குறியிடாதே நிறுத்தித் தோழி வந்தாள் என்பதையும் தலைவன் உணர்வான்.  இயல் தேர்க் கொண்க (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகிய தேரையுடைய தலைவனே, உ. வே. சாமிநாதையர் உரை – இயற்றப்பட்ட தேரையுடைய தலைவ,  இரா. இராகவையங்கார் உரை – இயலும் தேரையுடைய கடல் தலைவா.  ஆரல் அருந்த வயிற்ற (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பிறர் பழி நாடித் திரியும் அறிவிலிகள்.

Meanings:  நெய்தல் பரப்பில் – on the seashore, on a bed of waterlilies, பாவை கிடப்பி – leaving my doll, leaving my friend, நின் குறி வந்தனென் – I came to you to tell you the sign for your tryst, இயல் தேர்க் கொண்க – O lord of the shores with a riding chariot, O lord of the shores with a well constructed chariot, செல்கம் – we are going there, செல வியங்கொண்மோ – please urge her to leave (செல – இடைக்குறை, மோ – முன்னிலை அசை, an expletive of the second person), அல்கலும் – at night, ஆரல் அருந்த வயிற்ற – with  stomachs filled with eels (அருந்த – அருந்திய என்னும் எச்சத்தின் திரிபு), விலாங்கு மீன், Brown or green sand eel, Rhynchobdella aculeate, நாரை – storks, Ciconia ciconia, மிதிக்கும் – they will walk on, என் மகள் நுதல் – on my daughter’s forehead, on my doll’s forehead, ஏ – ஈற்றசை

குறுந்தொகை 115, கபிலர், குறிஞ்சித் திணை  – தோழி தலைவனிடம் சொன்னது
பெரு நன்று ஆற்றின் பேணாரும் உளரே;
ஒரு நன்று உடையள் ஆயினும், புரி மாண்டு
புலவி தீர அளிமதி, இலை கவர்பு
ஆடு அமை ஒழுகிய தண் நறும் சாரல்
மெல் நடை மரையா துஞ்சும்  5
நன் மலை நாட, நின் அலது இலளே.

Kurunthokai 115, Kapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
O man from the fine mountains
with cool fragrant slopes,
where female marai deer with
delicate steps eat desired leaves and
sleep under swaying tall bamboos!

She’s nothing without you.  Good
deeds will be honored by all.
She might have served you just a little,
but end your lovers’ spat with her
and protect her with honor and love.

Notes:  The heroine’s friend who urged the heroine to elope, said this to the hero.  தலைவனுடன் போகும்படி தலைவியை உய்க்கும் தோழி அவனிடம் கூறியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை, அகநானூறு 3-7 – மரையா – ஆன் என்றமையால் பெண் மரை என்க.  உளரே (1) – உ. வே. சாமிநாதையர் உரை – உள்ளாரோ, ஏகார வினா எதிர்மறைப் பொருள் தந்தது.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  உள்ளுறை – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – இனிய ஓசையுடைய மலைச் சாரலில் உணவைக் கொள்ள விரையாது அச்சமற்றுத் துயிலும் மரையாவைப் போல, உங்கள் அன்பை உயர்த்திக் கூறும் இல்லிடத்து, எண்ணியவற்றை எளிதில் பெற்று அச்சமின்றித் தங்கும்படி தோழியை வைத்திடுவை என்பதாம்.  மரை (5) – A kind of deer.  The University of Madras Lexicon defines this as elk.  However, there are no elks in South India.

Meanings:  பெரு நன்று ஆற்றின் – if great good is done, பேணாரும் உளரே – is there anybody who won’t praise? everybody will praise, ஒரு நன்று உடையள் ஆயினும் – even if she is only a little good, புரி – desire, மாண்டு – with esteem, புலவி தீர – to end your quarrel, அளிமதி – please protect her (மதி – முன்னிலை அசை, an expletive of the second person), இலை கவர்பு – seizing the leaves, eating the leaves, ஆடு அமை ஒழுகிய – swaying bamboo growing tall, தண் நறும் சாரல் – cool fragrant slopes, மெல் நடை மரையா துஞ்சும் – female deer of delicate steps sleep, நன் மலை நாட – O man from fine mountain country, நின் அலது இலள் – she is nothing without you, ஏ – அசைநிலை

குறுந்தொகை 116, இளங்கீரனார், குறிஞ்சித் திணை  – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
யான் நயந்து உறைவோள், தேம் பாய் கூந்தல்
வளங்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை
நுண் மணல் அறல் வார்ந்தன்ன,
நல் நெறியவ்வே நறுந்தண்ணியவே.

Kurunthokai 116, Ilankeeranār, Kurinji Thinai – What the hero said to his heart
She who I love has cool, fine,
bee-swarming, fragrant, wavy,
braided hair, lovely like the fine,
black sand on the long shores
of Kāviri river in Uranthai,
the big, flourishing Chozha city.

Notes:  The hero said this, as he left after uniting with the heroine.  இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.  அறல் போல் கூந்தல்:  அகநானூறு 142 – அறல் அன்ன இரும் பல் கூந்தல், அகநானூறு 162 – அறல் என அவிர்வரும் கூந்தல், அகநானூறு 213 – அறலென நெறிந்த கூந்தல், அகநானூறு 265 – அறலின் நெறித்த கூந்தல், அகநானூறு 299 – அறல் மருள் கூந்தலின், குறுந்தொகை 116 – தேம் பாய் கூந்தல் வளங்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை நுண் மணல் அறல் வார்ந்தன்ன, குறுந்தொகை 286 – அறல் போல் கூந்தல், கலித்தொகை 71 – கதுப்பு அறல், கலித்தொகை 98 – நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக, பொருநராற்றுப்படை 25 – அறல் போல் கூந்தல்.  வரலாறு:  சோழர், உறந்தை.  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).  தேம் பாய் கூந்தல் (1) – உ. வே. சாமிநாதையர் உரை – வண்டுகள் தாவுகின்ற கூந்தல், சோமசுந்தரனார் உரை – வண்டுகள் பாய்தற்குக் காரணமான கூந்தல், தமிழண்ணல் – இனிமை தவழும் கூந்தல், வண்டுகள் வந்து பாய்கின்ற கூந்தல் வகைகள், வண்டு மொய்க்கும் மலர்களால் ஆன கூந்தல்.

Meanings:  யான் நயந்து உறைவோள் – the young woman I love, தேம் பாய் கூந்தல் – hair on which bees swarm, hair with flowers that are swarmed by bees (தேம் தேன் என்றதன் திரிபு), வளம் கெழு – flourishing, with wealth, சோழர் உறந்தை – Uranthai of the Chozha kings (உறையூர்), பெருந்துறை – big port (on Kaveri), நுண் மணல் – fine (black) sand, அறல் வார்ந்தன்ன – like the long stretch of sand, நல் நெறியவ்வே – they are perfectly wavy (வகரம் விரித்தல் விகாரம், நெறிப்பு – படிப்படியாய் நீரோட்டத்தினால் மணலில் உண்டாகும் சுவடு, ஐவகை வகுத்த கூந்தல் ஆதலால் பன்மையால் கூறினான்), நறும் தண்ணிய – it is fragrant, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 117, குன்றியனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
மாரி ஆம்பல் அன்ன கொக்கின்
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு
கண்டல் வேர் அளைச் செலீஇயர், அண்டர்
கயிறு அரி எருத்தின் கதழும் துறைவன்,
வாராது அமையினும் அமைக,  5
சிறியவும் உள, ஈண்டு விலைஞர் கை வளையே.

Kurunthokai 117, Kundriyanār, Neythal Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
The lord of the shores,
……….where a wet crab runs
……….in fear to a kandal
……….tree root crevice,
……….away from the sight
……….of a stork that looks
……….like rainy season’s
……….white waterlily flower,
hied like a bull that breaks
the herder’s rope to escape.

If he does not come, so be it!
I have small bangles for you
that are sold by the bangle seller.

Notes:  The heroine’s friend said this when the hero delayed marriage.  She was aware that he was nearby.  வரைவு நீட்டித்தவிடத்துத் தலைவிக்குத் தோழி சொல்லியது.   பொ. வே. சோமசுந்தரனார் உரை – நண்டு கொக்கின் பார்வையை அஞ்சி வளைபுக விரையும் என்றது, நாம் அலர் தூற்றுவார் பார்வையை அஞ்சி அவர் அறியுமுன் தலைவன் இல்லத்தே புக விழைகின்றோம் என்னும் குறிப்புடையது.  இது இரவுக்குறி பகற்குறியாகிய இருவகைக் குறியும் மறுத்துத் தலைவனைக் குறிப்பால் வரைவு கடாயது.

Meanings:  மாரி ஆம்பல் அன்ன – looking like white waterlily flowers during the rainy season, கொக்கின் – of a stork, பார்வல் அஞ்சிய – afraid of it seeing, பருவரல் – sad, ஈர் – wet, ஞெண்டு – a crab (நண்டு என்பதன் போலி), கண்டல் – kandal tree (கண்டல் – Rhizophora mucronate which is a mangrove tree or Pandanus odoratissimus according to the University of Madras Lexicon), அண்டர் – herdsmen, கயிறு அரி – breaks the rope, எருத்தின் – like a bull (இன் உருபு ஒப்புப் பொருளது), கதழும் – goes fast, துறைவன் – the lord of the seashore, the man from seashore, வாராது அமையினும் – even if he does not come, அமைக – let it be so, சிறியவும் உள – there are also small ones, ஈண்டு – here, விலைஞர் – seller, கை – hand, வளை – bangles, ஏ – ஈற்றசை

குறுந்தொகை 118, நன்னாகையார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
புள்ளும் மாவும் புலம்பொடு வதிய,
நள்ளென வந்த நாரில் மாலைப்
பலர் புகு வாயில் அடைப்பக் கடவுநர்
‘வருவீர் உளீரோ’ எனவும்,
வாரார் தோழி, நம் காதலோரே.  5

Kurunthokai 118, Nannākaiyār, Neythal Thinai – What the heroine said to her friend
As unkind evening set in
when birds and animals
sought out lonely places,
the gatekeeper asked
at the gate through which
many enter,
“Is there anybody here
who wants to come in?”
My lover has not come, my friend.

Notes:  The heroine who was sad that the hero who delayed marriage had not come to see her, said this to her friend.  வரைவு நீட்டித்தவிடத்துத் தலைவி பொழுதுகண்டு வருந்தித் தோழிக்குச் சொல்லியது.  இறைச்சி – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – துணையையுடைய அஃறிணையாகிய பறவைகளும் விலங்குகளும் வருந்த வந்தது மாலை என்றதனானே, துணையற்ற உயர்ந்த மகளிர் ஆடவர் இவர்களைத் துயர் உறுத்தல் கூற வேண்டுமோ! என்பதாம்.  புலம்பொடு (1) – உ. வே. சாமிநாதையர் உரை – தனிமையோடு,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தனிமையோடு, தமிழண்ணல் உரை – தனிமையில், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – துயரத்தோடு.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  புள்ளும் மாவும் புலம்பொடு வதிய – birds and animals reside alone, நள்ளென வந்த நார் இல் மாலை – unkind evening that came with sounds, பலர் புகு வாயில் அடைப்ப – closing the gate where many enter, கடவுநர் – the one who asks, the gate keeper, வருவீர் உளீரோ எனவும் – when asked whether anybody wanted to come in, வாரார் – he did not come, தோழி – my friend, நம் காதலோர் – my lover, ஏ – ஈற்றசை

குறுந்தொகை 119, சத்திநாதனார், குறிஞ்சித் திணை – தலைவன் தோழனிடம் சொன்னது
சிறு வெள்ளரவின் அவ்வரிக் குருளை,
கான யானை அணங்கியாஅங்கு,
இளையள், முளை வாள் எயிற்றள்,
வளை உடைக் கையள், எம் அணங்கியோளே.

Kurunthokai 119, Sathināthanār, Kurinji Thinai – What the hero said to his friend
Like a pretty, striped young
of a small white snake that
terrorizes a jungle elephant,

this young woman with bright
teeth resembling sprouts and
bangles on her arm, distresses
me.

Notes:  The hero said this after uniting with the heroine.  இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் தலைவன் கூறியது.  உ. வே. சாமிநாதையர் உரை – பாம்பின் இளமை தலைவியின் இளமைக்கும் அதன் வரி அவளுடைய வளைக்கும் உவமைகள்.  வாள் – வாள் ஒளி ஆகும் (தொல்காப்பியம் உரியியல் 71).  குருளை – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (மரபியல் 1, தொல்காப்பியம்).

Meanings:  சிறு வெள் அரவின் – small white snake’s, அவ்வரிக் குருளை – pretty striped baby, கான யானை – forest elephant, அணங்கியாஅங்கு – like how it terrorizes, இளையள் – the young girl, முளை வாள் எயிற்றள் – the woman with sprout-like bright teeth, வளை உடைக் கையள் – the woman with bangles on her arms, எம் – me, தன்மைப் பன்மை, first person plural, அணங்கியோள் – she distresses, she terrorizes, ஏ – ஈற்றசை

குறுந்தொகை 120, பரணர், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
இல்லோன் இன்பங் காமுற்றாஅங்கு,
அரிது வேட்டனையால் நெஞ்சே, காதலி
நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு,
அரியள் ஆகுதல் அறியாதோயே.

Kurunthokai 120, Paranar, Kurinji Thinai – What the hero said to his heart
My heart!
Like a pauper who desires
pleasures, you pine for her,
the one who is so hard to get.

Like you know that she will
shower her graces, you think
that you can obtain her easily.

Notes:  The hero who missed a tryst said this to his heart.  Or, the hero, who left after uniting with the heroine said this to his heart.  அல்லகுறிப்பட்டு மீளும் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.  இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைவன் பிரிந்த வழிக் கலங்கியதுமாம்.

Meanings:  இல்லோன் இன்பங் காமுற்றாஅங்கு – like a poor man who desires pleasures (காமுற்றாஅங்கு – இசைநிறை அளபெடை), அரிது வேட்டனை you desire what is difficult to get, ஆல் – அசைநிலை, an expletive, நெஞ்சே – O my heart, காதலி – my lover, நல்லள் ஆகுதல் – she wanting to be nice to me, அறிந்தாங்கு – like you know that, அரியள் ஆகுதல் – she is hard to obtain, அறியாதோய் – you do not understand, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 121, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
மெய்யோ, வாழி தோழி, சாரல்
மை பட்டன்ன மா முக முசுக்கலை
ஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற
கோட்டொடு போகியாங்கு, நாடன்
தான் குறி வாயாத் தப்பற்குத்,  5
தாம் பசந்தன என் தட மென்தோளே.

Kurunthokai 121, Kapilar, Kurinji Thinai – What the heroine said to her friend
May you live long my friend!
Is it true that he has come?

Whenever he missed a tryst,
……….like a male monkey with
……….a black face that appeared
……….like smeared with kohl,
……….that erred and plunged
……….down with the branch on
……….which it leapt and broke,
my curved, delicate arms paled.

Notes:  The heroine who had missed a tryst with her lover, met him at a later date and said this to her friend.  தலைவன் செய்த குறியென்று பிறிதொன்றை எண்ணிச் சென்று அவனை எதிர்ப்படப்பெறாமல் ஒரு நாள் மீண்ட தலைவி, பின் ஒரு நாள் அவன் வந்தமை கூறிய தோழியிடம் கூறியது.  அகநானூறு 267 – மை பட்டன்ன மா முக முசுவினம்.  உ. வே. சாமிநாதையர் உரை – குரங்கு கொம்பு ஏற்றுக்கொள்ளும்படி பாயாமையால் அது முறிந்து போனதுபோல தலைவர் தான் அறியும் வண்ணம் குறி செய்யாத தவற்றால் என் தோள்கள் பிசைந்தன என்று தலைவி கூறியது.  மெய்யோ வாழி (1) – உ. வே. சாமிநாதையர் உரை – மெய்யாயின் அவனது வரவாகிய நற்செய்தியை உரைத்த நீ வாழ்வாய் எனப் பொருள் கொள்ளுதலும் பொருந்தும்.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம். உரியியல் 24).  அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம். உரியியல் 26).

Meanings:  மெய்யோ – is it true, வாழி – அசைநிலை, may you live long, தோழி – O friend, சாரல் – mountain slopes, மை பட்டன்ன – like blackness had been smeared, like kohl had been smeared, மா முக முசுக்கலை – black-faced male monkey, langur monkey, Semnopithecus priamus, ஆற்றப் பாயாத் தப்பல் – because of the mistake of not jumping on a branch that could bear, because of the mistake of not jumping on a mature branch, ஏற்ற கோட்டொடு போகியாங்கு – like it went away with the branch that it caught, நாடன் – the hero, the lord of the mountain country, தான் – ஏ அசைநிலை, an expletive, குறி வாயாத் தப்பற்கு – due to his mistake of not understanding the signal, தாம் – அசைநிலை, an expletive, பசந்தன – they became pale, என் – my, தட – curved, wide, மென்தோள் – delicate arms, delicate shoulders, ஏ அசைநிலை, an expletive

குறுந்தொகை 122, ஓரம்போகியார், நெய்தற் திணை – தலைவி சொன்னது
பைங்கால் கொக்கின் புன்புறத்து அன்ன,
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின, இனியே
வந்தன்று வாழியோ மாலை,
ஒரு தான் அன்றே கங்குலும் உடைத்தே.

Kurunthokai 122, Ōrampōkiyār, Neythal Thinai – What the heroine said
The white waterlilies
of the deep waters have
closed their pointed petals,
looking like the narrow
backs of storks with green
legs.

Evening has come, and may
it live for long!
However, night will also follow.

Notes:  The heroine said this when the hero did not come on time to see her.  தலைவி பொழுதுகண்டு வருந்தியது.  குறுந்தொகை 387 – கங்குல் வெள்ளங்கடலினும் பெரிதே.  உ. வே. சாமிநாதையர் உரை – மாலையை வாழ்த்தியது குறிப்புமொழி.  தனக்குத் துன்பத்தைத் தரும் அது வாழ்தற்குரியதன்று என்பது தலைவியின் உள்ளக்கிடக்கை.  ஆவூர் மூலங்கிழாரின் செய்யுள் பகுதியில் (புறநானூறு 196) ‘செல்வல் அத்தை சிறக்க நின் நாளே’ என்று உரையாசிரியர் கூறியது காண்க.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘மாலை வாழ்க’ என்பது ‘அது கெடுக’ என்னும் பொருளில் வந்த குறிப்புமொழி.

Meanings:  பைங்கால் கொக்கின் – of storks with green legs, புன்புறத்து அன்ன – like the small backs, like the narrow backs (புறத்து – புறம், அத்து சாரியை), குண்டு நீர் ஆம்பலும் கூம்பின – the white waterlilies in the deep waters have closed (ஆம்பலும் – உம்மை உயர்வு சிறப்பு), இனி – now, ஏ – அசைநிலை, an expletive, வந்தன்று – it has come, வாழி – may it live long ,  ஓ – அசைநிலை, an expletive, மாலை – evening time, ஒரு தான் அன்றே – not only that, கங்குலும் உடைத்து – it also has night (உம்மை இறந்தது தழீஇயது), ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 123, ஐயூர் முடவனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
இருள் திணிந்தன்ன ஈர்ந்தண் கொழு நிழல்,
நிலவுக் குவித்தன்ன வெண்மணல் ஒரு சிறைக்
கருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில் புலம்ப,
இன்னும் வாரார், வரூஉம்
பன் மீன் வேட்டத்து என் ஐயர் திமிலே.  5

Kurunthokai 123, Aiyūr Mudavanār, Neythal Thinai – What the heroine’s friend said to her as the hero listened nearby
On one side of the white sand
that appears like heaped up
moonlight, is the beautiful,
lonely grove with punnai trees with
black branches, their damp, cool
shade appearing like it is filled with
darkness.

He has not yet come, but our brothers
will return in their boats with the many
fish that they catch.

Notes:  The heroine who did not see the hero since he missed their day tryst, said this to her friend, aware that the hero was nearby.  பகற்குறியிடத்து வந்த தலைவனைக் காணாத தோழி, அவன் இருப்பதை அறிந்து தலைவியிடம் சொன்னது.  புலம்ப (3) – உ. வே. சாமிநாதையர் உரை – தனிப்ப, தனிமைப் பட்டிருப்ப, தலைவன் வாராமையால் பொழில் தனிமையுடையதாயிற்று.  நிலவு மணல்: அகநானூறு 20 – நிலவு மணல், அகநானூறு 200 – நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில், நற்றிணை 31 – நிலவு மணல், நற்றிணை 140 – நிலவு மணல், நற்றிணை 159 – நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல், நற்றிணை 183 – நிலவு மணல், குறுந்தொகை 123 – நிலவுக் குவித்தன்ன வெண்மணல், கலித்தொகை 13 – வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர், புறநானூறு 17 – நிலவு மணல் வியன் கானல், பொருநராற்றுப்படை 213 – நிலவு எக்கர், மதுரைக்காஞ்சி 114 – நிலவுக் கானல்.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:   இருள் திணிந்தன்ன – like darkness was filled, ஈர்ந்தண் கொழு நிழல் – damp cool thick shade, நிலவுக் குவித்தன்ன – like the moon light heaped, வெண்மணல் – white sand, ஒரு சிறை – on one side, கருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில் புலம்ப – lonely beautiful grove with punnai trees with black branches, lonely grove with flowers and laurel trees with black branches, நாகம், Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, இன்னும் வாரார் – he has not yet come, வரூஉம் பன் மீன் வேட்டத்து – will return after catching many fish (வரூஉம் – இன்னிசை அளபெடை), என் ஐயர் திமில் – the boats of our brothers, ஏ – ஈற்றசை

குறுந்தொகை 124, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின், அகன்தலை
ஊர் பாழ்த்தன்ன ஓமையம் பெருங்காடு
இன்னா என்றிர் ஆயின்,
இனியவோ பெரும, தமியோர்க்கு மனையே?

Kurunthokai 124, Chēramān Pālai Pādiya Perunkadunkō, Pālai Thinai – What the heroine’s friend said to the hero
Lord, if you say that it is
painful to be in the vast
wasteland with huge ōmai
forests,
resembling large desolate
towns where salt merchants
join together and leave,

do you think that it is sweet
to be alone at home?

Notes:  The heroine’s friend said this to the hero who was hesitant to take the heroine on his trip.  தலைவி தலைவனுடன் செல்ல விரும்பினாள்.  தன்னோடு வரின் அவள் இன்னல் எய்துவள் என்று தலைவன் கூறினான்.  அப்பொழுது அத்தலைவனிடம் தோழி கூறியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘காடு இன்னா என்றீர்’ என்றது ‘உடன்போவார்க்கு இனியாவாகவும் நீயிர் இன்னா என்கின்றீர்’ என்பதுபட நின்றது.  ‘இனியவோ’ என்றது இன்னாவுடையனவாதல் ஒருதலை’ என்பதுபட நின்றது.  இனியவோ (4) – உ. வே. சாமிநாதையர் உரை – இந்த வினா எதிர்மறைப் பொருளுடையது.

Meanings:  உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின் – with places where salt merchants gather and leave, அகன்தலை – large spaces, ஊர் பாழ்த்தன்ன – like ruined towns (பாழ்த்தன்ன – விகாரம்), ஓமையம் பெருங்காடு – big wasteland forest with ōmai trees, Sandpaper tree, Dillenia indica (அம் – சாரியை), இன்னா என்றிர் ஆயின் – if you say that it is suffering, இனியவோ – is it sweet (it is not sweet), பெரும – O lord, தமியோர்க்கு – to those who are alone, மனை – home, ஏ – ஈற்றசை

குறுந்தொகை 125, அம்மூவனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
இலங்கு வளை நெகிழச் சாஅய் யானே
உளெனே, வாழி தோழி, சாரல்
தழை அணி அல்குல் மகளிருள்ளும்
விழவு மேம்பட்ட என் நலனே, பழ விறல்
பறை வலம் தப்பிய பைதல் நாரை  5
திரை தோய் வாங்கு சினை இருக்கும்
தண்ணந்துறைவனொடு கண்மாறின்றே.

Kurunthokai 125, Ammoovanār, Neythal Thinai – What the heroine said to her friend
May you live long, my friend!
My beauty,
……….splendid as a festival, that
……….excelled that of women with
……….clothing on their loins made
……….from the trees on the slopes,
has gone away with the lord of the
cool, beautiful seashore,
where a sad stork who has lost
its old strength sits on a bent tree
branch lapped by the waves.

I am wasting away; my bright bangles
have slipped; and I am still alive.

Notes:  The heroine said this to her friend when the hero delayed marriage.  வரைவு நீட்டித்தவிடத்து தலைவி தோழியிடம் சொன்னது.  இரா. இராகவையங்கார் உரை – திரை இருக்குமிடத்து மீனொடு வாராதாயின் நாரை உயிர் வாழாமை போலத் தானுள்ள இடத்துத் தலைவன் வரைவொடு வாரானேல் உயிர் வாழேன் என்று குறித்தாளாம்.  தண்ணந்துறைவனொடு (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தண்ணந்துறைவன் என்றது இகழ்ச்சிக் குறிப்பு.  என்னை?  அவன் துறை மட்டுமே தண்ணிது, இவன் வெய்யன் ஆயினன் என்பதுபட நிற்றலான் என்க.   உ. வே. சாமிநாதையர் உரை – நாரை தன் பழைய சிறை வலி கெட்டு திரைத் தானே கொணர்ந்து தரும் மீனைப் பெற்றாலன்றி வேறு இறை பெறாத நிலையில் திரை தோயும் சினையில் இருத்தலைப் போல, யான் என் பழைய நலனை இழந்து தலைவன் தானே உளமிறங்கிச் செய்யும் தண்ணளியை எதிர்நோக்கி, ஈண்டுள்ளேன் என்பது குறிப்பு.

Meanings:  இலங்கு வளை நெகிழச் சாஅய் யான் – I became thin and my bright bangles have slipped off (சாஅய் – இசை நிறை அளபெடை), ஏ – பிரிநிலை, exclusion, உளென் – I am still alive here, ஏ – அசைநிலை, an expletive, இரக்கக் குறிப்புமாம், வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – O friend, சாரல் தழை அணி அல்குல் மகளிருள்ளும் – among the women who wear leaves from the mountain slopes to cover their loins/waists, விழவு மேம்பட்ட என் நலனே – my virtue/beauty that is like a festival, பழ விறல் – old strength, பறை – wings, வலம் – strength, தப்பிய – failed, lost, பைதல் நாரை – a sad stork, Ciconia ciconia, திரை தோய் – waves touching it, waves soaking it, வாங்கு சினை இருக்கும் – resides on the curved branches, தண்ணந்துறைவனொடு கண்மாறின்று – has left the place and gone away with the lord of the cool beautiful seashore, ஏ – ஈற்றசை

குறுந்தொகை 126, ஒக்கூர் மாசாத்தியார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
இளமை பாரார், வள நசைஇச் சென்றோர்,
இவணும் வாரார், எவணரோ எனப்,
பெயல் புறந்தந்த பூங்கொடி முல்லைத்
தொகு முகை இலங்கு எயிறாக
நகுமே தோழி, நறும் தண் காரே.  5

Kurunthokai 126, Okkūr Māsāthiyār, Mullai Thinai – What the heroine said to her friend
He did not think about youth
when he went desiring wealth.
He has not come back and I
wonder where he is.

The clusters of bright buds,
on the mullai vines that bear
flowers, nurtured by the fragrant,
cool rain, appear to laugh at me,
my friend.

Notes:  The heroine who was sad on seeing the rainy season, said this to her friend.  பருவங்கண்டு வருந்திய தலைவி தோழிக்குச் சொல்லியது.  இரா.  இராகவையங்கார் உரை – முல்லை நகும் என்பதற்கு ஏது தலைவர் அம்முல்லையைக் காட்டி ‘மௌவல் நலம்வரக் காட்டி கயல் ஏர் உண்கண் கனங்குழை இவை நின் எயிறு ஏர் பொழுதின் ஏய் தருவேம் என’  (நற்றிணை 316) கூறிச் சென்றாராதலால் அவரை நம்பி ஆற்றியிருந்தது பற்றியெனக் கொள்ளத்தகும்.  இங்ஙனம் கொள்ளாது ‘முல்லைத் தொகு முகை இலங்கு எயிறாக நகுமே தோழி நறும் தண் காரே’ என்று பாடம் கொள்ளின் முல்லையின் திரண்ட முகைகள் விளங்கிய பற்கள் போலாக நறுந்தண் கார் ஒலிக்கும் என்று பொருள் கொள்க.  கார் நாற்பதில் (14) ‘முல்லை இலங்கு எயிறின் நறுந்தண் கார் மெல்ல இனிய நகும்’  என வந்த இடத்து பழைய உரைக்காரர், ‘முல்லைக் கொடிகள் விளங்குகின்ற மகளிர் பற்களைப் போன்ற அரும்புகளை ஈனும்படி அழகிய குளிர்ந்த மேகங்கள் இனியனவாய் மெதுவா ஒலியா நின்றன’ எனப் பொருள் கூறுதல் காண்க.  பெயல் புறந்தந்த முல்லை என்றாள் தனக்கு அம் மழை இப்பொழுது பகையாய் வருந்துதல் குறித்து.  பற்களைப் போன்ற அரும்பு:  குறுந்தொகை 126 – முல்லைத் தொகு முகை இலங்கு எயிறாக, குறுந்தொகை 162 – சிறு வெண்முகையின் முறுவல் கொண்டனை, குறுந்தொகை 186 – முல்லை மென் கொடி எயிறு என முகையும், நற்றிணை 316 – மௌவல் நலம்வரக் காட்டி கயல் ஏர் உண்கண் கனங்குழை இவை நின் எயிறு ஏர் பொழுதின் ஏய் தருவேம் என.

