அகநானூறு 301-400 

Translated by Vaidehi Herbert  

Copyright ©  All Rights Reserved

தமிழ் உரை நூல்கள்:
அகநானூறு – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – தமிழ் மண் பதிப்பகம், சென்னை
அகநானூறு – பொ. வே. சோமசுந்தரனார் உரை- சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை

நித்திலக்கோவை 301-400

அகநானூறு 301, அதியன் விண்ணத்தனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
“வறன் உறு செய்யின் வாடுபு வருந்திப்,
படர் மிகப் பிரிந்தோர் உள்ளுபு நினைதல்
சிறு நனி ஆன்றிகம்” என்றி தோழி!
நல்குநர் ஒழித்த கூலிச் சில்பதம்
ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு,  5
நீர் வாழ் முதலை ஆவித்தன்ன
ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடத்து,
ஊர் இஃது என்னாஅர் ஊறு இல் வாழ்க்கை,
சுரமுதல் வருத்தம் மரமுதல் வீட்டிப்
பாடு இன் தெண் கிணை கறங்கங்காண்வரக்  10
குவி இணர் எருக்கின் ததர் பூங்கண்ணி
ஆடூஉச் சென்னித் தகைப்ப, மகடூஉ,
முளரித் தீயின் முழங்கு அழல் விளக்கத்துக்
களரி ஆவிரைக் கிளர் பூங்கோதை
வண்ண மார்பின் வன முலைத் துயல்வரச்,  15
செறி நடைப் பிடியொடு களிறு புணர்ந்து என்னக்
குறு நெடுந்தூம்பொடு முழவுப் புணர்ந்து இசைப்பக்,
கார் வான் முழக்கின் நீர் மிசைத் தெவுட்டும்
தேரை ஒலியின் மானச் சீர் அமைத்து,
சில் அரி கறங்கும் சிறு பல் இயத்தொடு  20
பல்லூர் பெயர்வனர் ஆடி, ஒல்லெனத்,
தலைப் புணர்த்து அசைத்த பல் தொகைக் கலப்பையர்,
இரும்பேர் ஒக்கல் கோடியர் இறந்த
புன்தலை மன்றங்காணின், வழிநாள்
அழுங்கல் மூதூர்க்கு இன்னாது ஆகும் 25
அதுவே மருவினம் மாலை, அதனால்
காதலர் செய்த காதல்
நீடின்று மறத்தல் கூடுமோ, மற்றே?

Akanānūru 301, Athiyan Vinnathanār, Pālai Thinai – What the heroine said to her friend
You say we should stop worrying
and thinking about him for a little while,
the man who left, causing me to struggle
like wilted crops in an arid field.

Artists eat rapidly the meager food given
as gifts by others, without saving any.
They go on wagons covered with woven
grass, with openings that look like mouths
of yawning crocodiles that live in water.
They never say that any town is theirs.
They lead their lives without hindrances,
and abandon their sorrows at the bases
of the trees in the wasteland.

They dance to clear, sweet kinai drumbeats,
men with pointed, thick erukkam flower
cluster strands decorating their heads and
women wearing bright āvirai flower
garlands that sway on their pretty breasts
in the bright light of roaring, firewood flames.
in the forest.  Their short and long thoompu
sounds are instrument like the deep breaths
of a male elephant and his female with short
strides.  They beat muzhavu drums whose
rhythmic, sharp tones are like the croaking
sounds of toads standing in water,
along with the roars of monsoon clouds.

With their small instruments which create
rhythmic music, they go to many towns with
their large retinue and dance, packing rapidly
their instruments in draw-string bags.

In the evenings, I am sad like a loud, ancient
town which sees the dull common grounds the day
after it had been abandoned by the artists.  How
can I forget for long the love he showered on me?

Notes:  பிரிவிடை வேறுபட்ட தலைவி வற்புறுத்தும் தோழியிடம் கூறியது.  அறைவாய்ச் சகடம் (7) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – ஒலியினைச் செய்யும் வாயினுடைய வண்டி, பொ. வே. சோமசுந்தரனார் உரை – அறுத்து அமைத்த வாயையுடைய சகடம்.  பெரும்பாணாற்றுப்படை 50 – பொ. வே. சோமசுந்தரனார் உரை –  ‘அறைத்துச் செல்லும் வாயையுடைய’ எனினுமாம், ‘வாய் அறை சகடம் என மாறி வழியை அறுத்துச் செல்லும் சகடம்’ எனினுமாம்.  சகடத்து (7) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – சகடத்துச் செல்லும் என விரித்துச் செல்லும் வாழ்க்கையராய் என இயைக்க.  ஒப்புமை:  இரும்பேர் ஒக்கல் – நச்சினார்க்கினியர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொருநராற்றுப்படை 61, சிறுபாணாற்றுப்படை 139, 144, பெரும்பாணாற்றுப்படை 25, 470, மலைபடுகடாம் 157 – கரிய பெரிய சுற்றம், ஒளவை துரைசாமி உரை – புறநானூறு பாடல்கள் 69, 150, 370, 378, 390, 391, 393, 394, 396 – மிக்க பெரிய சுற்றத்தார், மிகப் பெரிய சுற்றம், புறநானூறு 320 – கரிய பெரிய சுற்றத்தார், பொ. வே. சோமசுந்தரனார் உரை, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – அகநானூறு 301 – மிகப் பெரிய சுற்றத்தார்.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3). சிறு நனி – அணி மாண் சிறுபுறம் காண்கம், அகநானூறு 261 – சிறு நனி ஏகு, அகநானூறு 301 – பிரிந்தோர் உள்ளுபு நினைதல் சிறு நனி ஆன்றிகம், ஐங்குறுநூறு 180 – சிறு நனி வரைந்தனை கொண்மோ, கலித்தொகை 12 – சிறு நனி நீ துஞ்சி ஏற்பினும், புறநானூறு 247 – சிறு நனி தமியள் ஆயினும் இன்னுயிர் நடுங்கும், புறநானூறு 376 – அந்தி சிறு நனி பிறந்த பின்றை, புறநானூறு 381 – சிறு நனி ஒருவழிப் படர்க என்றோனே.

Meanings:   வறன் உறு செய்யின் வாடுபு வருந்தி – like wilted crops in a parched field (செய்யின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, செய் – பயிருக்கு ஆகுபெயர்), படர் மிகப் பிரிந்தோர் – the one who left causing pain to increase, உள்ளுபு நினைதல் சிறு நனி ஆன்றிகம் என்றி தோழி – you say we should stop thinking constantly about him and calm down a lot for a little bit oh my friend (உள்ளுபு – நினைந்து, என்றி – முன்னிலை ஒருமை), நல்குநர் ஒழித்த கூலிச் சில்பதம் – the little food that others give as gifts, ஒடிவை இன்றி – without a break, ஓம்பாது உண்டு – eating without saving, நீர் வாழ் முதலை ஆவித்தன்ன – like the yawning mouths of crocodiles that live in water, ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடத்து – in loud carts/wagons covered by woven grass, loud carts/wagons covered with cut grass, Marsilia minuta coromandelica, ஊர் இஃது என்னாஅர் – they don’t say that this is their home (என்னாஅர் – அளபெடை), ஊறு இல் வாழ்க்கை – life without hindrances, சுரமுதல் வருத்தம் மரமுதல் வீட்டி – kill their desires in the bases of trees in the wasteland entrance, பாடு இன் – sweet sounds, தெண் கிணை கறங்க – their clear sounding kinai drums sounding, காண்வர – beautifully, குவி இணர் எருக்கின் ததர் பூங்கண்ணி ஆடூஉச் சென்னித் தகைப்ப – men decorate their heads beautifully with pointed clusters of thick erukkam flower strands, Calotropis gigantea (ஆடூஉ – அளபெடை), மகடூஉ – women (அளபெடை), முளரித் தீயின் – firewood fire’s, முழங்கு அழல் விளக்கத்து – in the roaring flame’s light, களரி – forest, ஆவிரைக் கிளர் பூங்கோதை வண்ண மார்பின் வன முலைத் துயல்வர – flower garland made with bright āvirai flowers swaying on their pretty breasts on the chest, Cassia auriculata, Tanner’s senna, செறி நடைப் பிடியொடு – with a female elephant with short strides, களிறு புணர்ந்து என்ன – like a male elephant’s sound uniting (என்ன – உவமப்பொருள் தரும் சொல்), குறு நெடுந்தூம்பொடு – with short and long tubular thoompu instruments, முழவுப் புணர்ந்து இசைப்ப – muzhavu drums are beaten together, கார் வான் முழக்கின் – like the sounds of monsoon clouds/skies (முழக்கின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), நீர் மிசைத் தெவுட்டும் தேரை – toads that croak standing in water, ஒலியின் மானச் சீர் அமைத்து – with great rhythm like the sounds of the croaks (மான – உவம உருபு, a comparison word), சில் அரி கறங்கும் – create few sharp sounds, create few rhythmic sounds, சிறு பல் இயத்தொடு – with many small musical instruments, பல்லூர் பெயர்வனர் – they leave for many towns, ஆடி – dancing, ஒல்லென – rapidly (விரைவுக்குறிப்பு), தலைப் புணர்த்து அசைத்த பல் தொகைக் கலப்பையர் – those who have tied together the many instrument tops in their many drawstring bags (கலப்பை – கலம் இட்ட பை), இரும்பேர் ஒக்கல் – very big group of relatives (இரும்பேர் – ஒருபொருட்பன்மொழி), கோடியர் இறந்த – after the artists leave, புன்தலை மன்றம் காணின் – to see the empty common grounds, to see the dull common grounds, வழிநாள் அழுங்கல் மூதூர்க்கு இன்னாது ஆகும் – it is sorrow to the uproarious ancient town on the next day after they leave, அதுவே – like that, மருவினம் – I have attained (தன்மைப் பன்மை, first person plural), மாலை அதனால் – since it is evening time, காதலர் செய்த காதல் – the love that my lover showered, நீடின்று மறத்தல் கூடுமோ மற்றே – how can I forget it for long (மற்றே – மற்று, ஏ அசைநிலைகள், expletives)

அகநானூறு 302, மதுரை அறுவை வாணிகன் இள வேட்டனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
சிலம்பில் போகிய செம்முக வாழை
அலங்கல் அம் தோடு அசைவளி உறுதொறும்,
பள்ளி யானைப் பரூஉப்புறம் தைவரும்
நல் வரை நாடனொடு அருவி ஆடியும்,
பல்லிதழ் நீலம் படுசுனைக் குற்றும்,  5
நறுவீ வேங்கை இன வண்டு ஆர்க்கும்
வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும்
அரிய போலும் காதலம் தோழி!
இருங்கல் அடுக்கத்து என் ஐயர் உழுத
கரும்பு எனக் கவினிய பெருங்குரல் ஏனல்,  10
கிளிபட விளைந்தமை அறிந்தும் “செல்க” என
நம் அவண் விடுநள் போலாள், கைம்மிகச்
சில் சுணங்கு அணிந்த, செறிந்து வீங்கு இளமுலை,
மெல்லியல் ஒலிவரும் கதுப்பொடு,
பல் கால் நோக்கும், அறன் இல் யாயே.  15

Akanānūru 302, Mathurai Aruvai Vānikan Ilavēttanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
In his country, in the fine
mountains, leaves of red
banana trees growing on slopes
sway in the wind and rub against
sleeping elephants!

My beloved friend!  It appears
that it will be difficult to play
lovingly with him in the waterfalls,
and pluck blue waterlilies in springs,
and in groves with intense fragrances,
where swarms of
bees buzz scented vēngai flowers.

Millet that our brothers seeded in the
huge mountain slopes have grown
beautifully like sugarcanes, and are
filled with huge clusters of grain.

She has not asked us to go and
chase marauding parrots, mother
without justice, who kept looking at
your soft, thick hair and big, young
breasts with pretty pallor spots.

Notes:  பகற்குறிக்கண்  வந்த தலைவன் இற்செறிப்பை அறியும்பொருட்டு அவன் கேட்பத் தலைவிக்குச் சொல்லுவாளாய்த் தோழி கூறியது. வரைவு கடாயது.

Meanings:   சிலம்பில் போகிய செம்முக வாழை – red banana trees in the mountain, அலங்கல் அம் தோடு – swaying beautiful leaves, அசை வளி உறுதொறும் – whenever the moving wind blows, பள்ளி யானைப் பரூஉப்புறம் தைவரும் – they rub against the big backs of sleeping elephants (பரூஉ – அளபெடை), நல் வரை நாடனொடு – with the man from the country with fine mountains, அருவி ஆடியும் – playing in the waterfalls, பல்லிதழ் நீலம் படுசுனைக் குற்றும் – plucking blue waterlilies with many petals from springs, Nymphaea caerulea (பல்லிதழ் – அகரம் கெட்டு ‘குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்’ (தொல்காப்பியம், எழுத்து 160) என்றதனால் லகரம் இரட்டித்து பல்லிதழ் என முடிந்தது), நறு வீ வேங்கை – fragrant kino flowers, Pterocarpus marsupium, இன வண்டு ஆர்க்கும் – swarms of bees buzz, வெறி கமழ் சோலை – grove with intense fragrance, நயந்து விளையாடலும் – playing with desire, அரிய போலும் – it is difficult it appears, காதல் அம் தோழி – my beloved friend, இருங்கல் அடுக்கத்து – on the big mountain slopes,  என் ஐயர் உழுத – plowed and planted by my brothers, plowed and seeded by my brothers, கரும்பு எனக் கவினிய – beautiful like sugarcane, பெருங்குரல் ஏனல் – millet with large clusters, கிளிபட விளைந்தமை அறிந்தும் – even though she knew that it had matured for parrots to dive down to attack, செல்க என நம் அவண் விடுநள் போலாள் – it appears that she is not asking us to go there, கைம்மிகச் சுணங்கு அணிந்த செறிந்து வீங்கு இளமுலை – big young tight breasts with lots of pretty pallor spots, மெல்லியல் ஒலிவரும் கதுப்பொடு – with soft thick hair, பல் கால் நோக்கும் – looks many times, அறன் இல் யாயே – mother with no justice (அறன் – அறம் என்பதன் போலி, யாயே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 303, ஔவையார், பாலைத் திணை – தலைவி தன் நெஞ்சிடம் சொன்னது
இடை பிறர் அறிதல் அஞ்சி, மறை கரந்து,
பேஎய் கண்ட கனவின், பன் மாண்
நுண்ணிதின் இயைந்த காமம் வென்வேல்
மறமிகு தானைப் பசும்பூண் பொறையன்
கார் புகன்றெடுத்த சூர் புகல் நனந்தலை  5
மா இருங்கொல்லி உச்சித் தாஅய்த்,
ததைந்து செல் அருவியின் அலர் எழப் பிரிந்தோர்
புலம் கந்தாக இரவலர் செலினே,
வரை புரை களிற்றொடு நன்கலன் ஈயும்
உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின்  10
நிரை பறைக் குரீஇ இனம் காலைப் போகி,
முடங்கு புறச் செந்நெல் தரீஇயர் ஓராங்கு
இரை தேர் கொட்பினவாகிப் பொழுதுபடப்
படர் கொள் மாலைப் படர்தந்தாங்கு,
வருவா என்று உணர்ந்த மடங்கெழு நெஞ்சம்  15
ஐயந்தெளியரோ நீயே, பலவுடன்
வறன் மரம் பொருந்திய சிள்வீடு உமணர்
கண நிரை மணியின் ஆர்க்கும் சுரன் இறந்து,
அழிநீர் மீன் பெயர்ந்தாங்கு அவர்
வழிநடைச் சேறல் வலித்திசின் யானே.  20

Akanānūru 303, Avvaiyār, Pālai Thinai – What the heroine said to her heart
Afraid of others knowing about it and hiding
our secret love of great esteem and intimacy,
is like seeing a ghoul in a dream and hiding it
from others, fearing ridicule.

He left, causing gossip that is as loud as
the full waterfalls flowing from the summits
of huge, dark Kolli Mountain desired by gods,
of brave Pasumpoon Poraiyan with a brave
army, where clouds pour rain with desire.

Oh my stupid heart!  You wonder whether
he’ll return in the painful evenings like the
rows of birds that return when day ends,
bringing spikes of curved, red paddy, leaving
in the morning from Parampu Mountain
belonging to the esteemed Pāri,
who gifts elephants and fine jewels to those
who come in need with intelligence as their
staff.

Clear your doubts!  I am strong to go and
join him on the path, like a fish that goes
against flowing water, and cross the wasteland
where crickets on the parched trees join together
and screech, sounding like the rows of bells
of the oxen of salt merchants.

Notes:  தலைவன் பிரிவின்கண் வேட்கை கொண்டு தன் நெஞ்சிற்குச் சொல்லியது.  பேஎய் கண்ட கனவின் (2) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – பேய் தான் கண்ட கனவினைக் கூறாதது போல, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பேயைக் கண்ட கனவினைப் பிறரிடம் கூறாமல் மறைப்பது போல.   அழிநீர் (19) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – வற்றும் நீர், பொ. வே. சோமசுந்தரனார் உரை – வடிகின்ற நீர்.  வரலாறு:  பசும்பூண் பொறையன், கொல்லி மலை, பாரி, பறம்பு மலை.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).

Meanings:   இடை பிறர் அறிதல் அஞ்சி – worried that others will know about the situation, மறை கரந்து – hiding the secret love, பேஎய் கண்ட கனவின் – like seeing a ghoul in a dream, like the dream of a ghoul (பேஎய் – அளபெடை), பன் மாண் – greatly esteemed, நுண்ணிதின் இயைந்த காமம் – very close love, intimate love, வென்வேல் – victorious spear, மற மிகு தானைப் பசும்பூண் பொறையன் – Pasumpoon Poraiyan with a brave army, கார் புகன்று எடுத்த – clouds pouring rain with desire, சூர் புகல் – desired by gods, நனந்தலை – wide, மா இருங்கொல்லி – dark, huge Kolli Mountain, உச்சித் தாஅய்த் ததைந்து செல் அருவியின் அலர் எழப் பிரிந்தோர் – he went causing gossip to rise as loud as the overflowing/full waterfalls flowing from the summits (தாஅய் – அளபெடை, அருவியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), புலம் கந்தாக – intelligence as support/staff, இரவலர் செலினே – if those in need go, வரை புரை – mountain-like (புரை – உவம உருபு, a comparison word), களிற்றொடு – along with male elephants, நன்கலன் ஈயும் – donating fine jewels, உரை சால் – with utterances, வண் புகழ் – great fame, பாரி பறம்பின் – in Parampu Mountain of Pāri, நிரை பறைக் குரீஇ இனம் – rows of flying birds – interpreted as parrots by Po. Ve. Somasundaranar குரீஇ – அளபெடை), காலைப் போகி – leave in the morning, முடங்கு புற – curved sides, செந்நெல் தரீஇயர் – to bring fine paddy, to bring red paddy (தரீஇயர் – அளபெடை), ஓராங்கு இரை தேர் கொட்பினவாகி – they go around and search for food together (ஓராங்கு – ஒருசேர), பொழுதுபட – when the day ends, when the sun sets, படர் கொள் மாலை – painful evening time, படர்தந்தாங்கு – like they returned, வருவா என்று உணர்ந்த மடங்கெழு நெஞ்சம் – oh my stupid heart that thinks whether he will come, ஐயம் தெளியரோ – clear your doubts (ஓகாரம் அசைநிலை, an expletive), நீயே – you, பலவுடன் – join together, வறன் மரம் பொருந்திய சிள்வீடு – crickets that are on dried out trees, உமணர் கண நிரை மணியின் ஆர்க்கும் – screech sounding like the rows of bells of the oxen of salt merchants (மணியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), சுரன் இறந்து – pass through the wasteland (சுரன் – சுரம் என்பதன் போலி), அழி நீர் மீன் பெயர்ந்தாங்கு – like how fish go against flowing water, like how fish go from a drying pond to one which has water, அவர் வழிநடைச் சேறல் – to go and join him on the path he went, வலித்திசின் – I am strong (சின் – தன்மை அசைச் சொல், an expletive of the first person), யானே – me, ஏகாரம் அசைநிலை, an expletive

அகநானூறு 304, இடைக்காடனார், முல்லைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல்,
சூர்ப் பனிப்பன்ன தண்வரல் ஆலியொடு
பரூஉப் பெயல் அழிதுளி தலைஇ வான் நவின்று,
குரூஉத் துளி பொழிந்த பெரும் புலர் வைகறை,  5
செய்து விட்டன்ன செந்நில மருங்கில்
செறித்து நிறுத்தன்ன தெள் அறல் பருகிச்
சிறு மறி தழீஇய தெறி நடை மடப் பிணை
வலந்திரி மருப்பின் அண்ணல் இரலையொடு
அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதியச், 10
சுரும்பு இமிர்பு ஊதப், பிடவுத் தளை அவிழ,
அரும் பொறி மஞ்ஞை ஆல வரி மணல்
மணிமிடை பவளம் போல, அணிமிகக்
காயாஞ்செம்மல் தாஅய்ப், பலவும்
ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்பப்  15
புலன் அணி கொண்ட கார் எதிர் காலை
‘ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை
வினையொடு வேறு புலத்து அல்கி நன்றும்
அறவர் அல்லர் நம் அருளாதோர்’ என,
நம் நோய் தன்வயின் அறியாள்,  20
எம் நொந்து புலக்கும் கொல் மாஅயோளே?

Akanānūru 304, Idaikkādanār, Mullai Thinai – What the hero said to his heart
Dark clouds with thunder and lightning
have spread on the wide skies.  Cold hail
stones that look like scattered pieces of
tender palmyra fruit with liquid, come down
with the fierceness of gods along with heavy
rain.  The clouds pour bright rain with
desire, in this early morning, when dawn
breaks large, on the red earth that appears
like it was painted.  Drinking the clear water
that appears like it was collected and held,
a naïve doe of leaping walk embraces her
fawn, and rests with her noble stag with
right-twisted antlers, in the shade of a
kuruntham tree with moving branches.  Bees
swarm and hum and open pidavam flowers,
peacocks with precious spots dance, sand
ripples with dropped kāyā flowers and red
pattupoochis that decorate the wet ground,
appear like sapphire mixed with coral,
and the forest is beautiful in this rainy season.

Will the dark woman be upset and hate me,
not knowing my affliction, thinking
that I am not a gracious man, since I went to
another country to do battle work for the king
owning elephants with lifted tusks?

Notes:  பாசறைக்கண் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.  கருவி மா மழை (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மின்னல் முதலிய தொகுதியை உடையை கரிய முகில்கள்.  செய்து விட்டன்ன செந்நில மருங்கில் (6) –  இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – செவ்வண்ணம் தீட்டி வைத்தாற் போன்ற சிவந்த நிலத்திடத்தே, பொ. வே. சோமசுந்தரனார் உரை – சிற்பக்கலை வல்லான் ஒருவன் செய்து போகட்டாற் போன்று தோன்றுகின்ற இச்செம்மண் நிலத்தின்கண்.  ஒப்புமை:   மூதாய் வரிப்ப – அகநானூறு 14 – ஈயல் மூதாய் வரிப்ப, அகநானூறு 74 – செம் மூதாய் பெருவழி மருங்கில் சிறு பல வரிப்ப, அகநானூறு 283 – மூதாய் தண் நிலம் வரிப்ப, அகநானூறு 304 – ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப.  Pattupoochis (மூதாய் – trombidium grandissimum) are tiny red bugs that look like pieces of velvet.  They surface during the rainy season, on sandy soils.  They are kept in boxes by young kids, and fed tender grass.  They are also known as indirakōpam.  They are not the silk producing worms or caterpillars.  Akanānūru poems 14, 54, 74, 134, 283, 304, 374, Kalithokai 85 and Natrinai 362 have references to these little red bugs that look like velvet pieces.  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58).

Meanings:   இரு விசும்பு – wide/dark skies, இவர்ந்த – spread, கருவி மா மழை – dark/huge clouds with lightning and thunder, நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல் – like the eyes of the water-filled nungu fruits that are broken and scattered, சூர்ப் பனிப்பன்ன தண்வரல் ஆலியொடு – with cold hail stones that come with the fierceness of gods who cause trembling, பரூஉப் பெயல் – heavy rains (பரூஉ – அளபெடை), அழிதுளி தலைஇ வான் – clouds that dropped heavy rains (தலைஇ – அளபெடை), நவின்று – learning, desiring, குரூஉத் துளி பொழிந்த – poured bright raindrops (குரூஉ – அளபெடை), பெரும் புலர் வைகறை – early morning when dawn breaks huge, செய்து விட்டன்ன – like created, செந்நில மருங்கில் – in the red earth, செறித்து நிறுத்தன்ன – like filled and held, தெள் அறல் பருகி – drinking clear water, சிறு மறி தழீஇய தெறி நடை மடப் பிணை – naive female deer of leaping walk embracing its small fawn (தழீஇய – அளபெடை), வலந்திரி மருப்பின் அண்ணல் இரலையொடு – with the noble stag with right-twisted antlers, அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதிய – live in the shade of the moving branches of the kuruntham trees, wild orange tree, citrus indica, சுரும்பு இமிர்பு ஊத – as bees swarm and hum, பிடவுத் தளை அவிழ – pidavam flowers open loosening their tightness, Randia malabarica, அரும் பொறி மஞ்ஞை ஆல – peacocks with precious spots dance/sing, வரி மணல் – sand with ripples, sand with stripes, மணிமிடை பவளம் போல அணி மிக – beautiful like gems mixed with coral, காயாஞ்செம்மல் தாஅய்ப் பலவும் – many faded flowers of kāyā have spread (தாஅய் – அளபெடை), ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப – pattupoochi decorate in rows the wet land, பட்டுபூச்சி, தம்பலப்பூச்சி, இந்திர கோபம், red velvet bug, giant red velvet mite, trombidium grandissimum, புலன் அணி கொண்ட – forest with decoration, கார் எதிர் காலை – during the monsoon season, ஏந்து கோட்டு யானை – elephants with lifted tusks, வேந்தன் பாசறை வினையொடு – to do the battle camp work for the king, வேறு புலத்து அல்கி – stayed in another country, நன்றும் அறவர் அல்லர் – he is not a very gracious man, நம் அருளாதோர் என – that he will not care for me, நம் நோய் தன்வயின் அறியாள் – she does not know about my affliction (நம் – தன்மைப் பன்மை, first person plural), எம் நொந்து புலக்கும் கொல் மாஅயோளே – will the dark young woman be upset with me and hate me (எம் – தன்மைப் பன்மை, first person plural, மாஅயோளே – அளபெடை, ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 305, வடம வண்ணக்கன் பேரி சாத்தனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது அல்லது தோழி தலைவியிடம் சொன்னது
பகலினும் அகலாதாகி, யாமம்
தவல் இல் நீத்தமொடு ஐயெனக் கழியத்,
தளி மழை பொழிந்த தண்வரல் வாடையொடு
பனி மீக்கூரும் பைதல் பானாள்
பல்படை நிவந்த வறுமை இல்சேக்கை,  5
பருகுவன்ன காதலொடு திருகி
மெய் புகுவன்ன கை கவர் முயக்கத்து
ஓருயிர் மாக்களும் புலம்புவர் மாதோ,
அருள் இலாளர் பொருள்வயின் அகல
எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து  10
யான் எவன் உளனே தோழி, தானே
பராரைப் பெண்ணைச் சேக்கும் கூர்வாய்
ஒரு தனி அன்றில் உயவுக் குரல் கடைஇய,
உள்ளே கனலும் உள்ளம் மெல்லெனக்
கனை எரி பிறப்ப ஊதும் 15
நினையா மாக்கள் தீங்குழல் கேட்டே?

Akanānūru 305, Vadama Vannakkan Pēri Sāthanār, Pālai Thinai – What the heroine said to her friend, or the friend said to the heroine
Not moving away during the day,
without leaving at night, along with
along with floods that pass slowly,
heavy rains fall with cold northern
winds at painful midnight when
heavy dew falls.
At this time, will they suffer, not
satisfied that it is not enough, lovers
lying on luxurious beds elevated with
many mattresses, embracing each
other, with great love as though they
are drinking each other with their eyes,
like one body turning and entering
another body?

How will I live with my painful heart,
my friend, bearing great sorrow, since
the man with no kindness left for
wealth, and listening to the sweet flutes
of those who don’t forget music,
as a raging fire rises in my mind, kindled
by a flame that was started by the pitiful
cries of a lonely ibis with a sharp beak,
residing on a palm tree with a thick trunk?

Notes:  (1) பிரிவு உணர்த்திய தோழியிடம் தலைவி உரைத்தது.  (2) தலைவன் பிரிவின்கண் தலைவிக்குத் தோழி சொல்லியது.  கவர்வு – கவர்வு விருப்பு ஆகும் (தொல்காப்பியம் உரியியல் 66).

Meanings:   பகலினும் அகலாதாகி – not moving away all day, யாமம் தவல் இல் – without leaving at night, நீத்தமொடு – with floods, ஐயெனக் கழிய – passed slowly, தளி மழை பொழிந்த தண்வரல் வாடையொடு – heavy raindrops that fell from the clouds with cold northern winds, பனி மீக்கூரும் – when heavy dew increases, பைதல் பானாள் – painful midnight, பல் படை நிவந்த – elevated to many levels, elevated with many mattresses, வறுமை இல் சேக்கை – luxurious bed, பருகுவன்ன காதலொடு – with love that is like drinking (பருகு – முதனிலைத் தொழிற்பெயர்), திருகி மெய் புகுவு அன்ன – like turning toward each other and entering the body, like twisting and entering the body, கை கவர் முயக்கத்து – with embraces with hands that desire, ஓருயிர் மாக்களும் – lovers, those who have become one life, those who have two bodies but one life, புலம்புவர் – they will suffer, மாதோ – மாது, ஓ அசைநிலைகள், expletives, அருள் இலாளர் – the man without kindness, பொருள்வயின் – for wealth, அகல எவ்வம் தாங்கிய – bearing great sorrow since he left, இடும்பை நெஞ்சத்து யான் எவன் உளனே தோழி – how will I live with a painful heart oh friend (உளனே – ஏகாரம் அசைநிலை, an expletive), தானே – தான், ஏ அசைநிலைகள், expletives, பராரைப் பெண்ணை – thick-trunked female palmyra (பராரை – பரு அரை பராரை எனப் புணர்ந்தது), சேக்கும் – residing, கூர்வாய் – sharp beak, ஒரு தனி அன்றில் – a lonely black ibis, உயவுக் குரல் – pitiful voice, கடைஇய – starts fire with friction (கடைஇய – அளபெடை), உள்ளே – inside, கனலும் உள்ளம் – burning mind, மெல்லெனக் கனை எரி பிறப்ப – big fire rises slowly, ஊதும் நினையா மாக்கள் தீங்குழல் கேட்டே – listening to sweet flute music played by the cattle herders who do not think about not playing the flute (கேட்டே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 306, மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், மருதத் திணை – தோழி தலைவனுக்கு வாயில் மறுத்தது
பெரும் பெயர் மகிழ்ந! பேணாது அகன்மோ!
பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய
முள் கொம்பு ஈங்கைத் துய்த்தலைப் புது வீ
ஈன்ற மாத்தின் இளந்தளிர் வருட,
ஆர் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல்  5
கழனிக் கரும்பின் சாய்ப் புறம் ஊர்ந்து,
பழன யாமை பசு வெயில் கொள்ளும்
நெல்லுடை மறுகின் நன்னர் ஊர!
இதுவோ மற்று நின் செம்மல்? மாண்ட
மதி ஏர் ஒண்ணுதல் வயங்கிழை ஒருத்தி,  10
இகழ்ந்த சொல்லும் சொல்லிச் சிவந்த
ஆய் இதழ் மழைக் கண் நோயுற நோக்கித்
தண் நறும் கமழ் தார் பரீஇயினள், நும்மொடு
ஊடினள், சிறு துனி செய்து எம்
மணன் மலி மறுகின் இறந்திசினோளே.  15

Akanānūru 306, Mathurai Koolavānkian Seethalai Sāthanār, Marutham Thinai – What the heroine’s friend said to the hero
Oh lord with a fabulous name!
Go away without caring for us!

Oh man from the fine town with streets
with paddy, big ponds where pirampu
canes have spread with eengai vines with
long stems and fuzzy, new flowers, where
a heron eats and sleeps on a mango tree
whose tender sprouts gently rubs its body,
and a field tortoise rests in the warm sun
on the side where sugarcanes are leaning
in the prosperous field surrounded by water!

Is this how your great esteem is?
A woman with moon-like, bright forehead
and gleaming jewels, uttered demeaning
words, pined and looked at you with her
moist eyes with pretty, red eyelids,
broke your cool, fragrant garland, fought
with you and caused a little uproar as she
passed through our street filled with sand.

Notes:  தோழி தலைவனுக்கு வாயில் மறுத்தது.

Meanings:   பெரும் பெயர் மகிழ்ந – oh lord with great fame (பெரும் பெயர் – இகழ்ச்சிக்குறிப்பு, மகிழ்ந  – விளி, an address), பேணாது அகன்மோ – go away without caring for us (மோ – முன்னிலையசை, an expletive of the second person), பரந்த பொய்கைப் பிரம்பொடு – with rattan canes in the wide pond, Calamus rotang, நீடிய முள் கொம்பு – long thorny stems, ஈங்கைத் துய்த்தலைப் புது வீ ஈன்ற – new eengai flowers with fuzzy tops, Mimosa pudica, Touch-me-not, தொட்டாச்சுருங்கி, மாத்தின் இளந்தளிர் வருட – the tender sprouts of the mango tree rubbing, ஆர் குருகு உறங்கும் – a heron/egret/stork that is sated sleeps, நீர் சூழ் வள வயல் – prosperous fields surrounded by water, கழனிக் கரும்பின் சாய்ப் புறம் – on the sloped side of the field sugarcanes, ஊர்ந்து – crawling, பழன யாமை – field tortoise, பசு வெயில் கொள்ளும் – takes in the sun’s warmth, நெல் உடை மறுகின் நன்னர் ஊர – oh man from the fine town with streets with paddy bins (நன்னர் – நல்ல, ஊர – அண்மை விளி), இதுவோ மற்று நின் செம்மல் மாண்ட – is this your great esteem (மற்று -அசைநிலை, an expletive), மதி ஏர் ஒண்ணுதல் – moon-like bright forehead (ஏர் – உவம உருபு, a comparison word), வயங்கு இழை ஒருத்தி – a woman with bright jewels, இகழ்ந்த சொல்லும் சொல்லி – uttered demeaning words, சிவந்த ஆய் இதழ் மழைக் கண் – moist eyes with pretty red eyelids, நோயுற – with love disease, நோக்கி – looking, தண் நறும் கமழ் தார் பரீஇயினள் – she broke the fragrant cool garland (பரீஇயினள் – முற்றெச்சம், அளபெடை), நும்மொடு ஊடினள் – she fought with you, சிறு துனி செய்து – she created a little uproar/riot there, எம் மணன் மலி மறுகின் இறந்திசினோளே – the one who passed our streets filled with sand (இறந்திசினோளே – இசின் படர்க்கையின் கண் வந்தது, an expletive of the third person, ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 307, மதுரை ஈழத்துப் பூதன்தேவனார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது

சிறு நுதல் பசந்து, பெருந்தோள் சாஅய்,
அகலெழில் அல்குல் அவ்வரி வாடப்,
பகலுங்கங்குலும் மயங்கிப் பையெனப்,
பெயல் உறு மலரின் கண் பனி வார,
ஈங்கிவள் உழக்கும் என்னாது, வினை நயந்து 5
நீங்கல் ஒல்லுமோ ஐய? வேங்கை
அடுமுரண் தொலைத்த நெடுநல் யானை
மையலங்கடாஅஞ்செருக்கி, மதஞ்சிறந்து,
இயங்குநர்ச் செகுக்கும் எய்படு நனந்தலைப்
பெருங்கை எண்கினம் குரும்பி தேரும்  10
புற்றுடைச் சுவர புதலிவர் பொதியிற்,
கடவுள் போகிய கருந்தாட் கந்தத்து
உடனுறை பழமையின் துறத்தல் செல்லாது
இரும்புறாப் பெடையொடு பயிரும்
பெருங்கல் வைப்பின் மலைமுதல் ஆறே?  15

Akanānūru 307, Mathurai Eezhathu Poothan Thēvanār, Pālai Thinai – What the heroine’s friend said to the hero
Sir, is it fitting for you to let her tiny
brow turn pale, wide shoulders to
become thin, lovely lines on her wide,
pretty loins to fade, as she is confused
day and night, and tears to drop from
her eyes like flowers that have accepted
rain, without considering her suffering?

With a desire to go for your work,
you want to go through the path on
the base of a huge mountain with
towns where dark male pigeons with
long bonds call their females
without abandoning them.
Attacked by tigers, a fine, tall elephant,
confused and arrogant with musth,
his rut increased, kills those who travel
in the vast place with porcupines,
where groups of bears with big hands
search for fungus combs in the termite
mounds with tunnels, bushes have
spread in the common grounds, and the
god in the black column has gone.

Notes:  பிரிவு உணர்த்தப்பட்டு தோழி தலைவனைச் செலவு விலக்கியது.  ஒப்புமை:  குரும்பி – பெரும்பாணாற்றுப்படை 277-278 – பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும் பூம்புற நல் அடை, அகநானூறு 8 – ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த குரும்பி, அகநானூறு 72 – மின்மினி மொய்த்த முரவுவாய்ப் புற்றம் பொன் எறி பிதிரின் சுடர வாங்கிக் குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை இரும்பு செய் கொல் எனத் தோன்றும், அகநானூறு 307 – பெருங்கை எண்கினம் குரும்பி தேரும் புற்றுடைச் சுவர.  Akanānūru 8, 72, 81, 88, 112, 149, 247, 257 and 307 have descriptions of bears attacking termite mounds.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).

Meanings:   சிறு நுதல் பசந்து – small forehead has become pale, பெருந்தோள் சாஅய் – wide arms have thinned (சாஅய் – அளபெடை), அகல் எழில் அல்குல் – wide beautiful loins, அவ்வரி வாட – beautiful lines have faded, பகலும் கங்குலும் – day and night, மயங்கி – confused, பையென – slowly, பெயல் உறு மலரின் கண் பனி வார – tears dropping from her eyes that are like flowers which have accepted raindrops (உறு – ஏற்ற, மலரின்  – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), ஈங்கு இவள் உழக்கும் என்னாது – without considering that she will be suffering here (உழக்கும் – வருந்தும்), வினை நயந்து நீங்கல் ஒல்லுமோ ஐய – Sir! is it fitting to move away desiring your work (ஐய – விளி, an address), வேங்கை அடு – attacked by tigers, முரண் தொலைத்த – ruined strength, நெடு நல் யானை – tall fine elephant, மையல் அம் கடாஅம் செருக்கி – confused and arrogant with musth, confused and proud with musth (கடாஅம் – அளபெடை), மதஞ்சிறந்து – with great strength, இயங்குநர்ச் செகுக்கும் – kills those who travel, எய் படு நனந்தலை – wide place with porcupines, பெருங்கை எண்கு இனம் – herds of bears with big hands, குரும்பி தேரும் – they search for fungus combs of termite mounds, புற்றுடைச் சுவர – termite mounds with tunnels, புதல் இவர் பொதியில் – in the common grounds where bushes have spread, கடவுள் போகிய – god has gone away,  கருந்தாள் கந்தத்து – from the wooden column with black-base, உடனுறை பழமையின் – because of old friendship, துறத்தல் செல்லாது – not considering abandonment, இரும் புறாப் பெடையொடு பயிரும் – big/dark pigeons call along with their females, பெருங்கல் வைப்பின் – huge mountain with towns, மலை முதல் ஆறே – path on the mountain base (ஆறே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 308, பிசிராந்தையார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது, பகலில் வரும்படி
உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல்
நெடுவகிர் விழுப்புண் கழாஅக், கங்குல்
ஆலி அழிதுளி பொழிந்த வைகறை,
வால் வெள் அருவிப் புனல் மலிந்து ஒழுகலின்
இலங்கு மலை புதைய வெண்மழை கவைஇக்,  5
கலம் சுடு புகையின் தோன்றும் நாட!
இரவின் வருதல் எவனோ? பகல் வரின்,
தொலையா வேலின் வண் மகிழ் எந்தை
களிறு அணந்து எய்தாக் கன் முகை இதணத்துச்
சிறு தினைப் படுகிளி எம்மொடு ஓப்பி,  10
மல்லல் அறைய மலிர் சுனைக் குவளை
தேம்பாய் ஒண்பூ நறும் பல அடைச்சிய
கூந்தல் மெல் அணைத் துஞ்சிப் பொழுதுபடக்,
காவலர்க் கரந்து கடி புனம் துழைஇய
பெருங்களிற்று ஒருத்தலின் பெயர்குவை  15
கருங்கோல் குறிஞ்சி நும் உறைவு இன் ஊர்க்கே.

Akanānūru 308, Pisiranthaiyār, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
Oh man from the country where a male
elephant with a sad walk, attacked by a
tiger at night, has deep claw gashes on
its face that get washed by heavy rains
that fall at night along with hailstones
and flow down as full white waterfalls,
and gleaming mountains hidden by
hugging clouds appear like the smoke
from pottery kilns!

Why do you come at night?  If you come
during the day, you can chase parrots that
come to eat our small millet,
and sleep on her soft hair with bright,
honey-flowing, blue waterlilies from the full
spring near abundant boulders,
……….on the tall platform that our
……….charitable, happy father owning a
……….victorious spear built, which cannot be
……….reached by male elephants that look up,
and leave for your sweet town with kurinji
flowers with dark stems when night falls, like a
big bull elephant that hid from the guards and
entered the protected field, searched for food
and left without anybody seeing.

Notes:  இரவில் வரும் தலைவனை பகலில் வா என்றது.  ஒப்புமை:  கருங்கோல் குறிஞ்சி – அகநானூறு 308 – கருங்கோல் குறிஞ்சி நும் உறைவின் ஊர்க்கே, குறுந்தொகை 3 – கருங்கோல் குறிஞ்சிப் பூக் கொண்டு, புறநானூறு 374 – கருங்கோல் குறிஞ்சி அடுக்கம்.  வண் மகிழ் எந்தை (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வள்ளன்மையால் மகிழும் மகிழ்ச்சியையும் உடைய எம்முடைய தந்தை, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – வளவிய மகிழ்ச்சியையுடைய எம் தந்தை.  கழாஅ – கழுவி என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).  விழுப்புண் – புறநானூறு 93, ஒளவை துரைசாமி உரை – சீரிய புண், சீரிய = சிறந்த.

Meanings:   உழுவையொடு உழந்த – fought with a tiger, உயங்கு நடை ஒருத்தல் – male (elephant) with sad walk, நெடு வகிர் விழுப்புண் – long deep face wounds caused by long claws, கழாஅ – washed (அளபெடை),  கங்குல் – night, ஆலி அழிதுளி பொழிந்த – when heavy rain fell with hailstones, வைகறை – early morning, வால் வெள் அருவி – very white waterfalls, புனல் மலிந்து ஒழுகலின் – since water poured down full, இலங்கு மலை புதைய – for the gleaming mountain to be hidden, வெண்மழை கவைஇ – white clouds surrounded (கவைஇ – அளபெடை), கலம் சுடு புகையின் தோன்றும் – appearing like smoke from pottery kilns (புகையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), நாட – oh man from such country (விளி, an address), இரவின் வருதல் எவனோ – why do you come at night (ஓகாரம் அசைநிலை, an expletive), பகல் வரின் – if you come during the day, தொலையா வேலின் – having a victorious spear that has never lost, வண் மகிழ் – charitable and happy because of it, very happy, எந்தை – our father (எந்தை – எம் + தந்தை, மருஉ மொழி), களிறு அணந்து எய்தா – male elephants cannot look up and reach, கன் முகை இதணத்து – on the platform in the mountain with caves, சிறுதினைப் படுகிளி எம்மொடு ஓப்பி – chasing along with us parrots that come to seize small millet, மல்லல் அறைய – near the bundant boulders/rocks, மலிர் – water filled/spring, சுனைக் குவளை – blue waterlilies from the spring, Nymphaea caerulea, தேம் பாய் ஒண் பூ நறும் பல அடைச்சிய கூந்தல் – hair decorated with honey flowing bright flowers with fragrance (தேம் தேன் என்றதன் திரிபு), மெல் அணைத் துஞ்சி – when sleeping on soft support (her hair), பொழுதுபட – when the day ends, when the sun disappears, காவலர்க் கரந்து – hiding from guards’ protection, கடி புனம் துழைஇய – entering the protected field and search for millet (துழைஇய – அளபெடை), பெருங்களிற்று ஒருத்தலின் – like a big male elephant (ஒருத்தலின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), பெயர்குவை – you can leave, கருங்கோல் குறிஞ்சி – kurinji flowers with dark colored stems, Strobilanthes Kunthiana, நும் உறைவு இன் ஊர்க்கே – to your sweet town where you live (ஊர்க்கே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 309, கருவூர் கந்தப்பிள்ளைச் சாத்தனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வயவாள் எறிந்து வில்லின் நீக்கி
பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர்,
அம்பு சேண்படுத்து வன்புலத்து உய்த்தெனத்,
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்
கொழுப்பு ஆ எறிந்து குருதி தூஉய்ப்,  5
புலவுப் புழுக்குண்ட வான் கண் அகல் அறைக்
களிறு புறம் உரிஞ்சிய கருங்கால் இலவத்து
அரலை வெண்காழ் ஆலியின் தாஅம்
காடு மிக நெடிய என்னார், கோடியர்
பெரும் படைக் குதிரை நற்போர் வானவன்  10
திருந்து கழல் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு,
நாம் செலின் எவனோ தோழி? காம்பின்
விளை கழை உடைந்த கவண் விசைக் கடி இடிக்
கனை சுடர் அமையத்து வழங்கல் செல்லாது,
இரவுப் புனம் மேய்ந்த உரவுச்சின வேழம்  15
தண் பெரும் படாஅர் வெரூஉம்
குன்று விலங்கிய இயவின் அவர் சென்ற நாட்டே?

Akanānūru 309, Karuvūr Kanthapillai Sāthanār, Pālai Thinai – What the heroine said to her friend
Not thinking that the huge forest
is a place where killing with powerful
swords and chasing with arrows
shot afar from bows of harsh warriors
who seize herds of cattle that yield
benefits, who reach the neem tree in
the forest where a god resides, kill a fat
cow and throw its blood, eat a flesh
meal in the vast land where elephants
rub their backs on boulders, and ilavam
trees with dark colored trunks drop
white seeds that are like hailstones,

he went like artists who desire the
fine feet of Cheran who wears warrior
anklets, a king owning a large army
with horses, and victorious in battles.

Why can’t we go there, my friend,
on the path on the mountain base
to the country where he went, where a
mighty angry elephant, afraid of attacks
from rapid slingshots that break mature
bamboo during the day when the sun’s rays
burn, grazes in the millet field at night?

Notes:  பிரிவிடை வேறுபட்ட தலைவியின் வேறுபாடு கண்டு வேறுபட்ட தோழிக்குத் தலைவி கூறியது.  தெய்வம் (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கொற்றவை.  கண் (6) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை -அசைநிலை, an expletive, பொ. வே. சோமசுந்தரனார் உரை- இடம். ஒப்புமை:  மரங்களில் கடவுள் உறைதல்:  அகநானூறு 270 – கடவுள் மரத்த, அகநானூறு 309 – தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில், நற்றிணை 83 – கடவுள் முது மரத்து.  வரலாறு:  வானவன் (சேரன்).

Meanings:   வய வாள் எறிந்து – attacking/killing (warriors) with victorious swords, வில்லின் நீக்கி – shooting/chasing with their bows, பயம் நிரை தழீஇய – seized cattle herds that yield benefits (தழீஇய – அளபெடை), கடுங்கண் மழவர் – harsh warriors/wasteland bandits, அம்பு சேண்படுத்து – causing their arrows to go far, வன்புலத்து – in the harsh land, in the forest, உய்த்தென – they shoot, தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் – under a thick-trunked neem tree with a god (பராரை – பரு அரை பராரை எனப் புணர்ந்தது), கொழுப்பு ஆ எறிந்து – killed a fat cow, குருதி தூஉய் – throw the blood (தூஉய் – அளபெடை), புலவுப் புழுக்குண்ட – ate the cooked flesh, வான் கண் அகல் அறை – tall wide boulder (கண் -அசைநிலை, an expletive), களிறு புறம் உரிஞ்சிய – male elephant rubbed his back, கருங்கால் இலவத்து – of the ilavam trees/silk-cotton trees with dark colored/sturdy/big trunks, Aerua javanica, Silk cotton tree, அரலை – seed, வெண்காழ் – white seeds, ஆலியின் தாஅம் – fall like hailstones (ஆலியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, தாஅம் – அளபெடை), காடு மிக நெடிய என்னார் – he did not consider that the forest is very big, கோடியர் – artists, dancers and singers, பெரும் படைக் குதிரை – big army with horses, நற்போர் வானவன் – Cheran with victorious battles, திருந்து கழல் சேவடி நசைஇ – desiring his red feet with perfect warrior anklets (நசைஇ – அளபெடை), படர்ந்தாங்கு – like how they went, நாம் செலின் எவனோ – why can’t we go (ஓகாரம் அசைநிலை, an expletive), தோழி – oh friend (விளி, an address), காம்பின் விளை கழை உடைந்த – mature bamboo shoots are broken, கவண் விசைக் கடி இடி – very rapid attacks from slingshots, கனை சுடர் அமையத்து – when there are the sun’s intense rays, வழங்கல் செல்லாது – not roaming/going, இரவுப் புனம் மேய்ந்த உரவுச் சின வேழம் – mighty angry elephant that grazed in the field at night, தண் பெரும் படாஅர் – afraid of cool large thickets (படாஅர் – அளபெடை), வெரூஉம் – it fears (அளபெடை), குன்று விலங்கிய இயவின் – on paths blocked by mountains, அவர் சென்ற நாட்டே – in the country he went (நாட்டே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 310, நக்கீரனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கடுந்தேர் இளையரொடு நீக்கி, நின்ற
நெடுந்தகை நீர்மையை அன்றி, நீயும்
தொழுதகு மெய்யை அழிவு முந்துறுத்துப்
பன்னாள் வந்து பணி மொழி பயிற்றலின்,
குவளை உண்கண் கலுழ நின் மாட்டு  5
இவளும் பெரும் பேதுற்றனள், ஓரும்
தாயுடை நெடுநகர்த் தமர் பாராட்டக்
காதலின் வளர்ந்த மாதர் ஆகலின்,
பெருமடம் உடையரோ சிறிதே அதனால்,
குன்றின் தோன்றும் குவவு மணல் சேர்ப்ப!  10
இன்று இவண் விரும்பாதீமோ! சென்றப்
பூ விரி புன்னை மீது தோன்று பெண்ணைக்
கூஉம் கண்ணஃதே தெய்ய, ஆங்கண்
உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த
இளைப்படு பேடை இரியக், குரைத்து எழுந்து  15
உருமிசைப் புணரி உடைதரும்
பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே.

Akanānūru 310, Nakkeeranār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
Oh lord of the seashore with sand dunes
that appear like mountains!
Leaving your fast riding chariot with
your young men, you are standing
here.  You are a great man with a fine
character.  Also, you have a body that
is adored by others.
With a crushed mind, you come here
on many days and utter humble words.

She is infatuated greatly with you, my
friend with kohl-rimmed, waterlily-like
eyes that have tears.  She grew up in a
huge house with a mother and relatives
who praised her, and was raised with
great love.  She is a little naive.  So do
not desire to see her here, today.

Towering over the punnai trees with flowers,
are palmyra palms within calling distance.
There is our small fine village on the water’s edge,
where roaring waves rise up and break, causing
a hen that hatched that came with a caravan
of salt merchants to cluck and move away.

Notes:   தகைவனுக்குக் குறை நேர்ந்த தோழி சொல்லியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீ நாளை அப்புன்னை மரச் சோலைக்கு வருதி என்பது குறிப்பாயிற்று.

Meanings:   கடுந்தேர் இளையரொடு நீக்கி – leaving the fast chariots with young men/workers and moving away, நின்ற நெடுந்தகை – oh great man standing here (நெடுந்தகை- விளி, an address), நீர்மையை – you are of fine character, அன்றி நீயும் தொழுதகு மெய்யை – also you have a body that is suitable to be adored by others, அழிவு முந்துறுத்து – being emotionally ruined, being emotionally crushed, பன்னாள் வந்து – you came on many days, பணி மொழி பயிற்றலின் – since you uttered humble words, குவளை – blue waterlilies, Nymphaea caerulea, உண்கண் கலுழ – kohl-lined eyes to cry, நின் மாட்டு – towards you, இவளும் பெரும் பேதுற்றனள் – she is infatuated with greatly, ஓரும் –அசைநிலை, an expletive, தாயுடை நெடு நகர் – big house with her mother, தமர் பாராட்ட – her relatives praising her, காதலின் வளர்ந்த மாதர் ஆகலின் – since she’s a young woman who grew up with love, பெருமடம் உடையரோ சிறிதே – she is a like those who are a little naïve/shy (உடையரோ – ஓகாரம் அசைநிலை, an expletive, சிறிதே – ஏகாரம் அசைநிலை, an expletive), அதனால் – so, குன்றின் தோன்றும் குவவு மணல் சேர்ப்ப – oh lord of the seashore with sand dunes that appear like mountains (குன்றின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, சேர்ப்ப – அண்மை விளி), இன்று இவண் – today, here, விரும்பாதீமோ – you do not desire (மோ – முன்னிலையசை, an expletive of the second person), சென்ற – leaving, பூ விரி புன்னை மீது – towering over the flowering punnai trees, Calophyllum inophyllum, Laurel Tree, Mast wood Tree, தோன்று – appearing, பெண்ணை – female palmyra trees, கூஉம் கண்ணஃதே – the place is within calling distance (கூஉம் – அளபெடை, கண்ணஃது – ஆய்தம் விரித்தல், ஏகாரம் அசைநிலை, an expletive), தெய்ய -அசைநிலை, an expletive, ஆங்கண் – there, உப்பு ஒய் உமணர் – salt merchants riding and selling, ஒழுகையொடு – with their wagons, வந்த – came, இளைப்படு பேடை – a hen protecting her chicks, a hen protecting her eggs, இரிய – moves away, குரைத்து எழுந்து – rises up with clucks, உருமிசைப் புணரி உடைதரும் – where roaring waves break, பெருநீர் வேலி – edge of the large body of water, எம் சிறு நல் ஊரே – our small fine village (ஊரே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 311, மாமூலனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
இரும் பிடிப் பரிசிலர் போலக் கடை நின்று,
அருங்கடிக் காப்பின் அகன் நகர் ஒரு சிறை,
எழுதியன்ன திண் நிலைக் கதவம்
கழுது வழங்கு அரை நாள் காவலர் மடிந்தெனத்,
திறந்து நம் புணர்ந்து, “நும்மின் சிறந்தோர்  5
இம்மை உலகத்து இல்” எனப் பன்னாள்
பொம்மல் ஓதி நீவிய காதலொடு
பயம் தலைப்பெயர்ந்து மாதிரம் வெம்ப,
வருவழி வம்பலர்ப் பேணிக், கோவலர்
மழ விடைப் பூட்டிய குழாஅய்த் தீம் புளி  10
செவி அடை தீரத் தேக்கிலைப் பகுக்கும்
புல்லி நன்னாட்டு உம்பர் செல் அரும்
சுரம் இறந்து ஏகினும் நீடலர்,
அருண்மொழி தேற்றி நம் அகன்றிசினோரே.

Akanānūru 311, Māmoolanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
He used to come and stand near the
door of our huge, well-protected house,
like a bard who comes to a donor to
receive a large cow elephant as a gift.
At midnight, when ghouls roam and guards
fall asleep, he opened and came through the
painting-like door with sturdy header, united
with you, stroked your overflowing hair with
love, and said to you for many days, “There is
nobody better than you in this world”.

The man who left us after uttering kind words
will come back soon, even though he went
through the difficult wasteland, past Pulli’s fine
country where cattle herders take care of those
who travel, sharing sweet tamarind rice kept in
tubes tied on young bulls, serving them on teak
leaves for their hunger and stuffed ears to end.

Notes:  பிரிவிடை வேறுபட்ட தலைவியிடம் தோழி சொல்லியது.  வரலாறு:  புல்லி.  ஒப்புமை:  மூங்கில் குழாயில் உணவு – அகநானூறு 253 – கோவலர் நெடு விளிப் பயிர் அறிந்து இனம் தலைத்தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்றுத் தழூஉப் பிணர் எருத்தம் தாழப் பூட்டிய அம் தூம்பு அகல் அமைக் கமம் செலப் பெய்த துறு காழ் வல்சியர், அகநானூறு 311- கோவலர் மழ விடைப் பூட்டிய குழாஅய்த் தீம் புளி.  The word இம்மை meaning ‘this life/this birth’ is used in Kurunthokai 49, Akanānūru 66, 101, 311, Kalithokai 14, Puranānūru 134, and 236.  மழ – மழவும் குழவும் இளமைப் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 15).

Meanings:   இரும் பிடிப் பரிசிலர் போல – like one who came to get a big/dark female elephant as a gift, கடை நின்று – stood at the door, stood at the gate, அருங்கடிக் காப்பின் அகன் நகர் – wide house with great protection, ஒரு சிறை – one side, எழுதியன்ன – like a painting, திண் நிலைக் கதவம் – door with sturdy header, கழுது வழங்கு அரை நாள் – midnight time when ghouls roam, காவலர் மடிந்தென – since the guards slept, திறந்து – opened, நம் புணர்ந்து – united with you, நும்மின் சிறந்தோர் – better than you, இம்மை உலகத்து இல்லென – that there is nobody in this world in this life, there is nobody in this birth, பன்னாள் – many days, பொம்மல் ஓதி – overflowing hair, thick hair, splendid hair, நீவிய காதலொடு – stroked with love, பயம் தலைப்பெயர்ந்து – benefits moved away, benefits were ruined, மாதிரம் வெம்ப – all the directions were scorched, வருவழி வம்பலர்ப் பேணி – taking care of travelers who go on the path, கோவலர் – cattle herders, மழ விடை – young bulls (hung on the neck of young bulls), பூட்டிய குழாஅய்த் தீம் புளி – sweet tamarind in a tied tube, செவி அடை – hunger in their ears (extreme hunger), தீர – to end, தேக்கிலைப் பகுக்கும் – sharing on teak leaves, Tectona grandis, புல்லி நன்னாட்டு உம்பர் – beyond the fine country of Pulli, செல் அருஞ்சுரம் இறந்து ஏகினும் – even though he went through the difficult wasteland, நீடலர் – he will not delay, அருண் மொழி தேற்றி – he spoke kind consoling words, நம் அகன்றிசினோரே – the man who left us (அகன்றிசினோரே – இசின் படர்க்கையின் கண் வந்தது, an expletive of the third person, ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 312, மதுரை மருதன் இளநாகனார், குறிஞ்சித் திணை – தோழி சொன்னது, அல்லது தலைவி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
நெஞ்சு உடம்படுதலின் ஒன்று புரிந்து அடங்கி,
இரவின் வரூஉம் இடும்பை நீங்க,
வரையக் கருதும் ஆயின் பெரிது  உவந்து,
ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம்,
காந்தள் அம் சிறுகுடிக் கௌவை பேணாது,  5
அரிமதர் மழைக் கண் சிவப்ப நாளைப்
பெருமலை நாடன் மார்பு புணையாக,
ஆடுகம் வம்மோ, காதலம் தோழி,
வேய் பயில் அடுக்கம் புதையக் கால் வீழ்த்து
இன்னிசை முரசின் இரங்கி ஒன்னார்  10
ஓடுபுறம் கண்ட தாள் தோய் தடக்கை,
வெல்போர் வழுதி செல் சமத்து உயர்த்த
அடுபுகழ் எஃகம் போலக்,
கொடிபட மின்னிப் பாயின்றால் மழையே.

Akanānūru 312, Mathurai Maruthan Ilanākanār, Kurinji Thinai – What the heroine’s friend said, or what the heroine said, as the hero listened nearby
Hiding the bamboo forest in the
mountain ranges, with winds and
thunder that roar like the music
of sweet drums, rain has spread
along with lightning, gleaming like
the famous killing-spears of the Pandiyan
king whose large hands touch his legs,
who is victorious in battles as his enemies
run away showing their backs.

Since the hearts have united and we both
desire happiness, and for our worry about
him coming at night secretly to be removed,
marriage is being considered.

My beloved friend!  Ignoring the gossip
in our beautiful small village with kānthal
flowers, let’s go and play in the overflowing
waterfalls that come down the tall mountains,
using his chest as a raft, and letting our
pretty, moist eyes with lines to become red.

Notes:  வரையாது வந்தொழுகும் தலைவன் கேட்கும்படி கூறியது.  வரலாறு:  வழுதி (பாண்டியன்).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

Meanings:   நெஞ்சு உடம்படுதலின் – since our hearts have united, ஒன்று புரிந்து – desiring the same thing (happiness), அடங்கி – secretly, hiding, இரவின் வரூஉம் இடும்பை நீங்க – to remove the sorrow due to his coming at night (வரூஉம் – அளபெடை), வரையக் கருதும் ஆயின் – if considering marriage, பெரிது உவந்து – greatly happy, ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம் – abundant water that flows from the tall mountains, காந்தள் அம் சிறுகுடிக் கௌவை பேணாது – not caring about the gossip in our small beautiful village with glory lilies, அரி மதர் மழைக் கண் சிவப்ப – for our beautiful moist eyes with lines to become red, for our luscious moist eyes with lines to become red, நாளை – tomorrow, பெருமலை நாடன் – the lord of the lofty mountains, மார்பு புணையாக – with his chest as raft/float, ஆடுகம் – let us play, வம்மோ – you come (மோ – முன்னிலையசை, an expletive of the second person), காதல் அம் தோழி – oh beloved friend (விளி, an address), வேய் பயில் அடுக்கம் – mountain ranges dense with bamboo, புதைய – hidden, கால் வீழ்த்து – with winds coming down, இன்னிசை முரசின் இரங்கி – roaring like the music of sweet drums (முரசின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), ஒன்னார் ஓடு புறம் கண்ட – saw enemies running showing their backs, தாள் தோய் – touching the legs, தடக்கை – with large hands, வெல்போர் வழுதி – Pandiyan who is victorious in battles, செல் சமத்து உயர்த்த – raised in victorious battles, அடுபுகழ் எஃகம் போல – like famous murderous spears, கொடிபட மின்னி – properly with lightning, பாயின்றால் மழையே – rain has spread, clouds have spread (பாயின்றால் – ஆல் அசைநிலை, மழையே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 313, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
“இனிப் பிறிதுண்டோ? அஞ்சல் ஓம்பு” என
அணிக் கவின் வளர முயங்கி, நெஞ்சம்
பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து, அல்கலும்
குளித்துப் பொரு கயலின் கண்பனி மல்க,
ஐயவாக வெய்ய உயிரா,  5
இரவும் எல்லையும் படரட வருந்தி
அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்பத்,
தம்மலதில்லா நம்மிவண் ஒழியப்,
பொருள் புரிந்து அகன்றனராயினும் அருள் புரிந்து
வருவர், வாழி தோழி! பெரிய  10
நிதியஞ்சொரிந்த நீவி போலப்
பாம்பூன் தேம்பும் வறங்கூர் கடத்திடை,
நீங்கா வம்பலர் கணையிடத் தொலைந்தோர்
வசிபடு புண்ணின் குருதி மாந்தி,
ஒற்றுச் செல் மாக்களின் ஒடுங்கிய குரல  15
இல் வழிப்படூஉங்காக்கைக்
கல்லுயர் பிறங்கல் மலை இறந்தோரே.

Akanānūru 313, Cheramān Pālai Pādiya Perunkadunkō, Pālai Thinai – What the heroine’s friend said to her
Thinking daily about your lover,
……….who went on the path
……….and said to you,
……….”Is there anything better? Don’t
……….fear,” and embraced and consoled
……….you for your body to grow beautiful,
your eyes, like warring carp in water,
are filled with tears, you sigh gently
as sorrow attacks you night and day,
you are distressed, and
your forehead has lost its brightness
like the moon that has been swallowed
by a snake.

He went through the mountains with
tall peaks, where bodies of snakes have
been reduced like cloth bags that have
dumped their treasures, the forest is
parched, and crows with faint voices
like those of spies, drink blood from
the deep wounds of those who fell not
able to escape the arrows of wasteland
bandits, before flying off to their nests.

Knowing that you’re hurting without
him, the one who went desiring wealth
will come back desiring graces, my friend.
May you live long!

Notes:   பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தியது.  ஒப்புமை:  அரவு நுங்கு மதி – குறுந்தொகை 395 – அரவு நுங்கு மதியினுக்கு, அகநானூறு 114 – அரவு நுங்கு மதியின், அகநானூறு 313 – அரவு நுங்கு மதியின், நற்றிணை 377 – அரவுக் குறைபடுத்த பசுங்கதிர் மதியத்து, புறநானூறு 260 – பாம்பின் வை எயிற்று உய்ந்த மதியின், கலித்தொகை 15 – பாம்பு சேர் மதி போல, கலித்தொகை 104 – பால் மதி சேர்ந்த அரவினை, பரிபாடல் 10-76 – அரவு செறி உவவு மதியென, பரிபாடல் 11 – பாம்பு ஒல்லை மதியம் மறையவரு நாளில், சிறுபாணாற்றுப்படை 185 – மதி சேர் அரவின்.  உயிரா – உயிர்த்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  ஒற்றுச் செல் மாக்களின் ஒடுங்கிய குரல (15) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒற்றுத் தொழிலை மேற்கொண்டு செல்லுகின்ற மக்களைப் போன்று அடங்கிய குரலை உடையவாய்.

Meanings:   இனிப் பிறிது உண்டோ – is there anything else other than love (ஓகாரம் வினா), அஞ்சல் ஓம்பு – do not fear, என – thus, அணிக் கவின் வளர முயங்கி – embraced me for my body to become pretty, நெஞ்சம் பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து – thinking about the one who has bound your heart go on the path, அல்கலும் – daily, குளித்துப் பொரு கயலின் – like warring carp fish that swim in the water (குளித்து – நீரினில் மூழ்கி, கயலின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), கண் பனி மல்க – tears fill up in my eyes, ஐயவாக – delicately, வெய்ய உயிரா – sighed hot breath (உயிரா – உயிர்த்து), இரவும் எல்லையும் படர் அட – sorrow attacking me night and day, வருந்தி – distressed, அரவு நுங்கு மதியின் – like the moon that is swallowed by a snake (மதியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), நுதல் ஒளி கரப்ப – forehead brightness to be hid, தம் அலது இல்லா நம் இவண் ஒழிய – hurting without anybody other than him, பொருள் புரிந்து அகன்றனர் ஆயினும் – even if he went desiring wealth, அருள் புரிந்து வருவர் – he will come desiring graciousness, வாழி தோழி – may you live long oh friend, பெரிய நிதியம் சொரிந்த நீவி போல – like cloth bags that dumped their treasures, பாம்பு ஊன் தேம்பும் – snake flesh is reduced, வறங்கூர் கடத்திடை – in the very dry forest path, நீங்கா வம்பலர் – new travelers who were unable to escape, கணை இட – wasteland warriors shoot arrows, தொலைந்தோர் – those who died, வசிபடு புண்ணின் குருதி மாந்தி – drink blood from their wounds caused by splitting, ஒற்றுச் செல் மாக்களின் ஒடுங்கிய குரல – with faint voices like those of people who do spying (மாக்களின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), இல் வழிப்படூஉம் காக்கை – crows that go toward their homes (வழிப்படூஉம் – அளபெடை), கல் உயர் பிறங்கல் மலை இறந்தோரே – the man who went through the lofty mountains with peaks (இறந்தோரே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 314, மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார், முல்லைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
“நீலத்து அன்ன நீர் பொதி கருவின்
மாவிசும்பு அதிர முழங்கி ஆலியின்
நிலம் தண்ணென்று கானம் குழைப்ப,
இனந்தேர் உழவர் இன் குரல் இயம்ப,
மறியுடை மடப்பிணை தழீஇப் புறவின்  5
திரிமருப்பு இரலை பைம்பயிர் உகள,
ஆர் பெயல் உதவிய கார் செய் காலை,
நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவிக்
கல்லெனக் கறங்கு மணி இயம்ப வல்லோன்
வாய்ச் செல வணக்கிய தாப் பரி நெடுந்தேர்  10
ஈர்ம் புறவு இயங்கு வழி அறுப்பத், தீந்தொடைப்
பையுள் நல் யாழ் செவ்வழி பிறப்ப
இந்நிலை வாரார் ஆயின் தம் நிலை
எவன் கொல் பாண உரைத்திசின், சிறிது” எனக்
கடவுட் கற்பின் மடவோள் கூறச்,  15
செய் வினை அழிந்த மையல் நெஞ்சில்
துனி கொள் பருவரல் தீர வந்தோய்
இனிது செய்தனையால், வாழ்க நின் கண்ணி!
வேலி சுற்றிய வால் வீ முல்லைப்
பெருந்தார் கமழும் விருந்து ஒலி கதுப்பின்  20
இன்னகை இளையோள் கவவ,
மன்னுக பெரும, நின் மலர்ந்த மார்பே.

