திருமுருகாற்றுப்படை – Thirumurukātruppadai 

Translation by Vaidehi Herbert

Copyright © All Rights Reserved

பாடியவர்                  –     மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்
பாடப்பட்டவன்          முருகப்பெருமான்
திணை                   பாடாண்
துறை                    ஆற்றுப்படை
பாவகை               அகவல்பா (ஆசிரியப்பா)
மொத்த அடிகள்          317

தமிழ் உரை நூல்கள்
பத்துப்பாட்டு (2 பகுதிகள்) – பொ. வே. சோமசுந்தரனார் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
நச்சினார்க்கினியர் உரை – உ. வே. உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை.

This song has 317 lines in the Āsiriyappā/Akaval meter, and was written by the poet Nakkeerar for Murukan.  The six holy Murukan sites of Thirupparankundram, Thirucheer Alaivāy, Thiruvāvinankudi, Thiruvērakam, Kundruthoru ādal and Palamuthir Chōlai are described. Unlike the other ātruppadai songs which guide artists to donors, this song guides seekers to Murukan.  It has been included in the Eleventh Thirumurai of the Saivite Canon and it is recited by many Tamils as part of their daily worship.

 

1. திருப்பரங்குன்றம்


குமரவேளின் பெருமை

 

தெய்வயானையின் கணவன்

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி
உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன் தாள்
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை

மறு இல் கற்பின் வாணுதற் கணவன் (1 – 6)

1. Thirupparankundram

 

Splendor of Murukan

 

Husband to Theivayānai

He shines splendidly with a glow at a distance,

like the sun that rises with strength from the ocean

on the right side, glittering without a break,

causing those in the world to be happy,

the god with beautiful, strong feet, large, mighty

hands that are like thunder, who ruined his

enemies and protects those who suffer, husband to

Theivayānai, a woman with a bright forehead and

faultless virtue.

Notes:  வலன் ஏர்பு – அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).   மதன் உடை நோன் தாள் (4) – ச. வே. சுப்பிரமணியன் உரை – அழகையும் வலிமையையும் உடைய கால்களை உடையவன், பொ. வே. சோமசுந்தரனார் உரை – அறியாமையை உடைத்தற்குக் காரணமான வலிய திருவடிகளையுடையவன்.  செல் உறழ் (5) – ச. வே. சுப்பிரமணியன் உரை – இடி போன்ற, பொ. வே. சோமசுந்தரனார் உரை – இடியோடு மாறுபட்ட.  வாணுதல் (6) – நச்சினார்க்கினியர் உரை – இந்திரன் மகள் தெய்வயானையார் கணவன்.

Meanings:   உலகம் உவப்ப – for those in the world to be happy, வலன் ஏர்பு திரிதரு – rising on the right side and moving, rising with strength and moving, பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு – like seeing the sun that many praise that rises from the ocean (கண்டாஅங்கு – அளபெடை), ஓவு அற இமைக்கும் – glittering without a break, சேண் விளங்கு – shining afar, greatly splendid, அவிர் ஒளி – bright light, உறுநர்த் தாங்கிய – protecting those who are suffering, மதன் உடை நோன் தாள் – beautiful strong feet, strong feet that breaks ignorance in others, செறுநர்த் தேய்த்த – ruined enemies, செல் உறழ் – thunder-like, better than thunder (செல் – முகில், ஆகுபெயராய் இடி என வந்தது, உறழ் – ஒத்த, மாறுபட்ட), தடக்கை – large hands, மறு இல் கற்பின் வாணுதற் கணவன்  – the husband of a woman with faultless virtue and a bright forehead (வாணுதல் – அன்மொழித்தொகை)

கடப்ப மாலை புரளும் மார்பினன்

கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை
வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி
தலைப்பெயல் தலைஇய தண் நறுங்கானத்து
இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து . . . .10

உருள் பூந்தண் தார் புரளும் மார்பினன் (7 – 11)

Kadampam Garland on his Chest

His chest is adorned with a cool garland

woven with round kadampam flowers

resembling the wheels of chariots, that bloom

on thriving, thick-trunked, densely growing

trees, causing darkness in the cool, fragrant

forest where the heavy, first rain fell from dark,

full rainclouds that had absorbed water,

from the sky where darkness is dispelled by

the sun and the moon.

Notes:  கமம் – நிறைவு.  கமம் நிறைந்தியலும் (தொல்காப்பியம். உரியியல் 57).  கார்கோள் (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கடல், காராலே கொள்ளப்படுவது எனும் பொருட்டு, கார் = முகில், கோள் – கொள்ளப்படுவது.

Meanings:   கார்கோள் முகந்த – absorbed from the ocean, drank from the ocean, கமஞ்சூல் மா மழை – full dark clouds, pregnant dark clouds, வாள் போழ் விசும்பில் – in the sky where darkness is split (by the sun and moon), வள் உறை சிதறி – scattered down heavy drops of rain, தலைப்பெயல் தலைஇய தண் நறுங்கானத்து – in the cool fragrant forest where the first rains fall (தலைஇய – அளபெடை), இருள்பட – causing darkness, பொதுளிய – thriving, பராரை மராஅத்து – of the kadampam tree with thick trunk (பராரை – பரு அரை பராரை எனப் புணர்ந்தது), உருள் – chariot wheel, rounded, பூந்தண் தார் புரளும் மார்பினன் – he is one with a cool garland moving on his chest

சூரர மகளிர்  

 

மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில்
கிண்கிணி கவைஇய ஒண் செஞ் சீறடி
கணைக்கால் வாங்கிய நுசுப்பின் பணைத்தோள்
கோபத்து அன்ன தோயாப் பூந்துகில்
பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல்
கை புனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய பொலம்புனை அவிர் இழை
சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி
துணையோர் ஆய்ந்த இணைஈர் ஓதிச் . . . .20
செங்கால் வெட்சிச் சீறிதழ் இடைஇடுபு
பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளி
தெய்வ உத்தியொடு வலம்புரி வயின்வைத்து
திலகம் தைஇய தேம்கமழ் திருநுதல்
மகரப் பகுவாய் தாழ மண்ணுறுத்து
துவர முடித்த துகள் அறும் முச்சிப்
பெருந்தண் சண்பகம் செரீஇ கருந்தகட்டு
உள் ஐப்பூ மருதின் ஒள் இணர் அட்டிக்
கிளைக் கவின்று எழுதரு கீழ் நீர்ச் செவ்வரும்பு
இணைப்புறு பிணையல் வளைஇ துணைத்தக . . . .30
வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர்
நுண் பூண் ஆகம் திளைப்ப திண் காழ்
நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
தேம் கமழ் மருது இணர் கடுப்பக் கோங்கின்
குவி முகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர்
வேங்கை நுண் தாது அப்பிக் காண்வர
வெள்ளில் குறுமுறி கிள்ளுபு தெறியா
கோழி ஓங்கிய வென்று அடு விறற்கொடி
வாழிய பெரிது என்று ஏத்தி பலர் உடன்
சீர்திகழ் சிலம்பு அகம் சிலம்பப் பாடி ….40

சூரர மகளிர் ஆடும் சோலை (12 – 41)

Nature of Celestial Women

Celestial women sing loudly, their music

echoing in the mountains, and dance in a grove

on the lofty mountain with large bamboo.  They wear

anklets on their bright, red, small feet.  They have

rounded legs, curved waists, bamboo-like arms, clothing

that is in natural color, lovely like pattupoochis, and gold

ornaments with few strands on their waists, their great

beauty not created by hand.  They wear bright jewels that

shine from afar, made with gold from the place with the

name nāval.

 

Their bodies are faultless and their hair, admired by

their friends, oiled, is adorned with vetchi flowers with

small stems, amidst which are placed petals of kuvalai

flowers with green stems.  Jewels called seedevi are

placed on their right-whorled hair knots that look like

conch shells.  Ornaments shaped like the open mouths of

sharks adorn their foreheads with pottu.  Huge blossoms

of chenpakam are placed on their faultless hair knots.

They also adorn their hair with honey-flowing marutham

flowers with soft insides and dark petals, and strands

that are woven with red buds which have grown under

water.  Tender, bright pindi sprouts hang from their

ears, touching their breasts decorated with ornaments.

Their breasts that resemble pointed kōngam buds

have beautiful sandal paste smeared on them like

smearing the fragrant flower paste of marutham flowers,

along with vēngai flower pollen.  They pluck and disperse

tender leaves of woodapple trees and sing praising

his lovely, victorious rooster flag, their songs echoing

in the great mountains.

Notes:  கோங்க முகைப்போன்ற முலை:  அகநானூறு 99 – மாண் இழை மகளிர் பூணுடை முலையின் முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு, அகநானூறு 240 – கோங்கு முகைத்தன்ன குவி முலை ஆகத்து, குறுந்தொகை 254 – முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் தலை அலர், கலித்தொகை 56 – முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை எனப் பெயல் துளி முகிழ் எனப் பெருத்த நின் இள முலை, கலித்தொகை 117 – கோங்கின் முதிரா இள முகை ஒப்ப, புறநானூறு 336 – கோங்கின் முகை வனப்பு ஏந்திய முற்றா இள முலை, திருமுருகாற்றுப்படை 34 – தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின் குவி முகிழ் இளமுலை, சிறுபாணாற்றுப்படை 25-26 – யாணர்க் கோங்கின் அவிர் முகை எள்ளிப் பூண் அகத்து ஒடுங்கிய வெம்முலை.  நாவலொடு பெயரிய பொலம்புனை (18) –  போ. வே சோமசுந்தரனார் உரை – சம்பு என்பது நாவல் மரத்தின் பெயர் (வடமொழி).  நாவற் கனிச்சாறு பாயும் சம்பு நதியின்கண் தோன்றும் பொன் என்னும் கொள்கைப் பற்றி நால்வகைப் பொன்னுள் வைத்து ஒன்றனைச் சம்பூநதம் என்ப.  பொலம் (18) – பொன்.  பொன்னென் கிளவி ஈறு கெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுள் மருங்கின் தொடரியலான (தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 355).  மண்ணுறுத்து (25) – போ. வே சோமசுந்தரனார் உரை – தங்கச் செய்து,   நச்சினார்க்கினியர் உரை – ‘ஆவுதி மண்ணி’ என்றாற்போல கொள்க.  இனி ‘கழுவி’ என்றுமாம்.  நறுங்குறடு (33) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கட்டை.  ஈண்டுக் குறிப்பாற் சந்தனக் கட்டையை உணர்த்திற்று.  தெறியா – தெறித்து என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