Meanings:  இளமை பாரார் – he did not consider youth, வள நசைஇச் சென்றோர் – he went with the desire for wealth (நசைஇ – சொல்லிசை அளபெடை), இவணும் வாரார் – he has not come back here (உம்மை – உயர்வு சிறப்பு), எவணரோ வென – I wonder where he is, பெயல் புறந்தந்த – protected by the rain, பூங்கொடி முல்லை – jasmine vines that bear flowers, Jasminum sambac, தொகு முகை – buds in clusters, இலங்கு எயிறாக – as bright teeth, நகும் – they will laugh (at me), ஏ – அசைநிலை, an expletive, தோழி – my friend, நறும் தண் கார் – this fragrant cool rainy season, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 127, ஓரம்போகியார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
குருகு கொளக் குளித்த கெண்டை அயலது
உருகெழு தாமரை வான் முகை வெரூஉம்
கழனியம் படப்பைக் காஞ்சி ஊர!
ஒரு நின் பாணன் பொய்யனாக,
உள்ள பாணர் எல்லாம்  5
கள்வர் போல்வர், நீ அகன்றிசினோர்க்கே.

Kurunthokai 127, Ōrampōkiyār, Marutham Thinai – What the heroine’s friend said to the hero
O man from the town with portia trees
in the groves near the rice fields,
where a kendai fish caught by a heron
slips and dives into the water and now
fears the white buds of the beautifully
colored lotus flowers!

Since the bard you sent to her is a liar,
it appears that all the other bards you sent
to women you abandoned, are also liars!

Notes:  The heroine’s friend said this to the hero who stood behind his messenger bard, fearing his sulking wife.  பரத்தையிற் பிரிந்து மீண்ட தலைவன் ஊடியிருந்த தலைவியை அஞ்சி அவள் ஊடலைத் தீர்க்க பாணனை அனுப்பி, அவன் பின் நின்றபொழுது அத்தலைவனிடம் தோழி கூறியது.  ஐங்குறுநூறு 139 – நின்னினும் பாணன் நல்லோர் நலம் சிதைக்கும்மே, நற்றிணை 200 – கை கவர் நரம்பின் பனுவல் பாணன் செய்த அல்லல் பல்குவ வை எயிற்று ஐது அகல் அல்குல் மகளிர் இவன் பொய் பொதி கொடுஞ்சொல் ஓம்புமின். படப்பை (3) – உ. வே. சாமிநாதையர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை, பக்கம், தமிழண்ணல் உரை – தோட்டம்.  உ. வே. சாமிநாதையர் உரை – நீ அகன்றிசினோர்க்கு என்றது நீ பல மகளிரோடு நட்புடையாய் என்னும் கருத்தை உள்ளடக்கியது.  குருகிற்கு அஞ்சிய கெண்டை அக்குருகைப் போன்ற தோற்றத்தை மட்டும் உடையதும் கொடுமை இல்லாததுமாகிய தாமரை முகையையும் அஞ்சினாற்போல நீ விடுத்த பாணனைப் பொய்யனாகக் கண்டு வெறுத்த மகளிர் பிற பாணரையும் வெறுத்தர் என்பது குறிப்பு.  இரா. இராகவையங்கார் உரை – தன்னுடன் பாடின்றித் தன்னுடைய கணவனைப் பரத்தையர் சேரிக்குக் கொண்டேகுவாராகக் கருதிக் கள்வர் போல்வர் என்றாள்.  அகன்றிசினோர்க்கு என்ற பன்மையால் இத் தலைவன் பல் பெண்டிராளன் என அறியலாம்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – குருகு கொளக் குளித்த கெண்டை என்றது அன்னத்தால் கவ்வப்பட்டுழி அதற்கு அகப்படாது நீரினுள் புகுந்து உயிர் உய்த்த கெண்டை மீன் என்றவாறு.  எனவே நின் பாணன் பொய்யில் மயங்காது தப்பினேம் என்றபடியாம்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  பாணர் – பாண் மரபினர், பாண் என்பது பண் அடியாகப் பிறந்த பெயர், இசை பாடுபவர்.

Meanings:  குருகு – heron/egret/stork, கொள – caught, குளித்த – jumped into water, கெண்டை –  carp, cyprinus fimbriatus, அயலது – nearby, உருகெழு – with color, தாமரை – lotus, வான் – white, முகை – buds, வெரூஉம் – it fears, கழனி அம் படப்பை – groves with fields near them (அம் – சாரியை), காஞ்சி – portia trees, பூவரச மரம், Thespesia populnea, ஊர – O man from such town (அண்மை விளி), ஒரு – one, நின் பாணன் – your bard, பொய்யனாக – is a liar, உள்ள பாணர் எல்லாம் – all the bards here, கள்வர் போல்வர் – they are like thieves, they are not truthful, நீ அகன்றிசினோர்க்கு – to those abandoned by you (இசின் – படர்க்கையின்கண் வந்ததோர் இடைச்சொல், an expletive of the third person), ஏ – ஈற்றசை, an expletive

குறுந்தொகை 128, பரணர், நெய்தற் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
குணகடல் திரையது பறை தபு நாரை,
திண் தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை
அயிரை ஆரிரைக்கு அணவந்தாங்குச்,
சேயள் அரியோள் படர்தி,
நோயை நெஞ்சே, நோய்ப் பாலோயே.  5

Kurunthokai 128, Paranar, Neythal Thinai – What the hero said to his heart
My heart!  Your desire to get her
who is far away and hard to get,
is like a stork with ruined feathers
living near the waves of the eastern
ocean trying to catch fish that is hard to
get from the shores of Poraiyan’s Thondi.

Fate is the reason for your sadness.

Notes:  The hero who did not find his beloved at the place of tryst, said this to his heart.  குறியிடத்தில் தலைவியைக் காணாது மீளும்பொழுது தலைவன் தன் நெஞ்சிடம் கூறியது.  முன்துறை (2) – உ. வே. சாமிநாதையர் உரை – துறை முன், பின் முன்னதாகத் தொக்கது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவியைத் தனது முயற்சியால் எய்த இயலாமை கூறுவான் ‘பறை தபு நாரை’ என்றான்.  அவள் நாம் விரும்புமாறு எய்துதற்கு உரியவளும் அல்லள் என்பான் ‘அரியோள்’ என்றான்.  வரலாறு:  பொறையன், தொண்டி.

Meanings:  குணகடல் – the eastern ocean, திரையது – near the waves, பறை தபு –  feathers ruined, scanty feathers, unable to fly, நாரை – stork, white stork, Ciconia ciconia, திண் தேர் – sturdy chariot, பொறையன் – Chēran king, தொண்டி முன்துறை – seashore in Thondi, அயிரை – நொய்ம்மீன், Loach fish, Cobitio thermalis, ஆரிரைக்கு – as rare food, as difficult-to-obtain food, அணவந்தாங்கு – like it lifted its head, சேயள் – she is far away, அரியோள் – she is hard to get, படர்தி – you desire to get her, நோயை – you are with love affliction, நெஞ்சே – O my heart, நோய் – mental distress, பாலோய் – it is your fate, ஏ – அசைநிலை, an expletive, தேற்றம், certainty

குறுந்தொகை 129, கோப்பெருஞ்சோழன், குறிஞ்சித் திணை  – தலைவன் தன் தோழனிடம் சொன்னது
எலுவ! சிறாஅர் ஏமுறு நண்ப!
புலவர் தோழ! கேளாய்! அத்தை
மாக் கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப்
பசு வெண்திங்கள் தோன்றியாங்குக்
கதுப்பயல் விளங்கும் சிறு நுதல்,  5
புதுக்கோள் யானையின், பிணித்தற்றால் எம்மே.

Kurunthokai 129, King Kōperunchōzhan, Kurinji Thinai – What the hero said to his friend
Listen to me, my friend who brings
joy to children and is a friend to poets!

I am distressed, like an elephant that
has just been caught,
by her bright forehead, surrounded by
flowing hair, that appears like the cool,
white, eighth-day crescent moon that
rises over the dark ocean.

Notes:  The hero who returned after uniting with the heroine, said this to his friend who asked him about the change in his demeanor.  இயற்கைப் புணர்ச்சி எய்தித் தலைவியைப் பிரிந்து வந்த தலைவனின் வேறுபாட்டைக் கண்டு அது எதனால் ஏற்பட்டது என்று தோழன் வினவியபொழுது தலைவன் கூறியது.  மாக் கடல் நடுவண் (3) – உ. வே. சாமிநாதையர் உரை – பெரிய கடலின் நடுவில், பொ. வே. சோமசுந்தரனார் உரை – கரிய கடலினிடையே, இரா. இராகவையங்கார் உரை – கருங்கடலிடையே, தமிழண்ணல் உரை – கரிய கடலின் நடுவே, ச.வே. சுப்பிரமணியன் உரை – கரிய பெருங்கடலின் நடுவில்.   புதுக்கோள் யானை (6) – உ. வே. சாமிநாதையர் உரை – புதிதாகக் காட்டிலிருந்து பிடிக்கப்பட்ட யானை.  தலைவன் தான் முன்னர் இத்தகைய உள்ளக் கவர்ச்சியை அடைந்தவனல்லன் ஆதலின் புதுக் கோள் யானையை உவமை கூறினான்.  இரா. இராகவையங்கார் உரை – எண் நாள் பக்கத்துப் பசு வெண்திங்கள் (3,4) – ‘பசு வெண் பக்கத்து திங்கள் எண் நாள்’ என்க.

Meanings:  எலுவ – oh friend, சிறாஅர் –  children (இசைநிறை அளபெடை), ஏமுறு நண்ப – O friend who gives happiness (ஏமம் ஏம் எனக் குறைந்து நின்றது), புலவர் தோழ – O friend of poets, கேளாய் – listen to this, அத்தை – அசைநிலை, an expletive, மாக் கடல் நடுவண் – in the middle of the big ocean, in the middle of the dark ocean, எண் நாள் – the 8th day, பக்கத்துப் பசு வெண்திங்கள் – the white crescent moon/young moon with cool sides, தோன்றியாங்கு – like how it appeared, கதுப்பு அயல் – near her hair, விளங்கும் – bright, சிறு நுதல் – small forehead, புது கோள் யானையின் – like a newly caught elephant (யானையின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு), பிணித்தற்று – it has tied up the heart, it has distressed, ஆல் – அசைநிலை, எம் – me (தன்மைப் பன்மை, first person plural), ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 130, வெள்ளிவீதியார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது அல்லது தலைவி தோழியிடம் சொன்னது
நிலம் தொட்டுப் புகாஅர், வானம் ஏறார்,
விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார்,
நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின்,
குடி முறை குடி முறை தேரின்,
கெடுநரும் உளரோ, நம் காதலோரே?  5

Kurunthokai 130, Velliveethiyār, Pālai Thinai – What the heroine’s friend said to her or what the heroine said to her friend
Your lover did not dig into
earth and enter it, or climb
up the sky, or walk into the vast,
blocking ocean.

If we search every country,
every town, and every community,
can he escape us?

Notes:  The heroine’s friend said this to the heroine who was worried when the hero was away.  Or, what the heroine said to her friend hoping that she would send a message to the hero.  தலைவன் பிரிந்திருக்கும்போது வருந்திய தலைவியிடம் தோழி கூறியது.  தோழி தூது விடும்பொருட்டுத் தலைவி தனது ஆற்றாமையால் அவளிடம் கூறியதுமாம்.  அகநானூறு 147 – நெறிபடு கவலை நிரம்பா நீளிடை வெள்ளிவீதியைப் போல நன்றும் செலவு அயர்ந்திசினால் யானே.   அகநானூறு 236 – ஆட்டன் அத்தியை காணீரோ என நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் கடல் கொண்டன்று எனப் புனல் ஒளித்தன்று எனக் கலுழ்ந்த கண்ணள் காதலற் கெடுத்த ஆதிமந்தி.  குடி முறை (4) – உ. வே. சாமிநாதையர் உரை – குடிகள்தோறும், நாடு, ஊர், குடி ஒன்றனுள் ஒன்று அடங்கியவை ஆதலின் அம்முறைப்படி கூறினான்.  குடியென்றது குடும்பத்தை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – குடிகள்தோறும்,  தமிழண்ணல் உரை – தனித்தனி குலம்.  இது சாதி வழிப் பிரிவன்று. பின்னர் புகுந்த சாதி குலங்களையும் வேற்றுமை பாராட்ட வைத்தது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தோழி கூற்றாயின், ‘அங்ஙனம் ஆராய்ந்து தலைவனைத் தேடிக் கொணர்வன்.  நீ ஆற்றியிரு’ என்பது குறிப்பெச்சம்.  தலைவி கூற்றாயின், ‘நீ அங்ஙனம் முயன்று அவரைத் தேடித் தாராய் ஆயின் யான் இறந்துபடுவல்’ என்பது குறிப்பெச்சம்.  முந்நீர் – தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது.  முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் ‘தமிழ்க்காதல்’ நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு 9 உரை, நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி 75 உரை.

Meanings:  நிலம் தொட்டுப் புகாஅர் – he did not dig and enter the earth (புகாஅர் – இசை நிறை அளபெடை), வானம் ஏறார் – he did not climb up the sky, விலங்கு – blocking, இரு முந்நீர் – vast ocean, காலின் செல்லார் – he did not walk, நாட்டின் நாட்டின் – in every country, ஊரின் ஊரின் – in every town, குடி முறை குடி முறை – in every community, in every settlement, in every clan, தேரின் – if searched, கெடுநரும் உளரோ – can he escape us, நம் காதலோர் – our beloved man, your lover, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 131, ஓர் ஏர் உழவனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
ஆடு அமை புரையும் வனப்பின் பணைத்தோள்
பேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே,
நெடுஞ்சேண் ஆர் இடையதுவே நெஞ்சே,
ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து
ஓர் ஏர் உழவன் போலப்  5
பெரு விதுப்பு உற்றன்றால், நோகோ யானே.

Kurunthokai 131, Ōr Ēr Uzhuvanār, Pālai Thinai – What the hero said to his heart
It is far away and difficult
to reach, the town where
she lives,
her thick arms as beautiful
as swaying bamboo,
and her eyes large and peaceful.

My heart is frantic like a farmer
with a single plow, who is ready
to plow his beautiful, moist field.

I am in pain!

Notes:  The hero who succeeded in his venture said this on seeing the season change.  வினை முற்றிய தலைவன் பருவ வரவின்கண் சொல்லியது.  உ. வே. சாமிநாதையர் உரை – ஓர் ஏர் உழவன் ஈரம் வீண்படாமல் உழுவதற்கு விரைதலைப் போல என் நெஞ்சம் தலைவியை உரிய பருவத்தே கண்டு அளவளாவ விரைகின்றது என்றான்.

Meanings:  ஆடு அமை – swaying bamboo, புரையும் – like, வனப்பின் பணைத்தோள் – pretty thick arms, பேர் அமர்க் கண்ணி – girl with large calm eyes, இருந்த ஊர் – the town where she resides, ஏ – அசைநிலை, an expletive, நெடுஞ்சேண் ஆர் இடையது – it is very far away and difficult to reach, ஏ – அசைநிலை, an expletive, நெஞ்சு – my heart, ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து – of a wet perfect fresh field, ஓர் ஏர் உழவன் போல – like a farmer with a single plow, like a farmer with a single ox, பெரு விதுப்பு உற்றன்றால் – it desires greatly (உற்றன்று, ஆல் அசைநிலை, an expletive), நோகு – I am hurting, I am in pain, செய்கென்னும் தன்மை வினை, ஓ – அசைநிலை, an expletive, இரக்கக் குறிப்பு, implying pity, யான் – me, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 132, சிறைக்குடி ஆந்தையார், குறிஞ்சித் திணை – தலைவன் தன் தோழனிடம் சொன்னது
கவவுக் கடுங்குரையள், காமர் வனப்பினள்,
குவவு மென் முலையள், கொடிக் கூந்தலளே,
யாங்கு மறந்தமைகோ யானே? ஞாங்கர்க்
கடுஞ்சுரை நல் ஆன் நடுங்கு தலைக் குழவி
தாய் காண் விருப்பின் அன்ன,  5
சாஅய் நோக்கினளே மாஅயோளே.

Kurunthokai 132, Siraikkudi Ānthaiyār, Kurinji Thinai – What the hero said to his friend
How can I forget the dark
woman with great beauty,
raised delicate breasts and
long trailing hair,
who is quick to embrace?

She gives me anxious
looks like that of a trembling
young calf which desires to see
its mother, a fine cow with an
udder full of milk, grazing nearby.

Notes:  The hero said this when his friend chided him.  தோழன் இடித்துரைத்தபோது தலைவன் அதனை எதிர் மறுத்துக் கூறியது.  கவவு (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அகத்தீடு, அஃதாவது தழுவுதல் என்னும் பொருட்டு.  கவவு அகத்திடுமே (தொல்காப்பியம், உரியியல் 59).  குழவி – யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய.  எருமையும் மரையும் வரையார் ஆண்டே.  கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே.  ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும்.  குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை.  ஆவும் எருமையும் அது சொலப்படுமே (தொல்காப்பியம், மரபியல் 15-20).  குரை – ஏயும் குரையும் இசைநிறை அசைநிலை ஆயிரண்டு ஆகும் இயற்கைய என்ப (தொல்காப்பியம், இடையியல் 24).

Meanings:  கவவுக் கடுங்குரையள் – she is fast to embrace (கடுங்குரையள் – குரை என்னும் இடைச்சொல் குறிப்பு வினைமுற்றாக ஆயிற்று), காமர் வனப்பினள் – she is of fine beauty, குவவு மென் முலையள் – she is with raised/rounded and delicate breasts, கொடிக் கூந்தலள் – she is a woman with long hair, ஏ – அசைநிலை, an expletive, யாங்கு மறந்து அமைகு – how can I forget her and stay relaxed (அமைகு – தன்மை ஒருமை வினைமுற்று, first person singular verb ending), ஓ – அசைநிலை, an expletive, இரக்கக் குறிப்பு, யான் – me, ஏ – அசைநிலை, an expletive, ஞாங்கர் – in that place, nearby, கடுஞ்சுரை – udder full with milk, நல் ஆன் – a fine cow, நடுங்கு தலைக் குழவி தாய் காண் விருப்பின் அன்ன – like a calf with trembling head which desires to see its mother (விருப்பின் – இன் சாரியை), சாஅய் நோக்கினள் – she looked with desiring anxious looks (சாஅய் – இசை நிறை அளபெடை), ஏ – அசைநிலை, an expletive, மாஅயோள் – the dark young woman இசைநிறை அளபெடை, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 133, உறையூர் முதுகண்ணன் சாத்தனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
புனவன் துடவைப் பொன் போல் சிறு தினை
கிளி குறைத்து உண்ட கூழை இருவி
பெரும் பெயல் உண்மையின் இலை ஒலித்தாங்கு, என்
உரம் செத்தும், உளெனே தோழி, என்
நலம் புதிது உண்ட புலம்பினானே.  5

Kurunthokai 133, Uraiyūr Muthukannan Sāthanār, Kurinji Thinai – What the heroine said to her friend
My friend!
Even though my strength is
lost and my virtue has been
ruined, I am still alive,
like the flourishing new leaves
that sprout after heavy rains,
from mushy stubble of golden,
tiny-millet stalks that parrots
ate in the fields of hill farmers.

Notes:  The heroine said this to her friend when the hero delayed marriage.  வரைவு நீட்டித்தவிடத்து தலைவி கூறியது.  குறுந்தொகை 106 – புனவன் துடவைப் பொன் போல் சிறு தினை.  உ. வே. சாமிநாதையர் உரை – கிளி உண்டமையால் கதிர் இழந்த நினைத்தாள் பெரும் பெயலுண்மையால் உலர்ந்து வாடாமல் இலை விட்டதுபோல, தலைவர் உண்டமையால் நலன் இழந்த யான் அவரது தண்ணளியை நினைத்து உயிர் வைத்துள்ளேன் என்றது.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  புனவன் – mountain dweller, துடவை – field, பொன் போல் – gold-like, சிறு தினை – tiny millet, small-eared millet, Italian millet, Setaria italicum, கிளி – parrots, குறைத்து – reduced, உண்ட – ate, கூழை – mushy, short, இருவி – stubble, பெரும் பெயல் – heavy rains, உண்மையின் – since it happened, இலை ஒலித்தாங்கு – like how leaves started to flourish, என் – my, உரம் செத்தும் – even when my strength has died, உளென் – I still live, ஏ – இரக்கக் குறிப்பு, தோழி – my friend, என் நலம் புதிது உண்ட – since he enjoyed my beauty/virtue first, புலம்பினான் – being  alone, being in sorrow, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 134, கோவேங்கைப் பெருங்கதவனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி, நம்மொடு
பிரிவு இன்று ஆயின் நன்று, மன் தில்ல,
குறும்பொறைத் தடைஇய நெடுந்தாள் வேங்கைப்
பூவுடை அலங்கு சினை புலம்பத் தாக்கிக்
கல் பொருது இரங்கும் கதழ் வீழ் அருவி  5
நிலம் கொள் பாம்பின் இழிதரும்
விலங்கு மலை நாடனொடு கலந்த நட்பே.

Kurunthokai 134, Kōvēngai Perunkathavanār, Kurinji Thinai – What the heroine said to her friend
Listen to me O friend!
It would be nice if there is no
parting from this union of love
with the man
from the blocking mountains,

where swaying, flower-laden
branches of tall-trunked, huge
vēngai trees that grow between
small boulders,
get attacked by the roaring,
rapid waterfalls that crash against
rocks, and flow down looking like
snakes slithering on the ground.

Notes:  The heroine said this to her friend who consoled her when she was sad since the hero had left her to earn wealth for their marriage.  தலைவன் வரைபொருட்குப் பிரிந்த காலத்தில் வருந்திய தலைவியை ஆற்றுவிக்கும் தோழிக்குச் சொல்லியது.  உ. வே. சாமிநாதையர் உரை – அருவி நிலப்பரப்பில் இழிந்து வளம் தருவத்தேனும் இடையில் மலரை உதிர்த்தலும் கல்லைப் பொருதலும் பாம்பு போலத் தோன்றலுமாகிய துன்பத்திற்கு ஏதுவான செயலைச் செய்தது போல, நாடனது நட்பு முடிவில் நன்மையையே தருவதாயினும் இடையில் பிரிவினால் துன்பத்திற்குக் காரணமாக ஆயிற்று என்பது.  கதழ் – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  நிலம் கொள் பாம்பின் இழிதரும் (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மலையினின்றும் நிலத்தின்கண் செல்லாநின்ற பாம்பைப் போன்று செல்கின்ற, உ. வே. சாமிநாதையர் உரை – நிலத்தைத் தனக்கு இடமாக ஊர்ந்து கொள்ளும் பாம்பைப் போல் இறங்கும்.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).  மன் – கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).  உள்ளுறை – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – அருவி குறிஞ்சி நிலத்துள்ள வேங்கையின் மலருள்ள சினை வருந்தத் தாக்கி கல்லோடு மோதிக் கீழிறங்குமாறு போல, மலைநாடன், என் மனையிடத்திருந்த எனது சிறந்த நலத்தை வருந்தத் திளைத்து, வலிதாகக் கூறிய நின்னோடும் மாறுபட்டு, மனம் சென்றாங்கே பிரிந்து சென்றிட்டான் என்பதாம். ‘நிலங்கொள் பாம்பின்’ என்ற ஏனை உவமம் உள்ளுறை உவமத்திற்குச் சிறப்புக் கொடுத்து நின்றது.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).  ).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

Meanings:  அம்ம – இடைச்சொல், a particle, listen to me, வாழி – அசைநிலை, may you live long, தோழி – my friend, நம்மொடு பிரிவு இன்று ஆயின் நன்று – it would be good if he does not separate from us, மன் – ஒழியிசை, implied meaning, தில்ல – தில் விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச்சொல், ஈறு திரிந்தது வந்தது, a particle which implies desire, குறும்பொறைத் தடைஇய – growing large between small boulders (தடைஇய – தட என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்ச வினை, செய்யுளிசை அளபெடை), நெடுந்தாள் வேங்கை – tall-trunked Indian kino trees,  Pterocarpus marsupium, பூவுடை அலங்கு சினை – moving branches with flowers to drop, புலம்ப – to be alone (without the flowers), தாக்கி – attacking, கல் பொருது – hitting the rocks, crashing against the rocks, இரங்கும் கதழ் வீழ் அருவி – loud rapidly falling waterfalls, நிலம் கொள் பாம்பின் இழிதரும் – they flow down appearing like snakes that slither on the ground, they appear like snakes that come down the mountains to the land (பாம்பின் – இன் உருபு ஒப்புப் பொருளது), விலங்கு மலை நாடனொடு – with the man from the blocking mountains, கலந்த நட்பு – the friendship with union, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 135, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
வினையே ஆடவர்க்கு உயிரே வாணுதல்,
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிரென
நமக்கு உரைத்தோரும் தாமே,
அழாஅல் தோழி, அழுங்குவர் செலவே.

Kurunthokai 135, Chēramān Pālai Pādiya Perunkadunkō, Pālai Thinai – What the heroine’s friend said to her
Do not cry, O friend!
Did he not tell us
that jobs are life to men,
and men are life to women
with bright foreheads?

He will avoid leaving you!

Notes:  The heroine’s friend consoled her, since the heroine was sad knowing that the hero was going to leave her to earn wealth.  தலைவன் பிரிய எண்ணியிருப்பதை அறிந்து வருந்திய தலைவியைத் தோழி ஆற்றுவித்தது.  உ. வே. சாமிநாதையர் உரை – இது கற்புக் காலத்தது.  வாள் – வாள் ஒளி ஆகும் (தொல்காப்பியம் உரியியல் 71).

Meanings:  வினையே – their jobs, their business (ஏ – பிரிநிலை, exclusion), ஆடவர்க்கு உயிர் – it is life to men, ஏ – அசைநிலை, an expletive, வாள் நுதல் – bright foreheads, மனை உறை மகளிர்க்கு – for the women staying in the house, ஆடவர் உயிரென – that men are their life, நமக்கு உரைத்தோரும் தாம் – he is the one who told us that, ஏ – தேற்றம், certainty, அழாஅல் தோழி – do not cry my friend (அழாஅல் – இசைநிறை அளபெடை), அழுங்குவர் – he will avoid, செலவு – leaving, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 136, மிளைப் பெருங்கந்தனார், குறிஞ்சித் திணை- தலைவன் தோழனிடம் சொன்னது
“காமம் காமம்” என்ப, காமம்
அணங்கும் பிணியும் அன்றே, நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே, யானை
குளகு மென்று ஆள் மதம் போலப்
பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறினே.  5

Kurunthokai 136, Milai Perunkanthanār, Kurinji Thinai – What the hero said to his friend
“Love, love”, they talk about it!
Love is not a terror or a disease.
It does not become tiny nor
increase or decrease.

When it sees the right person,
it will come out,
like madness in an elephant
that has eaten herbal leaves.

Notes:  The hero said this to his friend who chided him on seeing his love affliction.  ‘காம நோயால் கலங்குவது நின் பெருமைக்குத் தகவன்று’ என்று இடித்துரைத்த தோழனிடம் தலைவன் கூறியது.  மிளைப்பெருங்கந்தனார் – குறுந்தொகை 204, தோழன் தலைவனிடம் சொன்னது – காமம் காமம் என்ப காமம் அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின் முதைச் சுவல் கலித்த முற்றா இளம் புல் மூது ஆ தைவந்தாங்கு விருந்தே காமம் பெருந்தோளோயே.  காமம் காமம் என்ப (1) – உ. வே. சாமிநாதையர் உரை – காமம் காமம் என்று உலகினர் அதைக் குறை கூறுவர், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – காமம் காமம் என்று உயர்த்திக் கூறுவர், தமிழண்ணல் – காமம் காமம் என்று ஏதோ இழிவுடையது போல் பேசுவர், பொ. வே. சோமசுந்தரனார் உரை – உலகில் உள்ளோர் காமம் காமம் என்று தீயது ஒன்றிற்கு அஞ்சிக் கூறுவார் போலக் கூறுவர், இரா. இராகவையங்கார் உரை – காமம் காமம் என இழித்துக் கூறுவர்.