Akanānūru 314, Mathurai Alakkar Gnāzhār Makanār Ammallanār, Mullai Thinai – What the heroine’s friend said to the hero
In the rainy season,
……….when the sapphire-like,
……….dark sky with roaring
……….clouds filled with water
……….poured rains and
……….cooled the land, the
……….forest flourished, farmers
……….call their chosen clan with
……….sweet voices, a stag with
……….twisted antlers hugs its
……….doe with fawn and gambols
……….between the green bushes,
your naive woman with virtue like
that of a goddess, said to the bard,
“What happens bard, if he does not
come at this evening time when
sorrow-causing sevvali tunes are
played on sweet strings of fine lutes,
riding on his chariot with loud,
chiming bells, with horses perfect
as described in books and as fast as the
wind, with his able charioteer riding
the chariot fast, carving paths
in the wet forest sand?  Tell me about it.”

When we felt helpless to do our tasks,
and were confused in our hearts, you came
sweetly to remove our sorrow and distress.
Long live your garland!

May your wide chest that is adorned by a
garland braided with white mullai
flowers from the vines spread on a hedge,
be embraced by the young woman with sweet
smile, and may you flourish, my lord!

Notes:    வினை முற்றி மீண்ட தலைவனிடம் தோழி கூறியது.  கருவின் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சூலை உடைய.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).

Meanings:   நீலத்து அன்ன – like sapphire (நீலத்து – நீலம், அத்து சாரியை), நீர் பொதி கருவின் – clouds filled with water, மா விசும்பு அதிர முழங்கி – dark/huge skies roared loudly, ஆலியின் நிலம் தண்ணென்று – the land has been cooled by raindrops (ஆலி மழைதுளிக்கு ஆகுபெயர்), கானம் குழைப்ப – the forest has flourished, இனந்தேர் – choosing their kind, உழவர் இன் குரல் இயம்ப – farmers call with their sweet voices, மறியுடை மடப் பிணை – naive female deer with young, தழீஇ – embrace (அளபெடை), புறவின் – in the forest, திரி மருப்பு இரலை – stags with twisted antlers, பைம்பயிர் உகள – romp among green plants, ஆர் பெயல் உதவிய கார் செய் காலை – when heavy rains fell and helped, நூல் நெறி – according to books, நுணங்கிய – perfect, கால் நவில் புரவி – horses that are said to ride like the wind,  கல்லென – sounding loudly, sounding without stopping (கல்லென- ஒலிக்குறிப்பு மொழி), கறங்கு மணி இயம்ப – loud bells chiming, வல்லோன் – able man (charioteer), வாய்ச் செல – to leap and go (வாய் – வாவுதல், leaping, செல – இடைக்குறை), வணக்கிய – controlled, தாப் பரி – leaping fast, riding fast, நெடுந்தேர் – tall chariot, ஈர்ம் புறவு – wet forest, இயங்கு வழி – paths to go, அறுப்ப – carving, தீந்தொடை – sweet strings, பையுள் – sorrow causing, நல் யாழ் செவ்வழி பிறப்ப – sevvali music from fine lutes rise (music played in the evening), இந்நிலை வாரார் ஆயின் – if he does not come now, தம் நிலை எவன் கொல் பாண – what happens to him oh bard (கொல் – அசைநிலை, an expletive), உரைத்திசின் சிறிது என –  you tell me a little bit (சின் – முன்னிலை அசைச் சொல், an expletive of the second person), என – thus, கடவுட் கற்பின் மடவோள் – the innocent young woman with godly virtue, கூற – said, செய் வினை அழிந்த – when felt helpless, மையல் நெஞ்சில் – in the confused heart, துனி கொள் – hating, பருவரல் தீர வந்தோய் – you came to remove sorrow (வந்தோய் – ஆ ஓ ஆயிற்று செய்யுலாகலின்), இனிது செய்தனையால் – you were sweet (ஆல் அசைநிலை, an expletive), வாழ்க நின் கண்ணி – may your garland live long, வேலி  – fence, சுற்றிய – surrounded, வால் வீ – white flowers, முல்லை – jasmine flowers, பெரும் தார் – huge garland, கமழும் – fragrant, விருந்து ஒலி கதுப்பின் – with new luxuriant hair, இன் நகை – sweet smile, இளையோள் கவவ – to be embraced by the young woman, மன்னுக – may it last, may it flourish, பெரும – oh lord (விளி, an address), நின் மலர்ந்த மார்பே – your wide chest (மார்பே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 315, குடவாயில் கீரத்தனார், பாலைத் திணை – மகட் போகிய தாய் சொன்னது
கூழையும் குறு நெறிக் கொண்டன, முலையும்
சூழி மென் முகம் செப்புடன் எதிரின,
பெண் துணை சான்றனள் இவள் எனப் பன் மாண்
கண் துணை ஆக நோக்கி நெருநையும்
அயிர்த்தன்று மன்னே, நெஞ்சம் பெயர்த்தும்  5
அறியாமையின் செறியேன் யானே,
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன்
அருங்கடி வியன் நகர்ச் சிலம்பும் கழியாள்,
சேணுறச் சென்று வறுஞ்சுனைக்கு ஒல்கி
புறவுக் குயின்று உண்ட புன் கால் நெல்லிக்  10
கோடையுதிர்த்த குவி கண் பசுங்காய்
அறு நூல் பளிங்கின் துளைக் காசு கடுப்ப,
வறுநிலத்து உதிரும் அத்தம் கதுமெனக்
கூர் வேல் விடலை பொய்ப்பப் போகிச்
சேக்குவள் கொல்லோ தானே, தேக்கின்  15
அகல் இலை குவித்த புதல் போல் குரம்பை
ஊன் புழுக்கு அயரும் முன்றில்
கான் கெழு வாழ்நர் சிறுகுடியானே.

Akanānūru 315, Kudavāyil Keerathanār, Pālai Thinai – What the heroine’s mother said after her daughter eloped
Her hair has short curls.  Her breasts
with tender nipples are like round boxes,
and I saw many times with both my eyes
that she has grown feminine, and even
when my heart was doubting greatly,
in ignorance, I failed to confine her to
our house and protect her.  She did not
perform her anklet-removal ceremony in
our huge, guarded house that is like
Koodal city of Pandiyan, but went far away
to the wasteland, where,
pigeons, saddened not finding drinking
water in springs that have dried up,
prick and eat fresh gooseberries from
trees with parched trunks and gooseberries
dropped by the western winds lie heaped
on the dry ground, looking like marble
coins with holes from broken strands.

The young man with a sharp spear lied to
her and took her along with him rapidly.
Will she be in the front yard of a hut of
mountain dwellers in a small village,
resembling a bush, eating heaped meat
dishes on a wide teak leaf?

Notes:  நற்றாய் வருந்திக் கூறியது.  முலையும் சூழி மென் முகம் செப்புடன் எதிரின (1-2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நுனியில் மெல்லிய முகத்தோடு அவள் முலைகளும் வளர்ந்து சிமிழ் போலாயின, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – முலையும் உச்சியிலுள்ள மெல்லிய முகத்தால் சிமிழுடன் மாறுபட்டன.  குறுந்தொகை 159 – கொம்மை வரி முலை செப்புடன் எதிரின, குறுந்தொகை பாடலின் உரை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெருமையையும் தேமலையும் உடைய முலைகள் செப்போடு மாறுபட்டன, உ. வே. சாமிநாதையர் உரை – பெருமையையும் தேமலையும் உடைய நகில்கள் செப்போடு மாறுபட்டன.  புறவு – புற என வந்தது.  ‘குறியதன் இறுதிச் சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே’ (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 32).  வரலாறு:  வழுதி (பாண்டியன்), கூடல்.  There was an anklet-removal ceremony that was performed before marriage.  Ainkurunūru 399, Akanānūru 315, 369, and 385 and Natrinai 279 have references to this ceremony.

Meanings:   கூழையும் – and the hair, குறு நெறிக் கொண்டன – has attained small curls, முலையும் – and the breasts, சூழி – tops, மென் முகம் – delicate tips, delicate nipples, செப்புடன் எதிரின – grown full like containers, grown like round boxes, differ from containers, பெண் துணை சான்றனள் இவளென – that she has feminine traits, பன் மாண் கண் துணை ஆக நோக்கி – I saw many times with both my eyes as partners, நெருநையும் – even yesterday, அயிர்த்தன்று – had my doubts, மன் – மிகுதி, greatly, ஏ – அசை, நெஞ்சம் பெயர்த்தும் – even after that when my heart was doubting, அறியாமையின் செறியேன் யானே – in ignorance I did not lock her up, in ignorance I did not protect her, பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன – like Koodal/Madurai city of very famous Vazhuthi/Pandiyan king, தன் அருங்கடி வியன் நகர் – her well protected huge house, சிலம்பும் கழியாள் – she does not perform the anklet removal ceremony, சேணுறச் சென்று – went far away, வறுஞ்சுனைக்கு – due to the dry springs, ஒல்கி – saddened, புறவு – pigeons (புறவு – புறா புற என்றாகி உகரம் ஏற்றது), குயின்று உண்ட புன் கால் நெல்லி – pricked and ate from the gooseberry trees with parched trunks, கோடை உதிர்த்த – dropped in the western winds, குவி கண் – heaped there, பசுங்காய் – fresh green fruits, அறு நூல் – broken threads, பளிங்கின் துளைக் காசு கடுப்ப – like the marble coins/discs with holes (கடுப்ப – உவம உருபு, a comparison word), வறுநிலத்து உதிரும் – they drop on the parched land, அத்தம் – wasteland, கதுமென – fast (விரைவுக்குறிப்பு), கூர் வேல் விடலை – young man with a sharp spear, பொய்ப்பப் போகி – went since he lied, சேக்குவள் கொல்லோ – will she be there (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt, ஓ – அசைநிலை, an expletive), தானே – தான், ஏ – அசைநிலைகள், expletives, தேக்கின் அகல் இலை – wide leaves of teak, Tectona grandis, குவித்த – heaped, புதல் போல் – like a bush, குரம்பை – hut, ஊன் புழுக்கு அயரும் – eating cooked meat, முன்றில் – front yard of a house (முன்றில் – இல்முன்), கான் கெழு வாழ்நர் சிறுகுடியானே – in the small village where forest dwellers live (சிறுகுடியானே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 316, ஓரம்போகியார், மருதத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
துறை மீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை
அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு
ஈர்ந்தண் எருமைச் சுவல்படு முது போத்துத்
தூங்கு சேற்று அள்ளல் துஞ்சிப், பொழுதுபடப்,
பைந்நிண வராஅல் குறையப் பெயர்தந்து,  5
குரூஉக்கொடிப் பகன்றை சூடி மூதூர்ப்
போர்ச்செறி மள்ளரிற் புகுதரும் ஊரன்
தேர்தர வந்த, தெரி இழை நெகிழ்தோள்,
ஊர் கொள்கல்லா மகளிர் தரத்தரப்
பரத்தைமை தாங்கலோ இலனென வறிது நீ  10
புலத்தல் ஒல்லுமோ, மனைகெழு மடந்தை?
அது புலந்து உறைதல் வல்லியோரே
செய்யோள் நீங்கச் சில் பதங்கொழித்துத்,
தாம் அட்டு உண்டு தமியர் ஆகித்
தேமொழிப் புதல்வர் திரங்கு முலை சுவைப்ப  15
வைகுநர் ஆகுதல் அறிந்தும்,
அறியார் அம்மவஃது உடலுமோரே.

Akanānūru 316, Ōrampōkiyār, Marutham Thinai – What the heroine’s friend said to her
It does not fit you, quarreling with
the man from the town,
……….where an old, male
……….buffalo with curved horns,
……….his back wet,
……….grazed on bright, white
……….waterlilies in a big brimming
……….pond with abundant fish, near
……….the seashore, slept until the sun
……….appeared, on thick moving mud,
……….rose up chopping fatty varāl
……….fish with his feet and came out
……….draped with vines bearing
……….bright pakandrai flowers,
……….appearing like an arrogant
……….warrior returning to his ancient
……….town after victory in battle,
because he brings women with slim arms
and chosen jewels in chariots, more than
the town can handle.

Housewives with hatred, unable to handle
such situations, have lost wealth,
winnow little rice and cook and eat by
themselves, become lonely, their sons with
sweet words drinking from their dry breasts.

Knowing that, if you sulk, you are ignorant!

Notes:  தலைவனுக்கு வாயில் நேர்ந்த தோழி தலைவியை நெருங்கிச் சொல்லியது.  ஒப்புமை:  நற்றிணை 260 – தண்டு சேர் மள்ளரின் இயலி அயலது குன்று சேர் வெண்மணல் துஞ்சும் ஊர.  வறிது – வறிது சிறிது ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 40).

Meanings:   துறை மீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை – big pond near the shore with abundant fish, அரி மலர் ஆம்பல் – bright/pretty white waterlilies, மேய்ந்த – grazed, நெறி மருப்பு – curved horns, ஈர்ந்தண் எருமை – a wet cool buffalo, சுவல் படு – with a back, முது போத்து – an old male, தூங்கு சேற்று அள்ளல் – moving thick mud, துஞ்சி – slept, பொழுதுபட – when the sun appears, when daylight appears, பைந்நிண வராஅல் குறைய – ruining varāl fish with fresh fat, murrel fish, Slacate nigra, Ophiocephalus punctatus, Ophiocephalus marulius (வராஅல் – அளபெடை), பெயர்தந்து – rose up and came, குரூஉக் கொடிப் பகன்றை சூடி – wearing bright pakandrai flowers with vines, Operculina turpethum, Indian jalap (குரூஉ – அளபெடை), மூதூர்ப் போர்ச் செறி மள்ளரின் புகுதரும் – enters the town like a warrior entering his ancient town after attaining victory in battle (மள்ளரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), ஊரன் – the man from such town, தேர் தர வந்த தெரி இழை – women with chosen jewels who came on chariots, நெகிழ் தோள் – slim arms, ஊர் – town, கொள்கு அல்லா– not accepting, not capable, மகளிர் –  women, தரத்தரப் பரத்தைமை தாங்கலோ இலனென – that they are unable to bear the extra-marital affairs of their husbands (தாங்கலோ – ஓகாரம் அசைநிலை, an expletive), வறிது நீ புலத்தல் ஒல்லுமோ – does hating him which is useless suit you, does sulking with him which is useless suit you (வறிது – உரிச்சொல், ஒல்லுமோ – ஓகாரம் வினா), மனை கெழு மடந்தை – women in the house, அது புலந்து – sulking for that, hating that, உறைதல் – to reside, வல்லியோரே – those who are capable of handling (ஏகாரம் அசைநிலை, an expletive), செய்யோள் நீங்க – for wealth/Thirumakal to move away, சில் பதங்கொழித்து – winnowing some rice,  தாம் அட்டு உண்டு – cooking and eating by themselves, தமியர் ஆகி – becoming lonely, தேமொழிப் புதல்வர் திரங்கு முலை சுவைப்ப – sons with sweet words drinking from their dried breasts, வைகுநர் – those who stay, ஆகுதல் அறிந்தும் – knowing what is happening, அறியார் – those who do not know, அம்ம – அசை, an expletive, அஃது உடலுமோரே – those who are not agreeable (உடலுமோரே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 317, வடமோதங்கிழார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
“மாக விசும்பின் மழை தொழில் உலந்தெனப்,
பாஅய் அன்ன பகல் இருள் பரப்பிப்,
புகை நிற உருவின் அற்சிரம் நீங்கக்,
குவி முகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று
நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும்  5
முதிராப் பல்லிதழ் உதிரப் பாய்ந்து, உடன்
மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்பப்,
பொன் செய் கன்னம் பொலிய, வெள்ளி
நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல
அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து  10
ஓங்கு சினை நறுவீ கோங்கு அலர் உறைப்பத்,
துவைத்து எழு தும்பி தவிர் இசை விளரி
உதைத்து விடு நரம்பின் இம்மென இமிரும்,
மான் ஏமுற்ற காமர் வேனில்
வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்துக்  15
குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப
வருவேம்” என்ற பருவம் ஆண்டை
இல்லை கொல்லென மெல்ல நோக்கி,
நினைந்தனம் இருந்தனமாக நயந்தாங்கு
உள்ளிய மருங்கின் உள்ளம் போல,  20
வந்து நின்றனரே காதலர், நம் துறந்து
என் உழியது கொல் தானே, பன்னாள்
அன்னையும் அறிவுற அணங்கி
நன்னுதல் பாஅய பசலை நோயே?

Akanānūru 317, Vadamōthankizhār, Pālai Thinai – What the heroine’s friend said to her
Your lover said, “When clouds in the sky
that spread darkness during the day dry out,
and early dew season like the color of smoke
ends, bees with a desire to taste pollen from
flowers attack the immature, pointed-tip
flowers of murukkam trees that look like
the dyed nails of women with bright faces
and sharp teeth, their petals dry, kuravam
flowers on tall branches drop on fragrant
kongam flowers, looking like the weighing
scales of  goldsmiths, splendid, with fine pieces
of silver reduced and placed on them, when
buzzed by swarms of bees with loud humming
that is like the music of rhythmic, plucked
strings in vilari tune, in this beautiful summer
season when deer are happy,
I will return to hear with you cuckoos sing on
kadampam trees filled with flowers that appear
like sunlight”.
As we are thinking slowly that it is not yet
summer season where he is,
like joyous happiness in the mind, that occurs
when what one desires happens, he came and
stood before us.

Abandoning you, where did it go, the pallor
disease on your fine forehead, that
mother knew about, which distressed us?

Notes:  தலைவனின் வரவு உணர்ந்த தோழி தலைவிக்குச் சொல்லியது. வை – வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).

Meanings:   மாக விசும்பின் – in the sky that is  above (மாக விசும்பு – இருபெயரொட்டு), மழை தொழில் உலந்தென – clouds ended their work, பாஅய் அன்ன – like it was spread (பாஅய் – அளபெடை), பகல் இருள் பரப்பி – darkness spread during the day, புகை நிற உருவின் – color and shape of smoke, அற்சிரம் நீங்க – early dew season ended, குவி முகை முருக்கின் – of the murukkam trees with pointed buds, Coral tree, Erythrina variegata, கூர் நுனை – pointed tip, வை எயிற்று – with sharp teeth, நகை முக மகளிர் – women with bright/pretty/laughing faces, ஊட்டு உகிர் கடுக்கும் – like the color that they put on their nails, முதிரா – immature, பல்லிதழ் உதிர – many petals fall down (பல்லிதழ் – அகரம் கெட்டு ‘குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்’ (தொல்காப்பியம், எழுத்து 160) என்றதனால் லகரம் இரட்டித்து பல்லிதழ் என முடிந்தது), பாய்ந்து உடன் – jump in, மலர் உண் வேட்கையின் – with a desire to eat pollen from flowers, சிதர் – honeybees, சிதர்ந்து – scattered, உகுப்ப – dropped, பொன் செய் கன்னம் – goldsmith’s balance plates, iron plates used by a goldsmith, பொலிய – to be splendid, to shine, வெள்ளி நுண் கோல் – bright silver fine stick, அறை குறைந்து – cut and reduced, உதிர்வன போல – like they drop, அரவ வண்டினம் ஊதுதொறும் – whenever loud swarms of bees buzz, குரவத்து ஓங்கு சினை – tall branches of kuravam trees, webera corymbosa, நறு வீ – fragrant flowers, கோங்கு அலர் உறைப்ப – drop on kongam flowers, Cochlospermum gossypium, துவைத்து எழு தும்பி – the loudly raising sounds of bees, தவிர் – intermittent, இசை விளரி உதைத்து விடு நரம்பின் இம்மென இமிரும் – they hum like the plucked strings playing vilari tunes (நரம்பின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, இம்மென – ஒலிக்குறிப்பு மொழி), மான் ஏமுற்ற – when deer where happy, காமர் வேனில் – in the beautiful summer, வெயில் அவிர் புரையும் வீ – flowers that appear like sunlight (புரை – உவம உருபு, a comparison word), ததை – filled, dense, மராஅத்து – of kadampam trees, Neolamarckia or Anthocephalus cadamba, Kadampa oak (அத்து – சாரியை), குயில் இடு பூசல் – sounds that cuckoos cause, எம்மொடு கேட்ப வருவேம் –  I will come to listen with you (வருவேம் – தன்மைப் பன்மை, first person plural), என்ற பருவம் – that season, ஆண்டை இல்லை கொல் என – it is not there (where he is), மெல்ல நோக்கி நினைந்தனம் இருந்தனமாக – as we looked slowly and thought, நயந்தாங்கு – like desired, உள்ளிய மருங்கின் உள்ளம் போல – like the mind that thought about him and it happened, வந்து நின்றனரே காதலர் – your lover came and stood (நின்றனரே – ஏகாரம் அசைநிலை, an expletive), நம் துறந்து – abandoning you, என் உழியது கொல் – where did it go, தானே பன்னாள் – she many days (தான், ஏ அசைநிலைகள், expletives), அன்னையும் அறிவுற – mother to know, அணங்கி – causing sorrow, நன்னுதல் பாஅய – spread on the fine forehead (பாஅய – அளபெடை), பசலை நோயே – pallor disease (நோயே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 318, கபிலர், குறிஞ்சித் திணை, தலைவி தலைவனிடம் சொன்னது
கான மான் அதர் யானையும் வழங்கும்,
வான மீமிசை உருமு நனி உரறும்,
அரவும் புலியும் அஞ்சுதகவுடைய
இரவுச் சிறு நெறி தமியை வருதி,
வரை இழி அருவிப் பாட்டொடு பிரசம்  5
முழவுச் சேர் நரம்பின் இம்மென இமிரும்,
பழ விறல் நனந்தலைப் பயமலை நாட!
மன்றல் வேண்டினும் பெறுகுவை, ஒன்றோ
இன்று தலையாக வாரல், வரினே,
ஏமுறு துயரமொடு யாம் இவண் ஒழிய,  10
எம் கண்டு பெயரும் காலை, யாழ நின்
கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை
ஊதல் வேண்டுமால் சிறிதே, வேட்டொடு
வேய் பயில் அழுவத்துப் பிரிந்த நின்
நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே.  15

Akanānūru 318, Kapilar, Kurinji Thinai – What the heroine said to the hero
You come alone in the fearful night,
when forest animals walk on
the paths, elephants roam, loud
thunder roars on the skies above,
and there are snakes and tigers on
the narrow paths.

Oh man from the country with
fruitful mountains, ancient victories,
wide spaces, and music of waterfalls
that mingle with the sounds of
humming bees, like drumbeats that
mix with the music of lute strings!

If you desire marriage, you will get
it.  But one thing!
From today onward, do not come
at night!

Should you come, for my confusion
and suffering to go away, when you
leave after visiting me, once you reach
your small town filled with boulders,
blow it a little bit, your long horn that
you use in the bamboo-filled jungle
to signal your position to your straying
hunters and dogs.

Notes:  இரவுக்குறி வந்த தலைவனை இரவுக்குறி விலக்கி வரைவு கடாயது.  ஒப்புமை:  அகநானூறு 168 – மான் அதர்ச் சிறு நெறி, அகநானூறு 203 – மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி, அகநானூறு 318 – கான மான் அதர் யானையும் வழங்கும், அகநானூறு 388 – காட்டு மான் அடிவழி ஒற்றி.  There are many references to hunters using dogs to hunt in the forest.  There are also references to the horns blown by hunters.  Natrinai 276 has a description of hunters who blow horns in the forest.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:   கான மான் – forest animals, அதர் – path, யானையும் வழங்கும் – elephants roam, வான – in the sky, மீமிசை – high above (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), உருமு நனி உரறும் – loud thunder roars greatly, அரவும் புலியும் – snakes and tigers, அஞ்சுதகவுடைய – being fearful, இரவு – night time, சிறு நெறி – small path, narrow path, தமியை வருதி – you are coming all alone, வரை – mountains, இழி – flowing, அருவிப் பாட்டொடு – with music from the waterfalls, முழவு – drums, பிரசம் – bees, நரம்பின் இம்மென இமிரும் – they hum like lute string sounds (நரம்பின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, இம்மென – ஒலிக்குறிப்பு மொழி), பழ விறல் – ancient victories/conquests, நனந்தலை – wide spaces, பய மலை – beneficial mountains, நாட –  oh man from such country, மன்றல் வேண்டினும் – if you desire marriage, if you request marriage, பெறுகுவை – you will get it, ஒன்றோ – எண் இடைச்சொல், இன்று தலையாக – from today onward, வாரல் – do not come (வாரல் – அல்லீற்று எதிர்மறை வியங்கோள் வினைமுற்று), வரினே – if you come (ஏகாரம் அசைநிலை, an expletive), ஏமுறு துயரமொடு யாம் இவண் ஒழிய – for my confusion and sadness to go away here, என் கண்டு பெயரும் காலை – when you leave after visiting me, யாழ –அசைநிலை, an expletive, கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை – after reaching your small town in the hills/filled with rocks, ஊதல் வேண்டுமால் சிறிதே – you should blow the horn a little (வேண்டுமால் –  ஆல் அசைநிலை, an expletive), வேட்டொடு – with hunters, வேய் பயில் – bamboo-filled jungle, அழுவத்து – in the forest, பிரிந்த – straying (dogs), பயிர் – to call, குறி நிலை கொண்ட கோடே – use the long horn to reveal your position (கோடே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 319, எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
மணிவாய்க் காக்கை மா நிறப் பெருங்கிளை
பிணி வீழ் ஆலத்து அலங்கு சினை ஏறிக்,
கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும்
கடு வினை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
படுபிணங்கவரும் பாழ் படு நனந்தலை,  5
அணங்கென உருத்த நோக்கின், ஐயென
நுணங்கிய நுசுப்பின் நுண் கேழ் மாமைப்
பொன் வீ வேங்கைப் புது மலர் புரைய
நல் நிறத்து எழுந்த சுணங்கு அணி வன முலைச்
சுரும்பு ஆர் கூந்தல் பெருந்தோள், இவள் வயின்  10
பிரிந்தனிர் அகறல் சூழின், அரும் பொருள்
எய்துக மாதோ நுமக்கே கொய் குழைத்
தளிர் ஏர் அன்ன தாங்கரு மதுகையள்
மெல்லியள், இளையள், நனி பேர் அன்பினள்,
“செல்வேம்” என்னும் நும் எதிர்,  15
“ஒழிவேம்” என்னும் ஒண்மையோ இலளே.

Akanānūru 319, Erukkāttūr Thāyankannanār, Pālai Thinai – What the heroine’s friend said to the hero
If you are thinking of separating
from her to go to the ruined vast wasteland,
……….where crows with sapphire-colored
……….beaks, along with their huge black flock,
……….eat the dead bodies of those killed by
……….wasteland bandits who rise up from their
……….small forts, climb on the swaying branches
……….of banyan trees with knotted aerial roots,
…..…..and shoot with their harsh bows,
to earn precious wealth, may you attain that!

The delicate young woman who is bright like
tender sprouts that are plucked, with looks
of a goddess, has a delicate tiny waist, fine dark
color, pallor spots like new gold-hued vēngai
flowers on the beautiful breasts on her fine chest,
bee-swarming hair, and thick arms,
who has very great love for you and will not be able
to bear separation, who does not have the strength
to reply, “I will tolerate separation”, when you tell
her that you are leaving.

Notes:  பிரிவு உணர்த்திய தலைவனுக்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது.  தாங்கரு மதுகையள் (13) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – தாங்கும் மதுகை இல்லாதவள் என்றபடி.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).  ஒழிவேம் (16) – சோமசுந்தரனார் உரை – யாம் இறந்துபடுவேம், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – பிரிந்து ஆற்றியிருப்பேம்.  குறும்பிற்கு ஊக்கும் (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஐந்தாவதன்கண் நான்காவது மயங்கிற்று.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:   மணிவாய்க் காக்கை – crows with gem-like/sapphire-like mouths/beaks, மா நிறப் பெருங்கிளை – dark/black colored big flock, பிணி வீழ் ஆலத்து – of a banyan tree’s hanging knotted aerial roots, அலங்கு சினை – swaying branches, ஏறி – climbing, கொடு வில் – curved/harsh bows, எயினர் – wasteland dwellers, குறும்பிற்கு – from small forts, ஊக்கும் – rise up with effort, கடு வினை – harsh work of robbing those on the paths, மறவர் வில் இட – wasteland warriors shoot with their bows, தொலைந்தோர் – those who died, படுபிணம் கவரும் – take the many fallen dead bodies, eat the many dead bodies, பாழ் படு நனந்தலை – ruined vast wasteland, அணங்கென உருத்த நோக்கின் – with fierce looks like that of a goddess (உருத்த – உருவம் கொண்ட), ஐயென நுணங்கிய நுசுப்பின் – with a delicate/pretty tiny waist, நுண் கேழ் மாமை – delicate colored darkness, delicate colored like tender mango leaves, பொன் வீ வேங்கைப் புது மலர் புரைய – like the new gold-like vēngai flowers, Pterocarpus marsupium (புரை – உவம உருபு, a comparison word), நல் நிறத்து எழுந்த – rising on her fine chest, சுணங்கு அணி – with pallor spots, வன முலை – pretty breasts, சுரும்பு ஆர் கூந்தல் – bee swarming hair, பெருந்தோள் – thick arms, rounded arms, இவள் வயின் பிரிந்தனிர் – if you separate from her, அகறல் சூழின் – if you think about leaving, அரும் பொருள் எய்துக – may you attain precious wealth, மாதோ – மாது, ஓ அசைநிலைகள், expletives, நுமக்கே – to you (ஏகாரம் அசைநிலை, an expletive) கொய் குழைத் தளிர் ஏர் அன்ன – like bright/pretty tender sprouts that are plucked, தாங்கு அரு மதுகையள் – she is with strength that is unable to bear separation, not strong to bear separation (தாங்கு அரு – தாங்குவதற்கு அரிய), மெல் இயள் – delicate nature, இளையள் – young woman, நனி பேர் அன்பினள் – woman with very great love (for you), செல்வேம் என்னும் நும் எதிர் – to respond to you saying “I am leaving” (செல்வேம் – தன்மைப் பன்மை, first person plural),  ஒழிவேம் என்னும் ஒண்மையோ இலளே – she does not have the mental strength to say that she will tolerate separation, she does not have the mental strength to say that she will die (ஒண்மையோ – ஓகாரம் அசைநிலை, இலளே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 320, மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
ஓங்கு திரைப் பரப்பின் வாங்கு விசைக் கொளீஇத்,
திமிலோன் தந்த கடுங்கண் வயமீன்,
தழை அணி அல்குல் செல்வத் தங்கையர்,
விழவு அயர் மறுகின் விலை எனப் பகரும்
கானல் அம் சிறுகுடிப் பெருநீர்ச் சேர்ப்ப!  5
மலர் ஏர் உண்கண் எம் தோழி எவ்வம்
அலர்வாய் நீங்க, நீ அருளாய் பொய்ப்பினும்
நெடுங்கழி துழைஇய குறுங்கால் அன்னம்
அடும்பு அமர் எக்கர் அஞ்சிறை உளரும்
தடவு நிலைப் புன்னைத் தாது அணி பெருந்துறை,  10
நடுங்கு அயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்
வண்டல் பாவை சிதைய வந்து, நீ
தோள் புதிது உண்ட ஞான்றைச்
சூளும் பொய்யோ, கடல் அறிகரியே?

Akanānūru 320, Mathurai Koolavānikan Seethalai Sāthanār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
Oh lord of the large ocean shore, where
fishermen ride their boats on tall waves
in the wide ocean and pull their nets with
fierce strong fish, which their rich younger
sisters with leaf garments on their loins sell,
calling out prices, on the streets with festivals,
in a beautiful village with groves!

Not showering your graces on my friend
with flower-like eyes, to remove her sorrow
and to end gossip, you have failed!

Are they lies, the promises that you made
on the day you enjoyed her arms,
with the ocean as a witness, coming in your
decorated, tall chariot to the vast seashore,
splitting trembling fine sands and crushing
sand dolls, where short-legged geese that
search for food in the huge backwaters sit on
adumpu vines on sand dunes preening their
beautiful feathers, and punnai trees with
bent trunks drop pollen that decorate the
shore?

Notes:  பகற்குறிக்கண் வந்த தலைவனைத் தோழி வரைவு கடாயது.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).

Meanings:   ஓங்கு திரைப் பரப்பின் – on the spread ocean with tall waves, வாங்கு விசை – pull the nets rapidly, கொளீஇ – to hold (அளபெடை), திமிலோன் தந்த கடுங்கண் வய மீன் – fierce strong fish that are brought in boats by fishermen, தழை அணி அல்குல் – loins covered with leaf garments, செல்வத் தங்கையர் – the rich younger sisters, விழவு அயர் மறுகின் – on the streets with festivals, விலை எனப் பகரும் – they call out prices and sell, கானல் – seashore groves, அம் – beautiful, சிறுகுடி – small village, பெருநீர்ச் சேர்ப்ப – oh lord of the ocean shores (சேர்ப்ப – அண்மை விளி), மலர் ஏர் உண்கண் – flower-like kohl-lined eyes (ஏர் – உவம உருபு, a comparison word), எம் தோழி – my friend, எவ்வம் – sorrow, அலர்வாய் நீங்க – to stop mouths that gossip, நீ அருளாய் – you not showering graces, பொய்ப்பினும் – if you had lied, நெடுங்கழி துழைஇய – searching in the vast backwaters (துழைஇய – அளபெடை), குறுங்கால் அன்னம் – short legged geese, அடும்பு – adumpu creepers, Ipomoea pes caprae, அமர் – sit, எக்கர் – sand dunes, அம் சிறை உளரும் – they preen their beautiful wings, they dry their beautiful wings, தடவு நிலைப் புன்னை – punnai trees with large/curved trunks, Calophyllum inophyllum, Laurel Tree, Mast wood Tree, தாது – pollen, அணி – decorate, பெருந்துறை – vast shores, நடுங்கு அயிர் – trembling fine sands, போழ்ந்த – splitting, கொடுஞ்சி நெடுந்தேர் – tall chariot with decorations, வண்டல் பாவை சிதைய – crushing the sand dolls, crushing the play dolls, வந்து – came, நீ தோள் புதிது உண்ட – her arms that you enjoyed first, ஞான்றை – on that day, சூளும் பொய்யோ – are your promises lies (பொய்யோ- ஓகாரம் வினா), கடல் அறிகரியே – the ocean as a witness (அறிகரியே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 321, கயமனார், பாலைத் திணை – மகட்போக்கிய செவிலித்தாய் சொன்னது
பசித்த யானைப் பழங்கண் அன்ன
வறுஞ்சுனை முகந்த கோடைத் தெள் விளி
விசித்து வாங்கு பறையின் விடரகத்து இயம்பக்,
கதிர்க் கால் அம்பிணை உணீஇய, புகல் ஏறு
குதிர்க் கால் இருப்பை வெண்பூ உண்ணாது,  5
ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரைப்
படுமணி இன நிரை உணீஇய, கோவலர்
விடுநிலம் உடைத்த கலுழ்கண் கூவல்,
கன்றுடை மடப் பிடி களிறொடு தடவரும்
புன்தலை மன்றத்து அம் குடிச் சீறூர்,  10
துணையொடு துச்சில் இருக்கும் கொல்லோ,
கணையோர் அஞ்சாக் கடுங்கண் காளையொடு
எல்லி முன்னுறச் செல்லும் கொல்லோ,
எவ்வினை செயுங்கொல், நோகோ யானே,
அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ,  15
யாய் அறிவுறுதல் அஞ்சி
வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே?

Akanānūru 321, Kayamanār, Pālai Thinai – What the foster mother said, after the heroine eloped
Afraid that her mother might know
about it, she removed her chosen
jingling anklets, well-made with rattling
pebbles, and went with him through
the tall mountains,

where western winds with clear sounds
attack dried springs that are like the sad
eyes of elephants, their roaring sounds
echo in the mountain caves like those
of parai drums that are tightly tied,
a loving stag, not eating the white
irruppai flowers, calls his pretty mate
to eat them, and in the distance,
a cow elephant with calf searches for
water, along with her mate, in a well with
spring water, dug by cattle herders breaking
the dry land, for their thirsty herds with
jingling bells and big udders.

At night, will she stay with her partner
in a beautiful, small village with parched
common ground, or
will she walk in front of her strong young
man who does not fear bandits with bows?
What will she do?  I am hurting!

Notes:   மகளை இழந்த செவிலித்தாய் வருந்திச் சொல்லியது.  This poet has a similar description of a young woman removing her anklets before eloping in Natrinai 12.  வறுஞ்சுனை முகந்த கோடை (2) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – நீரற்ற சுனையில் புகுந்துவரும் மேல் காற்று, நீர் அற்ற சுனை தன்னுள் முகத்ததால் காற்றினால் எழுந்த.  கலுழ்கண் கூவல் (8) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – பில்கும் ஊற்றுக்கண்ணை உடைய கூவல், பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீர் பிலிற்றுகின்ற ஊற்றுக்கண்ணை உடைய கிணறு.  செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல். களவியல் 34).

Meanings:   பசித்த யானை – hungry elephant, பழங்கண் அன்ன – like its sorrow, வறுஞ்சுனை – dried springs, முகந்த – taking, entering, கோடை – western winds, தெள் விளி – clearly sounding, விசித்து வாங்கு பறையின் – like curved parai drums with tightly tied cover (பறையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), விடர் அகத்து இயம்ப – roars inside the mountain cracks/caves, கதிர்க் கால் – delicate long legs, அம் பிணை உணீஇய – for its beautiful female deer to eat (உணீஇய – அளபெடை), புகல் ஏறு – a stag with desire, குதிர்க் கால் இருப்பை – iruppai trees with grain bin like legs, Indian Butter Tree, South Indian Mahua, இலுப்பை, வஞ்சி, வெண்பூ உண்ணாது – not eating the white flowers, ஆண் குரல் விளிக்கும் – the male calls, சேண் பால் – in the distance, வியன் சுரை – big udders, படுமணி இன நிரை உணீஇய – for their thirsty herds with jingling  bells to drink (உணீஇய – அளபெடை), கோவலர் விடுநிலம் உடைத்த – created by the cattle herders who dug the parched land, கலுழ்கண் கூவல் – wells with water oozing from spring holes in the ground, (கலுழ் – ஊற்று), கன்றுடை மடப் பிடி – female elephant with calf, களிறொடு – with the male elephant, தடவரும் – searches (தடவிப் பார்க்கும்), புன்தலை மன்றத்து – in the dull common ground, in the parched common grounds, அம் குடிச் சீறூர் – beautiful small village, துணையொடு துச்சில் இருக்கும் கொல்லோ – will she stay with her partner in a shelter (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt, ஓ – அசைநிலை, an expletive), கணையோர் அஞ்சாக் கடுங்கண் காளையொடு – with the fierce young man who does not fear bandits with bows, எல்லி – night, முன்னுறச் செல்லும் கொல்லோ – or will she walk in front of him (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt, ஓ – அசைநிலை, an expletive), எவ்வினை செயும் கொல் – what will she be doing (செயும் – இடைக்குறை, கொல் -அசைநிலை, an expletive) நோகோ – I am hurting (நோகு – செய்கென்னும் தன்மை வினை, ஓ -அசைநிலை, an expletive, இரக்கக் குறிப்பு, implying pity), யானே – me (ஏ -அசைநிலை, an expletive), அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ – removed her chosen jingling anklets made well with tiny pebbles (கழீஇ – அளபெடை), யாய் அறிவுறுதல் அஞ்சி – afraid that mother will know about it, வேய் – bamboo, உயர் பிறங்கல் மலை இறந்தோளே – the one who went through the tall mountains (இறந்தோளே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 322, பரணர், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
வயங்கு வெயில் ஞெமியப் பாஅய், மின்னு வசிபு,
மயங்கு துளி பொழிந்த பானாள் கங்குல்,
ஆராக் காமம் அடூஉ நின்று அலைப்ப,
இறுவரை வீழ்நரின் நடுங்கித், தெறுவரப்,
பாம்பு எறி கோலின் தமியை வைகி,  5
தேம்புதி கொல்லோ நெஞ்சே, உருமிசைக்
களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின்,
ஒளிறு வேல் தானைக் கடுந்தேர்த் திதியன்
வருபுனல் இழிதரு மரம் பயில் இறும்பில்
பிறை உறழ் மருப்பின் கடுங்கண் பன்றிக்  10
குறை ஆர் கொடுவரி குழுமும் சாரல்,
அறையுறு தீந்தேன் குறவர் அறுப்ப
முயலுநர் முற்றா ஏற்று அரு நெடுஞ்சிமைப்,
புகல் அரும் பொதியில் போலப்
பெறல் அருங்குரையள், எம் அணங்கியோளே.  15

Akanānūru 322, Paranar, Kurinji Thinai – What the hero said to his heart
Clouds spread and hid the bright sun, lightning
struck splitting the clouds, heavy rains poured in
the middle of the night, and with unabated love,
do you tremble and worry like a man who is
falling from a mountain peak, and suffering alone
like a stick used to hit a snake, my heart?

She is difficult to obtain, the one who causes
me pain, like the honeycombs that mountain
men are unable to get, hanging on boulders
in the difficult-to-scale Pothiyil mountain peaks
belonging to Thithiyan with rapid chariots, and
elephants with thunder-like roars in battles with
clashing swords, on whose slopes, streams flow
down in the small forests dense with trees, and
tigers with curved stripes roar after eating the
flesh of fierce boars with crescent-shaped tusks.  

Notes:  அல்ல குறிப்பட்டு தன் ஊர் திரும்பும் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.  இறுவரை (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெரிய மலை, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மலை முகடு (மலை உச்சி), ஐங்குறுநூறு உரைகளில் (309) – அ. தட்சிணாமூர்த்தி உரை – பெரிய மலை, முறிந்த மலையுமாம், ஒளவை துரைசாமி உரை – கற்கள் முறிந்து சரிந்து கிடக்கும் பக்கத்தையுடைய மலை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – செங்குத்தாக உயர்ந்திருக்கும் மலை.  தேம்புதி கொல்லோ நெஞ்சே (6) – உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – வருந்துவாய் போலும் நெஞ்சே, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – வாடுவையோ நெஞ்சே.  ஒப்புமை:  ஐங்குறுநூறு 264 – இளம் பிறையன்ன கோட்ட கேழல்.  மின்னல் பிளத்தல் – மின்னு வசிபு – அகநானூறு 162, 212, 322, நற்றிணை 228, 261, மலைபடுகடாம் 97, மின்னு வசி – நற்றிணை 334.  வரலாறு:  திதியன், பொதியில்.  குரை – ஏயும் குரையும் இசைநிறை அசைநிலை ஆயிரண்டு ஆகும் இயற்கைய என்ப (தொல்காப்பியம், இடையியல் 24).  பாம்பு எறி கோலின் (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பாம்பின் மீது வீசிய கோல் போல, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – கோலால் அடிக்கப்பட்ட பாம்பு போல்.  களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின் (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – யானைகள் ஓரிடத்தே திரண்டுள்ள வாளோடு வாள் பொருதுகின்ற போர்க்களத்தின்கண், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – ஆண் யானைகள் திரண்டவாட்கள் பின்னிய போர்க்கண்ணே.

Meanings:   வயங்கு வெயில் ஞெமிய – causing the bright sun to be hidden, பாஅய் – the clouds spread (அளபெடை), மின்னு வசிபு – lightning strikes splitting the clouds, lightning strikes splitting the sky, lightning strikes splitting darkness (வசிபு – வசிய எனத் திரிக்க), மயங்கு – confusing, துளி பொழிந்த – rained heavily, பானாள் – midnight, கங்குல் – night, ஆராக் காமம் – unabated love, love without limit, அடூஉ – giving sorrow (அளபெடை), நின்று அலைப்ப – stays and causes distress, இறுவரை வீழ்நரின் – like a man who falls from a mountain top, like a man who falls from a huge mountain (இறுவரை – மலையின் இறுவாய், வீழ்நரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), நடுங்கி – trembling, தெறுவர – causing fear, பாம்பு எறி கோலின் – like a stick with which a snake is hit (கோலின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), தமியை வைகி – you suffer alone, தேம்புதி கொல்லோ நெஞ்சே – are you struggling oh heart (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt, ஓ – அசைநிலை, an expletive), உருமிசைக் களிறு – male elephants that roar like thunder, கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின் – in the battlefield with clashing swords, ஒளிறு வேல் தானை – huge army with bright swords, கடுந்தேர்த் திதியன் – Thithiyan with fast chariots, வருபுனல் இழிதரு – streams flowing down, மரம் பயில் இறும்பில் – in the small forests filled with trees, பிறை உறழ் – like the crescent moon (உறழ் – உவம உருபு, a comparison word), மருப்பின் – with tusks, கடுங்கண் பன்றி – strong/harsh boars, குறை ஆர் – eating their flesh, கொடுவரி குழுமும் சாரல் – mountain slopes on which tigers with curved stripes roar (கொடுவரி – புலி, ஆகுபெயர்), அறையுறு – hanging on the boulders, தீந்தேன் குறவர் அறுப்ப முயலுநர் – mountain dwellers who make an effort to remove the sweet honeycombs, முற்றா ஏற்று – unable to climb, அரு – difficult, நெடுஞ்சிமை – tall peaks, புகல் அரும் பொதியில் போல – like the difficult to enter Pothiyil mountains, பெறல் அருங்குரையள் – she is difficult to obtain (அருங்குரையள் – குரை என்னும் இடைச்சொல் குறிப்பு வினைமுற்றாக ஆயிற்று), எம் அணங்கியோளே – she who caused me distress (அணங்கியோளே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 323, புறநாட்டுப் பெருங்கொற்றனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
இம்மென் பேர் அலர் இவ்வூர் நம்வயின்
செய்வோர் ஏச் சொல் வாடக், காதலர்
வருவர் என்பது வாய்வதாக,
ஐய செய்ய மதனில சிறிய நின்
அடி நிலன் உறுதல் அஞ்சிப், பையத்  5
தடவரல் ஒதுக்கம் தகை கொள இயலிக்
காணிய வம்மோ, கற்பு மேம்படுவி!
பலவுப் பல தடைஇய வேய் பயில் அடுக்கத்து,
யானைச் செல் இனம் கடுப்ப வானத்து
வயங்கு கதிர் மழுங்கப் பாஅய்ப், பாம்பின்  10
பை பட இடிக்கும் கடுங்குரல் ஏற்றொடு
ஆலி அழிதுளி தலைஇக்
கால் வீழ்த்தன்று, நின் கதுப்பு உறழ் புயலே.

Akanānūru 323, Puranāttu Perunkotranār, Pālai Thinai – What the heroine’s friend said to her
On the bamboo-dense slopes
with many large jackfruit trees,
like a moving elephant herd,
clouds come down as rain,
appearing like your hair,
when the sun’s rays fade and
spread in the sky, with roaring
thunder that attacks and ruins
the hoods of snakes, pouring
hailstones and heavy rains.

Oh friend superior in virtue!
May it be true that our lover
will return
for slanderous words, spoken about
us loudly in this town, to fade away!

Let us go and see!  Walk slowly,
with your small, delicate, fine feet
that are afraid of walking on land,
and your body bent with modesty!

Notes:   பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தியது.  There is a convention that thunder ruins and kills snakes.  Akanānūru 68, 92, 119, 182, 202, 274, 323, 328, Kalithokai 45, 113, Kurunthokai 158, 190, 268, 391 and Natrinai 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, Puranānūru 17, 58, 126, 211, 366 and 369 have similar descriptions of thunder ruining or killing snakes.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

Meanings:   இம்மென் – very loudly (ஒலிக்குறிப்பு), பேர் அலர் இவ்வூர் நம்வயின் செய்வோர் – those who gossip a lot about us in this town, ஏச் சொல் வாட – slanderous/arrogant words to fade away, காதலர் வருவர் என்பது வாய்வதாக – may it be true that our lover will return, ஐய – delicately, செய்ய – red, மதன் இல சிறிய நின் அடி – your small feet with no strength, your small delicate feet (இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்), நிலன் உறுதல் அஞ்சி – afraid of walking on the land (நிலன் – நிலம் என்பதன் போலி), பைய – slowly, தடவரல் – bent, ஒதுக்கம் – walking, தகை கொள இயலி – walking with esteem, காணிய – to see, வம்மோ – you come (மோ – முன்னிலையசை, an expletive of the second person), கற்பு மேம்படுவி – oh one who is superior in virtue (விளி, an address), பலவுப் பல தடைஇய – with many large jackfruit trees (தடைஇய – தட என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்ச வினை, அளபெடை), வேய் பயில் அடுக்கத்து – on the bamboo-filled slopes, யானைச் செல் இனம் கடுப்ப – like moving elephant herds (கடுப்ப – உவம உருபு, a comparison word), வானத்து வயங்கு கதிர் மழுங்க – bright rays fade and spread in the sky, பாஅய் – spread (அளபெடை), பாம்பின் பை பட இடிக்கும் – thundering and attacking and ruining the hoods of snakes, கடுங்குரல் ஏற்றொடு – along with roaring loud thunder, ஆலி – hailstones, அழிதுளி தலைஇ – with heavy rains (தலைஇ – அளபெடை), கால் வீழ்த்தன்று – the rain came down, நின் கதுப்பு உறழ் – like your hair (உறழ் – உவம உருபு, a comparison word), புயலே – clouds, ஏகாரம் அசைநிலை, an expletive (புயல் – ஆகுபெயர் முகிலுக்கு)

அகநானூறு 324, ஒக்கூர் மாசாத்தியார், முல்லைத் திணை – தலைவனுடன் தேரில் இருந்தவர்கள் தம்முள் சொன்னது
விருந்தும் பெறுகுநள் போலும், திருந்திழைத்,
தட மென் பணைத்தோள் மடமொழி அரிவை,
தளிரியல் கிள்ளை இனிதின் எடுத்த
வளராப் பிள்ளைத் தூவி அன்ன,
வார் பெயல் வளர்த்த பைம்பயிர்ப் புறவில்  5
பறைக் கண் அன்ன நிறைச் சுனைதோறும்
துளிபடு மொக்குள் துள்ளுவன சாலத்,
தொளி பொரு பொகுட்டுத் தோன்றுவன மாய
வளி சினை உதிர்த்தலின் வெறி கொள்பு தாஅய்ச்,
சிரல் சிறகு ஏய்ப்ப அறல் கண் வரித்த  10
வண்டு உண் நறுவீ  துமித்த நேமி
தண்ணில மருங்கில் போழ்ந்த வழியுள்,
நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுகச்,
செல்லும் நெடுந்தகை தேரே,
முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே.  15

Akanānūru 324, Okkūr Māsāthiyār, Mullai Thinai – What those near the hero said, as they returned from their trip
The soft-spoken woman with delicate,
bamboo-like arms and perfectly
made jewels will celebrate today, it
appears.

Since rain has fallen, the bushes in the
forest are lush and green like the feathers
of young parrots raised sweetly, that are
of delicate nature.  In the muddy soil
raindrops fall creating bubbles that
appear and burst like the bubbles created
in the full springs resembling the eyes of
drums.

Fragrant flowers from which bees drink
honey, drop from tree branches in the wind,
spread like the wings of kingfishers on the
flowing water and get chopped by the chariot
wheels of the greatly esteemed man who
arrives home thinking, at evening time when
mullai flowers blossom.  On the path where
the cool ground is split by chariot wheels,
rainwater flows rapidly like rows of snakes
following one another.

Notes:  வினைமுற்று மீளும் தலைவனின் எண்ணத்தை உணர்ந்து ஏவலர் தம்முள் கூறியது.  ஒப்புமை:  அகநானூறு 178 – பறைக் கண் அன்ன நிறைச் சுனை பருகி, அகநானூறு 324 – பறைக் கண் அன்ன நிறைச் சுனை,  அகநானூறு 339 – வீங்கு விசைப் பிணித்த விரை பரி நெடுந்தேர் நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில், பாம்பு என முடுகு நீர் ஓட.  தொளி பொரு பொகுட்டுத் தோன்றுவன மாய (வரி 8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தாக்குவதனால் சேற்றில் தாமரை மொட்டுக்கள் தோன்றி மறையும்படி, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – சேற்றின் கண்ணே பொருதலால் எழும் குமிழிகள் தோன்றி மறைய.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).

Meanings:   விருந்தும் பெறுகுநள் போலும் – it appears that she will celebrate, திருந்திழை – perfectly made jewels,  தட – large, curved, மென் – delicate, பணைத்தோள் – bamboo-like arms, thick arms, மடமொழி அரிவை – the young woman with soft words, தளிர் இயல் கிள்ளை – tender-natured parrot,  இனிதின் எடுத்த – raised sweetly, வளராப் பிள்ளை – not fully grown, young one,  தூவி அன்ன – like feathers, வார்பெயல் வளர்த்த – falling rains caused growth, பைம்பயிர்ப் புறவில் – in the woodlands with lush green vegetation, பறைக் கண் அன்ன – like the eyes of drums, நிறைச்சுனை தோறும் – in all the full springs, in all the full ponds, துளிபடு – attacked by the rain, மொக்குள் – bubbles, துள்ளுவன சால – like leaping (சால – ஒப்ப என்னும் பொருட்டு, உவம உருபு, a comparison word), தொளி பொரு – hitting mud, பொகுட்டு தோன்றுவன மாய – bubbles appear and disappear, வளி சினை உதிர்த்தலின் – since the wind dropped from tree branches, வெறி கொள்பு தாஅய் – spread with fragrance (தாஅய் – அளபெடை), சிரல் சிறகு ஏய்ப்ப – like the feathers of kingfishers (ஏய்ப்ப – உவம உருபு, a comparison word), அறற்கண் வரித்த – decorated in the flowing water, decorated in the rippled sand, வண்டு உண் நறு வீ – fragrant flowers buzzed by bees, fragrant flowers where bees drink honey, துமித்த நேமி – chopped by the wheels, தண் நில மருங்கில் – on the cold ground, போழ்ந்த வழியுள் – in the cracked paths, நிரை செல் பாம்பின் – like snakes in a row (பாம்பின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), விரைபு நீர் முடுக – water flowing rapidly, செல்லும் நெடுந்தகை தேரே – the noble man’s chariot goes (தேரே – ஏகாரம் அசைநிலை, an expletive),  முல்லை மாலை – evening time when jasmine blooms, நகர் புகல் – enters the home, enters the town, ஆய்ந்தே – thinking, ஏகாரம் அசைநிலை, an expletive

அகநானூறு 325, மாமூலனார் பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி! காதலர்
‘வெண்மணல் நிவந்த பொலங்கடை நெடுநகர்,
நளி இருங்கங்குல் புணர் குறி வாய்த்த
களவும் கைம்மிக வளர்ந்தன்று அன்னையும்
உட்கொண்டு ஓவாள் காக்கும் பிற் பெரிது 5
இவண் உறைபு எவனோ? அளியள்!’ என்று அருளி,
ஆடு நடைப் பொலிந்த புகற்சியின் நாடு கோள்
அள்ளனைப் பணித்த அதியன் பின்றை
வள் உயிர் மாக்கிணை கண் அவிந்தாங்கு,
மலை கவின் அழிந்த கனை கடற்று அருஞ்சுரம் 10
வெய்ய மன்ற நின் வை எயிறு உணீஇய,
தண் மழை ஒரு நாள் தலைஇய ஒண்ணுதல்
ஒல்கு இயல் அரிவை நின்னொடு செல்கம்
சில் நாள் ஆன்றனையாக எனப் பன்னாள்
உலைவு இல் உள்ளமொடு வினை வலி உறீஇ 15
எல்லாம் பெரும் பிறிதாக வடாஅது,
நல் வேல் பாணன் நல் நாட்டு உள்ளதை
வாட்கண் வானத்து என்றூழ் நீள் இடை,
ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும்
சோலை அத்தம் மாலைப் போகி, 20
ஒழியச் சென்றோர் மன்ற
பழி எவன் ஆம் கொல், நோய்தரு பாலே?

Akanānūru 325, Māmoolanār, Pālai Thinai – What the heroine said to her friend
May you live long, my friend!
The trysts, with my lover on the
white, sand-filled bright entrance
of our huge house, at the pitch of
darkness during long nights, have
grown out of control.
Mother has it in her mind now and
she guards me constantly.
He pitied me thinking how I could
stay here for long with all this.

“Please bear with me for a few
days, delicate young woman with a
bright forehead.  You can go with me.
For me to kiss you with great desire,
may there be cool rains for a day!
Let us go through to the
harsh wasteland where dense
forests have lost their beauty,
like the dead silence after the beat
sounds of a huge kinai drum,
belonging to Athiyan,
victorious in his ways with splendid
desire, who bade Allan to seize a
country,” he said, the man who went
on the wasteland path, leaving me
here without enthusiasm, ruined, with
strength to do his work and not with
any other thoughts.

He went in the evening through the
groves in the wasteland,
where murderous elephants that kill
people look at the paths for travelers,
and the bright sun heats the long path
to the north, to the fine country of
Pānan with fine spears.

What blame will occur for my disease?

Notes:   பிரிவிடை வேறுபட்ட தலைவி ஆற்றாமையினால் தோழியிடம் சொல்லியது.  வரலாறு:  அள்ளன், அதியன், பாணன்.  A Pānan king is mentioned in the following five Akanānūru poems, 113 – எழாஅப் பாணன், 155 – பல் வயின் பய நிரை சேர்ந்த பாண் நாட்டு, 226 – வலி மிகும் முன்பின் பாணனொடு, 325 – நல் வேல் பாணன் நல் நாட்டு, and 386 – பாணன் மல்லடு மார்பின் வலியுற, and in an inscription at Paraiyanpattu in Tamil Nadu, which mentions Pāṇāṭu, the territory of Pānan – Early Tamil Epigraphy, page 629, Iravatham Mahadevan, Harvard University Press.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ்செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  வாள் – வாள் ஒளி ஆகும் (தொல்காப்பியம் உரியியல் 71).  பொலம் – பொன் என் கிளவி ஈறு கெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுள் மருங்கின் தொடர் இயலான (தொல்காப்பியம், புள்ளிமயங்கியல் 61). வை – வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).  வெய்ய மன்ற (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தேற்றமாக என்னால் பெரிதும் விரும்பப்படுகின்ற, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – ஒரு தலையாயக் கொடியன. எயிறு உணீஇய (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நின்னுடைய கூரிய எயிற்றில் ஊறுகின்ற நீரை யான் பருகும்படி, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – நின் கூரிய பற்கள் நீர் பருகுமாறு.  எயிறு உண்கு – நற்றிணை 134 – ஒளவை துரைசாமி உரை – முத்தம் கொள்ளுதலை எயிறுண்டல் என்பது மரபு.  பிற பாடல்களில் எயிறு உண்ணுதல் – நற்றிணை 17 – நின் இலங்கு எயிறு உண்கு, நற்றிணை 134 – நின் முள் எயிறு உண்கு, நற்றிணை 204 – மடந்தை நின் கூர் எயிறு உண்கு, கலித்தொகை 112 – மெல்ல முயங்கு நின் முள் எயிறு உண்கும்.

Meanings:   அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், a particle which means ‘listen’, வாழி -அசைநிலை, an expletive, may you live long, தோழி – oh friend, காதலர் – my lover, வெண்மணல் – white sand, நிவந்த – tall, elevated, பொலம் கடை – bright entrance, நெடுநகர் – huge house, நளி இருங்கங்குல் – long night with dense darkness, புணர் குறி வாய்த்த களவும் – and the secret love with trysts that happened, கைம்மிக – increased greatly, வளர்ந்தன்று – they has grown, அன்னையும் உட்கொண்டு – and mother understands it, mother kept it to her mind, ஓவாள் காக்கும் – she guards me without a break, பிற் பெரிது இவண் உறைபு எவனோ – how can I stay here for long after this (ஓகாரம் அசைநிலை, an expletive), அளியள் – the pitiful young woman, என்று அருளி – so he was gracious, ஆடு நடை – victorious ways, பொலிந்த – splendid, shining, புகற்சியின் – with desire, நாடு கோள் – to take a country, அள்ளனைப் பணித்த அதியன் – Athiyan who controlled Allan, பின்றை – after, வள் உயிர் – loud sounds, மாக் கிணை கண் அவிந்தாங்கு – like how the sounds of the huge kinai drums died down, மலை கவின் அழிந்த – forests lost their beauty, கனை கடற்று – in the dense forests, அருஞ்சுரம் – harsh wasteland, வெய்ய – it is hot, it is harsh, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty, நின் வை எயிறு உணீஇய – for your sharp teeth to drink, for me to kiss you (உணீஇய – அளபெடை, எயிறு – வாய்க்கு ஆகுபெயர்), தண் மழை ஒரு நாள் தலைஇய – may the cool rains fall one day, may the cool clouds come down as rain one day (தலைஇய – அளபெடை), ஒண்ணுதல் – bright forehead, ஒல்கு இயல் – of tiring nature, delicate, அரிவை – oh young woman, நின்னொடு செல்கம் – I will go with you (செல்கம் – தன்மைப் பன்மை, first person plural), சில் நாள் ஆன்றனையாக – you tolerate for a few days, you stay calm for a few days, என – thus, பன்னாள் – for many days, உலைவு இல் உள்ளமொடு – with a mind without languor, வினை வலி உறீஇ – emphasize work (உறீஇ – அளபெடை), எல்லாம் பெரும் பிறிதாக – to be greatly ruined, வடாஅது – in the north வடக்கின்கண் (அளபெடை, ஏழாம் உருபின் பொருள்பட வந்தது), நல் வேல் பாணன் – Pānan with fine spears, நல் நாட்டு உள்ளதை – in the fine country, வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை – on the long path with bright sun in the sky, ஆள் கொல் யானை – people-killing elephants, அதர் பார்த்து அல்கும் – stays looking at the path, சோலை – groves, அத்தம் மாலைப் போகி ஒழியச் சென்றோர் – the man who went on the wasteland path leaving me here, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty, பழி எவன் ஆம் கொல் – how will blame rise (ஆம் – இடைக்குறை, ஆகும் என்பது ஆம் என நின்றது, கொல் -அசைநிலை, an expletive), நோய்தரு பாலே – the part which gives the disease (பாலே – ஏகாரம் -அசைநிலை, an expletive)

அகநானூறு 326, பரணர், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
ஊரல் அவ்வாய் உருத்த தித்திப்,
பேர் அமர் மழைக் கண், பெருந்தோள், சிறு நுதல்,
நல்லள் அம்ம குறுமகள், செல்வர்
கடும் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்
நெடுங்கொடி நுடங்கும் அட்டவாயில்  5
இருங்கதிர்க் கழனிப் பெருங்கவின் அன்ன
நலம் பாராட்டி, நடையெழில் பொலிந்து
விழவிற் செலீஇயர் வேண்டும், வென்வேல்
இழை அணி யானைச் சோழர் மறவன்
கழை அளந்து அறியாக் காவிரிப் படப்பைப்  10
புனன் மலி புதவின் போஒர் கிழவோன்
பழையன் ஓக்கிய வேல்போல்,
பிழையல கண்ணவள் நோக்கியோர் திறத்தே.

Akanānūru 326, Paranar, Marutham Thinai – What the heroine’s friend said to the hero
You should go with the young woman to
the festival, praising her beauty, lovely like
the fields with large rice spears, of Attavāyil
town where tall flags sway, with streets on
which the rich ride their fast chariots and
create pits, the fine woman with beautifully
spread pallor spots, large, warring, moist eyes,
thick arms and a small forehead.

Her eyes attack without fail, those who she sees,
like the spears thrown at enemies by Pazhaiyan,
commander of the Chozha king with victorious
spears and elephants wearing ornaments, lord
of Pō ōr with groves and sluice gates with heavy
floods, where long bamboo poles cannot measure
the depth of Kāviri.

Notes:  பரத்தையர் இல்லத்திலிருந்து வந்த தலைவனுக்குத் தோழி வாயில் மறுத்தது.  ஊரல் அவ்வாய் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பாலொடு தேன் கலந்தாற்போன்ற வாயூரலையும் அழகிய வாயையும், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – ஊரலாகிய அழகு வாய்ந்த.  பேர் அமர் மழைக் கண் (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெரிய விருப்பத்தை உண்டாக்கும் குளிர்ந்த கண்கள், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – பெரிய அமர் செய்யும் குளிர்ந்த கண்கள்.  வரலாறு:  சோழர், போஒர் கிழவோன் பழையன், அட்டவாயில், காவிரி.

Meanings:   ஊரல் – spreading, அவ்வாய் உருத்த தித்தி – beautiful pallor spots (அவ்வாய் – அழகு வாய்ந்த, உருத்த – உருவம் கொண்ட), பேர் – large, அமர் – desirable, warring, calm, மழைக் கண் – moist eyes, பெருந்தோள் – thick arms, rounded arms, சிறு நுதல் – small forehead, நல்லள் – fine woman, அம்ம –அசைநிலை, an expletive, குறுமகள் – young woman, செல்வர் கடும் தேர் குழித்த ஞெள்ளல் – streets on which chariots of the wealthy people have dug into and caused pits, ஆங்கண் – there, நெடுங்கொடி நுடங்கும் அட்டவாயில் – Attavāyil town where tall flags sway, இருங்கதிர்க் கழனி – fields with big grain spears, பெருங்கவின் அன்ன – like the great beauty, நலம் பாராட்டி – praising her beauty, நடை எழில் பொலிந்து – walking with her beautifully, விழவில் செலீஇயர் வேண்டும் – you should go with her to the festival (செலீஇயர் – அளபெடை), வென்வேல் – victorious spears, இழை அணி யானை – elephants with beautiful ornaments, சோழர் – Chozha king, மறவன் – warrior, கழை அளந்து அறியாக் காவிரி – Kāviri in which warriors with long bamboo poles that cannot figure out the depth, படப்பை – groves, புனன் மலி புதவின் போஒர் கிழவோன் – lord of Pō ōr town with sluice gates with heavy floods, பழையன் – Pālaiyan, ஓக்கிய வேல் போல் – like the spears he threw at his enemies, பிழையல – they do not miss the target, கண்ணவள் – அவள் கண், her eyes, நோக்கியோர் திறத்தே – those who are seen by her (திறத்தே  – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 327, மருங்கூர்ப்பாகைச் சாத்தன் பூதனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
‘இன்பமும் இடும்பையும், புணர்வும் பிரிவும்,
நன்பகல் அமையமும் இரவும் போல
வேறு வேறு இயல ஆகி, மாறு எதிர்ந்து
உள’ என உணர்ந்தனை ஆயின், ஒரூஉம்
இன்னா வெஞ்சுரம் நம் நசை துரப்பத்  5
துன்னலும் தகுமோ? துணிவு இல் நெஞ்சே!
நீ செல வலித்தனை ஆயின், யாவதும்
நினைதலும் செய்தியோ எம்மே, கனை கதிர்
ஆவி அவ்வரி நீரென நசைஇ
மா தவப் பரிக்கும் மரல் திரங்கு நனந்தலைக் 10
களர் கால்யாத்த கண் அகன் பரப்பின்
செவ்வரை கொழி நீர் கடுப்ப, அரவின்
அவ்வரி உரிவை அணவரும் மருங்கில்,
புற்று அரை யாத்த புலர் சினை மரத்த,
மைந்நிற உருவின் மணிக் கண் காக்கை  15
பைந்நிணம் கவரும் படுபிணக் கவலைச்
சென்றோர் செல் புறத்து இரங்கார் கொன்றோர்,
கோல் கழிபு இரங்கும் அதர,
வேய் பயில் அழுவம் இறந்த பின்னே?