Meanings:  மால் வரை நிவந்த – large bamboo growing (மால் வரை – பெரிய மூங்கில், வரை – கோடு, கணு, கணு உடைமையால் வரை என்பது ஆகுபெயராய் மூங்கிலைக் குறிக்கும் – பொ. வே. சோமசுந்தரனார் உரை),  சேண் உயர் வெற்பில் – in the distant tall mountain, கிண்கிணி கவைஇய – surrounded by anklets (கவைஇய – அளபெடை), ஒண் செஞ்சீறடி – bright red small feet, கணைக்கால் – thick legs, rounded legs, வாங்கிய நுசுப்பின் – with curved waists, பணைத்தோள் – bamboo arms, large arms, கோபத்து அன்ன – like pattupoochi, trombidium grandissimum (கோபத்து – கோபம், அத்து சாரியை), தோயாப் பூந்துகில் – delicate/beautiful cloth that is not dyed, delicate/beautiful cloth of natural color, பல் காசு நிரைத்த – with rows of gold coins, சில்காழ் அல்குல் – few strands, waist/loins, கை புனைந்து இயற்றாக் கவின் பெறு வனப்பின் – with great beauty that was not created by hand, நாவலொடு பெயரிய பொலம் புனை – made with gold from the place with the name naval (see notes above), அவிர் இழை – bright jewels, சேண் இகந்து விளங்கும் – shines from afar(இகந்து – கடந்து), செயிர் தீர் மேனி – faultless bodies, துணையோர் ஆய்ந்த – analyzed by friends, admired by friends, இணை – alike ones, ஈர் ஓதி – wet hair, oiled hair, செங்கால் வெட்சி – vetchi flowers with small stems, சீறிதழ் இடை இடுபு – placed tiny petals in between (இடுபு – இட்டு, செய்பு என்னெச்சம்), பைந்தாள் குவளை – blue waterlilies with green stems, தூவிதழ் – pure petals, கிள்ளி – tore off, தெய்வ உத்தியொடு – ornament called Seedevi, வலம்புரி வயின் வைத்து – placed on the hair knot looking like right-whorled conch shells, திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் – fragrant beautiful foreheads with pottu (தைஇய – அளபெடை, தேம் – தேன் என்றதன் திரிபு), மகரப் பகுவாய் தாழ மண்ணுறுத்து – placed/washed ornaments that are in the shape of open mouths of sharks, துவர முடித்த – tied totally, துகள் அறும் முச்சி – faultless hair knots, பெருந்தண் சண்பகம் செரீஇ – placed huge cool Chenbakam flowers (செரீஇ – அளபெடை), கருந்தகட்டு – black petals, உள் ஐப்பூ மருதின் – of marutham tree flowers with delicate insides, ஒள் இணர் – bright clusters of flowers (இணர் – கொத்து, ஆகுபெயர் மலருக்கு), அட்டி – placed (இட்டு), கிளைக் கவின்று எழுதரு – rising beautifully from the branches, கீழ் நீர்ச் செவ்வரும்பு – red buds under the water (கீழ் நீர்= நீர்க்கீழ்), இணைப்புறு பிணையல் – woven flower garlands, வளைஇ – around, துணைத்தக  – together, வண் காது நிறைந்த – big ears full, பிண்டி ஒண் தளிர் – asoka tree’s bright sprouts, Saraca indica, நுண் பூண் – fine jewels, ஆகம் திளைப்ப – touching the chest, திண் காழ் – hard-wood sandal, நறுங்குறடு – fragrant wood, உரிஞ்சிய – peeled, பூங்கேழ் – lovely color, lovely and bright, தேய்வை – rubbed and reduced, தேம் கமழ் மருது இணர் கடுப்ப – like the honey-fragrant clusters of marutham tree flowers, Terminalia arjuna (தேம் தேன் என்றதன் திரிபு, கடுப்ப – உவம உருபு, இணர் – கொத்து, ஆகுபெயர் மலருக்கு), கோங்கின் குவி முகிழ் – like the pointed buds of kōngam, இள முலைக் கொட்டி – smeared on their breasts, விரி மலர் வேங்கை நுண் தாது அப்பி – rubbed with fine pollen of open vēngai flowers, காண்வர – beautiful to look,  வெள்ளில் – woodapple trees,  குறுமுறி – tender leaves, கிள்ளுபு தெறியா – கிள்ளித் தெறித்து, plucked and threw, கோழி – rooster, cock, ஓங்கிய – tall, flourishing, வென்று – victorious, அடு – attacking, விறற் கொடி – victorious flag, beautiful flag, வாழிய பெரி என்று ஏத்தி – praise that you live for long, பலர் உடன் – with many, சீர் திகழ் சிலம்பு அகம் சிலம்பப் பாடி – sing loudly in the great mountains causing echoes, சூரர மகளிர் ஆடும் சோலை – grove where goddesses dance, where celestial maidens dance

 

காந்தள் கண்ணி சூடிய சென்னியன்

மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து
சுரும்பும் மூசாச் சுடர்ப் பூங்காந்தட்

பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன் (42 – 44)

Murukan wearing Kānthal flowers

Murukan wears on his head a strand of huge, cool,

flame-like kānthal blossoms that are not swarmed

by bees, that grow in the mountain range dense with

trees, where even female monkeys do not know the way.

Notes:  ஒப்புமை – அகநானூறு 92 – மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின், நற்றிணை 194 – மந்தியும் அறியா மரம் பயில், திருமுருகாற்றுப்படை 42 – மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து.

Meanings:   மந்தியும் அறியா – even the female monkeys do not know, மரன் பயில் அடுக்கத்து – mountain ranges dense with trees, சுரும்பும் மூசா – not swarmed by bees, சுடர்ப் பூங்காந்தட் பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன் – his head is adorned with a strand of huge cool flame-like glory lilies

முருகன் சூரனைக் கொல்லுதல்

பார் முதிர் பனிக்கடல் கலங்க உள் புக்கு

சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடுவேல் (45 – 46)

Murukan killed Sooran

He killed Sooran with his long spear with

bright blade, entering the ocean with huge

rocks and churning it.

Meanings:  பார் முதிர் – filled with huge rocks, பனிக் கடல் கலங்க – churning the cold ocean,  stirring the cold ocean, உள் புக்கு – entered inside, சூர்முதல் தடிந்த – chopped up Sooran, killed Sooran, சுடர் இலை நெடுவேல் – long spear with bright blade

பேய்மகளின் துணங்கை

உலறிய கதுப்பின் பிறழ்பல் பேழ்வாய்
சுழல் விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின்
கழல்கண் கூகையொடு கடும் பாம்பு தூங்கப்
பெருமுலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு . . .50
உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதி ஆடிய கூர் உகிர்க் கொடுவிரல்
கண் தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண் தொடித் தடக் கையின் ஏந்தி வெருவர
வென்று அடு விறற் களம் பாடித் தோள் பெயரா

நிணம் தின் வாயள் துணங்கை தூங்க (47 – 56)

Thunangai performed by a Female Ghoul

A fierce female ghoul with dry hair, crooked teeth,

big mouth, harsh looks with green colored eyes that

whirl, dangling earrings with dangerous snakes and

owls with bulging eyes that distress her breasts, coarse

stomach, fierce walk, played with blood, dug her curved

fingers with sharp nails into eyes and ate them, held the

huge, stinking, black head on her big hands with bright

bangles, sang causing fear in the murderous battlefield,

her mouth with fatty flesh, she performed thunangai

dance, moving her arms.

Notes:   கழல் கண் (49) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கூகையின் கண் பிதுங்கியிருத்தலால் கழல் கண் எண்டார்.  கழி (53) – மிகுதிப் பொருள் குறித்து நின்ற உரிச்சொல்.  கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 16).  பெயரா – பெயர்த்து (நகர்த்தி) என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

Meanings:  உலறிய கதுப்பின் – with dried hair, பிறழ் பல் – disorderly teeth,  பேழ்வாய் – big mouth, gaping mouth, சுழல் விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின் – fierce looks with green eyes that whirl, கழல் கண் கூகையொடு – with owl with bulging eyes, கடும் பாம்பு தூங்க – dangling dangerous snakes, பெருமுலை அலைக்கும் காதின் – on her ears that distress her large breasts, பிணர் மோட்டு – coarse stomach, உருகெழு செலவின் – fierce walk, அஞ்சுவரு பேய்மகள் – fierce female ghoul, குருதி ஆடிய – played in blood, கூர் உகிர்க் கொடு விரல் – sharp nails and curved fingers, கண் தொட்டு உண்ட – dug up and ate eyes, கழிமுடைக் கருந்தலை – greatly stinking black head (கழி – மிகுதி), ஒண்தொடித் தடக் கையின் ஏந்தி – holding in big hands with bright bangles,  வெருவர – causing fear, வென்று  அடு விறற் களம் பாடி – sang in the murderous victorious field, தோள் பெயரா – moving her arms/shoulders, நிணம் தின் வாயள் – she has a mouth that eats fatty flesh, துணங்கை தூங்க – she performs thunangai dance

முருகன் மாமரத்தை வெட்டுதல்

இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை
அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ் இணர்
மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து . . . .60

எய்யா நல் இசை செவ்வேற் சேஎய் (57 – 61)

Chopped a Mango Tree

Murukan, bearing a fine spear, with great fame that

is immeasurable, chopped the trunk of a mango tree

heavy with bent fruit clusters, to control the Asurars.

He cut the body of Sooran with man and beast form

and challenged him to fight with all his six parts that

combined as one.

Notes:  அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி (58) – நச்சினார்க்கினியர் உரை – ஆறாகிய வேறுபட்ட கூற்றினால் அச்சந்தோன்ற மிக்குச் சென்று, இனி அவன் உடல் அற்று வேறுவேறாம் வகையால் எனினுமாம், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை – ஆறாகிய வேறுபட்ட கூற்றினால் அச்சந்தோன்ற மிக்குச் சென்று, பொ. வே. சோமசுந்தரனார் உரை – அற்று வேறாம் வகையாலே அச்சந்தோன்ற மிக்குச் சென்று.

Meanings:  இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை – one body with two different forms – man and beast, அறு வேறு வகையின் – with six different parts combined as one, chop off Sooran’s body to become nothing, அஞ்சுவர மண்டி – went fast causing fear, அவுணர் நல்வலம் அடங்க – to control the victory of Asurars, கவிழ் இணர் – bent clusters, மா முதல் தடிந்த – chopped the trunk of a mango tree, மறு இல் கொற்றத்து – with faultless victory, எய்யா நல் இசை – great fame that is immeasurable, செவ்வேற் சேஎய் – Murukan with fine spear, Murukan with a red spear

 

ஆற்றுப்படுத்தல்

சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம்புரி கொள்கைப் புலம் பிரிந்து உறையும்
செலவு நீ நயந்தனை ஆயின் பல உடன்
நன்னர் நெஞ்சத்து இன்நசை வாய்ப்ப

இன்னே பெறுதி நீ முன்னிய வினையே (62 – 66)

Offering Guidance

If you go with a mind of surrendering to his fine feet

with the principle of doing good, moving away from

bodily desires and desiring eternal bliss with a good

heart through many births, good fame will occur, and

you will get the benefits of your past actions.

Meanings:  சேவடி படரும் செம்மல் உள்ளமொடு – with a great mind of going toward his fine/red feet, நலம்புரி கொள்கை – principle of doing good, புலம் பிரிந்து உறையும் – moving away from bodily desires, செலவு நீ நயந்தனை ஆயின் – if you desire to go, பல உடன் – many births, நன்னர் நெஞ்சத்து – with a good heart (நன்னர் – நல்ல), இன் நசை வாய்ப்ப – good fame to occur, இன்னே பெறுதி நீ முன்னிய வினையே – now you will get the benefit of your past considerations (பெறுதி – முன்னிலை வினைமுற்று)

திருப்பரங்குன்றில் முருகன் வீற்றிருத்தல்

செருப் புகன்று எடுத்த சேண் உயர் நெடுங்கொடி
வரிப் புனை பந்தொடு பாவை தூங்க
பொருநர்த் தேய்த்த போர் அரு வாயில்
திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து . . . .70
மாடம் மலி மறுகின் கூடற் குடவயின்
இருஞ்சேற்று அகல்வயல் விரிந்து வாய் அவிழ்ந்த
முள் தாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கள் கமழ் நெய்தல் ஊதி எல் படக்
கண் போல் மலர்ந்த காமரு சுனைமலர்
அஞ்சிறை வண்டின் அரிக் கணம் ஒலிக்கும்

குன்று அமர்ந்து உறைதலும் உரியன் அதாஅன்று (67 – 77)

Murukan is seated in Thirupparankundram

He resides in Thirupparankundram, where tall

victory flags raised with desire fly high at the

entrance, along with striped balls and hanging

dolls.  Enemies were ruined at the gate where

battles are rare.  The mountain is on the west of

Koodal city with streets filled with mansions and

faultless markets where wealth resides.  There are

wide fields with dark mud where lotus flowers with

thorny stems flourish.  Bees sleep on them at night

and buzz on neythal flowers with honey in the

morning.  At sunset, the sounds of beautiful swarms

of bees with beautiful wings hovering over desired

pond flowers, are heard.