Meanings:  “காமம் காமம்” என்ப – they say “love love” in a disrespectful manner, they say ”love love” praising it, காமம் அணங்கும் பிணியும் அன்று – love is not a terror or a disease, ஏ – அசைநிலை, an expletive, நுணங்கி – becoming tiny, shrinking, கடுத்தலும் தணிதலும் – increasing and reducing, இன்று – it does not, ஏ – அசைநிலை, an expletive, யானை குளகு மென்று ஆள் மதம் போல – like an elephant in rut after it chewed leaves, பாணியும் உடைத்து – it has that tendency, அது காணுநர்ப் பெறின் – when it sees the right person, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 137, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
மெல்லியல் அரிவை! நின் நல் அகம் புலம்ப
நின் துறந்து அமைகுவென் ஆயின், என் துறந்து
இரவலர் வாரா வைகல்
பல ஆகுக, யான் செலவுறு தகவே.

Kurunthokai 137, Chēramān Pālai Pādiya Perunkadunkō, Pālai Thinai – What the hero said to the heroine
O delicate young woman!

If I leave in this manner
and go away and stay
elsewhere abandoning
you,
causing your good heart
to suffer in loneliness,
may I suffer for many days
without anybody in need
coming to me requesting alms.

Notes:  The hero said this about separation, to the heroine, after their union.  இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைவன் தலைவிக்குப் பிரிவு அச்சம் உணர்த்தியது.  புறநானூறு 72 – புரப்போர் புன்கண் கூர இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  மெல்லியல் அரிவை – O delicate-natured young woman, நின் நல் அகம் – your good heart, புலம்ப – to suffer in loneliness, நின் துறந்து – leaving you, அமைகுவென் ஆயின் – if I get comfortable mentally elsewhere, if I stay comfortably elsewhere, என் துறந்து – abandoning me, இரவலர் – those in need, beggars, வாரா – not coming, வைகல் – days, பல ஆகுக – may it become many, யான் செலவு உறு தகவு – me leaving you in this manner, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 138, கொல்லன் அழிசியார், குறிஞ்சித் திணை – தோழி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
கொன் ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே,
எம் இல் அயலது ஏழில் உம்பர்
மயில் அடி இலைய மா குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
மணி மருள் பூவின் பாடு, நனி கேட்டே.  5

Kurunthokai 138, Kollan Azhisiyār, Kurinji Thinai – What the heroine’s friend said as the hero listened nearby
Even when those in the big
town slept, we did not sleep.

We heard quite clearly
the dropping sounds of
the delicate, beautiful
sapphire-colored flowers
that bloom in large clusters
on delicate branches of nochi
trees with leaves that look
like the feet of peacocks, near
our house, on Ēzhil Mountain.

Notes:  The heroine’s friend said this to the hero who had missed his night tryst with the heroine on the previous day.  Or, the heroine’s friend said to the hero to come and meet the heroine at night and not during the day.  குறி பிழைத்த தலைவன் பிற்றை ஞான்று இரவுக் குறி வந்துழித் தோழி கூறியது. பகற்குறியில் வந்தொழுகும் தலைவனை ‘இனி பகலில் வராதே.  இரவில் வா’ என்றதுமாம்.  மயிலடி அன்ன இலை – நற்றிணை 305 – மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும், நற்றிணை 115 – மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி, குறுந்தொகை 138 – மயில் அடி இலைய மா குரல் நொச்சி.  கலித்தொகை 46 – குரல் நொச்சிப் பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யான் ஆக.  கொன் ஊர் (1) – இரா. இராகவையங்கார் உரை – கெடுதலையுடைய ஊர், உ. வே. சாமிநாதையர் உரை – பெரிய ஊர், அலரால் தலைவியை அஞ்சுவித்தலின் அச்சம் தரும் ஊருமாம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெரிய ஊர்.  ஏழில் (2) – உ. வே. சாமிநாதையர் உரை – ஏழிற் குன்றம், ஏழிலைப் பாலை மரமுமாம், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – எழில் என்பதன் நீட்டல்.  There are references to ஏழில் Mountain in Natrinai 391, Akanānūru 152, 345, and 349.  கொன் – அச்சம், பயம் இலி, காலம், பெருமை, என்று அப் பால் நான்கே கொன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 6).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  கொன் ஊர் – big town, fear causing town due to slander, துஞ்சினும் – even when it sleeps, யாம் துஞ்சலம் – we did not sleep, ஏ – அசைநிலை, an expletive, எம் இல் அயலது – near our home, ஏழில் – seven-leaved milk tree, Alstonia scholaris or Ēzhil mountain belonging to Nannan, உம்பர் – above, மயில் அடி இலைய – with leaves like peacock feet, மா குரல் – dark/large flower bunches, நொச்சி – nochi tree, Vitex leucoxylon, chaste tree, water peacock’s foot tree, அணி மிகு – very beautiful, மென் கொம்பு – delicate branches, ஊழ்த்த – as they dropped, மணி மருள் பூவின் – of the sapphire-like flowers (மருள் – உவம உருபு, a comparison word), பாடு நனி கேட்டு – listening a lot to their sounds, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 139, ஒக்கூர் மாசாத்தியார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
மனை உறை கோழிக் குறுங்கால் பேடை
வேலி வெருகின மாலை உற்றெனப்
புகும் இடம் அறியாது தொகுபுடன் குழீஇய
பைதல் பிள்ளைக் கிளை பயிர்ந்தாஅங்கு,
இன்னாது இசைக்கும் அம்பலொடு,  5
வாரல், வாழியர் ஐய, எம் தெருவே.

Kurunthokai 139, Okkūr Māsāthiyār, Marutham Thinai – What the heroine’s friend said to the hero
Sir!  May you live long! Do not
come to our street with distressing
slander,

that sounds like the calls of the
short-legged, house-dwelling hen
to her distressed chicks,
when darkness sets in and wild cats
linger near fences looking for
openings.

Notes:  The heroine’s friend refused entry to the hero who returned from his concubine.  பரத்தையர் இல்லத்திற்குச் சென்ற தலைவன் வாயில் வேண்டிப் புக்க அவனுக்குத் தோழி வாயில் மறுத்தது.  புறநானூறு 326 – ஊர் முது வேலிப் பார் நடை வெருகின் இருள் பகை வெரீஇய நாகு இளம் பேடை உயிர் நடுக்குற்றுப் புலாவிட்டரற்ற. அம்பல் – குறுந்தொகை 51ல் உள்ள விளக்கம் – உ. வே. சாமிநாதையர் உரை – சிலர் அறிந்து கூறும் பழிமொழி, இரா. இராகவையங்கார் உரை – சிறு சொல்.  உ. வே. சாமிநாதையர் உரை – தன்னால் பாதுகாக்கப்பட்ட பிள்ளையை வெருகு கவருமோ என்னும் அச்சத்தினால் கோழிப் பேடை கூவியது போலத் தம்பால் இருந்து வந்த தலைவனைத் தலைவி கவர்ந்து தன்பால் இருத்திக் கொள்வாளோ என்னும் அச்சத்தினால் பரத்தையர் பழிமொழி கூறினர் என்பது.  வெருகினம்  (2) – தலைவன் பாணரும் இளைஞரும் சூழ வருகின்றான் ஆகலின், வெருகினம் என்றாள்.  வாழியர் (6) – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – செற்றத்தால் வாழியர் என்றாள்.  பேடை – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).

Meanings:  மனை உறை கோழி – house-residing hen, குறுங்கால் பேடை – short legged female, வேலி – fence, வெருகு இனம் – many wild cats, மாலை உற்றென – since it was evening time, புகும் இடம் அறியாது – not knowing a place to enter, தொகுபுடன் குழீஇய – group joins together (குழீஇய – செய்யுளிசை அளபெடை), பைதல் பிள்ளை – distressed young chicks, கிளை – family, பயிர்ந்தாஅங்கு – like how it calls (இசை நிறை அளபெடை), இன்னாது இசைக்கும் – uttering words that cause distress, அம்பலொடு – with blame , with slander, வாரல் – do not come (வாரல் – அல்லீற்று எதிர்மறை வியங்கோள் வினைமுற்று), வாழியர் – may you live long, ஐய – sir, எம் தெரு – to our street, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 140, அள்ளூர் நன்முல்லையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வேதின வெரிநின் ஓதி முது போத்து
ஆறு செல் மாக்கள் புள் கொளப் பொருந்தும்
சுரனே சென்றனர் காதலர், உரன் அழிந்து
ஈங்கு யான் தாங்கிய எவ்வம்
யாங்கு அறிந்தன்று, இவ்வழுங்கல் ஊரே?  5

Kurunthokai 140, Allūr Nanmullaiyār, Pālai Thinai – What the heroine said to her friend
My lover went to the wasteland,
where an old male chameleon
with a saw-shaped back resides,
as though to spell good omens,
on the path frequented by those
who travel.

My strength drained,
I am bearing the sorrow of his
separation.
How did this uproarious town
know about my pain?

Notes:  The heroine said this to her friend who consoled her when the hero was away.  பொருள்வயின் தலைவன் பிரிந்தவிடத்து ‘நீ ஆற்றாமல் இருக்கின்றாய்’ என்ற தோழிக்குத் தலைவி உரைத்தது.  இவ்வழுங்கல் ஊரே (5) – தமிழண்ணல் உரை – ஊர் என்றது மறைமுகமாகத் தோழியை, உ. வே. சாமிநாதையர் உரை – ஊரென்றது தோழியை, கற்புக் காலத்திலும் அலர் எழுந்ததென்று கூறுதல் தலைவிக்கு உண்டு (தொல். கற்பு 19), இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் ஊர் என்பதற்கு ஊரினர் என்றே பொருள் கொண்டனர் என்று தெரிகின்றது.  There are references to lizard omens in Akanānūru 9, 88, 151, 289, 351, 387, Kurunthokai 16, 140, Natrinai 98, 169, 246, 333 and Kalithokai 11.  ஓதி முது போத்து – முது போத்து ஓதி என மாற்றுக.  புள் கொளப் பொருந்தும் (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை.  ஓந்தி ஆறு செல்வோர்க்கு நன்னிமித்தம் கொள்ளுமாறு வழியிற் சென்று பொருந்தும் என்றது, தலைவர் பிரியுங்கால் செலவு அழுங்குவியாது அவர் பிரிதற்கு இயைந்தொழுகினை என உள்ளுறையானே தோழியை இடித்துரைத்தவாறு.  அழுங்கல் – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).

Meanings:  வேதின வெரிநின் – with a saw-like back (வேதினம் – ஈர்வாள், ரம்பம்), ஓதி – chameleon (ஓந்தி, இடைக்குறை), முது போத்து – an old male, ஆறு செல் மாக்கள் – people who go on that path, புள் கொள பொருந்தும் – it stays there as though to spell omens, புள் means birds – omens started out with birds, but later the word புள் was used for all kinds of omens (புள் – நிமித்தம், இங்கு நன்னிமித்தம்), சுரனே சென்றனர் – went to the pālai land, காதலர் – lover, உரன் அழிந்து – strength destroyed, ஈங்கு யான் – here I am, தாங்கிய – borne, எவ்வம் – pain, யாங்கு அறிந்தன்று – how did it know, இ – this, அழுங்கல் – uproarious, slanderous, ஊர் – town, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 141, மதுரைப் பெருங்கொல்லனார், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
‘வளைவாய்ச் சிறு கிளி விளை தினைக் கடீஇயர்
செல்க என்றோளே அன்னை’ என நீ
சொல்லின் எவனோ தோழி, கொல்லை
நெடுங்கை வன்மான் கடும் பகை உழந்த
குறுங்கை இரும்புலிக் கோள் வல் ஏற்றை  5
பைங்ககண் செந்நாய் படுபதம் பார்க்கும்
ஆர் இரு நடுநாள் வருதி,
சாரல் நாட வாரலோ, எனவே?

Kurunthokai 141, Mathurai Perunkollanār, Kurinji Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
My friend!
Why don’t you tell the man
from the country with slopes,
that mother has asked us to
chase small parrots with
hooked beaks, that come to eat
the ripe millet in our field,

and that he should not come at
midnight like he usually does,
through the forest in pitch darkness
when an angry elephant with a
long trunk terrorizes a murderous,
short-legged, huge male tiger
that is filled with rage,
as it looks for an opportunity
to attack a green-eyed wild dog?

Notes:  The heroine who was confined to the home said this to her friend, aware that the hero was nearby for their night tryst, indicating for him to come druing the day and meet her at the millet field since it was dangerous to come at night.  இற்செறிக்கப்பட்டுழி இரவுக்குறி வந்த தலைவனுக்கு ஏதம் வரும் என்று அஞ்சிப் பகலின்கண் தினைப்புனத்திற்கு வருமாறு குறிப்பாலே அவன் கேட்குமாறுத் தோழிக்குச் சொல்லியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இது தினையிற் கிளி கடிதற்குப் பொருட்டு யாங்கள் வருவேமாகலின் ஏதமற்ற பகற்குறியிடத்தும் நாம் காணலாம்.  ஆதலிற் பகலில் வருக என்பதை உணர்த்துக என்றவாறு.

Meanings:  வளைவாய் – curved beaks (வினைத்தொகை), சிறுகிளி – small parrots, விளை தினை – mature millet, Italian millet, Setaria italicum, கடீஇயர் – inorder to chase (சொல்லிசை அளபெடை), செல்க என்றோள் – ‘go’ she said, ஏ – அசைநிலை, an expletive, அன்னை – mother, என நீ – and so you, சொல்லின் எவன் – why don’t you tell him, தோழி – my friend, கொல்லை – forest land, நெடுங்கை – long trunk, வன் மான் – strong animal, a strong elephant, கடும் பகை உழந்த – with great rage, குறுங்கை – short legged, implies the front legs, இரும்புலி – big tiger, கோள் வல் ஏற்றை – murderous strong male, பைங்ககண் செந்நாய் – green-eyed wild dog, cuon alpinus dukhunensis, படுபதம் – perfect opportunity to catch, perfect opportunity to attack, பார்க்கும் – it looks, ஆர் இருள் – pitch darkness, full darkness, நடுநாள் – midnight, வருதி – you are coming, சாரல் நாட – O man from the mountain slopes, வாரல் – do not come (வாரல் – அல்லீற்று எதிர்மறை வியங்கோள் வினைமுற்று), ஓ – அசைநிலை, an expletive, என – so, ஏ – ஈற்றசை

குறுந்தொகை 142, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவன் தனக்குள் சொன்னது அல்லது தோழியிடம் சொன்னது
சுனைப் பூக் குற்றுத் தொடலை தைஇப்
புனக் கிளி கடியும் பூங்கண் பேதை
தான் அறிந்தனளோ இலளோ, பானாள்
பள்ளி யானையின் உயிர்த்து என்
உள்ளம் பின்னும் தன் உழையதுவே.  5

Kurunthokai 142, Kapilar, Kurinji Thinai – What the hero said to himself, or what he said to the heroine’s friend
The young woman with pretty
eyes, who braids garlands
from mountain spring flowers,
and chases parrots from millet
fields, might not even know
of my existence.

I sigh like an elephant in my
midnight sleep.  My heart is with
her when I’m away.

Notes:  The hero said this after uniting with the heroine.  Or, what the hero said to the heroine’s friend.  இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைவன் சொன்னது.  தோழிக்குத் தலைவன் தன் குறை கூறியதுமாம்.  கிளி கடி:  அகநானூறு 118 – குரல் ஏனல் கிளி கடி பாடலும் ஒழிந்தனள், அகநானூறு 194 – கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும், குறுந்தொகை 142 – புனக் கிளி கடியும் பூங்கண் பேதை, குறுந்தொகை 198 – படுகிளி கடிகம் சேறும், குறுந்தொகை 217 – தினை கிளி கடிக எனின், குறுந்தொகை 291 – ஏனல் படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே இசையின் இசையா இன்பாணித்தே, குறுந்தொகை 360 –  ஏனல் உண் கிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே, பதிற்றுப்பத்து 78 – மெல்லியல் மகளிர் ஒல்குவனர் இயலிக் கிளி கடி மேவலர் புறவுதொறும் நுவல.

Meanings:  சுனை – spring, குற்று – plucked, தொடலை – garland, தைஇ – woven, strung (சொல்லிசை அளபெடை), புனக் கிளி கடியும் – chasing the parrots that come to seize the millet, chasing the parrots that come to seize the millet, பூங்கண் – eyes like flowers, pretty eyes, பேதை – young woman, தான் அறிந்தனளோ இலளோ – she might or might not be aware, பானாள் – midnight (பானாள் – பால் + நாள், பாதி நாள், நடு இரவு), பள்ளி யானையின் – like a sleeping elephant (யானையின் – இன் உருபு ஒப்புப் பொருளது), உயிர்த்து – sighing, breathing, என் உள்ளம் – my heart, பின்னும் – when I am away from her, தன் உழையது – it is with her, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 143, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், குறிஞ்சித் திணை  தோழி தலைவியிடம் சொன்னது
அழியல் ஆயிழை, அழிபு பெரிது உடையன்,
பழியும் அஞ்சும் பய மலை நாடன்,
நில்லாமையே நிலையிற்று, ஆகலின்
நல் இசை வேட்ட நயன் உடை நெஞ்சின்
கடப்பாட்டாளனுடைப் பொருள் போலத்  5
தங்குதற்கு உரியது அன்று, நின்
அம் கலுழ் மேனிப் பாய பசப்பே.

Kurunthokai 143, Mathurai Kanakkāyanār Makanār Nakkeeranār, Kurinji Thinai – What the heroine’s friend said to her
Do not feel sad, my friend wearing
lovely jewels!  The lord of the rich
mountains is gracious and fears blame.
He cares about his reputation.

Impermanence is the only permanence.
Like the wealth of a generous and fair
man who desires to get fame, this pallor
that has been spreading on your pretty
body, will not last.

Notes:  The heroine’s friend said this to the heroine who was distressed since her lover was away to earn wealth for their wedding.  தலைவன் வரைபொருட்காகப் பிரிந்தவிடத்து வருந்திய தலைவியிடம் தோழி கூறியது.  இரா. இராகவையங்கார் உரை – ஒப்புரவாளன் பொருள் போலப் பரந்து வெளிப்பட்ட பசப்பு, அப்பொருள்  போலத் தங்குவதற்குரியதன்று என்றவாறு.  அழிபு பெரிது உடையன் (1) – உ. வே. சாமிநாதையர் – நம்மைப் போல இரங்குதலை மிக உடையவன்.

Meanings:  அழியல் – do not get distressed, ஆய் இழை – O one with pretty/fine/chosen jewels (அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), அழிபு பெரிது உடையன் – he is one with great pity for you (அழிபு – வருத்தம்), பழியும் அஞ்சும் பய மலை நாடன் – the lord of the beneficial mountains is afraid of blame, நில்லாமையே நிலையிற்று – uncertainty is the only certainty, ஆகலின் – so, நல் இசை வேட்ட – desiring to get a good name, நயன் உடை நெஞ்சின் – with a fair heart, கடப்பாட்டாளனுடைப் பொருள் போல – like a generous man’s wealth, like a socially responsible man’s wealth, தங்குதற்கு உரியது அன்று – it is not fit to last, நின் அம் கலுழ் மேனி – your beauty flowing body (கலுழ் – வழிகின்ற, ஒழுகின்ற), பாய பசப்பு – pallor that has spread, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 144, மதுரை ஆசிரியர் கோடன் கொற்றனார், பாலைத் திணை – செவிலித்தாய் சொன்னது
கழிய காவி குற்றும், கடல
வெண்தலைப் புணரி ஆடியும், நன்றே
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று அயர
இவ்வழிப்படுதலும் ஒல்லாள், அவ்வழிப்
பரல் பாழ்படுப்பச் சென்றனள் மாதோ,  5
செல் மழை தவழும் சென்னி
விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே.

Kurunthokai 144, Mathurai Āsiriyar Kōdan Kotranār, Pālai Thinai – What the foster mother said
She used to play with her
band of inseparable friends,
plucking red waterlilies
and splashing in the white
ocean waves,
each with their favorite game.

She has deserted these ways
and has gone on that path,
where sharp stones hurt,
to a country where blocking
mountains rise high to the sky,
their glittering summits
covered with crawling clouds.

Notes:  The heroine’s foster mother said this when the heroine eloped.  மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது.  செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல். களவியல் 34).  செல் மழை (6) – உ. வே. சாமிநாதையர் உரை – விரைந்து செல்லும் மேகங்கள், இடியையுடைய மேகம் எனலும் ஒன்று, தமிழண்ணல் உரை – பரந்து திரியும் மேகம்.

Meanings:  கழிய காவி குற்றும் – plucking the red/blue waterlilies from the brackish waters, கடல வெண்தலைப் புணரி ஆடியும் – playing in the ocean waves, நன்று – fine, ஏ – அசைநிலை, பிரிவு இல் ஆயம் – friends who do not separate, உரியது ஒன்று அயர – playing together their own games that suit them, இவ்வழிப்படுதலும் – to be here in this place, ஒல்லாள் – she is not agreeable, அவ்வழிப் பரல் பாழ்படுப்பச் சென்றனள் – she went that way with pebbles/stones hurting her, மாது – அசைநிலை, an expletive, ஓ – அசைநிலை, an expletive, செல் மழை தவழும் சென்னி – summits with moving clouds that crawl, summits with thundering clouds that crawl, விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டு – in the country with sky-high bright blocking mountains, ஏ – அசைநிலை

குறுந்தொகை 145, கொல்லன் அழிசியார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
உறை பதியன்றித் துறை கெழு சிறுகுடி
கானல் அம் சேர்ப்பன் கொடுமை எற்றி,
ஆனாத் துயரமொடு வருந்திப் பானாள்
துஞ்சாது, உறைநரொடு உசாவாத்
துயிற்கண் மாக்களொடு நெடு இரா உடைத்தே.  5

Kurunthokai 145, Kollan Azhisiyār, Neythal Thinai – What the heroine said to her friend
This small seashore village is not
the place for us to live any longer.

Even in the middle of the night
I am unable to sleep,
thinking about the cruelty of the man
from the seashore with lovely groves.

The nights are long, and the people
here are fast asleep.  They do not
bother to ask why I am in great pain.

Notes:  The heroine who was distressed, since the hero had gone to earn wealth for their wedding, said this to her friend.  தலைவன் வரைபொருட்குப் பிரிந்து நீட்டிப்ப, அதனால் வருந்திய தலைவி தனது ஆற்றாமையைப் புலப்படுத்தியது.

Meanings:  உறை பதியன்றி – this is not a place to live, துறை கெழு சிறுகுடி – small settlement on the seashore, small village on the seashore, கானல் அம் சேர்ப்பன் – the lord of the seashore with groves, கொடுமை எற்றி – thinking about his cruelty, ஆனாத் துயரமொடு – with great sorrow, வருந்தி – be sad, பானாள் – midnight (பானாள் – பால் + நாள், பாதி நாள், நடு இரவு), துஞ்சாது – without sleeping, உறைநரொடு – with those who stay, உசாவா – not asking why, துயில் கண் மாக்களொடு – with people who sleep, நெடு இரா – long nights (இரா – இரவு, வு என்ற விகுதி கெட்டு அதற்கு முந்தைய குறில் எழுத்து நீண்டு நெடிலாக மாறியது), உடைத்து – it has, ஏ – அசைநிலை

குறுந்தொகை 146, வெள்ளிவீதியார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி! நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ,
தண்டுடைக் கையர், வெண்தலைச் சிதவலர்,
‘நன்று நன்று’ என்னும் மாக்களோடு,
‘இன்று பெரிது’ என்னும் ஆங்கணது அவையே.  5

Kurunthokai 146, Velliveethiyār, Kurinji Thinai – What the heroine’s friend said to her about the wedding arrangements
May you live long, O friend! Listen!
In our town there are those who unite
those separated, elders with walking
sticks and gray hair covered with cloth,
who have gathered together with and
say, “Good, good”.

Today is a special day, they say, those
who have assembled together.

Notes:  The heroine’s friend informed the heroine that the elders in her family have agreed to the wedding.  வரைவிற்கு பெரியவர்கள் உடன்பட்டதைத் தோழி கூறியது.  தண்டுடைக் கையர் வெண்தலைச் சிதவலர் (3) – இரா. இராகவையங்கார் உரை – களவில் புணர்ந்து பிரிந்தோரைக் கரணத்திற் புணர்ப்போர் நம்மூரில் இருந்தனரே என்றவாறு.  தண்டுடைக் கையரும் வெண்தலைச் சிதவலருமாய் நன்று நன்று என்னும் மாக்களோடு ஆங்கணதவை இன்று பெரிது என்னும் ஆதலான் பிரிந்தோர் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ என்றனள் என்க,  உ. வே. சாமிநாதையர் உரை – தோழி, கேட்பாயாக.  அவ்விடத்தில் உள்ளதாகிய நம்மைச் சார்ந்த குழுவிலுள்ளார், தண்டைப் பிடித்த கையினரும், நரையையுடைய தலைக்கண் துகிலையுடையவருமாகிய நன்று நன்று என்று கூறும் தலைவன் தமரோடு, இந்நாள் நீங்கள் வரப் பெற்றமையால் பெருமையுடையதென்று முகமன் கூறுவார்.  ஆதலின், நமது ஊரின்கண் பிரிந்தவர்களைச் சேர்த்து வைப்போர் இருந்தனர், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தோழி!  நீ வாழ்க!  யான் கூறுவதனைக் கேட்பாயாக.  ஆங்கணது தண்டினைப் பிடித்த கையுடையாரும் வெள்ளிய நரையினையுடைய தலையின்கண் துகிலை உடையாருமாகிய நந்தமர் மொழிக்கெல்லாம் நன்று நன்று என்று கூறி மகிழும் தலைவன் தமரோடு, இந்நாள் நும் வருகையால் பெருமையுடையதாம் என்று முகமன் கூறாநிற்கும்.  ஆதலால் நம்மூரின்கண்ணும் பிரிந்தோரைச் சேர்த்து வைக்கும் சான்றோர் உளர் என்று அறிகின்றேன்.  அம்ம அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

Meanings:  அம்ம – இடைச்சொல், a particle implying ‘listen to me’, வாழி – அசைநிலை, may you live long, தோழி – my friend, நம்மூர் – our town, பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் – there are those who unite those who are separated, கொல் – அசைநிலை, an expletive, ஓ – அசைநிலை, an expletive, தண்டுடைக் கையர் – elders with walking sticks, வெண்தலைச் சிதவலர் – those with grey hair and covered heads, நன்று நன்று என்னும் மாக்களோடு – with those who say ‘good’, ‘good’ (நன்று நன்று – வரைவுக்கு உடன்பட்ட குறிப்பு), இன்று பெரிது – today is a special day, என்னும் – they say, ஆங்கணது அவை – those in that assembly where they have gathered together, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 147, கோப்பெருஞ்சோழன், பாலைத் திணை – தலைவன் தன் கனவிடம்  சொன்னது
வேனில் பாதிரிக் கூன் மலர் அன்ன,
மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை,
நுண் பூண் மடந்தையைத் தந்தோய் போல,
இன் துயில் எடுப்புதி கனவே,
எள்ளார் அம்ம துணைப் பிரிந்தோரே.  5

Kurunthokai 147, King Kōperunchōzhan, Pālai Thinai – What the hero said to his dream
O Dream!
You gave her to me
with her delicate ornaments
and beautiful, dark skin
with soft hair that stands
up like the filaments
on the summer-blooming
curved trumpet flowers,
and then you woke me up
from my sweet sleep.

Those separated from their
beloved ones will not tease you.

Notes:  The hero who was away from the heroine dreamt about her and said this.  தலைவன் தலைவியைப் பிரிந்து சென்ற இடத்துத் துயிலும்பொழுது அவளைக் கனவில் கண்டு பிரிவாற்றாமல் சொல்லியது.  நற்றிணை 118-8 – துகிலிகை அன்ன துய்த்தலைப் பாதிரி.

Meanings:  வேனில் பாதிரி – summer time pāthiri flower, Indian trumpet flower, bignonia chelonoides, கூன் மலர் அன்ன – like the curved flower, மயிர் ஏர்பு – hair standing up, ஒழுகிய அம் கலுழ் மாமை – beauty flowing dark color (கலுழ் – வழிகின்ற, ஒழுகின்ற), நுண் பூண் – delicate ornaments, மடந்தையை – the delicate woman, தந்தோய் போல – like you gave her, இன் துயில் – sweet sleep, எடுப்புதி கனவே – you  woke me up O dream, எள்ளார் – they don’t tease you, அம்ம – இடைச்சொல், a particle, துணைப் பிரிந்தோர் – those who are separated from their partners, ஏ – அசைநிலை

குறுந்தொகை 148, இளங்கீரந்தையார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த
தவளை வாய பொலஞ்செய் கிண்கிணிக்
காசினன்ன, போது ஈன் கொன்றை
குருந்தோடு அலம்வரும் பெருந்தண் காலையும்
கார் அன்று என்றி ஆயின், 5
கனவோ மற்றிது வினவுவல் யானே.

Kurunthokai 148, Ilankeeranthaiyār, Mullai Thinai – What the heroine said to her friend
In this cold season, kuruntham
trees sway along with kondrai
trees that have put out buds looking
like shining bells with open ends
resembling the gaping mouths
of frogs, strung on the bright, gold
anklets worn by wealthy children on
their small feet.