Akanānūru 327, Marunkūrpākai Sāthan Poothanār, Pālai Thinai – What the hero said to his heart
My heart without strength!
If you understand that pleasure and
sorrow, and union and separation are
like fine days and nights, is it fitting
to leave her for the painful, hot
wasteland because of our desire?

If you have the strength to go to the
vast land,
……….where animals are disappointed on
……….running to beautiful mirage waves
……….produced by the thick rays of the sun
……… with thirst thinking they are water,
……….hemp plants have dried, the land is
……….saline, snake skins with pretty lines
……….hang like waterfalls from tall mountains,
……….crows with the color of dark clouds and
………. gem colored eyes sit on dry branches of
……….trees whose bases have termite mounds,
……….and eat the fresh fat of many who are
……….killed on the paths, attacked on their
……….backs by ruthless, wayside bandits who
……….feel sad just for the arrows they have lost
……….while killing,  
……….in the forest dense with bamboo,
do you have any consideration for me?   

Notes:  பொருளீட்டத் தூண்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.  ஒப்புமை:  குறுந்தொகை 235 – பாம்பின் தூங்கு தோல் கடுக்கும் தூ வெள் அருவி.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).  கால்யாத்த (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தன்மை பொருந்திய, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – பரந்த.  மைந்நிற உருவின் (15) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கரிய நிறத்தையுடைய, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – பெய்யும் மேகத்தின் நிறம் போலும்.

Meanings:   இன்பமும் இடும்பையும் – pleasure and sorrow, புணர்வும் பிரிவும் – union and separation, நன்பகல் அமையமும் இரவும் போல – like fine midday time and night time, வேறு வேறு இயல ஆகி மாறு எதிர்ந்து உள என உணர்ந்தனை ஆயின் – if you understand that they are of different nature, ஒரூஉம் – leaving (அளபெடை), இன்னா வெஞ்சுரம் – painful harsh wasteland, painful hot wasteland, நம் நசை – for our desire, துரப்ப – to goad, துன்னலும் தகுமோ – is it fitting to reach (the wasteland path), துணிவு இல் நெஞ்சே – oh my heart without strength, நீ செல வலித்தனை ஆயின் – if you are strong to leave (செல – இடைக்குறை), யாவதும் நினைதலும் செய்தியோ எம்மே – did you consider me even a little bit, கனை கதிர் – strong/thick rays, ஆவி – sunshine, அவ்வரி நீரென – thinking that the beautiful mirage waves are water (அவ்வரி – கானல் நீரின் அழகிய அலைகள்), நசைஇ – desiring (அளபெடை), மா தவப் பரிக்கும் – animals run a lot, மரல் திரங்கு நனந்தலை – wide land where hemp has dried, Sansevieria trifasciata, களர் கால்யாத்த – in the place with saline soil, கண் அகன் பரப்பில் – in the wide land, செவ்வரை – vertical mountains, red mountains (செவ்வரை – பண்புத்தொகை, compound word in which the first member stands in adjectival relation to the second), கொழி நீர் கடுப்ப – like the abundant water that falls (கடுப்ப – உவம உருபு, a comparison word), அரவின் – of snakes, அவ் வரி – beautiful stripes, beautiful patterns, உரிவை – skin, அணவரும் மருங்கில் – where it is lifted, புற்று அரை யாத்த – where there are termite mounds, புலர் சினை மரத்த – on the trees with dry branches (அகரம் பன்மை உருபு), மைந்நிற உருவின் – in pitch black color, like the color of black clouds, மணிக்கண் காக்கை – crows with gem colored eyes, பைந்நிணம் கவரும் – they eat fresh fatty flesh, படுபிணக் கவலை – forked paths with many dead bodies, சென்றோர் – those who went, செல் புறத்து இரங்கார் – they do not have pity on the backs of those who travel, கொன்றோர் – the killers, கோல் கழிபு இரங்கும் – they feel sad that they lost their arrows, அதர – with paths, வேய் பயில் அழுவம் இறந்த பின்னே – passing forests filled with bamboo (பின்னே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 328, மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வழை அமல் அடுக்கத்து வலன் ஏர்பு, வயிரியர்
முழவு அதிர்ந்தன்ன முழக்கத்து ஏறோடு,
உரவுப் பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து,
அரவின் பைந்தலை இடறிப் பானாள்
இரவின் வந்து எம் இடைமுலை முயங்கித்  5
துனி கண் அகல வளைஇக் கங்குலின்
இனிதின் இயைந்த நண்பு, அவர் முனிதல்
தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம் ஆயின்,
இலங்கு வளை நெகிழப் பரந்து படர் அலைப்ப யாம்
முயங்குதொறும் முயங்குதொறும் உயங்க முகந்து கொண்டு  10
அடக்குவம் மன்னோ தோழி, மடப்பிடி
மழை தவழ் சிலம்பில் கடுஞ்சூல் ஈன்று
கழை தின் யாக்கை விழை களிறு தைவர,
வாழை அம் சிலம்பில் துஞ்சும்
சாரல் நாடன் சாயல் மார்பே.  15

Akanānūru 328, Mathurai Panda Vānikan Ilanthēvanār, Kurinji Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
It has become clear, the hatred
of the man who came in the middle
of the night, stumbling on the heads
of bloody snakes, with deep friendship,
who hugged me sweetly for my sorrow
to leave, in the mountain range with
surapunnai trees, where clouds rise
up to the sky on the right side and roar
loudly like the drums of drummers,
and come down as heavy rains.

Oh friend!  Had I known this,
I who was distressed, my bright
bangles slipping down, would have
embraced again and again, hurting
the delicate chest of the man from
the mountains where clouds float,
where a naïve female elephant that
has given birth to her first calf eats
bamboo, and is lovingly stroked by
her mate, as she sleeps in the
beautiful mountain with banana trees.

Notes:   தலைவன் சிறைப்புறமாக வந்து நின்றபொழுது தோழிக்குக் கூறுவாளாய் அவன் கேட்கும்படி உரைத்தது.  வரைவு கடாயது.  துனி கண் அகல (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நம்முடைய துன்பமானது நீங்கும்படி, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – தமது வருத்தம் தம்மிடத்திருந்தும் நீங்க.  முயங்குதொறும் முயங்குதொறும் (10) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – யாம் அவரைத் தழுவும் தோறும் தழுவும் தோறும், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – அவர் முயங்குந்தோறும் முயங்குந்தோறும்.  ஒப்புமை:  வலன் ஏர்பு – அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1.  There are a few references in various poems to pregnant female elephants or young elephants that just gave birth, eating bamboo stalks, which is not good for them.  There is a convention that thunder ruins and kills snakes.  Akanānūru 68, 92, 119, 182, 202, 274, 323, 328, Kalithokai 45, 113, Kurunthokai 158, 190, 268, 391 and Natrinai 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, Puranānūru 17, 58, 126, 211, 366 and 369 have similar descriptions of thunder ruining or killing snakes.  சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல் 29).

Meanings:   வழை அமல் அடுக்கத்து – in the mountain range dense with surapunnai trees, Long-leaved two-sepalled gamboge, ochrocarpus longifolius (அமல் – செறிந்த), வலன் ஏர்பு – rose up with strength, rose up on the right side, rose up with strength, வயிரியர் – musicians/drummers, முழவு அதிர்ந்தன்ன முழக்கத்து – with loud sounds that are like the loud roars of drums, ஏறோடு உரவுப் பெயல் பொழிந்த – heavy rains fell with thunder, நள்ளென் யாமத்து – when it was pitch dark night, அரவின் பைந்தலை இடறி – stumbling on the bloody heads of snakes that are attacked by thunder, stumbling on the heads of snakes with hoods, பானாள் இரவின் வந்து எம் இடை முலை முயங்கி – came in the middle of the night and embraced my breasts, துனி கண் அகல – for our sorrow to leave, for his sorrow to leave, வளைஇ – embraced (அளபெடை), கங்குலின் இனிதின் – sweetly at night, இயைந்த நண்பு – close friendship, அவர் முனிதல் – his hatred, தெற்று ஆகுதல் – became clear, நற்கு அறிந்தனம் – we understood well (நற்கு – நன்கு என்பதன் விகாரம்), ஆயின் – so, இலங்கு வளை நெகிழ – bright bangles to become loose and slip down, பரந்து படர் அலைப்ப – my sorrow spreading and hurting, யாம் – I (தன்மைப் பன்மை, first person plural), முயங்குதொறும் – whenever I embraced him, whenever he embraced me, முயங்குதொறும் – whenever I embraced him, whenever he embraced me, உயங்க – to be sad, முகந்து கொண்டு அடக்குவம் – I would have embraced and contained him (அடக்குவம் – தன்மைப் பன்மை, first person plural), மன்னோ – மன், ஓ அசைநிலைகள், expletives, தோழி – my friend, மடப்பிடி – naive female elephant, மழை தவழ் சிலம்பில் – on the mountains where clouds have spread, கடுஞ்சூல் ஈன்று – had given birth to first baby, கழை தின் – eating bamboo, யாக்கை – body, விழை களிறு தைவர – desiring/loving male elephant stroking, வாழை அம் சிலம்பில் – on the beautiful mountains with banana trees, துஞ்சும் – sleeps, சாரல் நாடன் சாயல் மார்பே – the delicate chest of the man from the mountain slopes (மார்பே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 329, உறையூர் முதுகூத்தனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பூங்கணும் நுதலும் பசப்ப, நோய் கூர்ந்து
ஈங்கியான் வருந்தவும், நீங்குதல் துணிந்து
வாழ்தல் வல்லுநர் ஆயின், காதலர்
குவிந்த குரம்பை அம் குடிச் சீறூர்ப்
படுமணி இயம்பப் பகல் இயைந்து, உமணர்  5
கொடு நுகம் பிணித்த செங்கயிற்று ஒழுகைப்
பகடு அயாக் கொள்ளும் வெம்முனைத் துகள் தொகுத்து
எறி வளி சுழற்றும் அத்தம், சிறிது அசைந்து
ஏகுவர் கொல்லோ தாமே, பாய் கொள்பு
உறுவெரிந் ஒடிக்கும் சிறுவரிக் குருளை 10
நெடு நல்யானை நீர் நசைக்கிட்ட
கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில்,
புலி புக்கு ஈனும் வறுஞ்சுனைப்
பனிபடு சிமையப் பன் மலை இறந்தே?

Akanānūru 329, Uraiyūr Muthukoothanār, Pālai Thinai – What the heroine said to her friend
My pretty eyes and forehead have
paled, and I am struggling with
this disease that has increased!

If my lover is strong to leave and
smart to live away from me, will he go
past many mountains with cold summits
to the harsh land with small forests,
…..…..where a tiger cub with small stripes
…..…..that curves its back to leap, roars
…..…..after biting the trunk of a fine, tall
…..…..elephant that searches for water in a
…..…..dried spring in the forest where tigers
…..…..give birth to their cubs in dry springs, 
and rest a little in a lovely, small village in
the wasteland with conical huts where the
bells on the wagons of the salt merchants
jingle during the day, the bulls that are tied
with red ropes to the curved yokes are
distressed, and winds swirl and raise dust?  

Notes:  (1) பிரிவிடை வேறுபட்ட தலைவி ஆற்றாமையினால் தோழியிடம் சொல்லியது.  (2)  பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.  உறுவெரிந் ஒடிக்கும் சிறுவரிக் குருளை (10) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உயிரினங்களின் மேல் பாய்ந்து அவற்றின் மேல் இருந்து மிகவும் அவற்றின் முதுகென்பினை ஒடிக்கும் சிறிய  புலிக்குட்டி, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – பாய்தல் கொண்டு நேர்மை பொருந்திய முதுகினை நெளிக்கும் குறுகிய வரிகளையுடைய புலிக்குட்டி.  செங்கயிற்று (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சிவந்த கயிற்றையுடைய, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – செவ்விதான கயிற்றினால்.

Meanings:   பூங்கணும் நுதலும் பசப்ப – beautiful eyes and forehead have become pale, flower-like eyes and forehead have become pale (பூங்கணும் – பூங்கண்ணும், கண்ணும், இடைக்குறை), நோய் கூர்ந்து – with great sorrow, with great affliction, ஈங்கியான் வருந்தவும் – I am struggling here, நீங்குதல் துணிந்து வாழ்தல் வல்லுநர் ஆயின் – if he is bold and smart to move away and live, காதலர் – my lover, குவிந்த – with pointed tops, குரம்பை – huts, அம் குடிச் சீறூர் – beautiful small village, படுமணி இயம்ப – as sounding bells chime, பகல் இயைந்து – staying during the day, உமணர் – salt merchants, கொடு நுகம் பிணித்த – tied to curved yokes, செங்கயிற்று – with red ropes, with perfect ropes, ஒழுகை – carts, wagons, பகடு – bulls, அயாக் கொள்ளும் – they become sad, வெம்முனை – harsh land, hot land, துகள் தொகுத்து – collects dust, எறி வளி சுழற்றும் அத்தம் – wasteland where winds swirl, சிறிது அசைந்து – stay a little bit, ஏகுவர் கொல்லோ – will he leave (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt, ஓ – அசைநிலை, an expletive), தாமே – தாம், ஏ அசைநிலைகள், expletives, பாய் கொள்பு – to leap, உறுவெரிந் ஒடிக்கும் – curves its back, சிறுவரிக் குருளை – a tiger cub with small stripes, நெடு நல் யானை – a tall fine elephant, நீர் நசைக்கு – with the desire for water, இட்ட கை கறித்து – bites the trunk that is placed, உரறும் – roars, மை தூங்கு இறும்பில் – in the small forest where darkness stays, புலி புக்கு ஈனும் – tigers enter to give birth, வறுஞ்சுனை – dried springs, dried ponds, பனிபடு சிமையப் பன் மலை – many mountains with peaks that are very cold, many mountains with peaks with dew, இறந்தே – passing, ஏகாரம் அசைநிலை, an expletive

அகநானூறு 330, உலோச்சனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கழிப்பூக் குற்றும், கானல் அல்கியும்,
வண்டல் பாவை வரி மணல் அயர்ந்தும்,
இன்புறப் புணர்ந்தும், இளிவரப் பணிந்தும்,
தன் துயர் வெளிப்பட தவறு இல் நம் துயர்
அறியாமையின் அயர்ந்த நெஞ்சமொடு  5
செல்லும் அன்னோ மெல்லம்புலம்பன்,
செல்வோன் பெயர் புறத்து இரங்கி முன்னின்று
தகைஇய சென்ற என் நிறை இல் நெஞ்சம்
எய்தின்று கொல்லோ தானே? எய்தியும்
காமம் செப்ப நாணின்று கொல்லோ?  10
உதுவ காண் அவர் ஊர்ந்த தேரே!
குப்பை வெண்மணல் குவவு மிசையானும்,
எக்கர்த் தாழை மடல் வயினானும்,
ஆய் கொடிப் பாசடும்பு அரிய ஊர்பு இழிபு,
சிறுகுடிப் பரதவர் பெருங்கடல் மடுத்த  15
கடுஞ்செலல் கொடுந்திமில் போல,
நிவந்து படு தோற்றமொடு இகந்து மாயும்மே.

Akanānūru 330, Ulōchanār, Neythal Thinai – What the heroine’s friend said to her
The lord of the delicate shores,
humble and submissive, plucked
flowers in the backwaters, stayed
in the groves with us, played with
sand dolls in the sand with ripples,
and joined us with joy.

He does not understand our faultless
sorrow. He reveals his pain as he
leaves with a sad heart.  Alas!

Did my empty heart that pitied the
leaving man not go and block him, or
was it too shy to tell him about your love
for him, when it went in front of him?

Look there!  His chariot rides over
heaps of white sand, goes over thāzhai
fronds, chops pretty, green adumpu
vines riding up and down, appears tall
and then fades away from sight,
like the curved fishing boats, of fishermen
from small villages, that ply fast on the
vast ocean.

Notes:  தலைவனுக்குக் குறை நேர்ந்த தோழி தலைவியிடம் அவன் வேண்டுகோளுக்கு உடன்படுமாறு கூறியது.  அயர்ந்த (5) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – சோர்ந்த, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஐயுற்ற.  ஊர்பு இழிபு – ஐங்குறுநூறு 101 – உதுக்காண்! ஏர் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு, நெய்தல் மயக்கி வந்தன்று, நின் மகள் பூப் போல் உண்கண் மரீஇய நோய்க்கு மருந்தாகிய, கொண்கன் தேரே.

Meanings:   கழிப் பூக் குற்றும் – plucked flowers in the backwaters, கானல் அல்கியும் – stayed in the groves, வண்டல் பாவை வரி மணல் அயர்ந்தும் – played with sand dolls in the sand with ripples, இன்புறப் புணர்ந்தும் – united with joy, இளிவரப் பணிந்தும் – being humble and submissive, தன் துயர் வெளிப்பட – revealing his sorrow, தவறு இல் நம் துயர் அறியாமையின் – not understanding your faultless sorrow, அயர்ந்த நெஞ்சமொடு செல்லும் – leaving with a sad heart, leaving with a doubting heart, அன்னோ – alas (இரக்கக்குறிப்பு), மெல்லம்புலம்பன் – the lord of the delicate shores (அம் – சாரியை, புலம்பு = கடற்கரை), செல்வோன் பெயர் புறத்து – toward the direction of the one who left, இரங்கி – pitied, முன்னின்று – in front of him, தகைஇய – blocking (அளபெடை), சென்ற – that left, என் நிறை இல் நெஞ்சம் – my heart that is not full, எய்தின்று கொல்லோ – did it not reach him (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt, ஓ – அசைநிலை, an expletive), தானே – தான், ஏ அசைநிலைகள், expletives, எய்தியும் – even when it reached, காமம் செப்ப நாணின்று கொல்லோ – was it shy to talk about love (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt, ஓ – அசைநிலை, an expletive), உதுவ காண் – look there, அவர் ஊர்ந்த தேரே – his chariot that is moving, குப்பை வெண்மணல் குவவு மிசையானும் – over the heaped white sand, எக்கர்த் தாழை மடல் வயினானும் – and on the thāzhai tree fronds in the sand dunes, Pandanas odoratissimus, ஆய் கொடிப் பாசடும்பு அரிய – chopping the beautiful green adumpu vines, Ipomoea pes caprae, ஊர்பு இழிபு – riding up and down, சிறுகுடிப் பரதவர் – fishermen from small village, பெருங்கடல் – vast ocean, மடுத்த – riding, கடும் செலல் – going fast, கொடும் திமில் போல – like the curved fishing boats, நிவந்து படு தோற்றமொடு – with the appearance of being tall, இகந்து மாயும்மே – it goes farther and fades away (செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது)

அகநானூறு 331, மாமூலனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நீடு நிலை அரைய செங்குழை இருப்பைக்
கோடு கடைந்தன்ன கொள்ளை வான் பூ,
ஆடு பரந்தன்ன ஈனல் எண்கின்
சேடு சினை உரீஇ உண்ட மிச்சில்,
பைங்குழை தழையர் பழையர் மகளிர்  5
கண் திரள் நீள் அமைக் கடிப்பின் தொகுத்து,
குன்றகச் சிறுகுடி மறுகுதொறும் மறுகும்
சீறூர் நாடு பல பிறக்கு ஒழியச்,
சென்றோர் அன்பிலர் தோழி, என்றும்
அருந்துறை முற்றிய கருங்கோட்டுச் சீறியாழ்ப்  10
பாணர் ஆர்ப்பப் பல் கலம் உதவி,
நாள் அவை இருந்த நனை மகிழ் திதியன்
வேளிரொடு பொரீஇய கழித்த
வாள்வாய் அன்ன வறுஞ்சுரம் இறந்தே.

Akanānūru 331, Māmoolanār, Pālai Thinai – What the heroine said to her friend
He is not a kind man, my friend,
the one who left, leaving behind
many countries with small towns
in the mountains,

where daughters of hunters,
wearing leaf garments, sell on
all the streets in their settlements,
thick, long bamboo tubes with
dropped, bright, white iruppai flowers,
that appear like they are carved from
conch shells, left over after being eaten
by herds of female bears with cubs that
climb on branches of trees with red
sprouts and tall trunks, looking herds
of scattered goats,
and passing the wasteland, parched and
harsh like the edge of the sword pulled
out to fight the Vēlirs, by Thithiyan,
happy with liquor, who gave jewels
to bards with small lutes with black
stems, when they played music in his
day assembly.

Notes:  தலைவனின் பிரிவின்கண் ஆற்றாது வருந்தித் தோழியிடம் கூறியது.  ஒப்புமை:  கரடி இருப்பை மலரை உண்ணுதல் – அகநானூறு 15, 81, 95, 149, 171, 247, 267, 275, 331.  உரீஇ (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உருவி, உருவித் தின்றன என்க, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – பரந்து, உருவி என்றுமாம். வரலாறு:  திதியன், வேளிர்.

Meanings:   நீடு நிலை அரைய – with tall trunks, செங்குழை இருப்பை – iruppai trees with red sprouts, Indian Butter Tree, South Indian Mahua, இலுப்பை,வஞ்சி, கோடு கடைந்தன்ன – like carved from conch shells, கொள்ளை வான் பூ – abundant bright white flowers, ஆடு பரந்தன்ன – like goats are spread (பரந்தன்ன – மிகுதியை உணர்த்துகின்றது), ஈனல் எண்கின் – with female bears with cubs (ஈனல் – குட்டி, ஆகுபெயர்), சேடு – group, many, சினை – branches, உரீஇ – plucking, spreading (அளபெடை), உண்ட மிச்சில் – leftover after eating, பைங்குழை தழையர் – women wearing garments made with fresh leaves (பைங்குழை – பண்புத்தொகை, compound word in which the first member stands in adjectival relation to the second), பழையர் மகளிர் – daughters of forest hunters (பழையர் = கள் விற்போர், those who sell liquor, எயினர்), கண் திரள் நீள் அமைக் கடிப்பின் – in thick long bamboo tubes, தொகுத்து – collect, குன்றகச் சிறுகுடி – small mountain settlement, small mountain village, மறுகுதொறும் – in every street, மறுகும் – they go, they roam, சீறூர் – small town, நாடு பல பிறக்கு ஒழியச் சென்றோர் – leaving behind many countries and going, அன்பிலர் தோழி – he is not a kind man, my friend, என்றும் – always, அருந்துறை முற்றிய – mature in a difficult art of music, கருங்கோட்டுச் சீறியாழ்ப் பாணர் – bards with small lutes with black stems, ஆர்ப்ப – play loudly, பல் கலம் உதவி – helped them with many jewels, நாள் அவை இருந்த – was in his day assembly, நனை மகிழ் திதியன் – Thithiyan who was happy with liquor, வேளிரொடு பொரீஇய – to fight with the Vēlirs (பொரீஇய – அளபெடை), கழித்த – removed, வாள்வாய் அன்ன – like that of a sword edge, வறுஞ்சுரம் இறந்தே – passing the dried wasteland (இறந்தே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 332, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
முளை வளர் முதல மூங்கில் முருக்கிக்
கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை,
நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய
பொரு முரண் உழுவை தொலைச்சிக், கூர் நுனைக்
குருதிச் செங்கோட்டு அழிதுளி கழாஅக்,  5
கல் முகை அடுக்கத்து மென்மெல இயலிச்,
செறு பகை வாட்டிய செம்மலொடு அறு கால்
யாழிசைப் பறவை இமிரப், பிடி புணர்ந்து
வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன்
நின் புரைத் தக்க சாயலன் என, நீ  10
அன்பு உரைத்து அடங்கக் கூறிய இன் சொல்
வாய்த்தன, வாழி தோழி! வேட்டோர்க்கு
அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின்
வண்டு இடைப்படாஅ முயக்கமும்,
தண்டாக் காதலும் தலைநாள் போன்மே.  15

Akanānūru 332, Kapilar, Kurinji Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
It is like it was on the first day,
the embraces of his nectar-like
chest donning a fragrant garland,
without bees coming between us,
and my unshakable love for
the man from the land, where a
bright colored elephant ate tender
bamboo sprouts with its herd,
went to drink water with thirst,
saw the reflection of a battling tiger
with enmity stalking and ready to
attack, killed it, its bloody, sharp
tusks washed from the heavy
downpour as it walked very slowly with
arrogance of having killed his enemy
with rage, went to a rock cave, and as
six-legged bees hummed like the
music of lute, united with its mate and
slept in the beautiful mountain slope
with banana trees.

You told me kindly in sweet words,
“He is suitable for your esteem,”
and your words have become true.
May you live long, my friend!

Notes:  தலைவனின் வரவை அறியாதாள் போல அவனைப் பாராட்டித் தோழிக்குக் கூறுபவளாய்த் தலைவி கூறியது.  உள்ளுறை உவமம் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – யானை தன் பகையான புலியைக் கொன்று அதனால் உண்டான குருதிக் கறையை மழையால் கழுவிக் கொண்டு தன் இருக்கைக்கு மெல்லச் சென்று பிடியைப் புணர்ந்து இனிது துயிலும் என்றது, தலைவன், அலர் தூற்றுவாருடைய வாயை அடக்கித் தமது ஒழுக்கத்தால் உண்டான பழியை நம்மை வரைந்து கொள்ளுகின்றதாலான நீரால் தூய்மை செய்து நம்மையும் அவன் இல்லத்திற்கு அழைத்துச் சென்று நம்மோடு புணர்ந்து தன் மனைக்கண் இனிமையாகத் துயில்வான் என்பது.  முளை வளர் முதல மூங்கில் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – முளைகள் வளருவதற்கு இடமான தூற்றினையுடைய மூங்கில்களை, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – முளைகள் வளரும் தூறுகளிலுள்ள மூங்கில்களை, ச. வே. சுப்பிரமணியன் உரை –  மூங்கில் தூறுகளில் வளரும் முளைககளை.  செம்மலொடு (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைமையுடன், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – செருக்குடன்.  அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின் (13) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அமிழ்தம் போன்ற நறுமணம் கமழுகின்ற அவனுடைய மாலையணிந்த மார்பின்கண்,  இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – அமிழ்தம் போன்ற இனிய நறிய தாரினையுடைய மார்பின்கண்.  கழாஅ – கழுவி என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

Meanings:   முளை வளர் முதல மூங்கில் – bamboo with tender sprouts at the base, bamboo that grow between bushes with sprouts, முருக்கிக் கிளையொடு மேய்ந்த – broke and ate together with its herd, கேழ் – color, கிளர் – bright, யானை – elephant, நீர் நசை – desire to drink, மருங்கின் – nearby, நிறம் பார்த்து – on seeing the reflection of its body, ஒடுங்கிய – hiding, stalking, பொரு முரண் உழுவை – a fighting tiger with enmity, தொலைச்சி – killed, destroyed, கூர் நுனைக் குருதிச் செங்கோட்டு – the red tusks with blood and sharp tips, அழிதுளி கழாஅ – washed in the heavy rain, கல் முகை அடுக்கத்து – to a rock cave in the mountain ranges, மென்மெல இயலி –  walked very slowly, செறு பகை வாட்டிய செம்மலொடு – with arrogance that it ruined its enemy with rage, with greatness that it ruined its enemy, அறு கால் யாழ் இசைப் பறவை இமிர – as bees with six legs buzz like lute music, பிடி புணர்ந்து வாழை அம் சிலம்பில் துஞ்சும் – unites with its female and sleeps in the banana filled beautiful mountain slopes, நாடன் – the man from such country, நின் புரைத் தக்க சாயலன் என – that he is suitable to your esteem, நீ அன்பு உரைத்து அடங்கக் கூறிய இன் சொல் வாய்த்தன – the kind sweet words that you uttered to calm me have become true, வாழி தோழி – may you live long my friend, வேட்டோர்க்கு அமிழ்தத்து அன்ன – like nectar to those who desire (அமிழ்தத்து – அமிழ்தம், அத்து சாரியை), கமழ் தார் மார்பின் – with a chest with fragrant garlands, வண்டு இடைப்படாஅ முயக்கமும் – embraces without bees swarming  in between (இடைப்படாஅ – அளபெடை), தண்டாக் காதலும் – love that cannot be reduced, தலைநாள் போன்மே – like it was on the first day (போன்ம் –  போலும் என்பது இடை உகரம் கெட்டு லகரம் னகரமாய்த் திரிந்து நின்றது, ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 333, கல்லாடனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்தன்ன நின்
ஆக மேனி அம் பசப்பு ஊர,
அழிவு பெரிது உடையையாகி, அவர் வயின்
பழி தலைத்தருதல் வேண்டுதி, மொழி கொண்டு
தாங்கல் ஒல்லுமோ மற்றே, ஆங்கு நின்  5
எவ்வம் பெருமை உரைப்பின், செய்பொருள்
வயங்காது ஆயினும் பயங்கெடத் தூக்கி
நீடலர், வாழி தோழி! கோடையில்
குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது,
தூம்புடைத் துய்த்தலைக் கூம்புபு திரங்கிய  10
வேனில் வெளிற்றுப் பனை போலக் கையெடுத்து
யானைப் பெருநிரை வானம் பயிரும்
மலைச் சேண் இகந்தனர் ஆயினும், நிலை பெயர்ந்து,
நாள் இடைப்படாமை வருவர் நமர், எனப்
பயந்தரு கொள்கையின் நயந்தலை திரியாது  15
நின் வாய் இன்மொழி நன்வாயாக
வருவர் ஆயினோ நன்றே, வாராது
அவணர் காதலர் ஆயினும், இவண் நம்
பசலை மாய்தல் எளிது மன் தில்ல,
சென்ற தேஎத்துச் செய் வினை முற்றி  20
மறுதரல் உள்ளத்தர் எனினும்,
குறுகு பெருநசையொடு தூது வரப்பெறினே.

Akanānūru 333, Kallādanār, Pālai Thinai – What the heroine said to her friend
You desire to put the blame on him,
since beautiful pallor has spread on your
body, like vermilion powder sprinkled on
the bright sprouts of tree sprouts.  Is it
possible to tolerate those words?  Also,
if you talk about your great sorrow, even
if it is not possible to earn the wealth that
he set out to get, benefits will be ruined.

He will not delay, my friend.  May you
live long!  He went far away beyond the
mountains,
where large herds of elephants lift their
trunks and trumpet, looking toward
the sky, appearing like young palmyra
palms with hollow cores,
their fronds withered and tops fuzzy
in summer.

He will come on the agreed day without
delay, without ruining goodness, and with
the principle of giving benefits.
May the sweet words from your mouth,
become true!  Even if my lover desires to
stay there or return from the country where
he went, after his work is done, it would be
nice if I get a message with great love,
so that my pallor on my body can end.

Notes:  பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைவி கூறியது.  நயந்தலை (15) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – இனிமை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொருள்நயம்.

Meanings:  யாஅ ஒண் தளிர் – bright sprouts of yā trees, ஆச்சா மரம், Hardwickia binate (யாஅ – அளபெடை), அரக்கு விதிர்த்தன்ன – like sprayed with vermilion powder, நின் ஆக மேனி அம் பசப்பு ஊர – beautiful pallor has spread all over your body (ஆக மேனி – இரு பெயரொட்டு), அழிவு பெரிது உடையையாகி – you have attained great sorrow, அவர் வயின் பழி தலைத்தருதல் வேண்டுதி – you desire to put the blame on him, மொழி கொண்டு தாங்கல் ஒல்லுமோ மற்றே – is it possible for him to tolerate those words (மற்றே – மற்று, ஏ அசைநிலைகள், expletives), ஆங்கு – there, நின் எவ்வம் பெருமை உரைப்பின் – if your great sorrow is talked about, செய் பொருள் வயங்காது ஆயினும் – even if it is not possible to attain the wealth he seeks, பயம் கெட – for benefits to be ruined, தூக்கி – after analyzing, நீடலர் – he will not delay, வாழி தோழி – may you live long my friend, கோடையில் – in summer, குருத்து இறுபு உக்க – tender fronds break and drop, வருத்தம் சொலாது – without sorrow leaving, தூம்புடை – with hollow center, துய்த்தலை – fuzzy tops, கூம்புபு திரங்கிய – shrunk and dried, வேனில் – in summer, வெளிற்றுப் பனை போல – like young palmyra trees, கையெடுத்து – lifting their trunks, யானைப் பெருநிரை – large herd of elephants, வானம் பயிரும் – trumpets looking at the sky, மலைச் சேண் இகந்தனர் ஆயினும் – even if he went far away to the mountains, நிலை பெயர்ந்து – changing his mind, நாள் இடைப்படாமை வருவர்- he will move from that place and come on the agreed day without any delay, நமர் – our lover, எனப் பயந்தரு கொள்கையின் – with the principle of yielding benefits, நயந்தலை திரியாது – without ruining goodness, நின் வாய் இன் மொழி – sweet words from your mouth, நன் வாயாக – may they become true, வருவர் ஆயினோ – if he comes back (ஆயினோ – ஓகாரம் அசைநிலை, an expletive), நன்றே – good (ஏகாரம் அசைநிலை, an expletive), வாராது – without returning, அவணர் காதலர் ஆயினும் – even if my lover stays away there, இவண் நம் பசலை மாய்தல் எளிது – our pallor here will end easily, மன் –அசைநிலை an expletive, தில்ல – தில் விழைவுப் பொருட்டு வந்த ஓர் இடைச்சொல், ஈறு திரிந்தது வந்தது, a particle signifying desire, சென்ற தேஎத்து – to the country that he went (தேஎத்து – அளபெடை), செய் வினை முற்றி – after finishing his work, மறுதரல் உள்ளத்தர் எனினும் – even if he has the mind to return, குறுகு – to come near, பெருநசையொடு தூது வரப் பெறினே – if I get a message with great love (பெறினே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 334, மதுரைக் கூத்தனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
ஓடா நல் ஏற்று உரிவை தைஇய
ஆடு கொள் முரசம் இழுமென முழங்க,
நாடு திறை கொண்டனம் ஆயின், பாக!
பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு
பெருங்களிற்றுத் தடக்கை புரையக் கால் வீழ்த்து,  5
இரும் பிடித் தொழுதியின் ஈண்டுவன குழீஇ,
வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும்
கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறிப்,
பெயல் தொடங்கின்றால் வானம் வானின்
வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப,  10
நால்குடன் பூண்ட கால் நவில் புரவிக்
கொடிஞ்சி நெடுந்தேர் கடும் பரி தவிராது,
இனமயில் அகவும் கார் கொள் வியன் புனத்து,
நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப,
ஈண்டே காணக் கடவுமதி பூங்கேழ்ப்  15
பொலிவன அமர்த்த உண்கண்,
ஒலி பல் கூந்தல் ஆய் சிறு நுதலே.

Akanānūru 334, Mathurai Koothanār, Mullai Thinai – What the hero said to his charioteer
Let’s go, my charioteer, since we
have seized tributes from this
country, as we played our victory
drums covered with leather from
skins of brave bulls that did not
run away.

Clouds have collected water from
the uproarious ocean, looking like
herds of dark, cow elephant
gatherings, winds have touched the
ground like the trunks of large male
elephants that touch the ground,
and heavy drops of rain fall along
with hailstones that are like kazhangu
seeds that women with curved
forearms use, to play with desire.

Ride fast the tall chariot with
decorations, so that we can go and see
her soon, the woman with kohl-lined,
bright, differing, flower colored eyes,
luxuriant, thick hair, and small, pretty
forehead, as the chariot wheels with
strong rims tear into the wet earth,
flocks of peacocks screech in the vast
forest with the season’s rain, and the
four horses, as fast as the wind,
hitched together, run fast like rows
of geese flying in the bright sky.

Notes:  போர்த்தொழிலை மேற்கொண்டு சென்ற தலைவன், பகை வென்று, ஊருக்குத் திரும்பிப் போகக் கருதித் தேர்ப்பாகற்குச் சொல்லியது.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  கதழ் – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).  அமர்த்த உண்கண் (16) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒன்றனோடு ஒன்று போர் செய்கின்ற மையிட்ட கண்கள், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மாறுபட்ட மையுண்ட கண்கள்.

Meanings:   ஓடா – not showing their backs and running away, நல் ஏற்று உரிவை – fine ox skins, தைஇய – tied, covered (அளபெடை), ஆடு கொள் முரசம் இழுமென முழங்க – as victory drums roared loudly (இழுமென- ஒலிக்குறிப்பு), நாடு திறை கொண்டனம் ஆயின் – since we seized tributes from the country, பாக – oh charioteer, பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு – with uproars in the loud ocean, பெருங்களிற்றுத் தடக்கை – large male elephant’s large trunk, புரைய – like (புரை – உவம உருபு, a comparison word), கால் வீழ்த்து – winds have come down, winds have touched the ground, இரும் பிடித் தொழுதியின் ஈண்டுவன குழீஇ – gathered together like a herd of black female elephants (குழீஇ – அளபெடை, தொழுதியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும் – played with desire by women with bent forearms, கழங்கு உறழ் ஆலியொடு – with hailstones that are like the molucca beans, Caesalpinia crista seeds (உறழ் – உவம உருபு, a comparison word), கதழ் உறை – rapid rain, heavy rain, சிதறி – scattered, பெயல் தொடங்கின்றால் – rain has started (ஆல் – அசைநிலை, an expletive), வானம் வானின் வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப – like the rows of geese with bright wings flying in the sky (கடுப்ப – உவம உருபு, a comparison word), நால்குடன் பூண்ட – four horses tied together (நால்கு – நான்கு என்னும் எண்ணுப்பெயர் திரிசொல்), கால் நவில் புரவி – horses that are said to ride like the wind, rapidly running horses, கொடிஞ்சி நெடுந்தேர் – tall chariot with decorations, கடும் பரி தவிராது – without a break in speed, இன மயில் அகவும் – flocks of peacocks screech, கார் கொள் வியன் புனத்து – in the vast forest with the season’s rain, நோன் – strong, சூட்டு – wheel rims, ஆழி ஈர் நிலம் துமிப்ப – wheels cutting into the wet ground, ஈண்டே காணக் கடவுமதி – you ride now so that I can see her soon (மதி – முன்னிலையசை, an expletive of the second person), பூங்கேழ் – with the color of flowers, beautiful colored, பொலிவன – beautiful, bright, அமர்த்த – differing, warring, உண்கண் – kohl-lined eyes, ஒலி பல் கூந்தல் – flourishing thick hair, ஆய் சிறு நுதலே – pretty small forehead (அன்மொழித்தொகை, நுதலே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 335, மதுரைத் தத்தங்கண்ணனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
இருள்படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்
அருள் நன்கு உடையர் ஆயினும், ஈதல்
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாது ஆகுதல்
யானும் அறிவென் மன்னே, யானை தன்
கொல் மருப்பு ஒடியக் குத்திச் சினஞ்சிறந்து,  5
இன்னா வேனில் இன் துணை ஆர,
முளி சினை யாஅத்துக் பொளி பிளந்து ஊட்ட,
புலம்பு வீற்றிருந்த நிலம் பகு வெஞ்சுரம்
அரிய அல்ல மன் நமக்கே, விரி தார்
ஆடு கொள் முரசின் அடுபோர்ச் செழியன் 10
மாட மூதூர் மதில் புறம் தழீஇ,
நீடு வெயில் உழந்த குறி இறைக் கணைக்கால்
தொடை அமை பன்மலர்த் தோடு பொதிந்து யாத்த,
குடை ஓரன்ன கோள் அமை எருத்தின்
பாளை பற்று அழிந்து ஒழியப் புறம் சேர்பு  15
வாள் வடித்தன்ன வயிறு உடைப் பொதிய,
நாள் உறத் தோன்றிய நயவரு வனப்பின்,
ஆரத்து அன்ன அணி கிளர் புதுப் பூ
வார் உறு கவரியின் வண்டு உண விரிய,
முத்தின் அன்ன வெள் வீ தாஅய்,  20
அலகின் அன்ன அரி நிறத்து ஆலி
நகை நனி வளர்க்குஞ்சிறப்பின், தகை மிகப்
பூவொடு வளர்ந்த மூவாப் பசுங்காய்
நீரினும் இனிய ஆகிக் கூர் எயிற்று
அமிழ்தம் ஊறும் செவ்வாய்  25
ஒண்தொடிக் குறுமகள் கொண்டனம் செலினே.

Akanānūru 335, Mathurai Thathankannanār, Pālai Thinai – What the hero said to his heart
I understand that even if one has
kindness, it is not enough to remove
the sorrow of those with confusion
in their hearts, if one does not have
wealth.

If I go through the hot wasteland
where the ground is cracked, and
a bull elephant stabbed with rage
a tree, breaking his murderous
tusks, to strip the bark and feed his
sweet mate,

it would not be difficult for us, if we
take along the young woman with
bright bangles, sharp teeth and mouth
with nectar that is sweeter than
the juice of immature, fresh fruits that
hang along with new flowers, on betel
palms parched in the hot sun, their
trunks thick, branches short, the spathes
hanging from their necks that produce
fruit clusters resemble closed palm baskets 
with strands of flowers, their outer covers
drop, and pretty, bright-colored flowers
grow underneath like garlands from the
sides which are like swords that are cast,
swarms of bees taste the fan-like, bright
flowers which are as white as pearls,
that spread like hailstones that are of the
color of shells, that bring great happiness,
growing next to the fort walls in the old
city with mansions belonging to Pāndiyan
wearing garland with blossomed flowers,
owning victory drums and successful in
murderous battles.

Notes:  பொருள் வேண்டிய நெஞ்சிற்குச் சொல்லித் தலைவன் செலவு அழுங்கியது.  ஒப்புமை:  குறுந்தொகை 37 – பிடி பசி களைஇய பெருங்கை வேழம் மென் சினை யாஅம் பொளிக்கும், குறுந்தொகை 232 – உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய யாஅ வரி நிழல், குறுந்தொகை 255 – யாஅத்துப் பொரி அரை முழு முதல் உருவக் குத்தி மறங்கெழு தடக் கையின் வாங்கி உயங்கு நடைச் சிறு கண் பெருநிரை உறு பசி தீர்க்கும் தட மருப்பு யானை, அகநானூறு 335 – யானை தன் கொல் மருப்பு ஒடியக் குத்திச் சினஞ்சிறந்து இன்னா வேனில் இன் துணை ஆர முளி சினை யாஅத்து, மலைபடுகடாம் 429 – உம்பல் அகைத்த ஒண் முறி யாவும்.  அகநானூறு 335 வரிகள் 18-19 – புதுப் பூ வார் உறு கவரியின் வண்டு உண விரிய, நற்றிணை 241 – வேழ வெண்பூ விரிவன பலவுடன் வேந்து வீசு கவரியின்.  வரலாறு:  செழியன் (பாண்டியன்).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).  கணைக்கால் (12) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – ஆகுபெயர் கமுக மரத்திற்கு. கமுகம் பாளை அகத்தே தொடுத்த மாலைபோலும் பூக்களை உடைமையின் தொடையமை பன்மலர்த் தோடு பொதிந்து யாத்த குடையோரன்ன பாளை என உவமை கூறப்பட்டது.

Meanings:   இருள்படு நெஞ்சத்து – with a confused heart, இடும்பை தீர்க்கும் அருள் நன்கு உடையர் ஆயினும் – even if they are good to remove sorrow, ஈதல் பொருள் இல்லோர்க்கு அஃது இயையாது ஆகுதல் யானும் அறிவென் – I understand that it is not possible for those who do not have wealth, மன் – ஒழியிசை, ஏ -அசைநிலை, யானை – elephant, தன் கொல் மருப்பு ஒடிய – causing his killing tusks to break, குத்தி – stabbed, சினம் சிறந்து – with great rage, இன்னா வேனில் – in painful summer, இன் துணை ஆர – for his sweet mate to eat, முளி சினை – dry branches, யாஅத்துக் பொளி பிளந்து – splitting the barks of trees, ஆச்சா மரம், Hardwickia binata, ஊட்ட – to feed, புலம்பு வீற்றிருந்த – with sorrow there, நிலம் பகு – earth splitting, வெஞ்சுரம் அரிய அல்லமன் நமக்கே – the hot wasteland is not difficult for us, the harsh wasteland is not difficult for us, விரி தார் – garland braided with blossomed flowers, ஆடு கொள் முரசின் – with victorious drums, அடு போர்ச் செழியன் – Pāndiyan king of murderous battles, மாட மூதூர் – old town with mansions, மதில் புறம் – near the fort walls, தழீஇ – touching it (அளபெடை), நீடு வெயில் உழந்த – struggling in the hot sun that burns for long, குறி இறை – small branch sticks, small nodes, கணைக்கால் – thick trunks (ஆகுபெயர் கமுக மரத்திற்கு), தொடை அமை பன் மலர்த் தோடு பொதிந்து யாத்த குடை ஓரன்ன – appear like closed palm baskets with many flowers with petals that are tied together, கோள் அமை எருத்தின் – on the necks on which clusters form, பாளை பற்று அழிந்து ஒழிய – the palm spathes fall breaking off from where they are attached, புறம் சேர்பு – on a side, வாள் வடித்தன்ன – like swords that are made by hitting and beating iron, like swords that are made by casting, வயிறு உடை பொதிய – in the inner part that is covered, நாள் உறத் தோன்றிய – appearing with maturity, நயவரு – desirable, sweet, வனப்பின் ஆரத்து அன்ன – with beauty like that of a garland (ஆரத்து – ஆரம், அத்து சாரியை), அணி – pretty, கிளர் – bright, புதுப் பூ – new flowers, வார் உறு – long, with length (உறு – பொருந்திய), கவரியின் – like fans (சாமரத்தைப் போன்று) இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, வண்டு உண – bees to taste (உண உண்ண என்பதன் விகாரம்), விரிய – opened, முத்தின் அன்ன – like pearls (முத்தின் – இன் சாரியை), வெள் வீ – white flowers, தாஅய் – spread (அளபெடை), அலகின் அன்ன அரி நிறத்து – like the bright color of shells (அலகின் – இன் சாரியை), ஆலி – like hailstones, நகை நனி வளர்க்கும் – giving great happiness, சிறப்பின் – with splendor, தகை மிகப் பூவொடு வளர்ந்த – grown with beautiful flowers, மூவாப் பசுங்காய் நீரினும் இனிய ஆகி – sweeter than the juice of immature fresh unripe fruits, கூர் எயிற்று – with sharp teeth, அமிழ்தம் ஊறும் செவ்வாய் – red mouth that secretes nectar (செவ்வாய் – பண்புத்தொகை, compound word in which the first member stands in adjectival relation to the second), ஒண்தொடிக் குறுமகள் கொண்டனம் செலினே – if we take along the young lady with bright bangles (செலினே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 336, பாவை கொட்டிலார், மருதத் திணை – பரத்தை பிறப் பரத்தையரைப் பற்றிச் சொன்னது
குழற்கால் சேம்பின் கொழு மடல் அகல் இலைப்
பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த
உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய,
நாள் இரை தரீஇய எழுந்த நீர்நாய்
வாளையொடு உழப்பத் துறை கலுழ்ந்தமையின்,  5
தெண் கள் தேறல் மாந்தி மகளிர்
நுண் செயல் அம் குடம் இரீஇப், பண்பின்
மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழ் இணர்க்
காஞ்சி நீழல் குரவை அயரும்,
தீம் பெரு பொய்கைத் துறை கேழ் ஊரன்,  10
தேர் தர வந்த நேரிழை மகளிர்
ஏசுப என்ப, என் நலனே, அதுவே
பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சினக்
கொல் களிற்று யானை நல்கல்மாறே,
தாமும் பிறரும் உளர் போல் சேறல்  15
முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின்
யான் அவண் வாராமாறே, வரினே, வான் இடைச்
சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல
என்னொடு திரியேன் ஆயின், வென்வேல்
மாரி அம்பின் மழைத்தோற் சோழர்  20
வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை,
ஆரியர் படையின் உடைக என்
நேர் இறை முன் கை வீங்கிய வளையே.

Akanānūru 336, Pāvai Kottilār, Marutham Thinai – What one concubine said about other jealous concubines
He is from the town where chēmpu
plants with tubular stems and big
leaves growing from sheaths are in
a mossy pond, where a female otter and
her children are morose with hunger,
her male attacks a vālai fish muddying
the water and so women who come to fetch
water drink clear liquor and set aside their
pretty pots with fine workmanship and talk
about their husbands who keep the company
of concubines, as they perform kuravai
dances in the shade of a kānji tree.

They say the women who came in the
chariot of the man from the town with large
ponds with shores looked at my beauty and
scorned.  Their acts are like that of an angry,
murderous bull elephant who thinks
he is kind enough to let his keeper live.

These women, joining together and
talking, is like a thunangai dance
festival with drums where I am not present.
If I go there, I will control him like the sun’s
rays that control the direction of nerunchi
flowers.

If I don’t do that, may the large bangles
on my perfect forearms break like the Aryan
forces that were destroyed by the brave
Chozha warriors with victorious spears and
shields as dark as the rain clouds, who darted
arrows from their fort in Vallam town, situated
behind a protective forest.

Notes:   ஒரு பரத்தை இன்னொரு பரத்தையின் தோழியர் கேட்குமாறு கூறியது.  என் நேரிறை முன் கை வீங்கிய வளையே (23) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – என்னுடைய நுண்ணிய கோடுகள் அமைந்த முன்கையில் செறிந்த வளையல்கள், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – எனது நேரிய சந்தினையுடைய முன்கையில் திரண்ட வளையல்கள்.  ஒப்புமை:  ஆரியர்களைத் தோற்கடித்தல் – அகநானூறு 336 – சோழர் வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை ஆரியர் படையின் உடைக, அகநானூறு 396 – ஆரியர் அலறத் தாக்கிப் பேர் இசைத் தொன்று முதிர் வட வரை வணங்கு வில் பொறித்து வெஞ்சின வேந்தரை, நற்றிணை 170 – ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர் பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது.  நெருஞ்சி ஞாயிற்றை நோக்கி நிற்றல் – அகநானூறு 336 – சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல, புறநானூறு 155 – நெருஞ்சிப் பசலை வான் பூ ஏர்தரு சுடரின் எதிர் கொண்டாஅங்கு.  வளையலை உடைத்தல் – அகநானூறு 186 – காவிரி வைப்பின் போஒர் அன்ன என் செறி வளை உடைத்தலோ இலனே, அகநானூறு 336 – ஆரியர் படையின் உடைக என் நேர் இறை முன் கை வீங்கிய வளையே. வரலாறு:  சோழர், வல்லம், ஆரியர்.  ஆரியர் – அகநானூறு 276-9, 336-22, 396-16, 398-18, நற்றிணை,170-6, குறுந்தொகை 7-3, பதிற்றுப்பத்து 11-23.  

Meanings:   குழல் கால் – tubular stems, சேம்பின் – of yam plants, of taro plants, Colocasia antiquorum, Colocasia esculenta, கொழு மடல் – thick sheaths, அகலிலை – wide leaves, பாசி – moss, பரப்பில் – on the wide body of water, பறழொடு – with young, வதிந்த – lived, உண்ணா – hungry, பிணவின் – female’s, உயக்கம் – sorrow, distress, சொலிய – to go away, to be removed, நாள் இரை – daily food, தரீஇய – to give (அளபெடை), எழுந்த – woke up, நீர்நாய் – otter, வாளையொடு – with the valāi fish, Trichiurus haumela, உழப்ப – fighting, துறை – port, கலுழ்ந்தமையின் – since it got muddied, தெண் – clear, கள் தேறல் – clear alcohol, மாந்தி – drink, மகளிர் – women, நுண் செயல் – well made, அம் குடம் – beautiful pots, இரீஇ – placed (அளபெடை), பண்பின் – with habits, மகிழ்நன் – man from the marutham land, பரத்தைமை – infidelities, association with prostitutes, பாடி – they sang, அவிழ் இணர் – clusters of flowers, காஞ்சி நீழல் – kānji tree shade, பூவரச மரம், portia tree, Thespesia populnea (நீழல் – நிழல் என்பதன் நீட்டல் விகாரம்), குரவை அயரும் – they perform kuravai dance, தீம் – sweet, பெரு பொய்கை துறை கேழ் ஊரன் – the man from the town with many large ponds with shores, தேர்தர வந்த – came in his chariots , நேரிழை மகளிர் – women with fine jewels, concubines with perfect jewels, ஏசுப – they scorn, என்ப – they say, என் நலனே – my beauty, அதுவே – that is, பாகன் – charioteer, நெடிது உயிர் வாழ்தல் – to live for a long time, காய்சின – very angry, கொல் களிற்று யானை – a murderous male elephant, நல்கல்மாறே – since it does not kill, it is like being gracious and not killing (ஏகாரம் அசைநிலை, an expletive, மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள்) தரும் இடைச்சொல்), தாமும் பிறரும் உளர் போல் சேறல் – after the like-minded ones joined each other, முழவு இமிழ் – drums beating, துணங்கை தூங்கும் விழவின் – in a festival where thunangai dance is performed, யான் அவண் வாராமாறே – since I didn’t go there (வாராமாறே – ஏகாரம் அசைநிலை, an expletive, மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள்) தரும் இடைச்சொல்), வரினே – if I come, வான் இடை – in the sky, சுடரொடு – with the sun, திரிதரும் – turns around (always facing the sun), நெருஞ்சி – nerunchi flowers, Calatrop Tribulus terrestris, Cow’s Thorn, போல – like, என்னொடு திரியேன் ஆயின் – if I do not make him turn with me, if I do not control him, வென்வேல் – victorious spears, மாரி அம்பின் – arrows that are like rain (அம்பின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), மழைத்தோற் சோழர் – warriors of the Chozha king with shields that are dark like rainclouds, வில் ஈண்டு குறும்பின் – with a fort with many bows, with a fort with many warriors with bows, வல்லத்து – Vallam town’s, புற – behind, side, மிளை – protected forests, ஆரியர் படையின் – like the Aryan army (படையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), உடைக – let them break, என் நேர் இறை முன்கை – my wrists with perfect joints, my wrists with fine lines, வீங்கிய வளையே – large bangles, tight bangles, bangles that are close to each other (வளையே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 337, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த
மாரி ஈர்ந்தளிர் அன்ன மேனிப்,
பேர் அமர் மழைக் கண், புலம்பு கொண்டு ஒழிய
ஈங்குப் பிரிந்து உறைதல் இனிதன்று, ஆகலின்
அவணது ஆகப் பொருள் என்று உமணர்  5
கண நிரை அன்ன பல் கால் குறும்பொறைத்,
தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலைப்
படையுடைக் கையர் வருதிறம் நோக்கி,
உண்ணா மருங்குல் இன்னோன் கையது
பொன் ஆகுதலும் உண்டு எனக், கொன்னே  10
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்,
திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கிச்
செங்கோல் அம்பினர் கைந்நொடியாப் பெயரக்,
கொடிவிடு குருதித் தூங்கு குடர் கறீஇ,
வரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றை  15
வெண்பரல் இமைக்கும் கண் பறி கவலைக்,
கள்ளி நீழல் கதறுபு வதிய
மழை கண் மாறிய வெங்காட்டு ஆர் இடை,
எமியம் கழி தந்தோயே, பனி இருள்
பெருங்கலி வானம் தலைஇய  20
இருங்குளிர் வாடையொடு வருந்துவள் எனவே.

Akanānūru 337, Cheramān Pālai Pādiya Perunkadunkō, Pālai Thinai – What the hero said to his heart
Realizing that it is not sweet to
stay away from her,
……….the woman with a body like
……….rainy season’s wet sprouts
……….on the tall branches of
……….trees, and huge, calm, moist
……….eyes, who will be sad and
……….tremble in cold darkness when
……….the chilly northern winds blow
……….and clouds rumble and rain,
you returned, leaving me alone in
the wasteland in the past,
where small boulders are like rows
of salt merchants’ donkeys,
and bandits with weapons look at the
direction of a Brahmin with a folded,
white palm frond letter in his waist,
and thinking that the skinny man might
have gold, killed him, pointlessly.

On seeing his inability to fight, torn
clothes and poverty, the fierce men
who carry arrows with red stems
snap their fingers and move away.
Blood flows in a long stream
from his body and a male fox eats
his hanging intestines near the forked
path with striped hemp and bright,
white pebbles, the glare causing its
eyelids to close, and it howls under a
kalli tree, in the parched forest where
rains have not fallen.

Living with her is wealth to me.

Notes:  முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்து வந்த தலைவன் பின்னும் பொருள் ஈட்டவேண்டும் என ஊக்குவித்த நெஞ்சை இடித்துக் கூறியது.   பொ. வே. சோமசுந்தரனார் உரை – இச்செய்யுள் கொண்டுகூட்டுப் பொருள் கோள் உடையது.  எமியம் கழி தந்தோயே (19) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – யாம் தமியேமாய் வருந்தும்படி செய்தாய், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – (முன்பு ஒருகால்) யாம் தமியேமாக நீ மீண்டு வந்தாய்.  நொடியா – நொடித்து என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:   சாரல் – mountain slopes, யாஅத்து – of trees, ஆச்சா மரம், Hardwickia binate (யாஅத்து – அத்து சாரியை – an augment), உயர் சினை – tall branches, குழைத்த மாரி ஈர்ந்தளிர் அன்ன மேனி – body like wet rainy season’s sprouts, பேர் அமர் மழைக்கண் – the woman with large calm moist eyes (அன்மொழித்தொகை), புலம்பு கொண்டு – in loneliness, ஒழிய – leaving, ஈங்கு – here, பிரிந்து – separated, உறைதல் இனிதன்று – it is not sweet to live, ஆகலின் – so, அவணது ஆக – being with her there, பொருள் என்று – that it is wealth, உமணர் கண நிரை அன்ன – like rows of herds (donkeys) belonging to salt merchants that are carrying load, பல் கால் குறும்பொறை – many small boulders, தூது ஒய் பார்ப்பான் – a Brahmin man who is carrying a message, மடி வெள் ஓலை – folded white frond letter in his waist, படையுடைக் கையர் – those with weapons in their hands, வருதிறம் நோக்கி – looking at the nature of his coming, உண்ணா மருங்குல் இன்னோன் கையது பொன் ஆகுதலும் உண்டு என – thinking that this skinny man with a thin waist who looks like he has not eaten well probably has gold in his hands, கொன்னே – for no reason, தடிந்து உடன் வீழ்த்த – killed and brought him down, கடுங்கண் மழவர் – harsh wasteland bandits, திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கி – on seeing the torn clothes and poverty of that man who is not fit to fight, or to have wealth (சிதாஅர் – அளபெடை), செங்கோல் அம்பினர் – those who carry arrows with red rods, கைந்நொடியாப் பெயர- snap their fingers and move away, கொடிவிடு குருதி – long stream of flowing blood, தூங்கு குடர் கறீஇ – eating his hanging intestines (குடர் – குடல் என்பதன் போலி, கறீஇ – அளபெடை), வரி மரல் இயவின் – near the path with striped hemp, Sansevieria trifasciata, ஒரு நரி – a fox, ஏற்றை – male, வெண்பரல் இமைக்கும் – white pebbles glitter, கண் பறி – blinding the eyes, கவலை – forked path, கள்ளி நீழல் – shade of a kalli tree, Prickly pear cactus or Euphorbia Tirucalli (நீழல் – நிழல் என்பதன் நீட்டல் விகாரம்), கதறுபு – howling, வதிய – staying, மழை கண் மாறிய வெங்காட்டு – in the hot forest where rains have not fallen, in the harsh forest where rains have not fallen, ஆர் இடை – on the harsh path, எமியம் கழி தந்தோயே – you left making me lonely, you made me lonely (எமியம் – தன்மைப் பன்மை, first person plural, தந்தோயே – ஏகாரம் அசைநிலை, an expletive), பனி இருள் – cold darkness, பெருங்கலி வானம் – the uproarious clouds, தலைஇய – poured (அளபெடை), இருங்குளிர் வாடையொடு வருந்துவள் எனவே – since she will be sad when the cold northern winds blow when it is chill and dark (எனவே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 338, மதுரைக் கணக்காயனார், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும்
மறங்கெழு தானை அரசர் உள்ளும்,
அறங்கடைப்பிடித்த செங்கோலுடன், அமர்
மறஞ்சாய்த்து எழுந்த வலன் உயர் திணிதோள்,
பலர் புகழ் திருவின் பசும்பூண் பாண்டியன்,  5
அணங்குடை உயர்நிலைப் பொருப்பின் கவாஅன்,
சினை ஒண் காந்தள் நாறும் நறுநுதல்,
துணை ஈர் ஓதி மாஅயோள் வயின்,
நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற
முயங்கல் இயையாது ஆயினும், என்றும்,  10
வயவுறு நெஞ்சத்து உயவுத் துணையாக,
ஒன்னார் தேஎம் பாழ்பட நூறும்
துன் அருந்துப்பின் வென்வேல் பொறையன்
அகல் இருங்கானத்துக் கொல்லி போலத்,
தவாஅலியரே, நட்பே, அவள் வயின்  15
அறாஅலியரே, தூதே, பொறாஅர்
விண் பொரக் கழித்த திண் பிடி ஒள் வாள்,
புனிற்று ஆன் தரவின் இளையர் பெருமகன்
தொகு போர்ச் சோழன் பொருள் மலி பாக்கத்து,
வழங்கல் ஆனாப் பெருந்துறை  20
முழங்கு இரு முந்நீர்த் திரையினும் பலவே.

Akanānūru 338, Mathurai Kanakkāyanār, Kurinji Thinai – What the hero said to his heart
Even if we don’t get the embraces
of the dark woman with oiled braids,
fine, rounded, bright bangles, and fragrant
forehead with the scents of glory lilies
growing on stems, on the Pothiyil
mountain range belonging to Pasumpoon
Pāndiyan with strong shoulders, praised by
many, who rose up with strength and ruined
his enemies in battles, and ruled with a just
scepter and justice, great among many kings
with brave armies, and countries that are
praised in this world with tall mountains,

may my friendship with her last, as a support
for my heart that desires her, like the Kolli
Mountain with gods,
belonging to Cheran with victorious spears,
who ruins enemy countries and has strength
that is hard to be ruined!

May my many messages reach her, more than
the roaring waves on the large shores of the
seashore town with material wealth,
belonging to the Chozha king with a bright
spear with firm handle, victorious in battles,
who sent enemies to the upper world, who
is leader of warriors who seize cows that have
given birth recently!

Notes:   முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்து வந்த தலைவன் மீண்டும் பொருளீட்ட வேண்டும் என்று ஊக்குவித்த தன் நெஞ்சை இடித்துக் கூறியது.  உயர்நிலை (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – செந்தமிழும் பைந்தமிழும் சந்தனமும் வழங்குதலின் பொதிய மலையை உயர்நிலைப் பொருப்பு என்றார்.  துணை ஈர் ஓதி (8) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – அளவொத்த நீண்ட கூந்தல், பொ. வே. சோமசுந்தரனார் உரை – கடைப்பகுதி ஒத்த நெய்ப்புடைய கூந்தல்.  நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நுண்ணிய திரண்ட ஒளி வீசுகின்ற பொன் வளையல்கள் அணிந்த கைகள் நமது வளமான முதுகினைச் சுற்றிக்கொள்ளும்படி, தொடி கைக்கு ஆகுபெயர்.  பொருள் மலி பாக்கத்து (19) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொருள் மிகுந்துள்ள காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள பட்டினப் பாக்கத்தின்கண், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – பண்டங்கள் நிறைந்த பாக்கத்தின்கண்.  முந்நீர் – தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது.  முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் ‘தமிழ்க்காதல்’ நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு 9 உரை, நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி 75 உரை.  வரலாறு:  பசும்பூண் பாண்டியன், பொறையன், கொல்லி மலை, சோழன்.  புனிறு – புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே (தொல்காப்பியம் உரியியல் 79).

Meanings:   குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும் – in the greatly praised countries in the world with tall mountains, மறம் கெழு தானை அரசர் உள்ளும் – among the kings with brave armies, அறம் கடைப்பிடித்த – following justice, செங்கோலுடன் – with a right scepter, அமர் – battles, மறம் சாய்த்து – ruined strength (of enemies), எழுந்த வலன் – rose up with strength, உயர் திணிதோள் – strong shoulders, பலர் புகழ் – praised by many, திருவின் பசும்பூண் பாண்டியன் – wealthy/handsome Pasumpoon Pāndiyan, அணங்குடை – fierce, with gods, உயர்நிலை – high esteem, பொருப்பின் கவாஅன் – adjoining mountains (கவாஅன் – அளபெடை), சினை – stems, ஒண் காந்தள் நாறும் நறுநுதல் – fragrant forehead with the fragrance of bright glory lilies, துணை – alike, ஈர் ஓதி மாஅயோள் வயின் – by the dark woman with oiled/wet hair (மாஅயோள் – அளபெடை), நுண் – fine, கோல் – rounded, அவிர் தொடி – bright bangles, வண் புறம் – thick back side, சுற்ற முயங்கல் இயையாது ஆயினும் – even if it is not possible to hug and embrace her, என்றும் – always, வயவு உறு நெஞ்சத்து உயவுத் துணையாக – as a support for my pining heart (வயா என்பது வயவு ஆயிற்று), ஒன்னார் தேஎம் பாழ் பட – enemy lands to be ruined (தேஎம் – அளபெடை), நூறும் – ruins, துன் அருந்துப்பின் – with strength that is hard to ruin, வென்வேல் பொறையன் – Poraiyan (Cheran king) with victorious spears, அகல் இருங்கானத்துக் கொல்லி போல – like Kolli Mountain with wide huge forests, தவாஅலியரே – may it not be ruined (வியங்கோள், அளபெடை, ஏகாரம் அசைநிலை, an expletive), நட்பே அவள் வயின் – friendship with her (நட்பே – ஏகாரம் அசைநிலை, an expletive), அறாஅலியரே – may it not be ruined (வியங்கோள், அளபெடை, ஏகாரம் அசைநிலை, an expletive), தூதே – the messages (ஏகாரம் அசைநிலை, an expletive), பொறாஅர் விண் பொர – send the enemies to the upper world (பொறாஅர் – அளபெடை), கழித்த – removed, திண் பிடி ஒள் வாள் – bright sword with strong handle, புனிற்று ஆன் – cows that have given birth recently, தரவின் இளையர் – young warriors who bring, பெருமகன் – great leader, தொகு – collectively, with groups of warriors, போர் – battles, சோழன் –  Chozha king, பொருள் மலி பாக்கத்து – in his seashore town with abundant materials, வழங்கல் ஆனா – movement without a stop, பெருந்துறை – vast shores, முழங்கு இரு முந்நீர்த் திரையினும் பலவே – more than the waves of the huge roaring ocean (பலவே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 339, நரைமுடி நெட்டையர், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
வீங்கு விசைப் பிணித்த விரை பரி நெடுந்தேர்
நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில்,
பாம்பு என முடுகு நீர் ஓடக், கூம்பிப்
பற்று விடு விரலின் பயறுகாய் ஊழ்ப்ப
அற்சிரம் நின்றன்றால் பொழுதே, முற்பட   5
ஆள் வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து,
ஆண்மை வாங்கக் காமம் தட்பக்
கவைபடு நெஞ்சம் கண்கண் அகைய,
இரு தலைக் கொள்ளி இடை நின்று வருந்தி,
ஒரு தலைப் படாஅ உறவி போன்றனம்,  10
நோம் கொல் அளியள் தானே, யாக்கைக்கு
உயிர் இயைந்தன்ன நட்பின் அவ் வுயிர்
வாழ்தல் அன்ன காதல்,
சாதல் அன்ன பிரிவு அரியோளே.