He is not just there.

Notes:  வரிப் பந்து – நற்றிணை 12 – வரி புனை பந்தொடு – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை, ஒளவை துரைசாமி உரை – வரிந்து புனையப்பட்ட பந்தொடு, திருமுருகாற்றுப்படை 68 – வரிப் புனை பந்தொடு – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தும், நச்சினார்க்கினியர் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தும், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தோடு, கலித்தொகை 51 – வரிப் பந்து – நச்சினார்க்கினியர் உரை – வரியினையுடைய பந்து, பரிபாடல் 9 – வரிப் பந்து – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வரியினையுடைய பந்து, பெரும்பாணாற்றுப்படை 333 – வரிப்பந்து – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரியப்பட்ட பந்து.

Meanings:  செருப்  புகன்று எடுத்த – entered battles with desire and raised, சேண் உயர் – far and high, நெடுங்கொடி – tall flags, வரிப் புனை பந்தொடு – along with ball with designs/stripes,  பாவை தூங்க – doll hanging/resting, பொருநர்த் தேய்த்த – ruined enemies, போர் அரு வாயில் – rare/protected gate, திரு வீற்றிருந்த – where wealth/Lakshmi resides, தீது தீர் நியமத்து – with markets without fault, மாடம் மலி மறுகின் – with streets filled with mansions, கூடற் குடவயின் – on the west side of Koodal/Mathurai, இருஞ்சேற்று அகல்வயல் – wide fields with dark mud,  விரிந்து வாய் அவிழ்ந்த – open fully and blossomed, முள் தாள் தாமரைத் துஞ்சி – sleeping in the lotus flowers with thorny stems, வைகறைக் கள் கமழ் நெய்தல் ஊதி – swarming on honey-fragrant waterlilies in the early mornings, எல் படக் கண் போல் மலர்ந்த – blossomed like eyes when the sun arrived, காமரு சுனை மலர் – desired pond flowers (காமரு – விகாரம்), அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும் – the humming sounds of beautiful swarms of bees with beautiful wings are heard, குன்று அமர்ந்து உறைதலும் உரியன் – the god who resides in the mountains, அதாஅன்று – not just there (அது அன்று என்பன அதான்று எனப்புணர்ந்து வருமொழி முதல் அளபெடுத்து அதாஅன்று என்றாயிற்று.  அதாஅன்று அஃதன்றியும் என்னும் பொருட்டு, அளபெடை)

2.

திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)

ஆறுமுகன் யானையின் மேல் ஏறி வருதல்

வைந்நுதி பொருத வடுஆழ் வரிநுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வர
படுமணி இரட்டும் மருங்கின் கடு நடை . . . .80
கூற்றத்து அன்ன மாற்று அரு மொய்ம்பின்

கால் கிளர்ந்தன்ன வேழம் மேல் கொண்டு (78 – 82)

2.  Thirucheeralaivāy (Thiruchendur)

 

Murukan riding an elephant

He rides on an elephant with swift gait

as fast as the wind, with great strength that

cannot be stopped, like Kootruvan of rapid walk,

with jingling bells hanging on both sides, gold

ōdai ornaments, and face lines with deep scars

caused by weapons with sharp tips.

Notes:  வை – வையே கூர்மை – (தொல்காப்பியம், உரியியல் 91).

Meanings:  வைந்நுதி – sharp tips, பொருத – attacked, வடு ஆழ் வரி நுதல் – face with lines and deep scars, வாடா மாலை ஓடையொடு – with ōdai ornaments that do not fade, with gold ōdai ornaments (வாடா மாலை – பொன் மாலைக்கு வெளிப்படை), துயல்வர படுமணி இரட்டும் மருங்கின் – on the sides where the hanging bells sway and jingle, கடு நடை – rapid walk, கூற்றத்து அன்ன – like Kootruvan who is the god of death (கூற்றத்து – கூற்றம், அத்து சாரியை), மாற்று அரு மொய்ம்பின் – with great strength that cannot be stopped, கால் கிளர்ந்தன்ன வேழம் மேல் கொண்டு – climbing on an elephant as rapid as the rising wind

ஆறுமுகங்களின் இயல்புகள்

ஐவேறு உருவின் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி
மின் உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப,   85
நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலங்குழை
சேண் விளங்கு இயற்கை வாள் மதி கவைஇ
அகலா மீனின் அவிர்வன இமைப்பத்
தா இல் கொள்கைத் தம் தொழில் முடிமார்
மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே;   90
மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க
பல் கதிர் விரிந்தன்று ஒரு முகம், ஒரு முகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி
காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே, ஒரு முகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ   95
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே, ஒரு முகம்
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி
திங்கள் போலத்திசை விளக்கும்மே, ஒரு முகம்
செறுநர்த் தேய்த்துச் செல் சமம் முருக்கி
கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே, ஒரு முகம்   100

குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே

ஆங்கு அம்மூ இரு முகனும் முறை நவின்று ஒழுகலின், (83 – 103)

The radiant faces of Murukan shine brilliantly in

the hearts of those with faultless principles.

One face spreads many beams of light to make the

huge, dark earth glow and flourish without faults.

One face showers boons with love on devotees who

praise him.

One face analyzes the Vedas chanted by the Brahmins

who follow ancient traditions.

One face brightens directions like the moon,

examining the contents of the scriptures that are

difficult to comprehend, with protection.

One face destroys enemies in battles with rage and

performs rituals in the battlefield.

One face is blissful in the company of the daughter

of a mountain dweller, Valli with vine-like waist.

Thus the six faces perform their duties.

Notes:  களவேள்வி – புறநானூறு 26 – மன்னிய வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே, புறநானூறு 372 – புலவுக் களம் பொலிய வேட்டோய், மதுரைக்காஞ்சி 128-130 – களம்வேட்ட அடு திறல் உயர் புகழ் வேந்தே, திருமுருகாற்றுப்படை 100 – களம் வேட்டன்றே ஒரு முகம்.  பொற்பு – பொற்பே பொலிவு (தொல்காப்பியம், உரியியல் 39).  ஐவேறு உருவின் (83) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தாமம், முகடம், பதுமம், கிம்புரி, கோடகம் என்னும் ஐந்து வகையாகச் செய்யப்படும் தொழிற்திறம் முற்றிய தலையணிகலன் என்றவாறு.

Meanings:  ஐவேறு உருவின் – in five different shapes, செய்வினை முற்றிய முடியொடு – with a crown with perfection in work, விளங்கிய முரண் மிகு திருமணி –  bright differing beautiful gems, மின் உறழ் இமைப்பின் – glittering like lightning (உறழ் – உவம உருபு), சென்னிப் பொற்ப – head is splendid, நகை தாழ்பு  துயல்வரூஉம் வகை – bright hanging variety of jewels (வரூஉம் – அளபெடை), அமை பொலங்குழை – perfect golden earrings, சேண் விளங்கு இயற்கை வாள் மதி கவைஇ – surrounding the bright moon which shines even at a distance (கவைஇ – அளபெடை), அகலா மீனின் அவிர்வன இமைப்ப – they glitter like stars which do not go away (மீனின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), தா இல் கொள்கைத் தம் தொழில் முடிமார் – those who finish their business with faultless principles, மனன் நேர்பு எழுதரு – that appears in their hearts (மனன் – மனம் என்பதன் போலி), வாள் நிற முகனே – among the bright faces (முகன் – முகம் என்பதன் போலி), மா இருள் ஞாலம் – the huge dark world, மறு இன்றி விளங்க – to flourish without fault, பல் கதிர் விரிந்தன்று ஒரு முகம் – one face spreads many beams of light, ஒரு முகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே – one face as devotees praise gives them happily boons with love, ஒரு முகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே – one face thinks about the Vedas chanted by Brahmins who follow tradition and chant in a faultless manner (வழாஅ – அளபெடை, ஓர்க்கும்மே – ஒர்க்கும் + ஏ, ஏகாரம் அசை), ஒரு முகம் எஞ்சிய பொருள்களை ஏம் உற நாடி திங்கள் போலத் திசை விளக்கும்மே – one face brightens directions like the moon examining the contents of the scriptures that are difficult to comprehend with protection (ஏம் – காவல், ஏமம் என்பதன் கடைக்குறை), ஒரு முகம் செறுநர்த் தேய்த்துச் செல் சமம் முருக்கி கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே – one face ruins enemies in victorious battles with rage and performs rituals in the battlefield, ஒரு முகம் குறவர் மடமகள் கொடி போல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே – one face is blissful in the company of Valli with a vine-like waist who is the daughter of a mountain dweller, ஆங்கு அம்மூ இரு முகனும் – there the six faces, முறை நவின்று ஒழுகலின் – since they perform their duties

பன்னிரு கைகளின் தொழில்கள்

ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பில்
செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர் விடுபு
வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள்
விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது
ஒரு கை உக்கம் சேர்த்தியது ஒரு கை
நலம் பெறு கலிங்கத்துக் குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை
அங்குசம் கடாவ ஒரு  கை இரு கை . . . .110
ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப ஒரு கை

மார்பொடு விளங்க ஒரு கை
தாரொடு பொலிய ஒரு கை
கீழ் வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப ஒரு கை
பாடுஇன் படுமணி இரட்ட ஒருகை
நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய ஒரு கை
வானர மகளிர்க்கு வதுவை சூட்ட

ஆங்கு அப் பன்னிரு கையும் பாற்பட இயற்றி (104 – 118)

Nature of his Twelve Arms

His handsome, large chest adorned with gold

garlands has three red lines.  His arms split the

bodies of enemies throwing spears at them with

strength.

One lifted arm is protecting great men who have the

tradition of going to the upper world.  One arm rests

on his waist.  One arm rests on his thigh with red

clothes.  One arm carries an elephant goad.  One arm

holds a lovely, dark shield and the other one whirls

a spear.  One arm placed on his chest glows.  One arm

shines amidst his garlands.  One arm is raised high

as the bracelets slip down.  One arm rings a sweet

sounding bell.  One arm causes heavy rains to fall

from the blue sky.  One arm places marriage

garlands on celestial women.  Thus the twelve arms

perform their duties corresponding to the faces.

Notes:  ஒரு கை வானர மகளிர்க்கு வதுவை சூட்ட (117):   நச்சினார்க்கினியர் உரை –  ஒருகை தெய்வ மகளிர்க்கு மணமாலையைச் சூட்ட, பொ. வே. சோமசுந்தரனார் உரை – இத் திருக்கையின் செயல் உலகின்கண் இல்லறம் நிகழ வேண்டி குறவர் மடமகளோடு நகையமர்ந்த திருமுகத்தின் செயலுக்குப் பொருந்துமாறு உணர்க.