If you tell me that this is not the rainy
season, I have to ask you whether you
are dreaming.

Notes:  The heroine was worried on seeing signs of the rainy season.  Her friend assured her that this was not the rainy season.  The heroine responded with these words.  பருவங்கண்டு வருந்திய தலைவியிடம் ‘இது பருவம் அன்று’ எனத் தோழி கூற, ‘இது கார்ப்பருவம் தான்’ எனத் தலைவி கூறியது.  கலித்தொகை 86 – தேரைவாய்க் கிண்கிணி.

Meanings:  செல்வச் சிறாஅர் – rich children (சிறாஅர் – இசைநிறை அளபெடை), சீறடி பொலிந்த – shining on their small feet, beautiful on their small feet, தவளை வாய – like the mouths of frogs, பொலஞ்செய் கிண்கிணி – anklets made with gold, காசின் அன்ன – like the anklet bells (காசின் – காசு, இன் சாரியை), போது ஈன் கொன்றை – kondrai trees that have put out buds, சரக்கொன்றை, Indian laburnum, golden shower tree, Cassia Fistula, குருந்தோடு – with wild orange, citrus indica, அலம்வரும் – whirls, sways, பெருந்தண் காலையும் – even in the cold season, கார் அன்று என்றி ஆயின் – if you say that this is not the rainy season (என்றி – முன்னிலை ஒருமை), கனவோ இது – is this a dream (ஓகாரம் வினா), மற்று – அசைநிலை, an expletive, வினவுவல் – I am asking, I am questioning, தன்மை ஒருமை வினைமுற்று, first person singular verb ending, யான் – me, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 149, வெள்ளிவீதியார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அளிதோ தானே நாணே, நம்மொடு
நனி நீடு உழந்தன்று மன்னே, இனியே
வான் பூங்கரும்பின் ஓங்கு மணல் சிறு சிறை
தீம் புனல் நெரிதர வீய்ந்துக் உக்காஅங்கு,
தாங்கும் அளவைத் தாங்கிக்  5
காம நெரிதரக் கை நில்லாதே.

Kurunthokai 149, Velliveethiyār, Pālai Thinai – What the heroine said to her friend
This shyness that I have,
has been suffering for a very
long time with me.  It will bear
it to the extent that it can.

If love puts pressure, it will not
stay with me.

It will erode, collapse, and fall
down like the tall sand heaps on
the short shores of sweet streams
where sugarcanes bearing white
flowers grow.  It is pitiable!

Notes:  The heroine said this to her friend who told her that she should elope.  உடன்போக்கு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.  அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த நிச்சமும் பெண்பாற் குரிய என்ப (தொல்காப்பியம், களவியல் 8).  கை (6) – இரா. இராகவையங்கார் உரை – கை = ஒழுக்கம்.  தன் பெண்மை ஒழுக்கம் வளரக் காத்து நின்றதனால் நாணைச் சிறையாக உவமித்தாள்.  கை நில்லாது  (6) – உ. வே. சாமிநாதையர் உரை – என்பால் நில்லாது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஏனைப் பெண்மை நலன் எல்லாவற்றிற்கும் நாணம் ஆக்கமாய் நின்று அவற்றை நிலைபெறுத்தலின் ‘கரும்பு நின்ற மணற் சிறு சிறை’ என்றாள்.  குறுந்தொகை 149, 395 -அளிதோ தானே நாணே, குறுந்தொகை 212 – அளிதோ தானே காமம்.   நீடு உழந்தன்று  (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இயற்கைப் புணர்ச்சிப் நிகழ்ந்த நாள் தொடங்கி இற்றை நாள் வரை நாணம் தன்னோடு பெரிதும் உழந்தமைக் கருதிக் கூறியதென்க.  கற்பைக்காக்கும் பொருட்டு நாணம் விடப்பட வேண்டும்.  நாண் காவல் கொண்டு கற்பும் காக்கப்படின் நன்று.  காமநோய் முடுக்கலால் இப்பொழுது கற்புக் கடன் பூணற்கு நாண் துறந்து,உடன் போக்கு இசைகின்றேன் என்பாள் ‘காம நெரிதரக் கை நில்லாதே’ என்றாள்.  மன் – கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  அளிது – it is pitiable, ஓ – அசைநிலை, an expletive, தான் – அசைநிலை, an expletive, ஏ – அசைநிலை, an expletive, நாண் – this shyness, ஏ – அசைநிலை, an expletive, நம்மொடு நனி நீடு உழந்தன்று – it has been suffering with me for a very long time (நனி நீடு – பொற்பொருட் பன்மொழி), மன் – கழிவுக் குறிப்பு, what was in the past, ஏ – அசைநிலை, an expletive, இனி – now, ஏ – அசைநிலை, an expletive, வான் பூங்கரும்பின் – of sugarcane with white flowers, ஓங்கு – tall, மணல் – sand, சிறு சிறை – short shore wall, தீம்புனல் நெரிதர – sweet river water flowing densely, வீய்ந்த – ruined, உக்காஅங்கு – like how it falls down (இசைநிறை அளபெடை), தாங்கும் அளவைத் தாங்கி – bearing up to the extent that it can handle, காம நெரிதர – but as love puts pressure, கை நில்லாது – it will not stay with me, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 150, மாடலூர் கிழார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
சேணோன் மாட்டிய நறும் புகை ஞெகிழி
வான மீனின் வயின் வயின் இமைக்கும்
ஓங்கு மலை நாடன் சாந்து புலர் அகலம்
உள்ளின் உள் நோய் மல்கும்,
புல்லின் மாய்வது, எவன் கொல் அன்னாய்?  5

Kurunthokai 150, Mādalūr Kizhār, Kurinji Thinai – What the heroine said to her friend
When I think of the sandal-smeared
chest of my man from the country
with lofty mountains,
……….where a mountain dweller
………guarding his millet field sits on
………a tall platform and lights torches
………that emit fragrant smoke and
………twinkles here and there like stars,
the love affliction in my heart increases.

My love distress fades away when I
embrace him!  Why is it my friend?

Notes:  The heroine said this to her friend who had arranged for a night tryst.  இரவுக்குறி நேர்ந்த தோழிக்குத் தலைவி தன் உடன்பாட்டைத் தெரிவித்தது.  சேணோன் (1) – உ. வே. சாமிநாதையர் உரை – வேங்கை மரத்தின் மீது கட்டப்பட்ட பரணிலும் யானைகளாலும் எட்ட முடியாத குன்றின் மீது கட்டப்பட்ட பரணிலும் இருப்பவன் ஆதலின் இவன் சேணோன் எனப்பட்டான்.  அன்னாய் (5) – உ. வே. சாமிநாதையர் உரை (குறுந்தொகை 34 உரையில்) – தோழியைத் தலைவி அன்னாய் என்றல் மரபு.   அன்னை என்னை என்றலும் உளவே தொல் நெறி முறைமை சொல்லினும் எழுத்தினும் தோன்றா மரபின என்மனார் புலவர் (தொல்காப்பியம், பொருளியல் 52).  அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).

Meanings:  சேணோன் – one who is on the tall tower in the millet field, a millet field guard who is on a tall tower, மாட்டிய – lit by him, நறும் புகை – fragrant smoke, ஞெகிழி – fire torch, வான மீனின் – like stars in the sky (மீனின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), வயின் வயின் இமைக்கும் – twinkles here and there, ஓங்கு மலை நாடன் – man from the lofty mountains, சாந்து புலர் அகலம் – chest with dried sandalwood paste, sandal, Santalum album, உள்ளின் – if I think, உள் நோய் – inner disease (love), மல்கும் – increases, புல்லின் – if I embrace that chest, மாய்வது – dies down (the inner disease),  எவன் – why, கொல் – அசைநிலை, an expletive, அன்னாய் – O friend

குறுந்தொகை 151, தூங்கலோரியார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
வங்காக் கடந்த செங்கால் பேடை,
எழால் உற வீழ்ந்தெனக் கணவன் காணாது
குழல் இசைக் குரல குறும் பல அகவும்,
குன்று கெழு சிறுநெறி அரிய என்னாது,
மறப்பு அருங்காதலி ஒழிய,  5
இறப்பல் என்பது ஈண்டு இளமைக்கு முடிவே.

Kurunthokai 151, Thoongalēriyār, Pālai Thinai – What the hero said to his heart
Leaving my lover who is difficult
to forget, and not considering that
the journey through the narrow
paths on the mountains is hard,
……….where a falcon dives down
……….and attacks a lone red-legged
……….female vānga bird that is
……….away from her mate, and she
……….cries out in a few, short
……….plaintive notes, sounding like
……….music from a flute,
might be the end of our youth.

Notes:  The hero said this to his heart which urged him to go and earn wealth.  பொருள் தேடிவரும் பொருட்டுத் தலைவியைப் பிரிந்து செல்லத் துணிந்த தன் நெஞ்சிடம் தலைவன் சொல்லியது.  The vanga bird is probably a stork (white stork, black stork, black-necked stork), redshank, stilt or a turnstone – all of which have red legs according to Dr. Salim Ali’s ‘The Book of Indian Birds’. The elāl bird is either a hawk or a falcon – both these birds dive down and attack their prey.  பேடை – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).

Meanings:  வங்காக் கடந்த – since the male vangā bird left, this could be the reg-legged stork, செங்கால் பேடை – red legged female, எழால் – a bird of prey, possibly a falcon or hawk, உற – got near, வீழ்ந்தென – since it fell on it, கணவன் காணாது – on not seeing her mate, குழல் இசை குரல – with sounds that are like flute music, குறும் பல அகவும் – she let out few short cries, குன்று கெழு – with mountains, சிறுநெறி – narrow paths, small paths, அரிய என்னாது – not thinking that they are hard, மறப்பு அருங்காதலி – difficult-to-forget lover, ஒழிய – to leave, இறப்பல் என்பது – what me leaving is, ஈண்டு – here, இளமைக்கு முடிவு – it is the end to our youth, ஏ – அசைநிலை, an expletive, தேற்றம், certainty

குறுந்தொகை 152, கிள்ளிமங்கலம் கிழார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
யாவதும் அறிகிலர் கழறுவோரே,
தாய் இல் முட்டை போல உள் கிடந்து
சாயின் அல்லது பிறிது எவன் உடைத்தோ,
யாமைப் பார்ப்பின் அன்ன,
காமம் காதலர் கையற விடினே?  5

Kurunthokai 152, Killimangalam Kizhār, Kurinji Thinai What the heroine said to her friend
Those who state firmly that I
should bear my situation, do not
understand love even a little.
Love is like a young tortoise that
is nourished by the sight of its
mother.

If my lover abandons, making me
feel helpless, what else is there, except
to keep my love inside and get ruined
like an egg abandoned by its mother?

Notes:  The heroine said this to her friend who urged her to bear her sorrow that was due to the hero delaying marriage.  வரைவு நீட்டித்தவழி, ஆற்றாளாகிய தலைவி, ‘நீ ஆற்றுகின்றலை’ எனக் கூறிய தோழிக்கு உரைத்தது.  ஐங்குறுநூறு 44 – தீம் பெரும் பொய்கை யாமை இளம் பார்ப்புத் தாய் முகம் நோக்கி வளர்ந்திசினாஅங்கு அதுவே ஐய நின் மார்பே.

Meanings:  யாவதும் அறிகிலர் – they do not understand at all, கழறுவோர் – those who state firmly, those who give advice, ஏ – அசைநிலை, an expletive, தாய் இல் முட்டை போல – like an egg without its mother, உள் கிடந்து – just lying inside, சாயின் அல்லது – other than to be ruined, பிறிது எவன் – what else, உடைத்து – does it have, ஓ – அசைநிலை, an expletive, யாமைப் பார்ப்பின் அன்ன – like the young of a tortoise (இன் – வேண்டாவழிச் சாரியை), காமம் – love, காதலர் கையற விடின் – if my lover makes me become helpless abandoning me, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 153, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
குன்றக் கூகை குழறினும், முன்றில்
பலவின் இருஞ்சினைக் கலை பாய்ந்து உகளினும்,
அஞ்சுமன் அளித்து என் நெஞ்சம், இனியே,
ஆர் இருள் கங்குல் அவர்வயின்
சாரல் நீள் இடைச் செலவானாதே.  5

Kurunthokai 153, Kapilar, Kurinji Thinai – What the heroine said to her friend
Before,
if an owl on the hill hooted,
or if a male monkey jumped and
leaped on the big branches of a
jackfruit tree in our front yard,
my pitiful heart was afraid.

But now,
in the pitch darkness of night,
it wanders on the long paths
of the slopes, because of him.

Notes:  The heroine urged her friend to request the hero to come and marry her.  வரையாது வந்தொழுகும் தலைவனிடம் வரைவு கடாவுக எனக் கூறியது.  கூகை குழறினால் மகளிர் அஞ்சுதல் – அகநானூறு 158 – வெருவர மன்ற மராஅத்த கூகை குழறினும் நெஞ்சு அழிந்து அரணம் சேரும், நற்றிணை 218 – பராரை வேம்பின் படுசினை இருந்த குராஅல் கூகையும் இராஅ இசைக்கும் ஆனா நோய் அட வருந்தி, குறுந்தொகை 153 – குன்றக் கூகை குழறினும் முன்றில் பலவின் இருஞ்சினைக் கலை பாய்ந்து உகளினும் அஞ்சுமன் அளித்து என் நெஞ்சம்.  மன் – கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

Meanings:  குன்றக் கூகை குழறினும் – even if an owl hooted on the hill, முன்றில் பலவின் – of the jackfruit tree in our front yard (முன்றில் – இல்முன்), இருஞ்சினை – big branches, கலை பாய்ந்து உகளினும் – even if a male monkey jumped and leaped, அஞ்சுமன் அளித்து என் நெஞ்சம் – my pitiful heart would be afraid (மன் – கழிவுக் குறிப்பு, what was in the past), இனி – now, ஏ – அசைநிலை, an expletive, ஆர் இருள் கங்குல் – in the pitch darkness of night, அவர் வயின் – to him, சாரல் – mountain slopes, நீள் இடை – long path, செலவு – going, ஆனாது – it does not stop, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 154, மதுரைச் சீத்தலைச் சாத்தனார் – பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
யாங்கு அறிந்தனர் கொல் தோழி, பாம்பின்
உரி நிமிர்ந்தன்ன உருப்பு அவிர் அமையத்து,
இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளிப்
பொறி மயிர் எருத்தின் குறு நடைப் பேடை
பொரி கால் கள்ளி விரி காய் அம் கவட்டுத்  5
தயங்க இருந்து புலம்பக் கூஉம்,
அருஞ்சுர வைப்பின் கானம்
பிரிந்து, சேண் உறைதல் வல்லுவோரே?

Kurunthokai 154, Mathurai Seethalathai Sāthanār, Pālai Thinai, What the heroine said to her friend
O friend!  How did my lover
know to reside in a distant land
going through the wasteland,

where a female pigeon with
short strides, her neck with spots,
sits alone in sorrow near a split
fruit on a beautiful branch of a
kalli tree with rough trunk,
and cries for her mate
who has gone in search of food
during mid-day, when heat
rises up like a lifted snake skin?

Notes:  The heroine who thought about the hero who had gone to earn wealth, said this to her friend.  பொருள்வயின் பிரிந்த தலைவனை நினைந்து தலைவி தோழிக்கு உரைத்தது.  தமிழண்ணல் உரை – பாலை நிலக்காட்டில் பெண்புறா பிரிந்த ஆண் புறாவை நினைத்து கூவுவதை அவ்வழியாகச் செல்லும் தலைவர் காண்பாராதலின் அவருக்கு நம் நினைவு வரும்.  அவரும் நம்மைப் போல் வருந்துவார் எனும் குறிப்பு பொருள் இதில் உளது.  இது இறைச்சி ஆகும்.  பேடை – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  யாங்கு அறிந்தனர் – how did he learn, கொல் – அசைநிலை, an expletive, தோழி  – O friend, பாம்பின் உரி நிமிர்ந்தன்ன – like a lifted snake skin, உருப்பு அவிர் அமையத்து – in the hot bright mid-day time, இரை வேட்டு எழுந்த சேவல் – a male bird that flew to get food, உள்ளி – thinking, பொறி மயிர் எருத்தின் – with spotted hairy neck, குறு நடைப் பேடை – a female with short strides, பொரி கால் – cracked trunk, rough trunk, கள்ளி – euphorbia tirucalli,  common prickly pear cactus, or milk hedge Milk bush, விரி காய் – opened fruit, cracked fruit, அம் கவட்டு – beautiful branch, தயங்க இருந்து – sitting splendidly, புலம்பக் கூஉம் – it cries in loneliness, it cries in sorrow (கூஉம் – இன்னிசை அளபெடை), அருஞ்சுர வைப்பின் கானம் – in the harsh wasteland place, பிரிந்து – separate, சேண் உறைதல் வல்லுவோர் – the man who is capable of living far away, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 155, உரோடகத்துக் கந்தரத்தனார், முல்லைத் திணை – தலைவி தனக்குள் சொன்னது
முதைப்புனம் கொன்ற ஆர்கலி உழவர்
விதைக்குறு வட்டி போதொடு பொதுளப்
பொழுதோ தான் வந்தன்றே, மெழுகு ஆன்று
ஊது உலைப் பெய்த பகுவாய்த் தெண் மணி
மரம் பயில் இறும்பின் ஆர்ப்பச் சுரன் இழிபு  5
மாலை நனி விருந்து அயர்மார்,
‘தேர் வரும்’ என்னும் உரை வாராதே.

Kurunthokai 155, Urōdakathu Kantharathanār, Mullai Thinai – What the heroine said to herself
The very noisy farmers who cleared
the old forest and seeded the land
in the morning, return with their
seed bowls filled with flowers.

It is evening time now.  No one has
come along the harsh path to
announce that his chariot is coming
and that there will be a big feast,
and there are no clear sounds of bells
with wide mouths that were cast using
wax forms in foundries, chiming in the
small forest dense with trees.

Notes:  The heroine who was saddened by the change of season said this.  பருவங்கண்டு வருந்தியது.  இரா. இராகவையங்கார் உரை – தொல்காப்பியக் கற்பியல் (6) உரைக்கண் நச்சினார்க்கினியர் இப்பாட்டை எடுத்தோதி ‘இது தலைவி பொழுது கண்டு மகிழ்ந்து கூறியது’ என்பது எழுதினர் பிழைப்பாகும்.  இரா. இராகவையங்கார் உரை – விதையைச் சொரிந்து வட்டி போது (மலர்) நிறைந்து வருதல், தன் காதல் கொண்டு சொல்லிய தூது அவர் காதல் கொண்டு சொல்ல வருதல் குறித்தது.  கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  முதை புனம் – old forest, கொன்ற – destroyed, cleared, ஆர்கலி – very loud, உழவர் – men who plow, farmers, விதைக்குறு – in order to seed, வட்டி – bowls, baskets, போதொடு – with flowers, பொதுள – filled, பொழுது – time, ஓ – அசைநிலை, an expletive, பிரிநிலை, exclusion, தான் – அசைநிலை, an expletive, வந்தன்று – it came, ஏ – அசைநிலை, an expletive, மெழுகு ஆன்று – making the structure with wax first (later removing the wax by melting – lost wax method), ஊது – blowing, உலை – metalsmith’s furnace, பெய்த – cast, poured, பகுவாய் – split mouths, wide mouths, தெண் மணி – clear bells, மரம் பயில் – tree filled, இறும்பின் – in the small forest, ஆர்ப்ப – ringing, சுரன் – harsh path (சுரம் என்பதன் போலி), இழிபு – passing, மாலை – evening, நனி – lot of, விருந்து அயர்மார் – to celebrate, to have a feast, தேர் வரும் என்னும் – that the chariot will come, உரை – words, message, வாராது – has not come, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 156, பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார், குறிஞ்சித் திணை  – தலைவன் பார்ப்பனத் தோழனிடம் சொன்னது
பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!
செம்பூ முருக்கின் நல் நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே!
எழுதாக் கற்பின் நின் சொல் உள்ளும்,  5
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ? மயலோ இதுவே?

Kurunthokai 156, Pāndiyan Enāthi Nedunkannanār, Kurinji Thinai – What the hero said to his Brahmin friend
O Brahmin!  O Brahmin!
You with your ritual food
and hanging pots on staff
made from a murukkam
tree with red flowers after
its lovely bark is peeled!

Is there any remedy in the
words from your Vedas to
unite separated lovers?

Or, is this all a mere delusion?

Notes:  The hero said this to his Brahmin friend who chided him.  இடித்துரைத்த பார்ப்பனத் தோழனிடம் தலைவன் கூறியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – பார்ப்பனன் என்றாலும் நீ பேதை என்பான், பார்ப்பன மகனே என்னும் விளியை மும்முறை அடுக்கினான்.  முருக்கந்தண்டு பார்ப்பனர்கள் பிடிப்பதொன்று.  கரகமும் பார்ப்பனர்க்கு உரியது.  தொல்காப்பியம் மரபியல் 70, நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங்காலை அந்தணர்க்குரிய.

Meanings:  பார்ப்பன மகனே பார்ப்பன மகனே – O Brahmin! O Brahmin!, செம்பூ முருக்கின் – of a murukkam tree with red flowers, புருச மரம், coral tree Erythrina indica, நல் நார் களைந்து – removing the lovely bark, removing the lovely fiber, தண்டொடு – with a wooden rod, பிடித்த – holding, தாழ் கமண்டலத்து – with low hanging pots, படிவ உண்டி – ritual food (விரத உணவு), பார்ப்பன மகனே – O Brahmin man, எழுதாக் கற்பின் – in the unwritten learning, in the Vedas, நின் சொல் உள்ளும் – in your words, பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்தும் உண்டோ – is there a method to unite those who are separated (உண்டோ – ஓகாரம் எதிர்மறைப் பொருளது), மயல் – confusion, ஓ – அசைநிலை, an expletive, இது – this comes from confusion, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 157, அள்ளூர் நன்முல்லையார், மருதத் திணை – தலைவி தனக்குள் சொன்னது
குக்கூ என்றது கோழி, அதன் எதிர்,
துட்கென்றன்று தூய நெஞ்சம்,
தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள் போல், வைகறை வந்தன்றால் எனவே.

Kurunthokai 157, Allūr Nanmullaiyār, Marutham Thinai – What the heroine said to herself
Coo Coo,
crowed the rooster and my
pure heart pounded in fear,
since dawn struck
like a sword to separate me
from the embraces of my lover.

Notes:  The heroine said this when she had her periods.  பூப்பெய்திய தலைவி உரைத்தது.  தமிழண்ணல் உரை – பூப்பு எய்தியதை தலைவி இவ்வாறு கூறுவதால் இதை ‘இடக்கரடக்கல்’ என்பர்.  வீட்டு விலக்கான மூன்று நாளும் கூட்டம் கூடாதென்பது தமிழர் வாழ்வு மரபு.  விலக்கமானதை ‘கோழி கூவி விட்டது’ என மரபுத் தொடராகக் கூறும் பழக்கம் முன்பு இருந்துளது.

Meanings:  குக்கூ என்றது கோழி – the rooster crowed, அதன் எதிர் – after that, reacting to that, துட்கு என்றன்று – it became afraid (என்றன்று – அடைந்தது), தூய நெஞ்சம் – my pure heart, தோள் தோய் – hugging my shoulders, hugging my arms, காதலர்ப் பிரிக்கும் – separating me from lover, வாள் போல் – like a sword, வைகறை – dawn, early morning, வந்தன்று – it came, ஆல் – அசைநிலை, an expletive, என – since, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 158, ஔவையார், குறிஞ்சித் திணை – தலைவி மழையிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
நெடுவரை மருங்கின் பாம்பு பட இடிக்கும்
கடு விசை உருமின் கழறு குரல் அளைஇக்
காலொடு வந்த கமஞ்சூல் மா மழை!
ஆர் அளி இலையோ, நீயே பேர் இசை
இமயமும் துளக்கும் பண்பினை,  5
துணை இலர் அளியர் பெண்டிர் இஃது எவனோ?

Kurunthokai 158, Avvaiyār, Kurinji Thinai – What the heroine said to the rain, as the hero listened nearby
O rain!  You have come with
your swift and roaring thunder,
that can kill snakes in the lofty
mountains, mixed with winds
carrying swollen, dark clouds.

You have the ability to cause
the greatly famous Himalayas
to tremble.  Why do you not have
any pity for pathetic women who
are without their lovers?

Notes:  The heroine said this to the rain, aware that the hero who had come for a night tryst was nearby.  தலைவன் இரவுக்குறி வந்தபோது அவன் கேட்பத் மழைக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.  உ. வே. சாமிநாதையர் உரை – தலைவன் பெருமழையினால் துன்புறுவானோ என்றும் வாரானோ என்றும் அஞ்சிய தலைமகள் தான் அங்ஙனம் அஞ்சியதை இதனால் தலைவனுக்கு உணர்த்தினாள்.  இங்கனம் அஞ்சுதற்குரிய ஒழுகலாற்றை விடுத்து வரைந்துகொண்டு எப்பொழுதும் உடனுறைவதே நன்றென்பது எச்சப் பொருளாதலின், இது வரைவு கடாயதாகும்.  There is a convention that thunder ruins and kills snakes.  Akanānūru 92, 119, 182, 202, 274, 323, 328, Kalithokai 45, 113, Kurunthokai 158, 190, 268, 391 and Natrinai 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, Puranānūru 17, 37, 58, 126, 211, 366 and 369 have similar descriptions of thunder ruining or killing snakes.  வரலாறு:  இமயம்.  கமம் – நிறைவு, கமம் நிறைந்தியலும் (தொல்காப்பியம். உரியியல் 59).  ).  துளக்கும் (5) – இரா. இராகவையங்கார் உரை – நடுக்கும், உ. வே. சாமிநாதையர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – அசைக்கும்.

Meanings:  நெடு வரை மருங்கின் – in the tall mountains, பாம்பு பட இடிக்கும் – thundering that kills snakes, கடு விசை உருமின் – thunder that comes fast with loud sounds, கழறு குரல் அளைஇ – mixed with loud sounds, காலொடு வந்த – came with wind, கமஞ்சூல் மா மழை – swollen dark clouds and rain (கம என்னும் உரிச்சொல் நிறைவுப் பொருளில் வந்தது), ஆர் – filled, அளி இலையோ – don’t you have pity (இலை இல்லை என்பதன் விகாரம், ஓகாரம் வினா), நீயே – you, பேர் இசை இமயமும் – even to the very famous Himalayas, துளக்கும் பண்பினை – you have the ability to cause trembling, you have the ability to move, துணை இலர் அளியர் பெண்டிர் – pitiful women without partners (துணை இலர் பெண்டிர் அளியர்), இஃது – in this manner, எவன் – why, ஓ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 159, வடம வண்ணக்கண் பேரிசாத்தனார், குறிஞ்சித் திணை – தோழி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
தழை அணி அல்குல் தாங்கல் செல்லா
நுழை சிறு நுசுப்பிற்கு எவ்வமாக,
அம் மெல் ஆகம் நிறைய வீங்கிக்
கொம்மை வரி முலை செப்புடன் எதிரின,
யாங்கு ஆகுவள் கொல், பூங்குழை என்னும்  5
அவல நெஞ்சமொடு உசாவாக்
கவலை மாக்கட்டு இப் பேதை ஊரே?

Kurunthokai 159, Vadama Vannakkan Pērisāthanār, Kurinji Thinai – What the heroine’s friend said, as the hero listened nearby
This ignorant town has pathetic
people who do not care about
the sad heart of the young woman
wearing flower design earrings
and a leaf garment on her loins,
her tiny waist hurt by her large,
tender, breasts with pallor that
have grown like round containers.

What will happen to her?

Notes:  The heroine’s friend indicated to the hero that the heroine would be confined to her home by her mother.  Or, what the heroine’s friend said indicating that others are coming for the heroine’s hand in marriage.  தலைவியைத் தாய் இற்செறிக்க எண்ணி இருப்பதைத் தோழி புலப்படுத்தியது.  வேற்று வரைவு வரினும் அதை மாற்றுவதற்கு கூறியதாம்.  நுழை சிறு நுசுப்பிற்கு (2) – நுணுகிய சிறிய இடைக்கு,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – அறிவு நுழைந்து நோக்குவதற்குக் காரணமான சிறுமையையுடைய நுசுப்பு என்க, திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – சிறிய இடைக்கு, நுழை சிறு – ஒருபொருட் பன்மொழி.  கொம்மை வரி முலை செப்புடன் எதிரின (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெருமையையும் தேமலையும் உடைய முலைகள் செப்போடு மாறுபட்டன, கொம்மை = பெருமை, வட்டம், உ. வே. சாமிநாதையர் உரை – பெருமையையும் தேமலையும் உடைய நகில்கள் செப்போடு மாறுபட்டன.  அகநானூறு 315 – முலையும் சூழி மென் முகம் செப்புடன் எதிரின.  அகநானூறு பாடலின் உரை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நுனியில் மெல்லிய முகத்தோடு அவள் முலைகளும் வளர்ந்து சிமிழ் போலாயின, வேங்கடசாமி நாட்டார் உரை – முலையும் உச்சியிலுள்ள மெல்லிய முகத்தால் சிமிழுடன் மாறுபட்டன.