Akanānūru 339, Naraimudi Nettaiyar, Pālai Thinai – What the hero said to his heart
At this time, when the early dew
season has ended,
……….water runs fast like snakes,
……….where wheels with strong spokes
……….of rapidly moving chariots that
……….are hitched to very fast horses,
……….have been ridden and have
……….dug into the earth, and
……….green lentils are mature like
……….the pointed fingers that are
……….separated,
our manliness, not slacking, goads us to
go to earn wealth, but our love stops it.
My broken heart that is caught between
these two is sad, like an ant caught in the
middle of a stick that is burning with flames
on both ends, unable to go to either side.

Will she be sad?  She is pitiful!

Love to living is what beautiful life is to the
body.  Separation from the precious young
woman is like death!

Notes:  பொருள்வயின் பிரிந்த தலைவன் இடைநெறியில் தன் நெஞ்சிடம் கூறியது.  ஒப்புமை:  அகநானூறு 324 – தண்ணில மருங்கில் போழ்ந்த வழியுள், நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுகச், செல்லும் நெடுந்தகை தேரே.

Meanings:   வீங்கு விசை – very  rapidly moving, பிணித்த விரை பரி – tightly hitched horses that ride very fast, நெடுந்தேர் – tall chariots, நோன் கதிர் – strong spokes, வலிய ஆரம், சுமந்த – carried, bore, ஆழி ஆழ் மருங்கில் – where the wheels rolled and dug deeply, பாம்பு என முடுகு நீர் ஓட – water runs fast like snakes, கூம்பிப் பற்று விடு விரலின் பயறு காய் ஊழ்ப்ப – beans mature like pointed fingers that are separated (விரலின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது), அற்சிரம் நின்றன்றால் பொழுதே – when early dew season ended (நின்றன்றால் – நின்னன்று + ஆல், ஆல் அசைநிலை, an expletive, பொழுதே – ஏகாரம் -அசைநிலை, an expletive), முற்பட வாங்க – pulling forward, ஆள் வினைக்கு எழுந்த – rose up to go and earn wealth, அசைவு இல் உள்ளத்து – in a mind that does not slack, ஆண்மை – manliness, வாங்க – pulling, காமம் தட்ப – love stopping, கவைபடு நெஞ்சம் – my split heart, my broken heart, கண் கண் அகைய – burning on the nodes, burning in places, இரு தலைக் கொள்ளி – with flame on both sides of the stick, இடை நின்று வருந்தி – standing between and feeling sad, ஒரு தலைப் படாஅ – unable to go to a side (படாஅ – அளபெடை), உறவி போன்றனம் – we are like ants, நோம் கொல் – will she be sad (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), அளியள் தானே – she is pitiable (தான், ஏ அசைநிலைகள், expletives), யாக்கைக்கு உயிர் இயைந்தன்ன – like how life is attached to the body, நட்பின் – with love/friendship, அவ்வுயிர் – that life, வாழ்தல் – living, அன்ன – like, காதல் – love, சாதல் அன்ன – like death, பிரிவு – separation, அரியோளே – the precious woman (ஏகாரம் -அசைநிலை, an expletive)

அகநானூறு 340, நக்கீரனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பன்னாள் எவ்வம் தீரப் பகல் வந்து,
புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி,
மாலை மால் கொள நோக்கிப் பண் ஆய்ந்து,
வலவன் வண் தேர் இயக்க, நீயும்
செலவு விருப்புறுதல் ஒழிக தில் அம்ம,  5
செல்லா நல்லிசைப் பொலம் பூண் திரையன்
பல் பூங்கானல் பவத்திரி அன இவள்
நல் எழில் இள நலம் தொலைய, ஒல்லெனக்
கழியே ஓதம் மல்கின்று வழியே
வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும்,  10
சென்றோர் மன்ற மான்றன்று பொழுது, என
நின் திறத்து அவலம் வீட இன்று இவண்
சேப்பின் எவனோ, பூக்கேழ் புலம்ப!
பசு மீன் நொடுத்த வெண்ணெல் மாஅத்
தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே,  15
வடவர் தந்த வான் கேழ் வட்டம்
குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய
வண்டு இமிர் நறும் சாந்து அணிகுவம், திண் திமில்
எல்லுத் தொழின் மடுத்த வல் வினைப் பரதவர்
கூர் வளிக் கடு விசை மண்டலின் பாய்புடன்,  20
கோட் சுறாக் கிழித்த கொடு முடி நெடுவலை
தண் கடல் அசை வளி எறிதொறும் வினை விட்டு
முன்றில் தாழைத் தூங்கும்,
தெண் கடல் பரப்பின் எம் உறைவு இன் ஊர்க்கே.

Akanānūru 340, Nakkeeranār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
Oh lord of the shores filled with flowers!
You have been coming for many days to
the beautiful grove with punnai trees,
at daytime, to remove her sorrow and
spent time under sweet shade.

When you see confusing darkness arrive
in the evening, your charioteer analyzes,
sets the saddles and ties the horses to the
sturdy chariot and you desire to go.
Please rid your desire to leave!

She worries that you will leave in the
painful evening time when backwaters are
brimming, snakes with sharp fangs roam,
and harsh fish swim.

For it to end her sorrow that ruined her pretty
youth and fine beauty, like that of grove-filled
Pavathiri town of Thiraiyan with unspoiled,
fine fame, why don’t you stay here today?

We’ll feed you gruel made with soft curds mixed
with flour from white rice that we got selling fresh
fish and adorn you with bee-swarming sandal
paste, made on round stones given by northerners,
with sandalwood from the west.

The sweet village where we live is on the shores of the
clear ocean, where curved, knotted nets, torn in the
cool ocean by rapidly blowing, harsh winds and
attacking, murderous sharks, sway on thāzhai trees
in front yards where they dry, after the work of the
skilled fishermen end, and on their return from fishing
during the day in their sturdy boats.

Notes:   பகற்குறிக்கண் வந்த தலைவனிடம் தோழி கூறியது.  மாலை மால் கொள நோக்கி (3) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மாலைப் பொழுது வர அதனை மயக்கம் தோன்றப் பார்த்து, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மாலைப் பொழுது வந்தவுடன் ஒருவரையொருவர் மயக்கமுறப் பார்த்து.  ஒப்புமை:  நெடுநல்வாடை 51-52 – வடவர் தந்த வான் கேழ் வட்டம் தென் புல மருங்கில் சாந்தொடு துறப்ப.   வரலாறு:  திரையன், பவத்திரி.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ்செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  உறுப்பின் (17) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நறுமணப்பொருள்களாகிய உறுப்புகள், கலவைச் சாந்திற்கு உறுப்பாகிய மணப்பொருள், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – சந்தனக் கட்டையால், குடபுலம் எனக்கொண்டு அதனில் உண்டாகிய கட்டையை உறுப்பு என்றார்.  பொலம் – பொன் என் கிளவி ஈறு கெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுள் மருங்கின் தொடர் இயலான (தொல்காப்பியம், புள்ளிமயங்கியல் 61).  தில் – விழைவே, காலம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப தில்லைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 5).  கூர் – கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 18).

Meanings:   பன்னாள் – may days, எவ்வம் தீர – for sorrow to end, பகல் வந்து – came during the day, புன்னை அம் பொதும்பின் – of the beautiful groves with punnai trees, Calophyllum inophyllum, Laurel Tree, Mast wood Tree, இன் நிழல் கழிப்பி – spent time in the sweet shade, மாலை – evening, மால் கொள – causing confusion, causing enchantment, நோக்கி – on seeing it, பண் ஆய்ந்து – analyzes to perform his work of decorating the horses with saddles etc. (பண் = குதிரைக்கலனை, saddle), வலவன் வண் தேர் இயக்க – charioteer driving the sturdy chariot, நீயும் செலவு விருப்புறுதல் ஒழிக – you get rid of your desire to leave, தில் – விழைவின் கண் வந்த ஓர் இடைச்சொல் (விழைவு – விருப்பம்), அம்ம -அசைநிலை, an expletive, செல்லா – not ruined, நல்லிசை – fine fame, பொலம் பூண் திரையன் – Thiraiyan wearing old jewels, பல் பூங்கானல் பவத்திரி அன இவள் – she is like Pavathiri town with many groves/gardens (அன – அன்ன என்பதன் இடைக்குறை, உவம உருபு, a comparison word), நல் எழில் – fine beauty, இள நலம் தொலைய – youthful beauty lost, ஒல்லென – with sounds, கழியே ஓதம் மல்கின்று – the backwaters are filled to the brim, வழியே – on the way, வள் எயிற்று அரவொடு – with sharp-fanged snakes, வய மீன் கொட்கும் – strong fish swim around (கொட்கும் – திரியும்), சென்றோர் – thinking of you as ‘the man who has gone’, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty, மான்றன்று பொழுது என – at this confusing time, நின் திறத்து அவலம் வீட – for sorrow because of you to end, இன்று இவண் சேப்பின் எவனோ – why can’t you stay here today, பூக்கேழ் புலம்ப – oh lord of the shores with flowers (விளி, an address), பசு மீன் – fresh fish, நொடுத்த – sold, வெண்ணெல் – white rice, மாஅ – flour (அளபெடை), தயிர் மிதி மிதவை – gruel mixed with curds, ஆர்த்துவம் நினக்கே – we will feed to you (நினக்கே – ஏகாரம் அசைநிலை, an expletive), வடவர் தந்த வான் கேழ் வட்டம் – bright discs that northerners gave, குட புல உறுப்பின் – with sandalwood from the west, கூட்டுபு நிகழ்த்திய – made together made into a paste, வண்டு இமிர் நறும் சாந்து – fragrant paste swarmed by bees, அணிகுவம் – we will adorn with it, திண் திமில் எல்லுத் தொழின் மடுத்த – ride sturdy boats during the day for their (fishing) business, வல் வினைப் பரதவர் – fishermen who are good at their tasks, கூர் வளி – harsh winds, கடு விசை மண்டலின் – since they go very fast, பாய்புடன் கோட் சுறாக் கிழித்த – torn by the attacking murderous sharks, torn by the leaping murderous sharks, கொடு முடி நெடு வலை – the curved knotted nets, தண் கடல் – cool ocean, அசை வளி எறிதொறும் – whenever the wind blows, வினை விட்டு – abandoning work, முன்றில் தாழைத் தூங்கும் – sway on thāzhai trees in the front yards, Pandanas odoratissimus (முன்றில் – இல்முன்), தெண் கடல் பரப்பின் – with the clear wide ocean, எம் உறைவு இன் ஊர்க்கே – in the sweet town where we live (ஊர்க்கே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 341, ஆவூர் மூலங்கிழார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
உய்தகை இன்றால் தோழி, பைபயக்
கோங்கும் கொய் குழை உற்றன, குயிலும்
தேம்பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும்,
நாடு ஆர் காவிரிக் கோடு தோய் மலிர் நிறைக்
கழை அழி நீத்தம் சாஅய வழிநாள்,  5
மழை கழிந்தன்ன மாக்கால் மயங்கு அறல்,
பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு,
மதவு நடை நாக்கொடு அசைவீடப் பருகி
குறுங்கால் காஞ்சிக் கோதை மெல் இணர்ப்
பொன் தகை நுண் தாது உறைப்பத் தொக்கு உடன்,  10
குப்பை வார் மணல் எக்கர்த் துஞ்சும்,
யாணர் வேனில் மன், இது
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே.

Akanānūru 341, Avūr Moolangilar, Pālai Thinai – What the heroine said to her friend
Salvation is not for us, my friend!
It is for those who enjoy great happiness
with their partners in prosperous, early
summer,

when kongam trees have sprouts that can
be plucked gently, cuckoos sing from the
tall branches of honey-flowing mango trees,
fine oxen with moving humps that eat arukam
grass and drink with their strong tongues
to remove thirst, the muddied water, in a huge
canal, that resembles Kāviri river that helps
people in the land, that has receded after heavy
rains when bamboo poles disappear in its depth
and water overflows on its banks,
sleep on the tall sand dunes that are heaped
together, and delicate clusters of flowers from
nearby Kānj trees with short trunks drop pollen
on them.

Notes:  தலைவன் பிரிவின்கண் வற்புறுத்தும் தோழிக்குத் தலைவி சொன்னது.  மதவு நடை நாக்கொடு (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வலிய நடையினையுடைய பசுக்களோடு, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – வலிமுடைய நாவினால்.  மேலும் பதவுரையில் வேங்கடசாமி நாட்டார் ‘மதவு உடை’ என்கின்றார், பொ. வே. சோமசுந்தரனார் ‘மதவு நடை’ என்கின்றார்.  ஒப்புமை:  மூங்கில் நீரில் மறைதல் – கழை மாய் நீத்தம் – அகநானூறு 72, நற்றிணை 7, கழை அழி நீத்தம் – அகநானூறு 341, கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம் – அகநானூறு 6.  வரலாறு:  காவிரி.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  மதவு – மதவே மடனும் வலியும் ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 81). 

Meanings:   உய்தகை இன்றால் தோழி – salvation/survival is not for us oh friend (இன்று + ஆல், இன்றால் – ஆல் அசைநிலை), பைபய – very slowly (பையப்பைய பைபய என மருவியது), கோங்கும் கொய் குழை உற்றன – kongam trees have tender pluckable sprouts, Cochlospermum gossypium, குயிலும் தேம் பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும் – cuckoos sing from honey-flowing (in the flowers) mango trees’ tall branches (மாஅத்து – அத்து சாரியை, தேம் தேன் என்றதன் திரிபு), நாடு ஆர் காவிரி – Kāviri which fills the land with water, Kāviri which supports lives on land, கோடு தோய் மலிர் நிறை – water filled full to the shores, கழை அழி  நீத்தம் – bamboo pole disappears in the flood water, சாஅய – when flood waters dry up, வழிநாள் மழை கழிந்தன்ன – like in the days after rain, மாக் கால் மயங்கு அறல் – in the huge canal with muddy water, பதவு மேயல் அருந்து – eat arukam /cydonon grass in the muddy water (மேயல் – ஆகுபெயர் உணவிற்கு, ஆர்ந்து என்பது அருந்து என வந்தது), துளங்கு இமில் – moving humps, நல் ஏறு – fine oxen, மதவு உடை நாக்கொடு – with their strong tongues, மதவு நடை நாகொடு – with their cows of strong walk, அசை வீடப் பருகி – they drank to end their tiredness, they drank to end their thirst, குறுங்கால் காஞ்சிக் கோதை மெல் இணர் – delicate clusters of flower strands of the short-trunked Kānji trees, Thespesia populnea, Portia tree, பூவரச மரம், பொன் தகை நுண் தாது உறைப்ப – for gold-like pollen dust to drop, தொக்கு உடன் – joined together, குப்பை – heaps, வார் மணல் எக்கர்த் துஞ்சும் – it sleeps on the tall sand dunes, யாணர் – prosperous, வேனில் – summer, மன் – அசை, an expletive, இது  – this, மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே – glory is for those who enjoy with their partners (உடையோர்க்கே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 342, மதுரைக் கணக்காயனார், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
ஒறுப்ப ஓவலை, நிறுப்ப நில்லலை,
புணர்ந்தோர் போலப் போற்றுமதி, நினக்கு யான்
கிளைஞன் அல்லனோ நெஞ்சே, தெனாஅது
வெல் போர்க் கவுரியர் நல் நாட்டு உள்ளதை
மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின்  5
ஆ கொள் மூதூர்க் கள்வர் பெருமகன்,
ஏவல் இளையர் தலைவன், மேவார்
அருங்குறும்பு எறிந்த ஆற்றலொடு, பருந்து படப்
பல் செருக் கடந்த செல் உறழ் தடக்கை
கெடாஅ நல் இசைத் தென்னன், தொடாஅ  10
நீர் இழி மருங்கில் கல் அளைக் கரந்த அவ்
வரையர மகளிரின் அரியள்,
அவ்வரி அல்குல் அணையாக் காலே.

Akanānūru 342, Mathurai Kanakkāyanār, Kurinji Thinai – What the hero said to this heart
Even when I chide and stop,
you do not let go the thought of
embracing her, the woman with pretty
lines on her loins, harder to attain like
the pretty mountain goddesses in the
mountain caves near waterfalls in the
fine country of the southern Pandiyan
king of faultless fame, victorious in
battles, with thunderbolt-like large hands,
a leader to young warriors skilled in archery,
lord of bandits living in ancient towns who
break open forts with mud mounds and seize
the cattle of enemies,
a ruler who attacked many forts with heavy
protection and won many battles where kites
have descended.

Care for me like I’m your friend, my heart!
Am I not related to you?

Notes:  அல்லகுறிப்பட்ட தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.  வரலாறு:  கவுரியர் (பாண்டியர்), தென்னன் (பாண்டியன்).  ஏவல் இளையர் தலைவன் (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அம்பு எறியும் தொழிலில் வல்லமையுடைய இளமையுடைய மறவர்களுக்குத் தலைவன், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – ஏவுதலைச் செய்யும் வீரர்களுக்குத் தலைவன்.  செல் உறழ் தடக்கை (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – முகிலை ஒத்த பெரிய கை, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – இடியுடன் மாறுபடும் பெரிய கை.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  ஐங்குறுநூறு 191 – வரையர மகளிரின் அரியள்.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

Meanings:   ஒறுப்ப – when chiding, ஓவலை – you do not end, நிறுப்ப – when stopping, நில்லலை – you do not let go, புணர்ந்தோர் போலப் போற்றுமதி – you please care like we are close friends (மதி – முன்னிலையசை, an expletive of the second person), நினக்கு யான் கிளைஞன் அல்லனோ – am I not related to you, நெஞ்சே – oh my heart, தெனாஅது – in the south, தெற்கின்கண் (அளபெடை, ஏழாம் உருபின் பொருள்பட வந்தது), வெல் போர்க் கவுரியர் – the Pāndiyar who are victorious in battles, நல் நாட்டு – in the fine country, உள்ளதை – what is there (ஐகாரம் சாரியை), மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின் – along with breaking and opening the mud forts with mounds (அருப்பம் அருப்பு என்றாயிற்று, உழை – இடம், திறப்பின் – திறத்தலோடு , வேற்றுமை மயக்கம்)ஆ கொள் – cattle taking, மூதூர் – ancient town, கள்வர் பெருமகன் – lord of the bandits, ஏவல் இளையர் தலைவன் – lord of young warriors who shoot arrows, lord of warriors who command, மேவார் அருங்குறும்பு எறிந்த ஆற்றலொடு – with strength/ability to ruin forts of enemies that are well guarded, பருந்து பட – kites diving down for flesh, பல் செருக் கடந்த – won many battles, செல் உறழ் தடக்கை – thunder-like large hands, large hands that differ from thunder – see Notes (உறழ் – உவம உருபு, a comparison word), கெடாஅ நல் இசைத் தென்னன் – Pāndiyan with unspoilt fine fame (கெடாஅ – அளபெடை), தொடாஅ நீர் – water that is there without digging, implies waterfalls (தோண்டப்படாத நீராகிய அருவி, வெளிப்படை, தொடாஅ – அளபெடை), நீர் இழி மருங்கில் – near where water flows down, கல் அளைக் கரந்த – hidden in the mountain caves, அம் வரையர மகளிரின் அரியள் – she is difficult to attain like the pretty mountain goddesses (மகளிரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), அவ்வரி அல்குல் – loins with beautiful lines, அணையாக் காலே – when I cannot embrace her (காலே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 343, மதுரை மருதன் இளநாகனார் பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
வாங்கு அமை புரையும் வீங்கு இறைப் பணைத்தோள்,
சில் சுணங்கு அணிந்த பல் பூண் மென் முலை,
நல்லெழில் ஆகம் புல்லுதல் நயந்து,
மரம் கோள் உமண்மகன் பெயரும் பருதிப்
புன்தலை சிதைத்த வன்தலை நடுகல் 5
கண்ணி வாடிய மண்ணா மருங்குல்,
கூர் உளி குயின்ற கோடுமாய் எழுத்து அவ்
ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும்
கண் பொரி கவலைய கானத்து ஆங்கண்,
நனந்தலை யாஅத்து அம் தளிர்ப் பெருஞ்சினை 10
இல் போல் நீழல் செல் வெயில் ஒழிமார்,
நெடுஞ்செவிக் கழுதைக் குறுங்கால் ஏற்றைப்
புறம் நிறை பண்டத்துப் பொறை அசாஅக் களைந்த
பெயர்படை கொள்ளார்க்கு உயவுத்துணை ஆகி,
உயர்ந்த ஆள் வினை புரிந்தோய் பெயர்ந்து நின்று 15
உள்ளினை வாழி என் நெஞ்சே! கள்ளின்
மகிழின் மகிழ்ந்த அரிமதர் மழைக்கண்,
சின்மொழிப் பொலிந்த துவர்வாய்ப்,
பன் மாண் பேதையின் பிரிந்த நீயே.

Akanānūru 343, Mathurai Maruthan Ilanākanār, Pālai Thinai – What the hero said to his heart
May you live long, my heart!  You came here,
leaving the naive woman in bliss like she was
drunk, her eyes moist with red lines, and
her red coral-like mouth that utters few words,
to the vast wasteland,

where salt merchants ride their wooden
wagons, the dull rims of the wheels cracking
when hitting against the unwashed memorial
stones with hard tops and wilted garlands,
on which writings etched with sharp chisels
have been ruined, confusing those who travel
on the forked paths in the parched land,
and merchants rest their male donkeys with
long ears and short legs, that carry weight
on their backs, in the shade of the tall
branches of trees with tender sprouts,
where the cooling shade is like that inside of
houses.

You were support to those doing superior work
that you desired.  Now you are thinking of leaving,
desiring to embrace the pretty chest of the young
woman with curved, bamboo-like, rounded, wide
arms and few pallor spots on her delicate, jeweled
breasts.

Notes:  தலைவன் இடைச்சுரத்து மீளக் கருதிய நெஞ்சினைக் கழறியது.  வன்தலை (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வலிய தலையினையுடைய நடுகல், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – வலிய பாறையிலுள்ள நடுகல்.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).

Meanings:   வாங்கு அமை – curved bamboo, புரையும் – like (புரை – உவம உருபு, a comparison word), வீங்கு – thick, rounded, இறை – joints, forearms, பணைத்தோள் – thick arms, சில் சுணங்கு அணிந்த – decorated with some pallor spots, பல் பூண் மென் முலை – delicate breasts with many jewels, நல் எழில் ஆகம் – chest with fine beauty, புல்லுதல் நயந்து – desiring to embrace, மரம் கோள் – having wooden wagons (மரம் ஆகுபெயர் மர வண்டிக்கு), உமண்மகன் பெயரும் – when salt merchants travel, பருதி – wheels, புன்தலை – dirty rims, dull rims, சிதைத்த –getting cracked, வன்தலை நடுகல் – memorial stones made of strong rocks, கண்ணி வாடிய – garlands faded, மண்ணா – unwashed, மருங்குல் – near, there, கூர் உளி குயின்ற – carved with sharp chisels, கோடு மாய் எழுத்து – faded writing with lines, அவ் ஆறு செல் வம்பலர் – those who travel on that path, வேறு பயம் படுக்கும் – they (the faded writing that is not legible) give different interpretations, the faded writings appear differently, கண் பொரி – place is parched, கவலைய – forked paths, கானத்து ஆங்கண் – there in the forest, நனந்தலை – wide place, யாஅத்து அம் தளிர் – pretty sprouts of trees, ஆச்சா மரம், Hardwickia binate (யாஅத்து – அத்து சாரியை), பெருஞ்சினை – huge branches, இல் போல் – like houses, நீழல் – shade (நிழல் என்பதன் நீட்டல் விகாரம்), செல் வெயில் ஒழிமார் – to remove the sun’s heat, for the sun’s heat to end, நெடுஞ்செவிக் கழுதை – donkeys with long ears, குறுங்கால் ஏற்றை – males with short legs, புறம் நிறை பண்டத்து – backs filled with things, பொறை – weight, அசாஅக் களைந்த – removed its tiredness (அசாஅ – அளபெடை), பெயர்படை கொள்ளார்க்கு – to those who were not leaving (பெயர்படை – பெயர்பு அடை, பெயர்தலைப் பொருந்தல்), உயவுத் துணை ஆகி – became helpful in their sorrow, உயர்ந்த – superior, ஆள் வினை புரிந்தோய் – you put great effort with desire, பெயர்ந்து நின்று உள்ளினை – now you are thinking of leaving, வாழி என் நெஞ்சே – may you live long oh my heart (இகழ்ச்சிக் குறிப்பு), கள்ளின் மகிழின் மகிழ்ந்த – happy like one who is drunk with liquor (மகிழின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), அரி மதர் மழைக் கண் – luscious moist eyes with red lines, beautiful moist eyes with red lines, சின்மொழிப் பொலிந்த துவர்வாய் – beautiful coral-like red mouth that uttered few words, beautiful red mouth that uttered few words, பன் மாண் பேதையின் பிரிந்த – separated from the naive woman with much esteem, நீயே – you, ஏகாரம் அசைநிலை, an expletive

அகநானூறு 344, மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
வள மழை பொழிந்த வால் நிறக் களரி,
உளர்தரு தண் வளி உறுதொறும் நிலவெனத்
தொகு முகை விரிந்த முடக்கால் பிடவின்,
வை ஏர் வால் எயிற்று ஒண்ணுதல் மகளிர்
கை மாண் தோளி கடுப்பப், பையென,  5
மயில் இனம் பயிலும் மரம் பயில் கானம்
எல்லிடை உறாஅ அளவை வல்லே,
கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க,
நிழல் ஒளிப்பன்ன நிமிர் பரிப் புரவி
வயக்குறு கொடிஞ்சி பொலிய வள்பு ஆய்ந்து  10
இயக்குமதி, வாழியோ, கையுடை வலவ!
பயப்புறு படர் அட வருந்திய
நயப்பு இன் காதலி நகை முகம் பெறவே.

Akanānūru 344, Mathurai Alakkar Gnāzhār Makanār Mallanār, Mullai Thinai – What the hero said to his charioteer
Heavy rains have fallen on the white, parched
land, and whenever the cold winds blew,
clusters of buds of pidavam plants with bent
stems have blossomed as bright as the moon.

In the forest dense with trees, flocks of peacocks
dance delicately, like women with bright foreheads
and sharp, pretty, white teeth, who move their
hands and perform the esteemed thōli dance.

Check well your bridles and ride fast, oh charioteer
with able hands, for us to see the smiling face of my
sweet lover who is pale and sad.

Let us go before night arrives with your very fast
horses that are bright like the moon’s rays,
and chariot with shining ornaments and clear bells
that tinkle like anklets of warriors.  May you live long!

Notes:  வினை முற்றிய தலைவன் தேர்ப்பாகனுக்குச் சொல்லியது.  முடக்கால் பிடவின் (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – முடம்பட்ட காலையுடைய பிடவஞ்செடிகளோடு, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – வளைந்த அடியினுடைய பிடா மரத்தின்கண்.   கை மாண் தோளி (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – விறலியர் கையால் மாட்சிமையுண்டாக ஆடுகின்ற கூத்து, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மகளிரின் ஒழுங்கு மாட்சிமைப்பட்ட விளையாட்டு.  நிழல் ஒளிப்பன்ன (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – திங்களின் ஒளி திரண்டாற்போல.  வயக்குறு (10) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வயப்படுத்துகின்ற, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – விளக்கமுறும்.  தோளி (5) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – தோளை வீசி ஆடுதலின் தோளி எனப்பட்டது.  This is the only poem in Sangam literature where thōli dance is mentioned.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26). வை – வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).

Meanings:   வள மழை பொழிந்த வால் நிறக் களரி – in the parched white colored land where heavy rains fell, உளர்தரு – blowing, தண் வளி உறுதொறும் – whenever the cold wind blows, நிலவு எனத் தொகு முகை விரிந்த – thick buds have opened like the moon, clusters of buds have opened like the moon, முடக்கால் பிடவின் – with the pidavam plants with bent stems, near the pidavam plants with bent stems, Randia genus – plants and small trees belong to this family, வை ஏர் வால் எயிற்று – with sharp pretty white teeth, ஒண்ணுதல் மகளிர் – women with bright foreheads, கை மாண் தோளி கடுப்ப – like the orderly esteemed thōli dance, the orderly esteemed thōli game (கடுப்ப – உவம உருபு, a comparison word), பையென மயில் இனம் பயிலும் – slowly peacock flocks dance, மரம் பயில் கானம் – tree filled forest, எல்லிடை உறாஅ அளவை வல்லே – before night arrives (உறாஅ – அளபெடை), கழல் ஒலி நாவின் – with clappers that sound like warrior anklets, தெண் மணி கறங்க – clear bells ringing, நிழல் ஒளிப்பன்ன – like the bright light of the moon, நிமிர் பரிப் புரவி – fast horses with lifted heads, very rapid horses, வயக்கு உறு – being bright, கொடிஞ்சி பொலிய – chariot ornaments shining, chariot ornaments being beautiful, வள்பு ஆய்ந்து இயக்குமதி – you drive knowing well the bridle (மதி – முன்னிலையசை, an expletive of the second person), வாழியோ – may you live long, கையுடை வலவ – oh charioteer with able hands, பயப்பு உறு – becoming pale, படர் அட வருந்திய – is distressed with sorrow, நயப்பு இன் காதலி நகை முகம் பெறவே – to obtain the smiling face of my desired sweet lover (பெறவே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 345, குடவாயில் கீரத்தனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
“விசும்பு தளி பொழிந்து வெம்மை நீங்கித்,
தண் பதம்படுதல் செல்க” எனப் பன்மாண்
நாம் செல விழைந்தனமாக, ஓங்கு புகழ்க்
கான் அமர் செல்வி அருளலின், வெண்கால்
பல் படைப் புரவி எய்திய தொல்லிசை  5
நுணங்கு நுண் பனுவற் புலவன் பாடிய
இன மழை தவழும் ஏழில் குன்றத்துக்,
கருங்கால் வேங்கைச் செம்பூம் பிணையல்
ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும்
“சின்னாள்  கழிக”  என்று முன்னாள்  10
நம்மொடு பொய்த்தனர் ஆயினும், தம்மொடு
திருந்து வேல் இளையர் சுரும்பு உண மலைமார்
மா முறி ஈன்று மரக் கொம்பு அகைப்ப,
உறை கழிந்து உலந்த பின்றைப் பொறைய
சிறு வெள் அருவித் துவலையின் மலர்ந்த  15
கருங்கால் நுணவின் பெருஞ்சினை வான் பூச்
செம்மணற் சிறு நெறி கம்மென வரிப்பக்,
காடு கவின் பெறுக தோழி, ஆடு வளிக்கு
ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடுவீழ்
கல் கண் சீக்கும் அத்தம்,  20
அல்கு வெயில் நீழல் அசைந்தனர் செலவே.

Akanānūru 345, Kudavāyil Keerathanār, Pālai Thinai – What the heroine said to her friend
When the sky dropped rains, heat was
removed and it was the perfect season.
I asked with desire to go with him many
times.

Even though he lied to us earlier saying,
“Let a few days pass,”
……….when we wore flower strands on
……….our delicate, lifted loins, made
……….with the pretty blossoms of vēngai
……….trees with dark colored trunks,
……….growing on Ēzhil Mountain
………. surrounded by clouds, sung by a
……….poet who created fine verses and
……….got many white-legged horses as
……….gifts, due to the graces of goddess
……….Kotravai in the forest,
and went to the wasteland,
……….where an aerial root of an itri tree
………. sways in the wind and wipes the
………..boulder below and servants going
………..with him carry perfect spears and
……….wear bee-swarming flowers,
may the mountains become beautiful,
let new sprouts flourish on tree
branches, and let rain fall and leave the
land dry, let there be shade,
and let the white flowers from the large
branches of nunā trees, which blossom
from the sprays of small, white
waterfalls, decorate the small, red paths!

Notes:  பொருள்வயின் தலைவன் பிரிவான் என்பதை அறிந்த தலைவி உடன் செல்ல வேண்டினாள்.  ‘சில நாட்கள் செல்லட்டும்’ என்று அவளிடம் கூறியவன் அவள் அறியா வண்ணம் பிரிந்து போயினான்.  அதுகுறித்து தலைவி தோழிக்குக் கூறியது.  பனுவற் புலவர் (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – செய்யுள் பாடும் புலவன், பனுவற் புலவர் (பரிபாடல் 6-7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூற்கேள்வியினையுடைய புலவர்கள்.  ஒப்புமை:  இற்றி மர விழுது – குறுந்தொகை 106 – புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர் வரை இழி அருவியின் தோன்றும்,   நற்றிணை 162 – வேனில் இற்றித் தோயா நெடுவீழ் வழிநார் ஊசலின் கோடை தூக்குதொறும் துஞ்சு பிடி வருடும் அத்தம் அகநானூறு 345 – ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடுவீழ் கல் கண் சீக்கும் அத்தம்.  There are references to the goddess Kotravai being the mother of Murukan in Perumpānātruppadai lines 457-459 ‘கடுஞ்சூர் கொன்ற பைம்பூண் சேஎய் பயந்த மாமோட்டு துணங்கை அம் செல்விக்கு’ and Thirumurukātruppadai line 258 ‘வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ’.  There are references to Ēzhil Mountain in Akanānūru 152-13, 345-7, 349-9, Natrinai 391-7 and Kurunthokai 138-2.  கடவுள் பெயரிய கானமொடு – கொற்றவை, பதிற்றுப்பத்து 88.    வரலாறு:  ஏழில் மலை.

Meanings:   விசும்பு தளி பொழிந்து – the sky drops rains, வெம்மை நீங்கி – removing heat, தண் பதம்படுதல் – becoming cool, செல்க எனப் பன் மாண் நாம் செல விழைந்தனமாக – I requested to go with him many times (செல – இடைக்குறை), ஓங்கு புகழ்க் கான் அமர் செல்வி அருளலின் – because of the graces of greatly famous Kotravai who dwells in the forest, வெண்கால் பல் படைப் புரவி எய்திய – attained many white-legged horses with saddles (படை – குதிரைக்கலனை), தொல்லிசை – ancient fame, நுணங்கு நுண் பனுவல் புலவன் பாடிய –  poet who sang finely created verses, இன மழை தவழும் – lots of clouds crawl, lots of crowds spread, ஏழில் குன்றத்து – on Ēzhil mountain, கருங்கால் வேங்கை – kino trees with sturdy/big/dark-colored trunks, Pterocarpus marsupium, செம்பூம் பிணையல் – strand made with his beautiful flowers, ஐது – delicate, ஏந்து அல்குல் – lifted loins, tall lifted loins, யாம் அணிந்து உவக்கும் – when we wear and enjoy, சின்னாள் கழிக என்று முன்னாள் நம்மொடு பொய்த்தனர் ஆயினும் – even though he lied to us earlier saying ‘let a few days pass’, தம்மொடு – with him, திருந்து வேல் இளையர் – young servants who carry perfect spears, சுரும்பு உண – bees eating (உண உண்ண என்பதன் விகாரம்), மலைமார் – to wear, மா முறி ஈன்று – making huge/dark sprouts, மரக் கொம்பு – tree branches, அகைப்ப – flourishes, உறை கழிந்து உலந்த பின்றை – after the rains fell and dried (உலந்த – கழிந்த), பொறைய – in the mountains, சிறு வெள் அருவித் துவலையின் – in the water sprays of small white waterfalls, மலர்ந்த – blossomed, கருங்கால் நுணவின் – of nunā trees trees with sturdy/big/dark-colored trunks, Morinda Tinctoria or Morinda Citrifolia, பெருஞ்சினை வான் பூ – white flowers from large branches, செம் மணல் சிறு நெறி – small path with red soil, கம்மென வரிப்ப – decorated with fragrance, காடு கவின் பெறுக தோழி – may the forest become beautiful oh friend, ஆடு வளிக்கு ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ் – a long aerial root of a tall ficus tree that sway in the winds, கல் கண் சீக்கும் – wipes the boulders, அத்தம் – wasteland, அல்கு வெயில் – fitting sunlight,  நீழல் அசைந்தனர் – to rest in the shade (நீழல் – நிழல் என்பதன் நீட்டல் விகாரம்), செலவே – as he goes, ஏகாரம் அசைநிலை, an expletive

அகநானூறு 346, நக்கீரர், மருதத் திணை – தோழி தலைவனுக்கு வாயில் மறுத்தது
நகை நன்று அம்ம தானே, இறை மிசை
மாரிச் சுதையின் ஈர்ம்புறத்து அன்ன
கூரல் கொக்கின் குறும்பறைச் சேவல்
வெள்ளி வெண்தோடு அன்ன கயல் குறித்துக்,
கள் ஆர் உவகைக் கலி மகிழ் உழவர்  5
காஞ்சி அம் குறுந்தறி குத்தித், தீஞ்சுவை
மென் கழைக் கரும்பின் நன் பல மிடைந்து,
பெருஞ்செய் நெல்லின் பாசவல் பொத்தி,
வருந்திக் கொண்ட வல்வாய்க் கொடுஞ்சிறை
மீது அழி கடு நீர் நோக்கிப் பைப்பயப்  10
பார்வல் இருக்கும் பயங்கேழ் ஊர!
யாம் அது பேணின்றோ இலமே, நீ நின்
பண் அமை நல் யாழ்ப் பாணனொடு விசி பிணி
மண் ஆர் முழவின் கண் அதிர்ந்து இயம்ப,
மகிழ் துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி,  15
எம் மனை வாராயாகி முன்னாள்
நும் மனைச் சேர்ந்த ஞான்றை, அம்மனைக்
குறுந்தொடி மடந்தை உவந்தனள், நெடுந்தேர்
இழை அணி யானைப் பழையன் மாறன்
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண்,  20
வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த
கிள்ளி வளவன் நல் அமர் சாஅய்க்,
கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி
ஏதில் மன்னர் ஊர் கொளக்,
கோதை மார்பன் உவகையின் பெரிதே.  25

Akanānūru 346, Nakkeerar, Marutham Thinai – What the heroine’s friend said to the unfaithful hero, when she refused him entry
Oh man from the prosperous town,
where a male stork with short wing span, and
back wet like the plastered area above house
eaves, stalks very slowly silvery carp that are
white like flower petals,
in the water that flows rapidly through a strong
sluice gate of a curved dam created with effort
by farmers drunk happily with liquor, who stuck
short pieces of kānji tree wood in the ground
and blocked them with many sweet, delicate
sugarcanes, sealing off a large paddy field which
lies below!

Not coming to our house, on the day that you went
with your friends and your bard with a well-tuned,
fine lute to the splendid house where drums with
tightly tied skins and clay tops roared loudly,
you made the young woman with bangles happy.
Her joy was more than that of Cheran Kōthai
Mārpan who was overjoyed when Chozhan Killi Valavan
invaded with a flood-like army and seized Madurai city
with streets with mansions, along with rapidly running
horses and elephants, and ruined Pandiyan Pazhaiyan
Māran owning tall chariots and elephants with fine
ornaments, in good battles.

This is a great joke to us!  We do not care!

Notes:  தோழி தலைவனுக்கு வாயில் மறுத்தது.  வரலாறு:  பழையன் மாறன் (பாண்டியன்), கூடல், கிள்ளி வளவன் (சோழன்), கோதை மார்பன் (சேரன்).

Meanings:   நகை நன்று – this is a very funny thing, அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், a particle which means ‘listen’, தானே – தான், ஏ அசைநிலைகள், expletives, இறை மிசை மாரிச் சுதையின் ஈர்ம்புறத்து அன்ன – backs wet like the plastered area above the eaves (சுதையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, ஈர்ம்புறத்து  – ஈர்ம்புறம், அத்து சாரியை), கூரல் கொக்கின் – a feathered stork’s, குறும்பறைச் சேவல் – male with short wings, male with short wingspan, வெள்ளி வெண்தோடு அன்ன – like silvery white petals, கயல் குறித்து – focusing on carp fish, Cyprinus fimbriatus, கள் ஆர் உவகை – with bliss after drinking liquor, கலி மகிழ் உழவர் – happily drunk farmers, காஞ்சி அம் குறுந்தறி குத்தி – they stuck into the ground short wood pieces of the portia trees, பூவரச மரம், Thespesia populnea (அம் – சாரியை), தீஞ்சுவை – sweet tasting, மென் கழைக் கரும்பின் – of sugarcane with delicate pieces, நன் பல மிடைந்து – blocked with many, பெருஞ்செய் நெல்லின் பாசவல் பொத்தி – plugged the pits/depressions of the heavy yielding huge fields with paddy (பசு அவல், பசிய அவல்), வருந்திக் கொண்ட – built with great effort, வல்வாய்க் கொடுஞ்சிறை – curved dam with strong sluice gate, மீது அழி கடு நீர் நோக்கிப் பைப்பயப் பார்வல் இருக்கும் – stalking and looking very slowly at the fast flowing water on it (பைப்பய – பையப்பைய பைப்பய என மருவியது), பயம் கேழ் ஊர – oh man from a very beneficial town, oh man from a prosperous town (ஊர – அண்மை விளி), யாம் அது பேணின்றோ இலமே – we do not care about it (பேணின்றோ – ஓகாரம் அசைநிலை, an expletive, இலமே – ஏகாரம் அசைநிலை, an expletive), நீ – you, நின் – your, பண் அமை – well tuned, நல் யாழ்ப் பாணனொடு – with the bard with a fine lute, விசி பிணி – tied tightly, மண் ஆர் – with clay, முழவின் கண் அதிர்ந்து இயம்ப – the tops of drums roar and tremble, மகிழ் துணைச் சுற்றமொடு – with happy friends, with happy relatives, மட்டு மாந்தி – drinking liquor, எம் மனை வாராய் ஆகி – not coming to our house, முன்னாள் – the other day, நும் மனைச் சேர்ந்த ஞான்றை – when you went to her place considering it as your place, அம் மனை – beautiful house, குறுந்தொடி மடந்தை – the young woman with tiny bangles, உவந்தனள் – she was happy, நெடுந்தேர் இழை அணி யானைப் பழையன் மாறன் – Pazhaiyan Māran with tall chariots and elephants with beautifully made ornaments, மாட மலி மறுகின் கூடல் – Koodal/Madurai with mansion-filled streets, ஆங்கண் – there, வெள்ளத் தானையொடு – with a flood-like army, வேறு புலத்து இறுத்த கிள்ளி வளவன் – Chozha king Killi Valavan who attacked and stayed in another land, நல் அமர் சாஅய் – ruined in good battles (சாஅய் – அளபெடை), கடும் பரிப் புரவியொடு – with rapidly trotting horses, களிறு பல வவ்வி – seized many elephants, ஏதில் மன்னர் – enemy kings, ஊர் கொள – captured the city, கோதை மார்பன் உவகையின் பெரிதே – much more happier than that of the Chera king Kōthai Mārpan (பெரிதே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 347, மாமூலனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
தோளும் தொல் கவின் தொலைய, நாளும்
நலம் கவர் பசலை நல்கு இன்று நலியச்,
சால் பெருந்தானைச் சேரலாதன்
மால் கடல் ஓட்டிக் கடம்பு அறுத்து இயற்றிய
பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன,  5
கவ்வை தூற்றும் வெவ்வாய்ச் சேரி
அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழியச்,
சென்றனர் ஆயினும் செய் வினை அவர்க்கே
வாய்க்க தில், வாழி தோழி! வாயாது
மழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து,  10
ஒண் கேழ் வயப் புலி பாய்ந்தென குவவு அடி
வெண்கோட்டு யானை முழக்கிசை வெரீஇக்,
கன்று ஒழித்து ஓடிய புன்தலை மடப் பிடி
கை தலை வைத்த மையல் விதுப்பொடு,
கெடு மகப் பெண்டிரின் தேரும்  15
நெடுமர மருங்கின் மலை இறந்தோரே.

Akanānūru 347, Māmoolanār, Pālai Thinai – What the heroine said to her friend
May you live long, my friend!
Even though, he caused the original
beauty of my arms to be lost and gave
me pallor that has ruined my beauty
every day without pity, and left,
……….giving me gossip, thrown at me in
……….this ancient, loud town with harsh,
………. slandering people in our
……….settlement, which is greater than
……….the roars of the well-tuned drum
……….that king Cheralāthan
………. with a very huge army made after
……….cutting down the sacred kadampam
……….tree of his enemy, riding into the
………. ocean,
may he achieve what he set out to do,
going through mountains with tall trees,
where the rains have not fallen on the
mountains with dried bamboo, a bull
elephant with rounded feet and white
tusks is attacked by a bright colored tiger,
and his naive female with sparse hair on her
head, screams and runs away in fear leaving
her calf, and later searches for it like women
who search for their children in panic and
confusion, placing their hands on their heads!

Notes:  தலைவன் பிரிவின்கண் தோழிக்குத் தலைவி கூறியது.   ஒப்புமை:  பதிற்றுப்பத்து 17 (பாடப்பட்டோன் – இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்) – பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங்கடம்பின் கடி உடை முழு முதல் துமிய ஏஎய், வென்று எறி முழங்கு பணை செய்த வெல் போர், நார் அரி நறவின், ஆர மார்பின், போர் அடு தானைச் சேரலாத, பதிற்றுப்பத்து 12 (பாடப்பட்டோன் – இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்) – அரசு தலை பனிப்பக், கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின வேந்தே, பதிற்றுப்பத்து 17 (பாடப்பட்டோன் – இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்) –  பகைவர் பணிந்து திறை பகரக் கொள்ளுநை ஆதலின், துளங்கு பிசிர் உடைய மாக் கடல் நீக்கிக் கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன் பணை ஆடுநர் பெயர்ந்து வந்து அரும் பலி தூஉய்க், கடிப்புக் கண் உறூஉம் தொடித் தோள் இயவர், இரு முந்நீர்த் துருத்தியுள் முரணியோர்த் தலைச்சென்று, பதிற்றுப்பத்து 20 (பாடப்பட்டோன் – இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்) கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின முன்பின் நெடுஞ்சேரலாதன்.  வரலாறு:  சேரலாதன்.

Meanings:   தோளும் தொல் கவின் தொலைய – arms/shoulders have lost their prior beauty, நாளும் – daily, நலம் கவர் பசலை – pallor that seizes beauty, நல்கு இன்று – without grace, நலிய – causing sorrow, சால் பெருந்தானைச் சேரலாதன் – king Cheralāthan with a very huge army, மால் கடல் ஓட்டி – rode into the huge ocean, கடம்பு அறுத்து இயற்றிய – chopped the sacred kadampam trees and made, Anthocephalus cadamba, Kadampa oak, பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன – like the roaring eyes of drums that are well tuned, கவ்வை தூற்றும் – sprays slander, வெவ்வாய்ச் சேரி அம்பல் மூதூர் – people in the street/settlement with harsh mouths in this old town with gossips (சேரி ஆகுபெயர் அங்கு வாழும் மக்களுக்கு), அலர் நமக்கு ஒழியச் சென்றனர் ஆயினும் – even though he gave gossip to me and left (நமக்கு – தன்மைப் பன்மை, first person plural), செய் வினை அவர்க்கே வாய்க்க – may what the work that he intended to do be achieved, தில் – விழைவின்கண் வந்தது, a particle which implies desire, வாழி தோழி – may you live long my friend, வாயாது மழை கரந்து ஒளித்த – rains hid not falling, clouds hid not coming down as rain, கழை திரங்கு அடுக்கத்து – in the mountain ranges with dried bamboo, ஒண் கேழ் வயப் புலி பாய்ந்தென – since a strong tiger with bright colors leapt and attacked, குவவு அடி – rounded/thick feet, வெண்கோட்டு யானை – elephant with white tusks, முழக்கு இசை வெரீஇ – afraid of its screams (வெரீஇ – அளபெடை, வெருவி என்ற வினையெச்சம் திரிந்து அளபெடுத்தது), கன்று ஒழித்து ஓடிய – abandoned her calf and ran away, புன்தலை – parched head, head with sparse hair, மடப் பிடி – naive female elephant, கை தலை வைத்த – placing their hands on their heads, மையல் விதுப்பொடு – with confusion and distress, trembling with confusion, கெடு மகப் பெண்டிரின் தேரும் – search like women who have lost their children (பெண்டிரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), நெடு மர மருங்கின் மலை இறந்தோரே – the man who went to the mountains with tall trees (இறந்தோரே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 348, மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
என் ஆவது கொல் தானே, முன்றில்
தேன் தேர் சுவைய திரள் அரை மாஅத்துக்,
கோடைக்கு ஊழ்த்த கமழ் நறுந்தீங்கனிப்,
பயிர்ப்புறுப் பலவின் எதிர்ச் சுளை அளைஇ,
இறாலொடு கலந்த வண்டு மூசு அரியல்  5
நெடுங்கண் ஆடு அமைப் பழுநிக், கடுந்திறல்
பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டுக்
கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கிக், குறவர்
முறித் தழை மகளிர் மடுப்ப மாந்தி,
அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்துழி,  10
யானை வவ்வின தினை என நோனாது,
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇச்,
சிலை ஆய்ந்து திரிதரும் நாடன்
நிலையா நல்மொழி தேறிய நெஞ்சே?

Akanānūru 348, Mathurai Ilam Pālāsiriyan Chēnthan Koothanār, Kurinji Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
What will happen to my heart that knows
clearly the unstable words of the man from
the country,

where
honey-sweet, ripe summer mangoes, growing
in the front yards of houses on trees with thick
trunks, are mixed with fragrant, sweet, similar
segments of sticky jackfruits and honey,
and aged in long sections of swaying bamboo
to become bee-swarming liquor, as potent as
harsh snakes, and women wearing tender leaf
clothing offer it to the gods and then feed their
men who forget to protect their large millet fields
in the mountain, where elephants enter and steal,
and angry young and old along with their relatives
roam with their chosen bows, looking for elephants?

Notes:   தோழி சொல் எடுப்ப, அதைத் தொடர்ந்து, சிலவற்றைத் தலைவி கூறியது.  ஒப்புமை:  பாம்பின் சினம் அன்ன கள்: பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி (7), சிறுபாணாற்றுப்படை 237 – பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி.  குடித்த பின் காவலை மறந்து:  மகளிர் மடுப்ப மாந்தி அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்துழி (9-10), குறிஞ்சிப்பாட்டு – 155- தேம்பிழி தேறல் மாந்தி மகிழ் சிறந்து சேமம் மடிந்த பொழுதின்.  மூங்கிலில் விளைந்த கள்:  அகநானூறு 348 – ஆடு அமைப் பழுநிக் கடுந்திறல் பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி, அகநானூறு 368 – அம் பணை விளைந்த தேக் கள் தேறல், நற்றிணை 276 – வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு, பதிற்றுப்பத்து 81 – தூம்பு அகம் பழுனிய தீம் பிழி, திருமுருகாற்றுப்படை 195 – நீடு அமை விளைந்த தேக் கள் தேறல், மலைபடுகடாம் 171 – வேய்ப் பெயல் விளையுள் தேக்கட் தேறல், மலைபடுகடாம் 522 – திருந்து அமை விளைந்த தேக் கள் தேறல்.  எதிர்ச்சுளை (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சமமான சுளைகள், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – ஒளிபொருந்திய சுளைகள், சுவைமிக்க சுளைகள்.  இறாலொடு (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தேன் அடையுடன், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – தேனுடன்.

Meanings:   என் ஆவது கொல் – what will happen now (கொல் -அசைநிலை, an expletive), தானே முன்றில் – in the front yards of houses (தான், ஏ அசைநிலைகள், expletives, முன்றில் – இல்முன்), தேன் தேர் சுவைய – with taste like honey (தேனோ என ஆராயும் சுவை), திரள் அரை மாஅத்து – of the mango trees with thick trunks (அத்து சாரியை), கோடைக்கு ஊழ்த்த – matured in summer, கமழ் நறும் தீங்கனி – fragrant sweet fruits, பயிர்ப்புறு – with stickiness, பலவின் – of jackfruit trees, எதிர்ச் சுளை அளைஇ – mixed segments that are equal, mixed bright segments, mixed tasty segments (அளைஇ – கலந்து, அளபெடை), இறாலொடு கலந்த – mixed with honey, mixed with honeycomb cells, வண்டு மூசு அரியல் – bee swarming liquor, நெடுங்கண் – long nodes, ஆடு அமை பழுநி – aged in bamboo that sways, கடுந்திறல் பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி – liquor which is strong like a snake’s anger (பாப்பு – வேற்றுமைப் புணர்ச்சிக்கண் மென்தொடர் வன்தொடர் ஆயிற்று), வான் கோட்டுக் கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி – offer it to the gods in the tall mountains with sky touching peaks, குறவர் – mountain dwellers, முறித் தழை மகளிர் மடுப்ப – given to drink by women wearing tender leaves, மாந்தி – drank it, அடுக்கல் – mountain range, ஏனல் இரும் புனம் – large millet field, மறந்துழி – when they forgot, யானை வவ்வின தினை என – because elephants seized and ate their millet, நோனாது – not tolerating, இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ – the young and the old gathered with their relatives (குழீஇ – அளபெடை), சிலை ஆய்ந்து திரிதரும் – they roam around searching with their analyzed and chosen bows, நாடன் – the man from such country, நிலையா – not lasting, நல் மொழி – good words, தேறிய நெஞ்சே – to my heart that knows clearly (நெஞ்சே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 349, மாமூலனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அரம் போழ் அவ் வளை செறிந்த முன் கை
வரைந்து தாம் பிணித்த தொல் கவின் தொலைய,
எவன் ஆய்ந்தனர் கொல் தோழி, ஞெமன்
தெரிகோல் அன்ன செயிர் தீர் செம்மொழி
உலைந்த ஒக்கல் பாடுநர் செலினே,  5
உரன் மலி உள்ளமொடு முனை பாழாக
அருங்குறும்பு எறிந்த பெருங்கல வெறுக்கை
சூழாது சுரக்கும் நன்னன் நல் நாட்டு,
ஏழில் குன்றத்துக் கவாஅன், கேழ் கொளத்
திருந்து அரை நிவந்த கருங்கால் வேங்கை  10
எரி மருள் கவளம் மாந்திக், களிறு தன்
வரி நுதல் வைத்த வலி தேம்பு தடக்கை
கல் ஊர் பாம்பின் தோன்றும்
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே?

Akanānūru 349, Māmoolanār, Pālai Thinai – What the heroine said to her friend
What did he think about,
the one who married me, holding
my forearms filled with bangles
made from cutting conch shells
with saws, when he went to the
wasteland in a country where the
language is different, on the hills
adjoining Ēzhil Mountain in the
fine country of Nannan who gives
without analyzing, to singers with
faultless words and their poor
relatives, precious wealth that he
got from the well-guarded forts he
seized with a very strong mind,
ruining their lands, where a bull
elephant eats the flame-like flowers
of vēngai trees with perfect, tall,
dark colored trunks,
nd places his thick, weakened trunk
on his forehead with lines, appearing
like a snake crawling on a boulder?

Notes:   பிரிவிடை வருந்திய தலைவியைத் தோழி ஆற்றிவிக்க, அவளைப் புலந்து தலைவி கூறியது. வரலாறு:  நன்னன், ஏழில் மலை.  There are references to Ēzhil Mountain in Akanānūru 152-13, 345-7, 349-9, Natrinai 391-7 and Kurunthokai 138-2.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).  குறிஞ்சிப்பாட்டு 231 – நேர் இறை முன் கை பற்றி நுமர் தர.

Meanings:   அரம் போழ் – split with a saw, அவ் வளை – beautiful bangles, செறிந்த – filled, close, tight fitting, முன் கை – forearms, wrists, வரைந்து தாம் பிணித்த – he held through marriage, தொல் கவின் தொலைய – for my prior beauty to be lost, எவன் ஆய்ந்தனர் கொல் தோழி – what did he consider oh friend – ஞெமன் – weighing scale, hand held balance with 2 trays, தெரிகோல் அன்ன – like a pointer in the middle, செயிர் தீர் – faultless, செம்மொழி – perfect words, உலைந்த ஒக்கல் பாடுநர் செலினே – when singers whose relatives are struggling in poverty go (செலினே – ஏகாரம் அசைநிலை, an expletive), உரன் மலி உள்ளமொடு – with a very strong mind, முனை பாழாக – ruining lands/battlefields, அருங்குறும்பு எறிந்த – ruined forts with rare protection, பெருங்கல – precious things, precious jewels, வெறுக்கை – wealth, சூழாது சுரக்கும் நன்னன் – Nannan who gives without analyzing, நல் நாட்டு – in the fine country, ஏழில் குன்றத்துக் கவாஅன் – side mountains next to Ēzhil mountain (கவாஅன் – அளபெடை), கேழ் கொள – with color, திருந்து அரை – perfect trunks, நிவந்த – tall, கருங்கால் வேங்கை – vēngai trees with sturdy/big/dark colored trunks, Pterocarpus marsupium, எரி மருள் – flame like (மருள் – உவம உருபு, a comparison word), கவளம் மாந்தி – eat as food, களிறு – male elephant, தன் வரி நுதல் – on his forehead with lines, on his forehead with spots, வைத்த – placed, வலி தேம்பு – strength reduced, தடக்கை – large trunk, கல் ஊர் பாம்பின் தோன்றும் – appears like snake crawling on rocks (பாம்பின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), சொல் பெயர் – language has changed, language is different, தேஎத்த – in a country (அளபெடை), சுரன் இறந்தோரே – the man who went to the wasteland (சுரன் – சுரம் என்பதன் போலி, இறந்தோரே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 350, சேந்தங்கண்ணனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கழியே சிறுகுரல் நெய்தலொடு காவி கூம்ப,
எறி திரை ஓதம் தரல் ஆனாதே,
துறையே மருங்கின் போகிய மாக்கவை மருப்பின்
இருஞ்சேற்று ஈர் அளை அலவன் நீப்ப,
வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே,  5
கொடு நுகம் நுழைந்த கணைக் கால் அத்திரி
வடி மணி நெடுந்தேர் பூண ஏவாது,
ஏந்து எழில் மழைக் கண் இவள் குறையாகச்
சேந்தனை சென்மோ பெருநீர்ச் சேர்ப்ப!
இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி,  10
வலம்புரி மூழ்கிய வான் திமில் பரதவர்
ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனக்,
கலி கெழு கொற்கை எதிர்கொள, இழிதரும்
குவவு மணல் நெடுங்கோட்டு ஆங்கண்
உவக்காண் தோன்றும் எம் சிறு நல் ஊரே.  15

Akanānūru 350, Chēnthan Kannanār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
In the backwaters, along with
small clusters of blue waterlilies,
the red waterlilies have closed.
On the shores, the waves in the
ocean crash without a break.
Nearby, crabs with large, forked
antennae come out of their dark,
wet mud holes.  It is very quiet,
without any people movement.

Oh lord of the huge ocean shores!
Do not order your charioteer to tie
the thick-legged mules to the curved
yoke of your tall chariot adorned
with lovely bells.
Stay here for her, my friend with
lifted, pretty, moist eyes.

Look there!  There appears our fine
small village, with tall sand dunes
where fishermen with large boats
dive into the bright, large ocean
for right-whorled conch, avoiding
shark attacks, who are welcomed to
the sounds of blowing conch shells
and uproars in splendid Korkai town.

Notes:  பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைவனுக்குத் தோழி உரைத்தது.  வான் திமில் (11) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – சிறந்த படகு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெரிய படகு.  வரலாறு:  கொற்கை.

Meanings:   கழியே – in the backwaters, சிறு குரல் நெய்தலொடு – along with blue waterlilies that are in small clusters, காவி கூம்ப – red waterlilies close, எறி திரை ஓதம் தரல் ஆனாதே துறையே – the ocean shores are with waves that crash without a break (ஆனாதே, துறையே – ஏகாரம் அசைநிலைகள், expletives), மருங்கின் போகிய – went nearby, மாக் கவை மருப்பின் – with huge forked antennae, இருஞ்சேற்று – of dark mud, ஈர் அளை அலவன் நீப்ப – crabs leaves their wet holes, வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே – since there are no people on the shores it is quiet (ஆன்றன்றே – ஏகாரம் அசைநிலை, an expletive), கொடு நுகம் – curved yoke, நுழைந்த – entered to be tied, கணைக் கால் அத்திரி – thick-legged mules, வடி மணி – beautiful bells, cast bells, ringing bells, perfect bells, நெடுந்தேர் பூண ஏவாது – without ordering to tie to the tall chariot, ஏந்து எழில் மழைக் கண் – lifted beautiful moist eyes, very pretty moist eyes, இவள் குறையாகச் சேந்தனை சென்மோ – please stay here on her behalf and go (மோ – முன்னிலையசை, an expletive of the second person), பெருநீர்ச் சேர்ப்ப – oh lord of the great ocean (சேர்ப்ப – அண்மை விளி), இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி – avoiding attacking sharks in the bright large ocean (எறி சுறா – வினைத்தொகை), வலம்புரி மூழ்கிய – diving for right-whorled conch shells, வான் திமில் பரதவர் – fishermen with huge boats, fishermen with splendid boats, ஒலிதலைப் பணிலம் ஆர்ப்ப – with the sounds of conch shells, கல்லென – loudly (ஒலிக்குறிப்பு மொழி), கலி கெழு கொற்கை எதிர்கொள – those in Korkai town welcome them with uproar, இழிதரும் – getting down, coming down, குவவு மணல் நெடுங்கோட்டு – with heaped sand looking like tall peaks, with sand dunes looking like tall peaks, ஆங்கண் – there, உவக்காண் – look there, தோன்றும் – it appears, எம் சிறு நல் ஊரே – our small fine town (ஊரே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 351, பொருந்தில் இளங்கீரனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
வேற்று நாட்டு உறையுள் விருப்புறப் பேணி,
பெறல் அருங்கேளிர் பின் வந்து விடுப்ப,
பொருள் அகப்படுத்த புகல் மலி நெஞ்சமொடு
குறை வினை முடித்த நிறைவு இன் இயக்கம்,
அறிவுறூஉம் கொல்லோ தானே, கதிர் தெற,  5
கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை
அழல் அகைந்தன்ன அம் குழைப் பொதும்பில்,
புழல் வீ இருப்பைப் புன் காட்டு அத்தம்,
மறுதரல் உள்ளமொடு குறுகத் தோற்றிய
செய்குறி ஆழி வைகல் தோறு எண்ணி,  10
எழுது சுவர் நனைந்த அழுது வார் மழைக் கண்
விலங்கு வீழ் அரிப் பனி பொலங்குழைத் தெறிப்ப,
திருந்திழை முன் கை அணல் அசைத்து ஊன்றி
இருந்து அணை மீது பொருந்துழிக் கிடக்கை
வருந்து தோள் பூசல் களையும் மருந்தென,  15
உள்ளுதொறு படூஉம் பல்லி
புள்ளுத் தொழுது உறைவி செவி முதலானே?

Akanānūru 351, Porunthil Ilankeeranār, Pālai Thinai – What the hero said to his heart
Desiring to live in another
country, with a heart that
desired to earn wealth,
you were given a send-off by
precious relatives.  You now
have the satisfaction of having
earned what you desired.

We are returning home
sweetly.

With a mind to get back, we
are passing the wasteland with
parched forests, where
attacked by winds, iruppai
trees, whose flowers are hollow,
drop leaves from low branches,
their pretty sprouts resembling
burning flames.

The circles that my wife has
drawn on the wall for counting
days and thinking about me
every day are wet with tears that
drip from her eyes, as they
splatter on her gold earrings.
She, wearing perfect jewels,
is on a bed, resting on a pillow,
her forearms placed on her cheeks.

Will the calls of the lizards be
omens to her who listens to them
intently, and medicine to get rid
of the sorrowful affliction that
causes her arms to waste away?

Notes:  தலைவன் தலைவியைப் பிரிந்து போய்த் தான் வேண்டுமளவு பொருளீட்டிக் கொண்டு இனிதே மீண்டு வருபவன் இடை வழியில் தலைவியை நினைந்து அவட்கு இரங்கித் தன நெஞ்சிற்குச் சொல்லியது என்றவாறு.  There are references to lizard omens in Akanānūru 9, 88, 151, 289, 351, 387, Kurunthokai 16, 140, Natrinai 98, 169, 246, 333 and Kalithokai 11.  Natrinai 161 has a reference to bird omen.  Natrinai 40 and Mullaippāttu 11 have references to women waiting for good omen.

Meanings:   வேற்று நாட்டு உறையுள் விருப்புற பேணி – desiring to live in another country, பெறல் அருங்கேளிர் பின் வந்து விடுப்ப – precious relatives and friends coming and giving a send off, பொருள் அகப்படுத்த புகல் மலி நெஞ்சமொடு – with a heart that desired greatly and earned wealth, குறை வினை முடித்த நிறைவு இன் இயக்கம் – you have the satisfaction that you have finished your work and are returning home sweetly (இயக்கம் – செலவு), அறிவுறூஉம் கொல்லோ – will they inform (அறிவுறூஉம் – அளபெடை, கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt, ஓ – அசைநிலை, an expletive), தானே – தான், ஏ – அசைநிலைகள், கதிர் தெற – in the sun’s heat, கழல் இலை உகுத்த – dropped loose leaves, கால் பொரு – wind hitting, தாழ் சினை – low branches, அழல் அகைந்தன்ன – like burning flame, அம் குழை – beautiful sprouts, பொதும்பில் – in a place dense with trees, புழல் வீ இருப்பை – iruppai with hollow center, Indian Butter Tree, South Indian Mahua, இலுப்பை, வஞ்சி, புன் காட்டு – dry forest, அத்தம் – wasteland, மறுதரல் உள்ளமொடு குறுக – coming near with a mind to return, தோற்றிய – created, செய்குறி ஆழி – circle for a purpose, வைகல் தோறு எண்ணி – thinking every day, எழுது சுவர் நனைந்த – the wall with the drawing got wet, அழுது – crying, வார் மழைக் கண் – wet eyes that drip tears, விலங்கு – separating (from the eyes), வீழ் அரிப் பனி பொலங்குழைத் தெறிப்ப – falling drops of tears splattering on the gold earrings, திருந்திழை முன் கை அணல் அசைத்து ஊன்றி இருந்து – the woman with perfect jewels placed her forearms on her cheeks (திருந்திழை – அன்மொழித்தொகை), அணை மீது பொருந்துழி – resting on her pillow/mattress, கிடக்கை – lying on a bed, வருந்து தோள் பூசல் களையும் – getting rid of her love affliction that causes her arms to become slim, மருந்தென – it is medicine, உள்ளுதொறு படூஉம் பல்லி – lizard that clucks whenever she thinks (படூஉம் – அளபெடை), புள்ளு – omens (நிமித்தம்), தொழுது உறைவி – wife who worships, wife who adores, செவி முதலானே – in her ears (முதலானே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 352, அஞ்சியத்தை மகள் நாகையார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
“முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும்பழம்
பல் கிளைத் தலைவன் கல்லாக் கடுவன்,
பாடு இமிழ் அருவிப் பாறை மருங்கின்
ஆடு மயில் முன்னது ஆகக் கோடியர்
விழவு கொள் மூதூர் விறலி பின்றை  5
முழவன் போல அகப்படத் தழீஇ,
இன் துணைப் பயிரும் குன்ற நாடன்
குடி நன்கு உடையன், கூடுநர்ப் பிரியலன்,
கெடு நா மொழியலன், அன்பினன்”, என நீ
வல்ல கூறி வாய்வதின் புணர்த்தோய்,  10
நல்லை காண் இனிக் காதலம் தோழி,
கடும் பரி புரவி நெடுந்தேர் அஞ்சி
நல்லிசை நிறுத்த நயவரு பனுவல்,
தொல்லிசை நிறீஇய உரை சால் பாண்மகன்
எண்ணு முறை நிறுத்த பண்ணின் உள்ளும்,  15
புதுவது புனைந்த திறத்தினும்
வதுவை நாளினும் இனியனால் எமக்கே.