Meanings:  ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பில் – on the beautiful large chest with gold garlands/pearl strands/sandal garland hanging, செம்பொறி வாங்கிய – have the three lines/signs, மொய்ம்பின் – with great strength, சுடர் விடுபு – throwing spears that are bright (சுடர் – ஆகுபெயர் வேலுக்கு, விடுபு – விட்டு, செய்பு என்னும் வினையெச்சம்), வண் புகழ் நிறைந்து – with great fame, வசிந்து – split (bodies of enemies) வாங்கு நிமிர் தோள் – lifted arms that take the spears back, விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒரு கை – one lifted hand is protecting great men who go to the upper world (செலல் – இடைக்குறை), உக்கம் சேர்த்தியது ஒரு கை – one hand is placed on the waist,  நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை – one hand is on the thigh with fine/red clothes (அசைஇயது –  அளபெடை), அங்குசம் கடாவ ஒரு கை – one hand carries the elephant goad, இரு கை ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப – of the two hands – one holds a lovely dark shield and the other one whirls a spear, ஒரு கை மார்பொடு விளங்க  – one hand glows on his chest, ஒரு கை தாரொடு பொலிய – one hand shines with his garlands, one hand is beautiful with his garlands, ஒரு கை கீழ் வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப – one hand is raised high as bracelets slip down (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), ஒரு கை பாடு இன் படு மணி இரட்ட – one hand rings a sweet sounding bell, ஒரு கை நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய – one hand causes heavy rains to fall from the blue heavens (நீல் – கடைக்குறை, poetical license which consists in the shortening of a word by elision of one or more letters in the end), ஒரு கை வானர மகளிர்க்கு வதுவை சூட்ட – one hand places marriage garlands on celestial women, ஆங்கு அப் பன்னிரு கையும் பாற்பட இயற்றி – thus the 12 hands did their work corresponding to the faces

அலைவாயில் ஆறுமுகன்

அந்தரப் பல்லியம் கறங்க திண்காழ்
வயிர் எழுந்து இசைப்ப வால் வளை ஞரல . . . .120
உரந்தலைக் கொண்ட உரும்இடி முரசமொடு
பல்பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ
விசும்பு ஆறு ஆக விரை செலல் முன்னி
உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே அதாஅன்று (119 – 125)

Murukan in Alaivāy

Celestial musical instruments are played.

Solid wood vayir horns blow, white conch shells

blare, drums roar like thunderbolts, and peacocks

with many spots screech from his victory flags.

Through the sky as his path, Murukan makes his

journey to Alaivāy of great fame.  That is his

established nature.  He is not just there.

Notes:  அந்தரப் பல்லியம் கறங்க (119) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தேவத்தும்பி முழங்கவும்.

Meanings:  அந்தரப் பல் இயம் கறங்க – celestial musical instruments are played, திண் காழ் வயிர் எழுந்து இசைப்ப – solid wood vayir horns are blown, வால் வளை ஞரல – white conch shells blare,  உரந்தலைக் கொண்ட உரும் இடி முரசமொடு – along with drums with the loud sounds of powerful thunder, பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ – peacocks with many spots screech from victory flags, விசும்பு ஆறு ஆக – through the sky as a path, விரை செலல் முன்னி – considering to go fast (செலல் – இடைக்குறை), உலகம் புகழ்ந்த – praised by the world, ஓங்கு உயர் விழுச்சீர் – with lofty great fame (ஓங்கு உயர் – ஒருபொருட் பன்மொழி), அலைவாய்ச் சேறலும் – to reach Alaivāy, நிலைஇய பண்பே – that is his established nature (நிலைஇய – அளபெடை), அதாஅன்று – not just there (அது அன்று என்பன அதான்று எனப்புணர்ந்து வருமொழி முதல் அளபெடுத்து அதாஅன்று என்றாயிற்று.  அதாஅன்று அஃதன்றியும் என்னும் பொருட்டு, அளபெடை)

3.  திருவாவினன்குடி (பழனி)

முன் செல்லும் முனிவர்கள்

சீரை தைஇய உடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வால் நரை முடியினர்
மாசு அற இமைக்கும் உருவினர் மானின்
உரிவை தைஇய ஊன் கெடு மார்பின்
என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல் . . .130
பல உடன் கழிந்த உண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்
தாம் வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு
கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை
யாவதும் அறியா இயல்பினர் மேவரத்

துனி இல் காட்சி முனிவர் முற்புக (126 – 137)

3.  Thiruvāvinankudi (Palani)

 

Sages

Intelligent sages who wear tree bark clothing

march in front, their hair beautiful and white

right-whorled conch shells, bodies shining in

purity covered with deer hide, flesh reduced

with ribs sticking out, they fast for many days.

Their minds not clouded with hatred,

they know even what the well-learned do not

know.  Their leadership is the limit for the learned.

They have removed great rage and desire from

their minds and they do not know pain.

Meanings:  சீரை தைஇய உடுக்கையர் – those wearing tree bark clothing (தைஇய – அளபெடை), சீரொடு – beautifully, வலம்புரி புரையும் – like the right-whorled conch shells (புரை – உவம உருபு, a comparison word), வால் நரை முடியினர் – those with white hair, மாசு அற இமைக்கும் உருவினர் – those whose bodies shine with purity, மானின் உரிவை தைஇய – clothed in deer hide (தைஇய – அளபெடை), ஊன் கெடு மார்பின் என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் – those with bodies with ruined flesh with ribs rising up on their chests, நன்பகல் பல உடன் கழிந்த உண்டியர் – those who do not eat for many days eating only now and then, இகலொடு செற்றம் நீக்கிய மனத்தினர் – those differing and with anger removed from them, those differing and with hatred removed from them, யாவதும் கற்றோர் அறியா அறிவினர் – intelligent people who know even what the well learned do not know, கற்றோர்க்குத் தாம் வரம்பு ஆகிய தலைமையர் – those whose leadership is the limit for the learned, காமமொடு கடுஞ்சினம் கடிந்த காட்சியர் – intelligent people who have removed great rage along with desire (காட்சியர் – அறிவுடையோர்), இடும்பை யாவதும் அறியா இயல்பினர் – those who do not know even a little bit of pain, மேவரத் துனி இல் காட்சி முனிவர் முற்புக  – sages with intelligence and nature without hatred leading in the front (காட்சி முனிவர் – அறிவிவினையுடைய முனிவர்கள்)

மேவலர்

புகை முகந்தன்ன மாசு இல் தூ உடை
முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து
செவி நேர்பு வைத்த செய்வுறு திவவின் . . . .140

நல்யாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்

மென்மொழி மேவலர் இன் நரம்பு உளர (138-142)

Celestials

Celestials follow them, in their faultless

pure clothing that appear like they had

absorbed smoke, their noble chests donning garlands

with newly opened blossoms, their hearts kind, and

their words delicate because of the music of lutes they

play whose strings have been tuned listening to their

tones with sharp ears.

Meanings:  புகை முகந்தன்ன – like they had absorbed smoke, மாசு இல் தூ உடை – faultless pure clothing, முகை வாய் அவிழ்ந்த – buds opened their petal tips and blossomed, தகை சூழ் ஆகத்து – with beautiful chests with garlands, with esteemed chests with garlands, செவி நேர்பு வைத்த செய்வுறு திவவின் நல் யாழ் நவின்ற நயனுடை நெஞ்சின் – with kind hearts used to playing fine lutes with tied frets and listening to them with their sharp ears, மென்மொழி மேவலர் இன் நரம்பு உளர – celestials with delicate/kind words because of the music of the lute

பாடும் மகளிர்

நோய் இன்று இயன்ற யாக்கையர் மாவின்
அவிர் தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்
பொன் உரை கடுக்கும் திதலையர் இன்நகைப்
பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல்

மாசு இல் மகளிரொடு மறு இன்றி விளங்க (143 – 147)

Female Musicians

They are followed by their faultless women

wearing bright waist ornaments,

who shine with skins like bright mango tree

sprouts, bodies with pallor spots that are like

touchstones on which gold is rubbed, and loins

that are perfect, low and high, where they need

to be.

Notes:  நோய் இன்று (143) – நோய் இன்றி என்பதன்கண் இன்றி என்னும் குறிப்பு வினையெச்சம் உகரமாய் இன்று ஆயிற்று.  இன்றி என்னும் வினையெஞ்சிறுதி நின்ற இகரம் உகரம் ஆதல் தொன்றியல் மருங்கின் செய்யுளுள் உரித்தே (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 35).  பணிந்து ஏந்து அல்குல் (146) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தாழ வேண்டியவிடம் தாழ்ந்து உயர வேண்டியவிடம் உயர்ந்த அல்குல்.

Meanings:  நோய் இன்று இயன்ற யாக்கையர் – those with bodies without diseases, மாவின் அவிர் தளிர் புரையும் மேனியர் – those with bodies like the bright sprouts of mango trees (புரை – உவம உருபு, a comparison word), அவிர்தொறும் பொன் உரை கடுக்கும் – bright like touchstones that are rubbed with gold, திதலையர் – women with bodies with pallor, இன்நகைப் பருமம் தாங்கிய – bearing bright waist ornaments, பணிந்து – lowered, ஏந்து – raised, அல்குல் – loins, மாசு இல் மகளிரொடு மறு இன்றி விளங்க – shine with their women with no fault

திருமால், சிவன், இந்திரன்

கடுவொடு ஒடுங்கிய தூம்புடை வால் எயிற்று
அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் . . .150
புள் அணி நீள் கொடிச் செல்வனும் வெள் ஏறு
வலம்வயின் உயரிய பலர் புகழ் திணி தோள்
உமைஅமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூ எயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்
நூற்றுப் பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல்
வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து
ஈர் இரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடை
தாழ் பெருந்தடக்கை உயர்த்த யானை

எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும் (148 – 159)

Thirumāl, Sivan and Indiran

They are followed by Thirumal with his long

flag with the emblem of the bird garudan,

with many stripes on his curved wings, who

attacks and kills fierce snakes hissing like flame

that hide poison in their hollow, white fangs.

He is followed by powerful Sivan with three

unblinking eyes, destroyer of three fortresses,

who holds on his sturdy right arm praised by

many, a flag with white bull emblem.  He shines

with his consort Umai.

He is followed by prosperous Indiran who has

a thousand eyes, who has won victories over

enemies he vanquished by offering a hundred

sacrifices, who rides on the neck of his tall

elephant Airavatham with four raised tusks,

low hanging huge trunk and beautiful gait.

Notes:  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).  திருகிளர் செல்வனும் (159) – வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை – செல்வத்தினால் விளங்குகின்ற இந்திரனும், நச்சினார்க்கினியர் உரை – திருமகளின் விளக்கமுடைய இந்திரனும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – திருமகளின் விளக்கமுடைய இந்திரனும்.