Meanings:  தழை அணி அல்குல் – leaf clothes on the loins, leaf clothes on the waist, தாங்கல் செல்லா – unable to bear, நுழை சிறு நுசுப்பிற்கு – for the very small waist (நுழை சிறு – ஒருபொருட் பன்மொழி), எவ்வமாக – as a pain, அம் மெல் ஆகம் நிறைய வீங்கி – beautiful delicate chest is fully swollen, கொம்மை – rounded, large, வரி முலை – breasts with pallor spots, செப்புடன் எதிரின – they have grown like containers, they have grown like round boxes, யாங்கு ஆகுவள் – what will happen to her, கொல் – அசைநிலை, an expletive, பூங்குழை – flower design earrings, pretty earrings, என்னும் அவல நெஞ்சமொடு – with such a sad heart, உசாவா – not caring, கவலை மாக்கட்டு – it has pathetic people, இப் பேதை – this ignorant, ஊர்- town, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 160, மதுரை மருதன் இளநாகனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்,
இறவின் அன்ன கொடுவாய்ப் பெடையொடு,
தடவின் ஓங்கு சினைக் கட்சியில் பிரிந்தோர்
கையற நரலு நள்ளென் யாமத்துப்
பெருந்தண் வாடையும் வாரார்,  5
இஃதோ தோழி, நம் காதலர் வரைவே.

Kurunthokai 160, Mathurai Maruthan Ilanākanār, Kurinji Thinai – What the heroine said to her friend
He has not come back even in this
season with very cold north winds,
when an ibis with a red head crest
like that of flame, cries along
with his mate with a shrimp-like
curved beak, from their nest
on a soaring thadā tree branch,
In the pitch darkness of night,
distressing those who are separated.

Is this how it is my friend,
waiting for my lover to marry me?

Notes:  The heroine said this to her friend who consoled her stating that the hero would return on time from his wealth-earning trip to marry her.  பொருள் ஈட்டச் சென்ற தலைவன் வரைவு நீட்டிமையால் ஆற்றாளாகிய தலைவியை நோக்கித் தோழி ‘ அவர் வரைவர்’ என ஆற்றுவிப்புழித் தலைவி உரைத்தது.  செந்தலை (1) – உ. வே. சாமிநாதையர் உரை – செந்தலையென்றது செஞ்சூட்டை.  தலை – ஆகுபெயர்.  பெடை – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).

Meanings:  நெருப்பின் அன்ன – like flame (நெருப்பின் – இன் சாரியை), செந்தலை அன்றில் – andril bird with a red head crest, Black Ibis also known as red-naped ibis – Pseudibis papillosa (தலை ஆகுபெயர்), இறவின் அன்ன – like shrimp, கொடுவாய்ப் பெடையொடு – along with the curved beak female, தடவின் ஓங்கு சினை – in the thadā tree’s big branch, கட்சியில் – in the nest, பிரிந்தோர் – one who is separated, கையற – helpless, நரலும் – crying, நள்ளென் யாமத்து – in the middle of the night with pitch darkness, பெருந்தண் வாடையும் – even in this season with the very cold northern winds (உம்மை – உயர்வு சிறப்பு), வாரார் – he does not come, இஃதோ தோழி – is this how it is, நம் – our, காதலர் வரைவு – my lover coming to marry me, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 161, நக்கீரனார், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பொழுதும் எல்லின்று, பெயலும் ஓவாது,
கழுது கண் பனிப்ப வீசும் அதன்றலைப்
புலிப்பல் தாலிப் புதல்வர்ப் புல்லி
அன்னாவென்னும் அன்னையும், அன்னோ,
என் மலைந்தனன் கொல் தானே, தன் மலை  5
ஆரம் நாறு மார்பினன்,
மாரி யானையின் வந்து நின்றனனே.

Kurunthokai 161, Nakkeeranār, Kurinji Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
The day had changed into night
and rapid rains poured relentlessly,
making even the eyes of ghouls to
flicker and tremble.

My mother embraced her son
wearing a chain with a tiger tooth
pendant, and cried out to me.

I wonder what my lover wanted
when he came, his breast fragrant
from the mountain sandal as he
stood outside like a drenched elephant!

Notes:  The heroine who was unable to meet the hero who came for a night tryst since she was guarded at home, she said this to her friend at a later date, aware that the hero was nearby.  இரவுக்குறிக்கண் வந்த தலைவனைக் காப்பு மிகுதியால் எதிர்ப்படப் பெறாத தலைவி, பிற்றை ஞான்று தலைவன் கேட்கும்படி தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.  தாலி: அகநானூறு 7 – புலிப்பல் கோத்த புலம்பு மணித் தாலி, அகநானூறு 54 – பொன்னுடைத் தாலி என் மகன், குறுந்தொகை 161 – புலிப்பல் தாலிப் புதல்வர், புறநானூறு 77 – தாலி களைந்தன்றும் இலனே, புறநானூறு 374 – புலிப் பல் தாலிப் புன்தலைச் சிறாஅர்.  அன்னா (4) – உ. வே. சாமிநாதையர் உரை – புதல்வனைப் புல்லிய தாய் அன்னா என்று என்னையும் அழைத்தலின் நானும் அவளருகில் இருத்தல் இன்றியமையாததாயிற்று என்று தலைவி புலப்படுத்தினாள்.  அன்னையென்றது விளியேற்று.  முறைப்பெயர் மருங்கின் ஐ என் இறுதி ஆவொடு வருதற்கு உரியவும் உளவே (தொல்காப்பியம், விளிமரபு 9) விதிப்படி அன்னா என வந்தது.  புதல்வனைப் புல்லி அவனையே அன்னா என்று என்னுமென்று பொருள் கொள்ளுதலும் ஒன்று.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆண்மகவினைப் பெண் மகவு போலும், பெண்மகவினை ஆண் மகவு போலும் விளித்தல் தாயர் வழக்கமாதலை இன்றும் காணலாம்.  எல்லின்று (1) – உ. வே. சாமிநாதையர் உரை – சூரியனும் விளக்கம் இலனாயினன்,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இருண்டு விட்டது.

Meanings:  பொழுதும் எல்லின்று – the sun has set, day had turned into night, it has become dark, பெயலும் ஓவாது – it has not stopped raining, கழுது கண் பனிப்ப – making the eyes of ghouls to flicker and tremble, வீசும் அதன்றலை – falling rapidly there, புலிப்பல் தாலி – chain with tiger teeth, புதல்வர்ப் புல்லி – embracing her son, அன்னா வென்னும் அன்னையும் – mother said ‘mother’, அன்னோ – alas, என் மலைந்தனன் கொல் – what he was doing (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), தான், ஏ – அசைநிலைகள், expletives, தன் மலை – his mountain, ஆரம் நாறு மார்பினன் – man with his chest with sandal scents, sandal, Santalum album, மாரி யானையின் வந்து – coming like a rain-drenched elephant (யானையின் – இன் உருபு ஒப்புப் பொருளது), நின்றனன் – he stood, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 162, கருவூர்ப் பவுத்திரனார், முல்லைத் திணை – தலைவன் முல்லை மலரிடம் சொன்னது
கார் புறந்தந்த நீருடை வியன் புலத்துப்
பலர் புகுதரூஉம் புல்லென் மாலை,
முல்லை வாழியோ முல்லை! நீ நின்
சிறு வெண்முகையின் முறுவல் கொண்டனை
நகுவை போலக் காட்டல்,  5
தகுமோ மற்றிது, தமியோர் மாட்டே?

Kurunthokai 162, Karuvūr Pavuthiranār, Mullai Thinai – What the hero said to the jasmine flower
May you live long, O jasmine!
At this dull evening time when
everyone returns to their homes
across the vast, water-filled
woodlands protected by the clouds,
you with your little white buds seem
to laugh at those who are lonely.

Is this the right thing for you do to?

Notes:  The hero who was returning home after finishing his assignment, said this to a jasmine flower.  வினை முற்றி மீளும் தலைவன் முல்லையிடம் உரைத்தது.  பற்களைப் போன்ற அரும்பு:  குறுந்தொகை 126 – முல்லைத் தொகு முகை இலங்கு எயிறாக, குறுந்தொகை 162 – சிறு வெண்முகையின் முறுவல் கொண்டனை, குறுந்தொகை 186 – முல்லை மென் கொடி எயிறு என முகையும், நற்றிணை 316 – மௌவல் நலம்வரக் காட்டி கயல் ஏர் உண்கண் கனங்குழை இவை நின் எயிறு ஏர் பொழுதின் ஏய் தருவேம் என, கலித்தொகை 27 – மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்ப.

Meanings:  கார் புறந்தந்த – protected by the clouds, நீருடை – water filled, வியன் புலத்து – in the vast woodlands, பலர் புகுதரூஉம் – when many enter (புகுதரூஉம் – இன்னிசை அளபெடை),  புல்லென் மாலை – dull evening, sad evening, முல்லை வாழி – may you long live O jasmine, Jasminum sambac, ஓ – அசைநிலை, an expletive, முல்லை – O jasmine, நீ – you, நின் – your, சிறு வெண் – small white, முகையின் – with your buds, முறுவல் கொண்டனை – you are smiling, நகுவை போலக் காட்டல் – appearing like laughing, appearing like teasing (காட்டல் – அல் ஈற்று எதிர்மறை வியங்கோள், காட்டாற்க என்றவாறு), தகுமோ – is this fitting, மற்று – அசைநிலை, an expletive, இது – this,  தமியோர் மாட்டு – to those who are lonely, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 163, அம்மூவனார், நெய்தற் திணை – தலைவி கடலிடம் சொன்னது
யார் அணங்குற்றனை கடலே, பூழியர்
சிறுதலை வெள்ளைத் தோடு பரந்தன்ன
மீன் ஆர் குருகின் கானலம் பெருந்துறை
வெள் வீத் தாழை திரை அலை
நள்ளென் கங்குலுங் கேட்கு நின் குரலே?  5

Kurunthokai 163, Ammoovanār, Neythal Thinai – What the heroine said to the ocean
Who caused you distress, O ocean?

I hear your voice even at night,
when your rolling waves batter the
fragrant thāzhai trees bearing white flowers,
on the huge seashore with groves, where
herons eating fish appear like small-headed,
white goat herds spread in the Pūzhiyar land.

Notes:  The heroine who suffered in pain due to separation from her lover, said this to the ocean.  தலைவனின் பிரிவால் வருந்தும் தலைவி கடலிடம் கூறியது.  மலைபடுகடாம் 414 – வெள்ளை – வெள்ளாடு.

Meanings:  யார் அணங்கு உற்றனை கடலே – who caused you distress O ocean, பூழியர் – Pūzhiyar people, சிறுதலை வெள்ளைத் தோடு – small-headed white goat herds, பரந்தன்ன – like they are spread, மீன் ஆர் குருகின் – with herons/egrets that eats fish, கானல் – seashore grove, அம் – சாரியை, பெருந்துறை – big seashore, வெள் வீ தாழை – thāzhai with white flowers, Pandanus odoratissimus, திரை அலை – rolling waves, நள்ளென் கங்குலும் – even at night with pitch darkness, கேட்கு நின் – I hear your, குரல் – voice, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 164, மாங்குடி மருதனார், மருதத் திணை – பரத்தை தன் தோழியிடம் சொன்னது
கணைக் கோட்டு வாளை கமஞ்சூல் மட நாகு
துணர்த் தேக் கொக்கின் தீம்பழம் கதூஉம்,
தொன்று முதிர் வேளிர் குன்றூர்க் குணாது,
தண் பெரும் பவ்வம் அணங்குக தோழி,
மனையோள் மடமையின் புலக்கும்,  5
அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே.

Kurunthokai 164, Māngudi Maruthanār, Marutham Thinai – What the concubine said to her friend
My lover’s wife hates me in ignorance.
If I behaved like this toward her husband,
may it terrorize me O friend,
the cool, huge ocean that is east of the very
ancient Vēlir’s Kundrūr town,
where a delicate, thick-finned female vālai
fish, pregnant with eggs, grabs and bites
sweet mangoes that fall into the pond from
a tree with clusters of fruits.

Notes:  The hero’s concubine who heard that the heroine talked ill of her, said this, aware that the heroine’s friends were nearby.  தலைவி தன்னைப் புறங்கூறினாள் எனக் கேட்ட பரத்தை, தலைவியின் தோழியர் கேட்பத் தன் தோழியிடம் கூறியது.  உ. வே. சாமிநாதையர் உரை – வாளை நாகு தான் இருந்தவிடத்தே இருந்து முயற்சி சிறிதுமின்றி எளிதில் கொக்கின் பழத்தைப்  பெற்றது போல, யாம் முயலாமே தலைவன் வலிய வந்து எம்மை நயப்ப யாம் அவனோடு உறைந்தேம்.  ஆதலின் யாம் குறை கூறற்கு அரியேம் அல்லேம் என்றாள்.  குறுந்தொகை 8 – கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் பழன வாளை கதூஉம்.  வரலாறு:  வேளிர், குன்றூர்.  கமம் – நிறைவு, கமம் நிறைந்தியலும் (தொல்காப்பியம். உரியியல் 59).  நாகு – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).

Meanings:  கணைக் கோட்டு வாளை – vālai fish with thick dorsal fin, vālai fish with thick spine, scabbard fish, Trichiurus haumela, கமஞ்சூல் மட நாகு – pregnant innocent female (கம என்னும் உரிச்சொல் நிறைவுப் பொருளில் வந்தது), துணர் – clusters, தே கொக்கின் – sweet mango’s, தீம்பழம் கதூஉம் – grabs the sweet fruit (கதூஉம் – இன்னிசை அளபெடை), தொன்று முதிர் வேளிர் – very ancient Vēlir clan, குன்றூர்க் குணாது – to the east side of Kundroor, தண் பெரும் பவ்வம் – cool huge ocean, அணங்குக தோழி – may it hurt me my friend, may it terrorize me, மனையோள் – wife, மடமையின் – in ignorance, புலக்கும் – reason for her hatred, அனையேம் – me becoming like that nature, தன்மைப் பன்மை, first person plural, மகிழ்நற்கு – to my lover, யாம் – I,  தன்மைப் பன்மை, first person plural, ஆயினம் – me becoming, தன்மைப் பன்மை, first person plural, எனின் – if, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 165, பரணர், குறிஞ்சித் திணை  – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
மகிழ்ந்ததன் தலையும் நற உண்டாங்கு,
விழைந்ததன் தலையும் நீ வெய்துற்றனை,
அருங்கரை நின்ற உப்பு ஒய் சகடம்
பெரும் பெயல் தலைய வீந்தாங்கு, இவள்
இரும் பல் கூந்தல் இயல் அணி கண்டே.  5

Kurunthokai 165, Paranar, Kurinji Thinai – What the hero said to his heart
O my heart!  When you saw her with
her naturally beautiful thick, black hair,
the young woman who is unable to obtain,
you were distressed like a loaded salt
wagon on a steep bank, ruined by heavy
downpour.

You craved for her like a drunkard who
craves to drink more even after drinking.

Notes:  The hero whose request to meet the heroine was not accepted by her friend, said this to his heart that desired her greatly.  தலைவியைப் பெறுவதற்குத் தோழியின்பால் இரந்தும் குறை நேரப்படாத தலைவன், அரியளாய தலைவியைப் பெரிதும் விரும்பும் தன் நெஞ்சிடம் கூறியது.  உ. வே. சாமிநாதையர் உரை – உப்புச் சகடமானது பெருமழையால் அழிந்தது போல நீ நாணும் உரனும் அழிந்தாயெனவும், ஒரு முறை கள்ளுண்டான் நாணும் அறிவும் அற்று மயங்கினும் அதை உணராது மீண்டும் உண்டு மகிழ்ந்தது போல ஒரு முறை தலைவியை விரும்பி இத்தோழிபாற் பணிந்து குறை இரந்து நாணமிழந்து நின்றும் அமையாமல் மீண்டும் விரும்பினை எனவும் உவமைகளை விரித்துக் கொள்க.

Meanings:  மகிழ்ந்ததன் தலையும் – happy even after drinking (தலையும் – பின்னும்), நற உண்டாங்கு – like drunk with alcohol again, விழைந்ததன் தலையும் – after desiring once before, நீ வெய்துற்றனை – you craved, அருங்கரை நின்ற – stationed in the very difficult bank, உப்பு ஒய் சகடம் –  cart bearing salt, பெரும் பெயல் தலைய – since it rained heavily, வீந்தாங்கு – like how it got ruined, இவள் இரும் பல் கூந்தல் – her black thick hair, இயல் அணி – natural beauty, கண்டு – on seeing, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 166, கூடலூர் கிழார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது to 
தண் கடல் படுதிரை பெயர்த்தலின், வெண்பறை
நாரை நிரை பெயர்ந்து அயிரை ஆரும்
ஊரோ நன்று மன் மரந்தை,
ஒரு தனி வைகின் புலம்பு ஆகின்றே.

Kurunthokai 166, Koodalūr Kizhār, Neythal Thinai – What the heroine’s friend said to her
Since the cold ocean’s waves
have caused the fish to move
away,
flocks of storks with white wings
fly in a row and eat ayirai fish in
Maranthai that used to be a
joyous town in the past.

Now it has become a place of
suffering for those who live there
all alone.

Notes:  The heroine’s friend said that the heroine had been confined to her house.  தலைவி இற்செறிக்கப்பட்டு புறம் போகாதபடி காவல் செய்யப்பட்ட நிலையின் தன்மையைக் கூறியது.  பொ. வே. சோமசுந்தரனார், இரா. இராகவையங்கார் உரைகளில் மாந்தை என்றுள்ளது இவ்வூர்.  உ. வே. சாமிநாதையர் உரை – திரை மீனைப் பெயர்த்தாலும் நாரை அம்மீன் உள்ள இடத்தே சென்று அதனை ஆர்ந்தது போல, தாயர் முதலியோர் இற்செறித்துக் காப்பிடை வைப்பினும் தலைவன் தலைவியிருக்குமிடத்து வந்து கண்டு இன்புறல் வேண்டுமென்பது குறிப்பு.  ஒரு தனி வைகின் புலம்பு ஆகின்றே (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஈண்டுத் தாய் முதலிய தமர் சூழ இருந்தும் தலைவன் இன்மையால் காட்டின் ஊடே தனித்துறைவாள் போல்வதொரு உணர்ச்சி உடையளாதல்.  வரலாறு:  மரந்தை. There are references to Maranthai city in Kurunthokai 34, Natrinai 35, 395 and Akanānūru 127 and 376.  It is a city in the Chēra country.  மன் – கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  தண் கடல் – cold ocean, படுதிரை – appearing waves, attacking waves, loud waves, பெயர்த்தலின் – since they made the fish move away, வெண்பறை நாரை – the storks with white wings, White storks, Ciconia ciconia, நிரை – flocks, பெயர்ந்து – moving away, அயிரை ஆரும் – they eat loach fish, Cobitio thermalis, நொய்ம்மீன், Cobitio thermalis, ஊர் – town, ஓ – அசைநிலை, an expletive, நன்று மன் – it was very good (மன் – மிகுதிக் குறிப்பு), it was good in the past (மன் – கழிவுக் குறிப்பு), மரந்தை – Maranthai, ஒரு தனி வைகின் – if staying alone, புலம்பு ஆகின்று – loneliness causes sorrow, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 167, கூடலூர் கிழார், முல்லைத் திணை – செவிலித்தாய் தலைவியின் தாயிடம் சொன்னது  
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்,
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்,
குவளை உண்கண் குய் புகை கமழத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்,
இனிதெனக் கணவன் உண்டலின்,  5
நுண்ணிதின் மகிழ்ந்தன்று, ஒண்ணுதல் முகனே.

Kurunthokai 167, Koodalūr Kizhār, Mullai Thinai – What the foster mother said to the heroine’s mother
Wearing a garment that was not
washed after she mashed mature
curds and wiped on it with her
delicate fingers that resemble glory
lily petals, she cooked.

Smoke from her cooking spread
around and touched her kohl-lined
eyes that are like blue waterlilies.

She made sweet tamarind curry that
he enjoyed and ate.
Her face revealed her happiness in
a delicate manner, the young woman
with a bright forehead.

Notes:  The foster mother who visited the couple in their marital house, said this to the heroine’s mother on her return.  தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்று வந்த செவிலித்தாய், நற்றாய்க்கு உரைத்தது.  முல்லைப்பாட்டு 95 – கோடல் குவி முகை அங்கை அவிழ, குறுந்தொகை 167 – காந்தள் மெல்விரல், பரிபாடல் 19 – கை போல் பூத்த கமழ் குலைக் காந்தள், பொருநராற்றுப்படை 33 – காந்தள் மெல் விரல், புறநானூறு 144 – காந்தள் முகை புரை விரலின்.  விரல் கழுவுறு கலிங்கம் (1-2) – உ. வே. சாமிநாதையர் உரை – விரலை துடைத்துக் கொண்ட ஆடையை,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தோய்த்துத் தூய்மை செய்யப்பட்ட ஆடை. விரல் கழாஅது கழுவுறு கலிங்கத்தை உடுத்தென்க.  விரலைக் கழுவாமலே நெகிழ்ந்த ஆடையை உடுத்திக் கொண்டு தாளிப்பாயாயினள்.  கமழ  (3) – உ.வே.சா உரையில் இவ்வாறு உள்ளது. பொ. வே. சோமசுந்தரனார் உரையில் ‘கழும’ என உள்ளது.  கண்ணிற் புகை நிறைய என அதன் பொருள் உள்ளது.

Meanings:  முளி தயிர் – well set curds, thick curds (முதிர்ந்த தயிர்), பிசைந்த காந்தள் மெல்விரல் – kneaded with her kāntal-like delicate fingers, malabar glory lily, Gloriosa superba, கழுவுறு கலிங்கம் – clothing on which the fingers were wiped, washed clothing, கழாஅது உடீஇ – she wore without washing (கழாஅது – இசை நிறை அளபெடை, உடீஇ – சொல்லிசை அளபெடை), குவளை உண்கண் – kuvalai-flower-like eyes with kohl, blue waterlily, Blue nelumbo, Nymphaea odorata, குய் புகை கமழ- frying smoke fragrance spread, தான் துழந்து அட்ட – mixed and cooked by herself, தீம் புளிப் பாகர் – sweet tamarind curry (sauce), இனிதெனக் கணவன் உண்டலின் – since her husband ate it considering it tasty, நுண்ணிதின் – in a delicate manner, மகிழ்ந்தன்று – it was happy (her face), ஒள் நுதல் – the woman with a bright forehead (ஒண்ணுதல் – அன்மொழித்தொகை), முகன் – the face (முகன் – முகம் என்பதன் போலி), ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 168, சிறைக்குடி ஆந்தையார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகை
இரும் பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து
பெரும் பெயல் விடியல் விரித்து விட்டன்ன,
நறும் தண்ணியளே நல் மா மேனி,
புனல் புணை அன்ன சாய் இறைப் பணைத்தோள்  5
மணத்தலும் தணத்தலும் இலமே,
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே.

Kurunthokai 168, Siraikkudi Ānthaiyār, Pālai Thinai – What the hero said to his heart
Her beautiful dark body is fragrant
and cool like pichi flowers that
have blossomed in the morning from
the thick, wet buds that were kept
covered in a palm frond basket on a
rainy night.

Her curved, thick arms seem like rafts
that glide on water.  We can neither
embrace them nor be separated from
them.

If we were to depart from here, living
would be quite impossible for us.

Notes:  The hero said this to his heart that desired to go and earn wealth.  பொருள் ஈட்ட விரும்பும் தன் நெஞ்சிற்குத் தலைவன் உரைத்தது.  புறநானூறு 352 – பசுங்குடையான் புதன் முல்லைப் பூப்பறிக்குந்து, அகநானூறு 37 – பயில் இதழ்ப் பசுங்குடைக் கய மண்டு பகட்டின் பருகி, அகநானூறு 121 – ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண்குடை, கலித்தொகை 23 – வேணீர் உண்ட குடை ஓரன்னர்.  புணை (5) – உ. வே. சாமிநாதையர் உரை – பேய்க்கரும்பால் செய்த தெப்பம்.

Meanings:   மாரிப் பித்திகத்து – rainy season jasmine’s, பிச்சிப்பூ, Jasminum grandiflorum,  நீர் வார் – water drenched, கொழு முகை – big buds, thick buds, இரும் பனம் பசுங்குடை – big bowl made with palm frond, பலவுடன் பொதிந்து – stuffed with many, பெரும் பெயல் – heavy rain, விடியல் விரித்து விட்டன்ன – like how they blossomed in the morning, நறும் தண்ணியள் – she is fragrant and cool, she has fine qualities, ஏ – அசைநிலை, an expletive, நன் மா மேனி – beautiful dark body, புனல் புணை அன்ன – like a raft on flowing water, சாய் – curved, delicate, இறை – joints, wrists, பணைத்தோள் – thick arms, bamboo-like arms, மணத்தலும் – and to embrace, and to unite, தணத்தலும் – and to separate, இலம் – we will be unable, தன்மைப் பன்மை, first person plural, ஏ – அசைநிலை, an expletive, பிரியின் – if separated, வாழ்தல் – living, அதனினும் – more than that, இலம் – it would be impossible for us, தன்மைப் பன்மை, first person plural, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 169, வெள்ளிவீதியார், மருதத் திணை – தலைவனிடம் தலைவி அல்லது தோழி சொன்னது
சுரஞ்செல் யானைக் கல் உறு கோட்டின்
தெற்றென இறீஇயரோ ஐய, மற்றியாம்
நும்மொடு நக்க வால் வெள் எயிறே,
பாணர் பசு மீன் சொரிந்த மண்டை போல,
எமக்கும் பெரும் புலவாகி,  5
நும்மும் பெறேஎம், இறீஇயர் எம் உயிரே.

Kurunthokai 169, Velliveethiyār, Marutham Thinai – What the heroine or the heroine’s friend said to the hero
Sir, may my bright white teeth
that laughed with you snap
like a wasteland elephant’s tusk
that breaks when it strikes a rock.

May my life which stinks, even to
me, like the fish bowls of bards,
end rapidly, since I do not have you!

Notes:  The sulking heroine said this to the hero when he denied extra-marital relationships.  Or, what the heroine’s friend said to the hero, urging him to come and marry the heroine.  தலைவன் தன்பால் பரத்தமை இல்லையென்று தலைவியிடம் கூறித் தெளிவிக்குங் காலத்து, ஊடல் தீராத தலைவி உரைத்தது.  இனி, வரைவு நீட்டித்தவழி தோழி வரைவு கடாயதுமாம்.  பாணரும் மீனும்:  அகநானூறு 196 – வராஅல் துடிக் கண் கொழுங்குறை நொடுத்து உண்டு ஆடி வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி ஆம்பல் அகல் இலை அமலை வெஞ்சோறு தீம் புளிப் பிரம்பின் திரள் கனி பெய்து, அகநானூறு 216 – நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்மகள், குறுந்தொகை 169 – பாணர் பசு மீன் சொரிந்த மண்டை போல, ஐங்குறுநூறு 47 – முள் எயிற்றுப் பாண் மகள் இன் கெடிறு சொரிந்த, ஐங்குறுநூறு 48 – வலை வல் பாண்மகன் வால் எயிற்று மடமகள் வராஅல் சொரிந்த, ஐங்குறுநூறு 49 – பாண்மகள் சில் மீன் சொரிந்து,  ஐங்குறுநூறு 111 – பாணன் சூழ் கழி மருங்கின் நாண் இரை கொளீஇச் சினைக் கயல் மாய்க்கும், புறநானூறு 348 – மீன் சீவும் பாண் சேரி, மதுரைக்காஞ்சி 269 – மீன் சீவும் பாண் சேரியொடு, பெரும்பாணாற்றுப்படை 284-285 – கோள்வல் பாண்மகன் தலைவலித்து யாத்த நெடுங்கழைத் தூண்டில் நடுங்க நாண் கொளீஇ.  பாணர் – பாண் மரபினர், பாண் என்பது பண் அடியாகப் பிறந்த பெயர், இசை பாடுபவர்.

Meanings:  சுரஞ்செல் யானை – the elephant goes in the wasteland, கல் உறு கோட்டின் – like tusks hitting against a rock (உறு – குத்திய, கோட்டின் – இன் உருபு ஒப்புப் பொருளது), தெற்றென – rapidly, இறீஇயர் – may they break (சொல்லிசை அளபெடை, வியங்கோள் வினைமுற்று விகுதி, verb ending with a command, இகழ்ச்சிப்பொருளில் வந்தது, used to show ill will), ஓ – அசைநிலை, an expletive, ஐய – sir, மற்று – அசைநிலை, an expletive, யாம் – me, நும்மொடு நக்க – laughed with you, வால் வெள் – very white, pure white (வால் வெள் – ஒருபொருட் பன்மொழி), எயிறு – teeth, ஏ – அசைநிலை, an expletive, பாணர் – bards, பசுமீன் – fresh fish, சொரிந்த – poured, மண்டை போல – like bowls, எமக்கும் பெரும் புலவாகி – it brings big hatred to me, it stinks greatly to me, நும்மும் பெறேஎம் – me not getting you (பெறேஎம் – இன்னிசை அளபெடை), she not getting you, இறீஇயர் – may it get ruined, may it end (சொல்லிசை அளபெடை, வியங்கோள் வினைமுற்று விகுதி, verb ending with a command, இகழ்ச்சிப்பொருளில் வந்தது, used to show ill will), எம் – my (தன்மைப் பன்மை, first person plural), உயிர் – life, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 170, கருவூர் கிழார், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
பலருங் கூறுக அஃது அறியாதோரே,
அருவி தந்த நாள் குரல் எருவை
கயம் நாடு யானை கவள மாந்தும்
மலைகெழு நாடன் கேண்மை,
தலைபோகாமை, நற்கு அறிந்தனென் யானே.  5

Kurunthokai 170, Karuvūr Kizhār, Kurinji Thinai – What the heroine said to her friend
Many people who do not know
about it talk.  Let them do that.