Akanānūru 352, Anjiyathai Makal Nākaiyār, Kurinji Thinai – What the heroine said to her friend
Look, my beloved friend!  You, who
united us, said to me firmly that he comes
from a good family, will not separate after
union, will not utter harsh words, and that
he is a kind man.  You have helped me!

The man from the mountains,
……….where a male monkey, leader
……….to his troop with many relatives,
……….hugs tightly a jackfruit as large
……….as a pot, from a bent old tree
……….branches, stands on a boulder
……….near a loud waterfall behind
……….a dancing peacock, and calls his
……….sweet mate, both appearing like
……….a drummer holding a drum and
……….standing behind a female dancer
……….in an ancient town that celebrates
……….festivals with artists,
is sweeter to me now than on our wedding
day, even sweeter than the way in which
new tunes were created, better than those
established in sweet music books,
by a famous bard who wrote lovely, desirable
verses to establish the fame of Athiyamān
Anji owning tall chariots and fast horses.

Notes:  (1) வரைவு எய்திய பின்றை மண மனைக்கண் சென்ற தோழிக்குத் தலைவி சொல்லியது.  (2) தலைவன் வரைய வருவதைக் கண்ட தோழி அச்செய்தியை தலைவியிடம் கூற, தலைவி அவளைப் பாராட்டிச் சொல்லியது.  விறலி – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – விறல்பட ஆடுபவள்.  உள்ளுறை உவமம் – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – பல்கிளைத் தலைவனான கடுவன் பலாப் பழத்தைத் தழுவித் துணையை அழைக்கும் குன்ற நாடன் என்றது, தலைவன் பல சுற்றத்தையும் பேணித், தலைவிபால் மிக்க அன்புடையவனாக இருப்பன் என்பது.  வாய்வதின் (10) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வாய்க்கும் வழியில் முயன்று, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – பொருத்தமுற.  வரலாறு:  அஞ்சி (அதியமான் நெடுமான் அஞ்சி).  எண்ணு முறை (10) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – எண்ணுகின்ற முறைப்படி, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – அலகு முறைப்படி அமைந்த (அலகு – சுருதி). வரலாறு:  அஞ்சி (அதியமான் நெடுமான் அஞ்சி).

Meanings:   முடவு முதிர் பலவின் – of a bent old jackfruit tree, குடம் மருள் பெரும்பழம் – pot-like huge fruit (மருள் – உவம உருபு, a comparison word), பல் கிளை – many relatives, தலைவன் – leader (of the troop), கல்லாக் கடுவன் – untrained/crude male monkey, பாடு இமிழ் அருவி – very loud waterfalls, பாறை மருங்கின் – on the rocks/near the rocks, ஆடு மயில் முன்னது ஆக – with a dancing peacock being in the front, கோடியர் – artists who sing and dance, விழவு கொள் மூதூர் – old town with festivals, விறலி பின்றை முழவன் போல – like a drummer behind a female dancer/musician, அகப்படத் தழீஇ – holding tight (தழீஇ – அளபெடை), இன் துணைப் பயிரும் – calls his sweet mate, குன்ற நாடன் – the man from such mountains, குடி நன்கு உடையன் – he comes from a good clan, he comes from a good family, கூடுநர்ப் பிரியலன் – he will not separate from the one he united with, கெடு நா மொழியலன் – he will not utter harsh words, அன்பினன் என – that he is a kind person, நீ வல்ல கூறி வாய்வதின் புணர்த்தோய் – you said truthful things firmly and united us, நல்லை – you have been good, you have been helpful, காண் இனி – look at this now, காதல் அம் தோழி – my beloved friend, my beautiful loving friend (அம்அசைநிலை, an expletive), கடும் பரி புரவி நெடுந்தேர் அஞ்சி – Athiyamān Nedumān Anji with tall chariots and fast riding horses, நல் இசை நிறுத்த – established fine music, நயவரு – desirable, பனுவல் – books, தொல் இசை – ancient fame, நிறீஇய – established (அளபெடை), உரை சால் – famous, பாண்மகன் – bard, எண்ணு முறை நிறுத்த – established according to the proper methods of music, , established according to proper tuning, பண்ணின் உள்ளும் – more than the tunes, more than the melodies (பண்ணின் – இன் உறழ்ச்சிப் பொருளில் வந்தது), புதுவது – new tunes, புனைந்த திறத்தினும் – more than the manner in which he created music, வதுவை நாளினும் இனியனால் எமக்கே – he is sweeter than on the wedding day, he is sweeter than the day of our union (இனியனால் – இனிய + ஆல், ஆல் அசைநிலை, an expletive, எமக்கே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 353, மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
ஆள் வினைப் பிரிதலும் உண்டோ? பிரியினும்
கேள் இனி! வாழிய நெஞ்சே! நாளும்
கனவுக் கழிந்தனையவாகி நனவின்
நாளது செலவும் மூப்பினது வரவும்,
அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கையும்  5
இந்நிலை அறியாய் ஆயினும், செந்நிலை
அமை ஆடு அம் கழை தீண்டிக், கல்லென
ஞெமை இலை உதிர்த்த எரிவாய்க் கோடை
நெடுவெண்களரி நீறு முகந்து சுழலக்
கடுவெயில் திருகிய வேனில் வெங்காட்டு  10
உயங்கு நடை மடப் பிணை தழீஇய வயங்கு பொறி
அறு கோட்டு எழில் கலை அறு கயம் நோக்கித்,
தெண் நீர் வேட்ட சிறுமையின் தழை மறந்து,
உண் நீர் இன்மையின் ஒல்குவன தளர,
மரம் நிழல் அற்ற இயவின் சுரன் இறந்து,  15
உள்ளுவை அல்லையோ மற்றே, உள்ளிய
விருந்து ஒழிவு அறியாப் பெருந்தண் பந்தர்,
வருந்தி வருநர் ஓம்பித் தண்ணெனத்
தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல்
வீழ் இதழ் அலரி மெல்லகம் சேர்த்தி  20
மகிழ் அணி முறுவல் மாண்ட சேக்கை,
நம்மொடு நன் மொழி நவிலும்
பொம்மல் ஓதிப் புனை இழை குணனே?

Akanānūru 353, Mathurai Alakkar Gnāzhalār Makanār Mallanār, Pālai Thinai – What the hero said to his heart
Will there be separation since I desire
to earn wealth?  If so, listen now!
May you live long, my heart!

You dream daily of earning wealth,
days pass in reality, you are growing
old, but you don’t understand the
nature and greatness of rare love.

While passing through the wasteland,
………where
………hot western winds touch the
………beautiful swaying bamboo, and drop
………leaves of gnemai trees with sounds,
………lift and swirl dust in the vast, white
………saline land, and in the forest where
………the sun is harsh in summer, embracing
………its female with sad walk, a handsome
………stag with bright spots and broken antlers,
………looks at a dry pond with thirst, is stressed
………and weak without water, forgets to eat
………leaves in the path where trees are dry
………and there is no shade,
will you think about the nature of her with
fine jewels, bountiful hair, on an esteemed
bed, happy  with pretty smiles, who talks
sweetly to us, hospitable to those who come
to endless celebrations in the cool, large
pavilion, her beautiful hair decorated with
desired petals of thāzhai flowers, their pollen
dust dropping?

Notes:  முன்னொரு காலத்தில் பொருள்வயிற் பிரிந்த தலைவன் பொருள் முற்றி வந்திருந்த காலத்தில், மீண்டும் பொருள் கடாவின நெஞ்சிற்குச் சொல்லியது.  அறு கோட்டு (12) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அறுத்தாற்போன்ற  கொம்பினையுடைய, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – அறல்பட்ட கொம்பினையுடைய.

Meanings:   ஆள் வினைப் பிரிதலும் உண்டோ – will there be separation because I want to earn wealth, பிரியினும் – even if separating, கேள் இனி   listen now, வாழிய நெஞ்சே – may you live long my heart, நாளும் கனவுக் கழிந்தனையவாகி – things occur in dreams every day and they are lost, நனவின் நாளது செலவும் – and that days are moving in reality, மூப்பினது வரவும் – and the arrival of old age, அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கையும் – and the greatness of the nature of rare love, இந்நிலை அறியாய் – you do not understand at this stage, ஆயினும் – yet, செந்நிலை – perfect, அமை ஆடு – swaying bamboo, அம் கழை தீண்டி – touching beautiful bamboo stalks, கல்லென – with sounds (ஒலிக்குறிப்பு மொழி), ஞெமை இலை உதிர்த்த – drops the leaves of gnemai trees, Anogeissus latifolia, எரிவாய்க் கோடை – hot western winds, நெடு வெண்களரி – vast white salty land, நீறு முகந்து சுழல – lifts and swirls the dust, கடு வெயில் திருகிய வேனில் வெங்காட்டு – in the hot forest where harsh sun scorches in summer, in the harsh forest where the sun scorches in summer, உயங்கு நடை மடப் பிணை தழீஇய – embracing its delicate/naive female with sad walk (தழீஇய – அளபெடை), வயங்கு பொறி அறு கோட்டு எழில் கலை – a handsome stag with bright spots and broken antlers, a handsome stag with bright spots and ripples on his antlers, அறு கயம் நோக்கி – looks at the dry pond, தெண் நீர் வேட்ட – desiring clear water, சிறுமையின் தழை மறந்து – forgets to eat leaves due to sorrow, உண் நீர் இன்மையின் – without drinking water, ஒல்குவன தளர – becoming stressed and weak, மரம் நிழல் அற்ற – without tree shade, இயவின் சுரன் இறந்து – passed through the wasteland path (சுரன் – சுரம் என்பதன் போலி), உள்ளுவை அல்லையோ மற்றே – will you think (மற்றே – மற்று, ஏ அசைநிலைகள், expletives), உள்ளிய விருந்து ஒழிவு அறியா – and desirable celebration not knowing ending, பெருந்தண் பந்தர் – large cool pavilion (பந்தர் – பந்தல் என்பதன் போலி), வருந்தி – is sad, வருநர் ஓம்பி – welcoming those who come, தண்ணென – in a cool manner, தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல் – beautiful hair with thāzhai tree flowers dropping pollen dust, Pandanas odoratissimus, வீழ் இதழ் அலரி மெல்லகம் சேர்த்தி – joining the desired sides of the flower petals, மகிழ் அணி முறுவல் – happy pretty smile, மாண்ட சேக்கை – esteemed bed, lovely bed, நம்மொடு நன் மொழி நவிலும் – talks sweet words with us, பொம்மல் ஓதி – woman with bountiful hair, woman with luxuriant hair (அன்மொழித்தொகை), புனை இழை – woman with beautiful jewels, (அன்மொழித்தொகை), குணனே – the trait, the character  (குணன் – குணம் என்றதன் போலி, ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 354, மதுரைத் தமிழ்க் கூத்தன் கடுவன் மள்ளனார், முல்லைத் திணை – தலைவனிடம் அருகில் உள்ளவர்கள் சொன்னது
மதவலி யானை மறலிய பாசறை
இடி உமிழ் முரசம் பொருகளத்து இயம்ப,
வென்று கொடி எடுத்தனன் வேந்தனும், கன்றொடு
கறவைப் பல்லினம் புறவு தொறு உகளக்
குழல் வாய் வைத்தனர் கோவலர், வல் விரைந்து  5
இளையர் ஏகுவனர் பரிய விரியுளைக்
கடு நடைப் புரவி வழிவாய் ஓட,
வலவன் வள்பு வலி உறுப்பப் புலவர்
புகழ் குறி கொண்ட பொலந்தார் அகலத்துத்
தண் கமழ் சாந்தம் நுண் துகள் அணிய,  10
வென்றி கொள் உவகையொடு புகுதல் வேண்டின்
யாண்டு உறைவது கொல் தானே, மாண்ட
போது உறழ் கொண்ட உண்கண்
தீது இலாட்டி திரு நுதல் பசப்பே?

Akanānūru 354, Mathurai Thamizh Koothan Kaduvan Mallanār, Mullai Thinai – What those in the military camp told the hero
Elephants with great might are in the
the battle camp,
where victory drums roar like thunder
in the battlefield and our king has
raised his victory flags.

Many herds of cows with calves romp
around in the forests as cattle herders
play their flutes.  Young servants are
moving around rapidly, ready to leave.

The charioteer holds firmly the bridle of
his swift horses with large tufts, ready to
run on the path.  You with sandal paste,
scented powder, cool, fragrant, pretty
garlands and scars on your chest that are
praised by poets, are getting ready to
enter your home.

Where will the paleness on the beautiful
forehead of your faultless wife with
kohl-lined, flower-like eyes go?

Notes:  வினை முற்றிய தலைவனுக்கு அருகில் உள்ளோர் சொல்லியது.  மதவலி (1) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மதவலி எனப்பொருள்படும் உரிச்சொல். மதவலி ஒரு பொருள் இருசொல்.  மிக்க வலிமையுடைய என்றபடி, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மதத்தையும் வலிமையையும்.  மத (1) – மதவு, ஈறு கெட்டது, மதவு – மதவே மடனும் வலியும் ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 81).

Meanings:   மதவலி யானை – elephants with great strength, rutting elephants with strength (மதவலி – ஒருபொருட் பன்மொழி), மறலிய – differing, having enmity, பாசறை – battle camp, இடி உமிழ் முரசம் – drums roar like thunder, பொரு களத்து இயம்ப – roaring in the battlefield, வென்று கொடி எடுத்தனன் வேந்தனும் – the king has raised his victory flags, கன்றொடு கறவைப் பல் இனம் புறவு தொறு உகள – many herds of cows and calves romp in all the forests, குழல் வாய் வைத்தனர் கோவலர் – cattle herders play flutes with their mouths, வல் விரைந்து இளையர் ஏகுவனர் – the servants are working very rapidly, பரிய – to leave, விரியுளை – wide tufted, கடு நடைப் புரவி வழிவாய் ஓட – swift horses run on the path, வலவன் வள்பு வலி உறுப்ப – charioteer holds the bridle firmly and rides, புலவர் புகழ் – made famous by poets, குறி கொண்ட – with scars, பொலந்தார் அகலத்து – of the chest with beautiful/golden garland, தண் கமழ் சாந்தம் – cool fragrant sandal paste, நுண் துகள் அணிய – wearing fine dust (fragrant powders), வென்றி கொள் உவகையொடு – with victorious happiness, புகுதல் வேண்டின் – you desired to enter (your home), யாண்டு உறைவது கொல் – where will it go and reside now, தானே மாண்ட போது உறழ் கொண்ட – they are like the esteemed blue waterlilies (தான், ஏ அசைநிலைகள், expletives, (உறழ் உவம உருபு, a comparison word)), உண்கண் தீது இல் ஆட்டி – faultless wife with kohl-rimmed eyes (ஆட்டி – பெண்), திரு நுதல் – beautiful forehead, பசப்பே – paleness, pallor, ஏகாரம் அசைநிலை, an expletive

அகநானூறு 355, தங்கால் பொற்கொல்லனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
மாவும் வண் தளிர் ஈன்றன, குயிலும்
இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும்
மூது இலை ஒழித்த போது அவிழ் பெருஞ்சினை,
வல்லோன் தைவரும் வள் உயிர்ப் பாலை
நரம்பு ஆர்த்தன்ன வண்டினம் முரலும்,  5
துணிகயம் துன்னிய தூ மணல் எக்கர்த்
தாது உகு தண் பொழில் அல்கிக் காதலர்
செழு மனை மறக்கும் செவ்வி வேனில்
தானே வந்தன்று ஆயின், ஆனாது
இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டிப்  10
புலந்தனம் வருகம், சென்மோ தோழி,
யாமே எமியம் ஆக, நீயே
பொன் நயந்து அருள் இலையாகி,
இன்னை ஆகுதல் ஒத்தன்றால் எனவே.

Akanānūru 355, Thānkāl Porkollanār, Pālai Thinai – What the heroine said to her friend
The mango trees have put out
lovely sprouts, cuckoos sing
with very sweet voices on tree
branches, huge tree limbs have
dropped their old leaves and
are dense with new blossoms,
and bees hum like pālai tunes
played on a yāzh by a talented artist,
in this early summer season when
lovers forget their rich homes
and stay in cool groves with
pure sand dunes near clear ponds.

Let us go and fight with him,
my friend, and tell him, “We are here
alone.  You desire wealth without grace
and our bright bangles are slipping
down constantly.  This behavior is not
fitting of you”.

Notes:  பிரிவு உணர்த்திய தோழியிடம் தலைவி உரைத்தது.  புலந்தனம் வருகம் (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அவனோடு ஊடினேமாய் வருவேம், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – அவனை வெறுத்து வருதற்கு நாம் செல்லக்கடவேம்.  ஒத்தன்றால் (14) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நின் பெருந்தகைமைக்கு ஒரு சிறிதும் பொருத்தமுடையதன்று, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – நின் தகுதிக்கு ஒத்தது அன்று.

Meanings:   மாவும் வண் தளிர் ஈன்றன – the mango trees have put out lush sprouts, the mango trees have put out beautiful sprouts, குயிலும் இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும் – many cuckoos sing with their very sweet voices on branches (இன் தீம் – ஒருபொருட் பன்மொழி, கொம்பர் – மொழி இறுதிப் போலி), மூது இலை ஒழித்த – lost old leaves, போது அவிழ் பெருஞ்சினை – huge branches have flowers that have open petals, வல்லோன் தைவரும் – talented artist stroking (the lute), வள் உயிர் – rich sound/music, பாலை நரம்பு ஆர்த்தன்ன – like the Pālai tune played on lute strings, வண்டினம் முரலும் – the bees hum, துணிகயம் துன்னிய தூ மணல் எக்கர் – pure sand dunes near a pond with clear water (துணிகயம் – வினைத்தொகை, an elliptical compound in which a verbal root forms the first component), தாது உகு தண் பொழில் – cool groves where pollen drops, அல்கி – staying, காதலர் செழு மனை மறக்கும் செவ்வி வேனில் தானே வந்தன்று – early summer time has come when lovers forget their rich homes (செவ்வி – பொழுது, தானே – தான், ஏ அசைநிலைகள், expletives), ஆயின் – yet, ஆனாது – without stopping, இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டி – showing him the sorrow of our bright slipping bangles, புலந்தனம் வருகம் சென்மோ தோழி – let us go and fight with him, let us go and hate him (மோ – தன்மை அசைநிலை, an expletive of the first person), யாமே எமியம் ஆக – we are alone here, நீயே பொன் நயந்து – you are desiring wealth/gold, அருள் இலை ஆகி – without any grace (இலை – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்), இன்னை ஆகுதல் – becoming like this, ஒத்தன்றால் எனவே – and tell him that this is not fitting of him (ஒத்தன்றால் – ஆல் அசைநிலை, an expletive, எனவே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 356, பரணர், மருதத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
மேல் துறைக் கொளீஇய கழாலின் கீழ்த் துறை
உகுவு ஆர் அருந்தப் பகுவாய் யாமை
கம்புள் இயவன் ஆக விசி பிணித்
தெண் கண் கிணையின் பிறழும் ஊரன்,
இடை நெடுந்தெருவில் கதுமெனக் கண்டென்  5
பொன் தொடி முன் கை பற்றினனாக,
“அன்னாய்” என்றனென் அவன் கை விட்டனனே,
தொன் நசை காவாமை நன்னன் பறம்பில்
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய
கல் போல் நாவினேனாகி மற்று அது  10
செப்பலென் மன்னால் யாய்க்கே, நல்தேர்க்
கடும் பகட்டு யானைச் சோழர் மருகன்
நெடுங்கதிர் நெல்லின் வல்லம் கிழவோன்
நல்லடி உள்ளானாகவும், ஒல்லார்
கதவ முயறலும் முயல்ப, அதாஅன்று  15
ஒலி பல் கூந்தல் நம்வயின் அருளாது,
கொன்றனன் ஆயினும் கொலை பழுது அன்றே,
அருவி ஆம்பல் கலித்த முன்துறை
நன்னன் ஆஅய் பறம்பு அன்ன
மின்னீர் ஓதி! என்னை நின் குறிப்பே?  20

Akanānūru 356, Paranar, Marutham Thinai – What the heroine’s friend said to her
Oh friend with hair as bright as Nannan’s
lovely Parampu town, dense
with white waterlilies on stream shores!
Tell me what you think.

The man from the town, where water in which
liquor bowls are washed in the upper shores,
comes down to the lower shores as drinking
water for a tortoise with a gaping mouth, that
rolls, resembling a tightly tied kinai drum with
clear eyes, and a marsh hen sounds like a
musician,

looked at me suddenly, caught my forearms with
gold bangles on the long street, and I shouted,
“Mother”.  He let go of my hand, protecting old
desires.  My tongue turned hard like a whetstone
made with glue by a young worker and I did not
tell our mother.

The heir of Chozha kings who owned fine chariots
and fierce, arrogant elephants, the lord of Vallam
with long spears of paddy grain, is a good man
whose enemies try to seize him.

Even if your man has hurt us and not shown his
graces, to us with thick, luxuriant hair, it has
not ruined us!

Notes:   குறைவேண்டிப் பின்னின்ற தலைவனுக்கு குறைநேர்ந்த தோழி, தலைவியிடம் சென்று தலைவன் வேண்டுகோளுக்கு இணங்க வேண்டும் எனக் கூறியது.   பொ. வே. சோமசுந்தரனார் உரை – மேல்துறை கீழ்த்துறை என்பன துறைமேல் துறைகீழ் எனற்பாலன மாறி நின்றன.  அகநானூறு 1 – சிறு காரோடன் பயினொடு சேர்த்திய கல் போல் பிரியலம்.  பறம்பு (19) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பறம்பு மலை அன்று.  அப்பெயரையுடைய ஓர் ஊர் எனக் கொள்க.  நன்னன் ஆஅய் பறம்பு அன்ன
மின்னீர் ஓதி (19-20) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நன்னன் என்பவனின் பறம்பு என்னும் ஊர் போலும் நலம் சிறந்த மின்னற்கொடி போன்ற இடையினையும் நெய்ப்புடைய கூந்தலையுமுடைய எம் பெருமாட்டியே கேள்!, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – நன்னனின் பறம்பு போன்ற மின்னுகின்ற குளிர்ந்த கூந்தலையுடையாளே!.  வரலாறு:  நன்னன், பறம்பு மலை, சோழர், வல்லம் கிழவோன்.

Meanings:   மேல் துறை – upper shores, கொளீஇய – bowls that contained liquor (கொண்ட கலங்கள், வினையாலணையும் பெயர், அளபெடை), கழாலின் – due to washing, கீழ்த்துறை – on the lower shores, உகுவு ஆர் அருந்த – to drink to the full what is coming down, பகுவாய் யாமை – a tortoise with gaping mouth, கம்புள் இயவன் ஆக – marsh hen as a musician, விசி பிணித் தெண் கண் கிணையின் – looking like the clear eyes of a tightly tied kinai drum (கிணையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), பிறழும் – it rolls, it turns upside down (tortoise), ஊரன் – the man from such town, இடை நெடுந்தெருவில் – in the long street, கதுமெனக் கண்டென் – he looked at me suddenly (கதுமென – விரைவுக்குறிப்பு), பொன் தொடி முன் கை பற்றினனாக – he caught my forearms with gold bangles, அன்னாய் என்றனென் – I said ‘mother’, அவன் கை விட்டனனே – he let go of my hand (ஏகாரம் அசைநிலை, an expletive), தொன் நசை காவாமை – not removing old desires, protecting old desires, நன்னன் பறம்பில் – in Nannan’s Parampu Mountain, சிறு காரோடன் பயினொடு சேர்த்திய கல் போல் – like whetstone made with mixing glue/wax by a young worker, நாவினேன் ஆகி – I became a person with a hard tongue, I became tongue tied, மற்று -அசைநிலை, an expletive, அது செப்பலென் மன் ஆல் யாய்க்கே – I did not tell that to our mother (மன், ஆல் – அசைநிலைகள், expletives), நல் தேர்க் கடும் பகட்டு யானைச் சோழர் மருகன் – heir of Chozha kings with fine chariots and fierce and arrogant elephants, நெடுங்கதிர் நெல்லின் – with fields with paddy with long grain clusters, வல்லம் கிழவோன் – the lord of Vallam town, நல்லடி உள்ளானாகவும் –  a man with fine behavior, ஒல்லார் கதவ முயறலும் முயல்ப – his enemies try to seize him, அதாஅன்று – not just that (அது அன்று என்பன அதான்று எனப்புணர்ந்து வருமொழி முதல் அளபெடுத்து அதாஅன்று என்றாயிற்று.  அதாஅன்று அஃதன்றியும் என்னும் பொருட்டு, அளபெடை), ஒலி பல் கூந்தல் – luxuriant thick hair, நம் வயின் அருளாது – not showering graces, கொன்றனன் ஆயினும் – even if he has killed us, கொலை பழுது அன்றே – his killing us has not hurt us (அன்றே – ஏகாரம் அசைநிலை, an expletive), அருவி ஆம்பல் – white waterlilies in the flowing stream, கலித்த – filled, flourishing, முன்துறை –  shore front (முன்துறை – துறைமுன்), நன்னன் – Nannan, ஆஅய் பறம்பு அன்ன – beautiful Parampu Mountain (ஆஅய் – அளபெடை), மின் ஈர் ஓதி – oh woman with shining cool hair, oh woman with bright oiled hair (அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), என்னை நின் குறிப்பே – what do you think (குறிப்பே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 357, எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கொடு முள் ஈங்கைச் சூரலொடு மிடைந்த
வான் முகை இறும்பின் வயவொடு வதிந்த
உண்ணாப் பிணவின் உயக்கம் தீரிய
தட மருப்பு யானை வலம்படத் தொலைச்சி,
வியல் அறை சிவப்ப வாங்கி முணங்கு நிமிர்ந்து  5
புலவுப் புலி புரண்ட புல் சாய் சிறு நெறி
பயில் இருங்கானத்து வழங்கல் செல்லாது,
பெருங்களிற்று இன நிரை கை தொடூஉப் பெயரும்,
தீஞ்சுளைப் பலவின் தொழுதி உம்பல்
பெருங்காடு இறந்தனர் ஆயினும் யாழ நின்  10
திருந்திழைப் பணைத்தோள் வருந்த நீடி,
உள்ளாது அமைதலோ இலரே, நல்குவர்,
மிகு பெயல் நிலைஇய தீ நீர்ப் பொய்கை
அடை இறந்து அவிழ்ந்த தண் கமழ் நீலம்
காலொடு துயல்வந்தன்ன நின்  15
ஆய் இதழ் மழைக் கண் அமர்த்த நோக்கே.

Akanānūru 357, Erukkāttūr Thāyankannanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
Even though he went through the huge
Umpal forest,
……….where eengai vines with curved
……….thorns are tangled with pirampu,
……….flower buds are white, and to end the
……….distress of his hungry, craving pregnant
……….female, a male tiger brings down a large
……….tusker on its right side, drags it as the
……….nearby rocks become red with blood,
……….stinks of flesh, stretches, spreads and
……….rolls on the ground, flattening the
……….grass on the small path,
……….and herds of elephants dig and eat
……….the sweet segments of jackfruits in the
……….dense, huge forest path,
he will not stay away for long, causing the
perfect jewels on your bamboo-like arms to
slip.

He will be gracious to you with desirable,
moist eyes with pretty lids, like the open
blossoms of cool, fragrant waterlily flowers,
that grow in sweet ponds fed by heavy rains
and rise above leaves and sway in the wind.

Notes:  பிரிவிடை ஆற்றாளாகிய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.    முணங்கு நிமிர்ந்து (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சோம்பல் முறித்தது.  உம்பல் பெருங்காடு (9-10) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – சேர நாட்டகத்து உம்பற்காடு எனப் பெயரிய இடம் ஒன்று உண்டு என்பது, ‘உம்பற்காடு ஐந்நூறூர்’ (2ம் பத்து), ‘உம்பற்காட்டைத் தன் கோனிறீஇ’ (3ம் பத்து), ‘உம்பற்காட்டு வாரியையும்’ (5ம் பத்து) எனப் பதிற்றுப்பத்தின் பதிகங்களில் வருவதால் அறியப்படும்.  உம்பற்காடு என்பது யானையை மிகுதியாக உடைமையாற் பெற்ற பெயர் போலும்.  ஒப்புமை:  புல் சாய் சிறு நெறி – அகநானூறு 65 – புல் சாய் சிறு நெறி, அகநானூறு 89 –  புல் சாய் விடரகம், 357 – அகநானூறு புல் சாய் சிறு நெறி.  சோம்பல் போக்குதல், மூரி நிமிர்ந்தல் – அகநானூறு 357 – முணங்கு நிமிர்ந்து புலவுப் புலி, புறநானூறு 52 – முணங்கு நிமிர் வயமான் முழு வலி ஒருத்தல், புறநானூறு 78 – முணங்கு நிமிர்ந்து அளைச் செறி உழுவை இரைக்கு வந்தன்ன.  There is a convention that when a tiger’s prey falls on its left, the tiger will not eat it.  It will abandon it.  It will eat only if the prey falls on its right side. This is mentioned in Akanānūru 3, 238, 252, 357 and 389, Natrinai 154 and Puranānūru 190.   தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).  மழைக் கண் அமர்த்த நோக்கே (16) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குளிர்ந்த கண்ணினது விருப்பமிக்க நோக்கம், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – குளிர்ந்த கண்களின் அமரிய (மாறுபட்ட) பார்வை.

Meanings:   கொடு முள் ஈங்கை – eengai vine with curved thorns, Mimosa Pudica, சூரலொடு – along with cane, மிடைந்த – mixed, intertwined, வான் முகை இறும்பின் – in the small forest with white buds, வயவொடு வதிந்த உண்ணாப் பிணவின் உயக்கம் தீரிய – to end the sorrow of his craving pregnant mate which has not eaten (தீரிய – செய்யிய என்னும் எச்சம்), தட மருப்பு யானை வலம்படத் தொலைச்சி – killed an elephant with big/curved tusks making it fall on its right side, வியல் அறை சிவப்ப வாங்கி – pulled as the huge boulders got red, முணங்கு நிமிர்ந்து – stretching and spreading, புலவுப் புலி – a tiger stinking of flesh, புரண்ட – rolled, புல் சாய் – grass fallen, சிறு நெறி – small path, narrow path, பயில் இருங்கானத்து வழங்கல் செல்லாது – not going through the very huge forest paths, பெருங்களிற்று இன நிரை கை தொடூஉப் பெயரும் – large male elephant herds tear and eat with their trunks (தொடூஉ – அளபெடை), தீஞ்சுளைப் பலவின் தொழுதி – many jackfruit trees with sweet segments, உம்பல் பெருங்காடு இறந்தனர் ஆயினும் – even though he went through the huge Umpal forest or the forest with elephants, யாழ – அசை, an expletive, நின் திருந்திழை – your perfect jewels, பணைத்தோள் வருந்த – for your bamboo-like arms to be sad, நீடி உள்ளாது அமைதலோ இலரே – he will not stay away for long without thinking (இலரே – ஏகாரம் அசைநிலை, an expletive), நல்குவர் – he will be gracious, மிகு பெயல் நிலைஇய – stablized by heavy rains (நிலைஇய – அளபெடை), தீ நீர்ப் பொய்கை – pond with sweet water, அடை இறந்து – past the leaves, அவிழ்ந்த தண் கமழ் நீலம் – blossomed cool fragrant blue waterlilies, Nymphaea caerulea, காலொடு துயல்வந்தன்ன – like they sway in the wind, நின் ஆய் இதழ் மழைக் கண் அமர்த்த நோக்கே – the differing looks of your moist eyes with pretty petal-like lids, the desirable looks of your cool eyes with eyelids that are like flower petals (நோக்கே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 358, மதுரை மருதன் இளநாகனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
நீலத்து அன்ன நிறம் கிளர் எருத்தின்
காமர் பீலி ஆய் மயில் தோகை
இன் தீம் குரல துவன்றி, மென் சீர்
ஆடு தகை எழில் நலம் கடுப்பக் கூடி,
கண் நேர் இதழ தண் நறும் குவளை  5
குறுந்தொடர் அடைச்சிய நறும் பல் கூழை
நீடு நீர் நெடுஞ்சுனை ஆயமொடு ஆடாய்,
உயங்கிய மனத்தையாகிப் புலம்பு கொண்டு
இன்னை ஆகிய நின் நிறம் நோக்கி,
அன்னை வினவினள் ஆயின், அன்னோ,  10
என்னென உரைக்கோ யானே, துன்னிய
பெருவரை இழிதரும் நெடு வெள்ளருவி,
ஓடை யானை உயர் மிசை எடுத்த
ஆடு கொடி கடுப்பத் தோன்றும்
கோடு உயர் வெற்பன் உறீஇய நோயே?  15

Akanānūru 358, Mathurai Maruthan Ilanākanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
You, with scented, thick hair adorned
with short strands of cool, fragrant
blue waterlily blossoms with petals,
that resemble the eyes of women,
do not join your friends,
……….who are like pretty peacocks
……….with beautiful plumes and sapphire
……….colored necks, that join together,
……….sing very sweetly and dance with
……….delicate rhythm,
and play in the deep, large springs.

You are of sad mind and lonely.
The disease caused by the lord
of the mountains with lofty peaks,
where tall, white waterfalls flow
down like the swaying flags on top
of elephants with face ornaments,
has made you like this.

What will I say if mother looks at
your color and questions me?

Notes:  தலைவியின் ஆற்றாமையை உணர்த்தும்பொருட்டு, தலைவன் கேட்குமாறு, தலைவியிடம் தோழி கூறியது.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:   நீலத்து அன்ன நிறம் – color-like sapphire, color like blue waterlilies, Nymphaea caerulea (நீலத்து – நீலம், அத்து சாரியை), கிளர் எருத்தின் – with bright necks, காமர் பீலி – beautiful feathers, ஆய் மயில் தோகை – pretty peacocks with plumes, இன் தீம் குரல – with very sweet voices (இன் தீம் – ஒருபொருட் பன்மொழி), துவன்றி – gathered, மென் சீர் ஆடு தகை எழில் நலம் கடுப்ப – like the beautiful dances with delicate rhythm (கடுப்ப – உவம உருபு, a comparison word), கூடி – together, கண் நேர் இதழ தண் நறும் குவளை – cool fragrant blue waterlily blossoms with petals that resemble eyes of women (waterlily flowers resemble eyes of women – there are many poems in which eyes of women are described as resembling blue waterlily flowers), Nymphaea caerulea, குறுந்தொடர் அடைச்சிய – adorned with short garlands/strands, நறும் பல் கூழை – fragrant thick hair, நீடு நீர் நெடுஞ்சுனை – long spring with deep waters, ஆயமொடு ஆடாய் – you do not play with friends, உயங்கிய மனத்தை ஆகி – you have become of sad mind, புலம்பு கொண்டு – with loneliness, இன்னை ஆகிய – became like this, நின் நிறம் நோக்கி அன்னை வினவினள் ஆயின் அன்னோ என்னென உரைக்கோ – alas! what will I say if mother looks at your body and questions, alas! what will I say if mother looks at your skin color and questions me (உரைக்கோ – உரைக்கு + ஓ,  உரைக்கு – தன்மை வினைமுற்று, first person verb ending, ஓ -அசைநிலை, an expletive), யானே – me (ஏ -அசைநிலை, an expletive), துன்னிய – close, பெருவரை இழிதரும் – flowing down the tall mountains, நெடு வெள் அருவி – tall white waterfalls, ஓடை யானை உயர் மிசை எடுத்த ஆடு கொடி கடுப்ப தோன்றும் – they appear like the lifted swaying flags on an elephant with ornaments on his forehead (உயர் மிசை – ஒருபொருட் பன்மொழி, கடுப்ப – உவம உருபு, a comparison word), கோடு உயர் வெற்பன் – the lord of the mountain with tall peaks, உறீஇய நோயே – the disease he caused (உறீஇய – அடைவித்த, உறீஇய – அளபெடை, நோயே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 359, மாமூலனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
பனி வார் உண்கணும் பசந்த தோளும்
நனி பிறர் அறியச் சாஅய, நாளும்
கரந்தனம் உறையும் நம் பண்பு அறியார்,
நீடினர் மன்னோ காதலர் என நீ
எவன் கையற்றனை இகுளை? அவரே  5
வானவரம்பன் வெளியத்து அன்ன நம்
மாண் நலம் தம்மொடு கொண்டனர், முனாஅது,
அருஞ்சுரக் கவலை அசைஇய கோடியர்
பெருங்கல் மீமிசை இயம் எழுந்தாங்கு
வீழ் பிடி கெடுத்த நெடுந்தாள் யானை  10
சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும்,
பொய்யா நல்லிசை மா வண் புல்லி
கவைக் கதிர் வரகின் யாணர்ப் பைந்தாள்
முதைச் சுவல் மூழ்கிய கான் சுடு குரூஉப் புகை
அருவித் துவலையொடு மயங்கும்  15
பெருவரை அத்தம் இயங்கியோரே.

Akanānūru 359, Māmoolanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
Your lover does not understand
you hiding daily from others greatly,
your pale arms, and tears streaming
down your kohl-lined eyes.
Why are you feeling helpless,
my friend, thinking about his delay?

He took your great beauty,
like that of Veliyam town of Vāna
Varampan,
the man who went on the wasteland
path on the towering mountains of
Pulli with great fame and unfailing
charity to those in need, where sprays
from waterfalls mix with the bright
smoke that mountain dwellers create
burning the forest surrounded by raised
land with millet fields with forked millet
spears and flourishing stems, where

a tall-legged male elephant that lost its
loving female, trumpets, sounding like
musicians who play instruments on the
forked paths of the harsh wasteland in the
mountains, and clouds that roar with
thunder in the mountains desired by gods.

Notes:  பிரிவிடை வேறுபட்ட தலைவியிடம் தோழி சொல்லியது.  வரலாறு: வானவரம்பன், வெளியம், புல்லி.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:   பனி வார் உண்கணும் – kohl-lined eyes with tears running down (உண்கணும் – உண்கண்ணும், கணும் இடைக்குறை), பசந்த தோளும் – and pale arms, and arms that have acquired yellow spots, நனி பிறர் அறிய – for others to see greatly, சாஅய – they have become thin, they have been ruined, நாளும் – every day, கரந்தனம் உறையும் – we live hiding, நம் பண்பு அறியார் – the man who does not know our nature, நீடினர் – he is delaying, மன்னோ – மன், ஓ அசைநிலைகள், expletives, காதலர் – lover, என – so, hence, நீ எவன் கையற்றனை – why are you helpless, இகுளை – oh my friend, அவரே – he, வானவரம்பன் வெளியத்து அன்ன நம் மாண் நலம் – your great beauty like that of Vāna Varampan’s Veliyam town (வெளியத்து – வெளியம், அத்து சாரியை), தம்மொடு கொண்டனர் – he took it along with him, முனாஅது – in front, அருஞ்சுரக் கவலை – forked wasteland paths, அசைஇய – staying (அளபெடை), கோடியர் பெருங்கல் மீமிசை இயம் எழுந்தாங்கு – like the music that rose high from the instruments of musicians (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), வீழ் பிடி கெடுத்த – that lost its desired female elephant, நெடுந்தாள் யானை – elephant with tall legs, சூர் புகல் அடுக்கத்து – in the mountain ranges desired by gods who live there, மழை மாறு முழங்கும் – clouds roar with thunder, rain falls with harsh thunder, பொய்யா – unfailing to those who come in need, நல்லிசை – fine fame, மா வண் புல்லி – greatly charitable Pulli, கவைக் கதிர் வரகின் – of the forked millet spears, யாணர்ப் பைந்தாள் – abundant green stems, flourishing green stems, முதைச் சுவல் – ancient elevated land, மூழ்கிய – surrounded, கான் சுடு – burning in the forest, குரூஉப் புகை – bright smoke, colorful smoke (குரூஉ – அளபெடை), அருவித் துவலையொடு மயங்கும் – gets mixed with waterfall sprays, பெருவரை அத்தம் இயங்கியோரே – the man who went on the wasteland path on the tall mountain (இயங்கியோரே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 360, மதுரைக் கண்ணத்தனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பல் பூந்தண் பொழில் பகல் உடன் கழிப்பி,
ஒரு கால் ஊர்திப் பருதி அம் செல்வன்
குடவயின் மா மலை மறையக், கொடுங்கழித்
தண் சேற்று அடைஇய கணைக் கால் நெய்தல்
நுண் தாது உண்டு வண்டினம் துறப்ப,  5
வெருவரு கடுந்திறல் இரு பெரும் தெய்வத்து
உருவுடன் இயைந்த தோற்றம் போல,
அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ
வந்த மாலை பெயரின் மற்றிவள்
பெரும் புலம்பினளே தெய்ய அதனால் 10
பாணி பிழையா மாண் வினைக் கலிமா
துஞ்சு ஊர் யாமத்துத் தெவிட்டல் ஓம்பி,
நெடுந்தேர் அகல நீக்கிப் பையெனக்
குன்று இழி களிற்றின் குவவு மணல் நீந்தி,
இரவின் வம்மோ உரவு நீர்ச் சேர்ப்ப!  15
இனமீன் அருந்து நாரையொடு பனை மிசை
அன்றில் சேக்கும் முன்றில், பொன்னென
நன்மலர் நறுவீ தாஅம்
புன்னை நறும் பொழில் செய்த நம் குறியே.

Akanānūru 360, Mathurai Kannathanār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
Oh lord of the shores with strong waves!
You spend the day with her in the cool
grove with many flowers, and leave in the
evening when the sun which rolls on one
wheel hides behind the western mountains,
swarms of bees that eat fine pollen dust
abandon the thick-stemmed waterlilies in
the curved, cool mud of backwaters, and
the twilight sky and beautiful ocean appear
like the two great, fierce, mighty gods, Sivan
and Thirumal, making her lonely and sad.

So, come at night, when those in town
sleep, to the place where we arranged
a tryst, leaving your tall chariot with your
neighing horses that ride with perfect rhythm,
passing the sand dunes like a bull elephant
that comes down a mountain, to the fragrant
grove with beautiful punnai trees with pretty
golden flowers whose fragrances spread wide,
that is in our front yard where storks that eat
shoals of fish and ibis live on the palmyra
trees.

Notes:  பகற்குறி வந்த தலைவனுக்குத் தோழி பகற்குறி மறுத்து இரவுக்குறி நேர்ந்தது.  கொளாஅ – கொள்ள என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

Meanings:   பல் பூந்தண் பொழில் – cool grove with many flowers, பகல் உடன் கழிப்பி – you spent the day with her, ஒரு கால் ஊர்திப் பருதி – the chariot with one rolling wheel as a leg, அம் செல்வன் – the beautiful sun, குடவயின் மா மலை மறைய – it hid behind the tall western mountains, கொடுங்கழி – curved backwaters, தண் சேற்று அடைஇய – in the cool mud (அடைஇய – அளபெடை), கணைக் கால் – thick-stemmed, நெய்தல் நுண் தாது உண்டு வண்டினம் துறப்ப – bees ate the fine pollen powder from the waterlilies and moved away, வெருவரு – fear causing, கடுந்திறல் – great strength, இரு பெருந்தெய்வத்து உருவுடன் இயைந்த தோற்றம் போல – like the appearance of the shapes of the two great gods – Sivan and Thirumal, அந்தி வானமொடு – with the twilight sky, கடல் அணி கொளாஅ – when the sea is beautiful, வந்த மாலை – in the evening time, பெயரின் மற்றிவள் பெரும் புலம்பினளே – she will feel very sad if you leave, she will feel lonely if you leave (புலம்பினளே – ஏகாரம் அசைநிலை, an expletive), தெய்ய -அசைநிலை, an expletive, அதனால் – so, பாணி பிழையா மாண் வினைக் கலி மா – arrogant horses that keep perfect rhythm when they trot without fail, துஞ்சு ஊர் யாமத்து – at night when those in town sleep (ஊர் ஆகுபெயர் ஊர் மக்களுக்கு), தெவிட்டல் ஓம்பி – protect their neighing, நெடுந்தேர் அகல நீக்கி – move away from your tall chariot, பையென – slowly, குன்று இழி களிற்றின் குவவு மணல் நீந்தி – passing the sand dunes like a male elephant coming down a mountain (களிற்றின் – ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), இரவின் வம்மோ – you come at night (மோ – முன்னிலையசை, an expletive of the second person), உரவு நீர்ச் சேர்ப்ப – oh lord of the shores with strong waves (சேர்ப்ப – அண்மை விளி), இன மீன் அருந்து நாரையொடு – along with storks/cranes/pelicans that eat schools of fish (ஆர்ந்து என்பது அருந்து என வந்தது), பனை மிசை அன்றில் சேக்கும் முன்றில் – front yard with ibis residing on the palmyra tree (முன்றில் – இல்முன்), பொன்னென – like gold, நன் மலர் – pretty flowers, நறு வீ தாஅம் – fragrances from flowers spread wide (தாஅம் – அளபெடை), புன்னை நறும் பொழில் – grove fragrant with beautiful punnai trees, Calophyllum inophyllum, Laurel Tree, Mast wood Tree, செய்த நம் குறியே – the tryst we arranged (குறியே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 361, எயினந்தை மகனார் இளங்கீரனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
“தூ மலர்த் தாமரைப் பூவின் அங்கண்
மா இதழ்க் குவளை மலர் பிணைத்தன்ன
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக்கண்,
அணி வளை முன் கை ஆய் இதழ் மடந்தை
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும்,  5
கவவுப் புலந்து உறையும் கழி பெருங்காமத்து
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்” என
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய்,
பொருள் புரிவுண்ட மருளி நெஞ்சே,
கரியாப் பூவின் பெரியோர் ஆர,  10
அழல் எழு தித்தியம் மடுத்த யாமை
நிழலுடை நெடுங்கயம் புகல் வேட்டாஅங்கு,
உள்ளுதல் ஓம்புமதி இனி நீ முள் எயிற்றுச்
சின்மொழி அரிவை தோளே, பன்மலை
வெவ்வறை மருங்கின் வியன் சுரம்  15
எவ்வம் கூர இறந்தனம் யாமே.

Akanānūru 361, Eyinanthai Makanār Ilankeeranār, Pālai Thinai – What the hero said to his heart
My confused heart that desires
wealth!
You do not accept when I tell
you sweetly that there is nothing
more pleasurable than when I
embrace the young woman after
sulking, even when the threads
on her breast cloth block me,
the girl with a pretty face like a
pure lotus flower, huge, luscious,
moist, restless eyes resembling two
dark kuvalai flowers tied to each
other, pretty lips, and beautiful
bangles on her forearms.

Don’t think about the arms of the
young woman with sharp teeth now,
like a tortoise that desires to go to a
deep pond with shade, leaving the
sacrificial pit where it was placed, where
offerings are given to those in the upper
world wearing flowers that do not fade.

Notes:  பொருள்வயின் பிரிந்த தலைவன் இடைச்சுரத்தில் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.  ஒப்புமை:  அகநானூறு 51 – முலை முற்றம் வீங்க, அகநானூறு 279 – செறிய வீங்கிய மென் முலை முற்றம், அகநானூறு 263 – வருமுலை முற்றத்து, அகநானூறு 361 – வார் முலை முற்றத்து, அகநானூறு 362 – முலைச் சுணங்கணி முற்றத்து, நற்றிணை 191 – வன முலை முற்றத்து.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  கூர – கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 18).  கரியாப் பூ (10) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெப்பத்தால் கரையாத மலர், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – வாடாத பூ.

Meanings:   தூ மலர்த் தாமரைப் பூவின் அங்கண் – on a pure lotus blossom, மா இதழ்க் குவளை மலர் – blue waterlilies with dark petals, Nymphaea caerulea, பிணைத்தன்ன – like tied, திரு முகத்து – on the pretty face, அலமரும் பெரு மதர் மழைக் கண் – huge luscious moist eyes that swirl, huge beautiful moist eyes that swirl, அணி வளை முன் கை – pretty bangles on her forearms, ஆய் இதழ் மடந்தை – the naive woman with beautiful lips, வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும் – even if the threads on her breast cloth blocked, கவவுப் புலந்து உறையும் கழி பெருங்காமத்து இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்லென – there is nothing more than the pleasure that comes from embracing and loving her when there is sulking (நுகர்ச்சியின் – இன் உறழ்ச்சிப் பொருளில் வந்தது), அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய் – you do not accept the words that I uttered kindly, பொருள் புரிவுண்ட மருளி நெஞ்சே – my confused heart that desires wealth, கரியாப் பூவின் பெரியோர் – elders in the upper world with flowers that do not fade/burn, the celestials, ஆர – to eat, அழல் எழு – flames rise, தித்தியம் – sacrificial pit, மடுத்த – placed, யாமை நிழலுடை நெடுங்கயம் புகல் வேட்டாஅங்கு – like a tortoise that desires to go to a deep pond with shade (வேட்டாஅங்கு – அளபெடை), உள்ளுதல் ஓம்புமதி இனி நீ – you do not think about it now (மதி – முன்னிலையசை, an expletive of the second person), முள் எயிற்றுச் சின்மொழி அரிவை தோளே – the arms of the young woman with thorn-sharp teeth and few words, பன் மலை வெவ்வறை மருங்கின் – many mountains with hot boulders, வியன் சுரம் – vast wasteland, எவ்வம் கூர இறந்தனம் யாமே – we have passed with great sorrow (யாமே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 362, வெள்ளிவீதியார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பாம்புடை விடர பனி நீர் இட்டுத் துறை
தேம் கலந்து ஒழுக யாறு நிறைந்தனவே,
வெண்கோட்டு யானை பொருத புண் கூர்ந்து,
பைங்கண் வல்லியம் கல் அளைச் செறிய,
முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வயப் பிணவு  5
கடி கொள வழங்கார் ஆறே, ஆயிடை
எல்லிற்று என்னான் வென்வேல் ஏந்தி,
நசை தர வந்த நன்னராளன்
நெஞ்சு பழுதாக வறுவியன் பெயரின்,
இன்றிப் பொழுதும் யான் வாழலனே, 10
எவன் கொல்? வாழி தோழி, நம் இடை முலைச்
சுணங்கணி முற்றத்து ஆரம் போலவும்,
சிலம்பு நீடு சோலைச் சிதர் தூங்கு நளிர்ப்பின்
இலங்கு வெள் அருவி போலவும்,
நிழல் கொண்டனவால் திங்கள் அம் கதிரே.  15

Akanānūru 362, Velliveethiyār, Kurinji Thinai – What the heroine’s friend said to her as the voice of the heroine, as the hero listened nearby
My you live long, oh friend!  He does
not fear the nights, when cold water
that flows out of the mountain cracks
with snakes, rushes through narrow
crevices mixed with honey, and flows
full down to fill the streams, and a
male tiger gored by an elephant with
white tusks is injured and hides in a
rocky cave, and his mate with sharp
claws that look like murukkam buds
guards the unapproachable entrance.

People do not use that path due to
such dangers.  He carries his victorious
spear, the nice man who comes with
desire.  If he leaves unable to attain
what he wants, I will not live even for
a moment.  What can we do?

Like the garland that hangs on my
chest with beautiful, yellow spots
on my breasts, and like the splendid
white waterfalls with the coolness of
the water droplets that hang on trees in
the mountain groves, the moon spreads
its lovely bright rays and covers the earth.

Notes:  தலைவியின் கூற்றைத் தோழித் தன் கூற்றாகக் கொண்டு உரைத்தது.  வரைவு கடாயது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – அஃதாவது தலைவன் திருமணம் செய்து கொள்ளுதலில் கருத்து ஊன்றாமல் நாள்தோறும் இரவுக் குறியின்கண் வந்து வந்து மீள்பவன் ஒரு நாள் இரவுக்குறியின்கண் வந்து ஒரு பக்கத்தே மறைய நின்றமை அறிந்த தோழி இரவுக்குறியின்கண் வருவதற்கு இடையூறுண்மை தோன்றவும் வாராது ஒழியின் தலைவி இறந்து படுவாள் என்பது தோன்றவும் அவன் கேட்பக் கூறுபவள் அவன் வருகை உணராதாள் போன்று தலைவியை நோக்கிச் சொல்லியது என்றவாறு.  ஒப்புமை:  அகநானூறு 51 – முலை முற்றம் வீங்க, அகநானூறு 279 – செறிய வீங்கிய மென் முலை முற்றம், அகநானூறு 263 – வருமுலை முற்றத்து, அகநானூறு 361 – வார் முலை முற்றத்து, அகநானூறு 362 – முலைச் சுணங்கணி முற்றத்து, நற்றிணை 191 – வன முலை முற்றத்து.  தலைவி கூறுவதுபோல் தோழி கூறுதல் – அகநானூறு 362 – நெஞ்சு பழுதாக வறுவியன் பெயரின் இன்றிப் பொழுதும் யான் வாழலனே, நற்றிணை 124 – புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை யானும் ஆற்றேன், நற்றிணை  175 – என் பசலை மெய்யே, நற்றிணை  178 – அவர்த் தெளிந்த என் நெஞ்சே, நற்றிணை 191 – என் நோக்கினளே அன்னை, நாளை மணிப் பூ முண்டகம் கொய்யேன் ஆயின் அணிக் கவின் உண்மையோ அரிதே, நற்றிணை 211 – யார்க்கு நொந்து உரைக்கோ யானே …… துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே?, கலித்தொகை 18 – என் தோள் எழுதிய தொய்யிலும், கலித்தொகை 70 – எம் புதல்வனை மெய் தீண்டப் பொருந்துதல் இயைபவால், குறுந்தொகை 236- தந்தனை சென்மோ நீ உண்ட என் நலனே, குறுந்தொகை 238 – தொண்டி அன்ன என் நலம் தந்து கொண்டனை சென்மோ, ஐங்குறுநூறு 45 – பசப்பு அணிந்தனவால் மகிழ்ந என் கண்ணே. 

Meanings:   பாம்புடை விடர – from the mountain cracks with snakes, பனி நீர் – cold water, இட்டுத்துறை – narrow ports, தேம் கலந்து ஒழுக யாறு நிறைந்தனவே – the rivers flowed full mixed with honey from the flowers and honeycombs (தேம் தேன் என்றதன் திரிபு, நிறைந்தனவே – ஏகாரம் அசைநிலை, an expletive), வெண்கோட்டு யானை – elephant with white tusks, பொருத – fought, புண் கூர்ந்து – wounded greatly, பைங்கண் வல்லியம் – a green-eyed tiger, a tiger with fresh eyes (பைங்கண் – பண்புத்தொகை, compound word in which the first member stands in adjectival relation to the second), கல் அளை – mountain cave, செறிய – hides, முருக்கு அரும்பு அன்ன – like murukkam flowers, coral tree, Erythrina variegate, வள் உகிர் – sharp claws, வய பிணவு – strong female, கடி கொள – is protecting, வழங்கார் ஆறே – people do not go on the path (ஆறே – ஏகாரம் அசைநிலை, an expletive), ஆயிடை – there, எல்லிற்று என்னான் – he does not think that it is night, வென்வேல் ஏந்தி – lifting his victorious spear, நசை தர வந்த – came with desire, நன்னராளன் – the good man, நெஞ்சு பழுதாக – with sadness in his heart, வறுவியன் – a man who did not attain union, பெயரின் – if he leaves, இன்றிப் பொழுதும் யான் வாழலனே – I will not live even for a moment, எவன் கொல் – what will happen (கொல் – அசைநிலை, an expletive), வாழி தோழி – may you live long my friend, நம் இடை முலை – on my breasts, between my breasts (நம் – தன்மைப் பன்மை, first person plural, இடை முலை – முலை இடை), சுணங்கணி முற்றத்து – on the place decorated with pallor spots, ஆரம் போலவும் – like a garland, சிலம்பு நீடு சோலை – huge grove on the mountain, சிதர் தூங்கு – water sprays hang, நளிர்ப்பின் – cool, இலங்கு வெள் அருவி போலவும் – like bright waterfalls, நிழல் கொண்டனவால் – shade spreads (கொண்டனவால் – ஆல் அசைநிலை, an expletive), திங்கள் அம் கதிரே – the moon’s beautiful rays (கதிரே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 363, மதுரைப் பொன்செய் கொல்லன் வெண்ணாகனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நிரை செலல் இவுளி விரைவுடன் கடைஇ,
அகல் இரு விசும்பிற் பகல் செலச் சென்று
மழுகு சுடர் மண்டிலம் மா மலை மறைய,
பொழுது கழி மலரின், புனை இழை! சாஅய்,
அணை அணைந்து இனையை ஆகல், கணை அரைப்  5
புல் இலை நெல்லிப் புகர் இல் பசுங்காய்
கல் அதர் மருங்கில் கடு வளி உதிர்ப்ப,
பொலம் செய் காசின் பொற்பத் தாஅம்
அத்தம் நண்ணி அதர் பார்த்திருந்த
கொலை வெங்கொள்கைக் கொடுந்தொழில் மறவர் 10
ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த
எஃகு உறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய,
வளைவாய்ப் பருந்தின் வள் உகிர்ச் சேவல்
கிளைதரு தெள் விளி கெழு முடைப் பயிரும்
இன்னா வெஞ்சுரம் இறந்தோர், முன்னிய  15
செய் வினை வலத்தர் ஆகி இவண் நயந்து
எய்த வந்தனரே தோழி, மை எழில்
துணை ஏர் எதிர்மலர் உண்கண்
பிணை ஏர் நோக்கம் பெருங்கவின் கொளவே.

Akanānūru 363, Mathurai Pon Sey Kollan Vennākanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
My friend with fine jewels!  The one who
went to the harsh wasteland,
……….where strong gusts of wind drop on
……….the rock-filled path, fresh, perfect
……….gooseberries from trees with tiny
……….leaves and thick trunks, beautiful
……….like coins made with gold, and cruel
……….wasteland bandits whose business is
……….killing lie in wait, looking at the
……….paths, and those who go on the paths
……….have spears thrown on their precious
……….chests and die of severe wounds, and
……….a male kite with curved beak calls its
……….flocks to eat the stinking flesh,
is returning, and he is nearby, desiring you
with dark and pretty, kohl-lined eyes that are
like two similar flowers placed together and
with the looks of a deer,
and for your great beauty to return,
victorious in what he set out to do, riding fast,
with horses in a row, under the wide, huge sky
riding through the day.  Don’t fall on your bed
like the flowers in the backwaters that fade
when the sun’s rays become dull and hide
behind the huge mountains!

Notes:  பிரிவிடை வேறுபட்ட தலைவியிடம் தோழி சொல்லியது.  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).  விழுப்புண் – புறநானூறு 93, ஒளவை துரைசாமி உரை – சீரிய புண், சீரிய = சிறந்த.  பொலம் – பொன் என் கிளவி ஈறு கெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுள் மருங்கின் தொடர் இயலான (தொல்காப்பியம், புள்ளிமயங்கியல் 61).

Meanings:   நிரை செலல் இவுளி விரைவுடன் கடைஇ – riding fast with horses in a row (கடைஇ – அளபெடை), அகல் இரு விசும்பில் – in the wide huge sky, பகல் செலச் சென்று – riding through the day, மழுகு சுடர் மண்டிலம் – the sun with dull rays, மா மலை மறைய பொழுது – when it hid behind the huge mountains, கழி மலரின் – like the flowers in the backwaters (மலரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), புனை இழை – the young woman with beautiful jewels (அன்மொழித்தொகை), சாஅய் – becoming weak, becoming dull (அளபெடை), அணை அணைந்து இனையை ஆகல் – do not fall like that on your bed (ஆகல் – அல் ஈற்று எதிர்மறை வியங்கோள்), கணை அரை – thick trunks, புல் இலை – tiny leaves, நெல்லிப் புகர் இல் பசுங்காய் – fresh gooseberries without fault, கல் அதர் மருங்கில் – in the rock filled path, கடு வளி உதிர்ப்ப – harsh winds drop, பொலம் செய் காசின் பொற்ப – appearing like coins made with gold (பொற்ப – உவம உருபு, a comparison word), தாஅம் – spread (அளபெடை), அத்தம் நண்ணி அதர் பார்த்திருந்த – going to the wasteland and looking at the path, கொலை வெங்கொள்கை – harsh policy of killing, கொடுந்தொழில் மறவர் – wayside bandits who do cruel business (ஆறலைக் கள்வர்), ஆறு செல் மாக்கள் – those who go on the path, அரு நிறத்து எறிந்த எஃகு – spear thrown on their precious chests, உறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய – those who got severely wounded, those who got deep wounds, வளைவாய்ப் பருந்தின் வள் உகிர்ச் சேவல் – a male kite with a curved beak and sharp claws/talons, கிளைதரு தெள் விளி – clear calls that invite its flock, கெழு முடை – stinking flesh that is there, பயிரும் – calls, இன்னா வெஞ்சுரம் இறந்தோர் – he went through such painful harsh wasteland, he went through the painful hot wasteland, முன்னிய செய் வினை வலத்தர் ஆகி – to be victorious in what he desired to do, இவண் நயந்து – desiring you, எய்த வந்தனரே தோழி – he came near oh my friend (வந்தனரே – ஏகாரம் அசைநிலை, an expletive), மை எழில் – dark and pretty, துணை – together, ஏர் – beautiful, எதிர்மலர் – fresh flowers, flowers that are alike (எதிர்மலர் – புதிய மலர்கள், ஒத்த மலர்கள்), உண்கண் – kohl-rimmed eyes, பிணை ஏர் நோக்கம் – deer like looks (ஏர் – உவம உருபு, a comparison word), பெருங்கவின் கொளவே – to become greatly beautiful (கொளவே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 364, மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
மாதிரம் புதையப் பாஅய்க் கால் வீழ்த்து
ஏறுடைப் பெருமழை பொழிந்தென, அவல் தோறு
ஆடுகளப் பறையின் வரி நுணல் கறங்க,
ஆய் பொன் அவிர் இழை தூக்கியன்ன
நீடு இணர்க் கொன்றை கவின் பெறக், காடுடன்  5
சுடர் புரை தோன்றிப் புதல் தலைக் கொளாஅ
முல்லை இல்லமொடு மலரக், கல்ல
பகுவாய்ப் பைஞ்சுனை மா உண மலிரக்
கார் தொடங்கின்றே காலை, காதலர்
வெஞ்சின வேந்தன் வியன் பெரும் பாசறை  10
வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார்,
யாது செய்வாம் கொல் தோழி? நோதகக்
கொலை குறித்தன்ன மாலை
துனைதரு போழ்தின், நீந்தலோ அரிதே.

Akanānūru 364, Mathurai Maruthankizhār Makanār Perunkannanār, Mullai Thinai – What the heroine said to her friend
Causing directions to be lost, heavy rains
have come down along with thunder, frogs
with stripes on their bodies croak from pits
like parai drums played in dancing arenas,
long clusters of kondrai flowers hang like
bright gold jewels, the forest is beautiful
with flame-like thōndri flowers adorning
the tops of bushes, mullai and illam
flowers have blossomed, and in the
mountains, fresh, large-mouthed springs
are filled to the brim for animals to drink.

Rainy season has started, but my lover
is in the huge battle camp of an enraged
king, with the desire for victory.

Does he think about me? What can we do,
oh friend?  Painful evening time comes
rapidly, like it has targeted me for death.
It would be difficult for me to survive.

Notes:  பருவம் கண்டு அழிந்த தலைவி தோழிக்குச் சொல்லியது.  ஒப்புமை:  ஆடுகளப் பறை மேற்கோள் – அகநானூறு 45 – ஆடுகளப் பறையின் அரிப்பன ஒலிப்ப, அகநானூறு 364 – ஆடுகளப் பறையின் வரி நுணல் கறங்க.  துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  கொளாஅ – கொள்ள என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

Meanings:   மாதிரம் புதைய – causing all directions to be hidden, பாஅய்க் கால் வீழ்த்து –  spread and came down, ஏறுடைப் பெருமழை பொழிந்தென – since heavy rains fell with thunder, அவல் தோறு – in all the pits, ஆடுகளப் பறையின் – like the parai drums in dancing halls (பறையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), வரி நுணல் கறங்க – frogs with stripes croak, ஆய் பொன் அவிர் இழை தூக்கியன்ன – like bright gold jewels hanging, நீடு இணர்க் கொன்றை – laburnum with long clusters, Golden Shower Tree, Cassia fistula, கவின் பெற – become beautiful, காடுடன் – in the forest, சுடர் புரை தோன்றி – flame-like thōndri flowers appear in the forest, Gloriosa superba (புரை – உவம உருபு, a comparison word), புதல் தலைக் கொளாஅ – being on top of the bushes, முல்லை இல்லமொடு மலர – jasmine bloom along with illam flowers, Clearing nut tree, Thetra tree, கல்ல – in the mountains, பகுவாய்ப் பைஞ்சுனை – large-mouthed fresh springs, மா உண மலிர – filled for animals to drink (உண உண்ண என்பதன் விகாரம்), கார் தொடங்கின்றே காலை – when rainy season has started (தொடங்கின்றே – ஏகாரம் அசைநிலை, an expletive), காதலர் – my lover (இகழ்ச்சி), வெஞ்சின வேந்தன் – the king with great rage, வியன் பெரும் பாசறை – wide huge battle camp, வென்றி வேட்கையொடு – with the desire for victory, நம்மும் உள்ளார் – he does not think about us, யாது செய்வாம் கொல் தோழி – what can we do oh friend (கொல் -அசைநிலை, an expletive), நோதக – to be distressed, கொலை குறித்தன்ன – like it comes with the intention of killing, மாலை – evening time, துனைதரு போழ்தின் – when it comes fast toward me, நீந்தலோ அரிதே – it would be difficult to go beyond, it would be difficult to survive this (அரிதே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 365, மதுரை மருதன் இளநாகனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
அகல்வாய் வானம் ஆல் இருள் பரப்ப,
பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு
சினவல் போகிய புன்கண் மாலை,
அத்தம் நடுகல் ஆள் என உதைத்த
கான யானைக் கதுவாய் வள் உகிர்,  5
இரும் பனை இதக்கையின் ஒடியும் ஆங்கண்,
கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை
வருநர் இன்மையின் களையுநர்க் காணா
என்றூழ் வெஞ்சுரம் தந்த நீயே
துயர் செய்து ஆற்றாயாகிப் பெயர்பு ஆங்கு  10
உள்ளினை, வாழிய நெஞ்சே! வென்வேல்
மாவண் கழுவுள் காமூர் ஆங்கண்,
பூதம் தந்த பொரி அரை வேங்கைத்
தண் கமழ் புது மலர் நாறும்
அம் சில் ஓதி ஆய் மடத்தகையே.   15.

Akanānūru 365, Mathurai Maruthan Ilanākanār, Pālai Thinai – What the hero said to his heart
May you live long, my heart!  You
brought me to this hot, harsh
wasteland,

where in the dull, painful evening
time with rage, when thick darkness
spreads in the wide sky,
and the day has ended slowly,

a forest elephant kicks a memorial
stone thinking that it is a person,
its sharp claws split and break
like the skins of palmyra nungu,
and unable to see anybody on the
path, harsh bandits who stalk with
arrows are not able to remove
their poverty by stealing.

You have caused me trouble, and
you are not satisfied.  You are
thinking about her, the noble
woman with pretty, delicate
hair adorned with fragrant, fresh
flowers from vēngai trees with coarse
trunks, given by a deity, in Kāmūr
town of greatly generous Kazhuvul
who owns victorious spears!