Meanings:  கடுவொடு – with poison, ஒடுங்கிய – hiding, தூம்புடை வால் எயிற்று – with hollow white fangs, அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல் பாம்புபடப் புடைக்கும் – attacks and kills the fierce snakes that hiss like flame, பல்வரிக் கொடுஞ்சிறைப் புள் – bird (Garudan) with many stripes and curved wings, அணி நீள் கொடிச் செல்வனும் – Thirumal with beautiful, long flag, வெள் ஏறு வலம் வயின் உயரிய – raised on his right arm the white bull (flag), பலர் புகழ் திணி தோள் – sturdy arms praised by all, உமை அமர்ந்து விளங்கும் – he shines with Umai with him, இமையா முக்கண் – three eyes that do not close, மூ எயில் முருக்கிய முரண்மிகு செல்வனும் – greatly powerful Sivan who ruined the three fortresses, நூற்றுப் பத்து அடுக்கிய நாட்டத்து – has thousand eyes he looks through, நூறு பல் வேள்வி முற்றிய – attained by hundreds of rituals (horse sacrifices), வென்று அடு கொற்றத்து – with victories in murderous battles, ஈர் இரண்டு ஏந்திய மருப்பின் – with four lifted tusks, எழில் நடை – beautiful walk, தாழ் பெருந்தடக்கை – low hanging huge trunk, உயர்த்த யானை எருத்தம் ஏறிய – seated on the neck of his tall elephant Airavatham, திருக்கிளர் செல்வனும் – prosperous Indiran

 நான்கு தெய்வங்களும் தேவர்களும்

நாற்பெருந் தெய்வத்து நல்நகர் நிலைஇய . . .160
உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கைப்
பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக
ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றி
தாமரை பயந்த தா இல் ஊழி
நான்முக ஒருவற் சுட்டி காண்வர
பகலில் தோன்றும் இகல் இல் காட்சி
நால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு

ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர் (160 – 168)

Four Gods and Celestials

Among the four Gods desiring the same

Principle of protecting the stable earth with

fine cities, only three praised by many have

appeared in this world. They pray to elevate

him to his high place, the faultless, four-faced

Brahman who rose from the navel lotus.

They are followed by thirty-three celestials of

four different categories, who do not differ in

their wisdom even though they appear to be

different since they are separated, and eighteen

deities presiding over the elements who attained

greatness.

Notes:  நாற்பெருந்தெய்வத்து (160) – நச்சினார்க்கினியர் உரை – இந்திரன், யமன், வருணன், சோமன், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை – கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்னும் நான்கு பெருந்திசைகட்குப் பாலகரான இந்திரன், யமன், வருணன், குபேரன், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பிரமன், திருமால், உருத்திரன், இந்திரன், ச. வே. சுப்பிரமணியன் உரை – பிரமன், திருமால், சிவன், இந்திரன்.   ஒன்பதிற்று இரட்டி (168) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒன்பதிற்று இரட்டி என்றது பதினெண்கணங்களை, பகலில் (166) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பகுத்து,  வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை – பகல்போல், ஏமுறு (163) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பாதுகாவலுறுகின்ற, வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை – இன்பமுறுகின்ற.  பெறீஇயர் (168) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெறீஇயர் என்றது எச்சப்பொருள் அல்லது வியங்கோள் பொருளில் வராமல் தொழிற்பெயராக வந்தமை காண்க.

Meanings:  நாற்பெருந்தெய்வத்து – of the four great Gods (Brahman, Thirumal, Sivan, Indiran), நல் நகர் நிலைஇய உலகம் காக்கும் – protect the stable world with fine cities (நிலைஇய – அளபெடை), ஒன்று புரி – desiring the one matter (protection), கொள்கை – principle, பலர் புகழ் – praised by many, மூவரும் – the three Gods (Thirumal, Sivan, Indiran), தலைவர் ஆக – as leaders, ஏம் உறு ஞாலம் தன்னில் – in this world they protect (ஏம் உறு – ஏமம் என்பதன் கடைக்குறை), தோன்றி – appeared, தாமரை பயந்த – yielded by a lotus flower, தா இல் – faultless, perfect, ஊழி நான்முக ஒருவற் சுட்டி – to elevate the four-faced one/Brahman to his position (நல் ஊழி – நல்ல முறை), காண்வர – beautifully, பகலில் தோன்றும் – appearing to be parts (பகலில் – பகுத்து), இகல் இல் – not differing, காட்சி – intelligence, நால் வேறு இயற்கை – 4 different categories, பதினொரு மூவரொடு – with 33 celestials, ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர் – the 18 deities who preside over the elements who attained greatness (பெறீஇயர் – அளபெடை)

மீன் பூத்தன்ன தோன்றலர் மீன் சேர்பு

வளி கிளர்ந்தன்ன செலவினர் வளியிடைத் . . .170
தீ எழுந்தன்ன திறலினர் தீப்பட
உரும் இடித்தன்ன குரலினர் விழுமிய
உறுகுறை மருங்கில் தம் பெறுமுறை கொண்மார்

அந்தரக் கொட்பினர் வந்து உடன் காண (169 – 174)

They resemble emerging stars seen together,

their swiftness like that of the wind, their voices

like the roars of thunder with lightning flashes,

and their might like fire that appears with winds.

They have come down from their celestial abode

to regain their former status through the graces

of lord Murukan, when they are distressed.

Meanings:   மீன் பூத்தன்ன தோன்றலர் – those who resemble the stars that appear, மீன் சேர்பு – stars together, வளி கிளர்ந்தன்ன – like winds that rise, செலவினர் – those who go, வளியிடைத் தீ எழுந்தன்ன திறலினர் – those with strength like the fire that rises with winds, தீப்பட உரும் இடித்தன்ன குரலினர் – those with voices like thunder that roars with lightning (தீ – மின்னலுக்கு ஆகுபெயர்), விழுமிய – with sorrow, உறுகுறை மருங்கில் தம் பெறுமுறை கொண்மார் –  to request and regain their former status (from Murukan), அந்தரக் கொட்பினர் வந்து உடன் காண – those who roam in the sky come and stand to be seen together

முருகன் மடந்தையோடு

தா இல் கொள்கை மடந்தையொடு சில நாள்
ஆவினன்குடி அசைதலும் உரியன் அதாஅன்று (175 – 176)

Murukan with his consort

He is in Tiruvāvinankudi, with Theivayānai

of faultless principles.  He is not just there.

Notes:  மடந்தையொடு (175) – நச்சினாக்கினியர் உரை – தெய்வயானையாருடன்.

Meanings:   தா இல் கொள்கை மடந்தையொடு – with the woman with faultless principles (தா – குற்றம்), சில நாள் ஆவினன்குடி அசைதலும் உரியன் – he is in Tiruvāvinankudi (பழனி), அதாஅன்று – not just there (அது அன்று என்பன அதான்று எனப்புணர்ந்து வருமொழி முதல் அளபெடுத்து அதாஅன்று என்றாயிற்று.  அதாஅன்று அஃதன்றியும் என்னும் பொருட்டு, அளபெடை)

4. திருவேரகம் (சுவாமிமலை) 
இரு பிறப்பாளர்

இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல் வேறு தொல்குடி
அறு நான்கு இரட்டி இளமை நல் யாண்டு
ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை . . .180
மூன்று வகைக் குறித்த முத்தீச் செல்வத்து

இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல (177 – 182)

4. Thiru Ērakam (Swamimalai)

 

The Twice Born

The twice-born, who perform the six duties

without fail, respected, born to ancient, traditional

families on both sides, who spend forty eight years

of their young age on the righteous path with

principles of uttering truths, who tend three sacred

fires which is their wealth, chant.

Notes:  இருமூன்று எய்திய இயல்பு – அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்.  (தொல்காப்பியம், புறத்திணையியல் 16). பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் ஆகியவை.

Meanings:    இரு மூன்று எய்திய – perform the 6 duties, இயல்பினின் வழாஅது – not faulting, இருவர்ச் சுட்டிய பல் வேறு தொல் குடி – born to ancient traditional families on both sides and respected, அறு நான்கு இரட்டி இளமை நல் யாண்டு ஆறினில் கழிப்பிய – spend 48 years and their youth on the path, அறன் நவில் கொள்கை – principle of uttering virtue/truth, மூன்று வகைக் குறித்த – three kinds indicated, முத்தீச் செல்வத்து – with the wealth of tending three sacred fires, இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல – the twice-born know the time and chant

ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறு எழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில் நவிலப் பாடி
விரை உறு நறுமலர் ஏந்தி பெரிது உவந்து

ஏரகத்து உறைதலும் உரியன் அதாஅன்று (183 – 189)

They wear three strands with three fine threads

in each and wet clothing that dry when

worn.  They worship holding their palms above,

praising him, uttering the six-syllabled secret

name, and scatter very fragrant flowers happily to

the God who resides in Ērakam.  He is not just there.

Notes:  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:  ஒன்பது கொண்ட – having nine, மூன்று புரி நுண் ஞாண் – three strands with three fine threads twisted together, புலராக் காழகம் – not dried clothing, clothes that are wet (காழகம் – ஆடை), புலர உடீஇ – wearing them to dry (உடீஇ – அளபெடை), உச்சிக் கூப்பிய கையினர் – those worshipping with their hands above,  தற்புகழ்ந்து – praising him, ஆறு எழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி – Vedic rituals with six letters, நா இயல் மருங்கில் நவிலப் பாடி – sing with their tongues learning well, விரைஉறு நறுமலர் ஏந்தி – throw many kinds of very fragrant flowers (விரை உறு – மணம் மிக்க), பெரிது உவந்து – greatly happy, ஏரகத்து உறைதலும் உரியன் – the god who resides in Ērakam, அதாஅன்று – not just there (அது அன்று என்பன அதான்று எனப்புணர்ந்து வருமொழி முதல் அளபெடுத்து அதாஅன்று என்றாயிற்று.  அதாஅன்று அஃதன்றியும் என்னும் பொருட்டு, அளபெடை)

5. குன்றுதோறாடல் (திருத்தணி)

 

 

குரவைக் கூத்து

பைங்கொடி நறைக்காய் இடைஇடுபு வேலன் . . .190
அம்பொதிப் புட்டில் விரைஇ குளவியொடு
வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன்
நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின்
கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர்
நீடு அமை விளைந்த தேக் கள் தேறல்
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து

தொண்டகச் சிறுபறைக் குரவை அயர (190 – 197)

5.  Kundruthorādal (Thiruthani)

 

Kuravai Dance

A vēlan adorns himself with green vines

with fragrant nutmeg strung in between, and

a garland woven with tailed pepper, kulavi and

white koothalam flowers.  The forest dwellers

with chests adorned with bright, fragrant

sandal paste, who carry strong bows that kill

animals, drink sweet liquor aged in long bamboo

pipes, and perform kuravai dances with their

relatives in the small mountain village, to the

beats of small thondakam drums.

Notes:  மூங்கிலில் விளைந்த கள்:  நற்றிணை 276 – வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு, அகநானூறு 348 – ஆடு அமைப் பழுநிக் கடுந்திறல் பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி, அகநானூறு 368 – அம் பணை விளைந்த தேக் கள் தேறல், பதிற்றுப்பத்து 81 – தூம்பு அகம் பழுனிய தீம் பிழி, திருமுருகாற்றுப்படை 195 – நீடு அமை விளைந்த தேக்கண் தேறல், மலைபடுகடாம் 171 – வேய்ப் பெயல் விளையுள் தேக் கள் தேறல், மலைபடுகடாம் 522 – திருந்து அமை விளைந்த தேக் கள் தேறல்.  வேலன் – நச்சினார்க்கினியர் உரை திருமுருகாற்றுப்படை 222 – பிள்ளையார் வேலைத் (பிள்ளையான முருகனின் வேல்) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேலன் என்றார்.  பைங்கொடி நறைக்காய் (190) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பச்சிலைக்கொடி, ச. வே. சுப்பிரமணியன் உரை – பசுமையான கொடி, வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை – பசிய இலையையுடைய கொடி.  புட்டில் (191) – புட்டில் என்பது சலங்கை என்ற பொருள் கொண்டது. வால்மிளகு சலங்கையின் மணியைப் போல் உள்ளதால் அதற்குப் புட்டில் எனப்பட்டது.