I know well my unspoiled love
with the man from the mountain
country,
where elephants seek deep ponds
to eat clusters of tender eruvai reeds
brought down by the waterfalls.

Notes:  The heroine said this to her friend who worried about her sorrow when the hero was away to earn wealth for the wedding.  தலைவன் வரைபொருள் நிமித்தம் பிரிந்து போன காலத்தே அவனது பிரிவை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குத் தலைவி கூறியது.  பலரும் (1) – உ. வே. சாமிநாதையர் உரை – செவிலி முதலியோர், பொ. வே. சோமசுந்தரனார் உரை – அறியாதோர் என்றது ஈண்டுத் தோழியை முன்னிலைப் புறமொழியாகக் கூறியதாம்.  உ. வே. சாமிநாதையர் உரை – கவளமாந்திய யானை பின்னும் அதனை வேண்டி வருவது போலப் பின்னும் தலைவன் வரும் என்பது குறித்தாள்.

Meanings:  பலரும் – many people, கூறுக – let them say, அஃது – that, அறியாதோர் – those who don’t know, ஏ – அசைநிலை, an expletive, அருவி தந்த – what the waterfalls gave, நாள் – fresh, குரல் – clusters, எருவை – reed, கொறுக்கச்சி, கொறுக்காந்தட்டை, நாணல் வகை, reed, Arundo donax, கயம் – pond, நாடு – seeking, going to, யானை – elephants, கவள – ball of food, மாந்தும் – they eat, மலை கெழு நாடன் – man from the splendid mountains, கேண்மை – friendship, தலைபோகாமை – not going away, not spoiled (தலை – அசைநிலை, an expletive), நற்கு அறிந்தனென் யான் – I understand that well (நற்கு – நன்கு என்பதன் விகாரம்), ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 171, பூங்கணுத்திரையார், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
காண் இனி, வாழி தோழி, யாணர்க்
கடும் புனல் அடைகரை நெடுங்கயத்து இட்ட
மீன் வலை மாப் பட்டாஅங்கு,
இது மற்று எவனோ, நொதுமலர் தலையே?

Kurunthokai 171, Poonganuthiraiyār, Marutham Thinai – What the heroine said to her friend
May you live long, O friend!
Look at this now!

It is like an animal being caught
in a fishing net in a deep pond
when fierce flood water flows in,
filling the banks.

Of what use is this business with
strangers?

Notes:  The heroine said this to her friend when others came requesting her hand in marriage when the hero was away to earn wealth for their wedding.  தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் அயலார் வரையப் புக்கனராக, அது கண்டு கவன்ற தோழியிடம் தலைவி கூறியது.  காண் இனி (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இப்பொழுது காண என்றது இப்பொழுது அயலார் மகட்பேசி வந்துள்ள நிகழ்ச்சியை நோக்கு என்றவாறு.  நமர் உடன்படாமைக்கு வேண்டிய அறத்தொடு நிற்றல் முதலியன செய்க என்பது குறிப்பு.  மா (3) – உ. வே. சாமிநாதையர் உரை – நீர்நாய் முதலியன.  அகநானூறு 369 –  தமர் மணன் அயரவும் ஒல்லாள்.  உ. வே. சாமிநாதையர் உரை – மீனுக்கென அமைத்த வலையில் விலங்கு பட்டாற்போலத் தலைவனுக்கென அமைந்த என்திறத்து நொதுமலர் வரைய முயன்றனர் என்று உவமையை விரித்துக் கொள்க.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – யாணர்க் கடும் புனல் அடைகரை நெடுங்கயத்து என்றது, திருவும் ஒழுக்கமும் நிறைந்த உயர்குடி என்று தன் குடிப் பெருமை கருதிக் கூறியது என்க.  உயர்குடிப் பிறப்புடைய யாம் கற்புக்கடன் பூண்டமை அறியார் வீணே முயல்கின்றனர் என்றவாறு.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

Meanings:  காண் இனி – see now, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – O friend, யாணர் – flourishing, கடும் புனல் – fierce stream, அடைகரை – shore filled with sand, shore filled with water, நெடும் கயத்து – in the deep pond, in the long pond, இட்ட – thrown, மீன் வலை – fishing net, மா பட்டாஅங்கு – like how an animal is caught, இது – this, மற்று – அசைநிலை, an expletive, எவன் – why, what is the use, ஓ – அசைநிலை, an expletive, நொதுமலர்தலை – அயலாரிடம், with strangers, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 172, கச்சிப்பேட்டு நன்னாகையார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
தாஅ அஞ்சிறை நொப்பறை வாவல்
பழுமரம் படரும் பையுள் மாலை,
எமியமாக ஈங்குத் துறந்தோர்
தமியராக இனியர் கொல்லோ?
ஏழ் ஊர்ப் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த,  5
உலை வாங்கு மிதிதோல் போலத்
தலைவரம்பு அறியாது, வருந்தும் என் நெஞ்சே.

Kurunthokai 172, Kachipēttu Nannākaiyār, Neythal Thinai – What the heroine said to her friend
The delicately flying bats
with beautiful, strong wings
fly toward fruit trees in the
evening hours that are painful
to me since I’m alone without
my lover.  Is he, who is alone,
a sweet person?

My pain knows no limits, and
my heart aches.  I am struggling
like the bellows, operated by
pressing the treadle with the
feet by a blacksmith, in a forge
set up in one town to serve the
needs of those in seven towns.

Notes:  The heroine said this to her friend who worried about her sorrow when the hero was away to earn wealth for the wedding.  வரைபொருள் நிமித்தம் தலைவன் பிரிந்த காலத்தில் இவள் ஆற்றாள் எனக் கவன்ற தோழியிடம் தலைவி கூறியது.  அகநானூறு 202 – குருகு ஊது மிதி உலை, குறுந்தொகை 172 – உலை வாங்கு மிதி தோல், பெரும்பாணாற்றுப்படை 207 – மென்தோல் மிதி உலைக் கொல்லன்.  எமியமாக (3) – இரா. இராகவையங்கார் உரை – எமியமாக எனப் பன்மையாற் கூறுதற்கேற்ப என் நெஞ்சே என்ற பாடம் கொள்க, உ. வே. சாமிநாதையர் உரை – எமியம் என்றது தோழியையும் நினைந்து.  தமியராக (4) – உ. வே. சாமிநாதையர் உரை – தாம் (தலைவர்) தனிமையை உடையவராக,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தன்மைப் பன்மை,  யாம் (தலைவி) பிரிவாலே தமியராய் வருந்துமாறு, ஓர் ஊர் (5) – உ. வே. சாமிநாதையர் உரை – ஓரூரில் உள்ள கொல்லன், பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஓர் ஊரிடத்தே அமைக்கப்பட்ட கொல்லுலையிலே செறித்த துருத்தி.  மிதிதோல் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – துருத்தி, ஏழூர்க்குத் தொழில் பொதுவிற் செய்யவேண்டிய கொல் உலையின் துருத்தி இடையறாது இரவு பகல் பரபரப்போடு இயங்கும் அன்றோ, அவ்வாறு என் நெஞ்சம் ஓயாது துன்பம் உழக்கும் என்றபடி.  பெரும்பாணாற்றுப்படை 206 – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கொல்லன் துருத்திக்கு ஆகுபெயர், காலாலே மிதித்துத் துருத்தியை ஊதச் செய்தலை இன்றும் காணலாம்

Meanings:  தாஅ அம் சிறை – strong beautiful wings (தாஅ – இசை நிறை அளபெடை), நொப்பறை வாவல் – delicately flying bats, பழுமரம் படரும் – they go to the fruit trees, பையுள் மாலை – painful evening time, எமியமாக – me being alone, தன்மைப் பன்மை, ஈங்குத் துறந்தோர் – the one who parted from me, தமியராக – being alone, தன்மைப் பன்மை, இனியர் கொல்லோ – is he a sweet person (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt, ஓ – அசைநிலை – an expletive), ஏழ் ஊர்ப் பொது வினைக்கு – for the common work of seven towns, ஓர் ஊர் யாத்த – set up in one town, உலை வாங்கு மிதிதோல் போல – like the bellows used to blow into the furnace in a forge that is operated by pressing the treadle with the feet, தலைவரம்பு அறியாது – not aware of boundaries (தலை – அசைநிலை, an expletive), வருந்தும் என் நெஞ்சு – my heart feels sad, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 173, மதுரைக் காஞ்சிப்புலவன், குறிஞ்சித் திணை  – தலைவன் தோழியிடம் சொன்னது
பொன் நேர் ஆவிரைப் புது மலர் மிடைந்த
பன் நூல் மாலைப் பனைபடு கலி மாப்
பூண்மணி கறங்க ஏறி, நாண் அட்டு,
அழிபடர் உள் நோய் வழிவழி சிறப்ப,
‘இன்னள் செய்தது இது’ என முன் நின்று  5
அவள் பழி நுவலும் இவ்வூர்,
ஆங்கு உணர்ந்தமையின், ஈங்கு ஏகுமார் உளெனே.

Kurunthokai 173, Mathurai Kānji Pulavan, Kurinji Thinai – What the hero said to the heroine’s friend
I will climb a proud madal horse,
adorned with a garland braided
tightly with gold colored, new
āviram flowers on thick threads,
causing the bells around its neck to
jingle, and destroy my pride.

This painful inner disease spreads
and increases.  “This is what she did”,
I would say, and those in town will
blame her in front of others.
I understand that, and I’m ready to go.

Notes:  The hero said that he would climb on a palmyra stem horse (madal horse), since his desire to meet the heroine was rejected by her friend.  தலைவன் தோழியிடம் குறை இரப்ப அவள் மறுத்தாளாக, ‘இனி நான் மடலேறுவேன்’ என அவன் கூறியது.  அழிபடர் (4) – உ. வே. சாமிநாதையர் உரை – மிக்க துன்பம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – மிக்க நினைவு.  மடல் ஏறுதல் – சங்க இலக்கியத்தில் மொத்தம் 16பாடல்களில் மடல் ஏறுதல் பற்றிய குறிப்புகள் உள்ளன – குறுந்தொகை 14, 17, 32, 173, 182, நற்றிணை 146, 152, 220, 342, 377, கலித்தொகை 58, 61, 138, 139, 140, 141.  கலித்தொகை 138, 139, 140, 141 பாடல்களில் மட்டுமே தலைவன் மடல் குதிரையின் மீது செல்கின்றான்.  கலித்தொகை 138, 141 ஆகிய பாடல்களில் மடல் ஏறியதால் தலைவியை அடைந்ததாக அறிவிக்கின்றான்.

Meanings:  பொன் நேர் ஆவிரை – gold-like āvirai flowers, Tanner’s senna, Cassia auriculata, புது மலர் மிடைந்த – tied together with new flowers, woven with new flowers, பன் நூல் மாலை – garland with different threads, பனைபடு – made of palm fronds, கலி மா – proud horse, பூண்மணி கறங்க – tied bells ringing (பூண் மணி – வினைத்தொகை), ஏறி – climbing, நாண் அட்டு – destroying modesty, destroying pride, அழிபடர் – great sorrow, உள் நோய் – inner disease, வழிவழி சிறப்ப – increasing to become more and more (வழிவழி – மென்மேலும்), இன்னள் செய்தது இது என – ‘this is what she did’ I would say, முன் நின்று – standing in front of others, அவள் பழி நுவலும் இவ்வூர் – this town will blame her, ஆங்கு உணர்ந்தமையின் – since I understand that, ஈங்கும் – here, ஏகுமார் – to leave, உளென் – I am ready, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 174, வெண்பூதியார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பெயன் மழை துறந்த புலம்பு உறு கடத்துக்
கவை முள் கள்ளிக் காய்விடு கடு நொடி
துதை மென் தூவித் துணைப் புறவு இரிக்கும்
அத்தம் அரிய என்னார், நத்துறந்து
பொருள்வயிற் பிரிவார் ஆயின், இவ் உலகத்துப்  5
பொருளே மன்ற பொருளே,
அருளே மன்ற ஆரும் இல்லதுவே.

Kurunthokai 174, Venpoothiyār, Pālai Thinai, What the heroine said to her friend
If he is able to abandon
us to earn wealth,
……….and go to the lonely,
……….difficult wasteland
……….where rains have failed,
……….and a pigeon couple with
……….dense, delicate feathers
……….move away from a kalli
……….tree with forked thorns
……….when its fruits crack and
……….break with loud sounds,
then material wealth
is assuredly the most important
thing in this world.  Grace does
not have acceptance for sure.

Notes:  The heroine said this to her friend who indicated that the hero was about to embark on his trip to earn wealth.  தலைவன் பொருள்வயின் பிரிய எண்ணுகின்றான் எனக் கூறிய தோழியிடம் தலைவி கூறியது.  நற்றிணை 314 – நொடி விடுவன்ன காய்விடு கள்ளி.  தமிழண்ணல் உரை – கள்ளிக் காயின் வெடிப்பொலி துணைப் புறாக்களைப் பிரிக்கின்றது.  அது போலப் பொருட் செல்வ ஆசை இணைந்திருப்போரைப் பிரிக்கின்றது. உள்ளுறை வகை.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெயல் – முகில், ஆகுபெயர்.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  புறவு – புறா புற என்றாகி உகரம் ஏற்றது. குறியதன் இறுதிச் சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 32).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  பெயன் மழை துறந்த – the clouds have abandoned rain, the falling rains have abandoned, புலம்பு உறு கடத்து – in the very lonely pālai wasteland (உறு – மிக்க), கவை முள் – forked thorns, கள்ளி – prickly pear cactus, euphorbia tirucalli, காய்விடு – when the fruits are cracking, கடு நொடி – loud sounds, துதை மென் தூவி – dense delicate wings, dense delicate feathers, துணைப் புறவு இரிக்கும் – make a pigeon/dove couple move (புறவு – புறா புற என்றாகி உகரம் ஏற்றது), அத்தம் அரிய – harsh wasteland, என்னார் – without consideration, நத்துறந்து – நம் துறந்து, abandoning us (நம் துறந்து நத்துறந்து என விகாரமாயிற்று), பொருள்வயின் பிரிவார் ஆயின் – if he leaves to earn wealth, இவ் உலகத்து – in this world, பொருளே மன்ற பொருளே – material wealth is the sure wealth (முன்னது பிரிநிலை ஏகாரம், exclusion, பின்னது தேற்றம், certainty), அருளே மன்ற ஆரும் இல்லது – for sure grace does not have anybody to accept (மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty), ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 175, உலோச்சனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பருவத் தேன் நசைஇப் பல் பறைத் தொழுதி
உரவுத் திரை பொருத திணி மணல் அடைகரை
நனைந்த புன்னை மாச் சினை தொகூஉம்
மலர்ந்த பூவின் மா நீர்ச் சேர்ப்பற்கு,
இரங்கேன் தோழி, ஈங்கு ‘என் கொல்’ என்று  5
பிறர் பிறர் அறியக் கூறல்,
அமைந்தாங்கு அமைக அம்பலஃது எவனே.

Kurunthokai 175, Ulōchanār, Neythal Thinai – What the heroine said to her friend
My friend!  I do not yearn for the
lord of the huge ocean,
on whose compacted, sandy shores
stand punnai trees battered by
powerful waves,
their large, wet branches with fresh
blossoms attracting many swarms of
buzzing bees eager for season’s honey.

If you keep on asking me what happened
here, others will come to know about it
and there will be widespread gossip.
Let it be so!  Of what good is that to us?

Notes:  The heroine said this to her friend who urged her to be patient when the hero was away.  தலைவன் பிரிந்த காலத்து ஆற்றாளாகிய தலைவியை நோக்கி ‘நீ ஆற்றியிருக்க வேண்டும்’ என்று வற்புறுத்திய தோழியிடம் தலைவி கூறியது.  பறை (1) – உ. வே. சாமிநாதையர் உரை – பறத்தல் தொழிலை உடைமை பற்றிப் பறவைக்காயிற்று.  தேன் நசைஇ என்ற குறிப்பால் பறை என்ற பொதுப் பெயர் இங்கே வண்டிற்காயிற்று.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – செவ்வித் தேனை விரும்பிப் புன்னைக் கிளையில் வண்டினங்கள் தொகூம் என்றது, அங்ஙனம் தொக்க வண்டுகள் தேனைப் பெற்றவுடன் தம் சேக்கையாகிய இறாலை நாடி வருதல் ஒருதலையாதல் போலப் பொருள் நசைஇச் சென்ற நம் தலைவரும் அஃது ஈட்டியவுடன் மீண்டு வந்து அருளுவர் என்னும் துணிவாளே யான் இரங்காது இருக்கின்றேன் என்பதற்கு உவமம் என்க.  ஈங்கு என் கொல் என்று பிறர் பிறர் அறியக் கூறல் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இவ்விடத்தில் நீ ஆற்றாயாகின்றது என்னை என்று அயலார் பலரும் அறியும்படி என்னை இடித்துரையாதே.  அம்பல் (7) – உ. வே. சாமிநாதையர் உரை – சிலர் அறிந்து கூறும் பழிமொழி.

Meanings:  பருவத் தேன் – perfect season’s honey, நசைஇ – loved (சொல்லிசை அளபெடை), பல் பறை தொழுதி – many swarming honeybees, உரவுத்திரை – strong waves, பொருத – attacking, திணி மணல் – filled with sand, அடைகரை – seashore filled with sand, seashore filled with water, நனைந்த புன்னை – wet laurel trees, Mast wood Tree, Calophyllum inophyllum, மாச்சினை – big branches, dark branches, தொகூஉம் – together (தொகூஉம் – இன்னிசை அளபெடை), மலர்ந்த பூவின் – with blossomed flowers, மா நீர் சேர்ப்பற்கு – for the lord of the ocean, இரங்கேன் தோழி – I have no pity my friend, ஈங்கு என் கொல் – what is happening here (கொல் – அசைநிலை), என்று – thus (you asking me in this manner), பிறர் பிறர் அறியக் கூறல் – saying this for others to know about it, அமைந்தாங்கு அமைக அம்பல் அஃது – they will gossip according to how they feel and let it be so (அஃது – பகுதிப்பொருள் விகுதி, an extension to basic form), எவன் – what will it do, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 176, வருமுலையாரித்தியார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
ஒரு நாள் வாரலன், இரு நாள் வாரலன்,
பல் நாள் வந்து, பணி மொழி பயிற்றி, என்
நன்னர் நெஞ்ச நெகிழ்த்த பின்றை,
வரை முதிர் தேனின் போகியோனே,
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன் கொல்லோ?  5
வேறு புலன் நல் நாட்டுப் பெய்த
ஏறுடை மழையின் கலிழும் என் நெஞ்சே.

Kurunthokai 176, Varumulaiyārithiyār, Kurinji Thinai – What the heroine’s friend said to her
He did not come just for one day;
he did not come just for two days;
but came many days and spoke kindly.

After softening my good heart,
he went away like a ripe honeycomb
on a mountain, that dropped down.

Where is he, our good lord who was of
support to us?
My heart is muddied like running
water from a rainstorm that fell
with thunder in a distant fine country.

Notes:  The heroine’s friend said this to the heroine, urging her to accept the hero who had pleaded his case to her many times.  தன்பால் பலமுறை வந்து குறை இரந்து செல்லும் தலைவனுக்கு இரங்கித் தோழி தலைவியிடம் ‘நீ அவனை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ எனக் கூறியது.   உ. வே. சாமிநாதையர் உரை – வரையில் முதிர்ந்த தேனடை தன்பால் உள்ள தேனை ஒருவருங் கொள்ளாது வீழ்ந்து கழிதல் போல, தன் மொழியை யாருங் கொள்ளாமையின் தலைவன் போயினான் என்ற உவமையை விரித்துக் கொள்க.  ஆசு ஆகு எந்தை ஆண்டு உளன் கொல்லோ – குறுந்தொகை 176-5, 325-4, புறநானூறு 235, 307.

Meanings:  ஒரு நாள் வாரலன் – he did not come just one day, இரு நாள் வாரலன் – he did not come just two days, பல் நாள் வந்து –  coming for many days, பணி மொழி பயிற்றி – uttering modest words, என் நன்னர் நெஞ்ச நெகிழ்த்த பின்றை – after he softened my good heart (நன்னர் – நல்ல), வரை – mountain, முதிர் தேனின் போகியோன் – he went away like ripe honey comb that dropped (தேனின் – இன் உருபு ஒப்புப் பொருளது), ஏ – அசைநிலை, an expletive, ஆசு ஆகு எந்தை – the man who supported us, யாண்டு உளன் கொல் – where is he (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), ஓ – அசைநிலை, an expletive, வேறு புலன் – different land, நல் நாட்டுப் பெய்த – rain falling on fine land, ஏறுடை – with thunder, மழையின் – like rain (இன் உருபு ஒப்புப் பொருளது), கலிழும் – it is muddied, it is distressed, என் நெஞ்சு – my heart, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 177, உலோச்சனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கடல் பாடு அவிந்து, கானல் மயங்கித்,
துறை நீர் இருங்கழி புல்லென்றன்றே,
மன்ற அம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை
அன்றிலும் பையென நரலும், இன்று அவர்
வருவர் கொல், வாழி தோழி, நாம் தன்  5
புலப்பினும், பிரிவு ஆங்கு அஞ்சித்,
தணப்பு அருங்காமம் தண்டியோரே.

Kurunthokai 177, Ulōchanār, Neythal Thinai – What the heroine’s friend said to her
Ocean sounds have died down;
seashore groves have become dark;
and dark backwaters with water and
shores appear dull.  The andril bird
that lives in the fronds of a beautiful
palmyra tree calls out softly.

May you live long, my friend!
Despite your sulking, he will come
today fearing separation,
the man who has love for you that is
difficult to remove.

Notes:  The heroine’s friend said this to her, when she became aware of the hero’s arrival.  தலைவனின் வரவு உணர்ந்து தோழி தலைவிக்கு உரைத்தது.  வருவர் கொல் – கலித்தொகை 11, நச்சினார்க்கினியர் உரை – வருவர் போல இருந்தது.  தண்டியோர் (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அமையப் பெற்றோர்.  அமைந்தோர், ‘தண்டாக் காமம்’ என்னும் அதன் எதிர்மறையானும் உணர்க.  தண்டியோர் என்பதற்கு ‘அலைத்தும் பெற்றோர்’ எனப் பொருள் கூறினார் உ. வே. சா ஐயரவர்கள்.  அவர் கருதியபடி கருதினும் காமத்தை அலைத்தோர் என்பதால் அலைத்தும் பெற்றோர் என்பதற்கு இடமின்மை அறிக.

Meanings:  கடல் – ocean, பாடு – sounds, அவிந்து – died down, கானல் – seashore grove, மயங்கி – day time with darkness, twilight time arriving, துறை – shores, நீர் – water, இருங்கழி – dark brackish waters, vast backwaters, புல்லென்றன்று – they appear to be dull, they appear to be sad, ஏ – அசைநிலை, an expletive, மன்ற – of the town’s common grounds, அம் பெண்ணை – beautiful female palmyra tree, Borassus flabellifer, மடல் சேர் வாழ்க்கை – living in the palmyra fronds, அன்றிலும் – the black ibis, also known as red-naped ibis, Pseudibis papillosa or glossy ibis – Plegadis falcinellus, பையென – slowly, நரலும் – cries out, இன்று அவர்  வருவர் – he will come today, கொல் – அசைநிலை, an expletive, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி  – my friend, நாம் தன் புலப்பினும் – despite your sulking, பிரிவு ஆங்கு அஞ்சி – afraid of separation, தணப்பு அரும் – difficult to remove, காமம் – love, தண்டியோர் – the man who possesses, the man who owns, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 178, நெடும்பல்லியத்தையார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
அயிரை பரந்த அம் தண் பழனத்து
ஏந்து எழில் மலர தூம்புடைத் திரள் கால்
ஆம்பல் குறுநர் நீர் வேட்டாங்கு, இவள்
இடை முலைக் கிடந்து நடுங்கல் ஆனீர்,
தொழுது காண் பிறையின் தோன்றி, யாம் நுமக்கு 5
அரியம் ஆகிய காலைப்
பெரிய நோன்றனிர், நோகோ யானே.

Kurunthokai 178, Nedumpalliyathaiyār, Marutham Thinai – What the heroine’s friend said to the hero
Lying between her breasts,
you trembled like the thirsting
flower-pickers, who pluck pretty
white waterlily blossoms with
hollow thick stems,
wading in the beautiful, cold pond
with ayirai fish, and are unable to
get drinking water.

In those days, meeting her secretly
was as rare as the crescent moon
that is seen and worshipped.
You tolerated a lot then.
I am hurt, thinking of your pain.

Notes:  The heroine’s friend who visited the couple in their marital house, asked the hero who was very much in love with his wife, how he tolerated separation during their secret love phase.  கடிநகர் புக்க தோழி, தலைவன் தலைவியின்பால் கொண்ட வேட்கையைக் கண்டு, ‘நீர் களவுக்காலத்தில் எவ்வாறு ஆற்றியிருந்தனரோ’ என இரங்கிக் கூறியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – களவுக் காலத்தில் பல இடையூறுகள் உண்மையின், பிறை போன்று இடையீற்றுக் காணப்படுவேமாய், ஏனைப் பொழுதில் காணப்படேமாய் இருந்தேமன்றே, அக்காணப்படாத போதெல்லாம் என் பட்டீரோ என்று இரங்கியவாறு.

Meanings:  அயிரை பரந்த அம் தண் பழனத்து – in the ayirai fish spread beautiful cool pond, நொய்ம்மீன், Loach fish, நொய்ம்மீன், Cobitio thermalis, ஏந்து எழில் – very beautiful, bearing beauty, raised and beautiful, மலர – blooming, தூம்புடைத் திரள் கால் ஆம்பல் – white waterlilies with tubular thick stems, குறுநர் – the pluckers, நீர் வேட்டாங்கு – like how they desired drinking water and were sad not getting it, இவள் இடை முலைக் கிடந்து – lying between her breasts (முலை இடை, முன்பின்னதாகத் தொக்கது), நடுங்கல் ஆனீர் – you trembled with love, தொழுது காண் பிறையின் – like the crescent moon that is worshipped and seen (பிறையின் – இன் உருபு ஒப்புப் பொருளது), தோன்றி – appearing, யாம் நுமக்கு அரியம் ஆகிய காலை – when it was difficult for you during the secret love period (களவு) to see us, பெரிய நோன்றனிர் – you tolerated greatly, நோகு – I am hurting, செய்கென்னும் தன்மை வினை, ஓ – அசைநிலை, an expletive, இரக்கக் குறிப்பு, implying pity, யான் – me, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 179, குட்டுவன் கண்ணனார், குறிஞ்சித் திணை  – தோழி தலைவனிடம் சொன்னது
கல்லென் கானத்துக் கடமா ஆட்டி,
எல்லும் எல்லின்று, ஞமலியும் இளைத்தன,
செல்லல் ஐஇய, உது எம் ஊரே,
ஓங்கு வரை அடுக்கத்துத் தீந்தேன் கிழித்த
குவை உடைப் பசும் கழை தின்ற கயவாய்ப்  5
பேதை யானை சுவைத்த
கூழை மூங்கில் குவட்டு இடை அதுவே.

Kurunthokai 179, Kuttuvan Kannanār, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
Your dogs are tired chasing bisons
in the noisy forest.  The day has ended.

Sir, please do not go!

Our town is between those peaks in the
tall mountain ranges, where dense clumps
of bamboo grow, tearing sweet, hanging
honey combs, and a big-mouthed naive
female elephant, chews tender bamboo
stalks and softens them.

Notes:  The heroine’s friend requested marriage when the hero came for a day tryst, on the pretext of urging the hero to come for night trysts.  பகல் வருவானை இரவுக்குறி நேர்ந்தாள் போன்று வரைவு கடாயது.  The hero visits the heroine during the daytime when he hunts bisons using his dogs.  The heroine’s friend requests him to stay for the night.  உ. வே. சாமிநாதையர் உரை – சொல்லல் என்றும் உது எம் ஊர் என்றும் கூறியதால், நீ போகாமல் எம்முடன் வந்து இரவில் தங்கிச் செல்வாயாக என்றாளாயிற்று.  இதனால் இடையறாது உடனுறைய வேண்டுமானால் தம் விருப்பத்தை உணர்த்தி, அங்ஙனம் இருத்தற்கு ஏற்ற நிலை வரைந்துகொண்டு இல்லறம் நடத்தலே என்பதை உய்த்துணர வைத்தாள்.  கய – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).  எல்லின்று (2) – உ. வே. சாமிநாதையர் உரை – மங்கியது,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இருளா நின்றது.  யானை சுவைத்த கூழை மூங்கில் (6-7) – உ. வே. சாமிநாதையர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – யானை தின்றதால் கூழையாகிய மூங்கில், தமிழண்ணல் உரை – சுவைத்து மிச்சமான குட்டை மூங்கில்.