Notes:  பொருள்வயின் பிரிந்த தலைவன் இடைச்சுரத்தில் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.  ஆல் இருள் (1) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – நிறைந்த இருள், மிக்க இருள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – மால் இருள் என்று பதவுரையில் குறித்து மயக்கத்தைத் தருகின்ற இருள், பேரிருள் என்றும் பொருள் கூறுகின்றார்.  பிற பாடல்களில் மிகுந்த இருட்டைக் குறிக்க ‘ஆர் இருள்’ என்றே உள்ளது.  ஒப்புமை:  அகநானூறு 135 – அடு போர் வீயா விழுப்புகழ் விண் தோய் வியன் குடை ஈர் எழு வேளிர் இயந்து ஒருங்கு எறிந்த கழுவுள் காமூர் போல.

Meanings:   அகல்வாய் வானம் – wide sky, ஆல் இருள் பரப்ப – spread pitch darkness, பகல் ஆற்றுப்படுத்த – causing the sun to go away, பையென் தோற்றமொடு – with a dull appearance, சினவல் போகிய – with anger, புன்கண் மாலை – painful evening, அத்தம் நடுகல் ஆள் என உதைத்த கான யானை – forest elephant kicked a memorial stone thinking that it is a person, கதுவாய் வள் உகிர் – sharp claws which are ruined, இரும் பனை – dark/big palmyra, இதக்கையின் ஒடியும் – break like the skin of nungu/tender palm seed (இதக்கையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), ஆங்கண் – there, கடுங்கண் ஆடவர் – harsh men, ஏ – arrows, முயல் கிடக்கை – waiting in the vast land with effort, வருநர் இன்மையின் – since there is nobody coming, களையுநர்க் காணா – not able to see those who will help them remove their poverty, என்றூழ் – hot sun, வெஞ்சுரம் தந்த நீயே – you brought me to this harsh wasteland, you brought me to this hot wasteland (நீயே – ஏகாரம் அசைநிலை, an expletive), துயர் செய்து – caused me trouble, ஆற்றாயாகி – and you are not satisfied, பெயர்பு – coming here, ஆங்கு – there, உள்ளினை – you think, வாழிய நெஞ்சே – may you live long my friend, வென்வேல் மா வண் கழுவுள் காமூர் – Kāmūr town belonging to Kazhuvul with victorious spears who is greatly charitable, ஆங்கண் – there, பூதம் தந்த – given by a deity, பொரி அரை வேங்கை – kino trees with rough trunks, Pterocarpus marsupium, தண் கமழ் புது மலர் நாறும் – cool new flowers that spread fragrance, அம் சில் ஓதி ஆய் மடத் தகையே – the esteemed pretty women with beautiful delicate hair (அம் சில் ஓதி – அன்மொழித்தொகை, தகையே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 366, குடவாயில் கீரத்தனார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது, அவன் பரத்தையிடமிருந்து பிரிந்து வந்தப் பின்
தாழ் சினை மருதம் தகை பெறக் கவினிய
நீர் சூழ் வியன் களம் பொலியப் போர்பு அழித்து,
கள் ஆர் களமர் பகடு தலை மாற்றி
கடுங்காற்று எறியப் போகிய துரும்புடன்
காயல் சிறு தடிக் கண் கெடப் பாய்தலின்,  5
இரு நீர்ப் பரப்பின் பனித்துறைப் பரதவர்
தீம் பொழி வெள் உப்புச் சிதைதலின், சினைஇக்,
கழனி உழவரொடு மாறு எதிர்ந்து, மயங்கி
இருஞ்சேற்று அள்ளல் எறிசெருக் கண்டு,
நரை மூதாளர் கை பிணி விடுத்து  10
நனைமுதிர் தேறல் நுளையர்க்கு ஈயும்
பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன,
நலம் பெறு பணைத்தோள் நன்னுதல் அரிவையொடு,
மணங்கமழ் தண் பொழில் அல்கி நெருநை
நீ தற்பிழைத்தமை அறிந்து  15
கலுழ்ந்த கண்ணள் எம் அணங்கு அன்னாளே.

Akanānūru 366, Kudavāyil Keerathanār, Marutham Thinai – What the heroine’s friend said to the unfaithful hero
My friend, who is like a goddess, is crying,
knowing yesterday you were with a woman
with fine forehead and arms like bamboo,
in the fragrant, cool grove, her beauty like
that of Neezhal town belonging to Evvi
wearing gold jewels,

where marutham trees with low branches
are beautiful in the land surrounded by water,
farmers drinking liquor switched oxen and
threshed paddy to remove chaff, and in the
heavy winds, small pieces of dust went past the
field edges and fell on the white salt in the salt
pans, ruining them, angering  the fishermen of
the cool, vast ocean who got into a fight with
the farmers, throwing dark mud at each other,
and an old man with white hair separated them
and gave the fishermen clear liquor aged with buds.

Notes:  பரத்தையிற் பிரிந்துவந்த தலைவன் வாயில் வேண்டினான்.  அது கேட்ட தோழி அவன் வேண்டுகோளுக்கு இணங்காளாய் மறுப்பது போன்று தலைவி கூறுவது போல் கூறியது.  தீம் பொழி (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தமது உணவிற்கு இனிமையைத் தருகின்ற, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – இனிமை மிக்க.  வரலாறு:  எவ்வி, நீழல்.  பொலம் – பொன் என் கிளவி ஈறு கெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுள் மருங்கின் தொடர் இயலான (தொல்காப்பியம், புள்ளிமயங்கியல் 61).

Meanings:   தாழ் சினை மருதம் – marutham with low branches, Terminalia arjuna, தகை பெறக் கவினிய – esteemed and beautiful, நீர் சூழ் வியன் களம் – the threshing area surrounded by water, பொலிய – to be splendid, போர்பு அழித்து – brought down the haystacks and threshed them using bulls, கள் ஆர் களமர் – those who weed drink liquor, பகடு தலை மாற்றி – changed oxen, கடுங்காற்று எறிய – in the fierce wind that blew, போகிய துரும்புடன் காயல் சிறு தடிக் கண் கெடப் பாய்தலின் – since the tiny pieces of paddy grasses flew and spread  in the salt pans with small divisions, இரு நீர்ப் பரப்பின் பனித் துறைப் பரதவர் – the fishermen of the cool shores of the vast ocean, தீம் – sweetness, பொழி – abundant, providing, வெள் உப்புச் சிதைதலின் சினைஇ – became angry since their white salt got ruined (சினைஇ – அளபெடை), கழனி உழவரொடு மாறு எதிர்ந்து மயங்கி – got into fight with the field workers, இருஞ்சேற்று அள்ளல் எறி செருக் கண்டு – seeing them throw dark mud and fight, seeing them throw a lot of mud and fight, நரை மூதாளர் கை பிணி விடுத்து – an old man with white hair separated their hands, நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும் – gifts aged clear liquor with buds to fishermen, பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன – like Neezhal town belonging to king Evvi wearing gold jewels, நலம் பெறு பணைத் தோள் நன்னுதல் அரிவையொடு – with a young woman with beautiful bamboo-like arms and fine forehead, மணங்கமழ் தண் பொழில் – fragrance spreading cool grove, அல்கி – stayed, நெருநை – yesterday, நீ தற் பிழைத்தமை அறிந்து – knowing that you harmed her, கலுழ்ந்த கண்ணள்  – she is of teary eyes, எம் – our, அணங்கு அன்னாளே – the goddess-like woman (அன்னாளே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 367, பரணர், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
இலங்கு சுடர் மண்டிலம் புலம் தலைப்பெயர்ந்து,
பல் கதிர் மழுகிய கல் சேர் அமையத்து
அலந்தலை மூது ஏறு ஆண் குரல் விளிப்ப,
மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய
முனையுழை இருந்த அம் குடிச் சீறூர்க்,  5
கருங்கால் வேங்கைச் செஞ்சுவல் வரகின்
மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறைக்,
குவியடி வெருகின் பைங்கண் ஏற்றை
ஊன் நசைப் பிணவின் உயங்கு பசி களைஇயர்,
தளிர் புரை கொடிற்றின் செறி மயிர் எருத்தின்,  10
கதிர்த்த சென்னிக் கவிர்ப் பூ அன்ன
நெற்றிச் சேவல் அற்றம் பார்க்கும்
புல்லென் மாலையும் இனிது மன்றம்ம,
நல் அக வனமுலை அடையப் புல்லுதொறும்
உயிர் குழைப்பு அன்ன சாயல்  15
செயிர்தீர் இன் துணைப் புணர்ந்திசினோர்க்கே.

Akanānūru 367, Paranar, Pālai Thinai – What the heroine said to her friend
Listen!  For those who embrace tightly their
faultless, sweet, tender partners, holding them to
their chests with pretty breasts, feeling their lives
melting, even this dull evening time is sweet,

when,
the sun’s bright rays move away from the sky,
become dull and reach the mountains, where
an old stag bellows in his manly voice, deer
gather under a nochi tree growing in a yard of
a house in a beautiful, small town near a forest
fort, where silos are filled with abundant millet
that grows on a red plateau surrounded by vēngai
trees with dark colored trunks, and to remove the
distressing hunger of his hungry mate, a green-eyed
male wild cat with pointed toes stalks a rooster with
sprout-like cheeks, neck with thick feathers, bright
head and comb like the flowers of kavir trees.

Notes:  பிரிவிடை வேறுபட்ட தலைவி வற்புறுத்தும் தோழியிடம் கூறியது.  ஒப்புமை:  மனை நொச்சி – அகநானூறு 21 – மனை இள நொச்சி, அகநானூறு 23 – மனைய தாழ்வின் நொச்சி, அகநானூறு 367 – மனை வளர் நொச்சி, நற்றிணை 246 – மனை மா நொச்சி, பொருநராற்றுப்படை 185 – மனை நொச்சி.   சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல் 29).  கதிர்த்த (11) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – நிமிர்ந்த, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒளியுடைய.

Meanings:   இலங்கு சுடர் மண்டிலம் – bright sun with rays, புலம் தலைப்பெயர்ந்து – moves away from the sky, பல் கதிர் – many rays, மழுகிய – become dull, கல் சேர் அமையத்து – at the time when it reaches the mountains, அலந்தலை மூது ஏறு – a panicked old stag, ஆண் குரல் விளிப்ப – calls with his male voice, மனை வளர் நொச்சி – nochi tree growing in the house, Vitex leucoxylon, Chaste tree, மா சேர்பு வதிய – where deer gather, முனையுழை இருந்த – near the forest forts, அம் குடிச் சீறூர் – beautiful small town, கருங்கால் வேங்கை – kino trees with sturdy/big/dark-colored trunks, Pterocarpus marsupium, செஞ்சுவல் வரகின் – of millet growing on the red plateau, மிகு பதம் நிறைந்த – with abundant grains, தொகு – together, கூட்டு ஒரு சிறை – one side of the grain silos, குவியடி – pointed feet, வெருகின் பைங்கண் ஏற்றை – a male wild cat with green eyes, a male wild cat with fresh eyes (பைங்கண்- பண்புத்தொகை, compound word in which the first member stands in adjectival relation to the second), ஊன் நசைப் பிணவின் உயங்கு பசி களைஇயர் – to remove the distressing hunger of its mate desiring food (களைஇயர் – அளபெடை), தளிர் புரை கொடிற்றின் – with cheeks that are like sprouts (புரை – உவம உருபு, a comparison word), செறி மயிர் எருத்தின் – with a neck with thick feathers, கதிர்த்த சென்னி – lifted head, bright head, கவிர்ப் பூ அன்ன நெற்றி – comb like coral tree flowers, முருக்க மரம், Indian coral tree, Erythrina indica (நெற்றி – ஆகுபெயர் சேவலின் கொண்டைக்கு), சேவல் – rooster, cock, அற்றம் பார்க்கும் – looks for an opportunity to kill, புல்லென் மாலையும் – dull evening, இனிது மன்றம்ம – it is sweet for sure, you listen to me (மன்றம்ம = மன்ற அம்ம, மன்ற – உறுதியாக, தேற்றமாக, அம்ம கேட்பித்தற்பொருட்டு), நல் அக வன முலை – pretty breasts on fine chests, அடையப் புல்லுதொறும் – whenever embracing tightly, உயிர் குழைப்பு அன்ன – like life is melting, சாயல் – tender, செயிர் தீர் – faultless, இன் துணைப் புணர்ந்திசினோர்க்கே – to those who unite with their sweet partners (இசின் – படர்க்கையின் கண் வந்தது, an expletive of the third person, ஏ -அசைநிலை, an expletive)

அகநானூறு 368, மதுரை மருதன் இளநாகனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
தொடுதோல் கானவன் சூடுறு வியன் புனம்
கரி புறம் கழீஇய பெரும் பாட்டு ஈரத்துக்,
தோடு வளர் பைந்தினை நீடு குரல் காக்கும்,
ஒண்தொடி மகளிர்க்கு ஊசல் ஆக
ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய  5
குறும்பொறை அயலது நெடுந்தாள் வேங்கை,
மட மயில் குடுமியின் தோன்றும் நாடன்,
உயர்வரை மருங்கின் காந்தள் அம் சோலைக்
குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில்,
கடி சுனைத் தெளிந்த மணி மருள் தீ நீர்  10
பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடிப்,
பல் நாள் உம்பர்ப் பெயர்ந்து, சில் நாள்
கழியாமையே வழிவழிப் பெருகி
அம் பணை விளைந்த தேக் கள் தேறல்
வண்டுபடு கண்ணியர் மகிழும் சீறூர்,  15
எவன் கொல், வாழி தோழி, கொங்கர்
மணி அரை யாத்து மறுகின் ஆடும்
உள்ளி விழவின் அன்ன
அலர் ஆகின்றது பலர் வாய்ப்பட்டே?

Akanānūru 368, Mathurai Maruthan Ilanākanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her
May you live long, my friend!  He played
with us in the bright, clear springs with
sapphire-like, sweet waters, like a male
elephant that united with its female,
……….in the small forest dense with trees,
……….where even monkeys don’t know
……….their way, in the lofty mountains
……….with lovely groves of kānthal
……….flowers,
the man from the mountain, where
women wearing bright bangles protect
long spears of fresh millet growing with
long leaves on the vast land washed by
heavy rains, that the forest dwellers
wearing slippers had burned to clear, and
play on swings hung from branches filled
with flower clusters, left, without removing,
so that their girls can play, of a vēngai tree
with tall trunk, near a hill, that appears like
the crest of a delicate peacock.

He has moved to another land, and in just
a few days, gossip as loud as the Ulli festival,
celebrated by Kongu people with bells tied
to their waists as they dance on the streets,
has risen in this small town where people
wear bee-swarming garlands and drink clear
honey liquor aged in pretty bamboo pipes.

Notes:  தலைவிக்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது.  ஒப்புமை:  மூங்கிலில் விளைந்த கள் – அகநானூறு 348 – ஆடு அமைப் பழுநிக் கடுந்திறல் பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி, அகநானூறு 368 – அம் பணை விளைந்த தேக் கள் தேறல், நற்றிணை 276 – வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு, பதிற்றுப்பத்து 81 – தூம்பு அகம் பழுனிய தீம் பிழி, திருமுருகாற்றுப்படை 195 – நீடு அமை விளைந்த தேக் கள் தேறல், மலைபடுகடாம் 171 – வேய்ப் பெயல் விளையுள் தேக்கட் தேறல், மலைபடுகடாம் 522 – திருந்து அமை விளைந்த தேக் கள் தேறல்.  வரலாறு:  கொங்கர்.

Meanings:   தொடுதோல் கானவன் – forest dweller wearing slippers, சூடுறு வியன் புனம் – burnt wide field, கரி புறம் கழீஇய – burnt and cleared the land that is washed (கழீஇய – அளபெடை), பெரும் பாட்டு ஈரத்து – in the place that is made wet by heavy rains, தோடு – leaves, sheaths, வளர் – growing, பைந்தினை நீடு குரல் காக்கும் – protect the long spears of fresh millet, ஒண்தொடி மகளிர்க்கு – for women with bright bangles, ஊசல் ஆக – as swing, ஆடு சினை ஒழித்த கோடு – branch left for playing, இணர் கஞலிய – with flourishing clusters (of flowers), with dense clusters, (of flowers), குறும்பொறை அயலது – near a small hill/boulder, நெடுந்தாள் வேங்கை – tall-trunked kino tree, Pterocarpus marsupium, மட மயில் குடுமியின் தோன்றும் – appears like the crest of a naive peacock (குடுமியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), நாடன் – man from this country, உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலை – groves with glory lilies in the tall mountain, குரங்கு அறிவாரா – even monkeys don’t know their way, மரம் பயில் இறும்பில் – in the small forest dense with trees, கடி சுனை – bright spring, protected spring, fragrant spring, தெளிந்த – clear, மணி மருள் – sapphire like (மருள் – உவம உருபு, a comparison word), தீ நீர் – sweet water, பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடி – played with us for many days like a male elephant that united with its female (களிற்றின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), பல் நாள் – many days, உம்பர்ப் பெயர்ந்து – moved away to another land, சில் நாள் கழியாமையே – without a few days passing, வழிவழிப் பெருகி – increased more and more, அம் பணை விளைந்த தேக் கள் தேறல் – clear honey liquor aged in beautiful bamboo (pipes), வண்டுபடு கண்ணியர் – people wearing flower strands swarmed by bees, மகிழும் – happy, சீறூர் – in the small town, எவன் கொல் – why (கொல் – அசைநிலை, an expletive), வாழி தோழி – may you live long my friend, கொங்கர் மணி அரை யாத்து மறுகின் ஆடும் – those in Kongar’s country dance on the streets with bells tied on their waists, உள்ளி – Ulli festival, விழவின் அன்ன அலர் ஆகின்றது பலர் வாய்ப்பட்டே – gossip is loud like festivals, from many mouths (விழவின் – இன் சாரியை, வாய்ப்பட்டே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 369, நக்கீரர், பாலைத் திணை – மகட்போக்கிய செவிலித்தாய் சொன்னது
கண்டிசின் மகளே கெழீஇ இயைவெனை
ஒண்தொடி செறித்த முன் கை ஊழ்கொள்பு
மங்கையர் பல பாராட்டச் செந்தார்க்
கிள்ளையும் தீம் பால் உண்ணா மயில் இயல்
சேயிழை மகளிர் ஆயமும் அயரா  5
தாழியும் மலர் பல அணியா கேழ் கொளக்
காழ் புனைந்து இயற்றிய வனப்பமை நோன் சுவர்
பாவையும் பலி எனப் பெறாஅ நோய் பொர
இவை கண்டு இனைவதன் தலையும் நினைவிலேன்
கொடியோள் முன்னியது உணரேன் தொடியோய்  10
இன்று நின் ஒலி குரல் மண்ணல் என்றதற்கு
எற் புலந்து அழிந்தனளாகித் தன் தகக்
கடல் அம் தானைக் கைவண் சோழர்
கெடல் அரு நல்லிசை உறந்தை அன்ன
நிதியுடை நல்நகர்ப் புதுவது புனைந்து  15
தமர் மணன் அயரவும் ஒல்லாள் கவர் முதல்
ஓமை நீடிய உலவை நீளிடை
மணியணி பலகை மாக் காழ் நெடுவேல்
துணிவுடை உள்ளமொடு துதைந்த முன்பின்
அறியாத் தேஎத்து அருஞ்சுரம் மடுத்த  20
சிறியோற்கு ஒத்த என் பெரு மடத்தகுவி
சிறப்பும் சீரும் இன்றிச் சீறூர்
நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை
ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில்
ஏதில் வறுமனைச் சிலம்புடன் கழீஇ  25
மேயினள் கொல் என நோவல் யானே.

Akanānūru 369, Nakkeerar, Pālai Thinai – What the foster mother said to the heroine’s friend, after the heroine eloped
Look at this, my daughter!  What is the
use of our close relationship?

The pet parrot with red neck band refuses to
drink sweet milk, even when young women
hold it on their forearms
with bright bangles, in the proper manner
uttering praises.  Her friends with beautiful
jewels and peacock nature do not play games
anymore.  The big urn does not have any
flowers, and the goddess image decorated
with pearl strands on the sturdy wall does
not get any offerings.

I am sick on seeing this and also worrying on
top of that.  I didn’t know what that harsh
young woman desired to do.

My daughter hates me and is hurting in her
heart, for the ceremonial bath that I
gave her, washing her thick hair!

She left, not agreeing with her family that
desired to conduct her marriage, decorating   
their fine house, rich like Uranthai city of
the charitable Chozha king with an ocean-like
army.

My splendid noble young daughter
left for the wasteland with her lover who
carries a shield with embedded gems and a
spear with a fine iron stem, on the long path with
omai trees with forked trunks and dry branches,
on their way to an unknown country, with a
strong mind.  She is suitable for him.

Will she perform her ankle removal ceremony
in a small village with no luxury or celebrations,
in a hut woven with grass belonging to a poor
woman, strangers with nothing, where a cow is
tied to the front veranda pillar?  I am hurting!

Notes:   செவிலித்தாய் தன் மகளான தலைவியின் தோழிக்குச் சொல்லியது.  தொல். களவியல் 35 – தோழி தானே செவிலி மகளே.  வரலாறு:  சோழர், உறந்தை.  ஒப்புமை:  குறுந்தொகை 171 – இது மற்று எவனோ நொதுமலர் தலையே.  There was an anklet-removal ceremony that was performed before marriage.  Ainkurunūru 399, Akanānūru 315, 369, and 385 and Natrinai 279 have references to this ceremony.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).  இயைவெனை (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இயைவு எனை, பொருந்துவதாலே யாது பயன், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – இயைவெனை, இயைந்து இருந்தேனுடைய நிலை. ஒலி குரல் மண்ணல் என்றதற்கு (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தழைத்த கூந்தலின்கண் மங்கல நீராட்டு நாளாம் என்று அறிவித்ததற்காக, மண்ணல் ஒரு சடங்கு, அஃதாவது மணப்பருவம் எய்திய மகளிரை மங்கல நீராட்டுவது என்று கொள்க, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – தழைத்த கூந்தலைப் புனைக.  செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல். களவியல் 34).

Meanings:   கண்டிசின் – you see (சின் – முன்னிலை அசைச் சொல், an expletive of the second person), மகளே – oh daughter, கெழீஇ இயைவு எனை – what is the use of close relationship, my situation with close relationship (கெழீஇ – அளபெடை), ஒண்தொடி செறித்த முன் கை – forearms with many bright bangles, ஊழ் கொள்பு – according to tradition, according to the correct method, மங்கையர் பல பாராட்ட – many women praised, செந்தார்க் கிள்ளையும் – parrot with red neck band, தீம் பால் உண்ணா – does not drink sweet milk, மயில் இயல் – peacock nature, சேயிழை மகளிர் – women with perfect jewels, women with red jewels, ஆயமும் – friends, அயரா – do not play, தாழியும் மலர் பல அணியா – the big flower pot/urn does not have flowers, கேழ் கொள – with bright colors, காழ் புனைந்து இயற்றிய வனப்பமை – created beautifully with pearl strands, நோன் சுவர் பாவையும் – the female deity on the strong wall, பலி எனப் பெறாஅ – does not get offerings (பெறாஅ – அளபெடை), நோய் பொர – getting sick, இவை கண்டு – on seeing this, இனைவதன் தலையும் – worrying on top of that, நினைவு இலேன் – I did not know, கொடியோள் – harsh young woman, முன்னியது உணரேன் – I did not know what she was desiring, தொடியோய் – oh one with bangles, இன்று – today, நின் ஒலி குரல் மண்ணல் என்றதற்கு – for having said ‘your hair needs to be washed with a ritual’, for having said ‘decorate your hair’ (மண்ணல் – மண்ணுக, வியங்கோள் வினைமுற்று), எற் புலந்து – hating me, அழிந்தனளாகி – she became distressed, தன் தக – fitting his status, கடல் அம் தானை – fine army as large as an ocean, கைவண் சோழர் – charitable Chozha king, கெடல் அரு – difficult to ruin, நல் இசை உறந்தை அன்ன – like Uranthai city with good fame, நிதியுடை – with wealth, நல் நகர்ப் புதுவது புனைந்து – decorated the fine house with new things, தமர் மணன் அயரவும் ஒல்லாள் – she did not agree to her family performing her wedding (மணன் மணம் என்றதன் போலி), கவர் முதல் ஓமை – omai trees with forked trunks, Dillenia indica, Toothbrush Tree, நீடிய உலவை – long dry branches, நீளிடை – in the long path, மணியணி பலகை – shield with gems, மாக் காழ் – fine iron stem, strong iron stem, நெடுவேல் – long spear, துணிவுடை உள்ளமொடு – with a strong mind, துதைந்த முன்பின் – with great strength, அறியாத் தேஎத்து – a country that he did not know about (தேஎத்து – அளபெடை), அருஞ்சுரம் மடுத்த – took her with him to the wasteland, சிறியோற்கு – to the young man, ஒத்த – suitable , என் பெரு மடத் தகுவி – my greatly splendid young woman, சிறப்பும் சீரும் இன்றி – without any splendor or luxury, சீறூர் – small village, நல்கூர் பெண்டின் – of a woman in poverty, புல் வேய் குரம்பை – a hut made from weaving grass, ஓர் ஆ யாத்த – a single cow tied, ஒரு தூண் முன்றில் – front yard with a column (முன்றில் – இல்முன்), ஏதில் வறுமனை – stranger’s poor house with nothing, சிலம்புடன் கழீஇ மேயினள் கொல் என – thinking whether she is celebrating her anklet removing ceremony there (கழீஇ – அளபெடை, கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), நோவல் யானே – I am hurting (யானே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 370, அம்மூவனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
வளைவாய்க் கோதையர் வண்டல் தைஇ
இளையோர் செல்ப, எல்லும் எல்லின்று,
அகல் இலைப் புன்னைப் புகர் இல் நீழல்,
பகலே எம்மொடு ஆடி, இரவே
காயல் வேய்ந்த தேயா நல் இல்  5
நோயொடு வைகுதி ஆயின், நுந்தை
அருங்கடிப் படுவலும் என்றி மற்று
செல்லல் என்றலும் ஆற்றாய், “செலினே
வாழலென்” என்றி ஆயின் ஞாழல்
வண்டு படத் ததைந்த கண்ணி நெய்தல்  10
தண் அரும் பைந்தார் துயல்வர அந்திக்
கடல் கெழு செல்வி கரை நின்றாங்கு
நீயே கானல் ஒழிய, யானே
வெறி கொள் பாவையின் பொலிந்த என் அணி துறந்து,
ஆடுமகள் போலப் பெயர்தல்  15
ஆற்றேன் தெய்ய, அலர்க இவ்வூரே.

Akanānūru 370, Ammoovanār, Neythal Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
Young girls with curved garlands have
left after playing with sand houses and
the day has turned to night.

You played with us during the day in
the thick shade of punnai trees. Now
I ask you to go to your rich house with
dry grass roof, and you tell me that you
will suffer with your love affliction and
your father will put you under strict
guard, and you will not live.

You stand in the seashore grove like the
ocean goddess wearing a gnāzhal flower
strand swarmed by bees, and a cool,
fresh waterlily garland, who stands on the
shore at twilight.  I am losing my beauty
like that of a veriyāttam dancer and I am
unable to leave like that dancing woman.
Let this town gossip!

Notes:  தலைவிக்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது.  ஆடுமகள் – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – பெயர் மாத்திரையாய் நின்றது.

Meanings:   வளைவாய்க் கோதையர் – women with curved garlands, வண்டல் தைஇ –  creating sand houses/dolls (தைஇ – அளபெடை), இளையோர் செல்ப – young women leave, எல்லும் எல்லின்று – day has ended and night has arrived, அகல் இலைப் புன்னை – punnai trees with wide leaves, Calophyllum inophyllum, Laurel Tree, Mast wood Tree, புகர் இல் நீழல் – shade without any spots, dense shade (நீழல் – நிழல் என்பதன் நீட்டல் விகாரம்), பகலே எம்மொடு ஆடி – played with us during the day (பகலே – பகலில்), இரவே – at night (இரவில்), காயல் வேய்ந்த – with dry grass roof, with dry grass walls, தேயா நல் இல் – prosperous fine house, நோயொடு வைகுதி ஆயின் – if you are with love disease, நுந்தை அருங்கடிப் படுவலும் என்றி – you tell me that your father will put you under strict guard (நுந்தை – நும் + தந்தை, மருஉ மொழி, படுவலும் – உம்மை அசைநிலை, என்றி – முன்னிலை ஒருமை), மற்று செல்லல் என்றலும் ஆற்றாய் – you are not agreeable when I ask you to leave and go home (செல்லல் – அல் ஈற்று உடன்பாட்டு வியங்கோள்), செலினே வாழலென் என்றி – you say that you will not live if you leave, you say that you will not live if he goes (என்றி – முன்னிலை ஒருமை), ஆயின் ஞாழல் வண்டு படத் ததைந்த கண்ணி – strand of clusters of gnāzhal flowers which are swarmed by bees, Cassia sophera, Tigerclaw tree, புலிநகக்கொன்றை, நெய்தல் – waterlilies, தண் அரும் பைந்தார் – cool precious fresh garland, துயல்வர – moving, அந்தி – at twilight, கடல் கெழு செல்வி கரை நின்றாங்கு – like the ocean’s goddess standing on the shore, நீயே கானல் ஒழிய – you are standing in the seashore grove (நீயே – ஏகாரம் அசைநிலை, an expletive), யானே – I (ஏகாரம் அசைநிலை, an expletive),  வெறி கொள் பாவையின் பொலிந்த என் அணி துறந்து – I am losing my flourishing beauty that is like that of a veriyāttam dancer, ஆடுமகள் போல – like a female dancer, பெயர்தல் ஆற்றேன் – I am unable to go, தெய்ய -அசைநிலை, an expletive, அலர்க இவ்வூரே – may this town gossip (ஊர் ஆகுபெயர் ஊர் மக்களுக்கு, இவ்வூரே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 371, எயினந்தை மகன் இளங்கீரனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
அவ் விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை
செவ்வாய்ப் பகழிச் செயிர் நோக்கு ஆடவர்
கணை இடக் கழிந்த தன் வீழ் துணை உள்ளிக்,
குறு நெடுந்துணைய மறி புடை ஆடப்,
புன்கண் கொண்ட திரி மருப்பு இரலை  5
மேய் பதம் மறுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து,
நெய்தல் அம் படுவில் சில் நீர் உண்ணாது,
எஃகு உறு மாந்தரின் இனைந்து கண்படுக்கும்
பைது அற வெம்பிய பாழ் சேர் அத்தம்,
எமியம் நீந்தும் எம்மினும் பனி வார்ந்து  10
என்ன ஆம் கொல் தாமே, தெண் நீர்
ஆய் சுனை நிகர் மலர் போன்ம் என நசைஇ,
வீ தேர் பறவை விழையும்
போது ஆர் கூந்தல் நம் காதலி கண்ணே?

Akanānūru 371, Eyinanthai Makan Ilankeeranār, Pālai Thinai – What the hero said to his heart
More than me, alone, in this hot
wasteland without any greenery,
……….where
……….a stag with twisted antlers
……….thinks about its partner that
……….fell to the red-tipped arrows
……….of men with harsh looks, shot
……….from strong, fast bows pulling
……….the pretty strings tight, and
……….takes care of its playful young
……….ones, small and big, is filled
……….with deep distress and refuses
……….to graze or drink water from the
……….puddles in the saline land, lies
……….down with sorrow like that of
……….those who are pierced by spears,
what will happen to the crying eyes, of my
lover who adorns her hair with flowers,
desired by bees since they resemble the
bright flowers from a spring with clear water?

Notes:  பொருள்வயின் பிரிந்த தலைவன் இடைச்சுரத்தில் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.  அவ்விளிம்பு உரீஇய (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகிய விளிம்புகளைக் கையால் உருவி நாணேற்றிய,  இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – அழகிய விளிம்பினை உருவி நாண் ஏற்றிய, அகநானூறு 175-1 – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தோளின் விளிம்பு உராயும்படி, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – தோளின் விளிம்பினை உரசிய, குறுந்தொகை 297-1 – உ. வே. சாமிநாதையர் உரை – மேல் விளிம்பை உருவிய, தமிழண்ணல் உரை – இழுத்துக் கட்டிய, இரா. இராகவையங்கார் உரை – விளிம்பின் நாண் உருவி.  துணைய (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இரட்டையாகிய, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – அளவினையுடைய.

Meanings:   அவ்விளிம்பு உரீஇய – with pretty rims pulled, with pretty strings pulled (உரீஇய – அளபெடை), விசை அமை நோன் சிலை – fast strong bows, செவ்வாய்ப் பகழி – red-tipped arrows (செவ்வாய் – பண்புத்தொகை, compound word in which the first member stands in adjectival relation to the second), செயிர் நோக்கு ஆடவர் –  men with harsh looks, men with harsh attitude, கணை இட – arrows shot, கழிந்த தன் வீழ் துணை உள்ளி – thinking about its desired partner that fell, குறு நெடும் துணைய – young and old children, small and big children (துணைய – இரட்டையாகிய, அளவில் உள்ள), மறி புடை ஆட – young ones playing near its side, புன்கண் கொண்ட திரி மருப்பு இரலை – sad stag with twisted antlers, மேய் பதம் மறுத்த சிறுமையொடு – with great sorrow and denying grazing for food, நோய் கூர்ந்து – afflicted with great sorrow, நெய்தல் அம் படுவில் – from the puddles in the salty land (அம் – சாரியை), சில் நீர் உண்ணாது – does not drink some water, எஃகு உறு மாந்தரின் – like those who have been attacked by spears (மாந்தரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), இனைந்து கண்படுக்கும் – it sleeps in sorrow, it lies down with sorrow, பைது அற – without greenery, வெம்பிய – is hot, பாழ் சேர் அத்தம் – ruined wasteland, எமியம் நீந்தும் எம்மினும் – more than me who is going alone (நீந்தும் – கடந்து செல்லும்), பனி வார்ந்து – shedding tears, என்ன ஆம் கொல் – what will happen to them (ஆம் – இடைக்குறை, ஆகும் என்பது ஆம் என நின்றது, கொல் -அசைநிலை, an expletive), தாமே – தாம், ஏ அசைநிலைகள், expletives, தெண் நீர் ஆய் சுனை நிகர் மலர் போன்ம் என நசைஇ – desiring since they are like the bright flowers from a pretty spring with clear water (நசைஇ – அளபெடை, போன்ம் – போலும் என்பது இடை உகரம் கெட்டு லகரம் னகரமாய்த் திரிந்து நின்றது), வீ தேர் பறவை விழையும் – bees that desire and choose flowers to swarm, போது ஆர் கூந்தல் – hair with flowers, நம் காதலி கண்ணே – our lover’s eyes (கண்ணே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 372, பரணர், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
அருந்தெறல் மரபின் கடவுள் காப்பப்
பெருந்தேன் தூங்கும் நாடு காண் நனந்தலை,
அணங்குடை வரைப்பின் பாழி ஆங்கண்,
வேண் முது மாக்கள் வியன் நகர்க் கரந்த
அருங்கல வெறுக்கையின் அரியோள் பண்பு நினைந்து,  5
வருந்தினம் மாதோ எனினும், அஃது ஒல்லாய்,
இரும் பணை தொடுத்த பலர் ஆடு ஊசல்
ஊர்ந்து இழி கயிற்றின் செலவர வருந்தி,
நெடுநெறிக் குதிரைக் கூர் வேல் அஞ்சி
கடுமுனை அலைத்த கொடு வில் ஆடவர்  10
ஆ கொள் பூசலின் பாடு சிறந்து எறியும்
பெருந்துடி வள்பின் வீங்குபு நெகிழா
மேய் மணி இழந்த பாம்பின் நீ நனி
தேம்பினை, வாழி என் நெஞ்சே! வேந்தர்
கோண் தணி எயிலிற் காப்புச் சிறந்து,  15
ஈண்டு அருங்குரையள் நம் அணங்கியோளே.

Akanānūru 372, Paranar, Kurinji Thinai – What the hero said to his heart
May you live long, my heart!  We are sad
thinking about her, so difficult to get, like
precious jewels and wealth hidden by the
ancient Vēlirs in their huge city, near the
huge, fierce Pāzhi Mountains where large
honey combs hang, protected by gods
who cannot be ruined, according to
tradition.

Yet, you are not agreeable.  You are sad
like the ropes that go up and down, on
which swings that many play are tied,
which are hung on huge tree branches.

You grieve greatly like a snake that has lost its
gem while eating, looking like the tight and
loose leather straps on huge thudi drums which
were beat when warriors with curved bows,
belonging to Anji, leader of Kuthirai Mountain
who seized cattle from protected enemy lands,
distressing his enemies.

The woman who distresses me is difficult to
attain, like well protected forts that help
reduce enemy rage!

Notes:   அல்ல குறிப்பட்டுப் போகும் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.  வரலாறு:  வேண் முதுமாக்கள் (வேளிர்), பாழி, குதிரை மலை, அஞ்சி (அதியமான் நெடுமான் அஞ்சி).  There was this belief that snakes spit gems.  Puranānūru 294, Akanānūru 72, 92, 138, 192, 372, Kurunthokai 239 and Natrinai 255, have references to snakes spitting gems.  அணங்குடை (3) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – அச்சம் பொருந்திய, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தீண்டி வருத்தும் தெய்வங்களையுடைய.   நெகிழா – நெகிழ்ந்து (தளர்ந்து) என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:   அருந்தெறல் – unable to be ruined, not ruining, மரபின் – with the tradition, கடவுள் காப்ப – protected by gods according to tradition, பெருந்தேன் தூங்கும் நாடு – country where large honeycombs hang, காண் நனந்தலை – wide to see, அணங்குடை வரைப்பின் – fierce mountains, mountains with deities, பாழி ஆங்கண் – in the Pāzhi mountains, வேண் முது மாக்கள் வியன் நகர்க் கரந்த – ancient Vēlirs hid in their vast city, ancient Vēlirs hid in their huge palace, அருங்கல வெறுக்கையின் – like the precious jewels and wealth (வெறுக்கையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), அரியோள் பண்பு நினைந்து வருந்தினம் – we were sad thinking about her difficult-to-get nature, மாதோ – மாது, ஓ அசைநிலைகள், expletives, எனினும் – yet, அஃது ஒல்லாய் – you are not agreeable, இரும் பணை தொடுத்த – tied to on huge branches, பலர் ஆடு ஊசல் – swing on which many play, ஊர்ந்து இழி கயிற்றின் செலவர வருந்தி – sad like the ropes which goes up and down (கயிற்றின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), நெடுநெறிக் குதிரைக் கூர் வேல் அஞ்சி – Anji with sharp spears who owns Kuthirai mountains with long paths (நெடுநெறிக் குதிரை – குதிரை மலைக்கு வெளிப்படை), கடு முனை அலைத்த – distressed protected enemy lands, கொடு வில் ஆடவர் – men with harsh/curved bows, ஆ கொள் பூசலின் பாடு சிறந்து எறியும் பெரும் துடி – huge thudi drums that they beat loudly in battles when they seize cattle, வள்பின் – like straps (இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), வீங்குபு நெகிழா – tightened and loose, மேய் மணி இழந்த பாம்பின் நீ நனி தேம்பினை – you are very sad like a snake that lost its gem while eating (பாம்பின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), வாழி என் நெஞ்சே – may you live long my heart, வேந்தர் கோண் தணி – to reduce the anger of differing/enemy kings, எயிலின் காப்புச் சிறந்து – like well-protected forts (எயிலின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), ஈண்டு அருங்குரையள் – she’s difficult to attain (அருங்குரையள் – குரை என்னும் இடைச்சொல் குறிப்பு வினைமுற்றாக ஆயிற்று), நம் அணங்கியோளே – the young woman who distresses me (அணங்கியோளே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 373, பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
முனை கவர்ந்து கொண்டெனக் கலங்கிப் பீர் எழுந்து,
மனை பாழ் பட்ட மரை சேர் மன்றத்துப்
பணைத் தாள் யானை பரூஉப் புறம் உரிஞ்சக்,
செது காழ் சாய்ந்த முது கால் பொதியில்,
அருஞ்சுரம் நீந்திய வருத்தமொடு கையற்றுப்  5
பெரும் புன் மாலை புலம்பு வந்து உறுதர,
மீளி உள்ளம் செலவு வலியுறுப்பத்
தாள் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு
தன்னிலை உள்ளும் நம் நிலை உணராள்,
இரும் பல் கூந்தல், சேயிழை மடந்தை,  10
கனை இருள் நடுநாள் அணையொடு பொருந்தி,
வெய்துற்றுப் புலக்கும் நெஞ்சமொடு ஐது உயிரா
ஆய் இதழ் மழைக் கண் மல்க நோய் கூர்ந்து
பெருந்தோள் நனைக்கும் கலுழ்ந்து வார் அரிப் பனி
மெல் விரல் உகிரின் தெறியினள், வென்வேல்  15
அண்ணல் யானை அடு போர் வேந்தர்
ஒருங்கு அகப்படுத்த முரவுவாய் ஞாயில்
ஓர் எயில் மன்னன் போலத்,
துயில் துறந்தனள் கொல்? அளியள் தானே.

Akanānūru 373, Pandiyan Ēnāthi Nedunkannanār, Pālai Thinai – What the hero said to his heart
Sitting with her arms wrapped around her
knees, and thinking about her situation,
she does not know about our pitiful plight
in this place that is ruined, caught in battles,
where ridge gourd vines have spread, houses
are ruined, marai deer occupy the common
grounds, elephants with thick legs rubbed
against old columns where ruined rafters
had fallen, and we are lonely and helpless,
our strong minds forcing us to return.

The young woman with thick, dark
hair and fine jewels, lying on her bed
in the pitch darkness of midnight, is
distressed and has a hating heart, tears
are filled in her petal-like, beautiful, moist
eyes and they stream down wetting her wide
arms.  She flicks the tears with her delicate
fingers and sighs gently.

Did she abandon sleep?  She is pitiable
like a king with a fort whose breastwork
is ruined, surrounded by powerful enemy
kings owning elephants, successful in
murderous battles, and owning victorious
spears.

Notes:  பொருள்வயின் பிரிந்த தலைவன் இடைச்சுரத்தில் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.   தாள் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு தன்னிலை உள்ளும் நம் நிலை உணராள் (8-9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – முழந்தாள்களை இரு கைகளாலும் அணைத்துக் கொண்டு தன்னந்தனியாளாய் இருக்கின்ற இருப்பில் இருந்து தனக்கு உண்டான துன்பத்தையே நினைவாள், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – முழந்தாள்களைக் கையாற் பூட்டிய தனித்த நிலையினைதாகிய இருப்புடன் தனது நிலையினையே எண்ணியிருக்கும் நமது இயல்பினை அறியாளாகி.  ஆய் இதழ் மழைக் கண் (13) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – அழகிய பூவிதழ் போன்ற குளிர்ந்த கண்கள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகிய மலர்போன்ற குளிர்ந்த கண்கள்.  ஒப்புமை:  நற்றிணை 43 – உடை மதில் ஓர் எயில் மன்னன் போல.  புறநானூறு 338 – ஓர் எயில் மன்னன்.  அகநானூறு 167 – பெருங்கை யானை வெரிந் ஓங்கு சிறுபுறம் உரிஞ ஒல்கி இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென.  உயிரா – உயிர்த்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  மரை (2) – A kind of deer.  The University of Madras Lexicon defines this as elk.  However, there are no elks in South India.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:   முனை கவர்ந்து கொண்டென – since the place was surrounded by battles, since the place was caught in battles, கலங்கி – ruined, பீர் எழுந்து – ridge gourd vines have spread, Luffa acutangula, மனை பாழ் பட்ட – houses are ruined, மரை சேர் மன்றத்து – in the town’s common grounds that has been occupied by marai deer, பணைத் தாள் யானை – elephant with thick legs, பரூஉப் புறம் – fat back (பரூஉ – அளபெடை), உரிஞ்ச – rubbing, செது காழ் – ruined wooden rafters, sagging wooden beams, சாய்ந்த – ruined, fallen, முது கால் – old pillars, old columns, பொதியில் – in the common grounds, அருஞ்சுரம் நீந்திய வருத்தமொடு – with sorrow on crossing the wasteland, கையற்று – helpless, பெரும் புன் மாலை – painful evening, புலம்பு வந்து உறுதர – feeling lonely, feeling sad (உறுதர – வந்து அடைய), மீளி உள்ளம் – strong mind, செலவு வலியுறுப்ப – pushing me to go back, தாள் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு – seated alone with her hands locked around her knees, seated alone with her hands holding her knees, தன்னிலை உள்ளும் – thinking about her situation, நம் நிலை உணராள் – she does not know our situation, இரும் பல் கூந்தல் – dark thick hair, சேயிழை மடந்தை – the young woman with perfect jewels, young woman with red jewels, கனை இருள் நடுநாள் – midnight in the pitch darkness, அணையொடு பொருந்தி – lying on her bed, வெய்துற்று – feeling sad, புலக்கும் நெஞ்சமொடு – with a hating heart, ஐது உயிரா – she sighs gently (உயிரா – உயிர்த்து), ஆய் இதழ் – pretty petals, pretty eyelids, மழைக் கண் மல்க – with tears filled in her moist eyes, நோய் கூர்ந்து – with great distress, பெருந்தோள் நனைக்கும் – her thick arms get wet, கலுழ்ந்து வார் அரிப் பனி – cries and sheds tears , மெல் விரல் உகிரின் தெறியினள் – she flicks her tears with her delicate fingers, வென்வேல் அண்ணல் – leaders with victorious spears, யானை அடு போர் வேந்தர் – kings owning elephants fighting murderous battles, ஒருங்கு அகப்படுத்த – joining together to surround, joining together to seize, முரவுவாய் ஞாயில் – cracked fort breastwork, cracked fort bastion, ஓர் எயில் மன்னன் போல – like a king with a fort, துயில் துறந்தனள் கொல் – did she abandon sleep (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), அளியள் தானே – she is pitiful, she is pathetic (தானே – தான், ஏ அசைநிலைகள், expletives)

அகநானூறு 374, இடைக்காடனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
மாக் கடல் முகந்து மாதிரத்து இருளி,
மலர்தலை உலகம் புதைய வலன் ஏர்பு
பழங்கண் கொண்ட கொழும் பல் கொண்மூ,
போழ்ந்த போலப் பலவுடன் மின்னி,
தாழ்ந்த போல நனியணி வந்து  5
சோர்ந்த போலச் சொரிவன பயிற்றி,
இடியும் முழக்கும் இன்றிப் பாணர்
வடியுறு நல்யாழ் நரம்பு இசைத்தன்ன
இன் குரல் அழிதுளி தலைஇ, நன் பல
பெயல் பெய்து கழிந்த பூ நாறு வைகறைச்  10
செறி மணல் நிவந்த களர் தோன்று இயவில்,
குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி,
மணி மண்டு பவளம் போலக் காயா
அணிமிகு செம்மல் ஒளிப்பன மறையக்,
கார் கவின் கொண்ட காமர் காலைச்  15
செல்க தேரே, நல் வலம் பெறுந!
பெருந்தோள் நுணுகிய நுசுப்பின்,
திருந்திழை அரிவை விருந்து எதிர்கொளவே.

Akanānūru 374, Idaikkādanār, Mullai Thinai – What the hero said to his charioteer
Many huge, weary clouds absorbed
water from the vast ocean, caused
all directions on the huge earth to be
hidden in darkness,
climbed up with strength, and their
lightning strikes appeared like they
were splitting darkness.

Dense, close to each other, and low,
the clouds rained constantly without
roaring thunder, as raindrops have
fallen like sweet sounds of lute strings
of bards, at dawn in the flower-fragrant,
saline forest path filled with sand,
where pattupoochis with tiny stomachs,
run in little strides like coral next to
sapphire gems as they hide under
the dark, spent, blue kāyā flowers.

Drive the chariot, oh charioteer who
rides with great ability,
so that she can accept us as her guests,
the young woman with wide arms, thin
waist and perfect jewels!

Notes:  வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனுக்குச் சொல்லியது.  Pattupoochis (மூதாய் – இந்திரகோபம், trombidium grandissimum) are tiny red bugs that look like pieces of velvet.  They surface during the rainy season, on sandy soils.  They are kept in boxes by young kids, and fed tender grass.  They are not the silk producing worms or caterpillars.  Akanānūru poems 14, 54, 74, 134, 283, 304, 374, Kalithokai 85 and Natrinai 362 have references to these little red bugs that look like velvet pieces.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:   மாக் கடல் முகந்து – absorbing from the vast ocean, மாதிரத்து இருளி – all sides becoming dark, மலர்தலை – big place, wide place, உலகம் – world, புதைய – to be hidden, வலன் ஏர்பு – climbing with strength, climbing on the right side, பழங்கண் கொண்ட – with weariness, கொழும் பல் கொண்மூ – many thick clouds, போழ்ந்த போல – like they were splitting, பலவுடன் – with many, மின்னி – with lightning, தாழ்ந்த போல – like being low, நனியணி வந்து – very close to each other, சோர்ந்த போல – like they became tired, like being low, சொரிவன பயிற்றி – they rained continuously, இடியும் முழக்கும் இன்றி – without roaring thunder, பாணர் – bards, வடியுறு – lengthened, pulled and tied, நல் யாழ் – fine lutes,  நரம்பு இசைத்தன்ன – like the music created by strings, இன் குரல் அழிதுளி தலைஇ – with abundant raindrops that fell with sweet sounds (தலைஇ – அளபெடை), நன் பல பெயல் பெய்து கழிந்த – rained well a lot, பூ நாறு வைகறை – early morning time with the fragrance of flowers, செறி மணல் நிவந்த – dense sand on the top, களர் தோன்று இயவில் – in the saline forest path, குறு மோட்டு மூதாய் – velvet bugs with tiny stomachs, Trombidium grandissimum, பட்டுப்பூச்சி, குறு குறு ஓடி மணி மண்டு பவளம் போல – they run in tiny strides like coral placed with gems, காயா அணி மிகு செம்மல் ஒளிப்பன மறைய – they hide under the beautiful spent kāyā flowers, கார் கவின் கொண்ட காமர் காலை – when rain has made it beautiful in this desirable time, செல்க தேரே – you ride the chariot, நல் வலம் பெறுந – oh one who is victorious, பெருந்தோள் – wide arms, big arms, நுணுகிய நுசுப்பின் – with a thin waist, with a delicate waist, திருந்திழை அரிவை – the young woman with perfect jewels, விருந்து எதிர்கொளவே – for her to accept us as her guests (கொளவே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 375, இடையன் சேந்தங்கொற்றனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
“சென்று நீடுநர் அல்லர், அவர் வயின்
இனைதல் ஆனாய்” என்றிசின் இகுளை,
அம்பு தொடை அமைதி காண்மார் வம்பலர்
கலன் இலர் ஆயினும், கொன்று புள் ஊட்டும்
கல்லா இளையர் கலித்த கவலைக்,  5
கண நரி இனனொடு குழீஇ நிணன் அருந்தும்
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல்,
அத்த எருவைச் சேவல் சேர்ந்த
அரை சேர் யாத்த வெண்திரள், வினை விறல்
எழாஅத் திணி தோள் சோழர் பெருமகன்  10
விளங்கு புகழ் நிறுத்த இளம்பெருஞ்சென்னி
குடிக் கடன் ஆகலின், குறை வினை முடிமார்
செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி
வம்ப வடுகர் பைந்தலை சவட்டிக்,
கொன்ற யானைக் கோட்டின் தோன்றும்  15
அஞ்சுவரு மரபின் வெஞ்சுரம் இறந்தோர்
நோய் இலர் பெயர்தல் அறியின்,
ஆழல மன்னோ தோழி என் கண்ணே.

Akanānūru 375, Idaiyan Chēnthankotranār, Pālai Thinai – What the heroine said to her friend
My friend!  You tell me I worry
about him, and that he’s not one to
stay away for long.

My eyes will not cry, my friend, if I
know that he’ll be back without any
harm from the fierce wasteland,

where
uneducated wasteland warriors shoot
at travelers on forked paths, just to
practice arrow skills, even if they don’t
have any jewels, feed their bodies to
birds, and packs of foxes gather to eat
flesh, male vultures with their flocks
get blood on their huge, joined claws
and rest on the thick, white branches
of trees with trunks that appear like
the tusks of elephants that crushed the
heads and killed Vadukars in their Pāzhi
fort with walls like copper that was ruined
as a duty to his citizens and to finish his
war work by king Ilamperunchenni, efficient,
victorious Chozha heir with strong shoulders,
who established great fame.

Notes:   பிரிவிடை வேறுபட்ட தலைவி தோழியிடம் சொல்லியது.  ஒப்புமை:  செம்புச் சுவர் – புறநானூறு201 – செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை, அகநானூறு 375, புறநானூறு 37 – செம்பு உறழ் புரிசை, மதுரைக்காஞ்சி 485 – செம்பு இயன்றன்ன செஞ்சுவர், நெடுநல்வாடை112 – செம்பு இயன்றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்.  வடுகர் – ஒளவை துரைசாமி உரை புறநானூறு 278 – தொண்டை நாட்டுத் திருவேங்கடத்திற்கு வடக்கில் உள்ள நாட்டவராதலால் வடுகர் எனப்பட்டனர், பொ. வே. சோமசுந்தரனார் உரை அகநானூறு 213 – தெலுங்கர்.  There are references to Vadukars in Akanānūru 107, 213, 253, 281, 295, 375, 381, Kurunthokai 11, Natrinai 212 and Puranānūru 378.  வரலாறு:  சோழர், இளம்பெருஞ்சென்னி, பாழி, வடுகர்.   சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).

Meanings:   சென்று நீடுநர் அல்லர் – he is not one to go and stay away for long, அவர் வயின் இனைதல் ஆனாய் என்றிசின் – you tell me I worry about him (சின் – முன்னிலை அசைச் சொல், an expletive of the second person), இகுளை – oh friend, அம்பு தொடை அமைதி – to test their arrow shooting skills, காண்மார் – to see, வம்பலர் கலன் இலர் ஆயினும் – even if those who travel do not have jewels, கொன்று புள் ஊட்டும் – kill and feed to birds, கல்லா இளையர் கலித்த கவலை – forked paths with uneducated young wasteland warriors, கண நரி இனனொடு – with big fox packs, குழீஇ நிணன் அருந்தும் – come together and eat fatty flesh (குழீஇ – அளபெடை, நிணன் – நிணம் என்பதன் போலி), நெய்த்தோர் ஆடிய – played in blood, மல்லல் – big, thick, மொசி விரல் – joined claws, அத்த எருவைச் சேவல் சேர்ந்த – wasteland male vultures join, பிணம் தின்னும் கழுகு, Indian black vulture, Pondicherry vulture, red-headed vulture, அரை சேர் யாத்த – on the yā trees with trunks, ஆச்சா மரம், Hardwickia binata, வெண்திரள் – white thick branches, வினை விறல் எழாஅ – work and victory not removed, திணி தோள் – strong shoulders, சோழர் பெருமகன் – Chozha heir, விளங்கு புகழ் நிறுத்த – with established flourishing fame, இளம்பெருஞ்சென்னி – king Ilamperunchenni (சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி), குடிக் கடன் ஆகலின் – to do his duty to citizens, குறை வினை முடிமார் – to finish his impending (war) work, செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி – he ruined Pāzhi city fort with walls that are like copper (உறழ் – உவம உருபு, a comparison word), வம்ப – new people, strangers,  வடுகர் பைந்தலை – bloody heads of Vadukars, சவட்டி – stepped on, crushed, mangled, கொன்ற – killed them, யானைக் கோட்டின் தோன்றும் – appears like the tusks of elephants (கோட்டின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), அஞ்சுவரு மரபின் – with a fierce nature, வெஞ்சுரம் – the harsh wasteland, the hot wasteland, இறந்தோர் – the man who went, நோய் இலர் பெயர்தல் அறியின் – if I know that he will be back without any harm, ஆழல – they will not cry, மன்னோ – மன், ஓ அசைநிலைகள், expletives, தோழி – oh friend, என் கண்ணே – my eyes (கண்ணே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 376, பரணர், மருதத் திணை – பரத்தை தலைவனிடம் சொன்னது
செல்லல் மகிழ்ந! நின் செய் கடன் உடையென் மன்,
கல்லா யானை கடி புனல் கற்றென,
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை
ஒலி கதிர்க் கழனிக் கழாஅர் முன்துறை,
கலி கொள் சுற்றமொடு கரிகால் காணத்  5
தண் பதம் கொண்டு தவிர்ந்த இன்னிசை
ஒண் பொறிப் புனை கழல் சேவடி புரளக்,
கருங்கச்சு யாத்த காண்பின் அவ்வயிற்று
இரும் பொலப் பாண்டில் மணியொடு தெளிர்ப்பப்,
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து  10
காவிரி கொண்டு ஒளித்தாங்கு மன்னோ,
நும் வயிற் புலத்தல் செல்லேம் எம் வயின்
பசந்தன்று காண்டிசின் நுதலே, அசும்பின்
அம் தூம்பு வள்ளை அழற்கொடி மயக்கி
வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரியத்,  15
துய்த்தலை முடங்கிறாத் தெறிக்கும் பொற்புடைக்
குரங்கு உளைப் புரவிக் குட்டுவன்
மரந்தை அன்ன என் நலம் தந்து சென்மே.

Akanānūru 376, Paranar, Marutham Thinai – What the concubine said, when the hero wanted to leave her for another concubine
Do not leave, lord!  I have duties to you.

On the shores of Kazhār city where
untrained elephants learn to swim
in the flood waters,
groves are dense with marutham trees
and fields are heavy with grains,
Chozha king Karikālan watched, with his
happy relatives, Athi dance with desire
in the flowing river water, donning
beautiful anklets with bright spots,
whirling on his red feet, black cloth tied
around his beautiful waist, with jingling
big golden cymbals and bells.

Like Kāviri who took him with desire,
she desired and took you.
I will not quarrel with you.  Pallor has
spread on me.  Look at my forehead.

Before you leave, return my beauty
that is lovely like Maranthai city
of Cheran Chenguttuvan with horses
with beautifully adorned curved tufts,
where in the watery mud, bright vallai
vines with hollow stems are tangled with
thick leaves of paddy with bent, spreading
spears, and soft-headed, curved shrimp jump.

Notes:  காதற் பரத்தை புலந்து கூறியது.  மரந்தை என்ற ஊர் மாந்தை என்றும் சில பாடல்களில் குறிப்பிடப்பதுள்ளது.  வரலாறு:  கழாஅர், கரிகாலன், குட்டுவன் (சேரன்), மரந்தை, காவிரி.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).

Meanings:   செல்லல் மகிழ்ந – do not go oh lord (மகிழ்ந – விளி, an address), நின் செய் கடன் உடையென் – I have duties toward you, மன் –அசைநிலை, an expletive, கல்லா யானை – an untrained elephant, கடி புனல் – heavy water flow, கற்று என – they learn, மலி புனல் – heavy water flow, பொருத – attacking, மருது ஓங்கு படப்பை – groves dense with or with tall marutham trees, ஒலி கதிர் – lush grains, கழனிக் கழாஅர் – Kazhār city with fields, முன்துறை – in front of the shore, in front of the port (முன்துறை – துறைமுன்), கலி கொள் சுற்றமொடு – with happy relatives, கரிகால் காண – as king Karikālan watched, தண் பதம் கொண்டு – with all the cool perfect arrangements, தவிர்ந்த – stayed, with, இன்னிசை – beautiful music, ஒண் பொறி – bright spots, புனை கழல் – lovely warrior anklets,  சேவடி – red feet, perfect feet, புரள – moving, whirling, கரும் கச்சு – black cloth that is wrapped around the body, யாத்த – tied, காண்பின் – when seen, அம் வயிற்று – on the beautiful stomach, இரும் பொல – big golden, பாண்டில் – cymbals, மணியொடு – with bells, தெளிர்ப்ப – to sound, to jingle, புனல் – flowing water, நயந்து ஆடும் – dancing with desire, அத்தி – Athi, அணி நயந்து – with desire, காவிரி கொண்டு ஒளித்தாங்கு – like how river Kāviri took and hid him, மன்னோ – மன், ஓ அசைநிலைகள், expletives, நும் வயின் புலத்தல் செல்லேம் – I will not quarrel with you (செல்லேம் – தன்மைப் பன்மை, first person plural), எம் வயின் பசந்தன்று – pallor has spread on me (எம் – தன்மைப் பன்மை, first person plural), காண்டிசின் – you look (சின் – முன்னிலை அசைச் சொல், an expletive of the second person), நுதல – on the forehead, அசும்பின் – in the mud, அம் தூம்பு – beautiful tubular stems, beautiful hollow stems, வள்ளை அழல் கொடி – bright vallai creepers, Creeping bindweed, Ipomaea aquatic, மயக்கி – intertwined, வண் தோட்டு – with thick leaves, நெல்லின் – of paddy, வாங்கு பீள் – bent grain, விரிய – spreading, துய்த்தலை – soft heads, fuzzy heads, முடங்கு இறா – curved shrimp, bent shrimp (பண்புத்தொகை – a compound word in which the first member stands in adjectival relation to the second), தெறிக்கும் – they jump, they leap, பொற்பு உடை – adorned beautifully, குரங்கு – curved, உளை – tufts, புரவி – horses, குட்டுவன் – Cheran king, மரந்தை அன்ன – like Maranthai city, என் நலம் தந்து சென்மே – return my beauty and leave, return my virtue and leave (சென்மே – முன்னிலை ஏவல் வினைமுற்று, a second person command verb ending)

அகநானூறு 377, மாறோகத்து காமக்கணி நப்பாலத்தனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
கோடை நீடலின் வாடு புலத்து உக்க
சிறு புல் உணவு நெறி பட மறுகி,
நுண் பல் எறும்பி கொண்டளைச் செறித்த
வித்தா வல்சி வீங்கு சிலை மறவர்
பல்லூழ் புக்குப் பயன் நிரை கவரக்,  5
கொழுங்குடி போகிய பெரும் பாழ் மன்றத்து
நரை மூதாளர் அதிர்தலை இறக்கிக்
கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய,
வரி நிறச் சிதலை அரித்தலின் புல்லென்று
பெரு நலம் சிதைந்த பேஎம் முதிர் பொதியில்  10
இன்னா ஒரு சிறைத் தங்கி, இன்னகைச்
சிறு மென் சாயல் பெருநலம் உள்ளி,
வம்பலர் ஆகியும் கழிப மன்ற
நசை தர வந்தோர் இரந்தவை
இசைபடப் பெய்தல் ஆற்றுவோரே.  15

Akanānūru 377, Mārōkokathu Kāmakkani Nappālathanār, Pālai Thinai – What the hero said to his heart
Since summer has prolonged for a
long time, the land is dry.  Many
small ants pick tiny grass grains
that have dropped and carry them
to their holes, walking in an orderly
manner.  Wasteland warriors who
take the seeds without working,
seize, with large bows, cattle herds
that are beneficial, and the thriving
community has moved away,
leaving the town square to be ruined.
The gambling device used by white-
haired elders with trembling, bent
heads and unrevealing thoughts,
has been ruined by striped termites.

Staying here, thinking about her
beauty, sweet laughter and delicate
nature, will you with the desire to earn
wealth to give generously to those who
ask and attain fame, who has become a
stranger to her now, proceed?

Notes:  பொருள் ஈட்டி வருதல் வேண்டும் என்று இடைவிடாது ஊக்குவிக்கின்ற நெஞ்சிடம் தலைவன் கூறியது.  கவை மனத்து இருத்தும் (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெல்லுவோமா, தோற்போமா என்ற கவர்த்த மனத்தோடு.  வீங்கு சிலை மறவர் (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெரிய வில்லையுடைய எயின மறவர்கள் இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – பெருத்த வில்லையுடைய மறவர்கள், அகநானூறு 89-10 – பொ. வே. சோமசுந்தரனார் உரை  – கட்டிய வில்லையுடைய மறவர்கள், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – விசைகொண்ட சிலையினரான மறவர்கள்.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ்செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  பேம் – பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆ முறை மூன்றும் அச்சப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 69).  சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல் 29).  வல்லு:  புறநானூறு 52 – நரை மூதாளர் நாய் இடக் குழிந்த வல்லின் நல்லகம்.

Meanings:   கோடை நீடலின் – since summer was long, வாடு புலத்து – in the dry land, உக்க சிறு புல் உணவு – small grass seeds that dropped, நெறி பட மறுகி – going in an orderly manner, நுண் பல் எறும்பி – many tiny ants, கொண்டளைச் செறித்த – collected in their holes, வித்தா வல்சி – food got without seeding, வீங்கு சிலை மறவர் – warriors with large bows, warriors with tight bows, warriors with fast bows, பல்லூழ் புக்கு – entered many times, பயன் நிரை கவர – seized milk cow herds,  கொழுங்குடி போகிய – flourishing communities left, those from flourishing villages left, பெரும் பாழ் மன்றத்து – in the greatly ruined common grounds, நரை மூதாளர் – elders with white hair, அதிர்தலை இறக்கி – bending their trembling heads, கவை –  keeping within, of split minds, மனத்து இருத்தும் – thinking in their minds, வல்லு – gambling device, வனப்பு அழிய – beauty ruined, வரி நிறச் சிதலை அரித்தலின் – since it had been ruined by termites with stripes, புல்லென்று – dull, பெரு நலம் சிதைந்த – great beauty ruined, பேஎம் முதிர் பொதியில் – fierce ancient common grounds (பேஎம் – அளபெடை), இன்னா ஒரு சிறைத் தங்கி – stayed on one side with sorrow, இன் நகை – sweet laughter, சிறு – little, மென் சாயல் – very delicate,  பெருநலம் உள்ளி – thinking about her great beauty, வம்பலர் ஆகியும் கழிப – they will become strangers, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty, நசை தர வந்தோர் – those who come with desire, இரந்தவை – what is requested, இசைபடப் பெய்தல் – giving and attaining fame, ஆற்றுவோரே  – those who give generously, ஏகாரம் அசைநிலை, an expletive

அகநானூறு 378, காவட்டனார், குறிஞ்சித் திணைதலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
“நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின்,
வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள,
வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை
நன் பொன் அன்ன நறுந்தாது உதிரக்,
காமர் பீலி ஆய் மயில் தோகை  5
வேறு வேறு இனத்த வரை வாழ் வருடைக்
கோடு முற்று இளந்தகர் பாடு விறந்து, இயல
ஆடுகள வயிரின் இனிய ஆலிப்
பசும்புற மென் சீர் ஒசிய விசும்பு உகந்து
இருங்கண் ஆடு அமைத் தயங்க இருக்கும்  10
பெருங்கல் நாடன் பிரிந்த புலம்பும்,
உடன்ற அன்னை அமரா நோக்கமும்,
வடந்தை தூக்கும் வருபனி அற்சிரச்
சுடர் கெழு மண்டிலம் மழுங்க ஞாயிறு
குட கடல் சேரும் படர் கூர் மாலையும்,  15
அனைத்தும் அடூஉ நின்று நலிய நீ மற்று,
யாங்ஙனம் வாழ்தி” என்றி தோழி!
நீங்கா வஞ்சினம் செய்து நத்துறந்தோர்
உள்ளார் ஆயினும் உளெனே, அவர் நாட்டு
அள் இலைப் பலவின் கனி கவர் கைய  20
கல்லா மந்தி கடுவனோடு உகளும்
கடுந்திறல் அணங்கின் நெடும் பெருங்குன்றத்துப்,
பாடு இன் அருவி சூடி
வான் தோய் சிமையம் தோன்றலானே.

Akanānūru 378, Kāvattanār, Kurinji Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
My friend!  You ask me how I am
able to live with sorrow since he left,
the lord of the lofty mountains,
……….where golden pollen of vēngai
……….trees, with the fragrance of the
……….hair of brides living in wealthy,
……….huge mansions, drop down,
……….loving peacocks with pretty plumes
……….fear the sounds of different kinds of
……….young male mountain goats butting
……….horns against each other, and take to
……….the skies, bending their pretty backs
……….and screeching sweetly,
……….their calls sounding like vayir horns
……….used in dancing arenas, and rest on
……….tall bamboo with large nodes,
and from my angry mother’s unsettling
looks, that attack me along with the north
winds which bring chilliness, as the
sun with rays loses brilliance and
goes behind the western ocean.