Meanings:  பைங்கொடி நறைக்காய் இடை இடுபு வேலன் – the velan adorns himself with creepers with green leaves with fragrant nutmeg woven in between (நறைக்காய் – சாதிக்காய், இடுபு – இட்டு, செய்பு என்னெச்சம்), அம்பொதிப் புட்டில் விரைஇ குளவியொடு வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன் – he also wears a garland strung with tailed pepper on his head, piper cubeba (வால்மிளகு), kulavi and white koothalam flowers (விரைஇ – அளபெடை), நறுஞ்சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின் – with chests that are bright with fragrant sandal paste, கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர் – forest dwellers with strong bows that perform cruel killings (கொலைஇய – அளபெடை), நீடு அமை விளைந்த தேக் கள் தேறல் – sweet liquor aged in long bamboo, குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து தொண்டகச் சிறுபறைக் குரவை அயர – they perform kuravai dances to the beats of the small thondakam drums with their relatives in the small mountain community

 குன்றுதோறாடலில் முருகன்

விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கான்
குண்டு சுனை பூத்த வண்டுபடு கண்ணி
இணைத்த கோதை அணைத்த கூந்தல் . . . .200
முடித்த குல்லை இலையுடை நறும்பூ
செங்கால் மராஅத்த வால் இணர் இடை இடுபு
சுரும்பு உணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை
திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ
மயில் கண்டன்ன மடநடை மகளிரொடு
செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்
செயலைத் தண் தளிர் துயல்வரும் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும் பல்லியத்தன்
தகரன் மஞ்ஞையன் புகர் இல் சேவல் அம் . . . .210
கொடியன் நெடியன் தொடி அணி தோளன்
நரம்பு ஆர்த்தன்ன இன்குரல் தொகுதியொடு
குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்
மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன்
முழவு உறழ் தடக் கையின் இயல ஏந்தி
மென்தோள் பல்பிணை தழீஇ தலைத்தந்து

குன்றுதொறு ஆடலும் நின்றதன் பண்பே அதாஅன்று (198 – 217)

Murukan in Kundruthorādal 

The young mountain women with delicate

walks, like peacocks, wear garlands strung with

many fragrant flowers plucked from deep

springs, opened by their fingers touching them,

which are swarmed by bees.  Their tied hair is

adorned with kullai flowers with leaves

and white clusters of red-trunked kadampam

flowers which are swarmed by bees.

Their loins with gem strands are covered with large,

cool, dark leaves that move.

Murukan wears red clothing, cool asoka sprouts

sway from his ears, and tight clothing covers his body.

He wears warrior anklets and a vetchi flower garland.

He plays the flute, musical horns and many small

instruments.  He has a male goat and a peacock.

His beautiful flag has a faultless cock.  Fabric wrapped

around his fragrant, cool, delicate waist with a sash,

drapes down to the ground.

He is surrounded by mountain women whose voices

are as sweet as lutes. Lifting his large arms resembling

muzhavu drums, he embraces delicately many women.

Such is the nature of playing in the mountains.

He is not just there.

Notes:  சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல் 29).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).  குறும்பொறி – University of Madras Lexicon – girdle, sash, உதரபந்தம்.

Meanings:  விரல் உளர்ப்பு அவிழ்ந்த – opened by fingers shaking/moving them, வேறுபடு நறுங்கான் – various fragrances (கான் – நறுமணம்), குண்டு சுனை பூத்த – bloomed in the deep springs, வண்டுபடு கண்ணி – flower strands attacked by bees, இணைத்த கோதை – woven garland, அணைத்த கூந்தல் – tied hair, முடித்த குல்லை – tied kullai flowers, basil, இலையுடை நறும் பூ –fragrant flowers with leaves, செங்கால் – red-trunked trees or red-stemmed flowers,  மராஅத்த – of kadampam trees (அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது), வால் இணர் – white clusters, இடை இடுபு – placed between (இடுபு – இட்டு, செய்பு என்னெச்சம்), சுரும்பு உண – bees swarming, bees to eat (உண உண்ண என்பதன் விகாரம்), தொடுத்த – strung, பெருந்தண் மாத்தழை – huge, cool dark leaves, திருந்து காழ் அல்குல் – waist with perfect gem strands,  திளைப்ப – moving, உடீஇ – wearing (உடீஇ – அளபெடை), மயில் கண்டன்ன மடநடை மகளிரொடு – with women whose walks are like those of peacocks, செய்யன் சிவந்த ஆடையன் – the red one with red clothing, Murukan, செவ்வரைச் செயலைத் தண் தளிர் துயல்வரும் காதினன் – he is one with cool asoka sprouts from the fine/red mountain swaying from his ears, Saraca indica, கச்சினன் – he is one wearing a cloth around his body, கழலினன் – he is wearing warrior anklets, செச்சைக் கண்ணியன் – he is wearing vetchi flower garland on his head, குழலன் – he is playing the flute, கோட்டன் – he is with musical horns, குறும் பல்லியத்தன் – he is one who plays many small instruments, தகரன் – he is one with a male goat, மஞ்ஞையன் – he is one who is on the peacock,  புகர் இல் சேவல் அம் கொடியன் – he is one with a beautiful flag with spotless/faultless rooster, நெடியன் – he is the tall one, தொடி அணி தோளன் – he is one with bracelets on his arms,  நரம்பு ஆர்த்தன்ன இன் குரல் தொகுதியொடு – with sweet-sounding women with lute sounds, குறும் பொறிக் கொண்ட –  having a small sash, நறுந்தண் சாயல் – fragrant and cool and delicate, மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன் – he is one with clothes wrapped around his waist draping to the ground (நிலன் – நிலம் என்பதன் போலி), முழவு உறழ் தடக் கையின் இயல ஏந்தி – lifting on his muzhavu drum-like huge hands (உறழ் – உவம உருபு, இயல ஏந்தி – பொருந்தத் தூக்கி), மென் தோள் பல் பிணை தழீஇ – embracing many women with delicate arms (தழீஇ – அளபெடை), தலைத்தந்து – give them space fittingly, great in dancing, குன்றுதொறு ஆடலும் நின்றதன் பண்பே – the nature of playing in all the mountains, அதாஅன்று – not just there (அது அன்று என்பன அதான்று எனப்புணர்ந்து வருமொழி முதல் அளபெடுத்து அதாஅன்று என்றாயிற்று.  அதாஅன்று அஃதன்றியும் என்னும் பொருட்டு, அளபெடை)

6. பழமுதிர்சோலை

 

முருகன் இருப்பிடங்கள்

சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊர் ஊர் கொண்ட சீர்கெழு விழவினும் . . . .220
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்
வேலன் தைஇய வெறி அயர் களனும்
காடும் காவும் கவின்பெறு துருத்தியும்
யாறும் குளனும் வேறுபல் வைப்பும்
சதுக்கமும் சந்தியும் புதுப் பூங்கடம்பும்

மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும் (218 – 226)

6.  Palmuthir Chōlai

 

Murukan’s Places

He is in the veriyāttam grounds created

by the vēlan, where

tiny millet is mixed with flowers, young

goats are killed, and rooster flags are flown.

In all the splendid festivals in all the towns,

those who worship, praise him.

He is in the lovely islands, forests, groves,

rivers and in ponds.

He is in various different towns, in the

common grounds, and in the street junctions.

He is in the kadampam trees with flowers and

in the common grounds.  He is also on columns.

Notes:  கந்துடை நிலையினும் (226) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கந்துடை நிலை என்றது, இறைவன் அருட்குறியாகக் கல் தறி நட்டியிருக்கும் இடத்தை, பண்டைக் காலத்தே இறைவணக்கம் செய்தற்பொருட்டுக் கல்தறி நட்டு அதனை வணங்கி வந்தனர்.  அக்கல்தறியே பிற்றை நாள் சிவலிங்க உருவமாகக் கொள்ளப்பட்டதென்று அறிக.  வேலன் – நச்சினார்க்கினியர் உரை திருமுருகாற்றுப்படை 222 – பிள்ளையார்வேலைத் (பிள்ளையான முருகனின் வேல்) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேலன் என்றார்.

Meanings:  சிறுதினை மலரொடு விரைஇ – mixing tiny millet with flowers, மறி அறுத்து – killing young goats, வாரணக் கொடியொடு – with rooster flags, வயிற்பட – to stay there, நிறீஇ – placed there, ஊர் ஊர் கொண்ட சீர் கெழு விழவினும் – in the splendid festivals in all the towns, ஆர்வலர் ஏத்த – worshippers praise, மேவரு நிலையினும் – acceptable to the mind, வேலன் தைஇய வெறி அயர் களனும் – veriyāttam grounds created by the vēlan (தைஇய – அளபெடை) , காடும் காவும் – in the forests and groves, கவின் பெறு துருத்தியும் – and in the beautiful islands, யாறும் குளனும் – and in the rivers and ponds (குளன் – குளம் என்பதன் போலி), வேறு பல் வைப்பும் – and in the various different towns, சதுக்கமும் – and the town’s common grounds, சந்தியும் – and the junctions where four and three streets meet, புதுப் பூங்கடம்பும் மன்றமும் – and in the kadampam trees with new flowers and in the common grounds, பொதியிலும் கந்துடை நிலையினும் – and in the common areas and in the poles

 

 

குறமகளின் வெறியாட்டு

 

ஆண்தலைக் கொடியொடு மண்ணி அமைவர
நெய்யோடு ஐயவி அப்பி ஐது உரைத்து
குடந்தம்பட்டு கொழுமலர் சிதறி
முரண்கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ . . .230
செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி
மதவலி நிலைஇய மாத்தாட் கொழு விடைக்
குருதியொடு விரைஇய தூவெள் அரிசி
சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇ
சிறுபசு மஞ்சளொடு நறு விரை தெளித்து
பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துணையுற அறுத்துத் தூங்க நாற்றி
நளிமலைச் சிலம்பில் நல்நகர் வாழ்த்தி
நறும்புகை எடுத்து குறிஞ்சி பாடி
இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க . . .240
உருவப் பல்பூத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினை பரப்பி குறமகள்
முருகு இயம் நிறுத்து முரணினர் உட்க

முருகு ஆற்றுப்படுத்த உருகெழு வியல் நகர் (227 – 244)

Veriyāttam Ritual

To invite Murukan, a woman from the dense

mountain planted a flag with a man’s head and

a bird’s body, applied ghee and tiny mustard seed

paste, chanted softly, worshipped strewing big

flowers, wore clothing of two different shapes, tied

red thread, scattered puffed rice, mixed the blood

of a fat male goat with great strength and huge legs,

gave many offerings, offered fragrant water and

small, fresh turmeric, hung cool, red oleander

garlands together,

spread fragrant smoke, sang kurinji tune songs,

played musical instruments that sounded along

with roaring waterfalls, threw as offerings many

flowers with various shapes, spread fear-causing

blood with red millet, and played instruments to

please him, that caused fear in non-believers in

the fierce, huge temple of Murukan.