Meanings:  கல்லென் கானத்து – in the noisy forest, கடமா ஆட்டி- chasing bisons, எல்லும் எல்லின்று – daytime has ended, it has become dark, ஞமலியும் இளைத்தன – the dogs are tired, செல்லல் – do not go, ஐஇய – sir (ஐஇய  – செய்யுளிசை அளபெடை), உது எம் ஊர் – that is our town, ஏ – அசைநிலை, an expletive, ஓங்கு வரை அடுக்கத்துத் தீந்தேன் – tall mountain ranges sweet honey combs, கிழித்த – tearing, குவை உடை – densely growing, பசும் கழை தின்ற – ate the tender bamboo shoots, Bambusa arundinacea, கயவாய்ப் பேதை யானை சுவைத்த – big-mouthed innocent elephant ate, கூழை மூங்கில் – softened bamboo, short bamboo, குவட்டு இடை – between the peaks, அது – that, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 180, கச்சிப்பேட்டு நன்னாகையார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
பழூஉப்பல் அன்ன பரு உகிர்ப் பா அடி
இருங்களிறு இன நிரை ஏந்தல் வரின் மாய்ந்து
அறை மடி கரும்பின் கண் இடை அன்ன
பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து
எய்தினர் கொல்லோ பொருளே, அல்குல்  5
அவ்வரி வாடத் துறந்தோர்
வன்பராக, தாம் சென்ற நாட்டே?

Kurunthokai 180, Kachipēttu Nannākaiyāar, Pālai Thinai What the heroine’s friend said to her
He left you, crossing the wasteland,
……….where a tall, bamboo stands
……….dry, like the parched spaces
……….between nodes of sugarcanes
……….that were broken by the leader
……….of a herd of big elephants with
……….wide feet with large nails that
……….resemble the teeth of ghouls,
causing the beautiful pallor spots on
your loins to fade.

Did he earn the wealth he sought in the
country he went?  He will return soon.

Notes:  The heroine’s friend consoled her stating that the hero will earn wealth and return on time.  பொருள்வயின் தலைவன் பிரிந்தானாக, ஆற்றாமை மிக்க தலைவியை ‘ வினை முற்றியபின் அவர் வருவார்.  நீ ஆற்றியிருக்க வேண்டும்’ என வற்புறுத்தியது.  கரும்பின் கண் இடை அன்ன (3) – கரும்பின் கணுக்களின் இடையே உள்ள பகுதியைப் போன்று, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கரும்புகளின் இடையே மாயாது நின்ற ஒற்றைக் கரும்பு போல, இடை ஆகுபெயர், கண் ஏழாவதானுருபு, தமிழண்ணல் உரை – கரும்பின் இரு கணுக்களுக்கு இடைப்பட்ட பகுதியைப் போன்று.   பைதல் (4) – உ. வே. சாமிநாதையர் உரை – வருந்துதலுடைய, இரா. இராகவையங்கார் உரை – வருந்திய.  இரா. இராகவையங்கார் உரை – களிற்று இன நிரையிற் தப்பி ஒரு கழை நீடியது போல அவ்வரி வாடத் துறந்தோர் இடையூறுகளிற் தப்பிப் பொருள் எய்தி நீடுதல் குறித்தாள்.

Meanings:  பழூஉ பல் அன்ன – like the teeth of the ghoul, பரு உகிர் – big nails, பா அடி – wide feet, இருங்களிறு – big elephants, இன நிரை – herd, ஏந்தல் வரின் – if the leader comes, மாய்ந்து – ruined, அறை – பாத்தி, patch of a field, மடி – dropped, ruined, கரும்பின் – of the sugarcane, கண் இடை அன்ன – like between the nodes, பைதல் – sad, parched, ஒரு கழை – single bamboo, Bambusa arundinacea, நீடிய – tall, சுரன் இறந்து – crossing the wasteland (சுரன் – சுரம் என்பதன் போலி), எய்தினர் கொல் – did he attain (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), ஓ – அசைநிலை, an expletive, பொருள் – the wealth that he sought, ஏ – அசைநிலை, an expletive, அல்குல் – loins, அவ்வரி வாட – beautiful pallor spots to fade, துறந்தோர் – your man who left you, வன்பராக – with a strong heart, தாம் சென்ற நாட்டு – to the country he went, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 181, கிள்ளிமங்கலம் கிழார், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
இது மற்று எவனோ தோழி, துனி இடை
இன்னர் என்னும் இன்னாக் கிளவி,
இரு மருப்பு எருமை ஈன்ற அணிக் காரான்
உழவன் யாத்த குழவியின் அகலாது
பாஅல் பைம்பயிர் ஆரும் ஊரன்,  5
திரு மனைப் பல கடம் பூண்ட
பெரு முது பெண்டிரேம் ஆகிய நமக்கே?

Kurunthokai 181, Killimangalam Kizhār, Marutham Thinai – What the heroine said to her friend
My friend!  Of what use are such
angry words at this sad time,
about my husband from the town
where a big-horned, beautiful female
buffalo that gave birth recently grazes
on nearby tender plants, not straying
away from her calf tied by the farmer?

We are mature women who have taken
on responsibilities in this rich house.

Notes:  The heroine said this to her friend who talked ill of her husband who returned from his concubine.  தலைவன் பரத்தையிற் பிரிந்த பொழுது, அவனைப் பழித்து பேசிய தோழியைக் கடிந்து கூறியது.  உ. வே. சாமிநாதையர் உரை – எருமை கட்டப்பட்ட தன் குழவியினின்றும் அகலாமல் அருகிலே உள்ள பயிரை ஆரும் ஊரன் என்றது, தலைவன் இல்லின்கண் உறையும் தலைவிபாற் கொண்ட அன்பு குறையாமல் தனக்கு வேண்டிய இன்பத்தை அருகில் உள்ளார்பாற் பெறுகின்றான் என்னும் குறிப்பை புலப்படுத்துவது.  இது (1) – உ. வே. சாமிநாதையர் உரை – செய்யுளாகலின் சுட்டு முன் வந்தது.  உள்ளுறை – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – அணிமையில் மகப்பெற்ற நாமும், அம்மகவு தங்கிய மனையைவிட்டு அகலாது அவன் தந்தவற்றை விரும்பி நுகர்ந்து தங்கல் வேண்டுமென உள்ளுறை முகத்தான் இயற்பட மொழிந்தாளாம்.  காரான் (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கார் ஆன், பெண்மை சுட்டிய பெயராகலின் எருமைக் காரான் என்றாள்.  பெற்றமும் எருமையும் மரையும் ஆவே (தொல்காப்பியம், மரபியல் 60).  ஆன் – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – னகர மெய் சாரியை.  குழவி – யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய.  எருமையும் மரையும் வரையார் ஆண்டே.  கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே.  ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும்.  குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை.  ஆவும் எருமையும் அது சொலப்படுமே (தொல்காப்பியம், மரபியல் 15-20).

Meanings:  இது – this, மற்று – அசைநிலை, an expletive, எவன் – why, what is the use, ஓ – அசைநிலை, an expletive, தோழி – my friend, துனி இடை – at this estrangement time, at this sad time, இன்னர் என்னும் – that he is such, இன்னாக் கிளவி – harsh words, இரு மருப்பு – big horns, எருமை – buffalo, ஈன்ற அணிக் கார் ஆன் – beautiful dark female buffalo that gave birth, உழவன் – farmer, யாத்த – tied, குழவியின் அகலாது – not moving away from her calf, பாஅல் – nearby (இசை நிறை அளபெடை), பைம்பயிர் – tender plants, ஆரும் – she grazes, ஊரன் – man from such town, திரு மனை – rich home, பல கடம் பூண்ட – having undertaken many responsibilities, பெரு முது பெண்டிரேம் ஆகிய நமக்கு – for us who are older mature women, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 182, மடல் பாடிய மாதங்கீரனார், குறிஞ்சித் திணை  – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது, தோழி கேட்கும்படியாக
விழுத்தலைப் பெண்ணை விளையல் மாமடல்
மணி அணி பெருந்தார் மரபின் பூட்டி,
வெள் என்பு அணிந்து, பிறர் எள்ளத் தோன்றி,
ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீக்கித்
தெருவின் இயலவும் தருவது கொல்லோ,  5
கலிழ்ந்து அவிர் அசை நடைப் பேதை
மெலிந்திலள், நாம் விடற்கு அமைந்த தூதே?

Kurunthokai 182, Madal Pādiya Māthankeeranār, Kurinji Thinai – What the hero said to his heart, as the heroine’s friend listened nearby
I will adorn this madal horse,
created from mature, big fronds
of palmyra trees with splendid
tops, with bells and big garlands,
according to tradition.

I will also wear a white bone
necklace on that day, losing my
shame and demeaning myself
as people on the streets tease me.

Will it give me the dazzling, naive
young woman of delicate walk,
who does not melt for me?
This would be the best way
for me to send a message to her.

Notes:  What the hero said to his heart when the heroine’s friend refused to honor his plea to meet with the heroine.  தன் குறையை தோழி மறுத்தாளாக ‘இனி நான் மடலேறுவேன்’ என்று தலைவன் தன் நெஞ்சிடம் உரைத்தது.  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).  மடல் ஏறுதல் – சங்க இலக்கியத்தில் மொத்தம் 16 பாடல்களில் மடல் ஏறுதல் பற்றிய குறிப்புகள் உள்ளன – குறுந்தொகை 14, 17, 32, 173, 182, நற்றிணை 146, 152, 220, 342, 377, கலித்தொகை 58, 61, 138, 139, 140, 141.  கலித்தொகை 138, 139, 140, 141 பாடல்களில் மட்டுமே தலைவன் மடல் குதிரையின் மீது செல்கின்றான்.  கலித்தொகை 138, 141 ஆகிய பாடல்களில் மடல் ஏறியதால் தலைவியை அடைந்ததாக அறிவிக்கின்றான்.

Meanings:  விழுத்தலை – excellent top, பெண்ணை – female palmyra tree, Borassus flabellifer, விளையல் – mature, மா மடல் – huge palm leaf, huge palm stem, மணி அணி – adorned with bells, பெருந்தார் – big garland, மரபின் – according to tradition, பூட்டி – wore, tied, வெள் என்பு – white bones, அணிந்து – wearing, பிறர் எள்ளத் தோன்றி – appearing as others tease, ஒரு நாள் மருங்கில் – on a day, பெரு நாண் நீக்கி – removing my great modesty, shaming myself greatly, தெருவின் இயலவும் – going on the streets, riding on the streets (இயலவும் – உம்மை இழிவு சிறப்பு), தருவது கொல் – will it give (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), ஓ – அசைநிலை, an expletive, கலிழ்ந்து – shining, அவிர் – bright, அசை நடைப் பேதை – the young woman with a swaying walk, மெலிந்திலள் – she does not melt for me, she does not soften for me, நாம் விடற்கு அமைந்த தூது- this is a fitting message for me to send (நாம் – தன்மைப் பன்மை, first person plural), ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 183, ஔவையார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
சென்ற நாட்ட கொன்றையம் பசு வீ
நம் போல் பசக்குங்காலைத் தம் போல்
சிறுதலைப் பிணையின் தீர்ந்த நெறி கோட்டு
இரலை மானையும் காண்பர் கொல், நமரே
புல்லென் காயாப் பூக்கெழு பெருஞ்சினை  5
மென் மயில் எருத்தின் தோன்றும்,
கான வைப்பின் புன்புலத்தானே?

Kurunthokai 183, Avvaiyār, Mullai Thinai – What the heroine said to her friend
In this season when the new flowers
of kondrai are as yellow as my pallor,
in the country that he went,
will my man see a stag with twisted
antlers separated from its mate with
a small head in the dry forest,
where long branches of parched kāyā
trees are laden with blossoms looking
like the necks of delicate peacocks?

No!  He will not!  He will come back
soon on seeing the signs of the season.

Notes:  Ther heroine, who noticed signs of the rainy season, said this to her friend who worried about her.  கார்ப்பருவம் வரவும் தலைவன் வராமையால் தலைவி ஆற்றாளென்று வருந்திய தோழியிடம், தலைவி, கார்காலத்தின் அடையாளங்களைக் கண்டு அவர் என்னை நினைந்து வருவார்’ எனக் கூறியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – கார்ப் பருவத்தின் முன்னர்ச் சென்ற முதுவேனிலின் வெம்மையால் உலர்ந்த புற்கென்ற காயா, இப்போது மயில் எருத்துப் போல மலர்ந்தன என்பாள் ‘புல்லென் காயாப் பூக்கெழு பெருஞ்சினை’.  பிணையின் தீர்ந்த (3) – கார் காலத்தே புன்புல வைப்பிற் புல் அருந்தி ஆணும் பெண்ணுமாகத் துள்ளியாடும் இணைமானைக் காண்பரன்றி பிணைப் பிரிந்த மானைக் காணல் இயலாதாகலின், ‘காண்பர் கொல்’ என்பர், காணமாட்டார் என்னும் பொருள் பயந்து, இணைமானையே காண்பர், காணுங்கால் நம்மை நினைத்து மீள்வர் என்னும் குறிப்புப் பொருளையும் தந்து நின்றது.

Meanings:  சென்ற நாட்ட – in the country that he went, கொன்றை – சரக் கொன்றை, Indian laburnum, golden shower tree, Cassia Fistula, அம் – beautiful, பசு வீ – fresh flowers, நம் போல்   பசக்கும் காலை – when they become yellow like the pallor on my skin, தம் போல் – like him, சிறுதலை – small head, பிணையின் – its female, தீர்ந்த – moved away, separated, நெறி கோட்டு –  twisted antlers (நெறி கோட்டு – வினைத்தொகை), இரலை மானையும் – the male deer, காண்பர் கொல் நமரே – will my man see them (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), புல்லென் – dull, dried, wilted, காயாப் பூ – kāyā flowers (that are purplish blue), Ironwood tree,  Memecylon edule, கெழு – filled, பெருஞ்சினை – big branches, மென் மயில் – delicate peacock, எருத்தின் தோன்றும் – looking like the peacock neck (எருத்தின் – இன் உருபு ஒப்புப் பொருளது), கான வைப்பின் – in the forest, புன்புலத்தான் – in the mullai land, in the dry land, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 184, ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன், நெய்தற் திணை, தலைவன் தோழனிடம் சொன்னது
அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை,
குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே,
இதற்கு இது மாண்டது என்னாது, அதன் பட்டு
ஆண்டு ஒழிந்தன்றே மாண் தகை நெஞ்சம்,
மயில் கண் அன்ன மாண் முடிப் பாவை  5
நுண் வலைப் பரதவர் மடமகள்,
கண் வலைப்படூஉம் கானலானே.

Kurunthokai 184, Ārya Arasan Yāzh Piramathathan, Neythal Thinai – What the hero said to his friend
My friend!  The wise do not lie about
what they know.

Avoid going to that small village.
My very esteemed heart stays there,
losing judgement, caught by the eyes
of a doll-like, delicate young woman,
daughter of fishermen owning nets
made with fine thread, whose beautiful
hair is like peacock plumes with eyes.

Notes:  The hero said this to his friend who chastised him.  தன்னை இடித்துரைத்த நண்பனிடம் தலைவன் கூறியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – மாண்தகை நெஞ்சம் என்றான், அவளைக் காணுமுன்பெல்லாம் ‘தக்க இன்ன தகாதன இன்ன’ என்று ஆராயும் மாண்புடைய நெஞ்சமே யானும் உடையேன்.    நுண் வலை (6) – உ. வே. சாமிநாதையர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – நுண்ணிய நூலாயான வலை.  This is the only poem written by this northern king.  The legend is that the long Pathupāttu song, Kurinjippāttu, was written by Kapilar for this king, to explain Thamizh love and marriage traditions.

Meanings:  அறிகரி – known truths, witnessed truths, பொய்த்தல் – telling lies, ஆன்றோர்க்கு இல்லை – the wise do not do that, குறுகல் ஓம்புமின் – protect yourself from going near, you avoid going near (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), சிறுகுடி செலவு – going to the small village, going to the small settlement, ஏ – அசைநிலை, an expletive, இதற்கு – for this, இது மாண்டது – this is what is suited with esteem, என்னாது – without considering, அதன் பட்டு – it got caught ( by her eye net), ஆண்டு ஒழிந்தன்று – it has stayed there, ஏ – அசைநிலை, an expletive, மாண் தகை நெஞ்சம் – my very esteemed heart, மயில் கண் அன்ன – like peacock plume eyes (the round patterns in the plumes), மாண் முடி பாவை – the doll-like young woman with splendid hair, the statue-like young woman with lovely hair, நுண் வலை – net made with thin thread, பரதவர் – fishermen, மடமகள் – delicate daughter, கண் வலைப்படூஉம் – you will get caught in her eye net (வலைப்படூஉம் – இன்னிசை அளபெடை), கானலான் – in the seashore grove, on the seashore, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 185, மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
‘நுதல் பசப்பு இவர்ந்து, திதலை வாடி,
நெடு மென் பணைத்தோள் சாஅய்த், தொடி நெகிழ்ந்து,
இன்னள் ஆகுதல், நும்மின் ஆகும்’ எனச்
சொல்லின் எவனாம் தோழி, பல் வரிப்
பாம்பு பை அவிந்தது போலக் கூம்பிக்  5
கொண்டலின் தொலைந்த ஒண் செங்காந்தள்
கல் மிசைக் கவியும் நாடற்கு, என்
நல் மா மேனி அழிபடர் நிலையே?

Kurunthokai 185, Mathurai Aruvai Vānikan Ilavēttanār, Kurinji Thinai – What the heroine said to her friend
What if you go and tell the man
from the country,
……….where eastern winds scatter
……….and carpet the rocks with
……….bright, red kānthal flowers
……….that look like shrunk hoods
……….of snakes with many stripes,
that the paleness on my forehead has
spread, the spots on my body have faded,
my long, delicate, thick arms have become
thin, and my bangles have become loose?

What harm could come if you go and tell
him about my great distress, O friend?

Notes:  The heroine, who had become thin, said this to her friend who worried about her.  தலைவன் இருளில் ஏதம் மிக்க வழியில் வருவதை அஞ்சி உடல் மெலிந்த தலைவியைத் தோழி ‘ஏன் வருந்துகின்றாய்?’ என வினவ, ‘நான் வேறுபட்டது எதனால் என்று அவனிடம் கூறு’ என்று தலைவி உரைத்தது.  இரா. இராகவையங்கார் உரை – கொண்டலிற் கூம்பித் தொலைந்த காந்தள் என்றது இரவுக்குறி வந்து ஒழுகா நின்ற நிலையில் அதனாலே வாடும் தன்னைக் குறித்ததாம். அழிபடர் நிலை வாடிய பின்னை நிலைக்கும் கொள்க.  ஈண்டு பாம்பு பையவிதல் தோழியின் வாட்டமாக நினையலாம்.  உள்ளுறை – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – மாரியால் விளக்கமற்ற காந்தள் மலையிற் கவிந்து தங்கினாற்போல், நாடன் களவிடைக் கூட்டத்தால், வாட்டமடைந்த யான் நின்னைப் பற்றுக்கோடாக் கொண்டு உயிர் வாழ்கின்றேன் என்பதாம்.

Meanings:  நுதல் பசப்பு இவர்ந்து – forehead’s paleness has spread, திதலை வாடி – spots have faded, நெடு – long, மென் – delicate, பணைத்தோள் – bamboo-like arms, thick arms, சாஅய் – have slimmed (இசை நிறை அளபெடை), தொடி நெகிழ்ந்து –  bangles became loose, இன்னள் ஆகுதல் – this is how she has become, நும்மின் ஆகும் எனச் சொல்லின் எவனாம்- what if you tell him ‘it is because of you’, தோழி – O friend, பல் வரிப் பாம்பு – snake with many stripes, பை அவிந்தது போல – like the shrunk hood, கூம்பி – become shrunk and pointed, கொண்டலின் தொலைந்த – ruined by the eastern winds, scattered by the eastern winds, ஒண் செங்காந்தள் – bright red glory lilies, Gloriosa superba, கல் மிசைக் கவியும் – they drop on the rocks, நாடற்கு – for the man from such country, என் நல் மா மேனி – my fine dark body, அழிபடர் நிலை – the situation with great sorrow, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 186, ஒக்கூர் மாசாத்தியார், முல்லைத் திணை, – தலைவி தோழியிடம் சொன்னது
ஆர்கலி ஏற்றொடு கார் தலைமணந்த
கொல்லைப் புனத்த முல்லை மென் கொடி
எயிறு என முகைக்கு நாடற்குத்,
துயில் துறந்தனவால் தோழி, என் கண்ணே.

Kurunthokai 186, Okkūr Māsāthiyār, Mullai Thinai – What the heroine said to her friend
My eyes have abandoned sleep,
my friend,
because of the man from the country,
where along with roaring thunder,
heavy rains pour in the delicate forests,
where mullai buds on tender vines
appear like teeth.

Notes:  The heroine aid this on noticing signs of the rainy season.  பருவங் கண்டு தலைவி கூறியது.  பற்களைப் போன்ற அரும்பு:  குறுந்தொகை 126 – முல்லைத் தொகு முகை இலங்கு எயிறாக, குறுந்தொகை 162 – சிறு வெண்முகையின் முறுவல் கொண்டனை, குறுந்தொகை 186 – முல்லை மென் கொடி எயிறு என முகையும், நற்றிணை 316 – மௌவல் நலம்வரக் காட்டி கயல் ஏர் உண்கண் கனங்குழை இவை நின் எயிறு ஏர் பொழுதின் ஏய் தருவேம் என, கலித்தொகை 27 – மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்ப.  கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).

Meanings:  ஆர்கலி ஏற்றொடு – with very loud thunder, கார் தலைமணந்த – rain clouds rained and mixed (தலை – அசைநிலை, an expletive), கொல்லை புனத்த – in the woodlands, in the forests, முல்லை மென் கொடி – delicate jasmine vines, Jasminum sambac, எயிறு என முகைக்கு – have put out buds that appear like teeth (முகைக்கு – முகைக்கும்), நாடற்கு – because of the man from such country, துயில் துறந்தனவால் – they have abandoned sleep (துறந்தனவால் – ஆல் அசைநிலை, an expletive), தோழி – O friend, என் கண் – my eyes, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 187, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
செவ்வரைச் சேக்கை வருடை மான் மறி
சுரை பொழி தீம் பால் ஆர மாந்திப்
பெருவரை நீழல் உகளும் நாடன்,
கல்லினும் வலியன் தோழி,
வலியன் என்னாது, மெலியும் என் நெஞ்சே.  5

Kurunthokai 187, Kapilar, Kurinji Thinai – What the heroine said to her friend
The man from the country
……….where a mountain goat kid
……….drinks its mother’s abundant,
……….sweet milk to the full,
……….and romps around in the
……….steep mountain’s shade,
is tougher than rock, my friend.

My heart is suffering,
not considering that he is strong.

Notes:  The heroine praised her lover, responding to her friend who blamed him for delaying his arrival after leaving to earn wealth.  வரைப்பொருட்குப் பிரிந்த தலைவன் நீட்டித்ததால் அவனைக் குறைக் கூறிப் பழித்தாள் தோழி.  தலைவி அவள் கூற்றை மறுத்துத் தலைவனைப் புகழ்ந்தது.  உ. வே. சாமிநாதையர் உரை – வருடையின் மறி பாலை ஆர மாந்தி வரை நிழலில் உகளும் நாடன் என்றது, தலைவன் வரைதற்குரிய பொருள் நிரம்பப் பெற்று ஈண்டு வந்து வரைந்து கொண்டு இல்லறம் நடத்துவான் என்ற குறிப்பையுடையது.  மறி – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1).

Meanings:  செவ்வரை – beautiful mountain, perfect mountain, steep mountain, சேக்கை – staying there, living there, வருடை மான் மறி – a mountain goat kid, சுரை பொழி தீம் பால் – sweet milk secreted by its mother’s udder, ஆர மாந்தி – drinks it fully, பெருவரை நீழல் – tall mountain shade (நீழல் – நிழல் என்பதன் நீட்டல் விகாரம்), உகளும் – it romps around, நாடன் – the man from such country, கல்லினும் வலியன் தோழி – he is tougher than a rock my friend, வலியன் என்னாது – not considering that he is strong, மெலியும் என் நெஞ்சு – my heart is moved, my heart is weakened, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 188, மதுரை அளக்கர் ஞாழர் மகனார் மள்ளனார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
முகை முற்றினவே முல்லை, முல்லையொடு
தகை முற்றினவே, தண் கார் வியன் புனம்,
வால் இழை நெகிழ்த்தோர் வாரார்,
மாலை வந்தன்று, என் மாண் நலம் குறித்தே.

Kurunthokai 188, Mathurai Alakkar Gnālar Makanār Mallanār, Mullai Thinai – What the heroine said to her friend
Mullai buds have blossomed
on vines, and vast woodlands
flourish in this cool rainy season,
along with mullai flowers.

The man who made my fine jewels
to slip down has not come back.
Evening time has arrived to attack
my perfect beauty.

Notes:  The heroine said this to her friend on seeing signs of the rainy season.  பருவங்கண்டு தலைவி கூறியது.

Meanings:  முகை – buds, முற்றின – they have matured, ஏ – அசைநிலை, an expletive, முல்லை – jasmine, Jasminum sambac, முல்லையொடு – along with the jasmine flowers, தகை – splendidly, beautifully, முற்றின – they flourish, ஏ – அசைநிலை, an expletive, தண்கார் – the cold season, வியன் புனம் – vast mullai land, வால் – pure, இழை – jewels, நெகிழ்த்தோர் – the one who made my jewels slip down, வாரார் – he has not come, மாலை வந்தன்று – evening time has come, என் மாண் நலம் – my perfect beauty, குறித்து – aiming, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 189, மதுரை ஈழத்துப் பூதன்தேவனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
இன்றே சென்று, வருவது நாளைக்
குன்று இழி அருவியின் வெண்தேர் முடுக,
இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி
விசும்பு வீழ் கொள்ளியின் பைம்பயிர் துமிப்பக்
கால் இயல் செலவின், மாலை எய்திச்  5
சில் நிரை வால் வளைக் குறுமகள்
பன் மாண் ஆகம் மணந்து உவக்குவம்மே.

Kurunthokai 189, Mathurai Eezhathu Poothanthēvanār, Mullai Thinai – What the hero said to his charioteer
Let us leave today and return
tomorrow riding the white chariot
that moves as fast as a waterfall
flowing from a mountain,
……….its wheels splendid and gleaming
……….like the crescent moon, whirling as
……….fast like the wind, ruining lush
……….plants like the shooting stars falling
……….from the sky that ruin plants,
so that I can reach home by evening,
and embrace the chest of the young
woman wearing few rows of white
bangles, and rejoice in her embraces.

Notes:  The hero who had left on his king’s business, said this to his charioteer, when he was ready to start his return journey.  அரசனால் வினையின்கண் ஏவப்பட்ட தலைவன், தன் தேர்ப்பாகனை நோக்கிக் கூறியது.  அகநானூறு 254 – நெடுந்தேர் ஆழி உறுப்ப நுண் கொடி மின்னின் பைம்பயிர் துமிய.  உ. வே. சாமிநாதையர் உரை – நேமி போகும்பொழுது மண்ணில் புதைந்த பகுதி போக எஞ்சிய பகுதியே வெளியில் தெரியுமாதலின் அப்பகுதிக்குப் பிறை உவமையாயிற்று.  விசும்பினின்றும் வீழும் கொள்ளியினால் பயிர் துமிர்தலைப் போல நேமியால் துமிந்தது.

Meanings:  இன்றே – today (ஏ – பிரிநிலை, exclusion), சென்று – going, வருவது நாளை – come back tomorrow (வருவது – வியங்கோள், command), குன்று இழி அருவியின் – like the waterfalls flowing down the mountains (அருவியின் – இன் உருபு ஒப்புப் பொருளது), வெண்தேர் முடுக – riding the white chariot fast, இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி – like the crescent moon are the bright gleaming wheels, விசும்பு வீழ் கொள்ளியின் – like falling stars from the sky (கொள்ளியின் – இன் உருபு ஒப்புப் பொருளது), பைம்பயிர் துமிப்ப – chopping green plants, கால் இயல் செலவின் – with the speed of the wind, riding like the wind, மாலை எய்தி – reaching home at evening time, சில் நிரை – few rows, வால் வளை – white bangles, குறுமகள் பன் மாண் ஆகம் – the young woman’s esteemed chest, the young woman’s esteemed body, மணந்து உவக்குவம் – I will embrace her and be happy, I will unite with her and be happy, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 190, பூதம்புல்லனார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நெறி இருங்கதுப்பொடு பெருந்தோள் நீவிச்
செறி வளை நெகிழச் செய் பொருட்கு அகன்றோர்,
அறிவர் கொல், வாழி தோழி, பொறி வரி
வெஞ்சின அரவின் பைந்தலை துமிய
உரவுரும் உரறும் அரை இருள் நடுநாள்,  5
நல் ஏறு இயங்குதொறு இயம்பும்
பல் ஆன் தொழுவத்து ஒரு மணிக் குரலே.