Even if he does not think about me, after
the promises he made, I live because I am
able to see his mountain with fierce deities,
where a crude female monkey plucks
a sweet jackfruit from a tree dense with
leaves and leaps around with her mate in the
tall summits from which waterfalls cascade
down with sweet sounds.

Notes:  தலைவன் வரையாது களவு ஒழுக்கத்தில் வந்து மீள்கின்றான்.  தோழி அவனைக் காணாள் போல தலைவியின் ஆற்றாமை கூறி வரைவு கடாவுவாள் தலைவியை நோக்கிச் சொல்லாத தொடங்க, அவளைத் தொடர்ந்து தலைவி தோழிக்குக் கூறுவாள் போன்று தலைவன் கேட்பச் சொல்லியது.  காமர் பீலி ஆய் மயில் தோகை (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகிய தோகையினையுடைய பலரும் நன்றென்று ஆராய்ந்து மகிழும் தோகையையுடைய மயில், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – விருப்பந்தரும் பீலி பொருந்திய சிறந்த தோகையையுடைய மயில்.  அமரா முகத்து அன்னை – அகநானூறு 253 – அன்னையும் அமரா முகத்தினள், அகநானூறு 378 – உடன்ற அன்னை அமரா நோக்கமும், நற்றிணை 122-9 – அன்னையும் அமரா முகத்தினள்.

Meanings:   நிதியம் துஞ்சும்  நிவந்து ஓங்கு வரைப்பின் – in the tall big houses where wealth resides,  வதுவை மகளிர் – women who are marrying, brides, கூந்தல் கமழ் கொள – the hair is fragrant, வங்கூழ் ஆட்டிய – swayed by the winds, அம் குழை – pretty sprouts, வேங்கை –  kino trees, Pterocarpus marsupium, நன் பொன் அன்ன – fine gold-like, நறுந்தாது உதிர – fragrant pollen drops,  காமர் பீலி – pretty feathers, ஆய் மயில் தோகை – feathers of beautiful peacocks, வேறு வேறு இனத்த – of different kinds, வரை வாழ் வருடை – mountain-living goats, கோடு –  horns, முற்று – mature, இளந்தகர் – young male goats,  பாடு விறந்து இயல – run on hearing sounds, ஆடுகள வயிரின் – like the vayir horns blown in a dancing arena (வயிரின் – இன் உருபு ஒப்புப் பொருளது), இனிய ஆலி – sound sweetly, பசும்புற மென் சீர் ஒசிய – bending their beautiful back sides, bending their green back sides, விசும்பு உகந்து – rising high to the sky, இருங்கண் ஆடு அமை – swaying bamboo with large nodes,  தயங்க இருக்கும் – they rest splendidly, பெருங்கல் நாடன் – the man from the lofty mountains,  பிரிந்த புலம்பும் – suffering with pain after separation, உடன்ற அன்னை அமரா நோக்கமும் – upset mother’s unsettling looks, வடந்தை தூக்கும் வருபனி அற்சிர – early dew season when the northern winds blow with chillness,  சுடர் கெழு மண்டிலம் – the sun with its rays, மழுங்க – losing light, ஞாயிறு குட கடல் சேரும் – when the sun reaches the western sea, படர் கூர் மாலையும் – very painful evening, அனைத்தும் – together, அடூஉ நின்று – distressing, attacking, நலிய நீ மற்று யாங்ஙனம் வாழ்தி என்றி தோழி – my friend! you ask me how I live with this great sorrow (என்றி – முன்னிலை ஒருமை), நீங்கா – not removable, வஞ்சினம் செய்து – making promises, நத்துறந்தோர் – the man who abandoned us (நம் துறந்தோர் நத்துறந்தோர் என விகாரமாயிற்று), உள்ளார் ஆயினும் – even if he does not think about me, உளெனே – I am still alive (ஏகாரம் அசைநிலை, an expletive), அவர் நாட்டு – his country’s, அள் இலை – dense leaves, பலவின் – of a jackfruit tree, கனி கவர் – seizing a ripe fruit, கைய – with hands, கல்லா மந்தி – a crude female monkey, கடுவனோடு உகளும் – it leaps around with a male monkey, கடுந்திறல் அணங்கின் – greatly fierce, with fierce deities, நெடும் பெருங்குன்றத்து – on the tall lofty mountain,  பாடு இன் அருவி சூடி – decorated with sweet sounding waterfalls, வான் தோய் சிமையம் தோன்றலானே – since his sky-touching mountain peak appears, since I am able to look at the sky-touching summits (தோன்றலானே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 379, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது 
நம் நயந்து உறைவி தொன்னலம் அழியத்
தெருளாமையின் தீதொடு கெழீஇ,
அருளற நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து,
ஆள் வினைக்கு எதிரிய மீளி நெஞ்சே!
நினையினை ஆயின் எனவ கேண்மதி!  5
விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கைப்
பரிதி அம் செல்வம் பொதுமை இன்றி,
நனவின் இயன்றது ஆயினும் கங்குற்
கனவின் அற்று அதன் கழிவே, அதனால்
விரவுறு பன் மலர் வண்டு சூழ்பு அடைச்சிச்,  10
சுவல் மிசை அசைஇய நிலைதயங்கு உறுமுடி
ஈண்டு பல் நாற்றம் வேண்டுவயின் உவப்பச்,
செய்வுறு விளங்கிழைப் பொலிந்த தோள் சேர்பு,
எய்திய கனை துயில் ஏற்றொறும் திருகி
மெய் புகு வன்ன கை கவர் முயக்கின்  15
மிகுதி கண்டன்றோ இலெனே, நீ நின்
பல் பொருள் வேட்கையின் சொல் வரை நீவிச்
செலவு வலியுறுத்தனை ஆயின், காலொடு
கனை எரி நிகழ்ந்த இலையில் அம் காட்டு
உழைப்புறத்து அன்ன புள்ளி நீழல்  20
அசைஇய பொழுதில் பசைஇ வந்து இவள்
மறப்பு அரும் பல் குணம் நிறத்து வந்து உறுதர,
ஒரு திறம் நினைத்தல் செல்லாய், திரிபு நின்று
உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்குப்
பிடியிடு பூசலின் அடிபடக் குழிந்த  25
நிரம்பா நீளிடைத் தூங்கி,
இரங்குவை அல்லையோ, உரங்கெட மெலிந்தே?

Akanānūru 379, Cheramān Pālai Pādiya Perunkadunkō, Pālai Thinai – What the hero said to his heart
My strong heart!  She lives loving us!
You joined evil without grace.  You
were arrogant when you were not clear
and ruined her prior beauty, if you
think about it.  Listen to what I say!
Even though the wheel of power rules
this earth surrounded by oceans, and
even though it appears like reality,
it will vanish like that which appears
in dreams that are seen at night.

I have not found more happiness than
when embracing her splendid arms with
fine jewels with my hands, which is like
uniting with her, the woman wearing
many flowers desired and swarmed by
bees, on her lovely, swaying hair with
many dense fragrances.

You, because of your desire for wealth,
went beyond the limits of my words.
When you rest in shade spots of trees,
resembling the spots on the back of a
stag in the forest without leaves due to
forest fires, her traits, difficult to forget, will
reach your heart.  You will struggle between
the desire to leave to earn wealth or be with
her.  You will be confused, unable to choose
one.  You will be sad without the strength to
go on the endless, long path with pits caused
by a female elephant who trumpeted with
sorrow when her tusked mate was attacked
by a large tiger and it suffered in pain.

Notes:  முன்னொரு காலத்தில் பொருள்வயிற் பிரிந்த தலைவன் பொருள் முற்றி வந்திருந்த காலத்தில், மீண்டும் பொருள் கடாவின நெஞ்சிற்குச் சொல்லியது.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  மீளி நெஞ்சே (4) – மீளி நெஞ்சே என்பது இகழ்ச்சி.  பேதை நெஞ்சே என்பது கருத்து. முந்நீர் – தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது.  முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் ‘தமிழ்க்காதல்’ நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு 9 உரை, நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி 75 உரை.  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings:   நம் நயந்து உறைவி – my wife who lives loving me, தொன்னலம் அழிய – her prior beauty ruined,  தெருளாமையின் – due to not being clear, தீதொடு கெழீஇ – you linked with evil (கெழீஇ – அளபெடை), அருளற – without grace, நிமிர்ந்த முன்பொடு – with increased strength, with increased pride, பொருள் புரிந்து – desiring wealth, ஆள் வினைக்கு – to earn wealth, எதிரிய – made effort, understood (எதிரிய – முற்பட்ட, மேற்கொண்ட), மீளி நெஞ்சே – oh my heart that is strong, oh my heart that is great, நினையினை ஆயின் – if you can think about it, எனவ கேண்மதி – please listen to what I have to say (எனவ – அ விரித்தல் விகாரம், பலவறி சொல், மதி – முன்னிலையசை, an expletive of the second person), விரி திரை முந்நீர் – ocean with wide waves, மண் திணி கிடக்கை – land with sand, பரிதி அம் செல்வம் – with the wheel of power, பொதுமை இன்றி – not considering that wealth is common, நனவின் இயன்றது ஆயினும் – even if it appears like reality, கங்குற் கனவின் அற்று அதன் கழிவே – it is of such nature that it will appear and be lost in dreams, அதனால் – so, விரவுறு பன் மலர் – mixed many flowers, வண்டு சூழ்பு – surrounded by bees (சூழ்பு – சூழ எனத் திரிக்க), அடைச்சி – wearing, சுவல் மிசை – over the nape, அசைஇய – staying (அளபெடை), நிலை தயங்கு உறு முடி – moving splendid abundant hair (உறு – மிக்க), ஈண்டு பல் நாற்றம் வேண்டு வயின் – desiring many dense fragrances,  உவப்ப – with happiness,  செய்வுறு விளங்கிழைப் பொலிந்த தோள் சேர்பு எய்திய – attained embracing her splendid arms with bright jewels, கனை துயில் ஏற்றொறும் – whenever heavy sleep happens, திருகி மெய் புகுவு அன்ன – like bodies twisting and entering, like bodies turning toward each other and entering, கை கவர் முயக்கின் – more than embracing with hands (முயக்கின் – இன் உறழ்ச்சிப் பொருளில் வந்தது), மிகுதி கண்டன்றோ இலெனே – I have not seen anything better than that (கண்டன்றோ – ஓகாரம் அசைநிலை, an expletive, இலெனே – ஏகாரம் அசைநிலை, an expletive), நீ – you, நின் பல் பொருள் வேட்கையின் – because of your desire for much wealth, சொல் வரை நீவிச் செலவு வலியுறுத்தனை ஆயின் – if you emphasize on the trip beyond the limit of words, காலொடு கனை எரி நிகழ்ந்த – burned by intense flames due to the winds, இலை இல் அம் காட்டு – in the beautiful forest without leaves, உழைப்புறத்து அன்ன – like the spots on the backs of stags (உழைப்புறத்து – உழைப்புறம், அத்து சாரியை), புள்ளி நீழல் அசைஇய பொழுதில் – when staying in shade spots of a tree (நீழல் – நிழல் என்பதன் நீட்டல் விகாரம், அசைஇய – அளபெடை), பசைஇ – with desire (அளபெடை), வந்து இவள் மறப்பு அரும் பல் குணம் நிறத்து வந்து உறுதர – her difficult-to-forget traits come and reach your chest/heart (உறுதர – வந்து அடைய), ஒரு திறம் நினைத்தல் செல்லாய் – thinking about her you will not leave, திரிபு நின்று – differing, உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்கு – for a male with tusks that was attacked by a large tiger (உறு – பெரிய), பிடியிடு பூசலின் – with uproars of his female,  அடிபடக் குழிந்த – with pits caused by the feet of elephants, நிரம்பா நீளிடை – endless long path, long path which is empty, தூங்கி – staying,  இரங்குவை அல்லையோ – won’t you be sad, உரங்கெட மெலிந்தே – tired and losing strength (மெலிந்தே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 380, மதுரை மருதன் இளநாகனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது 
தேர் சேண் நீக்கித் தமியன் வந்து, “நும்
ஊர் யாது?” என்ன நணி நணி ஒதுங்கி
முன்னாள் போகிய துறைவன், நெருநை
அகல் இலை நாவல் உண் துறை உதிர்த்த
கனி கவின் சிதைய வாங்கிக் கொண்டு, தன்  5
தாழை வேர் அளை வீழ் துணைக்கு இடூஉம்
அலவன் காட்டி ‘நற்பாற்று இது என’
நினைந்த நெஞ்சமொடு நெடிது பெயர்ந்தோனே,
உதுக்காண் தோன்றும் தேரே இன்றும்
நாம் எதிர்கொள்ளாம் ஆயின், தான் அது  10
துணிகுவன் போலாம் நாணுமிக உடையன்,
வெண்மணல் நெடுங்கோட்டு மறைகோ?
அம்ம தோழி கூறுமதி நீயே.

Akanānūru 380, Mathurai Maruthan Ilanākanār, Neythal Thinai – What the heroine’s friend said to her
The man who left his chariot far away and
came close to us in the past and asked us,
“Which town are you from?” and left sadly
since we did not answer, returned yesterday.
He looked at a crab, which took a nāval fruit
that fell from a tree on the drinking water shore,
crushed and ruined its beauty, and took it to its
loving mate living in a hole under the roots of
a thāzhai tree, and said, “It has a good nature.”
He thought about something for long and left.

Look there!  His chariot has appeared!
If we don’t meet with him today, he might get
bold, that shy man.
Should I hide behind the tall, white sand dunes?
Tell me, oh friend!

Notes:  தலைவியை கூட்டுவிக்கத் தோழியைத் தலைவன் வேண்டினான்.  அதற்கு உடன்பட்ட தோழி தலைவியிடம் வந்து தலைவனின் விருப்பத்திற்கு இணங்குமாறு கூறியது.  ஒப்புமை:  குறுந்தொகை 24 – ஆற்று அயல் எழுந்த வெண்கோட்டு அதவத்து எழு குளிறு மிதித்த ஒரு பழம் போல.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  ஒதுங்கி முன்னாள் போகிய (2-3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஏமாற்றத்துடன் முன்னாளில் சென்ற , இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – முன்னாளில் நடந்து சென்ற.

Meanings:   தேர் சேண் நீக்கித் தமியன் வந்து – he left the chariot far away and came alone, நும் ஊர் யாது என்ன – he asked ‘which is your town’,  நணி நணி – he came closer and closer, ஒதுங்கி – disappointed, walking, முன்னாள் போகிய துறைவன் – the lord of the shore who went in the past, நெருநை – yesterday, அகல் இலை நாவல் – nāval trees with wide leaves, Eugenia jambolana Syzygium cumini, உண் துறை உதிர்த்த – dropped in the drinking water shores, கனி கவின் சிதைய – beauty of the fruit to be ruined, வாங்கிக் கொண்டு – pulled it, தன் – his, தாழை வேர் – thāzhai tree roots, Pandanas odoratissimus, அளை வீழ் துணைக்கு இடூஉம் – gives it to its loving mate living in the hole (இடூஉம் – அளபெடை), அலவன் காட்டி – pointing to a crab,  நற்பாற்று இது என – that this is a good thing, நினைந்த நெஞ்சமொடு நெடிது பெயர்ந்தோனே – he thought about you in his heart for long and moved away, உதுக்காண் – look there (உது – இடைச்சுட்டு), தோன்றும் தேரே – his chariot appears, இன்றும் நாம் எதிர்கொள்ளாம் ஆயின் – if we don’t accept him today, தான் அது துணிகுவன் போலாம் – it appears that he might be bold, நாணுமிக உடையன் – he is a very shy man, வெண்மணல் நெடுங்கோட்டு மறைகோ – should I hide behind the tall sand dunes (மறைகு – தன்மை ஒருமை வினைமுற்று, first person singular verb ending + ஓகாரம் வினா), அம்ம –அசைநிலை, an expletive, தோழி – oh friend, கூறுமதி – you tell (மதி – முன்னிலையசை, an expletive of the second person), நீயே – you, ஏகாரம் அசைநிலை, an expletive

அகநானூறு 381, மதுரை இளங்கௌசிகனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது  
ஆளி நன்மான் அணங்குடை ஒருத்தல்
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப,
ஏந்தல் வெண்கோடு வாங்கிக் குருகு அருந்தும்
அஞ்சுவரத் தகுந ஆங்கண், மஞ்சு தப
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம்  5
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீளிடை,
கற்று உரிக் குடம்பைக் கத நாய் வடுகர்
விற்சினம் தணிந்த வெருவரு கவலை,
குருதி ஆடிய புலவு நாறு இருஞ்சிறை
எருவைச் சேவல் ஈண்டு கிளைத் தொழுதி,  10
பச்சூன் கொள்ளை சாற்றிப் பறை நிவந்து,
செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும்
அருஞ்சுரம் நீந்திய நம்மினும், பொருந்தார்
முனை அரண் கடந்த வினைவல் தானைத்
தேன் இமிர் நறுந்தார் வானவன் உடற்றிய  15
ஒன்னாத் தெவ்வர் மன்னெயில் போலப்,
பெரும் பாழ் கொண்ட மேனியள் நெடிது உயிர்த்து
வருந்தும் கொல், அளியள் தானே, சுரும்பு உண
நெடுநீர் பயந்த நிரை இதழ்க் குவளை
எதிர்மலர் இணைப் போது அன்ன தன்  20
அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே.

Akanānūru 381, Mathurai Ilankousikanār, Pālai Thinai – What the hero said to his heart
More than us, who are in the wasteland,

where a fine, fierce male āli attacks
a mighty bull elephant and plucks its
lifted tusks and eats the soft pith as it
screams, the clouds do not pour rain and
the sun with moving rays emits flames,
eats shade and heats the endless, long path,
Vadukars with harsh dogs and huts made
with hides of calves, kill with their bows
with rage in the fierce, forked paths, and
male vultures with large wings, smeared
with blood and stink of flesh, announce
to their flocks with close kin the abundance
of fresh flesh, taking to the beautiful, red sky,

she, with proud, moist eyes with lines, like
new, bee-swarming kuvalai flowers from deep
ponds, with rows of petals, tied opposite to
each other, sighs deeply, her body ruined
like the ruined forts of the disagreeing enemies
of Cheran who owns a capable army, whose
fragrant flower garland is swarmed by bees.

Notes:  பொருள்வயின் பிரிந்த தலைவன் இடைச்சுரத்தில் தலைவியை நினைத்து வருந்தித் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.  வருந்தும் கொல் (18) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – வருந்தி இருப்பாளோ, பொ. வே. சோமசுந்தரனார் உரை – துன்புறுவாள் போலும்.  ஒப்புமை:  நற்றிணை 205 – ஆளி நன்மான் வேட்டு எழு கோள் உகிர்ப் பூம்பொறி உழுவை தொலைச்சிய வைந்நுதி ஏந்து வெண்கோட்டு வயக் களிறு இழுக்கும்.  There are references to Āli in Akanānūru 78, 252, 381, Kurinjippāttu 252, Natrinai 205, Puranānūru 207, Perumpānātruppadai 258 and Porunarātruppadai 139.  வடுகர் – ஒளவை துரைசாமி உரை புறநானூறு 278 – தொண்டை நாட்டுத் திருவேங்கடத்திற்கு வடக்கில் உள்ள நாட்டவராதலால் வடுகர் எனப்பட்டனர், பொ. வே. சோமசுந்தரனார் உரை அகநானூறு 213 – தெலுங்கர்.  There are references to Vadukars in Akanānūru 107, 213, 253, 281, 295, 375, 381, Kurunthokai 11, Natrinai 212 and Puranānūru 378.  வரலாறு:  வடுகர், வானவன் (சேரன்).  சூன்று (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நிலம் வெடித்திருத்தலின் வெடிப்பினூடும் ஒளி புகுந்து நிழலின்றிச் செய்தமையின் கதிர் மண்டிலம் நிழல் சூன்று உண்ட நீளிடை என்றான்.  ஆளி (பொருநராற்றுப்படை 139) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அரிமா, அரிமாப் போன்ற வேறொரு விலங்கென எண்ணவும் இடமுள்ளது.

Meanings:   ஆளி நன்மான் – a fine āli which is probably a lion, அணங்குடை ஒருத்தல் – fierce male, மீளி வேழத்து – of a powerful elephant, நெடுந்தகை – noble, புலம்ப – to cry, ஏந்தல் – lifted, வெண்கோடு வாங்கி – plucked its white tusks,  குருகு அருந்தும் – eats the soft pith that is at the end, அஞ்சுவரத் தகுந – of fearful nature, ஆங்கண் – there, மஞ்சு தப – clouds not pouring, clouds ruined, அழல் கான்று – emitting flames, திரிதரும் – roams, அலங்கு கதிர் மண்டிலம் – sun with moving rays, நிழல் சூன்று உண்ட – surrounded and ate shadow (சூன்று – அகழ்ந்து, digging), நிரம்பா நீளிடை – endless long path, empty long path, கற்று உரிக் குடம்பை – huts with calf hides, கத நாய் வடுகர் – Vadukars with harsh dogs, விற்சினம் தணிந்த – reduce the rage of their bows,  வெருவரு – fear causing, கவலை – forked paths, குருதி ஆடிய – smeared with blood, புலவு நாறு – flesh stinking, இருஞ்சிறை எருவைச் சேவல் – male vulture with dark/large wings, பிணம் தின்னும் கழுகு, Indian black vulture, Pondicherry vulture, red-headed vulture, ஈண்டு கிளைத் தொழுதி – close flock of relatives பச்சூன் கொள்ளை சாற்றி – announces the abundant fresh meat (பச்சூன் = பசுமை + ஊன்), பறை நிவந்து – flies high, செக்கர் வானின் – in the red skies, விசும்பு அணி கொள்ளும் – sky attains beauty, அருஞ்சுரம் நீந்திய – crossed the wasteland, நம்மினும் – more than us, பொருந்தார் enemies, முனை – battlefields, அரண் கடந்த – ruined forts and won, வினைவல் தானை – army that is capable in their jobs,  தேன் இமிர் நறுந்தார் வானவன் – Cheran wearing fragrant garlands on which bees buzz, உடற்றிய ஒன்னாத் தெவ்வர் மன்னெயில் போல – like the stable forts of enemies that were ruined, பெரும் பாழ் கொண்ட மேனியள் – she with a greatly ruined body, நெடிது உயிர்த்து – sighing deeply, வருந்தும் கொல் – she will be sad, will she be sad (கொல் அசை அல்லது ஐயப்பொருட்டு), அளியள் – she is pitiful, தானே – தான், ஏ அசைநிலைகள், expletives, சுரும்பு உண – for bees to eat (உண உண்ண என்பதன் விகாரம்), நெடு நீர் பயந்த – yielded by the deep waters, நிரை இதழ்க் குவளை – blue waterlilies with rows of petals, எதிர்மலர் இணைப் போது அன்ன – like fresh flowers that are placed together, like alike flowers that are placed together (எதிர்மலர் – புதிய மலர்கள், ஒத்த மலர்கள்), தன் – her, அரி மதர் மழைக் கண் – proud moist eyes with red lines, luscious moist eyes with red lines, தெண் பனி கொளவே – with clear tears (கொளவே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 382, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
“பிறர் உறு விழுமம் பிறரும் நோப,
தம் உறு விழுமம் தமக்கோ தஞ்சம்,
கடம்பு கொடி யாத்துக் கண்ணி சூட்டி
வேறு பல் குரல ஒரு தூக்கு இன்னியம்
காடு கெழு நெடுவேள் பாடு கொளைக்கு ஏற்ப,  5
அணங்கு அயர் வியன் களம் பொலியப் பையத்
தூங்குதல் புரிந்தனர் நமர்” என ஆங்கு அவற்கு
அறியக் கூறல் வேண்டும் தோழி!
அருவி பாய்ந்த கருவிரல் மந்தி
செழுங்கோட் பலவின் பழம் புணை ஆகச்  10
சாரல் பேரூர் முன்துறை இழிதரும்,
வறன் உறல் அறியாச் சோலை
விறன் மலை நாடன் சொல் நயந்தோயே.

Akanānūru 382, Kapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
You desired the words of the man
from the beautiful mountain
where a female monkey with black
fingers jumps into a mountain stream,
uses a jackfruit from a tree with clusters
of fruits as a raft, and lands on the shores
of our huge town on the mountain slopes.

When the wise see the suffering of others,
they are offended.  But they keep their own
sorrows to themselves quite easily.

We need to inform him clearly, my friend,
that our family desires to perform veriyāttam
in a splendid wide field, wearing garlands and
typing flags on kadampam trees, with sweet
music with many sounds in one kind of beat and
songs to Murukan who lives in the forest.

Notes:   வரையாது களவு ஒழுக்கத்தில் ஒழுகும் தலைவன் இரவுக்குறியில் வந்து ஒரு பக்கத்தே நிற்பதைக் கண்ட தோழி, அவன் தலைவியை மணந்து கொள்ள வேண்டும் என்னும் கருத்தை, அவன் கேட்பத் தலைவிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.  ஒரு தூக்கு இன்னியம் (4) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – தாளங்களின் வழிவரும் செந்தூக்கு முதலிய எழு வகைத் தூக்கினுள் ஒன்றினைப் பொருந்திய இன்னியம்.  Veriyāttam ritual is performed when the Murukan temple priest vēlan is invited to heal love-sick young girls who appear sickly.  The mother invites him to divine the reason for her daughter’s affliction, not aware of her love affair.  The priest uses molucca beans (kazhangu) on freshly laid sand in the front yard of the house, and tells the mother that Murukan’s anger is the reason for her daughter’s affliction.  He wears garlands, prays to Murukan, kills a goat and performs rituals.  விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).

Meanings:   பிறர் உறு விழுமம் – the sorrow of others, பிறரும் நோப – they get also get hurt, தம் உறு விழுமம் – their own sorrow, தமக்கோ தஞ்சம் – keep it to themselves easily, கடம்பு கொடி யாத்து – tying flags on kadampam trees, Anthocephalus cadamba, Kadampa oak, கண்ணி சூட்டி – wearing garlands, வேறு பல் குரல – with many different sounds, ஒரு தூக்கு – with beat (one of the seven kinds of beats), இன்னியம் – sweet instruments, காடு கெழு – in the forest (காடு ஆகுபெயர் குறிஞ்சி நிலத்திற்கு), நெடுவேள் பாடு கொளைக்கு – to sing to Murukan, ஏற்ப – accordingly, அணங்கு அயர் – ritual performing, வியன் களம் – wide field, பொலிய – to be splendid, பைய – slowly, தூங்குதல் புரிந்தனர் நமர் என – that our relatives desired for veriyāttam rituals/dances, ஆங்கு அவற்கு அறியக் கூறல் வேண்டும் தோழி – we have to let him know clearly oh friend, அருவி பாய்ந்த கரு விரல் மந்தி – female monkey with black fingers that jumped into a mountain stream, female monkey with black fingers that jumped into a waterfall, செழுங்கோட் பலவின் – of a jackfruit tree that produces large clusters of fruits, பழம் புணை ஆக – a jackfruit as a raft, சாரல் பேரூர் – big town on the slopes, முன்துறை இழிதரும் – comes down to our shores (முன்துறை – துறைமுன்), வறன் உறல் அறியாச் சோலை – groves that do not know dryness, விறன் மலை நாடன் – the man from victorious mountain, the man from the beautiful mountain, சொல் நயந்தோயே – you who desired his words (நயந்தோயே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 383, கயமனார், பாலைத் திணை – மகட்போக்கிய செவிலித்தாய் வயலைக் கொடியிடம் சொன்னது
தற் புரந்து எடுத்த என் துறந்து உள்ளாள்,
ஊருஞ்சேரியும் ஓராங்கு அலர் எழக்
காடுங்கானமும் அவனொடு துணிந்து,
நாடுந் தேயமும் நனி பல இறந்த
சிறு வன்கண்ணிக்கு ஏர் தேறுவர் என,  5
வாடினை, வாழியோ வயலை! நாள்தொறும்
பல் கிளைக் கொடி கொம்பு அலமர மலர்ந்த
அல்குல் தழைக்கூட்டு அம் குழை உதவிய,
வினை அமை வர நீர் விழுத்தொடி தத்தக்
கமஞ்சூல் பெரு நிறை தயங்க முகந்து கொண்டு,  10
ஆய் மடக் கண்ணள் தாய் முகம் நோக்கிப்
பெய் சிலம்பு ஒலிப்பப் பெயர்வனள், வைகலும்
ஆர நீர் ஊட்டிப் புரப்போர்
யார் மற்றுப் பெறுகுவை? அளியை நீயே.

Akanānūru 383, Kayamanār, Pālai Thinai – What the foster mother said to the vayalai vine, after the heroine eloped
May you live long, oh vayalai vine, who is
wilted like her friends who decorated her!

She did not think about me, who protected
and raised her.  Gossip has risen in our street
and town, since she left with him to the forest,
fearless, passing through very many
countries, my heartless young daughter.

You with many branches, pretty leaves,
and spreading stems struggling with the
weight of blossoms, provided leaves every
day for leaf garments that cover her loins.
She fed you water daily, getting it from a
large pot to which water came in a
bamboo pipe, the pretty bangles on her arms
moving, her anklets with pebbles jingling,
looking at you like you are her mother. 

Who will water you abundantly and take care
of you now?   You are pitiful!

Notes:  உடன்போக்கில் தலைவனுடன் சென்ற தலைவியின் செவிலித்தாய் வருந்திக் கூறியது.  ஒப்புமை:  அகநானூறு 385 – சிறு வன்கண்ணி.  கமம் – நிறைவு, கமம் நிறைந்தியலும் (தொல்காப்பியம். உரியியல் 57).  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல். களவியல் 34).  தாய் முகம் நோக்கி (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நின்னுடைய தாய்போல் நின்னுடைய  முகத்தைப் பார்த்து, ச. வே. சுப்பிரமணியன் உரை – ஒரு தாயைப் போல் உன்னை எண்ணி உன் முகத்தைப் பார்த்து, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – தாயைப் போல நின் முகத்தினைப் பார்த்து.

Meanings:   தன் புரந்து எடுத்த என் துறந்து உள்ளாள் – she does not think about me who protected and raised her, ஊரும் சேரியும் – the town and settlement, the town and street, ஓராங்கு – togther (ஓராங்கு – ஒருசேர), அலர் எழ – causing gossip to rise, காடுங்கானமும் அவனொடு – went to the forest with him, துணிந்து – boldly, fearlessly, நாடும் தேயமும் நனி பல இறந்த – passed very many countries and lands, சிறு வன்கண்ணிக்கு – for my young  daughter who is heartless/inconsiderate, ஏர் தேறுவர் என – like those (her friends) who make her beautiful, வாடினை – you are wilted, வாழியோ வயலை – may you live long oh vayalai vine, purslane, Portulaca quadrifida (வாழியோ – ஓகாரம் அசை), நாள்தொறும் – daily, பல் கிளைக் கொடி – creeper with many branches, கொம்பு அலமர – with heavy weight of blossoms distressing the branches, மலர்ந்த – blossomed, அல்குல் தழைக்கூட்டு – collecting leaves for leaf garments to cover her loins, collecting leaf garments to cover her waists, அம் குழை உதவிய – to provide pretty tender leaves (உதவிய – உதவுமாறு, ஈனும் பொருட்டு), வினை அமை வர நீர் – water that comes through bamboo pipe (அமை – மூங்கில், தூம்பாகச் செய்யப்பட்ட மூங்கில், மூங்கில் குழாய்), , விழுத்தொடி தத்த – fine bangles to move around, கமம் சூல் – full, பெரு நிறை – large pot, large container, தயங்க – moving, முகந்து கொண்டு – removed, ஆய் – pretty, மடக் கண்ணள் – the young woman with innocent eyes, தாய் முகம் நோக்கி – looking at you like you are her mother, பெய் சிலம்பு ஒலிப்ப – her anklets with pebbles in them to jingle, பெயர்வனள் – she would feed you and leave, வைகலும் – daily, ஆர – full, நீர் ஊட்டிப் புரப்போர் யார் மற்றுப் பெறுகுவை – who will water abundantly and protect you now (மற்று – வினை மாற்றின்கண் வந்தது), அளியை நீயே – you are pitiable (நீயே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 384, ஒக்கூர் மாசாத்தியார், முல்லைத் திணை, தேரில் கூடச்சென்ற பிறரால் சொல்லப்பட்டது
“இருந்த வேந்தன் அருந்தொழில் முடித்தெனப்
புரிந்த காதலொடு பெருந்தேர் யானும்
ஏறியது அறிந்தன்று அல்லது, வந்த
ஆறு நனி அறிந்தன்றோ இலெனே, தாஅய்
முயல் பறழ் உகளும் முல்லை அம் புறவில் 5
கவைக் கதிர் வரகின் சீறூர் ஆங்கண்
மெல்லியல் அரிவை இல் வயின் நிறீஇ,
இழிமின் என்ற நின் மொழி மருண்டிசினே,
வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ?
மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ?  10
உரைமதி, வாழியோ வலவ!” எனத்தன்
வரை மருள் மார்பின் நளிப்பனன் முயங்கி,
மனைக் கொண்டு புக்கனன், நெடுந்தகை
விருந்தேர் பெற்றனள் திருந்து இழையோளே.

Akanānūru 384, Okkūr Māsāthiyār, Mullai Thinai – What those who were with the hero said about the hero
After he uttered to the charioteer the
words,

“I was with the king when the difficult
war business ended.  With love, I got
on the chariot.  Other than knowing that,
I was not much aware of the big path.
We passed through lovely woodlands with
jasmine flowers, where young hares frolic
in the millet fields with bent grain stalks,
and you stopped the chariot in front of the
house where my delicate woman lives,
and asked me to get down.  I was surprised
at your words.  I praised you and asked you
whether you tied the wind in the sky as
horses to your chariot, or whether your mind
acted as a swift horse”,

the esteemed man with a chest like a
mountain, embraced his charioteer and then
entered his house, as his woman with fine
jewels received a gift.

Notes:  வினை முற்றிய தலைவனின் வரவு கண்டு அருகில் உள்ளோர் சொல்லியது.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  பறழ் – நாயே பன்றி புலி முயல் நான்கும் ஆயும் காலை குருளை என்ப.  குட்டியும் பறழும் கூற்று அவண் வரையார் (தொல்காப்பியம் மரபியல் 8,10).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  நளி – நளி என் கிளவி செறிவும் ஆகும் – (தொல்காப்பியம், உரியியல் 27).

Meanings:   இருந்த வேந்தன் – the king in the battle camp, அருந்தொழில் முடித்தென – since the harsh work ended, புரிந்த – with desire, காதலொடு – with love, பெருந்தேர் யானும் ஏறியது – I got on the big chariot, அறிந்தன்று அல்லது – other than knowing that, வந்த ஆறு நனி அறிந்தன்றோ இலெனே – I did not understand much about the path, தாஅய் – leap ( அளபெடை), முயற்பறழ் உகளும் – young hares run around, முல்லை அம் புறவில் – in the lovely woodland with jasmine flowers, கவைக்கதிர் வரகின் – with forked millet, சீறூர் ஆங்கண் – in a small town there, மெல்லியல் அரிவை – the delicate young woman, இல் வயின் – at the residence, நிறீஇ – stopped (அளபெடை), இழிமின் என்ற நின் மொழி – your words asking me to get down (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), மருண்டிசினே – I was confused (சின் – தன்மை அசை, an expletive of the first person, ஏ -அசைநிலை, an expletive), வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ – did you yoke to your chariot wind that has the nature of moving in the sky, மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ – did you yoke your mind as a horse, உரைமதி – tell me (மதி – முன்னிலையசை, an expletive of the second person), வாழியோ வலவ – may you live long oh charioteer, எனத்தன் வரை மருள் மார்பின் – thus the one with mountain-like chest (மருள் – உவம உருபு, a comparison word), நளிப்பனன் முயங்கி – as one who embraced tightly (நளிப்பனன் – முற்றெச்சம்), மனைக் கொண்டு புக்கனன் நெடுந்தகை – the noble man entered his house, விருந்தேர் பெற்றனள் – she received the opportunity to be hospitable, திருந்து இழையோளே – the woman with perfect jewels, (இழையோளே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 385, குடவாயில் கீரத்தனார், பாலைத் திணை – மகட்போக்கிய செவிலித்தாய் சொன்னது
தன்னோரன்ன ஆயமும், மயிலியல்
என்னோரன்ன தாயரும் காணக்,
கைவல் யானைக் கடுந்தேர்ச் சோழர்
காவிரிப் படப்பை உறந்தை அன்ன
பொன்னுடை நெடுநகர் புரையோர் அயர,  5
நன்மாண் விழவில் தகரம் மண்ணி,
யாம் பல புணர்ப்பச் செல்லாள் காம்பொடு
நெல்லி நீடிய கல்லறைக் கவாஅன்,
அத்த ஆலத்து அலந்தலை நெடுவீழ்
தித்திக் குறங்கில் திருந்த உரிஞ,  10
வளையுடை முன் கை அளைஇக், கிளைய
பயில் இரும் பிணையல் பசுங்காழ்க் கோவை
அகல் அமை அல்குல் பற்றிக், கூந்தல்
ஆடு மயில் பீலியின் பொங்க நன்றும்
தானமர் துணைவன் ஊக்க ஊங்கி,  15
உள்ளாது கழிந்த முள் எயிற்றுத் துவர்வாய்ச்
சிறு வன்கண்ணி சிலம்பு கழீஇ
அறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிதே.

Akanānūru 385, Kudavāyil Keerathanār, Pālai Thinai – What the foster mother said, after the heroine eloped
My daughter, with the delicate nature
of a peacock, left without
letting her friends and mothers like us
see her fine wedding celebrations with
aromatic thakaram paste rubbed on her
hair, that would have been performed in
her prosperous, huge house
in Uranthai with groves, on the banks
of Kāviri, of the Chozha kings with rapid
chariots and battle-skilled elephants.

Without thinking, she has gone to the
wasteland, where nelli trees and bamboo
grow near boulders, long aerial roots of
a banyan tree rub against her thighs with
pallor spots, her hair sways like the plumes
of a dancing peacock, encouraged by the
man desired by her, who holds her
forearms with bangles, and hugs her wide
loins decorated with many new strands,
and the anklet-removal ceremony of my
inconsiderate daughter with sharp teeth
and red mouth was performed in some
unknown land.  This is cruel!

Notes:   உடன்போக்கில் தலைவனுடன் சென்ற தலைவியின் செவிலித்தாய் வருந்திக் கூறியது.  கைவல் யானை (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கையால் போர்த் தொழில் செய்யும் வன்மையுடைய யானைகளையும், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – வலிய கையினையுடைய யானையினையும்.  அலந்தலை (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அசைகின்ற, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – வாடி அசைகின்ற.  வன்கண்ணி (17) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – அஞ்சாமையுடையவள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – கண்ணோட்டம் இல்லாதவள்.  வரலாறு:  சோழர், காவிரி, உறந்தை.  ஒப்புமை:  அகநானூறு 383 – சிறு வன்கண்ணிக்கு.  There was an anklet-removal ceremony that was performed before marriage.  Ainkurunūru 399, Akanānūru 315, 369, and 385 and Natrinai 279 have references to this ceremony.  தன்னோரன்ன ஆயமும், மயிலியல் என்னோரன்ன தாயரும் காண – மயிலியல் தன் ஓர் அன்ன ஆயமும் என் ஓர் அன்ன தாயரும் காண எனக் கொள்ளவும். 

Meanings:   தன்னோரன்ன ஆயமும் – and friends like her, மயிலியல் – delicate-natured like peacocks, என்னோரன்ன தாயரும் – and mothers like me, காண – to see, கைவல் யானைக் கடுந்தேர்ச் சோழர் – Chozha kings with fast chariots and able battle elephants, with fast chariots and elephants with strong trunks, காவிரிப் படப்பை உறந்தை அன்ன – like Uranthai on the banks of Kāviri with groves, பொன்னுடை நெடு நகர் – huge house with wealth/gold, புரையோர் அயர – the wise people conducting, நன் மாண் விழவில் – in the fine esteemed celebration, தகரம் மண்ணி – rubbing with thakaram paste, நறுமண மரவகை, Wax- flower dog-bane, Tabernae montana, யாம் பல புணர்ப்பச் செல்லாள் – she didn’t leave after we performed a wedding (she left before we performed her wedding here), காம்பொடு நெல்லி நீடிய – gooseberry trees are growing near bamboo, கல்லறைக் கவாஅன் – adjoining mountain with huge boulders (கவாஅன் – அளபெடை), அத்த ஆலத்து – of the banyan trees in the wasteland, அலந்தலை நெடு வீழ் – dry long aerial roots, தித்திக் குறங்கில் திருந்த உரிஞ – rubbed hard on her thighs with pallor spots, வளையுடை முன் கை – her forearms with bangles, அளைஇ – holding, பற்றி (அளைஇ – அளபெடை), கிளைய பயில் இரும் பிணையல் – large strands with many branches, பசுங்காழ்க் கோவை – lovely strands, new strands, அகல் அமை அல்குல் – wide loins, பற்றி – holding, கூந்தல் ஆடு மயில் பீலியின் பொங்க – her hair flying like the feathers of a dancing peacock (பீலியின் – இன் உருபு ஒப்புப் பொருளது), நன்றும் – greatly, தான் அமர் – desired by her, துணைவன் ஊக்க – her partner encouraging her a lot, ஊங்கி – she was encouraged, உள்ளாது கழிந்த – left without thinking, முள் எயிற்றுத் துவர்வாய் – with sharp teeth and red mouth, with sharp teeth and coral-like red mouth, சிறு வன்கண்ணி – my young daughter who is fearless/inconsiderate, சிலம்பு கழீஇ அறியாத் தேஎத்தள் ஆகுதல் – performed the anklet removing ceremony of my daughter in an unknown land (தேஎத்தள் – அளபெடை, கழீஇ – அளபெடை), கொடிதே – it is harsh, ஏகாரம் அசைநிலை, an expletive

அகநானூறு 386, பரணர், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பொய்கை நீர்நாய்ப் புலவு நாறு இரும் போத்து
வாளை நாள் இரை தேரும் ஊர!
நாணினென் பெரும யானே, பாணன்
மல்லடு மார்பின் வலியுற வருந்தி,
எதிர் தலைக்கொண்ட ஆரியப் பொருநன்  5
நிறைத் திரண் முழவுத் தோள் கையகத்து ஒழிந்த
திறன் வேறு கிடக்கை நோக்கி, நற்போர்க்
கணையன் நாணியாங்கு மறையினள்
மெல்ல வந்து நல்ல கூறி,
“மை ஈர் ஓதி மடவோய்! யானும் நின்  10
சேரியேனே, அயல் இலாட்டியேன்,
நுங்கை ஆகுவென் நினக்கு” எனத் தன் கைத்
தொடுமணி மெல் விரல் தண்ணெனத் தைவர
நுதலும் கூந்தலும் நீவி,
பகல் வந்து பெயர்ந்த வாணுதல் கண்டே.  15

Akanānūru 386, Paranar, Marutham Thinai – What the heroine’s friend said to the hero
Oh man from the town, where a large,
flesh-stinking male otter searches for
vālai fish every day!

I was embarrassed lord,
……….like Kanaiyan of good battles, who
……….was embarrassed on seeing Ārya
……….Porunan with strong drum-like,
……….full, rounded shoulders lying dead,
……….killed by Pānan who wrestled with
……….his strong chest,
on seeing the woman with a bright forehead,
when she came slowly hiding herself, during
the day, and uttered good words to your wife,
“Oh naïve woman with dark, oiled hair!  I am
your neighbor who lives on this street.  I am a
younger sister to you” and stroked in a cool
your wife’s forehead and hair with her fingers
manner, adorned with gem-studded rings and left.

Notes:  தோழி தலைவனுக்கு வாயில் மறுத்தது.  வரலாறு:  பாணன், ஆரியப் பொருநன், கணையன்.  A Pānan king is mentioned in the following five Akanānūru poems, 113 – எழாஅப் பாணன், 155 – பல் வயின் பய நிரை சேர்ந்த பாண் நாட்டு, 226 – வலி மிகும் முன்பின் பாணனொடு, 325 – நல் வேல் பாணன் நல் நாட்டு, and 386 – பாணன் மல்லடு மார்பின் வலியுற, and in an inscription at Paraiyanpattu in Tamil Nadu, which mentions Pāṇāṭu, the territory of Pānan – Early Tamil Epigraphy, page 629, Iravatham Mahadevan, Harvard University Press.  வாள் – வாள் ஒளி ஆகும் (தொல்காப்பியம் உரியியல் 71).  மல்லடு (4) – மற்போர் செய்தல்.

Meanings:   பொய்கை நீர்நாய் – a pond otter, புலவு நாறு இரும் போத்து – a large male with flesh stink, வாளை நாள் இரை தேரும் – it searches for scabbard fish every day, ஊர – oh man from such town (அண்மை விளி), நாணினென் பெரும யானே – I was embarrassed oh lord (பெரும – விளி, an address), பாணன் மல்லடு மார்பின் வலியுற – Pānan who wrestled with his strong chest, வருந்தி – sad, எதிர் தலைக்கொண்ட – opposed in battle, ஆரியப் பொருநன் நிறைத் திரண் முழவுத் தோள் – Arya Porunan with drum-like full rounded shoulders, கையகத்து ஒழிந்த – caught and ruined in his hands, திறன் வேறு கிடக்கை நோக்கி – on seeing the pathetic situation there with his corpse lying there, நற்போர்க் கணையன் நாணியாங்கு – like how Kanaiyan of good battles was embarrassed, மறையினள் மெல்ல வந்து – she came slowly hiding herself (மறையினள் – முற்றெச்சம்), நல்ல கூறி – uttered good words, மை ஈர் ஓதி மடவோய் – oh young woman with dark oiled hair, oh naïve woman with dark oiled hair, யானும் நின் சேரியேனே – I am also from your settlement, I am also from your street (சேரியேனே  – ஏகாரம் அசைநிலை, an expletive), அயல் இல் ஆட்டியேன் – I am a woman who is your neighbor (ஆட்டி – பெண்), நுங்கை ஆகுவென் நினக்கு – I am a younger sister to you, என – thus, தன் கை – her hand, தொடுமணி மெல் விரல் – delicate fingers with gem rings (தொடுதல் – அணிதல், மணி – ஆகுபெயர் மணி பதித்த மோதிரத்திற்கு), தண்ணென – in a cool manner, தைவர நுதலும் கூந்தலும் நீவி – stroked her forehead and hair, பகல் வந்து பெயர்ந்த – came during the day and left, வாள் நுதல் – woman with a bright forehead (வாணுதல், வாள் நுதல் – அன்மொழித்தொகை), கண்டே – seeing, ஏகாரம் அசைநிலை, an expletive

அகநானூறு 387, மதுரை மருதன் இளநாகனார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
திருந்திழை நெகிழ்ந்து, பெருந்தோள் சாஅய்,
அரிமதர் மழைக்கண் கலுழச் செல்வீர்!
வருவீர் ஆகுதல் உரைமின் மன்னோ,
உவர் உணப் பறைந்த ஊன் தலைச் சிறாஅரொடு
அவ்வரி கொன்ற கறை சேர் வள் உகிர்ப்  5
பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய
பூந்துகில் இமைக்கும் பொலங்காழ் அல்குல்,
அவ்வரி சிதைய நோக்கி வெவ்வினைப்
பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ,
வரிப் புற இதலின் மணிக்கண் பேடை  10
நுண் பொறி அணிந்த எருத்தின், கூர் முள்
செங்கால் சேவல் பயிரும் ஆங்கண்
வில் ஈண்டு அருஞ்சமம் ததைய நூறி,
நல்லிசை நிறுத்த நாணுடை மறவர்
நிரை நிலை நடுகல் பொருந்தி இமையாது,  15
இரை நசைஇக் கிடந்த முதுவாய்ப் பல்லி
சிறிய தெற்றுவதாயின், பெரிய
ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும்,
நின்று ஆங்குப் பெயரும் கானம்
சென்றோர் மன்னென இருக்கிற்போர்க்கே.  20

Akanānūru 387, Mathurai Maruthan Ilanākanār, Pālai Thinai – What the heroine’s friend said to the hero
You who are leaving, letting my friend’s arms
with perfect jewels to become thin, and her
proud, moist eyes with red lines to shed tears!

Tell us, who will live with sorrow, when you will
come back. 

We will see them ruined, the pretty lines on her
loins with gold strands,
covered by beautiful clothing washed and
starched well after kneading for a long time,
by a washerwoman with stained, sharp nails
and starch on her fingers,
who removes streaks of stains working
with young workers who have sores on their
heads caused by the salty, dry soil,
and in the wasteland, a female quail with eyes
resembling gems and stripes on her back,
calls her mate with tiny spots on his neck
and sharp claws on his red legs,
on hearing the sounds of harsh hunters who
are hiding among tangled bushes,
and lizards with omens cluck a little without
blinking, as they wait for prey on the rows of
memorial stones of humble warriors of
established fame who shot arrows in harsh
battles and ruined enemies, and even great
kings owning elephants adorned with face
ornaments, fear and leave the forest.

Notes:  செலவு உணர்த்திய தோழி, தலைவியின் குறிப்பறிந்து தலைவனைச் செலவு அழுங்கச் சொல்லியது.  முதுவாய்ப் பல்லி சிறிய தெற்றுவதாயின் (16-17) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – முதுமையையுடைய பல்லி சிறிய சில ஒலிகளை ஒலிப்பது ஆயின், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – முதுமை வாய்ந்த பல்லி சிற்றளவில் தடைப்படுத்துவது ஆயின்.  ஒப்புமை:  புலைத்தி – அகநானூறு 34 – பசை கொல் மெல் விரல் பெருந்தோள் புலைத்தி, அகநானூறு 387 – பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய பூந்துகில், நற்றிணை 90 – வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த புகாப் புகர் கொண்ட புன் பூங்கலிங்கமொடு, குறுந்தொகை 330 – நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்து, கலித்தொகை 72 – ஆடை கொண்டு ஒலிக்கும் நின் புலைத்தி, புறநானூறு 311 – புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை, புறநானூறு 259 முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல, கலித்தொகை 117 மாதர்ப் புலைத்தி விலை ஆகச் செய்தது ஓர் போழில் புனைந்த வரிப் புட்டில்.   There are references to lizard omens in Akanānūru 9, 88, 151, 289, 351, 387, Kurunthokai 16, 140, Natrinai 98, 169, 246, 333 and Kalithokai 11.  Natrinai 161 has a reference to bird omen.  Natrinai 40 and Mullaippāttu 11 have references to women waiting for good omen.  அவ்வரி கொன்ற (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகிய கோடுகளை அழித்த, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – .ஆடையின் மறுக்களைச் சிதைத்த.  கறை (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆடையில் அமைந்த கோடுகளை மறையச் செய்த அழுக்கு, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – கறை பொருந்திய கூரிய நகம்.  இருக்கிற்போர்க்கே (20) – வே. சோமசுந்தரனார் உரை – யாம் என் செய்தும் என வருந்தி உயிர் வாழ்ந்திருக்க வல்லார்க்கு, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – ஆற்றியிருக்க வல்லார்க்கு. 

Meanings:   திருந்திழை நெகிழ்ந்து பெருந்தோள் சாஅய் – causing her perfect jewels to slip and her wide arms to become thin (அளபெடை), அரி மதர் மழைக்கண் கலுழ – her proud moist eyes with red lines becoming cloudy, her beautiful moist eyes with red lines becoming cloudy, செல்வீர் – you who are leaving, வருவீர் ஆகுதல் உரைமின் – tell me if you are returning (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), மன்னோ – மன், ஓ அசைநிலைகள், expletives, உவர் உணப் பறைந்த – ruined by the salty soil, ஊன் தலைச் சிறாஅரொடு – with young children with head sores, அவ்வரி கொன்ற – caused the beautiful lines to disappear, ruined those stains, கறை சேர் – with stains, வள் உகிர் – sharp nails, பசை விரல் புலைத்தி – washing woman with starch on her fingers, நெடிது பிசைந்து ஊட்டிய – she applied after kneading for a long time, பூந்துகில் – fresh clothes, pretty clothes, இமைக்கும் – bright, glittering, பொலங்காழ் அல்குல் – loins with gold strands, அவ்வரி சிதைய – pretty lines ruined, நோக்கி – looking at that, வெவ்வினை – harsh deeds, பயில் அரில் கிடந்த – are among tangled thick bushes, வேட்டு – hunters, விளி வெரீஇ – afraid of sounds (வெரீஇ –  அளபெடை, வெருவி என்ற வினையெச்சம் திரிந்து அளபெடுத்தது), வரிப்புற இதலின் – striped-back quail, காடை, மணிக்கண் பேடை – female with gem-like eyes, நுண் பொறி அணிந்த எருத்தின் – with a neck with fine spots, கூர் முள் – sharp claws, செங்கால் சேவல் – male bird with red legs, பயிரும் – calls, ஆங்கண் – there, வில் ஈண்டு அருஞ்சமம் – shooting arrows densely in harsh battles, ததைய நூறி நல் இசை நிறுத்த – ruined and established fame, நாணுடை மறவர் – humble warriors, modest warriors, நிரை நிலை நடுகல் பொருந்தி இமையாது இரை நசைஇக் கிடந்த – lying on the memorial stones which are in rows without blinking as they wait with desire for food (நசைஇ – அளபெடை), முதுவாய்ப் பல்லி – lizards with omens, சிறிய தெற்றுவது ஆயின் – if they cluck a little, if they block a little (தெற்றுவது – தடைப்படுத்துவது, சொல்லுவது), பெரிய ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும் – even if they are superior people (kings) with elephants with face ornaments, நின்று – staying, ஆங்கு – there, பெயரும் – they leave, கானம் சென்றோர் – those who went to the forest, மன் – ஒழியிசை, an implied meaning, என இருக்கிற்போர்க்கே – those who are capable of waiting patiently, those who able to stay alive with distress (இருக்கிற்போர்க்கே – ஏகாரம் -அசைநிலை, an expletive)

அகநானூறு 388, ஊட்டியார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, அல்லது தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அம்ம வாழி தோழி! நம் மலை
அமை அறுத்து இயற்றிய வெவ்வாய்த் தட்டையின்
நறுவிரை ஆரம் அறவெறிந்து உழுத
உளைக் குரல் சிறுதினை கவர்தலின், கிளை அமல்
பெருவரை அடுக்கத்துக் குரீஇ ஓப்பி,  5
ஓங்கு இருஞ்சிலம்பின் ஒள் இணர் நறுவீ
வேங்கையம் கவட்டு இடை நிவந்த இதணத்துப்,
பொன் மருள் நறும் தாது ஊதும் தும்பி
இன்னிசை ஓரா இருந்தனமாக,
“மையீர் ஓதி மட நல்லீரே!  10
நொவ்வு இயல் பகழி பாய்ந்தெனப் புண் கூர்ந்து
எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும்
புனத்து உழிப் போகல் உறுமோ மற்று?” என
சினவுக் கொள் ஞமலி செயிர்த்துப்புடை ஆடச்
சொல்லிக் கழிந்த வல் வில் காளை  15
சாந்தார் அகலமும் தகையும் மிக நயந்து,
ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள்,
நன்னர் நெஞ்சமொடு மயங்கி, வெறியென
அன்னை தந்த முதுவாய் வேலன்
“எம் இறை அணங்கலின் வந்தன்று இந்நோய்,  20
தணி மருந்து அறிவல்” என்னும் ஆயின்,
வினவின் எவனோ மற்றே, கனல் சின
மையல் வேழம் மெய் உளம் போக,
ஊட்டியன்ன ஊன் புரள் அம்பொடு
காட்டு மான் அடிவழி ஒற்றி  25
வேட்டம் செல்லுமோ நும் இறை எனவே.

Akanānūru 388, Ootiyār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, or what the heroine said to her friend, as the hero listened nearby
May you live long, my friend!

Mother with a good heart, in ignorance,
has brought a vēlan with wisdom,
who is confused, and says that veriyāttam
needs to be performed to appease Murukan,

not knowing the pain we suffer here, desiring
the noble man with sandal-rubbed, handsome
chest carrying a strong bow, who came when we
were sitting on the high vēngai tree platform
near a forked path, in the towering, huge
mountain slopes dense with bamboo,

where we listened to the non-stop sweet music
of bees buzzing on the golden, fragrant pollen
of bright vēngai flowers, chasing birds with
with our loud implements made from
cutting our mountain bamboo, protecting the
fuzzy clusters of tiny millet growing in our
field, that mountain farmers planted,
clearing fragrance spreading sandalwood trees,

when he came with his angry dogs following him,
and asked, “O fine women with oiled hair! Have you
seen a bull elephant with lifted tusks come this way to
your field in pain with wounds caused by my arrow?”

If the diviner says that Murukan is the reason for
this affliction and he knows the medicine to reduce
it, is Murukan the one who went hunting, following
the pug marks of wild animals, and shooting his red
arrow into the flesh of an elephant with great rage?

Notes:   வரையாது ஒழுகும் தலைவன் கேட்கும்படி கூறியது.  வெவ்வாய்த் தட்டையின் (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஓசை பறவைகளை அச்சுறுத்தலின் வெவ்வாய்த் தட்டை என்றார்.  முதுவாய் வேலன் (19) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – முதுவாய் வேலன் என்றது இகழ்ச்சி.  ஒப்புமை:  அகநானூறு 168 – மான் அதர்ச் சிறு நெறி, அகநானூறு 203 – மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி, அகநானூறு 318 – கான மான் அதர் யானையும் வழங்கும், அகநானூறு 388 – காட்டு மான் அடிவழி ஒற்றி.  Veriyāttam ritual is performed when the Murukan priest vēlan is invited to heal love-sick young girls who appear sickly.  The mother invites him to divine the reason for her daughter’s affliction, not aware of her love affair.  The priest uses molucca beans (kazhangu) on freshly laid sand in the front yard of the house, and tells the mother that Murukan’s anger is the reason for her daughter’s affliction.  He wears garlands, prays to Murukan, kills a goat and performs rituals.  வேலன் – நச்சினார்க்கினியர் உரை திருமுருகாற்றுப்படை 222 – பிள்ளையார் வேலைத் (பிள்ளையான முருகனின் வேல்) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேலன் என்றார்.  ஓரா (9) – செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  மெய் உளம் (23) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உடலும் உள்ளமும், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – உடலின் உள்ளிடம்.

Meanings:   அம்ம – அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், a particle which means ‘listen’, வாழி -அசைநிலை, an expletive, may you live long, தோழி – oh friend, நம் மலை அமை – our mountain bamboo, அறுத்து – cut, இயற்றிய – created, வெவ்வாய்த் தட்டையின் – with bamboo gadgets that are harsh to birds, with bamboo implements with loud sounds, நறு விரை – fragrant, ஆரம் அற எறிந்து – totally chopping off sandal wood trees, உழுத – plowed, உளைக் குரல் சிறுதினை கவர்தலின் – since they take the clusters of fuzzy tiny millet, கிளை அமல் பெருவரை – huge mountains dense with bamboo (கிளை மூங்கிலுக்கு ஆகுபெயர், அமல் – செறிந்த), அடுக்கத்து – on the mountain slopes, குரீஇ ஓப்பி – chase birds (குரீஇ – அளபெடை), ஓங்கு இருஞ்சிலம்பின் – on the lofty huge mountains, on the lofty dark mountains, ஒள் இணர் – bright bunches, நறு வீ வேங்கையம் கவட்டு இடை – on the forked paths with vēngai trees with fragrant flowers, Pterocarpus marsupium, நிவந்த இதணத்து – on a high platform, பொன் மருள் நறும் தாது – gold-like fragrant pollen (மருள் – உவம உருபு, a comparison word), ஊதும் தும்பி – bees that hum, இன்னிசை ஓரா இருந்தனமாக – listened to their non-stopping sweet music, மை ஈர் ஓதி – dark wet/oiled/ hair, மட நல்லீரே – oh innocent women, oh delicate women, நொவ்வு இயல் – of rapid nature, பகழி பாய்ந்தென – since an arrow was thrust, புண் கூர்ந்து – got wounded greatly, எவ்வமொடு வந்த – came with sorrow, உயர் மருப்பு ஒருத்தல் – bull elephant with lifted tusks, நும் புனத்து உழிப் போகல் உறுமோ மற்று – did it come to your field (மற்று – அசைநிலை, an expletive), என – thus, சினவுக் கொள் ஞமலி – angry dogs, செயிர்த்துப் புடை ஆட – angry and coming near, angry and following him, சொல்லிக் கழிந்த – came and asked, வல் வில் காளை – young man with strong bow, சாந்து ஆர் அகலமும் தகையும் – sandal-filled chest and beauty, மிக நயந்து – desiring greatly, ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள் – does not understand the pain we suffer here, நன்னர் நெஞ்சமொடு – with a good heart (நன்னர் – நல்ல), மயங்கி வெறியென – confused and thinking that you incurred the wrath of Murukan and that veriyāttam needs to be performed, அன்னை தந்த – mother brought,  முதுவாய் வேலன் – the Murukan priest with wisdom, எம் இறை அணங்கலின் வந்தன்று இந்நோய் – this disease came through the anger of our deity, தணி மருந்து அறிவல் என்னும் ஆயின் – if he says that he knows the medicine to reduce it, வினவின் எவனோ மற்றே – why can’t we ask (மற்றே – மற்று, ஏ அசைநிலைகள், expletives), கனல் – rage, சின மையல் வேழம் – angry confused male elephant, மெய் உளம் போக – going into his body, ஊட்டியன்ன – like smeared with red color (bloody), ஊன் புரள் அம்பொடு – with arrows attacking flesh, காட்டு மான் அடிவழி ஒற்றி – following the foot prints of the forest animals, வேட்டம் செல்லுமோ நும் இறை எனவே – so will your god go hunting (எனவே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 389, நக்கீரனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அறியாய் வாழி தோழி! நெறி குரல்
சாந்து ஆர் கூந்தல் உளரிப் போது அணிந்து,
தேங்கமழ் திரு நுதல் திலகம் தைஇயும்,
பல்லிதழ் எதிர்மலர் கிள்ளி வேறுபட
நல் இள வனமுலை அல்லியொடு அப்பியும்,  5
பெருந்தோள் தொய்யில் வரித்தும், சிறு பரட்டு
அம் செஞ் சீறடிப் பஞ்சி ஊட்டியும்,
எம்  புறந்தந்து நின் பாராட்டிப்
பல் பூஞ்சேக்கையின் பகலும் நீங்கார்,
மனை வயின் இருப்பவர் மன்னே, துனை தந்து  10
இரப்போர் ஏந்து கை நிறையப் புரப்போர்
புலம்பு இல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும்
அரும் பொருள் வேட்டம் எண்ணி, கறுத்தோர்
சிறு புன் கிளவிச் செல்லல் பாழ் பட
நல்லிசை தம் வயின் நிறுமார், வல்வேல்  15
வானவரம்பன் நல்நாட்டு உம்பர்,
வேனில் நீடிய வெங்கடற்று அடைமுதல்
ஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலறக்
கொலை வெம்மையின் நிலை பெயர்ந்து உறையும்
பெருங்களிறு தொலைச்சிய இருங்கேழ் ஏற்றை  20
செம்புல மருங்கில் தன் கால் வாங்கி,
வலம்படு வென்றியொடு சிலம்பகம் சிலம்பப்
படுமழை உருமின் முழங்கும்
நெடுமர மருங்கின் மலை இறந்தோரே.

Akanānūru 389, Nakkeeranār, Pālai Thainai – What the heroine said to her friend
May you live long, my friend!
You do not understand!

He ran his fingers through my thick, wavy
hair with sandal and placed flowers on it,
adorned my sweet scented, pretty forehead
with pottu, plucked petals from many flowers
and rubbed them on my young, pretty breasts,
drew thoyyil designs on my wide shoulders,
applied colors to my small, red feet with small
ankles, protected me, praised you, and lay in our
bed with many flowers, staying at home,
and not leaving during the day.

To help those with lifted hands, with a heart
without sorrow to give to others and rejoice,
he desired wealth.  Not wanting to be distressed
by ill words uttered by enemies, and wanting
to establish his good name,
he went to the forests where summers are hot
in the mountains with tall trees, beyond the land
of the Chera king with strong bows,

where those who go on a path scream in fear when
a huge, bright-colored male tiger kills a bull elephant
that has moved away from its herd to kill those on the
path, making it fall on its right side on the red earth,
folds his legs and leaps, and roars victoriously like
the rumbling rain clouds echoing on the mountains.

Notes:  பிரிவிடை வேறுபட்ட தலைவி வற்புறுத்தும் தோழியிடம் கூறியது.  எம் புறந்தந்து நின் பாராட்டி (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – என்னைப் பேணுதலோடு என்னை அவரோடு கூட்டிய நன்றி கருதி நின்னையும் பெரிதும் பாராட்டியவராய்.  வரலாறு:  வானவரம்பன் (சேரன்).  ஒப்புமை:  பெரும்பாணாற்றுப்படை 162 – குறு நெறிக்கொண்ட கூந்தல்.  There is a convention that when a tiger’s prey falls on its left, the tiger will not eat it.  It will abandon it.  It will eat only if the prey falls on its right side.  This is mentioned in Akanānūru 3, 238, 252, 357 and 389, Natrinai 154 and Puranānūru 190.  துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  அடைமுதல் – இருங்கடற்று அடைமுதல் – அகநானூறு 75, வெங்கடற்று அடைமுதல் – அகநானூறு 389, வெங்கடற்று அடைமுதல் – நற்றிணை 164.  எதிர்மலர் (5) –  புதிய மலர்கள்.  செல்லல் – செல்லல் இன்னல் இன்னாமையே (தொல்காப்பியம், உரியியல் 6).