Notes:  ஆண்தலை (227) – மாண்தலை என்றும் பாடம் உண்டு.    நச்சினார்க்கினியர் உரை – ஆண்தலைக் கொடி என்பது பாடமாயின் தலை ஆண்மகனின் தலையாகவும் உடல் புள்ளின் உடலாகவும் எழுதின கொடி என்க.  உரு (244) – அச்சம்.  உரு உட்காகும் புரை உயர்வாகும். (தொல்காப்பியம், உரியியல் 4).  நளி – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), நளி என் கிளவி செறிவும் ஆகும், (தொல்காப்பியம், உரியியல் 24).  குடந்தம்பட்டு (229) – நச்சினார்க்கினியர் உரை – வணங்குதல், வழிபடுதல்.  குடவென்பது தடவென்பது போல வளைவை உணர்த்துவதோர் உரிச்சொல்லாகலின் அதனடியாகப் பிறந்த பெயருமாம்.

Meanings:  ஆண்தலைக் கொடியொடு – with flag with a head of man and body of a bird, மண்ணி அமைவர – cleaning perfectly, நெய்யோடு ஐயவி அப்பி –  rubbed ghee and white mustard paste, ஐது உரைத்து – chanted delicately, chanted beautifully, குடந்தம்பட்டு – worshipped, கொழு மலர் சிதறி – strew big flowers, முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ – wore with two different shaped clothing (உடீஇ – அளபெடை), செந்நூல் யாத்து – tied red thread, வெண்பொரி சிதறி – scattered white puffed rice, மதவலி நிலைஇய மாத்தாட் கொழு விடைக் குருதியொடு விரைஇய – mix with blood of fat male goat with great strength and huge legs (மதவலி – ஒருபொருட் பன்மொழி, நிலைஇய – அளபெடை, விரைஇய – அளபெடை), தூ வெள் அரிசி சில் பலிச் செய்து – offered a little pure white rice, பல் பிரப்பு இரீஇ – gave many offerings (இரீஇ – அளபெடை), சிறு பசு மஞ்சளொடு – along with small fresh turmeric, நறு விரை தெளித்து – scattered fragrant water, பெருந்தண் கணவீர – huge cool red oleander, நறுந்தண் மாலை – fragrant cool garlands, துணையுற – together, அறுத்துத் தூங்க நாற்றி – cut and hung, நளி மலைச் சிலம்பில் – on the dense mountain, on the huge mountain, நல் நகர் வாழ்த்தி – praise the fine houses,  நறும் புகை எடுத்து – spread fragrant smoke, குறிஞ்சி பாடி – sang in kurinji melody, இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க – played sweet music along with sweet music roaring waterfalls, உருவப் பல் பூத் தூஉய் – throw as offerings many flowers with different shapes (தூஉய் – அளபெடை), வெருவரக் குருதிச் செந்தினை பரப்பி – spread blood with red/fine millet causing fear, குறமகள் முருகு இயம் நிறுத்து – the mountain woman playing instruments that please Murukan, முரணினர் உட்க – causing fear to those not agreeable, முருகு ஆற்றுப்படுத்த – causing Murukan to come, உருகெழு வியல் நகர் – fierce huge temple

ஆடுகளம் சிலம்பப் பாடி பலவுடன்
கோடு வாய் வைத்து கொடுமணி இயக்கி
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட

ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்தவாறே (245 -249)

Singing loudly in the veriyāttam ground with
frenzied dances, as horns were blown and
curved bells were rung, the devotees praised the
brave elephant Pinimukam that does not back off.

Murukan lives in all those places forever for those
who worship him, who desire and attain what they
want.  I am stating what I know.

Notes:  பலவுடன் கோடு வாய் வைத்து (245-246) – கோடு பலவுடன் வாய் வைத்து என்று படிக்கவும்.  பிணிமுகம் (247) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பிணிமுகம் என்ற பட்டதையுடைய யானை.  பிணிமுகம் என்பதற்குப் பெரும்பாலோர் மயில் என்றே பொருள் கூறுவர்.  பிணிமுகம் என்பது முருகன் ஏறும் யானை ஒன்றற்கே பெயர் என்பாரும் உளர்.  பிணிமுகம் வாழ்த்தும் வழக்கத்தை ‘கடம்பும் களிறும் பாடி’ (தொல்காப்பியம், பொருளதிகாரம் 16) என்பதானும் அறிக.  பிணிமுகம் என்பதனைப் பட்டம் எனக் கொண்டு அதனுடைய யானை என்றார் நச்சினார்க்கினியர்.  இப்பொருளில் பிணிமுகம் என்பது அன்மொழித்தொகை என்க.

Meanings:  ஆடு களம் சிலம்பப் பாடி – singing loudly in the veriyāttam ground, பலவுடன் கோடு வாய்வைத்து – many horns were blown, கொடு மணி இயக்கி – they rang curved bells, ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி – they praised the brave elephant named Pinimukam that does not back off, வேண்டுநர் – those who desire, வேண்டியாங்கு எய்தினர் வழிபட – for those who desired and attained to worship, ஆண்டு ஆண்டு உறைதலும் – lives there forever, அறிந்தவாறே – as I know

முருகனைக் கண்டு துதித்தல்

ஆண்டு ஆண்டு ஆயினும் ஆக, காண்தக   250
முந்து நீ கண்டுழி முகன் அமர்ந்து ஏத்திக்,
கைதொழூஉப் பரவிக், கால் உற வணங்கி,
நெடும் பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ!   255
ஆல் கெழு கடவுட் புதல்வ! மால் வரை
மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ!
இழை அணி சிறப்பின் பழையோள் குழவி!
வானோர் வணங்கு வில் தானைத் தலைவ!   260
மாலை மார்ப! நூல் அறி புலவ!
செருவில் ஒருவ! பொருவிறல் மள்ள!
அந்தணர் வெறுக்கை! அறிந்தோர் சொல்மலை!
மங்கையர் கணவ! மைந்தர் ஏறே!
வேல்கெழு தடக்கைச் சால் பெருஞ்செல்வ!   265
குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண் பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ!
பலர் புகழ் நன்மொழிப் புலவர் ஏறே!
அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக!
நசையுநர்க்கு ஆர்த்தும் இசை பேர் ஆள!   270
அலந்தோர்க்கு அளிக்கும் பொலம் பூண் சேஎய்!
மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து
பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள்!
பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்!
சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி!   275
போர் மிகு பொருந குரிசில்! எனப்பல

யான் அறி அளவையின் ஏத்தி, ஆனாது, (250 – 277)

Worshipping Murukan

When you see him in front of you, the god who

exists in all the places I mentioned and in other places,

praise him, lift your hands and pray to him.  Worship

prostrating, so that your head can touch his feet.

Tell him, “O Lord who was received by fire,

one of the five elements, on its palms, born to six

in six forms in a fresh mountain spring rich in

kuvalai blossoms, O son of Sivan under a banyan tree,

O son of Parvathi, the daughter of a mountain king,

O lord who is death to enemies, O son of Kotravai

who is victorious in battles, O child of the ancient forest

goddess with splendid jewels, O lord of an army with

curved bows worshipped by celestials, O Lord donning

flower garlands on your chest, O lord with knowledge of

books, O lord who has no equal in battles, O great

warrior of battles,  O wealth of Brahmins, O words of the

wise, O husband of women,

O lion among warriors, O Great, noble Lord with a large

hand that carries a spear,

O Lord who broke a mountain, O Lord of the mountains

that touch the skies, O Lord who is like a lion to poets

with fine words and great fame, O Murukan with great

name and precious tradition, O famed Lord who gives

boons to those who seek you, O Red Lord with gold jewels

who gives to those who are suffering, O fierce Lord whose

victorious chest helps those who come to you in need,

O Great God who is praised by the wise, O Lord with great

strength who fought battles and killed Sooran and his clan.”

Praise him in this manner.  Not just stating what I told

you, also tell him this,

Notes:   Perumpānātruppadai lines 456-458 refer to Kotravai being the mother of Murukan கடுஞ்சூர் கொன்ற பைம்பூண் சேஎய் பயந்த மாமோட்டு துணங்கை அம் செல்வி.  She is also mentioned in Akanānūru 245-4 as கான் அமர் செல்வி.  பழையோள் (259) – நச்சினார்க்கினியர் உரை – காடு கிழாள்.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).  நீலப் பைஞ்சுனை (253) – பொ. வே. சோமசுந்தரனார் திருமுருகாற்றுப்படை உரை – தருப்பை வளர்ந்த பசிய சுனையிடத்தே. பொ. வே. சோமசுந்தரனார் பரிபாடல் உரை – நீலப் பூக்களை உடைய பசிய சரவணம் என்ற சுனை.

Meanings:  ஆண்டு ஆண்டு ஆயினும் ஆக – the god who is there in all the places I mentioned and in other places, காண்தக – worthy to see, முந்து நீ கண்டுழி – when you see him in front of you, முகன் அமர்ந்து ஏத்தி – look at him with your face and praise him (முகன் – முகம் என்பதன் போலி), கைதொழூஉப் பரவி – lift your hands and worship him (தொழூஉ – அளபெடை), கால் உற வணங்கி – fall down and worship him for your head to touch his feet, நெடும் பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை – in a fresh spring with blue waterlilies on a huge mountain’s summit, in a fresh spring with tharuppai grass on the huge mountain’s summit, குசைப்புல், Poa cynosuroides, ஐவருள் ஒருவன் – one among five – sky, wind, fire, water, land, அங்கை ஏற்ப – the fire holding in its palm (அகம் கை என்பதன் மரூஉ, பெயர்ச்சொல்), அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ – O lord with six forms who came into being because of six, ஆல் கெழு கடவுட் புதல்வ – O son of Sivan under a banyan tree, மால்வரை மலைமகள் மகனே – O son of Parvathi (Umai) who is the daughter of the lord of the high mountains, மாற்றோர் கூற்றே – O Death to enemies, வெற்றி வெல் போர்க் கொற்றவை சிறுவ – O son of goddess Kotravai who is victorious in battles, இழை அணி சிறப்பின் பழையோள் குழவி – O child of the ancient goddess of the forest wearing splendid jewels, வானோர் வணங்கு வில் தானைத் தலைவ – O lord of the army with curved bows worshipped by celestials, மாலை மார்ப – O lord with flower garlands on your chest, நூல் அறி புலவ – O wise man/poet who knows books, செருவில் ஒருவ – O lord who has no equals in battle skills, பொரு விறல் மள்ள – O brave warrior of battles, அந்தணர் வெறுக்கை  – you are the wealth of Brahmins, அறிந்தோர் சொல்மலை – O words of the wise,  மங்கையர் கணவ – O husband of women, மைந்தர் ஏறே  – O lion among warriors, வேல் கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ – O greatly noble lord with large hands that carry a spear, குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து – O great lord who broke a mountain victoriously, விண் பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ – O lord of the tall mountains that touch the sky, பலர் புகழ் நன்மொழிப் புலவர் ஏறே – O lord who is like a lion to poets with fine words and great fame, அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக – O Murukan with great name of precious tradition (அரும் பெறல் – பெறல் அரும் – பெறுவதற்கு அரிய), நசையுநர்க்கு ஆர்த்தும் இசைபேர் ஆள – O famed lord who gives boons to those who come with desire, அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய் – O Murukan with gold jewels who gives to those who are suffering, மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள் – O fierce lord whose victorious-in-close wars chest protects those who come to you in need (நெடுவேஎள் – அளபெடை), பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள் – O great God who is praised by the wise, சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி போர்மிகு பொருந குரிசில் – O lord with great strength who fought battles and killed Sooran and his relatives (மதவலி – ஒருபொருட் பன்மொழி), எனப்பல  யான் அறி அளவையின் – praise him to the extent that I have told you,  ஆனாது –  not satisfied with just that

நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின்
நின் அடி உள்ளி வந்தனென் நின்னொடு
புரையுநர் இல்லாப் புலமையோய் எனக் . . . .280

குறித்தது மொழியா அளவையின் (278 -281)

“To measure you and know you is impossible

for lives on earth.  I came here thinking about

surrendering to your feet, O Lord of spiritual

wealth with no equal,”

Meanings:    நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின் – to measure you and know you is impossible for lives on earth, நின் அடி உள்ளி வந்தனென் – I came thinking about surrendering to your feet, நின்னொடு புரையுநர் இல்லாப் புலமையோய் – O lord of spiritual wealth with nobody to match you, எனக் குறித்தது மொழியா அளவையின் – even before you request what you consider

… … … .. …. குறித்து உடன்
வேறு பல் உருவின் குறும்பல் கூளியர்
சாறு அயர் களத்து வீறுபெறத் தோன்றி
அளியன் தானே முதுவாய் இரவலன்
வந்தோன் பெரும நின் வண்புகழ் நயந்து என

இனியவும் நல்லவும் நனிபல ஏத்தி (281 – 286)

Since you appealed, his devotees will appear in

various forms, splendidly in this festive place,

and plead for you, “This wise man who has come

seeking you is pitiable, O lord!  Desiring to

praise your great fame, he has come uttering

many sweet and nice words”.