Kurunthokai 190, Poothampullanār, Mullai Thinai – What the heroine said to her friend
May you live long, O friend!
Will he who stroked my wavy,
black hair and wide arms,
and caused my stacked bangles,
to slip down as he departed to
earn wealth,
……….know about the tinking of a
……….single bell whenever a fine
……….bull moves in a stable with
……….many cows,
in the middle of the night,
when thunder rumbles, cutting
off the green heads of snakes?

Notes:  The heroine said to his friend, when she was unable to bear separation from her lover who had gone to earn wealth.  தலைவன் பொருள் ஈட்டும் பொருட்டுப் பிரிந்த காலத்தில் ஆற்றாளாகிய தலைவி தோழிக்குச் சொல்லியது.  பைந்தலை (4) – உ. வே. சாமிநாதையர் உரை – பசிய தலை, தமிழண்ணல் உரை – பசுமையான படமுள்ள தலை.  There is a convention that thunder ruins and kills snakes.  Akanānūru 92, 119, 182, 202, 274, 323, 328, Kalithokai 45, 113, Kurunthokai 158, 190, 268, 391 and Natrinai 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, Puranānūru 17, 37, 58, 126, 211, 366 and 369 have similar descriptions of thunder ruining or killing snakes.  இயங்குதொறு – குறுந்தொகை 279 – திரி மருப்பு எருமை இருள் நிறம் மை ஆன் வருமிடறு யாத்த பகுவாய்த் தெண் மணி புலம்புகொள் யாமத்து இயங்குதொறும் இசைக்கும்.

Meanings:  நெறி இருங்கதுப்பொடு – with wavy black hair, with perfect thick hair, பெருந்தோள் நீவி – stroked my large shoulders, செறி வளை நெகிழ செய்- tight bangles to slip, stacked bangles to slip, பொருட்கு அகன்றோர் – one who parted to earn wealth, அறிவர் கொல் – does he know (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – O friend, பொறி வரி வெஞ்சின அரவின் – of very angry snakes with spots and lines, பைந்தலை துமிய – their heads with hoods to be cut off, their green heads to be cut off, உரம் உரும் உரறும் – roaring loud thunder, அரை இருள் நடுநாள் – in the middle of the night, நல் ஏறு இயங்குதொறு – whenever the fine bull moves, இயம்பும் – it rings, பல் ஆன் தொழுவத்து – in the stable with many cows, ஒரு மணிக் குரல் – the tinkling sound of one bell, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 191, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
உதுக்காண் அதுவே! இது என் மொழிகோ,
நோன் சினை இருந்த இரு தோட்டுப் புள்ளினம்
தாம் புணர்ந்தமையின் பிரிந்தோர் உள்ளா
தீங்குரல் அகவக் கேட்டு நீங்கிய
ஏதிலாளர் இவண் வரின், ‘போதின்  5
பொம்மல் ஓதியும் புனையல்,
எம்மும் தொடாஅல்’ என்குவெம் மன்னே.

Kurunthokai 191, Unknown poet, Mullai Thinai – What the heroine said to her friend
Look at this!
What I can tell you is that,
even though he listened
to the sweet calls
of the huge flocks of birds
……….on the thick branches,
……….that are unconcerned
……….about those separated,
he still parted, that stranger.

If he comes back here, I will tell
him, “Do not touch me or adorn
my luxuriant hair with flowers”.

Notes:  The heroine said this to her friend who worried about her when the hero was away.  பிரிவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குத் தலைவி உரைத்தது.  உ. வே. சாமிநாதையர் உரை – ஏதிலாளர் என்று பன்மையால் கூறியவள் பின் புனையல், தொடாஅலென ஒருமையால் கூறினாள் தன் உள்ளத்தெழுந்த செறல் பற்றி.  மன் – கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

Meanings:  உதுக்காண் அதுவே – look there, look at this (உது – இடைச்சுட்டு), ஏ – அசைநிலை, an expletive, இது என் மொழிகோ – what can I say this is (மொழிகு – தன்மை ஒருமை வினைமுற்று, first person singular verb ending, + ஓ – அசைநிலை, an expletive), நோன் சினை இருந்த – on the strong tree branches, இரு தோட்டுப் புள்ளினம் – huge flocks of birds, தாம் புணர்ந்தமையின் – since they united with their mates, பிரிந்தோர் – the one who is separated, உள்ளா – not thinking, தீங்குரல் அகவக் கேட்டு – even after hearing their sweet calls, நீங்கிய ஏதிலாளர் – the parted stranger (the hero), இவண் வரின் – if he comes here, போதின் – with flowers, பொம்மல்  ஓதியும் புனையல் – do not decorate my luxuriant hair, do not decorate my splendid hair (புனையல் – முன்னிலை ஒருமை), எம்மும் தொடாஅல் – do not touch me (எம் – தன்மைப் பன்மை, first person plural, தொடாஅல் – இசை நிறை அளபெடை, முன்னிலை ஒருமை), என்குவெம் – I will say so (தன்மைப் பன்மை, first person plural), மன் – அசைநிலை, an expletive, மிகுதிக் குறிப்பு, signifying abundance, ஏ – ஈற்றசை

குறுந்தொகை 192, கச்சிப்பேட்டு நன்னாகையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
ஈங்கே வருவர் இனையல் அவர் என
அழாஅற்கோ இனியே, நோய் நொந்து உறைவி
மின் இன் தூவி இருங்குயில் பொன்னின்
உரை திகழ் கட்டளை கடுப்ப மாச் சினை
நறும்தாது கொழுதும் பொழுதும்,  5
வறுங்குரல் கூந்தல் தைவருவேனே.

Kurunthokai 192, Kachipēttu Nannākaiyār, Pālai Thinai – What the heroine said to her friend
O friend!  How can I stay
without crying because you
tell me, “You who is in pain!
Do not worry.  He will come
back?”

In this early spring season,
when a black kuyil with sweet
glittery feathers that appear
like touchstone on which gold
is rubbed, sits on a mango tree
branch and pecks the fragrant
flower pollen,
I will massage my hair that has
not been adorned since he has
come.

Notes:  The heroine said this to her friend who comforted her when the hero was away.  தலைவன் பிரிந்த காலத்தில் ‘நீ ஆற்றியிருக்க வேண்டும்’ என்று கூறிய தோழியிடம் தலைவி உரைத்தது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – குயிலின் தூவி உரைகல் போன்று மின்னும் என்றது, பூந்தாது படியும் பொழுது குயில் பொன்னிறம் பெறினும் அந்நிறம் அதன் நிறமன்று; அது பறக்கும்போது உதிர்ந்துவிட எப்பொழுதும் கருங்குயிலாதலே இயல்பு.  அதுபோல நினது வன்புறைச் சொற்கள் கேட்கும்பொழுது யான் சிறிது ஆற்றுவேன் போலக் காணப்படுகின்றேன்.  பின்னர் உன் உரை மறைந்துவிட என் நெஞ்சின்கண் இயல்பாயுள்ள துன்பமே வெளிப்படுகின்றது.  யான் அழாது என்ன செய்வேன் என்னும் குறிப்பு.  அழாஅற்கு (2) – உ. வே. சாமிநாதையர் உரை – தன்மை ஒருமை, எதிர்மறை முற்றுவினை, அழுகென்னும் உடம்பாட்டின் எதிர்மறை.  அழேன் என்னும் பொருளது.  ஓகார வினாவுடன் சேர்ந்து அழேனோ என்னும் பொருளாயிற்று, பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழாமல் அமைவேனா, தமிழண்ணல் உரை – அழாமல் அமைவேனா.

Meanings:  ஈங்கே வருவர் இனையல் அவர் என – ‘do not worry, he will come here’ you say, அழாஅற்கோ –  will I not cry, will I be without crying (ஓ – அசைநிலை, an expletive), இனி – now, ஏ – அசைநிலை, an expletive, நோய் நொந்து உறைவி – O friend who lives in distress, மின் இன் தூவி – shining sweet feathers (glittering with pollen), இருங்குயில் – black cuckoo, Asian Koel, Eudynamys scolopaceus, the male bird has black feathers and the female has brown feathers with white and light brown spots, பொன்னின் உரை – rubbing on gold, திகழ் – shining, கட்டளை – touchstone (stone used to test gold), கடுப்ப – like (உவம உருபு, a comparison word), மாச்சினை – mango branches, நறுந்தாது – fragrant flower pollen, கொழுதும் – pecks, பொழுதும் – at this time, in this season (early spring), வறுங்குரல் கூந்தல் – unadorned thick hair, தைவருவேன் – I will massage, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 193, அரிசில் கிழார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
மட்டம் பெய்த மணிக் கலத்து அன்ன,
இட்டு வாய்ச் சுனைய பகுவாய்த் தேரை
தட்டைப் பறையின் கறங்கு நாடன்,
தொல்லைத் திங்கள் நெடு வெண்ணிலவின்
மணந்தனன் மன் நெடுந்தோளே,  5
இன்று முல்லை முகை நாறும்மே.

Kurunthokai 193, Arisil Kizhār, Mullai Thinai – What the heroine said to her friend
The man from the country,
……….where toads with gaping mouths
……….croak like the bamboo gadget
……….’thattai’ in small-mouthed
……….springs that are like sapphire
……….colored jars filled with liquor,
embraced my long arms in the past
under that huge moon.  Even now
the scent of mullai buds is upon them.

Notes:  The heroine’s friend who visited the couple in their marital house, praised the heroine for waiting patiently for the hero when he was away.  தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்ற தோழி, ‘நீ வரையும் நாளளவும் ஆற்றியிருந்தாய்’ என்று பாராட்ட, தலைவி அதற்கான காரணத்தை உரைத்தது.  தட்டைப் பறை (3) – உ. வே. சாமிநாதையர் உரை – தட்டைப் பறை என்றது தட்டையையே.  தட்டை மகளிர் தினைப் புனத்தில் கிளி முதலியவற்றைக் கடிவதற்குரிய கருவிகளுள் ஒன்று. மூங்கிலைக் கண்ணுக்கு கண் உள்ளதாக நறுக்கிப் பலவாகப் பிளந்து ஓசை உண்டாக ஒன்றிலே தட்டப்படுவது.  மலைபடுகடாம் 9 – அரிக்குரல் தட்டை.  Thattai is a musical gadget used in orchestras.  In Malaipadukadam, it is played by artists along with these other instruments – முழவு, ஆகுளி, பாண்டில், கோடு, தூம்பு, எல்லரி, பதலை.  முல்லை முகை நாறும்மே (6) – உ. வே. சாமிநாதையர் உரை – முல்லையினது மொட்டறா மலரின் மணத்தை என் தோள்கள் வீசா நிற்கும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – அவனது மேனியின் இயற்கை மணமாகவே முல்லைப் பூவின் மணம் என் தோள்கள் கமழா நிற்கும்.  மன் – கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

Meanings:   மட்டம் பெய்த மணிக் கலத்து அன்ன – like sapphire colored jars in which liquor has been  poured (கலத்து – கலம், அத்து சாரியை), இட்டு வாய்ச் சுனைய – in the small-mouthed springs, பகுவாய்த் தேரை – toads with gaping mouths, தட்டைப் பறையின் – like the bamboo devices used to chase parrots (பறையின் – இன் உருபு ஒப்புப் பொருளது), கறங்கு – sounds, நாடன் – the man from such country, தொல்லைத் திங்கள் – in the past months, நெடு வெண்ணிலவின் – during the waxing moon, during the long moon phase, மணந்தனன் – he embraced me, மன் – அசைநிலை, an expletive, greatly, நெடும் தோள் – the long arms, ஏ – அசைநிலை, an expletive, இன்று – today, முல்லை முகை நாறும்மே – they smell like jasmine flowers, Jasminum sambac (நாறும்மே – செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது)

குறுந்தொகை 194, கோவர்த்தனார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
என் எனப்படும் கொல் தோழி, மின்னுபு
வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ, அதன் எதிர்
கான மஞ்ஞை கடிய ஏங்கும்
ஏதில கலந்த இரண்டற்கு, என்
பேதை நெஞ்சம் பெரு மலக்குறுமே?  5

Kurunthokai 194, Kōvarthanār, Mullai Thinai – What the heroine said to her friend
Lightning flashes, clouds rise
up, and the sky rumbles.  Is it
just this that brings me sorrow?

No!  The forest peacocks echo
rapidly with plaintive cries.

My naive heart will be confused
greatly by these two combined
discordant sounds.  How
would this appear, my friend?

Notes:  The heroine said this to her friend who worried about her on seeing signs of the rainy season.  பருவ வரவின்கண் ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குத் தலைவி உரைத்தது.  இரா. இராகவையங்கார் உரை – ஒரு மாலையிற் சூன்முகில் கண்டு மயில் களித்துக் கூவி ஆடுதல் கண்டு நின்றபொழுது இயற்கைப் புணர்ச்சியிற் கூடியவள் ஆதலான் இவற்றை நட்பாகக் கருத்தியுள்ளவள் தலைவர் இல்லாதபோது தம் குரலால் வருத்தலான் ஏதில கலந்த என்றாள்.

Meanings:  என் எனப்படும் – how would this be considered, கொல் – அசைநிலை, an expletive, தோழி – Oh friend, மின்னுபு – lightning occurs, வான் ஏர்பு இரங்கும் – clouds rise and the sky rumbles with thunder, ஒன்றோ – is it just this one (எண்ணிடைச்சொல்), அதன் எதிர் – in response to that, கான மஞ்ஞை – forest peacocks, கடிய – rapidly, ஏங்கும் – they screech, ஏதில கலந்த இரண்டற்கு – two different ones mixed together, பேதை நெஞ்சம் – my naive heart, பெரு மலக்குறும் – it will be very confused, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 195, தேரதரனார், நெய்தற் திணை – தலைவி தனக்குள் சொன்னது
சுடர் சினம் தணிந்து குன்றம் சேரப்
படர் சுமந்து எழுதரு பையுள் மாலை,
யாண்டு உளர் கொல்லோ, வேண்டு வினை முடிநர்
இன்னாது இரங்கும் என்னார், அன்னோ
தைவரல் அசை வளி மெய் பாய்ந்து உறுதரச்  5
செய்வுறு பாவை அன்ன, என்
மெய் பிறிது ஆகுதல் அறியாதோரே?

Kurunthokai 195, Theratharanār, Neythal Thinai – What the heroine said to herself
Where is he,
in this desolate evening
when the sun has reduced
its heat and reached the
mountains, and my
rising sorrow has spread?

Does the man who went to
seek wealth think about how
my body, like a created doll,
has been altered by the moving
gusts of wind that attack me?

Notes:  The sad heroine said this when the hero was away.  பிரிவிடைப் பருவ வரவின்கண் தலைவி வருந்திக் கூறியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – பிரிவுத் தீயாலே உடல் உருகுதற்கு அரக்குப் பாவை உவமை.  செய்யுறு பாவை அரக்கால் இயற்றிய பாவை என்க.  உ. வே. சாமிநாதையர் உரை – பாவை அன்ன என் மேனி என்றது கழிந்ததற்கு இறங்கியதாகலின் தற்புகழ்ச்சி ஆகாது.  பாவை பொன்னால் செய்தது.

Meanings:  சுடர் சினம் தணிந்து – the sun’s heat has gone down (சினம் – ஆகுபெயர்), குன்றம் சேர – and it reaches the mountains, படர் சுமந்து – carrying sorrow, எழுதரு – rising, பையுள் மாலை – painful evening, யாண்டு உளர் கொல் – I wonder where he is (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), ஓ – அசைநிலை, an expletive, வேண்டு வினை முடிநர் – one who went to finish what he wanted, இன்னாது இரங்கும் என்னார் – he does not think about my sorrow, அன்னோ – aiyo (இரக்கக்குறிப்பு), தைவரல் – touching, அசை வளி – moving wind, மெய் பாய்ந்து உறுதர – attacking my body and giving me grief (உறுதர -தீண்ட), செய்வுறு பாவை அன்ன – like a created doll, என் மெய் – my body, பிறிது ஆகுதல் – the changing, அறியாதோர் – the man who does not know, ஏ – ஈற்றசை

குறுந்தொகை 196, மிளைக் கந்தனார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
வேம்பின் பைங்காய் என் தோழி தரினே,
தேம்பூங்கட்டி என்றனிர், இனியே,
பாரி பறம்பின் பனிச் சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்,
‘வெய்ய உவர்க்கும்’ என்றனிர்  5
ஐய, அற்றால் அன்பின் பாலே.

Kurunthokai 196, Milai Kanthanār, Marutham Thinai – What the heroine’s friend said to the hero
Before,
if my friend gave you
a bitter unripe neem fruit,
you would say that
it was a sweet sugar cube.

Now,
even if she gives you clear,
cold water from Pāri’s
Parampu Mountain springs,
chilled by Thai month’s cold,
you will say that it is warm
and brackish.

Sir, such is the nature of your love.

Notes:  The heroine’s friend said this to the unfaithful hero who wanted to return home.  வாயில் வேண்டிப் புக்க தலைவனுக்குத் தோழி கூறியது.  பறம்பு மலையின் சுனை:  அகநானூறு 78 –  கடும் பரிப் புரவிக் கைவண் பாரி தீம் பெரும் பைஞ்சுனை, குறுந்தொகை 196 – பாரி பறம்பின் பனிச் சுனைத் தெண்ணீர், புறநானூறு 109 – வானத்து மீன் கண் அற்று அதன் சுனையே, புறநானூறு 116 – தீ நீர்ப் பெருங்குண்டு சுனை, புறநானூறு 176 – பாரி பறம்பின் பனிச் சுனைத் தெண்ணீர், புறநானூறு 337 – பாரி பறம்பின் பனிச் சுனை.

Meanings:  வேம்பின் பைங்காய் – bitter unripe/green fruits of neem trees, Azadirachta indica, என் தோழி தரின் – if my friend gave to you, ஏ – அசைநிலை, an expletive, தேம்பூங்கட்டி – sweet sugar cube, என்றனிர் – you said, இனி – now, ஏ – அசைநிலை, an expletive, பாரி பறம்பின் – Pari’s Parambu mountain, பனிச் சுனை – cold spring, தெண்ணீர் – clear water, தைஇ – Thai (சொல்லிசை அளபெடை), திங்கள் – month, தண்ணிய – cold, தரினும் – even if she gives, வெய்ய உவர்க்கும் – it is hot and salty, என்றனிர் – you are saying, ஐய – sir, lord, அற்று – that is how it is, ஆல் – அசைநிலை, an expletive, அன்பின் – your love, பால் – part, the nature, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 197, கச்சிப்பேட்டு நன்னாகையார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
யாது செய்வாம் கொல் தோழி, நோதக
நீர் எதிர் கருவிய கார் எதிர் கிளை மழை
ஊதையம் குளிரொடு பேதுற்று மயங்கிய
கூதிர் உருவிற் கூற்றம்,
காதலர்ப் பிரிந்த என் குறித்து வருமே.  5

Kurunthokai 197, Kachipēttu Nannākaiyār, Neythal Thinai – What the heroine said to her friend
Rainy season has come with heavy
showers accompanied by lightning
and thunder, causing me pain.

Cold winds are blowing along with
rain and winter is here.  Together,
they come toward me like Kootruvan.
I am afraid, being away from my lover.

What can we do, O friend?

Notes:  The heroine said this to her friend who comforted her on seeing the season change.  பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குத் தலைவி உரைத்தது.  கருவிய (2) – இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய.  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58).  இரா. இராகவையங்கார் உரை – கூற்றம் காதலர்ப் பிரிந்து எற்குறித்து நோதக வரும் என்றாள்.  இதே கூதிர்காலம் காதலர் உடனுறையும் அமையத்து  இன்பத்திற்கு உதவியாயிருந்தது என்பது குறித்தது.

Meanings:  யாது செய்வாம் – what can we do, கொல் – அசைநிலை, an expletive, தோழி – O friend, நோதக – hurting, நீர் எதிர் – accepting water, taking water, கருவிய – clouds with lightning and thunder, கார் எதிர் – accepting the rainy season, கிளை மழை – heavy rains, spread rains, ஊதையம் குளிரொடு – along with the chillness of the northern winds (ஊதையம் குளிரொடு – ஊதைக் காற்றினது குளிர்ச்சியுடன், அம் சாரியை), பேதுற்று மயங்கிய – very confused, கூதிர் உருவிற் கூற்றம் – Kootruvan in the form of cold season, Death in the form of cold season, காதலர்ப் பிரிந்த – separated from my lover, என் குறித்து – toward me, வரும் – it comes, ஏ – ஈற்றசை

குறுந்தொகை 198, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில்,
கரும்பு மருள் முதல பைந்தாள் செந்தினை
மடப் பிடித் தடக்கை அன்ன பால் வார்பு
கரிக்குறட்டு இறைஞ்சிய செறி கோள் பைங்குரல்
படுகிளி கடிகம் சேறும், அடு போர்  5
எஃகு விளங்கு தடக்கை மலையன் கானத்து
ஆரம் நாறு மார்பினை,
வாரற்க தில்ல, வருகுவள் யாயே.

Kurunthokai 198, Kapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
O man with a chest
fragrant with sandal paste
from the forest of king Malaiyan
with huge hands and shining spears
used in murderous battles!

Do not come here!  Mother comes
here often.   Also, this is our desire.

We are going through the path
where yā trees are cut and burned,
to protect from marauding parrots,
fresh, thick clusters of mature red millet
bent like coal tongs,
their green stems resembling sugar canes,
and large like trunks of female elephants.

Notes:  The heroine’s friend told the hero about the change in the tryst venue. தோழி குறியிடம் மாற்றிக் கூறியது.  அகநானூறு 118 – குரல் ஏனல் கிளி கடி பாடலும் ஒழிந்தனள், அகநானூறு 194 – கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும், குறுந்தொகை 142 – புனக் கிளி கடியும் பூங்கண் பேதை, குறுந்தொகை 198 – படுகிளி கடிகம் சேறும், குறுந்தொகை 217 – தினை கிளி கடிக எனின், குறுந்தொகை 291 – ஏனல் படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே இசையின் இசையா இன்பாணித்தே, குறுந்தொகை 360 –  ஏனல் உண் கிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே, பதிற்றுப்பத்து 78 – மெல்லியல் மகளிர் ஒல்குவனர் இயலிக் கிளி கடி மேவலர் புறவுதொறும் நுவல.  வரலாறு:  மலையன்.  சுட்ட (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சுட்டியவெனப் பெயரெச்சத்தின் அகரம் கெட்டது.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

Meanings:  யாஅம் கொன்ற – yā trees were cut, ஆச்சா மரம், Hardwickia binate (யாஅம் – இசைநிறை அளபெடை), மரம் சுட்ட இயவில் – in the path where trees were burned, கரும்பு மருள் – like sugarcane (மருள் – உவம உருபு, a comparison word), முதல – the bases, the trunks, பைந்தாள் செந்தினை – green stemmed red millet, Italian millet, Setaria italicum, மடப் பிடித் தடக்கை அன்ன – like the innocent female elephant’s big trunk, பால் வார்பு – filled with milk, mature flour stage, கரிக்குறட்டு இறைஞ்சிய – bent like coal tongs, செறி கோள் பைங்குரல் – dense clusters of fresh spikes, dense clusters of green spikes, படுகிளி – seizing parrots, parrots that attack the millet, கடிகம் சேறும் – we are going to chase, அடு போர் – killing battle, எஃகு விளங்கு – with spear carrying flourishing army, தடக்கை மலையன் கானத்து – in the forest of king Malaiyan with big hands, ஆரம் நாறு மார்பினை – you with a sandal-fragrant chest, வாரற்க – do not come, sandal, Santalum album, தில்ல – தில் விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச்சொல், ஈறு திரிந்தது வந்தது, a particle which implies desire, வருகுவள் – she will come, யாய் – mother, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 199, பரணர், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
பெறுவது இயையாது ஆயினும் உறுவது ஒன்று
உண்டு மன், வாழிய நெஞ்சே, திண் தேர்க்
கைவள் ஓரி கானந்தீண்டி
எறி வளி கமழு நெறிபடு கூந்தல்
மை ஈர் ஓதி மாஅயோள் வயின்,  5
இன்றையன்ன நட்பின் இந்நோய்,
இறுமுறை என ஒன்று இன்றி,
மறுமை உலகத்து மன்னுதல் பெறுமே.

Kurunthokai 199, Paranar, Kurinji Thinai – What the hero said to his heart
May you live long, my heart!
The fragrance in her curly,
thick, oiled hair is like that from
the forests of charitable Ōri with
sturdy chariots.

This love that I have for my pretty
young woman today, is forever.
If I cannot get her in this life, I will
be rewarded with her in my next birth.

Notes:  The hero said this to his heart, on hearing from the heroine’s friend that the heroine would be confined to her house soon.  தலைவி இற்செறிக்கப்படுவாள் என்பதை தோழியின் மூலம் அறிந்த தலைவன், தன் நெஞ்சிடம் உரைத்தது.  வாழிய (2) – உ. வே. சாமிநாதையர் உரை – அசை, தமிழண்ணல் உரை – நீ வாழ்வாயாக.  வரலாறு:  ஓரி.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இயற்கைப்புணர்ச்சிக்கண் அக்கூந்தலே பாயலாகக் கிடந்து நுகர்ந்தானாகலின், அதன் மணம், நிறம், நெறிப்பு, நெய்ப்பு முதலியவற்றையே வியந்து பாராட்டினான்.  மறுமை உலகத்து (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மறுமை உலகம் என்றது மறுபிறப்பின் வாழுதற்கிடமான உலகம் என்றவாறு.  மன் – கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

Meanings:  பெறுவது இயையாது ஆயினும் – even if it is impossible to get her, உறுவது – benefit, ஒன்று உண்டு – there is one, மன் – அசைநிலை, an expletive, வாழிய – அசைநிலை, an expletive, may you live long, நெஞ்சே – O heart, திண் தேர் – sturdy chariots, கைவள் ஓரி – charitable Ōri, கானந்தீண்டி – touching his forest, எறி வளி – blowing wind, கமழு – fragrance, நெறிபடு கூந்தல் – curly hair, perfectly braided hair, மை ஈர் ஓதி – black oiled hair, மாஅயோள் வயின் – with the dark beauty (மாஅயோள் – இசைநிறை அளபெடை), இன்றை அன்ன – like today, நட்பின் – with friendship, இந்நோய் – this love disease, இறுமுறை – getting destroyed, என ஒன்று இன்றி – without that, மறுமை உலகத்து – in the next world, மன்னுதல் – stability, பெறும் – will attain, ஏ – அசைநிலை, an expletive

குறுந்தொகை 200, ஔவையார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பெய்த குன்றத்துப் பூ நாறு தண் கலுழ்
மீமிசைச் தாஅய வீஇ சுமந்து வந்து
இழிதரும் புனலும் வாரார் தோழி,
மறந்தோர் மன்ற, மறவா நாமே,
கால மாரி மாலை மாமழை  5
இன்னிசை உருமின முரலும்
முன்வரல், ஏமம் செய்து அகன்றோரே.

Kurunthokai 200, Avvaiyār, Mullai Thinai – What the heroine said to her friend
My friend!  He has not come back,
at this time when rain falls on the
mountains and comes down as cold,
turbid streams with the fragrance of
flowers,
my man who assured me of his return
before the monsoon’s dark clouds
roared sweetly in the evenings.

He has forgotten me.  But I will not
forget him.

Notes:  When the heroine worried on seeing the signs of the rainy season, her friend told her, “this is not the rainy season”, for which the heroine responded in this manner to her friend.  பருவங்கண்டு கவன்ற தலைவியிடம் ‘இது கார் அன்று, வம்பு’ எனக் கூறிய தோழியிடம் தலைவி கூறியது.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

Meanings:  பெய்த – rains, குன்றத்து – on the mountains, பூ நாறு – flower fragrant, தண் – cold, கலுழ் – turbid (கலுழ் – கலங்கல்), மீமிசை – above, ஒருபொருட் பன்மொழி, தாஅய – spread (இசை நிறை அளபெடை), வீ – flowers, சுமந்து – carry, வந்து – bring, இழிதரும் – they flow down, புனலும் – streams, வாரார் – he does not come, தோழி – friend, மறந்தோர் – he who has forgotten, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty, மறவா – not forgetting, நாம் – I, ஏ – பிரிநிலை, exclusion, கால மாரி – the season’s rains, மாலை மா மழை – evening’s dark clouds, இன்னிசை – sweet music, உருமின முரலும் – they roar with thunder, முன்வரல் – he said that he will come before, ஏமம் செய்து அகன்றோர் – the one who left me after assuring me, ஏ – அசைநிலை, an expletive