Meanings:   அறியாய் – you do not understand, வாழி தோழி – may you live long my friend, நெறி – wavy, குரல் – clusters, சாந்து ஆர் கூந்தல் – hair with sandal paste/oil, உளரி – put his fingers through, போது அணிந்து – placed flowers, தேங்கமழ் – with sweet fragrance, திரு நுதல் – pretty forehead, திலகம் தைஇயும் – placing a pottu (தைஇ – அளபெடை), பல்லிதழ் எதிர்மலர் கிள்ளி – plucked petals from many fresh flowers (பல்லிதழ் – அகரம் கெட்டு ‘குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்’ (தொல்காப்பியம், எழுத்து 160) என்றதனால் லகரம் இரட்டித்து பல்லிதழ் என முடிந்தது), வேறுபட  – to differ, நல் இள வன முலை அல்லியொடு அப்பியும் – and rubbed on my pretty breasts along with the inner petals of flowers, பெருந்தோள் தொய்யில் வரித்தும் – and drew thoyyil designs on my wide shoulders/arms, சிறு பரட்டு – with small ankles, அம் செஞ் சீறடிப் பஞ்சி ஊட்டியும் – applied colors to my small red feet, எம் புறந்தந்து – protected me, நின் பாராட்டி – praised you for taking care of me and uniting us, பல் பூஞ்சேக்கையின் – on a bed with many flowers, பகலும் நீங்கார் – he did not leave during the day, மனை வயின் இருப்பவர் – he who stayed home, மன் – ஒழியிசை, ஏ -அசைநிலை, துனை தந்து – rapidly, இரப்போர் ஏந்து கை நிறைய – for the lifted hands of those who ask to be filled, புரப்போர் – those who protect, புலம்பு இல் உள்ளமொடு – with a heart without sorrow, புதுவ தந்து உவக்கும் – give new things and be happy, அரும் பொருள் வேட்டம் எண்ணி – desiring precious wealth, கறுத்தோர் சிறு புன் கிளவி – few mean words that enemies utter, செல்லல் – sorrow, பாழ் பட – to be ruined, நல்லிசை தம் வயின் நிறுமார் – to establish his good name/fame, வல் வேல் வானவரம்பன் நல் நாட்டு உம்பர் – beyond the fine country of Vanavarampan/ Cheran with strong spears, வேனில் நீடிய – long summer, வெங்கடற்று அடைமுதல் – where he reached the hot/harsh forest, ஆறு செல் வம்பலர் – those who go on the path, வேறு பிரிந்து அலற – get separated and scream, கொலை வெம்மையின் நிலை பெயர்ந்து உறையும் – lived moving away from its herd so that it could kill those who travel on the path, பெருங்களிறு தொலைச்சிய – killed a large male elephant, இருங்கேழ் ஏற்றை – huge colorful male (tiger), செம்புல மருங்கில் – on the red earth, தன் கால் வாங்கி – folded his feet and jumped, வலம்படு – falling on the right side, வென்றியொடு – with victorious feeling, சிலம்பகம் சிலம்பப் படுமழை உருமின் முழங்கும் – roars like thundering clouds on the mountain slopes, நெடு மர மருங்கின் மலை இறந்தோரே – he went on the mountains with tall trees (இறந்தோரே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 390, அம்மூவனார், நெய்தற் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் அல்லது தன் நண்பனிடம் சொன்னது
உவர் விளை உப்பின் கொள்ளை சாற்றி,
அதர்படு பூழிய சேண் புலம் படரும்
ததர் கோல் உமணர் பதி போகும் நெடுநெறிக்
கண நிரை வாழ்க்கை தான் நன்று கொல்லோ?
வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள,  5
ஐது அகல் அல்குல் கவின் பெறப் புனைந்த
பல் குழைத் தொடலை ஒல்கு வயின் ஒல்கி,
“நெல்லும் உப்பும் நேரே ஊரீர்!
கொள்ளீரோ?” எனச் சேரிதொறும் நுவலும்,
“அவ் வாங்கு உந்தி அமைத் தோளாய்! நின்  10
மெய் வாழ் உப்பின் விலை எய்யாம்” எனச்
சிறிய விலங்கினமாகப், பெரிய தன்
அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி,
“யாரீரோ எம் விலங்கியீர்?” என
மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற  15
சில் நிரை வால் வளைப் பொலிந்த
பல் மாண் பேதைக்கு ஒழிந்தது, என் நெஞ்சே.

Akanānūru 390, Ammoovanār, Neythal Thinai, What the hero said to his heart, or to his friend
Stating the price of salt grown in saline
land, going to faraway places with dusty
paths, the lives of salt merchants with
thick goads must be good when they go
on the long paths in groups.

With her wavy curly hair totally swaying,
delicate wide loins covered by beautifully
made strands with many sprouts that
swayed as she swayed, she went to all the
settlements and called out, “Town people!
Rice for salt, straight exchange!  Will you
barter?”

I blocked her and said to her, “You with
pretty, curved navel and bamboo-like arms,
I don’t know the price of the salt on your
body!”  She looked at me with her big,
kohl-rimmed, like she differed and said,
“Who are you to block me?”, smiled delicately,
moved away a little and stood there, the young 
woman wearing few rows of white bangles.

I lost my heart to her with splendor and
esteem!

Notes:  இயற்கைப்புணர்ச்சிக்குப் பின் ஆற்றாமையால் மெய் வேறுபட்ட தலைவன் கூறியது.  நின் மெய் வாழ் உப்பின் விலை எய்யாம் (10-11) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை –  நினது உடலின்கண் உளதாம் இன்பத்திற்கு விலையினை அறிந்திலம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – நின்னினுடைய உடம்பில் வாழும் உப்பின் விலையை நான் அறிகிலேன், மெய்வாழ் உப்பு = உடம்பிலே வாழ்த்திருக்கின்ற இன்பம்.  Po. Ve. Somasundaranar cites Thirukkural 1328 – ‘ ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல் வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு’.  உண்கண் (13) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மையுண்ட கண்கள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – நோக்கப்பட்டார் நெஞ்சத்தை உண்ணும் இயல்புடைய கண்கள்.  Barter is mentioned in Akanānūru 60, 61, 126, 140, 245, 296, 390, Natrinai 183, Kurunthokai 221, 269, Ainkurunūru 47, Porunarātruppadai 214-215, 216-7, Pattinappālai 28-30, and Malaipadukādam 413-414.  ததர் (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நுனி சிதைந்த கோல், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – செறிந்த கோல்.

Meanings:   உவர் விளை உப்பின் கொள்ளை சாற்றி – stating the price of salt grown in salty land, அதர்படு பூழிய – with dust on the paths, சேண் புலம் படரும் – going to faraway places, ததர் கோல் உமணர் – salt merchants with thick rods, salt merchants with rods that are split at the ends, பதி போகும் நெடு நெறி – going on long paths to places, கண நிரை வாழ்க்கை – life with groups, தான் – அசைநிலை, an expletive, நன்று கொல்லோ – it is good (கொல், ஓ – அசைநிலைகள்), வணர் சுரி முச்சி – wavy curly top hair, முழுதும் மன் புரள – totally swaying, totally moving, ஐது அகல் அல்குல் – beautiful/delicate wide loins, கவின் பெறப் புனைந்த – beautifully made, பல் குழைத் தொடலை – leaf garment with many tender leaves, ஒல்கு வயின் ஒல்கி – swayed when she swayed, நெல்லும் உப்பும் நேரே – rice/paddy for salt straight exchange, ஊரீர் – oh people in town, கொள்ளீரோ – will you take the offer, will you barter, என – thus, சேரிதொறும் – in all the settlements, in all the streets, நுவலும் – she uttered, அவ் வாங்கு உந்தி – beautiful curved navel, அமைத் தோளாய் – oh one with bamboo-like arms, நின் மெய் வாழ் உப்பின் விலை எய்யாம் – I don’t know the price of the salt of your body, I don’t know the pleasure in your body, எனச் சிறிய விலங்கினமாக – when I blocked her a little, பெரிய தன் அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி – she looked at me with her kohl-lined big eyes with red lines like she was differing (அமர்த்த – மாறுபட்ட), யாரீரோ எம் விலங்கியீர் – who are you who is blocking me, என மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற – she smiled delicately and moved away and stood, சில் நிரை வால் வளை – few rows of white bangles, பொலிந்த பல் மாண் பேதைக்கு – to the young woman with many splendors, ஒழிந்தது – it got lost, என் நெஞ்சே – my heart (நெஞ்சே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 391, காவன்முல்லைப் பூதனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன
வரி மென் முகைய நுண்கொடி அதிரல்
மல்கு அகல் வட்டியர், கொள்வு  இடம் பெறாஅர்,
விலைஞர் ஒழித்த தலை வேய் கான் மலர்
தேம்பாய் முல்லையொடு ஞாங்கர்ப் போக்கி,  5
தண் நறும் கதுப்பில் புணர்ந்தோர், புனைந்த என்
பொதி மாண் முச்சி காண்தொறும், பண்டைப்
பழ அணி உள்ளப்படுமால் தோழி,
இன்றொடு சில் நாள் வரினும், சென்று நனி
படாஅ வாகுமெம் கண்ணே கடாஅ  10
வான் மருப்பு அசைத்தல் செல்லாது, யானை தன்
வாய் நிறை கொண்ட வலி தேம்பு தடக்கை
குன்று புகு பாம்பின் தோன்றும்,
என்றூழ் வைப்பின் சுரன் இறந்தோரே.

Akanānūru 391, Kāvanmullai Poothanār, Pālai Thinai – What the heroine said to her friend
He united with me after removing
from my cool, fragrant hair, mullai
flowers with honey and other fragrant
flowers, and striped, delicate athiral
buds from thick vines that the flower
sellers with big baskets of flowers
discarded, unable to find anybody to sell,
that look like the teeth of stalking wild cats.  

Whenever I see my decorated, full hair knot,
I think about my prior beauty, my friend!
Even though only a few days have gone by,
including today, my eyes are unable to sleep,
since he has gone to the hot wasteland where
a weak, large trunk of a rutting elephant
with white tusks that do not move, appears
like a snake that enters a mountain cave.

Notes:  பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைவி கூறியது.  ஒப்புமை:  காட்டுப் பூனையின் பற்களைப் போன்ற முல்லை அரும்பு – அகநானூறு 391 – பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன வரி மென் முகைய, குறுந்தொகை 220 – முல்லை வெருகு சிரித்தன்ன பசு வீ மென் பிணி குறு முகை அவிழ்ந்த, குறுந்தொகை 240 – வெருக்குப்பல் உருவின் முல்லையொடு, புறநானூறு 117 – பிள்ளை வெருகின் முள் எயிறு புரையப் பாசிலை முல்லை முகைக்கும்.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  கான் – மணம், அகநானூறு 391 – தலை வேய் கான் மலர் தேம் பாய் முல்லையொடு, பதிற்றுப்பத்து 30 – கான்மிகு குளவிய, திருமுருகாற்றுப்படை 198 – விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கான், மதுரைக்காஞ்சி 337 – கான் பொழில் தழீஇய அடைகரை தோறும்.

Meanings:   பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன – like the sharp teeth of a stalking wild cat (பார்வல் – பார்வை), வரி மென் முகைய – with striped delicate buds, நுண் கொடி அதிரல் – delicate wild jasmine vine, மல்கு அகல் வட்டியர் கொள்வு  இடம் பெறாஅர் விலைஞர் – flower sellers who could not find any place to sell the flowers in a large basket/bowl (பெறாஅர் – அளபெடை), ஒழித்த – got rid of, தலை வேய் – wearing on my head, கான் மலர் தேம் பாய் முல்லையொடு – fragrant flowers along with honey flowing jasmine flowers (தேம் தேன் என்றதன் திரிபு), ஞாங்கர்ப் போக்கி – removed it there, removed it in that place, தண் நறும் கதுப்பில் – in my cool dark hair, புணர்ந்தோர் – one who united, புனைந்த – decorated, என் பொதி மாண் முச்சி காண்தொறும் – whenever I see on my full hair knot, பண்டைப் பழ அணி உள்ளப்படுமால் தோழி – I think about my old beauty oh friend (உள்ளப்படுமால் – ஆல் அசைநிலை, an expletive), இன்றொடு – with today, சில் நாள் வரினும் சென்று – even if he has gone for just a few days (வரினும் – நாட்களே வந்தன ஆயினும்), நனி – greatly, படாஅ ஆகும் எம் கண்ணே – my eyes will not be able to sleep, கடாஅ – in musth (படாஅ – அளபெடை, எம் – தன்மைப் பன்மை, first person plural), வான் மருப்பு அசைத்தல் செல்லாது – white tusks not moving, யானை – elephant, தன் வாய் நிறை கொண்ட – full in its mouth, வலி தேம்பு தடக்கை – huge weakened trunk, குன்று புகு பாம்பின் தோன்றும் – appears like a snake entering a mountain cave (பாம்பின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), என்றூழ் வைப்பின் சுரன் இறந்தோரே – he went to the wasteland with hot places (சுரன் – சுரம் என்பதன் போலி, இறந்தோரே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 392, மோசி கீரனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
தாழ் பெருந்தடக்கை தலைஇய கானத்து
வீழ் பிடி கெடுத்த வெண்கோட்டு யானை
உண் குளகு மறுத்த உயக்கத்தன்ன,
பண்புடை யாக்கைச் சிதைவு நன்கு அறீஇப்
பின்னிலை முனியான் ஆகி, நன்றும்  5
தாது செய் பாவை அன்ன தையல்
மாதர் மெல்லியல் மட நல்லோள் வயின்
தீது இன்றாக நீ புணை புகுக என
என்னும் தண்டும் ஆயின், மற்று அவன்
அழிதகப் பெயர்தல் நனி இன்னாதே  10
ஒல் இனி, வாழி தோழி! கல்லெனக்
கண மழை பொழிந்த கான் மடி இரவில்,
தினை மேய் யானை இனன் இரிந்து ஓடக்,
கல் உயர் கழுதில் சேணோன் எறிந்த
வல்வாய்க் கவணின் கடு வெடி ஒல்லென  15
மறப் புலி உரற, வாரணம் கதற,
நனவுறு கட்சியின் நன் மயில் ஆல,
மலையுடன் வெரூஉம் மாக் கல் வெற்பன்
பிரியுநன் ஆகலே அரிதே, அதாஅன்று,
உரிது அல் பண்பின் பிரியுநன் ஆயின்  20
வினை தவப் பெயர்ந்த வென்வேல் வேந்தன்
முனை கொல் தானையொடு முன் வந்து இறுப்பத்,
தன் வரம்பு ஆகிய மன்னெயில் இருக்கை
ஆற்றாமையின் பிடித்த வேல் வலித்
தோற்றம் பிழையாத் தொல் புகழ் பெற்ற,  25
விழைதக ஓங்கிய கழை துஞ்சு மருங்கிற்
கான் அமர் நன்னன் போல,
யான் ஆகுவல் நின் நலம் தருவேனே.

Akanānūru 392, Mōsi Keeranār, Kurinji Thinai – What the heroine’s friend said to her
May you live long, my friend!
Listen to me!
He knew well that your fine body is shattered,
like the sorrow of a male elephant with a long,
huge trunk that lost its loving mate in the forest,
and refuses to eat leaves that it eats usually.  

He said to me, “Be of support to the delicate
pretty woman, as beautiful as a golden doll,
so that no evil approaches her,” and yet he
left, going against his nature, without hatred,
to do his work, causing us sorrow.

The lord of the fierce, huge mountains,
……….where clouds pour heavy rain in the
……….forest that is quiet at night, and loud
……….sounds of shots fired by a field guard
……….with a catapult with strong ends,
……….from a tall platform, causes herds of
……….millet-grazing elephants to run,
……….as strong tigers roar, and peacocks in
……….the forest dance,
has caused you pain by leaving, which is
a rare matter.

I will bring him back, so that your prior beauty
can be restored,
like the mighty Nannan who restored his faultless
fame, who escaped and came to the forest with
lovely, tall bamboo, when his fort was surrounded
by a victorious enemy king with a murderous army
with spears, and then fought with his enemy in the
forest and won.

Notes:  தலைவியை கூட்டுவிக்கத் தோழியைத் தலைவன் வேண்டினான்.  அதற்கு உடன்பட்ட தோழி தலைவியிடம் வந்து தலைவனின் விருப்பத்திற்கு இணங்குமாறு கூறியது.  வல்வாய்க் கவண் (15) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வலிய வாயையுடைய கவண், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – வலிய விசை வாய்ந்த கவண்.  ஒப்புமை:  குறுந்தொகை 48 – தாதின் செய்த தண் பனிப் பாவை, அகநானூறு 392 – தாது செய் பாவை அன்ன.  வரலாறு:  நன்னன்.  நனவு – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம் உரியியல் 3).  நன – நனவே களனும் அகலமும் செய்யும் – (தொல்காப்பியம், உரியியல் 80).

Meanings:   தாழ் பெருந்தடக்கை தலைஇய – with a long huge trunk that flows down (தலைஇய – அளபெடை), கானத்து – in the forest, வீழ் பிடி கெடுத்த – lost its loving female, வெண்கோட்டு யானை – elephant with white tusks, உண் குளகு மறுத்த – refused to eat leaves that it usually eats, உயக்கத்தன்ன – sorrow like that, பண்புடை யாக்கைச் சிதைவு நன்கு அறீஇ – he knew well that the fine body is shattered (அறீஇ – அளபெடை), பின்னிலை முனியான் ஆகி – not protecting and not hating like a stranger, நன்றும் தாது செய் பாவை அன்ன – like a well-made doll made with gold, like a well-made doll made with pollen, தையல் – young woman, மாதர் – loving, desirable, pretty, மெல்லியல் – delicate-natured, மட – naive, நல்லோள் – beautiful woman, வயின் – for her, தீது இன்றாக – without harm, நீ புணை புகுக என என்னும் – you be of support to her, you be a raft to her, தண்டும் ஆயின் – if he leaves for a while, மற்று அவன் அழிதகப் பெயர்தல் – if he goes ruining, நனி இன்னாதே – it will be very sad, ஒல் இனி – listen to me, accept what I say, வாழி தோழி – may you live long my friend, கல்லென – with loud sounds (ஒலிக்குறிப்பு மொழி), கண மழை பொழிந்த – groups of clouds poured rain, கான் மடி இரவில் – at night when the forest had become quiet, தினை மேய் யானை இனன் இரிந்து ஓட – herds of elephants which were eating millet ran away, கல் – mountain, உயர் – high, கழுதில் – from the high platform, சேணோன் எறிந்த – shot by the field guard, வல்வாய் – strong ends, rapid speed, கவணின் கடு வெடி – loud sounds of catapult shots, ஒல்லென – with loud sounds, மறப் புலி உரற – strong tigers roaring, வாரணம் கதற – elephants trumpeting, நனவுறு கட்சியின் நன் மயில் ஆல – in the vast forest beautiful peacocks dancing, மலையுடன் வெரூஉம் மாக் கல் வெற்பன் – the lord of the huge mountains where everything in the mountains fear (வெரூஉம் – அளபெடை), பிரியுநன் ஆகலே அரிதே – it is rare if he separates, அதாஅன்று – not just that (அது அன்று என்பன அதான்று எனப்புணர்ந்து வருமொழி முதல் அளபெடுத்து அதாஅன்று என்றாயிற்று. அதாஅன்று அஃதன்றியும் என்னும் பொருட்டு, அளபெடை), உரிது அல் – without rights, பண்பின் பிரியுநன் ஆயின் – if he separates because of his nature, வினை தவ – war business to end, பெயர்ந்த – removed, வென்வேல் வேந்தன் – king with victorious spears, முனை கொல் தானையொடு – with an army that kills, முன் வந்து இறுப்ப – come and stay (இறுப்ப – தங்க), தன் வரம்பு ஆகிய மன்னெயில் இருக்கை ஆற்றாமையின் – since he was unable to stay within his protected fort which is his boundary, பிடித்த வேல் – spear held in the hand, வலித் தோற்றம் – strong appearance, பிழையாத் தொல் புகழ் பெற்ற – obtained faultless ancient fame (பிழையா – ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்), விழைதக – desirable to the eyes of those who see, ஓங்கிய கழை துஞ்சு மருங்கில் – where there are tall bamboo, கான் அமர் நன்னன் போல – like Nannan who stayed in the forest, யான் ஆகுவல் நின் நலம் தருவேனே – I will bring back your prior beauty, I will restore your prior beauty (தருவேனே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 393, மாமூலனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கோடு உயர் பிறங்கல் குன்று பல நீந்தி,
வேறு புலம் படர்ந்த வினை தரல் உள்ளத்து
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய,
முதைச் சுவல் கலித்த ஈர் இலை நெடுந்தோட்டுக்
கவைக் கதிர் வரகின் கால் தொகு பொங்கழி,  5
கவட்டு அடிப் பொருத பல் சினை உதிர்வை
அகன் கண் பாறைச் செவ்வயின் தெறீஇ,
வரி அணி பணைத்தோள் வார் செவித்தன்னையர்
பண்ணை வெண்பழத்து அரிசி ஏய்ப்பச்,
சுழல்மரம் சொலித்த சுளகு அலை வெண்காழ்  10
தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி
உரல் முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை
ஆங்கண் இருஞ்சுனை நீரொடு முகவாக்,
களிபடு குழிசிக் கல் அடுப்பு ஏற்றி
இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின்,  15
குடவர் புழுக்கிய பொங்கு அவிழ்ப் புன்கம்
மதர்வை நல் ஆன் பாலொடு பகுக்கும்
நிரை பல குழீஇய நெடுமொழிப் புல்லி
தேன் தூங்கு உயர்வரை நல் நாட்டு உம்பர்,
வேங்கடம் இறந்தனர் ஆயினும் ஆண்டு அவர்  20
நீடலர், வாழி தோழி! தோடு கொள்
உருகெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்பத்,
தகரம் மண்ணிய தண் நறுமுச்சிப்
புகரில் குவளைப் போதொடு தெரி இதழ்
வேனில் அதிரல் வேய்ந்த நின்  25
ஏமுறு புணர்ச்சி இன்துயில் மறந்தே.

Akanānūru 393, Māmoolanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
May you live long, my friend!  Even if he went
to the fine country, past Vēnkadam hills,
the land of famous Pulli with herds of cattle,
……….where those with ravenous hunger, who cross
……….the bright mountains with tall peaks, and go to
……….another land with a strong mind with the desire
……….to earn, are given food as lovely as kondrai
……….flower pollen, mixed with milk from fine cows by
……….cattle herders, the food cooked with the millet
……….from plants with wet leaves and long sheaths,
……….flourishing on old raised land, their forked spears
……….crushed by split hooves of animals, the dropped
……….millet collected and heaped on boulders, the white
……….grains, like the mature seeds of pannai greens,
……….peeled in wooden grinders by women with long
……….ears and bamboo-like arms with lines,
………. winnowed on sulavus, pounded in the
……….wells of pounding urals using ulakkais decorated
……….with rings in a perfect manner, mixed with water
……….from springs, and cooked in clay pots on the rock
……….stoves,
he will not delay his return, forgetting union and sweet
sleep with you with thick hair like pretty peacock
feathers, rubbed with aromatic oils, and fragrant hair
decorated with perfect kuvalai flowers with chosen
petals and summer’s athiral flowers.

Notes:   பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தியது.  உரல் முகம் (12) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உரலின் வாய், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – உரலின் குழி.  வரலாறு:  புல்லி, வேங்கடம்.  முகவா – முகுந்து என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).

Meanings:   கோடு – mountain peaks, உயர் பிறங்கல் – tall mountains with rocks, குன்று பல நீந்தி – passed a few mountains, வேறு புலம் படர்ந்த வினை தரல் – went to another land for his work to earn, உள்ளத்து – with a mind, ஆறு செல் வம்பலர் – those who travel on the path, காய் பசி தீரிய – to end their intense hunger, முதைச் சுவல் கலித்த – flourishing in the old raised land, ஈர் இலை – wet leaves, நெடுந்தோட்டு – with long sheaths, with long leaves, கவைக் கதிர் வரகின் – of millet with forked spears, கால் – stalks, தொகு – collected, பொங்கழி – unsifted grain, (தூற்றாப்பொலி), கவட்டு அடிப் பொருத – hit by split hooves (of oxen), பல் சினை உதிர்வை – those dropped from stems, அகன் கண் பாறை- wide boulders/rocks, செவ்வயின் தெறீஇ – heaped them perfectly, வரி அணி பணைத்தோள் – bamboo-like arms with stripes, thick arms with stripes, வார் செவித்தன்னையர் – women with long ears, பண்ணை வெண்பழத்து அரிசி ஏய்ப்ப – like the fruit seeds of the white mature seeds of pannai keerai/greens (ஏய்ப்ப – உவம உருபு, a comparison word), சுழல்மரம் சொலித்த – reduced in a wooden grinding device (திரிமரம், திரிகை) to remove the outer skin, சுளகு அலை – winnowed on a winnowing tray, வெண்காழ் – white seeds, தொடி மாண் உலக்கை – pounding rods decorated with metal rings, ஊழின் போக்கி – pounding in a correct manner, உரல் முகம் காட்டிய சுரை – the abundant rice/seeds that are on the pounding stone bowl part, நிறை கொள்ளை – abundant quantity, ஆங்கண் இருஞ்சுனை நீரொடு – with water from the huge springs there, முகவா – drew (water), களிபடு குழிசி – pot made with clay, கல் அடுப்பு ஏற்றி – placed on a rock stove, lit a rock stove, இணர் – clusters, ததை – filled, கடுக்கை – laburnum, kondrai, ஈண்டிய – heaped, yielded, தாதின் – like pollen (இன் உருபு ஒப்புப் பொருளது), குடவர் புழுக்கிய பொங்கு அவிழ்ப் புன்கம் – the food cooked overflowing by the cattle herders, மதர்வை – with pride, நல் ஆன் பாலொடு பகுக்கும் – they serve with the milk of fine cows, நிரை பல – many herds of cattle, குழீஇய – together (அளபெடை), நெடுமொழிப் புல்லி – Pulli with great fame, தேன் தூங்கு உயர் வரை – honeycombs hanging tall mountains, நல் நாட்டு உம்பர் வேங்கடம் இறந்தனர் ஆயினும் – even if he went to the fine country beyond Vēnkadam hills, ஆண்டு – there, அவர் நீடலர் – he will not delay, வாழி தோழி – may you live long oh friend, தோடு கொள் – with feathers, உருகெழு மஞ்ஞை – pretty peacock, ஒலி சீர் ஏய்ப்ப – like their flourishing beautiful feathers (ஏய்ப்ப – உவம உருபு, a comparison word), தகரம் மண்ணிய – rubbed with aromatic oils/pastes, தண் – cool, நறுமுச்சி – fragrant hair, fragrant hair knot, புகர் இல் – faultless, perfect, குவளைப் போதொடு – with blue waterlily flowers, தெரி இதழ் – chosen petals (வேங்கடசாமி நாட்டார் – விளங்கும் இதழ்களுடைய, பொ. வே. சோமசுந்தரனார் – ஆராய்ந்து எடுத்த இதழ்களையுடைய), வேனில் – in summer, அதிரல் வேய்ந்த – decorated with wild jasmine, நின் – your, ஏமுறு புணர்ச்சி – to be happy in union, இன் துயில் மறந்தே – forgetting sweet sleep (மறந்தே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 394, நன்பலூர் சிறுமேதாவியார், முல்லைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
களவும் புளித்தன, விளவும் பழுநின,
சிறுதலைத் துருவின் பழுப்புறு விளை தயிர்
இதைப் புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு,
கார் வாய்த்து ஒழிந்த ஈர்வாய்ப் புற்றத்து
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெஞ்சோறு  5
சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக,
இளையர் அருந்தப் பின்றை நீயும்
இடு முள் வேலி முடக்கால் பந்தர்ப்
புதுக்கலத்து அன்ன செவ்வாய்ச் சிற்றில்,
புனை இருங்கதுப்பின் நின் மனையோள் அயரப்,  10
பாலுடை அடிசில் தொடீஇய ஒரு நாள்,
மா வண் தோன்றல்! வந்தனை சென்மோ,
காடு உறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும்
மடி விடு வீளை வெரீஇக் குறுமுயல்
மன்ற இரும் புதல் ஒளிக்கும்  15
புன்புல வைப்பின் எம் சிறு நல் ஊரே.

Akanānūru 394, Nanpalūr Sirumēthāviyār, Mullai Thinai – What the heroine’s friend said to the hero
Kalākkai plums have soured, and vilām
fruits have ripened.

After your servants eat mature curds of
off-white hued sheep with small heads,
along with pounded millet from new fields
and sweet tamarind rice with melted butter
from tawny cows to which are added white
ants from termite mounds after rains,
please come for a day, oh greatly generous
lord,
to your small house plastered with clay as
red as a new clay pot, and with thorn fences
and a pavilion with bent legs,
where your wife with beautiful black hair
will serve you a meal with milk.

Our fine small town is in the woodlands,
where small hares run for cover behind
large bushes in the common grounds, fearing
the whistle sounds of a forest goat herder who
whistles with folded lips to move his goats.

Notes:  தலைவியை இடத்து உய்த்து வந்த தோழி தலைவனை வரைவு கடாயது.  ஒப்புமை:  பெரும்பாணாற்றுப்படை 275 – அவையா அரிசி, அகநானூறு 394 – அவைப்பு மாண் அரிசியொடு, சிறுபாணாற்றுப்படை 193 – உலக்கை இரும்பு முகம் தேய்த்த அவைப்பு மாண் அரிசி.  சிறுபாணாற்றுப்படை 175 – இன் புளி வெஞ்சோறு.  சிறுதலைத் துருவின் பழுப்புறு விளை தயிர் (2) – சிறிய தலையினையுடைய செம்மறியாட்டின் பழுப்பு நிறம் வாய்ந்த முதிர்ந்த தயிர் – அகநானூறு 394, நன்பலூர் சிறுமேதாவியார்.  நின் மனையோள் அயர (10) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நின் மனையோள் அயர என்றது இப்பொழுது நின் காதலியாய் இருப்பவளை மணச்சடங்கினால் மனைவியாக்கிக் கொண்ட பின்னர் அவள் விருந்து அயர என்றபடியாம்.  தலைவியை மனைவியாக்கிக் கொண்ட பின் ஒரு நாள் நின் இளையருடன் வருவாயாக என வரைவு கடாயபடியாம்.

Meanings:   களவும் புளித்தன – the kalā fruits have become sour, Corinda Tree, Bengal Currant, Carissa Congesta, களாக்காய், விளவும் பழுநின – the wood apples have ripened, Limonia acidissima, சிறு தலைத் துருவின் – of sheep with small head, பழுப்புறு – off-white color, of a light yellow color, விளை தயிர் – mature curds, mature yogurt, இதைப் புன வரகின் – from the new millet fields, அவைப்பு மாண் அரிசியொடு – with the fine grains that are pounded, கார் வாய்த்து ஒழிந்த – after rains have ended, ஈர்வாய்ப் புற்றத்து ஈயல் – white ants/termites from a wet mound, பெய்து அட்ட இன்புளி வெஞ்சோறு – desirable grain rice with sweet tamarind, cooked grain rice with sweet tamarind poured, சேது ஆன் வெண்ணெய் – butter from tawny (reddish brown) cows, வெம் புறத்து உருக – melted warmly on the cooked food, இளையர் அருந்த – for the young men to eat, for the servants to eat, பின்றை – after that, நீயும் –  you, இடு முள் வேலி – fence with thorns, முடக்கால் பந்தர் – pavilion with bent legs/poles (பந்தர் – பந்தல் என்பதன் போலி), புதுக் கலத்து அன்ன – like a new vessel (கலத்து – கலம், அத்து சாரியை), செவ்வாய்ச் சிற்றில் – small house with red plaster (செவ்வாய் – பண்புத்தொகை, compound word in which the first member stands in adjectival relation to the second), புனை இருங்கதுப்பின் – with beautiful black hair, நின் மனையோள் – your wife, அயர பாலுடை அடிசில் தொடீஇய – to eat the meal with milk that she makes (தொடீஇய – அளபெடை), ஒரு நாள் – one day, மா வண் தோன்றல் – oh lord with great generosity (தோன்றல் – விளி, an address), வந்தனை சென்மோ – please come and leave (மோ – முன்னிலையசை, an expletive of the second person), காடு உறை இடையன் – a goat herder who stays in the forest, a goat herder who lives in the forest, யாடு தலைப்பெயர்க்கும் – to move his goat herd to another place (to graze), மடி விடு வீளை – whistles with folded lips, வெரீஇக் குறுமுயல் மன்ற இரும் புதல் ஒளிக்கும் – small hares get scared and run behind large bushes in the common grounds to hide (குறுமுயல் – பண்புத்தொகை, வெரீஇ – அளபெடை, வெருவி என்ற வினையெச்சம் திரிந்து அளபெடுத்தது), புன்புல வைப்பின் – in the mullai woodland, எம் சிறு நல் ஊரே – our small fine town (ஊரே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 395, எயினந்தை மகனார் இளங்கீரனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
தண் கயம் பயந்த வண் கால் குவளை
மாரி மா மலர் பெயற்கு ஏற்றன்ன,
நீரொடு நிறைந்த பேர் அமர் மழைக்கண்
பனி வார் எவ்வம் தீர இனிவரின்,
நன்று மன், வாழி தோழி! தெறு கதிர்  5
ஈரம் நைத்த நீர் அறு நனந்தலை
அழல் மேய்ந்து உண்ட நிழன் மாய் இயவின்
வறன் மரத்து அன்ன கவை மருப்பு எழில் கலை,
அறல் அவிர்ந்தன்ன தேர் நசைஇ ஓடிப்,
புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு  10
மேய் பிணைப் பயிரும் மெலிந்தழி படர் குரல்
அருஞ்சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும்,
திருந்து அரை ஞெமைய பெரும் புனக் குன்றத்து
ஆடு கழை இரு வெதிர் நரலும்
கோடு காய் கடற்ற காடு இறந்தோரே.  15

Akanānūru 395, Eyinanthai Makanār Ilankeeranār, Pālai Thinai – What the heroine said to her friend
May you live long, my friend!  It will be
good, if he comes, for my tearful sorrow
to end.  My large, calm, moist eyes are
filled with tears, appearing like monsoon’s
large kuvalai flowers with thick stems,
that received rainwater, in the cool ponds.

He has gone on paths, where the scorching
sun’s rays have removed wetness, and the vast
place is parched.  A stag with forked antlers
that look like dried tree branches, runs toward
a mirage with thirst, and calls its grazing mate
in distress, and those who travel hear its weak,
sad calls and think that they are from a man.

Parched groves with gnemai trees with perfect
trunks are in the mountains with dry forests
where swaying, large bamboo makes noises.

Notes:  பிரிவின்கண் வேறுபட்ட தலைவி வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது.  கடற்ற காடு (15) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மலங்காடு நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:   தண் கயம் – cool ponds, பயந்த – yielded, வண் கால் குவளை – bluelilies with thick stems, Nymphaea caerulea,  மாரி மா மலர் – dark/big rainy season flowers, பெயற்கு ஏற்றன்ன – like the rainwater that it took, நீரொடு நிறைந்த – filled with tears, பேர் அமர் மழைக் கண் – large calm moist eyes, பனி வார் எவ்வம் தீர – crying sorrow to end, இனி வரின் நன்று – it will be good if he comes, மன் -அசைநிலை, an expletive, வாழி தோழி – may you live long my friend, தெறு கதிர் – hot rays, ஈரம் நைத்த – ruined wetness, நீர் அறு – waterless, நனந்தலை – wide space, அழல் மேய்ந்து உண்ட – heat ate it, நிழன் மாய் இயவின் – on the path with no shade (நிழன் – நிழல் என்பதன் போலி), வறன் மரத்து அன்ன கவை மருப்பு – forked antlers like branches of parched trees (மரத்து – மரம், அத்து சாரியை, மரம் ஆகுபெயர் மரக்கிளைக்கு), எழில் கலை – a beautiful stag, அறல் அவிர்ந்தன்ன – like bright flowing water, தேர் நசைஇ – desiring the mirage (நசைஇ – அளபெடை), ஓடி – runs, புலம்பு வழிப்பட்ட – with loneliness, உலமரல் உள்ளமொடு – with a distressed mind, மேய் பிணைப் பயிரும் – it calls is grazing mate, மெலிந்தழி படர் குரல் – weak sad sound, அருஞ்சுரம் செல்லுநர் – those who travel on the harsh path, ஆள் செத்து – think that it is a person, ஓர்க்கும் – they analyze, திருந்து அரை – perfect trunks, ஞெமைய – with gnemai trees, Anogeissus latifolia, பெரும் புனக் குன்றத்து – on the huge mountain with groves, ஆடு கழை – swaying bamboo, இரு வெதிர் – huge/dark bamboo, நரலும் – make sounds, கோடு காய் கடற்ற – with dried forests on the mountain peaks, with harsh paths on the mountain peaks, காடு இறந்தோரே – the man who passed the forests (இறந்தோரே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 396, பரணர், மருதத் திணை – பரத்தை தலைவனிடம் சொன்னது
தொடுத்தேன் மகிழ்ந! செல்லல்! கொடித்தேர்ப்
பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்தென,
யாழிசை மறுகின் பாழி ஆங்கண்
அஞ்சல் என்ற ஆஅய் எயினன்
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கித்,  5
தன் உயிர் கொடுத்தனன் சொல்லியது அமையாது,
தெறல் அரும் கடவுள் முன்னர்த் தேற்றி
மெல் இறை முன் கை பற்றிய சொல் இறந்து,
ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப நின்
மார்பு தருகல்லாய் பிறன் ஆயினையே  10
இனியான் விடுக்குவென் அல்லென், மந்தி
பனி வார் கண்ணள் பல புலந்து உறையக்
கருந்திறல் அத்தி ஆடு அணி நசைஇ,
நெடுநீர்க் காவிரி கொண்டு ஒழித்தாங்கு, நின்
மனையோள் வவ்வலும் அஞ்சுவல், சினைஇ  15
ஆரியர் அலறத் தாக்கிப் பேர் இசைத்
தொன்று முதிர் வட வரை வணங்கு வில் பொறித்து
வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்
வஞ்சியன்ன என் நலம் தந்து சென்மே.

Akanānūru 396, Paranar, Marutham Thinai – What the concubine said to the hero
I am holding on to you, my lord!
Please do not abandon me!
When Nannan with gold ornaments and
chariots with flags showed his rage to the
citizens of Punnādu, Āy Eyinan protected
them in Pāzhi, a town with lute music in the
streets, and fought well against Nannan’s
astute warrior Mignili and gave up his life.

You made a promise before the fierce god
holding my delicate forearms, but you have
gone past those words.

For my anxious heart to feel much better, I
would like to embrace your chest.  You have
refused that and become a stranger to me.
Now I will not let you get away!

Like Kāviri river which fell in love with the
pretty dancer Athi and took him away from
his wife Āthimanthi who was sad and cried,
your wife is trying to remove you from me.

I am afraid I will lose you.  Should you leave,
you need to return my beauty, lovely
like Vanji city of the victorious Cheran king
who attacked with rage the trembling Aryans,
captured their king and carved the Chera bow
symbol on the ancient, northern mountains.

Notes:  தலைவனுடன் ஊடிய பரத்தை உரைத்தது.  புனனாடு (2) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – குட கடற் பக்கத்தொரு நாடு, புள்ளுநாடு என்பதும் பாடமாகக் காணப்படுதலின் புண்ணாடென்பது புன்னாடெனச் சிதைந்தது எனலுமாம்.  ஆதிமந்தி:  அகநானூறு 45 – காதலர் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து ஆதிமந்தி போலப் பேதுற்று அலந்தனென் உழல்வென் கொல்லோ, அகநானூறு 76 – கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன் வகை அமைப் பொலிந்த வனப்பு அமை தெரியல் சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ என ஆதிமந்தி பேதுற்று இனைய, அகநானூறு 135 – ஆதிமந்தியின் அறிவு பிறிதாகிப் பேதுற்றிசினே காதலம் தோழி, அகநானூறு 222 – ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇத் தாழ் இருங்கதுப்பின் காவிரி வவ்வலின் மரதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த ஆதிமந்தி, அகநானூறு 236 – கடல் கொண்டன்று எனப் புனல் ஒளித்தன்று எனக் கலுழ்ந்த கண்ணள் காதலற் கெடுத்த ஆதிமந்தி போல, 396 – மந்தி பனி வார் கண்ணள் பல புலந்து உறைய.  குறுந்தொகை 31, ஆதிமந்தியார் பாடல் – யாண்டும் காணேன் மாண்டக்கோனை யானும் ஓர் ஆடுகள மகளே, என் கைக் கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த பீடு கெழு குரிசலும் ஓர் ஆடுகள மகனே.  வரலாறு:  நன்னன், புனனாடு, பாழி, ஆஅய் எயினன், மிஞிலி, காவிரி, ஆதிமந்தி, ஆட்டனத்தி, வஞ்சி (இன்றைய கரூர்), சேரன், ஆரியர்.  ஆரியர்களைத் தோற்கடித்தல் – அகநானூறு 336 – சோழர் வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை ஆரியர் படையின் உடைக, அகநானூறு 396 – ஆரியர் அலறத் தாக்கிப் பேர் இசைத் தொன்று முதிர் வட வரை வணங்கு வில் பொறித்து வெஞ்சின வேந்தரை, நற்றிணை 170 – ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர் பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது.  பொலம் – பொன் என் கிளவி ஈறு கெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுள் மருங்கின் தொடர் இயலான (தொல்காப்பியம், புள்ளிமயங்கியல் 61).  ஆரியர் – அகநானூறு 276-9, 336-22, 396-16, 398-18, நற்றிணை,170-6, குறுந்தொகை 7-3, பதிற்றுப்பத்து 11-23.  

Meanings:   தொடுத்தேன் – I am holding on to you, மகிழ்ந – oh lord (விளி, an address), செல்லல் – do not leave, கொடித்தேர் – chariot with flags, பொலம் பூண் – gold ornaments, நன்னன் – Nannan, புனனாடு – புன்னாடு, Punnādu, கடிந்தென – since he showed rage, யாழிசை மறுகின் – with the streets with lute music, பாழி – Pāzhi city, ஆங்கண் – there, ‘அஞ்சல்’ – don’t be afraid, என்ற ஆஅய் எயினன் – (said) Āy Eyinan (ஆஅய் – அளபெடை), இகல் – enemies, அடு – kill, கற்பின் – with training, with training in battle techniques, மிஞிலியொடு தாக்கி – fought with (a man named) Mignili, தன் உயிர் கொடுத்தனன் – he gave his life, சொல்லியது அமையாது – not satisfied with what he said, not deviating from his words, தெறல் அரும் கடவுள் – a god who cannot be destroyed, a god who does not destroy, முன்னர் – in front of, தேற்றி – explaining clearly, மெல் இறை முன்கை – delicate folded forearms, பற்றிய – held, சொல்லிறந்து – past my words, ஆர்வ நெஞ்சம் – anxious heart, தலைத்தலை சிறப்ப – becoming much better, நின் – your, மார்பு தருகல்லாய் – you refuse to give me your breast, பிறன் ஆயினையே – you have become a stranger (ஆயினையே – ஏகாரம் அசைநிலை, an expletive), இனி யான் விடுக்குவென் அல்லென் – now I will not let you go, மந்தி – Āthimanthi, பனி வார் கண்ணள் – a woman with tear dripping eyes, பல புலந்து உறைய – saying many things with sorrow, being with much hatred, கருந்திறல் அத்தி – very smart Athi, ஆடு – dancing, அணி – beautiful, நசைஇ – desiring (அளபெடை), நெடுநீர்க் காவிரி – long river Kāviri, கொண்டு – took away, ஒழித்தாங்கு – like how she hid, நின் – your, மனையோள் வவ்வலும் அஞ்சுவல் – I am afraid that your wife will seize you (அஞ்சுவல் – தன்மையொருமை வினைமுற்று), சினைஇ – getting angry (சினைஇ – அளபெடை), ஆரியர் அலற – as the Aryans scream, தாக்கி – attacked, பேர் இசை – very famous, தொன்று முதிர் – ancient old, வட வரை – northern mountains (Himalayas), வணங்கு வில் பொறித்து – carved the curved bow symbol, etched the curved bow symbol, வெஞ்சின – very angry, வேந்தரைப் பிணித்தோன் – the Cheran king who captured the Aryan king, வஞ்சியன்ன – like his Vanji city, என் நலம் தந்து சென்மே – return my beauty and leave, return my virtue and leave (முன்னிலை ஏவல் வினைமுற்று, a second person command verb ending)

அகநானூறு 397, கயமனார், பாலைத் திணை – மகட்போக்கிய செவிலித்தாய் சொன்னது
என் மகள் பெரு மடம் யான் பாராட்டத்,
தாய் தன் செம்மல் கண்டு கடன் இறுப்ப,
முழவு முகம் புலரா விழவு உடை வியன் நகர்
மணன் இடையாகக் கொள்ளான், கல் பகக்
கண மழை துறந்த கான் மயங்கு அழுவம்  5
எளியவாக ஏந்து கொடி பரந்த
பொறி வரி அல்குல் மாஅயோட்கு எனத்
தணிந்த பருவம் செல்லான், படர்தரத்
துணிந்தோன் மன்ற, துனை வெங்காளை,
கடும் பகட்டு ஒருத்தல் நடுங்கக் குத்திப்  10
போழ் புண்படுத்த பொரி அரை ஓமைப்
பெரும் பொளிச் சேயரை நோக்கி, ஊன் செத்துச்
கருங்கால் யாத்துப் பருந்து வந்து இறுக்கும்
சேண் உயர்ந்து ஓங்கிய வானுயர் நெடுங்கோட்டுக்
கோடை வெவ் வளிக்கு உலமரும்  15
புல் இலை வெதிர நெல் விளை காடே.

Akanānūru 397, Kayamanār, Pālai Thinai – What the foster mother said, after the heroine eloped
My daughter is very innocent. I
praised her.  Her mother understood
her leadership and performed her
duties.  The young man did not marry
her in her large house with festivals,
where clay on the drums does not dry.

Rains have abandoned the forest, and
rocks are cracked.  The wasteland is
confusing, and tall creepers have spread.
He did not go when heat subsided.  He
went boldly with the dark young woman
with spots and lines on her loins, her
loving young man, who took her
to the forest where a kite sits on a tall
tree with a dark colored trunk, thinking that
the rough, peeled, red trunk of an omai tree
stabbed by a male elephant with his tusks
is flesh.  Seeds grow on tall bamboo
with small leaves that sway in the hot
summer winds on the tall mountain peaks.

Notes:  செவிலித்தாய் வருந்திச் சொன்னது.  ஒப்புமை:  புறநானூறு 271 – தெரியல் ஊன் செத்துப் பருந்து கொண்டு உகப்ப யாம் கண்டனம்.  முழவு முகம் புலரா – அகநானூறு பாடல்கள் 206, 222, 397 – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – முழவின் ஒலி ஓயாத, பொ. வே. சோமசுந்தரனார் உரை – முழவின் முழக்கம் ஒழியாத.  முழவு முகம் புலர்ந்து – நற்றிணை 360 – ஒளவை துரைசாமி உரை – முழவின் மார்ச்சனை புலர்ந்து, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மத்தள முகத்து வைத்த மார்ச்சனை வறந்து.  துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ்செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

Meanings:   என் மகள் பெரு மடம் – my daughter is very innocent, யான் பாராட்ட – I praised her,  தாய் தன் செம்மல் கண்டு கடன் இறுப்ப – her mother understood her leadership and performed her duties, முழவு முகம் புலரா விழவு உடை வியன் நகர் – large house with celebrations where clay eyes on drums do not dry, large house with celebrations where drum sounds do not die down, மணன் இடையாகக் கொள்ளான் – he did not marry her (மணன் மணம் என்றதன் போலி), கல் பக – causing rocks to be cracked, கண மழை துறந்த கான் – forest that has been abandoned by rains, மயங்கு அழுவம் – confusing wasteland, எளியவாக – easily, ஏந்து கொடி பரந்த – tall creepers spread, பொறி வரி அல்குல் – spots and lines on her loins, மாஅயோட்கு – for the dark young woman (அளபெடை), எனத் தணிந்த பருவம் செல்லான் – he did not go when heat has subsided, படர்தரத் துணிந்தோன் – he went with her boldly, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty, துனை – rapid, வெங்காளை – desiring young man, கடும் பகட்டு ஒருத்தல் – strong proud bull elephant, நடுங்க – shaking, குத்திப் போழ் புண்படுத்த – stabbed with its tusks and split, பொரி அரை ஓமை – omai tree with cracked bark, பெரும் பொளிச் சேய் அரை நோக்கி – looked at the red trunk with bark peeled, ஊன் செத்து – thinking it is flesh,  கருங்கால் யாத்து – on a tree with a sturdy/big/dark-colored trunk, ஆச்சா மரம், Hardwickia binata tree (யாத்து – அத்து சாரியை), பருந்து வந்து இறுக்கும் – a kite comes and rests, சேண் உயர்ந்து ஓங்கிய – far and very tall (உயர்ந்து ஓங்கிய – ஒருபொருட் பன்மொழி), வானுயர் – sky-high, நெடுங்கோட்டு – tall summits,  கோடை – summer, வெவ் வளிக்கு – in the hot wind, உலமரும் – swaying, புல் இலை – small leaves, வெதிர நெல் விளை காடே – forest where seeds of bamboo grow (காடே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 398, இம்மென் கீரனார், குறிஞ்சித் திணை – தலைவி ஆற்றிடம் சொன்னது

இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூரப்,
படர் மலி வருத்தமொடு பல புலந்து அசைஇ,
மென்தோள் நெகிழச் சாஅய்க், கொன்றை
ஊழுறு மலரின் பாழ்பட முற்றிய
பசலை மேனி நோக்கி நுதல் பசந்து,  5
இன்னேம் ஆகிய எம்மிவண் அருளான்,
நும்மோன் செய்த கொடுமைக்கு இம்மென்று
அலமரல் மழைக் கண் தெண் பனி மல்க
நன்று புறமாறி அகறல், யாழ நின்
குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ?  10
கரை பொரு நீத்தம் உரை எனக் கழறி,
நின்னொடு புலத்தல் அஞ்சி அவர் மலைப்
பன் மலர் போர்த்து நாணு மிக ஒடுங்கி
மறைந்தனை கழியும் நிற்றந்து செலுத்தி,
நயன் அறத் துறத்தல் வல்லியோரே,  15
நொதுமலாளர் அது கண்ணோடாது,
அழற் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ
மாரி புறந்தர நந்தி, ஆரியர்
பொன்படு நெடுவரை புரையும் எந்தை
பல் பூங்கானத்து அல்கி, இன்றிவண்  20
சேந்தனை செலினே சிதைகுவது உண்டோ?
குயவரி இரும் போத்துப் பொருத புண் கூர்ந்து,
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை
வாங்கு அமைக் கழையின் நரலும், அவர்
ஓங்கு மலை நாட்டின் வருஉவோயே.  25

Akanānūru 398, Immen Keeranār, Kurinji Thinai – What the heroine said to the river
Oh river that comes from his land,
where a strong bull elephant
attacked by a huge male tiger with
stripes like sickles, is embraced by his
mate as he screams in pain like a
curved, bamboo horn!  You are flowing
to the brim attacking the shores!

He does show shower his graces on me.
Hating that, my delicate arms have
become thin causing my jewels to slip,
and pallor has spread on my forehead like
fully blossomed kondrai flowers.  Are you
afraid that I will hate you since your lord
from the mountains caused me pain, and
made my sad, moist eyes shed clear tears?

You ignore the unfairness and actions
of my lover who is like a stranger to me.
You are shy and have covered yourself
with many flowers from his mountain,
hiding yourself.  Please stay in the shade
of vēngai trees with flame-like flowers,
without leaving, in my father’s forest
nourished by rains and resembling the
Himalayas with gold, belonging to the
Aryans.  Is it too much for you to stay here
before you leave?

Notes:  ஆற்றை நோக்கி அதனொடு புலந்து கூறியது.  வரலாறு:  ஆரியர், நெடுவரை (இமயம்).  அலமரல் – அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (தொல்காப்பியம், சொல் 310).  கூர – கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 18).  ஆரியர் – அகநானூறு 276-9, 336-22, 396-16, 398-18, நற்றிணை,170-6, குறுந்தொகை 7-3, பதிற்றுப்பத்து 11-23.  

Meanings:   இழை நிலை நெகிழ்ந்த – with jewels slipping from their place, எவ்வம் கூர – with great sorrow, with increased sorrow, படர் மலி வருத்தமொடு – with great distress, பல புலந்து – with much hatred, with much sulking, அசைஇ – staying (அளபெடை), மென் தோள் – delicate arms, நெகிழ – becoming slim, சாஅய் – sad (அளபெடை), கொன்றை – kondrai, Laburnum, Golden Shower Tree, Cassia fistula, ஊழுறு மலரின் – like well bloomed flowers (மலரின் – இன் உருபு ஒப்புப் பொருளது), பாழ்பட முற்றிய – ruined and matured, பசலை – yellow spots, மேனி -body, நோக்கி – looking, நுதல் பசந்து – forehead became yellow, இன்னேம் ஆகிய – I who have become such, எம்மிவண் அருளான் – he does not shower graces on me here, நும்மோன் செய்த கொடுமைக்கு – for the atrocities your man did, இம்மென்று – loudly (ஒலிக்குறிப்பு), அலமரல் மழைக்கண் – sad moist eyes, தெண் பனி மல்க – with clear tears filled, நன்று புறமாறி – changing from the good path, அகறல் – to move away, யாழ – அசை, an expletive, நின் – your, குன்று கெழு நாடற்கு – to the man from the land with mountains, என் எனப்படுமோ – how will it be considered, கரை பொரு – attacking the shores, நீத்தம் – floods, உரை – to say, எனக் கழறி – thus roaring, நின்னொடு – with you, புலத்தல் அஞ்சி – afraid of hatred, அவர் மலை – his mountain, பன்மலர் – many flowers, போர்த்து – covered, நாணு மிக ஒடுங்கி – being shy and subdued, மறைந்தனை – you hide yourself, கழியும் – and leave, நின் தந்து செலுத்தி – brought you and sent you, நயன் அற – without grace, துறத்தல் – to abandon, to leave, வல்லியோரே – the man who is capable, நொதுமலாளர் – the stranger, அது கண்ணோடாது – not looking at that, அழற்சினை – flame like branches, வேங்கை நிழல் – shade of vēngai trees, Pterocarpus marsupium, தவிர்ந்து – avoid going, அசைஇ – staying (அளபெடை), மாரி – rains, புறந்தர – protecting, நந்தி – flourishing, ஆரியர் – Aryans, பொன்படு – with gold, நெடுவரை புரையும் – it is like the tall mountains (புரை – உவம உருபு, a comparison word), எந்தை – my father (எந்தை – எம் + தந்தை, மருஉ மொழி), பல்பூங்கானத்து – in the forest with many flowers, அல்கி – staying, இன்றிவண் – today here, சேந்தனை செலினே – if you stay here and go (ஏகாரம் அசைநிலை, an expletive), சிதைகுவது உண்டோ – is there any harm, will you be ruined, குயவரி – a tiger with curved stripes like a sickle (பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, ஆகுபெயருமாம்), இரும் போத்து – a big male, பொருத – fought, புண் கூர்ந்து – wounded greatly, உயங்கு பிடி – a sad female elephant, தழீஇய – embracing (அளபெடை), மதன் அழி யானை – male elephant with strength ruined, வாங்கு அமை கழையின் – like a curved bamboo horn (கழையின் – இன் உருபு ஒப்புப் பொருளது), நரலும் – it makes sounds, அவர் – his, ஓங்கு மலை நாட்டின் – from the tall mountain country, வருஉவோயே – oh you who comes, ஏகாரம் அசைநிலை, an expletive

அகநானூறு 399, எயினந்தை மகன் இளங்கீரனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
சிமைய குரல சாந்து அருந்தி, இருளி,
இமையக் கானம் நாறும் கூந்தல்
நன்னுதல் அரிவை இன்னுறல் ஆகம்
பருகுவன்ன காதல் உள்ளமொடு,
திருகுபு முயங்கல் இன்றியவண் நீடார்,  5
கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த
உடைக் கண் நீடு அமை ஊறல் உண்ட
பாடு இன் தெண் மணி பயங்கெழு பெரு நிரை
வாடு புலம் புக்கெனக், கோடு துவைத்து அகற்றி,
ஒல்கு நிலைக் கடுக்கை அல்கு நிழல் அசைஇப்,  10
பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும்
சிறு வெதிர்ந்தீங்குழல் புலம்பு கொள் தெள் விளி,
மையில் பளிங்கின் அன்ன தோற்றப்
பல் கோள் நெல்லிப் பைங்காய் அருந்தி,
மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம்  15
காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல்
வேய் கண் உடைந்த சிமைய
வாய்படு மருங்கின் மலை இறந்தோரே.

Akanānūru 399, Eyinanthai Makan Ilankeeranār, Pālai Thinai – What the heroine’s friend said to her
My friend with hair, darkened by fragrant
oils and adorned with clusters of flowers,
that is as fragrant as the forests in the
Himalayas, and a fine forehead!

He will not delay and stay away from you,
not embracing your chest since his heart
is filled with love that is like drinking,
your lover who went past the vast mountains
with tall summits, where the sun scorches,
bamboo nodes break in the wasteland
and mountains have lost their beauty,
cattle with sweet, clear bells drink water
from the pits dug with pick axes in the rocky
ground, and cattle herders rest under parched
kondrai trees with scant shade after moving
their herd, calling them with horns, naïve marai
deer eat many gooseberries that grow in clusters,
which are like flawless marbles, and listen
to the flute music of the untrained
cattle herders with many herds who play
sweet music on their small bamboo flutes.

Notes:  தலைவன் பொருள்வயின் பிரிந்தான்.  பிரிவாற்றாது வருந்திய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.  திருகுபு முயங்கல் (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மீண்டு வந்து தழுவிக் கொள்ளுதல், இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – பின்னித் தழுவுதல்.  வாய்படு மருங்கின் மலை (18):  இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – இடமகன்ற பக்க மலையினையுமுடைய மலை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – குவடுகளின் இடத்தின் பக்கத்தே அமைந்த மலை.  மரை (15) – A kind of deer.  The University of Madras Lexicon defines this as elk.  However, there are no elks in South India.  மரை நெல்லி உண்ணுதல்: அகநானூறு 69 – புல் இலைப் பராரை நெல்லியம் புளித் திரள் காய் கான மடமரைக் கண நிரை கவரும்.  அகநானூறு 399 – மையில் பளிங்கின் அன்ன தோற்றப் பல் கோள் நெல்லிப் பைங்காய் அருந்தி, மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம், குறுந்தொகை 235 – நெல்லி மரை இனம் ஆரும் முன்றில், புறநானூறு 170 – மரை பிரித்து உண்ட நெல்லி வேலி.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

Meanings:  சிமைய குரல – with flower clusters on the top of the head, சாந்து அருந்தி – with fragrant sandal pastes/oils,  இருளி – dark, இமையக் கானம் நாறும் கூந்தல் – fragrant hair that is like the forests of Himalayas, நன்னுதல் அரிவை – oh young woman with fine forehead,  இன்னுறல் ஆகம் – sweet chest, பருகுவன்ன – like drinking, காதல் உள்ளமொடு – with a loving heart, திருகுபு முயங்கல் – hugging and embracing, returning and embracing, இன்றி – without, யவண் – here, நீடார் – he will not delay, கடற்று அடை மருங்கின் – near rocky area in the forest, கணிச்சியின் குழித்த – dug with pick axes, உடைக் கண் – where the ground is broken, நீடு அமை ஊறல் உண்ட – drank the abundant water that springs up, பாடு இன் தெண் மணி – ringing sweet clear bells,  பயங்கெழு பெரு நிரை – benefit yielding large herds, வாடு புலம் – parched land, புக்கென – since they entered, கோடு துவைத்து – rapidly sounding with horns, அகற்றி – removing,  ஒல்கு நிலைக் கடுக்கை – in the shade of dried laburnum,  Laburnum, Golden Shower Tree, Cassia fistula, கொன்றை, அல்கு நிழல் அசைஇ – staying in the sparse shade (அசைஇ – அளபெடை), பல் ஆன் கோவலர் – cattle herders with many cows, கல்லாது ஊதும் – playing music without formal training, சிறு வெதிர்ந்தீங்குழல் – sweet flutes made from tiny bamboo, புலம்பு கொள் – with loneliness, with sorrow, தெள் விளி – clear sounds, மையில் பளிங்கின் அன்ன – like perfect marble (பளிங்கின் – இன் சாரியை), தோற்ற – with the appearance, பல் கோள் நெல்லிப் பைங்காய் அருந்தி மெல்கிடு – chew many fresh gooseberries that are in clusters/or like marbles (பைங்காய் பைங்காய் – பண்புத்தொகை, compound word in which the first member stands in adjectival relation to the second), மட மரை ஓர்க்கும் – delicate marai deer listen to the music, அத்தம் – wasteland, காய் கதிர் – hot rays of the sun, கடுகிய – removed, lost, கவின் – beauty, beauty is lost, அழி பிறங்கல் – the mountain is ruined, வேய் கண் உடைந்த – bamboo nodes broken, சிமைய வாய்படு மருங்கின் மலை இறந்தோரே – one who went past the wide areas of mountains with peaks (இறந்தோரே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 400, உலோச்சனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நகை நன்று அம்ம தானே, அவனொடு
மனை இறந்து அல்கினும் அலர் என நயந்து,
கானல் அல்கிய நம் களவு அகல
பல் புரிந்து இயறல் உற்ற நல் வினை
நூல் அமை பிறப்பின், நீல உத்திக்,  5
கொய் மயிர் எருத்தம் பிணர் படப் பெருகி,
நெய்ம் மிதி முனைஇய கொழுஞ்சோற்று ஆர்கை
நிரல் இயைந்து ஒன்றிய செலவின், செந்தினைக்
குரல் வார்ந்தன்ன குவவுத்தலை நந்நான்கு
வீங்கு சுவல் மொசியத் தாங்கு நுகம் தழீஇப்,  10
பூம்பொறிப் பல்படை ஒலிப்பப் பூட்டி,
மதியுடைய வலவன் ஏவலின் இகு துறைப்
புனல் பாய்ந்தன்ன வாமான் திண் தேர்க்
கணை கழிந்தன்ன நோன் கால் வண் பரிப்
பால் கண்டன்ன ஊதை வெண்மணல்  15
கால் கண்டன்ன வழிபடப் போகி,
அயிர்ச் சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண்,
இருள் நீர் இட்டுச்சுரம் நீந்தித் துறை கெழு
மெல்லம்புலம்பன் வந்த ஞான்றை
பூ மலி இருங்கழித் துயல்வரும் அடையொடு,  20
நேமி தந்த நெடுநீர் நெய்தல்
விளையா இளங்கள் நாறப் பலவுடன்
பொதி அவிழ் தண் மலர் கண்டும், நன்றும்
புதுவது ஆகின்று அம்ம, பழ விறல்
பாடு எழுந்து இரங்கு முந்நீர் 25
நீடு இரும் பெண்ணை நம் அழுங்கல் ஊரே.

Akanānūru 400, Ulōchanār, Neythal Thinai – What the heroine’s friend said to her
This is a great joke!  Even when we
went past the house and stayed with
him with desire, there was gossip.
Your secret love in the grove is ending,
due to the many good deeds we did.

On the day that the lord of the shores
came requesting marriage, his horses
of good breed according to books, with
trimmed, rough hair on their napes and
sapphire jewels on their foreheads,
hating food crushed with added ghee,
they eat huge balls of rice, the four of
them moving together, their heads lifted
like long clusters of red millet, their thick
necks bearing yokes adorned with many
jingling ornaments etched with lovely
patterns, gallop goaded by the intelligent
charioteer, tied to his sturdy chariot
looking like water flowing down to lower
shores, their strong legs like arrows that
are shot riding on white sand blown by the
northerly winds appearing like milk, rode like
water flowing in a canal, causing marks in the  
vast land with fine sandy mud, and passed
through difficult paths in the dark, through
the backwaters filled with flowers,

our uproarious town with ancient pride,
roaring ocean and tall, dark palmyra trees,
became a very new town, on seeing the
swaying leaves and waterlily blossoms with
the fragrance of new honey, dragged by the
wheels of his chariot.

Notes:  தலைவன் திருமணம் செய்துகொண்ட பின்னர் மகிழ்ச்சியுடன் தலைவியிடம் கூறியது.  பூம்பொறிப் பல்படை ஒலிப்பப் பூட்டி (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகிய ஓவியம் பொறிக்கப் பெற்ற பல அணிகலன்களையும் ஆரவாரம் உண்டாகும்படி அவற்றின் கழுத்திலே பூட்டி.  நேமி தந்த நெடுநீர் நெய்தல் (21) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவனுடைய தேர் ஆழி (சக்கரம்) கொணர்ந்த நெடிய நீர்ப்பூவாகிய நெய்தல் பூக்கள், நீரில் இறங்கி வந்தபொழுது தேர் ஆழிகளில் சிக்குண்டமையால் அவ்வாழிகள் நெய்தலை இலையோடும் மலரோடும் கொடிகளோடும் கொணர்ந்தன என்க.  இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – ஆழமான நீரையுடைய கடல் தந்த நெய்தல்.  முந்நீர் – தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது.  முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் ‘தமிழ்க்காதல்’ நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு 9 உரை, நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி 75 உரை.  ஒப்புமை:  புறநானூறு 299 – நெய்ம் மிதி அருந்திய கொய் சுவல் எருத்தின் தண்ணடை மன்னர் தாருடைப் புரவி.  நெய்ம்மிதி – யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின் வல்லெழுத்து இயையின் அவ்வெழுத்து மிகுமே (தொல்காப்பியம், புள்ளி மயங்கியல் 62), மெல்லெழுத்துறழும் மொழியு மாருளவே.(தொல்காப்பியம், புள்ளி மயங்கியல் 65).  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).

Meanings:   நகை நன்று – this is very laughable, அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், a particle which means ‘listen’, தானே – தான், ஏ அசைநிலைகள், expletives, அவனொடு – with him, மனை இறந்து – passed the house, அல்கினும் – even when we stayed, அலர் என – it is gossip, நயந்து – with desire, கானல் அல்கிய – stayed with him in the grove, நம் களவு – your secret love, அகல – to leave, பல் புரிந்து இயறல் – doing many suitable things (பொ. வே. சோமசுந்தரனார் உரை – பல் புரிந்து என்றது வரைவு கடாஅதற் பொருட்டுத் தோழியும் தலைவியும் செய்த பல்வேறு செயல்களையும் குறித்தபடியாம்), உற்ற நல் வினை – due to good actions, நூல் அமை பிறப்பின் – of good breed according to the books on horses, நீல உத்தி – the sapphire ornament on the forehead, கொய் மயிர் – trimmed hair, எருத்தம் – neck/nape, பிணர் பட – with rough surface, பெருகி – in abundance, நெய்ம் மிதி முனைஇய – hated food that was crushed with added ghee/oil (முனைஇய – அளபெடை), கொழுஞ்சோற்று ஆர்கை – eating abundant rice, நிரல் இயைந்து ஒன்றிய செலவின் – placed in a row and moving together, செந்தினைக் குரல் வார்ந்தன்ன – like the fine/red long clusters of millet, குவவுத் தலை நந்நான்கு – lifted heads of the fine four horses (நான்கு – ஆகுபெயர் குதிரைகளுக்கு), வீங்கு சுவல் – thick necks,  மொசிய – closely, தாங்கு நுகம் – yoke that bears, தழீஇ – embracing, surrounded (தழீஇ – அளபெடை), பூம்பொறிப் பல் படை – many ornaments etched with lovely patterns, ஒலிப்ப – causing sounds, பூட்டி – tied, மதியுடைய வலவன் – charioteer with intelligence, ஏவலின் – due to goading, இகு துறைப் புனல் பாய்ந்தன்ன – like water flowing down to the low shores, வாமான் திண் தேர் – galloping horses tied to a sturdy chariot, கணை கழிந்தன்ன – like arrows that are sent, நோன் கால் – strong legs, வண் பரி – rapidly running, பால் கண்டன்ன – like seeing milk, ஊதை வெண்மணல் – white sand blown by the cold northerly winds, கால் கண்டன்ன – like seeing a canal, வழிபடப் போகி – flowed causing marks, அயிர்ச் சேற்று அள்ளல் – mud with fine sand, அழுவத்து – in the wide space, ஆங்கண் – there, இருள் நீர் இட்டுச்சுரம் நீந்தி – passed through difficult paths in the dark, துறை கெழு மெல்லம்புலம்பன் வந்த ஞான்றை – when the lord of the delicate shores with ports came (அம் – சாரியை, புலம்பு = கடற்கரை), பூ மலி இருங்கழி – backwaters filled with flowers, துயல்வரும் அடையொடு – with moving leaves, நேமி தந்த – brought by the wheels of the chariot of the lord, நெடு நீர் நெய்தல் –  waterlilies in the deep water, long, விளையா இளம் கள் நாற – with the smell of un-aged honey, பலவுடன் – with many, பொதி அவிழ் தண் மலர் – cool flowers whose buds have opened from tightness, கண்டும் – when they saw, நன்றும் புதுவது ஆகின்று – it became very good, அம்ம -அசைநிலை, an expletive, பழ விறல் – ancient pride,  பாடு எழுந்து இரங்கு – with loud rising sounds, முந்நீர் – ocean, நீடு இரும் பெண்ணை – tall and dark palmyra trees, நம் அழுங்கல் ஊரே – our loud town, our uproarious town (ஊரே – ஏகாரம் அசைநிலை, an expletive)