Notes:  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:    குறித்து உடன் – since you make appeals, வேறு பல் உருவின் குறும் பல் கூளியர் – workers/devotees in various forms, சாறு அயர் களத்து – in an arena where festivals are celebrated, வீறு பெறத் தோன்றி – appearing splendidly, அளியன் – he is a pitiable man, தானே முதுவாய் இரவலன் வந்தோன் – a wise man with needs has come, பெரும – O lord, நின் வண் புகழ் நயந்து – desiring you of great fame, என – thus, இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி – praising very greatly and sweetly and nicely

முருகன் அருள் புரிதல்

தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின்
வான்தோய் நிவப்பின் தான் வந்து எய்தி
அணங்கு சால் உயர் நிலை தழீஇ பண்டைத்தன்
மணம் கமழ் தெய்வத்து இளநலம் காட்டி . . . .290
அஞ்சல் ஓம்புமதி அறிவல் நின் வரவு என
அன்புடை நல்மொழி அளைஇ விளிவு இன்று
இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து
ஒரு நீ ஆகித் தோன்ற விழுமிய

பெறல் அரும் பரிசில் நல்குமதி (287 – 295)

Murukan’s Kindness

At this time Murukan will appear in an afflicting,

splendid, divine form, touching the earth and

the sky, show his ancient, youthful form with sweet

fragrance and tell you kindly, “Do not fear!  I am

aware of your visit,” and he will give you great,

difficult-to-attain gifts, appearing to you in this

world surrounded by dark, deep waters.

Notes:  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).   முந்நீர் – தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது.  முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் ‘தமிழ்க்காதல்’ நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடைமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு 9 உரை, நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி 75 உரை.

Meanings:    தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின் – in the bright divine form, in the splendid divine form, வான்தோய் நிவப்பின் தான் வந்து எய்தி – appearing in a form that is high and touching the skies, அணங்கு சால் உயர் நிலை தழீஇ – with afflicting divine nature (afflicting since his attributes cannot be comprehended by people), பண்டைத்தன் மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி – he will show his ancient youthful form with sweet fragrance, அஞ்சல் ஓம்புமதி – do not fear, அறிவல் நின் வரவு – I am aware of your visit, என அன்புடை நல்மொழி அளைஇ – thus he will utter kind words to you, விளிவு இன்று – without ruin, இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து – in the world surrounded by dark deep waters (வளைஇய – அளபெடை), ஒரு நீ ஆகித் தோன்ற – appearing to you, விழுமிய – great, பெறல் அரும் – difficult to attain, பரிசில் நல்குமதி – he will give you gifts

முருகனின் மலையின் வளம்

 

…. … … …. பலவுடன்
வேறுபல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து
ஆர முழு முதல் உருட்டி வேரற்
பூவுடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு
விண் பொரு நெடு வரைப் பரிதியின் தொடுத்த
தண் கமழ் அலர் இறால் சிதைய நன்பல . . . .300
ஆசினி முது சுளை கலாவ மீமிசை
நாக நறுமலர் உதிர யூகமொடு
மாமுக முசுக்கலை பனிப்ப பூநுதல்
இரும்பிடி குளிர்ப்ப வீசி பெருங் களிற்று
முத்துடை வான் கோடு தழீஇ தத்துற்று
நன்பொன் மணி நிறம் கிளர பொன் கொழியா
வாழை முழு முதல் துமிய தாழை
இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கி
கறிக்கொடிக் கருந்துணர் சாய பொறிப்புற
மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇ . . . .310
கோழி வயப்பெடை இரிய கேழலொடு
இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன
குரூஉ மயிர் யாக்கைக் குடாவடி உளியம்
பெருங்கல் விடர் அளைச் செறிய கருங்கோட்டு
ஆமா நல் ஏறு சிலைப்பச் சேண் நின்று
இழுமென இழிதரும் அருவி
பழம் முதிர் சோலை மலை கிழவோனே (295 – 317)

The Beauty of His Mountain

He is the lord of the mountain with groves with

abundant fruits.  From his mountain, waterfalls

cascade down like many swaying flags, carrying

akil wood, uprooting sandal trees, hurting the

stalks of small bamboo with flowers by tearing their

roots, breaking sun-shaped, wide honeycombs with

cool fragrance, mixing mature segments of breadfruits

in their water, dropping fragrant nākam flowers from

above, causing ookam monkeys to shiver along with

black-faced monkeys, making cow elephants tremble

in the cold, carrying white, pearl-filled tusks of bull

elephants, exposing bright gems and gold, dropping

banana trees with trunks, making tender coconuts

from fine clusters to drop, causing pepper vines with

black clusters to break, causing peacocks with spots

and delicate walk to fear, making female birds and pigs

to move away, causing bears with curved legs and body

fur as dark as the fiber of palmyra trees with pith to

crowd in caves, and causing fine bulls with dark horns

to bellow.

Notes:  யானையின் தந்தத்தில் முத்து:  அகநானூறு 282 – வால் மருப்பு ஒடிய உக்க தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு, நற்றிணை 202 – புலி பொரச் சிவந்த புலால் அம் செங்கோட்டு ஒலி பல் முத்தம், புறநானூறு 161 – முத்துப்படு முற்றிய உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு, புறநானூறு 170 –  வெண்கோடு பயந்த ஒளி திகழ் முத்தம், பதிற்றுப்பத்து 32 – முத்துடை மருப்பின், கலித்தொகை 40 – முத்து ஆர் மருப்பின், திருமுருகாற்றுப்படை 304 – பெருங்களிற்று முத்துடை வான்கோடு தழீஇ,  குறிஞ்சிப்பாட்டு 36 – முத்து ஆர் மருப்பின், மலைபடுகடாம் 518 – முத்துடை மருப்பின். n குரூஉ (313) – நிறம், ‘குருவும் கெழுவும் நிறமாகும்மே’ (தொல்காப்பியம், உரியியல் 5).  முசுக்கலை (303) – ஆண் குரங்கு.  ‘கலையென் காட்சி உழைக்கும் உரித்தே’, நிலையிற்றப் பெயர் முசுவின் கண்ணும்’ (தொல்காப்பியம். மரபியல் 45, 47).  கொழியா – கொழித்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  இரும்பனை வெளிற்றின் (312) – வெளிற்றின் இரும்பனை என மாற்றுக.

Meanings:  பலவுடன் வேறு பல் துகிலின் நுடங்கி – swaying like various different flags (துகிலின் – இன் ஒப்புப்பொருளில் வருவது, ஐந்தாம் வேற்றுமை உருபு), அகில் சுமந்து – carrying akil wood, ஆர முழு முதல் உருட்டி – uprooting and pushing thick sandal tree trunks, வேரல் பூவுடை அலங்கு சினை புலம்ப – hurting the branches of bamboo with flowers (வேரல் – small variety of bamboo, வேர் கீண்டு- tearing roots, splitting roots, விண் பொரு நெடுவரை – sky touching tall mountains,  பரிதியின் – like the sun (பரிதியின் – இன் ஒப்புப்பொருளில் வருவது, ஐந்தாம் வேற்றுமை உருபு), தொடுத்த – attached (to the mountains), தண் கமழ் அலர் இறால் சிதைய – breaking wide honeycombs with cool fragrance, நன்பல ஆசினி முதுசுளை கலாவ – mature segments of breadfruits get mixed, மீமிசை நாக நறுமலர் உதிர – fragrant nākam flowers drop from high above (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), surapunnai trees, long-leaved two-sepalled gamboge trees, or punnai trees, Laurel Tree, Mast wood Trees, Calophyllum inophyllum  according to the University of Madras Lexicon, Mesua ferrea according to P.L. Sami and R. Panchavarnam, யூகமொடு மாமுக முசுக்கலை பனிப்ப – causing yookam monkeys to tremble along with dark-faced old monkeys, langur monkey, Semnopithecus priamus, பூ நுதல் – beautiful forehead, forehead with patterns, இரும்பிடி குளிர்ப்ப வீசி – making dark cow elephants to tremble in the cold blowing wind, பெருங் களிற்று முத்துடை வான்கோடு தழீஇ – carrying white tusks with pearls of huge bull elephants (தழீஇ – அளபெடை), தத்துற்று – flowing down, நன்பொன் மணி நிறம் கிளர – exposing fine gold and gems with color, as fine gold and gems shine, பொன் கொழியா – gold dust is washed up, வாழை முழு முதல் துமிய – breaking banana trees with thick trunks, தாழை இளநீர் விழுக்குலை உதிர – fine bunches of tender coconuts fall down, தாக்கி – attacks, கறிக் கொடிக் கருந்துணர் – pepper vines with black bunches, சாய – lean, fall down, are ruined, பொறிப்புற மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇ – many peacocks with delicate walk and spots on their backs fearing (வெரீஇ – அளபெடை, வெருவி என்ற வினையெச்சம் திரிந்து அளபெடுத்தது), கோழி வயப்பெடை இரிய – strong hens move away, கேழலொடு – along with boars, இரும்பனை – dark palmyra palm trees, வெளிற்றின் – with pith, புன்சாய் அன்ன குரூஉமயிர் – hair the color of thin palm fiber (குரூஉ – அளபெடை), யாக்கை – body, குடா அடி உளியம் – bears with curved feet, பெருங்கல் விடர் அளைச் செறிய – they reach the mountain cracks and caves (விடர் அளை – இருபெயரொட்டு), கருங்கோட்டு ஆமா நல் ஏறு சிலைப்ப – fine wild bulls with dark horns bellow, சேண் நின்று இழுமென இழிதரும் அருவி – from far/high waterfalls that roar down (இழுமென – ஒலிக்குறிப்பு), பழம் முதிர் சோலை மலை கிழவோனே – the lord of the mountain with ancient groves with fruits